Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Bombs’ Category

Feb 24 – LTTE, Eezham, Batticaloa, Sri Lanka – News & Updates: BBC Tamil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

கொழும்பில் பேருந்தில் குண்டுத்தாக்குதல்: 18 பேர் காயம்

இலங்கைத் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பஸ் வண்டி ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட வெடிகுண்டு ஒன்றை விழிப்பாக இருந்த பயணி ஒருவர் கண்டறிந்து தெரியப்படுத்தியதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

பேருந்து கல்கிசை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் இருக்கைக்கு அடியில் மர்ம மூட்டை ஒன்று கிடப்பதை கண்டு பயணி ஒருவர் பேருந்தின் ஒட்டுநரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து அனைவரும் இறக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், இருந்த போதிலும் பொலிஸார் வருவதற்கு முன்பாக குண்டுவெடித்து விட்டதாக பேருந்தின் ஒட்டுநர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பயணிகள் அனைவரும் வெளியேறிவிட்டாலும் குண்டுவெடித்ததில் அருகில் நின்றிருந்தவர்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளே இக்குண்டுவெடிப்பின் காரணம் என்று இராணுவத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

 


உயிர் அச்சத்தில் வடப்பகுதி மக்கள் – பெட்டகம்

வான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்
வான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்

இராணுவ நடவடிக்கை மூலம் கிழக்கை மீட்ட இலங்கை அரசு அதே அணுகுமுறை மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க முடியும் என்று நம்புவதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதே நேரம் ஆயுதம் மூலம் தனி ஈழத்தை பெறலாம் என்ற நம்பிக்கையை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அமைதி முயற்சிகள் பின் தள்ளப்பட்டு இராணுவ நடவடக்கைகளுக்கே முன் உரிமை கொடுக்கப்படுகிறது.

தினந்தோரும் நடக்கும் மோதல்களால் தொடர்பாக இரு தரப்பும் மாறுப்டட தகவல்களைத் தந்தாலும் மோதல்களால் கடுமையாக பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதே மாறாத உண்மை உள்ளது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்ற அரசாங்கம் அவர்களைத் தோற்கடிப்பதில் வெற்றியடைந்து வருவதாகக் கூறுகின்றது.

விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை குறைக்க அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் முகாம்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அரசு கூறுகின்றது. ஆயினும் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களே இந்தத் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றார்கள்.

இந்த வான் தாக்குதல்கள் எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வருவபர்கள் தெரிவிக்கின்றார்கள்.

வடக்கே நிலவும் போர் சூழலால் மக்கள் நாளாந்தம் உயிரச்சத்துடனேயே தமது வாழ்வைக் கழித்து வருகின்றனர். இது தொடர்பாக நமது வவூனியா செய்தியளர் மாணிக்கவாசகம் தயாரித்து அனுப்பிய பெட்டகத்தை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கில் விமானப்படை தாக்குதல்

இலங்கை விமானப்படையின் விமானம்
இலங்கை விமானப்படையின் விமானம்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானுக்கு வடகிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ தளம் ஒன்று சனிக்கிழமை காலை தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள மன்னாகண்டல் என்னுமிடத்தில் சனிக்கிழமை காலை குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் 4 குண்டுகளை வீசியதாகவும், இதனால் வீதியில் சென்று கொண்டிருந்த 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையில் நேற்று வெள்ளிக்கிழமை புனகரி பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பொதுமக்களது இறுதிக்கிரியைகள் நடைபெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டு வீச்சுச் சம்பவத்தில் காயமடைந்த 11 பேரில் 9 பேர் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 4 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் இவர்கள் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும் அவரிகளது உடல் நிலை பிரயாணம் செய்யக் கூடியதாக இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முழங்காவில் வைத்தியசாலையில் ஏனைய 2 காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஐ.நா உயரதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்

ஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே
ஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே

இலங்கைக்கான ஒரு வாரகால விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் அரசியல் விவகார துணைச் செயலாளர் ஏஞ்சலினா கனே கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மட்டக்களப்பு சென்றுள்ளார்.

கடந்த கால யுத்த அனர்த்தத்தின் பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்படுகின்ற மனிதநேய நிவாரணப் பணிகள், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கறித்து அறிந்து கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், யுத்த அனர்த்தத்தின் போது இடம் பெயர்ந்தவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள சில கிராமங்களை பார்வையிட்டதோடு இது வரை மீளக் குடியேற்றப்படாதவர்களையும் சந்தித்து உரையாடினார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும் சந்தித்து மாவட்ட நிலவரம் தொடர்பாகவும் குறிப்பாக நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்

இருப்பினும் இந்த விஜயம் தொடர்பாகவோ சந்திப்புகள் தொடர்பாகவோ ஏஞ்சலினா கனே செய்தியாளர்களிடம் கருத்துக் கூற மறுத்து விட்டார்

புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 பிப்ரவரி, 2008

 


இலங்கையின் களுவாஞ்சிக்குடியில் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்

சம்பவம் நடைபெற்ற இடம்
சம்பவம் நடைபெற்ற இடம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு- கல்முனை நெடுஞ்சாலையிலுள்ள களுவாஞ்சிக்குடியில் ஞாயிற்றுகிழமை முற்பகல் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில், தற்கொலையாளியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த இருவரும் என 3 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் பெண்னொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த வேளை, குறுக்குவீதியொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் சைக்கிளொன்றுடன் காணப்பட்ட இளைஞரொருவரை அழைத்து விசாரனைக்குட்படுத்தியபோது
அந்நபர் தம் வசமிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.

தற்கொலையாளி இது வரை அடையாளம் காணப்படவில்லை எனக் கூறும் பொலிசார் விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதே குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானாவும் முன்வைத்துள்ளனர்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 பிப்ரவரி, 2008


பண்டாரவளையில் யாழ் இளைஞர் கடத்தல்

இலங்கையின் மலையகப் பகுதி
இலங்கையின் மலையகப் பகுதி

இலங்கையின் மலையகத்தில் பண்டாரவளைப் பகுதியில் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வெள்ளை நிற வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியில் அண்மைக்காலத்தில் இடம்பெறும் முதலாவது சம்பவம் இதுவென்பதால், அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதியில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

அப்பகுதியில் உள்ள கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காரைநகரைச் சேர்ந்த சடாச்சரன் திருவருள் (22 வயது) என்ற இளைஞர், வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து, பொலிஸாரிடமும் ஏனையவர்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் சார்பிலான ஊவா மாகாணசபையின் உறுப்பினரான அரவிந்தன் அவர்கள் பிபிசிக்குத் தெரிவித்தார்.

Posted in Arms, Attacks, Batticaloa, Blast, Bombs, Bus, Citizens, Colombo, dead, Eelam, Eezham, Explosions, Extremism, Highways, Hurt, Injured, LTTE, Northeast, Peace, Sri lanka, Srilanka, Suicide, Terrorism, Terrorists, UN, War | Leave a Comment »

Sri Lanka to ban Tamil Tigers, abrogate CFA, says Gotabhaya

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகல்

இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிட்ட இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், கள நிலவரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் பத்தாயிரம் தடவைகளுக்கும் மேலாக மீறியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அமைதி வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமா என்பதை பார்ப்பதற்காகத் தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் அதற்கு மாறாக தேசத்தின் பாதுகாப்பு பலவகையிலும் அச்சுறுத்தப் படுவதாகவும் ரம்புக்கவெல்ல கூறினார்.

ஒவ்வொருநாளும் இத்தகைய அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை இனிமேலும் நடைமுறைப் படுத்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான நடைமுறைகளை இன்றிலிருந்தே தாங்கள் துவங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.

 


கொழும்பில் குண்டுத்தாக்குதல்-நான்கு பேர் பலி 28 பேர் காயம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இராணுவத்தினர் பயணம் செய்த ஒரு வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் பலியாகி, இருபத்தி எட்டு பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

கொழும்பின் இதயப் பகுதியான கொம்பனி வீதியில் இராணுவ பஸ் வண்டியை இலக்கு வைத்து, இன்று-புதன் கிழமை காலை நடத்தப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுத்தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவரும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பெண். பதினொரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது பொதுமக்கள் பயணிக்கும் பஸ்வண்டியொன்றும் சேதமடைந்திருக்கிறது.

சம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
சம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

இராணுவத் தலைமையகம், விமானப்படைத்தலைமையகம் போன்ற பல்வேறு பாதுகாப்புக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையங்களிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள நிப்பொன் ஹோட்டல் சந்திக்கு அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வர் மிகவும் மோசமாக காயமடைந்திருப்பதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குண்டுவெடிப்பில் நிப்பொன் ஹோட்டலின் முன்புறம் மோசமாகச் சேதமடைந்திருக்கிறது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், ஆயுதப் படையினரும் குவிக்கப்பட்டதோடு, இந்தப்பகுதியின் போக்குவரத்து பல மணிநேரம் பாதுகாப்பு படையினரால் தடை செய்யப்பட்டிருந்தது.

குண்டு தாக்குதலுக்குள்ளான பேருந்து
குண்டு தாக்குதலுக்குள்ளான பேருந்து

இன்றைய சம்பவம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, இன்று கலை சுமார் 9.30 மணியளவில் நோய்வாய்ப்பட்டுள்ள இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ்வண்டியை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்த குண்டு தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் புலிகள் இதை மறுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த சக்திவாய்ந்த கிளேமோர் குண்டு நிப்பொன் ஹோட்டலின் குளிரூட்டும் இயந்திரத்தின் வெளிப்பாகத்தின் உட்புறத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்திருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பான புலன் விசாரணைகளை காவ்ல்துறையினர் ஆரம்பித்திருக்கிறார்கள்.

 


மகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்

நேற்று, செவ்வாய்க்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தினுள் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கி நபரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையையும், இன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையும் அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்
படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்

இது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், மகேஸ்வரனின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பொறுப்பானவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர் களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக்காண சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதேவேளை, மகேஸ்வரனின் பூதவுடல் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது பூதவுடலிற்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.

கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் குறித்த விவரங்கள்

மகேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் குறித்து, இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், பிபிசி தமிழோசையிடம் பின்வரும் விவரங்களை தெரிவித்தார்.

அவரது பெயர் வசந்தன் என்றும் அவரது தனிப்பட்ட விபரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதையும் பெறவில்லை என்றும் கூறிய கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், வசந்தன் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை வீட்டில் அவர் பயன்படுத்திய மைக்ரோ பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

வசந்தன் 1996 அம் ஆண்டு யாழில் இருந்து வெளியேறியதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளதாகவும், அரசுப் பணியில் இருந்துள்ளதாகவும், காவல்துறை பணியில் இருந்திருப்பார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்த கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், அனால் தமக்கு இது குறித்த காவல்துறை உயரதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

Posted in Agreement, Blasts, Bombs, Ceasefire, Ceylon, CFA, Colombo, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eelam Revolutionary Organisation, Eezham, EPRLF, EROS, Fight, Gotabaya, Gotabhaya, Liberation Tigers of Tamil Eelam, LTTE, Magesvaran, Mageswaran, Mahesvaran, Maheswaran, Murder, Parliamentary Tamil United Liberation Front, Peace, People's Liberation Organisation of Tamil Eelam, plot, PLOTE, Rajapaksa, Rajapakse, Sri lanka, Srilanka, Tamil, Tamil Eelam Liberation Organisation, TELO, Temple, Thimpu, Tigers, TULF, War | Leave a Comment »

Benazir Bhutto (1953-2007) – Former Pakistan Prime Minister Assassinated

Posted by Snapjudge மேல் திசெம்பர் 27, 2007

பேனசீர் புட்டோ படுகொலை

பாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமரான பேனசீர் பூட்டோ அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ராவல்பிண்டியில், தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மேலும் சுமார் 15 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தானின் பிரதமராக இரு தடவைகள் பதவி வகித்த பேனசீர் அவர்கள், ஜனவரி மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.

இது வரை இந்தக் கொலைக்கு யாரும் பொறுபேற்கவில்லை. கடந்த சில மாதங்களில் அவர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

பேனசீரைக் கொலை செய்தது தற்கொலை குண்டுதாரி என்கிறது போலீஸ்

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

பேனசீரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரி தன்னை வெடித்துக் கொள்ளும் முன்னர் அவரை கழுத்திலும் நெஞ்சிலும் சுட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மாலை 6.16 க்கு அவர் மரணமடைந்ததாக ராவல்பிண்டி மருத்துவமனையை மேற்கோள் காட்டி அவரது கட்சியைச் சேர்ந்த வாசிஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.

பேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் பலர் அழுதனர், பலர் ஆத்திரம் காரணமாக கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

 


பாகிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க ஐ நா வின் சிறப்புக் கூட்டம்

அவசரமாக கூடுகிறது ஐ நா வின் பாதுகாப்பு சபை
அவசரமாக கூடுகிறது ஐ நா வின் பாதுகாப்பு சபை

பேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, பாகிஸ்தானின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை உடனடியாக நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பேனசீர் புட்டோவின் படுகொலையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தக் கொலையை படுபாதகமான செயல் எனக் கூறியுள்ளார். இந்தக் கொலையானது பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் எனவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.

 


தமது கட்சிக்கும் பெரும் இழப்பு என்கிறார் நவாஸ் ஷெரீஃப்

பேனசீர் புட்டோவுடன் நவாஸ் ஷெரீஃப்
பேனசீர் புட்டோவுடன் நவாஸ் ஷெரீஃப்

பேனசீர் புட்டோ தனது அரசியல் எதிரியாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் தங்களிடையே ஒரு நல்லுறவு இருந்தது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்று பாகிஸ்தானின் மற்றுமொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.

கிறுஸ்துமஸ் தினத்தன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அழைத்து அவர் வாழ்த்துத் தெரிவித்து ஒரு பூங்கொத்து அனுப்பியிருந்தை நினைவு கூர்ந்த நவாஸ் ஷெரீஃப். மருத்துவமனையில் அவரது உடலைக் கண்டதும் தனது மனது பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மக்களின் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது எனவும் பேனசீரின் படுகொலையானது. அவரது கட்சிக்கு மட்டுமல்லாமல் தமது கட்சிக்கும் இது பெரிய இழப்பு என்றும், பாகிஸ்தான் நாட்டுக்கும் ஈடு செய்யமுடியாத் இழப்பு என்றும் தனது இரங்கல் செய்தியில் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் அரசியலிலேயே மிகவும் இருண்ட நாள் இதுதான் எனவும் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.


பன்னாட்டுத் தலைவர்கள் கண்டனம்

பேனசீர் புட்டோவின் கொலையை பன்னாட்டுத் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்

பேனசீர் புட்டோவின் படுகொலை அதிர்ச்சியூட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நில்லுறவுகளை மேம்படுத்த பேனசீர் எடுத்த முயற்சிகளை சுட்டிக் காட்டி அவருக்கு மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். அவரை ஒரு மிகச் சிறந்த தலைவர் எனவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்

இந்தப் படுகொலையை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானில் ஜனநாயக வழிமுறைகள் தொடருவதே பேனசீர் புட்டோவுக்கு செலுத்தும் அஞ்சலி என்று கூறியுள்ளார். புட்டோவின் கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜார்ஜ் புஷ் கோரியுள்ளார்.

அருவருக்கத்தக்க இந்தக் கொலையை மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதாக பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார். ஜனநாயகத்தில் வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு அதிபர் சர்கோசி
பிரெஞ்சு அதிபர் சர்கோசி

இந்தப் படுகொலையின் பின்னணியில் பாகிஸ்தானில் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும், பன்முகத்தன்மையுடன் கூடிய வகையில் தேர்தல் நடைபெற வேண்டியது அவசியமாகிறது எனவும் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார்.

 


பேனசீர் புட்டோ மறைவுக்கு மூன்று நாள் துக்கம் அணுசரிக்கப்படுகிறது

அதிபர் முஷாரஃப்
அதிபர் முஷாரஃப்

படுகொலை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் அறிவித்துள்ளார்.

நாட்டின் தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மக்கள் அமைதி காக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது எனவும் முஷாரஃப் கூறியுள்ளார். பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் ஒரு பெரிய தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது
பலபகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது

பாகிஸ்தானைய மக்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஒழிக்க உறுதிபூண வேண்டும் எனவும் பர்வேஸ் முஷாரஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, போலீசாரும் இராணுவமும் அதி உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்றுள்ளன. பிரதமரின் ஊரான ஜகோபாபாதில் பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.


some of the key events in her career:April 4 1979: Bhutto’s father, Zulfikar Ali Bhutto, is executed for the murder of a political opponent, two years after he was ousted as prime minister in a military coup.April 10 1986: Bhutto returns from exile in London to lead the Pakistan People’s party that her father founded.December 1 1988: Bhutto, aged 35, becomes the first female prime minister of a Muslim nation after winning parliamentary elections.August 6 1990: President Ghulam Ishaq Khan dismisses Bhutto’s government, citing corruption and a failure to control ethnic violence.October 19 1993: Bhutto takes the oath for a second term as prime minister.November 5 1996: President Farooq Leghari dismisses Bhutto’s second administration amid accusations of nepotism and undermining the justice system.April 14 1999: A court finds Bhutto guilty of corruption while she is out of the country. The conviction is later quashed, but Bhutto remains in exile.October 5 2007: President General Pervez Musharraf signs a corruption amnesty covering other cases against Bhutto, opening the way for her return and a possible power-sharing agreement.October 18 2007: Bhutto flies in to Karachi, where tens of thousands of supporters give her a rousing welcome amid tight security. Two bombs go off near her vehicle. More than 140 people are killed in the assassination attempt.

December 27 2007: Bhutto dies after a suicide bomb attack in Rawalpindi.


பேனசீர் புட்டோவின் வாழ்க்கை ஒரு பார்வை….

 

1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார் பேனசீர் புட்டோ. தெற்கு ஆசியாவின் பிரபலமான ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் பேனசீர் புட்டோ. அவரது தந்தையான ஜுல்ஃபிகர் அலி புட்டோ 1970 களில் மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக திகழ்ந்தார்.

இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சியை இழந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார். தனது தந்தை பதவியிலிருந்து நீக்கப்பட்டு தூக்கிலடப்பட்ட சம்பவங்களே அவரை அரசியலில் நுழைய வைத்தது எனக் கூறப்படுகிறது.

