Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Language’ Category

Learning Tamil as a Foreign Language – South Travancore Hindu College, Nagercoil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

சொல்றாங்க.. – தமிழுக்காக ஒரு தாற்காலிக வேடந்தாங்கல்!

அ. அருள்தாசன்

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்தின் தென் கோடிக்கு வந்து தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. தமிழில் அனா ஆவன்னா தெரியாதவர்கள் 7 மாதங்களில் தமிழ்ப் பாடல்களை ரசித்துப் பாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றால் இந்த ஆச்சர்யம் உங்களுக்கு இரட்டிப்பாகும். நாம் அவர்களைச் சந்திக்கச் சென்ற நேரத்தில் பாரதியின் “சிந்து நதியின்..’  பாடலைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

தமிழை ஒற்றுப் பிழையில்லாமல் எழுதும் அவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் வெளிநாட்டினர். இங்கு மாணவர்களாக இருக்கும் அவர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் ஆசிரியர்கள் என்பது அடுத்த சுவாரஸ்யம். இனியும் காலம் கடத்தாமல் அவர்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லிவிடுகிறோம்.

மைசூரில் செயல்படும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தமிழ்த் துறையில் அவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேர்ந்து, தமிழைக் கற்று வருகிறார்கள்.

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய வந்திருந்த அவர்கள்,

  1. கர்நாடகம்,
  2. ஹிமாச்சலப்பிரதேசம்,
  3. மணிப்பூர்,
  4. ஒரிசா,
  5. மேற்கு வங்கம்,
  6. அசாம்,
  7. இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் துணையுடன் நாட்டிலுள்ள மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆண்டுதோறும் இதுபோன்று ஆசிரிய, ஆசிரியைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் இந்த கல்வியாண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்த 24 பேருக்கும் தமிழ் கற்கும் காலத்தில் அவர்களுக்கான மாத ஊதியம் மற்றும் ரூ.800 ஊக்கத் தொகையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் வரையில் இவர்கள் தமிழைக் கற்கின்றனர்.

நாகர்கோவிலுக்கு வந்திருந்த இந்த ஆசிரியர்களை வழிநடத்தும் பேராசிரியர் எஸ். சுந்தரபாலு கூறியதாவது:

இந்தியா, “மொழிகளின் பொக்கிஷம்’. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 18 மொழிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றவை. அங்கீகாரம் பெற்ற அல்லது பெறாத மொழிகள் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றைக் கற்றுக் கொள்ளும் வழிகளை உருவாக்கித் தரும் பணியிலும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளைக் கற்க ஆசிரிய, ஆசிரியைகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பழமையான, இலக்கியத்துவம் வாய்ந்த, இனிமையான செம்மொழியாகத் தமிழ் இருப்பதால் பல்வேறு மாநிலத்தவரும் தமிழைக் கற்க ஆர்வமாக வருகின்றனர் என்கிறார் சுந்தரபாலு.

தமிழுக்காக இந்துக் கல்லூரியில் தாற்காலிகமாக குழுமியிருந்த வெளிமாநில ஆசிரிய, ஆசிரியைகள் சிலரிடம் தமிழைக் குறித்தும், தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் குறித்தும் பேசியபோது கொஞ்சும் தமிழில் அவர்கள் கூறிய சில சுவாரஸ்ய தகவல்கள்:

புலேகொடா ஆர்ச்சிகாந்தி (இலங்கை):

“”இலங்கை ருகுண தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். அங்கு சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பித்து வருகிறேன். ஆனால், சிங்கள மாணவர்களுக்குத் தமிழைக் கற்பிக்க முடியவில்லை. இதனால், தமிழைக் கற்க இங்கு வந்துள்ளேன்.

இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களிடையே தகவல் தொடர்பு பிரச்னை இருக்கிறது. அதைத் தவிர்க்க இந்தப் பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்றார்.

நெப்ரம் புஷ்பராணிதேவி (மணிப்பூர்):

“”மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளைக் கற்பது கடினம். இதில் தமிழ் மொழி எனக்குப் பிடித்திருக்கிறது. மணிப்பூரில் முரே மாவட்டத்தில் தமிழ் பேசுவோர் அதிகம் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க இதனால் எனக்கு முடியும்.”

