Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘World’ Category

Malaysia plans female travel curbs – Women’s groups outraged at proposed ‘fly alone’ restrictions

Posted by Snapjudge மேல் மே 5, 2008

பெண்கள் வெளிநாட்டு பயணித்தை மட்டுப்படுத்தும் மலேசிய அரசின் முடிவுக்கு பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு

மலேசிய பெண்கள்
மலேசிய பெண்கள்

பெண்கள் தனியாக வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதை மட்டுப்படுத்த மலேசிய அரசு முன்வைத்துள்ள திட்டத்துக்கு எதிராக மலேசிய மகளிர் அமைப்புக்கள் கோபமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

பெண்கள் தனியாக வெளிநாடுகளுக்குப் போவதென்றால் அவர்கள் தமது குடும்பத்தினரிடமிருந்தோ அல்லது பணி செய்யும் நிறுவனத்திடமிருந்தோ எழுத்து மூலம் இணக்கம் பெற்றிருக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வர ஆலோசித்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சரான ரய்ஸ் யதிம் அவர்களை மேற்கோள் காட்டி மலேசிய அரசுச் செய்தி நிறுவனம் அறிவித்திருந்தது.

குற்றச்செயல்களைத் தடுப்பதற்காகவே இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வர யோசிக்கப்படுகிறது என்றும், போதைப் பொருள்களைக் கடத்திச் செல்வதற்காகக் கிரிமினல் கும்பல்கள் பெண்களைப் பயன்படுத்துவதைத் தொடாந்தே இவ்வாறு ஆலோசிக்கப்படுகிறது என மலேசிய அரசு செய்தி நிறுவனம் விளக்கியுள்ளது. இதை ஒரு பிற்போக்கான அடக்குமுறைத் தனம் என மலேசிய மகளிரமைப்புகள் கண்டித்துள்ளன.

Malaysia’s women face travel curbs over drug trafficking fears

KUALA LUMPUR (AFP) – Malaysian women travelling abroad on their own may need letters from their parents or employers in a bid to stop them becoming “mules” for international drug syndicates, reports said Sunday.

The proposal comes as 119 Malaysians, 90 per cent of whom are women, have been imprisoned worldwide on drug-related charges with the majority believed to have been duped into transporting drugs, the New Sunday Times reported.

“I have submitted this proposal to the Cabinet and both the Foreign and Home Ministries feel this is necessary,” foreign minister Rais Yatim told the paper.

“Many of these women (who travel alone) leave the country on the pretext of work or attending courses and seminars,” he added.

“With this declaration, we will know for sure where and for what she is travelling overseas.”

Malaysians have become prime targets for syndicates wanting to smuggle drugs into the European Union, the paper said, because they do not require visas for short stays of up to 90 days or to transit in those countries.

It said the offences were also committed in various other nations including China, Singapore, India, Spain and Portugal.

However, women’s groups have criticised the move.

“This is an infringement of our rights,” National Council for Women’s Organisations Malaysia (NCWO) deputy president Faridah Khalid told the paper. “We’re the victims and now you’re creating more problems. Why must you put more restrictions on women? We have worked hard over the years to get to this level,” she added.

Advocacy group Tenaganita said the move was not practical.

“Thousands of people travel daily. Who is going to scrutinise the declaration as anyone can forge their parents’ signature,” spokeswoman S. Florida was quoted as saying by the paper.

Posted in Law, Politics, Woman, Women, Women Rights, Womens, World | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »

Ilavazhagi, the struggling world champion from Chennai

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2008

கவர் ஸ்டோரி

வெற்றி என்னை ‘ஃபாலோ’ செய்யும்

யுகன்

“சுகாதாரமா அப்படின்னா?’ என்று கேட்குமளவுக்கு இறைந்து கிடக்கும் குப்பைக் கூளங்கள். முடை நாற்றம் எடுக்கும் சென்னை, வியாசர்பாடியின் சாமந்திப்பூ(?!) காலனி. ஓர் உலக சாம்பியனின் வீடு இங்கேதான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும்!

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த உலகளாவிய கேரம் விளையாட்டில் பெண்கள் பிரிவில் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் இளவழகி. பத்தாவது வரை மட்டுமே படித்திருக்கும் இந்த உலக சாம்பியனை, நான்கு பேரோடு சேர்ந்து கேரம் போர்ட் கூட விளையாட முடியாத அளவுக்கு நெருக்கடியில் இருக்கும் அவரின் “ஹவுஸிங் போர்ட்’ வீட்டில் சந்தித்தோம்.

“”என்னுடைய அப்பா இருதயராஜ்தான் என் கேரம் போர்ட் குரு. அவர் ரிக்ஷா ஓட்டுகிறார். அம்மா- செல்வி குடும்பத் தலைவி. தங்கை, இலக்கியா, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.காம். படிக்கிறார். இன்னொரு தங்கை, செவ்வந்தி ஒன்பதாவது படிக்கிறார். என்னுடைய அப்பா, போட்டிகளில் கலந்து கொண்டு மெடல்கள் வாங்கவில்லையே தவிர, எனக்கு கேரம் விளையாட்டில் நிறைய ஆட்ட நுணுக்கங்களைச் சொல்லித் தருவார். அப்பாவின் நண்பர் ஆறுமுகம் என்பவர் எங்களின் வீட்டுக்கருகில் போர்ட்-ரூம் வைத்திருந்தார். அங்கு போய் விளையாடியும், பிறர் விளையாடுவதைப் பார்த்தும்தான் நான் என்னுடைய விளையாட்டை வளர்த்துக் கொண்டேன். நான் விளையாடும் முறையைப் பார்த்து என்னை டோர்னமென்ட்களில் விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்னுடைய அப்பாதான்.

நான் மாநில அளவிலும், தேசிய அளவிலும் எல்லாப் போட்டிகளிலும் பங்கெடுப்பதற்கு காரணமாக இருந்தவர், இப்போது நான் பிரான்ஸ் செல்வதற்கும் காரணமாக இருந்தவர் கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ். தான். அவர் அளித்த ஊக்கம்தான் நான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியனாகியிருப்பதற்கு அடிப்படை. என்னுடைய வெற்றியை அவருக்குத்தான் நான் சமர்ப்பிப்பேன்.

உலக அளவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே கேரம் போர்ட் விளையாட்டைப் பொறுத்தவரையில் இந்தியாதான் சாம்பியன். அதிலும் தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது. இந்த வருடம் பிரான்ஸில் நடந்த உலக சாம்பியன் போட்டியில், 20 நாடுகள் பங்கேற்பதாக அறிவித்திருந்தன. ஆனால் இறுதியாகப் பங்கெடுத்தது 12 நாடுகள்தான். ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி, கானடா, மாலத்தீவுகள், கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பங்கேற்றன. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஆண்களில் 8 வீரர்களும், பெண்களில் 8 வீரர்களும் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து சென்றவர்களில் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களே 6 பேர்!

முதலில் அனைத்து நாட்டு வீரர்களையும் நான்கு பிரிவுகளாகப் பிரித்துவிடுவார்கள். ஒவ்வொரு பிரிவில் இருப்பவர்களும், இன்னொரு பிரிவினரோடு மோதுவார்கள். இது “லீக்’. இப்படி நடந்த “லீக்’ ஆட்டத்தில் ஸ்ரீலங்கா வீராங்கனையான குமாரியுடன் ஆடிய ஆட்டம் மிகவும் சிறப்பாக அமைந்தது.

செமி-ஃபைனல் முழுவதும் நாக்-அவுட் முறையில் நடந்தது. செமிஃபைனலில் நான் (25, 11) (25, 14) ஆகிய பாயின்ட்களில் பீகாரைச் சேர்ந்த ராஷ்மி குமாரியைத் தோற்கடித்தேன். இன்னொரு செமிஃபைனலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிர்மலா, முன்னாள் உலக சாம்பியனான ரேவதியைத் தோற்கடித்தார்.

ஆக, நான் ஃபைனலில் சக இந்திய வீரரான நிர்மலாவுடன்தான் ஆடினேன். என்னுடைய ஆட்டமுறை, “டிஃபென்ஸ்’ பற்றியெல்லாம் யோசிக்காமல், காய்களைப் பாக்கெட் செய்வதில் குறியாக இருப்பதுதான். மிக..மிக.. நெருக்கடியான போட்டியாக இது அமைந்தது. (25, 11) (25,11) ஆகிய பாயின்ட்களில் நான் வெற்றி பெற்றேன். இந்தப் போட்டியில் பங்கெடுத்த பெண்களிலேயே நான்தான் மிகவும் வயது (23) குறைவானவள். இரட்டையர் போட்டியிலும் நான் “ரன்னர்-அப்’பாக வந்தேன்.

ஸ்ரீலங்கா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் நடந்த கேரம் விளையாட்டுகள் பலவற்றில் நான் ஜெயித்திருக்கிறேன். தில்லியில் 2006-ல் நடந்த உலகக் கோப்பை கேரம் போட்டியிலும் நான் சாம்பியன் பட்டத்தை வென்றேன். ஏறக்குறைய 12 வருடங்களாக கேரம் போர்டில் தேசிய அளவிலும், உலக அளவிலும் சாதித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களின் மீது மீடியாவின் வெளிச்சம் இப்போதுதான் மிக அதிகமாகப் பட்டிருக்கிறது.

வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். இருப்பதற்கு வீடும், விளையாட்டுத் துறைக்கான ஒதுக்கீட்டில் எனக்கு ஓர் அரசுப் பணியும்தான் என்னுடைய கோரிக்கை.

“”ரிக்ஷா ஓட்டியான உன்னோட பொண்ணுக்கு கேரம்போர்டெல்லாம் தேவையா? பேசாம ஏதாவது வேலைக்கு அனுப்புறதைப் பார்ப்பியா…” என்று என் காதுபடவே, என் அப்பாவிடம் கிண்டல் தொனிக்கப் பேசியவர்கள்… (கண்கள் கசிய… பேச்சு தடைபடுகிறது.. சமாளித்துக் கொண்டு பேசுகிறார்) எத்தனையோ பேர். அப்பா வாங்கிக் கொடுத்த “பில்லியர்ட்ஸ் பால்’ ஸ்டிரைக்கரில் தான் இப்போதும் ஆடுறேன். எட்டு வருஷத்திற்கு முன்பே இதன் விலை 300 ரூபாய்!

நான் ஒவ்வொரு முறையும் “ரெட்’ காய்னப் பாக்கெட் செய்துவிட்டு, “ஃபாலோ’வுக்குக் குறிபார்க்கும் போதெல்லாம், தொடர்ந்து எங்கள் குடும்பத்தை “ஃபாலோ’ செய்து கொண்டிருக்கும் வறுமைதான் என் நினைவுக்கு வருகிறது. வறுமையில் இருந்தாலும்… என் திறமையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் வெற்றி என்னை “ஃபாலோ’ செய்கிறது. இனிமேலும் செய்யும். வெளிநாட்டிற்காக விளையாட எனக்கு ஐந்து வருடங்களாகவே வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. என் திறமைக்கு என் நாட்டிலேயே மரியாதை கிடைக்கும் என்று காத்திருக்கிறேன்…” என்றார் சென்டர்-கட் செய்து, ஃபாலோவை போட்டபடி இளவழகி!

Posted in Achievements, Carom, carrom, carroms, Champion, Chennai, Females, Finals, Games, global, Ilavalagi, Ilavazagi, Ilavazhagi, International, Lady, Medals, She, Sports, Women, World, Young, Youth | Leave a Comment »

Learning Tamil as a Foreign Language – South Travancore Hindu College, Nagercoil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

சொல்றாங்க.. – தமிழுக்காக ஒரு தாற்காலிக வேடந்தாங்கல்!

அ. அருள்தாசன்

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்தின் தென் கோடிக்கு வந்து தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. தமிழில் அனா ஆவன்னா தெரியாதவர்கள் 7 மாதங்களில் தமிழ்ப் பாடல்களை ரசித்துப் பாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றால் இந்த ஆச்சர்யம் உங்களுக்கு இரட்டிப்பாகும். நாம் அவர்களைச் சந்திக்கச் சென்ற நேரத்தில் பாரதியின் “சிந்து நதியின்..’  பாடலைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

தமிழை ஒற்றுப் பிழையில்லாமல் எழுதும் அவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் வெளிநாட்டினர். இங்கு மாணவர்களாக இருக்கும் அவர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் ஆசிரியர்கள் என்பது அடுத்த சுவாரஸ்யம். இனியும் காலம் கடத்தாமல் அவர்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லிவிடுகிறோம்.

மைசூரில் செயல்படும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தமிழ்த் துறையில் அவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேர்ந்து, தமிழைக் கற்று வருகிறார்கள்.

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய வந்திருந்த அவர்கள்,

  1. கர்நாடகம்,
  2. ஹிமாச்சலப்பிரதேசம்,
  3. மணிப்பூர்,
  4. ஒரிசா,
  5. மேற்கு வங்கம்,
  6. அசாம்,
  7. இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் துணையுடன் நாட்டிலுள்ள மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆண்டுதோறும் இதுபோன்று ஆசிரிய, ஆசிரியைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் இந்த கல்வியாண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்த 24 பேருக்கும் தமிழ் கற்கும் காலத்தில் அவர்களுக்கான மாத ஊதியம் மற்றும் ரூ.800 ஊக்கத் தொகையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் வரையில் இவர்கள் தமிழைக் கற்கின்றனர்.

நாகர்கோவிலுக்கு வந்திருந்த இந்த ஆசிரியர்களை வழிநடத்தும் பேராசிரியர் எஸ். சுந்தரபாலு கூறியதாவது:

இந்தியா, “மொழிகளின் பொக்கிஷம்’. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 18 மொழிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றவை. அங்கீகாரம் பெற்ற அல்லது பெறாத மொழிகள் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றைக் கற்றுக் கொள்ளும் வழிகளை உருவாக்கித் தரும் பணியிலும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளைக் கற்க ஆசிரிய, ஆசிரியைகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பழமையான, இலக்கியத்துவம் வாய்ந்த, இனிமையான செம்மொழியாகத் தமிழ் இருப்பதால் பல்வேறு மாநிலத்தவரும் தமிழைக் கற்க ஆர்வமாக வருகின்றனர் என்கிறார் சுந்தரபாலு.

தமிழுக்காக இந்துக் கல்லூரியில் தாற்காலிகமாக குழுமியிருந்த வெளிமாநில ஆசிரிய, ஆசிரியைகள் சிலரிடம் தமிழைக் குறித்தும், தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் குறித்தும் பேசியபோது கொஞ்சும் தமிழில் அவர்கள் கூறிய சில சுவாரஸ்ய தகவல்கள்:

புலேகொடா ஆர்ச்சிகாந்தி (இலங்கை):

“”இலங்கை ருகுண தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். அங்கு சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பித்து வருகிறேன். ஆனால், சிங்கள மாணவர்களுக்குத் தமிழைக் கற்பிக்க முடியவில்லை. இதனால், தமிழைக் கற்க இங்கு வந்துள்ளேன்.

இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களிடையே தகவல் தொடர்பு பிரச்னை இருக்கிறது. அதைத் தவிர்க்க இந்தப் பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்றார்.

நெப்ரம் புஷ்பராணிதேவி (மணிப்பூர்):

“”மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளைக் கற்பது கடினம். இதில் தமிழ் மொழி எனக்குப் பிடித்திருக்கிறது. மணிப்பூரில் முரே மாவட்டத்தில் தமிழ் பேசுவோர் அதிகம் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க இதனால் எனக்கு முடியும்.”

லொரெம்பம் கோமோடோன்சனா தேவி (மணிப்பூர்):

“”கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சுற்றுலா வந்திருந்தபோது தமிழர்களின் நடவடிக்கைகள் என்னைக் கவர்ந்தது. இங்குள்ள பெண்கள் நெற்றில் பொட்டு வைப்பதும், ஆண்கள் விபூதி வைப்பதும் பிடித்திருக்கிறது. கடவுள் என்றால் அன்பு என்பதைத் தமிழ் மொழி உணர்த்துகிறது” என்றார்.

ஷபியூர் ரஹ்மான், அப்துர் ரஹீம் (அஸ்ஸôம்):

“”அசாம் மாநிலம், போர்பெட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், சமஸ்கிருத ஆசிரியர்கள். தமிழ் மொழி இனிமையானது என்பதனால் இதைக் கற்கிறோம். சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் 30 சதவீதம் தொடர்பு இருக்கிறது. ஏலேலோ ஐலசா போன்ற நாட்டுப்புற பாடல் தெரியும். (இவர்களில் ரஹீமுக்கு அசாமி, பெங்காலி, சமஸ்கிருதம், ஹிந்தி, தமிழ், அரபி ஆகிய 6 மொழிகள் தெரியும்).

அசோதோஸ் மாலிக் (ஒரிசா):

“”ஒரிய மொழி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். தற்போது தமிழைக் கற்பதால் தமிழுக்கும் ஒரிய மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிந்து கொள்கிறேன். தமிழைக் கற்றபின் தமிழில் உள்ள நூல்களை ஒரிய மொழியிலும், ஒரிய மொழி நூல்களைத் தமிழிலும் மொழி பெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன்.

தமிழகத்தில் இலக்கியத்திலும் தீவிர ஆர்வம் மிக்கவராக இருப்பவர் என முதல்வர் கருணாநிதியைப் பற்றி அறிந்திருக்கிறேன்” என்றார்.

தட்டுத் தடுமாறினாலும் தமிழில் பேசிய இந்த வெளிமாநில ஆசிரியர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியதுதான்.

Posted in Bengal, Ceylon, Foreign, HR, Instructors, Integration, Language, Learn, Literature, Manipur, Manipuri, Nagercoil, Orissa, Singala, Sinhala, Sinhalase, Srilanka, Students, Tamil, Teachers, Unity, University, WB, World | Leave a Comment »

Tamil Nadu, India & World in 2007 – News, Incidents, Flashback, People: Dinamalar

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

வருட மலர்  2007

ஜனவரி

தமிழகம்

ஜன.1: பெரியாறு அணையின் கைப்பிடி சுவர் 6 அடி நீளத்துக்குக் கடப்பாரையால் உடைக்கப்பட்டது.

ஜன.2: ஈ.வெ.ரா., சிலை உடைப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் அர்ஜுன் சம்பத் சிறையில் அடைப்பு.

ஜன.5: திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து 5 நாட்கள் நடந்த ஸ்டிரைக் வாபஸ்.

*இமாம் அலி தப்பிய வழக்கில் 7 பேருக்கு 7 ஆண்டு தண்டனையும் 30 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மதுரை கோர்ட் தீர்ப்பு.

ஜன.12: சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் மறு தேர்தல் நடத்த ஒரு

நீதிபதியும், வழக்கை தள்ளுபடி செய்து மற்றொரு நீதிபதியும் முரண்பட்ட தீர்ப்பு.

ஜன.13: சுனாமியால் பாதிக்கப்பட்ட வட சென்னை மீனவர்கள் வறுமைக்காக கிட்னியை விற்ற தகவல் வெளியானது.

ஜன.14: முன்னாள் அமைச்சர் செம்மலையின் மனைவி, மகன் மீது அவரது மருமகள் வரதட்சணை புகார்.

*இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு கொடுக்கும் திட்டத்தை சென்னை தி.நகரில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

ஜன.18: சென்னை மாநகராட்சியில் தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாக மேயர் உட்பட 98 கவுன்சிலர்கள் ராஜினாமா.

ஜன.23: விஜயகாந்த், ஜேப்பியார் வீடுகளில் வருமான வரி ரெய்டு.

* ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் மேயராக இருக்கும் சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்.

ஜன.24: சென்னையில் ஊடுருவிய விடுதலைப் புலிகள் 8 பேர் கைது.

ஜன.27: ஸ்ரீவில்லிபுத்துõர் நகராட்சி தி.மு.க., தலைவரின் கணவர் அண்ணாதுரை வெட்டிக் கொலை.

ஜன.29: முன்னாள் எம்.எல்.ஏ., தேனி பன்னீர்செல்வம் அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், சிறை தண்டனை விதித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

இந்தியா

ஜன.2: அமெரிக்கா உடனான அணுசக்தி உடன்பாடு குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை.

ஜன.4: உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி அப்துல் கலாம்.

* காஷ்மீர் பிரேம் நகர் பகுதியில் சென்ற அரசு பஸ் செனாப் நதியில் விழுந்ததில் 9 பேர் பலி.

ஜன.5: பெங்களூரு விமான நிலையத்தை தகர்க்க திட்டமிட்டிருந்த இம்ரான் என்ற பயங்கரவாதி பெங்களூருரில் கைது.

ஜன.6: அசாமில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் பலி.

* ஐ.நா., பொதுச் செயலர் பான்கீமூனின் ஆலோசகராக இந்தியாவைச் சேர்ந்த விஜய் நம்பியார் நியமனம்.

ஜன.7: மேற்கு வங்கம் நந்திகிராம் கிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து நடந்த பேரணியில் 6 பேர் பலி.

ஜன.10: பார்லி.,யில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற 11 எம்.பி.,க்களின் பதவி நீக்கம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

* நொய்டாவைப் போல் பஞ்சாபிலும் கொன்று புதைக் கப்பட்ட 4 குழந்தைகளின் உடல் கண்டெடுக்கப் பட்டது.

ஜன.11: அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க் கப்படும் சட்ட திருத்தங்களும் ஆய்வுக்கு உட்பட்டவை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

ஜன.12: அப்சல் துõக்குத் தண்டனை மீதான தீர்ப்பாய்வு மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி.

* தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் விதிமுறை மீறி வழங்கப்பட்ட பெட்ரோல் பங்க் உரிமங்களை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

ஜன.18: உ.பி.,யில் முலாயம் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது காங்கிரஸ்.

ஜன.19: பெங்களூருவில் சதாம் உசேன் துõக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கண்டனக் கூட்டம் கலவரம்.

ஜன.29: விமானப் படை புதிய தளபதியாக பாலி.எச்.மேஜர் தேர்வு.

ஜன.31: தென்னாப்ரிக்க ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டுட்டுவுக்கு காந்தி அமைதி விருதை ஜனாதிபதி வழங்கினார்.

உலகம்

ஜன.2: இந்தோனோசியாவில் ஜாவாவிலிந்து மனாடோவுக்குச் சென்ற போயிங் ரக விமானம் நடுவழியில் விபத்துக்குள்ளானதில் 90 பேர் பலி.

ஜன.11: ஈராக்கிற்குக் கூடுதலாக 20 ஆயிரம் வீரர்களை அனுப்ப புஷ் உத்தரவு.