 

அவரது தந்தையை தூக்கிலிட்ட ஜியாவுல் ஹக் பேனசீரையும் சிறையிலடைத்தார். ஜியாவுல் ஹக் ஒரு விமான விபத்தில் பலியான பிறகு, நடைபெற்ற ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்று உலகளவில் ஒரு இஸ்லாமிய நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.

1988 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பொற்பேற்ற போது, நவீனத்துவமும், ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கும் ஒருவராக பேனசீர் புட்டோ பார்க்கப்பட்டார். தம்மை ஒரு மதச்சார்பற்றவராகவும், தீவிரவாதத்தை எதிர்ப்பவராகவும் தம்மை அவர் வெளிக்காட்டிக் கொண்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிக்க அரசியல் களத்தில் அவரது இந்தக் கொள்கைகள் அவருக்கு எதிராகச் செல்லக் கூடும் என 1979 ஆண்டிலேயே கூறப்பட்டது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.

 

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார்.

இவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, கடந்த அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார்.

 

ஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.

நாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.

 

தனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது.

அவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது.

மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

 


சிதைந்த கனவுகள்! துர்மரணம் என்பது சில குடும்பங்களைப் பிடித்த சாபக்கேடா அல்லது சில நாடுகளின் துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. குறிப்பாக, தெற்காசியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் எதுவுமே படுகொலைகளுக்கும், கோரமான விபத்துகளுக்கும் முக்கியமான தலைவர்களைப் பலி கொடுத்த சரித்திரத்திற்கு விதிவிலக்கல்ல. இந்த வரிசையில் நேற்றைய அதிர்ச்சி பேநசீர் புட்டோவின் படுகொலை!தந்தை சுல்ஃபிகர் அலி புட்டோவைத் தூக்கில் போட்டது முதலே அந்தக் குடும்பத்தை மரணம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. பேநசீரின் சகோதரர் ஷாநவாஸ், பிரான்ஸ் நாட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்றால், அவரது இன்னொரு சகோதரர் முர்சாவும், பேநசீர் பிரதமராக இருக்கும்போது 1996-ல் கொலை செய்யப்பட்டு இறந்தார். இப்போது சகோதரியின் முடிவு…பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தனிப்பட்ட செல்வாக்குடன் திகழ்ந்த புட்டோவின் குடும்பம், நிச்சயமாக பாகிஸ்தானின் சரித்திரத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தது என்பதை மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக, பேநசீரின் பதவிக்காலம் பல ஊழல் குற்றச்சாட்டுகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் சந்தித்தன என்றாலும், வெளியுறவு விஷயத்தில் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டியது என்பதை மறுக்க முடியாது. சமீபகாலத்தில் இந்திய – பாகிஸ்தான் உறவு மிகவும் சுமுகமாக இருந்தது பேநசீர் புட்டோ பிரதமராக இருந்தபோது மட்டும்தான்.பர்வீஸ் முஷாரபின் வளர்ச்சியும், அவர் ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரத்தை பாகிஸ்தானில் நிலைநிறுத்திய விதமும் பேநசீர் புட்டோவை வெளிநாடுகளுக்குத் துரத்தியது என்பது மட்டுமல்ல, அவரது அரசியல் எதிரியான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை நாடு கடத்தவும் செய்தது. பஞ்சாப் மாகாணத்தில் செல்வாக்குப் பெற்ற நவாஸ் ஷெரீபும், சிந்து மாகாணத்தில் செல்வாக்குடைய பேநசீரும் ஆரம்பத்திலேயே கைகோர்த்து செயல்பட்டு ஜனநாயகத்துக்குக் குரல் கொடுத்திருந்தால், நிச்சயமாக முஷாரபின் நிலைமை பலவீனப்பட்டிருக்கும்.ஆனால், அதை விட்டுவிட்டு, எதிரியின் எதிரி நண்பன் என்று முஷாரபுடன் பேநசீர் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதும், முஷாரப் அதிபராகத் தொடர்வது, தான் பிரதமராக வெற்றி பெறுவது என்று நடத்திய பேரமும்தான் இப்போது அவரது உயிருக்கே உலைவைக்கும் சம்பவத்துக்கு அச்சாரம் போட்டன. பேநசீர், முஷாரபுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று பாகிஸ்தானில் பலர் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியவில்லை.

சமீபகாலமாக, பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள் தீவிரவாதிகளின் கரங்களைப் பலப்படுத்தி இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. முஷாரபை அமெரிக்காவின் கைப்பாவை என்று தீவிரவாதிகள் கருதுவதில் எப்படி தவறு காண முடியும்?

அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தி இருக்கும் தகவலின்படி, தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு சுமார் ஐந்து பில்லியன் டாலர்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உயிரிழந்திருக்கின்றனர். இவையெல்லாம், பாகிஸ்தானிய மக்கள் மத்தியில் முஷாரப் மீது எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருந்தால் ஆச்சரியமில்லை.

முஷாரபின் ஆதரவாளராகி விட்டார் என்கிற கோபம் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டதன் விளைவு இந்தப் படுகொலையா அல்லது தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறி இப்போது தன்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டார் பேநசீர் என்கிற முஷாரபின் கோபத்தின் விளைவுதான் இந்தப் படுகொலையா என்பது தெரியவில்லை. பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் படுகொலைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்கப்படுவது கிடையாது!

அடுத்த இலக்கு, முஷாரபா அல்லது நவாஸ் ஷெரீபா? அதுவும் தெரியாது. ஒன்று தெளிவாகத் தெரிகிறது~பாகிஸ்தானில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. இன்னொன்றும் தெரிகிறது~அதை அமெரிக்கா வேடிக்கை பார்த்து ரசிக்கிறது.

சிதைந்திருப்பது, மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல; முகம்மது அலி ஜின்னாவின் கனவுகளும்~அதுதான் வேதனை!


துணிச்சல் மிக்க பெனசிரின் சோக முடிவு!இஸ்லாமாபாத் :இஸ்லாமிய நாடுகளிலேயே மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனசிர் புட்டோ (54) நேற்று ராவல்பிண்டியில் படுகொலை செய்யப்பட்டார். அரசியலில், துணிவு மிக்கவராக விளங்கிய அவரது வாழ்க்கை சோகமாக முடிந்துவிட்டது.பெனசிரின் தந்தையும் பாகிஸ்தானின் அதிபருமான ஜுல்பிகார் அலி புட்டோவைப் போலவே இவரும் பாகிஸ்தான் அரசியலில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். ஜுல்பிகார் துõக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். பெனசிரின் இரு தம்பிகளும் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது, பெனசிர் தற்கொலை படையினரின் குண்டுவெடிப்புக்கு பலியானார்.1953 ஜூன் 21ம் தேதி கராச்சியில் பிறந்த பெனசிர் தொடக்க கல்வியை பாகிஸ்தானிலும், கல்லுõரிப்படிப்பை அமெரிக்காவின் ஹார்வர்டு (1969), பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு (1979) பல்கலைகழகங்களில் நிறைவு செய்தார். 1979ம் ஆண்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அவர் தந்தை துõக்கிலிடப்பட்டார்.இதன் பின்னணியில் இருந்தவர் அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்.கல்லுõரிப்படிப்பை நிறைவு செய்து விட்டு பாகிஸ்தான் திரும்பிய பெனசிருக்கு வீட்டுச்சிறை காத்திருந்தது.ஜியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு அவர் துணிச்சலுடன் தலைமையேற்றார். அவரது தந்தை துõக்கிலிடப்படும் வரை அவரது சிறைக்காவல் தொடர்ந்தது. 1984ல் பிரிட்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். பிரிட்டனிலிருந்த போதே பாகிஸ்தானின் மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். எனினும், அதிபர் ஜியா உல் ஹக்கின் மறைவுக்கு பின்னரே அவரால் பாகிஸ்தான் திரும்ப முடிந்தது.1987ல் ஆசிப் அலி ஜர்தாரியை திருமணம் செய்து கொண்டார். அதிபர் ஜியா உல் ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர், நடந்த 1988 தேர்தலில் புட்டோவின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.35வது வயதில் பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார்.

அப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 20 மாதங்களிலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார். 1993ல் இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார். 1996ல் அவரது ஆட்சி மீண்டும் கலைக்கப்பட்டது. 1997ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது கணவர் சிறையிலடைக்கப்பட்டதால், 1998ம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி பெனசிர் துபாய் சென்றார். இருமுறை பிரதமராக பெனசிர் பதவி வகித்துள்ளார்.

மக்களை கவர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்த அவர், இரண்டாவது முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளால், அவர் செல்வாக்கில் கொஞ்சம் சரிந்தது. 1999ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. என்றாலும், அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் நீதிபதி இடையே நடந்த உரையாடலின் ஆடியோ டேப், நவாஸ் கோர்ட்டை நிர்பந்தித்தார் என்பது தெரியவந்தது.1999ல் முஷாரப் அதிகாரத்தை கைப்பற்றியதால் பெனசிர், நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

முஷாரப்பின் ஆட்சியை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வந்தார் பெனசிர். 2004ல் பெனசிருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் கொலை, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெனசிரின் கணவர் ஜர்தாரியை முஷாரப் விடுவித்தார். பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதில் பெனசிர் உறுதியாக இருந்தார். பெனசிர் முஷாரப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி, மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

அவர் நாடு திரும்பிய போது நடந்த பேரணியிலும் குண்டு வெடித்தது. அதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர், நேற்று நடந்த பேரணியில் கொல்லப்பட்டுவிட்டார்.1972ம் ஆண்டு காஷ்மீர் பிரச்னையின் போது சிம்லா உடன்படிக்கைக்காக இந்தியா வந்த தந்தையுடன் முதன்முறையாக பெனசிர் இந்தியா வந்தார். அதன் பின் இருமுறை இந்தியா வந்திருக்கிறார்.2008 தேர்தலில் வென்று மீண்டும் அரியாசனம் ஏறிவிடலாம் என்ற அவரது கனவு தகர்ந்துவிட்டது. இன்னொரு அரசியல் படுகொலை நடந்துவிட்டது.

புட்டோ குடும்பத்தினரை துரத்தும் கொடூர மரணங்கள் :

பெனசிரையும் சேர்த்து, புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர், நேற்று நடந்த தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் புகழ் பெற்ற புட்டோ குடும்பத்தினர் இயற்கைக்கு மாறான வகையில் மரணமடைவது வழக்கமாகி விட்டது. பெனசிரையும் சேர்த்து புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர். முதலாவதாக பெனசிரின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ஜுல்பிகார் அலி புட்டோ, கடந்த 1979ல் துõக்கிலிடப்பட்டார்.

புட்டோ விஷயத்தில் கருணை காட்டும்படி உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை துõக்கி எறிந்துவிட்டு, அப்போதைய தற்காலிக அதிபர் ஜியா உல் ஹக், புட்டோவை துõக்கிலிட உத்தரவிட்டார். சர்வதேச நாடுகளை உலுக்கிய இச்சம்பவத்தின் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்கும் முன், புட்டோ குடும்பம் மீண்டும் ஒரு மரணத்தை எதிர்கொண்டது. புட்டோ இறந்து ஒரு ஆண்டுக்குள் பெனசிரின் சகோதரர் ஷா நவாஸ் மர்மமான முறையில் பிரான்சில் கொல்லப்பட்டார்.

மூன்றாவதாக கடந்த 1996ல் பெனசிரின் மற்றொரு சகோதரர் மிர் முர்தாஷா கொலை செய்யப்பட்டார். பெனசிர் பிரதமராக இருக்கும்போதே இந்த துயரம் நிகழ்ந்தது.தற்போது, பெனசிரும் கொல்லப்பட்டுள்ளார். புட்டோ குடும்பத்தினரை கொடூர மரணங்கள் தொடர்ந்து துரத்தி வருவது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கொலைக்கார பகுதி :

பெனசிர் கொல்லப்பட்ட பகுதி, பாகிஸ்தான் வரலாற்றில் கொலைக்கார பகுதியாகவே கருதப்படுகிறது.ராவல்பிண்டி நகரில் லியாகத் பாக் பூங்கா பகுதி அருகே தான் பெனசிர் நேற்று மாலை, சுடப்பட்டு இறந்தார். பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் இந்த இடத்தில் தான் 1951ம் ஆண்டு அக்டோபரில் சுடப்பட்டு இறந்தார். இந்த பூங்கா அருகில் தான், பெனசிரின் தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ துõக்கிலிடப்பட்டார்.


பேநசீர் படுகொலைராவல் பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பேநசீர் புட்டோவும், இதர தொண்டர்களும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் கதறி அழுகிறார் தொண்டர். (இடது) பேநசீர் புட்டோ.இஸ்லாமாபாத்,டிச.27: பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான பேநசீர் புட்டோ (54) ராவல்பிண்டியில் வியாழக்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறிய அவரை, சதிகாரர்கள் மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றனர்.பேநசீருக்குக் காவலாக வந்தவர்கள் தங்களைப் பிடித்துவிடக் கூடாது என்று அவர்களில் ஒருவர் மனித குண்டாகச் செயல்பட்டு இடுப்பில் கட்டிய வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.அதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். மனித வெடிகுண்டாக வந்தவனின் தலை 70 மீட்டர் தொலைவுக்கும் அப்பால் போய் விழுந்தது.

ராவல்பிண்டியில் லியாகத் பாக் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேநசீர் பேசினார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறச் சென்றபோது, மர்ம நபர்கள் பேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர் குனிந்து கொண்டே ஓடிச் சென்று காரில் ஏற முயன்றார்.

அவரது கழுத்திலும் மார்பிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. உடனே ராவல்பிண்டி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். மாலை 6.46 மணிக்கு அவர் இறந்தார்.

கடந்த அக்டோபர் 19-ம் தேதி கராச்சியில் பேநசீர் புட்டோ ஊர்வலமாகச் சென்ற போது அவரது கார் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.

அந்தத் தாக்குதலில் அவர் தப்பிவிட்டார். அப்போது 140 பேர் பலியானார்கள்.

இரண்டாவது முறையாக ராவல்பிண்டியில் நடந்த தாக்குதலில் பேநசீர் பலியாகிவிட்டார். லியாகத் பாக் என்ற இடத்தில்தான் பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலிகான் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அந்த இடத்துக்குச் சற்று தொலைவில் உள்ள இடத்தில்தான், பேநசீரின் தந்தை சுல்பிகர் அலி புட்டோ, தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.

பேநசீரின் உயிருக்கு மதப்பழமைவாதிகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில்கூட அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க முஷாரப் மறுத்துவிட்டார்.

கூடுதலாக மெய்க் காவலர்களும், செல்போன் உள்ளிட்ட நவீன எலக்ட்ரானிக் சாதனங்களைச் செயலிழக்க வைக்கும் ஜாமர் போன்ற கருவிகளும் உடன் இருந்திருந்தால் பேநசீருக்கு இந்த ஆபத்து வந்திருக்காது என்று அவருடைய ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டினர்.

லண்டனிலிருந்து வந்தார்: பிரிட்டனில் பல ஆண்டுகள் தங்கியிருந்த பேநசீர், தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தானுக்கு வந்தார்.

அவர் வந்தபிறகு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. தீவிரவாதிகள் அவரைக் கொல்லப்போவதாக அடிக்கடி மிரட்டி வந்தனர். அவர்கள் சொன்னதை செய்து முடித்துவிட்டனர்.

கடைசி 46 நிமிடங்கள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, ராவல் பிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்றுவிட்டு, மாலை 5.30 மணி அளவில் புறப்படத் தயாரானார்.

அவர் காரில் ஏறும் தறுவாயில் அவரை நோக்கி இருவர் ஏ.கே.47 ரகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பேநசீரின் தலை மற்றும் மார்புப் பகுதி கடுமையாகத் துளைக்கப்பட்டன.

இதனால் அவர் கீழே சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவைச் சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் மரணமடைந்ததாக 6.16 மணிக்கு அறிவிக்கப்பட்டது.


பெனாசிர் கொலை: அல்-கொய்தா பொறுப்பேற்புஇஸ்லாமாபாத்: அல் கொய்தா அமைப்பை அழிக்க பெனாசிர் பூட்டோ முயன்றதால், நாங்கள்தான் அவரைக் கொன்றோம் என அல் கொய்தா அமைப்பு கூறியுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று ராவல்பிண்டி அருகே அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அந்த இருவரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பெனாசிருக்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் இருந்ததால் யார் அவரைக் கொன்று என்பது தெரியாமல் இருந்தது.இந்த நிலையில் அல் கொய்தா அமைப்பு பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.

இத்தாலியில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தை இன்று தொடர்பு கொண்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அல் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பெனாசிர் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பெனாசிர் பூட்டோ அமெரிக்காவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். மேலும் எங்களது அமைப்பையும் ஒழித்துக் கட்ட அவர் தீவிரமாக இருந்து வந்தார்.

இதனால்தான் அவரைக் கொல்ல நேரிட்டு விட்டது. அல் கொய்தா அமைப்பின் 2வது நிலை தலைவரான அல்ஜவாஹிரிதான் பெனாசிர் பூட்டோவைக் கொல்லும் முடிவை எடுத்தார். இதையடுத்து திட்டத்தை நிறைவேற்ற தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு பிரிவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அல் யாசின் கூறியுள்ளார்.

தான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதை அல் யாசின் தெரிவிக்கவில்லை என்று இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எப்.பி.ஐ:

இதற்கிடையே பெனாசிரைக் கொல்ல அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடனும், அந்த அமைப்பின் நம்பர் டூ ஆன அய்மான் அல் ஜவாஹிரியும் கடந்த அக்டோபரிலேயே திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

இன்று உடல் அடக்கம்:

இதற்கிடையே, பெனாசிரின் உடல் இன்று அவரது சொந்த ஊரான சிந்து மாகாணம், லர்ஹானாவில் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அங்கு அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.

பாகிஸதானில் இன்று 2வது நாளாக பெரும்பாலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடருகின்றன. பல ஊர்களில் கலவரம் வெடித்துள்ளது.


பேநசிரின் உடலடக்கம்

படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் பேநசிர் பூட்டோவுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நாட்டின் தென்பகுதியிலுள்ள லார்கானாவில் பூட்டோவின் குடும்பக் கல்லறை தோட்டத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

பூட்டோவின் சடலப்பெட்டி புதைக்கும் இடத்திற்கு எடுத்துவரப்பட்டபோது, ஏராளமான ஆதரவாளர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

மறைந்த தமது தலைவியின் நினைவாக கோஷங்களை எழுப்பிய அவர்கள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபே, அவரின் மறைவுக்குக் காரணம் என்று பழிசுமத்தினர்.

