Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘History’ Category

U Nirmala Rani: Women Rights – Perspectives, Timeline, Information

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

“இரும்புத் தாடை தேவதைகள்’

வழக்கறிஞர் உ . நிர்மலா ராணி

இன்று சர்வதேச பெண்கள் தினம். 1908ம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கான பஞ்சாலை பெண் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை கோரி நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தப் போராட்டத்தின் இரண்டாவது முக்கிய கோரிக்கை தான் பெண்களுக்கு வாக்குரிமை!

அந்தக் காலத்தில் வாக்குரிமை என்பது வசதி படைத்தவர்கள் அதிலும் ஆண்களுக்குத்தான் ஓட்டுரிமை. சொத்து வைத்திருக்காத ஆண்கள், வேலையாட்கள், கிரிமினல்கள் இந்த வரிசையில் இறுதியாகப் பெண்கள். இவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை மறுக்கப்பட்டது.

பெண்களுக்கு வாக்குரிமை கோரி நடந்த ஒரு நூற்றாண்டுப் போராட்டம்கூட வரலாற்றில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் மறைக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த சமூகப் போராளி எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், லண்டனில் நடந்த அடிமை முறை எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது, பெண்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடிமை எதிர்ப்பு மாநாட்டிலேயே பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவது கண்டு ஆத்திரமுற்ற எலிசபெத், 1848-ல் செனிகா ஃபால்ஸ் என்ற இடத்தில் பெண்களைத் திரட்டி கோரிக்கைப் பிரகடனத்தை வெளியிட்டார். அது தான் அமெரிக்காவில் பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தின் முதல் வித்து!

ஆரம்பத்தில் வாக்குரிமை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சாத்வீகமான போராட்ட வடிவங்களைக் கையாண்ட பெண்கள், கறுப்பின மக்களுக்கு சம உரிமையளித்த “”சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று விளம்பும் 14, 15 சட்ட திருத்தங்களிலிருந்து பெண்கள் மட்டும் விலக்கப்பட்டபோது பொங்கி எழுந்தனர்.

அமெரிக்காவில் எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், சூஸன் பி ஆண்டனி, ஆலிஸ் பால் ஆகியோரும், இங்கிலாந்தில் எம்மலின் பாங்கர்ஸ்ட் மற்றும் அவரது 2 புதல்விகள் கிறிஸ்டபெல் மற்றும் சில்வியா ஆகியோரும் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினர். நாடாளுமன்றமும் அரசு அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டன. வாயில்களில் வாக்குரிமை கேட்டு பேனர் பிடித்தபடி நாள்கணக்கில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரி உமிழ்ந்தனர்.

கோபமடைந்த பெண்கள் அரசு அலுவலகக் கண்ணாடிக் கதவுகளை சரசரவென்று கல்லெறிந்து உடைத்து நொறுக்கினர். தந்தி வயர்களை வெட்டினர். அதிகாரிகளின் கார் கண்ணாடிகளைத் தூளாக்கினர். எரி குண்டுகளை வீசி அரசு அலுவலகங்களைத் தாக்கினர். கைதாகினர். சிறை சென்றனர். உண்ணாவிரதமிருந்தனர். சிறை அதிகாரிகள் வன்முறையை உபயோகித்த போதும் வாய் வழியாக அவர்களுக்கு உணவூட்ட இயலவில்லை. எனவே தான் இந்தப் பெண் போராளிகளுக்கு “இரும்புத் தாடை தேவதைகள்’ என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டது. எனவே சிறை அதிகாரிகள் அவர்களைக் கட்டாயப்படுத்தி மூக்கின் வழியாக, குழாய் மூலமாக உணவைச் செலுத்தினர்.

உச்சகட்டமாக 1913 ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் எமிலி வைல்டிங் டேவிஸன் என்ற பெண்மணி பெண்களின் ஓட்டுரிமைக்காக யாரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்தார். புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானமான டெர்பியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் குதிரையான ஆன்மர், புயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது கையில் வாக்குரிமை கோரும் அட்டையுடன் குறுக்கே பாய்ந்தார் எமிலி! குதிரையின் கால்களில் மிதிபட்டு சின்னாபின்னமானார். வாக்குரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரே பெண் என்ற புகழையும் பெற்றார்.

இதையடுத்து இங்கிலாந்தில் 1918-ல் நிபந்தனையுடன் கூடிய வாக்குரிமையும், 1928-ல் முழுமையான வாக்குரிமையும் வழங்கப்பட்டது.

அமெரிக்காவிலும், 1919-ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் மசோதா, 19-வது சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட்டாலும் அமெரிக்க சட்ட விதிகளின்படி இந்தத் திருத்தம் சட்டரீதியாக்கப்பட வேண்டுமென்றால், 4-ல் 3 பங்கு மாகாணங்கள் அதாவது 36 மாகாண நாடாளுமன்றங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாகாண நாடாளுமன்றத்திலும் மசோதா நிறைவேற பெண்கள் போராட வேண்டியிருந்தது. மசோதா எதிர்ப்பாளர்கள் அதைத் தோல்வியடையச் செய்யும் பொருட்டு குறைந்தபட்ச கூட்ட வருகையை (கோரம்) தவிர்க்க இரவோடு இரவாக நாட்டை விட்டுப் பறந்தனர். கூட்டங்கள் நடத்த விடாமல் வெளிநடப்புச் செய்தனர். 35 மாகாணங்கள் அங்கீகரித்துவிட, கடைசி மாகாணமான டென்னிஸீயில் மசோதாவைத் தோற்கடிக்க போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்ப்பாளர்கள் தேற்றி வைத்திருந்தனர். மசோதா ஆதரவாளர்கள் மஞ்சள் ரோஜாவையும் எதிர்ப்பாளர்கள் சிவப்பு ரோஜாவையும் அணிந்திருந்தனர். இதைக் கணக்கெடுத்துப் பார்த்தபோது மஞ்சள் ரோஜாவை அணிந்தவர்கள் 47 பேர் எனவும் சிவப்பு ரோஜாவை அணிந்தவர்கள் 49 பேர் எனவும் தெரியவந்தது.

வாக்கெடுப்பின் முதல் சுற்றில் குடியரசுக் கட்சியை சார்ந்த பேங்க் டர்னர், தான் அணிந்திருந்த சிவப்பு ரோஜாவைத் தூக்கியெறிந்துவிட்டு தடாலடியாக அணி தாவினர். இதனால் இரண்டாவது சுற்றில் ஆதரவும், எதிர்ப்பும் 48 – 48 என்று சம நிலையிலிருந்தது.

3-வது சுற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் அமெரிக்க பெண்களின் தலையெழுத்தையே மாற்றியது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 24 வயதான ஹாரிபர்ன் மசோதாவுக்கு எதிர்ப்பாளர். அவர் வாக்களிக்கப் போகும் இறுதி நொடியில் ஒரு துண்டுச் சீட்டு அவருக்கு வந்தது. அதைக் கண்ணால் ஸ்கேன் செய்த ஹாரிபர்ன் மசோதாவுக்கு ஆதரவாக கையைத் தூக்கி விட்டார். மசோதா நிறைவேற்றப்பட்டது. துண்டுச் சீட்டை அனுப்பியது அவருடைய தாயார் ஃபெப் என்ஸ்மிங்கர் பர்ன். அதில் “”நல்ல பையனாக நடந்து கொள்! பெண்கள் வாக்குரிமைக்கு ஆதரவாக ஓட்டுப்போடு” என்றிருந்தது. தாய் – தனயன் சென்டிமென்ட்தான் கடைசியில் அமெரிக்கப் பெண்களுக்கும் கைகொடுத்தது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதற்கான முதல் படியை பெண்கள் வெற்றிகரமாகக் கடந்த பிறகும் கூட தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து மந்திரியாக நியமிக்கப்படுவது, அவர்களுக்கு வழங்கப்படும் துறைகள் வரை பெண்கள் இன்றும் பாரபட்சங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு காரணம் பெண்களின் இடம் என்பது வீட்டின் மூலையில் ஒரு சமையலறையே தவிர நாடாளுமன்றம் அல்ல என்ற ஐயாயிரம் ஆண்டு மனப்போக்கு இன்னமும் மாறவில்லை.

பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து (1893). சமீபத்திய நாடு குவைத் (1995). இன்றும் வாக்குரிமை அளிக்க மறுப்பது சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளும்தான்!

உலகத்தின் முதல் பெண் மந்திரி 1917ல் ரஷியாவில் போல்ஷ்விக் கட்சியால் காபினெட் மந்திரியாக நியமிக்கப்பட்ட அலெக்ஸôண்டர் கோலந்தாய். இங்கிலாந்தில் கூட முதன்முறையாக 2006ல் தான் பரோனஸ் ஹேமேன் என்ற பெண்மணி சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இண்டர் பார்லிமெண்டரி யூனியன் (ஐடம) என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி சர்வதேச அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 85 சதவீதம் ஆண்கள்தான்! உலக அளவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்டவை (40 சதவீதம்) நார்வே, ஸ்வீடன், டென்மார்க் எனும் ஸ்காண்டிநேவிய நாடுகள்தான். இதில் இந்தியாவின் நிலைதான் மிக மோசம்.

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 8.3 சதவீதம்தான். இதை சரிசெய்ய 1996ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடஒதுக்கீடு மசோதா இன்னமும் வெளிச்சத்தை காணவில்லை.

2002 – 2004ல் 20 சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட 2432 வேட்பாளர்களில் பெண்கள் 1525 பேர். அதாவது பாதிக்கு மேல்! ஆனால் ஜெயித்தது 137 பெண்கள்தான். இது 5.6 சதவீதம், 33 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்திருந்தால் இன்று 811 பெண் உறுப்பினர்கள் சட்டமன்றங்களில் இருந்திருப்பார்கள்.

பெண் போராளி úஸô ஹைட் – 1916-ல் கனடாவின் நாடாளுமன்றத்தில் வாக்குரிமை மனுவைத் தாக்கல் செய்து பேசியபோது “”கணவான்களே! வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் பட்டியலில் பெண்கள் சேர்க்கப்படுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நாங்கள் முட்டாள்களும் அல்ல! முடியாதவர்களும் அல்ல! நாங்கள் பெண்கள்! வாக்குரிமையில் நாங்கள் சமத்துவம் கேட்பது சலுகையின் அடிப்படையில் அல்ல! நியாயத்தின் அடிப்படையில்” என்று முழங்கினார்.

இந்தியப் பெண்களாகிய நாங்களும் கேட்கிறோம்! நாடாளுமன்றவாதிகளே! தயவுசெய்து பாலின சமத்துவ நீதியின் மொழியிலே பேசுங்கள்! 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுங்கள்! இந்திய நாட்டில் சமத்துவத்தை விரும்பும் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு உணர்த்துங்கள்!

Posted in Disparity, Elections, Females, Freedom, Gender, History, HR, Independence, Info, MLA, MP, NirmalaRani, Oppression, Politics, Polls, Power, rights, Sex, She, Stats, Timeline, Vote, voters, Women | Leave a Comment »

KB Sundarambal – Path breaking Tamil Actress: Chitra Lakshmanan series on Thamizh Cinema History

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

உள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்

கே.பி.சுந்தராம்பாள் — எஸ்.ஜி. கிட்டப்பா காதல்

கே.பி.சுந்தராம்பாளின் முழுப் பெயர் : கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்

பிறந்த தேதி : 26.10.1908

மறைந்த தேதி : 24.09.1980

நடித்த படங்கள் : 12

தமிழ் பேசும் படத்தின் முதல் கதாநாயகி டி.பி. ராஜலட்சுமி. அவரைத் தொடர்ந்து எம். எஸ். விஜயாள், கே.டி. ருக்மணி, எஸ்.டி. சுப்புலட்சுமி, எம்.ஆர். சந்தானலட்சுமி என்று எத்தனையோ நடிகைகள் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதிலும் இவர்கள் அனைவரையும் விட புகழோடு விளங்கியவராக இருந்தார் நாடக மேடைகளில் மட்டுமே பாடி நடித்துக் கொண்டிருந்த இசையரசி கே.பி. சுந்தராம்பாள்.

ஏறக்குறைய ஒரு திரைப்படக் கதையைப் போன்றதுதான் கே.பி. சுந்தராம்பாள் அவர்களுடைய வாழ்க்கையும். ஆம், அவருடைய வாழ்க்கையில் தாழ்வு, உயர்வு, வறுமை, செம்மை, காதல், பிரிவு, சோகம் என்று எல்லா அம்சங்களுமே இடம் பெற்றிருந்தன.

தமிழில் முதன் முதலாக லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை என்ற புகழினைப் பெற்ற கே.பி. சுந்தராம்பாள் இசையுலக வாழ்க்கை வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள புகை வண்டியில் பாடி அதன் மூலம் வந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்துகின்ற மோசமான நிலையில்தான் துவங்கியது. ஆனால் அந்த ரயில் பயணங்கள்தான் சுந்தராம்பாள் வாழ்க்கைப் பயணத்தை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி திருப்பிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

கே.பி.எஸ். பாடியபடி பயணம் செய்த புகை வண்டியில் அதிகாரியாக பணியாற்றிய நடேச அய்யர் அவரது இசைஞானத்தைக் கண்டு வியந்தார். அந்த அதிகாரி ஒரு நடிகர். சிறு சிறு வேடங்களில் நடித்தவர். கலைகளில் ஈடுபாடுடைய கலாரசிகரான அவர்தான் வேலு நாயரின் நாடகக் கம்பெனியில் சுந்தராம்பாள் சேரக் காரணமாக இருந்தவர்.

அந்த காலகட்டங்களில் வேலு நாயரின் நாடகக் கம்பெனியில் சேருவது என்பது சாதாரணமான விஷயமல்ல. நடேச அய்யர் அறிமுகப்படுத்தினாலும் சுந்தராம்பாளுக்கு நாடகக் கம்பெனியில் ஒரு தனி இடத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது அவரது கணீர்க் குரல்தான் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும். தனித்துவம் பெற்ற கே.பி.எஸ்.ன் குரலைக் கேட்ட வேலு நாயர் மெய்சிலிர்த்தார்.

உடனே “பாலபார்ட்’ பாத்திரத்தில் நடிக்கின்ற வாய்ப்பையும் தந்தார். “நல்ல தங்காள்’ நாடகத்தில் ஏழாவது குழந்தையாக நடித்து தனது பத்தாவது வயதில் நாடக வாழ்க்கையைத் தொடங்கினார் கே.பி.எஸ்.

சங்கரதாஸ் சுவாமிகள் போன்ற மேதைகளின் பாட்டு வரிகள் திருத்தமான உச்சரிப்பு, அற்புதமான சாரீரம், அருமையான பாவம் போன்ற எல்லாவற்றையும் ஒரு சேர பெற்றிருந்த சுந்தராம்பாள் அவர்களின் மூலம் பாட்டாக வெளிப்பட்டபோது தமிழகம் முழுவதும் அதற்கு தலையாட்டத் தொடங்கியது.

சுந்தராம்பாள் அளவிற்கு உச்ச ஸ்தாயியில் பாடக் கூடிய பெண் கலைஞர் யாரும் இல்லை என்பதால் அவரது புகழ் நாளுக்கு நாள் கூடியது. நாடக வாய்ப்புகளும் தொடர்ந்து வரத் தொடங்கியது. தமிழகம் முழுவதும் தன் இசையால் ஈர்த்த கே.பி.எஸ். பாலபார்ட்டில் இருந்து ஸ்திரீ பார்ட்டுக்கு மாறினார். “வள்ளித் திருமணம்’, “பவளக்கொடி’, “சாரங்கதாரா’, “நந்தனார்’ போன்ற நாடகங்களில் தன் தனி முத்திரையைப் பதித்தார் கே.பி.எஸ்.

அப்போதெல்லாம் பேசும் படங்கள் கிடையாது என்பதால் தினமும் நாடகங்கள் நடக்கும். அதிலும் கே.பி. சுந்தராம்பாள் நடிக்கும் நாடகம் என்றால் இன்று ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு கூடுவதைப் போல கட்டுக்கடங்காத கூட்டம் கூடும். முருக பக்தையான சுந்தராம்பாள் அவர்களின் பெருமை கடல் கடந்தும் பரவியது. அவரது நாடகங்களை இலங்கையில் நடத்த அழைப்பு வந்தது. அதை ஏற்று 1926 ஆம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் இலங்கைக்கு பயணமானார் கே.பி.எஸ்.

அவரது வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பத்தை உண்டு பண்ணப் போகிற பயணம் அது என்று அப்போது அவருக்குத் தெரியாது.

கே.பி.எஸ். போன்று உச்ச ஸ்தாயியில் பிசிறின்றி பாடக் கூடிய ஆற்றல் படைத்த அற்புதமான கலைஞராக விளங்கியவர் எஸ்.ஜி. கிட்டப்பா. காங்கிரசில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த கிட்டப்பா கதர் ஆடைகளைத்தான் அணிவார். தீரர் சத்தியமூர்த்தியுடன் கிட்டப்பாவிற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. சுந்தராம்பாள் ஒரு புறம் தன்து தெய்வீகக் குரலால் நாடக மேடையை கலக்கிக் கொண்டிருந்தார் என்றால் அவருக்கு இணையாக இன்னொரு புறம் மேடைகளை கலக்கிக் கொண்டிருந்தவர் எஸ்.ஜி. கிட்டப்பா.

1906 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் நாள் கங்காதரஅய்யருக்கும், மீனாட்சி அம்மையாருக்கும் திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரம் தாலுகா ஆழ்வார்குறிச்சியில் அவதரித்த கிட்டப்பாவின் ஆரம்ப கால வாழ்க்கை வறுமைக் கோட்டிற்கு மிகவும் கீழேதான் தொடங்கியது.

தந்தை கங்காதர அய்யரின் வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லாததால் கிட்டப்பாவின் சகோதரர்கள் எஸ்.ஜி. சுப்பையர், எஸ்.ஜி. செல்லப்பா, எஸ்.ஜி. சாமி அய்யர் ஆகிய எல்லோருமே நாடகத் துறையில் ஈடுபட்டனர். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் பணியாற்றிய இவர்களோடு சேர்ந்து கிட்டப்பாவும் தனது ஐந்தாவது வயதில் நடிக்கத் தொடங்கினார். தனது ஆறாவது வயதில் “நல்லதங்காள்’ நாடகத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக நடித்தார் கிட்டப்பா.

கிட்டப்பாவின் சங்கீத ஞானமும், அயராத அவரது பயிற்சியும் கிட்டப்பாவிற்கென்று ஒரு தனி ரசிகர்கள் வளையத்தை உருவாக்கியது. ஒவ்வொருநாளும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்தது. பின்னாளில் அவரது பாட்டைக் கேட்க பைத்தியமாக பலர் அலையத் தொடங்கினார்கள்.

தங்களது வேலைகளை எல்லாம் விட்டு விட்டு அவரது பாடலைக் கேட்பதற்காக நாடகக் கொட்டகைகளில் தவமிருப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யர் போன்ற இசை மேதைகள் எல்லாம் “”கிட்டப்பா நாடக மேடையை விட்டு விட்டு கச்சேரி நடத்த சபா மேடைகளுக்கு வந்தால் நம் நிலை என்னவாகும்?” என்று பேசிக் கொள்வார்களாம்.

தன்னைப் போல பாட எவருமில்லை என்பது கிட்டப்பாவிற்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், தனக்கு இணையாக பாடக் கூடிய பெண் நாடகக் கலைஞர் இல்லையே என்ற வருத்தமும் இன்னொரு புறம் அவரை வாட்டியது. அவருடைய சுதியில் சேர்ந்து பாட முடியாதபடி பல பெண் பாடகிகள் திண்டாடினார்கள்.

இந்தச் சூழ்நிலையில் 1924-ஆம் ஆண்டு ஜூன் 23-ம் நாள் திருநெல்வேலி விஸ்வநாத அய்யர் மகள் கிட்டம்மாளுக்கும் கிட்டப்பாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு கிட்டப்பாவும், காசி அய்யரும் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க இலங்கைக்குப் பயணமானார்கள். அப்போது கே.பி. சுந்தராம்பாள் இலங்கையில் நாடகங்கள் நடத்தி இலங்கை வாழ் மக்களை தன் பக்கம் முழுமையாக ஈர்த்திருந்தார். தமிழ் நாட்டைப் போலவே இலங்கையிலும் அவரது நாடகங்களுக்கு கூட்டம் அலை மோதியது.

எஸ்.ஜி. கிட்டப்பாவிற்கு இணையாக பாடக் கூடிய பெண் கலைஞர் இல்லாதது போல் கே.பி. சுந்தராம்பாளுக்கு இணையாக பாடக் கூடியவர் இல்லாதது அவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. சுந்தராம்பாளுடன் நடிக்கும் நடிகர்கள் அவரோடு இணைந்தும், ஈடு கொடுத்தும் பாட முடியாததால் நாடகம் பார்க்க வந்த ரசிகர்கள் அவர்களை கேலி பேசத் தொடங்கினர். இதனால் பல நடிகர்கள் கே.பி.எஸ். அவர்களோடு நடிக்கவே அச்சப்படத் தொடங்கினர்.

இந்த நேரத்தில் இலங்கை வந்த கிட்டப்பா “தில்லானா மோகனாம்பாள்’ திரைப் படத்தில் பத்மினி நடனத்தைப் பார்க்க சிவாஜி போவாரே, அது போன்று சுந்தராம்பாள் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க கிளம்பினார். அவர்கள் சந்திப்பைப் பற்றி “இசை ஞானம் பேரொளி பத்மஸ்ரீ கே.பி. சுந்தராம்பாள்’ என்ற தனது புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு சுவைபட விவரித்துள்ளார் பாஸ்கரதாசன்.

“”சுந்தராம்பாளின் ஓங்காரமான ரீங்கார நாதத்தைக் கேட்ட கிட்டப்பா கதி கலங்கி, மதி மயங்கி கிறு கிறுத்தும் போனார். “”என்ன சங்கீத ஞானம், என்ன சுகமான சாரீரம், என்ன தெய்வீகமான குரல்” என்று துதிபாட ஆரம்பித்தார். நமக்கு இணையாக பாடக் கூடிய வல்லபி இவர்தான் என்று முடிவு செய்து கொண்டார்.

கிட்டப்பா சுந்தராம்பாளைச் சந்திக்கிறார். ஏற்கனவே கிட்டப்பாவின் மகிமையைக் கேள்விப்பட்டிருந்த சுந்தராம்பாள் அவரை நேரில் பார்த்ததும் காந்தத்தின் வடதுருவமும், தென்துருவமும் சந்திப்பதைப் போல ஈர்க்கப்படுகிறார்.

இருவருமே புகழ் பெற்ற பாடகர்கள். இருவருமே உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர்கள். இருவருமே தங்களுக்கான இசை ஜோடியை தேடிக் கொண்டிருந்தவர்கள். எனவே, இவரும் ஒரு நாடகத்தில் இணைந்து நடிப்பது என்று முடிவு செய்கின்றனர்.
சங்கீத ஜாம்பவான் என்று புகழப்படும் கிட்டப்பாவிற்கு இணையாகப் பாட வேண்டுமே என்ற பயம் சுந்தராம்பாளுக்கும், உச்ச ஸ்தாயியில் பாடும் சுந்தராம்பாளுக்கு ஈடு கொடுத்து பாட வேண்டுமே என்ற அச்சம் கிட்டப்பாவிற்கும் இருந்தது.

இருவரும் சேர்ந்து நடித்த நாடகம் இலங்கையில் அரங்கேறியது. எட்டுக்கட்டை சுதியில் பாடும் கிட்டப்பாவை யாரும் எட்டாத நிலையில் சுந்தராம்பாள் அதே சுதி லயத்தோடு தொட்டுவிட்டார். உச்ச ஸ்தாயியில் பாடலையும், உள்ளத்தையும் ஒரு சேரத் தொட்டுவிட்டார் அவர் என்பது தான் உண்மை.

சுந்தராம்பாளுக்கு இணையாக நடித்த ராஜபார்ட்டுகளை மதிக்காத கலா ரசிகர்கள் சுந்தராம்பாளோடு உச்ச ஸ்தாயியில் ஒன்றிப் போன கிட்டப்பாவின் சங்கீத ரசனையில் மூழ்கித் திளைத்தார்கள்.

ஓங்கிக் குரலெடுத்து இருவரும் பாடினால் ஒரு மைல் தூரத்திற்குக் கேட்கும் என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்கள். சுந்தராம்பாளும், கிட்டப்பாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள். ரசிகர்கள் “”இருவரும் நல்ல ஜோடி” என்று அவர்கள் காதுபாட வாழ்த்திப் பேசினார்கள்.

இலங்கைக்குச் சென்ற சில மாதங்களிலேயே இசை மேதைகள் இருவரும் புகழின் உச்சியில் பறந்தார்கள். வானம்பாடியாய் இசை வானில் பாடித் திரிந்தார்கள். ஈடு இணையற்ற ஜோடி என்று நிரூபித்துக் காட்டினார்கள்.

இருவரும் சேர்ந்து நடிப்பதென்றால் நாடகக் கம்பெனிகள் பெரிய தொகையை கொட்டித் தர தயாராக இருந்தனர். அதற்குக் கட்டணமாக ரசிகர்களும் அள்ளித்தர ஆவலாக இருந்தனர். இருவரும் பல இடங்கள் பயணம் செய்து நாடகங்கள் நடித்து ஏராளமாக சம்பாதித்தார்கள். கிட்டப்பா மீது சுந்தராம்பாள் அபரிமிதமான பக்தியும், விசுவாசமும் கொண்டிருந்தார்.

சுந்தராம்பாளின் இசையில் மயங்கிய கிட்டப்பா நாடகத்திற்கு மட்டுமின்றி இல்லறத்திற்கும் சுந்தராம்பாள்தான் சரியான ஜோடி என்ற முடிவில் திட்டவட்டமாக இருந்தார். கலை வாழ்க்கையில் உள்ள உறவும், பரிவும் சுந்தராம்பாளின் வாழ்க்கையிலும் இருந்தது. கிட்டப்பாவையே தனது வாழ்க்கைத் துணையாக ஏற்க சுந்தராம்பாளும் முடிவு செய்தார்.

இந்த முடிவில் சுந்தராம்பாளின் தாய் மாமனான மலைக்கொழுந்துவிற்கு (இவர் தான் கே.பி.எஸ். அவர்களுக்கு நிர்வாகியாக பணியாற்றியவர்) உடன்பாடு இல்லை என்றாலும் சுந்தராம்பாளை எதிர்த்து அவர் ஒன்றும் செய்யவில்லை.

சதிபதிகளின் கலைப் பயணமும், வாழ்க்கைப் பயணமும் ஆரம்பத்தில் இனிதாகவே போய்க் கொண்டிருந்தது.

——————————————————————————————————————————————————————————————

எஸ்.ஜி. கிட்டப்பாவுக்கு
கே.பி.சுந்தராம்பாள் எழுதிய கடிதங்கள்

கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் ஒருவரை ஒருவர் அளவிட முடியாத அளவுக்கு நேசித்தாலும் மேடையில் மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு பாடுவார்கள். மேடையில் அவர்கள் போட்டி போட்டு நடிப்பதையும், வசனங்கள் பேசுவதையும் பார்த்த பல ரசிகர்கள் இந்தப் போட்டி அவர்கள் வாழ்க்கையில் எந்த விரிசலையும் ஏற்படுத்திவிடக் கூடாதே என்று அஞ்சினார்கள்.

சுந்தராம்பாள் குணக்குன்று. ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர். எந்தவித கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகாதவர். ஆனால் கிட்டப்பா அப்படிப்பட்டவர் அல்ல. மது போன்ற சில தீய பழக்கங்கள் அவரிடம் குடி கொண்டிருந்தன. இதையெல்லாம் மீறி கிட்டப்பா மீது மாறாத நேசம் கொண்டிருந்தார் கே.பி.எஸ். என்பதுதான் உண்மை.

கிட்டப்பா சுந்தராம்பாளை மணமுடிக்க தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது கே.பி.எஸ். கேட்டது ஒரே கேள்விதான்.

“”என்னைக் கண்கலங்காமல் கடைசிவரை வைத்துக் கொள்வீர்களா?” என்பதுதான் அக்கேள்வி.

“”கடைசிவரை என்னை கைவிடக் கூடாது” என்று சத்தியம் வாங்கிக் கொண்ட பிறகே கிட்டப்பாவை கணவனாக ஏற்றுக்கொண்டார் கே.பி.எஸ்.

1927-ன் தொடக்கத்தில் மாயவரத்தில் உள்ள கோவிலில் இருவரது திருமணம் நடைபெற்றதாக ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கே.பி.எஸ்.
தமிழ் நாடாக மேடைகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த ஜோடிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாக வாரிசு ஒன்று கே.பி.எஸ். வயிற்றில் வளர ஆரம்பித்தது.

இந்த நேரம் செங்கோட்டை சென்ற கிட்டப்பா, கே.பி.எஸ். அவர்களைப் பார்க்க வரவேயில்லை. கடிதங்கள் மட்டுமே அவரது எண்ணங்களைச் சுமந்து வந்தது. தன் முதல் மனைவியான கிட்டம்மாவுடன் கிட்டப்பா இருந்தாலும் கே.பி.எஸ். அதற்காக பொறாமைப்படவில்லை. ஆனால் யாரோ சிலர் விதைத்த விஷ விதை கிட்டப்பா மனதில் விருட்சமாக வளர்ந்ததால் சுந்தராம்பாளை விட்டு விலகியே இருந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான கே.பி. சுந்தராம்பாள் தன் கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் அவர் எந்த அளவு கிட்டப்பா மேல் பாசமும் நேசமும் கொண்டிருந்தார் என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.

கரூர். நவம்பர் 1927

அன்புள்ள பதி அவர்களுக்கு, அடியாள் அநேக நமஸ்காரம். என்னிடம் நேரில் சொன்னபடி நடப்பதாகத் தெரியவில்லை. நான் செய்த பாக்கியம் அவ்வளவுதான்.

உங்கள் மீது வருத்தப்படுவதில் பிரயோசனமில்லை. தாங்கள் பார்த்துச் செய்வதென்றால் செய்யலாம். “வளைகாப்பு’ இட வேண்டுமென்று தங்களிடமும் சொன்னேன். தங்கள் அண்ணாவிடமும் சொன்னேன். ஒருவரும் கவனிக்கவில்லை.

என்னைப் பற்றி கவனிக்க ஏதாவது கொடுத்து வைத்திருக்கிறேனா? உங்களுடைய சுக துக்கங்களில் பாத்யப்படும் தன்மையில்தான் இருக்கிறேனா!

நான் இங்கும் நீங்கள் அங்கும் இருக்கும் நிலையில் நீங்கள் ஏன் கவனிக்கப் போகிறீர்கள். ஏதோ என் மீது இவ்வளவு அன்பு வைத்து தவறாமல் எழுதியதைப் பற்றி அளவு கடந்த சந்தோஷமடைகிறேன். தவறாமல் கடிதமாவது அடிக்கடி எழுதிக் கொண்டிருக்க வேண்டுமென்று அன்போடு நமஸ்கரித்துக் கொள்கிறேன்.

எது எப்படியிருந்தாலும், தங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவும். தங்கள் உடம்பு இளைத்தால் தங்களைத் திட்டமாட்டேன். கிட்டம்மாளைத்தான் திட்டுவேன் என்று அவளிடம் சொல்லுங்கள்.

அடிக்கடி வெளியில் சுத்த வேண்டாம். தூக்கம் முழிக்க வேண்டாம். காலா காலத்தில் சாப்பிடவும். அனாவசிய விஷயங்களில் புத்தியைச் செலவிட வேண்டாம். நானும் அப்படியே நடக்கிறேன்.

மாதமும் ஆகிவிட்டது. தங்களுக்குத் தெரியாதது அல்ல. அவ்வளவுதான் நான் எழுதலாம். நேரில் வாருங்கள். உங்களை என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.

இப்படிக்கு,

தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள்,
சுந்தரம்.

சுந்தராம்பாளை மணமுடிப்பதற்கு முன்னால் கிட்டப்பா அவருக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே அவர் காப்பாற்றவில்லை என்றபோதிலும் கூட கிட்டப்பாவை தன் மனதில் ஏற்றி வைத்திருந்த இடத்திலிருந்து ஒரு அங்குலம் கூட கீழே இறக்கவில்லை சுந்தராம்பாள்.

1928 ஜனவரி மாதம் 28-ஆம் தேதி சுந்தராம்பாளுக்குப் பிறந்த குழந்தை பத்து நாள் மட்டுமே ஜீவித்திருந்தது. குழந்தையின் பிறப்பு, இறப்பு இரண்டிற்குமே கிட்டப்பா வரவில்லை.

சுந்தராம்பாளின் கடிதங்களுக்கு கிட்டப்பா எழுதிய பதில் கடிதங்களிலும் கேலியும் கிண்டலும் நிறைந்திருந்ததாகத் தெரிகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுந்தராம்பாள் தன் மன உணர்ச்சிகளையெல்லாம் கடிதமாக வடித்து கிட்டப்பாவிற்கு அனுப்பினார்.

தேவரீர் அவர்கள் சமூகத்திற்கு எழுதியது.

தங்கள் லெட்டர் கிடைத்துச் சங்கதி அறிந்தேன். தங்களுக்கு எந்த வகையிலும் நான் துரோகம் செய்தவளல்ல, தாங்கள் அறிந்த கிண்டல் வார்த்தைகளை எனக்கு எழுத வேண்டாம். இந்த மாதிரி எழுதி என் மனம் கொதித்தால் தாங்கள் ரொம்ப காலத்திற்கு úக்ஷமமாக இருப்பீர்கள். அம்மாதிரியெல்லாம் எழுதினால் தங்களுக்கு பலன் மீளாத நரகக் குழிதான்.

கிருஷ்ணலீலா பார்த்ததில்லையே என்று பார்க்கப் போனேன். அதைப் பற்றி வித்தியாசம் என்றால் இருக்கட்டும் எத்தனையோ வித்தியாசங்களில் இதுவும் ஒன்று.

மனம் போலிருக்கும் வாழ்வு. என்னைப் பற்றி கவலையே தங்களுக்கு வேண்டாம். நான் இப்படியெல்லாம் எழுதினேன் என்று வருத்தம் வேண்டாம்.

தங்களுக்கு பதில் போட இஷ்டம் இருந்தால் எழுதவும். இல்லையென்றால் வேண்டாம்.

இதுதான் கடைசி லெட்டர். இதுதான் கடைசி. இதுதான் கடைசி. இது உண்மையென்றும், பொய்யென்றும் பின்னால் தெரியும்.

இப்படிக்கு
சுந்தரம்.

“”தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள் சுந்தரம், தங்கள் அன்பை என்றும் மறவாத காதலி கே.பி. சுந்தராம்பாள்” என்றெல்லாம் எழுதி கடிதத்தை முடித்த சுந்தராம்பாள் மேற்கண்ட கடிதத்தை எந்த அடைமொழியுமின்றி சுந்தரம் என்று முடித்திருப்பதிலிருந்தே அவர் எந்த அளவிற்கு கோபமாக இருந்திருக்கிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது அல்லவா?

நம்மாலேயே உணர முடியும்போது கிட்டப்பா அதை உணரமாட்டாரா? உணர்ந்தார். அதன் விளைவாக நீண்ட காலத்திற்குப் பின்பு அன்பான கடிதமொன்றை தன் பண்பான மனைவிக்கு எழுதி அனுப்பினார்.

தனியாக இருந்த காலகட்டங்களில் சுந்தராம்பாள் நாடகத்தில் உச்சக் கட்டத்தில் இருந்தபோதிலும் நிம்மதி இல்லாமல் தவித்தார். அதே போன்று கிட்டப்பாவும் நாடகங்களில் புகழோடு இருந்தபோதிலும் சுந்தராம்பாள் இல்லாததால் தவிப்புக்கு ஆளாகியிருந்தார். அவர்களைப் பிரித்த காலமே 1931-ல் மீண்டும் அவர்களை இணைத்தது.

அவர்கள் பெயரிலேயே நாடகக் கம்பெனி அமைத்து இருவரும் நடத்தத் தொடங்கினர். ரசிகர்கள் பெருமகிழ்ச்சியோடு அவர்கள் நாடகத்திற்கு உற்சாக வரவேற்பினைத் தந்தனர். சுந்தராம்பாள் – கிட்டப்பா ஆகிய இருவரது பாடல்களும் இசைத் தட்டாகவும் வெளிவந்து விற்பனையில் சக்கைபோடு போட்டது.

1931-ல் பேசும்பட காலம் வந்த பிறகும் நாடகங்கள் தங்கள் செல்வாக்கை இழக்காது இருந்தன.

“”கே.பி. சுந்தராம்பாள் வேடன், வேலன், விருத்தன் என்று ராஜபார்ட்டாக நடிப்பார். கிட்டப்பா வள்ளியாக ஸ்திரீ பார்ட்டாக நடிப்பார். இருவரும் மேக்அப் போட்டு வெளியில் வருவதற்குள் ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் அதிகமாக இருக்கும். கிட்டப்பா திரைக்கு முன்னால் வந்து ஒரு ஆலாபனை செய்துவிட்டுப் போனால்தான் ரசிகர்கள் கொஞ்சம் அமைதியடைவார்கள்.

சுந்தராம்பாளும் வந்து பாடமாட்டாரா என்று ஜனங்கள் ஏங்கிக் கிடப்பார்கள். இருவருமே உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர்கள். ஒலிபெருக்கி வசதியில்லாத அந்த காலகட்டத்தில் அவர்கள் குரல் கடைசியில் உள்ளவர்களுக்கும் கேட்கும்” என்று கிட்டப்பா – சுந்தாரம்பாள் நாடகங்கள் பற்றி தன் அனுபவங்களைக் கூறுகிறார் குன்னக்குடி வைத்தியநாதன்.

கிட்டப்பா மதுவுக்கு அடிமையாகி இருந்ததால் நாடகங்களில் நடிக்கும்போது ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு வருவதற்கு முன் திரையின் ஓரமாக சாராயத்தை சுடுதண்ணீரில் கலந்து சுடச் சுட குடிப்பார். இந்த குடிப்பழக்கம் தனது நாடக முதலாளியான கன்னையா இறந்த பின் அதிகரித்தது. காலையில் எழுந்தவுடன் காப்பி குடிப்பதற்கு பதில் சுடச் சுட சாராயம் சாப்பிட ஆரம்பித்தார் அவர். அதன் விளைவாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. வருமானம் குறைந்தது. ஆனால் செலவு கூடியது.

உடல் நலம் சரியாக இல்லாததால் நாடக நிகழ்ச்சிகளை குறைத்துக் கொண்டாலும், நாடகத்தில் நடிக்காமலும், பாடாமலும் இருப்பது பித்து பிடித்திருப்பது போல் உள்ளதாக அவர் உணர்ந்தார்.

இந்த சமயத்தில் மீண்டும் விதி அவர்கள் வாழ்க்கையில் தன் விளையாட்டைத் தொடங்கியது. அவர்கள் இருவருக்குமிடையே இருந்த தீவிரமான அன்பையும் மீறி அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் முளைத்தன. மீண்டும் சுந்தாரம்பாளைப் பிரிந்து சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார் கிட்டப்பா. மீண்டும் தனி மரமானார் சுந்தராம்பாள்.

மதுபானம் போன்ற தீய பழக்கங்களால் கிட்டப்பாவின் உடல் நாளுக்கு நாள் மெலிந்தது. 1933 மார்ச் 29-ஆம் நாள் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தகவல் அறிந்த சுந்தாராம்பாள் அவரை சென்னைக்கு அழைத்து வந்து டாக்டர் பீமாராவ் அவர்களிடம் காட்டினார். அவரைப் பரிசோதித்த பீமாராவ் குடல் வெந்து புண்ணாகி இருப்பதாகவும், ஈரல் சுருங்கிப் போய்விட்டதாகவும், எவ்வளவு செலவு செய்தாலும் அவர் குணமாவதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என்றும் கூறினார்.

இருப்பினும் செலவுப் பற்றி கவலைப்படாமல் சிகிச்சையைத் துவங்கச் சொன்னார் சுந்தராம்பாள். தீவிர சிகிச்சை தொடங்கியது. கிட்டப்பாவின் அருகிலேயே இருந்து அவரைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார் சுந்தராம்பாள்.

எந்நேரமும் அவரது நெற்றியில் திருநீறைப்பூசி அவர் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை. கிட்டப்பா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்வதற்காக மைலாப்பூரில் பெரிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தார் சுந்தாரம்பாள்.

விதி விரட்டவே பூரண குணமடைவதற்கு முன்பே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் செங்கோட்டைச்குச் சென்றுவிட்டார் கிட்டப்பா.

உடல் பூரண குணமடையாத நிலையில் திருவாரூரில் ஒரு நாடகத்திற்கு ஒப்புக் கொண்ட அவர் அதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தார். அதிலிருந்து படுத்த படுக்கையிலிருக்கும் நிலைக்கு ஆளானார் அவர். கால்கள் வீக்கம் கண்டன. கண்கள் மஞ்சளாயிற்று. நாட்கள் செல்லச் செல்ல அவரது முகம் வெளிறிப் போனது. உடல் துரும்பாக இளைத்தது. மெல்ல பேசும் சக்தியும் குறைந்தது.

1933 டிசம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை காலையில் வயிற்று வலியால் தூடித்த அவரைப் பரிசோதித்த டாக்டர் ஒரு ஊசி போட்டார். கிட்டப்பா நாக்கு வறண்டது. சிறிதளவு தண்ணீரை விழுங்கி விட்டுத் திரும்பிப் படுத்தவர் அதற்குப் பிறகு திரும்பவேயில்லை.

கிட்டப்பாவின் மரணச் செய்தி நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உண்டு பண்ணியது. சுந்தராம்பாளை யாராலும் தேற்ற முடியவில்லை. உயிருக்குயிராக நேசித்த தன் காதல் கணவனின் மறைவைத் தாங்க முடியாது துடித்தார் அவர்.

கிட்டப்பா இறந்தபோது அவரது வயது 28. தனது 20-வது வயதில் அவரை மணந்த சுந்தராம்பாள் ஆறு வருடங்கள் மட்டுமே அவரோடு வாழ்ந்தார். அதிலும் பல மாதங்கள் இருவரும் தனித்தனியே பிரிந்திருந்தனர்.

சாதாரணமாக பெண்கள் மணமுடிக்கும் வயதான 26 வயதில் தன் கணவரை இழந்த சுந்தராம்பாள் மிகுந்த மன உறுதியோடு பொட்டையும், பூவையும் துறந்தார். வெள்ளைச் சேலை உடுத்தத் தொடங்கினார். இல்லற வாழ்விலிருந்து துறவறத்திற்குள் புகுந்தார்.

கணவன் இறந்த பிறகு பல மாதங்கள் கொடுமுடி வீட்டிற்குள்ளேயே அடைந்து கொண்டிருந்தார்.

——————————————————————————————————————————————————————————————
லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற
முதல் நடிகை சுந்தராம்பாள்

இந்தியாவிலேயே திரைப்படத்தில் நடிக்க ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை சுந்தராம்பாள் அவர்கள்தான். எந்த கால கட்டத்தில் அவர் ஒரு லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெற்றிருக்கிறார் என்பதை சரியா உணர்ந்தால்தான் கே.பி.எஸ். படைத்திருப்பது எவ்வளவு பெரிய சரித்திரம் என்பதை உணர முடியும்.

கே.பி.எஸ். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் மதிப்பு 14 ரூபாய். அதன்படி பார்த்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு 7143 சவரன் வாங்கலாம். இன்றைய சவரன் விலை தோராயமாக ரூபாய் ஏழாயிரம் என்று வைத்துக்கொண்டு கணக்கிட்டால்கூட கே.பி.எஸ். அன்று பெற்ற தொகை 5 கோடி ரூபாய்க்கு சமம். அதன்படி பார்த்தால் முதலில் மட்டுமல்ல- இன்று வரை அதிக சம்பளம் வாங்கிய ஒரே இந்திய நடிகை கே.பி. சுந்தராம்பாள் மட்டுமே என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

1935-ம் ஆண்டு “பக்த குசேலா’வை முந்திக்கொண்டு “நந்தனார்’ திரைக்கு வந்தது. “நந்தனார்’ வெற்றிப்படமாக அமைந்தபோதிலும் அந்த படத்திற்குப் பின் கே.பி.எஸ். வேறு படங்களில் நடிக்கவில்லை. படங்களில் நடிக்கவில்லையே தவிர காங்கிரஸ் கூட்டங்களில் தேசியப் பாடல்களையும், கோவில் கச்சேரிகளில் தெய்வீகப் பாடல்களையும் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார் அவர். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும், செயலாளரான காமராசரும் சுந்தராம்பாளை பல கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

காங்கிரஸ் கூட்டங்களில் கூட்டம் சேர கே.பி.எஸ். அவர்களின் பாட்டுக்கள் பெரிதும் உதவியது என்பதை யாரும் மறுக்க முடியாது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜாஜி, “”என்ன இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறதே” என்று வியந்தார். “”இது சுந்தராம்பாள் பாட்டுக்கு கூடிய கூட்டம்” என்று சத்தியமூர்த்தி கூறியதும் ராஜாஜி ஆச்சர்யம் அடைந்தார்.

மகாத்மா 1936-ல் தமிழிகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது சுந்தராம்பாள் பிறந்த ஊரான கொடுமுடி அருகே கார் பழுதடைந்தது. அப்போது காந்தி அடிகளை கே.பி.எஸ். இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் சத்தியமூர்த்தி. வீட்டிற்கு வந்த காந்தியடிகளுக்கு வெள்ளி டம்ளரில் பால் தரப்பட்டது. “”பாலோடு இந்த டம்ளரும் எனக்குத்தானே” என்று மகாத்மா கேட்க, முகமலர்ச்சியோடு அதைத் தந்தார் கே.பி.எஸ். அதை ஏலமாக விட்டு நிதியாக காங்கிரஸ் இயக்கத்திற்கு அளித்தார் மகாத்மா.