ஜன.12: கிரீசின் தலைநகர்

ஏதென்சிலுள்ள அமெரிக்க துõதரகத்தில் குண்டு வெடித்தது.

ஜன.13: தெற்காசிய நாடுகளின் ஆசியான் மாநாடு பிலிப்பைன்சில் தொடங்கியது.

ஜன.15: சதாம் சகோதரர் பர்சான் இப்ராகிம், முன்னாள் நீதிபதி அவாத் ஹமீது ஆகியோர் துஜெயில் வழக்கில் துõக்கிலிடப்பட்டனர்.

ஜன.17: நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் முதல்முறையாக பார்லிமென்ட்டில் பிரதிநிதிகளாகப் பொறுப்பேற்றனர்.

ஜன.19: விடுதலைப் புலிகள் வசமிருந்த வாகரைப் பகுதியைக் கைப்பற்றியதாக இலங்கை அரசு அறிவிப்பு.

ஜன.22: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும்வர்த்தகப் பகுதியில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 78 பேர் பலி

அ. சிறப்பு தகவல்கள்

1. நீதிக்கு பெருமை

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கே.ஜி. பால கிருஷ்ணன் ஜன., 14ம் தேதி பொறுப் பேற்றுக் கொண்டார். ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர் ஒருவர் இந்த பொறுப்புக்கு வருவது இது முதல்முறை.

2. தொடரும் சாதனை

பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் ஜன. 10ல் நான்கு செயற்கைகோள்களில் ஒன்றாக அனுப்பப்பட்ட “எஸ்.ஆர்.இ.,1′ விண்கலம், திட்டமிட்ட படி விண்வெளி ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு, வங்கக்கடலில் பத்திரமாக இறங்கியது. அதனை கடற்படை அதிகாரிகள் மீட்டு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு சென்றனர்.

3. ம.தி.மு.க.,விலிருந்து நீக்கம்

ம.தி.மு.க.,வில் போர்க்கொடி துõக்கிய எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தாங்கள் தான் உண்மையான ம.தி.மு.க., என அறிவித்துக்கொண்டனர். இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கட்சியை விட்டு ஜன., 10ல் நீக்கப்பட்டனர். இப்போது இவர்கள் போட்டி ம.தி.மு.க., வாக செயல்பட்டு வருகின்றனர்.

4. தணியாத கோபம்

உ.பி., மாநிலம் நிதாரியில் குழந்தைகளை கொன்று குவித்த குற்றவாளிகள் மொனிந்தர் சிங், சுரேந்திர கோலியை ஜன., 25 காஜியாபாத் சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் கூட்டி வந்தனர். தயாராக காத்திருந்த பொதுமக்கள் இருவருக்கும் தர்ம அடி கொடுத்தனர். போலீசார் மிகுந்த போராட்டத்துக்கு பிறகு அவர்களை மீட்டனர்.

பிப்ரவரி

தமிழகம்

பிப். 1: மதுரையில் இரண்டு கிராம் நகைக்காக, 4 வயது குழந்தையை ராஜா (12), ஜலால் (13) ஆகிய சிறுவர்கள் சேர்ந்து கொன்றனர்.

* விஜயகாந்த் மீது தி.மு.க., அவதுõறு வழக்கு.

பிப். 2: திருவள்ளூரிலுள்ள சாரதா ராமகிருஷ்ணா அனாதை ஆசிரமத்தில் பெண்கள் மர்மமான முறையில் இறப்பதாகப் புகார்.

பிப். 4: நீதிபதிகள் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல் நடந்து கொள்வதாக தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி விமர்சனம்.

பிப். 5: மயிலாடுதுறையிலிருந்து மதுரை சிறைக்கு அழைத்து வந்த போது, தப்ப முயன்ற ரவுடி மணல் மேடு சங்கர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை.

பிப். 9: அ.தி.மு.க., ஆட்சியில் கல்லுõரி பேராசிரியர்கள் நடத்திய 25 நாள் வேலை நிறுத்த போராட்டத்தைப் பணிக் காலமாக அறிவித்து முதல்வர் உத்தரவு.

பிப். 13: தனுஷ்கோடி கடல் பகுதியில் புலிகளுக்குப் கடத்திச் சென்ற வெடி மருந்துகளைக் போலீசார் பறிமுதல்.

* தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம்.

* காவிரி, பெரியாறு அணைப் பிரச்னைகளில் கருணாநிதி முரண்பட்டுப் பேசி வருகிறார் என்று பா.ம.க., ராமதாஸ் குற்றச்சாட்டு.

* நுழைவுத் தேர்வு ரத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு.

* கலப்புத் திருமணத்துக்கு உதவித் தொகை வழங்க ரூ.ஆயிரம் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை பெண் அலுவலர் கைது.

பிப். 14: சேலம் அருகே சாலை விபத்தில் மேட்டூர் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தராம்பாள் பலி.

பிப். 16: சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் 98 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என மூன்றாவது நீதிபதி பி.கே.மிஸ்ரா தீர்ப்பு.

பிப். 17: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தமிழகத்துக்குக் குறைந்த அளவு தண்ணீர் வழங்கியிருப்பதைக் கண்டித்து வைகோ சென்னையில் உண்ணாவிரதம்.

பிப். 18: சென்னை மாநகராட்சியில் 67 வார்டுகளுக்கு மறுதேர்தல் நடந்தது.

பிப். 22: நெல்லையில் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நன்கொடையால் கட்டப்பட்ட ஊடகக் கூடம் திறப்பு.

பிப். 25: திருவொற்றியூர் நகராட்சி கவுன்சிலரின் மகன், தேர்தல் முன்விரோதத்தால் பாண்டியமணி என்பவரை கொலை செய்தார்.

* கொடைக்கானலில் 4 வயது சிறுமியை கற்பழித்தவருக்கு துõக்கு தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட் தீர்ப்பு.

* இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ., மலைக்கண்ணன் மரணம்.

இந்தியா

பிப். 1: விளையாட்டுப் போட் டிகளை ஒளிபரப்பும் தனியார் “டிவி’க்கள் பிரசார் பாரதியுடன் பகிர்ந்து கொள்ள சட்டம் பார்லியில் நிறைவேறியது.

பிப். 2: மகாராஷ்டிராவில் 10 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., சிவசேனா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது.

பிப். 6: போபர்ஸ் ஊழலில் தொடர்புடைய இத்தாலியைச் சேர்ந்த குட்ரோச்சி அர்ஜென்டினா இன்டர்போல் போலீசாரால் கைது.

பிப். 7: மேற்கு வங்கம் நந்திகிராமில் போலீசார் நுழைவதை எதிர்த்து நடந்த வன்முறையில் எஸ்.ஐ., கொல்லப் பட்டார்.

பிப். 14: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாட காவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் அம்பரீஷ் ராஜினாமா.

* முலாயம் அரசுக்கு ஆதரவு அளித்த 13 பகுஜன் எம்.எல்.ஏ.,க்களைத் தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

பிப். 17: உ.பி., அரசை கலைக்க அம்மாநில கவர்னர் மத்திய அரசுக்குப் பரிந்துரை.

* நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி முகமது இக்பால் மேமன் சென்னையில் கைது.

பிப். 21: ஆந்திரா மார்கதரிசி நிதி நிறுவனத்தில் மாநில சி.ஐ.டி., போலீசார் சோதனை.

பிப். 24: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

* உ.பி.,யில் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 78 எம்.எல்.ஏ., பேர் ராஜினாமா.

* மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடந்த தாக்குதலில் 15 வீரர்கள் பலி.

பிப். 26: குட்ரோச்சிக்கு அர்ஜென்டினா கோர்ட் ஜாமீன் வழங்கியது.

* உ.பி., சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றார் முதல்வர் முலாயம் சிங்.

* நீதிமன்றத்தை விமர்சித்துப் பேசிய கேரள அமைச்சர் பொலாலி முகமது குட்டி கோர்ட்டில் மன்னிப்புக் கேட்டார்.

பிப். 27: பஞ்சாப், உத்தரகண்ட்டில் பா.ஜ., கூட்டணியும், மணிப்பூரில் காங்கிரசும் தேர்தல் முடிவில் வெற்றி பெற்றன.

உலகம்

பிப்.3 : புலிகளிடமிருந்து கைப்பற்றிய வாகரைப் பகுதிக்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே சென்றார்.

பிப். 5: ஈராக்கின் பாக்தாத்தில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலி.

பிப். 9: “பிளேபாய்’ பத்திரிகையின் பிரபல மாடல் அழகி அன்னா நிகாலே ஸ்மித் மரணம்.

பிப். 13: அரசு புலிகளுக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என இலங்கை புத்த பிட்சுகள் கோரிக்கை.

பிப். 17: பாகிஸ்தான் பலுசிஸ்தானில் கோர்ட்டில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் நீதிபதி உட்பட 15 பேர் பலி.

பிப். 25: பாக்தாத்தில் கல்லுõரி வளாகத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 பேர் பலி.

பிப். 27: ஆப்கனில் அமெரிக்க துணை அதிபர் டிக்செனியைக் குறி வைத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பலி.

அ. சிறப்பு தகவல்கள்

1. சாதனை பட்ஜெட்

தொடர்ந்து நான்காவது முறையாக பயணிகள் நலன் காக்கும் பட் ஜெட்டை பார்லி மென்ட்டில் தாக்கல் செய்து விமர்சகர் களின் வாயடைக்கச் செய்தார் லாலு. கட்டண உயர்வு இல்லாமல் ரயில் வேயை லாபகரமாக இயக்க முடியும் என்பதை பிப். 26ல் நிரூபித்தார்.

2. நட்புக்கு சோதனை

டில்லி முதல் பாகிஸ்தானின் லாகூர் வரை செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரசில் பிப். 19ல் குண்டுவெடித்தது. இதில் 68 பேர் பலியானார்கள். பெரும் பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இந்திய மண்ணில் பாகிஸ்தான் மக்களை பயங்கரவாதம் பலி கொண்ட முதல் சம்பவம் இது.

3. விபரீத முடிவு

அவதுõறு பேச்சு ஒரு குடும்பத்தை அழிவுக்கே கொண்டு சென்றது. சென்னையில் வேலாயுதம் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் பிப். 8ல் தற்கொலை செய்து கொண்டார். விசா ரணையில் மகளை சிலர் அவதுõறாக பேசியதே இந்த சோகமான சம்பவத்துக்கு காரணம் என தெரிய வந்தது.

4. ஹாலிவுட் கொண்டாட்டம்

பரபரப்பான ஆஸ்கார் விருது வழங்கும் விழா பிப். 25ல் கலிபோர்னியாவில் நடந்தது. இடி அமீனின் வாழ்க்கையை சித்தரிக்கும் “தி லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து’ எனும் படத்தில் நடித்த பாரஸ்ட் விட்டாக்கர் சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச்சென்றார்.

மார்ச்

தமிழகம்

மார்ச் 1: சென்னை மாநகராட்சி மேயராக சுப்பிரமணியன் தேர்வு.

மார்ச் 5: நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு ஜனாதிபதி அப்துல் கலாம் ஒப்புதல்.

மார்ச் 9: நிலநடுக்கம் பெரியாறு அணை எந்த விதத்திலும் பாதிக்காது என மத்திய அரசு பார்லிமென்டில் அறிவிப்பு.

மார்ச் 11: வாய்த்தகராறில் சக போலீஸ் காரர்கள் 5 பேரை சுட்டுக் கொன்றார் சிக்கிம் போலீஸ்காரர்.

* ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக்க மத்திய அரசு ஒப்புதல் தர மறுப்பு.

மார்ச் 13: தி.மு.க., கூட்டணி கட்சி களுக்குள் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற பா.ம.க., ராமதாஸ் கோரிக்கையை நிராகரித்தார் கருணாநிதி.

மார்ச் 16: காங்., கட்சிக்கு ம.தி.மு.க., அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று கோவை மண்டல மாநாட்டில் தீர்மானம்.

மார்ச் 25: அறையில் சாமி கும்பிடுபவர் கருணாநிதி என்று விஜயகாந்த் விமர்சனம்.

மார்ச் 29: கணித நோபல் பரிசு எனப்படும் நார்வே நாட்டின் அபெல் பரிசு தமிழகத்தைச் சேர்ந்த சீனிவாச வரதனுக்கு அறிவிப்பு.

மார்ச் 31: இட ஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் 12 மணி நேர “பந்த்’.

இந்தியா

மார்ச் 1: ஏ.எக்ஸ்.என்., சேனல் மீதான தடை நீக்கம்.

* உ.பி., முதல்வர் முலாயமுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

* சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி எட்டு பேர் பலி.

மார்ச் 2: கோர்ட் அவமதிப்புக் குற்றத் திற்காக மேற்கு வங்கத்தின் மூன்று உயர் அதிகாரிகளுக்கு கோல்கட்டா ஐகோர்ட் ஆறு மாத சிறை தண்டனை விதித்தது.

* பஞ்சாப் முதல்வராக பிரகாஷ் சிங் பாதல், 17 அமைச்சர்களுடன் பதவியேற்பு.

மார்ச் 5: புனேயில் போதை விருந்தில் கலந்து கொண்டதாக பி.பி.ஓ., அதிகாரி, சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

மார்ச் 7: அசாம் காங்., எம்.பி., மோனி குமார் சுபா நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என்பதை தனியார் “டிவி’ சேனல் வெளிப்படுத்தியது.

மார்ச் 8: எய்ம்ஸ் பதிவாளர் பி.சி.குப்தாவைப் பதவி நீக்கம் செய்து நிர்வாக இயக்குனர் வேணுகோபால் உத்தரவு.

மார்ச் 13: முலாயம் சிங் அரசால் தன் உயிருக்கு ஆபத்துள்ளது என உ.பி., கோரக்பூர் பா.ஜ., எம்.பி., யோகி ஆதித்யாநாத் லோக்சபாவில் கண்ணீர்.

* இன்சாட்4பி தென் அமெரிக்காவின் பிரஞ்சு கயானாவின் கொரு ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

* சென்னையில் கடல்சார் பல்கலை., அமைக்கும் மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்த போது, மத்திய அமைச்சர் பாலுவை மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் தாக்க முயற்சி.

மார்ச் 15: நந்திகிராம் போலீஸ் துப்பாக்கிச் சூடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க மேற்கு வங்க ஐகோர்ட் உத்தரவு.

மார்ச் 16: முலாயம் மீதான வழக்கை

விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தனக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகக் கண்ணீர்.

* மேற்கு வங்கம் நந்திகிராமில் போலீசாரால் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பந்த்.

மார்ச் 17: நந்திகிராமில் நிலம் கையகப்படுத்தப்படாது என்று மேற்கு வங்க அரசு அறிவிப்பு.

மார்ச் 21: முன்னாள் பா.ஜ., பொதுச்செயலர் பிரமோத் மகாஜன் கொலை வழக்கு மும்பை கோர்ட்டில் துவங்கியது.

மார்ச் 22: பாபர் மசூதி இடிப்பு வழக்கை லக்னோ மற்றும் ரேபரேலி கோர்ட்டில் நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி.

* நிதாரி கொலைகள் வழக்கில் மொனிந்தர் சிங் எந்தக் கொலை

யிலும் ஈடுபடவில்லை. சதி வேலையில் தான் ஈடுபட்டார் என சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை.

மார்ச் 25: விண்ணிலிருந்து விண்ணிலுள்ள மற்றொரு இலக்கை தாக்கும் “அஸ்திரா’ ஏவுகணை சோதனை பாலாசோரேயில் வெற்றிகரமாக நடந்தது.

* காஷ்மீர் பிரச்னையில் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தாத இந்தியாவின் நிலைப்பாடு சரிதான் என ஐரோப்பிய எம்.பி.,க்கள் குழு ஆய்வறிக்கை.

மார்ச் 26: இந்தியன் ஆயில் நிறுவன மேலாளர் மஞ்சுநாத் கொலை வழக்கில் பவன் குமாருக்கு மரண தண்டனை விதித்து உ.பி., கோர்ட் தீர்ப்பு.

மார்ச் 29: உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

மார்ச் 30: பேஷன் “டிவி’க்கு மத்திய அரசு தடை விதித்தது.

உலகம்

மார்ச் 6: இந்தோனேசியா சுமத்ராவின் மேற்குப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பூகம்பத்தில் 70 பேர் பலி.

மார்ச் 8: வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதாஜியாவின் மகன் தாரிக் ரகுமான் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.

மார்ச் 9: இந்திய டாக்டர்களுக்கு எதிரான குடியேற்ற சட்டத்தை வாபஸ் பெற்றது பிரிட்டன்.

பாக்., சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியை அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டி அதிபர் முஷாரப் நீக்கினார்.

மார்ச் 22: இலங்கையில் பயங்கரவாத பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட முனு பரமேஸ்வரி என்ற தமிழ் பத்திரிகையாளர் விடுதலை.

மார்ச் 24: பாகிஸ்தான் தலைமை நீதிபதியாக ராணா பகவன்தாஸ் பதவியேற்பு.

மார்ச் 25: ஈரானுக்குப் பிற நாடுகள் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது, நிதி ஆதாரங்கள் அளிப்பதற்கு ஐ.நா., தடை விதித்தது.

அ. சிறப்பு தகவல்கள்

1. மீண்டும் முதல்வர்

மணிப்பூர் முதல்வராக காங்கிரசை சேர்ந்த இபோபி சிங் மார்ச் 2ல் பொறுப் பேற்றுக்கொண்டார். பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைந்த போதும் இந்திய கம்யூ., ராஷ்ட்ரீய ஜனதா தள் ஆதரவுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக இபோபி சிங் அம்மாநில முதல்வரானார்.

2. நக்சல் தலைவலி

சட்டீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதியின் காவல் நிலையத்தின் மீது மார்ச் 15ல் நக்சல்கள் தாக்குதல் நடத்தியதில் 55 போலீசார் பலியானார்கள். கோரத்தாக்குதலில் இறங்கிய நக்சல்கள் காவல் நிலையத்தை கொள்ளையடித்து ஆயுதங்களை எடுத்து சென்றனர்.

3. இந்தோனேஷியா சோகம்

மார்ச் 7ல் இந்தோனேஷியாவின் யாக்யகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க வந்த “கருடா’ பயணிகள் விமானம், திடீரென டயர் வெடித்து அருகில் இருந்த நெல் வயலில் பாய்ந்தது. இதில் விமானம் முழுக்க தீப்பிடித்து எரிந்து, பயணிகள் 49 பேரும் பலியானார்கள்.

4. சுற்றுச்சூழல் மாதா

சர்வதேச நேரு நல்லிணக்க விருதை மார்ச் 22ல் கென்யாவை சேர்ந்த சுற்றுச்சூழல் அறிஞர் வங்காரி மாதா மாதாய்க்கு ஜனாதிபதி அப்துல் கலாம் வழங்கினார். இவர் ஆப்ரிக்காவிலிருந்து நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல்

தமிழகம்

ஏப். 2: கேன்ஸ் பட விழாவில் திரையிட “வெயில்’ படம் தேர்வு.

ஏப். 3: சங்கரா மருத்துவமனை ரூ. 257 கோடிக்கு விற்கப்பட்டது.

ஏப். 5: சென்னை வந்த மலேசிய அமைச்சர் டத்தோ சிவலிங்கம் ஏர்போர்ட்டில் மயங்கி விழுந்து மரணம்.

ஏப். 6: முதல்வர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு கரூர் சாயப் பட்டறைகள் “ஸ்டிரைக் வாபஸ்’.

ஏப். 7: திண்டிவனம் அருகே சென்டூரில் கார் குண்டு வெடித்து 16 பேர் பலி.

ஏப். 14: அம்பேத்கர் படத்தை யார் திறப்பது என்ற பிரச்னையில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் ரகளை.

ஏப். 15: காவிரி நடுவர் மன்றத்தில் விளக்கம் கோரும் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வது என தமிழகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.

ஏப். 17: தி.மு.க.,வினருக்கு “பார்’ நடத்த அனுமதிக்கும்படி சபாநாயகர் ஆவுடையப்பனின் உதவியாளர் கடிதம் எழுதியது தொடர்பாக ஊழல் தடுப்பு இயக்குனரிடம் அ.தி.மு.க., புகார்.

ஏப். 23: ஜெயா “டிவி’க்கு வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து மோப்ப நாயுடன் போலீசார் வெடிகுண்டு சோதனை.

* முன்னாள் ராணுவ வீரர் நல்லகாமனை தாக்கிய வழக்கில் மதுரை விரைவு கோர்ட் எஸ்.பி., பிரேம்குமாருக்கு “கைது வாரண்ட்’.

ஏப். 25: மதுரையில் முதன்முறையாக விமானப்படையினர் வான் சாகசம்.

* பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு.

ஏப். 27: சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு அ.தி.மு.க., உறுப்பினர்கள் மீதான தடை சட்டசபையில் விலக்கப்பட்டது.

* கூடுதலாக 60 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும் காவிரி நடுவர் மன்றத்தில்தமிழகம் கோரிக்கை.

ஏப். 28: பாலாற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர எல் லைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் விரட்டியடிக்கப்பட்டனர்.

* பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து தமிழக அரசு நியமித்த தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு.

ஏப். 29: விருதுநகரில் நடிகர் சரத்குமார் காமராஜர் மணிமண்டப அடிக்கல் நாட்டுவிழாவை நடத்தினார். புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பு.

* ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற ஸ்ரீதர் வாண்டையார் கைது.

இந்தியா

ஏப். 2: சட்டசபையில் உள்ள பொருட் களை சேதப்படுத்திய திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அபராதம் விதித்து மேற்கு வங்க சபாநாயகர் அறிவிப்பு.

ஏப். 4: டில்லியில் சார்க் மாநாடு துவங்கியது.

ஏப். 5: உ.பி.,யில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல. உ.பி., ஐகோர்ட் அறிவிப்பு.

ஏப். 6: அமால்கமேசன் குழுமத்தலைவர் சிவசைலத்துக்கு பத்ம ஸ்ரீவிருது வழங்கப்பட்டது.

ஏப். 7: டில்லி மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றியது.

ஏப். 9: சர்ச்சைக்குரிய “சிடி’ விவகாரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரான ராஜ்நாத் சிங்கை போலீசார் கைது செய்ய மறுப்பு.