லொரெம்பம் கோமோடோன்சனா தேவி (மணிப்பூர்):

“”கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சுற்றுலா வந்திருந்தபோது தமிழர்களின் நடவடிக்கைகள் என்னைக் கவர்ந்தது. இங்குள்ள பெண்கள் நெற்றில் பொட்டு வைப்பதும், ஆண்கள் விபூதி வைப்பதும் பிடித்திருக்கிறது. கடவுள் என்றால் அன்பு என்பதைத் தமிழ் மொழி உணர்த்துகிறது” என்றார்.

ஷபியூர் ரஹ்மான், அப்துர் ரஹீம் (அஸ்ஸôம்):

“”அசாம் மாநிலம், போர்பெட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், சமஸ்கிருத ஆசிரியர்கள். தமிழ் மொழி இனிமையானது என்பதனால் இதைக் கற்கிறோம். சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் 30 சதவீதம் தொடர்பு இருக்கிறது. ஏலேலோ ஐலசா போன்ற நாட்டுப்புற பாடல் தெரியும். (இவர்களில் ரஹீமுக்கு அசாமி, பெங்காலி, சமஸ்கிருதம், ஹிந்தி, தமிழ், அரபி ஆகிய 6 மொழிகள் தெரியும்).

அசோதோஸ் மாலிக் (ஒரிசா):

“”ஒரிய மொழி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். தற்போது தமிழைக் கற்பதால் தமிழுக்கும் ஒரிய மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிந்து கொள்கிறேன். தமிழைக் கற்றபின் தமிழில் உள்ள நூல்களை ஒரிய மொழியிலும், ஒரிய மொழி நூல்களைத் தமிழிலும் மொழி பெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன்.

தமிழகத்தில் இலக்கியத்திலும் தீவிர ஆர்வம் மிக்கவராக இருப்பவர் என முதல்வர் கருணாநிதியைப் பற்றி அறிந்திருக்கிறேன்” என்றார்.

தட்டுத் தடுமாறினாலும் தமிழில் பேசிய இந்த வெளிமாநில ஆசிரியர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியதுதான்.

Posted in Bengal, Ceylon, Foreign, HR, Instructors, Integration, Language, Learn, Literature, Manipur, Manipuri, Nagercoil, Orissa, Singala, Sinhala, Sinhalase, Srilanka, Students, Tamil, Teachers, Unity, University, WB, World | Leave a Comment »

Tamil Cinema History – ‘Pesamozhi’ documentary on movies

Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007

ஆவணம்: தொலைந்து போன சினிமா சரித்திரம்!

தமிழ்மகன்

இந்திய தேச வரை படத்தில் இருந்து ஒரு கிராமமே காணாமல் போய்விட்டதை ஒரு சினிமாவில் சுவாரஸ்யமாகச் சொன்னார்கள். தமிழின் 30 ஆண்டு சினிமா சரித்திரமே காணாமல் போயிருக்கிறது என்கிறது “பேசாமொழி’ ஆவணப்படம்.

இரண்டாண்டு கடும் முயற்சிக்குப் பிறகு இந்த ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. தயாரித்தவர் ம.செந்தமிழன். இந்த ஆவணப் படம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட “பகீர்’ கருத்துகள் இவை.

தமிழ்த் திரைப்பட வரலாறு 1931-ல் வெளியான “காளிதாஸ்’ படத்திலிருந்து ஆரம்பமாகிறது. அதற்கு முன்னர் மெüன மொழிப் படங்கள் இங்கே திரையிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் எத்தனை மெüன மொழிப் படங்கள் தயாரானது என்று தெரியவந்துள்ளதா? வேறு பகுதியில் தயாரான படங்கள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டதாகச் செய்தி உண்டா?

1897-ல் தென்னிந்தியாவிலேயே முதன் முறையாகச் சென்னை விக்டோரியா ஹாலில் சினிமா திரையிடப்பட்டது. அதற்கு 6-7 மாதங்களுக்கு முன்புதான் மும்பையில் இந்தியாவின் முதல் திரையிடல் நடைபெற்றது. 1905- ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாகப் படங்களைத் திரையிட ஆரம்பித்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். ரயில்வே பொறியாளரான அவர், படத் தயாரிப்புக்கு முன்பே “லைஃப் ஆஃப் ஜீஸஸ் கிரைஸ்ட்’ என்ற படத்தை வெளியிட்டார். தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த “ரயிலின் வருகை’ (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். இவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள் இங்குத் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன.

அப்போது திரைப்படங்கள் வெளியிட திரையரங்குகள் இருந்தனவா?