1935-ஆம் ஆண்டு வெளியான “நந்தனார்’ திரைப் படத்திற்குப் பிறகு 1940-ல் வெளியான “மணிமேகலை’ திரைப்படத்தில் நடித்திருந்தார் கே.பி.எஸ். அதற்குப் பின் எந்தப் படத்திலும் நடிக்க அவர் ஒப்புக் கொள்ளவில்லை. கச்சேரி, தேசியப் பாடல்கள் என்று அவரது வாழ்க்கைப் பயணம் நடைபெற்றது.

1940-க்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த கே.பி.எஸ். மீண்டும் 1948-ல் நடிக்க ஒப்புக் கொண்ட படம் “ஒüவையார்’. அந்த நாட்களில் “ஒüவயார்’ நாடகத்தை டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்தி வந்தனர். அதில் டி.கே. சண்முகம் ஒüவையாராக நடித்தார். மிகச் சிறப்பாக மேடைகளில் ஒüவையாராக நடித்த அவரைத்தான் “ஒüவையார்’ படத்தில் நடிக்க முதலில் அணுகினார் எஸ்.எஸ். வாசன்.

ஆனால் டி.கே. சண்முகம் அவர்கள் “”நான் பெண் வேடம் போட்டது நாடக மேடைக்கு மட்டுமே சரி. சினிமாவிற்கு சரிப்பட்டு வராது. ஒரு பெண் இந்தப் பாத்திரத்தில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்” என்றார். “”அப்படியென்றால் யாரை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று நீங்களே கூறுங்கள்” என்று எஸ்.எஸ். வாசன் கேட்க, டி.கே. சண்முகம் சொன்ன பெயர்தான் கே.பி. சுந்தராம்பாள்.

ஒüவையாராக நடிப்பதற்கு ஏற்ற தமிழ் உச்சரிப்பும், கணீர்க் குரலும் உள்ள ஒரே நபர் கே.பி.எஸ். அவர்கள்தான். அவர் ஒüவையாராகத் தோன்றினாலே போதும்~ நடிக்கவே தேவையில்லை” என்று டி.கே.எஸ். சொல்ல அதை ஏற்றுக் கொண்டார் எஸ்.எஸ். வாசன்.

கே.பி.எஸ். அவர்களிடம் யார் மூலம் தொடர்பு கொள்வது என்று சிந்தித்த வாசன் அவர்களுக்கு “ஹிந்து’ சீனிவாசன் நினைவு வந்தது. சீனிவாசன் வாசனுக்கு நல்ல நண்பர். கே.பி.எஸ். அவர்களுக்கோ அவர் வழிகாட்டியாக இருந்தார். சீனிவாசன் அவர்கள் துணையுடன் வந்த வாசன் கேட்க தட்டாமல் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார்.

கே.பி.எஸ். படத்தில் நடிக்க வருடம் ஒருலட்ச ரூபாய் சம்பளம், அது தவிர மாதம் ஒரு தொகை தர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த லட்ச ரூபாய் சம்பளத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இன்னொரு விவரத்தையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நாளில் ஜெமினி ஸ்டூடியோவை வாங்க வாசன் கொடுத்த பணம் 86,496 ரூபாய்தான்.

1947-ல் தொடங்கப்பட்ட “ஒüவையார்’ படம் 15.8.1953 அன்று சுதந்திரதின வெளியீடாக வெளிவந்தது. “”படம் முடிவடைந்ததும் எஸ்.எஸ். வாசன் அவர்கள் அப்போது ஜெமினியில் பொது மேலாளராக இருந்த நம்பியாரிடம் காசோலையைக் கொடுத்தனுப்பி ஆறு வருடத்துக்குரிய தொகையை அம்மையாரையே எழுதிக் கொடுக்கும்படி சொல்லி அனுப்பியிருந்தார்.

ஆனால் சுந்தராம்பாள் அந்த காசோலையில் பெருந்தன்மையுடன் நான்கு லட்சும் ரூபாயை மட்டும் பூர்த்தி செய்து கொள்வதாக அவரிடம் சொன்னார்” என்று “”இசைஞானப் பேரொளி பத்மஸ்ரீ சுந்தராம்பாள்” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் பாஸ்கரதாசன். ஆனால் “”இது ராஜபாட்டை அல்ல” என்ற தனது புத்தகத்தில் நட்சத்திரத்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த சம்பவத்தைப் பற்றி மட்டும் சிவகுமார் எழுதியுள்ள தகவல் பாஸ்கரதாசன் கூற்றுக்கு மாறுபட்டதாக இருக்கிறது.

ஜெமினி உருவாக்கிய ஒரு படம் முடிய ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. படத்தின் கதாநாயகிக்கு (ஆண்டுக்கு) ஒரு லட்சம் சம்பளம் பேசி ஓராண்டுக்குள் படத்தை முடிப்பதாக ஒப்பந்தம். திட்டமிட்ட காலவரைக்குள் படம் முடியவில்லை. காலம் கடந்தாலும் மாபெரும் படைப்பாக அது உருவாகியது.

தனது அந்தரங்கச் செயலாளர் பி.பி. நம்பியாரை அழைத்தார் வாசன். “”ஹீரோயினுக்கு ஓராண்டில் படம் முடிப்பதாகப் பேசி ஒரு லட்சம் சம்பளம் முடிவு செய்தோம். இப்போ ஏழு வருஷம் ஆயிடுச்சு. அதனால நாம கொஞ்சம் கூட்டி நாலு லட்சம் தருவோம்” என்றார்.

பேராசை பிடித்த ஹீரோயின் “”ஐயறு சொன்ன சொல் தவறமாட்டாரு. ஏழு வருஷம் வேலை செஞ்சிட்டு நாலு லட்சம் சந்தா எப்படி?” என்று கேள்வி கேட்டார்.
உடனே நடிகையின் விருப்பப்படி ஏழு லட்சம் தர சம்மதித்தார். ஆனால் அவர் பேராசையைக் கண்டிக்கும் வகையில் ஓராண்டு வருமானம் 7 லட்சம் என்பது போல எழுதி வாங்கிக் கொண்டார்.

வருமானவரி இலாக்காவுக்கு விபரம் தெரிந்தால் ஏழு லட்சத்தில் சுமார் 4.5 லட்சம் ரூபாய் வரியாகப் போய்விடும்” என்பதைப் பின்னர் அறிந்த நடிகை தன் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்க, உடனே ஏழாண்டுக்கும் வருமானத்தைப் பிரித்து எழுதிக் கொடுத்தார்.”

மேற்கண்டவாறு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் சிவகுமார்.

“ஒüவையார்’ படத்தைப் பார்த்த டி.கே. சண்முகம் “”நீங்கள் நடிக்கவில்லை. ஒüவையாராகவே வாழ்ந்திருக்கிறீர்கள்” என்று கே.பி.எஸ்.ûஸ புகழ்ந்தார்.

“ஒüவையார்’ திரைப்படத்திற்குப் பிறகு கே.பி.எஸ். நடித்த திரைப்படம் கலைஞரின் கை வண்ணத்தில் உருவான “பூம்புகார்’.

“”பூம்புகார்” திரைப்படத்தை எடுப்பது என்று முடிவெடுத்தவுடன் கவுந்தியடிகளாக கே.பி.எஸ், அவர்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுத்த கலைஞர் எஸ்.எஸ். ராஜேந்திரனையும் அழைத்துக்கொண்டு கே.பி.எஸ். அவர்களின் சம்மதம் பெற கொடுமுடி புறப்பட்டார். அவர்கள் கோரிக்கையை கேட்டவுடன் முதலில் தனது மறுப்பைத் தெரிவிக்கிறார் கே.பி.எஸ்.

“”கவுந்தியடிகளாக நீங்கள் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும். பொருத்தமாகவும் இருக்கும்” என்று இருவரும் வற்புறுத்த “”நான் கடவுள் மீது தீவிர பக்தி கொண்டவள், நீங்களோ திராவிடர் கழக கொள்கையுடையவர்கள். எப்படிப் பொருத்தமாக இருக்கும்?” என்று தேங்காய் உடைப்பது போல் பட்டென்று உடைக்கிறார் கே.பி.எஸ்.

கலைஞரும் விடவில்லை. “”நாங்கள் எடுப்பது கடவுள் படமோ, கட்சிப் படமோ அல்ல. கற்புக்கரசி கண்ணகி பற்றிய படம். நீங்கள் நடிக்கப் போவது சமணத்துறவி வேடம்” என்கிறார்.

“”சரி, மகனே. பழனிக்குச் சென்று முருகனின் உத்தரவு பெற்ற பிறகுதான் நடிப்பது பற்றி நான் முடிவு சொல்ல முடியும்” என்று இறுதியாக கே.பி.எஸ். சொல்ல, “”முருகனிடம் கேட்கும்போது கருணாநிதி கேட்டதாகச் சொல்லுங்கள். என் கோரிக்கை என்பதால் முருகன் மறுக்கமாட்டார். உடனே ஒப்புதல் அளித்து விடுவார்” என்று விளையாட்டாகச் சொல்கிறார் கலைஞர்.

அவர் விளையாட்டாகச் சொன்னது பலிக்கிறது. சில நாட்களில் கொடுமுடியில் இருந்து கலைஞருக்குத் தகவல் வருகிறது. “”முருகன் உத்தரவு கொடுத்து விட்டான்” என்று.

தன்னுடைய லட்சியத்தில் யாருக்கும் விட்டுக் கொடுக்காத போக்கை கே.பி.எஸ். கொண்டிருந்தார்.

“”கடவுளை நிந்திக்கும் பாடலைப் பாடமாட்டேன்” என்று “பூம்புகார்’ படப்பிடிப்பில் நிர்த்தாட்சண்யமாக அவரால் சொல்ல முடிந்திருக்கிறது. மாற்றப்பட்டது பாடல் வரிகள்” எனது தனது “வியப்பளிக்கும் ஆளுமைகள்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் சாமினாதன்.

“பூம்புகார்’ திரைப் படத்திற்குப் பிறகு கே.பி.எஸ். நடித்த படங்களில் குறிப்பிடத்தக்க படங்கள் என்று “திருவிளையாடல்’, “துணைவன்’ ஆகிய படங்களைச் சொல்லலாம். இவைகள் தவிர “மகாகவி காளிதாஸ்’, “கந்தன் கருணை’, “உயிர் மேல் ஆசை’, “சக்திலீலை’, “காரைக்கால் அம்மையார்’, “திருமலை தெய்வம்’ (கடைசி படம்) ஆகிய படங்களிலும் நடித்தார் அவர்.

கே.பி.எஸ். நடித்து வெளிவராத ஒரே படம் சிவாஜி, தேவிகா ஜோடியாக நடித்த “ஞாயிறும் திங்களும்’. படம் ஏழாயிரம் அடி வளர்ந்த நிலையில் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சடகோபன் இறந்துவிட படமும் நின்று போனது.

அன்று சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரை “ஏண்டாப்பா’ என்றும், கலைஞர் கருணாநிதியை “”மகனே” என்றும் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியை “அண்ணா’ என்றும், அழைக்கும் உரிமை பெற்றிருந்த கே.பி. சுந்தராம்பாள் உடல்நிலை 1980-ஆண்டு நலிவடையத் தொடங்கியது.

24.9.80 அன்று இரவு 9.30 மணிக்கு அறிஞர் அண்ணாவால் “”கொடுமுடி கோகிலம்” என்று அழைக்கப்பட்ட கே.பி.எஸ். முருகனடி சேர்ந்தார். உடன் தகவல் அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்த உத்தரவிடும் எம்.ஜி.ஆர். அப்போது நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்த மேஜர் சுந்தரராஜனை அழைத்து செலவுகளுக்கு தன் சொந்தப் பணத்தைத் தருகிறார்.

கலைஞர் காலையில் கே.பி.எஸ். அவர்கள் வீட்டுக்கு வந்து மலர் அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்ல, நடிகர் சங்கத்தில் 25.9.80 அன்று காலை முதல் மாலை வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கே.பி.எஸ். அவர்களின் உடல் வைக்கப்பட்டது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், சிவகுமார், பி.எஸ். வீரப்பா, எஸ்.வி. சஹஸ்ரநாமம், இயக்குநர்கள் முக்தா சீனிவாசன், பா. நீலகண்டன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

கலைஞர் வானொலியில் இரங்கற்பா பாடினார்

கலை உலகில் தமிழ் இன்பம் கொட்டக் கொட்ட
கொடிகட்டிப் பறந்த கோகிலம் மறைந்ததோ

Posted in Actress, Cinema, Drama, Films, History, Hits, KBS, Kittappa, Lakshmanan, Movies, music, Nandhanar, Singer, Stage, Sundarambaal, Sundarambal, Sundharambaal, Sundharambal, Suntharambaal, Suntharambal, Superhits, Theater, Theatre | Leave a Comment »

Chitra Lakshmanan: Kalainjar Karunanidhi & Kaviarasu Kannadasan – Sivaji, MGR, Mu Ka Muthu: Cinema Express

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

உள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்

‘வசனக் காதல்’

கலைஞர் அவர்களை நேரில் காணாமலேயே அவர் மீது பெரும் காதல் கொண்டவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அதற்குக் காரணம் “அபிமன்யூ’ படத்தில் கலைஞர் எழுதியிருந்த அற்புதமான வசனங்கள்.

“அபிமன்யூ’ படத்தின் வசனச் சிறப்பு காரணமாக ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல ஆறு நாட்கள் தொடர்ந்து அந்தப் படத்தைப் பார்த்தார் கவியரசர்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப் போல “அபிமன்யூ’ படத்தின் வசனங்களை கலைஞர் எழுதியிருந்தபோதிலும் திரைப்படத்தில் அவரது பெயர் இடம் பெறவில்லை.

எம்.ஜி.ஆர். அவர்களது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணிதான் சேலம் அம்பிகா தியேட்டரில் கவியரசு கண்ணதாசன் “அபிமன்யூ’ படத்தைப் பார்க்க போனபோது, அந்தப் படத்தின் வசனங்களை எழுதியவர் கலைஞர் என்ற தகவலை கண்ணதாசன் அவர்களிடம் கூறினார். “அபிமன்யூ’ படம் பார்த்த அனுபவத்தை தனது “வனவாசம்’ நூலில் கீழ்க்கண்டவாறு உணர்ச்சிகரமாக எழுதியுள்ளார் கவியரசர்.

“”அபிமன்யூ’ படத்தில் அவன் கேட்ட தமிழ் என்றும் மறக்கமுடியாத இன்பத் தமிழாகும்.

“ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்’.

“அண்ணன் செய்த முடிவை கண்ணன் மாற்றுவதற்கில்லை’.

“கண்ணன் மனமும் கல் மனமா?’

“அர்ச்சுனனால் கூட துளைக்க முடியாத சக்ரவியூகத்தை அபிமன்யூ துளைத்து விட்டானென்றால் அங்கேதானிருக்கிறது ஆச்சாரியாரின் விபீஷண வேலை.’

இந்த வசனங்கள் இன்றுவரை அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அம்பிகா தியேட்டரின் சுவையான காப்பியும், “அபிமன்யூ’வில் கண்ட கருணாநிதியின் கைவண்ணமும் அவன் நெஞ்சிலே நிலைத்தன.

“”காணாமலே காதல்” என்பார்கள். அந்தக் “காதலே’ பிறந்து விட்டது அவனுக்குக் கருணாநிதியின் மீது.

“”எப்படியாவது கருணாநிதியைக் கூட்டி வாருங்கள்” என்று அவன் சக்கரபாணியைக் கேட்டான்.

“மாடர்ன் தியேட்டர்ஸ்’க்கு அவரை வரவழைக்க வேண்டுமென்று அவரிடம் சொன்னான்.

அன்று அவன் “மாடர்ன் தியேட்டர்ஸ்’க்கு சொல்லியிருந்தால் எடுப்பட்டிருக்காது.

சக்கரபாணி சொன்னார். அவனும் கூட சேர்ந்து பாடினான்.
கருணாநிதியை வரவழைக்க டி.ஆர்.சுந்தரம் முடிவு செய்தார்.
ஒரு நாள் கருணாநிதியும், சக்கரபாணியும் சேலம் வந்து சேர்ந்தார்கள்.

திறமை என்பதை யாரிடம் கண்டாலும் நேருக்கு நேரே பாராட்டிவிடுவது அவனது சுபாவம்.

தன்னை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்த்துவான்.
அதுதான் திறமைக்கு தரும் மியாதை என்றே அவன் கருதினான்.
அன்று கருணாநிதியை அவன் முதன்முதலாக கோயம்பத்தூர் லாட்ஜில் சந்தித்ததும் ஒரு காதலியைக் காணும் உணர்ச்சியே அவனக்கு ஏற்பட்டது.

சக்கரபாணி அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துவைத்தார்.

அன்று முதல் கருணாநிதியும் அவனை உயிருக்குயிராக நேசிக்கத் தொடங்கினார்.

“மாடர்ன் தியேட்டர்’ஸில் மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் அவர் வேலைக்கமர்ந்தார்.

ஒரு நாளாவது ஒருவரை ஒருவர் காணாமலிருந்தால் எதையோ பறி கொடுத்தது போலிருக்கும்.

ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்துத் தூங்குகிற அளவுக்கு பாசம் வளர்த்தது.

அவர்கள் இருவருக்கிடையே ரகசியம் என்பதே இல்லாமலிருந்தது.
அவரைப் பற்றி யாராவது தவறாகப் பேசிவிட்டால் அவனால் பொறுக்க முடியாது. அவருக்கும் அப்படியே”.

இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் கவியரசு. தன்னைப் பற்றி எழுதும்போது “அவன்’ என்று தன்னடக்கத்தோடு இந்த நூலில் குறிப்பிட்டிருந்தார் கவியரசர்.

இப்படி நெருக்கமான நட்போடு பழகிய அவர்களுக்கு நடுவே பயங்கரமான விரிசல் ஏற்பட்டதும், பின்னர் அந்த இடைவெளி முழுவதுமாக மறைந்து இருவரும் இணைந்ததும் தமிழகம் அறிந்த வரலாறு.

“மணமகள்’ படத்தைத் தொடர்ந்து கலைஞரின் எழுத்தாற்றலில் திரை உலகில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய படமாக “பராசக்தி’ அமைந்தது.

புரட்சிகரமான கருத்துக்களோடு அடுக்கு மொழியில் கலைஞர் அவர்கள் எழுதியிருந்த வசனங்கள் பின்னாளில் தமிழ்த் திரைப் படங்களின் வசன பாணியையே மாற்றி அமைத்தது என்றால் அது மிகையில்லை.

கலைஞர் அவர்களது வசனத்திற்கு தனது அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பால் உயிர் கொடுத்தார் சிவாஜி. ஏற்ற இறக்கங்களோடு அவர் கலைஞரின் தமிழை உச்சரித்தது கண்டு தமிழ்நாடே பரவசப்பட்டது.

சிவாஜி தனது முதல் படத்திலேயே தமிழ் நாட்டு திரைப்பட ரசிகர்கள் மனதை ஒட்டுமொத்தமாகக் கொள்ளை கொண்டார் என்றால் அதில் கலைஞர் அவர்களுக்கு கணிசமான பங்கு உண்டு என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

1952-ல் வெளியான “பராசக்தி’க்குப் பிறகு இந்த 55 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் படங்கள் வெளியாகியிருந்தாலும் இன்றும் “பராசக்தி’ தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பெற்றிருக்கிறது என்றால் அதற்கு கலைஞர் -நடிகர் திலகம் ஆகிய இருவரின் கூட்டணியே முக்கிய காரணம்.

“பராசக்தி’ படத்தைத் தொடர்ந்து “பணம்’, “திரும்பிப்பார்’, “நாம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழ்த் திரை உலகை திசை திருப்பிய படமான “மனோகரா’ வெளியானது.

சிவாஜியின் நவரச நடிப்பு, கண்ணாம்பாவின் உணர்ச்சி மிக்க நடிப்பாற்றல், கலைஞர் அவர்களின் வீர வசனங்கள் எல்லாம் சேர்ந்து அப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கியது.

நடிப்புப் பயிற்சி பெற விரும்பிய எவரும் “பராசக்தி’, “மனோகரா’ போன்ற படங்களின் வசனத்தை விலக்கிவிட்டு அந்தப் பயிற்சிகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவாகியது.

தமிழில் வசனங்கள் என்றால் கலைஞர் அவர்கள் மட்டுமே என்ற நிலை உருவானது. இந்த நிலைக்கு இவர் உயரக் காரணம் தமிழ்த்தாய் அவரிடம் கொஞ்சி விளையாடினாள் என்பது மட்டுமல்ல, எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முழு ஈடுபாட்டோடு நிறைவேற்றக் கூடிய அவரது ஆற்றலுக்கும் அதில் உரிய பங்குண்டு.

கலைஞரின் எழுத்தாற்றல் குறித்து தனது “வியப்பூட்டும் ஆளுமைகள்’ புத்தகத்தில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார் நூலாசிரியர் வெங்கட் சாமிநாதன்.

“”பராசக்தி’ படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் ஒரு குற்றவாளி கோர்ட்டில் சொல்லும் பதில் அல்ல. கோர்ட்டை நோக்கிய பதிலும் அல்ல. தமிழ் மக்கள் பல கோடிகள் அனைவரையும் நோக்கிவிடும் அறை கூவல். அது ஏதோ திருப்புமுனை, புதிய அத்தியாயம் என்றெல்லாம் பேசப்பட்டது.

அவர் எழுதிய நாடகங்கள் திரைப்படமானதும், திரைப்படமாகவே எழுதப்பட்டதுமான ஒரு பட்டியல் மாத்திரம் நமக்கு கிடைத்துள்ளது.

அதிலும் 1948-லிருந்து 1990 வரையிலான ஒரு பட்டியலை 1990-ல் பிரசுரமான ஒரு புத்தகம் தருகிறது. இந்த எண்ணிக்கை மொத்தம் 57. 1990-க்குப் பின் எழுதியவை எல்லாம் தொலைக்காட்சிப் படைப்புகள். அவை பற்றிய குறிப்புகள் இதில் இல்லை.

1947-லோ எப்போதோ “ராஜகுமாரி’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுத ஏ.எஸ்.ஏ.சாமி அழைத்தபோது (அப்போது கருணாநிதிக்கு வயது 23) “”என் கழக வேலைகளுக்கு இடையூறு இல்லாது முடியுமானால் எழுத ஒப்புக் கொள்கிறேன்” என்று நிபந்தனை விதித்து எழுதுகிறார்

-இத்தனையையும் வைத்துக்கொண்டு நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்று வேறு -இவற்றிற்குப் பிறகுதான் 40 வருடங்களில் 57 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் சிலவற்றிற்குப் பாடல் எழுதுவதும் என்றால் -இது அலிபாபாவின் அற்புத விளக்கும் விளக்கை உரசினால் “ஹூகும் ஆக்கா’ என்று எதிர் நிற்கும் பூதமும் பணி செய்யக் காத்திருந்தால்தான் சாத்தியம்.

திரைக்கதை, வசனம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தப் போவதில்லை என்று அதிலேயே முழு மூச்சாக ஆழ்ந்தால்கூட 40 வருடங்களில் 57 படங்கள் சாத்தியமா? தெரியவில்லை. நான் என் ஆயுசில் எழுதிய ஒரே ஒரு திரை நாடகத்திற்கு எழுத உட்காரும் முன் அதைப் பற்றி யோசித்து உள்வாங்கிக் கொள்ள இரண்டு மாதங்கள் பிடித்தன.

பின் எழுத உட்கார்ந்து 15 நாட்களுக்கும் மேல் எதுவும் எழுது ஓடவில்லை. பின்னர் ஒன்றிரண்டு மாதங்கள் ஒதுங்கியிருந்து பின் உட்கார்ந்தால் 15 நாட்கள் ஆயின எழுதி முடிக்க. இந்த மாதிரியெல்லாம் யோசித்திருக்க, மனம் ஆழ்ந்திருக்க, ஓடவில்லை” என்றெல்லாம் கருணாநிதிக்கு சாத்தியப்பட்டு வராது, கட்டி வராது.

ஸ்விட்சைத் தட்டிவிட்டால் ஓடும் யந்திரம் போலத்தான் அவர் உட்கார்ந்தால் எழுதிய காகிதங்கள் மடியிலிருந்து விழுந்துகொண்டே இருக்கவேண்டும். உதவியாளர் பொறுக்கி அடுக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

“ஓர் இரவு’, “வேலைக்காரி’க்குப் பிறகு சினிமாவுக்குக் கதை வசனம் எழுதாத தி.மு.க. தலைவர் யாரும் உண்டா? தெரியவில்லை. தேடிப் பார்த்தால் ஓரிருவர் கிடைக்கலாம். ஆனால் அண்ணாவையும், கருணாநிதியையும் தவிர வேறு யாரும் நிலைக்கவும் இல்லை, வெற்றி பெறவும் இல்லை.

மற்ற எல்லோரையும் பின்தள்ளி கருணாநிதியைத்தான் அண்ணாவுக்கு அடுத்த பெருந்தலைவராக காலம் முன் வைத்துள்ளது என்றால் அதில் கணிசமான பங்கு கருணாநிதியின் நாடகம், சினிமா, கற்பனைத் திறன் தந்த எழுத்து இவற்றிலிருந்து பெற்றதாகச் சொல்ல வேண்டும்.”

இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் சாமிநாதன்.

——————————————————————————————————————————————————–

தி.மு.கழகத்தில் உறுப்பினராக இருந்த சிவாஜி கணேசன் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக தி.மு.க.வை விட்டு விலக வேண்டி வந்தது என்றாலும், அதனால் அறிஞர் அண்ணா மீது கொண்ட பாசத்தில் இம்மியளவு கூட சிவாஜி அவர்களிடம் குறையவில்லை.

அதே போன்று கலைஞர் மீதும் மாறாத பற்று கொண்டிருந்தார் சிவாஜி. அதன் காரணமாகத்தான் தனது ஆரூயிர் நண்பன் நடிகர் திலகத்திற்கு கடற்கரையில் பல எதிர்ப்புகளுக்கு இடையிலேயும் சிலை எடுத்து பெருமைப் படுத்தினார் கலைஞர்.

தனது சுயசரிதையில் பல இடங்களில் கலைஞர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் சிவாஜி. “திரும்பிப் பார்’ படத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “”திரும்பிப் பார்’ படத்திற்கு எழுதிய வசனங்களைப் போல கலைஞர் கருணாநிதி அவர்கள் மற்ற எந்தப் படங்களிலும் எழுதவில்லை என்று நான் நினைக்கிறேன்.

அவ்வளவு அருமையான வசனங்களையெல்லாம் அந்தப் படத்தில் எழுதியிருந்தார். அந்தப் படம் ஒரு அருமையான திரைக்காவியம்” என்று தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கும் நடிகர் திலகம், “மனோகரா’ பட அனுபவத்தைப் பற்றி விவரிக்கும்போது, “”எனக்கு “மனோகரா’ படம் புது அனுபவமாகத் தெரியவில்லை.

நாடகத்தின்போது நான் சம்பந்த முதலியாரின் வசனத்தைப் பேசினேன். அது படமாக எடுக்கும்போது கலைஞர் அவர்களின் வசனத்தைப் பேசினேன். அருமையான வசனங்கள். அது வசனம் பேசும் காலம். “மனேகரா’வில் வசனங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். இப்போது கூட அப்பட வசனங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.

பொன்னும் மணியும்
மின்னும் வைரமும்
பூட்டி மகிழ்ந்து
கண்ணே! முத்தே!
தமிழ்ப் பண்ணே!
என்றெல்லாம் குலவிக் கொஞ்சி
தங்கத்தில் ஆன கட்டிலிலே
சந்தனத் தொட்டினிலே

என்றெல்லாம் வசனம் இடம் பெற்ற அந்தப் படம் அந்தக் காலத்தில் ஒரு மாபெரும் வெற்றிப் படமாகியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் திலகம் அவர்களது சுயசரிதையைப் போலவே கலைஞர் அவர்களின் சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி’ நூலிலும் பல இடங்களில் சிவாஜி அவர்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

கலையுலகில் தனது வளமான வசனங்களால் சிவாஜி அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த கலைஞர் அவர்களின் வாழ்க்கையை நடிகர் திலகம் காப்பாற்றிய ஒரு சம்பவத்தை உணர்ச்சி பொங்க தனது “நெஞ்சுக்கு நீதி’ நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.

“”ஒரு முறை நானும், கருணானந்தமும், சிவாஜி கணேசனும் காஞ்சிபுரம் சென்று அண்ணாவைப் பார்த்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறோம். அப்போதுதான் “பராசக்தி’ படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரும் வழியில் நல்ல மழை பெய்யத் தொடங்கியது.

காரின் வெளிச்சம் வேறு மங்கலாகி விட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே வந்து கொண்டிருக்கும்போது அந்தப் பகுதியில் ஒரு பாலம் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்ததால் மாற்று வழிக்கு குறிப்புப் பலகை வைத்து சிவப்புத் துணி கட்டியிருந்தார்கள்.

விளக்கு வெளிச்சம் போதாதால் கார் டிரைவர் அதைக் கவனிக்காமல் மாற்று வழியில் செல்வதற்குப் பதிலாக நேராகச் சென்று விட்டார். உடனே நண்பர் கணேசன் கூச்சல் போடவே கார் டிரைவர் திடீரென்று பிரேக்கை அழுத்திவிட்டார். பிரேக் போடப்பட்ட வேகத்தில் மழைத் தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் காரின் சக்கரங்கள் வழுக்கி ஒரு சுற்றுச் சுற்றி நின்றது.

கார் எப்படியிருக்கிறது என்பதைக் காருக்குள்ளிருந்த நாங்கள் கவனித்தோம். கார் சக்கரம் ஒரு அங்குலம் நகர்ந்தால் நாங்கள் செங்குத்தான ஒரு பள்ளத்தாக்கில் காரோடு விழுந்து நொறுங்கிப் போய்விடுவோம்.

அப்படிப்பட்ட ஆபத்தான விளிம்பில் கார் நின்று கொண்டிருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் கலைஞர். தனக்கும் சிவாஜிக்கும் இடையே நிலவி வந்த பாசப் பிணைப்பு எத்தகையது என்பதற்கு எடுத்துக் காட்டாக சிவாஜி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை தனது “நெஞ்சுக்கு நீதி’ நூலின் இரண்டாம் பாகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“”எனக்கும் சிவாஜிக்கும் இருந்த நட்பு யாராலும் விலக்க முடியாத பாசமாக உருவெடுத்தது. அந்தப் பாசம் எப்படிப்பட்டது என்பதை 1963-ஆம் ஆண்டு என் தாய் அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது வெளியிடப்பட்ட ஒரு மலரில் சிவாஜியே வெளிப்படுத்தியிருக்கிறார்.

“”சிறு வயது முதல் எங்களுக்குள் நெருக்கமான பழக்கம் உண்டு. இதற்கு எத்தனையோ காரணம். கலையோ, அன்போ, கொள்கையோ, குணமோ, எதுவோ எங்களை உயிராக இணைத்து வைத்திருந்தது. நாளடைவில் அது வளர்ந்து வலுப்பெற்றது. அவர்! அது யார்? வாய் நிறைய “மூனா கானா’ என்று நான் இனிமையோடு அழை க்கும் அவர்தான்.

அந்தக் காலத்தில் இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் அஞ்சுகம் அம்மையார் அநேக நாட்கள் ஒன்றாகவே உணவு படைப்பது உண்டு. அப்போதெல்லாம் அவர்கள் பரிமாறுவதில் கொஞ்சம் பாரபட்சமாக நடந்து கொண்டதை நான் கவனிப்பதும் உண்டு. நல்ல பண்டங்களை ஒருவருக்கு அதிகமாகவும், ஒருவருக்கு குறைவாகவும் போடுவார்கள்.

“”இப்படிச் செய்யலாமா? இது நீதியா?” என்று நான் கேட்பேன்.
“”நீ செல்லப்பிள்ளை. உனக்கு அதிகம்தான்” என்பார்கள் அந்தத் தாய்.

அந்தச் செல்லத்தை மறந்து விட்டுப் போய்விட்டார்கள். நான் என்றும் அந்த அன்புச் செல்லத்தை மறக்க முடியாது. எனக்கு அஞ்சுகம் அம்மையாரும் ஒரு தாய்”.

இது அந்த மலரில் சிவாஜி எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி” என்று குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.

“மனோகரா’வைத் தொடர்ந்து “ரங்கூன் ராதா’, “ராஜாராணி’, “புதையல்’ என்று கலைஞர் அவர்களும் சிவாஜியும் இணைந்து பணியாற்றிய பல படைப்புகள் வெளிவந்தன.

ஆரம்பக் கட்டங்களில் சிவாஜி கணேசன் அவர்களோடு இருந்த அளவு நெருங்கிய நட்பு எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும் கலைஞர் அவர்களுக்கும் இருந்தது குறித்தும், “ராஜகுமாரி’ படத்தில் எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதில் கலைஞர் மிகவும் பிடிவாதமாக இருந்து ஜெயித்தது குறித்தும் ஏற்கனவே இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

“ராஜகுமாரி’யைத் தொடர்ந்து “மந்திரிகுமாரி’, “மருதநாட்டு இளவரசி’, “நாம்’, “மலைக்கள்ளன்’, “புதுமைப்பித்தன்’, “காஞ்சித் தலைவன்’ என்று பல படங்களில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் இணைந்து பணியாற்றினர்.

எம்.ஜி.ஆருக்கு கலைஞர் கதை வசனம் எழுதிய கடைசிப் படமாக “காஞ்சித் தலைவன்’ அமைந்தது. இவர்கள் இருவர் உறவு மற்றும் பிரிவு குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்.

கலைஞர் அவர்களின் கைவண்ணத்தில் வெளியான படங்களில் “பூம்புகார்’ மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பு. இந்தக் கதையை கலைஞரின் “மேகலா பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

ஆனால் முதலில் “பூம்புகார்’ படத்தைத் தயாரிக்க திட்டமிட்டவர் ஏவி.எம்.அவர்கள் ஆவார்கள். ஏவி.எம்.அவர்கள் அப்படத்தை ஏன் கைவிட்டார் என்பது குறித்து தனது “தமிழ் சினிமாவின் கதை’ என்ற நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயாணன்.

“”கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி மு.கருணாநிதி மத்திய சிறைச் சாலையில் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக டைரக்டர் கிருஷ்ணன் போயிருந்தபோது, “”என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“”சிலப்பதிகாரம் படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் கருணாநிதி.
சிறையில் கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வந்த கிருஷ்ணன் தன் சகா பஞ்சுவிடம் சொன்னார். “”கண்ணகி படம் வந்து ரொம்ப நாட்களாகின்றன. மு.க. சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து படித்து வருகிறார். அந்தக் காவியத்தை மீண்டும் சினிமாவாக்கினால் நன்றாக இருக்கும்”.

இருவரும் புறப்பட்டுச் சென்று ஏவி.எம்.செட்டியாரிடம் சொன்னார்கள்.

“”அவர் இப்பொழுது அரசியலில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறாரே! எப்படி வசனம் எழுதித் தருவார்?” மேனா கேட்டார்.

அந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஒரே சமயத்தில் அவரிடமிருந்து ஒட்டு மொத்தமாக எழுதி வாங்கி வந்து விடுகிறோம்.”

மு.கருணாநிதி விடுதலையாகி வந்தார். அவரிடம் நடந்த விஷயங்களைச் சொன்னார்கள் கிருஷ்ணனும், பஞ்சுவும்.
“”எழுதித் தருகிறேன். இதோ படத்தின் தலைப்பு. “பூம்புகார்”.
அன்றைய தினம் நள்ளிரவிலேயே “முரசொலி’ அலுவலகத்திற்கு மெய்யப்பச் செட்டியார் கிருஷ்ணன் பஞ்சுவுடன் வந்தார்.

பேசினார். முன் பணம் கொடுத்தார். 1959-ல் “தங்கப் பதுமை’ படம் வெளி வந்ததும் “பூம்புகார்’ திட்டத்தைச் செட்டியார் கைவிட்டு விட்டார். காரணம் “கண்ணகி’ கதை மாதிரியே “தங்கப் பதுமை’ திரைக்கதை அமைந்திருந்ததுதான்.

இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயணன்.

——————————————————————————————————————————————————–
பண்பிற்கரசோன்

“பூம்புகார்’ திரைப்படத்தில் சிவாஜிகணேசனை கோவலனாகவும், சாவித்திரியை கண்ணகியாகவும், பத்மினியை மாதவியாகவும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் ஏவி.எம். “தங்கப்பதுமை’ காரணமாக அவர் “பூம்புகார்’ படத்தைத் தயாரிக்கத் தயங்கியதும், தன் சொந்தத் தயாரிப்பில் “பூம்புகார்’ திரைப்படத்தை எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, ராஜஸ்ரீ ஆகியோர் நடிக்க தயாரித்தார் கலைஞர். கெüந்தி அடிகள் வேடத்தில் கே.பி.சுந்தராம்பாள் நடித்தார்.

படம் முடிந்தவுடன் ஏவி.எம்.செட்டியார் அவர்களுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டினார் கலைஞர். படத்தை வெகுவாக ரசித்தாலும் பட வெளியீட்டுத் தேதியைத் தள்ளி வைக்குமாறு கலைஞரிடம் கேட்டுக் கொண்டார் ஏவி.எம். அதற்கு அவர் கூறிய காரணம் இதுதான்.

“”இந்தக் கதையை சிறு மாறுதல்களுடன் டைரக்டர் ஸ்ரீதர், “கலைக்கோயில்’ என்ற பெயரில் மிகப் பிரமாதமாக எடுத்திருக்கிறார். நான் கூட படத்தைப் பார்த்து விட்டு அவரைப் பாராட்டினேன். தங்களது “பூம்புகார்’ படமும் மிகச் சிறப்பாக இருக்கிறது, என்றாலும் இப்போது வெளியிட வேண்டாம்” என்றார் ஏவி.எம். “கலைக்கோயில்’ படத்தோடு வெளியானால் “பூம்புகார்’ திரைப்படத்தின் வெற்றி பாதிக்கப்படும் என்பது எவி.எம். அவர்களின் கருத்தாக இருந்தது.

“பூம்புகார்’ திரைப்படத்தைப் பற்றியும், அதன் வெற்றி குறித்தும் கலைஞர் அவர்களுக்கு மிகச் சிறந்த அபிப்ராயம் இருந்தாலும் அனுபவசாலியான ஏவி.எம்.அவர்களது பேச்சு கலைஞரை சோர்வடையச் செய்தது. அந்த மனந்தளர்ச்சியோடு வந்த கலைஞர் முரசொலி மாறனிடம் செட்டியார் சொன்னதையெல்லாம் சொல்லியிருக்கிறார்.

மாறன் கொஞ்சம் கூட நம்பிக்கை இழக்காமல் “பூம்புகார்’ படத்தைப் பொறுத்தவரை கதை சொல்லப்பட்டிருக்கிற முறைக்காகவும், உங்கள் வசனத்திற்காகவும் கண்டிப்பாக அது வெற்றி பெறும். நாம் தைரியமாக படத்தை வெளியிடுவோம். அதுவும் “கலைக்கோயில்’ படம் வெளியாகின்ற நாளன்றே வெளியிடுவோம்” என்று கூறியதோடு மட்டுமின்றி அதே தேதியில் படத்தை வெளியிடவும் செய்தார்.

“கலைக்கோயில்’ மிகப் பெரிய தோல்வியைக் கண்டது. ஆனால் “பூம்புகார்’ படமோ நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

“பூம்புகார்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் கலைஞருக்கு ஃபோன் செய்த ஏவி.எம், “”என்னுடைய கணக்கு தவறு என்பதை உங்கள் படத்தின் வெற்றி நிரூபித்துவிட்டது. உங்களையும், மாறனையும் நான் மனமாரப் பாராட்டுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதே போன்று ஒரு சம்பவம் கலைஞர் வாழ்க்கையில் எல்.வி.பிரசாத் அவர்களாலும் நடைபெற்றிருக்கிறது. அது குறித்து “கலை உலகச் சூரியன் கலைஞர்’ என்ற பாராட்டு விழாச் சிறப்பு மலரில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் அமிர்தம்.

“”மாபெரும் இயக்குனர் எல்.வி.பிரசாத் கலைஞரின் கதை வசனத்தில் “இருவர் உள்ளம்’ என்றொரு படத்தைத் தயாரித்தார். சிவாஜிகணேசன், சரோஜாதேவி ஜோடியாக நடித்த இப்படத்தின் தனிக்காட்சி முக்கியமான கலை உலகப் பிரமுகர்களுக்காக ரேவதி ஸ்டூடியோவில் நடைபெற்றது.

படம் முடிந்ததும் இயக்குனர் பிரசாத், “”படம் நிறைவாக இல்லாதது போன்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?” என்று கலைஞரிடம் கேட்டார். அதற்கு கலைஞர், “”இந்தப் படம் நிச்சயமாக 100 நாட்கள் ஓடும். மக்கள் பேசக் கூடிய படமாக இது அமையும்” என்றார்.

உறுதியாகத்தான் சொல்கிறீர்களா என்று கேட்ட பிரசாத், “”இந்தப் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றால் உங்களுக்கு சன்மானமாக பத்தாயிரம் ரூபாய் வழங்குகிறேன்” என்றார்.
படம் சென்னை வெல்லிங்டன் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைத் தொட்டது. நூறாவது நாள் முடிந்த மறுநாள் இயக்குனர் பிரசாத், கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கலைஞரைச் சந்தித்தார்.

“”நீங்கள் சொன்னபடி படம் நூறு நாட்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. உங்கள் கணிப்பு எதிலும் சரியாக இருப்பது போல் “இருவர் உள்ளமும்’ வெற்றி பெற்றுள்ளது. என் வாக்குப்படி இதாங்க ரூபாய் பத்தாயிரம் என்று சொல்லி பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தார்” என்று அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள இயக்குனர் அமிர்தம், “மலைக்கள்ளன்’ படத் தயாரிப்பின்போது நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தையும் அந்த மலரில் கீழ்க் கண்டவாறு வர்ணித்துள்ளார்.

“”மலைக்கள்ளன்’ படம். கலைஞரின் உயிரோட்டமான வசனங்கள். எம்.ஜி.ஆர். கதாநாயகன். படம் முடிந்த நிலையில் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலுவுக்கும் கலைஞருக்கும் இடையில் ஏற்பட்ட மனத்தாங்கலில் இந்தப் படத்தில் திரைக்கதை, வசனம் கருணாநிதி” என்று என் பெயரைப் போடக் கூடாது என்று கடுமையாகக் கூறிவிட்டு கலைஞர் திருவாரூர் போய் விட்டார்.

எம்.ஜி.ஆருக்குப் பெரிய கவலை வந்து விட்டது. இன்றைய நிலையில் கலைஞர் பெயரில்லை என்றால் படம் வெற்றி பெறாது. ஏற்பட்டிருக்கிற இந்த ஊடலை எப்படித் தீர்ப்பது என சிந்தித்த எம்.ஜி.ஆர். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை அழைத்துக் கொண்டு திருவாரூருக்குச் சென்றார்.

திருவாரூரில் கலைஞரின் இல்லத்தில் அவரைச் சந்தித்த கே.ஆர்.ஆர். கலைஞரிடம் நீண்ட நேரம் பேசி அவரைச் சமாதானப்படுத்தினார். எம்.ஜி.ஆரோ, “”உங்கள் பெயர் படத்தின் டைட்டிலில் வரும்போதே கைதட்டல் அரங்கை அதிர வைக்கிறது. உங்கள் பெயர் இல்லை என்றால் படம் வெற்றி பெறுவது சந்தேகமே. நான் நடித்த படங்கள் எல்லாம் உங்கள் வசனச் சிறப்புகளாலேயே வெற்றி பெறுகின்றன.

இந்தப் படமும் வெற்றி பெற வேண்டும். அதற்குத் திரையில் உங்கள் பெயர் வந்தே ஆக வேண்டும்” என்று உருக்கமுடன் வேண்டினார். கலைஞர் ஒருவாறு சம்மதிக்க, கலைஞர், கே.கே.ஆர்., எம்.ஜி.ஆர். மூவரும் சென்னை வந்தனர். மகிழ்ச்சியான சூழலில் ஸ்ரீராமுலு அவர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ஸ்ரீராமுலு, “”எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி! மன நிறைவான உங்கள் ஒப்புதல் இல்லாமல் “மலைக்கள்ளன்’ படத்தை நான் வெளியிடுவதில்லை என்ற முடிவோடு இருந்தேன்” என்றார்.

அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆர். அவர்கள் நெகிழ்வோடு கண் கலங்கிய நிலையில் ஸ்ரீராமுலு -கலைஞர் இருவரது கரங்களையும் ஒன்றாக இணைத்து முத்தமிட்டார்.
பின்னாளில் கலை உலகில் கொடிகட்டிப் பறந்த கண்ணதாசன், சிவாஜி, எம்.ஜி.ஆர். ஆகிய மூவருடனும் ஆரம்ப காலம் முதலே நெருங்கிய நட்பு கொண்டிருந்த கலைஞர் அவர்களுக்கு காலச் சூழ்நிலை காரணமாக கண்ணதாசன், எம்.ஜி.ஆர். ஆகிய இருவரோடும் பலமான கருத்து வேற்றுமை ஏற்பட்டது.