ஏப். 10: டில்லியில் சீல் வைக்கப்பட்டிருந்த கட்டடங்களில் சீலை உடைத்த பா.ஜ., எம்.எல்.ஏ., ஹர்சரண் சிங்க்கு சிறை தண்டனை விதித்தது சுப்ரீம் கோர்ட்

ஏப். 12: முழுவதும் இந்திய தொழில் நுட்பத் தால் உருவான அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.

ஏப். 18: மனைவி மற்றும் மகனின் பாஸ்போர்ட் மூலம் வேறு நபர்களை வெளிநாடு அழைத்து செல்ல முயன்ற பா.ஜ., எம்.பி. கடாரா கைது.

ஏப். 22: ஒரிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் உள்ள ஆய்வு மையத்தில் “பிரமோஸ்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.

ஏப். 23: இத்தாலியின் “ஏஜைல்’ செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்டது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி.,

ஏப். 26: போலி பாஸ்போர்ட் மூலம் ஆள் கடத்தலில் ஈடுபட்ட பா.ஜ., எம்.பி., கடாரா லோக்சபாவில் கலந்து கொள்ள தடை.

ஏப். 29: மீண்டும் நந்திகிராமில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி.

உலகம்

ஏப். 2: தென் பசிபிக் கடலில் ஏற்பட்ட பூகம்பத்தில் சலோமன் தீவை சேர்ந்த 50 பேர் பலி.

ஏப். 6: ஆப்கன் தலைநகர் காபூலில் தற்கொலைபடையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி.

ஏப். 11: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா மீதான ஊழல்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு.

ஏப். 14: தாய்லாந்து நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 35க்கும் அதிகமானோர் பலி.

ஏப். 20: அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த ஒருவர் உடன் பணிபுரிந்தவரை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை.

ஏப். 23: பாகிஸ்தானில் உள்ள சிறப்பு முகாம்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்கப்படுவதாக சீனா குற்றச்சாட்டு.

ஏப். 24: இலங்கை ராணுவத்தின் மீது விடுதலை புலிகள் விமான தாக்குதல். 6 பேர் பலி.

* அமெரிக்க உளவாளியாக கருதப்பட்டவரை தலிபான் சிறுவன் கழுத்தை அறுக்கும் காட்சி அடங்கிய “சிடி’ வெளியிடப்பட்டதால் பரபரப்பு.

ஏப். 26: புலிகள் தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் கிடைத்ததால் கொழும்பு விமான நிலையம் மூடல்.

ஏப். 28: ஈராக் கர்பாலா நகரில் கார் குண்டு வெடித்ததில் மூன்று இந்தியர்கள் உட்பட 58 பேர் உடல் சிதறி பலி.

அ. சிறப்பு தகவல்கள்

1. சஸ்பெண்ட்

சட்டசபையில் எம்.ஜி.ஆர்., குறித்து அவதுõறாக பேசியதாக ரகளை செய்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சபையிலிருந்து வெளியேற்றப் பட்டனர். கலைராஜன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி.சண்முகம் ஆகிய நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

2. பிச்சைக்காரர்கள் வேட்டை

மதுரை வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிச்சைக் காரர்கள் தொந்தரவாக இருந்தனர். இவர்களை கைது செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தர விட்டது. ஏப்.9ல் களமிறங்கிய போலீசார் நகரில் திரிந்த பிச்சைக்காரர்களை கைது செய்து ஆதரவற்றோர் இல்லம் மனநல காப்பகங்களில் சேர்த்தனர்.

3. லெவல் கிராசிங் பயங்கரம்

ஏப். 16ல் சென்னையில் கிராம நிர்வாக அலுவலர்களின் பேரணி சென்னையில் நடக்கவிருந்தது. இதில் கலந்து கொள்ள வேலுõரில் இருந்து வந்த வேன் ஆளில்லாத லெவல் கிராசிங்கில் விபத்தில் சிக்கியது. இதில் 11 கிராம நிர்வாக அலுவலர்கள் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர்.

4. பல்கலைக்கழகத்தில் பரிதாபம்

ஏப். 16ல் அமெரிக்காவின் வெர்ஜினியா டெக் பல்கலை கழகத்தில் நுழைந்த கொரிய மாணவன் வெறித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினான் . இதில் தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் லோகநாதன், மும்பை மாணவி மினால் உட்பட 32 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மே

தமிழகம்

மே 3: சட்டசபையில் சபாநாயகருக்கு அருகில் சென்று புத்தகங்களை கிழித்து வீசிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சண்முகம் சஸ்பெண்ட்.

மே 4: பொதுசொத்துகள் சேத வசூல் சட்டம் வாபஸ். சட்டசபையில் அறிவிப்பு.

* நதிநீர் பிரச்னை குறித்து 1961லேயே தினமலர் நாளிதழ் மூலம் மக்களை தட்டி எழுப்பியவர் டி.வி.ராமசுப்பையர் என வைகோ பேச்சு.

மே 5: ஒக்கேனக்கல் அருவியின் மேற் பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணிகளை கர்நாடகா தொடங்கியது.

மே 8: மதுரையில் போலி மருத்துவ இன்ஸ்டிடியூட் நடத்திய போலி பேராசிரியர் உட்பட 2 பேர் கைது.

* பெரியாறு அணையின் “கேலரி’ பகுதிக்கு செல்ல தடை விதித்து தமிழக பொதுப்பணித்துறை உத்தரவு.

மே 12: பொன்விழா நினைவாக புதிய சட்டசபை கட்டடம் கட்டப்படும் என கருணாநிதி அறிவிப்பு.

மே 13: மதுரை சம்பவம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் மத்திய அமைச்சர் தயாநிதி ராஜினாமா.

மே 15: அமைச்சர் தா.கிருட்டினன் கொலைவழக்கை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை.

மே 18: கடத்தப்பட்ட மீனவர்கள் 11 பேரை விடுவித்தனர் விடுதலைப்புலிகள்.

* மத்திய உள்துறை இணையமைச்சராக தமிழகத்தை சேர்ந்த ராதிகா செல்வி பொறுப்பேற்பு.

மே 19: ஜெயா “டிவி’யின் பங்குதாரர் வைகுண்டராஜன் நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை.

மே 21: முதல்வர் கருணாநிதி மீதான, மேம்பால ஊழல் வழக்கை தொடர முகாந்திரமில்லை என்ற சி.பி.சி.ஐ.டி., யின் அறிக்கையால் வழக்கு ரத்து.

* பரபரப்பு வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெற்ற எஸ்.பி., பிரேம்குமார் “டிஸ்மிஸ்’.

மே 22: மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

மே 23: திருப்பூர் அருகே மதுபான கடையின் “பார்’ இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி.

மே 25: ஊட்டி அருகே முத்தநாடுமந்து வனப்பகுதியில் 1.5 கி.மீ., துõரத்துக்கு பிளவு ஏற்பட்டு புகை வந்ததால் மரங்கள் கருகின.

மே 27: தமிழக “பார்’களில் பீடி, சிகரெட் விற்பனைக்கு தடை. மேலும் பல கட்டுப்பாடுகள் விதிப்பு.

மே 28: தமிழக எல்லையில் இருக்கும் 51 கிராமங்களில் ஆந்திர அரசு மின்சாரத்தை துண்டித்தது.

மே 30: திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் கோயில் பிரச்னையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு.

மே 31: கோத்தகிரியில் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு எஸ்டேட்டில் போலீசார் சோதனை. உள்ளே அனுமதிக்க மறுத்த தொழிலாளர்கள் கைது.

இந்தியா

மே 3: டெல்லியில் பிரதமர் வீட்டருகே தற்கொலை செய்து கொல்ல முயன்ற நபர் கைது.

மே 4: மருத்துவ உயர் படிப்பு படிக்கும் டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் மூன் றாண்டுகள் பணிபுரிவது அவசியம் என மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு.

* “டைம்’ பத்திரிகையின் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் சோனியா , இந்திரா நுõயி, லட்சுமி மிட்டலுக்கு இடம்.

மே 5: குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்ஜரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் குமார் “சஸ்பெண்ட்’.

மே 7 : இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் ஒவியம் வரைந்த ஒவியர் எம்.எப். உசேனின் சொத்துக் களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு.

மே 8: ஆள் கடத்தல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதாதள எம்.பி. முகமது சகாபுதீனுக்கு சிவான் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.

மே 10: இந்தியாவில் இரண்டு கட்சி நடைமுறையை உருவாக்க வேண்டும் என கலாம் யோசனை.

மே 11: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனிப் பெரும் பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது.

மே 13: 49 அமைச்சர்களுடன் உ.பி., முதல்வராக மாயாவதி பொறுப்பேற்றார்.

மே 18: ஐதராபாத்தில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு. 12பேர் பலி 20 பேர் படுகாயம்.

மே 21: அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது முலாயம் அரசு: உ.பி., சட்டசபையில் கவர்னர் ராஜேஷ்வர் கோபம்.

* பெங்களூருவில் பா.ஜ., எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா முத்தம் கொடுக்கும் படங்களை வெளியிட்டு நர்ஸ் ஜெயலட்சுமி பரபரப்பு.

* கேரள மார்க்சிஸ்ட் கட்சி கோஷ்டி பூசலால் கேரள முதல்வர் அச்சுதானந்தனும், பினராயி விஜயனும் “பொலிட் பீரோ’விலிருந்து நீக்கம்.

மே 28: அருணாச்சல பிரதேச ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விசா மறுக்கப் பட்டதால், இந்திய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சீன பயணத்தை ரத்து.

* பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென குஜ்ஜார் இன மக்கள் நடத்திய ஆர்ப் பாட்டத்தில் வன்முறை. 14 பேர் பலி.

உலகம்

மே 1: இலங்கை வன்னி பகுதியில் நடந்த சண்டையில் 13 புலிகள் சுட்டுக்கொலை.

மே 3: கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் கடத்த முயற்சி செய்த மூவர் பிடிபட்டனர்.

மே 5: கென்ய விமானம் கேமரூனில் விழுந்து விபத்து. 15 இந்தியர்கள் உட்பட 118பேர் பலி.

மே 7 : வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.

மே 12: பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி இப்திகர் சவுத்ரி கராச்சி சென்ற போது கலவரம்: 15 பேர் பலி.

மே 15: பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக் பதவி விலகினார்.

மே 16: நிக்கோலஸ் சர்கோசி பிரான்ஸ் அதிபராக பொறுப்பேற்றார்.

மே 17: கேன்ஸ் திரைப்பட விழா தொடக்கம்.

மே 18: சர்ச்சைக்குரிய உலகவங்கித் தலைவர் உல்போவிட்ஸ் ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு.

மே 23: பாகிஸ்தானில் பெண் ஆணாக மாறி திருமணம் செய்து கொண்டதை கண்டித்து, லாகூர் கோர்ட் இருவருக்கும் சிறை தண்டனை விதித்தது.

மே 24: விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் இலங்கை ராணுவத்தினர் 35 பேர் பலி.

மே 28: கேன்ஸ் திரைப்பட விழாவில் “நான்கு மாதங்கள், மூன்று வாரங்கள் மற்றும் இரண்டு நாட்கள்’ என்ற திரைப் படம் சிறந்த படமாக தேர்வு.

அ. சிறப்பு தகவல்கள்

1. பிரிந்த சகோதரர்கள்

சட்டீஸ் கரை சேர்ந்த ஒட்டி பிறந்த சகோதரர்கள் ராம், லட்சுமணன். பத்துமாதங்கள் ஆன நிலையில் மே 29ல் ரெய்ப்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவர்கள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.

2. அரசியல் சோதனை

கோயம்பேட்டில் பாலம் அமைப்பதற்காக நெடுஞ்சாலை துறையால் விஜயகாந்தின் திருமண மண்டபம் கையகப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியை நெடுஞ்சாலை துறையினர் மே.17ல் இடித்து தள்ளினர். இந்த மண்டபத்தில் விஜயகாந்தின் கட்சி அலுவலகமும் இயங்கி வந்தது.

3. கலவர குரு

சீக்கிய மத குரு கோவிந்த் சிங் போல் உடையணிந்து விளம்பரம் கொடுத்த, தேரா சச்சா சவுதாவின் பாபா குர்தீம் சிங் ராம் ரகீமுக்கு எதிராக பஞ்சாப் முழுவதும் கலவரம் வெடித்தது. மே 22ல் குர்தீம் சிங்கின் செய்கையை கண்டித்து பஞ்சாபில் “பந்த்’ நடத்தப்பட்டது.

4. நிறைவேறும் கனவு

சென்னை மக்களின் தாகம் தணிப்பதற்காக தொடங்கப்பட்ட தெலுங்கு கங்கை திட்டத்தின் கால்வாய்கள் சீர்குலைந்த நிலையில் இருந்தன. இந்த திட்டத்துக்கு சாய்பாபா, 200 கோடி ரூபாய் செலவிட்டு கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் வரை சீரமைத்து கொடுத்தார்.

ஜூன்

தமிழகம்

ஜூன் 1: கூட்டுறவு சங்க தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஜெயலலிதா அறிவிப்பு.

ஜூன் 2: அ.தி.மு.க., தலைமை அலுவலகம் விதிமுறைகளை மீறி கட்டப் பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் நோட்டீஸ்.

ஜூன் 3: அ.தி.மு.க., தலைமைச் செயலகத்தை இடிக்க நோட்டீஸ் அனுப்பியதாக தமிழக அரசு மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு.

ஜூன் 5: கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரர்கள் என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி.

ஜூன் 6: கோவையில் இறந்து போன தம்பியின் உடலை ஜெபம் செய்து உயிர்ப்பிக்க முயன்ற சார்லஸ் என்ற மத போதகர் கைது.

ஜூன் 9: தனியார் பள்ளிகள் நடத்தும் பிளஸ் 1 நுழைவுத்தேர்வுக்கு சென்னை ஐகோர்ட் தடை.

ஜூன் 10: 2,500 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்காக தமிழகத்தில் 6 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

ஜூன் 12: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயல்வழி கற்கும் திட்டம் அமலுக்கு வந்தது.

ஜூன் 13: நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு.

ஜூன் 17: மதுரை மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ஒருவர் மீது ஒருவர் புகார்.

* தமிழக மீனவர் படகை நடுக்கடலில் மூழ்கடித்த இலங்கை மீனவர்கள் அதிலிருந்த மீனவர்களையும் கடத்திச் சென்றனர்.

ஜூன் 20: மணப்பாறையில் பத்தாம் வகுப்பு மாணவன் சிசேரியன் ஆபரேசன் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

ஜூன் 22: மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் தாக்கப்பட்டார்.

ஜூன் 24: தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தலைவராக ராதிகா தேர்வு.

ஜூன் 25: மூன்று பேரை கொலை செய்த இலங்கையை சேர்ந்த ராஜனுக்கு துõக்கு தண்டனை விதித்தது திருவண்ணாமலை கோர்ட்.

ஜூன் 26: மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 75.34 சதவீதம் ஓட்டுப்பதிவு.

ஜூன் 29: மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் வெற்றி.

இந்தியா

ஜூன் 1: சஞ்சய் தத்துக்கு துப்பாக்கி வாங்கித்தந்த பாலிவுட் தயாரிப்பாளர் சமீர் ஹிங்கோராவுக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

ஜூன் 2: கோவா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 66 சதவீதம் ஓட்டுப்பதிவு.

ஜூன் 5: டில்லி “பந்த்’க்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்.

ஜூன் 6: சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், அ.தி.மு.க., ம.தி.மு.க., உள்ளிட்ட எட்டு மாநில கட்சிகள் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்தனர்.

ஜூன் 7: உ.பி., விவசாய நில ஒதுக்கீடு விவகாரத்தில், நடிகர் அமிதாப் போலி முகவரி கொடுத்ததாக அலகாபாத் ஐகோர்ட்டில் தகவல்.

ஜூன் 8: கோவா முதல்வராக திகாம்பர் காமத் பதவியேற்றார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மந்திரிசபை அமைப்பு.

* ஐ.நா.,வில் பணியாற்றிய இந்திய அதிகாரி சஞ்சய் பாலுக்கு ரூ.400 கோடிக்கும் அதிகமான ஊழல் வழக்கில் 30 ஆண்டு சிறை தண்டனை.

ஜூன் 9: குட்ரோச்சியை நாடு கடத்த கோரும் சி.பி.ஐ., மனுவை அர்ஜென்டினா கோர்ட் நிராகரிப்பு.

ஜூன் 10: ஓடும் ரயிலில் “சினிமா’ சண்டைக் காட்சிகளை படம் பிடிக்க ரயில்வே துறை அனுமதி மறுப்பு.

ஜூன் 11: குட்ரோச் சியின் வழக்கு செலவுகளை சி.பி.ஐ., வழங்க வேண்டும் என அர்ஜென் டினா நீதிமன்றம் உத்தரவு.

ஜூன் 14: ஐ.மு., கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக முன்னாள் ராஜஸ்தான் கவர்னர் பிரதிபா பாட்டீல் அறிவிப்பு.

ஜூன் 15: மகனுக்கு வேலை கேட்டு வந்த விதவையை பீகார் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் முரட்டுத்தனமாக கீழே தள்ளியதால் சர்ச்சை.

ஜூன் 21: பிரமோஸ் ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.

ஜூன் 22: ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டுமென்ற மூன்றாவது அணியின் கோரிக்கையை நிராகரித்தார் கலாம்.

ஜூன் 25: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக ஷெகாவத் மனு தாக்கல்.

ஜூன் 28: முத்திரைத்தாள் மோசடி வழக்கில் அப்துல் கரீம் தெல்கிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை: மகாராஷ்டிரா கோர்ட் தீர்ப்பு.

உலகம்

ஜூன் 6: ஓமனை தாக்கிய “கோனு’ சூறாவளியில் 2 இந்தியர்கள் உட்பட 32க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

ஜூன் 7: கொழும்பில் தங்கியிருந்த நுõற்றுக்கணக்கான தமிழர்கள் வெளியேற்றம். வவுனியாவுக்கு மாற்றப்பட்டதாக இலங்கை அரசு தகவல்.

ஜூன் 14: மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு.

ஜூன் 16: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பிரிட்டிஷ் அரசு “சர்’ பட்டம்.

ஜூன் 19: சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்திலிருந்து சுனிதா வில்லியம்சுடன் புறப்பட்டது அட்லாண்டிஸ் விண்கலம்.

ஜூன் 24: சதாம் உசேனின் உறவினர் கெமிக்கல் அலி, முன்னாள் ராணுவ தலைவர் உசேன் ரஷீத் ஆகியோருக்கு துõக்கு தண்டனை விதித்து ஈராக் கோர்ட் தீர்ப்பு.

ஜூன் 27: பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் பதவி விலகல்.

ஜூன் 30: இந்தியாவை சேர்ந்த சுருதி வதேரா, பிரிட்டன் அரசில் சர்வதேச மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராக நியமனம்.

* கிளாஸ்கோ விமான நிலையத்தில் குண்டுடன் சென்ற கார் வெடித்தது.

* சர்ச்சைக்குரிய உலகவங்கி தலைவர் பால் உல்போவிச் ராஜினாமா.

அ. சிறப்பு தகவல்கள்

1. சர்ச்சை வழக்கு

வரதட்சணை வழக்கு போட்ட தனது மனைவிக்கும் வேணுபிரசாத் என்பவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விட்டது என அதிர்ச்சி பேட்டியளித்தார் நடிகர் பிரசாந்த். வேணுபிரசாத் ஒத்துக்கொண்ட போதும், பிரசாந்த் மனைவி கிரகலட்சுமி தொடர்ந்து மறுத்து வருகிறார்.

2. குஜ்ஜார்களின் கோபம்

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் தங்களை பழங் குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி சாலை மறியல், ரயில் மறியல் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 4ம் தேதி டில்லியில் “பந்த்’ நடத்தினர். பேச்சு வார்த்தை மூலம் இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டது.

3. தமிழகத்தில் நக்சலைட்?

தேனி மாவட்டம் முருகமலையில் பயிற்சிக்கு வந்த 10 தீவிரவாதிகள் பிடிபட்டதை தொடர்ந்து தமிழகத்தில் நக்சல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி., விஜயகுமார் தலைமையில் இதற்காக புதிய போலீஸ் படை அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நக்சல்கள் நடமாட்டம் குறித்த அச்சம் ஏற்பட்டது.

4. அதிர்ச்சி கொலை

சிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் கார் குண்டு வெடிப்பால் கொல்லப்பட்டார். இது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தி.மு.க., வில் நிலவிவரும் கோஷ்டி மோதலே இந்த கோர சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டது.

ஜூலை

தமிழகம்

ஜூலை 1: திருநின்றவூர் பேரூராட்சியின் நான்காவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் முருகன் கொலை.

*சென்னையில் தனது பிரசாரத்தை தொடங்கினார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரதிபா பாட்டீல்.

ஜூலை 2: கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது.

ஜூலை 4: சிசேரியன் சிறுவன் திலீபன் ராஜ் திருச்சி சிறுவர் நீதி குழுமத்தில் சரண். ஜாமீனில் விடுவிப்பு.

* ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை, கடலுõர் மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு.

ஜூலை 5: கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்புமனுவை ஏற்க மறுத்ததை கண்டித்து நடந்த போராட்டத்தில் பாலபாரதி எம்.எல்.ஏ., கைது.

ஜூலை 7: பரவலான முறைகேடு களுடன் தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்கள் தொடங்கின.

ஜூலை 9: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஜெயலலிதா மீது சிதம்பரம், புதுக்கோட்டை நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல்.

ஜூலை 10: தமிழகத்தில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 நக்சல்கள் கைது.

* ஓமலுõர் கூட்டுறவு தேர்தல் மோதல் தொடர்பாக பா.ம.க., எம்.எல்.ஏ., தமிழரசுவை கைது செய்யும்படி தி.மு.க., ஆர்ப்பாட்டம்.

ஜூலை 11: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு.

ஜூலை 15: இந்து திருமணங்களை பதிவு செய்யாவிட்டால் தண்டனை விதிக்க வகை செய்யும் வரைவு சட்டம் வெளியிடப்பட்டது.

* காமராஜர் பிறந்தநாளையொட்டி சத்துணவுடன் வாரம் மூன்று முட்டை வழங்கும் திட்டம் அமல்.

ஜூலை 21: கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த கூட்டுறவு தேர்தல் ஆணையம் அமைக்க தமிழக அரசு உறுதி.