இல்லை. நிரந்தரத் திரையரங்குகள் உருவாகாத நேரத்தில் அவரே அதற்கான உபகரணங்களோடு தமிழகம் முழுதும் சுற்றி படங்களைத் திரையிட்டிருக்கிறார். ஆந்திரம், கேரளம், மும்பை, கல்கத்தா, பெஷாவர், இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் இவர் படங்களைத் திரையிட்டிருக்கிறார். இதற்காக அப்போது வெளிநாட்டில் இருந்த படம் தயாரிக்கும் கம்பெனியிடம் ஒப்பந்தமும் போட்டிருக்கிறார். சினிமா மீது மக்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு தமிழகம் முழுதும் டெண்ட் திரையரங்குகள் நிறைய உருவாக்கியிருக்கிறார். மின்வசதி இல்லாத நேரத்தில் மெக்னீஷியத்தைப் பயன்படுத்தித்தான் ஒளி உண்டாக்கிப் படத்தைத் திரையிட்டிருக்கிறார்கள். படம் பார்ப்பதற்கு அணாவாகவோ, அல்லது நெல்- தானியங்களோ வாங்கப்பட்டன. மெüனப் படம் அதன் கதையை விளக்குவதற்காகக் கையில் குச்சியுடன் திரையருகே நின்றிருப்பார். 1928-ல் படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். நிரந்தர திரையரங்குகளைக் கட்டியிருக்கிறார். தென்னிந்தியாவில் அவருக்கு 18 திரையரங்குகள் இருந்தன. கோயம்புத்தூரில் இருந்த வெரைட்டி ஹால் திரையரங்கு அவருடையதுதான். இன்று அந்தச் சாலை வெரைட்டி ஹால் சாலை என்றே அழைக்கப்படுகிறது. மின்சாரத்தைப் பயன்படுத்தித் திரையிட்ட நாட்களில் மின்வசதியால் இயங்கும் தியேட்டர் என்று சாலையில் கூவி விளம்பரம் செய்வார்கள். அதனால்தான் தென்னிந்தியாவில் முதன் முதலில் கட்டப்பட்ட தியேட்டரின் பெயரே எலக்ட்ரிக் தியேட்டர் என்று பெயர் வைக்கப்பட்டது. அந்தக் கட்டடம் இப்போது சென்னை அண்ணா சாலை போஸ்ட் ஆபீஸ் அருகே உள்ளது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தாதா சாகிப் பால்கேதான் இந்திய சினிமாவின் முன்னோடியாகக் கருதப்பட்டு வருகிறார். ஆனால் பால்கேவுக்குத் திரைப்பட ஆர்வம் வருவதற்கே காரணமாக இருந்தது சாமிக் கண்ணு காண்பித்தத் திரைப்படங்கள்தான்.

அவரைப் போல வேறு யாரெல்லாம் இருந்தார்கள்?

நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக மருதமுத்து மூப்பனார். அவர் இங்கிலாந்து சென்று இளவரசரின் திருமணத்தைப் படம் பிடித்து வந்து இங்குத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். 1916-ல் “கீசகவதம்’ என்ற படத்தை நடராஜ முதலியார் உருவாக்கியிருக்கிறார். இவர்கள் எடுத்தப் படங்களோ, அல்லது இவர்களைப் பற்றிய விவரங்களோகூட யாருக்கும் தெரியவில்லை. திரைத்துறை சம்பந்தமாகப் படிப்பவர்களுக்குக்கூட இவர்களைப் பற்றி பாடம் நடத்தப்படுவதில்லை. நேராக கிரிபித், ஹிச்காக், பெலனி என்றுதான் பாடம் நடத்துகிறார்கள். மருதமுத்து மூப்பனாரின் புகைப்படம்கூட காணக் கிடைக்காததுதான் வேதனை.

ஏன் இந்த நிலை? உங்கள் கருத்து என்ன?