கண்ணதாசன், எம்.ஜி.ஆர். ஆகிய இருவரோடும் அவர் கொண்ட கருத்து வேற்றுமை அளவிற்கு சிவாஜி அவர்களோடு அவர் மாறுபடவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அதன் காரணமாகத்தான் கலைஞர் அவர்களது பவள விழாவையொட்டி கலை உலகம் நடத்திய பாராட்டு விழாவில் கலைஞர் அவர்களைப் பாராட்டி நடிகர் திலகம் பேசிய பேச்சு அத்தனை உணர்ச்சிப் பூர்வமாக அமைந்தது. சிவாஜி, கலைஞர் ஆகிய இருவருடைய கண்களும் அந்தப் பாராட்டு விழாவின்போது கலங்கியதைக் கண்ட அனைவரும் அவர்கள் நட்பின் ஆழத்தை அன்று உணர்ந்தனர்.

அரசியல் காரணமாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், கலைஞருக்கும் இடையே இருந்த உறவில் எத்தனை பெரிய விரிசல் ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஆனாலும் எம்.ஜி.ஆர். இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் அன்று காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய கலைஞர் செய்த முதல் காரியம் எம்.ஜி.ஆருக்கு இறுதி மரியாதை செலுத்த ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றதுதான்.

ஸ்ரீராமுலு நாயுடு அவர்களுடன் ஏற்பட்ட வருத்தத்தைக் களைந்தது போல தனது நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதை மறந்து அவர்களுக்கு நேசக்கரம் நீட்டுகின்ற மாபெரும் பண்புக்குச் சொந்தக்காரராக கலைஞர் இன்றளவும் விளங்கி வருகிறார். அதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.

மலையளவு நெஞ்சுறுதி
வானளவு சொற்பெருக்கு
கடலளவு கற்பனைகள்
கனிந்துருகும் கவிக்கனிகள்

இலை தலையாய் ஏற்றமுற்று
இளந்தலைகள் வாழ்த்தொலிக்க
அவைத்தலைமை ஏற்றிருக்கும்
அன்புமிகு என் தோழ!

கூட்டத்தைக் கூட்டுவதில்
கூட்டியதோர் கூட்டத்தின்
நாட்டத்தை நாட்டுவதில்
நற்கலைஞன் நீயிலையோ

அந்தச் சிரிப்பலவோ
ஆளையெல்லாம் கூட்டி வரும்
அந்தச் சிறு மீசை
அப்படியே சிறைப்படுத்தும்!

சந்திரனைப்போலத்
தக தகவென்று ஒளிரும்
அந்த வழுக்கையில்தான்
அரசியலே உருவாகும்.

எந்தத் துயரினிலும்
இதயம் கலங்காதோய்!
முத்தமிழ்த் தோழ!
முனை மழுங்கா எழுத்தாள!

திருவாரூர்த் தேரினையே
சீராக்கி ஓட விட்டுப்
பரிசாகப் பெற்றவனே!
கருணாநிதித் தலைவ!
கவிதை வணக்கமிது

என்று கலைஞரைப் பாராட்டி கவிதை பாடிய கண்ணதாசனுக்கும் கலைஞருக்கும் இடையே எழுந்த விரிசல் பலமானது என்றாலும், அந்த விரிசலை மீறி ஒருவர் மீது ஒருவர் மாறா நட்பு கொண்டிருந்தனர்.
——————————————————————————————————————————————————–
கவிஞருக்கு கலைஞரின் கவிதை

“இல்லற ஜோதி’ படத்திற்காக எழுதப்பட்ட “அனார்க்கலி’ நாடகம்தான் கலைஞருக்கும் கவியரசருக்குமிடையே முதல் விரிசலை ஏற்படுத்தியது. அந்த விரிசலை ஒரு அகழி அளவுக்கு விரிவாக்கியதில் இரு தரப்பிலுமிருந்த “நல்ல’ நண்பர்களின் பங்கு அதிகமாக இருந்தது.

பத்திரிகைகளில் பத்து கவிதைகளும், சினிமா படங்களுக்காக 5 பாடல்களும் மட்டுமே எழுதியிருந்த நிலையில் கண்ணதாசனை “கவிஞர்’ என்று மேடயில் அழைத்து பெருமைப்படுத்தியவர் கலைஞர்தான் என்பதை நான் ஏற்கனவே இக்கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

கலைஞர் அவர்களோடு கருத்து வேற்றுமை வந்த காலங்களில் கூட அதை மறக்காமல் பல பத்திரிகைகளில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர். “”கருணாநிதியும் நானும் எழுதத் தொடங்கியது ஏறக்குறைய ஒரே காலத்தில்தான்.

நான் அவரது எழுத்தைத்தான் முதலில் காதலித்தேன். என்னுடைய எழுத்துக்களில் அவருக்குள்ள ஈடுபாடுகள் போலவே அவரது எழுத்துக்களில் எனக்கு ஈடுபாடு உண்டு.

அரசியலில் பதவிகள் வரலாம். போகலாம். ஆனால் நிலையான இடத்தைப் பெற்றுத் தரும் “ரிக்கார்டு’ எழுத்துதான். எழுத்துத் துறையில் கருணாநிதியை மிஞ்சக் கூடியவர் எவரும் இல்லை. பதவி போய் விட்டாலும் அவர் நிலைத்து நிற்கப் போவது அவரது எழுத்துக்களில்தான்.

முதல் முதலாக பொள்ளாச்சி கூட்டத்தில்தான் என்னைப் பேச வைத்து பேச்சாளனாக அரங்கேற்றினார் கருணாநிதி. பேசத் தெரியாத நான் பேசப் பழகிக் கொண்டேன். ஆமாம். என்னை அரசியல் மேடையில் பேச “ஆதிமுதலாய்’ அரங்கேற்றி வைத்தவரே அவர்தான்.

அவரோடு பல சுற்றுப் பயணங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அவரோடு போகும் நான் ஆரம்பத்தில் மேடைகளில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பேச மாட்டேன். அப்படிக் குறுகிய நேரம் நான் பேசுவதற்கே கலைஞர் என்னைக் கேலி செய்வார் ஆனால் அதற்கடுத்தக் கூட்டத்திலும் என்னைக் கட்டாயம் பேச வைப்பார்.

அப்படி வற்புறுத்தி பேச வைத்தே என்னை அவர் அரை மணி நேரம், முக்கால்மணி நேரம், சில நேரங்களில் ஒரு மணி நேரம்கூடத் தயங்காமல் பேசும் ஒரு வழக்கமான கழகப் பேச்சாளராக்கி விட்டார்.

நான் அரசியலுக்கு வந்தது, பேச்சாளரானது இதெல்லாம் பாவமோ, புண்ணியமோ அவரைத்தான் சேரும்” என்று பல கால கட்டங்களில் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்.

கண்ணதாசனது இந்தத் திறந்த மனதை கலைஞர் பல முறை பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். “”எனக்கும் அவருக்கும் ஆயிரம் மனவேறுபாடுகள், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் வந்த பிறகும்கூட எந்த ஒரு இடத்திலும் முதன்முறையாக நான்தான் அவரை “கவிஞர்’ என்று அடைமொழியிட்டு அழைத்தேன் என்பதை கண்ணதாசன் என்றைக்கும் சொல்ல மறந்ததில்லை. அப்படி நன்றி உள்ளவர் கண்ணதாசன்.

பல பேர் நன்றியை மறந்துவிடுவார்கள். அதுவும் என்னுடைய வாழ்க்கையில் நன்றி மறந்தவர்கள் ஏராளமானவர்கள். ஆனால் அரசியலில் தனிப்பட்ட முறையில் சில நேரங்களில் அவர் எனக்குப் பகையாக மாறியும்கூட அந்த நன்றியைக் கடைசி வரை மறக்காமல் “என்னை முதன்முதலில் கவிஞர் என்று அழைத்தவர் கருணாநிதிதான்’ என்று கூறுவார் கண்ணதாசன்.

அதை மகிழ்ச்சியான நேரத்தில் மட்டுமல்ல! என்னைத் திட்டி எழுதிய புத்தகத்தில் கூட அதை மூடி மறைக்காமல் மனம் திறந்து அவர் எழுதியிருக்கிறார்” என்று பலமுறை கலைஞர் பரவசப்பட்டதுண்டு.

கவிஞர் மறைந்தபோது கலங்கிய கண்களுடன் அவருக்கு அஞ்சலி செலுத்திய கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கற்பா அந்த இருவரின் நட்பின் ஆழத்துக்கு சாட்சியாக இன்றும் விளங்குகிறது.

“”என் இனிய நண்பா
இளவேனிற் கவிதைகளால்
இதய சுகம் தந்தவனே! உன்
இதயத் துடிப்பை, ஏன் நிறுத்திக் கொண்டாய்!

தென்றலாக வீசியவன் நீ- என் நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ! -அப்போதும்
அன்றிலாக நம் நட்பு திகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதேயில்லை நண்பா!

கண்ணதாசா! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ -உன்னைக்
காலமென்னும் பூகம்பம் தகர்த்துத்
தரை மட்டம் ஆக்கி விட்டதே!

கை நீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ!
கல்லறைப் பெண்ணின் மடியினிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ;
அமைதிப் பால் அருந்தித் தூங்கிவிட!

இயக்க இசைபாடி களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முள்ளை
தாக்குதல் கணை எத்தனைதான் நீ தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என் நெஞ்சே உன் அன்னை

திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால்- சுவைப்
பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;
தித்திக்கும் கவித்தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்றுவிட்டாய்?

அடடா! அந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!
ஆயிரங் காலத்துப் பயிர் நம் தோழமையென
ஆயிரங் கோடிக் கனவுகள் கண்டோம்!

அறுவடைக்கு யாரோ வந்தார்!
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்!
நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்
நிலை பெற்ற புகழ் உனக்கு!

இந்த அதிசயத்தை விளைவிக்க -உன்பால்
இனிய தமிழ் அன்னை துணை நின்றாள்
என் நண்பா! இனிய தோழா!

எத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத் தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?

எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய்!”

என்று கலைஞர் எழுதிய கவிதாஞ்சலி கவிஞரின் பிரிவு எந்த அளவு கலைஞர் அவர்களைப் பாதித்தது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

“”தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் பெயர்களுக்கு இணையாக சுவரொட்டிகளில் வசனகர்த்தாவின் பெயரும் இடம்பெற முன்னோடியாக இருந்தவர் கருணாநிதி.

கதை – வசனம் மு.கருணாநிதி என்று ஒரு படத்தின் விளம்பரம் வந்தாலே அதன் வெற்றிக்கு உத்திரவாத முத்திரை குத்தப்பட்டது” என்று தனது “திரை வளர்த்த தமிழ்’ நூலின் முதல் தொகுதியில் “பேசும் படம்’ ஆசிரியர் ஆசிரியர் திரு. ராம்நாத் அவர்களால் பாராட்டப்பட்ட கலைஞர், “பூம்புகார்’ திரைப் படத்தைத் தொடர்ந்து “மணிமகுடம்’, “மறக்க முடியுமா’, “அவன் பித்தனா’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார்.

அவரது வாழ்க்கையில் அரசியல் -சினிமா என்று வரும்போது அரசியலுக்கே முதலிடம் என்ற திடமான சிந்தனையோடு திரை உலகில் அடி எடுத்து வைத்தவர் என்பதால் 1967-ல் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அவரது கலை உலகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது என்பது உண்மை.

1967-ல் வெளியான “தங்கத் தம்பி’ “வாலிப விருந்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 1970-ல் “எங்கள் தங்கம்’ திரைப்படம் வெளிவந்தது.

மாடர்ன் தியேட்டர்ஸில் இணைந்த அந்த இரு மாபெரும் கலைஞர்களும் இணைந்து பணியாற்றிய கடைசி திரைப்படம் “எங்கள் தங்கம்’தான். எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்டதையும், அதில் அவர் உயிர் மீண்டதையும் குறிக்கும் வகையில்,

“நான் செத்துப் பொழச்சவன்டா-எமனைப்
பார்த்துச் சிரிச்சவன்டா
வாழை போல வெட்ட வெட்ட முளைச்சு
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா’

என்று தொடங்கும் அப்பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
1972-ல் தனது மகன் மு.க.முத்துவை “பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்தின் மூலம் கலையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் கலைஞர். “அஞ்சுகம் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் உருவான இப்படத்தின் சிறப்புக் காட்சியில் பங்கு பெற எம்.ஜி.ஆர் வந்திருந்தார்.

“”புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்தான் என் ஆசான்” என்று மு.க.முத்து பேசியதைப் பற்றி தனது உரையில் குறிப்பிடும்போது, “”துரோணாச்சாரியாரை ஆசானாகக் கொண்டு ஏகலைவன் வில் வித்தையிலே தேர்ச்சிப் பெற்றதைப் போல இங்கே எம்.ஜி.ஆரை ஆசான் என்று கூறிய முத்து அப்படிப்பட்ட புகழையும் சிறப்பையும் பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டார் கலைஞர்.

இறுதியாக மு.க.முத்துவை வாழ்த்திப் பேச வந்த எம்.ஜி.ஆர், “”என்னை ஆசானாக ஏற்றுக் கொண்டிருப்பதாக தம்பி மு.க. முத்து பேசினார். அதைக் கேட்டுப் பெருமைப்படுகிறேன்.

ஆனால் முத்து ஒரு நாள் கூட என்னிடம் நடிப்புக்காக வந்ததில்லை. ஏகலைவன் மானசீகமாகக் குருவை எண்ணி வித்தையில் தேர்ந்தான் என்பது போல என் படங்களைப் பார்த்து அதன்படி நடிக்க விரும்புகிறார் முத்து என்று எண்ணுகிறேன்.

ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை- நடிப்பு இருக்கிறது. அதில்தான் செல்ல வேண்டும். முத்து தனக்கென்று தனி வழியை நடிப்பதற்கு வகுத்துக் கொண்டு நடிகராக வளர வேண்டும்” என்று வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

தி.மு.கழகத்தில் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எல்லாம் இணைந்து செயலாற்றி பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய வல்லமை படைத்த இரு ஆற்றல் மிகுந்த சக்திகளான கலைஞர் அவர்களுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவிற்கு குறுக்கே முதல் கோட்டை இழுத்தது மு.க.முத்துவின் திரையுலகப் பிரவேசம்.

Posted in ADMK, Anna, AVM, Biosketch, Chettiyar, Cinema, dialogues, DMK, Express, Faces, Films, Ganesan, History, Incidents, Kalainjar, Kannadasan, Kannadhasan, Kannathasan, Karunanidhi, Kaviarasu, Kavidhai, Kavithai, Life, MGR, Movies, Muthu, people, Poems, Shivaji, Sivaji, Sridhar, Tidbits, Trivia | 1 Comment »

List of Firsts – Tidbits, Trivia on Women achievements

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சுவடுகள்: பெண்கள் முதல் முதலாய்…

யுகன்

திரும்பிப் பார்ப்பது எப்போதுமே சுகமான விஷயம்தான். அது தனிப்பட்டவர்களின் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வரலாற்றின் பக்கங்களாக இருந்தாலும் சரி. இன்றைக்குப் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனலாம். இந்தியாவில் பல துறைகளில், பொறுப்புகளில் முதல் முதலாய் இடம்பிடித்த சிலரைப் பற்றிய ஞாபகங்கள் இங்கே…

1905

சுஸôன்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.

1916

தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? ஐந்து பேர்!

1927

அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.

1951

டெக்கான் ஏர்வேஸில் பயணிகள் விமானத்தை செலுத்திய முதல் பெண் விமானி பிரேம் மாத்தூர்.

1959

அன்னா சாண்டி இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

1966

கேப்டன் துர்கா பானர்ஜி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முதல் பெண் விமானியாவார். இதே ஆண்டில், கமலாதேவி சடோபாத்யாய “மகசேசே’ விருதைப் பெற்றார். இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்றார்.

1970

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கமல்ஜித் சாந்து முதன் முதலாக தங்கப் பதக்கம் வென்றார்.

1972

இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண் பேடி காவல் துறையில் பதவியேற்றார்.

1989

முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக எம். பாத்திமா பீவி பதவியேற்றார்.

1997

கல்பனா சாவ்லா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்னும் சாதனைக்குச் சொந்தக்காரர்.

2005

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.

2007

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.

Posted in Achievements, Faces, Females, first, History, Ladies, Lists, names, people, She, Trivia, Woman, Women | Leave a Comment »

Why Democracy survives in India? – N Vittal

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2008

ஜனநாயகம் நீடிப்பது இந்தியாவின் அதிர்ஷ்டமா?

என். விட்டல்

இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. 1940-களில் இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், அவற்றில் இந்தியா மட்டுமே தனித்துவமிக்க, உண்மையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கும், துடிப்புமிக்க ஜனநாயகத்துக்கு வெற்றிகரமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அது குறித்து இந்தியர்களாகிய நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.

விடுதலைக்குப் பிறகு செயல்திறன் மிக்க ஜனநாயக நாடாக இந்தியா நடைபோடும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் பெற்றவுடன் தகுதியற்றவர்கள் அதிகாரத்துக்கு வருவார்கள்; எனவே, வெகு விரைவிலேயே இந்தியா பல நாடுகளாகச் சிதறுண்டு போய்விடும் என எதிர்பார்த்தார் சர்ச்சில். இந்தியா சுதந்திர நாடாக ஆகிய உடன் ஊழல் ஆறாகப் பெருக்கெடுத்தோடும் என 1920-களிலேயே கருதினார் ராஜாஜி. நமது அண்டையில் உள்ள நாடுகளிலெல்லாம் ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டபோதிலும், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பது எவ்வாறு?

அதற்குப் பல விளக்கங்களைக் கூறலாம். எனது விளக்கம் இதுதான்: தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, கணினி மென்பொருள் ~ வன்பொருள் என்ற வகையில் நமது நாட்டில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.

உண்மையிலேயே இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நீடிப்பது அதிர்ஷ்டத்தாலா? ஜனநாயக ஆட்சி முறை தோல்வி அடைந்து, ராணுவத்தின் தலையீடும் சர்வாதிகாரிகளின் ஆட்சியும் நடந்துகொண்டு இருக்கும் நமது அண்டை நாடுகளின் வரிசையில் நாமும் சீக்கிரம் சேர்ந்துவிடுவோமா?

60 ஆண்டுகளாக இந்தியாவில் உயிர்ப்புள்ள ஜனநாயகம் வளர்ந்து வந்திருப்பதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல. அந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்துவதற்கு பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்ததே காரணமாகும்.

முதலில் அதற்குக் காரணமான மென்பொருள் என்ன எனப் பார்ப்போம். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அடிப்படைக் கலாசாரம் சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இந்துக் கலாசாரமாகும்.

இந்து தர்மம் அதாவது சனதான தர்மம் என்பது எப்போதும் இரு அம்சங்களை வலியுறுத்திவந்துள்ளது. ஒன்று, திறந்த மனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம்; மற்றொன்று, முரணான விஷயங்களை சகித்துக்கொள்ளும் குணம். இதுவே வேதத்தில் “ஆனோபத்ரஹஹா க்ருதவி யந்து விஷ்வாதஹா’ எனப்படுகிறது. நல்ல சிந்தனைகள் உலகில் எங்கிருந்து வந்தாலும் அவற்றை வரவேற்க வேண்டும் என்பது இதன் பொருள். இரண்டாவது முக்கியமான கொள்கை, தர்மத்தின்படி நடப்பதாகும். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு தர்மங்கள் இருக்கின்றன. மகாபாரதத்தின் சாந்திபருவத்தில் பீஷ்மரின் வாயிலாக ராஜ தர்மம், அதாவது நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கான கொள்கைகள் போதிக்கப்படுகின்றன. டாக்டர் அமார்த்தியா சென் எழுதியிருக்கும் “தி ஆர்கியுமென்டேட்டிவ் இந்தியன்’ என்ற நூலில், வாதம் செய்யும் இந்தியாவின் பாரம்பரியம் சரியான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, வன்பொருளுக்கு ~ அமைப்பு ரீதியான அம்சத்துக்கு வருவோம். சிறிது காலத்துக்கு முன் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்செய்ய முஷாரப் மேற்கொண்ட முயற்சியானது, 1975-ல் இந்தியாவில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதை ஒத்திருந்தது. அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வியை எழுப்பியதால் நீதிமன்றத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைப்போலவே இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிப்பது குறித்து அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு கேள்வி எழுப்பியதால், நெருக்கடி நிலையைப் பிறப்பித்ததன் மூலம் நீதித் துறை மீது தாக்குதலைத் தொடுத்தார் இந்திரா காந்தி. தனது பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் ஓர் ஆட்சியாளர் தொடுத்த தாக்குதலாகும் அது.

ஒரே இரவில் அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் நாடு முழுவதும் ராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.

நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது இந்திரா காந்தி கடைப்பிடித்ததும் இதே பாணியைத்தான். இந்திய ஜனநாயக வளர்ச்சிப் போக்கில் நெருக்கடி நிலையானது, வரலாற்று நோக்கில் அதைப் புடம்போட்ட நிகழ்வாக அமைத்துவிட்டது.

இந்தியாவில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைதான் உள்ளபடியே சோதனைக் காலமாகும். அதை நாடு சமாளித்துக் கடந்துவிட்டது. தனது பதவியை சட்டபூர்வமாக ஆக்கிக்கொள்வதற்காக இரு ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்த முன்வந்தார் இந்திரா. தேர்தல் நடத்த அவர் நிர்பந்திக்கப்பட்டாரா அல்லது உளவுத் துறையினர் கருத்தைக் கேட்டு ஏமாந்துபோய் தேர்தலை நடத்தினாரா? அல்லது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எந்தப் பிரதமரும் இந்திரா காந்தியின் வழியில் செல்லத் துணிய மாட்டார் என்று கூறும் அளவுக்கு, நெருக்கடி நிலைப் பாதிப்புகளின் பிரதிபலிப்பு தேர்தலில் கடுமையாக இருந்தது.

இந்திய ஜனநாயகத்தின் வன்பொருள் என்ன? துடிப்புமிக்க, பலம் பொருந்திய சுயேச்சையான அமைப்புகள்தான் இந்தியாவில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகின்றன. அவற்றில் ஒன்று பத்திரிகைத் துறை. தூக்கிலிடப்படுவதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோ எழுதிய, “நான் படுகொலை செய்யப்பட்டால்…’ என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “”உத்வேகம் மிக்க ஜனநாயகத்தினால்தான் இந்தியா வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் அவர்.

நெருக்கடி நிலை உச்சத்தில் இருந்தபொழுதுகூட ராம்நாத் கோயங்கா, இரானி போன்ற மன உறுதி மிக்க, துணிச்சலான பத்திரிகையாளர்கள், மக்களின் ஜனநாயக உணர்வும் விடுதலை வேட்கையும் அணைந்துவிடாமல் காத்தனர். நெருக்கடிநிலையின் கொடூரமான அனுபவத்துக்குப் பின், மீண்டும் அத்தகையதொரு நிலை வந்துவிடாமல் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடைமுறைகளை நாடாளுமன்றமும் நீதிமன்றமும் வகுத்திருக்கின்றன. காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்தபோது ~ நாட்டில் ஒரு கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அக் கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால் இப்போது ஒரு கட்சி ஏகபோகம் என்பது இல்லை. அதோடு, பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம், 356-வது பிரிவைப் பயன்படுத்துவதற்குப் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துவிட்டது. அதன் வாயிலாக, ஜனநாயக நடைமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை அவ்வளவு சுலபமாக சீர்குலைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த அமைப்புகள் கட்டிக்காத்து வருகின்றன. சோதனையான காலகட்டங்களில் அந்த அமைப்புகள் மேற்கொண்ட நிலைகளின் காரணமாக அத்தகைய பலத்தை அவை பெற்றிருக்கின்றன.

ஜனநாயகம் வளரத் தேவையான மற்றொரு முக்கிய அம்சம், பொதுவாழ்வில் நேர்மை. இவ் விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற நமது தலைவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்; நமது ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பொழுது, முன்னுதாரணமாக விளங்கியவர்கள். ஆனால் இன்று பொதுவாழ்க்கையில் பெருகிவிட்ட ஊழல் தலைவர்களால், நாம் அந்தத் தலைவர்களில் பலரை மறந்தே போய்விட்டோம்.

அதே நேரத்தில் ஆறுதலான சில விஷயங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சையான அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகளும், பொதுவாழ்வில் சிறிது அளவாவது அடிப்படை நேர்மை இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.

எனவே, இந்தியாவில் ஜனநாயகம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதிர்ஷ்டத்தைக் காரணமாகக் கூற முடியாது. மாறாக துடிப்புமிக்க ஜனநாயகமாக வருங்காலத்தில் வளர்ந்தோங்குவதற்குத் தேவையான வன்பொருளும் மென்பொருளும் இந்தியச் சமூகத்தில் இருக்கின்றன என்பதே காரணம்.

Posted in 144, Amartya, Bhutto, Churchil, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Culture, Democracy, Emergency, Epic, Federal, Freedom, Govt, Hindu, Hinduism, Hindutva, History, Independence, Indhra, India, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Law, Liberation, Mahabharatha, Misa, National, Naxal, Oppression, Order, Pakistan, Police, POTA, Republic, Sen, TADA, Tradition, Values, Vittal | Leave a Comment »

Tamil New Year: Thai Pongal or Chithirai First Day? – S Ramachandran

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2008

சித்திரையில்தான் புத்தாண்டு

எஸ். ராமச்சந்திரன்

இக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் “தைந்நீராடல்’ எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.

அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் – சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் – அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட “ஏரீஸ்’ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.

இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி – சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது “”மீன மேஷம் பார்த்தல்” என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.

இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா?

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.

மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். (“”நாஞ்சிற்பனைக் கொடியோன்” – புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.

பலராமனை “புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு’ குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.

பூம்புகாரில் இந்திர விழாவின்போது “”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து” மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 – 69களில் குறிப்பிடப்படுகிறது.

பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா? இவை இரண்டிற்குமே தெளிவான விடை “”அல்ல” என்பதுதான்.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.

ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை – 360 பாகைகளை – 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.

சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் “”இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்” என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).

தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி – பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.

பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.

வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.

“”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட “ஏரீஸ்’ என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.

இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் – முதுவேனில், கார் – கூதிர், முன்பனி – பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் – ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் “”பிரபவ” தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை “”வியாழ வட்டம்” (Jovian Circle) எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், “இனம் புரிந்த’, இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.

இந்தியா “”தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற” காலகட்டத்தில், “”நேரங் கெட்ட நேரத்தில்” மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் “”தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு” என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் “சுதந்திர’மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: “”சித்திரையில்தான் புத்தாண்டு”.

(கட்டுரையாளர்: தொல்லியல் ஆராய்ச்சியாளர்)
—————————————————————————————————————————-
தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு

தமிழண்ணல்

இன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் – வானநூல். கணியின் – வான நூல் வல்லவன்.

கணியர் – சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல், அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும். பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர். இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள், நன்கணியார் என்பது இவரது இயற்பெயர்; கணி – சோதிடம் வல்லவன் என் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார்.

பதினெண்கீழ்க்கணக்கில் திணைமாலை நூற்றைம்பது, ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

சேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து, கங்கைக் கரையில் இருந்தபோது, தன்னுடன் இருந்த கணியிடம், வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான். அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர்.

சேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கினானாம். அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்த முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான். பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க; இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது (காதை 27: 146-149) என்பது காண்க. மதியமே பிறகு மாதம் ஆனது. திங்கள் என்பதும் அதுவே. அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் (புறம்-112) சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படுகிறான். அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் (சிலம்பு: 22-8, 26-3).

குறுந்தொகையில், கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் பாடிய பாடலொன்றுளது. அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது.

மாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் . . . (குற.129). தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதற்கு எட்டாவது திதி, அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார். எண் நாள் பக்கம் – இன்று பக்கம் என்பதையே – பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர்.

இவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை, நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம். உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு. பதினான்கு நாள் வளர்பிறை, பதினைந்தாம் நாள் முழுமதி (பௌர்ணமி). அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை. பதினைந்தாம் நாள் மறைமதி (அமாவாசை). ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் (மாதம்), திங்கள் கணக்கிடப்பட்டது.

நாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள். கோள்-கிரகம். நாளும் கோளும் என்பது உலக வழக்கு. 27 நாள்கள் (நட்சத்திரங்கள்) என்பதாலும் இரண்டையும் சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல், குறைவானது.

கோள்களை (கிரகங்கள்) வைத்து, ஒரு வாரம் -ஞாயிறு முதலாகக் கணக்கிடப்பட்டது. இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு (கிரகங்களுக்கு) ஏழு நாட்களாயின.

ஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும், நாள்களை வைத்தும் மதியத்தை வைத்தும் மாதத்தையும், சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர். இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள.

சித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம். இதனை வசந்த காலம் என்பதுண்டு. பனிக் காலம் முடிந்து, இளவேனில் (வசந்தம்) வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் ளுயீசபே எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர்; வசந்த காலம் தொடங்குவதற்கு அறிகுரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர் (தினமணி 24-1-2008) குறிப்பிடுகிறார். தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி, நிரம்பக் குறிக்கப் பெற்றுள்ளது.

காதலர்கள் ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடியும், பூங்காக்களில் விளையாடியும் இன்பம் நுகர்ந்ததோடு, மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம். புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம்.
மகிழ்துணைப் புணர்ந்தவர் (காதலர்) வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுது; நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார், புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது (கலி. 35). இவ்விழா – காலப் போக்கில் சமய விழாவாக மாறி, நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது.

அதற்காக கிரேக்க, உரோமானியரோ, தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது.

இனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் – தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது – ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு – முன்பு யாடு என்றே வழங்கியது.

இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர்.

அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு – மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்; மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர், சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது.

மேஷம் என்பதற்கு – முற்பட்ட யாடு, ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க, அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து, தமிழர் ஆண்டினைக் கணக்கிட்டதால், தமிழர்களின் வானநூல் முறைப்படி – யாட்டு, யாட்டை, ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கமெனக் கொள்வதே தக்கதாகும். சித்திரை முதல்நாள் – இளவேனிலின் (வசந்தத்தின்) தொடக்கமாகும். ஆண்டுத் தொடக்கமாகாது. அது இன்று கோடை காலம் ஆனது, பருவ மாற்றங்களின் கொடுமையாகும்.

தமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பிடுவது, மிகைப்பட்ட நகையாடலாகவுளது. செம்மொழி என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்துவிட்டுத் தமிழை வளர்ப்பதும், அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந் நாளில், தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும்.

——————————————————————————————-

அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்

பழ. நெடுமாறன்



தமிழர் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் என்பதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க ஒரேமனதாக நிறைவேற்றுவதற்கு வழிசெய்த முதல்வர் கருணாநிதியைப் பாராட்டுகிறேன்.

தொன்மை வாய்ந்த மொழியான தமிழுக்கும், மூத்த குடியினரான தமிழர்களுக்கும் தனியாகப் புத்தாண்டு என்பது இல்லையா? காலப்பாகுபாடு பற்றிய கருத்தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

சங்ககாலத் தமிழர் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகப் பகுத்தனர். ஒவ்வொரு பருவமும் இரண்டு மாதங்களைக் கொண்டிருந்தன. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என வழங்கப்பட்ட இந்த ஆறு பருவங்கள் தமிழுக்கே உரிய அகத்தினை மரபின் அடிப்படையாகும்.

குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தென்திசையில் நின்ற கதிரவன் வடதிசைக்குச் செல்லத் தொடங்கும் (உத்தராயணம்) நாளையும் இணைத்துக் கொண்டாடினர். இதன் மூலம் தைத்திங்கள் முதல்நாள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றது.

தமிழ்நாட்டில் கிடைத்துள்ள இலக்கிய, கல்வெட்டு சான்றுகளின்படி ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்டதும் சித்திரையில் தொடங்கப் பெறுவதுமான ஞாயிற்று ஆண்டுக் கணக்கு ஒன்றும், கல்வெட்டுச் சான்றுகளின்படி வியாழனை அடிப்படையாகக் கொண்ட வியாழ ஆண்டுக் கணக்கு ஒன்றும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஞாயிற்று ஆண்டை சோழ மன்னர்களும், வியாழ ஆண்டை பாண்டியர்களும், சேரர்களும் பின்பற்றியுள்ளனர் என முனைவர் க. நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.

சிந்து சமவெளி நாகரிக மக்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு வியாழ ஆண்டே என்பதை ருசிய அறிஞர்கள் நிறுவியுள்ளனர். 1985ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற மகாநாட்டில் ஆய்வுரை வழங்கிய அறிஞர்கள் இந்த உண்மையை வெளியிட்டனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளியில் பரவியிருந்த நாகரிகம் எகிப்திய மெசபடோமிய நாகரிகங்களைவிட மிக முந்தியது. அதிகமான பரப்பில் பரவியிருந்தது என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 14-10-85ம் நாளிட்ட தினமணி இதழ் இச்செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 60 ஆண்டு கணக்குமுறை வியாழ ஆண்டிற்கு உரியதாக இருந்தது. பின்னர் ஞாயிற்றாண்டோடு இது கலந்துவிட்டது. இந்த முறை கி.பி. 312ஆம் ஆண்டில் தொடங்கியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்களால் இம்முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது.

ஞாயிற்று ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டிற்கு 365 நாள்கள் என வகுத்ததும் தமிழர்களே என்பதை கிரேக்க நாட்டுப் பயணியான மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளின் மூலம் அறிகிறோம்.

சாலிவாகன சகம் என்ற ஆண்டுமுறை சித்திரை மாதத்தை முதல் நாளாகக் கொண்டிருந்தது. இதுதவிர பசலி, கொல்லம் என்னும் தொடர் ஆண்டுகளும் தமிழகத்தில் வழக்கில் இருந்தன.

பண்டைத் தமிழ் மக்கள் ஒரு தலைநகரின் தோற்றம் அல்லது பேரரசன் பிறப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடராண்டு கணித்து வந்தனர் என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுவந்த குறிப்புகளால் அறிய கிடக்கிறது என புலவர் இறைக்குருவனார் கருதுகிறார்.

அரசர்கள் முடிசூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வரசர் பெயரோடு ஆட்சி ஆண்டு என்று குறிப்பிடும் மரபு பிற்காலச் சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன.

தமிழ்நாட்டிற்கு ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு கிரிகேரியன் ஆண்டு என அழைக்கப்படும் கிறித்துவ ஆண்டுமுறை பழக்கத்திற்கு வந்தது.

கிசிரி முகமதிய ஆண்டுமுறை நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதினாவுக்குப் புறப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட ஒன்றாகும். புத்த மதத்தவர் புத்தர் முக்திபெற்ற நாளின் அடிப்படையில் ஆண்டுமுறையை வகுத்துக் கொண்டுள்ளனர். அதைப்போல மகாவீரர் முக்தி பெற்ற நாளினை அடிப்படையாகக் கொண்டு மகாவீரர் நிர்வாண ஆண்டு சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.

எனவே தமிழர்களுக்கு தொடர் ஆண்டு இல்லாத குறைபாட்டினை போக்குவதற்காக கி.பி. 1921ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவராண்டு முறையை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென முடிவு செய்தனர்.

திருவள்ளுவர் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு என கொண்டு கி.மு. 31ஆம் ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு இந்த ஆண்டுமுறை வகுக்கப்பட்டது. ஆனாலும் பிற்காலத்தில் கிடைத்துள்ள பல்வேறு புதிய சான்றுகளின் மூலம் திருவள்ளுவரின் காலம் இன்னும் பழமையானது எனக் கருதும் அறிஞர்களும் உள்ளனர்.

6-12-2001 அன்று மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாட்டில் தை முதல் நாளே தமிழ் ஆண்டின் தொடக்க நாள் என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும் இறுதியான முடிவு தெரியும்வரை மறைமலையடிகள் தலைமையில் வகுக்கப்பட்ட திருவள்ளுவராண்டு கணக்கினை தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர்.

1972ஆம் ஆண்டில் முதல்வராக கலைஞர் கருணாநிதி பதவி வகித்தபோது திருவள்ளுவராண்டு முறையினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அரசிதழிலும் அரசு வெளியிட்ட நாள்காட்டி, நாள்குறிப்பு ஆகியவற்றிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1983ஆம் ஆண்டில் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, தமிழக அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவராண்டினை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும் தமிழர் ஆண்டு என்ற பெயரில் வடமொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டுப்பெயர்கள் கடைப்பிடிக்கப்பட்டன. சித்திரை முதல் நாள் தமிழாண்டு பிறப்பு என்பதும் தொடர்ந்தது. இதன் விளைவாக திருவள்ளுவராண்டு வகுக்கப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அதனை அரசு ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் அது செயலுக்கு வரவில்லை.

எனவே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் சித்திரை முதல்நாளா, தை முதல்நாளா என்ற குழப்பம் நிலவியது.

தமிழறிஞர் கா. சுப்பிரமணியபிள்ளை போன்றவர்கள் ஆவணி மாதமே பண்டைத் தமிழ்நாட்டில் ஆண்டுத் தொடக்க மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டது என கருதினார்கள்.

இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை சட்டப்பூர்வமாக ஆக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால் உலகத் தமிழர்களைக் கணக்கிலோ கவனத்திலோ எடுத்துக்கொள்ளப்படாமல் தமிழக சட்டமன்றத்தில் மட்டும் இத்தகைய சட்டமுன்வடிவு ஏற்கப்படுவது முறையானது அல்ல.

தமிழர் பண்பாட்டுத் தளத்தில் மிக முக்கியமான முடிவு இதுவாகும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தலைமுறைதலைமுறையாகத் தமிழர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதுமாகும்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பழமையான அமைப்புகளான மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்ச்சங்கம், தமிழகப் புலவர் குழு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர்கள், தமிழ் வரலாற்று அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு அறிஞர்கள் மற்றும் இலங்கை, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை தமிழக முதலமைச்சர் கூட்டி தை திங்கள் முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை நன்கு ஆராய்ந்து ஏற்கச் செய்து அதன்பிறகு இதனை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருந்தால் அவரது பெருமையும் உயர்ந்திருக்கும். உலகத் தமிழர்களும் இதை மகிழ்ச்சியுடன் பின்பற்றத் தொடங்கியிருப்பார்கள்.

1982ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் உரையாற்றிய கூட்டத்தின் முடிவில் மாணவர்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நேரம் அது. அந்த மாணவர் அது குறித்து கேள்வி கேட்டார்.

“”தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்திருக்கிறீர்களே ஏன் எங்களைக் கேட்கவில்லை. தமிழ் உங்களுக்கு மட்டுமே சொந்தமா?” என்ற கேள்வியை அவர் எழுப்பியபோது நான் ஒரு கணம் திகைத்துப்போனேன். ஆனால் மறுகணமே அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை, தவிப்பை உணர்ந்தேன்.

“தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிவிப்பதற்கு முன்னால் ஈழத்தமிழ் அறிஞர்களையும், பிறநாட்டுத் தமிழ் அறிஞர்களையும் அழைத்துக் கலந்துபேசி முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை அந்த மாணவரின் கேள்வி எனக்கு உணர்த்திற்று. தமிழகத்திற்கு நான் திரும்பி வந்தபோது, தமிழக சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசினேன். பேரவையில் இருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்னை அழைத்துப் பேசி முழு விவரத்தையும் கேட்டறிந்தார். எழுத்துச் சீர்திருத்தம் பிரச்னையில் மட்டுமல்ல. தமிழில் கலைச்சொற்கள், அறிவியல் சொற்கள் போன்றவற்றின் உருவாக்கத்திலும் உலகத் தமிழறிஞர்கள் பங்கேற்க வேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்தினேன். இல்லையென்றால் வெவ்வேறு விதமான கலை, அறிவியல் சொற்கள் உருவாகிவிடக்கூடிய அபாயத்தையும் சுட்டிக்காட்டினேன். எனது கோரிக்கையின் நியாயத்தை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உணர்ந்தார். உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.

திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாள் எது என்பதை முடிவு செய்யும் உரிமையும் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. உலகத்தமிழர்களுக்கும் சொந்தமானது. அவர்களையும் கலந்துகொண்டு செய்திருந்தால் மட்டுமே அந்த முடிவு நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

Posted in 60+, Ambedkar, Ancient, Anniversary, Aries, Arya, Aryan, Astronomy, Beeshma, Beeshmar, Belief, Bheeshma, Bheeshmar, Bhishma, Bhishmar, Bishma, Bishmar, Brahminism, Calendar, Celebrations, Cheran, Chithirai, Cholan, Cholas, Chozan, Chozhan, Chozhas, Culture, Customs, Days, Devas, DMK, Dravida, Dravidian, Dravidianism, Events, EVR, Festivals, first, Functions, Greece, Greek, Hindu, Hinduism, Hindutva, History, Holiday, Horoscope, Indhira, Indhiran, Indhra, Indhran, India, Indiran, Indra, Indran, Inthiran, Issues, January, Jovian Circle, Kural, Leave, Literature, months, Moon, New, Paappaan, Pandian, Pandias, Pandiyan, Pandiyas, Pappaan, Parsian, Periyaar, Periyar, Persia, Persian, Pisces, Pongal, Poombugar, Poombuhar, Poombukar, Poompugar, Poompuhar, Poompukar, Religion, Roman, Sangam, Sangamam, Sanskrit, Seasons, Signs, Sithirai, Spring, Summer, Sun, Temples, Thai, Thamil, Thirukkural, Thirukural, Thiruvalluvar, TN, Tradition, Valluvar, Winter, Year, Years | 3 Comments »

In search of Buddha – Religious freedom in Tamil Nadu & identifying the roots of Buddhism, Culture, Traditions

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

தேடல்: புத்தரைத் தேடி..!

எந்தக் காரியத்தையும் ஆதாய நோக்கத்தோடே பார்த்துப் பழகிய நம் சமூகத்தில் ஓர் ஆய்வாளராக இருப்பது பெரிய பாடுதான். அதுவும் வயல்களிலும் மரத்தடிகளிலும் தலை தனியாக முண்டம் தனியாக அடையாளம் சிதைந்து புதைத்துக் கிடக்கும் சிலைகளைப் பற்றியும் அதை ஆய்வு செய்துகொண்டிருப்பவரைப் பற்றியும் அரசுக்கோ சமூகத்துக்கோ என்ன அக்கறை இருக்கிறது; ஆதாயம் இருக்கிறது?!

தமிழ்நாட்டில் பழங்கால சிலைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. யாரோ ஓர் ஆய்வாளர் சிலையைக் கண்டறிகிறார்; குறிப்பெடுக்கிறார். நம் ஆள்கள், அட அப்படியா! என வாய் பிளந்துவிட்டு வேறு வேலையைப் பார்க்க சென்றுவிடும்போதும் ஆய்வாளர்கள் தன் வேலையைத் தொடருகிறார்கள்.

முனைவர் பா. ஜம்புலிங்கமும் அப்படிதான். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்கிறார். கண்காணித்தோமா போனோமா என “சாமர்த்தியமாக’ இல்லாமல் சோழ நாட்டில் பெüத்த சமயம் வேரூன்றியது குறித்து ஆய்வு செய்திருக்கிறார். இதுவரைக்கும் 64 புத்தர் சிலைகளை அவர் கண்டறிந்திருக்கிறார்.

ஜம்புலிங்கத்துக்குப் பூர்வீகம் கும்பகோணம். சின்ன வயதிலிருந்தே வரலாற்றில் ஆர்வமாக இருந்திருக்கிறார். ஏதோ ஓர் ஆய்வு செய்வோம் என்றிருந்த அவரிடம் எங்கிருந்தோ வந்து புத்தர் ஒட்டிக்கொள்ளவும் இப்போது புத்தரைத் தேடி ஊர் ஊராக அலைந்துகொண்டிருக்கிறார் அவர்.

ஜம்புலிங்கம் சொல்கிறார்: “”என்ன தகவல் கிடைத்தாலும் குறித்து வைத்துக்கொள்வேன். வார விடுமுறை நாள்களில் கிளம்புவேன். பஸ்ஸில், சைக்கிளில், நடையில் எனத் தொடரும் பயணம். புத்தர் சிலைகள் பெரும்பாலும் ஊரை ஒட்டியுள்ள வயல்களிலும் மரத்தடியிலும்தான் கிடைக்கின்றன. சிலை சேதமடைந்திருந்தாலும் உச்சிக்கொண்டை, நீள செவிகள், ஆடை, தியான நிலை, நெற்றித் திலகம் என ஏதாவது ஓர் அடையாளம் புத்தரைக் கண்டறிவித்துவிடும்.

சில இடங்களில் புத்தர் எனத் தெரிந்து வழிபடுகிறார்கள். சில இடங்களில் இன்ன சிலை என்றே தெரியாமல் வழிபடுகிறார்கள். மங்கலம் என்ற ஊரில் மீசை உள்ள புத்தரைக் கண்டறிந்தோம். உள்ளூர் மக்கள் அதை செட்டியார் என்ற பெயரில் வழிபட்டு வந்தனர். இதேபோல் முனிசுவரர், அம்மணசாமி என்ற பெயர்களில் வணங்கப்படும் புத்தர் சிலைகளும் உண்டு. இங்குள்ள சிலைகள் பெரும்பாலும் கி.பி. 10, 11-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாக உள்ளன.

தமிழகத்தில் சங்கக் காலத்தில்தான் புத்த சமயம் வேரூன்றியதாகக் கருதப்படுகிறது; ஆனால், மயிலை சீனி. வேங்கடசாமி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டதாகக் குறிப்பிடுகிறார். கி.பி. 6-ம் நூற்றாண்டில் செழித்தோங்கிய புத்த மதத்தின் தாக்கம் 16-ம் நூற்றாண்டு வரை இங்கு இருந்திருக்கிறது. எனவே, இன்னும் நிறைய சிலைகள் இருக்கக் கூடும். அவையெல்லாம் கண்டறியப்பட்டால் பெüத்த சமய வரலாற்றுக்குப் புதிய தகவல்கள் கிடைக்கும்” என்கிறார் ஜம்புலிங்கம்.