மற்றொரு முன்னாள் பிரதமரான தனது தந்தை சுல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு அருகில் பேநசிர் அடக்கம் செய்யப்பட்டார்.

நேற்று வியாழக்கிழமை ராவல்பிண்டியில் ஒரு பிரச்சார கூட்டத்தை முடித்துச் செல்கையில் பேநசிர் பூட்டோ கொல்லப்பட்டிருந்தார்.


பேநசிரின் கொலையை அடுத்து பெரும் வன்முறை

கார்களும், கடைகளும் அரசாங்கக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன
கார்களும், கடைகளும் அரசாங்கக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன

பேநசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் எங்கிலும் நடந்த வன்செயல்கள் மற்றும் மோதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அவரது முக்கிய ஆதரவுத் தளமான சிந்து மாகாணத்திலேயே பெரும்பாலானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பூட்டோ அவர்களின் இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுவதாக, மாகாண உட்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஒழுங்கை நிலைநிறுத்த உதவுமாறு சிந்து மாகாண அரசாங்கம் இராணுவத்தைக் கோரியுள்ளது.

கடைகள், கார்கள் மற்றும் அரசாங்கக் கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதாக, கராச்சியில் உள்ள ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாடெங்கிலும் பல நகரங்கள் கிட்டத்தட்ட ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.


பாகிஸ்தானில் தேர்தல் நடக்குமா?

 

பாகிஸ்தானில் ஜனவரி எட்டாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்களை தள்ளிப்போட வேண்டும் என்று இப்போதே தீர்மானிப்பது கடினம் என்று அதிபர் முஷாரஃப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் கருத்தொருமித்த முடிவொன்றை எடுக்க முடியும் என்று காபந்து பிரதமர் முகமது மியான் சூம்ரோ கோரியுள்ளார். கொல்லப்பட்ட பேநசிர் பூட்டோதான் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தவர்.

இனியும் தேர்தலில் போட்டியிடுவதா என்பது பற்றி பரிசீலித்துவருவதாக அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறுகிறது. பூட்டோவின் படுகொலை தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவரது முக்கிய அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷெரிஃப் கூறியுள்ளர்.

தனது கட்சி தேர்தல்களைப் புறக்கணிக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நவாஸ் ஷெரிஃப் தேர்தல் நடந்தாலும் அதில் எந்த நம்பகத் தன்மையும் இருக்காது என்று இன்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பாகிஸ்தான் எதிர்காலம்? – நிபுணர் கருத்து

 

பேநசிர் பூட்டோ அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எதிர்காலம் குறித்தும், எதிர்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்தும் பிபிசியின் கராச்சி செய்தியாளர் இலியாஸ்கான் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

அடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இடதுசாரி கொள்கைகளையுடைய ஒரு கட்சியாகவே பார்க்கப்படுவதாக கூறும் இலியாஸ்கான், அதேநேரம் புட்டோ குடுமபத்தின ருடையே பெயரும் பலவகையில் அந்தக் கட்சியோடு இணைத்துப் பார்க்கபடுவதாகவும் தெரிவிக்கிறார்.

பூட்டோ குடும்பத்தின் கடைசி முக்கிய உறுப்பினரும் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி படிப்படியாக சிதறுண்டு போகக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஏனெனில், அந்தக் கட்சியில் பூட்டோவுக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்களிடம் பேநசிருக்கு உண்டான ஒரு ஆளுமையோ அல்லது பாகிஸ்தான் முழுவதும் மக்களால் ஏற்கப்படக்கூடிய ஒரு பொதுத்தன்மையோ இல்லை என்றும், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற கடைசி அரசியல் தலைவர் பேநசிர் பூட்டோவாகத்தான் இருக்கக்கூடும் என்றும் இலியாஸ் கூறுகிறார்.

பேநசிரின் திடீர் மறைவு, பாகிஸ்தான் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலியாஸ்கான் கூறுகிறார். .

தற்போதைய நிலையில் பேநசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள், தேர்தல்கள் தள்ளிவைக்கப்படுவதைத்தான் விரும்புவார்கள் என்றும், தற்போதைய நிலையில் அநேகமாக எல்லா எதிர்கட்சிகளுமே அதையே விரும்புவதாகவும், இலியாஸ் தெரிவிக்கிறார்.

அதேநேரம், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை பொறுத்த வரையில், தேர்தல்களை விரைவில் நடத்தி ஒரு ஆட்சியை ஏற்படுத்தவே விரும்புவார் என்கிறார் இலியாஸ்கான். ஒரு தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், தனது பிரச்சினைகளை குறைக்க அவர் முயலக்கூடும் என்றும் இல்யாஸ் கருத்து தெரிவித்தார்.

ஆனால், பாகிஸ்தானின் அட்வகேட் ஜெனரல் நாட்டில் தற்போது இருக்கும் சூழல் தேர்தல்கள் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என ஏற்கெனெவே குறிப்புணர்த்தியிருப்பதையும் இலியாஸ்கான் சுட்டிக்காட்டுகிறார்.

————————————————————————————————————————————————————-
பேநசீருக்குப் பின் யார்?

இஸ்லாமாபாத், டிச. 28: பேநசீர் புட்டோவுக்குப் பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியை தலைமையேற்று வழிநடத்தி செல்வது யார் என்ற கேள்வி பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.

வியாழக்கிழமை மாலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பேநசீர் புட்டோ, பாகிஸ்தான் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.

இரண்டு முறை பிரதமராக பதவி வகித்த அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீவிரவாதிகள் குறுக்கே புகுந்து அவரது வாழ்க்கையில் விளையாடி விட்டனர்.

அவரது மறைவு சோகம் ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அடுத்த தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது அக்கட்சியினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

பேநசீரின் மூன்று குழந்தைகளும் கட்சிப் பொறுப்பை ஏற்கும் வயதை எட்டவில்லை என்பதால் வருங்காலத்தில் மட்டுமே அவர்கள் அரசியலில் நுழைய வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

பேநசீரின் உடன் பிறந்த வாரிசான சனாம் புட்டோ அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். எந்த சூழ்நிலையிலும் அவர் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், பேநசீரின் வலது கரம் என்று அழைக்கப்பட்ட மக்தூம் அமின் ஃபாஹிம், பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, மூத்த வழக்கறிஞர் அஜாஸ் ஹசன் ஆகியோரின் பெயர்கள் கட்சித் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன.

மக்தூம் அமின் ஃபாஹிமுக்கு கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு உள்ளது.

ஆனால் பேநசீர் போன்று அவர் கவர்ச்சிகரமான தலைவர் அல்ல. பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியவர் என்பதால் அவருக்கும் மக்கள் மத்தியில் நன்மதிப்பு இல்லை.

எனினும் பேநசீரின் கணவர் என்ற அடிப்படையில் அவர் கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக முன்நிறுத்தப்பட்டாலும் வழக்கறிஞர் அஜாஸ் ஹசனை புதிய தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று அனுபவம்வாய்ந்த கட்சித் தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராக உள்ள அஜாஸ் ஹசன் அதிபர் முஷாரபுக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டவர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரி பதவி நீக்கம் செய்யப்பட்டபோது

அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.

பேநசீருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டார் அஜாஸ் ஹசன். எனினும் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், படித்தவர்கள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது.

இதனால் அஜாஸ் ஹசன், அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சியின் புதிய தலைவர் யார் என்பது விரைவில் தெரிந்து விடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

————————————————————————————————————————————————————-
“பேநசீர் கொலையில் ஐஎஸ்ஐ-க்கு பங்கு’

லண்டன், டிச. 28: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை செய்யப்பட்டதில் பாகிஸ்தானின் உளவுப் படை மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு முக்கிய பங்குண்டு என்று பிரிட்டனிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவித்துள்ளன.

இஸ்லாமிய பழமைவாதிகள், பேநசீரை மேற்கத்திய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பவர் என்றும், அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படுபவர் என்றும் கருதினர். இதனாலேயே அவரது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்தனர்.

1970-ம் ஆண்டுகளிலிருந்தே இத்தகைய இஸ்லாமிய பழமைவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

கடந்த அக்டோபர் மாதம் பேநசீர் நாடு திரும்பியபோதே, அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதற்குப் பிறகு அவருக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும் பேநசீர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஆட்டை வெட்டுவதைப் போல கொலை செய்யப் போவதாக மிரட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வட மேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளன. இதில் ஒன்று பைதுல்லா மெஹ்சூத் விடுத்ததாகும். மற்றொறு மிரட்டலை ஹாஜி ஓமர் விடுத்திருந்தார்.

இத்தகைய சூழலில் பேநசீருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க அரசு தவறிவிட்டது என்றும் அந்த பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
————————————————————————————————————————————————————-

தேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கவுள்ளது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் நடக்கவிருந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

பெனசீர் பூட்டோ படுகொலையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால், தேர்தல் ஏற்பாடுகளில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், ஒன்பது தேர்தல் அலுவலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல் போன்றவை நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பெனசீர் பூட்டோவின் ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் கடந்த இரு தினங்களில் குறைந்தப்பட்சம் முப்பத்தெட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பை நிலை நிறுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிபர் பர்வேஷ் முஷாராப் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, தேர்தலை புறக்கணிப்பது குறித்து பெனசீர் பூட்டோவின் அவர்களின் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் நாளை ஆலோசிக்கவுள்ளனர்.

 


பெனசீர் பூட்டோ கொல்லப்பட்ட விதம் குறித்த அரசின் விளக்கத்தை பூட்டோ கட்சி நிராகரிப்பு

படுகொலை செய்யப்பட்ட பெனசீர் பூட்டோ
படுகொலை செய்யப்பட்ட பெனசீர் பூட்டோ

பெனசீர் பூட்டோ உயிரிழந்த விதம் குறித்து பாகிஸ்தான் அரசு தந்த விளக்கத்தை பூட்டோவின் கட்சியினர் நிராகரித்துள்ளனர். பூட்டோவை பாதுகாக்கத் தவறிய தமது பிழையை மூடிமறைக்க அரசாங்கம் செய்யும் கேலிக்கூத்தானது என பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் கூறியுள்ளனர்.

பூட்டோவின் தலை காரின் மேற்கூரையில் மோதியதில்தான் அவர் உயிரிழந்தார் என்று அரசாங்கம் கூறுகிறது ஆனால் பூட்டோவின் கழுத்தில் குண்டு துளைத்த காயத்தைப் நேரடியாகப் பார்த்ததாக அவரது கட்சி சார்பாக பேசவல்லவர் கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்று அரசாங்கம் வலியுறுத்துவதற்கு ஆதரவாக திட்டவட்டமான தடயம் எதுவும் இல்லை என்று கட்சிப் பிரமுகர்கள் கூறினர்.

பூட்டோவின் கொலையில் அரசாங்கத்துக்குப் பங்குள்ளது என்று குற்றம்சாட்டிய தாலிபான் ஆதரவுத் தலைவர் பைதுல்லா மெஹ்சூத் சார்பாகப் பேசவல்ல ஒருவர், தங்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 


துபைக்குச் சென்றார் பேநசீர் மகன்

கராச்சி, ஜன. 1: படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் மகன் பிலாவல் பாகிஸ்தானிலிருந்து துபைக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.

பேநசீர் கொல்லப்பட்டதை அடுத்து பிலாவல் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் சகோதரிகள் பக்தவார், ஆசிஃபா ஆகியோரும் துபைக்குச் சென்றனர்.

துபையில் சில நாள்கள் பிலாவல் தங்கியிருப்பார். பின்னர் அங்கிருந்து லண்டன் செல்கிறார். பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடருவதற்காக அவர் அங்கு செல்கிறார்.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 1999-ல் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பேநசீர். அப்போதிலிருந்து அவர் தனது குடும்பத்தாருடன் துபையில் வசித்து வந்தார்.

பேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பேநசீரின் கணவர் ஜர்தாரி மகன் பிலாவல் மற்றும் 2 மகள்களுடன் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.

19-வயதாகும் பிலாவல் பேநசீரைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் படிப்பை முடிப்பதற்காக தற்போது பிரிட்டன் செல்கிறார்.

தலைவராக நியமிக்கப்பட்டாலும் இன்னும் 6 ஆண்டுகள் கழித்துத்தான் பிலாவல் தேர்தலில் போட்டியிட முடியும்.

தம்மை அடுத்து கணவர் ஜர்தாரிதான் கட்சியின் தலைவர் என்று பேநசீர் உயிலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜர்தாரி தமது மகன் பிலாவலை தலைவராக அறிவித்துவிட்டார். அவர் தற்போது இணைத் தலைவராக உள்ளார்.

பேநசீர் படுகொலையால் ஏற்பட்டுள்ள அனுதாப அலையை தங்கள் கட்சிக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே மகனை தலைமைப் பொறுப்புக்கு ஜர்தாரி நியமித்துள்ளார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.
—————————————————————————————————————————————————————-

பேநசீர் படுகொலை: அமைச்சர் திடீர் பல்டி

இஸ்லாமாபாத், ஜன. 1: பேநசீர் புட்டோ படுகொலை குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் நவாஸ் கான் மன்னிப்பு கேட்டார் என்று செய்தி வெளியானது.

பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் “இதை மன்னித்து மறந்துவிடுங்கள்’ என்று கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது.

ஆனால் அமைச்சர் நவாஸ் கான் இதை மறுத்துள்ளார். பேநசீர் படுகொலை தொடர்பாக அரசின் நிலையில் எந்த மாற்றமுமில்லை. கார் மேற்கூரையில் இருந்த இரும்புக் கம்பியில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதுதான் தற்போதும் அரசின் நிலையாக இருக்கிறது என்றார் அவர்.

பேநசீர் படுகொலை குறித்து உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சீமா வெளியிட்ட செய்தியில், பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளுக்காகத்தான் மன்னிப்பு கேட்டேன் என்றும் அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————————-
பேநசீர் படுகொலை பற்றி தவறான தகவல்: பகிரங்க மன்னிப்பு கேட்டது பாகிஸ்தான் அரசு

இஸ்லாமாபாத், ஜன. 1: குண்டு வெடிப்பின்போது பேநசீர் புட்டோ காரின் மேல்பகுதியில் உள்ள இரும்புக் கம்பி அவரது தலையில் பலமாக மோதி, தலைக் காயத்தின் காரணமாகவே அவர் இறந்தார். அவர் மீது துப்பாக்கிக் குண்டடிக் காயம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு திரும்பத் திரும்பக் கூறி வந்தது.

ஆனால் தற்போது அந்த நிலையில் இருந்து “பல்டி’ அடித்துள்ளது. நாங்கள் அப்படிச் சொன்னது தவறு. அதற்காக மன்னித்துவிடுங்கள். அவசரத்தில் அதுபோன்ற தவறு நடந்துவிட்டது. அதை விட்டுவிடுங்கள் என்று உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ் கான் கூறினார்.

உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்தான் ஜாவித் இக்பால் சீமாதான் அதுபோன்று தவறான தகவலைக் கூறிவிட்டார் என்றும் அமைச்சர் சமாதானப் படுத்த முயன்றார்.

இஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் அரசுத் தரப்பில் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் மக்கள் கட்சித் தலைவருமான பேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை ராவல்பிண்டியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக முதலில் செய்தி வெளியானது. ஆனால் பின்னர் அரசுத் தரப்பில் வேறு விதமான தகவல் கூறப்பட்டது. குண்டு வெடிப்பின்போது காரில் உள்ள இரும்புக் கம்பி பேநசீரின் தலையில் பலமாக மோதி மண்டை ஓடு உடைந்து இறந்தார் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவித் இக்பால் சீமா கூறினார்.

இதற்கு பாகிஸ்தானிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பேநசீரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுடும் புகைப்படங்களும் விடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன. மேலும் பேநசீரின் உறவினர்களும் மக்கள் கட்சித் தலைவர்களும் அரசு வெளியிட்ட செய்தி தவறானது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குண்டடிக் காயம் இருந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் வெளியிட்டனர்.

இதனால் பாகிஸ்தான் அரசுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்களைக் கூட்டி அவர்கள் முன்னிலையில் உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ்கான் அரசு சார்பில் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

உள்துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்டாலும், பிரதமர் முகமது மியான் சூம்ரூ, உள்துறை அமைச்சர் செய்தித்தொடர்பாளர் சீமாவுக்கு ஆதரவாகப் பேசினார்.

படுகொலை குறித்து தன்னிடம் சொல்லப்பட்ட செய்தியைத்தான் சீமா வெளியிட்டார். இதில் வேறு காரணம் ஏதுமில்லை என்றார் பிரதமர்.

நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். உங்களுக்கு கிடைத்துள்ள எல்லா ஆதாரங்களையும் கொடுத்து உதவுங்கள் என்று சூம்ரூ கூறினார்.

ஆனால் அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் சமாதானம் அடையவில்லை. அவர்கள் பிரதமரையும் உள்துறை அமைச்சர் நவாஸ் கானையும் கேள்விக்கணைகளால் துளைத்தனர்.

பேநசீர் மரணம் குறித்து டாக்டர்கள் அளித்த மருத்துவ அறிக்கையில் பல சந்தேகங்களை எழுப்பினர். மேலும் டாக்டர்கள் அளித்த அறிக்கையில் தலைக்காயம் என்ன காரணத்தால் ஏற்பட்டது என்று கூறப்படவில்லை. அப்படியிருக்கையில் இரும்பு கம்பி மோதியது என்று சீமா எப்படிக் கூறினார் என்றும் கேட்டனர்.

பேநசீர் பயணம் செய்த கார் குண்டு துளைக்காத கார், துப்பாக்கி குண்டுபட்டோ அல்லது குண்டு வெடித்தாலோ அந்த கார் சேதம் அடையாது.

பேநசீர் காரின் உள்ளே இருக்கும் வரை அவருக்கு எந்த ஆபத்தும் நேராது. ஆனால் பேநசீர் காரின் மேல்பகுதியில் உள்ள திறந்தபகுதி வழியாக எட்டிப்பார்த்தபோதுதான் சுடப்பட்டிருக்கிறார் என்று பதிலளித்தார் அமைச்சர் நவாஸ்கான்.

விசாரணைக்காக வெளிநாட்டு உதவியைப் பெறுவீர்களா என்று கேட்டபோது, நமது புலனாய்வு அதிகாரிகள் திறமையானவர்கள். அவர் இதை திறம்படச் செய்வார்கள் என்று பிரதமர் சூம்ரூ கூறினார்.