ஜூலை 22: பாலக்காடு கோட்டத்தை பிரித்து சேலம் ரயில்வே கோட்டம் சுப்ரீம் கோர்ட்டில் கேரளா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஜூலை 23: சென்னை அருகே பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு 50 ஏக்கர் நிலம் வழங்க தமிழக அரசு முடிவு.

ஜூலை 27: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க சென்னை ஐகோர்ட் விதித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை.

ஜூலை 30: துõத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஒப்பந்தம் செய்திருந்த டைட்டானியம் தொழிற்சாலை பொதுமக்கள் கருத்தறிந்த பின்னரே அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

*சேலம் ரயில்வே கோட்ட துவக்க விழாவுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.

இந்தியா

ஜூலை 9: பி.எஸ்.என்.எல்., டெண்டரில் முறைகேடு நடந்ததாக தகவல். முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ராஜா குற்றச்சாட்டு.

ஜூலை 14: ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க மூன்றாவது அணி முடிவு.

ஜூலை 16: மூன்றாவது அணி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ., மனு.

ஜூலை 18: மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்துல் கனி இஸ்மாயில் துர்க், பர்வேஸ் ஷேக் மற்றும் முஷ்டாக் தரானி ஆகிய மூவருக்கும் துõக்கு.

ஜூலை 19: ஜனாதிபதி தேர்தல் நடந்தது.

* மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அஷ்கர் முகாடம், ஷானவாஸ் குரேஷி, முகமது சோயப் கான்சருக்கு துõக்கு தண்டனை விதித்தது தடா கோர்ட்.

ஜூலை 20: மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புள்ள முகமது இக்பாலுக்கு துõக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

*ஆந்திர சட்டசபையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தாயார் குறித்து முதல்வர் ராஜசேகர ரெட்டி குறிப்பிட்டதால் அமளி.

ஜூலை 24: ஜனாதிபதி பதவியிலிருந்து அப்துல் கலாம் விடைபெற்றார். 2020க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என உறுதி.

*மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஜாகீர் உசேன் ஷாயிக், அப்துல் அக்தர் கான், பெரோஸ் மாலிக் ஆகிய மூவருக்கும் துõக்கு.

ஜூலை 25: போலி பாஸ்போர்ட் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருந்த நடிகை மோனிகா பேடி ஜாமீனில் விடுதலை.

ஜூலை 27: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமனுக்கு துõக்கு.

ஜூலை 28: ஆந்திராவில் ஏழைகளுக்கு நிலம் வழங்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலவரமானது. போலீசார் துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் பலி.

ஜூலை 30: மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங், அவரது மனைவி, மகன், பேரன் உட்பட ஏழு பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு.

ஜூலை 31: சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த குற்றச் சாட்டில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் சிறை: மும்பை தடா கோர்ட் தீர்ப்பு.

உலகம்

ஜூலை 6: பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பயணம் செய்த விமானம் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டது.

ஜூலை 14: பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை போனதாக ஆஸ்திரேலிய போலீசார் முகமது அனீப் மீது வழக்கு.

ஜூலை 16: ஜப்பான் பூகம்பத்தில் 5 பேர் பலி. 350க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டம்.

ஜூலை 19: பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் பலி.

ஜூலை 20: பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியை பதவி நீக்கம் செய்தது செல்லாது என பாக்., நீதிபதி கவுன்சில் தீர்ப்பு.

அ. சிறப்பு தகவல்கள்

1. அரசியல் மொழி

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி ராஜ்யசாபா எம்.பி.,யாக ஜூலை 26ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதுவரை கவிஞராகவே அறியப்பட்ட கனிமொழி, இனி பொறுப்புகள் வழங்கப்பட்டால் ஓடி, ஒளியப்போவதில்லை என அறிவித்தார்.

2. ஆபரேஷன் சைலன்ஸ்

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் மீது மேற்கொள்ளப் பட்ட கொலைமுயற்சியால் அதிர்ச்சியடைந்தது அந்நாட்டு ராணுவம். பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்த லால் மசூதிக்குள் ஆபரேஷன் சைலன்ஸ் என்ற பெயரில் நுழைந்து தாக்கியது. இதில் நுõற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

3. சஞ்சு பாபாவுக்கு சிறை

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார் சஞ்சய்தத். இவருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி ஜூலை 31ல் தீர்ப்பளித்தது மும்பை தடா கோர்ட். இதனால் இவர் நடிப்பில் தயாராகிவந்த படங்கள் முடங்கின.

4. அரசியல் கைது

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ராணுவ ஆட்சியாளர்களால் ஜூலை 16ம் தேதி கைது செய்யப்பட்டு பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக விமர்சிக்கப் பட்டது.

ஆகஸ்ட்

தமிழகம்

ஆக. 1: ஓசூர் அருகே பதுங்கியிருந்த ரவுடி வெள்ளை ரவி போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கி மோதலில் சுட்டுக்கொலை.

ஆக. 3: டாடா ஆலை விவகாரத்தின் ஜெயா “டிவி’ பங்குதாரர் வைகுண்ட ராஜன் தம்பி ஜெகதீசன் கைது.

ஆக. 6: சீரியல் கில்லர் பில்லுõர் ரமேஷூக்கு இரட்டை துõக்கு தண்டனை விதித்து விருத்தாசலம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

ஆக.7: சீரியல் கில்லர் ரமேஷுக்கு மற்றொரு வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

ஆக.9: மேட்டூரிலிருந்து நீர் திறக்கப் பட்டதால் ஈரோடு காவிரி மறுகரையில் இருக்கும் நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

ஆக.12: மானாமதுரைராமேஸ்வரம் புதிய அகல ரயில் பாதை திறப்பு விழா மதுரையில் நடைபெற்றது.

ஆக.13: தமிழகத்தில் கேபிள் “டிவி’ சேவையை நடத்த “அரசு கேபிள் “டிவி’ கார்ப்பரேஷன் எனும் புதிய நிறுவனம் தொடங்கப்பட்டது.

ஆக.14: தென்காசியில் இருதரப்பினருக்கு இடையேயான மோதலில் 6 பேர் வெட்டிக்கொலை.

ஆக.18: சென்னையில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

ஆக.19: ஜெயா “டிவி’ பங்குதாரர் வைகுண்டராஜன் மணல் ஆலையில் போலீசார் சோதனை.

ஆக.20: ராஜிவ் பிறந்தநாளை ஒட்டி பழைய மாமல்லபுரம் சாலைக்கு ராஜிவ் பெயர் சூட்டப்பட்டது.

ஆக.24: போயஸ் கார்டனில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்த வந்த காங்கிர சாருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே மோதல் எழுந்தது.

ஆக.26: சென்னை மாணவன் பாபுராஜ், வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கண்ணில் வாள் பாய்ந்து பலி. மற்றொரு மாணவன் நாகராஜ் கைது.

*பழநி மலையில் ரோப்கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி.

ஆக.27: தி.மு.க., அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கு மதுரை கோர்ட்டிலிருந்து ஆந்திர மாநிலம் சித்துõருக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

ஆக.28: இனி வரும் தேர்தல்களில் எந்த கட்சியுடனும் தி.மு.க., கூட்டணி வைத்துக்கொள்ளாது என அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவிப்பு.

*அ.தி.மு.க.,வில் பொருளாளர் பதவியிலிருந்து தினகரன் நீக்கம்.

ஆக.29: முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வளர்மதி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

இந்தியா

ஆக.5: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 5 பேரை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பு.

ஆக.8: உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.

ஆக.10: சேது சமுத்திர திட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்தது.

ஆக.11:காஷ்மீரில் காண்ட்ரூ ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலி, 50 பேர் படுகாயம்.

ஆக.13: இந்தியஅமெரிக்க அணு <<ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்து பேசினார் பிரதமர் மன்மோகன் சிங்.

ஆக.13: பயிற்சியாளர் தன்னை துன்புறுத்துவதாக மாரத்தான் சிறுவன் புதியா கூறிய குற்றச்சாட்டை அடுத்து பயிற்சியாளர் பிரான்சிஸ் தாஸ் கைது.

ஆக.17: பிரதமர் மீதான ஜார்ஜ் பெர்னாண்டஸ் கருத்தால் இருசபைகளிளும் அமளி.

ஆக.21: அமெரிக்காவுக்கான இந்திய துõதர் இந்திய எம்.பி.,க்களை “தலையில்லாத கோழி’ என விமர்சித்ததால் பார்லிமென்டில் அமளி.

ஆக.22: கொலை வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரனை டில்லி ஐகோர்ட் விடுதலை செய்தது.

* இந்திய பார்லிமென்ட் கூட்டுகூட்டத்தில் உரையாற்றினார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.

ஆக.23: ஜாமீன் பெற்ற நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறையிலிருந்து விடுவிப்பு.

ஆக.24: மானை வேட்டையாடிய வழக்கில் தண்டனையை எதிர்த்து, நடிகர் சல் மான் கான் தாக்கல் செய்த மனுவை ஜோத்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

ஆக.25: ஐதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 50 பேர் பலி.

* அரியவகை மானை வேட்டையாடிய வழக்கில் சரணடைந்த நடிகர் சல்மான் கான் சிறையில் அடைக்கப் பட்டார்.

ஆக.28: பீகாரில் திருட முயன்ற இளைஞரை பிடித்த பொதுமக்கள் கடுமையாக சித்ரவதை செய்த காட்சிகள் “டிவி’யில் ஒளிபரப்பானதால் பரபரப்பு.

ஆக.29: ஆக்ராவில் லாரி மோதி நான்கு பேர் பலியானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

உலகம்

ஆக.3: கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது ஜீப்பை மோதிய இந்திய வாலிபர் கலீல் அகமது லண்டன் மருத்துவமனையில் மரணம்.

ஆக.4: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பீனிக்ஸ் விண்களத்தை அனுப்பியது நாசா.

ஆக.6: காஷ்மீர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் இந்தியாவையும் தாக்குவோம் என அல்குவைதா பயங்கரவாதிகள் எச்சரிக்கை.

ஆக.8: தாவூத் இப்ராகிம் கைது செய்யப்படவில்லை. அவன் பாகிஸ் தானிலும் இல்லை என அந்நாடு மறுப்பு.

ஆக.9: அமெரிக்கவின் புளோரிடா மாகாணத்திலிருந்து கென்னடி ஆய்வு மையத்திலிருந்து எண்டவர் விண்களம் விண்ணில் பாய்ந்தது.

ஆக.11: அமெரிக்காவின் லாரெல் ஹாலோ என்ற தீவு கிராமத்தின் மேயராக ஹர்விந்தர் ஆனந்த் என்ற இந்தியர் போட்டியின்றி தேர்வு.

ஆக.15: இத்தாலிய தொழிலதிபர் குட்ரோச்சி அர்ஜென்டினாவால் விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு திரும்பினார்.

ஆக.16: பெரு நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 350க்கும் மேற்பட்டோர் பலி.

ஆக.18: துருக்கியிலிருந்து புறப்பட்ட விமானத்தை கடத்த பயங்கரவாதிகள் செய்த முயற்சி தோல்வி.

ஆக. 21: அனீப் விசாவை ரத்து செய்தது செல்லாது என ஆஸ்திரேலிய கோர்ட் தீர்ப்பு.

* ஜெர்மனியில் 6 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்.

அ. சிறப்பு தகவல்கள்

1. திறமைக்கு கவுரவம்

பிரபல இயக்குனர் ஷியாம் பெனகலுக்கு 2005ம் ஆண்டுக்கான தாதா சாகேப் விருது ஆக. 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெற்றிருக்கும் பெனகல் சிறந்த இந்தி திரைப்படத்துக்கான தேசிய விருதை ஐந்து முறை பெற்றவர்.

2. மோசடி மன்னன்

டில்லியை சேர்ந்த கேன்டீன் கான்டிரக்டர் அசோக் மல்கோத்ரா பலகோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடியில் ஆக. 6ல் கைதானார். டில்லி குடிசை மாற்று வாரியத்தின் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மனைகளை முறைகேடாக விற்றதன் மூலம் 100 கோடிக்கும் அதிமான அளவில் சொத்துகளை குவித்திருப்பது தெரியவந்தது.

3. தீவுகளான மாவட்டங்கள்

பீகார் மாநிலத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டு பல மாவட்டங்கள் தனித்தீவாகின. பாலங்களையும் வெள்ளம் அடித்துக்கொண்டு போனது. மக்கள் நிவாரண உதவி தேடி தற்காலிக குடில்களில் தஞ்ச மடைந்தனர்.

4. மதானிக்கு நிம்மதி

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆக., 1ல் குற்றவாளிகளை அறிவித்தது தனிகோர்ட். போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார் கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி.

செப்டம்பர்

தமிழகம்

செப்.1: சென்னை அனந்தராமன் கொலை வழக்கில் மனைவி வித்யாவுக்கு, ஆயுள் தண்டனை விதித்து தொடுபுழா விரைவு நீதிமன்றம் உத்தரவு.

செப்.2: 7வது உலக கவிஞர்கள் மாநாடு சென்னையில் நடந்தது.

செப்.3: மருத்துவப்படிப்புக்கான கால வரம்பு நீடிப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவக்கல்லுõரி மாணவர்கள் போராட்டம்.

செப்.4: தமிழக அரசு அறிமுகப் படுத்திய புதிய ஆட்டோ கட்டணத்தை எதிர்த்து தீக்குளித்த ஆட்டோ டிரைவர் கண்ணன் மரணம்.

செப்.5: பிரபல தடகள வீராங்கனை சாந்தி தற்கொலை முயற்சி.

செப்.6: 200506ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருதுகள் அறிவிப்பு. சிறந்த நடிகர்களாக ரஜினி, கமல் தேர்வு.

* நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சரத்குமார்.

செப்.7: நடிகர் ஸ்ரீகாந்த் தனது காதலி வந்தனாவை மணந்தார்.

செப்.8: மாமல்லபுரம் அருகே கார் அரசு பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரண்டுமே எரிந்து சாம்பலானது. காரில் பயணம் செய்த 6 பேர் பலி.

செப்.9: புட்டபர்த்தியில் சாய்பாபாவை சந்தித்த உள்ளாட்சிதுறை அமைச்சர் ஸ்டாலின் கூவத்தை சுத்தப்படுத்தும் திட்டத் துக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

செப்.11: மதுரை கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை ஒட்டிய 79 கி.மீ., பாலக் காட்டில் சேர்க்கப்பட்டு சேலம் கோட்ட பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.

செப்.12: ராமர் பாலத்தை சேதப்படுத்துவதை கண்டித்து நாடு முழுவதும் பா.ஜ., விஷ்வ இந்து பரிஷத் போராட்டம்.

செப்.13: பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து இஸ்லா மியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.

செப்.14: புதுக்கோட்டையில் தே.மு.தி.க., மூன்றாமாண்டு துவக்கவிழா கூட்டம் நடந்தது.

செப்.15: ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து முதல்வர் அறிவிப்பு.

செப்.18: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பஸ்சுக்கு தீவைக்கப் பட்டதில் இரண்டு பேர் பலி.

செப்.19: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை பாலக்காடு கோட் டத்தில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வைகோ கைது.

செப்.27: தி.மு.க., அரசை நீக்க வேண்டும் என மத்திய அரசிடம் பா.ஜ., மனு.

* சுப தங்கவேலனிடமிருந்து வீட்டு வசதித்துறை பறிக்கப் பட்டு வருவாய் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

செப்.28: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முதற்கட்ட தீர்ப்பில் 41 பேருக்கு சிறை தண்டனை விதித்து தனி கோர்ட் உத்தரவு.

இந்தியா

செப் 2: இன்சாட் ரக செயற்கைகோளை, ஸ்ரீஹரி கோட்டா விலிருந்து இந்திய ராக்கெட்டே முதல் முறையாக விண்ணில் செலுத்தியது.

செப்.4: அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் நாடு தழுவிய போராட்டம்.

செப்.7: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி மீது நக்சல்கள் நடத்திய கொலை முயற்சியில் காங்கிரசார் 3 பேர் பலி.

* ராஜஸ்தான் மாநிலம் பாபா ராம்தேவ் கோயிலுக்கு பக்தர் களை ஏற்றி கொண்டு வந்த லாரி கவிழ்ந்ததில் 85 பேர் பலி.

செப்.12: ராமாயண பாத்திரங்கள் உண்மை என்பதற்கு ஆதாரம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் மனு தாக்கல்.

செப்.13: சிதம்பரம், சரத்பவார், மணிசங்கர் ஐயர், சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு சிறந்த பார்லிமென்டேரியன் விருது.

* பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் தெல்புவரா மாவட்டத்தில் திருட வந்தவர்கள் 10 பேரை கிராம மக்களே அடித்து கொன்றனர்.

செப்.16: மாநில அரசை சேர்ந்த அமைச்சர்கள் வெளிநாடுகளிடம் உதவிகேட்டு நேரடியாக தொடர்பு கொள்ள தடை விதித்து மத்திய அரசு உத்தரவு.

செப்.21: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் குஜராத்தில் உள்ள தனது மூதாதயர் கிராமமான ஜூலாசானுக்கு சென்றார்.

செப்.22: அமெரிக்க கோடீஸ்வரர்கள் பட்டியலில் அமர் போஸ், கவிதராக் ஸ்ரீராம், பரத் தேசாய், வினோத் கோஸ்லா என நான்கு இந்தியர்கள் இடம்பிடித்தனர்.

செப்.24: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக ராகுல் நியமனம்.

செப்.25: பா.ஜ., மூத்த தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்.

உலகம்

செப்.7: காங்கோவில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி.

செப்.11: உலக வர்த்தக மையம் இடிக்கப்பட்ட 6வது நினைவு தினத்தன்று ஒசாமா பின் லேடனின் மற்றொரு வீடியோ வெளியானது.

செப்.12: இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதி அருகே கடுமையான நிலநடுக்கம். 23 பேர் பலி.

செப்.12: தடையை மீறி கராச்சிக்கு வந்த இம்ரான்கான் இஸ்லாமபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

* அணுகுண்டுக்கு இணையான ராட்சத குண்டுவெடித்து ரஷ்யா சோதனை.

செப்.16: தாய்லாந்தில் தரையிறங்க முயற்சி செய்த போது பயணிகள் விமானம் இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த 87 பேர் பலி.

செப்.17: அமெரிக்க கால்பந்து வீரர் ஓ.ஜே. சிம்சன் கொள்ளை குற்றச்சாட்டில் கைது.

செப்.20: பாலஸ்தீன காசா பகுதியை எதிரிபகுதியாக இஸ்ரேல் அறிவித்தது.

செப்.26: வியட்னாமில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து 60 பேர் பலி.

செப்.29: இலங்கையில் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கற்களை கடத்தி வந்த ஆசாமி சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.

* முஷாரப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை கண்டித்து பாகிஸ்தானில் நடந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலவரம்.

அ. சிறப்பு தகவல்கள்

1. கல்யாண மன்னன் ஜாக்கிரதை

ஐ.ஏ.எஸ்., சப்ட் வேர் இன்ஜினியர் என பலபெயர்களில் வெப்சைட்டில் பதிவு செய்து பெண் களை ஏமாற்றிய லியாகத் அலி செப். 17ம் தேதி கைது செய்யப்பட்டான். இந்த மோசடியில் பல கோடி இவன் பல லட்சம் ரூபாய் சுருட்டியிருக்கலாம் என கருதப்படுகிறது.

2. ராமர் சர்ச்சை

ராமர் பால சர்ச்சையில் ராமர் குறித்த கருணா நிதியின் கருத்தால் ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் பெங்களூருவில் உள்ள அவரது மகள் செல்வி வீட்டில் கல்லெறிந்தும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். செப்.18ம் தேதி நடந்த இந்த சம்ப வத்தால் இரு மாநில எல்லையில் பரபரப்பு நிலவியது.

3. பதிலுக்கு பதில்

முதல்வர் கருணாநிதியின் தலையை துண்டிக்க வேண்டுமென கூறிய ராம்விலாஸ் வேதாந்தியை கண்டித்து செப்.23ம் தேதி பா.ஜ., அலுவலகம் முன்பு திரண்ட தி.மு.க.,வினர், அந்த அலுவலகத்தை கற்களை வீசி தாக்கினர். கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்து சகட்டு மேனிக்கு தாக்கதல் நடத்தினர்.

4. “குளு குளு’ பஸ்

சென்னை மக்களை குளிர்விக்கும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பஸ்கள் செப்.19 இயக்கப்பட்டன. கேமரா, தானியங்கி கதவுகள், மொபைல் போன் சார்ஜர்கள் என பல்வேறு விதமான வசதிகள் இந்த பஸ்சில் செய்து தரப்பட்டுள்ளன.

அக்டோபர்

தமிழகம்

அக். 4: முதல்வர் கருணாநிதி, போக்குவரத்து அமைச்சர் நேரு, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு.

அக். 5: மதுரை மத்திய சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இலங்கை நபர் கனீசியஸ் பெர்னாண்டோ சுட்டுக்கொலை.

* தேர்தல் தில்லுமுல்லுவை தடுக்க “ஓட்டுச்சாவடி அதிகாரிகள்’ என்ற புதிய பதவியில் 25 ஆயிரம் பேர் நியமனம்.

அக். 6: முன்னாள் எம்.எல்.ஏ., எம்.கே.பாலன் கடத்தி கொலை செய்யப் பட்ட வழக்கில் 14 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஐகோர்ட் உத்தரவு.

அக். 8: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இரண்டாவது கட்டமாக 35 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப் பட்டது.

அக். 9: கிட்னி மோசடி வழக்கில் சென்னை டாக்டர் ரவிச்சந்திரன் மும்பையில் கைது.

அக். 11: விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்திய விடுதலை சிறுத்கைகள் பிரமுகர் வன்னியரசு கைது.

அக். 16: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு.

* தமிழக பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை.

* தமிழக அரசு விருது வழங்கும் விழாவில் கமல், ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

அக். 19: சட்டசபை உறுப்பினராக இருப்பதற்கான தகுதியை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஏ.கே. போசிடமிருந்து

தற்காலிகமாக பறிப்பு.

அக். 23: அமைச்சர் சாத்துõர் ராமச்சந்திரனிடம் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையும் பன்னீர்செல்வத்துக்கு சுகாதாரத்துறையும் ஒதுக்கப் பட்டது.

அக். 25: வத்தலகுண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதுõறாக பேசியதாக ம.தி.மு.க., கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது.

* கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒன்பது பேருக்கு ஆயுள்.

அக். 26: மதுரை மத்திய சிறையிலிருக்கும் நாஞ்சில் சம்பத் மீதான தாக்குதலுக்கு வைகோ கண்டனம்.