ஜம்புலிங்கத்தின் ஆய்வுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. தமிழகத்திலேயே காவிரி கரையோர – கடலோரப் பகுதிகளில்தான் பெüத்த மதம் செழித்திருந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, அப்பகுதியில் இவர் ஆய்வு மேற்கொண்டிருப்பது தமிழக பெüத்த வரலாற்றுக்கு நல்ல பங்களிப்பாகும்.

சிலைகள் மதம் சார்ந்தவை மட்டுமல்ல; கலை, பண்பாடு, கலாசாரம் எனக் காலம் உறைந்த – புதையுண்டுக் கிடக்கும் வரலாறுகள். ஜம்புலிங்கம் போல் தனித்தனியே வெவ்வேறு ஆய்வாளர்கள் கண்டறிந்த சிலைகள், அவை தொடர்புடைய செய்திகள் எல்லாம் ஒன்றாக தொகுக்கப்பட்டு பெரியளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் தமிழகப் பெüத்த வரலாற்றில் புதிய கோணம் புலப்படலாம். நம் சமூகத்தில் இதெல்லாம் பெரிய கனவுதான். புத்தரை வேண்டிக்கொள்வோம்!

Posted in Ancient, Archeology, Buddha, Buddhism, Culture, Heritage, Hindu, Hinduism, Hindutva, History, Idols, inscriptions, Religion, Religious, Research, Rural, Saivite, Scriptures, Statues, stones, Tamil Nadu, TamilNadu, Traditions, Vaishnavite, Villages | Leave a Comment »

Amrutha Publications: Interview with Prabhu Thilak on Chennai Book Fair 2008

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

முகங்கள்: படித்தது மருத்துவம் பிடித்தது புத்தகம்!

அவர் எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர். தற்போது சேலம் வினாயக மிஷன்ஸ் கிருபானந்தவாரியார் மருத்துவக் கல்லூரியில் மயக்க மருந்தியல்துறையில் எம்.டி.படிக்கும் மாணவர். ஆனால் அவர் புத்தகங்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். அம்ருதா பதிப்பகம் என்கிற பெயரில் நல்ல நூல்களைத் தேடிப் பிடித்துப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் பிரபுதிலக்.

அவர் காவல்துறை உயர் அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதியின் மகன்.

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கான புத்தக வெளியீட்டில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்…

“”நான் படித்தது மருத்துவம் என்றாலும் இலக்கியங்களில் எனக்கு ஈடுபாடு அதிகம். காரணம் எங்கள் வீட்டு கிச்சன் முதல் பெட்ரூம் வரை புத்தகங்கள் எப்போதும் இருக்கும். அம்மா ஒரு பெரிய இலக்கியவாதி. இந்தச் சூழலில் வளர்ந்த எனக்குப் புத்தகங்களின் மேல் எப்போதும் விருப்பம் அதிகம்.

அம்ருதா அறக்கட்டளையின் சார்பாக இந்தப் பதிப்பகத்தை 2005 இல் ஆரம்பித்தோம். இதுவரை 40க்கும் மேற்பட்ட தலைப்பில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்.

ஏற்கனவே நிறையப் பதிப்பகங்கள் இருக்கின்றன. எனவே நாங்கள் புத்தகப் பதிப்பில் இறங்கும் போது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.

புத்தக வெளியீடு என்பது இப்போது வியாபாரம் ஆகிவிட்டது. இதற்கு எழுத்தாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன. பதிப்பாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன.

நிறைய எழுத்தாளர்களுக்கு தங்களுடைய புத்தகங்களை வெளியிட நல்ல பதிப்பகம் அமைவதில்லை. தான் எழுதியவை புத்தகமாக வெளிவருமா என்று புத்தகம் வெளியிட வாய்ப்புக் கிடைக்காத எழுத்தாளர்கள் ஏங்கும் நிலை உள்ளது.

அதிலும் கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்கு பெரும்பாலான பதிப்பகங்கள் முன் வருவதில்லை.

சில பதிப்பகங்கள் எழுத்தாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு புத்தகங்களை வெளியிடுகின்றன.

இம்மாதிரியான சூழ்நிலையில் அதிகம் அறிமுகம் ஆகாத எழுத்தாளர் என்றாலும் தரமான படைப்பு என்றால் வெளியிடுகிறோம். உதாரணமாக சேலம் இலா.வின்சென்ட் என்பவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாப்லோ அறிவுக் குயிலின் “குதிரில் உறங்கும் இருள்’ என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாலுசத்யாவின் “காலம் வரைந்த முகம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டோம்.

மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் நிறைய வெளிவந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் அதிலும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம். மொழிபெயர்ப்பு நூல்கள் என்றால் முதலில் ரஷ்ய நூல்கள், அமெரிக்க நூல்கள், பிரெஞ்ச் நூல்கள் என்றுதான் மொழிபெயர்த்தார்கள். இப்போது லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அவற்றிற்கு நிகரான இலக்கிய வளம் நமது ஆசிய நாட்டு இலக்கியங்களுக்கு உள்ளது. மிகப்பெரிய அமெரிக்காவைப் போரில் வீழ்த்திய வியட்நாம் அதன் ஆயுத பலத்தால் மட்டுமா வீழ்த்தியது? அதன் ஆன்மபலமும் அல்லவா அமெரிக்காவின் வீழ்ச்சிக்குக் காரணம்? அமெரிக்கா போன்ற நாடுகள் செல்வ வளத்தில் பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் ஞான வளம் ஆசிய நாடுகளுக்கே உரியது. நபியாகட்டும், கன்பூசியஸ் ஆகட்டும், கெüதம புத்தராகட்டும் எல்லாரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களே. நமது இந்தியாவிலேயே சிறந்த சிந்தனையாளர்கள், வளமான இலக்கியங்கள் உருவாகவில்லையா? அந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடத் தீர்மானித்தோம்.

மலையாள இலக்கியவாதி என்றால் பெரும்பாலோருக்கு தகழி சிவசங்கர பிள்ளையைத் தெரியும். வைக்கம் முகம்மது பஷீரைத் தெரியும். பிற எழுத்தாளர்களை அவ்வளவாகத் தெரியாது. பொற்றேகாட், கேசவதேவ், மலையாற்றூர் ராமகிருஷ்ணன், சி.ஏ.பாலன் போன்றோரைச் சிலருக்குத்தான் தெரியும்.

பால்சக்கரியாவின் “அன்புள்ள பிலாத்துவுக்கு’ என்ற நாவலை வெளியிட்டோம். நாங்கள் பலருக்கும் தெரியாத பி.சுரேந்திரன் என்ற மலையாள எழுத்தாளரின் “மாயா புராணம்’ என்ற நாவலை வெளியிட்டோம். கோயில் நுழைவுப் போராட்டத்தை மையமாக வைத்து கன்னடத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய நாவலை “பாரதிபுரம்’ என்கிற பெயரில் வெளியிட்டிருக்கிறோம். தாகூரின் “சிதைந்த கூடு’ நூலை வெளியிட்டிருக்கிறோம்.

எங்கள் பதிப்பக வெளியீடுகள் எந்தக் குறிப்பிட்ட சார்புநிலையும் எடுப்பதில்லை. மனித மேம்பாட்டுக்கு, சமூக மேம்பாட்டுக்கு உதவும் நூல்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். யாரையும் யாரும் காயப்படுத்தக் கூடாது. இவைதான் எங்கள் நோக்கம். விருப்பம்.

நமது மகாபாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் இல்லாத விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா?

நல்லது கெட்டது, கெட்டதில் உள்ள நல்லது எல்லாம் மகாபாரதத்தில் உண்டு. எல்லாரும் மன்னிக்கும்தன்மையுடனும் பெருந்தன்மையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய இதிகாசங்கள் தோன்றின. ஆனால் இன்றைய வாழ்க்கை எப்படி உள்ளது? கொலை, கொள்ளை, வெறுப்பு, இப்படி ஆரோக்கியமில்லாத சமூகமாகிவிட்டது. அர்த்தமுள்ள பொழுது போக்குகள் இல்லை. இவற்றை மாற்றி நல்ல சமுதாயத்தை அமைக்க விரும்பும் பலர் குதிரைக்குக் கண்பட்டை அணிந்ததுபோல் ஒரே கோணத்தில் பார்க்கிறார்கள். அப்படியில்லாமல் மனித மேம்பாட்டுக்கு உரிய நல்ல கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு உள்ளது.

அதனால்தான் “கிறிஸ்து மொழிக் குறள்’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம். “நபி(ஸல்) நமக்குச் சொன்னவை’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம்.

“சல்வடார் டாலி’ என்ற பெண்ணியச் சிறுகதைகளின் தொகுப்பை வெளியிட்டிருக்கிறோம். இதில் இந்தியப் பெண் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். இதில் பெண்ணின் வாழ்வு யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது, பெண்ணிய நோக்கில். பெண்ணியம் என்றால், “நீ சிகரெட் பிடித்தால் நான் சிகரெட் பிடிப்பேன்’ “நீ ஜீன்ஸ் போட்டால் நானும் போடுவேன்’ என்கிற மாதிரியான பெண்ணியம் அல்ல. பெண்ணின் சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பு.

விட்டல்ராவ் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர். இன்றைய எந்த இலக்கியக் குழுவிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். அவர் தமிழ்நாட்டின் பல கோட்டைகளுக்கும் நேரில் போய் அந்தக் கோட்டைகளின் வரலாறு, புவியியல், மக்கள் வரலாறு , மக்களின் கலை, கலாச்சாரம் எனப் பலவற்றை ஆராய்ந்து “தமிழகக் கோட்டைகள்’ என்ற நூல் எழுதியுள்ளார். அந்த அருமையான நூலை முக்கியமான பதிப்பகங்கள் வெளியிடத் தயங்கிய சூழ்நிலையில் நாங்கள் அதை வெளியிட்டோம்.

சிறந்த எழுத்தாளர்கள் 18 பேரின் சிறந்த பத்துக் கதைகளைத் தொகுத்து மாணவர் பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று மாணவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வம் குறைந்து வருகிறது. அதுவும் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களிடம் தமிழ் இலக்கியத்தைப் படிக்கும் போக்கு அறவேயில்லை. முந்திய தலைமுறையைச் சேர்ந்த எம்.வி.வி., ந.பிச்சமூர்த்தி, தி.ஜ.ர. போன்றவர்களைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்கு அதிகம் தெரியாது. ஏன் இன்னும் சொல்லப் போனால், ந.பிச்சமூர்த்தியின் இனிஷியல் “ந’ வா? “நா’ வா? என்று கேட்டால் பல இலக்கியவாதிகளே குழம்பினார்கள். எனவே மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நூல் வரிசையைக் கொண்டுவந்திருக்கிறோம்.

இன்று மல்டி நேஷனல் கம்பெனிகள் வந்துவிட்டன. பணம் சம்பாதிப்பதே நோக்கமாகக் கொண்ட சமூக மனோபாவம் வந்துவிட்டது. ஆனால் பணம் சம்பாதிப்பது சந்தோஷத்திற்கான வழிகளில் ஒன்று. பணத்தால் வெளியே ஜில்லென்று குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஏஸியை வாங்கிவிடலாம். ஆனால் மனதுக்கு குளிர்ச்சியைப் பணத்தால் ஏற்படுத்த முடியுமா? அது நல்ல இலக்கியங்களாலும், நூல்களாலும்தான் முடியும். அதனால்தான் இந்தப் பதிப்பக முயற்சியில் “அணில் கை மணல் போல’ நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு ஈடுபட்டிருக்கிறோம்.

Posted in Amruta, Amrutha, Authors, Books, Chennai, Collections, Culture, Essays, Fiction, History, Kannada, Karnataka, Kerala, Literature, Malayalam, publications, Publishers, Readers, Students, Tagore, Tamil, Thilagavathi, Thilagavathy, Thilakavathi, Thilakavathy, Thinkers, Translations, UR, URA, Writers | Leave a Comment »

The History of Sarees – Art of wearing saris, Tamil Nadu Heritage & Culture, Textile Commerce

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

நீலக் கலரு ஜிங்கிச்சா.. பச்சைக் கலரு ஜிங்கிச்சா!

தேவி கிருஷ்ணா


புடவைக்கு ஆசைப்படாத பெண்ணும் உண்டா? வாங்குகிறார்களோ, இல்லையோ புடவைகளைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பதற்காகவாவது புடவைக் கடைகளுக்கு விசிட் அடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் கம்மி. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஆசைக்கு சற்றேறத்தாழ மூவாயிரம் ஆண்டு சரித்திரம் இருக்கிறது என்கிறார் “நூலோர்’. புடவையின் சரித்திரத்தைப் பார்ப்போமா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வரலாற்றில் சேலை இடம் பெற்றிருந்தது. சங்க காலத்துக்கு முன்பு தாழையையும் பூவையையும் சேர்த்து உருவாக்கப்பட்ட தாழை ஆடைகளை பெண்கள் அணிந்து வந்தார்கள். உடைகளை கொடிகளாலும் நொச்சி இலைகளாலும் ஆக்கிக் கொண்டார்கள். விழாக் காலங்களில் நெய்தல் மலர்களால் தாழையுடை செய்தார்கள். இடுப்பிலும் மார்பிலும் மகளிர் தாழையுடை அணிந்தார்கள் என சங்ககால வாழ்வியல் கூறுகிறது. காலம் செல்ல பருத்தி உடையும் பட்டு உடையும் அணிந்தார்கள்.

பருத்தி உடை முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் இங்கிருந்து மேல் நாடுகளுக்குப் பரவியது என்றும் வயர்சாண் மார்சல் கூறுகிறார். பால் ஆவி போன்ற மெல்லிய துணிகளும் பாம்பு தோல் போன்ற அழகான துணிகளும் காகிதம் மெல்லிய துணிகளும் சாக்கு போன்ற முரட்டுத் துணிகளும் நெய்யப்பட்டன. இங்கிருந்து மாதூரம் எனப் பெயர் பெற்ற புடவைகள் காசி, பாடலிபுரம் முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டது என்று 3-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அர்த்த சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ரோம் முதலிய நாடுகளுக்கும் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

அன்று நெசவு செய்பவர்கள் காருகர் என்று அழைக்கப்பட்டனர். வடகம், பாடகம், கோங்கலம், சித்திர கம்பி, பேடகம் எனப் பல பெயர்களில் ஆடைகளை சூடி மகிழ்ந்தனர். நீலம், சிவப்பு, மஞ்சள், கருப்பு முதலிய நிறங்களில் ஆடைகள் நெய்யப்பட்டன. அவற்றில் நுண்ணிய வேலைப் பாடுகள் இருந்தன. பருத்தியும் பட்டும் கொண்ட துணிகள் துகில் எனப்பட்டன.

நீளமாக நெய்யப்பட்ட துணிகள் பிறகு வெட்டப்பட்டு வேட்டிகளாகவும் துண்டுகளாகவும் பயன்படுத்தினர். இதனால் இவை அறுவை என்றழைக்கப்பட்டது. பருத்திப் புடவைகளுக்கு கலிங்கம் எனப் பெயர். பட்டு ஆடைகள் நூலாக் கலிங்கம் எனப்பட்டது.

நெய்வதில் தேர்ந்த தமிழன் அதற்கு சாயம் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினான். மலர்கள், செடி- கொடிகள், இலைகள் ஆகியவற்றின் சாறுகளில் வண்ணமேற்றினான். அவுரி செடியிலிருந்து ஏற்கப்பட்ட சாயம் ஐரோப்பியர்களின் மனதைக் கவர்ந்தது. இதில் இருந்து கிடைத்த நீல நிறச் சாயத்தை இண்டிகோ என்று அழைத்தனர்.

கடுக்காய், கொன்றைப் பூ போன்றவையும் சாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.

நாகரிகம் வளர வளர துணிகளின் ரகங்களும் வண்ணங்களும் மேலும் சிறப்படைந்தன. 18-19 ஆம் நூற்றாண்டுக்குச் செல்வோம். புடவைகள் முப்பாக சிறப்படைந்தன. அதாவது உடல், பார்டர், முந்தி என மூன்று பகுதிகள் உள்ள புடவைகள். ஆட்டுமுழி, புளியங் கொட்டை, சொக்கட்டான், வைரஊசி, பாய் பின்னல் மற்றும் மயில் கழுத்து, கிருஷ்ண மேகவர்ணம் போன்ற இரட்டைக் கலப்பு நிறங்களும் மோஸ்தராக இருந்தது.

முன் காலத்தில் காஞ்சிப்பட்டு சேலைகள் கனமாக இருக்கும். ஒரு புடவை 2 சேர், 3 சேர் (பழைய அளவுகள்) எடை இருக்கும். ஜரிகையையும் வேலைப் பாட்டையும் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் இப்போது பெண்கள் வெயிட் இல்லாத புடவைகளையே விரும்புகிறார்கள். டெஸ்ட்டட் ஜரிகைப் புடவைகள் என்பவை தாமிரத்தில் தங்க முலாம் பூசுவார்கள். இவை எடை குறைவாக இருக்கும்.

பெரிய விலை கொடுத்து வாங்கும் பட்டுச் சேலைகளை எப்படி பராமரிப்பது?…

புடவைகளை பீரோக்களில் வைக்கும் போது ஒரு மெல்லிய மல்-மல் துண்டில் சுற்றி வைத்தால் ஜரிகை கருக்காமல் புடவை புத்தம் புதிதாக இருக்கும். கொஞ்சம் சூடம் அல்லது நெப்தலின் உருண்டைகளையும் பீரோ தட்டுகளில் போட்டு வைக்க வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் புடவையைக் கட்டிய பிறகு அதை காத்தாட வெளியில் போட்ட பிறகு மடித்து வைக்கவும். மழைக்காலத்தில் பட்டுப் புடவைகளை இளம் வெயிலில் கால் மணி நேரம் போட்டு எடுத்து வைக்க வேண்டும். இப்படி செய்தால் புடவை 70 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும்.

பூந்திக் கொட்டையை இடித்து அதைத் தண்ணீரில் போட்டு ஊர வைத்தால் சோப்புத் தண்ணீர் மாதிரி கிடைக்கும். அதைக் கொண்டு கையினால் புடவைகளைக் கசக்கிப் பிழிந்து காய வைத்தால் பட்டின் பளபளப்பும் மென்மையும் காக்கப்படும்.

போதுமா புடவை கதை?
—————————————————————————————————————————————————————————
ஒலையில் நெய்த சேலை!

நாகரீகத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும்விதத்தில் புதுப்புது வகைகளிலும், விதங்களிலும் செயற்கை நூலிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய சேலை வகைகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. என்னதான் செயற்கை இழைகளின் மீதான மோகம் நம்மை ஈர்த்தாலும், இயற்கை வழியில் தாவர நாரைப் பயன்படுத்தி ஆடைகளை உருவாக்கும் முயற்சிகளும் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்த வகையில் ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனை மரத்தின் ஓலைகள் தற்போது நவநாகரீக சேலைகள் நெய்யவும் பயன்படும் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாகச் சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

ஏற்கெனவே, சணல், வாழை நார் உள்பட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கிச் சாதனை புரிந்து வரும் இச் சங்கத்தினர் தற்போது பனை ஓலையிலும் சேலை நெய்யமுடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

விசைத்தறி, செயற்கை இழை ஆடைகள் என பல்வேறு போட்டிகளுக்கிடையே பாரம்பரிய கைத்தறி நெசவுத் துறையை நம்பி அதனை முன்னிலை படுத்தும் பல்வேறு கட்டங்களில் போராடி வருகிறார் அனகாபுத்தூர் சணல் நெசவாளர்கள் சங்கத்தின் தலைவர் சேகர். இந்தச் சோதனையான காலகட்டத்திலும் புதிய சாதனைகளை நிகழ்த்தி வரும் சேகர் “”வாழை நார் உள்ளிட்ட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கி வருவதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது கடல்கடந்தும் பல்வேறு வெளி நாடுகளிலும் இவ்வாறு தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

குறிப்பாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இத்தகைய புதிய முயற்சிகளுக்கு அந்தந்த நாட்டு அரசுகளிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இத்தகைய சேலை ரகங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது.

இந் நிலையில் கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி பனை ஓலையில் சேலை நெய்ய முடியும் என நம்பினார். பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி வரும் எங்களை அந்த மாணவி அணுகினார்.

வெளிப்படையாகத் தெரியும் சில அம்சங்களால் பனை ஓலையை ஆடை ரகங்களை நெய்ய பயன்படுத்த முடியாது எனப் பலரும் நினைத்தனர். நாங்கள் பனை ஓலையை மிகமிக மெல்லிய இழைகளாகப் பிரித்தோம். பின்னர் பருத்தி நூலிழைகளுடன் பனை ஓலை இழைகளைக் குறுக்காகப் பயன்படுத்தினோம். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.

சேலையில் டிசைகள் வரும் இடங்களில் வழக்கமான இழைகளுடன் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தியது சிறப்பாக அமைந்தது. இது சேலைக்குப் புது பொலிவை அளிப்பதாக அமைந்தது. தற்போது ஒரு சேலையில் பருத்தி இழைகளுடன் சுமார் 40 சதவீத அளவுக்குப் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தி வருகிறோம். பனை ஓலை இழைகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி மேலும் மெல்லிய இழைகள் எடுத்தால் சேலையில் இதன் அளவை மேலும் அதிகரிக்க முடியும். இதற்கு அரசின் தொழில்நுட்ப உதவி அவசியமாகிறது. பனை ஓலையைப் பயன்படுத்தி நெய்யப்படும் சேலைகள் செயற்கை இழை சேலை மோகத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் தாவர நாரின் பக்கம் இழுக்கும் என்பதில் ஐயமில்லை” என்கிறார் சேகர் நம்பிக்கையுடன்.

ஆதி மனிதன் இலையைத்தான் ஆடையாகப் பயன்படுத்தினான் இப்ப… ஓலை சேலை…!

வி. கிருஷ்ணமூர்த்தி

புதுமை பூக்கும் புடவைகள் « Snap Judgment

Posted in Chennai, Commerce, Cotton, Culture, Deepavali, Designer, Diwali, Expensive, Fabrics, Females, Garments, Her, Heritage, History, Ladies, Lady, Rich, Sarees, Saris, She, Shopping, Silk, Tamil Nadu, TamilNadu, Textiles, Women | Leave a Comment »

Rajaji’s predictions on Independent Indian Politics & Indo-Pak relations: Dr. HV Hande

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

நினைவலைகள்: அன்று சொன்னது… இன்று நடக்கிறது!

டாக்டர் எச்.வி. ஹண்டே

வரலாற்று நூல் ஆசிரியர்களும், அரசியல் மேதைகளும், பல அரசியல்வாதிகளும், ராஜாஜி பற்றி கூறுகின்ற ஒரு கருத்து இது:

“”இந்திய சுதந்திரத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக (1942 – ல்), நாட்டுப் பிரிவினை குறித்த ராஜாஜியின் கொள்கைத் திட்டம் (Rajaji Formula) ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாவது உலக யுத்தத்தில், தோல்வி பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, மகாத்மா காந்திக்கு அன்றைய தினம் மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கும். ஜின்னாவுக்கு அவர்களுக்கு அரசியலில் பிடியே கிடைத்திருக்காது. உக்ரேனும், ரஷ்யாவும், பிரிந்த பிறகும் நட்புமிக்க அண்டைநாடுகளாக வளர்ந்திருக்கின்றன. அது மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகும் நட்புடன் இருந்திருக்கும். இந்திய நாடு இன்னும் வலிமையுள்ள நாடாக ஆகியிருக்கும். பல இரத்த ஆறுகள் ஓடிய நிலை முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.”

இந்த ஒருமித்த கருத்தைப் பலர் தெரிவிக்கிறார்கள். கடைசியாக ராஜாஜியின் அதே கொள்கைத் திட்டம்தான், மெüண்ட்பேட்டன் திட்டம் என்ற பெயரில், 1947 ஜூன் மாதத்தில் அனைவராலும் ஏற்றுக் கொண்டு, இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.

இதே கருத்தினை ஸ்ரீபிரகாசாவும் கூறுகிறார். ஸ்ரீபிரகாசா சென்னை மாகாணத்தின் கவர்னராக 1952 – 54-ல் இருந்தவர். ராஜாஜி மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டம் அப்போது. அதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜாஜியின் 89 வது பிறந்த நாளில், அவரைப் பற்றி ஸ்ரீபிரகாசா இவ்வாறு கூறினார்:

“”ராஜாஜி தொலை நோக்கு படைத்தவர். எந்தப் பிரச்சினை, எப்படி மாற்றமடைந்து வளரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியவர். பாகிஸ்தான் உருவாகும் என்பதை அவரால் முன்னதாகவே கண்டு கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரையும் இது குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்படாததால் நிலைமை மோசமடைந்தது. ராஜாஜியின் சொற்களை முதலிலேயே கேட்டு நடந்திருந்தால், கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமில்லாமல், நியாயமான பாகிஸ்தானை நாம் அண்டை நாடாக அடைந்திருக்கலாம். ஆனால் தீர்க்க முடியாத வடிவில் பிரச்சினைகளைத் தரக்கூடியதொரு பாகிஸ்தானைப் பெற்றோம். நண்பர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டிய மக்களிடையே, காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் வளர்ந்தோங்க வழி வகுத்தோம்.”

இதே போல பொருளாதார வல்லுநர்கள், ராஜாஜி வலியுறுத்தியபடியே போட்டிச் சந்தைப் பொருளாதாரத்தையும் (Market Economy) தனியார்மயமாக்குதலையும் 35 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

1992 இல் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங் தலைமையில், அரைகுறை மனதோடு, வேறு வழியின்றி நாட்டுப் பொருளாதாரம் ராஜாஜி வலியுறுத்திய திசையில் திருப்பி விடப்பட்டது.

35 ஆண்டுகள் முன்னதாக 1957 – ல் ராஜாஜி இதே நடவடிக்கைகளுக்காக, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பர்மிட் – லைசென்ஸ் – கோட்டா ராஜை ஒழித்துக் கட்டவேண்டுமென்றும் அறைகூவல் விட்டார்! யாரும் கேட்கவில்லை.

அப்போதே ராஜாஜியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைய இந்தியா வளமிக்க நாடாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தென்கொரியாவை விட , மலேசியாவை விட, நம்முடைய நாடு பொருளாதாரரீதியாக ஜப்பான் நாட்டிற்கு ஈடாக வளர்ந்திருக்கும் என்று வேதனை அடைகிறார்கள் பலர்.

ராஜாஜியின் பல்வேறு உன்னதமான கருத்துக்களும் தீர்வுகளும் அவரது காலத்து மக்களில் பலரால் புறக்கணிக்கப்பட்டன. அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டன. ஆனால் பிற்கால நிகழ்ச்சிகள் ராஜாஜியின் கருத்துக்களின் உயர்வை உறுதி செய்யும் வகையிலேதான் அமைந்தன.

எடுத்துக்காட்டாக, ராஜாஜி தன்னுடைய சிறைவாசத்தின் போது 1921 ஆம் ஆண்டில் எழுதிய நாட்குறிப்பிலிருந்து , ஒரு பகுதியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.

“”நாம் ஒருவிஷயத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வந்துவிட்டால், உடனேயே ஒரு சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. மக்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீண்டகாலத்துக்கு இவை கிடைக்காதென்றே நான் நினைக்கிறேன். தேர்தல்கள், அதையொட்டி ஊழல்கள், அநியாயங்கள், பணக்காரர்களின் பலம், ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, நமக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.

நீதி, திறமை, அமைதி, நேர்மையான நிர்வாகம் ஆகியவை, சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போது இல்லையே என்று பலர் எண்ணி வருந்தும் நிலை ஏற்படும். அகெüரவம், அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து நமது இனம் காப்பாற்றுவிட்டது என்பது ஒன்றுதான் நமக்குக் கிடைத்த லாபமாக இருக்கும்.

அனைவருக்கும் பொதுவான முறையில், ஒழுக்கம், தெய்வபக்தி, அன்பு இவற்றைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்வி ஒன்றுதான் நமது ஒரே நம்பிக்கை. இதில் வெற்றியடைந்தால்தான் நாட்டு சுதந்திரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லாவிடில் அது பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும் அக்கிரமத்துக்கும்தான் நம்மை அழைத்துச் செல்லும்.

ஒவ்வொருவரும் நேர்மையானவராகவும், கடவுளுக்குப் பயப்படுகிறவராகவும், மற்றவரிடம் அன்பு காட்டுவதில் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவப்பூர்வமாக அறிந்தவராகவும் இருந்தால், இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்.

ஆனால் ஒன்று. இந்த இலட்சியத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வருவதானால், அதற்கு, வேறெந்த இடத்தையும் விட, இந்தியாவைத்தான் நம்ப வேண்டும்.”

நாடு சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகள் முன்னதாக இப்படி ஒரு கருத்தை அவரால் எப்படி எழுத முடிந்தது? என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நாட்டு மக்களின் மனப்பான்மை, செயல்திறன் மற்றும் பலஹீனங்களையும் அவர் எவ்வளவு துல்லியமாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.

எது எப்படியிருப்பினும், நம்நாட்டு மக்களிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை இறுதிவரி தெளிவாக்குகிறது. அவரது அச்சங்கள் முழுதும் உண்மை ஆகிவிட்ட நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் இறுதிவரிகளில் அவர் வெளியிட்டிருக்கும் நம்பிக்கையை உண்மையாக்குவது இக்காலத்து இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.

ராஜாஜி தமது காலத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு, எதிர்காலத் தொலை நோக்குடன் சிந்தித்தார், செயலாற்றினார். உலகளாவிய சிந்தனை அவருடையது. இவ்வுலகே அவருக்கு சிறியதோர் கோளாகத் தோன்றியது எனலாம். நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனித இனத்தை முழுவதும் தழுவிய நிலையில் அவர் சிந்தித்தார்.

எழுபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்நாடு முழுதும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திய மாமனிதராக அவர் விளங்கினார். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அவரது வாழ்க்கை வரலாறு. அது நாட்டு மக்களை நன்னெறியில் செயலாற்றுவதற்கு ஊக்கந்தரும் உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பும் கூட.

“வருங்கால இந்தியா வளமான இந்தியாவாக வளர வேண்டுமென்றால், மக்கள் மனதில் பதிய வேண்டிய மாமனிதரின் வரலாறாக ராஜாஜியின் வரலாறு இருக்கிறது’

Posted in Anjali, Bribery, Bribes, Cong, Congress, Congress Party, Corruption, Diary, Forecasting, forecasts, Freedom, Gandhi, Hande, Handey, History, HV Hande, Independence, Independent, India, Indo-Pak, Jinna, Jinnah, kickbacks, Memoirs, MK, Notes, PAK, Pakistan, Politics, Predictions, Rajagopalachari, Rajagopalachariaar, Rajagopalachariar, Rajagopalachariyar, Rajaji, Relations, SAARC, Vision, Voices | Leave a Comment »

Interview with ‘Ramanujan’ Documentary filmmaker MV Bhaskar – Dinamani Kathir

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

ஆவணம்: “”கலையும் அறிவியலும் கலந்த இடம்தான் கோவில்!”

சமூகத்தில் பிரமிக்கதக்க சாதனைகளைச் செய்திருப்பவர்களைப் பாருங்கள். பெரும்பாலும் சப்தமே இல்லாமல் வேலை செய்து கொண்டிருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எம்.வி. பாஸ்கர் – பன்முக ஆளுமை.

விளம்பரத் துறையில் பாஸ்கருடைய பணிகள் சர்வதேச அளவிலான விருதுகளை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன. அவருடைய “ராமானுஜன்’ ஆவணப் படம், கணித மேதை ராமானுஜன் பற்றிய காட்சிப் பதிவுகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. யேல் பல்கலைக்கழகத்துக்காக அவர் செய்த “ஊர்’ விவரணப் படம் தமிழ் மரபின் ஆதார வேர்களைத் தேடிச் சென்றது. பழங்குடியின மக்களின் கலாசாரத்தை, அவர்களுடைய வாழ்வியலைப் பதிவு செய்த “ட்ரைபாலஜி’ ஆவணப் படத்தில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது.

“”கலையும் அறிவியலும் சந்திக்கும் இடங்கள் எனக்கான தளங்கள்” எனக் குறிப்பிடும் பாஸ்கர், தமிழில் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு சிலரில் குறிப்பிடத்தக்கவர்.

மறைந்து கொண்டிருக்கும் சுவரோவியங்களைப் பதிவுகளாக்கி அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.

ஒரு வரலாற்று ஆய்வாளனின் வேட்கையோடு கலை, அறிவியல், இசை, ஒளிப்பதிவு, இயக்கம், மின்பதிப்பு எனப் பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் பாஸ்கரைப் பற்றி எழுதுவதைவிடவும் முக்கியமானது அவரிடம் பேசுவது. தமிழில் பாஸ்கரைப் பற்றிய முதல் பதிவு இது. இனி பாஸ்கருடன்…

வெவ்வேறு துறை அறிமுகம் பலமா, பலகீனமா?

பலம்தான். ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்ப செய்வது அயர்வையே தருகிறது. மாறாக வெவ்வேறு விஷயங்கள் மீதான ஈடுபாடு, நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது. தவிர, ஒரு துறையில் பெற்ற அனுபவம் மற்றொரு துறையில் ஏதேனும் ஒரு வகையில் உதவும். அதுவே உங்களை வித்தியாசப்படுத்தவும் செய்யும்.

விளம்பரப் படமும் ஆவணப் படமும் இருவேறு உலகங்கள். உங்களிடம் இவை இரண்டையும் இணைத்தது எது?

ஒரு படைப்பாளி எத்தனை ஈடுபாட்டுடன் செய்தாலும் விளம்பரங்கள் பிறருடைய திருப்தியையே முதல் நோக்கமாகக் கொண்டவை. மிகைப்படுத்தலும் போலித்தனமும் அங்கு அதிகம். தொடக்கக் காலத்திலிருந்தே இது என்னை அழுத்திக் கொண்டிருந்தது. நாம் செய்ய வேண்டிய காரியங்கள் வேறு என்பதை நன்கு உணர்ந்திருந்தேன்.

இந்நிலையில்தான், ராமானுஜத்தின் நூற்றாண்டையொட்டி அவர் பற்றிய ஆவணப் படத்தை இயக்கினேன். அப்போது அது எனக்குத் திருப்தி அளிப்பதாக இருந்தது.

ஓர் இடைவெளிக்குப் பின்னர், “ட்ரைபாலஜி’ செய்தோம். ஒரிஸôவில் வாழும் பழங்குடி இன மக்களின் கலாசாரம் குறித்த பதிவு அது. அதன் பின்னர், “ஊர்’. பேராசிரியர் இ. அண்ணாமலை எனக்கு அளித்த வேலை அது. வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் நமது கலை, கலாசாரம், பாரம்பரிய மரபுகள் பற்றிய ஓர் அறிமுகமாகவே அப்பணியைச் செய்தோம்.

நவீன வாழ்வு பழங்குடிகளைப் பாதித்திருக்கிறதா?

பழங்குடிகள் குறித்த நமது பார்வை மலிவானவை. பழங்குடிகளில் இன்றைய நவீன வாழ்வின் அனைத்து வசதிகளோடும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்; தன் ஆதி அடையாளம் மாறாமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

பணம் இல்லாத ஒரு வாழ்வை ஒரு கணமேனும் நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா? ஆனால், பணமே இல்லாத ஒரு வாழ்க்கை அவர்களுக்குச் சாத்தியமாகி இருக்கிறது. அவர்களுடைய வீடுகளை அவர்களே கட்டுகிறார்கள். அவர்களுடைய உணவை, உடைகளை அவர்களே தேடிக் கொள்கிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு தேவையையும் அவர்களால் சுயமாக அடைய முடிகிறது. இயற்கையோடான அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்வது.

“ஊர்’ அனுபவம் எப்படி?

தமிழின் உன்னதங்கள் உறைந்திருக்கும் 88 இடங்களுக்கு அந்தப் படத்துக்காகச் சென்றோம். உண்மையாகவே சொல்கிறேன். நம்மைவிடவும் மோசமான ஒரு சமூகம் இருக்க முடியாது. உலகளவில் போற்றத்தக்க எத்தனையோ கலைகள், கலைப் படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. அவை அனைத்தையும் சாகடித்துக் கொண்டிருக்கிறோம் நாம். நம்முடைய மோசமான செயல்பாட்டுக்கு கோயில்களின் இன்றைய நிலை ஓர் உதாரணம்.

கோயில்கள் அழிந்து கொண்டிருக்கின்றனவா?

ஆமாம். நம்முடைய வாழ்க்கை முறையே கோயில் சார்ந்ததாகத்தான் இருந்திருக்கிறது. கோயில்கள்தான் எல்லாமும். கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் கூடிய அங்குதான் எல்லா கலைகளும் வாழ்ந்திருக்கின்றன.

கலையும் அறிவியலும் ஒன்றுகூடிய இடம் கோயில். இன்றைய நிலையோ வேறு. மதம் சார்ந்த விஷயமாக மட்டுமே கோயில் அணுகப்படுகிறது. உன்னதமான சிற்பங்களும் சுவரோவியங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன. கோயில் சார்ந்த கலை மரபுகள் வழக்கொழிந்து வருகின்றன. கலைஞர்கள் அருகி வருகிறார்கள். கலையின் அழிவும் கலைஞர்களின் அழிவும் ஒரு சமூகத்தினுடைய அடையாளத்தின் அழிவு.

நம் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்வது?

நிறைய பணிகள் இருக்கின்றன. முக்கியமாகத் திணிப்பு கூடாது. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதிக்க வேண்டும். குழந்தைகளுக்கான கதைகள், இசை, கலை என எதையும் நாம் சிந்திப்பதே இல்லை. அவர்களை, பணம் பண்ணும் இயந்திரமாக்க நாம் துடித்துக்கொண்டிருக்கிறோம். நம் குழந்தைகளை முதலில் வீடுகளைவிட்டு வெளியே அழைத்து வர வேண்டும்; எந்தவித நோக்கமும் இல்லாமல். அதாவது, ஊர் சுற்றுவதுபோல்.

வாசிக்கும் பழக்கமும் ஊர் சுற்றும் பழக்கமும் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். வாழ்க்கை கொண்டாட்டத்துக்குரியது. கொண்டாட்டங்களின் – கேளிக்கைகளின் ஒரு வடிவம்தான் கலை. நம்முடைய கலை, கலாசார ஆதாரங்களை அடுத்தத் தலைமுறைக்கு எப்படியேனும் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ் சமூகம் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால் அதுதான்.

Posted in Ads, Advertisements, Advt, Archeology, Arts, Bhaskar, Castes, Cinema, Community, Culture, Documentary, Films, Heritage, Hindu, Hinduism, History, Movies, MV Bhaskar, MV Bhaskhar, Paintings, Raamanujan, Raamanujar, Ramanujan, Ramanujar, SC, Science, ST, Temples, Tribes, Vaishnavism, Vaishnavite | Leave a Comment »

DMK Youth Wing – MK Stalin: History, Biosketch, Faces, People

Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2007

தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு

 

பிறந்த தேதி: 01-03-1953 அன்று
பெற்றோர்: தலைவர் கலைஞர் தயாளு அம்மாள் ஆகியோர்க்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
உடன் பிறந்தோர்: மு. க. அழகிரி (அண்ணன்), செல்வி (அக்காள்), மு.க. தமிழரசு (தம்பி)
கல்வி: சென்னை, மெட்ராஸ் கிறுஸ்டியன் கல்லூரிப் பள்ளியில் பள்ளிக்கல்வி
சென்னை, மாநிலக்கல்லூரியில் புதுமுக வகுப்பு மற்றும் இளங்கலை கலையியல் பட்டப்படிப்பு
திருமண நாள்: 25-08-1975
துணைவியார்: திருமதி. துர்கா
குழந்தைகள்: உதயநிதி (மகன்), செந்தாமரை (மகள்)
அரசியல் பணி: சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (1989-1991, 1996-2001, 2001-2006, 2006-இன்றுவரை)
@ 1996 முதல் 2002 வரை சென்னை மாகாண மேயர்.
@ 2006 முதல் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர்.
@ தி.மு.க வின் துணைப் பொதுச்செயலாளர்
@ தி.மு.க இளைஞர் அணி செயலாளர்.
பயணம் செய்த நாடுகள்: சிங்கபூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான்…
எழுதியுள்ல நூல்: பயணச்சிறகுகள்

தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தியாக வரலாறு

 