பேசும் படம் வந்த பின்புதான் அது அந்த மொழியின் திரைப்படம் என்ற கருத்து நிலவுகிறது. மற்ற மொழிகளில் அப்படியில்லை. அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்டில் பேசா மொழி படத்திலிருந்தே அவர்களின் திரைப்பட வரலாற்றைப் பார்க்கிறார்கள். மற்றெல்லா மொழிகளிலும் அப்படித்தான். அவர்களின் மக்கள் தயாரித்த அவர்களின் மக்கள் நடித்த அவர்கள் பகுதியில் எடுக்கப்பட்ட எல்லாப் படங்களும் அவர்களின் மொழிப்படம்தான். இங்கே ஆந்திரத்திலும் கேரளத்திலும்கூட அவர்களின் பேசா மொழிப் படங்களின் ஆவணங்கள் காணக் கிடைக்கின்றன. இங்கே விஸ்காம் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பேசும் படங்கள் வந்தபின்புதான் தமிழ் சினிமாவின் சரித்திரம் தொடங்கியதாகப் பாடம் நடத்துகிறார்கள். பேசாமொழிப் படங்கள் நம் படங்கள் இல்லை என்ற இந்தப் போக்கும் அவற்றை இழக்க ஒரு காரணமாகிவிட்டது. இந்த ஆவணப் படத்தில் பாமரன் சொல்லுவது போல, தமிழர்களுக்கு வரலாறு இருக்கிறது. ஆனால் வரலாற்று பதிவுகளைப் பாதுகாக்கும் பழக்கம்தான் இல்லை.

இந்தப் படத்தின் விளைவுகள் ஏதேனும் உண்டா?

கோவையில் உள்ள சாமிக் கண்ணு வின்சென்டின் வாரிசுதாரர்கள் படத்தைப் பார்த்துவிட்டுப் பேசினார்கள். அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களையும் ஆவணங்களையும் அளித்தார்கள். அமெரிக்காவில் இருந்து ஒரு பெண்மணி பேசினார். அவர், சாமிக்கண்ணுவிடம் பணியாற்றியவரின் மகள். அவரும் பல தகவல்களைப் பகிரிந்து கொண்டார். விவரங்கள் எங்கோ கொட்டிக் கிடக்கின்றன. நாம் ஒரு அடி எடுத்து வைத்தால்தான் அவை நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைக்கும். அந்த ஓர் அடிதான் இந்தப் பேசா மொழி.

Posted in Arts, Cinema, Docufilms, Documentary, Films, Heritage, History, India, Language, Lost, Movies, Silent, Theaters, Theatres | 4 Comments »

Frankfurt Book Fair: Interview with Kizhakku Pathippagam’s Badri

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

அக்கரை சந்தை:உலக மொழிகளில் தமிழ் நாவல்கள்!

ஃப்ராங்பர்ட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் கிழக்குப் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் பத்ரி.

உலகமெங்கும் உள்ள பல் மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் கூடும் இடமாக இருக்கிறது இக் கண்காட்சி. ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இக் கண்காட்சி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்ரி.

“”இது புத்தகப் பதிப்பாளர்களுக்கான கண்காட்சி என்பதுதான் சரியாக இருக்கும். புதன் கிழமை ஆரம்பிக்கும் இச் சந்தை ஞாயிற்றுக்கிழமையோடு முடிகிறது. இதன் முதல் மூன்று நாட்கள் பதிப்பாளர், அச்சிடுவோர், விநியோகஸ்தர் ஆகியோருக்கானது. சனி, ஞாயிறு தினங்களில் பொது மக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

புத்தக உரிமை, மொழி பெயர்ப்பு உரிமை, ஒப்பந்தங்கள் சம்பந்தமான வர்த்தக பரிவர்த்தனைகள்தான் இக் கண்காட்சியின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு “கெஸ்ட் ஆஃப் ஹானர்’ என்று கெüரவிக்கப்படும். கடந்த ஆண்டு நான் முதல் முறையாகக் கலந்து கொண்ட போது இந்தியாவுக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. இந்த ஆண்டு செடலோனியா (ஸ்பெயின்) நகருக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது.

ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுரா பதிப்பகத்தினர் கலந்து கொண்டு வருவதை அறிந்தேன். மற்ற தமிழ்பதிப்பகங்கள் எதுவும் இதில் ஆர்வம் காட்டாததற்குக் காரணம், இது புத்தக விற்பனைக்கான சந்தையாக இல்லாமல் பதிப்பாளர்களுக்கான ஒரு தளமாக இருக்கலாம். ஒரு முறை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுத் திரும்புவதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் எந்த விதத்திலும் நம் புத்தகங்கள் விற்பனை அந்த அளவுக்கு நடைபெற வாய்ப்பில்லை. ஆனால் இதனால் வேறு மாதிரியான வர்த்தக விரிவாக்கங்களுக்கு முயற்சி செய்ய முடியும் என்பதுதான் என் கருத்து.