துப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு: இதனிடையே பேநசீரை நோக்கிச் சுடும் பயங்கரவாதி குறித்து துப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்படும்.

பேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இரு நபர்களின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. துப்புக் கொடுப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————————-

—————————————————————————————————————————————————————-

Posted in Assassinations, Benazir, Bhutto, Bombs, Campaign, dead, Elections, Killed, Murder, Musaraf, Musaraph, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Navaaz, Navas, Navaz, PAK, Pakistan, PM, Polls, PPP, Rawalpindi, Sharif, Suicide, Violence, Zulfikar, Zulfikar Ali Bhutto | 4 Comments »

Sri Lanka releases Tamil suspects detained after Colombo bombings

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2007

இலங்கை கைதுகள் குறித்து அரசாங்கம் விளக்கம்

கொழும்பில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களில் பெரும்பாலானோரை விடுவித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழர்களை இலக்கு வைத்து இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவதையும் அரசு மறுத்திருக்கிறது.

இலங்கையில் தலைநகர் கொழும்பிலும், புறநகர்ப் பகுதியிலும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து கொழும்பிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடுமையான சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினரும் பொலிஸாரும் பலநூற்றுக்கணக்கான தமிழர்களை கைது செய்திருந்தனர்.

இவர்களில் பலர் அந்தந்தப்பகுதி பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அதேவேளை, மேலும் பலர் காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்புச் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

அமைச்சர் பெர்ணாண்டோ புள்ளே
அமைச்சர் பெர்ணாண்டோ புள்ளே

தமிழர்கள் வகை தொகையின்றி கைதுசெய்யப்பட்டு ஆங்காங்கே அடிப்படை உணவு, உடை மற்றும் மலசலகூட வசதிகளின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக கூறும் தமிழ்க் கட்சிகள் பலவும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அது குறித்து குரல் எழுப்பியிருந்தன.

இதனைவிட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்ணணி எனப்படும் ஜே.வி.பியும் அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்திருந்தன.

அத்துடன் அவர்களை விடுவிப்பதற்கு உதவக்கோரி ஜனாதிபதியிடமும், சர்வதேச சமூகத்திடமும் முறையீடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஊடகங்களிற்கு தெரியப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் பிரதான கொறடாவும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்றுமாலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஊடக மத்திய நிலையத்தில் விசேட பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடாத்தினார்.

அங்கு எதிர்க்கட்சிகளும், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே நாட்டினதும், சகல சமூகங்களினதும் பாதுகாப்பினை உறுதிசெய்யும் ஒரே நோக்குடனேயே இந்த நடவடிக்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டது என்றும், பொலிஸாரினாலும் பாதுகாப்புப் படையினராலும் வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது சிங்கள இனத்தவர்கள் சிலரும், முஸ்லிம் இனத்தவர் ஒருசிலரும்கூட விசாரணைகளிற்காக கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 202 பேர் தவிர ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.

தமிழர்கள் இலக்குவைத்து பாரியளவில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை மறுத்தலித்துப் பேசிய அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே தேவையேற்படும் போதெல்லாம் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.


வடபகுதிக்கான போக்குவரத்து நிலைமைகளில் முன்னேற்றம் இல்லை

பெரும் சிரமங்களுடனான வடபகுதிப் பயணங்கள்
பெரும் சிரமங்களுடனான வடபகுதிப் பயணங்கள்

இலங்கையின் தலைநகரப்பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, மட்டுப்படுத்தப்பட்ட வடபகுதிக்கான போக்குவரத்து நடைமுறைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதிக்கும் இடையே ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான தபால் விநியோக சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை முதல் பாதிக்கப்பட்டிருந்த இந்த சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக வன்னிப்பிராந்திய இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்தி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

எனினும் நோயாளர்களின் போக்குவரத்து மற்றும் வன்னிப்பிரதேசத்திலிருந்து பொதுமக்கள் வவுனியா பகுதிக்குள் வருவது போன்ற விடயங்களில் நிலவும் கட்டுப்பாடுகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான போக்குவரத்து நிலைமைகள், மற்றும், வடபகுதிக்கான ரயில் சேவை அநுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனால் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை என்பன குறித்து வவுனியா மேலதிக அரச அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


Posted in Anuradapura, Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Arrest, Bombs, Bus, Colombo, Eelam, Eezham, Govt, Islam, Jail, JVP, LTTE, Muslim, Prison, Roads, Sinhala, Sri lanka, Srilanka, Suspects, Tamil, Tamils, Trains, Transport, Transportation, Vanni, Vavuniya, Wanni, wavuniya | Leave a Comment »

Nov. 28 – Sri Lanka, Batticaloa News & Updates: Bomb Blast reactions

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

 


கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையிலான ரயில் சேவை அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கை ரயில்

நாட்டின் தலைநகரமாகிய கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் சேவை, இன்று அனுராதபுரம் நகருடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி அதிகாலை புறப்படுகின்ற யாழ்தேவி ரயில் மாத்திரம் மதவாச்சி வரையில் சேவையில் ஈடுபடுவதாகவும், ஏனைய ரயில் சேவைகள் யாவும் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ரயில் சேவை நேற்று மதவாச்சி வரையில் மாத்திரமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் எவரும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக, வவுனியா நகரம் உட்பட தென்பகுதிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலைமை காரணமாய் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மாவட்ட பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு கடமைக்காகச் சென்ற அரச ஊழியர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இன்று வெள்ளிக்கிழமை இவர்களில் ஒரு தொகுதியினர் மாத்திரம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக வவுனியா நகரப்பகுதிக்குள் வருவதற்கு படையினர் அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவ சிப்பாய் ஒருவர் மிதிவெடியில் சிக்கிக் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அரச தரப்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.


இலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுவது குறித்து யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அதிர்ச்சி

யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அலுவலக பதாகை

இந்த வாரத்தின் முதல் நான்கு தினங்களில், இலங்கையின் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின்போது சுமார் 49 சிவிலியன்கள் கொல்லப்பட்டதோடு, சுமார் 60 பேர்வரையில் காயமைடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கிறது.

இந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் விசேட அறிக்கையொன்றில், இம்மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் பெருந்தொகையான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்த சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இச்சம்பவங்களும் அதன்போது ஏற்பட்ட இழப்புக்களும் 2002 ஆம் ஆண்டு யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பிருந்த நிலைமையை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் அது தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.


 

கொழும்புத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கண்டனம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த இரண்டு குண்டுத் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூண் அவர்கள் கண்டித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலரின் அலுவலகம், கிளிநொச்சியில் நேற்று முன் தினம் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் குறித்தும் ஐ.நா தலைமைச் செயலர் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

அதேவேளை கொழும்புத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை மோதல்களில், வன்னியிலும், கொழும்பிலும் ஏனைய இடங்களிலும், அகப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளது.


கொழும்புத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை ஜனாதிபதி குற்றச்சாட்டு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத் தாக்குதல்களை இன்றைய தினம் இரானிலிருந்து நாடு திரும்பிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

இந்தத் தாக்குதல்களுக்கு தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்குற்றஞ்சாட்டியுள்ள ஜனாதிபதி, பயங்கரவாதத்தின் மாற்றமடையாத இந்த வழிகள் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.

அத்துடன் இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும்படி அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு அவர் பணித்திருக்கிறார்.

இதேவேளை, நேற்றைய குண்டுவெடிப்பின் பின்னர் கொழும்பின் பாதுகாப்பினை மேலும் அதிகரித்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், புதிய சில நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிய முடிகிறது.

இதன் ஒரு அங்கமாக கொழும்பிலிருந்து வவுனியாவிற்கான ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரைக்கும் மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மட்டக்களப்பில் சிங்கள வியாபாரிகள் கொலை

அடையாளம் தெரியாத ஆட்களால் கொலை
அடையாளம் தெரியாத ஆட்களால் கொலை

மட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேனியில் இன்று முற்பகல் மரத்தளபாட சிங்கள வியாபாரிகள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் வழமை போல் அந்த பகுதிக்கு வியாபாரத்தின் நிமித்தம் சென்றிருந்த சமயம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் கூறுகின்றனர்.

மேலும் அம்பாறை மாவட்டம் பக்மிட்டியாவ என்னுமிடத்தில் இன்று முற்பகல் விசேட அதிரடிப் படையினர் பயணம் செய்த கவச வாகனமொன்று விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானதில் 4 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Posted in Anuradapura, Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Arms, Attacks, Batticaloa, Blasts, Bombs, Cleansing, Colombo, Communications, Concerns, dead, Douglas, Eelam, Eezham, ethnic, EU, Extremism, Extremists, Freedom, LTTE, Mobility, Rails, Railways, reactions, Security, Sri lanka, Srilanka, Suicide, Terrorism, Terrorists, Trains, Transport, Vavuniya, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, wavuniya, Weapons | Leave a Comment »

Suicide Bomb blast in Nugegoda town near Sri Lankan Capital – Government minister Douglas Devananda escapes

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

நுகேகொட குண்டுவெடிப்பில் 16 பேர் பலி

குண்டு வெடித்த இடம்
குண்டு வெடித்த இடம்

இலங்கையின் தலைநகர் கொழும்பின் தென்புறமாக நுகேகொட பகுதியில் இன்று பிற்பகல் சனநடமாட்டம் மிக்க இடத்தில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் முப்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

சனக்கூட்டம் நிறைந்த புடவைக் கடையொன்றில் இருந்தே இந்தப் பாரிய குண்டு வெடித்துள்ளது.

குண்டு வெடித்ததை அடுத்து அப்பகுதியில் இருந்த வாகனங்கள் சிலவும், கடைகளும் தீப்பற்றிக்கொண்டுள்ளன.

வர்த்தக நிறுவனம் ஒன்றில் காணப்பட்ட சந்தேகத்துக்குரிய பொதி ஒன்றை பாதுகாவலர்கள் அகற்ற முயன்ற போதே அந்தப் பொதி வெடித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 37 பேர் காயமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் மீதே அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து கொழும்பு உள்ளடங்கலாக மேல்மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடங்களை திங்கட்கிழமை வரை இலங்கை அரசு மூடியுள்ளது.


இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சி

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு நாரஹேன்பிட்டி இசப்பத்தான மாவத்தையில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின், சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சகவளாகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சேர்ந்ததாகக் கருத்தப்படும் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் இன்று காலை நடாத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

ஈ.பி.டி.பி கட்சி வட்டாரங்களின்படி இன்று புதன்கிழமை அமைச்சர் தேவானந்தா வழமையாக பொதுமக்களைச் சந்திக்கும் தினமாகையால், அங்கு வரும் பொதுமக்களை பாதுகாப்புக் கடமையிலிருந்த அதிகாரிகள் அவர்களைச் சோதனையிடுவது வழக்கம் என்றும், இவ்வாறு அங்கு வந்திருந்த நடுத்தரவயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தியபோது அந்தப் பெண் தான் அணிந்திருந்த தற்கொலை குண்டு அங்கியினை வெடிக்கவைத்ததாகத் தெரியவருகிறது.

சம்பவம் இடம்பெற்ற அறை
சம்பவம் இடம்பெற்ற அறை

ஆனாலும், அமைச்சர் தேவானந்தா எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் அவரைக் கொல்லுவதற்கு எடுத்த மற்றுமொரு முயற்சி பயனின்றித் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது என்றும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்த்தன.

இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புத்துறை வட்டாரங்கள், இந்தச் சம்பவத்தில் இறந்த தற்கொலைப்பெண் ஒரு போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட அங்கவீனமுற்றவர் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகவும், குண்டுவெடிப்பினால் அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி ஸ்டீபன் பீரிஸ் என்பவர் படுகாயமைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் அங்கு மரணமாகியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தரினதும், அமைச்சர் தேவனாந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பு உறுப்பினர் ஒருவரும் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2004 ஆம் ஆண்டு இதேபோன்றதொரு பாணியிலான பெண் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் முயற்சியிலிருந்து அமைச்சர் தேவானந்த தப்பியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கை நேயர்கள் கவனத்திற்கு

நேயர்களே, நேற்றைய தமிழோசை ஒலிபரப்பில் இலங்கை நேயர்களுக்கு நேரிட்ட சில பிரச்சினைகள் குறித்து விளக்க விரும்புகிறோம்.

நேற்று நவம்பர் 27 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாக இலங்கை நேயர்கள் கேட்ட எமது நிகழ்ச்சி, எமது முழுமையான நிகழ்ச்சி அல்ல.

இலங்கை நேயர்கள் கேட்ட அந்த நிகழ்ச்சி, காலதாமதமாக மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது, அது மட்டுமல்லாமல், எங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாமலும், எமது அனுமதியைப் பெறாமலும், நிகழ்ச்சியின் சில பகுதிகள் வெட்டப்பட்டன. அந்த நிகழ்ச்சி எங்களால் வெட்டப்படவில்லை என்பதை நேயர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

சிற்றலை ஒலிபரப்பு மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் கேட்கும் நேயர்கள் முழுமையாக இந்த நிகழ்ச்சியை கேட்டிருப்பார்கள்.


Posted in Arms, Attacks, Blasts, Bombs, Capital, Colombo, dead, Devananda, Douglas, Douglas Devananda, Eelam People's Democratic Party, EPDP, Government, Govt, LTTE, Military, Minister, Nugegoda, Polio, Social Services, Sri lanka, Srilanka, Suicide, Tamil Tiger, Weapons, Welfare | Leave a Comment »

Tamil Tiger chief says peace with Sri Lanka govt impossible – Air force bombs LTTE radio

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

Maaveerar Day – LTTE: Happy Birthday Prabhakaran & Heroes’ Day

விடுதலைப் புலிகளின் வானொலி நிலயம் தாக்கப்பட்டது-பலர் பலி

புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்
சில மாதங்களுக்கு முன்னர் தாக்கப்பட்ட புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்திர மாவீர்கள் தின உரையை நிகழ்த்தவிருந்த நிலையில், அவர்களின் முக்கிய வானொலி நிலையத்தை இலங்கை அரசின் விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் என்றாலும் , அது பிரபாகரன் அவர்களின் உரை ஒலிபரப்பாவதை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்றைய தனது மாவீர் தின உரையில், இலங்கை அரசுடன் சமாதான வழிமுறைகள் சாத்தியமில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கை அரசு இனப்படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர், சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அளித்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


சர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமது அமைப்பின் மாவீரர் தின உரையின் போது, சர்வதேச சமூகத்தின் மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் தமது அமைப்பு முப்படையாக விரிந்து நிற்பது குறித்த பெருமிதம் ஆகியவற்றுடன் தனது உரையை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், அதில், சர்வதேச நாடுகள் மீதும் இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் மீதும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீதும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஆராயும் அனைத்துக் கட்சிக் குழு ஆகியவற்றின் மீது தனது அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக விபரித்த பிரபாகரன் அவர்கள், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீதான தாக்குதல், இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி என்று வர்ணித்தார்.

ஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் ஆதிக்க வெறியோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், உலக கவனத்தை திசை திருப்பவே அரசு அனைத்துக் கட்சிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.

அதேவேளை, தமிழர் பிரச்சினையை நீதியான வகையில் தீர்த்து வைக்கும் அரசியல் நேர்மையும், உறுதிப்பாடும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் கட்சியிடமும் கிடையாது என்றும் பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

கிழக்குத் திமோர் மற்றும் மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் தீர சர்வதேச சமூகம் ஆதரவும் அனுசரணையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரபாகரன், ஆயினும், தமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

இலங்கை அரசின் போக்கை சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வனின் மரணம் இடம்பெற்றிருக்காது என்று கூறிய பிரபாகரன், இணைத்தலைமை நாடுகளும் சமாதானத்துக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியா முன்னர் விட்ட தவறையே சர்வதேச நாடுகள் தற்போது விட்டு நிற்கின்றன என்றும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.

தமது அமைப்பு இழந்துவிட்ட இறையாண்மைக்காகவும், சுதந்திர தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் போராடுவதாகக் கூறிய அவர், தமது மக்கள் அல்லல் பட்ட வேளைகளில் உலகம் கண்ணை மூடி நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஆகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கேட்டுக்கொண்டுள்ளார்.


வட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி

கிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்
கிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தின வாரத்தின் இறுதி நாளாகிய இன்று அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முக்கியத்துவம் மிக்க தனது கொள்கை விளக்க உரையை ஆற்றுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் வானொலியாகிய புலிகளின் குரல் நிலையக் கட்டிடத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழி குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்

புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் 5 ஊழியர்களும், அந்த நிலையத்தின் அயலில் உள்ள வீடுகளில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் 4 பேருமே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுமி என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலின் போது விமானப்படையினர் பத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை அடுத்தடுத்து வீசி வானொலி நிலையத்தைத் தரைமட்டமாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் குரல் வானொலி நிலையம் அரச படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலில் பெரும் சேதமடைந்துள்ள போதிலும் அதன் ஒலிபரப்ப்பு வழமைபோல இடம்பெற்றது என்பதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உரையும் அந்த வானொலியில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒலிபரப்பாகியுள்ளது.

கிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சியில் இருந்து மேற்குத் திசையில் 25 கிலோ மீற்றர் தொலைவில் துணுக்காய் – கொக்காவில் வீதியில் மல்லாவி – ஐயங்கேணி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அரச படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 9 மாணவிகளும், அம்புலன்ஸ் வண்டியின் சாரதியும் மற்றும் ஒருவருமே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு மாணவிகள் காயமடைந்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலில் தமக்குத் தொடர்பில்லை என்று இராணுவத்தினர் மறுத்துள்ளனர்.


Posted in Air Force, Airforce, Arms, Attack, Bombs, Communications, dead, Eelam, Eezham, infrastructure, Kilinochi, Kosovo, LTTE, Military, mines, montenegró, Norway, Peace, Prabaharan, Prabakaran, Prabakharan, Radio, Sri lanka, Srilanka, Tigers, Timor, War, Weapons, World | Leave a Comment »

Masked men burn ‘Anti government’ Sunday Leader newspaper office – Military Aided Press Attack?