1968
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 15 வயது மாணவராக இருக்கும் போதே கோபாலபுரம் பகுதியில் வசிக்கும் தன் வயதை ஒத்த இளைஞர்களை இணைத்து 1968ஆம் ஆண்டு இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பினை உருவாக்கினார். தலைவர் வீட்டுப்பிள்ளை என்று மட்டும் இருந்துவிடாமல் இயக்க வளர்ச்சிக்காக இளைஞர்களைக் கொண்ட இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பாக நடத்தி வந்தார். அந்தச் செயல்பாட்டின் தொடக்கமே இளைஞர் அணி வரலாற்றின் தொடக்கம்.
30.09.1968 அன்று அண்ணா பிறந்த நாள் விழாவை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே முன்னின்று கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் நடத்தினார். அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அப்போதைய பொதுப்பணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் மு.கருணாநிதி அவர்களுடன், அமைச்சர்கள் ஏ.கோவிந்தசாமி, முத்துசாமி மற்றும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி., ப.உ.சண்முகம், இரா.சனார்த்தனம் முதலானோர் பங்கேற்றனர். மு.க.தமிழரசு அவர்கள் வருகை தந்து சிறப்பு விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார். முரசொலி மாறன் அவர்களின் மகன் கலாநிதி மாறன் ஏழை எளியவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்.
முதல் தேர்தல் பணி
1968ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் – சென்னை 99ஆம் வட்டத்தில் டி.கே.கபாலி அவர்களும், 109ஆம் வட்டத்தில் இரா.சடகோபன் ஆகிய கழக வேட்பாளர்களை ஆதரித்து கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. பிரச்சாரப் பணியாற்றியது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் முதல் தேர்தல் பணி இதுவாகும்.
முதல் பொதுக்கூட்டம்
தளபதி மு.க.ஸ்டாலின் பங்கேற்ற முதல் தி.மு.க. பொதுக்கூட்டம் – 30.01.1969 அன்று சென்னை கோடம்பாக்கம் – மாம்பலம் நெடுஞ்சாலையில் நடைபெற்றதாகும். அக்கூட்டத்தில் நடிகமணி டி.வி.நாராயணசாமி, நீலநாராயணன், சா.கணேசன், நடிகர் ஓ.ஏ.கே. தேவர், செல்வரத்தினம், பாண்டியன் முதலானோரும் பங்கேற்றுப் பேசினர்.
1969
01.10.1969 பேரறிஞர் அண்ணாவின் மணிவிழா, கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. இளைஞர் தி.மு.க.வினர் அண்ணா துயிலுமிடத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அன்று மாலை வடபழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தளபதி மு.க.ஸ்டாலின் வரவேற்புரை வழங்கினார். அக்கூட்டத்தில் முதல்வர் கலைஞர் அவர்களுடன் ஆந்திர முதல்வர் பிரம்மானந்த ரெட்டி, புதுவை முதல்வர் பரூக் அப்துல்லா ஆகிய மூன்று மாநில முதல்வர்களும், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., முரசொலி மாறன் எம்.பி. உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
1970
13.01.1970ஆம் நாள் தி.மு.கழக முன்னணியினருக்கும், இளைஞர் தி.மு.க. அமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து அனுப்பி வைத்தார்.
சென்னை 115ஆவது வட்டத்தில் எம்.எஸ்.மணி அவர்கள் தலைமையில் 22.04.1970 அன்று நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக்கூட்டத்தில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன், அமைச்சர் என்.வி.நடராசன், சைதை சம்பந்தம் முதலானோருடன் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னை 119ஆம் வட்டம் – கோட்டூர் எல்லையம்மன் கோயில் அருகில் என்.எஸ்.கே. நினைவு மன்றத்தின் சார்பில் – சா.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் மனோகரன் எம்.பி., கோவை செழியன், சைதை சம்பந்தம் முதலானோருடன் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
நாடகங்களில்…
நூறு பொதுக்கூட்டங்களுக்கு ஒரு நாடகம் ஈடானது என்பார்கள். அதனால்தான் பேரறிஞர் அண்ணா சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் முதலான நாடகங்களை உருவாக்கி அவற்றில் நடிக்கவும் செய்தார். தலைவர் கலைஞர் காகிதப்பூ முதலான நாடங்களில் நடித்தார். அவர்களின் வழியிலேயே கழகக் கொள்கைப் பிரசாரத்திற்காக மு.க.ஸ்டாலின் அவர்களும் பல்வேறு நாடகங்களில் நடித்தார். அவற்றில் முதல் நாடகம் முரசே முழங்கு. சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் நடைபெற்ற அந்நாடகத்திற்கு முதல்வர் கலைஞர் அவர்கள் முன்னிலை வகித்தார். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தலைமை வகித்தார். இந்நாடகம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. 40ஆம் முறையாகவும், நிறைவாகவும் அதே அரங்கத்தில் நடைபெற்ற போது புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தலைமை வகித்தார்.
சுற்றுச்சூழல் தூய்மையில் மிகுந்த அக்கறை கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணியினை நீலநாராயணன் அவர்கள் தலைமையில் தனி அதிகாரி பரமசிவம் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
1971
25.10.1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் இளைஞர் தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பட்டிமன்றம் நடத்தப்பட்டது. அண்ணா என்றும் வாழ்வது எதனால்? மனிதாபிமான உணர்வாலா?, மொழிப் பற்றாலா? என்னும் இப்பட்டிமன்றத்திற்கு மனிதாபிமான உணர்வால் என்னும் தலைப்பில் அமைச்சர் அன்பில் தருமலிங்கம், ஔவை நடராசன், துரைமுருகன், ஏ.கே.வில்வம், என்.வி.என்.செல்வம் ஆகியோரும், மொழிப்பற்றால் என்னும் தலைப்பில் அமைச்சர் க.இராசாராம், திருப்பத்தூர் இராமமூர்த்தி, இரகுமான்கான், முரசொலி அடியார், வலம்புரிஜான் ஆகியோரும் வாதப்போர் புரிந்தனர். மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலைஞர், கல்வியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், தமிழக அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கழக முன்னணியினர் பங்கேற்றனர். விழாவைச் சிறப்புற ஏற்பாடு செய்த ஸ்டாலின் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
1972 அண்ணா ஜோதி
1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட தி.மு.க. மாநாட்டிற்கு மு.க.ஸ்டாலின், இளைஞர் தி.மு.க.வின் சார்பாகத் தோழர்களை அழைத்துக் கொண்டு தொடர் ஓட்டமாக வந்து அண்ணா ஜோதியை தலைவர் கலைஞர் அவர்களிடம் வழங்கினார்.
1973
12.1.1973இல் இளைஞர் தி.மு.க. அலுவலகத்தை கழகத் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பல்வேறு கழக மேடைகளில் எழுச்சி உரையாற்றி வந்தார்.
1973இல் ஏப்ரல் மாதத்தில் கொள்கை விளக்க நாடகமான திண்டுக்கல் தீர்ப்பு நாடகத்தில் தளபதி ஸ்டாலின் அவர்கள் கதாநாயகனாக நடித்தார்.
தேர்தல் ஆணையாளர்
இந்தியாவில் வேறு எந்த இயக்கத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு தி.மு.கழகத்தில் உள்ள ஜனநாயகப் பண்பான தேர்தல்தான். அடிப்படை உரிமைச் சீட்டுகளை உறுப்பினர்களுக்கு வழங்கி அந்த உறுப்பினர்கள் வாக்களித்து கிளைக் கழக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பர். பின் கிளைக் கழக செயலாளர், மேலமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோர் வாக்களித்து நகர, ஒன்றிய கழக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பர். நகர, ஒன்றிய செயலாளர்களும், மாவட்ட பிரதிநிதிகளும் வாக்களித்து மாவட்டக் கழக நிர்வாகிகளையும், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களையும் தேர்ந்து எடுப்பார்கள். அதன்பின் நகர, ஒன்றிய, மாவட்ட செயலாளர்களும், தலைமைப் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் வாக்களித்து தலைமைக் கழக நிர்வாகிகளையும், தணிக்கைக் குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்வார்கள். இந்த தேர்தல்களை கழகம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை முறையாக நடத்தி வருவது தி.மு.கழகத்தின் தனிச்சிறப்பு. 1973இல் புதுக்கோட்டை மாவட்டக் கழகத் தேர்தலை மு.க.ஸ்டாலின் ஆணையாளராகச் சென்று சிறப்புற நடத்தினார். அதுபோன்றே செங்கை மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத் தேர்தலையும் ஆணையாளராக இருந்து நடத்தி வைத்தார்.
1975
20.08.1975 அன்று தளபதி அவர்கள் துர்க்காவதி (எ) சாந்தா அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இத்திருமணம் கழக பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் கழகப் பொருளாளர் பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களுடன் மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம், பெருந்தலைவர் காமராசர், மத்திய, மாநில அமைச்சர்கள், அறிஞர் பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்திருந்து வாழ்த்தினர்.
தி.மு.கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்தாம் மாநில மாநாட்டின் முதல் நாளில் மு.க.ஸ்டாலின் நடித்த வெற்றி நமதே நாடகம் நடைபெற்றது.
நெருக்கடி நிலை
1975ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் நாட்டில் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார். அவரை எதிர்த்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சிறையிலடைத்தார். தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராசரை கைது செய்ய முயற்சி செய்தார். ஆனால் அப்போது தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கலைஞர் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அத்துடன் கோவையில் நடைபெற்ற தி.மு.க. 5ஆம் மாநில மாநாட்டில்
(Revoke Emergency – Release the Leaders and Restore Democracy) நெருக்கடி நிலையைத் திரும்பப் பெறுக – கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்க – ஜனநாயகம் காத்திடுக என்று தீர்மானங்களை நிறைவேற்றியதாலும் – 30.01.1976 அன்று கழக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. நாடு முழுவதும் ஏராளமான கழக முன்னோடிகள் கைது செய்யப்பட்டனர். அவ்வகையில் தலைவர் கலைஞர் அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக அவர் மகன் மு.க.ஸ்டாலினை கைது செய்ய காவல் துறையின் தலைவர் இல்லத்துக்கு விரைந்தனர். அப்போது ஸ்டாலின் ஊரில் இல்லாததால், தலைவர் கலைஞர், ஸ்டாலின் ஊர் திரும்பியதும் தகவல் தருகிறேன் – நீங்கள் கைது செய்து கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார். மறுநாள் மு.க.ஸ்டாலின் ஊர் திரும்பியதும் தலைவர் கலைஞர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்களும் தலைவர் இல்லம் வந்து மு.க.ஸ்டாலினைக் கைது செய்தனர். திருமணமாகி ஐந்து மாதங்களேயான நிலையில் சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு அனுபவித்த கொடுமைகளை சிறைச்சாலை சித்திரவதையால் உயிர்நீத்த கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சிட்டிபாபு எம்.பி. அவர்களின் சிறைக் குறிப்புகள் பதிவாக்கியுள்ளன.
சிட்டிபாபுவின் சிறை டைரி
அன்றிரவு ஒரு மணி இருக்கும். என் தம்பி ஸ்டாலின் சிறைக்கு அழைத்து வரப்பட்டான். அவன் வந்தது எனக்குத் தெரியாது. தம்பி வந்தது முதல் தடவை, புதியவன் சிறைக்கு!
புரியாத காரணத்தால் அவன் குழம்பி இருப்பான். இரவெல்லாம் கண்விழித்து கிடந்திருக்கிறான். பாவம் புது திருமணப் பிள்ளை. முழு வாழ்வை அவன் பெறுவதற்கு முன்னால் அவனுக்கு முள்வேலி. ஆமாம்! அன்று இரவெல்லாம் அவன் உள்ளம் அவனை அப்படித்தான் எண்ணிடச் செய்திருக்கும்.
2.2.1976 காலை கண்விழித்தேன். கதவு திறக்கப்பட்டது. கைகால்கள் கழுவ, காலைக் கடன் தீர்க்க! – கண்டேன் சீதையை என்று கம்பன் காட்டினானே கருத்தை. அதைப்போல காணக் கிடைக்காத என் கண்ணின் கருவிழியைக் கண்டேன்.
உள்ளத்தில் சுமை ஆயினும் உதட்டில் புன்முறுவல். அவன் முகம் பார்த்தவுடன் அணைத்துக் கொண்டேன் அவனைப் பாசத்தால்; என்னோடு வா தம்பி என் அறைக்கு என்றேன்.
அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க கண்கள் விரும்பியது. அவனும் என் கண்களுக்கு தன் முத்துப் பல் வரிசை முறுவலைக் காட்டிக் காட்டி, இதயம் கவர் கள்வனாக மாறிக் கொண்டே இருந்தான். பாலுடன் கலந்த நீர் போல இரு உள்ளங்களும் இணைய ஆரம்பித்தன! சொற்களால் அல்ல பார்வையால்.
பத்து மணிக்கு காலை உணவு. ஆமாம் இருபது தட்டுகள் மட்டுமே ஐம்பது பேருக்கு! ஒருவர் உண்ட பிறகு பிரிதொருவர். அது என்ன எடுத்திடும் பொருளா இல்லையே. விரல்வரைதான் அந்த உறவு; வழித்திடும் கூழ்! சுவைக்குப் புளிகாரம். ஓர் இரவு உணவு அற்ற காரணம் ஒரு சிலரை சுவை பார்க்க உருவாக்கியது.
தம்பி (ஸ்டாலின்) சுவைத்தான். பசியோ என்றுகூட எண்ணினேன். இல்லை பழக்கப்படுத்திக் கொள்ளவே என்றான். இதுதானே இனிமேல் உணவு நமக்கு என்று என்னைக் கேட்டான். இல்லை இது எப்போதும் சிறையில் முதல்நாள் விருந்து, இனிமேல்தான் தெரியும் என்றேன். என் சிறை அனுபவங்களைக் கொண்டு இதனைச் சொல்லி வைத்தேன்.
உடன் அனைவரும் லாக்கப் என்றனர். ஏன் என்றோம். 24 மணி நேர லாக்கப்; நீங்கள் மிசா என்பதே பதில்!
இடையில் அறைகள் அறுவரை விழுங்கின. மூன்றாவது அறை ஆமாம் அதுதான் நானும் வீராசாமியும், வி.எஸ்.ஜி.யும், நீலநாராயணனும், எம் தம்பி (ஸ்டாலின்)யும் அடுத்த அறை!
ஐவர் உள்ளே, பெருக்க துடைப்பம், சிறுநீர் கழிக்க பானை பழையது. தரையெல்லாம் தகர்ந்த சிமெண்ட் காரைகள், பகல் உணவு – இரண்டு மணிக்கு. கீரைத்தண்டு சாம்பார் கட்டிச் சோறுடன். கொஞ்சம் களி, தொட்டுப் பார்த்து வைத்துவிட்டேன். எம்.பி. என்ற முறையில் எதையும் செய்துவிட முடியாது என்பது எனக்கே புரிந்து விட்டது.
இனிமேல் அடிக்கடி கைதியின் காரியத்தை ஆற்றினால்தான் தேவைகள் கிடைக்கும். அதற்கும் வழியில்லாமல் அருகில் யாரும் வராத வகையில் பலத்த காவல் காரணம். மிசா. என்ன மிசாவோ! அவர்களுக்கும் என்ன செய்து, எப்படி நடத்துவது என்பது புரியவில்லை.
கயூம் உருவில் காலன் வந்தான்
மாலை 5 மணி. மீண்டும் உணவு களியுடன் கூடிய தட்டு. யாரோ பயன்படுத்திய தட்டுக்கள்; பயன்படுத்திய சிறுநீர்ப் பானைகள்! யாரிடம் கேட்பது, கேட்டால் யார் பதில் சொல்வது.
இரவு 7.30 மணி. அறைக்குள்ளே இருட்டுத்தான். ஆயினும் வெளிவாசலில் ஓரிரு விளக்குகள். மங்கலான ஒளியில் 8 மணியளவில் சில உருவங்கள் வருவதைக் காண முடிந்தது!
காரணம் நான் இருந்த இடம் வருவோரைப் போவோரைப் பார்க்கும் வகையில் அமைந்திருந்தது. காக்கி உடைகள், வெள்ளை உடைகள், சற்றேறக் குறைய இருபதுக்கும் மேற்பட்டோர்! சிறை அதிகாரிகள் இருவர். கயூம் அழகான பெயர்! அன்பு என்ற சொல்லுக்கு அளித்திட்ட உருதுச் சொல்தான் கயூம்.
ஆமாம் அந்த அன்புதான் அரசியல் கைதிகளை அடித்திட ஆட்களுடன் அங்கே நின்றிருந்தார். அவர் மட்டுமல்ல, அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் உட்பட அவரது கை அசைவில் அத்தனை பேரும் நாங்கள் இருக்கும் மண்டபத்திற்குள் நுழைந்தனர்!
எப்படி இருகோடுகள் தனித்தனியே படுக்க வைத்தால் இருக்குமோ அப்படிப்பட்ட அமைப்பில் அவர்கள் நின்றனர்! அவர்களது கையில் இருந்த தடிகளை அவர்கள் நீட்டினால் ஏற்படும் அளவே இரு கோடுகளுக்கு நடுவே உள்ள இடைவெளி!
பட்டாளத்தின் வீரர்களைப் போல அவர்கள் நின்றனர். இதற்குள் காக்கி உடை அணிந்த பள்ளி ஆசிரியர் கம்பீரமாக குரல் எழுப்பினர். அறை பத்து அருகில்! கண்களுக்குத் தெரியாமல் காலன் கவர வருவான் உயிரை என்பார்கள்; கட்டையாகி விழப் போகிறவர்கள். அதே போல் கதவருகே காக்கி உடையில் காவலாளிகள் காலனைப்போல்!
கதவு திறக்கப்படும் ஒலி!
கம்பீரமான குரல் பேசியது!
பெயர் சொல்லி அறைவிட்டு வருதல் வேண்டும். சர்ச் என்ற பெயரால் திறக்கப்பட்ட கதவு பளீர் என்ற சத்தத்துடன் துவங்கியது. ஏதோ சினிமாவில் காணும் காட்சி போல் இருந்தது!
கொலைகாரக் கைதிகளின் கைத்தடிகள் அரசியல்வாதிகளின் உடலைச் சுவைத்துக் கொண்டு இருந்தன! அலறல் அழுகுரல்கள். அய்யோ! அப்போ! அம்மா! – என்னும் அபயக் குரல்கள். ஓடு உள்ளே என்ற உத்திரவு! சர்க்கஸ் புலி ஆட்டுக் குட்டியின் தலையைத் தன் அகண்ட வாயில் வைத்து சுவைக்காமல் காண்போருக்கு வித்தை காட்டுவதுபோல் கணநேர அதிர்ச்சி! ஓடு என்றவுடன் தீ வளையத்தை தாண்டிச் செல்லும் சிங்கம் போல் கூண்டுக்குள் அடங்கியது!
அறை பத்து! அடுத்த அறை ஒன்பது! அப்படியே ஐந்து வரை வந்து கொண்டே இருந்தது! அடுத்து ஓர் அறைதான்! அதற்கு அடுத்து எனது அறைதான். அறையில் உள்ளவர்கள் அடுத்தடுத்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும் காட்சியிலேயே அவர்கள் அடிபட்டது போன்ற உணர்வு! தங்களை அறியாமல் இது என்ன என்ற கேள்வி! அழுவதா சிரிப்பதா என்று இருக்கும் நிலை எனக்கு! காரணம் இதுபோன்ற காட்சிகளை நான் இரண்டு முறை கண்டவன் மட்டும் அல்ல. நானே ஓர் அங்கமாக அகப்பட்டு உள்ளவன்! அதனால் எனக்கு அதிர்ச்சி இல்லை!
ஆனாலும் எனது நண்பர்களைப் பார்த்து ஆடை அணிந்து கொண்டே வெளியே போக வேண்டும். அவன் சொல்வது போல் ஆடையைக் கழற்றிவிட்டுப் போகக் கூடாது என்று சொன்னேன். ஆனாலும் அனைவரும் மழையில் நனைந்த குழந்தைகள் போல் உடல் ஆடிக் கொண்டே இருப்பதைக் காணாமல் இருக்க முடியவில்லை!
அறை நான்கு முடிந்து பூட்டும் போடப்படுகிறது. அடுத்து நாம்தான். பூட்டுத் திறப்பது மட்டும் கேட்டது. கதவைத் தள்ளினார்கள். வாங்கடா என்ற குரல். கடைசி அறை – அது உக்கிரம் அதிகமாக உள்ள நிலை. அலுத்துப் போய்விட்டவர்கள் அல்ல அவர்கள்! அதிகாரி வேறு வெளியில் நின்றபடி, என்னடா மெதுவாக அடிக்கிறீர்கள் என்று அதட்டுகிறார். உத்திரவு உக்கிரமாக வருகிறபோது உதை வேகத்தைக் கேட்கவா வேண்டும்.
சிறையல்ல – சித்திரவதைக் கூடாரம்
கதவு திறந்தது. யார் முன்னே வெளியில் செல்வது என்ற நிலை! காலம் கதவுகளை மூடப் போவதில்லை! அர்ச்சனைக்குக் கொண்டு வந்த அரசியல் மலர்களல்லவா நாங்கள். எனவே திரும்பிப் பார்த்தேன். தீர்மானமான நானே முதலில் வெளியில் வந்தேன். பெயர் சொல்லி அழைத்தனர். எதிர்பார்த்த ஆள் அல்லவா நான்! எனவே, ஓர் அடி எடுத்து வைப்பதற்குள் கன்னத்தில் வீழ்ந்த அறைகள் அடடா… நிலைக் கண்ணாடி கல்பட்டு உடைந்து விழுந்தது போல் எனக்குத் தோன்றியது. கண்களால் கணநேரம் காண்பது எல்லாம் கார்இருள் போல் இருந்தது. இருகோடுகளுக்கு இடையில் தள்ளப்பட்ட எலி! ஆம் அவர்கள் அடித்ததும் அப்படித்தான்! அவர்கள் அசந்தனர்! இது எலி அல்ல புலி என்று!
காரணம் அத்தனை அடிக்கும் என் உடல் விழவில்லை – தரை நோக்கி. தள்ளினார்கள் மதில் சுவர்மீது; சட்டென்று திரும்பிக் கொண்டேன்! வயிற்றில் எட்டி உதைத்து விட்டான்! சுவரின் மீதே சாய்ந்து கீழே உட்கார நினைத்தேன். ஆனால் நீண்ட நெடுமரத்தை மதயானை இடக்காலாலும், வலக்காலாலும், துதிக்கையாலும் வெறிபிடித்து உதைப்பது போல் உதைத்தனர். வீராசாமி நெடுமரமாகக் கீழே சாய்ந்து கிடந்தார்.
வெறிக்கூட்டம் முரசு பறை அறைவது போல் இரு கைகளால் அடிகொடுத்து கொண்டிருந்தன. ஒருபுறத்தில் இக்காட்சி. பள்ளிக்கூட மாணவன் பெஞ்ச் மீது நிற்பது போல் இரும்பு ஏணி அருகில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கதறும் வி.எஸ்.ஜி. ஒரே குத்துத்தான் நீலத்துக்கு (நீலநாராயணன்). குள்ள உருவம் நீலம். மேலே நிமிர்ந்து பார்த்திட மார்பகத்தில் மற்றொரு குத்து! முதுகில் இரண்டு தடி அடி! அவ்வளவுதான். குலைநோயில் கேவிக் கொண்டு கீழே விழும் நோயாளிபோல் சுருண்டு விழுவதைக் கண்டேன்! கால் எடுத்து வைத்துகை கொடுக்க முடியுமா என்று அசைந்தேன்! தொண்டையில் ஒரு குத்து எனக்கு! மீண்டும் சுவற்றில் தள்ளப்பட்டேன்! அய்யோ என்று சாய்ந்தேன் நான்.
அருகே என் அன்புத் தம்பி! ஆமாம் ஸ்டாலின்தான். தமிழகத்து முதல் அமைச்சரின் மகன் என்று நேற்றுவரை அறிந்த அந்த ஆசிரியன் (சுருளிராஜன்) தன் கால் பூட்ஸால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள்பட்டையில்! காக்கி உடை அணிந்த வார்டர் ஒருவன் ஸ்டாலின் கன்னத்தில் அறைந்தான். கொலை வெறியர்கள் தடிகளால் தாக்கினார்கள்.
கண்டேன் காட்சியை! இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவார்கள் என்ற உணர்வு ஏற்பட்டது! மற்றவர்கள்தான் மண்ணுடன் சாய்ந்து கிடப்பவர்களாக இருக்கின்றனர்! உதவிக்கு எழ அவர்கள் முடியாதபடி அருகில் எமதூதர்கள்! என்ன செய்வது; எனக்கென்று ஓர் துணிவு! திடீரென்று குறுக்கே பாய்ந்தேன்! தம்பியை தள்ளிக் கொண்டே தடிகள் கழுத்தில்!
அவைகள் அடிகள் அல்ல! உலைக்களத்தில் பழுத்துக் காய்ச்சிய இரும்பை தட்டிப் பதப்படுத்தும் உளியாக மாற்றிவிடும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தது! கழுத்தில் அத்தனையும் தாங்கிக் கொண்டேன். அன்புத்தம்பி ஸ்டாலின் அறைக்குள்ளே ஓடிவிட வழி கிடைத்தது.
வீராசாமியை தூக்கி நிறுத்தி ஒரு குத்துவிட்டு உள்ளே தள்ளினர். நீலம் மூச்சுத் திணற வி.எஸ்.ஜி.யை தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றார்!
தம்பி ஸ்டாலினோ தான் பட்ட அடிமறந்து, தன் உடன்பிறப்புகளை உள்ளே அழைத்துச் செல்லும் காட்சி கண்டேன். அவர்களைப் படுக்க வைக்க தன் தோள் துண்டை தரையில் போட்டு, தாக்கப்பட்டவர்களைத் தாங்கி படுக்க வைத்த காட்சி கண்டேன். என்னை ஒருவன் வாடா தம்பி, வா என்று வாயில் ஓர் குத்துவிட்டு உள்ளே தள்ளினான்.
சர்வாதிகாரத்தின் நச்சு நாக்கு
கொடிய காற்றில் நெடிய மரம் சாய்ந்து விழுவது போல் அறையில் நான் வீழ்ந்தேன்! இல்லை தள்ளப்பட்டேன். அறை முழுவதும் இருள் அல்லவா? நினைவு வேறு எனக்குப் பாதியாகத்தான் இருக்கிறது! பூட்டு பூட்டப்பட்டது! உள்ளே அழுகுரல்! முனகல்! அப்பா! அம்மா! என ஒலி.
அன்புத் தம்பி ஸ்டாலினோ அருகில் வந்தான். அண்ணன் நீலத்தை வி.எஸ்.கோவிந்தராசன் மார்பில் சாய்த்திவிட்டு, அவன்தன் பிஞ்சுக் கரங்களால் என் முகத்தை தடவிக் கொண்டே கேட்டான். அண்ணே இன்னும் உயிருடன் இருக்கிறீர்களா? ஆமாம்! அவன் கேட்டதில் நியாயம் இருக்கிறது! அடிக்க வந்தவர்கள் அல்லவே அவர்கள்! கொலை வெறித்தாக்குதல் அல்லவா நடத்தினார்கள்!
அன்புத் தம்பியோ அதிர்ச்சி அடைந்திடவில்லை, அழுகையில் என்னைக் காண்கிறான்! அவன் அச்சங்கொள்ளக் கூடாது என்று அன்பொழுகச் சொன்னேன். அடிபலமா உனக்கு என்றேன். அதெல்லாம் இல்லை அண்ணே என்று அனுபவம் பெற்றவன் போல் பேசினான்! தெம்பு குறையக் கூடாது என்பதற்காக. தம்பி உன்னையும் அடித்தார்களே பாவிகள் என்றேன்.
இருக்கட்டும் அண்ணே என்று சொல்லி அவன் என்னை தன் கரங்களால் அடிபட்ட இடங்களை தடவிக் கொடுத்துக் கொண்டே என் கிழிந்த சட்டையைக் கழற்றிட உதவி புரிந்தான்.
ஒருநாள் எங்களுக்கு உணவில் வேப்பெண்ணை ஊற்றிய சோற்றை வழங்கினார்கள். கசக்கிறது என்றனர் கழகத் தோழர்கள். கழுவிச் சாப்பிட வேண்டிய முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன். அடுத்த நாள் இட்லி கொடுக்கப்பட்டது. நரநரவென்று மண்ணுடன் கூடிய மாவால் செய்யப்பட்டது. பகல் உணவு வந்தது. தட்டுடன் சென்றவர்கள் உப்பு அதிகம் உணவில் என்றனர். நீர் கலந்து கொள்ளுங்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? (தியாக தீபமாம் கொள்கை மறவர் சிட்டிபாபு எம்.பி. அவர்களின் சிட்டிபாபுவின் சிறை டைரியை முழுவதுமாகத் தர இயலவில்லை. சிறைச்சாலைச் சித்ரவதையில் சீறும் வேங்கையாகச் சிறை சென்ற தியாக மறவன் சிட்டிபாபு 5.1.1977 அன்று உயிர் நீத்தார்.)
1977
23.01.1977ஆம் நாள் சென்னை மத்திய சிறையிலிருந்து முரசொலி மாறன் எம்.பி., மு.க.ஸ்டாலின், சோமா. இராமச்சந்திரன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். சிறை வாயிலில் அவர்களை அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று வரவேற்றனர்.
விடுதலை பெற்ற முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் நேராக முதலில் அறிஞர் அண்ணா துயிலுமிடம் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின் இல்லம் சென்று தலைவர் கலைஞரிடம் வாழ்த்துப் பெற்றனர்.
1977 மார்ச் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் சுழன்று பணியாற்றி கழகப் பிரச்சாரம் செய்தார். அதன் பின்னும் தொடர்ந்து கழகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
1980
இந்நிலையில் கழகத்தில் உள்ள இளைஞர்களுக்கென ஒரு தனி அமைப்பு தேவையென கருதிய தலைவர் கலைஞர் தி.மு.க. இளைஞர் அணி என்னும் அமைப்பினை உருவாக்கினார். தி.மு.க. இளைஞர் அணியின் தொடக்க விழா, மதுரை மூதூரில், ஜான்சிராணி பூங்கா திடலில் 20.07.1980 அன்று நடைபெற்றது.
இளைஞர் அணி தொடக்க விழாவில் – அமைப்புச் செயலாளர் தென்னரசு, க. சுப்பு, வை.கோபால்சாமி, பி.டி.ஆர்.பழனிவேல்ராசன், துரைமுருகன், பொன்.முத்துராமலிங்கம், தா.கிருட்டிணன், வே.தங்கபாண்டியன், காவேரிமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
1982
01.08.1982 தி.மு.க. இளைஞர் அணியின் அமைப்புக் குழு உறுப்பினர்களாக மு.க.ஸ்டாலின், திருச்சி சிவா, வாலாஜா அசேன், இளம்வழுதி, தாரை மணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.. 17.8.82 இல் ஜெயம் ஜுலியஸ், முகவை பஞ்சவர்ணம் ஆகிய இருவரும் அமைப்புக் குழுவில் கூடுதலாக அறிவிக்கப்பட்டனர். கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனாரின் மணிவிழாவினை கழக இளைஞர் அணி சிறப்பாக நடத்தியது.
1983
10.04.1983 தி.மு.க. இளைஞர் அணிக்கு திரு. மு.க.ஸ்டாலின் அமைப்பாளராகவும், திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி, வாலாஜா அசேன், தாரை மணியன், முகவை பஞ்சவர்ணம், நெல்லை ஜெயம் ஜுலியஸ் ஆகியோர் அமைப்புக் குழு உறுப்பினர்களாகவும், பொதுச் செயலாளர் அவர்களால் நியமிக்கப்பட்டனர். இளைஞர் அணி அமைப்புக் குழு மாநிலம் முழுவதும் மாவட்டந்தோறும் சென்று அமைப்புக் கூட்டங்களை நடத்தி இளைஞர் அணி அமைப்புகளை உருவாக்கினர்.
1983 ஆகஸ்ட் 25ஆம் நாள் இளைஞர் அணிக்கு மு.க.ஸ்டாலின் செயலாளராகவும், திருச்சி சிவா, தாரை மணியன் இருவரும் துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
1984
மே மாதத்தில் நடைபெற்ற அண்ணாநகர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் பம்பரமென சுழன்று தேர்தல் பணியாற்றினார். தொகுதி முழுவதும் சைக்கிள் பேரணி, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு என இளைஞர் அணியினரைத் திரட்டிப் பணியாற்றியதன் விளைவாக அத்தொகுதியில் கழகம் வென்றது.
தலைவர் கலைஞர் அவர்களின் மணிவிழாவினை தி.மு.க. இளைஞர் அணி மிகுந்த எழுச்சியுடன் ஏற்பாடு செய்தது. நாவுக்கரசர் நாஞ்சில் கி.மனோகரன் அவர்களை நடுவராகக் கொண்டு, தலைவர் கலைஞர் அவர்களின் தொண்டால் ஜனநாயக வளர்ச்சி அதிகமா? சர்வாதிகார வீழ்ச்சி அதிகமா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் வை.கோபால்சாமி, செ.கந்தப்பன், துரைமுருகன், இரகுமான்கான், பெ.சீனிவாசன், ஆலந்தூர் பாரதி, என்.வி.என்.சோமு ஆகியோர் வாதப்போர் புரிந்தனர்.
ஏப்ரல் மாதத்தில், தனித்தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் தி.மு.கழகம் கையெழுத்து இயக்கப் பணியில் ஈடுபட்டுக் கோடிக்கணக்கான கையெழுத்துக்களைப் பெற்று ஐ.நா. மன்றத்திற்கு அனுப்பி வைத்தது. அப்பணியில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆயிரம் விளக்குப் பகுதியில் கையெழுத்து சேகரித்தார்.
1984ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திராகாந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையால் தி.மு.கழகம் 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மிதப்பில், எம்.ஜி.ஆர். சென்னை அரசினர் தோட்டத்தில் பல்லாண்டுகளாக இயங்கி வந்த தி.மு.கழகத்தின் சட்டமன்ற அலுவலகத்தினை பறித்துக் கொண்டார். இதனைக் கண்டித்த கழக முன்னணியினர் நீலநாராயணன், ஆர்க்காடு நா.வீராசாமி, செ.கந்தப்பன், மு.க.ஸ்டாலின், சி.டி.தண்டபாணி, எல்.கணேசன், நெல்லிக்குப்பம் வெ.கிருஷ்ணமூர்த்தி, துரைமுருகன், எஸ்.பி.சற்குணம் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். சட்டமன்ற தி.மு.க. அலுவலகத்தை பலவந்தமாகக் கைப்பற்றி வெளியேற்றிய போது தலைவர் கலைஞர் உள்ளத்தில் மேற்கொண்ட உறுதியால், சூளுரையால் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் அண்ணா அறிவாலயம் உருவாயிற்று.
அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவின் போது தி.மு.க. இளைஞர் அணி வெண்சீருடையில் மாபெரும் அணிவகுப்பை அணியின் செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடத்திக் காட்டியது.
1986
நவம்பர் 8, 9 ஆகிய நாள்களில் கோவை வ.உ.சி. பூங்கா திடலில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் கழக இளைஞர் அணி செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் தியாகிகள் திறந்து வைத்து உரையாற்றினார். அம்மாநாட்டில் நாடு முழுவதும் இந்தியை ஆட்சி மொழியாக்கும் அரசியல் சட்டப் பிரிவை கொளுத்துவது என்ற முடிவுக்கு அமைய அப்போராட்டத்தில் தலைமையேற்போரின் பெயர்களும், இடங்களும் அறிவிக்கப்பட்டன. நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நாடு முழுவதும் எண்ணற்ற கழகத்தவர் சட்ட எரிப்புப் போரில் ஈடுபட்டுக் கைதாகினர். அவர்களுள் பேராசிரியர் உள்ளிட்ட 10 கழக சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறிக்க எம்.ஜி.ஆரின் அரசு சட்டமன்றத்தில் நடவடிக்கை எடுத்தது. இப்பதவி நீக்கும் தீர்மானத்தை அவை முன்னவரான நாவலர் நெடுஞ்செழியன் வாயிலாகவே எம்.ஜி.ஆர். முன்மொழிய வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவரான பரிதி இளம்வழுதி சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராவார்.
1987
பேராசிரியர் உள்ளிட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறித்ததோடு நில்லாது – அ.தி.மு.க. அரசு கழகத்தின் மீது பழி சுமத்த வெடிகுண்டு சதி வழக்குகளையும் புனைந்தது. திருச்சியில், முத்தரசநல்லூர் வெடிகுண்டு வழக்கிலும், கோவை, சிங்காநல்லூர் வெடிகுண்டு வழக்கிலும் எல்.கணேசன், மலர்மன்னன், நாமக்கல் பழனிவேலன் போன்ற கழக முன்னணியினர் மீதும் கோவை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மா.உமாபதி, துணை அமைப்பாளர் தம்புராசு, கோவை கார்த்திக், நவமணி, தங்கவேலு, ராமமூர்த்தி போன்ற இளைஞர் அணியினர் மீதும் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டன. கோவை சிறையிலிருந்த இளைஞர் அணியினரை வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட போது கைகளில் விலங்கிட்டு வீதிகளில் நடத்தியே அழைத்துச் சென்றனர். அப்புகைப்படக் காட்சியை கண்ட தலைவர் கலைஞர், சிங்கள ஜெயவர்த்தனா சிரித்து மகிழ்ந்திடுவான் என்ற தலைப்பில் முரசொலியில் கடிதம் தீட்டினார்.
1987ஆம் ஆண்டு நடைபெற்ற கழக பொதுக்குழு தேர்தலுக்குப் பின் கழக இளைஞர் அணி மாநில செயலாளராக – மு.க.ஸ்டாலின் அவர்களும், துணை செயலாளர்கள் திருச்சி சிவா, மா.உமாபதி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட பின்னால் கழகத்தின் தலைமைக் கழகம் அங்கே செயல்படத் தொடங்கியது. அதுவரை தலைமைக் கழகம் இயங்கி வந்த அன்பகத்தினைப் பயன்படுத்த சென்னை மாவட்ட தி.மு.க., தொழிற்சங்க பேரவை, இளைஞர் அணி ஆகிய மூன்று அமைப்புகளும் விரும்பின. அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் யார் முதலில் 10 லட்சம் ரூபாயை கழகத் தலைமைக்கு நிதியாகச் செலுத்துகிறார்களோ அவர்களுக்கே அவ்வாய்ப்பு கிட்டும் என்று அறிவித்தார். மூன்று அமைப்புகளும் அதை ஆரோக்கியமான போட்டியாக எடுத்துக் கொண்டு களமிறங்கின. தளபதி ஸ்டாலின் நாடு முழுவதும் கடுமையான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, கொடியேற்று விழாக்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக நிதி திரட்டி தலைவர் கேட்டதற்கும் மேலாக ரூபாய் 11 லட்சத்தை ஒப்படைத்து அன்பகத்தை பயன்படுத்தும் உரிமையைப் பெற்றார். 1988ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் அன்பகத்தில் தி.மு.க. இளைஞர் அணி தலைமை அலுவலகம் செயல்படத் தொடங்கியது.
1989
1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி கண்டு மத்திய அரசில் வி.பி.சிங் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைத்தது. அதுபோன்றே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்று தலைவர் கலைஞர் அவர்கள் மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்தார். இத்தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க. இளைஞர் அணி செயலார் மு.க.ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் சென்னை மாவட்ட அமைப்பாளர் பரிதி இளம்வழுதி முதலிய இளைஞர் அணி நிர்வாகிகளும் வெற்றி பெற்றனர்.
மூன்றாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள் அடுக்கடுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிச் சாதனை புரிந்தார். தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார். கழக ஆட்சியின் நூறு நாள் சாதனைகளை நாடறியச் செய்யும் வகையில் 1989ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் நாளில் கோவையில் கழக அரசின் சாதனை விளக்கப் பேரணி இளைஞர் அணியின் செயலாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழக அரசின் நூறு சாதனைகளை விளக்கும் வகையில் நூறு அலங்கார வண்டிகள் பேரணியில் பங்கேற்றன.
1990
1990ஆம் ஆண்டு பிப்ரவரி 9, 10 ஆகிய நாள்களில் தி.மு.கழகத்தின் ஆறாம் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. அம்மாநாட்டின் முதல் நாளில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் கழக இளைஞர் அணியினரின் வெண்சீருடைப் பேரணி மகத்தானது. அம்மாநாட்டு வளாகத்திற்குள் தி.மு.க. இளைஞர் அணி திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சியை அமைத்தது. இக்கண்காட்சியைத் தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார். அக்கண்காட்சியில் இயக்க வரலாற்றை விளக்கும் புகைப்படங்களும், ஓவியங்களும் எழிலுற அமைக்கப்பட்டன. அத்துடன் சேதுசமுத்திரத் திட்டம், கிழக்குக் கடற்கரைச் சாலை, போக்குவரத்துத் திட்டம் ஆகிய தமிழகம் காண வேண்டிய முன்னேற்றத் திட்டங்களை விளக்கும் செயல்விளக்கக் காட்சிகளும் அமைக்கப்பட்டன. எண்ணற்ற கழகத் தோழர்களும், பொதுமக்களும் கண்காட்சியைக் கண்டு மகிழ்ந்து பயனடைந்து பாராட்டினர்.
அதன்பின் அதே ஆண்டு (1990) ஜூன் மாதத்தில் நடைபெற்ற தமிழிக முதல்வர் – தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளின் போது சென்னை கலைவாணர் அரங்கில் தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளை புகைப்பட – ஓவியக் கண்காட்சியாக இளைஞர் அணி ஏற்பாடு செய்தது. இப்பணியை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன் – இளைஞர் அணி மாநில துணை செயலாளர் மா.உமாபதி, தஞ்சை இரத்தினகிரி ஆகியோர் அமைத்தனர். இக்கண்காட்சியை அசாம் முதல்வர் பிரபுல்லகுமார் மொகந்தா அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்.
1991
1991ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கினார் பிரதமர் வி.பி.சிங் அவர்கள். பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்றுக் கொள்ளாத பாரதீய ஜனதா கட்சி தன் ஆதரவை விலக்கிக் கொண்டதால், வி.பி.சிங் அவர்களின் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சந்திரசேகரின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றனர். சந்திரசேகர் 116 நாள்கள் மட்டுமே ஆட்சி செய்தார். எனினும் அக்குறுகிய காலத்தில் சந்திரசேகர் ஆட்சி செய்த ஒரே செயல் தமிழ்நாட்டில் கழக ஆட்சியைக் கவிழ்த்ததுதான். தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த கழக அரசை பொய்யான காரணங்களைக் கூறி ஆளுநர் பர்னாலா பரிந்துரை செய்ய மறுத்தும் குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் துணையோடு ஆட்சியைக் கலைத்தனர்.
அதற்குப் பிறகு 1991ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த ராஜீவ்காந்தி திருப்பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட அனுதாப அலையின் விளைவாக கழகம் பெரும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அத்தேர்தலில் துறைமுகம் தொகுதியில் தலைவர் கலைஞரைத் தவிர மற்ற அனைவரும் தோல்வியைத் தழுவ நேரிட்டது.
1992
பிப்ரவரியில் மதுரையில் திராவிட இயக்கப் பவளவிழா மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணியினரின் வெண்சீருடை அணிவகுப்பு காண்போரை வியக்க வைத்தது. அப்பேரணி அணிவகுப்பில் தென்னார்க்காடு தெற்கு மாவட்ட அமைப்பாளர் தயாளமூர்த்தி முதல் பரிசை வென்றார். அவருக்குத் தலைவர் கலைஞர் கேடயம் வழங்கி பாராட்டினார். மதுரை தமுக்கம் திடலில் நடைபெற்ற அம்மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சி அமைக்கப்பட்டது.
1993
19.01.1993இல் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் வடசென்னை மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் தமிழர் திருநாள் விழா மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டது.
கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாக நடைபெற்றன. தலைவர் கலைஞர் நிறைவு உரையாற்றினார்.
1994
19.09.1994இல் கழக மதுரை மண்டல மாநாட்டில் முதல் நாள் நடைபெற்ற வெண்சீருடை அணிவகுப்பிற்கு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார்.
7.10.1994இல் தலைவர் கலைஞர் அவர்களின் இல்லம் வந்த இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.
1995
13.03.1995இல் திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மாநகர் மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் ஒருவார காலம் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் நிதி திரட்டினார். அத்தொகையில் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாயை இளைஞர் அணி வளர்ச்சி நிதியில் சேர்த்து, ரூபாய் ஒரு லட்சத்தை பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நிதியாக இளைஞர் அணியின் சார்பில் தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர் ஆகியோரிடம் வழங்கினார்.
18.7.1995இல் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு ஆளாவதைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் பொருளாளர் ஆர்க்காடு நா.வீராசாமி அவர்கள் முன்னிலையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த உண்ணாவிரதத்தை தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவு செய்து பேருரையாற்றினார்.
18.9.1995இல் கழக முப்பெரும் விழாவையொட்டி சென்னை இராயபுரம் அறிவகம் முதல் அண்ணா அறிவாலயம் வரை சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியினரின் மாபெரும் சைக்கிள் பேரணிக்கு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
1996
28.1.1996இல் தி.மு.கழகத்தின் 8ஆம் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டுப் பேரணியில் தி.மு.க. இளைஞர் அணியின் சிறப்பான அணிவகுப்பைத் தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர், முரசொலி மாறன் உள்ளிட்ட கழக முன்னணியினர் வள்ளுவர் கோட்டம் வடிவில் அமைக்கப்பட்ட சிறப்பு மேடையில் நின்று கண்டு களித்தனர்.
மாநாட்டில் இளைஞர் அணியின் சார்பில் ஏ.வி.கே. நினைவு திராவிட இயக்க வரலாற்று கண்காட்சி அமைக்கப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் துயிலுமிடங்களின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
10.8.1996இல் தமிழக முதல்வர் கலைஞர் 10ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பாஸ் வழங்கினார். இத்திட்டத்தை +2 படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் நீட்டித்து அனுமதி வழங்க வேண்டுமென சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று +2 வரை இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது.
சென்னை மேயர்
1996 அக்டோபரில் சென்னை மாநகராட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக தளபதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். உலகிலேயே 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி மேயர் என்னும் சிறப்புத் தகுதி பெறுகிறார்.
28.12.1996இல் தி.மு.க. இளைஞர் அணியால் பல்வேறு கழகச் செய்திகளை உள்ளடக்கிய – நமது இயக்க நாள் குறிப்பு – 1997 வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் வெளியிட, கழகத் தலைவர் கலைஞர் அதனைப் பெற்றுக் கொண்டார்.
1997
28.6.1997இல் சேலத்தில் தி.மு.கழக சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுப் பேரணியில் தி.மு.க. இளைஞர் அணி வெண்சீருடை அணிவகுப்பிற்கு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
8.10.1997இல் வேலூர் – திருவண்ணாமலை மாவட்ட இளைஞர் அணியின் பயிற்சிப் பாசறை ஏலகிரியில் நடைபெற்றது.
16.10.1997இல் இங்கிலாந்து நாட்டின் பேரரசியான இராணி எலிசபெத் சென்னை மாநகருக்கு வருகை புரிந்தார். அவருக்கு சென்னை மாநகரின் முதல் குடிமகனாம் மேயர் ஸ்டாலின் மலர்க்கொத்து அளித்து வரவேற்றார்.
27.10.1997இல் திண்டுக்கல், தேனி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இப்பயிற்சிப் பாசறையில் பேராசிரியர் நன்னன், கோவை மு.இராமநாதன், விடுதலை விரும்பி, திருச்சி செல்வேந்திரன், வெற்றிகொண்டான் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
30.10.1997இல் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் தி.மு.க. இளைஞர் அணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடைபெற்றது.
22.11.1997இல் அமராவதி புதூர் குருகுலம் வளாகத்தில் சிவங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களின் தி.மு.க. இளைஞர் அணி பயிற்சி முகாம் நடைபெற்றது. தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். தா.கிருட்டிணன், சுப.தங்கவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1998
30.6.1998இல் மேயர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் நடைபெற்ற மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
1999
3.1.1999இல் சென்னைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களை விமான நிலையத்தில் மேயர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
4.1.1999இல் சென்னையில் கடல்நீரைக் குடிநீராக மாற்றும் நிலையத்தினை மேயர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
30.8.1999இல் இளைஞர் அணியின் துணைச் செயலாளரும், தளபதி ஸ்டாலின் அவர்களின் உடன்பிறவா சகோதரரும், இளைஞர் அணித் தோழர்களின் உறவுப் பாலமாகவும் விளங்கிய அன்பில் பொய்யாமொழி மாரடைப்பில் காலமானார்.
2000
கடந்த 1991-1996இல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா செய்த ஊழல்கள் எண்ணற்றவை. தொட்டில் குழந்தை திட்டம் முதல் சுடுகாட்டுக் கூரைத் திட்டம் வரை பல்வேறு ஊழல்கள் தலைவிரித்தாடின. டான்சி நில ஊழல் வழக்கு முதல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பல்வேறு வழக்குகள் வழக்கு மன்றங்களில் பதிவாகின. அவற்றுள் ஒன்றான கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று வழக்கு மன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது அ.தி.மு.க.வினர் நாட்டின் பல பகுதிகளில் பேருந்துகளின் மீது கல்வீச்சு – கட்டாய கடையடைப்பு போன்ற அராஜகங்களில் ஈடுபட்டனர்.
அந்நிகழ்ச்சிகளில் ஒன்றாக தருமபுரியில், கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் சென்ற பேருந்து தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. காட்டுமிராண்டிகள் கூட செய்ய அஞ்சும் அக்கொலை பாதகச் செயலாளர் அப்பேருந்தில் பயணம் செய்த ஹேமலதா, காயத்திரி, கோகிலாவாணி என்னும் மூன்று மாணவிகள் உயிருடன் எரிந்து சாம்பலாகினர். மற்றும் பல மாணவிகள் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இக்கொடிய சம்பவத்தைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி மேயர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
2001
2001ஆம் ஆண்டு மார்ச் திங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்குத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
எழும்பூர் தொகுதியில் வாக்குப்பதிவின் போது ஜான்பாண்டியனால் திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா உடனடியாக கழக வெற்றி வேட்பாளர் பரிதி இளம்வழுதியை கைது செய்தார்.
அதன்பின் சட்டமன்றத்தில் கழக ஆட்சியில் கொள்முதல் செய்து வைக்கப்பட்ட பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரிசி புழுத்துப் போய்விட்டதாகப் பொய் சொன்னார். அரசுக் கிடங்களில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள அரிசி புழுத்துப் போனவை அல்ல என்பதை நிரூபித்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி, செய்தியாளர்களுடன் சென்று மாதிரிகளை எடுத்து அவை நல்ல அரிசிதான் என்பதை நிரூபித்தார். இதனை அத்துமீறல் என்று கூறி ஜெயலலிதாஅரசு பொன்முடியைக் கைது செய்தது.
ஜெயலலிதாவின் ஏவல் துறையாக செயல்பட்ட காவல் துறையினர் ஜூன் 30ஆம் நாள் நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தலைவர் கலைஞர் அவர்களை அறைக் கதவுகளை உடைத்து, அத்துமீறி அராஜகமான முறையில் கைது செய்தனர். இதனைத் தட்டிக் கேட்ட மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மீது வன்முறைத் தாக்குதல் தொடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தளபதி ஸ்டாலின் அவர்களையும் கைது செய்யச் சென்றனர். அப்போது அவர் பெங்களூருக்கு சென்றிருந்ததால் கைது செய்யவில்லை. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையை சிங்காரச் சென்னையாக்கிட பத்து மேம்பாலங்களைக் கட்டிச் சாதனை படைத்ததை ஊழல் என்று கூறி கைது நடவடிக்கைகள் நடைபெற்றன. தலைவர் கைது செய்யப்பட்டதையும், தான் தேடப்படுவதையும் அறிந்த தளபதி ஸ்டாலின் உடன் சென்னை திரும்பி காவல்துறையிடம் தன் ஒப்படைப்பு செய்தார்.
தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்து நாடே கொந்தளித்தது. பலர் நெஞ்சதிர்ச்சியாலும், நஞ்சருந்தியும், தீக்குளித்தும் மாண்டனர். நாடு முழுவதும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் சிறையேகினர்.
தலைவர் கலைஞர் அவர்களை அக்கிரமமான முறையில் கைது செய்தததைக் கண்டித்து ஆகஸ்ட் 12ஆம் நாள் ஒரு மாபெரும் கண்டனப் பேரணி சென்னை சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்திலிருந்து கடற்கரையில் உள்ள சீரணி அரங்கம் வரை நடைபெற்றது. அமைதியான முறையில் தன் கண்டனத்தைத் தெரிவித்து நடைபெற்ற அந்தப் பேரணியை, காவல்துறைத் தலைவர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஆளுங்கட்சியால் ஏவப்பட்ட கூலிப் படைகளும், காலிப் படைகளும் அரிவாள், பட்டாக்கத்தி முதலான பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் ஆறு தோழர்கள் மரணமடைந்தனர். எண்ணற்ற கழகத் தோழர்கள் படுகாயமுற்றனர். சிதறியோடிய கழகத் தோழர்கள் மீது காவல் துறையினர் குண்டாந்தடி கொண்டு தாக்கினர். இக்காட்சிகளைப் படம் பிடித்த செய்தியாளர்களும் காவல் துறையின் தாக்குதலுக்கு ஆளாகினர். காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டனர். கழகத் தோழர்கள் வந்த வாகனங்கள் பல தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இப்பேரணியில் முழக்கமிட்டபடி தொழிலாளர் பேரணியை நடத்தி வந்த தொழிலாளர் முன்னேற்றக் கழக செயலாளரும், சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வை.பெருமாள் நெஞ்சதிர்ச்சியால் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாண்டார்.
செப்டம்பர் 15ஆம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று, வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக, தொண்டர் அணியின் அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது தொண்டர் அணியில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக கலைஞர் விருது பொற் பதக்கம் வழங்கப்பட்டது. அப்பதக்கத்தை மிடுக்குடன் வந்து பெற்றுத் திரும்பிய தொண்டர் அணியின் செயலாளர் மாஸ்டர் தமிழ்ப்பித்தன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து நெஞ்சதிர்ச்சியால் மாண்டார்.
தளபதி அவர்களின் தலைமையில் சிறப்பு மிகுந்த வெண்சீருடை அணிவகுப்பினை நடத்திக் காட்ட பயிற்சியளித்தவரும் தளபதி அவர்களின் தனியன்புக்கு உரியவருமாமன மாஸ்டர் தமிழ்ப்பித்தன் இழப்பு கழகத்திற்கு பேரிழப்பாகும்.
25.10.2001 சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் தளபதி மு.க.ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற்றார்.
2002
22.04.2002 எம்.எல்.ஏ. பதவியில் இருப்பவர்கள் மேயர் போன்ற உள்ளாட்சி மன்ற பதவி வகிக்க முடியாதபடி 22.9.2002இல் அ.தி.மு.க அரசு சட்டம் கொண்டு வந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தளபதி ஸ்டாலின் அவர்களின் மேயர் பதவியைப் பறித்தது.
சென்னை மாநகர தலைவராக (மேயராக) இருந்த தளபதி ஸ்டாலின் அவர்களின் பதவியைப் பறித்தது செல்லாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சூடு கொடுத்தது. எனினும் இரண்டாவது முறையாக ஒருவரே மேயர் ஆக முடியாது என்று கூறியதால் மேயர் பொறுப்பை விடுத்தார்.
2003
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு வகித்த கழக தளபதி மு.க.ஸ்டாலின் கழகத்தின் 12ஆம் பொதுத் தேர்தலுக்குப் பின் 2.6.2003இல் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பெருமுயற்சியால் தி.மு.க. இளைஞர் அணி நடத்தி வந்த திராவிட இயக்க வரலாறு கண்காட்சி, நிரந்தரமான கண்காட்சியமாக அண்ணா அறிவாலயத்தில் உருவானது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பணிக்கு தஞ்சை இரத்தினகிரியும், பொள்ளாச்சி மா.உமாபதியும் துணை நின்றனர். கலைஞர் கருவூலம் என்னும் குளிரூட்டப்பட்ட 10,000 சதுர அடி பரப்பளவு தளத்தில் அமைந்த அக்கண்காட்சி இந்தியாவில் வேறு எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத பெருமை கொண்டது. கலைஞர் கருவூலத்தை மேனாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
2004
மே மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள்தான் முதன் முதலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என பிரகடனம் செய்தார். தலைவரின் அறிவிப்புக்குப் பின் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு பெருகியது. இதன் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் தி.மு.கழகம் தலைமையில் இக்கூட்டணி 40 இடங்களிலும் வென்று மகத்தான வரலாறு படைத்தது.
மத்திய அரசில் தமிழகத்தின் சார்பில் ஆறு கேபினட் அமைச்சர்களும், ஆறு இணை அமைச்சர்களுமாக 12 தமிழர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றனர். தலைவர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தலைவர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. இளைஞர் அணி பாராட்டுக் கூட்டம் நடத்தியது.