இப்போது நம் தமிழ்ப் புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறோம். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், பிரபஞ்சன், நீல.பத்மநாபன், யூமா வாசுகி போன்றோரது 20 நாவல்களை இப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறோம். இவற்றை அக் கண்காட்சியில் இடம் பெற்ற இங்கிலாந்து பதிப்பகத்தார் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். “இந்தியன் ரைட்டிங்ஸ்’ என்ற பிரிவின் கீழ் எங்கள் பதிப்பகத்தில் இவற்றை வெளியிடுகிறோம். அதே போல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நம் எழுத்தாளர்களின் இந்த நாவல்களை மற்ற ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும் முயற்சி செய்கிறோம். இது இக் கண்காட்சியில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட திருப்பம். நாம் இங்கிருந்து போனில் பேசுவதன் மூலம் இதை நிறைவேற்ற முடியாது. நேரில் பேச வேண்டும்; நம் புத்தகங்களின் சாம்பிள்களைக் கொடுக்க வேண்டும். இப் பயணத்தின் மூலம் உலக நூல்களை, இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கான முயற்சிகளையும் செய்ய முடியும். முஷாரப்பின் “தி லைன் ஆஃப் ஃபயர்’ நூலை வெளியிட்டது அத்தகைய முயற்சிதான்.

நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. ஆயினும் இத்தகைய அமைப்புகளும் இதைச் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை” என்ற வருத்தக் கேள்வியோடு சொன்னார் அவர்.

“”தமிழ்நூல்களுக்கு நூலக ஆணை மட்டுமே பிரதான வரவாக இருக்கும் சூழ்நிலையில் இப்படியான முயற்சிகளில் இறங்குவது எப்படி?” என்றோம்.

“”நூலகங்களில் புத்தகம் வாங்குவது வருமானத்தின் ஒரு பகுதி மட்டுமே. பொது மக்கள்தான் எங்கள் நிலையான வாங்கும் சக்திகள். நாம் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களும் சென்று சேருவதற்காக 30 மாவட்டங்களிலும் விற்பனைக் கூடங்கள் வைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி நூல்விற்பனை நிலையங்கள் மட்டுமன்றி பல சிறிய கடைகளிலும் எங்கள் புத்தகங்களை விற்பதற்கு முயற்சி செய்கிறோம். ஆயிரம் பிரதிகள் விற்பதற்கே அல்லல் படும் நிலையிருந்தும் சோம வள்ளியப்பனின் “அள்ள அள்ள பணம்’ என்ற நூலை இந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்திருக்கிறோம். பதிப்பு முறையிலும் விற்பனை விஷயத்திலும் கவனம் செலுத்தினால் புத்தக விற்பனை வெற்றிகரமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்கிறார் நம்பிக்கையுடன்.

தமிழ்மகன்.

Posted in Agents, Annual, audiobooks, Authors, Books, Business, Catalan, Catalonia, Channels, classics, Deals, Deutsch, Deutschland, Distribution, English, EU, Events, Exhibition, exhibitors, Faces, Fair, Fiction, forum, Frankfurt, German, Germany, India, Industry, Interview, Kilakku, Kizakku, Kizhakku, Language, Literary, Literature, Marketing, Media, Meet, Multilingual, NBT, network, Networking, New Horizon, Novels, Outlets, people, publications, Publishers, Reach, Read, Reader, Readers, Reports, sales, Sell, Spain, Story, Sura, Tamil, Trade, Translations, Translator, wholesalers, Works, World | Leave a Comment »

Lightening the load of 10th Standard Tamil Textbook: State of Tamil Nadu Education

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

தமிழுக்கு அநீதி!

ச. செந்தில்நாதன்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைத்து தமிழக அரசு ஓர் ஆணையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருக்கிறது. மாணவர்களுக்குச் “சுமை’ அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். இயல்பான வளர்ச்சிக்கு அது குறுக்கே நிற்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் எந்தப் பாடத்தில் அளவைக் குறைக்க வேண்டும், எதை எடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.

அரசாணையில் திருக்குறளின் அளவைக் குறைத்திருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளுக்காக மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவரான நாகநாதனைத் தலைவராகக் கொண்ட குழு சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைப்பது குறித்து அரசுக்கு அறிக்கைதர பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராஜராஜேஸ்வரி தலைமையில் இன்னொரு குழு அமைக்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் அறிக்கை தந்திருக்கிறது.

அரசு அந்தக் குழுக்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்து அதனை ஏற்க, பள்ளி கல்வித்துறைச் செயலர் 26-7-2007-ல் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணைப்படி குறைக்கப்பட்ட பாடத்தில் திருக்குறளும் அடங்கும்.