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2007

 

எரிக்கப்பட்ட பத்திரிகை அச்சகம்
எரிக்கப்பட்ட பத்திரிகை அச்சகம்

இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டுவரும் இந்த பத்திரிகை நிறுவனத்திலிருந்து சண்டே லீடர், மோர்னிங் லீடர் மற்றும் இரிதா பெரமுன என்ற சிங்களமொழி வார இதழ்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான பத்திரிகையாகப் பரவலாகக் கருத்தப்படும் இந்தப் பத்திரிகை நிறுவனத்துக்குள், இன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் சுமார் 15 பேர், அங்கு அச்சிடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்களை உட்கார்ந்து இருக்கும்படி உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்த அச்சிடும் இயந்திரங்களுக்கும், ஏற்கனவே இன்றைய வெளியீட்டிற்காக அச்சிடப்பட்டிருந்த மோர்னிங் லீடர் பத்திரிகை இதழ்களுக்கும் பெற்ரோல் ஊற்றி எரியூட்டியதாக அந்த நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.

அத்துடன் இந்த சம்பவம் மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இரத்மலானை விமானப்படைத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள அலுவலக வளவினுள்ளேயே இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இதுவரை எவரையும் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்ததாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட இதேமாதிரியானதொரு சம்பவம் இந்த நிறுவனத்துக்கு, இதே இடத்தில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


ஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு

அகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம்
அகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்.

அண்மையில் தமது பகுதிகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே தாம் இவ்வாறு மீண்டும் இடம்பெயர நேர்ந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர்.

ஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்களை மீண்டும் முகாம்களில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவை குறித்து இடம்பெயர்ந்த சிலரது கருத்துக்கள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கருத்துக்கள் அடங்கலான செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன்
வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன்

வவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

இந்த இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையின்போது, அவர்களது உறவினர்கள், இராணுவத்தினர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று மாலை 6 மணியளவில் வேப்பங்குளம் இராணுவ முகாமில் தன்னை இராணுவத்தினர் வைத்திருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்ததாக இறந்தவரின் மனைவி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

மேலும் 3 இளைஞர்களை இராணுவத்தினர் குறிப்பிட்ட இராணுவ முகாமினுள் சம்பவ தினத்தன்று கொண்டு சென்றதைக் கண்டவர்கள் மூலமாகத் தாங்கள் அறிந்ததாகவும் இறந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பின்னணியில் வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 15 இராணுவத்தினரின் துப்பாக்கிகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

ஐந்து இளைஞர்களும் சடலங்களாகக் காணப்பட்ட இடத்திலிருந்து பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ள 16 வெற்றுத் தோட்டாக்களும், இந்த துப்பாக்கிகளுடன் ஒத்து இணங்குகின்றனவா என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மாவட்ட நீதிபதி, இன்றைய வழக்கு விசாரணையின்போது, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக இரத்துச் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான தனியார் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகிய திலீபனின் உருவச்சிலை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தவேளை, திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்பன கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.


Posted in Airforce, Arms, Asia Tribune, Attack, Blasts, Bombs, Burnt, Colombo, dead, Death, Deface, defence, Defense, Democracy, Dhileepan, Displaced, Editor, Eelam, Eezham, equipment, Extremism, Extremists, Fire, Freedom, Govt, HSZ, IDP, Independence, Irudina, Jaffna, Journal, journalism, journalist, Karuna, Lasantha, Law, Leader, LTTE, Mag, magazine, Magazines, Magz, Media, Military, Morning Leader, News, Newspaper, Office, Opposition, Oppression, Order, owner, paramilitary, Passport, Pillaiaan, Pillaian, Pillaiyaan, Pillaiyan, Police, Press, Propaganda, Rajapaksa, Rajapakse, Rajasingam, Rajasingham, Rajasinkam, Ransack, Rathmalana, Ratmalana, Rebel, Refugees, Reporter, Samarasinghe, Security, Sinhala, Sonali, Statue, Sunday, Sunday Leader, Suppression, Terrorism, terrorist, Terrorists, Thamilselvan, Thileepan, Triconamalee, triconmalee, Vavuniya, wavuniya, Weapons, Wikramatunga | Leave a Comment »

Tamil Nadu’s fishing industry vs Sri Lankan naval personnel: Harassment of Indian fishermen

Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007

மீனவர் வாழ்வு விடியுமா?

உதயை மு. வீரையன்

அண்மைக்காலமாக, தமிழக மீனவர்கள் தொழில்செய்து பிழைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்றன.

நாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் 17 படகுகளைக் கடத்திச் சென்றனர். அந்தப் படகுகளில் 99 மீனவர்கள் இருந்தனர்.

மீனவர் கிராமப் பஞ்சாயத்தார் இதுபற்றி நாகை மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர். தகவலறிந்த முதல்வர், உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அகமதுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் தந்த உறுதியின்பேரில் 99 மீனவர்களும் விடுவிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

“இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவினைக் கவனத்திற்கொண்டு இம்மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்தது.

இந்திய அரசாங்கம் இந்த மீனவர்கள் தனது நாட்டுக் குடிமக்கள் என்பதை மறந்துவிட்டதா? “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன? தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா? நமது குடிமக்கள் வேற்று நாட்டுப் படையினரால் கைது செய்யப்படுவது நம்நாட்டு இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால் இல்லையா?

இந்தியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1076 கிலோமீட்டர். இவற்றில் 600க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள்; இந்தக் கிராமங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம்.

ராமேசுவரம் முதல் நாகைவரை நீண்டிருக்கும் கடலில் மீனவர்கள் சுதந்திரமாக கட்டுமரம், படகு, தோணிகள், விசைப்படகுகளைச் செலுத்தித் தொழில்செய்துவந்த காலம் கடந்த காலமாகிவிட்டது. இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழும் நிலை.

சாதாரணமாகவே கடற்பயணம் ஆபத்தானது. எந்த நேரத்தில் அலை எப்பக்கம் அடிக்குமோ என்ற கவலை; சூறாவளியும், புயலும் அலைக்கழிக்குமே என்ற அச்சம்; பாம்புத் தொல்லை – இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு வலைவீசி பிடிக்கப்பட்ட மீன்களைப் பிடுங்கிக் கொள்வதும் தாக்குவதும், சுடுவதும், சிறைபிடிப்பதும் தொடரும் பேரவலம். இதற்கு முடிவே கிடையாதா?

கரையில் நடப்பவை, உடனே “சுடச்சுட’ செய்திகளாகி வெளிவருகின்றன; கடலில் நடப்பவை, பல நேரங்களில் வெளியே தெரிவதில்லை. கணக்கில் வராமல் கடலிலேயே மாய்ந்து போனவர்கள் எத்தனையோ பேர்?

பலமுறை இலங்கைக் கடற்படை இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்தமுறை இந்திய எல்லைக்குள் வந்த இலங்கைக் கடற்படை, தென்தமிழக மீனவர்கள் ஐந்து பேர்மீது துப்பாக்கியால் சுட்டது. வழக்கம்போல சட்டப்பேரவையில் இதைக் கண்டித்துத் தீர்மானம், இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் அறிவிப்பு; அரசின் கடமை இத்துடன் முடிந்துவிட்டது.

இம்மாதிரி நேரங்களில் அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கைகள், அனுதாபச் செய்திகளால் மட்டும் பயன் என்ன? அந்த மீனவர்களை நம்பியுள்ள அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தியக் கடலோரக் காவல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியக் கடற்படை என்ன செய்கிறது? இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா? ஆயுதக் கடத்தலைத் தடுக்கிறோம் என்று கூறுகின்றனர். தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது யார்?

தமிழகத்தின் பாரம்பரியக் குடிகள் மீனவர்கள். இவர்களது பாரம்பரியத் தொழில் மீன்பிடித்தல். இதனால் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மீனவர்களுக்குக் கடற்கரைத் தொகுதிகளை ஒதுக்கவேண்டுமென்ற கோரிக்கையின் நியாயம் புரிந்து கொள்ளப்படவில்லை. மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மண்டல் குழுவின் பரிந்துரையும் நடைமுறைப்படுத்த்பபடவில்லை.

தமிழக மீனவர்களின் பெரிய இழப்பு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததுதான்தான். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தீர்க்கமாக ஆலோசிக்காமல் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கச்சத்தீவைத் தாரைவார்த்துவிட்டார்.

கச்சத்தீவு 3.75 சதுர மைல் பரப்பளவு கொண்டது; ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை எல்லையிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ள சின்னஞ்சிறிய பகுதி.

இது மீனவர்களின் சொர்க்கபூமி; மீன்களின் உற்பத்திச் சுரங்கம். இங்கு பல்லாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அன்னியமாக்கிவிட்டது கச்சத்தீவு ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக குற்றம்சாட்டப்படுவதும் இப்பகுதிதான்.

இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்நோக்கில் “கச்சத்தீவை மீட்க முயற்சி எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உரைகளில் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும், சுற்றுலாப் பயணிகள் சென்றுவரவும் அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் 5,6 ஆம் பிரிவுகளை இலங்கை அரசும், கப்பற்படையும் பொருள்படுத்துவதில்லை. 1977-க்குப் பிறகு இத்தீவுக்குச் செல்லத் தடை விதித்து விட்டதால், இங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவே நடப்பதில்லை. இக்கோயிலை இலங்கை அரசு இப்போது மூடிவிட்டது.

இலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் மதித்ததில்லை; நடைமுறைப்படுத்தியதும் இல்லை. தமிழ்நாட்டில் இதுபற்றி திடீரென கோரிக்கை எழும்; அடங்கிவிடும்; மக்களும் மறந்துவிடுவார்கள். இறுதிவரை கோரிக்கைகள் நிறைவேறாமல் அப்படியே இருக்கும்.

இந்திய – இலங்கை உடன்பாட்டின் விதிகள் தெளிவாக இருக்கின்றன. “”இந்திய மீனவரும், இறைவழிபாட்டுப் பயணிகளும் இதுவரை கச்சத்தீவுக்கு வந்துபோய் அனுபவித்ததைப் போலத் தொடர்ந்து வந்துபோய் அனுபவிக்கும் உரிமையுடையவர்கள். இப்பயணிகள் இவ்வாறு வந்துபோக, இலங்கை அரசிடமிருந்து எவ்விதப் பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெற வேண்டியதில்லை”.

“”இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் படகுகள் மற்றும் கப்பல்கள் விஷயத்திலும் பரஸ்பர கடல் உரிமை தொடரும்’.

இவ்வாறு திட்டவட்டமான விதிகள் இருந்தும் இவற்றை அப்பட்டமாக மீறும் இலங்கை அரசிடம் கெஞ்சுவதும், அவர்கள் மிஞ்சுவதும் ஏன்? அத்துமீறி நடப்பது யார்? இலங்கைக் கடற்படையா, இந்திய மீனவர்களா? முடிவு செய்வது யார்?

Posted in Arms, Boats, Bombs, borders, Boundary, Capture, Catch, Cocaine, Contraband, dead, defence, Defense, Drugs, Exports, Extortion, Extremists, fiberglass, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Fishing, Harassment, Illegal, Imprison, India, Industry, International, island, Jail, Jury, Justice, Kachatheevu, Kachathivu, Kachativu, Katcha Theevu, Kodiakkarai, kodiyakkarai, Law, LTTE, Maginda, Magindha, Magintha, Mahinda, Mahindha, Mahintha, Marijuana, maritime, Misa, Narcotics, Nautical, Navy, Ocean, Oceanery, Order, Peace, POTA, Prison, Rajapaksa, Rajapakse, Refugees, release, SAARC, Sea, Sector, Shoot, Shot, Shrimp, Squids, Sri lanka, Srilanka, TADA, Talaimannar, Terrorism, Terrorists, Thalaimannar, Tourism, Tourist, Travel, Trawlers, Trespass, War, Waters, Weapons, World | Leave a Comment »

Tamil Rehabilitation Organisation (TRO) – US Treasury sanctions to freeze Tamil charity assets: LTTE militants bunker line destroyed

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

தமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்க முடிவு

தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.

அந்த அமைப்பு, அமெரிக்காவில் 1997 முதல் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி ஆதரவு மற்றும் இதர கொள்வனவு செய்வதில் ஈடுபட்டதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்ததாக கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


ரொபர்ட் ஓ பிளேக்
ரொபர்ட் ஓ பிளேக்

 


தமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்கள் அமெரிக்காவில் முடக்கப்பட்டது குறித்து கொழும்பு அமெரிக்கத் தூதர் விளக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பாக செயல்பட்டு அதற்கு ஆதரவாக நிதி சேகரித்ததாக் கூறி அமெரிக்க அரசின் கருவூலத் துறை நேற்று வியாழனன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்காவில் முடக்கி வைப்பதாக அறிவித்தது.

இது தொடர்பில் வெள்ளிக்கிழமையன்று கொழுபிலுள்ள அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக் விரிவான விளக்கத்தினை அளித்துள்ளார்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம், அறக்கட்டளை என்கிற பெயரில் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, அவர்களுக்கு நிதி மற்றும் ஆயுதங்கள் உட்பட இதர கொள்வனவுகளை மேற்கொண்டு வந்தது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என்று கூறினார்.

மேலும் இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகளுக்கு எதிரானதுதான் என்றும் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்கா, இலங்கையில் தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூக மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வகையில் முன்னெடுக்கப்படும் நியாயமான சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வுக்கு அனைத்து ஆதரவையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இராணுவ வழிமுறைகள் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் அமெரிக்க திடமாக நம்புகிறது என்றும் கொழுபிலுள்ள அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்தார்.

இதனிடையே இது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திட்ட இயக்குநர் ஜான் கிறிஸ்டி, அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

தமது அமைப்பின் நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படையாகவும், அனைவருக்கும் திருப்தியளிக்கக் கூடிய வகையிலும் உள்ளன என்றும் அவர் கூறினார்.


விடுதலைப்புலிகள் மீது அழுத்தம் கொடுக்கவே தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது – ஆய்வாளர் கருத்து

தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது அரசியல், ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியிலான அழுத்தங்களை அதிகரிக்கும் நோக்கிலேயே, தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்க அரசு முடக்கியிருப்பதாக கூறுகிறார், இந்திய தலைநகர் புதுதில்லியிலிருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசியவியல் துறை பேராசிரியர் சஹாதேவன் அவர்கள்.

தமிழோசைக்கு அவர் அளித்த ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியில், விடுதலைப்புலிகளை அனைத்து வகைகளிலும் பலவீனப்படுத்தி, பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க வைப்பது என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

அதே வேளை, இலங்கை அரசுக்கான தனது ராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்கும் அமெரிக்க அரசின் அணுகுமுறை என்பது, இலங்கை இனப்பிரச்சினையில் அதன் சமச்சீரற்ற அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும் சகாதேவன் கூறினார்.

இதன் காரணமாக, எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா உள்ளிட்ட சரவதேச நாடுகளின் சமாதான முன்னெடுப்புகளை விடுதலைப்புலிகள் புறக்கணிக்ககூடிய ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

 


 

இலங்கையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்பாக கட்சித் தாவல்கள் தீவிரமடைகின்றன

தீவிரமடையும் கட்சித்தாவல்கள்
தீவிரமடையும் கட்சித்தாவல்கள்

இலங்கைப் நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 2008 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மீது தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தினைத் தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்காக அது விடப்படவிருக்கிறது.

இதனை எப்படியாவது நிறைவேற்றிவிடவேண்டுமென்று ஆளும் கூட்டணியும், இந்த வரவுசெலவுத்திட்டத்தினை எப்படியாவது தோற்கடித்து அதனூடாக இந்த அரசினை பதவிநீக்கம் செய்யவேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும், முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவும் தற்போது பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

இதன் ஒரு அங்கமாக புதன்கிழமை ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ஷ சபையில் எதிர்க்கட்சிவரிசையில் வந்து அமர்ந்து, இந்த வரவுசெலவுத்திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, எதிராக வாக்களிக்கப் போவதாகக் கூறியிருக்கின்றார். அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ரட்ணதிலக்க அரசதரப்புக்குத் தாவியிருக்கிறார்.

இவை தொடர்பாக கட்சித்தாவல்களை மேற்கொண்டோர், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களடங்கிய விரிவான செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்களில் 20 பேர் பலி

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப்பிரதேசத்தில் உள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் இரு தரப்பிலும் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்க பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி இன்று காலை 5 மணியளவில் முன்னேறிய படையினர், விடுதலைப் புலிகளின் 5 பதுங்கு குழிகளைத் தாக்கி அழித்துள்ளதாகவும், இதன்போது ஏற்பட்ட மோதலில் 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.

இப்பகுதியில் இராணுவத்தினரின் முன்னரங்க பகுதிக்குள் ஊடுருவ முயன்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

வவுனியா, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப் பிரதேசத்தின் இராணுவ முன்னரங்க பகுதிகளாகிய கள்ளிக்குளம், நரிக்குளம், விளாத்திக்குளம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

கள்ளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். கண்ணாட்டி என்னுமிடத்தில் விடுதலைப புலிகள் வைத்திருந்த மிதிவெடிகளில் சிக்கிய 4 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கிறது.

ஆயினும் இந்த மோதல்கள் மற்றும் இழப்புக்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


வான்வழித் தாக்குதலில் புலிகளின் படகு கட்டுமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது: இலங்கை இராணுவம்

அழிக்கப்பட்ட முறிகண்டி படகுக் கட்டுமான தளம்

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் மீது இன்று வெள்ளிக்கழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படகு கட்டுமான நிலையம் அழிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவுக்கு மேற்கே முறிகண்டி பகுதியில் நேர்த்தியான மறைவிடம் ஒன்றில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் படகுக் கட்டுமான தளத்தின் மீதே இந்த விமான குண்டுத் தாக்குதல் காலை 6.30 மணியளவில் நடத்தப்பட்டதாகவும், இங்கு விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினர் படகு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள், ஏ9 வீதியில் அமைந்துள்ள திருமுறிகண்டி சிற்றூரில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான படகு கட்டுமாண தொழிலகத்தின் மீது இன்று காலை 6.20 மணியளவில் இரண்டு தடவைகள் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தி அந்தத் தொழிலகத்தை அழித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், மன்னார் துவரங்கேணி காட்டுப்பகுதியில் மறைந்திருந்த இளைஞன், அப்பகுதியில் தேடுதல் நடத்திய படையினர் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்த முற்பட்டபோது, இன்று காலை 9.30 மணியளவில் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மன்னார் கட்டையடம்பன், தம்பனை, மற்றும் மணலாறு, வடக்கே நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில் வியாழனன்றும் வெள்ளியன்றும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 22 நவம்பர், 2007 

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினை தடை செய்தது இலங்கை அரசு

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு இலங்கையில் தடை
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு இலங்கையில் தடை

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருக்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினை இலங்கையில் தடை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம முன்வைத்த ஒரு பிரேரணையின்படியே, அமைச்சரவை இந்த முடிவை எடுத்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

அறக்கட்டளை என்கிற பெயரில் வெளிநாடுகளில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு, அதை புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு போன்ற நடவடிக்கைகளுக்காக அளித்தது தெரியவந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்கிய இலங்கை அரசு, கடந்த வாரம் அமெரிக்கா இந்த அமைப்பின் சொத்துக்களை முடக்க எடுத்த நடவடிக்கையை அடுத்தே அந்த முடிவினை எடுத்துள்ளது.