* கோவை தொடர் குண்டுவெடிப்பில் மேலும் 3 பேருக்கு ஆயுள். மொத்தம் 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அக். 30: நைஜீரியாவில் கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள் விடுதலை.

அக். 31: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் தர மறுத்த மாஜிஸ்திரேட்டை வக்கீல்கள் தாக்கியதால்பரபரப்பு.

இந்தியா

அக். 3: கலெக்டர் அடித்துக் கொல்லப் பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி.,யும், ஆனந்த் மோகன் உட்பட மூன்று பேருக்கு துõக்கு.

* உ.பி.,யில் உள்ள முகல்சராய் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பெண்கள் உயிரிழந்தனர்.

அக். 6: கர்நாடகாவில் குமாரசாமிஅரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ.,

அக். 7: டில்லியில், “புளூலைன்’ பஸ், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியதில் எட்டுப்பேர் பலி. பொதுமக்கள் சாலை மறியல்.

அக். 8: காங்கிரஸ், பா.ஜ., ஆதரவளிக்க மறுத்ததை தொடர்ந்து முதல்வர்பதவியிலிருந்து விலகினார் குமாரசாமி.

அக். 11: ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவில் குண்டுவெடித்ததில் இருவர் பலி.

அக். 13: பஞ்சாப்மாநிலம் லுõதியானாவில் தியேட்டரில் குண்டுவெடித்ததில் 6 பேர் பலி. 15 பேர் பலி.

* குஜராத்தில் மகாகாளி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலி.

அக். 15: இந்திய விஞ்ஞானிகளால் இந்திய பெருங்கடலில் நிறுவப் பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை மையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அக். 17: மும்பை பங்குச்சந்தையின் குறியீடு ஆயிரத்து 700 புள்ளிகள் வீழ்ந்தது.

அக். 24: பெண் கவிஞர் மதுமிதா சுக்லா கொலை வழக்கில் உ.பி., எம்.எல்.ஏ., அமர்மணி திரிபாதிக்கு ஆயுள் தண்டனை விதித்து டேராடூன் கோர்ட் உத்தரவு.

* டில்லியில் நடந்த என்கவுன்டரில் அப்பாவிகள் இருவரை சுட்டு கொன்ற வழக்கில் துணை கமிஷனர் எஸ்.எஸ். ரதி உட்பட பத்து பேருக்கு ஆயுள் தண்டனை.

அக். 25: ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகள் இணைந்து செயல்பட முடிவு.

* தங்கள் உயிருக்கு ஆபத்து என கருதினால் வீட்டை விட்டு வெளியே வர வேண்டா மென அரசியல்வாதிகளின் பாதுகாப்பு பற்றி டில்லி ஐகோர்ட் கண்டனம்.

அக். 26: கர்நாடகாவில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய நிபந்தனையற்ற ஆதவு அளிப்பதாக மதசார்பற்ற ஜனதாதளம் அறிவிப்பு.

* ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப் மராண்டி உட்பட 18 பேர் கொலை.

அக். 28: பிரபல அரசியல் கார்டூனிஸ்ட் தாணு மரணம்.

அக். 29: கர்நாடகா கவர்னர் முன்பாக 126 எம்.எல்.ஏ.,க்களை நிறுத்தி மெஜாரிட்டியை நிரூபித்தது பா.ஜ., மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம்.

அக். 30: கிருஷ்ணசாமி தாக்கப் பட்டதால் முதுகுளத்துõரில் கலவரம்.

உலகம்

அக். 1: பாகிஸ்தானின் பன்னு நகரில் பர்தா அணிந்த மனித வெடிகுண்டு போலீஸ் வேன் மீது நடத்திய தாக்குதலில் 4 போலீசார் உட்பட 15 பேர் பலி.

அக். 2: மகாத்மா காந்தி பிறந்த தினம் முதல்முறையாக சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டது.

அக். 6: பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் முஷாரப் வெற்றி.

அக். 8: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முஷாரப்பின் பாதுகாப்பு ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் 4 பேர் பலி.

அக். 12: அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல்கோருக்கும், ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்புக்கும் அறிவிப்பு.

அக். 20: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏழு பேர் பலி.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் பரவிய காட்டுத்தீயில் ஆயிரத்து 500 வீடுகள் சேதம்.

அக். 22: விடுதலைப்புலிகள் நடத்திய விமான தாக்குதலில் இலங்கை விமானப்படையை சேர்ந்த நான்கு பேர் பலி.

அக். 24: இலங்கையில் உள்ளாட்சி தேர்தல்களில் புலிகள் போட்டியிடும் வகையில் சட்டத்திருத்தம் அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றம்.

அக். 25: இந்தோனேஷியாவில் நிலநடுக்கும். ரிக்டர் ஸ்கேலில் 7.1ஆக பதிவு.

அ. சிறப்பு தகவல்கள்

1. புதிய முகம்

உலகிலேயே இரண்டாவது பெரிய தரைப்படைராணு வத்தின் புதிய தளபதியாக ஜெனரல் தீபக் கபூர் அக். 1ல் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய தரைப்படை ராணுவத்தின் 23வது தளபதியான இவர் பயங்கரவாதத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கை தொடரும் என உறுதியளித்தார்.

2. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

எம்.பி.,க்களை “தலையில்லாத கோழிகள்’ என அமெரிக்காவுக்கான இந்திய துõதர் ரோனன் சென் விமர்சித்ததால் சர்ச்சை எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அக்.30ம் தேதி லோக்சபா உரிமைக்குழு முன் ஆஜரானர். அப்போது தனது விமர்சனத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார்.

3. “பந்த்’ குழப்பம்

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி தமிழகத்தில் அக்.1ம் தேதி தி.மு.க., கூட்டணி “பந்த்’ அறிவித்தது. இது சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் தடைவிதித்தது. எனினும் அன்றைய தினம் அறிவிக்கப்படாத “பந்த்’ நடந்ததால் தமிழகம் முடங்கியது.

4. வன்முறை மர்மம்

அக்.29ல் முதுகுளத்துõரில் ஒரு விழாவில் காங்., தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்க சென்றார். அப்போது அவரது காரை வழிமறித்த மர்ம கும்பல் அவரை வேல்கம்பால் குத்தியது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி குறித்த மர்மம் நீடிக்கிறது.

நவம்பர்

தமிழகம்

நவ. 1: இன்ஜினியரிங் படிக்கும் பெண்கள், ஏழை மாணவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு கல்வி கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு.

நவ. 5: தமிழகத்தில் புதிய தொழில்கொள்கை அறிவித்தார் முதல்வர் கருணாநிதி. 2011க்குள் 20 லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க திட்டம்.

* திருக்கோவிலுõரை அடுத்த கொல்லுõர் கிராமத்தில் கிருஷ்ணவேணி என்ற சிறுமிக்கு பொட்டு கட்டி விடப்பட்டதால் பரபரப்பு.

நவ. 6: போலீஸ் தடையை மீறி ராமநாதபுரம் செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கைது.

நவ. 11: சென்னை சத்தியமூர்த்திபவனில் ரவுடிகள் நுழைந்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் உட்பட பலரை கத்தியால் வெட்டினர்.

நவ. 12: போலீஸ் தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்க பேரணி நடத்திய வைகோ கைது.

நவ. 13: கும்மிடிபூண்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயகுமார் வீட்டில் கொள்ளை.

நவ. 15: சென்னையில் திடீர் கடல் சீற்றத்தால் 12 வீடுகள் கடலுக்குள் மூழ்கின.

நவ. 17: திருப்பூர், ஈரோடு நகராட்சி களுக்கு மாநகராட்சி அந்தஸ்து அளித்து தமிழக அரசு அவசரச்சட்டம்.

*திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் பூண்டி கலைச்செல்வன் பட்டப்பகலில் வீட்டு வாசலில் வெட்டிக்கொலை.

* செங்கல்பட்டு அ.தி.மு.க., நகராட்சி துணைத்தலைவர் குமார் உட்பட இருவர் வெட்டிக்கொலை.

நவ. 20: வாள் சண்டை மையம் அமைக்க விரும்பும் பள்ளிகளும் தனியார் அமைப்புகளும் காவல்துறை முன்அனுமதி பெற தமிழக அரசு உத்தரவு.

* கிராமப்புற மருத்துவசேவையை கட்டாயமாக்குவதை எதிர்த்து சென்னையில் மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்.

நவ. 23: உள்ளாட்சிதுறை அமைச்சர் ஸ்டாலின் அரியலுõர் மாவட்டத்தை துவக்கிவைத்தார்.

நவ. 25: மரக்காணத்தில் பணத்துக்காக கடத்தப்பட்ட பள்ளி மாணவன் மணிகண்டன், கழுத்தை நெறித்து கொலை.

நவ. 28: இந்து தெய்வங்களை அவ மதித்ததாக நடிகை குஷ்பு மீது வழக்கு.

இந்தியா

நவ. 6: பெண்ணை கடத்திச்சென்று கொலை செய்த விவகாரத்தில் சிக்கிய உ.பி., அமைச்சர் ஆனந்த் சென் யாதவ் ராஜினாமா.

நவ. 7: நான்கு கால்கள், நான்கு கைகளுடன் பிறந்த பீகாரை சேர்ந்த சிறுமி லட்சுமிக்கு பெங்களூருவில் ஆபரேஷன்.

நவ. 10: நந்திகிராமில் மீண்டும் நடந்த வன்முறையில் ஒருவர் பலி. நந்திகிராம் வன்முறைகளை கண்டித்து எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் மம்தா.

நவ. 15: இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிலையம் தயாரித்த “கிரயோஜெனிக்’ இன்ஜின் வெற்றிகரமாக சோதிக்கப் பட்டது.

* நந்திகிராம் வன் முறையை கண்டித்து மேற்கு வங்கத்தில் 24 மணிநேர பந்த்.

நவ. 16: காங்., பொதுச்செயலர் ராகுலை கடத்த சதி செய்த மூன்று பயங்கரவாதிகள் உ.பி.,யில் கைது.

நவ. 20: கவர்னரின் பரிந்துரையை ஏற்று கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உத்தரவிட்டார் பிரதிபா பாட்டீல்.

* டில்லி தியேட்டரில் கடந்த 1997ம் ஆண்டு நடந்த தீவிபத்தில் அதன் உரிமையாளர்கள் 2 பேர் குற்றவாளிகள் என டில்லி கோர்ட் தீர்ப்பு.

நவ. 23: உ.பி., யிலுள்ள லக்னோ, வாரணாசி, பைசாபாத் நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் வக்கீல்கள் உட்பட 14 பேர் பலி.

* கோல்கட்டாவில் எழுந்த எதிர்ப்பு காரணமாக ஜெய்ப்பூர் சென்ற தஸ்லிமா நஸ்ரீன், அங்கும் எதிர்ப்பு எழுந்ததால் டில்லியில் தஞ்சம்.

நவ. 25: அசாமில் பழங்குடியினர் நடத்திய போராட்டத்தில் உள்ளூர்வாசிகளால் ஆதிவாசி பெண் நிர்வாணப்படுத்தப் பட்டதால் பரபரப்பு.

நவ.27: பழங்குடியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அசாமில் “பந்த்’. மூன்று பேர் பலி.

நவ. 28: சுப்ரீம் கோர்ட்டின் அலுவல் மொழியாக இந்தியை கொண்டு வரும் பரிந்துரைக்கு தமிழக எம்.பி.,க்கள் பார்லிமென்டில் எதிர்ப்பு.

உலகம்

நவ. 2: விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக லண்டனில் கைது.

நவ. 7: பின்லாந்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் மாணவன் கைத்துப்பாக்கியால் எட்டுப்பேரை சரமாரியாக சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை.

நவ. 8: துபாயில் புதிதாக கட்டப்பட்டுவந்த பாலம் இடிந்ததில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஐந்து தமிழர்கள் உட்பட ஏழு இந்தியர்கள் பலி.

நவ. 9: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசிர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு சிலமணி நேரத்தில் விடுதலை.

நவ. 11: பெரு நாட்டில் புதைந்திருந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் கண்டுபிடிப்பு.

நவ. 13: பாகிஸ்தான் அதிபர் பெனசிர் புட்டோவுக்கு மீண்டும் வீட்டுக்காவல்.

நவ. 14: பாகிஸ்தானில் இம்ரான்கான் கைது.

நவ. 23: பாகிஸ்தானின் எமர்ஜென் சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காமன்வெல்த்திலிருந்து பாகிஸ்தான் நீக்கம்.

நவ. 25: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சவுதி அரேபியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பினார்.

* மலேசியாவில் உரிமை கேட்டு பேரணி செல்ல முயன்ற இந்துக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி, தண்ணீரை பீச்சி அடித்தனர்.

நவ. 27: கிளிநொச்சியில் விடுதலை புலிகள் ரேடியோ நிலையம் இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் தகர்ப்பு.

நவ. 30: பயணிகள் விமானம்துருக்கியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 56 பேர் பலி.

அ. சிறப்பு தகவல்கள்

1. “புலி’ பலி

இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் அந்நாட்டு விமானப்படை நவ. 2ல் தாக்குதல் நடத்தியது. இதில் விடுதலைபுலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறுபேர் பலியானார்கள். இவரின் திடீர் மறைவு புலிகளுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியது.

2. பற்றி எரியும் மாநிலம்

நந்திகிராம் பிரச்னையை கண்டித்தும், வங்க தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமாவை வெளியேற்ற கோரியும் கோல்கட்டாவில் சிறுபான்மை அமைப்பினர் நவ. 21ல் போராட்டம் நடத்தினர். இது கலவரமாக முடிந்தது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் கோல்கட்டாவிலிருந்து தஸ்லிமா வெளியேறினார்.

3. சிதார் துயரம்

வங்கதேசத்தை செப். 16ல் சிதார் புயல் தாக்கியது. சுமார் 240 கி.மீ., வேகத்தில் வீசிய புயலால் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் வங்கதேசம் சந்தித்த மிக மோசமான புயலாக இது கருதப்படுகிறது.

4. பதவி படுத்தும் பாடு

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பல்வேறு நிபந்தனைகளிடையே நவ. 12ம் தேதி முதல்வர் பதவியேற்றார் எடியூரப்பா. இருப்பினும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் அவரை எதிர்த்து ஓட்டளிப்பதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் முடிவெடுத்ததை அடுத்து நவ.19ல் பதவியை ராஜினாமா செய்தார்.

டிசம்பர்

தமிழகம்

டிச. 3: விவசாயத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப கோரி விவசாய கல்லுõரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்.

டிச. 4: சென்னையில் சி.பி.சி.எல்., தொழிற்சாலையில் இருந்து மர்மவாயு கசிந்ததால் பொதுமக்கள் பீதி.

டிச. 6: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் துõக்குதண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்.

டிச. 7: தமிழகத்தில் வாகன கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்ட தடை.

டிச. 8: சென்னையில் இலவச கலர் “டிவி’ வழங்கும் விழாவில் வன்முறை. தி.மு.க., தே.மு.தி.க., மோதல்.

டிச. 9: இலங்கைக்கு இயந்திர படகுகள் கடத்த முயன்ற இருவர் சென்னையில் கைது.

டிச. 12: நெல்லை கல்லுõரிகளின் அதிபர் எஸ்.ஏ. ராஜா மீது மர்ம கும்பல் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல்.

டிச. 16: சென்னை மெரீனாவில் இந்திய கடற்படையினர் சாகச நிகழ்ச்சி.

டிச. 17: சென்னை அருகே கெரும்பாக்கத்தில் ஒரே வீட்டில் 80 லட்ச ரூபாய் பணமும், 250 சவரன் நகையும் கொள்ளை.

* மதுரையில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட தொடங்கியது.

டிச. 19: வருஷநாடு பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் காயம். 2 பேர் சரண்.

டிச. 20: விவசாய கல்லுõரி மாணவிகள் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை ஜன. 10ல் துõக்கிலிடும்படி சேலம் கோர்ட் உத்தரவு.

* தமிழகத்தில் பெய்த தொடர் மழையில் 37 பேர் பலி.

டிச. 23: இளம்பெண்ணை மயக்கிய சென்னையை சேர்ந்த போலிச்சாமியார் பழனிச்சாமி கைது.

டிச. 24: ராமநாதபுரம் உச்சிபுளி அருகே புதைத்து வைக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன.

* மதுரையில் எம்.ஜி.ஆர்., சிலையில் கொடி கட்டும் பிரச்னையில் அ.தி.மு.க., தே.மு.தி.க., மோதல்.

டிச. 26: அதிக கட்டணம் வசூல் செய்ததாக தமிழகத்தில் உள்ள 33 இன்ஜினியரிங் கல்லுõரிகளுக்கு நோட்டீஸ்.

இந்தியா

டிச. 3: டாக்டரை தாக்கிய எம்.ஐ.எம்., கட்சி எம்.எல்.ஏ.,வை கைது செய்யக் கோரி ஆந்திராவில் டாக்டர்கள் <<உதவி டாக்டர்கள் போராட்டம்.

டிச. 6: குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் சொராபுதீன் கொல்லப் பட்டதை மோடி நியாயப்படுத்தி பேசியதால் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.

டிச. 9: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை “சாவு வியாபாரி’ என விமர்சித் ததற்காக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் சோனியாவுக்கு நோட்டீஸ்.

டிச. 10: பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி என கட்சியின் உயர்மட்ட குழு அறிவிப்பு.

* “நீதித்துறை வரம்பு மீறி செயல்படக்கூடாது’ என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு.

டிச. 11: குர்கானில் உள்ள யூரோ பள்ளியில் மாணவன் அபிஷேக் தியாகியை சக மாணவன் ஆகாஷ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

* குஜராத் சட்டசபைக்கு முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. முன்னாள் முதல்வர் கேசுபாய் ஓட்டுப்போடாமல் புறக்கணித்தார்.

டிச. 12: ஒரு கொலைவழக்கில் பீகார் முன்னாள் அமைச்சர் ஆதித்யா சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து நவடா விரைவு கோர்ட் தீர்ப்பு.

* சொராபுதீன் என்கவுன்டரை ஆதரித்தற்காக மோடிக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்.

டிச. 13: அசாம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டியில் குண்டுவெடித்ததில் ஐந்து பேர் பலி.

டிச. 14: பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜனிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி மனு தாக்கல்.

* பழங்குடி இனத்தை சேர்ந்தவரா என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து ஜாதி சான்றிதழை ஒப்படைக்கும் படி அஜீத் ஜோகிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

* பஞ்சாபில் ரயில்வே லெவல் கிராசிங்கில் நுழைந்து செல்ல முயன்ற மினிபஸ் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 18 பேர் பலி.

டிச. 16: சட்டீஸ்கர் மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 110 நக்சலைட் உட்பட 299 பேர் தப்பி ஓட்டம்.

டிச. 18: பிரமோத் மகாஜன் சுடப்பட்ட வழக்கில், அவரது தம்பி பிரவீன் மகாஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் கோர்ட் உத்தரவு.

* டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஜகதீஷ் டைட்லரின் பங்கு குறித்து மீண்டும் விசாரிக்கும்படி சி.பி.ஐ.,க்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு.

டிச. 21: பெங்களூரு டாக்டர் முகமது அனீப்பின் விசாவை புதுப்பிக்க ஆஸ்திரேலிய கோர்ட் அனுமதி.

டிச. 23: குஜராத் தேர்தலில் பா.ஜ., 117 சீட்களை கைப்பற்றி மீண்டும் வெற்றி.

டிச. 25: குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றார்.

* கிரன் பேடியின் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை அரசு ஏற்றது.

டிச. 26: நந்திகிராம் சென்ற மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டார்.

உலகம்

டிச. 3: பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட நவாஸ்ஷெரீப் தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி.

* ரஷ்ய தேர்தலில் புடினின் “யுனைட்டெட் ரஷ்யா’ கட்சி வெற்றி.

டிச. 9: மலேசியாவில் நடந்த மனித உரிமை பேரணி தடை செய்யப்பட்டது. நான்கு பேர் கைது.

டிச. 13: அல்ஜீரியாவின் அல்ஜயர்ஸ் நகரில் அகதிகளுக்கான ஐ.நா., அலுவலகம் அருகே குண்டுகள் வெடித்ததில் 52 பேர் பலி.

டிச. 13: மலேசியாவில் ஆள்துõக்கி சட்டம் அமல்.

டிச. 14: அமெரிக்காவில் லுõசியானா பல்கலைகழகத்தில் படித்த இரண்டு இந்திய மாணவர்கள் சுட்டுக்கொலை.

டிச. 15: பாகிஸ்தானில் எமர்ஜென்சி வாபஸ்.

டிச. 19: பாகிஸ்தானில் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து. 54 பேர் பலி.

டிச. 21: பாகிஸ்தானின் சார்சத்தா பகுதியில் மசூதி வளாகத்தில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியதில் 54 பேர் பலி.

டிச. 25: பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ மதத்திலிருந்து, கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்.

டிச. 26: மழை காரணமாக இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 61 பேர் பலி.

அ. சிறப்பு தகவல்கள்

1. உரிமை போர்

மலேசியாவில் சமஉரிமை கேட்டு போராடி வரும் தலைவர்களை ஒடுக்க ஆள்துõக்கி சட்டத்தை அமல்செய்தது அந்நாட்டு அரசு. இதன் மூலம் இந்த்ராப் தலைவர் உதயகுமார் உட்பட ஐந்து பேர் டிச. 15ல் கைது செய்யப்பட்டனர்.

2. பிரமாண்ட மாநாடு

தி.மு.க., இளைஞரணியின் முதல் மாநில மாநாடு திருநெல்வேலியில் டிச. 15, 16 தேதிகளில் நடந்தது. ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடந்து முடிந்தது. இளைஞர்களின் பார்வையை தி.மு.க., பக்கமாக திருப்ப இந்த மாநாடு உதவும் என நம்பப்படுகிறது. கல்வியையும் வேலை வாய்ப்பையும் அடிப்படை உரிமையாக்க கோரி தீர்மானம்

3. போராடிய டாக்டர்கள்

டாக்டரை தாக்கிய எம்.எல்.ஏ.,வை கைது செய்யக்கோரி ஐதராபாத்தில் டிச.3ல் டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் உயிரிழந்த எட்டுமாத குழந்தையை வைத்துக்கொண்டு நடிகையும், அரசியல்வாதியுமான விஜயசாந்தி டாக்டர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

4. கடற்படை வாண வேடிக்கை

கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில், கடற்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. டிச. 16ல் நடந்த இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கனோர் கடற்கரையில் குவிந்தனர்.