—————————————————————————————————————————-

தி.மு.க. இளைஞர் அணி

தி.மு.க. இளைஞர் அணி தலைவர் கலைஞர் அவர்களால் 1980, ஜூலை 20ஆம் நாள் மதுரை, ஜான்சிராணி பூங்காவில் தி.மு.க. இளைஞர் அணி துவங்கப்பட்டது.

1982, ஆகஸ்ட் 1ஆம் தேதி திருச்சி வாசவி மகாலில் இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் முதன்முதலாக நடைபெற்றது. தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 60க்கும் மேற்பட்டோர் பேசினர்.

கழகப் பொதுச் செயலாளர் அவர்களால் 1982, ஆகஸ்ட் 1ஆம் நாள் தி.மு.க. இளைஞர் அணிக்கு திரு. மு.க. ஸ்டாலின், திருச்சி சிவா, வாலாஜா அசேன், இளம்வழுதி, தாரை மணியன் ஆகியோர் அமைப்புக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

17.8.1982இல் ஜெயம் ஜுலியஸ், பஞ்சவர்ணம் ஆகிய இருவரும் அமைப்புக் குழுவிற்கு கூடுதலாக அறிவிக்கப்பட்டனர்.

1983, ஏப்ரல் 10-இல் பொதுச் செயலாளர் அவர்களால் தி.மு.க. இளைஞர் அணிக்கு திரு. மு.க. ஸ்டாலின் அமைப்பாளராகவும், திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி, வாலாஜா அசேன், தாரை மணியன், முகவை பஞ்சவர்ணம், நெல்லை ஜெயம் ஜூலியஸ் ஆகியோர் மாநில இளைஞர் அமைப்புக் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

1983, ஆகஸ்ட் 25இல் இளைஞர் அணிக்கு செயலாளர், இரண்டு துணைச் செயலாளர்கள் என நியமிக்கப்பட்டனர்.

1983ஆம் ஆண்டு இளைஞர் அணிக்கு மாவட்டத்திற்கு அமைப்பாளர், இரண்டு துணை அமைப்பாளர்கள் என நியமிக்கப்பட்டனர்.

1987ஆம் ஆண்டு ஒன்றிய, நகர, பகுதிக்கு இளைஞர் அணி அமைப்பாளர், இரண்டு துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

2002ஆம் ஆண்டு மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதிக்கு இளைஞர் அணி அமைப்பாளர், மூன்று துணை அமைப்பாளர்களும், பேரூர் கழகத்திற்கு அமைப்பாளர், இரண்டு துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

தற்போது இளைஞர் அணி, கிராமங்கள் மற்றும் வார்டுகள் தோறும் சார்பு மன்றங்களைப் போல இளைஞர் அணி அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

—————————————————————————————————————————-

 

தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

பெயர் : மு. கருணாநிதி, தலைவர் கலைஞர் என தமிழ் உலகமெங்கும் போற்றப்படுவர்.
தந்தை : தாய் முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையார்
பிறந்த ஊர்: திருவாரூர் அருகே உள்ள திருக்குவளை
பிறந்த நாள்: 1924, சூன் திங்கள் 3ஆம் நாள்
சிறப்பியல்புகள் இணையற்ற மனிதாபிமானி, ஓய்விலா உழைப்பாளர், மக்கள் தலைவர், ஒப்பற்ற சிந்தனையாளர், உலகத் தமிழர்களுக்கு என்றே ஓயாது உழைத்து வருபவர், நிகரற்ற பேச்சாளர், செயல் வீரர், சிறந்த எழுத்தாளர், நாடகக் கலைஞர், பத்திரிகை ஆசிரியர், ஓவியர், பதிப்பாளர், வெளியீட்டாளர், மதிநுட்பம் மிக்க அரசியல் அறிஞர்.
1957 – 1996 14 வயது முதலே பொதுவாழ்வில் தன்னைப் பிணைத்துக் கொண்டவர். பல்வேறு அரசியல் போராட்டங்களில், குறிப்பாக இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம், கல்லக்குடி அறப்போர், விலைவாசி உயர்வு மும்முனைப் போராட்டம், ஈழத் தமிழர் அறப்போரில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு பல முறை சிறை சென்றவர்.
1936 திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் மாணவ நேசன் கையெழுத்து ஏட்டின் ஆசிரியர்.
1938 இராஜாஜியின் கட்டாய இந்தியை எதிர்த்து ஊர்வலம்.
1941 தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1949 பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் காணுதல்.
1961 திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர்.
1962 – 1967 சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆனார்.
1967 அண்ணாவின் அரசியல் பொதுப்பணித் துறை அமைச்சர். அரசு அலுவலகம், பேருந்து ஆகியவற்றில் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம் பெறச் செய்தது.
1969 தி.மு.க.வின் தலைவர் பொறுப்பு ஏற்றார்.
1969 – 1971 முதன்முறை தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பு ஏற்றார்.
1971 – 1976 இரண்டாம் முறை முதலமைச்சர் பொறுப்பு ஏற்றார்.
சட்டமன்ற வெற்றிகள்
1956 குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப் பெற்றார்.
1962 தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
1967 சைதை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
1971 அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1977 அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1980 மீண்டும் அண்ணாநகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1989 துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1991 துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் விலகினார்.
1996 சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1957 – 1996 41 ஆண்டுகள் தோல்வியைச் சந்திக்காமல் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று பணியாற்றினார்.
1977 – 1983 சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.
1983 ஈழத் தமிழர் நலங்காக்கும் பெரும் போரில் தமது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியைத் துறந்தார்.
1984 – 1986 மேலவை உறுப்பினர் ஆனார்.
1989 – 1961 மூன்றாம் முறையாக முதல்வராகப் பொறுப்பு ஏற்றார்.

நூல்கள்

ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர்-சங்கர், பாயும்புலி பண்டாரக வன்னியன், சங்கத் தமிழ், குறளோவியம், நெஞ்சுக்கு நீதி, இனியவை இருபது, வெள்ளிக்கிழமை, புதையல், ஒரே ரத்தம், திருக்குறள் உரை என 100க்கும் மேலானவை.

நாடகங்கள் இருபதுக்கும் மேற்பட்டவை.

தூக்குமேடை, மணிமகுடம், பழனியப்பன், காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதயசூரியன், சிலப்பதிகாரம் முதலியன.

திரைப்படங்கள் எழுபதுக்கும் மேற்பட்டவை.

ராஜகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, தேவகி, மணமகள், ஆடடெ ஜெனமா, பராசக்தி, பணம், நாம், திரும்பிப் பார், மனோகரா, மனோஹரா (தெலுங்கு), மலைக்கள்ளன், அம்மையப்பன், ராஜாராணி, ரங்கோன் ராதா, பராசக்தி (தெலுங்கு), புதையல், வீரகங்கணம் (தெலுங்கு), புதுமைப்பித்தன், குறவஞ்சி, எல்லோரும் இந்நாட்டுமன்னர், அரசிளங்குமரி, தாயில்லா பிள்ளை, இருவர் உள்ளம், காஞ்சித்தலைவன், பூம்புகார், பூமாலை, அவன் பித்தனா? மறக்க முடியுமா? மணிமகுடம், தங்கதம்பி, வாலிப விருந்து, ஸ்திரீ ஜென்மா (தெலுங்கு), எங்கள் தங்கம், பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, அணையா விளக்கு, வண்டிக்காரன் மகன், நெஞ்சுக்கு நீதி, ஆடு பாம்பே, அம்மாயி மொகுடு மாமகு யமுடு, குலக்கொழுந்து, மாடி வீட்டு ஏழை, தூக்குமேடை, இது எங்க நாடு, திருட்டு ராஜாக்கள், காவல் கைதிகள், குற்றவாளிகள், காகித ஓடம், பாலைவன ரோஜாக்கள், நீதிக்கு தண்டனை, ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால், பாசப்பறவைகள், இது எங்கள் நீதி, பாடாத தேனீக்கள், தென்றல் சுடும், பொறுத்தது போதும், நியாயத்தராசு, பாசமழை, காவலுக்குக் கெட்டிக்காரன், மதுரை மீனாட்சி, புதிய பராசக்தி.
13.5.1996 நான்காம் முறையாக தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்றார்.
3.6.1998 பவளவிழா ஆண்டு தொடக்கம்

வரவேற்காமல் வரக்கூடிய நோய்,
தடுத்தாலும் கேளாமல் தழுவக்கூடிய சாவு,
இவற்றுக்கு மத்தியில் மனத்தூய்மையுடனும்
உறுதியுடனும் ஆற்றுகின்ற செயல்கள்தான்
நிலைத்துவாழக் கூடியவை.
– தலைவர் கலைஞர்

கலைஞர் ஒரு சிறைப்பறவை
சிறைப்படுத்தப்பட்ட நாள்கள்
1. கல்லக்குடி – 15-7-53 முதல் 21-11-53 வரை
பெயர் மாற்றப் போராட்டம்

2. பிரதமர் நேருவுக்குக் கருப்புக்கொடி – 3-4-58 முதல் 8-1-58 வரை
விளக்கக்கூட்டம் தடை மீறல்

3. விலைவாசி உயர்வு கண்டனப் – 19-7-62 முதல் 26-10-62 வரை
போராட்டம் (தஞ்சை)

4. மதுரை சட்ட எதிர்ப்புப் போராட்டம்
தலைமை தாங்கியதாகக் குற்றச்சாட்டு – 19-12-63 முதல் 25-12-63 வரை

5. தடுப்புக் காவல் சட்டப்படி குளித்தலை – கோவைப் பயணத்தில்
பசுபதிபாளையத்தில் கைது – 25-4-65 முதல் 2-2-65 வரை

6. இந்தி எதிர்ப்புப் போராட்டம் – 16-2-65 முதல் 4-4-65 வரை
பாளையங்கோட்டை சிறைச்சாலை நள்ளிரவு 12 மணியளவில் கைது

7. நெருக்கடி காவல் (பத்திரிகைத் தணிக்கையைக்
கண்டித்து அண்ணாசாலையில் – 2-6-76 – இரவே விடுதலை
போராட்டம்

8. பிரதமர் இந்திராகாந்திக்குக்
கருப்புக் கொடி – 30-10-77 முதல் 8-12-77 வரை
9. இலங்கைத் தூதர் அலுவலகத்தின் முன்
அடையாள மறியல் செய்தவர்களை விடுவிக்கக்கோரி மறியல் – 15-9-81 முதல் 29-9-81 வரை

10. இலங்கைத் தமிழர் ஆதரவுப்
போராட்டம் – காஞ்சிபுரம் – 16-5-85 முதல் 30-5-85 வரை

11. சென்னை அரசினர் தோட்ட
கட்சி அலுவலகம் மூடல் – 30-5-85 – இரவே விடுதலை

12. இந்தித் திணிப்பு அறிக்கை எரிப்பு
(சிறைக் கைதி உடை) – 9-12-86 முதல் 30-1-87 வரை

13. வெள்ளக்கோவில் பொதுக்கூட்டம்
தொடர்பாக குமாரபாளையத்தில் கைது – 19-4-87 – இரவே விடுதலை

14. இடஒதுக்கீட்டுப் போராட்டம் – 20-6-94 – இரவே விடுதலை

——————————————————————————————————————————————————–

கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

 

பெயர் : பேராசிரியர் க.அன்பழகன்
பெற்றோர் : சொர்ணம் – மு. கல்யாணசுந்தரம்
பிறப்பு : டிசம்பர் 19, 1922
சொந்த ஊர் : நாகை மாவட்டம், வைத்தீசுவரன் கோயில் அருகே உள்ள கொண்டந்தூர்
கல்லூரிக் கல்வி : (எம்.ஏ). அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
1941 மறைமலையடிகளாரின் தனித் தமிழ் இயக்கத்தின் ஈடுபாட்டால் இராமையா என்ற தனது பெயரை அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார்.
1943 தலைவர் கலைஞர் நடத்தி வந்த தமிழ்நாடு மாணவர் மன்ற விழாவில் பங்கேற்றார்.
1944 சென்னை, பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறையில் பணியேற்றார்.
1948 புதுவாழ்வு இதழ் – சண்பகம் இதழ்களுக்கு 1949 வரை ஆசிரியர், சிறப்பாசிரியர்
1952 இலங்கைப் பயணம்
1956 நேருவிற்குக் கறுப்புக் கொடி காட்டி கைதாகி 5 நாள் சிறைவாசம் ஏற்றார்.
1957 கல்லூரிப் பேராசிரியர் பணியிலிருந்து விலகி எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1959 தி.மு.க. சட்டமன்றக் குழுவின் துணைத் தலைவர். தி.மு.க. தொழிற்சங்கச் செயலாளராக 1961 வரை பணியாற்றினார்.
1962 சென்னை – செங்கை ஆசிரியர் தொகுதியில் போட்டியிட்டுச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி மேலவையில் தி.மு.க. குழுவின் தலைவரானார்.
1964 இந்தி எதிர்ப்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு 6 மாதச் சிறைவாசம் ஏற்றார்.
1967 திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றியடைந்து, நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.
1968 ஏதன்ஸ், ரோம், பாரிஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா சென்று வருதல்.
1971 சென்னை புரசைத் தொகுதியில் வெற்றி பெற்று 1976 வரை தலைவர் கலைஞரின் அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
1974 தி.மு.கழகப் பொருளாளராகப் பதவி ஏற்றார்.
1976 இந்திராகாந்திக்குக் கறுப்புக்கொடி காட்டி, கழகம் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1977 புரசை சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரானார்.
1978 இந்திராகாந்திக்குக் கறுப்புக் கொடி காட்டிக் கைதாகிச் சிறைவாசம் ஏற்றார்.
1980 புரசைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார்.
1983 ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளின் நிலையைக் கண்டித்துத் தலைவர் கலைஞருடன் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.
1984 சென்னைப் பூங்காநகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார்.
1986 அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார்.
அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டமன்ற உறுப்பினர் பதவி இழந்தார்.
1989 சென்னை அண்ணாநகர் தொகுதியில் வென்று கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1994 மலேசியப் பயணம் மேற்கொண்டார்.
1996 சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வென்று கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1978, 1983, 1988, 1992, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1998 பவள விழா – பணிகள் தொடர்கின்றன.


—————————————————————————————————————–
மனோரமா விழாவில் கலந்துகொள்வது என் பாக்கியம்: கருணாநிதி

சென்னை, ஜன. 14 உலகின் மிகச் சிறந்த நடிகையான மனோரமா வின் பொன்விழா பாராட்டு விழா வில் கலந்துகொள்வது என்னு டைய பாக்கியம் என முதல்வர் கரு ணாநிதி தெரிவித்தார்.

1958 முதல் 2008 வரையிலான 50 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன் னடம், மலையாளம், ஹிந்தி உள் ளிட்ட மொழிகளில் சுமார் 1,500 திரைப்படங்களில் நடித்துள்ள மனோரமாவுக்கு சென்னையில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்குத் தலை மையேற்று கருணாநிதி பேசியதா வது: “மனோரமாவின் இன்றைய பேச்சு, குறிப்பாக என்னைப் பற்றிப் பேசும்போது ஏற்பட்ட பரபரப்புக் குக் காரணம் எங்களுடைய கலையு லகத் தொடர்பு மட்டுமல்ல; அவர் பிறந்தது திருவாரூருக்கு அருகி லுள்ள காட்டூர் என்பது மட்டு மல்ல, அதையும் தாண்டிய குடும்ப உறவும் உண்டு.
குடும்ப ரகசியம்: இங்குள்ள ஆயிரக்கணக்கானோர் மத்தியில், இதுவரை நான் வெளியிடாத ஒரு குடும்ப ரகசியத்தைக் கூற விரும்புகி றேன். 1967-ம் ஆண்டு திமுக ஆட் சிப் பொறுப்பேற்ற ஏழு, எட்டு மாதங்களில் தஞ்சையில் என்னு டைய தலைமையில் “அண்ணா கவி யரங்கு’ நடைபெறவிருந்தது.

அந்த விழாவுக்குச் செல்லும் போது திண்டிவனம் அருகே கார் விபத்துக்குள்ளாகி நான் உள்பட பலரும் படுகாயமடைந்தோம்.

செய்தியைக் கேள்விப்பட்ட அண்ணா உள்பட பலரும் எனக்கு என்ன ஆகிவிட்டதோ என கவலை யுற்று திண்டிவனத்துக்கு வந்தனர்.

அங்கிருந்து என்னை சென்னைப் பொதுமருத்துமனையில் அனும தித்தனர். அதுவரை எனக்கு நினைவு திரும்பவில்லை.
அப்போது மனோரமாவும் அவ ரது தாயாரும் நான் அனுமதிக்கப் பட்ட அறைக்கு வந்துள்ளனர். அப் போது அங்கு தலைவிரி கோலமாக வந்த என்னுடைய துணைவியார் ராஜாத்தியம்மாள் அழுது புலம்பி யிருக்கிறார். அப்போது அங்கு இருந்த தயாளு அம்மாள் அதைப் பார்த்துவிட்டு “இது யார்?’ என மனோரமாவிடம் கேட்டிருக்கி றார்.

அவ்வளவுதான்… “ஊருக்கெல் லாம் தெரிந்த விஷயம் உனக்குத் தெரியாதாம்மா..! இவர்தான் ராஜாத்தியம்மா!’ என மனோரமா விஷயத்தைப் போட்டு உடைக்க, “ஊருக்குத் தெரிந்த -வீட்டுக்குத் தெரியாத’ விஷயம் அப்போது வெளிப்பட்டுவிட்டது. மனோ ரமா என்ன நினைத்து சொன் னாரோ தெரியாது; ஆனாலும் இன்றளவும் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உலகின் ஒப்பற்ற நடிகை:

“உதயசூரியன்’ என்ற நாடகத்தில் நான் கதாநாயகனாகவும் மனோ ரமா கதாநாயகியாகவும் நடித் தோம். அதில் நான் தேசியவாதியா கவும் மனோரமா திராவிடம் என் றால் என்ன என்று விளக்கும் கதா பாத்திரத்திலும் நடித்தோம். ஒரு பெண்ணுக்கு அந்த வேடத்தைக் கொடுத்ததற்குக் காரணம், திராவி டத்தைப் பரப்புவதற்காகத்தான்.
ஏனென்றால் பெண்கள் திருந்தி னால் போதும் நாடே திருந்திவி டும்.

மனோரமா பேசும்போது நான் இந்த விழாவில் கலந்துகொள்வது அவருடைய பாக்கியம், பெருமை என்றெல்லாம் கூறி எல்லாவற்றை யும் எனக்குச் சமர்ப்பிப்பதாகக் கூறி னார்.

ஆனால் உண்மையைக் கூற வேண்டுமானால் உலகின் மிகச் சிறந்த, ஒப்புயர்வற்ற நடிகை மனோ ரமாவின் பொன்விழாவை யொட்டி நடைபெறும் இந்த மாபெரும் பாராட்டு விழாவில் கலந்துகொள்வது என் வாழ்நா ளில் பெற்ற பாக்கியம்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் கருணாநிதி.

ரஜினிகாந்த்:

நான் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் போது எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த பேராசிரியர் ராஜாரா மன் தாஸ் ஹாலிவுட்டில் மர்லின் மன்றோ, சார்லி சாப்ளின் பாலி வுட்டில் முக்கிய நடிகர்கள், தமி ழில் சிவாஜிகணேசன், ரெங்கா ராவ், எம்.ஆர்.ராதா, பாலையா போன்றோரைப் பற்றிய படக் காட் சிகளைக் காட்டி சொல்லிக் கொடுத்தார்.

ஹீரோயின்களில் அவர்கள் தேர்ந்தெடுத்தது சாவித்ரி, மனோ ரமா. அவருடன் “குப்பத்து ராஜா’ படத்தில் முதல்முறையாக நடித் தேன். அப்போது என் தமிழ் உச்ச ரிப்பு, ஸ்டைல் இவற்றையெல்லாம் பார்த்து “இப்படியே பேசுப்பா; நல்லா இருக்கு’ என்று கூறியவர்.

ஒருசமயம் “பில்லா’ படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அரு கில் ஒரு குப்பத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கூட்டத்தில் இருந்த ஒருவர் “பரவாயில்லையே; பைத்தியம் நல்லா ஆடுதே’ என்று குரல் கொடுத்தார். அந்தக் காலகட் டத்தில் என்னைப் பற்றி ஒருவித மாக செய்திகள் வந்துகொண்டிருந் தன.

அப்போது என் அருகில் இருந்த மனோரமா அந்த நபரின் சட்டை யைப் பிடித்து அடித்து, “அவரை படப்பிடிப்பிலிருந்து வெளியேற்றி னால்தான் நடிப்பேன்’ என்று கூற அவர் வெளியேற்றப்பட்டார்.

அந்த அளவுக்கு என் மீது அன்பு காட்டியவர் என்றார்.

கமல்ஹாசன்:

சிவாஜிகணே சன், ஜெமினிகணேசன், சாவித்ரி, மனோரமா ஆகியோரின் மடியில் தவழ்ந்த நான், இந்த அளவுக்குக் கூட சாதிக்கவில்லை என்றால் தவறு என் மீதுதான்.

மனோரமாவின் பணிவு, பண்பு, அன்பு போன்றவை அவருடைய ஒவ்வொரு செய்கையிலும் தெரி யும். எனக்குத் தெரிந்து கண்ணுக் கெட்டியவரை மனோரமாவுக்கு நிகரான நடிகை இந்த உலகில் இல்லை. அவருக்கு ஆண்டுதோ றும் விழா நடத்தினாலும் கண்டிப் பாக கலந்துகொள்வோம் என்றார் கமல்ஹாசன்.

மனோரமா:

எனக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே கேட்டனர். தவிர்த்து வந்தேன். கரு ணாநிதி ஆட்சி செய்யும்போது தான் இந்த விழா நடக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப் பம் போலும். நான் இந்த நிலைக்கு வந்ததற்கு நான்கு பேர் முக்கியக் காரணம். முதலாவதாக என்னு டைய தாய். இரண்டாவது என் னுடை தாய் ஸ்தானத்தில் இருக்கும் கருணாநிதி. அவருடைய “மணிமகு டம்’ நாடகத்தின் மூலம்தான் கலை யுலகுக்கு அறிமுகமானேன்.

தொடர்ந்து அவருடைய நாடகங்க ளில் நடித்துத்தான் புகழடைந் தேன். மூன்றாவதாக கவிஞர் கண் ணதாசன். கருணாநிதியின் நாட கங்களில் நான் நடிப்பதைப் பார்த் துவிட்டு அவர்தான் என்னை 1958-ல் “மாலையிட்ட மங்கை’ படத்தில் அறிமுகப்படுத்தினார்.

நான்காவது நபர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். என்னை செட்டிநாட்டிலிருந்து சென் னைக்கு வரவழைத்தவர். இவர்க ளும் தமிழக ரசிகர்கள் என்மேல் காட்டி வரும் அன்பும்தான் நான் இந்த நிலைக்கு வரக் காரணம்.

அனைவருக்கும் என் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டிருக் கிறேன் என உணர்ச்சிவயப்பட்டு நன்றி தெரிவித்தார் மனோரமா.நடிகை மனோரமாவின் பொன்விழாவையொட்டி முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில்
திங்கள்கிழமை நடந்த பாராட்டு விழாவில், நடிகர்கள் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் 50 தங்க
நாணயங்கள் பொறித்த நினைவுப்பரிசை மனோரமாவுக்கு வழங்கினர்.

Posted in Alagiri, Alakiri, Anbalagan, Anbalakan, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Azakiri, Azhagiri, Azhakiri, Biosketch, DMK Youth Wing, dmkyouthwing, dmkyouthwing.in, Faces, History, Kamal, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, manorama, MK, MK Alagiri, MK Alakiri, MK Azhagiri, MK Azhakiri, MK Stalin, MLA, MLAs, MLC, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, people, Rajini, Rajni, Stalin, www.dmkyouthwing.in | Leave a Comment »

Actor, Politician ‘Nizhalgal’ Chandrasekar – Biosketch

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(803)
ஹீரோ, வில்லன், குணசித்ர வேடம்
300 படங்களில் நடித்து சந்திரசேகர் சாதனை

சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியால் நடிகரானவர் சந்திரசேகர். ஹீரோ, குணசித்ரம், வில்லன் என்று எந்த கேரக்டரிலும் தன்னை இயல்பாக வெளிப்படுத்திக் கொள்ளும் சந்திரசேகர், சினிமாவில் ஏற்று நடிக்காத கேரக்டர்களே இல்லை. 28 வருடங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தொடர்ந்து நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

சந்திரசேகருக்கு சொந்த ஊர் திண்டுக்கல்லை அடுத்த வாகைக்குளம். திண்டுக்கல்லில் உள்ள டட்லி பள்ளியில்தான் ஆரம்பப்படிப்பு. பள்ளியில் ஆறாவது படிக்கும்போது, மற்ற மாணவர்களிடம் இல்லாத ஒரு திறமை இவரிடம் இருந்தது. அதாவது பாடம் நடத்தும் ஆசிரியர்களின் `மேனரிசம்’ என்னவோ, அதை அப்படியே உள்வாங்கி, அந்த ஆசிரியர் பாடம் நடத்தி விட்டுப் போனதும் அதை அப்படியே நடித்துக் காட்டுவார்!

சினிமா ஆசை

இப்படி நடிக்க ஆரம்பித்தவருக்கு, நிறைய சினிமா பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தினமும் வீட்டில் காய்கறி வாங்க கொடுக்கும் காசில் கமிஷன் பார்த்து அதை படம் பார்க்க வைத்துக் கொள்வார். 25 பைசா தேறினால் ஒரு படத்துக்கான கட்டணம் ஆகிவிடும். சைக்கிள் பாசுக்கு 5 பைசா. 30 பைசாவுக்குள் படம் பார்க்கும் கனவு நிறைவேறி விடும். இதனால் எப்போது கையில் 30 பைசா தேறுகிறதோ, அன்றெல்லாம் வகுப்புக்கு `கட்’ அடிக்க ஆரம்பித்தார்.

படம் பார்த்து முடித்த பிறகு படத்தில் நடித்தவர்கள் பற்றி அறிய ஆசை ஏற்பட்டது. திண்டுக்கல் பஜாரில் ஞாயிறு தோறும் பிளாட்பாரத்தில் புத்தக கடை போடப்பட்டிருக்கும். அந்தக் கடையில் “பேசும் படம்”, “பிலிமாலயா” முதலிய சினிமா பத்திரிகைகளும் இருக்கும். தேடிப்பிடித்து அதை படிக்கும் சந்திரசேகர், நடிகராகவேண்டும் என்ற கனவை தனக்குள் விதைத்துக் கொண்டது அப்போதுதான்.

கலைஞரின் “பராசக்தி”, “மனோகரா” வசனங்கள் அவரைக் கவர்ந்தன. அந்த வசனங்கள் அவருக்கு மனப்பாடம்.

1965-ல் தி.மு.கழகம் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அப்போது 6-வது படித்துக் கொண்டிருந்த சந்திரசேகர் தன் சக மாணவர்களுடன் கலந்து கொண்டார்.

11-வது வகுப்பை முடித்த சந்திரசேகரின் அண்ணன் பாண்டியன் ஓவியக் கல்லூரியில் சேர சென்னை புறப்பட்டார். அண்ணனின் சென்னைப் பிரவேசத்தில் சந்திரசேகர்தான் அதிகம் மகிழ்ந்தார். சென்னையில்தான் அவரை கலையால் ஆட்டி வைக்கும் நடிகர் – நடிகைகள் இருக்கிறார்கள்.

அண்ணனின் சென்னை பிரவேசம் தன்னை எப்படி பரவசப்பட வைத்தது என்பதை சந்திரசேகர் கூறுகிறார்:-

“சென்னை வந்த அண்ணன் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து விட்டார். எனக்கு எஸ்.எஸ்.எல்.சி. (அப்போதைய 11-ம் வகுப்பு) முடிந்ததும் சென்னை வந்து நடிப்புக் கல்லூரியில் சேர ஆசை. அண்ணன் ஏற்கனவே சென்னை வந்துவிட்டதால், எனக்கும் வீட்டில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அப்பாவிடம் என் ஆசையை சொன்னபோது, “முதலில் டிகிரி (பட்டப்படிப்பு) முடி! அப்புறம் பார்த்துக்கலாம். ஒரு டிகிரி இருந்தால் நிச்சயம் உனக்கு சோறு போடும்” என்றார் அப்பா.

அப்பா சொன்னதை தட்ட முடியவில்லை. அதனால் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் சேர விண்ணப்ப படிவம் வாங்கப்போனேன். அதற்கும் பெரிய கூட்டம். வரிசையில் நின்றேன். கடைசியாக எனக்கு முன்நின்று கொண்டிருந்த 2 பேர் பணம் கட்டிவிட்டால் அடுத்து நான்தான் கட்ட வேண்டும்.

அப்போது மறுபடியும் என் மனத்திரை சினிமா பக்கமாக ஓடியது. கல்லூரியில் சேர்ந்து விட்டால் 3 ஆண்டுகளுக்கு சினிமாவை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எனவே “படிப்பா, நடிப்பா?” என எனக்குள் கேட்டுக்கொண்டு தடுமாறி நின்ற நேரத்தில் எனக்கு முன்னதாக நின்றவரும் பணத்தை கட்டிவிட்டார். அடுத்து நான். இப்போது என் சினிமா ஆசை வென்றது. எனக்குப்பின் நின்றவருக்கு வழிவிட்டுவிட்டு, வரிசையை விட்டு வெளியே வந்தேன். விண்ணப்ப படிவத்தை கிழித்துப் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். பீஸ் கட்ட அப்பா கொடுத்த பணத்தை திரும்பக் கொடுத்தேன். கொடுக்கும்போதே அழுகை வந்துவிட்டது.

“ஏண்டா என்னாச்சு?” அப்பா கேட்டார்.

நான் அப்பாவிடம், “கல்லூரியில் சேர்ந்து 3 வருஷம் படித்த பிறகும் சினிமாவுக்குத்தான் போகப்போகிறேன். இப்போதே முயற்சி செய்தால் இந்த மூன்று வருஷம் மிச்சமாகுமே” என்றேன். அப்பா என்னையே கூர்ந்து பார்த்தார். முகத்தில் கோபம் இல்லை. “சினிமாவுக்குள் இத்தனை தீவிரமா?” என்கிற மாதிரி பார்வை இருந்தது. “சரிப்பா! இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய்! முயற்சி செய்து பார்” என்றார். இது போதாதா? அடுத்த வாரமே சென்னைக்கு புறப்பட்டேன்.

கே.பாலசந்தர்

ஏற்கனவே சினிமா பத்திரிகையில் டைரக்டர்களின் முகவரியை பார்த்து குறித்து வைத்திருந்தேன். சென்னையில் நான் நடிக்க வாய்ப்பு கேட்க முடிவு செய்திருந்த முதல் இயக்குனர் கே.பாலசந்தர். சென்னை வாரன் ரோட்டில் இருந்த அலுவலகத்தில் கே.பாலசந்தர் சாரை போய் பார்த்தேன். அரை டிராயருடன் 11-வது வகுப்பு முடித்த பையனுக்கு எப்படி ஹீரோ வாய்ப்பு கொடுக்க மனம் வரும்? என் நடிப்பு ஆர்வத்தை தெரிந்து கொண்டவர், “படிச்சிட்டு தானே இருக்கே! முதல்ல நல்லா படி. படிப்பை முடிச்சிட்டு வந்து என்னைப்பார்” என்றார்.

நான் சோர்ந்து போனேன். என்றாலும் அடுத்து டைரக்டர் பட்டு, கதாசிரியர் – வசனகர்த்தா பாலமுருகன் ஆகியோரை சந்தித்தேன். அவர்களும் அதே மாதிரி சொல்லிவிட்டார்கள்.

டைரக்டர்களை இனி பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அடுத்து என் மனக்கண் முன் தோன்றியவர் கலைஞர். பொதுக்கூட்டங்களில் அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். “பராசக்தி” வசனம் எனக்கு தலைகீழ் பாடம். கலைஞரை சந்தித்து, வசனம் பேசிக் காட்டுவோம். அவர் சொன்னால் டைரக்டர்கள் கேட்கத்தானே செய்வார்கள்” என்று என் மனசு கணக்குப்போட, கோபாலபுரம் போனேன்.

கலைஞர் வீட்டு முன் நான் அங்கும் இங்கும் நடைபோட்டுக் கொண்டிருப்பதை பார்த்த ஒருவர் என்னிடம் வந்தார். “யாருப்பா நீ?” என்று கேட்டார். நான் விவரத்தை சொல்லி, “கலைஞர் மட்டும் நான் வசனம் பேசுவதை கேட்டால் நிச்சயம் என்னை நடிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்வார். அவரை பார்த்துப் போகவே வந்தேன்” என்றேன்.

நான் சொன்னதை கேட்ட அந்த மனிதரோ, “நடிக்க வந்திருக்கிற ஆளைப் பாரேன்! படிக்கிற வயசில என்னடா இதெல்லாம்?” என்று முதுகில் ஒரு போடு போட்டார் (செல்லமாகத்தான்). இப்போதும் கலைஞரிடம் உதவியாளராக இருக்கும் செயல்மணிதான் அன்று என்னை படிக்கச் சொல்லி துரத்தி விட்டவர்!

சினிமா பத்திரிகை

யார் யாரையோ பார்த்தும் எதுவும் நடக்காத நிலையில், சினிமா பத்திரிகையில் பணிபுரிய வாய்ப்பு வந்தது. அப்போது “திரைவானம்” என்ற சினிமா பத்திரிகையை நரசிம்மன் என்பவர் நடத்தி வந்தார். அப்போது புகழேணியின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவர் பெயரிலும் தனித்தனி சினிமா பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. `திரைவானம்’ பொதுவாக எல்லா சினிமா நடிகர்கள் பற்றிய செய்திகளையும் தருவதாக அமைந்திருந்தது.

சினிமா பத்திரிகை என்பதால் ஸ்டூடியோவுக்கு போய் நடிகர் – நடிகைகளை சந்தித்து பேட்டி எடுக்கும் வாய்ப்பு அமையும்; அதன் மூலம் நாமும் நடிகராகி விடலாம் என்று எண்ணினேன். சினிமா பத்திரிகை நிருபரை பத்திரிகையாளராக பார்த்தார்களே தவிர, `நாளைய நடிகர்’ என்ற கண்ணோட்டத்தில் யாரும் பார்க்கவில்லை!

லாரி கம்பெனி

இதற்கிடையே சென்னை யானைக்கவுனியில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் மானேஜராக சேர்ந்தேன்.

வரும் லாரிகளுக்கு தேவையான சரக்கை ஏற்றி `டிரிப்ஷிட்’ போட்டு அனுப்புவது என் வேலை. ஆனால் எப்போதும் சினிமா நினைவிலேயே இருந்ததால், வேலையில் கோட்டை விட்டேன்.

லாரி புக்கிங் கம்பெனி உரிமையாளருக்கு வியாபாரிகள் போன் செய்தார்கள். “என்ன அண்ணாச்சி! துவரம் பருப்பு லோடு கேட்டால் அரிசி மூட்டைகள் வந்திருக்கு!” என்றும், “புளி, மிளகாய் லோடுதானே கேட்டேன். துவரம் பருப்பு, பனைவெல்லம் வந்திருக்கு” என்று புகாருக்கு மேல் புகார்!

முதலாளி என்னை அழைத்தார். “முப்பது வருஷத்துக்கு மேல் பிசினசில் கொடிகட்டிப் பறந்த என் செல்வாக்கை ஒரே வாரத்தில் ஆட்டம் காண வைத்த புண்ணியவானே! போயிட்டு வா!” என்று கூறி, என் சீட்டைக் கிழித்து அனுப்பி வைத்தார்.

அப்போது, என் உறவினர் பெரிய கருப்பத்தேவர் நாடக கம்பெனியில் நடிகராக இருந்தார். நாடகத்தில் இருந்துதான் எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், மனோரமா போன்றோர் சினிமாவுக்கு போனதாக சொன்னார். நாடகத்தில் நடித்தால், சினிமா வாய்ப்பு எளிதில் கிடைக்கும் என்றும் சொன்னார்.

இது போதாதா! அப்போது பிரபலமாக இருந்த தேவி நாடக சபாவிலும், பிறகு வைரம் நாடக சபாவிலும் சேர்ந்தேன்.

1974-ல் தொடங்கி 1976 வரை நான் நடிப்பில் பட்டை தீட்டப்பட்டது இந்த சபாக்களில்தான். ராஜாதேசிங்கு நாடகம் நடந்தபோது, அதில் ஒரு போர் வீரனாக வேடம் கிடைத்தது. நாடகத்தின் அத்தனை கேரக்டர்களின் வசனங்களையும் மனதில் பதித்துக் கொண்டேன். இரண்டே வருடத்தில் நானே ராஜாதேசிங்கு கேரக்டரில் நடிக்கும் அளவுக்கு நடிப்பில் வளர்ந்தேன்.

திரைப்பட வரலாறு 804
நடிகர் சந்திரசேகர்
நாடகங்களில் நடித்த அனுபவம்

சினிமாவில் நடிக்க விரும்பிய சந்திரசேகருக்கு, முதலில் நாடகங்களில் வாய்ப்பு கிடைத்தது.

4 வருடங்களில் படிப்படியாக முன்னேறி நாடக கதாநாயகனாக உயர்ந்தார்.

நாடகத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து சந்திரசேகர் கூறியதாவது:-

“முதலில், சாதாரணமாக தலைகாட்டி விட்டுப் போகும் வேடங்கள்தான் கிடைத்தன. அதுவே போதும் என்றிராமல், நாடகத்தின் ஒட்டுமொத்த கேரக்டர்கள் பற்றியும், அந்த கேரக்டர்களுக்கான வசனங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். ஏற்ற இறக்கங்களோடு பேசிப் பார்த்தேன்.

கதாநாயகன்

ஒரு நாடகத்தில் யாராவது ஒருவர் வராமல் இருந்தால் அவருக்குப் பதிலாக நான் நடிக்கும் அளவுக்கு தேர்ந்திருந்தேன். அதனால்தான் சின்ன வேடத்தில் தோன்றிய அதே நாடகத்தில், கதாநாயகன் வேடம் வரை வர முடிந்தது.

நடிப்பு என்பது எனக்குள் வெறியாகவே மாறிப்போனதால், ஊர் ஊராக நாடகம் போடப்போகிற இடத்தில்கூட, ரசிகர்கள் கிடைத்தார்கள். சீர்காழியை அடுத்த கோவில்பத்து என்ற ஊரில் எங்கள் நாடகக் குழு கேம்ப் போட்டிருந்தபோது வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. அதாவது பகல் முழுக்க காய்ச்சலாக இருக்கும். மாலை 6 மணி ஆனதும், காய்ச்சல் விட்டுவிடும்!

பகலில் காய்ச்சல் காரணமாக சாப்பிட முடியாத நிலை. இரவில் நாடகத்தில் நடித்தாக வேண்டும். `பசி’யையும், காய்ச்சலையும் மறந்து ஏற்ற கேரக்டரோடு ஒன்றி விடுவேன். ரசிகர்களின் கரகோஷம்தான் எனக்கு சாப்பாடு!

ஒரு மாதம் இப்படி நீடித்த அந்த மர்மக் காய்ச்சலில், உடம்பு பாதியாகிவிட்டது.