இந்தத் தடையானது விடுதலைப் புலிகளுக்கு பெரிய பின்னடைவு என்று இலங்கை அரசின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஹுசைன் பைலா அவர்கள் கூறியுள்ளார். மேலும், விடுதலைப் புலிகளுக்கு எந்த அமைப்பாவது எந்த பெயரிலாவது நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அவற்றையும் தடை செய்யுமாறு சர்வதேச சமூகத்திடம் அரசு கோரவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Posted in Adampan, Arms, Assets, Attacks, Blasts, Bombs, Budget, bunker, Charity, Commerce, defence, Defense, Economy, Eelam, Eezham, Finance, Funds, Kallikulam, Kallikulamn, Kannadi, LTTE, Mannaar, Mannar, MCNS, Media Centre for National Security, Militants, Military, mines, Mugamalai, Muhamalai, NGO, Party, Politics, sanctions, Security, Srilanka, Tamil Rehabilitation Organisation, Terrorism, Terrorists, TRO, Umayaratuvarankulama, Vanni, Vavuniya, Vilaththikulam, Wanni, Weapons | 1 Comment »

LTTE vs Sri Lanka – Eezham imbroglio: Lack of interest by Indian Leaders

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

ஏன் இந்தத் தயக்கம்?

விடுதலைப் புலிகள் எப்போது, எப்படி, எங்கே தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை ராணுவம் குழம்பிப் போயிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும், அனுராதபுரம் ராணுவ விமானத்தளத்தின் மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, உலகமே இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பிரமித்துப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதாரண விமான நிலையமாக இருந்தால்கூடப் பரவாயில்லை. சாத்தியம் என்று சமாதானப்படலாம். தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இலங்கை ராணுவத்தின் விமானத்தளம். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள அனுராதபுரம் விமானத்தளத்திற்குள், அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி, காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் எப்படி நுழைய முடிந்தது என்பது, இலங்கை அரசையே உலுக்கிவிட்டிருக்கிறது.

மூன்று பெண் புலிகள் உள்பட 21 பேர் கொண்ட கறுப்புப் புலிகள் எனப்படும் தற்கொலைப் படையினரின் தாக்குதலில் சேதமடைந்திருப்பது 18 இலங்கை ராணுவ விமானங்கள் மட்டுமல்ல, உலக அரங்கில் இலங்கை அரசின் மரியாதையும்தான். தற்கொலைப் படையினரின் தரைவழித் தாக்குதல் போதாது என்று, விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தாக்குதலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்ததுதான் அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம்.

கடந்த மார்ச் மாதம் கொழும்பு நகரத்தை அடுத்த இலங்கை விமானப்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. விடுதலைப் புலிகளிடம் உள்ள இரண்டு விமானப் படை விமானங்களும் சுமார் நாற்பது நிமிடங்கள் எந்தவிதக் கண்காணிப்பு வளையத்திலும் அகப்படாமல் பறந்து வந்து, தாக்குதல் நடத்திவிட்டு, வந்த சுவடே தெரியாமல் பத்திரமாகத் திரும்பியது எப்படி?

பிரச்னை அதுவல்ல. விடுதலைப் புலிகள் தாக்குவதும், இலங்கை ராணுவம் பழிக்குப் பழி நடவடிக்கையாகத் திருப்பித் தாக்குவதும் கடந்த கால்நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் விஷயம். எப்போது விமானம் வரும், தாக்குதல் நடக்கும் என்பதறியாமல் பயத்தில் நடைப்பிணமாக வாடும் அந்த நாட்டு மக்களின் நிலைமையை நாம் மனிதாபிமான அடிப்படையில் ஏன் பார்க்க மறுக்கிறோம்? மடிவது சிங்கள உயிரா, தமிழரின் உயிரா என்பதைவிட, மனித உயிர் என்பதை உணர முடியாதவர்களாக இருக்கிறோமே, ஏன்?

ஈழப் பிரச்னைக்கு முடிவு துப்பாக்கி முனையில் ஏற்படாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது வறட்டு கௌரவமும் முரட்டுப் பிடிவாதமும் நடைமுறை யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது நியாயமல்ல.

இலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால் இந்திய அரசு தனது தார்மிகக் கடமையிலிருந்து விலகி நிற்பது எந்தவகையிலும் நியாயமாகப்படவில்லை. மத்தியில் கூட்டாட்சி நடத்தும் திமுகவும் பாமகவும் இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்று கூறுவது உண்மையானால், மத்திய அரசின் மௌனத்தைக் கலைக்க வைப்பது அவர்களது கடமை.

ஈழப் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. அவரே முன்னின்று பேச்சுவார்த்தைகளை நடத்தினால் நல்ல முடிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் சரி, வெறுமனே தனது அதிகாரிகள் மூலம் ஓர் அரசியல் பிரச்னைக்குத் தீர்வுகண்டுவிட முடியும் என்று நினைப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மேலும், இலங்கை அரசின் நட்புக்காக மௌனம் காப்பதும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. தமிழக முதல்வரை முன்னிறுத்தி இலங்கைப் பிரச்னைக்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஏன் இந்தத் தயக்கம்?

Posted in ADMK, AFB, Air Force, Airforce, Anuradapura, Anuradhapura, Anurathapura, Arms, Assassin, Assassination, Attack, Attacks, Bombs, Citizens, Colombo, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Cyanide, Danger, dead, DMK, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eelctions, Eezam, Eezham, Extremism, Extremists, Flights, guns, India, Initiatives, Jaffna, Kill, Killed, Leaders, LTTE, Military, Party, Peace, people, Politics, Sri lanka, Sri Lankan Navy, Srilanka, Suicide, terror, Terrorism, Terrorists, Vanni, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, Wanni, Weapons | 1 Comment »

Ludhiana blast: Jihadi-Khalistani link likely

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

பயங்கரவாதிகள் கூட்டு சதி?: லூதியானா குண்டுவெடிப்பு

லூதியானா, அக். 16: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஞாயிற்றுக்கிழமை திரையரங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு சீக்கிய, முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களின் கூட்டுச் சதி காரணமாக இருக்குமா என்று போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று பஞ்சாப் போலீஸ் உயர் அதிகாரி ஒüலக் தெரிவித்தார்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 12 பேரிடம் போலீஸôர் விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த திரையரங்கின் ஊழியர்களும் விசாரிக்கப்படுகின்றனர்.

திரையரங்கில் குண்டுவைத்த பயங்கரவாதிகள், திரைப்படத்தின் இடைவேளைக்கு முன்பே வெளியே சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்புக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

எனவே சந்தேகத்தின் அடிப்படையில் எந்த அமைப்பையும் குறிப்பிட்டுக் கூற இயலாது என்று பஞ்சாப் அரசின் தலைமைச் செயலர் ரமேஷ் இந்தர்சிங் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரை சேர்ந்த ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பஞ்சாபில் வேலைசெய்துவருகின்றனர்.

அவர்களை அச்சுறுத்தி பஞ்சாபை விட்டு விரட்டியடிப்பதற்காக இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்குமா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு, “காலிஸ்தான் ஜிந்தாபாத்’ இயக்கம் காரணமாக இருக்கலாம் என்று பஞ்சாப் மாநில முன்னாள் போலீஸ் உயர் அதிகாரியும் அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை அடியோடு வேரறுத்தவருமான கே.பி.எஸ்.கில் தெரிவித்தார்.

இந்த இயக்கத்துக்கு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

லூதியானா குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு நமது அண்டை நாடு உடந்தையாக இருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று சிரோமணி அகாலி தளம் தலைவர் சுகவீர்சிங் பாதல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குண்டுவெடிப்புக்கு ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளுடன் இதரவகை வெடிபொருள்களும் கலந்து பயன்படுத்தப்பட்டுள்ளது முதல்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

குண்டுவெடித்ததால் சம்பவ இடத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் இதை உறுதி செய்கிறது. திரையரங்கில் நெருக்கமாக இருந்த நாற்காலிகள் குண்டுவெடிப்பின் பாதிப்பை தடுத்துவிட்டன. இல்லாவிடில் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என்று புலன் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சக்திவாய்ந்த வெடிபொருள்கள் வெடித்த காரணத்தால்தான் திரையரங்கில் ஆறு பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

இவர்களில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக லூதியானா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பஞ்சாப் மாநிலம் முழுவதும் போலீஸôர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டப் போலீஸ் அதிகாரிகளுடன் மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பண்டிகைக் காலமாதலால் அனைத்து நகரங்களிலும் போலீஸôர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Posted in Arms, Babbar Khalsa International, Bihar, BKI, Blast, Bombs, Cinema, dead, Democracy, explosion, Freedom, Independence, Investigation, Islam, Jihad, Khalistan, Liberation, Ludhiana, Movie, multiplex, Muslim, Punjab, RDX, Samrala, Separation, Sikhs, Singar, Terrorism, terrorist, Theater, Theatre | 1 Comment »

India: Police Suspect Bangladeshi Group In Ajmer Bombing

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 13, 2007

அஜ்மீர் தர்காவில் குண்டுவெடிப்பு: வங்கதேச தீவிரவாத அமைப்பு காரணம்?

அஜ்மீர், அக். 13: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள சூஃபி ஞானி காஜா மொய்னு தீன் சிஷ்டி தர்காவில் வியாழக் கிழமை நடைபெற்ற குண்டுவெ டிப்பு சம்பவத்துக்கு வங்கதேசத் தைச் சேர்ந்த ஹர்கத்- உல்-ஜிகாதி இஸ்லாமி (ஹுஜி) தீவிரவாத அமைப்பின் ஷாஹித் பிலால் என்பவரே காரணம் என்று கூறப்படுகிறது.

இவர் வங்கதேச சுற்றுலாப் பயணியாக இந்தியாவுக்கு வந்து இத்தகைய சதி செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந் தேகிக்கப்படுகிறது.
இருப்பினும் பிலால், பாகிஸ் தானின் கராச்சி நகரைச் சேர்ந்த வர் என்று தெரியவந்துள்ளது.

ஹுஜி அமைப்புக்கு பாகிஸ்தா னின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிர வாத அமைப்பு உதவியிருக்கும் என்பதையும் மறுப்பதற் கில்லை என்று தகவல்கள் கூறு கின்றன.

ஹுஜி, ஜெய்ஷ் அமைப்புகள் இஸ்லாம் மதத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு எதிரானவை என்று கூறப்படுகிறது.
அதேவேளையில், சந்தேகத் துக்குரிய பல்வேறு நபர்களிட மும் ராஜஸ்தான் மாநில போலீ ஸôர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 6 பேரை பிடித்து வைத்து கடுமையாக விசாரித்து வருகின்றனர். எனினும் இது வரை எவரும் கைது செய்யப்ப டவில்லை.

இதற்கிடையே சம்பவ இடத் தில் சிம் கார்டுடன் கூடிய நோக் கியா செல்போன், வெடிக்காத வெடிகுண்டு ஆகியனவும் கண் டெடுக்கப்பட்டுள்ளன.

குண்டுவெடிப்புக்கு இந்த செல்போனையே பயன்படுத்தி யிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளது.
ஹைதராபாத் மெக்கா-மசூதி யில் நிகழ்த்திய குண்டுவெடிப்பு பாணியில் அஜ்மீரிலும் குண்டு வெடிப்பை அரங்கேற்றியுள்ள தாக தகவல்கள் கூறின. வியா ழக்கிழமை அஜ்மீர் தர்காவில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் இறந்தனர். 28 பேர் காய மடைந்தனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சலீம், மும்பையைச் சேர்ந்த முக மது ஷோயப் ஆகியோர் உயிரி ழந்ததாக அடையாளம் கண்ட றியப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 17 பேர் ஒரிசா, குஜராத், மகாராஷ் டிரம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த யாத்ரீ கர்கள் என கண்டறியப்பட்டுள் ளது. சம்பவம் நடந்த பிறகு தர் காவுக்கு வெளியே ஏற்பட்ட அமளியில் 5 பேர் காயமடைந்த னர்.

சம்பவ இடத்தில் தீவிர புலன் விசாரணை நடைபெற்று வருகி றது. தேசிய பாதுகாப்பு படை அமைப்பின் குழுவினரும் வந் துள்ளனர்.
முன்னதாக வியாழக்கிழமை மாலை ரம்ஜான் நோன்பை ஒட்டி 6.30 மணியளவில் இஃப் தார் விருந்துக்காகக் கூடியிருந்த னர். அப்போது தர்கா அருகே உள்ள மரத்தின் அடியில் பள் ளிக் கூடப் பை ஒன்றில் வைக் கப்பட்டிருந்த குண்டு வெடித் தது.

அஜ்மீரைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புப் படையினர் தர்கா வுக்குப் பாதுகாப்பு அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளனர்.
குற்றவாளிகள் விரைவில் பிடிபடு வர்- முதல்வர் வசுந்தரா ராஜே சிந் தியா உறுதி: குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியை வெள்ளிக்கிழமை பார்வையிட்டார் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா.

அப்போது, “”குற்றவாளிகள் விரை வில் பிடிபடுவர். எக்காரணத்தைக் கொண்டும் தப்பிக்க இயலாது.
பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த தவறு காரணமாக இச்சம்பவம் நடந் ததா என்பது குறித்து விசாரணை நடத்தி கண்டறியப்படும்,” என்றும் அவர் உறுதி கூறினார். சம்பவத்தில் காயமடைந்தவர்களை மருத்துவம னையில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார் வசுந்தரா.

—————————————————————————————————————————————

அஜ்மீர் தர்காவில் வெடிக்காத குண்டு கண்டுபிடிப்பு தாக்குதலின் பின்னணியில் ஹர்கத் உல் இஸ்லாமி

அஜ்மீர் : அஜ்மீர் “காஜா மொய்னுதீன் சிஸ்டி’ தர்காவில் நடந்த குண்டுவெடிப்புக்கு ஹர்கத்உல்இஸ்லாமிஜிகாதி அமைப்பு தான் காரணம் என தெரிகிறது. மேலும் தர்காவில் நேற்று ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் புகழ் பெற்ற காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நேற்று முன்தினம் குண்டு வெடித்ததில், இரண்டு பேர் உயிரிழந்தனர். 28 பேர் படுகாயமடைந்தனர்.இந்த குண்டு வெடிப்புக்கு வங்க தேசத்தில் இருந்து செயல்பட்டு வரும் ஹர்கத்உல்ஜிகாதிஇஸ்லாமி என்ற இயக்கமே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.வெடிகுண்டில் “ட்ரைநைட்ரோடோலீன்’ என்ற வெடிபொருள் கலவையை பயங்கரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர். ஹர்கத் உல் இஸ்லாமி இயக்கத்துடன் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கமும் இதில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

குண்டு வெடிப்பில் ஐதராபாத்தை சேர்ந்த ஷாகித் பிலால் என்ற பயங்கரவாதியின் மீது தான் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.குண்டு வெடிப்பு தொடர்பாக அஜ்மீரை சேர்ந்த ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையின் மூலம் இவ்வழக்கில் துப்பு துலங்குவதற்கான வாய்ப்பு இல்லை என வட்டாரங்கள் தெரிவித்தன.அஜ்மீர் தர்காவின் முக்கிய நுழைவு வாயில் அருகே நேற்று ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கப்பட்டது. சம்பவ இடத்தை ஆராய்வதற்காக தேசிய பாதுகாப்பு படையினரும் வந்துள்ளனர் என்று மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஏ.கே.ஜெயின் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா நேற்று அஜ்மீர் தர்காவில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டார். குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் அவர் கூறுகையில், “தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்தப்படும்.

குர்ஜார்கள் நடத்தி வரும் போராட்டத்தையொட்டி பெரும்பாலான போலீசார் பாதுகாப்பு பணிக்காக பல இடங்களில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் இதில் எந்த பாதுகாப்பு குளறுபடியும் ஏற்படவில்லை’ என்றார்.

Posted in Ajmer, Bangladesh, Begum-Ki-Dhalan, Bilal, Bombs, dargah, explosion, Harkat-ul-Jehadi, HuJI, hyd, Ifthaar, Ifthar, Investigation, Islam, Jaish-e-Mohammed, JeM, Karachi, Kashmir, Khwaja Mohiuddin Chisti, Law, Mecca, Militants, Mosque, Musilm, Order, PAK, Pakistan, Police, Raj, Ramzan, Shahid, Shahid Bilal, Shrine, Sufi, Suspect, Terrorism, Terrorists, TNT | Leave a Comment »

Tamil Eelam Fighter jet: LTTE vs Sri Lanka

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 3, 2007

தமிழ் ஈழத்தின் போர் விமானம்?