Posted in 2007, Chronology, Dinamalar, DMK, Flashback, Incidents, India, Media, News, people, Refer, Reference, Tamil Nadu, TamilNadu, Timeline, Updates, World, zeitgeist | Leave a Comment »

Sai Krishnan – 7th International Abilympics photography champ

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

நிழற் படங்களல்ல… நிஜப்படங்கள்!

யுகன்

ஒரு கேனன் 5ஈ கேமிரா, ஒரு ஆப்பிள் லேப்-டாப் கம்ப்யூட்டர், ஏராளமான தன்னம்பிக்கையுடன் விமானமேறிய சாய் கிருஷ்ணன் என்னும் இளைஞர் போலியோவால் பாதிக்கப்பட்டவர், சமீபத்தில் ஜப்பானின் ஷிஷோகா நகரத்தில் நடந்த ஏழாவது சர்வதேச அளவிளான எபிலிம்பிக்ஸ் போட்டியில், புகைப்படப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றிருக்கிறார். சர்வதேச அளவில் உடல் திறன் குறைந்தவர்களுக்காக நடத்தப்படுவது எபிலிம்பிக்ஸ். இதில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது வரையான சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடம் சாய் கிருஷ்ணா பகிர்ந்து கொண்டதிலிருந்து…

“”எனக்குச் சின்ன வயதிலிருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வத்தை வளர்த்தவர் என் தந்தை. அவர்தான் நான் ஏழாவது படிக்கும்போதே எனக்கு ஒரு ஹாட்-ஷாட் கேமிராவை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்தாலும் இது மிகவும் காஸ்ட்லியான ஹாபியாக இருப்பதால், என்னுடைய முயற்சிகளுக்குப் பொருளாதார ரீதியிலான வேகத்தடை நிச்சயம் இருந்தது. இதையும் தாண்டி நான் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு எனக்கு உதவியாக இருந்தது வித்யாசாகர் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்.

தேசிய அளவில் நான் உடல் திறன் குறைந்தவர்களுக்கான போட்டியில் பங்கெடுப்பதற்கு, “ஆம்பிஷன் ஃபோட்டோகிராஃபி அகடமி’யின் நிறுவனரான ராஜா பொன்சிங் எனக்கு நிறைய நுட்பங்களைக் கற்றுத் தந்தார். இவரைத் தவிர, ஷரத் அக்ஷர், ராஜீவ் மேனனின் “மைன்ட்ஸ்க்ரீன் ஃபோட்டோகிராஃபி இன்ஸ்டிட்யூட்’டின் முதல்வரான ஞானசேகரன் மற்றும் சுரேஷ், குமாரசுவாமி போன்றவர்களின் வழிநடத்துதலுடன்தான் நான் தேசிய அளவிலான போட்டிகளில் ஜெயித்தேன்.

ஜப்பானில் நடந்த எபிலிம்பிக்கைப் பொறுத்தவரை இது சர்வதேச அளவில் நடக்கும் போட்டி என்பதால் அதற்குத் தகுந்த தொழில்நுட்பத்துடன் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தப் போட்டிக்காக நான் பணிபுரியும் ஹெச்.சி.எல். நிறுவனமே கேனன்5டி கேமிராவையும், ஆப்பிள் லேப்-டாப்பையும் வழங்கியது. மத்திய அரசு மற்றும் தேசிய எபிலிம்பிக் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் உதவியுடன்தான் என்னால் ஜப்பானுக்குப் போய் இந்தப் போட்டியில் பங்கேற்க முடிந்தது.

உலகம் முழுவதுமிருந்தும் பேச்சுத் திறன், செவித் திறன், கை, கால் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளில் குறையுள்ள 400க்கும் மேற்பட்டவர்கள் 120 நாடுகளிலிருந்து பங்கேற்றனர். புகைப்படப் போட்டியில் 25 நாடுகளிலிருந்து 26 பேர் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து புகைப்படப் போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நானும்,

கோவையைச் சேர்ந்த ஹரி என்பவரும்தான்.

டெய்லரிங், மோட்டார் ஆக்டிவிடி, எலக்ட்ரானிக்ஸ் அசெம்பிளிங், ஸ்வெட்டர் பின்னுவது, கணிப்பொறியிலேயே வரைவது… என்று பல வகையான போட்டிகளும் நடந்தபடி இருக்கும். இந்தப் போட்டியில் பங்கெடுப்பவர்களையே, அந்தச் சூழ்நிலையின் பின்னணியோடு, பிரம்மாண்டத்தோடு எத்தனை படம் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

இறுதியாக நாம் எடுத்தவற்றிலிருந்து ஐந்து புகைப்படங்களை நாமே தேர்ந்தெடுத்து, அதற்குப் பொருத்தமான “கமெண்ட்’ டையும் எழுதிச் சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேச அளவில் புகைப்படம் எடுப்பதில் புகழ்பெற்ற நடுவர்களைக் கொண்ட குழு இறுதி முடிவை எடுக்கும். என்னைப் பொறுத்தவரை நான் எப்போதுமே சப்ஜெக்ட்டிற்குத்தான் படமெடுக்கும்போது முன்னுரிமை கொடுப்பேன். பின்னணிக்கு அல்ல. இந்த அடிப்படையில் “வெளிச்ச துவாரம்’ என்னும் தலைப்பில் நான் எடுத்த உடல் திறன் குன்றியவரின் திறனும், ஸ்வெட்டர் பின்னும் கைகளின் திறனை வெளிப்படுத்தும் புகைப்படமும், “அசெம்பிளிங்’ செய்யும் பெண்ணின் பார்வைக் கூர்மையை விளக்கும் புகைப்படமும் எனக்கு இந்தப் பரிசை வாங்கித் தந்ததாக நம்புகிறேன்.

புகைப்படம் எடுப்பதற்கு நாம் தேர்ந்தெடுத்த கோணம், நாம் முன்னிலைப்படுத்தியிருக்கும் சப்ஜெக்ட், குறிப்பிட்ட புகைப்படம் ஒட்டுமொத்தமாகத் தெரிவிக்கும் செய்தி… போன்ற விஷயங்களின் அடிப்படையில் 26 போட்டியாளர்களிலிருந்து மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தனர். நான் வெள்ளிப் பதக்கம் பெற்றேன். கோவையிலிருந்து வந்திருந்த ஹரி வெண்கலப் பதக்கம் பெற்றார். பங்கேற்ற 26 பேரில் 21 பேர் தொழில்முறைப் புகைப்படக்காரர்கள் என்பது முக்கியமான விஷயம். கடந்த இரண்டு முறையாக இந்தச் சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆஸ்திரிய நாட்டின் போஸ்க்தான் இந்தமுறையும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் இந்தமுறை ஆறாவது இடத்திற்குப் போய்விட்டார். தற்போது ஹாங்காங்கைச் சேர்ந்த ஒருவர்தான் தங்கம் வென்றார்.

உலக அளவிளான எபிலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்றுத் திரும்பியிருக்கிறோம். அரசு சார்பாகவும் சரி, தனியார் சார்பாகவும் சரி எந்த பாராட்டும்,அங்கீகாரமும் இதுவரை கிடைக்கவில்லை. எவ்வளவோ விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரும் பத்திரிகைகளும் ஊடகங்களும் கூட எங்களைத் திரும்பிப் பார்க்காமல் இருப்பதுதான் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. மற்றபடி, சாமான்ய மக்களின் வாழ்க்கை அனுபவங்களை நிழற் படங்களாக அல்ல… நிஜப்படங்களாகப் பதிவு செய்யவேண்டுமென்று பெரிய திட்டமே இருக்கிறது. பார்க்கலாம்…” என்றார் நெகிழ்ச்சியுடன் சாய் கிருஷ்ணன்.

Posted in 5MP, Abilympics, Achievements, Achievers, Camera, Cannon, Canon, Challenged, Coimbatore, disabilities, disability, Disabled, Faces, Films, handicap, Handicapped, Hari, HCL, Human Resources, IAF, India, International, Kovai, NAAI, Notable, people, Photographer, Photographs, Photos, Pictures, Polio, Saikrishnan, Shizuoka, Skills, Sponsors, Sponsorships, Sponz, Vidyasagar, vocational, World | 1 Comment »

Tamil Tiger chief says peace with Sri Lanka govt impossible – Air force bombs LTTE radio

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

Maaveerar Day – LTTE: Happy Birthday Prabhakaran & Heroes’ Day

விடுதலைப் புலிகளின் வானொலி நிலயம் தாக்கப்பட்டது-பலர் பலி

புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்
சில மாதங்களுக்கு முன்னர் தாக்கப்பட்ட புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்திர மாவீர்கள் தின உரையை நிகழ்த்தவிருந்த நிலையில், அவர்களின் முக்கிய வானொலி நிலையத்தை இலங்கை அரசின் விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் என்றாலும் , அது பிரபாகரன் அவர்களின் உரை ஒலிபரப்பாவதை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்றைய தனது மாவீர் தின உரையில், இலங்கை அரசுடன் சமாதான வழிமுறைகள் சாத்தியமில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கை அரசு இனப்படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர், சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அளித்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


சர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமது அமைப்பின் மாவீரர் தின உரையின் போது, சர்வதேச சமூகத்தின் மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் தமது அமைப்பு முப்படையாக விரிந்து நிற்பது குறித்த பெருமிதம் ஆகியவற்றுடன் தனது உரையை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், அதில், சர்வதேச நாடுகள் மீதும் இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் மீதும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீதும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஆராயும் அனைத்துக் கட்சிக் குழு ஆகியவற்றின் மீது தனது அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக விபரித்த பிரபாகரன் அவர்கள், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீதான தாக்குதல், இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி என்று வர்ணித்தார்.

ஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் ஆதிக்க வெறியோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், உலக கவனத்தை திசை திருப்பவே அரசு அனைத்துக் கட்சிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.

அதேவேளை, தமிழர் பிரச்சினையை நீதியான வகையில் தீர்த்து வைக்கும் அரசியல் நேர்மையும், உறுதிப்பாடும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் கட்சியிடமும் கிடையாது என்றும் பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

கிழக்குத் திமோர் மற்றும் மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் தீர சர்வதேச சமூகம் ஆதரவும் அனுசரணையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரபாகரன், ஆயினும், தமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

இலங்கை அரசின் போக்கை சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வனின் மரணம் இடம்பெற்றிருக்காது என்று கூறிய பிரபாகரன், இணைத்தலைமை நாடுகளும் சமாதானத்துக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியா முன்னர் விட்ட தவறையே சர்வதேச நாடுகள் தற்போது விட்டு நிற்கின்றன என்றும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.

தமது அமைப்பு இழந்துவிட்ட இறையாண்மைக்காகவும், சுதந்திர தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் போராடுவதாகக் கூறிய அவர், தமது மக்கள் அல்லல் பட்ட வேளைகளில் உலகம் கண்ணை மூடி நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஆகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கேட்டுக்கொண்டுள்ளார்.


வட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி

கிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்
கிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தின வாரத்தின் இறுதி நாளாகிய இன்று அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முக்கியத்துவம் மிக்க தனது கொள்கை விளக்க உரையை ஆற்றுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் வானொலியாகிய புலிகளின் குரல் நிலையக் கட்டிடத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழி குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்

புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் 5 ஊழியர்களும், அந்த நிலையத்தின் அயலில் உள்ள வீடுகளில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் 4 பேருமே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுமி என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலின் போது விமானப்படையினர் பத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை அடுத்தடுத்து வீசி வானொலி நிலையத்தைத் தரைமட்டமாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் குரல் வானொலி நிலையம் அரச படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலில் பெரும் சேதமடைந்துள்ள போதிலும் அதன் ஒலிபரப்ப்பு வழமைபோல இடம்பெற்றது என்பதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உரையும் அந்த வானொலியில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒலிபரப்பாகியுள்ளது.

கிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சியில் இருந்து மேற்குத் திசையில் 25 கிலோ மீற்றர் தொலைவில் துணுக்காய் – கொக்காவில் வீதியில் மல்லாவி – ஐயங்கேணி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அரச படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 9 மாணவிகளும், அம்புலன்ஸ் வண்டியின் சாரதியும் மற்றும் ஒருவருமே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு மாணவிகள் காயமடைந்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலில் தமக்குத் தொடர்பில்லை என்று இராணுவத்தினர் மறுத்துள்ளனர்.


Posted in Air Force, Airforce, Arms, Attack, Bombs, Communications, dead, Eelam, Eezham, infrastructure, Kilinochi, Kosovo, LTTE, Military, mines, montenegró, Norway, Peace, Prabaharan, Prabakaran, Prabakharan, Radio, Sri lanka, Srilanka, Tigers, Timor, War, Weapons, World | Leave a Comment »

Tamil Nadu’s fishing industry vs Sri Lankan naval personnel: Harassment of Indian fishermen

Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007

மீனவர் வாழ்வு விடியுமா?

உதயை மு. வீரையன்

அண்மைக்காலமாக, தமிழக மீனவர்கள் தொழில்செய்து பிழைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்றன.

நாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் 17 படகுகளைக் கடத்திச் சென்றனர். அந்தப் படகுகளில் 99 மீனவர்கள் இருந்தனர்.

மீனவர் கிராமப் பஞ்சாயத்தார் இதுபற்றி நாகை மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர். தகவலறிந்த முதல்வர், உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அகமதுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் தந்த உறுதியின்பேரில் 99 மீனவர்களும் விடுவிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

“இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவினைக் கவனத்திற்கொண்டு இம்மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்தது.

இந்திய அரசாங்கம் இந்த மீனவர்கள் தனது நாட்டுக் குடிமக்கள் என்பதை மறந்துவிட்டதா? “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன? தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா? நமது குடிமக்கள் வேற்று நாட்டுப் படையினரால் கைது செய்யப்படுவது நம்நாட்டு இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால் இல்லையா?

இந்தியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1076 கிலோமீட்டர். இவற்றில் 600க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள்; இந்தக் கிராமங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம்.

ராமேசுவரம் முதல் நாகைவரை நீண்டிருக்கும் கடலில் மீனவர்கள் சுதந்திரமாக கட்டுமரம், படகு, தோணிகள், விசைப்படகுகளைச் செலுத்தித் தொழில்செய்துவந்த காலம் கடந்த காலமாகிவிட்டது. இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழும் நிலை.

சாதாரணமாகவே கடற்பயணம் ஆபத்தானது. எந்த நேரத்தில் அலை எப்பக்கம் அடிக்குமோ என்ற கவலை; சூறாவளியும், புயலும் அலைக்கழிக்குமே என்ற அச்சம்; பாம்புத் தொல்லை – இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு வலைவீசி பிடிக்கப்பட்ட மீன்களைப் பிடுங்கிக் கொள்வதும் தாக்குவதும், சுடுவதும், சிறைபிடிப்பதும் தொடரும் பேரவலம். இதற்கு முடிவே கிடையாதா?

கரையில் நடப்பவை, உடனே “சுடச்சுட’ செய்திகளாகி வெளிவருகின்றன; கடலில் நடப்பவை, பல நேரங்களில் வெளியே தெரிவதில்லை. கணக்கில் வராமல் கடலிலேயே மாய்ந்து போனவர்கள் எத்தனையோ பேர்?

பலமுறை இலங்கைக் கடற்படை இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்தமுறை இந்திய எல்லைக்குள் வந்த இலங்கைக் கடற்படை, தென்தமிழக மீனவர்கள் ஐந்து பேர்மீது துப்பாக்கியால் சுட்டது. வழக்கம்போல சட்டப்பேரவையில் இதைக் கண்டித்துத் தீர்மானம், இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் அறிவிப்பு; அரசின் கடமை இத்துடன் முடிந்துவிட்டது.

இம்மாதிரி நேரங்களில் அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கைகள், அனுதாபச் செய்திகளால் மட்டும் பயன் என்ன? அந்த மீனவர்களை நம்பியுள்ள அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தியக் கடலோரக் காவல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியக் கடற்படை என்ன செய்கிறது? இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா? ஆயுதக் கடத்தலைத் தடுக்கிறோம் என்று கூறுகின்றனர். தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது யார்?

தமிழகத்தின் பாரம்பரியக் குடிகள் மீனவர்கள். இவர்களது பாரம்பரியத் தொழில் மீன்பிடித்தல். இதனால் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மீனவர்களுக்குக் கடற்கரைத் தொகுதிகளை ஒதுக்கவேண்டுமென்ற கோரிக்கையின் நியாயம் புரிந்து கொள்ளப்படவில்லை. மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மண்டல் குழுவின் பரிந்துரையும் நடைமுறைப்படுத்த்பபடவில்லை.

தமிழக மீனவர்களின் பெரிய இழப்பு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததுதான்தான். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தீர்க்கமாக ஆலோசிக்காமல் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கச்சத்தீவைத் தாரைவார்த்துவிட்டார்.

கச்சத்தீவு 3.75 சதுர மைல் பரப்பளவு கொண்டது; ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை எல்லையிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ள சின்னஞ்சிறிய பகுதி.

இது மீனவர்களின் சொர்க்கபூமி; மீன்களின் உற்பத்திச் சுரங்கம். இங்கு பல்லாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அன்னியமாக்கிவிட்டது கச்சத்தீவு ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக குற்றம்சாட்டப்படுவதும் இப்பகுதிதான்.

இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்நோக்கில் “கச்சத்தீவை மீட்க முயற்சி எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உரைகளில் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும், சுற்றுலாப் பயணிகள் சென்றுவரவும் அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் 5,6 ஆம் பிரிவுகளை இலங்கை அரசும், கப்பற்படையும் பொருள்படுத்துவதில்லை. 1977-க்குப் பிறகு இத்தீவுக்குச் செல்லத் தடை விதித்து விட்டதால், இங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவே நடப்பதில்லை. இக்கோயிலை இலங்கை அரசு இப்போது மூடிவிட்டது.

இலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் மதித்ததில்லை; நடைமுறைப்படுத்தியதும் இல்லை. தமிழ்நாட்டில் இதுபற்றி திடீரென கோரிக்கை எழும்; அடங்கிவிடும்; மக்களும் மறந்துவிடுவார்கள். இறுதிவரை கோரிக்கைகள் நிறைவேறாமல் அப்படியே இருக்கும்.

இந்திய – இலங்கை உடன்பாட்டின் விதிகள் தெளிவாக இருக்கின்றன. “”இந்திய மீனவரும், இறைவழிபாட்டுப் பயணிகளும் இதுவரை கச்சத்தீவுக்கு வந்துபோய் அனுபவித்ததைப் போலத் தொடர்ந்து வந்துபோய் அனுபவிக்கும் உரிமையுடையவர்கள். இப்பயணிகள் இவ்வாறு வந்துபோக, இலங்கை அரசிடமிருந்து எவ்விதப் பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெற வேண்டியதில்லை”.

“”இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் படகுகள் மற்றும் கப்பல்கள் விஷயத்திலும் பரஸ்பர கடல் உரிமை தொடரும்’.

இவ்வாறு திட்டவட்டமான விதிகள் இருந்தும் இவற்றை அப்பட்டமாக மீறும் இலங்கை அரசிடம் கெஞ்சுவதும், அவர்கள் மிஞ்சுவதும் ஏன்? அத்துமீறி நடப்பது யார்? இலங்கைக் கடற்படையா, இந்திய மீனவர்களா? முடிவு செய்வது யார்?

Posted in Arms, Boats, Bombs, borders, Boundary, Capture, Catch, Cocaine, Contraband, dead, defence, Defense, Drugs, Exports, Extortion, Extremists, fiberglass, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Fishing, Harassment, Illegal, Imprison, India, Industry, International, island, Jail, Jury, Justice, Kachatheevu, Kachathivu, Kachativu, Katcha Theevu, Kodiakkarai, kodiyakkarai, Law, LTTE, Maginda, Magindha, Magintha, Mahinda, Mahindha, Mahintha, Marijuana, maritime, Misa, Narcotics, Nautical, Navy, Ocean, Oceanery, Order, Peace, POTA, Prison, Rajapaksa, Rajapakse, Refugees, release, SAARC, Sea, Sector, Shoot, Shot, Shrimp, Squids, Sri lanka, Srilanka, TADA, Talaimannar, Terrorism, Terrorists, Thalaimannar, Tourism, Tourist, Travel, Trawlers, Trespass, War, Waters, Weapons, World | Leave a Comment »

Russia vs USA – India Foreign Relations: External Affairs

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

வாஷிங்டனுக்கே வெளிச்சம்!

இந்தியப் பிரதமரின் ரஷியப் பயணம் என்கிற செய்தி வரும்போதெல்லாம், 1979-ல் இந்தியப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயின் ரஷியப் பயணம்தான் நினைவுக்கு வரும். ரஷியா என்றாலே எட்டிக்காயாகக் கசந்த மொரார்ஜி தேசாய், அன்றைய ரஷிய அதிபர் பிரஸ்னேவிடமும், பிரதமர் கோசிஜினிடமும் நட்புக்குப் பேசிவிட்டு எந்தவித உருப்படியான ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாமல் திரும்பினார் என்பது வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இப்போதும் பேசப்படும் விஷயம்.

1979-க்குப் பிறகு பெரிதாக எதையும் சாதிக்காத இந்தியப் பிரதமரின் ரஷியப் பயணம் ஒன்று இருக்குமானால் அது பிரதமர் மன்மோகன் சிங்கின் சமீபத்திய மாஸ்கோ பயணமாகத்தான் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே, ரஷியாவுடனான நெருக்கம் பெருமளவு குறைந்து கொண்டிருப்பதும், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவுக்கு நெருக்கமானவர் என்கிற கருத்து ரஷியர்களுக்கு ஏற்பட்டிருப்பதும்கூட இதற்குக் காரணம். இந்தியப் பிரதமர் ஒருவரின் மிகவும் குறைந்தகால ரஷியப் பயணம் எது என்று கேட்டாலும், சமீபத்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் மாஸ்கோ பயணம்தான். 28 மணிநேரம் மட்டுமே பிரதமர் மாஸ்கோவில் இருந்தார் என்றாலும், ரஷியப் பிரதமருடன் கணிசமான நேரத்தை அவர் பேச்சு வார்த்தைக்காக ஒதுக்கினார் என்பதை மறுக்க முடியாது.