சுய மரியாதை

எனக்கு எப்போதுமே சுய மரியாதை உணர்வு அதிகம். நாடக கம்பெனி முதலாளி கொஞ்சம் முரட்டுக் குணம் கொண்டவர். அவரை பார்த்தாலே நாடகக் குழுவில் உள்ள அத்தனை பேரும் பயப்படுவார்கள். நான் மட்டும் இதில் விதிவிலக்கு. முதலாளி என்ற மரியாதை உண்டு என்றாலும், `தேவையில்லாமல் ஏன் பயப்பட வேண்டும்’ என்று நினைப்பேன்.

“டீ வாங்கி வா!”

இந்த என் சுய மரியாதைக்கும் ஒரு நாள் சோதனை வந்தது. ஒருநாள் மேக்கப் ரூமில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த முதலாளி என்னை அழைத்தார். “டீ வாங்கிட்டு வாப்பா” என்றார்.

வழக்கமாக வரும் டீக்கடை பையன் அன்று வரவில்லை என்பதால்தான் என்னிடம் `டீ’ வாங்கி வரச்சொன்னார். என்றாலும் அவர் கேட்ட தோரணை என் தன்மானத்தை உசுப்பி விட்டது. உடனே நான் அவரிடம், “உங்களுக்கு டீ வாங்கிட்டு வர்றது என் வேலையில்லை. நடிக்கிறதுதான் என் வேலை” என்று சொல்லிவிட்டேன்.

நான் இப்படிச் சொன்னதும் மேக்கப் ரூமில் இருந்த நடிகர்கள் முகத்தில் ஒருவித பதட்டம் தெரிந்தது. அடுத்து முதலாளியின் `ரியாக்ஷன்’ என்ன மாதிரி இருக்குமோ என்பதில் ஏற்பட்ட பயம் அது.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? முதலாளி என் பதிலை சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டார். நான் `டீ’ விஷயமாக அவரிடம் பேசியதை காட்டிக் கொள்ளாமல், வேறு சப்ஜெக்ட் பற்றி பேசத் தொடங்கி விட்டார்.

நாடக அறிவிப்பு

நாடகத்தில் நடித்த காலக்கட்டத்தில் என் குரல் சன்னமாக இருக்கும். குரல் கம்பீரமாக இருக்க, தொடர்ந்து பேசி பயிற்சி பெற விரும்பினேன்.

எங்கள் நாடகம் நடக்கும் இடத்தைச் சுற்றி 50 கிராமங்களுக்கு மேல் இருக்கும். காலை நேரத்தில் இந்த கிராமங்களுக்கு வண்டி கட்டி மைக்கில் நாடகம் பற்றி அறிவிப்பார்கள். இப்படி மைக்கில் அறிவிக்கும் பொறுப்பை, நானாகக் கேட்டு பெற்றுக்கொண்டேன்! காலை 10 மணிக்கு இப்படி அன்பார்ந்த பெரியோர்களே! என்று ஆரம்பித்தால், அது முடிய மாலை 6 மணி ஆகிவிடும்.

அதன் பிறகு 61/2 மணிக்கு தொடங்கும் நாடகத்தில் நடிக்கத் தயாராக வேண்டும். இப்படி பகல் முழுக்க `மைக்’கில் கத்திப் பேசிவிட்டு, நாடகத்திலும் உணர்ச்சி மயமான காட்சிகளில் நடிக்கும்போது வாயில் இருந்து ரத்தம் கசியும். ஆனாலும் இப்படியான கடினப் பயிற்சிதான், என் குரலை வளமாக்கியது.

அப்பாவின் ஆசி

மழை சீசனில் நாடகம் நடத்த முடியாது. அதனால் ஊருக்குப்போய் விடுவேன். அப்பாவிடம் என் நாடக அனுபவங்களை சொல்லுவேன். ராஜாதேசிங்கு நாடகத்தில் தேசிங்காக நடித்ததை அப்பாவிடம் சொன்னபோது “தேசிங்காக நடித்துக்காட்டு” என்றார் அப்பா. உடனே வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் தேசிங்குராஜனாகவே மாறி அப்பாவிடம் நடித்துக்காட்டினேன்.

கண் கலங்கிப்போன அப்பா என்னிடம், “நடிக்கணும்னு ஆசைப்பட்டே! அதில் திறமை இருந்தாதான் வரமுடியும். இப்போது உன் திறமையில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நிச்சயம் நீ சினிமாவிலும் ஜெயிப்பாய். நீ சிங்கக் குட்டியடா!” என்று சொன்னபடி என் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

ஆனால், என் சினிமாக் கனவு பலிக்கும் முன்பே அப்பா இறந்து போனார்.

வீட்டில் நான்தான் கடைசிப் பையன். அப்பா இறந்ததற்கு மொட்டை போட்டு, 16-ம் நாள் காரியம் முடியும் வரை வீட்டில் இருந்தேன். அதன் பிறகு திருவெண்காட்டில் நடந்த எங்கள் நாடகத்துக்குப் போனேன்.

எதிர்பாராதது

அந்த நாடகத்தில் எனக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். ஒரு காட்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வேகத்தில் தொப்பியைக் கழற்றிவிட்டேன். என் மொட்டைத் தலையைப் பார்த்து, ரசிகர்கள் சிரித்து விட்டார்கள். உடனே நான் நடிப்பதை நிறுத்திவிட்டு, ஒலிபெருக்கியில் ரசிகர்களிடம் பேசினேன். “பலதரப்பட்ட வேடங்களில் என் நடிப்பை பார்த்திருப்பீர்கள். இந்த போலீஸ் கேரக்டரில் என் நடிப்பைத்தாண்டி நீங்கள் சிரிக்கிற காரணம், என் அப்பாவின் மரணத்துக்காக நான் போட்ட மொட்டை. இது தந்தையின் இழப்புக்காக ஒரு மகனின் கடமை. அந்தக் கடமையை முடித்து விட்டுத்தான் உங்கள் முன்பாக மேடையேறியிருக்கிறேன். இதற்குப் பிறகும் என் மொட்டைத் தலைக்காக நீங்கள் சிரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என்றேன்.

நான் பேசி முடித்ததும் ரசிகர்கள் மத்தியில் ஒரு அசாதாரண அமைதி நிலவியது. சிலருடைய கண்கள் கலங்கியிருந்தன. என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு நடித்து முடித்தேன்.

லாரியில் பயணம்

எனக்கு அப்போது 20 வயதுதான். அந்த ஊரில் இருந்துதான் சினிமாவில் நடிக்க சென்னைக்கு புறப்பட்டேன். திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு மல்லிகைப்பூ ஏற்றி வந்த லாரியில், மல்லிகை வாசனையை முகர்ந்து கொண்டே சென்னை வந்து சேர்ந்தேன்.

அது 1975-ம் வருஷம். அப்போதுதான் டெலிவிஷன் மக்களிடையே அறிமுகமாகியிருந்தது. நான் மைலாப்பூர் மாங்கொல்லையில் உள்ள, ஒரு லாட்ஜில் மாதம் 150 ரூபாய் வாடகையில் தங்கியபடி சினிமா வாய்ப்புக்கு முயன்றேன்.

டெலிவிஷன் சீரியல்

அப்போது சென்னை டெலிவிஷனில் பணியாற்றிய கவிஞர் தஞ்சை வாணனின் நட்பு கிடைத்தது. அவரது நாடகங்கள் டெலிவிஷனுக்காக சீரியலாக உருவானபோது, எனக்கும் வாய்ப்பு கொடுத்தார். மாதம் ஒரு டெலிவிஷன் நாடகம் கிடைத்தது. நாடகத்தில் நடிக்க எனக்கு கிடைத்தது 75 ரூபாய்.

நான் நடித்த முதல் நாடகம் ஒளிபரப்பான நாளில் அதை டிவியில் எப்படியாவது பார்த்துவிட ஆசை. நான் இருந்த லாட்ஜ் ரூமில் டெலிவிஷன் கிடையாது. எனவே அப்போது எனக்கு அறிமுகமாகியிருந்த ஆர்ட் டைரக்டரின் வடபழனி வீட்டுக்கு நானும் அவரும் மைலாப்பூரில் இருந்து பஸ்சில் புறப்பட்டோம்.

பஸ் வடபழனி வந்து சேரவும், நாடகம் ஒளிபரப்பாகும் நேரம் வரவும் சரியாக இருந்தது. அங்கிருந்து ஓட்டமாய் ஓடி, நான் வாசலில் கால் வைத்தபோது தெரிந்தது என் முகம்தான். அப்போதுதான் நான் நடித்த காட்சி டிவி திரையில் ஓடிக்கொண்டிருந்தது. என் முகத்தை நானே திரையில் பார்த்தது அதுதான் முதல் தடவை என்பதால், அந்த நேரத்தில் ஏற்பட்ட என் பரவச உணர்வை என்னால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை. அப்போதே சினிமாவில் நடித்து ஜெயித்து விட்ட மாதிரி அப்படி ஒரு சந்தோஷம்.

நழுவிய வாய்ப்பு

இப்படி டிவி நாடகங்கள் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் தஞ்சை வாணனிடம் இருந்து நாடகத் துறை இன்னொருவர் கைக்கு மாறிவிட்டது. அவருக்கு ஏனோ என்னை பிடிக்காமல் போயிருக்கிறது. அடுத்த நாடகத்தில் நடிப்பதற்காக அவரை சந்தித்தபோது, “கேரக்டர் இருக்கிறது” என்றார். மற்ற நடிகர் – நடிகைகளுக்கு இன்னின்ன கேரக்டர் என்று சொன்னவர், என்னிடம் மட்டும் எதுவும் சொல்லவில்லை. கடைசியில் எனக்கு கிடைத்தது “இறந்து போன கணவனின் அசரீரி குரல்!”

அதாவது, நாடகத்தில் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும். நான் பேச வேண்டிய வசன பேப்பரை உதவி இயக்குனர் என்னிடம் நீட்டியபோது, எனக்கு வந்ததே கோபம். “இது டிவி நாடகம். ரேடியோ நாடகத்துக்குத்தான் குரல் தேவை” என்று சொன்னபடி, அந்த பேப்பரை வீசி எறிந்தேன்.

இந்த விஷயம் புது டிவி இயக்குனருக்கு போக, என்னை வரச்சொன்னார். போனேன். என்னைப் பார்த்ததும், “எல்லோருடைய முன்னிலையிலும் ஸ்கிரிப்ட் பேப்பரை தூக்கி வீசினாயாமே?” என்று கேட்டார். என்னை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரே இப்படியொரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார் என்பது புரிந்தது.

“நடிப்பாயா? மாட்டாயா?” என்று கேட்டார்.

“முடியாது” என்றேன்.

டிவி நாடகம் கை நழுவியது.

காலம் மாறியது

அன்று என்னை விரட்டி அடித்த அதே டிவி டைரக்டர்,
5 ஆண்டுகள் கழித்து என்னை கை குலுக்கி பாராட்டிய சம்பவமும் நடந்தது.

பாரதிராஜா இயக்கத்தில் நான் நடித்த “நிழல்கள்” படத்தின் பிரத்தியேக காட்சி மைலாப்பூரில் உள்ள “மேனா” தியேட்டரில் நடந்தது. படம் பார்த்த முக்கிய பிரமுகர்கள் டைரக்டர் பாரதிராஜாவுக்கு கைகொடுத்து வாழ்த்து சொல்கிறார்கள். அப்போது ஒரு கரம் என் பக்கம் நீளுகிறது. பார்த்தால் டிவி இயக்குனர். “வாழ்த்துக்கள்! பிரமாதமா நடிச்சிருக்கீங்க” என்று கை குலுக்கி வாழ்த்தினார்.

—————————————————————————————————————————————————————

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(805)
“புதிய வார்ப்புகள்”
பாரதிராஜா படத்தில் சந்திரசேகர் அறிமுகம்

நாடக நடிகராக இருந்த சந்திரசேகர், பாரதிராஜாவின் “புதிய வார்ப்புகள்” படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார்.

நாடக வாய்ப்பு, அதைத் தொடர்ந்து டிவி சீரியல் வாய்ப்பு என்று தொடர்ந்து கொண்டிருந்த சந்திரசேகரின் கலை வாழ்க்கையின் அடுத்த முயற்சி சினிமாவாக இருந்தது.

16 வயதினிலே

இந்த சமயத்தில்தான், பாரதிராஜா இயக்கிய முதல் படமான “16 வயதினிலே” திரைக்கு வந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, நம்மை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டிய டைரக்டர் பாரதிராஜாதான் என்ற முடிவுக்கு வந்தார், சந்திரசேகர்.

இதுபற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

“சினிமாவில் நடிக்கும் முயற்சியில் சில டைரக்டர்களை சந்தித்த வண்ணம் இருந்தேன். இந்த சமயத்தில் மிட்லண்ட் தியேட்டரில் “16 வயதினிலே” படம் ரிலீசாகியிருந்தது.

ரிலீசான அன்றே படம் பார்க்கப்போனேன். தியேட்டரில் அதிக கூட்டம் இல்லை. டைட்டில் பாடலாக “சோளம் விதைக்கையிலே” பாடலைக் கேட்டதுமே, “ஆஹா! நம்ம ஊர் மண் வாசனையுடன் கூடிய படமாக இருக்கும் போலிருக்கிறதே” என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

படம் முடியும்போது, `சீட்’ நுனிக்கே வந்துவிட்டேன். படம் முடிந்ததும் எனக்குள் எழுந்த கேள்வி: `இந்தப் படத்தின் டைரக்டர் பாரதிராஜா எங்கிருக்கிறார்?’

அப்போதே எனக்குத் தெரிந்த கலை நண்பர்களிடம் போனில் டைரக்டர் பாரதிராஜாவின் முகவரியை கேட்டு வாங்கினேன்.

பாரதிராஜா அப்போது தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்.

மறுநாள் காலையில் அந்த வீட்டின் கதவைத் தட்டினேன். கொஞ்ச நேரத்தில் தலை நிறைய முடியுடன் தூக்கக் கலக்கத்தில் ஒருவர் வந்தார். அவரிடம், “டைரக்டர் பாரதிராஜாங்கறது…” என்று இழுக்க, அவரோ, “நான்தான் பாரதிராஜா” என்றார்.

அப்போதுதான் முதன் முதலாக அவரைப் பார்க்கிறேன். இந்த இளைஞருக்குள்ளா அப்படியொரு கலைஞானம் என்ற வியப்பினால் பேச வார்த்தை வராமல், நின்று கொண்டிருந்தேன்.

அவரது ஊர் மதுரை பக்கம் என்பதை தெரிந்து கொண்டதும், நானும் மதுரை பக்கம்தான் என்றேன். “படம் எப்படி இருக்குது?” என்று என்னிடம் பாரதிராஜா கேட்டார். “நன்றாக இருக்கிறது. அதனால், நிச்சயமாக நன்றாக ஓடும். உங்களுக்குப் பெரிய அளவில் பெயர் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு, “நானும் நடிக்கத்தான் ஊரில் இருந்து வந்தேன். நான் நடிக்கிற முதல் படம் நீங்க டைரக்ட் செய்ற படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றேன். “வாய்ப்பு தருகிறேன். எனக்கு வருகிற வாய்ப்புகளை பொறுத்து இது அமையும்” என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

தினசரி தரிசனம்

அதன் பிறகு தினமும் அவரைப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், ஒரு வணக்கத்தையாவது போட்டுவிட்டுப் போய்விடுவேன்.

இதற்குள் “16 வயதினிலே” படம், மிகப்பெரிய வெற்றிப்படமானது. எங்கு பார்த்தாலும், பாரதிராஜா பேசப்பட்டார். பட உலகம் வியந்து பார்க்கிற ஒரு மாமனிதராகி விட்டார்.

அடுத்தபடி “கிழக்கே போகும் ரெயில்” படத்தை இயக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. விடுவேனா? மறுநாள் காலையில் அவர் வீட்டு முன் போய் நின்றேன்.

என்னைப் பார்த்த பாரதிராஜா, “இந்தப் படத்தில் இரண்டு மூன்று கேரக்டர்தான் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தவை. அதனால் உனக்கு கேரக்டர் தர்றதுக்கு வாய்ப்பு இல்லே. நீ என்னிடம் அசிஸ்டெண்ட்டா சேர்ந்துக்க. நடிக்கிற வாய்ப்பு தானாய் அமையும்” என்றார். எனக்கு நடிப்பின் மீது மட்டுமே நோக்கமாக இருந்ததால், `உதவி இயக்குனர்’ வாய்ப்பை தவிர்த்து விட்டேன். “சரி.தினமும் என்னை வந்து பார்த்துப்போ” என்றார் பாரதிராஜா.

“கிழக்கே போகும் ரெயில்” படமும், பாரதிராஜாவின் வித்தியாசமான கைவண்ணத்தில் மகத்தான வெற்றி பெற்றது.

பாரதிராஜா இப்போது மேலும் பிஸியாகி விட்டார். அடுத்து “சிவப்பு ரோஜாக்கள்” படத்தை இயக்கி அதுவும் வெற்றி. இப்போது மனோபாலா என்ற புதியவர் அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்திருந்தார். ஏற்கனவே மனோபாலா எனக்கு நண்பர். நாகேஸ்வரராவ் பார்க்கில் என்னை உட்கார வைத்து போட்டோவெல்லாம் எடுத்திருக்கிறார். நடிகனாக வேண்டும் என்ற என் ஆர்வத்துக்கு பக்கபலமாகவும் இருந்திருக்கிறார்.

இப்போது மனோபாலா, டைரக்டர் பாரதிராஜாவிடம் சேர்ந்து விட்டதால் நான் நடிகனாகும் வாய்ப்பு நெருங்கி விட்டதாகவே உணர்ந்தேன்.

கொட்டும் மழையில்…

“சிவப்பு ரோஜாக்கள்” படத்தை அடுத்து, புதிய படத்தின் கதை மற்றும் `ஷெட்ïல்’ முடிவு செய்யப்பட்டு நடிகர்- நடிகைகளும் முடிவாயினர். நடிகர்கள் பட்டியலில் என் பெயர் இல்லை என்பதை மனோபாலா மூலம் தெரிந்து கொண்டதும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.

அன்றிரவு 9 மணிக்கு மழை கொட்டிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்தபடி பாரதிராஜாவின் வீட்டை நோக்கி நடந்தேன். நான் நனைந்து வருவதை தூரத்தில் இருந்தே கவனித்து விட்டார், பாரதிராஜா. என்னைப் பார்த்ததும், “என்னய்யா! மழையில் நனைந்து வர்ற அளவுக்கு என்ன விசேஷம்?” என்று கேட்டார்.

நான்தான் ஏகப்பட்ட கடுப்பில் இருக்கிறேனே. அந்த கடுப்பை வேறுவிதமாக அவரிடம் வெளிப்படுத்த எண்ணினேன். “ஒரு மகிழ்ச்சியான செய்தி. எனக்கு படம் `புக்’ ஆகியிருக்கிறது” என்றேன்.

“ரொம்ப சந்தோஷம்யா! யாருடைய படம்?” என்று கேட்டார், பாரதிராஜா.

“உங்க படம்தான்!” என்றேன்.

“யோவ்! என்னய்யா சொல்றே?” என்று திகைப்புடன் கேட்டார், பாரதிராஜா.

“பாலா (மனோபாலா) வந்து ஆர்ட்டிஸ்ட் லிஸ்ட்ல என் பேர் இல்லைங்கிறார். நான் உங்க கூட அவுட்டோர் வரப்போறேன். படத்தில் எனக்கு சின்ன ரோலாவது நீங்க கொடுத்தே தீரணும்” என்றேன்.

கொஞ்சம் யோசித்தவர் என் முகத்தை பார்த்தார். பிறகு, “சரி வாய்யா!” என்றார்.

இப்போது எனக்குள் இருந்த பல நாள் சந்தேகத்தை அவரிடம் கேட்டேவிட்டேன். “என் மூஞ்சி அழகாக இல்லேன்னுதான் எனக்கு நடிக்க சான்ஸ் தராம இருந்தீங்களா?” என்று கேட்டேன்.

பாரதிராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. “உன் நடிப்பை ஜனங்க ஏத்துக்கிட்டாங்கன்னா அப்புறம் மூஞ்சி என்னடா மூஞ்சி?” என்றார்.

அப்போதே அவர் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

அந்தப் படத்துக்கு `புதிய வார்ப்புகள்’ என்று பெயர் சூட்டிய பாரதிராஜா, தனது உதவியாளர் பாக்யராஜையே படத்தின் கதாநாயகனாக்கினார்.

தேனியில்தான் படப்பிடிப்பு. படப்பிடிப்பு தொடங்கி 20 நாட்கள் வரை நான் சும்மாவே இருந்தேன். படப்பிடிப்பில் சின்னச்சின்ன வேலைகள் செய்தபடி எனக்கான வாய்ப்பை எதிர் நோக்கியிருந்தேன்.

21-வது நாளில் என்னை அழைத்தார் பாரதிராஜா. “யோவ்! நீ நடிக்கிறே! நாளைக்கு காலைல மேக்கப்போட்டு ரெடியா இரு” என்றார். மறுநாள் காலை 5 மணிக்கே மேக்கப் போட்டு நான் ரெடி. `அல்லி நகரம்’ ராஜேந்திரன்தான் மேக்கப் மேன். அவர் என்னிடம், “பாரதிராஜாவுக்கு சொந்தமா?” என்று கேட்டார்.

“ஆமாம்ணே” என்றேன்.

“ஊரில் இருந்து ஒரு ஆள் சினிமாவுக்கு வந்துடக்கூடாதே! உடனே நடிக்கணும்னு எல்லோரும் புறப்பட்டு வந்துருவீங்களே! வர்றதுதான் வரீங்க! வரும்போது கண்ணாடியில் முகத்தைப் பார்த்துட்டு வந்திருக்கலாமில்லே!” என்றார்.

கல்யாண மாப்பிள்ளை

நான் அதை கண்டுகொள்ளவில்லை. நடிக்கத் தயாரானேன். கதைப்படி படத்தின் கதாநாயகி ரதியை நான் பொண்ணு பார்க்கப்போகிற காட்சி. நான் மாப்பிள்ளைக் கோலத்தில், கொஞ்சம் காலை சாய்த்து நடந்தபடி பெண் வீட்டுக்குப் போகவேண்டும். நான் போகிற வரப்பு வழியில் கொஞ்சம் மாட்டுச் சாணத்தைப் போடச் சொன்னார், பாரதிராஜா. நான் அதில் மிதித்து விட்டு பெண்ணின் தந்தையை பார்த்து, “மாமா! நடந்து வர்றப்ப சாணியை மிதிச்சிட்டேன்” என்று சொல்ல வேண்டும்.

டைரக்டர் சொன்னபடி செய்தேன். முதல் `ஷாட்’டிலேயே காட்சி ஓ.கே.யானது. மகிழ்ச்சியுடன் என்னை அழைத்த டைரக்டர், “நீ நடந்து வரும்போது எதுக்காக சாணியில் மிதிச்சிட்டு வரச்சொன்னேன் தெரியுமா? சாணி என்பது மங்களகரமானது. முதன் முதலா நடிக்க வர்றே. நிறைய படங்களில் நடிச்சு பெயர் வாங்கணும். புகழ் கிடைக்கணும். அப்படி உன் நடிப்பு வாழ்க்கை அமையணும்னுதான் சாணியில் மிதிச்சிட்டு வர்ற மாதிரி முதல் காட்சியை எடுத்தேன்” என்றார்.

என் மேல் எத்தனை அன்பு, எத்தனை அக்கறை! அவரது அந்த அன்பில் நெகிழ்ந்து போனேன்.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
————————————————————————————————————————————————-

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(806)
“பாலைவனச்சோலை”க்குப்பின் சந்திரசேகர் ஹீரோ ஆனார்
தொடர்ந்து வெற்றிப்படங்கள்

பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட சந்திரசேகர், “பாலைவனச்சோலை”யில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். அதைத்தொடர்ந்து, பல வெற்றிப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.

கதாநாயகன் அந்தஸ்தை எட்டிய அந்தக் காலக்கட்டம் பற்றி, சந்திரசேகர் கூறியதாவது:-

நிழல்கள்

“புதிய வார்ப்புகள்” படத்தில் பெரிய கேரக்டர் இல்லை என்றாலும், ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள்.

பாரதிராஜா தனது அடுத்த படமான “நிழல்கள்” படத்தில், முன்னேறத் துடிக்கும் இசையமைப்பாளன் கேரக்டரை தந்தார். திறமை இருந்தும் முன்னேற முடியாமல் முட்டுக்கட்டைகளை மட்டுமே சந்திக்கும் இளம் இசையமைப்பாளனின் வாழ்க்கைப் போராட்டம் என் நடிப்புக்கு புதுசு. என்னை அந்த கேரக்டரில் பார்த்த டைரக்டர் பாரதிராஜா, “சேகர்! உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று மட்டும் சொன்னார். டைரக்டர் இப்படிச் சொன்ன பிறகு, அந்தக் கேரக்டர் என்னுடன் ஒன்றிப்போய் விட்டது. இரவும் பகலும் அந்த கேரக்டர் பற்றிய சிந்தனையிலேயே இருந்தேன்.

இந்த இசையமைப்பாளன் ஜெயித்தால், வசதியான வாழ்க்கைக்கு வருவான் என்பதைக் காட்ட ஒரு பாடல் காட்சி வைத்திருந்தார், பாரதிராஜா. “மடை திறந்து தாவும் நதியலை” என்ற அந்த பாடலினூடே, “நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்! இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்” என்ற வரிகள் வரும். இந்த வரிக்காக காரின் பின்சீட்டில் கோட்-சூட் போட்டு பணக்கார தோரணையுடன் `555′ சிகரெட்டை நான் ஸ்டைலாக புகைத்துக்கொண்டு போவதாக ஒரு காட்சி எடுத்தார். இந்தக் காட்சியின்போது நான் இருந்த காரை பாரதிராஜாவே ஓட்டினார்.

இந்தக் காட்சி முடிந்ததும் டைரக்டர் பாரதிராஜா என்னிடம், “நடிக்கணும்னு சான்ஸ் கேட்டு என்கிட்ட வந்தே. நானும் கொடுத்தேன். இன்றைக்கு கோடீஸ்வர தோற்றத்தில் உன்னை கார்ல உட்கார வெச்சு நான் கார் ஓட்டறேன். சினிமா ஏற்படுத்திய மாற்றம் பார்த்தாயா?” என்று கேட்டு சிரித்தார்.

“நிழல்கள்” படம் இளம் கலைஞர்களின் கனவை கனவாகவே வைத்து விட்டதால், படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்றார்கள். என்றாலும் ஒரு நல்ல இயக்குனரின் நல்ல படத்தில் நடித்த திருப்தி எனக்கு.

ராம.நாராயணன்

பாரதிராஜாவின் “கல்லுக்குள் ஈரம்” படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான், டைரக்டர் ராம.நாராயணன் என்னை சந்தித்தார். “முழுக்க முழுக்க உங்க மேலேயே போகும் கதை” என்று சொல்லிவிட்டு, அப்போதே படத்தின் கதையையும் கூறினார். படத்துக்கு “சுமை” என்று பெயர் வைத்திருப்பதையும் சொன்னார். `ஒரு ஏழைக் குடும்பத்தின் மூத்த மகன், தம்பி, தங்கைக்காக தன் வாழ்க்கையை, உருகும் மெழுகுவர்த்தியாக்கிக் கொள்கிறான்’ என்ற பின்னணியில் அமைந்த அந்தக் கதையில் மூத்த மகனாக உணர்ந்து நடித்தேன். படம் பெரிய வெற்றி.

“சுமை” படத்தை சென்னை அமைந்தகரையில் உள்ள லட்சுமி தியேட்டரில் பார்க்கப் போயிருந்தேன். படத்தின் கடைசியில் நான் இறந்து போகும் காட்சியுடன் படம் முடியும். படம் முடிந்து வெளியே வந்ததும் படம் பார்க்க வந்திருந்த தாய்மார்கள் என்னை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டபடி, “நீ நல்லா இருக்கணும் ராசா!” என்றார்கள். அந்த அன்பில் நானும் உருகிப்போனேன்.

பாலைவனச்சோலை

இந்தப் படத்துக்குப் பிறகு, எனக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் “பாலைவனச்சோலை.” டைரக்டர்கள் ராபர்ட் – ராஜசேகர் இயக்கினார்கள்.

படத்தில் நான், ராஜீவ், தும்பு, ஜனகராஜ், தியாகு என 5 நாயகர்கள். டைரக்டர்களில் ராபர்ட் சீனியர். எங்க பெரியண்ணன் மாதிரி ஆலோசனை சொல்வார். ராஜசேகர் எங்க செட். நண்பர் மாதிரி பழகுவார். 24 மணி நேரமும் படம் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். எப்போதும் அவருடன் இருப்போம்.

இந்தப் படத்தை, கமலிடம் உதவியாளராக இருந்த ஆர்.வடிவேல் தயாரித்தார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்ததும், தயாரிப்பாளர் எங்களை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்வார். மணக்க மணக்க சாப்பாடு போடுவார். அடுத்து தலையணை பெட்ஷீட் வரும். ஓய்வு நிலையில் அடுத்த நாள் எடுக்க வேண்டிய காட்சி பற்றி டைரக்டர்கள் விளக்குவார்கள். யாருக்காவது மறுநாள் முக்கிய `சீன்’ என்றால், அதை ஸ்பெஷலாக விளக்கி, அந்தக் காட்சிக்கு ஏற்றபடி நடிகர்களை தயார்படுத்துவார்கள்.

படத்தில் 5 ஆண்களை சுற்றி புதிய கோணத்தில் அமைக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை ரசிகர்களை ரொம்பவும் கவர, “பாலைவனச்சோலை” 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

படத்தில் “மேகமே மேகமே”, “ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு”, “பவுர்ணமி நேரம் பாவை ஒருத்தி” போன்ற பாடல்களும் ஹிட் ஆயின.

சிவப்பு மல்லி

“சுமை” படத்தின்போதே டைரக்டர் ராம.நாராயணன் எனக்கு நண்பராகவும் ஆகிவிட்டார். பாலைவனச்சோலை படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு மாலைப்பொழுதில் என்னை அழைத்து “எர்ர மல்லு” என்ற தெலுங்குப்படத்தை போட்டுக் காண்பித்தார். 2 ஹீரோக்களின் பின்னணியில் அமைந்த கதை. “இந்தப் படத்தை தமிழில் ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கிறது. `சிவப்பு மல்லி’ என்று பெயர் வைத்திருக்கிறேன்” என்றார், ராம.நாராயணன்.

தெலுங்கில் சந்திரமோகன் நடித்த கேரக்டரில் என்னை ஒப்பந்தம் செய்தார். இன்னொரு கேரக்டருக்கு நடிகர் சிவகுமாரை `பிக்ஸ்’ பண்ணினார்.

சிவகுமாருக்கு முரட்டு கேரக்டர். படத்தின் விளம்பரம் தொடர்பாக இரண்டு பேரும் வருகிற மாதிரி சில ஸ்டில்கள் எடுக்க டைரக்டர் விரும்பினார். ஆனால் இரண்டு பேருமே பிஸியாக இருந்ததால் தனித்தனியாக `ஸ்டில்’ எடுத்தார்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கி வரும் கதாநாயகனை எதிரிகள் கத்தியால் குத்திவிட, ரத்தத்தால் மல்லிகைப்பூ சிவப்பு நிறமாகும் என்று `சிவப்பு மல்லி’க்கு விளக்கம் சொன்னார், டைரக்டர். அந்த சீனை சொன்னதும் சிவகுமார், “நான் அந்த கேரக்டரில் நடிக்கிறேனே” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ராம.நாராயணன் “உங்களுக்கான கேரக்டர் வேறு. அந்த கேரக்டர் வேறு. எனவே நீங்கள் முரட்டு கேரக்டரில் நடிப்பதே சரியாக இருக்கும்” என்று சொல்லிவிட, நட்பு ரீதியாகப் பேசி, படத்தில் இருந்து சிவகுமார் விலகிக்கொண்டார்.

மறுநாள் படத்தின் பூஜை. எதிர்பாராத விதமாக சிவகுமார் படத்தில் இருந்து விலகிக் கொள்கிறார். ராம.நாராயணன், ஒரு இரவுக்குள் ஒரு ஹீரோவை ஒப்பந்தம் செய்தாக வேண்டிய நிலையில் இருந்தார். இந்தக் கேரக்டருக்கு யார் சரியாக இருப்பார்கள் என்று யோசித்தவர், ராஜபாதர் தெருவில் உள்ள தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த விஜயகாந்தை எழுப்பி, அப்போதே ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து, ஸ்டில் எடுக்க ஏற்பாடு செய்தார். நானும் விஜயகாந்தும் அரிவாள் – சுத்தி சகிதம் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தோம்.

திட்டமிட்டபடி படம் எடுப்பதில் ராம.நாராயணன் திறமையானவர். 18 நாளில் “சிவப்பு மல்லி” படத்தின் வசனப்பகுதியை எடுத்து முடித்து விட்டார். படத்தில் நானும் விஜயகாந்தும் பாடுவதாக வரும் “எரிமலை எப்படி பொறுக்கும்? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?” என்ற பாடல் காட்சியை ஏவி.எம். காலனியில் எடுத்தார்கள். பாடலில் இருந்த நெருப்பு வரிகள் படத்துக்கு பக்கபலமாக அமைந்தது. படம் வெற்றி பெற்றது.

கதைப்படி, இந்தப் படத்தின் ஹீரோ நான்தான். எனவே விஜயகாந்தை விடவும் சம்பளமும் எனக்குத்தான் அதிகம்!

இந்தப்படம் வந்த பிறகு என் மíது கம்ïனிச முத்திரை விழுந்து விட்டது. `தொழிலாளர் தோழன்’ என்கிற மாதிரியான படத்தின் காட்சியமைப்புகள் ரசிகர்கள் என்னை “தோழரே” என்று அழைக்கும் அளவுக்குப் போயிற்று.

வெற்றிப்பயணம்

தொடர்ந்து படங்களின் எண்ணிக்கை அதிகரித்தன. “வீட்டுக்காரி”, “பட்டம் பறக்கட்டும்”, “இனிமை இதோ இதோ”, “அர்ச்சனை பூக்கள்”, “பூம்பூம் மாடு” என பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன். ஹீரோவா, கேரக்டர் ரோலா கதையின் முக்கியத்துவம் கருதி எந்த வேடத்தையும் ஏற்று நடித்தேன்.

இந்த காலகட்டத்தில் அடுத்தடுத்து ஐந்தாறு வருடங்களில் வருஷத்துக்கு 15 படம் நடித்த ஹீரோ நான்தான். அந்த வருஷங்களில் அதிக படங்களில் நடித்த ஹீரோவும் நான்தான்.

கலைஞர் அழைப்பு

ஒருநாள் கலைஞர் வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. கலைஞரின் செயலாளர் சண்முகநாதன் என்னிடம், “தலைவர் (கலைஞர்) உங்களை பார்க்க விரும்புகிறார்” என்று தெரிவித்தார்.

எனக்கு உடம்பு சிலிர்த்து விட்டது. எந்தத் தலைவரை ஊரில் சிறுவனாக இருந்த காலகட்டங்களில் பார்க்கத் துடித்தேனோ, எந்த தலைவர் பிரசாரத்துக்கு ஊர் வந்தால் அவர் பேச்சைக் கேட்டு மகிழ அவர் கார் போகிற இடமெல்லாம் மூச்சு விடாமல் ஓடித் துரத்தினேனோ அந்த தலைவர் என்னைப் பார்க்க விரும்புவதாக சொன்னால் எனக்கு எப்படி இருக்கும்?

மறுநாள் காலையில் ஒருவித பரவசத்துடன் கலைஞரின் வீட்டுக்குப் போனேன்.

——————————————————————————————————————————————————————

திரைப்பட வரலாறு 807
கலைஞர் மு.கருணாநிதி கதை-வசனம் எழுதிய
“தூக்கு மேடை”யில் சந்திரசேகர் 20 பக்க வசனத்தை ஒரே மூச்சில் பேசி நடித்தார்

கலைஞர் மு.கருணாநிதி கதை-வசனம் எழுதிய “தூக்குமேடை” படத்தில், சந்திரசேகர் நடித்தார். 20 பக்க வசனத்தை ஒரே “டேக்”கில் பேசி நடித்தார்.

கலைஞரை சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

பாராட்டு

“நான் தலைவரை (கலைஞர்) மிக அருகில் சந்தித்தது அப்போதுதான். பார்த்ததுமே என்னிடம் ரொம்ப நாள் பழகியவர் போல பேசத்தொடங்கி விட்டார். “சுமை”, “சிவப்பு மல்லி”, “பாலைவனச்சோலை” படங்களெல்லாம் பார்த்தேன். ரொம்ப அருமையாக நடிக்கிறாய்” என்று பாராட்டினார். இப்படிப் பாராட்டியதோடு நில்லாமல், “சிவாஜி, எஸ்.எஸ்.ஆருக்குப் பிறகு நல்ல தமிழை உன் மூலம் கேட்க முடிகிறது. நல்ல தமிழ் பேசும் நடிகராகத் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கிறாய்” என்று கூறினார். அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும், பரவசத்தையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

கொஞ்சம் இடைவெளியில், என் குடும்பம் பற்றியெல்லாம் அக்கறையுடன் விசாரித்தவர், என்னை அழைத்த நோக்கம் பற்றி பேசினார். “தூக்குமேடை நாடகத்தை திரைப்படமாக எடுக்கலாம் என்றிருக்கிறேன். நீ நடித்தால் அதை படமாக எடுக்கலாம்” என்றார்.

“நீங்கள் இப்படி கேட்டதற்கு பதிலாக, `நீ நடிக்க வேண்டும்’ என்று உத்தரவே போட்டிருக்கலாம். அதை என் பாக்கியமாக கருதி நடிப்பேன். நான் இப்படி உரிமையுடன் சொல்லக்காரணம், நானும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவன்” என்றேன்.

கலைஞர் என்னை ஆச்சரியமாக பார்த்தார். “உன் படங்களைப் பார்த்து நீ கம்ïனிஸ்டு என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். நம் ஆளா? மகிழ்ச்சி. மகிழ்ச்சி” என்றார்.

“தூக்கு மேடை” படத்தில் நான் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மறுநாளே பத்திரிகையாளர் சந்திப்பில் “தூக்கு மேடை” படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கும் தகவலை சொன்னார் கலைஞர்.

தூக்குமேடை நாடகமாக நடிக்கப்பட்டபோதே அதற்கு பக்கம் பக்கமாக வசனம் உண்டு என்பது எனக்குத் தெரியும். படத்திலும் அதே வசனங்கள்தானே.

படப்பிடிப்பு தொடங்கி, மோகன் ஸ்டூடியோவில் காட்சிகள் படமாகிக் கொண்டிருந்தன. ஒருநாள் நான் ஒரே டேக்கில் 20 பக்க வசனம் பேசும் காட்சியை எடுக்க இருந்தார்கள். இப்போது மாதிரி முதலில் நடித்து விட்டு பிறகு “டப்பிங்” பேசும் வசதியெல்லாம் அப்போது கிடையாது. நடிக்கும்போதே, வசனத்தை பேசியாக வேண்டும். நான் வசனம் பேசத் தயாராக இருந்தபோது, தலைவர் திடீரென்று வந்துவிட்டார். அவரைப் பார்த்ததும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அவரிடம், “தலைவரே! உங்கள் முன்னாடி பேசினால் தடுமாறி விடுவேன்” என்றேன்.

அவரும் புரிந்து கொண்டார். டைரக்டர் அமிர்தத்தை அழைத்து, “நல்லபடியா பண்ணுங்க” என்றவர், சில ஆலோசனைகளை கொடுத்து விட்டு செட்டில் இருந்து கிளம்பிப் போனார்.

எதிர்பாராதது

அடுத்த கணமே 20 பக்க வசனத்தையும் ஏற்ற இறக்கத்தோடு ஒரே டேக்கில் பேசி முடித்து விட்டேன். அந்த சந்தோஷத்தில் ஒரு காபி சாப்பிடலாம் என்று செட்டுக்கு வெளியே வந்தால், `ஹெட்போனை’ தலையில் மாட்டியபடி நான் பேசிய வசனத்தை தலைவர் கேட்டுக்கொண்டிருந்ததை கண்டு எனக்கு ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது. தனது படைப்புக்கு உயிர் கொடுக்கும் வசனம் எந்த மாதிரி வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பிய அவருடைய ஆர்வத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.

இந்தப்படம் வளரும்போது எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் கலைஞரின் படத்தில் நான் நடித்ததால், “சந்திரசேகருக்கு எதற்கு கட்சி முத்திரை?” என்ற சலசலப்பும் ஏற்பட்டது. “இந்தப் படத்தில் நடிக்கக்கூடாது” என்று போனில் சிலர் மிரட்டவும் செய்தனர். நான் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. “நான் தி.மு.க. காரன். என் தலைவர் அழைத்து நடிக்கச் சொன்னார்; நடிக்கிறேன். அதற்கு எந்த மாதிரியான எதிர்ப்பு வந்தாலும் சந்திக்க தயார்” என்று பதில் சொன்னேன்.

“முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரை ஒருமுறை சந்தித்துப் பேசுங்கள்” என்று அன்றைய அமைச்சர் ஒருவர் கூட போனில் என்னிடம் கூறினார்.

இப்படி நான் உறுதியாக நின்றதால் கலைஞருக்கு என் மீது ரொம்பவே பிரியமாகி விட்டது. தூக்குமேடை ரிலீசான பிறகு `தலைவர்’ என்பதையும் தாண்டி “அப்பா” என்று அழைக்கும் அளவுக்கு நானும் அந்த அன்பில் ஐக்கியமாகி விட்டேன்.

எம்.ஜி.ஆருடன் சந்திப்பு

இப்படி தலைவருடன் நெருக்கம் காட்டிய பிறகு, முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் விழாக்களை தவிர்த்தேன். விசு டைரக்ஷனில் பெரும் வெற்றியை எட்டிய ஏவி.எம்.மின் “சம்சாரம் அது மின்சாரம்” படத்தின் விழாவுக்கு கூட நான் போகாததற்கு இதுதான் காரணம்.

இருந்தாலும் ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு போயிருந்தபோது அவரிடம் மாட்டிக்கொண்டேன்! நான் டைரக்டர் ஆர்.சி.சக்தியுடன் மண்டபத்துக்குள் நுழைந்த நேரத்தில், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். காரில் வந்து இறங்கினார். மண்டப வாயிலில் அவருக்கு முன்னதாக போய்விட்ட நான், மேற்கொண்டு அவர் போவதற்காக ஒதுங்கி நிற்கும்படி ஆயிற்று. அப்போது என் அருகில் நடிகர் சாருஹாசன், டைரக்டர் ஆர்.சி.சக்தி, கதை-வசன கர்த்தா ஏ.எல்.நாராயணன் ஆகியோர் இருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். எங்களை தாண்டிச் சென்றபோது, முதலில் சாருஹாசன் அவருக்கு வணக்கம் செய்ய, பதிலுக்கு எம்.ஜி.ஆரும் வணங்கினார். அடுத்தவர் ஆர்.சி.சக்தி, அவரும் வணங்க, எம்.ஜி.ஆரும் வணங்கினார். மூன்றாவதாக என் முறை! இப்போது அவரைப் பார்த்து கைகுவித்தேன். 5 நொடிகள் என்னையே உற்று நோக்கியவரிடம் வேறு எந்தவித ரியாக்ஷனும் இல்லை. என் அருகில் நின்ற ஏ.எல்.நாராயணனை அழைத்துக்கொண்டு மண்டபத்துக்குள் போய்விட்டார்.

அரசியலில் `எதிரும் புதிரும்’ நிலை சகஜம். கலைஞரும், எம்.ஜி.ஆரும் கலைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். கலைத்துறையில் இருந்தபோது மிகச்சிறந்த நண்பர்களாகவும் இருந்தார்கள். அரசியலுக்கு வந்த பிறகும் நீடித்த நட்பு, ஒரு காலகட்டத்தில் பிரிவில் முடிந்தது. அந்த மாதிரியான காலகட்டத்தில், எதிர்க்கட்சி தலைவரின் விருப்பம் ஏற்று நான் அவரது லட்சியப்படைப்பான `தூக்குமேடை’ படத்தில் நடித்ததை முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரிடம் யாராவது முரண்பட்ட கண்ணோட்டத்தில் சொல்லியிருக்க கூடும். அதைத்தொடர்ந்து என்னை சந்திக்க விரும்பி விடப்பட்ட அழைப்பையும் தவிர்த்து விட்டதால், இயல்பாக என் மீது அவருக்கு கோபம் இருந்திருக்கலாம். அதனால்தான் அன்றைய திருமண மண்டபத்தில் என்னைப் பார்த்ததும் ஒன்றும் பேசாமல் போயிருக்கலாம். அரசியலில் இதெல்லாம் சகஜம்தான் என்று, எம்.ஜி.ஆரின் அன்றைய மவுனத்தை எடுத்துக்கொண்டேன்.

“தூக்குமேடை” படத்தில் நடித்த பிறகு, தேர்தல் கூட்டங்கள், மாநாடுகள் என்று தி.மு.க. மேடையில் பேசத்தொடங்கினேன். வாரம் ஒரு முறை தலைவரை சந்திப்பேன். கடந்த 25 வருஷமாய் என் ஒவ்வொரு பிறந்த நாளிலும் குடும்பத்துடன் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவதையும் வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன்.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

மணிவண்ணன்

டைரக்டர் கிருபாசங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த மணிவண்ணன் “கல்லுக்குள் ஈரம்” படத்தில் இருந்து பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். அவரிடம் தொடர்ந்து நாலைந்து படங்கள் பணியாற்றிய பிறகு “கோபுரங்கள் சாய்வதில்லை” படம் மூலம் இயக்குனரானார். அந்தப் படம் அவருக்குப் பெரிய பெயர் வாங்கித் தந்தது.