Tamil Eelam Eezham LTTE Sri Lanka jet Plane

எல்.டி.டி.ஈ. தரப்பில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டதாக ஈ-மெயில் மூலம் தகவல்கள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டு
வருகிறது. எனினும், யார் இந்த புகைப்படத்தை வெளியிட்டார்கள் என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை. இலங்கை அரசை மிரட்ட வேண்டும் என்பதற்காக விடுதலைப்புலிகள் இரு விமானங்களை பறக்க விட்டனர்.
எனவே அவர்களிடம் உண்மையான விமானங்கள் இல்லை என்ற விமர்சனம் எழுந்ததையடுத்து இந்த புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

Posted in Airplane, Ammunitions, Arms, Attack, Attacks, Bombs, dead, Eelam, Eezam, Eezham, Extremism, Extremist, Extremists, Fighter, Freedom, Images, Jets, LTTE, Photos, Pictures, Plane, Prabhagaran, Prabhakaran, Srilanka, Tamil, Terrorism, terrorist, Terrorists | 2 Comments »

Nuke Deal With US Draws Domestic Opposition – Indian Communists Say US Nuclear Accord Lacks House Support

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

எண்ணங்கள்: 1…2…3… ஷாக் – ஞாநி – ஓ பக்கங்கள் பதில்


இடதுசாரிகளின் இரட்டைவேடம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதையும், இடதுசாரிகளின் தயவில்தான் இந்த அரசு ஆட்சியினைத் தொடர்கிறது என்பதையும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதும் இடதுசாரிக் கட்சிகள்தான். இந்தியாவும் அமெரிக்காவும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தது முதல் அதை எதிர்த்து வருவதும் அதே இடதுசாரிக் கட்சிகள்தான்.உண்மையிலேயே, இந்த ஒப்பந்தம் ஏற்படுவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று இடதுசாரிகள் கருதியிருந்தால், ஆரம்ப நிலையிலேயே இந்த முயற்சியைக் கைவிடச் செய்திருக்க முடியும். தொழிலாளர் காப்பீட்டுத் திட்டப் பிரச்னையிலும், பொதுத்துறை நிறுவனங்களின் விஷயத்திலும் அரசை அடிபணிய வைக்க முடிந்த இடதுசாரிகளால் இதுபோன்ற தேசத்துக்கே ஆபத்தான விஷயத்தில் ஏன் தலையிட்டுத் தடுத்து நிறுத்த முடியவில்லை?

இந்திய மற்றும் அமெரிக்க தரப்பினர், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்திற்கு ஒரு முழுவடிவமும் கொடுத்து, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நவம்பர் மாதம், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அமெரிக்கக் காங்கிரசுக்கு உரிமை உண்டே தவிர, இந்த ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றங்களையும் இனிமேல் செய்ய முடியாது என்பதும் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம்.

இந்தியத் தரப்பைப் பொருத்தவரை, இதுபோன்ற ஒப்பந்தம் என்பது ஓர் அரசின் நிர்வாக உரிமை (Executive Prerogative). அரசு சம்மதித்தால், இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். ஆனால், அமெரிக்கக் காங்கிரசுக்கு இதில் மாற்றம் செய்ய எப்படி உரிமை இல்லையோ, அதேபோல, இந்திய நாடாளுமன்றமும் இந்த உடன்படிக்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இதை நிராகரிக்கும் உரிமையும் கிடையாது.

இதெல்லாம், இடதுசாரிகளுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆரம்பம் முதலே, தாங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதுபோலப் பேசுகிறார்களே தவிர, இந்த ஒப்பந்தம் கூடாது என்று அரசைத் தடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடருமானால் எங்களது ஆதரவு இந்த அரசுக்குக் கிடையாது என்று இடதுசாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தால், அரசு இந்த விஷயத்தைக் கைவிட்டிருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.

அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில், எந்தவித பயமுமின்றி மன்மோகன் சிங் அரசு செயல்பட்ட விதத்தில் இருந்து, இடதுசாரிகளின் மறைமுக ஆதரவுடன்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இல்லையென்றால், “”அணுசக்தி ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமில்லை” என்று தைரியமாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதிலிருந்தே, இந்த விஷயத்தில் இடதுசாரிகளிடம் பேசி வைத்துக் கொண்டுதான் அரசு செயல்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாக இந்த ஒப்பந்தம் பற்றி இதுவரை நாடாளுமன்றத்தின் அனுமதி பெற அவசியம் இல்லாமல், நிர்வாக விஷயமாக இதைக் கையாண்டிருக்கிறது அரசு. இனிமேல், நாடாளுமன்றம் வேண்டாம் என்று நிராகரித்தால் மட்டும் போதாது. இந்த அரசு கவிழ்ந்தால் மட்டுமே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகும். இந்த நிலைமை ஏற்படும்வரை இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களே தவிர, ஒப்பந்தத்தைக் கைவிட நிர்பந்திக்கவில்லையே, ஏன்?

நாளைக்கே, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு என்று வந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றுவோம் என்கிறார் ஜோதிபாசு. அதாவது, “இந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை’ என்று பிரதமர் கூறுவதை சொல்லாமல் சொல்கிறார் அவர்.

தேச நலனுக்கு ஆபத்து என்று தெரிகிறது. தங்களது கட்சியின் கொள்கைகளுக்கு மாறானது என்று அவர்களே கூறுகிறார்கள். இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டிய துர்பாக்கியம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அரசுக்கு ஆதரவு மட்டும் தொடரும் என்கிறார்கள்.

ஏன் இந்த இரட்டை வேடம்?

——————————————————————————————————————————-
அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதியா?

என். ராமதுரை

இந்தியாவில் அமெரிக்காவும் பிற நாடுகளும் அணுமின் நிலையங்களை அமைக்க வழி செய்வது தொடர்பாக அமெரிக்கா – இந்தியா இடையே இப்போது விரிவான உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதுபற்றி நாட்டில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியா இதன் மூலம் அமெரிக்காவிடம் அடிமைப்பட்டு விட்டது போல ஒரு சாரார் கூறுகின்றனர். ஆளும் கட்சித் தரப்பினரோ இதை வன்மையாக மறுக்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியான ஒப்பந்தம் ஏற்படுவது இது முதல் தடவையல்ல. இந்தியாவில் அமெரிக்க உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுவதும் முதல் தடவையல்ல. சொல்லப்போனால் இப்படியான ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க உதவியுடன் 1969-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையம் மும்பை அருகே தாராப்பூரில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல கனடாவின் உதவியுடன் ராஜஸ்தானில் 1972-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையமும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

அணுமின் நிலையம் தொடர்பான கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் இப்போது இந்தியா மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதாக நினைத்தால் அதுவும் தவறு. தாராப்பூர் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும், கனடிய உதவியுடன் ராஜஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும் நாம் இப்போது சொல்லப்படுகிற கட்டுதிட்டங்களை – கண்காணிப்பு ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தோம்.

தமிழகத்தில் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் அணுமின்சார நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இது குறித்து ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சகலவித கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் கீழ்தான் செயல்படும். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ஒப்பந்தங்களில் இவை அடங்கியுள்ளன. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ரஷியாவுடனான ஒப்பந்த விவரங்கள்~அவசியமில்லை என்ற காரணத்தால்~ வெளியிடப்படவில்லை.

ஆகவே அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டால் அது அமெரிக்காவிடம் சரணாகதி ஆவது போலவும் ரஷியாவுடன் அதே மாதிரியான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால் அப்படியான சரணாகதி இல்லை போலவும் வாதிப்பதும் தவறு.

அணுசக்தி விஷயத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா ஒரு விதமாகவும் ரஷியா வேறு விதமாகவும் நடந்து கொள்வதாக நினைத்தால் அதுவும் தவறு. அணுசக்தியைத் தவறாக (அணுகுண்டு தயாரிப்புக்கு) பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு நாட்டுக்கும் அணுசக்தி எரிபொருள், அணுஉலை இயந்திரங்கள், அணுமின் நிலைய இயந்திரங்கள் முதலியவற்றை அளிக்கக்கூடாது என்று கூறும் 45 நாடுகள் அடங்கிய குழுவில் அமெரிக்காவும் ரஷியாவும் அங்கம் வகிக்கின்றன.

இந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க ஆரம்பத்தில் உதவிய அமெரிக்காவும் கனடாவும் பின்னர் பின் வாங்கியதற்குக் காரணம் உண்டு. இந்தியா 1974ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டை வெடித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதைச் சார்ந்த பல நாடுகளும் இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான எந்த உதவியையும் அளிக்க மாட்டோம் என்று அறிவித்தன. இந்தியா மீது பல தடைகளை அமல்படுத்தின. 1988-ல் இந்தியா நிலத்துக்கு அடியில் பல அணுகுண்டுகளை வெடித்தபோது இத் தடைகள் நீடித்தன. இந்தியா மீது 1974-க்குப் பிறகு விதிக்கப்பட்ட தடைகள் இந்தியாவுக்கு ஒருவகையில் நல்லதாகியது. இந்தியா சொந்தமாக அணு ஆராய்ச்சி உலைகளை அமைத்துக் கொண்டது. சொந்த முயற்சியில் பல அணு மின் நிலையங்களை அமைத்துக் கொண்டது. தேவையில்லை என்று கருதி அமெரிக்கா பின்பற்றாத தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பாக முன்னேறியுள்ளது. அது தோரியத்தைப் பயன்படுத்துகிற முறையாகும்.

ஆனால் இவ்வளவு முன்னேற்றம் இருந்தும் எதற்கு நாம் சுமார் 30 ஆண்டுக்காலத்துக்குப் பிறகு அணுசக்தி விஷயத்தில் பிற நாடுகளின் உதவியை நாட வேண்டும்? முதலாவதாக இப்போது இந்தியாவுக்கு மின்சாரப் பசி உள்ளது. அணுசக்தி மூலம் தான் இதைத் தீர்க்க முடியும். இந்தியா சொந்தமாக உருவாக்கியுள்ள அணுமின் நிலையங்கள் பெரும்பாலானவற்றின் திறன் 220 மெகாவாட் அளவில் உள்ளது. அண்மையில்தான் 500 மெகாவாட் அணுமின் உலையை நிர்மாணித்துள்ளோம். 1000 மெகாவாட் திறனை எட்ட இன்னும் அதிக காலம் ஆகலாம். தவிர, “”நாட்டில் போதுமான யுரேனியம் இல்லை” என்று இந்திய அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த யுரேனியத்தை நாம் விலை கொடுத்து வாங்கத் தயாராக இருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், அணுசக்திப் பொருள் அளிப்போர் குழு பின்பற்றும் கட்டுதிட்டங்கள், சர்வதேச அணுசக்தி அமைப்பின் விதிமுறைகள் ஆகியவை குறுக்கே நிற்கின்றன.

தோரியம் முறை இருக்கிறதே என்று கேட்கலாம். இத் தொழில்நுட்பம் சிக்கலானது. சுருங்கச் சொன்னால் முதலில் யுரேனியத்தை அணு ஆலைகளில் “”அவிக்க” வேண்டும். பிறகு ஈனுலைகளில் (Breeder Reactors) யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் பயன்படுத்தி தோரியத்தை “”அவிக்க” வேண்டும். இப்படியான பல கட்டங்களுக்குப் பிறகுதான் அணுமின் நிலையங்களுக்கான யுரேனியம் – 233 என்ற அணுப் பொருள் கிடைக்கும். இதற்கெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

அணுசக்தி விஷயத்தில் உலகில் பல கட்டுதிட்டங்கள் இருப்பதற்குக் காரணம் உள்ளது. அணுமின் நிலையம் இருந்தால்போதும். ஒரு நாடு அணுகுண்டு தயாரித்துவிட முடியும். உலகில் சர்வாதிகாரப் போக்கு கொண்ட நாடுகள் அணுகுண்டு தயாரித்து உலகை மிரட்டும் நிலை ஏற்படக்கூடாது என்பதே இவற்றின் நோக்கம். அணு உலையில் (அணுமின் நிலையத்திலும்) யுரேனியம் அடங்கிய நீண்ட குழல்கள் உண்டு. அணுமின் நிலையம் செயல்படும்போது “”முக்கால் வேக்காட்டில்” இந்த தண்டுகளை வெளியே எடுத்தால் ஏற்கெனவே ஓரளவு எரிந்துபோன யுரேனியத்தில் வேறு பல அணுசக்திப் பொருள்கள் இருக்கும். இவற்றில் புளூட்டோனியமும் ஒன்று. இந்த புளூட்டோனியத்தைத் தனியே பிரித்தால் அதைக் கொண்டு அணுகுண்டு செய்து விடலாம். ஆகவே எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் யுரேனியத் தண்டுகள் எப்போது வெளியே எடுக்கப்படுகின்றன அவை என்ன செய்யப்படுகின்றன என்பதற்கு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தானியங்கி கேமராக்களும் வைக்கப்படும்.

இந்தியா இப்போது எல்லா அணுமின் நிலையங்களிலும் இந்தக் கண்காணிப்பு ஏற்பாடுகளைப் பின்பற்ற உடன்பட்டுள்ளது. ஆனால் ஒன்று. இந்தியா ராணுவ காரியங்களுக்கான அணு உலைகள் என்று பட்டியலிட்டு அறிவிக்கின்ற அணு உலைகளில் இந்தக் கண்காணிப்பு இராது. ஆகவே இந்தியா அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிப்பதைப் பொருத்தவரையில் எந்தப் பிரச்னையும் கண்காணிப்பும் இராது. எரிந்த யுரேனியத் தண்டுகளிலிருந்து அணுப் பொருள்களைப் பிரிப்பதில் இந்தியாவின் உரிமை பறிபோய்விட்டது போல கூக்குரல் கிளப்பப்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சு நடத்தி இதற்கான ஆலை அமைக்கப்படும் என இப்போதைய ஒப்பந்தம் கூறுகிறது. தவிர, இந்தியாவில் உள்ள ராணுவ காரிய அணு உலைகளுக்கு இது விஷயத்தில் கட்டுப்பாடு கிடையாது.

இந்தியா விரும்பினால் மேற்கொண்டு அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்க இயலாதபடி இப்போதைய ஒப்பந்தம் தடுப்பதாகக் கூறுவதும் தவறு. அணுகுண்டுகளை மேலும் செம்மையாகத் தயாரிக்க அணுகுண்டுகளை அடிக்கடி வெடித்துச் சோதிக்கும் முறையை மேலை நாடுகள் முன்பு பின்பற்றின என்பது வாஸ்தவமே. ஆனால் இப்போதெல்லாம் புதிய வகை அணுகுண்டின் திறன் எப்படி இருக்கும் என்பதை கம்ப்யூட்டர் மூலமே கண்டறியும் முறை வந்து விட்டது. ஆகவே புது வகை அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தாக வேண்டிய அவசியமும் இல்லை எனலாம்.

இப்போது அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தமானது நாம் அமெரிக்காவிடமிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அணுமின் நிலைய அணு உலைகள், தேவையான இயந்திரங்கள் ஆகியவற்றையும் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிடமிருந்து யுரேனியத்தை வாங்குவதற்கும் உதவி புரியும்.

இப்படியாக வாங்குவது எல்லாம் அடிப்படையில் வர்த்தக பேரங்களே. இவற்றை அளிக்கப்போவது அந்தந்த நாடுகளின் தனியார் நிறுவனங்களே. அவை இந்தியாவுக்கு இவற்றை விற்றுப் பணம் பண்ணத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு அவ்வப்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டு அரசின் மீது நிர்பந்தத்தைச் செலுத்தி~இந்தியாவுக்கு சாதகமான வகையில்~ பிரச்னையைத் தீர்க்க முயலும். ஆகவே அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

——————————————————————————————————————————-

அரசுக்கு “கெடு’ ஆரம்பம்?

நீரஜா செüத்ரி

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டு அமல் செய்யக்கூடாது, அப்படியே கிடப்பில் போட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýக்கு விடுத்த இறுதி எச்சரிக்கையை அடுத்து, “”இரண்டின் எதிர்காலம்” என்ன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதில் ஒன்று, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எதிர்காலம், மற்றொன்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம்.

இந்த அரசு போய்விடுமா என்பதல்ல, இப்போதுள்ள கேள்வி, இந்த அரசு எப்போது போகும் என்பதுதான் கேள்வி. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2008 ஜனவரியிலோ அல்லது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளோ நடைபெறலாம்; அது காங்கிரஸின் விருப்பத்தைப் பொறுத்தது.

இனி அரசியல் களத்தில் அரங்கேறக்கூடிய காட்சிகளைப் பின்வருமாறு ஊகிக்கலாம்.

காட்சி 1:

பிரதமர் எடுத்த முடிவுப்படி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க விருப்பம் இருந்தால் எங்கள் அரசை ஆதரியுங்கள், இல்லையென்றால் உங்கள் விருப்பப்படி செய்துகொள்ளுங்கள் என்று இடதுசாரிகளிடம் முகத்துக்கு நேராகக் கூறிவிடுவது. இப்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் கெüரவத்தைக் காக்க இதுவே நல்ல வழி என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.

நாட்டு நலனில் அக்கறை கொண்டுதான் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என்று மக்களிடம் விளக்கி, அடுத்த பொதுத் தேர்தலை இடதுசாரிகள் போன்ற தோழமைக் கட்சிகளின் துணை இல்லாமல் சந்தித்து, வெற்றிபெற்று மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை அமைப்பது; அப்படியே ஒப்பந்தத்தையும் தொடர முடியும் என்று அத் தலைவர்கள் கூறுகின்றனர்.

அப்படி என்றால் உடனே தேர்தலை நடத்தியாக வேண்டும். தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன்தான் தீர்மானிக்கும் என்றாலும், அரசு கவிழ்ந்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம்.

மன்மோகன் அரசு ஆட்சியை இழந்தால், இடைக்கால அரசால் ஒப்பந்தத்தை அமல் செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்க முடியாது, எனவே ஒப்பந்தமே ரத்தாகிவிடும்.

காட்சி 2:

இடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றாலும் சிறுபான்மை அரசாகவே காலம் தள்ளுவது, அப்படி இருக்கும்போதே இந்த ஒப்பந்தத்தை அமல்செய்ய தொடர் நடவடிக்கைகளை எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானிப்பது. அதற்காக மாயாவதி கட்சியின் 18 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அந்தக் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஆளும் கூட்டணியின் வலுவை 219-லிருந்து 237 ஆக உயர்த்துவது.

ஆதரவை விலக்கிக் கொண்டாலும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து இடதுசாரி கட்சிகள் வாக்களிக்காது, எனவே மேலும் சில மாதங்களுக்கு அரசை இப்படியே ஓட்டலாம்.

அப்போது இடதுசாரிகளுக்கு தருமசங்கடமான நிலைமை ஏற்படும். தாங்கள் தீவிரமாக எதிர்த்த ஒப்பந்தத்தை அமல் செய்யும் அரசை நீடிக்க விடுவதா, அல்லது அதைக் கவிழ்ப்பதற்காக மதவாதிகள் என்று முத்திரை குத்திய பாரதீய ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதா என்பதே அது.

காட்சி 3:

ஏதாவது ஒரு சாக்கு சொல்லி, அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் நிறுத்திவிடுவது, அரசை காப்பாற்றிக் கொண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார் ஆவது.

அப்படி என்றால் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிக்க முடியாது. அவர்தான் இந்த ஒப்பந்தத்தைத் தீவிரமாக ஆதரித்துப் பேசினார், எனவே தார்மிக அடிப்படையில் அவர் விலகியே தீரவேண்டும்.