சில முக்கியமான ஒப்பந்தங்களில் இந்தியாவும் ரஷியாவும் கையெழுத்து இடுவதாக ஏற்பாடு. அதிலும் குறிப்பாக, இந்திய-ரஷிய வர்த்தக உறவு சம்பந்தப்பட்ட ஒப்பந்தமும், நிலவுக்குப் போகும் விண்கலம் தொடர்பான ஒப்பந்தமும் குறிப்பிடப்படும்படியான இரண்டு ஒப்பந்தங்கள் என்பதை மறுக்க முடியாது. போதைப் பொருள்கள் கடத்தல் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் ஒன்றும் இரண்டு பிரதமர்களுக்கிடையே கையெழுத்திடப்பட்டது. இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் போர்விமானங்களைத் தயாரிப்பது பற்றிய உடன்பாடு தள்ளிப்போடப்பட்டு வந்தது. இப்போது அரைகுறை மனதுடன் இந்த முயற்சிக்கு ரஷியா ஒத்துக்கொண்டிருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நான்கு புதிய உலைகள் அமைப்பதும் கையெழுத்துக்குத் தயாராக இருந்த இன்னொரு ஒப்பந்தம்.

சோவியத் யூனியன் பிளவுபட்ட பிறகும்கூட இந்திய – ரஷிய உறவு தொடர்ந்ததற்கு மிக முக்கியமான காரணம், இரு நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வுதான் என்று சொல்ல வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு இந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்றுதான் கூற வேண்டும். அதற்குக் காரணம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் நாம் செய்து கொண்டிருக்கும் ராணுவ ஒப்பந்தமும், கூட்டு ராணுவப் பயிற்சி ஒப்பந்தமும்தான். அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியும் நடைமுறைப்படுத்தியே தீருவது என்கிற இந்திய அரசின் முனைப்பு ரஷிய அரசுக்கு இந்தியா மீது இருந்த நல்லெண்ணத்தை வெகுவாகப் பாதித்திருக்கிறது.

உள்நாட்டிலும் உலக அரங்கிலும் ஏற்பட்ட எதிர்ப்புகளை எல்லாம் மீறி, நமது தாராப்பூர் அணுசக்தி உலைகளுக்கு எரிபொருளை அளிக்க ரஷிய அதிபர் புதின் முன்வந்தார் என்பதை மறுக்க முடியாது. அப்படி இருந்தும், நாம் ரஷியாவிடம் நமது நல்லெண்ணத்தைப் பகிர்ந்து கொள்ளாமல், அமெரிக்காவை முற்றிலுமாக நம்புவது ரஷியாவை நம்மிடமிருந்து விலகிச் செல்ல வைத்திருக்கிறது என்கிறார்கள் வெளியுறவுத் துறை வல்லுநர்கள்.

இதுபோன்ற, உயர்நிலை மாநாடுகள் இரண்டு நாட்டுத் தலைவர்களும் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், நல்லுறவை உறுதிப்படுத்தவும் உதவும் என்பார்கள். சரி, கூடங்குளம் அணுசக்தி நிலையத்துக்கு நான்கு உலைகளை ரஷியா அளிப்பதாக இருந்ததே, அதைப் பற்றிய ஒப்பந்தம் ஏன் கையெழுத்திடப்படவில்லை? இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்கிற நம்பிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங், ரஷிய உதவி தேவையில்லை என்று நினைத்ததாலா? இதைப் பற்றி அரசுத் தரப்பிலிருந்து கிடைக்கும் பதில் வெறும் மௌனம் மட்டுமே!

உயர்நிலை மாநாடு நடக்கிறது. உலகின் சக்தி வாய்ந்த இரண்டு நாடுகளான ரஷியாவும் இந்தியாவும், இப்படியொரு மாநாடு முடியும்போது கூட்டறிக்கை அளிப்பது வழக்கம். இந்தமுறை, ஏன் பிரதமர் மன்மோகன் சிங்கும், ரஷிய அதிபர் புதினும் அப்படியொரு கூட்டறிக்கை வெளியிடவில்லை?

வரவர இந்தியாவில் என்ன நடக்கிறது, ரஷியாவில் என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரிவதில்லை. எல்லாம் அந்த வாஷிங்டனுக்குத்தான் வெளிச்சம்!

Posted in Affairs, America, Atom, Commerce, Cooperation, DC, defence, Defense, Economy, External, Foreign, India, Manmohan, Nuclear, Relations, Russia, USA, USSR, Washington, World | Leave a Comment »

Diplomatic tangle over Dalai Lama: Ministers absent at “Peace Pilgrim Award”, instituted by the Gandhi Foundation USA

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

தன்னம்பிக்கை இல்லாத அரசு!

ஒரு நாட்டுடன் நட்புறவு வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் கொள்கைகளையும், அந்த நாட்டு அரசு செய்யும் தவறுகளையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பதோ, கண்டும் காணாமலும் இருப்பதோ ஒரு நல்ல வெளியுறவுக் கொள்கைக்கு அழகல்ல. இந்தியா இப்போது கடைப்பிடித்து வரும் வெளியுறவுக் கொள்கை அத்தகையதுதான் என்பதை மியான்மர், இலங்கை, சீனா மற்றும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து நமது அரசு கடைப்பிடித்து வரும் மௌனம் தெளிவாக்குகிறது.

ஐம்பதுகளில் சீனாவுடன் இந்தியா மிகவும் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டிருந்த நேரம். அப்போது சீனா தனது அண்டை நாடான திபெத் மீது படையெடுத்து அந்த நாட்டைத் தனது நாட்டுடன் இணைத்துக்கொண்டபோது அதற்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதுமட்டுமல்ல, சீன அரசின் எதிர்ப்பையும் மீறி, திபெத்திலிருந்து தப்பி ஓடிவந்த தலாய் லாமாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஜவாஹர்லால் நேரு அரசு அடைக்கலம் அளித்தது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து தலாய் லாமா தலைமையில் ஒரு திபெத்திய அரசு செயல்படவும் அனுமதித்தது.

பண்டித நேருவின் காலம் தொடங்கி இதற்கு முந்தைய வாஜ்பாயி தலைமையிலான அரசு வரை, அத்தனை பிரதமர்களும் கட்சி வேறுபாடின்றி தலாய் லாமாவை மதித்தார்கள். திபெத் மக்களின் சுதந்திர உணர்வுக்கும், அவர்கள் மீண்டும் தங்களது நாட்டை சீனாவிடமிருந்து திரும்பப் பெறுவதற்கும் இந்தியா தனது தார்மிக ஆதரவை அளிக்கத் தவறவில்லை. அமெரிக்க எதிர்ப்பு, ரஷிய எதிர்ப்பு, சீன எதிர்ப்பு என்று பிரச்னைகளை அணுகாமல், பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும்தான் இந்தியாவின் அணுகுமுறை இருந்து வந்திருக்கிறது. அதுதான், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தனி மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது.

உலக அரங்கில் மதிக்கப்படும் சமாதானத் தூதராக தலாய் லாமா திகழ்கிறார். நோபல் பரிசு உள்பட உலகத்தின் மிகப்பெரிய கௌரவங்கள் அவருக்குத் தரப்பட்டிருக்கின்றன. சமீபத்தில், அமெரிக்க அரசின் கௌரவமான அமெரிக்க காங்கிரஸ் தங்கப்பதக்கம் அவருக்குத் தரப்பட்டிருக்கிறது. இதைப் பாராட்டும்வகையில் புதுதில்லியில், காந்தி சமாதான மையத்தின் (Gandhi Peace Foundation்) சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ரால் மற்றும் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச்சர்களும் இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஐ.கே. குஜ்ரால் தவிர எந்த மத்திய அமைச்சரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவர்களது அவசர வேலைகள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று அமைச்சரவைச் செயலர் தகவல் அனுப்பி அவர்களைத் தடுத்திருப்பது ஏன் என்பதுதான் கேள்வி. இதற்குக் காரணம் கேட்டபோது, அமைச்சரவைச் செயலர் அலுவலகம் தந்திருக்கும் விசித்திரமான பதில், அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. “சீனா கோபித்துக் கொள்ளும்’ என்பதுதான் அந்த பதில்.

சீனாவின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நமது ஆதரவுடன் இந்தியாவில் தங்கி இருக்கும், உலகம் ஏற்றுக்கொண்ட சமாதானத் தூதரும், புத்த மதத்தின் மரியாதைக்குரிய மதத்தலைவருமான தலாய் லாமா அவமதிக்கப்படுவது என்ன நியாயம்? எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தவறு என்று தெரிந்தாலும் மௌனமாக இருக்க வேண்டும். அப்படியொரு பலவீனமான நிலை இந்தியாவுக்கு ஏற்படக்கூடாது. அது பண்டித நேரு நமக்கு அமைத்துத் தந்த வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது.

உணர்ச்சியே இல்லாத அரசாக இருக்கிறதே இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்று சொல்வதா, இல்லை தன்னம்பிக்கை இல்லாத அரசு என்று இதைச் சொல்வதா?

Posted in Affairs, Alliance, America, Asean, Asia, BJP, Burma, China, Coalition, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dalai, Dalai Lama, Dalailama, Economy, Exports, Gandhi, Gandhi Peace Foundation, Govt, Imports, Myanmar, Nehru, PAK, Pakistan, Panchasheel, Peace, PM, Relations, Russia, SAARC, Sri lanka, Srilanka, Thalailama, Tibet, US, USA, World | Leave a Comment »

Frankfurt Book Fair: Interview with Kizhakku Pathippagam’s Badri

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

அக்கரை சந்தை:உலக மொழிகளில் தமிழ் நாவல்கள்!

ஃப்ராங்பர்ட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் கிழக்குப் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் பத்ரி.

உலகமெங்கும் உள்ள பல் மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் கூடும் இடமாக இருக்கிறது இக் கண்காட்சி. ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இக் கண்காட்சி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்ரி.

“”இது புத்தகப் பதிப்பாளர்களுக்கான கண்காட்சி என்பதுதான் சரியாக இருக்கும். புதன் கிழமை ஆரம்பிக்கும் இச் சந்தை ஞாயிற்றுக்கிழமையோடு முடிகிறது. இதன் முதல் மூன்று நாட்கள் பதிப்பாளர், அச்சிடுவோர், விநியோகஸ்தர் ஆகியோருக்கானது. சனி, ஞாயிறு தினங்களில் பொது மக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

புத்தக உரிமை, மொழி பெயர்ப்பு உரிமை, ஒப்பந்தங்கள் சம்பந்தமான வர்த்தக பரிவர்த்தனைகள்தான் இக் கண்காட்சியின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு “கெஸ்ட் ஆஃப் ஹானர்’ என்று கெüரவிக்கப்படும். கடந்த ஆண்டு நான் முதல் முறையாகக் கலந்து கொண்ட போது இந்தியாவுக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. இந்த ஆண்டு செடலோனியா (ஸ்பெயின்) நகருக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது.

ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுரா பதிப்பகத்தினர் கலந்து கொண்டு வருவதை அறிந்தேன். மற்ற தமிழ்பதிப்பகங்கள் எதுவும் இதில் ஆர்வம் காட்டாததற்குக் காரணம், இது புத்தக விற்பனைக்கான சந்தையாக இல்லாமல் பதிப்பாளர்களுக்கான ஒரு தளமாக இருக்கலாம். ஒரு முறை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுத் திரும்புவதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் எந்த விதத்திலும் நம் புத்தகங்கள் விற்பனை அந்த அளவுக்கு நடைபெற வாய்ப்பில்லை. ஆனால் இதனால் வேறு மாதிரியான வர்த்தக விரிவாக்கங்களுக்கு முயற்சி செய்ய முடியும் என்பதுதான் என் கருத்து.

இப்போது நம் தமிழ்ப் புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறோம். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், பிரபஞ்சன், நீல.பத்மநாபன், யூமா வாசுகி போன்றோரது 20 நாவல்களை இப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறோம். இவற்றை அக் கண்காட்சியில் இடம் பெற்ற இங்கிலாந்து பதிப்பகத்தார் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். “இந்தியன் ரைட்டிங்ஸ்’ என்ற பிரிவின் கீழ் எங்கள் பதிப்பகத்தில் இவற்றை வெளியிடுகிறோம். அதே போல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நம் எழுத்தாளர்களின் இந்த நாவல்களை மற்ற ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும் முயற்சி செய்கிறோம். இது இக் கண்காட்சியில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட திருப்பம். நாம் இங்கிருந்து போனில் பேசுவதன் மூலம் இதை நிறைவேற்ற முடியாது. நேரில் பேச வேண்டும்; நம் புத்தகங்களின் சாம்பிள்களைக் கொடுக்க வேண்டும். இப் பயணத்தின் மூலம் உலக நூல்களை, இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கான முயற்சிகளையும் செய்ய முடியும். முஷாரப்பின் “தி லைன் ஆஃப் ஃபயர்’ நூலை வெளியிட்டது அத்தகைய முயற்சிதான்.

நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. ஆயினும் இத்தகைய அமைப்புகளும் இதைச் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை” என்ற வருத்தக் கேள்வியோடு சொன்னார் அவர்.

“”தமிழ்நூல்களுக்கு நூலக ஆணை மட்டுமே பிரதான வரவாக இருக்கும் சூழ்நிலையில் இப்படியான முயற்சிகளில் இறங்குவது எப்படி?” என்றோம்.

“”நூலகங்களில் புத்தகம் வாங்குவது வருமானத்தின் ஒரு பகுதி மட்டுமே. பொது மக்கள்தான் எங்கள் நிலையான வாங்கும் சக்திகள். நாம் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களும் சென்று சேருவதற்காக 30 மாவட்டங்களிலும் விற்பனைக் கூடங்கள் வைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி நூல்விற்பனை நிலையங்கள் மட்டுமன்றி பல சிறிய கடைகளிலும் எங்கள் புத்தகங்களை விற்பதற்கு முயற்சி செய்கிறோம். ஆயிரம் பிரதிகள் விற்பதற்கே அல்லல் படும் நிலையிருந்தும் சோம வள்ளியப்பனின் “அள்ள அள்ள பணம்’ என்ற நூலை இந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்திருக்கிறோம். பதிப்பு முறையிலும் விற்பனை விஷயத்திலும் கவனம் செலுத்தினால் புத்தக விற்பனை வெற்றிகரமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்கிறார் நம்பிக்கையுடன்.

தமிழ்மகன்.

Posted in Agents, Annual, audiobooks, Authors, Books, Business, Catalan, Catalonia, Channels, classics, Deals, Deutsch, Deutschland, Distribution, English, EU, Events, Exhibition, exhibitors, Faces, Fair, Fiction, forum, Frankfurt, German, Germany, India, Industry, Interview, Kilakku, Kizakku, Kizhakku, Language, Literary, Literature, Marketing, Media, Meet, Multilingual, NBT, network, Networking, New Horizon, Novels, Outlets, people, publications, Publishers, Reach, Read, Reader, Readers, Reports, sales, Sell, Spain, Story, Sura, Tamil, Trade, Translations, Translator, wholesalers, Works, World | Leave a Comment »

India to curb foreign funds deluge – Volatile stock market & Participatory note policy

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

பாடாய்ப்படுத்தும் பங்குச்சந்தை!

பங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.

செவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.

கடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.

இந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

போக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா?

Posted in ADR, Assets, Biz, Bonds, Brokers, BSE, Commerce, crash, DJIA, Economy, FII, Finance, fiscal, Foreign, Funds, GE, GM, Goldman Sachs, Govt, Index, Indices, Infy, Interest, International, investors, Invsetors, IPO, Loss, markets, Merryll Lunch, MF, MNC, Morgan Stanley, NRI, NSE, PE, PIO, Planning, Portfolio, Profit, Rates, ratio, Shares, Stocks, Traders, Trading, Wipro, World | Leave a Comment »

Turkey seeks OK for military move into northern Iraq

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 17, 2007

குர்து பிரிவினைவாதிகள் மீது எல்லை கடந்து தாக்க துருக்கிய நாடாளுமன்றம் அங்கீகாரம்

வட இராக்கில் குர்து இன பிரிவினைவாதிகளின் தளங்களின் மீது எல்லை கடந்த தாக்குதல்களை நடத்த, துருக்கிய இராணுவத்துக்கு அனுமதி அளித்து, துருக்கிய நாடாளுமன்றம் பெரும் ஆதரவுடன் வாக்கெடுப்பு ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இந்த தாக்குதல்களை ஓராண்டு காலம் நடத்த அரசுக்கு அனுமதி அளிக்கும் தீர்மானம் ஒன்றை, 550 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 19 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.

துருக்கிய பிரதமர் ரசெப் தயிப் எர்தோவான், இராக்குக்குள் ஊடுருவல்கள் என்பது உடனடியாக நடக்கப்போவதில்லை என்று கூறினார். ஆனால் குர்துகளின் பிராந்திய அரசோ, இந்த ஆமோதிக்கும் வாக்கெடுப்பு சர்வதேச சட்டத்தை மீறியதாகும் என்று கூறியது.

இந்த முடிவு அறிவிக்கப்படும்போது, அமெரிக்க அதிபர் புஷ், துருக்கியை பெரிய எல்லைகடந்த ஊடுருவல் எதையும் தொடங்கவேண்டாம் என்று வலியுறுத்தினார்.

 

அத்தகைய தாக்குதல் எதுவும், துருக்கியின் நலன்களுக்கு உகந்தது அல்ல என்றும் அவர் கூறினார்.

துருக்கிய நாடாளுமன்றத்தின் இந்த நடவடிக்கை, ஒரு புதிய இராஜிய முயற்சிகளை தூண்டியுள்ளது. இந்த இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்பதுதான் ஒருவேளை இந்த நடவடிக்கையின் பின்னுள்ள பிரதானமான நோக்கமாக இருக்கலாம்.

ஆனால், இராக்கின் வடக்கே உள்ள, பெரும்பாலும் சுயாட்சி பெற்ற குர்திஷ் பகுதியில் இராக்கின் மத்திய அரசுக்கு பெருமளவு செல்வாக்கு, அதிகாரம் இல்லை என்பது துருக்கிக்கு தெரிந்ததுதான்.

உடனடியாக ஏதும் போர் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சாத்தியக்கூறு பெருமளவு இல்லை என்று துருக்கிய பிரதமர் ரெசெப் தயிப் எர்தோவான் கூறியுள்ளார்.

பெரிய அளவில் ஏதும் ஆயத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளிப்படையாகத் தெரியவில்லை என்றுதான் மேலை நாடுகளின் இராணுவ வட்டாரங்களும் கூறுகின்றன.

ஆனால் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு துருக்கியில் பெருத்த மக்கள் ஆதரவு இருக்கும். எந்தவொரு தாக்குதலுக்கும் குறிப்பிடத் தகுந்த பின்விளைவுகளும் இருக்கும் என்பது நிச்சயம்.

இராக்கிய எல்லைக்கு அருகே துருக்கிய காவலரண்
இராக்கிய எல்லைக்கு அருகே துருக்கிய காவலரண்

துருக்கிய இராணுவம் சிறிய தாக்குதல்களை அல்லது வெறும் விமானத் தாக்குதல்களை மட்டும் நடத்துவது என்பதோடு நிறுத்திக் கொண்டால்,அதற்கு சிறிய பின்விளைவுகள்தான் இருக்கும்.

ஆனால் அவைகளில் கூட ஆபத்துக்கள் இருக்கின்றன.

கிர்க்குக் நகருக்கு அல்லது அருகில் உள்ள எண்ணெய்க் கிணறுகளுக்கு அச்சுறுத்தல்களை விளைவிப்பது போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் ஒரு பெரிய நெருக்கடியை தோற்றுவித்து, இராக்கிய படைகளையோ, அமெரிக்காவையோ அல்லது இரானையோகூட மோதலில் ஈடுபடுத்திவிடக்கூடும்

கவலையில் அமெரிக்கா

அதிபர் புஷ்
அதிபர் புஷ்

நிச்சயமாக அமெரிக்கா கவலையில் இருக்கிறது. இராக்கில் இதற்கு மேலும் இராணுவ சவால்களை சந்திக்க அதற்கு வசதிகள் இல்லை.

மேலும்,அங்கு அது இருப்பதற்கே, துருக்கியின் ஆதரவு அமெரிக்காவுக்கு பெருமளவில் தேவைப்படுகிறது.

மேலும், முதலாம் உலகப்போர் காலத்தில் துருக்கியில் ஆர்மீனியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டது ஒரு இனப்படுகொலை என்று கண்டனம் செய்து, அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி ஒன்று வாக்களித்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே, அமெரிக்க-துருக்கி உறவுகள் ஒரு சிக்கலான கட்டத்தில் உள்ளன.

அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையேயான உறவுகளில் விரிசல் ஏற்படும் ஆபத்தை உணர்ந்தோ என்னவோ, அமெரிக்க காங்கிரசில், இந்த பிரேரணைக்கு ஆதரவு குறைந்து வருவது போல் தோன்றுகிறது.

குழப்பத்தில் இருக்கும் ஒரு பிரதேசத்தில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முயலும் துருக்கியின் ஆட்சியாளர்களுக்கு, இவை எல்லாம் ஒரு சிக்கல் நிறைந்த கணக்குகள்தான்.


Posted in Abdullah, al-Assad, al-Maliki, America, Armenia, Attack, Bashar al-Assad, Cicek, defence, Defense, Diesel, Erdogan, Extremism, Extremists, Foreign, Gas, Government, Govt, guerrillas, Gul, incursion, International, Iraq, Kurd, Kurdish, Kurdistan Workers Party, Military, NATO, Nouri al-Maliki, oil, Ottoman, parliament, Petrol, PKK, Rebels, Syria, Talabani, Terrorism, Terrorists, Turkey, Turks, US, USA, War, World | Leave a Comment »

Myanmar (Burma) Violence and India External Affairs – TJS George

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

ஏனிந்த மௌனமம்மா..?

காந்தியக் கொள்கை விஷயத்தில் நாம் ஆஷாடபூதித்தனத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறோம். காந்திஜியின் சொந்த மாநிலமான குஜராத்தே வன்முறைக் களமாகத் திகழ்ந்து அவரைச் சிறுமைப்படுத்துவதில் வியப்பு ஏதும் இல்லை.

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் அகிம்சை குறித்துத் தேனொழுகப் பேசிய சோனியா காந்தி, இந்தியாவிலோ, மியான்மரிலோ ஏற்பட்டுவரும் ரத்தக்களரி குறித்து வாய் திறவாமல் இருந்ததிலும் வியப்பு ஏதும் இல்லை.