மணிவண்ணன் இயக்கிய “இங்கேயும் ஒரு கங்கை” படத்தில் சந்திரசேகருக்கு `பாகப்பிரிவினை’ சிவாஜி மாதிரி அற்புதமான வேடம். இந்தப்படம் சந்திரசேகரின் நடிப்பை புதிய கோணத்தில் வெளிப்படுத்தி ரசிகர்களை ரசிக்க வைத்தது. மணிவண்ணனுக்கும் தனக்குமான நட்பு பற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

கே.ஆர்.ஜி.

“நானும் மணிவண்ணனும் சென்னையில் சுற்றாத இடமே இல்லை. நடிப்பதற்கு நானும், இயக்குனராவதற்கு அவரும் முயன்ற அந்த காலக்கட்டத்தில் எங்களையும் ஒருவர் வாழ்த்தி பசியும் ஆற்றினார். அவர் பட அதிபர் கே.ஆர்.ஜி. எங்கள் சினிமா தாகத்தைப்பற்றி முழுக்க தெரிந்தவர் அவர். எப்போதாவது ரொம்பவே பண நெருக்கடி ஏற்பட்டால், நடந்தே போய் அவரை பார்ப்போம்.

“வணக்கம் முதலாளி” என்போம். எங்கள் பட விஷயங்களை ஆர்வமாய் கேட்பவர், “நல்ல வருவீங்கடா! தன்னம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள்” என்பார். அப்படிச் சொல்வதோடு மட்டும் நின்று விடாமல்
500 ரூபாய் பணத்தை எடுத்து எங்கள் கையில் திணிப்பார்.

1975-ம் வருடவாக்கில் 500 ரூபாயின் மதிப்பு மிக அதிகம்.

சினிமாவில் வளர்ந்த நிலையில் நானும் மணிவண்ணனும் இப்போது சந்தித்துக் கொண்டாலும், எங்கள் எதிர்காலத்தை `வாழ்த்தாக’ முன்கூட்டியே சொன்ன தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. பற்றி மறக்காமல் நினைவு கூர்வதுண்டு. சினிமாவில் நான் சந்தித்த அபூர்வ மனிதர் கே.ஆர்.ஜி.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

ஆபாவாணன்

திரைப்பட கல்லூரியில் பயின்ற இளைய தலைமுறை கலைஞர்களை ஊக்குவித்தவர், சந்திரசேகர். அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்து விட்டு இயக்கும் நோக்கத்துடன் படத் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொல்லிக் கொண்டிருந்தார், சின்னச்சாமி என்ற இளைஞர்.

புதியவர்கள், அதுவும் மாணவர்களாக இருந்து சினிமாவில் கற்றவர்கள் என்பதால் திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து படம் இயக்க தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள். சந்திரசேகர் படப்பிடிப்பில் இருந்த நேரத்தில் நண்பர் ஒருவர், “திரைப்படக் கல்லூரி மாணவர் ஒருவர் ஒரு கதை வைத்திருக்கிறார். கேளுங்கள்” என்று சொல்லி அந்த மாணவரை அனுப்பி வைத்தார். அன்றைய படப்பிடிப்பு முடிந்து சந்திரசேகரும் கதை கேட்டார். 21/2 மணி நேரமும் கதை சொன்ன திரைப்படக் கல்லூரி மாணவரான சின்னச்சாமி, சந்திரசேகரை ரொம்பவே ஆச்சரியமாய் உணரவைத்தார். இதுபற்றி சந்திரசேகர் கூறுகிறார்:-

“சின்னச்சாமி சொன்னது அதுவரை நான் கேட்டிராத கதை. படத்தில் வருகிற மாதிரி காட்சி காட்சியாக வரிசைப்படுத்தி கதை சொன்னார். கதை கேட்டு முடித்ததும், நான் அவரிடம் “நீங்க சொன்னதுல பாதியை படமா எடுத்தாக்கூட படத்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்” என்றேன்.

நான் விஜயகாந்திடம், “இன்ஸ்டிïட் மாணவர் சொன்ன கதை அற்புதம். நீங்கள் கதாநாயகனாக நடித்தால் உங்கள் சினிமா கேரியரில் பெரிய மாற்றம் ஏற்படும்” என்றேன்.

விஜயகாந்த் என் வார்த்தையை நம்பினார். கால்ஷீட் கொடுத்தார். படம் “ஊமை விழிகள்” என்ற பெயரில் தயாராகி திரைக்கு வந்தபோது, பிரமாண்ட வெற்றியை அடைந்தது. சின்னச்சாமி என்ற அந்த இயக்குனர் `ஆபாவாணன்’ என்ற பெயரில் பிரபலமானார். அவரது அடுத்த படமான “செந்தூரப்பூவே” படமும் விஜயகாந்துக்கு பெரிய வெற்றி தேடித்தந்தது. இந்தப் படங்களில் எனக்கும் முக்கிய கேரக்டர் கிடைத்து, பெயரும் கிடைத்தது.

இதன் பிறகு திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து “உழவன் மகன்” என்று சொந்தப்படமே எடுத்தார், விஜயகாந்த். அதுவும் வெற்றி.

இந்த வகையில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்க ஒரு வகையில் நான் காரணமாக இருந்ததில் இன்றளவும் எனக்கு பெருமைதான்.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

——————————————————————————————————————————————————————

திரைப்பட வரலாறு 808
படங்களில் பிசியாக இருந்தபோது
சந்திரசேகருக்கு திருமணம் நடந்தது
பட்டதாரி பெண்ணை மணந்தார்


நடிகர் சந்திரசேகர் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ஜெகதீஸ்வரியை மணந்தார். இவர் “பி.ஏ” ஆங்கில இலக்கியம் படித்தவர்.

இதுபற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

“இரவு பகலாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டம். எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன.

சிவாஜி சிபாரிசு

நடிகர் திலகம் சிவாஜி சாரின் குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு பெண் வீட்டார் என்னைப்பற்றி அவரது வீட்டில் விசாரித்திருக்கிறார்கள். சிவாஜி சாரும், “நல்ல பையன். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறான். தாராளமா பெண் கொடுக்கலாம்” என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். சிவாஜி சாரின் மகன்கள் ராம்குமாரும், பிரபுவும் என்னுடைய நல்ல நண்பர்கள். அவர்களும் “சந்துருவுக்கு (சந்திரசேகர் என்பதன் சுருக்கம்) தாராளமாகப் பெண் கொடுக்கலாம்” என்று அப்பாவின் கருத்தை வழிமொழிந்திருக்கிறார்கள்.

1987-ல் குன்றத்தூர் கோவிலில் என் திருமணம் நடந்தேறியது. திருமண நாளில் குன்றத்தூர் மலையைச் சுற்றிலும் இருந்து மக்கள் கூட்டமாக வந்து வாழ்த்தினார்கள். சினிமா நட்சத்திரங்கள் பலரும் வந்திருந்தார்கள்.

திருமண வரவேற்புக்கு டாக்டர் கலைஞர் வந்திருந்து வாழ்த்தினார்.

பட்டதாரி

என் மனைவி ஜெகதீஸ்வரி கல்லூரியில் “பி.ஏ” ஆங்கில இலக்கியம் படித்தவர். அவர் கல்லூரிப் படிப்பின்போது ஆஸ்டலில் தங்கிப் படித்திருக்கிறார்.

ஆஸ்டல் மாணவிகளுக்கு மாதம் ஒரு சினிமாப்படம் திரையிட்டுக் காட்டுவார்களாம். ஒருமுறை நான் நடித்த “சிவப்பு மல்லி” படம் போட இருந்திருக்கிறார்கள். அந்தப் படம் பார்க்க ஜெகதீஸ்வரியின் தோழி அவரை அழைத்திருக்கிறார். “நம்ம ஊர்க்காரர் நடிச்ச படம்” என்று தோழி சொல்ல, ஜெகதீஸ்வரியோ, “சந்திரசேகர் நடிச்ச படமா? கிராமத்து ஆளை பிடிச்சிட்டு வந்து நடிக்க வெச்ச மாதிரி இருக்கு. ஊர்ல உழுதுக்கிட்டு இருந்தவரை நடிக்க வெச்சிட்டாங்க” என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு ஒருநாள் இதை என்னிடம் சொன்ன ஜெகதீஸ்வரி, “உங்களைப் பற்றிய என் கணிப்பு அப்போது இப்படி இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. பகுத்தறிவு சிந்தனை, மனித நேயம் நிறைந்தவர் நீங்கள்” என்று பாராட்டியபோது ஒரு நடிகனாக அல்ல, கணவனாக பெருமைப்பட்டேன்.

இரட்டைக் குழந்தை

1989-ல் எங்களுக்கு இரட்டைக் குழந்தைகளாக சிவஹர்ஷன் – சிவரஞ்சனி பிறந்தார்கள்.

மனைவி மதுரை மண்ணுக்கே உரிய வீரத்திலும் சிறந்திருக்கிறார். ஒருமுறை ஈரோட்டில் ஒரு கிராமத்தில் தி.மு.க. மேடையில் பேசிக் கொண்டிருக்கிறேன். பத்து மணி தாண்டிய நிலையில் நான் பேசிக்கொண்டிருந்த மேடையை நெருங்கிய ஒரு போலீஸ் அதிகாரி, “சீக்கிரம் பேச்சை முடியுங்கள்” என்றார்.

ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சுரிமைக்கு தடையா? பொங்கிவிட்டேன். அப்புறம்தான் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ்காந்தி பலியான சம்பவம் தெரிந்தது. கிராமம் என்பதால் தகவல் தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறது.

ஒருவழியாக அவசர அவசரமாக ஈரோட்டில் நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு விரைந்தேன். நள்ளிரவை நெருங்கிய அந்த நேரத்தில் ஈரோடு நகரமே தீப்பிடித்து எரியும் காட்சியை கண்டு அதிர்ந்தேன். இதற்குள் என்னைப்பார்த்துவிட்ட ஒரு கும்பல் லாட்ஜ் வரை என்னைத் துரத்தியது. அப்போது எனக்குத் துணையாக இருந்த தி.மு.க. நண்பர் இளஞ்செழியன், அவரது தோட்ட வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். இதனால் அன்று நேரவிருந்த ஆபத்தில் இருந்து தப்பினேன்.

காலையில் என்னிடம் போனில் தொடர்பு கொண்ட ஜெகதீஸ்வரி, “பத்திரமாய் இருக்கீங்களா?” என்று கேட்டார். “இங்கே நாங்களும் பத்திரம்தான்” என்றார்.

அவர் சொன்னதன் உட்கருத்து அதன் பிறகே புரிந்தது. அதாவது கட்சிக்காரன் என்ற முறையில் என்னைத் தாக்க ஈரோட்டில் முயற்சி நடந்தது போலவே, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள என் வீட்டிலும் தாக்குதல் முயற்சி நடந்திருக்கிறது. 8 அடி உயர காம்பவுண்டு சுவர் கொண்ட வீடு என்பதால், வெளியில் இருந்து வீட்டுக்குள் ஒரு கும்பல் கல்வீசித் தாக்கியிருக்கிறார்கள். ஜன்னலில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியிருக்கின்றன.

இந்தத் தகவலை மனைவி என்னிடம் பகிர்ந்து கொண்டபோது, “பிறகு எப்படித்தான் சமாளித்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவங்க வீசின கல்லையே எடுத்து திரும்ப வெளியில் வீசினோம். கொஞ்ச நேரத்தில் வந்தவங்க ஓடிட்டாங்க” என்றார். இக்கட்டான நேரத்தில் சமாளிக்கத் தெரிந்த ஒரு வீரப்பெண்மணியாகவே என் மனைவி ஜெகதீஸ்வரி என் கண்களுக்கு அப்போது தெரிந்தார்.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

சம்சாரம் அது மின்சாரம்

ஏவி.எம். நிறுவனம் தயாரித்த “சம்சாரம் அது மின்சாரம்” என்ற படத்தை டைரக்டர் விசு இயக்கினார். படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றது.

இந்தப் படத்தில் நடிகர் சந்திரசேகருக்கும் முக்கிய வேடம். படத்தில் நடிக்க அழைக்கப்பட்டது தனி அனுபவம் என்கிறார், சந்திரசேகர்.

அதுபற்றி அவர் கூறியதாவது:-

“ஒருநாள் கிஷ்மு (டைரக்டர் விசுவின் தம்பி) என்னைப் பார்க்க வந்தார். ஒரு படம் பண்றோம். விசுதான் டைரக்டர். நீங்க நடிக்கணும்” என்றார்.

விசு அப்போது “குடும்பம் ஒரு கதம்பம்”, “மணல் கயிறு” என்று வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து வளர்ந்திருந்த நேரம். அவருடைய படத்தில் நடிக்க அழைப்பு என்றதுமே திருப்தி. என்றாலும், “படத்தில் என் கேரக்டர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கிஷ்முவிடம் கேட்டேன்.

அவரும் சளைக்காமல், “எங்கள் படத்தில் நீங்கள் நடித்த பிறகு இதுவரை நீங்கள் சேர்த்து வைத்துள்ள பெயரோடு இன்னமும் அதிக பெயர் தேடிவரும்” என்றார்.

பதிலுக்கு நான், “சாரி சார்! நான் கதை கேட்காமல் நடிக்கிறதில்லை” என்றேன்.

நான் இப்படிச் சொன்னதும் கிஷ்மு பதிலுக்கு, “நம்புங்க சார்! உங்களுக்கான கேரக்டர்ல நிச்சயம் நீங்க பிரகாசிப்பீங்க. இதுக்கு மேலும் உங்களுக்கு சந்தேகம்னா மொத்த ஸ்கிரிப்ட்டும் ரெடியா இருக்கு. தரேன். படிச்சுப் பாருங்க” என்றார்.

இந்த வார்த்தை என்னைத் தொட்டது. கதை மேல் வைத்திருந்த அவரது நம்பிக்கை என் கேரக்டர் மீது இருக்கத்தானே செய்யும்! உடனே மறுப்பேதும் இன்றி ஒப்புக்கொண்டேன்.

இந்தப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதோடல்லாமல், சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் (தங்கப்பதக்கம்) பெற்றுத்தந்தது. படத்தில் நடித்த அத்தனை பேரின் அந்தஸ்தும் உயர்ந்தது.

இந்த நட்பு இறுகிப்போனதில் தொடர்ந்து “புயல் கடந்த பூமி”, “அவள் சுமங்கலிதான்” என்று விசு சாரின் பல படங்களில் நடித்தேன்.

ராஜாங்கம்

டைரக்டர் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் நான் நடித்த “ராஜாங்கம்” படம் மறக்க முடியாதது. படத்தில் நான் ரவுடி. ஒரு பங்களாவுக்குள் நடக்கிற இந்தக் கதையில் எனது ஜோடியாக விஜயசாந்தி நடித்தார். இதே ஆர்.சி.சக்தியின் “கூட்டுப் புழுக்கள்” படத்திலும் நடித்தேன்.

எனக்கொரு ராசியோ அல்லது என் அணுகுமுறையோ ஒரு டைரக்டரின் படத்தில் நடித்த பிறகு அதே டைரக்டரின் அடுத்தடுத்த படங்களுக்கும் நிச்சயம் அழைப்பு வந்துவிடும். டைரக்டர்கள் விசு, ராம.நாராயணன், ஆர்.சி.சக்தி, மணிவண்ணன் போன்ற இயக்குனர்கள் படங்களில் எனக்கொரு கேரக்டர் நிச்சயம் என்கிற அளவுக்கு தொடர்ந்து அவர்கள் இயக்கும் படங்களில் வாய்ப்பு வந்து கொண்டிருந்தது.

இவ்வாறு கூறினார், சந்திரசேகர்.

சபரிமலை

கலைத்துறையில் நண்பர்களுடன் ஆண்டுக்கொரு முறை சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு வருவது சந்திரசேகர் வழக்கம். 9 வருடங்களுக்கு முன்பு நடிகர் சந்திரசேகரும், டைரக்டர்கள் ராம.நாராயணன், கோலப்பன், நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட நண்பர்களுடன் சபரிமலைக்கு வேனில் புறப்பட்டார். இந்த பயணத்தின்போது விபத்து ஏற்பட்டு அதில் காயமின்றி கலைக்குழுவினர் மீண்டனர். அதுபற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

“முறைப்படி விரதம் இருந்து மலைக்கு புறப்பட்டோம். மஹீந்திரா வேனில் 4 நாட்களுக்கு தேவையான புளியோதரை கட்டிக்கொண்டு பயணித்தோம். வேனில் டிரைவர் சீட் அருகில் ஐயப்பன் படத்தை வைத்து, மாலை அணிவித்து இருந்தோம்.

வேன் சென்னையைத் தாண்டியதும் ஆளுக்கு ஆள் ஒரே ஜோக் மழைதான். அதிலும் எஸ்.எஸ்.சந்திரன் இருந்தால் காமெடிக்கு கேட்கவா வேண்டும்? திருச்சி தாண்டிய பிறகும் இந்த நகைச்சுவை மழை நின்றபாடில்லை. எங்கள் ஜோக்குக்கு டிரைவரும் சிரித்தபடி வாகனத்தை ஓட்டினார்.

விடியற்காலை நேரம் திடீரென ரோட்டின் மையத்தில் இரண்டு மாடுகள் குறுக்கே வர, டிரைவர் அடித்த `சடன் பிரேக்’கில், வண்டி அருகில் இருந்த பெரிய குளத்தருகே குட்டிக்கரணம் அடித்தது.

ஆனாலும் பாருங்கள். ஐயப்பன் படம் உடையவில்லை. போட்டிருந்த மாலை சிதறவில்லை. நாங்கள் சாப்பிட வைத்திருந்த புளியோதரை கூட அப்படியே இருந்தது. ஒரு வழியாக அங்கு வந்தவர்கள் உதவியுடன் வேனை தூக்கி நேராக நிமிர்த்தியபோது, உடனே ஸ்டார்ட்டும் ஆனது! பக்திப்பூர்வமான ஒரு பயணத்தின்போது, எதற்கு கிண்டலும் கேலியுமான விஷயங்கள் என்று அந்த ஐயப்பனே எங்களுக்கு இப்படி ஒரு `ஷாக் ட்ரீட்மெண்ட்’ கொடுத்தது போல் உணர்ந்தோம். அதன்பிறகு சபரிமலைக்கு போய்விட்டு வரும் போது கூட, அதாவது சென்னையில் வீடு வந்து சேரும் வரையில் ஜாலியாக ஒரு வார்த்தைகூட நாங்கள் பேசாமல் வந்தோம். இந்த பயணத்தின்போது எங்கள் வாயில் இருந்து உதிர்ந்ததெல்லாம் “சாமியே சரணம்” கோஷம் மட்டும்தான்.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
——————————————————————————————————————————————————————

Posted in Aabaavaanan, Aabavaanan, Aabavanan, Abavaanan, Abavanan, Actor, AVM, Biography, Biosketch, Chandrasegar, Chandrasekar, Chanthrasekar, Cinema, DMK, Faces, Films, History, Kalainjar, Karunanidhi, KRG, Manivannan, MGR, MK, Movies, MuKa, names, Nizhalgal, Nizhalkal, people, Politician, Politics, Visu | 1 Comment »

Kovilpatti 1950 – History of DMK – Kalainjar Mu Karunanidhi’s Speech

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007


கோவில்பட்டியில்
1950-ம் ஆண்டு தி.மு.க. மாநாட்டில் ஆற்றிய உரை
கருணாநிதி அறிக்கை


சென்னை, நவ.28-

1950-ம் ஆண்டு கோவில்பட்டியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் தான் ஆற்றிய உரை குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி தனது அறிக்கையில் விளக்கி உள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நினைவுபடுத்தி கொள்கிறேன்

பழைய நினைவுகளை அசை போடும் பொழுது பனிக்கட்டியிலிருந்து கிளம்புகிற ஆவியை ரசிப்பது போன்ற ஓர் இன்பம்! தம்பி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்கு அணிவகுத்துச் செல்லும் அடுத்த தலைமுறை உடன்பிறப்புக்களுக்கு; அதே நெல்லை மாவட்டம், கோவில்பட்டியில் 1950-ம் ஆண்டு என்னுடைய 25-வது வயதில் தலைமை ஏற்று, 2 நாட்கள் மாநாட்டை நடத்தியதையும்-நான் அங்கே ஆற்றிய உரையை அச்சியற்றி சென்னை முன்னேற்றப் பண்ணை எனும் பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டதையும் – இதோ நினைவுபடுத்திக் கொள்கிறேன். அதற்கு 57 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையிலே இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிற நேரத்தில் – அப்போது என்ன பேசினேன் என்பதை இளைய திலகங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ள ஏதுவாக அதனை இப்போது இயக்க வளர்ச்சிக்கும் கட்டுக்கோப்புக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

மட்டிலா மகிழ்ச்சி

“கோவில்பட்டியில் கூடும் இம்மாநாட்டில் நான் தலைமை வகிப்பதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்றுள்ளது. சென்ற ஆண்டு தி.மு.க.வின் துவக்க விழாவில் கோவில்பட்டியில் நானேதான் கலந்து கொண்டேன். இப்போது அதே நகரில் மாநாட்டிலும் கலந்து கொள்கிறேன் என்பதை நினைக்கும்போது மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறேன்.

என் போன்றவர்களுக்கு இந்தச் சிறப்பு வழங்கப் படுவதின் நோக்கம் இயக்கம் இளைஞர்களின் சொத்து – உழைப்பாளிகள் அமைத்த மாளிகை – அதில் உல்லாசபுரியினர் வாழ முடியாது என்பதை நாட்டுக்கும் – நாட்டிலே நம்மைப் பற்றி நச்சுக் கருத்துக்களை நடமாட விடுபவர்களுக்கும், எடுத்துக்காட்டத்தான் என்பது என் எண்ணம்.

சரண்புக மாட்டோம்

தலைமை வகிப்பது என்பது கட்சியிலே ஒரு நட்சத்திரத்தை உண்டாக்குவது என்பதல்ல. அப்படி தலைமை வகிப்பவர்கள் கருதினாலும் – அல்லது தலைமை வகிப்பவரைப் பற்றிக் கருதினாலும் அது பெரும் தவறு! வரப் போகும் போராட்டங்களிலே இதுவரை கழகத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட மாநாடுகளின் தலைவர்கள் வரிசைக் கிரமமாக களத்திலே நிறுத்தப்பட வேண்டும். அந்தந்த மாவட்ட மாநாட்டுத் தலைவர்களின் சார்பாக நான் தலைமைக் கழகத்தை கேட்டுக் கொள்வதெல்லாம் `எங்களை எதிர்காலப் போராட்டத்தின் தளபதிகளாக்குங்கள்’ என்பதுதான்! மார்பிலே வேல்தாங்கி மரணத்தை அணைப்போமே தவிர மாற்றாரிடம் சரண்புக மாட்டோம். மாசற்றக் கொள்கைகளை எதிரிகட்குக் காணிக்கையாக்க மாட்டோம். இந்த உறுதியோடுதான் இன்றைய மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறேன்.

செப்டம்பர் 17. நாம் மறக்க முடியாத நாள் பெரியார் பிறந்த நாள். பெரியார் பிறந்த நாளும் – நாம் அவரை விட்டுப் பிரிந்த நாளும் அதுதான்! சிந்திய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் செயலில் இறங்கப் புறப்பட்ட நாள். அந்நாள் தோன்றி ஒரு ஆண்டு நிறையப்போகிறது. இந்த ஒரு ஆண்டில் நாம் போட்ட திட்டங்கள் எத்தனை – நாம் புரிந்த செயல்கள் எத்தனை – நாம் அடைந்த வெற்றிகள் எத்தனை – நாம் செய்யாமல் விட்டு விட்ட காரியங்கள் எத்தனை – என்பதை நன்றாகச் சிந்திக்க வேண்டும்.

ஐநூறு கிளைகள்

ஒரே ஆண்டில் ஐந்நூறு கிளைகளை நிறுவியிருக்கிறோம். எந்த இயக்கமும் செய்து காட்ட முடியாத அரும்பெரும் செயல்! ஐந்நூறு கிளைகள். ஐம்பதுக்கு மேற்பட்ட பிரச்சாரக் காளையர்கள். அன்றாடம் கூட்டங்கள். மாவட்டந்தோறும் மாநாடுகள். இது தித்திப்பான செய்திதான். ஆனால் பூரண திருப்தியளிக்கக் கூடியதல்ல.

நம் கொள்கையை கீதமாக்கிக் கொண்டவர்கள் – நம் பாதையில் நடந்து வரத் துணிந்தவர்கள் – நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களை இணைக்க முடியவில்லை. இணைக்கும் முயற்சி எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐநூறு கிளைகள். அந்தக் கிளைகளுக்கும் மத்திய கழகத்திற்கும் தொடர்பு அறுந்துதான் போயிருக்கிறது. ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் – அந்தத் திட்டம் தீட்டப்பட்ட பிறகு . . மத்தியக் கழகத்திலிருந்து மாவட்டக் கழகத்திற்குச் சென்று, மாவட்டக் கழகம், கிளைக் கழகங்களுக்கு அறிவித்து கிளைக்கழகம், அளிக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென்று ஏற்பாடு இருக்கிறது. ஆனால் முறைப்படி நடக்கவில்லை. தலைமைக் கழகம் ஒரு சங்கிலியின் பதக்கமாகவும் கிளைகள் முத்துக்களாகவும் கோர்க்கப்படவில்லை. இந்தக் குறையை விரைவில் களைய வேண்டும்.

இந்த இணைப்பு உறுதியாக இருந்தால்தான் கிளைக் கழகத்தின் சந்தேகங்கள் – சச்சரவுகள் – நடவடிக்கைகள் – இவைகளை நல்ல முறையில் சீர்படுத்தி இயக்கத்தைச் செழிப்பாக்க முடியும். பிரச்சாரக் குழு மட்டும் வேலை செய்து பயன் இல்லவே இல்லை. சென்ற ஆண்டு போட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்முறைக்கு வந்தாக வேண்டும்.

நாம் வளர்ந்திருக்கிறோம். வளர்ந்து கொண்டேபோகிறோம். அதற்கும் ஒரு கட்டுப்பாடு – ஒழுங்கு – நியதி வேண்டுமென்பதுதான் பிரச்சினை.

மகத்தான இயக்கம்

ஆரியம் ஒரு மாயை, அது பல உருவில் நடமாடும் என்பது கண்டு இலக்கியத் துறையிலே – நாடகத் துறையிலே – கலைத் துறைகளிலே – ஆரியத்தின் கைவரிசையை எதிர்க்கப் பலப்பல அணுகுண்டுகளை நடமாட விட்டிருக்கும் இயக்கம் – இத்துணை மகத்தான இயக்கம் நிலவுபோல வளர்வதும், தேய்வதும் பின் வளர்வதுமாயுள்ளது. நிச்சயமாக நமக்குத் தெரியும் கழகத்திலே நான் மேலே குறிப்பிட்ட அமைப்பு முறைகள் சீர்திருத்தப்படா விட்டாலுங்கூட கழகம் அழிந்து விடாது என்று. ஆனாலும் சந்திரனைப் போல தேயும். பிறகு வளரும். ஆனால் சந்திரனைப் போல அழியாமலே இருக்கும்.

நம்முடைய ஆசையெல்லாம் இயக்கம், அழியாமலுமிருந்து அதோடு வளர்வதும் தேய்வதுமின்றி எப்போதும் வளர்வது என்பதாகவே இருக்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அழுத்தந்திருத்தமாகக் கூற வேண்டியிருக்கிறது, அமைப்பு முறை தேவையென்று. அந்தத் தேவையை மத்யக் கழகத்திலிருந்துதான் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதல்ல. மாவட்ட, கிளைக் கழகங்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே அமைப்பு கண்டு மாவட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு மத்ய கழகத்தை தங்களோடு இணைத்து செயல் புரியச் செய்ய வேண்டும். விழுதுகள் இருந்தால் தான் ஆலமரத்திற்கு அழகு. இது கழகத் தொண்டர்கள் – செயலாளர்கள் அறியாததல்ல.

அர்ப்பணிக்க வேண்டும்

நாட்டு நிலைமை மிக மிக நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் நாடு நம்மை எதிர்பார்த்து நிற்கிறது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பிலே வெற்றி பெற்று விட்டோம். வாகை மாலை சூடி விழாக்களும் நடத்தி விட்டோம். இந்த வெற்றியைக் கொண்டாடும் நேரத்திலேயே நெஞ்சு கொதிக்கும் நெருப்புச் செய்தியொன்று நம்மை நெருங்கிற்று.

ஆம், அதுதான் அல்லாடியாரின் ஆனந்தத் தாண்டவம் – அக்கிரகாரத்தின் வெற்றி முரசம் – திராவிடத்தின் முன்னாள் பழம்பெருந்தலைவர்கள், உரிமைப் போர்த் தளபதிகள் தியாகராயர், டாக்டர் நாயர், பனகல் அரசர், டாக்டர் நடேசன், போன்ற பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து உண்டாக்கிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை (கம்ïனல் ஜி.ஓ.) யைக் குழியில் தள்ளிவிட்டு பார்ப்பனீயம் பாடுகின்ற பள்ளுப்பாட்டைத்தான், தோழர்களே! குறிப்பிடுகிறேன். முப்பது ஆண்டுகளாக அமுலிலிருந்து வரும் வகுப்புவாரி முறை அடியோடு சாய்கிறது. சட்டம் கம்ïனல் ஜி.ஓ.வுக்கு மாறானதாயிருக்கிறதாம். அதற்காக சமூக நீதியை சாய்த்து விட வேண்டுமாம்.

சமூகநீதி தேவை என்றால்…

1920இல் எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சைக்கு சென்ற மாணவர்களின் தொகை இருபதாயிரம். இன்று 1950ல் அறுபத் தெட்டாயிரம். இப்படி வளர்ந்து வந்த திராவிடரின் கல்வி உயர்வைக் கருவறுக்க சட்டத்தை வாளாக்குகிறார்கள். சட்டம் செய்தவர்கள் ஐந்து பேர். அதில் மூன்று பேர் தென்னாட்டு நிலை தெரியாத வட நாட்டவர். இருவர் தென்னாட்டவர். அதில் ஒருவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார், மற்றவர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். எங்கிருந்து நீதி கிடைக்கும் இந்த நிரபராதித் திராவிடருக்கு!. எங்கிருந்து உரிமை கிடைக்கும் உளுத்துப்போன சமுதாயத்துக்கு!….. சமூகநீதி தேவையென்றால் பரந்த நோக்கம் பேசுகிறார்கள். தகுதி, திறமையென்கிறார்கள்.

இந்தத் தகுதியும் திறமையும் சமுதாயப் பிரச்சினை வரும்போது காட்டப்படுகிறதா? கல்விச் சாலைக்குச் செல்ல தகுதி திறமை என்று கர்ஜிக்கிற கனவான்களைக் கேட்கிறேன் – காலையில் எழுந்து ஸ்னானம், நேமம், நிஷ்டை, விரதம், அளவில்லாத ஆண்டவன் பக்தி, பழுத்த ஆஸ்திகம் இத்தனை திருக்குணங்களும் அமைந்த திராவிடன் ஒருவன், ஆலயத்து சென்று ஆண்டவனைத் தொட்டு அர்ச்சிக்க அபிஷேகிக்க முடியாதே. அதே நேரத்தில் இரவெல்லாம் இன்பவல்லியோடு கூடிக் கிடந்து வெற்றிலை காய்ந்த வாயுடனே ஆண்டவனைத் தொட்டுக் குளிப்பாட்டி, உணவூட்ட ஒரு பெரு வியாதி பிடித்த பார்ப்பனருக்குக் கூட உரிமை இருக்கிறதே – இதில் எங்கே தகுதி, திறமை? யாரிடமிருக்கிறது தகுதி….. ஆனால் யார் நுழைய முடிகிறது கோயிலில். இவைகளை ஒழித்துக் கட்டி விட்டு, உயர்ந்தோர் எனப் பேசும் ஆணவத்தை அகற்றி விட்டு பிறகு கம்ïனல் ஜி.ஓ. தேவையற்றது என்றால்கூட அதில் அர்த்தமுண்டு. எப்படியோ அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.

அடுத்த திட்டம்

நாம் முன்பு கூறியபோது நையாண்டி பேசியவர்கள் இன்று நம்மோடு சேர்ந்து `அந்தோ! அநீதி!’ என அலறுகிறார்கள். சென்னை அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று விட்டது நீதி கேட்க! அதுவும் நம் முயற்சியால்தான், கிளர்ச்சியால்தான் முடிந்தது என்பதை நினைத்துப் பெருமையடைகிறோம்.

அப்பீலுக்கு போயிருக்கிறவர்கள் அங்கும் தோல்வி கண்டால் – அதன் பிறகு அரசியல் சட்டம் திருத்தப்படாவிட்டால் அப்போது எரிமலையாகக் குமுறப்போகிறது நமது கிளர்ச்சி. மூன்று கடல்களும் பொங்கி ஆதிக்க இமயத்தை மூழ்கடிக்கும் கிளர்ச்சி. சாவா? வாழ்வா? என்று முடிவு கட்டுகிற கிளர்ச்சி.

கோரப்பசி

ஆளவந்தார் சுப்ரீம் கோர்ட்டிலிருந்து திரும்புகிற வரையில் நமக்கு வேறு பல வேலைகள் உண்டு. சமூக நீதி பற்றிய விளக்கவுரைகளாற்றி மக்களை விழிக்கச் செய்ய வேண்டும். மக்கள் விழிப்படைவார்கள். ஆனால் செயலாற்ற உடலில் வலுவில்லை. காரணந்தான் தெரியுமே – கொடுமையான காரணம். பசி. . பசி . . பருத்திக் கொட்டையை சாப்பிடு என முன்ஷி சிபார்சு செய்யுமளவுக்கு வளர்ந்து விட்ட பசி – திருநெல்வேலியிலும் வேறிடங்களிலும் தான் பெற்ற செல்வத்தைத் தன் வயிற்றில் கிடந்த வைடூரியத்தை, தாயார் விலை கூறி விற்று வயிற்றைக் கழுவிக் கொள்ளும்படி செய்த கோரப் பசி – இந்தப் பசி நீக்க, பாராள வந்தவர் எடுத்துக் கொண்ட முயற்சி, எட்டு அவுன்ஸ் அரிசியை ஆறு அவுன்சாக்கியதுதான்.

பசியால், மக்கள் மாளும் நேரத்தில் பாராமுக மாயிருக்கும் சர்க்காருக்கு – ஒருமுறை நினைவு படுத்தும் நிகழ்ச்சியை நாம் நடத்திக் காட்ட வேண்டும். சென்னையிலே பட்டினிப் பட்டாள ஊர்வலம் நடந்த பிறகு நல்லதொரு எதிரொலி ஏற்பட்டது. அதுபோல திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நாடெங்கும் ஒரு நாள் குறிக்கப்பட்டு பசியால் மாளும் மக்களின் பட்டியலை சர்க்காருக்குத் தர வேண்டும்.

அகவிலை உயர்வை எதிர்த்து ஒரு போர்! அடக்குமுறையை எதிர்த்து ஒரு போர்! புத்தகங்களின் தடை உத்தரவை எதிர்த்து ஒரு போர்! நாடகத் தடைகளை மீறி ஒரு போர்! இப்படிப் போர்கள் நடக்கப் போவதில்லை. எல்லாவற்றையும் சேர்த்து ஒரே ஒரு போர்! அந்தப் போரிலே கலந்து வாகை மாலை சூட – வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! சிறுத்தையின் உறுமல் – சிங்கத்தின் சீற்றம் – கறுத்த கழுதையே அங்கேன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை – மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று என்று மார் தட்டிட வாரீர்! புரட்சிப்பண் பாடிட வாரீர்!

வாரீர் வாரீர்… வாலிப வீரர்களே! வைர நெஞ்சுடைத் தோழியர்களே! வண்மை நிறை பெரியோர்களே! … என அழைக்கிறேன்.”

இளைய உடன்பிறப்புகளே! அன்று அரும்பு மீசை இளைஞனாக இருந்த என் குரல் இப்படிக் கோவில்பட்டியிலே ஒலித்தது. இன்றும் அந்த இளைமைத் துடிப்புடன் ஒலிக்கிறது; இந்தக் குரல் ஒலியிலே அணிவகுத்திடு! பணி தொடர்ந்திடு!

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in 1950, ADMK, AIADMK, Alagiri, Alakiri, Anna, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, DMK, Dravidian, dynasty, EVR, Heritage, History, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, K Ponmudi, K Veeramani, Ka Anbalagan, Ka Anbhazhagan, Kalainjar, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Koilpatti, Kovilpatti, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, MK Stalin, Monarchy, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Periyaar, Periyar, Stalin | Leave a Comment »

‘Abhirami’ Ramanathan: Dinathanthi Biosketch – Tamil Movie History – Notable Faces

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(801)
படத்தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர்
3 துறைகளில் `அபிராமி’ ராமநாதன் சாதனை

தியேட்டர் அதிபர், திரைப்பட வினியோகஸ்தர், சினிமா தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட `அபிராமி’ ராமநாதன், பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

திரை உலகில் பல முக்கிய பொறுப்புகளை வகிக்கும் `அபிராமி’ ராமநாதனின் சினிமாப் பிரவேசம், எடுத்த எடுப்பில் நிகழ்ந்து விடவில்லை. என்ஜினீயருக்கு படித்து விட்டு தொழில் துறையில் அடியெடுத்து வைத்தவர், அடுத்து தியேட்டர் நிர்வாகத்துக்கு வந்தார். பட வினியோகத் தொழிலை ஆரம்பித்தார். பட அதிபராகவும் ஆனார்.

அபிராமி ராமநாதனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி. தந்தை சிவலிங்கம் செட்டியார். தாயார் மீனாட்சி ஆச்சி.

திரை உலகுக்கு வந்தது எப்படி என்பது பற்றி அபிராமி ராமநாதன் கூறியதாவது:-

அபிராமி ராமநாதன்

“என் கலை உலக வாழ்க்கையை, அப்பாதான் ஆரம்பித்து வைத்தார். அப்பா 1956-ம் ஆண்டில் பல படங்களுக்கு `பைனான்ஸ்’ செய்து வந்தார். படங்களை வாங்கி வெளியிடும் வினியோகத் துறையிலும் இருந்து வந்தார்.

அப்பா இப்படி வினியோக முறையில் வாங்கி வெளியிட்ட முதல் படம் அப்போது ஜெமினியின் “வஞ்சிக்கோட்டை வாலிபன்” இந்தப் படத்தை சென்னை நகர உரிமைக்கு அப்போதே
2 லட்சம் ரூபாய்க்கு `அவுட் ரேட்’ முறையில் வாங்கினார் அப்பா. ஒரு லிட்டர் பெட்ரோல் 14 பைசாவாக இருந்த நாளில், ஒரு படத்தின் மீது நம்பிக்கை வைத்து 2 லட்ச ரூபாய்க்கு உரிமை வாங்கியிருந்தார் என்றால் தனது தொழிலின் மீது அப்பாவுக்கு எவ்வளவு நம்பிக்கை!

சென்னையில் வெலிங்டன், பிரபாத், சரசுவதி ஆகிய தியேட்டர்களில் படத்தை திரையிட்டார். அப்போதெல்லாம் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் நாலணா, எட்டணாதான். ஆனால் வெலிங்டன் தியேட்டரில் மட்டும் 21/2 ரூபாய் கட்டணம். அந்த தியேட்டர் “பால்கனி” அமைப்புடன் ரசிகர்களை கவரும் விதத்தில் இருந்ததே இதற்குக் காரணம்.

அப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே அப்பா வினியோகம் செய்த படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பேன். ரசிகர்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிப்பேன். இப்போது ஒரு படத்தை பார்த்ததும் அது எப்படி ஓடும் என்று என்னால் கணிக்க முடிகிறது என்றால், அது அன்றே எனக்குள் விழுந்த விதை.

விவேகானந்தா கல்லூரியில் “பி.ï.சி” முடித்து விட்டு, கிண்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தேன்.

ஓமியோபதி மருத்துவப் படிப்பிலும் சேர்ந்து தேறினேன்.

வருமானம்

பள்ளியில் படிக்கிற நாட்களிலேயே எனக்கு எழுதுவதில் ஆர்வம் வந்துவிட்டது. பத்தாவது படிக்கும்போது `ஸ்டூடண்ட்’ என்ற மாணவர் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனேன்.

கல்லூரிக்கு வந்த பிறகு ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அப்பா என் கைச்செலவுக்கு மாதம் 30 ரூபாய் அனுப்பி வைப்பார். என் தேவைகளுக்கு இன்னும் சம்பாதிக்க விரும்பியபோது எனக்கு கைகொடுத்தது ஒரு கேமரா. நான் ஏழாவது படித்த நேரத்தில் ஒரு கேமரா வாங்கித் தந்திருந்தார். அப்போது சினிமா ஸ்டில் போட்டோ கிராபராக இருந்த `அப்பர்’ என்பவரிடம் கேமரா இயக்க கற்றுக்கொண்டேன்.

இந்த கேமரா அனுபவம் எனக்கு கைகொடுத்தது. கல்லூரி விழாக்களை நான்தான் படம் எடுப்பேன். நண்பர்கள் வீட்டு திருமணங்களில் நான்தான் ஆஸ்தான போட்டோகிராபர்!

இப்படி படிப்போடு, வருமானமும் எனக்கு உயர்ந்து வந்தது. என் சொந்த வருமானத்தில் ஒரு மோட்டார் பைக் வாங்கினேன்.

இதெல்லாம் போதாதென்று நான் இருந்த ஹாஸ்டலிலும் பெட்டிக்கடை வியாபாரம் செய்தேன்! என் ரூம் ஜன்னல் வழியாகத்தான் வியாபாரம். சிகரெட், பாக்கு, பீடா, கடலை மிட்டாய் எல்லாம் கிடைக்கும்!

சின்ன வயதில் அப்பா என்னிடம் “நேர்மையான முறையில் எதை வேண்டுமானாலும் செய்” என்று கூறினார். எனவேதான் போட்டோகிராபர், பெட்டிக்கடை என்று என் `வியாபாரத்தை’ விஸ்தரித்ததில், 1970-ல் என் பேங்க் பேலன்ஸ் 10 ஆயிரம் ரூபாயை தொட்டது. படிப்பிலும் நன்றாகவே தேறினேன்.

சொந்தத் தொழில்

கல்லூரி படிப்பு முடிந்த கையோடு அப்பா என்னை தொழில் துறையில் பழக்குவிக்க நினைத்தார். கீரனூரில் எங்களுக்கு ஆயில் மில் இருந்தது. அதில் என்னை சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தில் என்னிடம், “வேலைக்கு போகிறாயா? கம்பெனியில் சேருகிறாயா?” என்று அப்பா கேட்டார்.

சொந்தமாய் தொழில் செய்ய விரும்புவதாகக் கூறினேன்.

உன்னிடம் “முதல் (பணம்) இருக்கிறதா?” என்று கேட்டார்.
“10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது” என்று பெருமையாக கூறினேன்.அப்பா மறுபேச்சு பேசவில்லை. “சரி! செய்” என்றார்.

சென்னை அசோக் நகரில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தேன். எனக்கு அனுபவமில்லாத அந்த தொழிலில் சறுக்கல் ஏற்பட, ஆறே மாதத்தில் 10 ஆயிரமும் நஷ்டம்.

விஷயத்தை அப்பாவிடம் சொல்லியாக வேண்டுமே. சொன்னேன்.

“பூரா பணமும் போய்விட்டதா?” என்று அப்பா கேட்டார்.

“ஆமாம்” என்று நான் தலையசைத்ததும், “தொழிலை ஒழுங்காக கற்றுக்கொள்” என்று சொல்லி விட்டு கீரனூரில் உள்ள எங்கள் ஆயில் மில்லுக்கு என்னை அனுப்பினார். அங்கு ஒரு வருடம் இருந்தேன். சமையல்காரர்கூட கிடையாது. என் தேவைகளை நானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் அப்பா கண்டிப்பாக இருந்தார்.

சோதனையில் தேறிவிட்டதால், அடுத்தபடியாக ஆந்திராவில் இருந்த எங்கள் காட்டன் மில்லுக்கு என்னை அப்பா அனுப்பி வைத்தார். அங்கே ஜுனியர் என்ஜினீயர் என்ற நிலையில் ஆரம்பித்து, புளோர் என்ஜினீயர், புளோர் சூப்பர்வைசர், உதவி மானேஜர், மானேஜர், டைரக்டர் என்று படிப்படியாக உயர்ந்தேன்.

`அபிராமி’ உதயம்

இந்த நேரத்தில்தான் அப்பா சென்னை புரசைவாக்கத்தில் ஒரு இடத்தை வாங்கி, அங்கே தியேட்டர் கட்ட முடிவு செய்தார். என்னை அழைத்த அப்பா, “நீ என்ஜினீயருக்குத்தானே படிச்சே. நீயே தியேட்டர் வேலையை கவனி. சைட் என்ஜினீயரா இரு” என்று கூறினார். அதனால், புரசைவாக்கத்தில் “அபிராமி”, “பாலஅபிராமி” என 2 தியேட்டர்களைக் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன்.

1974-ல் ஆரம்பித்த தியேட்டர் கட்டும் பணி 1976-ல் முடிந்தது. 1976 ஜுலை 2-ந்தேதி “அபிராமி”யை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திறந்து வைத்தார்.

Posted in Abhirami, Abirami, Biosketch, Biz, Cinema, Dinathanthi, Distributor, Enetrtainment, Faces, Films, History, Industry, Movie, Movies, Producer, Rajni, Ramanadhan, Ramanathan, Sivaji, Theaters, Theatres | Leave a Comment »