அதே சமயம் பிரதமரின் முடிவுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சி விலகி இருக்க முடியாது. அவரது கருத்தைத்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஆதரித்தது, சோனியா காந்தியும் ஒப்புதல் வழங்கினார்.

“”இந்த ஒப்பந்தம் இறுதியானது, இதை ஏற்க முடியாவிட்டால் ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று பேசி இடதுசாரிகளை பிரதமர் மன்மோகன் சிங் உசுப்பிவிட்டதை, சோனியா காந்தி விரும்பவில்லை.

அதிகாரிகளுடன் பேசுவதையும் செயல்படுவதையும் மிகவும் விரும்பும் மன்மோகன் சிங், “”இடதுசாரிகளுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்” என்று அவர்களில் யாரோ சொன்ன மந்திராலோசனையைக் கேட்டு, பெரிய வம்பில் மாட்டிக்கொண்டுவிட்டார்.

சிங்குர், நந்திகிராம் விவகாரங்களில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பதாலும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் உள்பூசல் உச்ச கட்டத்தில் இருப்பதாலும் உடனடியாக மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடப்பதை இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் என்றாலும் வேறு வழியில்லாவிட்டால், அதற்கும் அவர்கள் தயாராகிவிடுவார்கள்.

காட்சி 4:

பிரதமர் பதவியிலிருந்து மன்மோகனை மாற்றிவிட்டு, புதியவரைக் கொண்டுவருவது. சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆறப்போடுவது. மக்களை பாதிக்கும் விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி மக்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பது. அமெரிக்காவுடன் நெருங்கியதால் புண்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்களுக்கு மருந்து போடுவது.

இதையெல்லாம் செய்யக் கூடியவர், மார்க்சிஸ்டுகளையும் பாரதீய ஜனதாவையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரிந்தவர் – ஜார்ஜ் புஷ்ஷை சமாதானப்படுத்தக்கூடியவர் – பிரணாப் முகர்ஜிதான். வங்காளியான முகர்ஜியைப் பிரதமராக்குவதற்காகவே இடதுசாரிகள் இப்படி நாடகம் ஆடுகின்றனரோ என்றுகூட சில காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ளூர சந்தேகம் இருக்கிறது.

இந்தச்சூழலைக் கையாளும் திறமை முகர்ஜியைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மையே ஆனாலும், “”இவரைப் பிரதமராக்கினால் நாளை நம் செல்வாக்கு என்ன ஆகும்” என்ற அச்சம் சோனியா காந்திக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.

————————————————————————————————————————————————

விதியின் விளையாட்டு!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது என்று கூறினால், இப்போது அது சிறிது அதிகபட்சமாகத் தோன்றும். அதுவும், அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்கும் மனப்போக்கில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசுக்குக் கடிவாளம் போல இடதுசாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அவ்வாறு கூறுவது கொஞ்சம் அதிகமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சற்று உற்றுநோக்கினால், நமது பார்வைகள் மாறுகின்றன. சர்வதேச விவகாரமொன்றில் தேசிய நலனைக் காப்பதற்காக பிரகாஷ் காரத் போராடிக்கொண்டிருக்கிறார்; ஆனால், முக்கியமான மாநிலங்களில் ஒழுங்கீனமாக நடக்கும் தனது கட்சியைச் சேர்ந்த சொந்தத் தோழர்களையே கட்டுப்படுத்த முடியாமல் அவர் தவிப்பது தெரிகிறது. இதுதான் பிரச்சினை.

தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பலம் பொருந்தி இருப்பதற்குக் காரணம், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அக் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கே ஆகும். மேற்கு வங்கக் கட்சியில் உள்ள பிரச்சினைகளை காரத்தால் எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், “காலத்துக்கு ஏற்ப கட்சியின் கொள்கைகளில் மாற்றம் தேவையா? புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா?’ என்பது போன்ற தத்துவார்த்தப் பிரச்சினைகள்தான் மேற்கு வங்கத்தில் எழும் பிரச்சினை. அதோடு, புத்ததேவ் பட்டாச்சார்ஜி, ஜோதி பாசு போன்ற பெருமைக்குரிய தலைவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, மேற்கு வங்க அரசுக்கும் கட்சிக்கும் இடையே செயல்பாடுகளில் ஒற்றுமை நிலவுகிறது.

ஆனால், கேரளத்தில் இதற்கு நேர்மாறான நிலை. அக் கட்சிக்குள் நடந்துகொண்டிருக்கும் உள்பூசல், பொறுத்துக்கொள்ளத் தக்க எல்லைகளைத் தாண்டிச் சென்றுவிட்டது. முதலாளித்துவ ஊழல் கூட்டத்தின் பிடியில் கட்சி சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது; அதைக் கண்டு அக் கட்சியின் தோழர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அங்கு ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தலையிடுவதைப்போல ஒரு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுத்தது. ஆனால், இன்னும் ஒழுங்கீனம்தான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில், கட்சியின் மாநிலக் குழுச் செயலாளரையும் முதலமைச்சரையும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தது கட்சி; அவர்கள் பகிரங்கமாக மோதிக்கொள்வதை அந் நடவடிக்கையால்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. முதல்வரின் ஆதரவாளர்களைக் “கட்டுப்படுத்தி’ வைக்கும் மாநிலச் செயலரின் நடவடிக்கைகளுக்கு இப்போதைக்கு அரசியல் தலைமைக் குழு தடை போட்டிருக்கிறது. அந்தத் தடையால் பயன் விளையும் என்று யாரும் நினைக்கவில்லை.

கேரளத்தில் மக்களின் நம்பிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இவ்வளவு வேகமாக இழந்துவிட்டது என்பது குறித்துத்தான் இப்போது பிரகாஷ் காரத் கவலைப்பட வேண்டும். தமது கட்சி மீது எந்த விமர்சனம் வந்தாலும் பொறுத்துக்கொள்வார்கள்; ஆனால், ஊழல் புகார்கள் கூறப்படுவதைத்தான் தொழிலாளி வர்க்கத்தாலும் இடதுசாரி அறிவுஜீவிகளாலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. அனைத்துப் புகார்களுமே ஒரு குறிப்பிட்ட கோஷ்டியின் மீதே கூறப்படுகின்றன. அதைச் சீர்படுத்துவதற்கு பெயரளவுக்குத்தான் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. நோய் குணமாக வேண்டுமானால் அறுவைச் சிகிச்சையே செய்ய வேண்டும் என்னும் பொழுது, அமிர்தாஞ்சன் பூசிக்கொண்டிருக்கிறது, கட்சியின் அரசியல் தலைமைக் குழு. இதைப் பார்த்து யாரும் ஏமாந்துவிட மாட்டார்கள்.

இதைத் தவிர, காரத் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த பிறகு, அடுத்த தேர்தலிலும் மீண்டும் இடது முன்னணியே தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரளத்தில் ஒரு வரலாற்றையே உருவாக்கக்கூடிய அளவுக்கு அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களையெல்லாம் கைப்பற்றுவதற்கான அதிரடி நடவடிக்கையை கேரள அரசு எடுத்தபொழுது, அந்த அளவுக்கு பொதுமக்கள் அந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தொடக்கத்தில், உயர் நீதிமன்றமே அதற்கு ஆதரவாக இருந்தது.

ஆனால், விரைவிலேயே தான் அத்தகைய நிலையை எடுத்ததற்கு வெட்கப்படுவதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம், அரசின் அந்த நடவடிக்கைகளையெல்லாம் அப்பட்டமான அதிகாரப் போட்டி சீர்குலைத்துவிட்டதுதான். அந்தச் சீர்குலைவுச் செயலில் முன்னிலையில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இடது முன்னணி ஆட்சிக்கு நீடித்த பெருமையைத் தேடித் தந்திருக்க வேண்டிய ஒரு நடவடிக்கையானது, அதிகாரப் போட்டியால், ஓர் அவமானகரமான அத்தியாயமாக மாறிவிட்டது. அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, அடுத்துக் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே மக்களால் தூக்கி எறியப்படத்தக்க நிலைக்கு இடது முன்னணி அரசின் மதிப்பு தாழ்ந்துவிட்டது.

கேரளத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி.க்களே தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால் என்ன செய்வார் காரத்? பிரகாஷ் காரத் போன்ற பலமான தலைவரைக் கொண்ட வலுவான இடதுசாரிக் கட்சியொன்று தில்லியில் இருக்க வேண்டியது இன்று நாட்டின் தேவை. ஆனால், கொழுத்த மோசடிப் பேர்வழிகளைத் தலைவர்களாகக் கொண்ட பணக்கார நிறுவனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறிவிட்டதென்றால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்; சுய லாபத்துக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே இவ்வளவு சுலபமாக சீர்குலைவுச் செயலில் ஈடுபடுமென்றால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இறுதியில், தான் நினைத்ததை ஜார்ஜ் புஷ் சாதித்துக்கொள்ள காரத் அனுமதிப்பாராயின், அதுவே விதியின் இறுதி விளையாட்டாக ஆகிவிடும்!

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

———————————————————————————————————-

தேர்தலைச் சந்திக்க கட்சிகள் தயாரா?

நீரஜா செüத்ரி

இந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் காங்கிரஸýக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருப்பதை அடுத்து, “கால அவகாசம் தேடும்’ அரசியல் விளையாட்டுதான் தில்லியில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

எந்தக் கட்சியும் இப்போது தேர்தலைச் சந்திக்கத் தயாரில்லை. எனினும், 2008, மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்குமாறு மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதற்கும், கட்சி அமைப்புகளைத் தயார் செய்வதற்கும் இன்னும் சிறிது கால அவகாசம் இருந்தால் நல்லது என்றே ஒவ்வொரு கட்சியும் நினைக்கும்.

“ஹைட் சட்ட’த்தின் விளைவுகள் குறித்து ஆராய ஒரு குழுவை அமைப்பதன் மூலமும், நாடாளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலமும் அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னையில், “”ஒன்று, நீங்கள் திருப்திகரமான விளக்கத்தைத் தாருங்கள்; அல்லது, நாங்கள் உங்களுக்குத் திருப்திகரமான விளக்கத்தை அளிக்கிறோம்” என்ற நிலையில் காங்கிரஸýம் இடதுசாரிக் கட்சிகளும் நிற்கின்றன. அடுத்த இரு மாதங்களிலும் தமது நிலைகளை விளக்கிப் பிரசாரம் செய்ய இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.

பிரகாஷ் காரத் சென்னையிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்; ஏ.பி. பரதன் கோல்கத்தாவிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார். இரு பிரசாரப் பயணங்களும் விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 8-ம் தேதி பிரமாண்ட பேரணியுடன் நிறைவடைகின்றன. இரு அணுமின் உலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மும்பைக்குச் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் மூலமாக, நாட்டின் அணுமின் திட்டங்களில் எந்த சமரசத்தையும் தாம் செய்துகொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அவரது நோக்கம்.

அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டால், அதாவது சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுப்பதற்கு, அக் கட்சியின் மத்தியக் குழு அதிகாரம் அளித்திருக்கிறது. ஆனால், அக் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு இப்போது தேர்தலைச் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நந்திகிராமும் சிங்குரும் அக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.

ஹால்டியாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. காங்கிரஸýடன் மம்தா பானர்ஜி உடன்பாடு செய்துகொண்டதே அதற்குக் காரணம். மக்களவைத் தேர்தல் வந்தால் அதிலும் இது தொடரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மம்தாவும் அதை மறுக்கவில்லை; அதோடு, அணுசக்தி உடன்பாட்டில் பிரதமரின் நிலையை ஆதரித்துள்ளார் அவர்.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்றுவரும் உள்கட்சிப் பூசலைப் பார்க்கும் பொழுது, தற்போதைய ஆதரவை அங்கு அக் கட்சி நிலைநிறுத்திக்கொள்வது கடினம் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான நிலையை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருப்பதால் நாடு முழுவதும் முஸ்லிம்களின் ஆதரவு அதற்குக் கிடைக்கக்கூடும். ஆனால், அதை வாக்குகளாக மாற்றுவது அக் கட்சிக்குக் கடினம். ஏனென்றால், நாட்டின் பல பகுதிகளில் அக் கட்சிக்குச் செல்வாக்கு இல்லை. 10,000-த்திலிருந்து 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அக் கட்சி தோல்வியுற்ற தொகுதிகளில் வேண்டுமானால், அக் கட்சிக்குப் பயன் கிடைக்கலாம்.

பாரதீய ஜனதாவும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. இடதுசாரி ~ ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (3-வது அணி) ஆகியவற்றுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் நடுவில் சிக்கி நசுங்கிப் போய்விடுவோம் என்று அஞ்சுகிறது பாரதீய ஜனதா கட்சி. தேர்தலுக்கு அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னை காரணமாகிவிட்டால், இடதுசாரிகளின் மறுபிரதியாகக் குறுகிப் போய்விடுவோம் என்று பாஜகவில் உள்ள பல தலைவர்கள் கருதுகின்றனர். விலைவாசி உயர்வுப் பிரச்னையோடு, தமக்கே உரித்தான பிரச்னை ஏதாவது கிடைக்காதா என்று அவர்கள் – எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இன்றைய சூழலில் தேர்தலை எதிர்கொள்ள பாரதீய ஜனதாவுக்குத் தலைமை தாங்கக்கூடிய தகுதி படைத்த தலைவர் எல்.கே. அத்வானிதான். இயல்பாகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராகவும் அவர்தான் இருக்க முடியும். வாஜ்பாயோ உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்; ராஜ்நாத் சிங்கின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ்-ûஸப் பொருத்தவரை விரும்பத்தகாத நபராக ஆகிவிட்டார் அத்வானி. பாரதீய ஜனதாவின் முடிவுகளில் தான் தலையிடாமல் விலகிக்கொள்வதாக ஆர்எஸ்எஸ் இப்போது கூறக்கூடும். ஆனால், பூசல்களால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டதுதான்.

நவம்பரில் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் பாஜக வெற்றிபெற்றால், மக்களவைத் தேர்தலிலும் அது அக் கட்சிக்கு உதவுவதாக இருக்கும். அத்வானியின் செல்வாக்கிலும் அதன் தாக்கம் இருக்கும்.

காங்கிரûஸப் பொருத்தவரை, அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அது பின்வாங்க முடியாது. அதன் சாதக, பாதகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அந்த உடன்பாட்டைச் செயல்படுத்துவதைத் தாமதப்படுத்தினால், காங்கிரஸின் அதிகாரத்தை அது பாதிக்கக்கூடும்; சர்வதேச அளவில் அதன் மதிப்பைக் குறைக்கக்கூடும்; இடதுசாரிகளின் நெருக்குதலுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு அதைத் தள்ளிவிட்டுவிடும்; அதோடு, தேச நலனுக்கு விரோதமான எதையோ அக் கட்சி செய்ய முனைந்தது போன்ற ஒரு கருத்தையும் ஏற்படுத்திவிடும்.

இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பது பிரதமரது கெüரவம் மட்டுமல்ல; காங்கிரஸýம் அதன் தலைவர் சோனியா காந்தியும் அந்த உடன்பாட்டைப் பகிரங்கமாக அங்கீகரித்து இருப்பதால் அவர்களின் கெüரவத்தையும் பாதிக்கக்கூடியதாகிவிட்டது இப் பிரச்னை. சோனியாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன்தான் அமெரிக்காவுடன் அந்த உடன்பாட்டை விவாதித்து முடிவு செய்தார்.

எனவே, உடன்பாட்டுக்கு ஆதரவாகப் போராடுவதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இல்லை.

எனவே, 2008 ஏப்ரலில் தேர்தலை எதிர்கொள்வது என்பது அவ்வளவு மோசமான முடிவல்ல என காங்கிரஸ் நினைக்கிறது. அதோடு பாஜகவும் பலமிழந்து காணப்படுகிறது. தேர்தல் வந்தால், ஆந்திரத்திலும் அசாமிலும் காங்கிரஸýக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்; ஆனால், மம்தாவின் துணையுடன் மேற்கு வங்கத்தில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்; கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், தேசியவாதக் காங்கிரஸ் கூட்டுடன் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்.

இன்றைய சூழலில் மத்தியதர வர்க்கத்தின் ஆதரவையும் காங்கிரஸ் பெறக்கூடும். அதே நேரத்தில் விலைவாசி உயர்வால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; அதோடு, முஸ்லிம்களிடமிருந்தும் அக் கட்சி அன்னியப்பட்டு நிற்கிறது.

காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை கடந்த தேர்தலில் பெற்றதைப் போன்ற வெற்றியை இப்போதும் பெறுமா என்று கூற முடியாது. எனவே, மம்தா, எச்.டி. தேவெ கெüடா மற்றும் பல மாநிலங்களில் உள்ள சிறிய குழுக்களின் ஆதரவு காங்கிரஸýக்கு மிக முக்கியமானதாகிவிடும்.

மக்களவை உறுப்பினர்களிடம் தேர்தலைப் பற்றிப் பேசினாலே கதிகலங்கிவிடுகிறார்கள். இடைத் தேர்தலைத் தவிர்ப்பதற்காக தேசிய அரசை அமைப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்றுகூட கடந்த வாரம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிலர் கூறிக்கொண்டிருந்தனர்.

இப்போதைய நெருக்கடியின் இறுதி முடிவு எப்படி இருந்தாலும் சரி; இதுவரை சில விஞ்ஞானிகளும் கொள்கை வகுப்பாளர்களும் மட்டுமே விவாதித்துக்கொண்டிருந்த அணுவிசைப் பிரச்னை குறித்தும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்கள் விவாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் கோயில் ~ மசூதி போன்ற உணர்ச்சிகரமான விஷயங்கள் தேர்தல் பிரச்னைகளாக இருந்ததற்குப் பதிலாக, வரவிருக்கும் தேர்தல்களில் அணுசக்தியும் வெளியுறவுக் கொள்கையும் பிரச்னைகளாக இருக்கும் என்பது நிச்சயம்!

Posted in abuse, Accord, Alliance, America, Army, Artillery, Assembly, Atom, Atomic, Attack, Bombs, Brinda, China, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Comunists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), deal, defence, Defense, Duty, EU, Europe, Force, House, Jothibasu, Karat, Left, LokSaba, LokSabha, Manmohan, Marines, MP, Navy, NCC, NSS, Nuclear, Nuke, Opposition, Pakistan, Party, Planes, Pokhran, Politics, Power, Prakash, Rajasthan, Reserve, Russia, Somnath, Sonia, Soviet, support, US, USA, USSR, Wars | 1 Comment »