உலகின் எந்தப் பகுதியிலாவது நடந்த வன்முறை அல்லது அடக்குமுறை ஆட்சி மீது இந்திய அரசு கண்டனக் குரல் எழுப்பி நாம் கடைசியாக கேட்ட சந்தர்ப்பம் எது என்று நினைவுகூரமுடியுமா?

அநியாயத்தைத் தட்டிக்கேட்காமல் அமைதி காத்தால் அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்த அமைதிக்கு அர்த்தம் இருக்கிறது; அப்படியாவது நமக்கு எந்த ஆதாயமாவது கிடைத்திருக்கிறதா?

இப்படிப்பட்ட விவகாரங்களைக் கையாள்வதில் சீனாதான் சமர்த்து. நம்முடைய அந்தமான் தீவின் வடக்கு முனைக்கு அருகில் கல்லெறி தூரத்தில், மியான்மரின் கிரேட் கோகோ தீவில் கடற்படை தளத்தை சீனா நிறுவியுள்ளது.

பாகிஸ்தானில் மலைப்பகுதியில் நெடுஞ்சாலைகளையும், ஆழ்கடலில் கடற்படை தளத்தையும் அமைத்துக்கொண்டு ராணுவரீதியாகத் தன்னை பலப்படுத்திக்கொண்டுள்ளது சீனா.

சர்வதேச அரங்கில், ராஜீயரீதியாக தான் விதைக்கும் ஒவ்வொரு விதைக்கும் ஈடாக, 10 பழங்களைப் பறித்துக் கொள்கிறது சீனா.

வங்கதேசத்துக்காக நமது முப்படைகளைத் திரட்டிச் சென்று போரிட்டு விடுதலை வாங்கித் தந்தோம், பதிலுக்கு நமது எல்லையில் புதிய எதிரியை இப்போது சம்பாதித்துள்ளோம். போதாதக்குறைக்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வேறு தலையில் கட்டிக்கொண்டு அழுகிறோம்.

வங்கதேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்ததற்காக நம்மை மிரட்ட தனது விமானந்தாங்கிக் கப்பலை இந்துமகா சமுத்திரத்துக்கு அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன்.

இராக்கைவிட மியான்மரில் இயற்கை வளம் அதிகம் என்கிறார்கள், இது இன்னமும் அமெரிக்காவின் துணை அதிபர் டிக் சினீயின் கண்ணில் படவில்லை என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது; இல்லை ஒருவேளை பட்டுவிட்டதா?

ராணுவத் தலைமை ஆட்சியாளர் தாண் ஷ்வேயின் மாப்பிள்ளை தேசா, சாதாரணமானவராக இருந்து குபேரனாகிவிட்டார் என்கிறார்கள்.

நாட்டின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம், ராணுவக் கொள்முதல் எல்லாமே அவரைச்சுற்றித்தான் இருக்கும் என்பது புரிகிறது. அவருக்கென்று சொந்தமாகவே ஒரு விமானம் கூட இருக்கிறதாம்.

சர்வதேச அமைப்பின் பொருளாதாரத் தடை இருக்கிறதோ இல்லையோ, ஹால்பர்ட்டன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மியான்மரில் ஜனநாயகம் மலர காலூன்ற இது நல்ல நேரம். (ஹால்பர்ட்டன் என்பது எண்ணெய்த் துரப்பணத் துறையில் அனுபவம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனம்).

நான் சொல்வது கற்பனையோ அதீதமோ அல்ல; எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத விதத்தில் அமெரிக்காவின் கரங்கள் கண்ணுக்குத் தெரியாமல் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கின்றன என்பது சமீபகாலத்தில் சி.ஐ.ஏ.வின் ரகசியங்கள் அம்பலமானபோது தெரியவந்துள்ளது.

1988-ல் லாக்கெர்பி விமான விபத்து நினைவில் இருக்கிறதா? அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான்! இறுதியில் ஒரு லிபியர்தான் அந்த விபத்தின் பின்னணியில் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

மால்டாவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்தான் அந்த சாட்சியத்தையும் அளித்தார். அவருக்கு அமெரிக்க அரசு 20 லட்சம் டாலர்களைப் பரிசாகத் தந்தது. லிபியர் இப்போது கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்.

1980-களின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்டு அந்நாளைய சோவியத் யூனியன் திண்டாடியது நினைவுக்கு வருகிறதா? அமெரிக்க, பிரெஞ்சு உளவுப்படையினர்தான் அதற்குக் காரணம்.

ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகள் மீள முடியாமல் சிக்கிக்கொண்டால், சோவியத் யூனியனே சிதறுண்டுவிடும் என்று பிரெஞ்சு உளவுப்பிரிவினர் தகவல் அளித்தனர். உடனே அதற்கான ஏற்பாடுகளில் அதிபர் ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிரமாக இறங்கியது.

சோவியத் துருப்புகளை ஹெராயின் என்ற போதை மருந்துக்கு அடிமையாக்குவதும் பிரெஞ்சு உளவுத்துறை வகுத்துக் கொடுத்த திட்டம்தான் என்று “”காவ் பாய்ஸ்” என்ற நூலின் ஆசிரியர் பி. ராமன் தெரிவிக்கிறார்.

சோவியத் யூனியனுக்கு எதிராகப் போராட ஜிகாதிகளுக்கும் தனி ஊக்குவிப்பு தரப்பட்டது. உலகெங்கிலுமிருந்தும் ஜிகாதிகள் அணி திரண்டு ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து சோவியத் துருப்புகளுக்கு எதிராக சண்டையிட்டு அவர்களைப் படுதோல்வி அடையவைத்தனர்.

அமெரிக்கா பணமும் ஆயுதமும் கொடுத்து அப்படி ஊக்குவித்த ஜிகாதிகளில் ஒருவர்தான் ஒசாமா பின் லேடன்.

காலப்போக்கில் எதிர்பார்த்தபடியே சோவியத் யூனியன் சிதறுண்டு போனது.

அதே சமயம் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியும் கலகலத்துக்கொண்டிருக்கிறது. “அமெரிக்கர்களே இஸ்லாத்துக்கு மாறிவிடுங்கள்’ என்று கேட்கும் அளவுக்கு வெற்றிக்களிப்பில் மிதக்கிறார் பின் லேடன்.

மியான்மரில் நடக்கும் கலவரங்களின் பின்னணியிலும் அமெரிக்கா இருந்தால் ஆச்சரியப்படாதீர்கள்; பாகிஸ்தானிலும் தில்லியிலும் நடப்பனவற்றின் பின்னணியில் எந்த அளவுக்கு அமெரிக்காவின் கை இருக்கிறதோ அந்த அளவுக்கு மியான்மரிலும் இருக்கும்.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

Posted in Affairs, Afghan, Afghanisthan, Arms, Bangladesh, Burma, Bush, Cartel, China, Cocaine, Democracy, Diesel, Drugs, energy, External, Foreign, Gandhi, Gas, George, Govt, Gujarat, GWB, Heroin, Imports, India, International, Iraq, Laden, Libya, Malta, Myanmar, Oppression, Osama, Pakistan, Petrol, Politics, Spokesperson, Violence, Voice, Wars, World | Leave a Comment »

Corruption & Powerful world Leaders – Lobbying, Kickbacks in the International Politics

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2007

உறுத்து வந்து ஊட்டும் ஊழல் வினை!

க. ரகுநாதன்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனா, கலீதா ஜியா, பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா, தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ரா – இவர்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எல்லோரும் அந்தந்த நாடுகளின் இப்போதைய அரசுகளால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்.

இவர்களுள் தக்ஷின ஷினவத்ரா தவிர மற்ற மூவரும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் வெளிப்படையான காரணமாக இருப்பவை – ஊழல் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவையே.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தமது ஆட்சிக்காலத்தில் தஜுல் இஸ்லாம் ஃபரூக் என்ற தொழிலதிபரை மிரட்டி சுமார் 4 லட்சத்து 41 ஆயிரம் டாலர்கள் பெற்றது, எதிர்க்கட்சியினரைக் கொலை செய்யத் திட்டமிட்டது உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டார்.

கலீதா ஜியா தமது இளைய மகன் அராஃபத் ரஹ்மான் கோகோவின் நிறுவனத்துக்கு அதிகாரத்தை, தவறாகப் பயன்படுத்தி சலுகை வழங்கியதாக அந்நாட்டு இடைக்கால அரசால் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்தின் ஷின் கார்ப்பரேஷன், தொலைபேசி சேவை உள்பட பல்வேறு தொழில்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ராவின் குடும்பத்துக்குச் சொந்தமானது. இதை விற்றபோது 190 கோடி டாலர்கள் வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த பல்வேறு அரசியல் குழப்பங்கள், எதிர்ப்பை அடுத்து, கடந்த ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் ஷினவத்ரா. ராணுவ வீரர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ராணுவப் புரட்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

எல்லோருக்கும் உண்டு அரசியல் ஆசை; குறிப்பாக, திரைப்பட நடிகர்களுக்கு. சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து அரசியல் ஆசையில் களம் கண்டு வெற்றியும் பெற்று இறுதியில் வீழ்ந்தவர் பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா (70). அண்மையில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது; அதுமட்டுமன்றி, அவர் இனி எந்த ஒரு பதவியையும் வகிக்க முடியாதபடி தடை விதிக்கப்பட்டது.

பிலிப்பின்ஸின் ஏழைப் பங்காளனாகவே பார்க்கப்பட்டவர் ஜோசப் எஸ்ட்ரடா. ஏழ்மையில் இருக்கும் ஒவ்வொரு பிலிப்பின்ஸ் குடிமகனுக்கும் எஸ்ட்ரடாவைத் தெரியும் என்பார்கள். காரணம், சுமார் 100 திரைப் படங்களில் ஏழைகளின் பாதுகாவலனாக நடித்து அதன்மூலம் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அவர்.

அவருக்கும் வந்தது அரசியல் ஆசை!. 1969-ம் ஆண்டு தலைநகர் மணிலா அருகே உள்ள ஸôன் ஜுவான் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது துவங்கியது அவரது அரசியல் பயணம். ஏறக்குறைய 16 ஆண்டுகள் அந்நகரின் மேயராக இருந்தார்.

அடுத்து அவர் வைத்த குறி, அதிபர் பதவி. 1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில், நம் ஊர் போலவே அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்து அதிபர் பதவி அளித்தனர் அந்நாட்டு மக்கள்.

பதவிக்கு வரும் வரை ஏழைப் பங்காளனாக இருப்பேன் என்று கூறுவோர், பதவி கிடைத்தும் பின் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் திளைப்பது வழக்கம்தான். இதற்கு இந்த முன்னாள் நடிகர் ஜோசப் எஸ்ட்ரடாவும் விதிவிலக்கல்ல.

நாட்டில் சட்டவிரோதமாக நடந்த சூதாட்டத்தை ஆதரித்தார் எஸ்ட்ரடா. சூதாட்டக்காரர்கள் வென்ற பணத்தில் இருந்து 80 லட்சம் அமெரிக்க டாலரை அவர் லஞ்சமாகப் பெற்றார். “அதை நான் வாங்கிக் கொடுத்தேன்’ என அந்நாட்டின் மாகாண ஆளுநர் லூயிஸ் ஸிங்ஸன் கூறியபோதுதான் வந்தது வினை. புகையிலை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்துக்கான அரசு மானியத்தில் 26 லட்சம் டாலர் ஊழல் செய்ததாகவும் எஸ்ட்ரடா மீது புகார் எழுந்தது.

இதையடுத்து 2000-ம் ஆண்டு எஸ்ட்ரடாவைப் பதவிநீக்கம் செய்ய முயன்றது பிலிப்பின்ஸ் நாடாளுமன்றம். எனினும் அது நிறைவேறவில்லை.

2001-ம் ஆண்டு ராணுவம் அவரைப் பதவியில் இருந்து விரட்டிவிட்டு, துணை அதிபர் குளோரியா மகபாகல் அரோயாவை அதிபர் ஆக்கியது.

மொத்தம் 8 கோடி டாலர் ஊழல் தொடர்பாக நடந்த வழக்கில் எஸ்ட்ரடாவுக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம். பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஃபெர்டினாட் இமானுவல் மார்கோஸ், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான எர்ஷாத், தனது அமைச்சரவை சகாக்களின் மீதான ஊழல் புகார்களை அடுத்து அண்மையில் ராஜிநாமா செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பெரு நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் செய்தததை அடுத்து, சிலியில் தஞ்சம் புகுந்து, அந்நாட்டு நீதிமன்றத்தால் அண்மையில் வெளியேற்றப்பட்ட பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பெர்ட்டோ ஃபுஜிமோரி என – பலரைக் குறிப்பிடலாம். ஊழல் விஷயத்தில் நம் நாட்டின் தலைவர்கள் பற்றி நீண்ட பட்டியலே போடலாம்!.

நல்லவர்களாகத் தெரியும் இத் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால் வல்லவர்களாக இருப்பர். நம்மைச் சூழ்ந்துள்ள இன்னல்களைக் களைவர் என்று நம்பும் சாதாரண மக்களின் நம்பிக்கை சிதைக்கப்படும் போது அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது இதுபோன்ற நீதிமன்றத் தீர்ப்புகளே.

முன்னர் செய்த செயலுக்குரிய விளைவுகள் ஒருவனை வந்தடைந்தே தீரும் என்பதற்காக “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்றது சிலப்பதிகாரம். ஊழ்வினை மட்டுமல்ல, “ஊழல்’ வினையும்தான் உரிய தண்டனையைப் பெற்றுத் தரும்.

Posted in Abe, Army, Bangladesh, Bhutto, Biz, Business, Cinema, Corruption, Courts, Democracy, Films, Freedom, Govt, Hasina, HC, Independence, International, Japan, Justice, Khaleda Zia, Khaledha, kickbacks, Law, Leaders, Lobbying, Military, Movies, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Nawaz, Order, Peru, Pervez, Phillipines, Politics, Rule, SC, Sharif, Sheriff, World, Zia | Leave a Comment »

International Financial Instituitions and their influence in Indian Govt Policymaking

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2007

வரலாறு திரும்பிவிடக் கூடாது!

அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம் என்று ஓர் ஆய்வுக் குறிப்பு கூறுகிறது. இப்படி ஓர் ஆய்வுக் குறிப்பைச் செய்திருப்பது ஏதாவது அரசியல் கட்சியா, அரசியல் ஆய்வாளரா அல்லது பத்திரிகையாளரா என்றால் இல்லை. ஒரு நிதி நிறுவனம், அதிலும் ஒரு சர்வதேச வங்கியின் தனியார் நிதி நிறுவனம்தான் இப்படி ஓர் ஆய்வறிக்கையைத் தயாரித்து, எல்லா நாளேடுகளுக்கும் பத்திரிகைக் குறிப்பாக அனுப்பி இருக்கிறது.

அடுத்த நிதிநிலை அறிக்கையில் பல சமூக நலத் திட்டங்களை அறிவிப்பதன் மூலம் மக்களின் நல்லெண்ணத்தை மன்மோகன் சிங் அரசு பெற முடியும் என்று அந்த அறிக்கை யோசனை கூறுகிறது. தங்களது நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற இடதுசாரிகளும் எதிர்க்கட்சிகளும் முட்டுக்கட்டை போடுகின்றன என்கிற ஆதங்கத்துக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கருதுவதாகவும் அந்தக் குறிப்பு மேலும் விவரிக்கிறது.

விஷயம் அத்துடன் முடிந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை. தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனது வளர்ச்சித் திட்டங்களைத் தங்குதடையின்றி செயல்படுத்த மக்கள் ஆதரவளிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பையும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எதிரான கொள்கைகளை உடைய இடதுசாரிகளும் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்கிற நம்பிக்கையையும் அந்தக் குறிப்பு கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பெயரில் சர்வதேச நிதி நிறுவனங்களும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் மிகப்பெரிய முதலீடுகளுடன் இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்தபோது எழுப்பப்பட்ட முதல் எச்சரிக்கை என்ன தெரியுமா? “அன்னிய நிதி நிறுவனங்களை இங்கே தங்குதடையின்றி செயல்பட அனுமதிக்கும்போது, அவை நமது நாட்டு நிர்வாக விஷயங்களிலும், அரசியலிலும் தங்குதடையின்றி செயல்படும் உரிமையைப் பெற்றுவிடும் என்பதுதான். தங்களது முதலீட்டுக்கான அதிகபட்ச லாபத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துச் செயல்படும் வியாபார நிறுவனங்கள் அவை என்பதை மறந்துவிடலாகாது!’ என்கிற எச்சரிக்கையை நாடாளுமன்றத்திலேயே பல முதிர்ந்த அரசியல் தலைவர்கள் எழுப்பியது இப்போது நினைவில் நிழலாடுகிறது.

பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் பத்து கோடி ரூபாய் என்று நிதி ஒதுக்கி, போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம், பெருவாரியான நாடாளுமன்ற உறுப்பினர்களை வருங்காலத்தில் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் விலைக்கு வாங்கிவிடாது என்பது என்ன நிச்சயம்? கணிசமான உறுப்பினர்களைத் தங்களது வலையில் வீழ்த்தி, இந்திய அரசையே நமது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ஆட்டிப் படைக்க நினைத்தால் அதை எப்படித் தடுக்க முடியும்?

இந்திய அரசியலின் போக்கு எப்படி இருக்க வேண்டும், நமது அரசின் திட்டங்கள் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்திய வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டுமே தவிர, வியாபாரம் செய்ய வருகின்ற அன்னிய நிதி நிறுவனங்களும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் நிச்சயிக்கும் நிலைமை ஏற்படுவது இந்திய இறையாண்மைக்கே ஏற்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல்.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு, அன்னிய முதலாளிகளால் அன்னிய முதலீட்டாளர்களுக்காக நடத்தப்படும் அரசாக மாறிவிடுமோ என்கிற பயத்தை அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் சுற்றறிக்கை ஏற்படுத்துகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடத்தை நாம் மறந்துவிட மாட்டோம் என்கிற நம்பிக்கைதான் இப்போதைக்கு ஒரே ஒரு ஆறுதல்!

——————————————————————————————————————

அமெரிக்காவைப் பின்பற்றலாமே…!

ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை என்பது பொருளாதார நிபுணர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விஷயமாகி விட்டது.

மற்ற நிதி நிறுவனங்களும், அமைப்புகளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒன்பது விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தாலும், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி 2007-08-க்கான வளர்ச்சி 8.5 சதவிகிதம் என்றுதான் அறிவிக்கிறது. கடந்த ஆண்டு 9.4 சதவிகிதமும் அதற்கு முந்தைய ஆண்டு 9 சதவிகிதமும் இருந்த வளர்ச்சி 8.5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டதே என்று வருத்தப்படத் தேவையில்லை. கடந்த நான்கு ஆண்டு சராசரி வளர்ச்சி 8.6 சதவிகிதம்தான் என்பதால், இந்த வளர்ச்சியே நல்ல அறிகுறி என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த அறிக்கையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், நமது விவசாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு. எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தியாவின் மொத்த வருமானத்தில் 40 சதவிகிதம் இருந்த விவசாயத்தின் பங்கு இப்போது வெறும் 20 சதவிகிதமாகக் குறைந்துவிட்டிருக்கிறது. விவசாய வளர்ச்சி 2.8 சதவிகிதத்திலிருந்து இப்போது 3.8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது என்று நாம் பெருமைபட்டுக்கொள்ளலாமே தவிர, அடிப்படையில் விவசாயமும் விவசாயிகளும் மற்ற துறைகளின் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்போது மிகவும் பின்தங்கியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, விவசாயிகளின் பிரச்னைகளை ஆராய சிண்டிகேட் வங்கித் தலைவர் சி.பி. ஸ்வர்ஸ்கர் தலைமையில் அமைத்த குழுவின் அறிக்கையும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. விவசாயிகளுக்கு எளிய முறையில் எப்படிக் கடன் வழங்குவது என்பதைப் பரிசீலித்து, வழிமுறைகளை ஏற்படுத்துவதுதான் இந்தக் குழுவின் நோக்கம்.

தற்போதைய நிலையில் உயர்ந்த கூலியும், அதிகரித்த உர விலையும், போதுமான அளவு தண்ணீர் இல்லாததும் விவசாயிகளை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. விளைபொருள்களுக்குப் போதிய விலை இல்லை என்பது மட்டுமல்ல, அரசுத் தரப்பில் சரியான நேரத்தில், நஷ்டம் ஏற்படாத விலையில் கொள்முதல் நடைபெறாமல் இருப்பதும் விவசாயிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி வருகின்றன.

ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது உணவு உற்பத்தியில் அந்த நாடு தன்னிறைவு அடைவதில்தான் இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதனால்தான், தனது நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை அமெரிக்கா அதிக விலை கொடுத்து வாங்கி கடலில் கொட்டுவது, நெருப்பிட்டுக் கொளுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. விவசாயி தனது விளைபொருள்களை விற்க முடியாமல் நஷ்டப்படக் கூடாது என்பதுதான் அதன் அடிப்படை நோக்கம். மானியமாக அதிகப் பணம் போனாலும், விவசாய உற்பத்தி குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா போன்ற நாடுகள் முனைப்பாக இருக்கின்றன.

8.6 சதவிகித வளர்ச்சி என்று மேலெழுந்தவாறு பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. பெருவாரியான மக்கள் விவசாயம் சார்ந்து கிராமப்புறங்களில்தான் இன்றும் வசிக்கிறார்கள். விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சியும், கிராமப்புற வளர்ச்சியும் அதனால் ஏற்படும் தன்னிறைவும்தான் உண்மையான வளர்ச்சியே தவிர அன்னியச் செலாவணி இருப்பும், மேலெழுந்தவாரியான பொருளாதார வளர்ச்சியும் அல்ல.

தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் அமெரிக்காவையும், வளர்ச்சி அடைந்த நாடுகளையும் பின்பற்றத் துடிக்கும் நமது மத்திய அரசின் பொருளாதார நிபுணர்கள், இந்த விஷயத்தில் அமெரிக்காவைப் பின்பற்ற முயலாதது ஏன்? நல்ல விஷயங்கள் நமக்கு வேண்டாம் என்பதாலா?

——————————————————————————————————————

Posted in Agriculture, Assets, bank, Banking, Banks, Big, City, Commerce, Deflation, Dept, Development, Economy, Farming, Foreign, GDP, Govt, Growth, History, Index, Indices, Inflation, Loans, Metro, nexus, Opportunity, Policy, Poor, RBI, Recession, Rich, Rural, solutions, Stagflation, Suburban, Syndicate, Village, WB, World | Leave a Comment »