10-ம் வகுப்பு பாடத்தில் திருக்குறளிலிருந்து

  1. “புகழ்’,
  2. “வெகுளாமை’,
  3. “இடனறிதல்’,
  4. “ஊக்கமுடைமை’

என நான்கு அதிகாரங்கள் இடம் பெற்றன. இவற்றுள் “இடனறிதல்’, “ஊக்கமுடைமை’ ஆகிய இரு அதிகாரங்களிலும் பத்து பத்து வரிகள் – அதாவது, இருபது வரிகள் நீக்கப்பட்டுள்ளன. நம்முடைய கேள்வி, இந்த இருபது வரிகள், மாணவர்களுக்கு ஒரு சுமையா? திருக்குறளைக் கூடுதலாகப் படிப்பது நல்லதுதானே? குறைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே அளவில் குறைந்த குறளின்மேல் ஏன் கைவைக்க வேண்டும்? இந்த இருபது வரிகள் மாணவர்களுக்கு ஒரு சுமையா?
நீக்கப்பட்டவைகளில் ஐந்து வரிகளைக் கொண்ட குறுந்தொகைப் பாடலும் உண்டு. இந்தப் பாடல் நீக்கத்திற்கு வேண்டுமானால் ஒரு சமாதானம் சொல்ல முடியும். அதாவது, அது அகப்பாடல், காதல் சம்பந்தமான பாடல் என்று சொல்லலாம். 16 வயதிலே குறுந்தொகைக் காட்சியைக் காட்ட வேண்டாம் என்று குழு நினைத்திருக்கலாம். ஆனால் குழு ஒன்றைக் கவனிக்க மறந்துவிட்டது. மாணவர்கள் ஏற்கெனவே காதல் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். திரைப்படத்திலும் தொலைக்காட்சியிலும் காணாத காட்சியா குறுந்தொகைக் காட்சி? திரைக்காதலுக்குப் பதிலாக ஓர் ஆரோக்கியமான காதலை அவர்கள் குறுந்தொகையில் தரிசித்து விட்டுப் போகட்டுமே!

கவிஞர் தமிழ் ஒளியின் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற பாடல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. பாரதி, பாரதிதாசனுக்குப்பின் தமிழுலகம் அறியப்பட வேண்டிய கவிஞர் தமிழ் ஒளி. எனவே அவர் பாடல்கள் பாடத்தில் வருவதுதான் சரியாக இருக்கும். மேலும் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற கவிதை அறிவியல் வளர்ச்சியையும், மனித ஆற்றலையும் வெளிப்படுத்துவது. இதை ஏன் நீக்க வேண்டும்? இளைய தலைமுறை தமிழ் ஒளியை அறிய வேண்டாம் என்று நினைக்கிறார்களா? நீர்த்துப்போன கவிதைகளை எல்லாம் பாடப்புத்தகத்தில் நிறுத்திக்கொண்டு, அடர்த்தியான கவிதைகளை அவசர அவசரமாக நீக்குவதேன்?

உரைநடைப் பகுதியில் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் எழுதிய மனையியல் என்ற கட்டுரை எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து துணைப்பாடத்தில் இரண்டு கதைகள் நீக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட ஒரு கதை அசோகமித்திரனின் “விடிவதற்குள்’ என்ற சிறு கதையாகும். சென்னை நகரில் தண்ணீர் பஞ்சத்தால், விடிவதற்குள் தண்ணீர் பிடித்து வைப்பதற்காக அலையும் ஒரு குடும்பத்தலைவியின் கதை இது. தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும்போது, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைச் சித்திரிக்கும் கதை இது.

தண்ணீர்த் தட்டுப்பாட்டை இப்படி படம்பிடித்துக் காட்டினால், அரசு மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணமோ தெரியவில்லை; நீக்கிவிட்டார்கள். இது ஒரு யதார்த்தமான கதை. ஒரு வாழ்க்கைப் பதிவு. அப்படித்தான் குழு பார்த்திருக்க வேண்டும். ஆனால் குழு அரசியல் நோக்கில் கணக்குப்போட்டு கழித்தல் வேலையைச் செய்திருக்கிறது. இப்படிப் பார்த்தால் வாழ்க்கையின் சிரமங்களைச் சித்திரிக்கும் எந்தக் கதையும் பாடப் புத்தகத்தில் இடம் பெற முடியாமல் போய்விடும்.

முற்போக்கு எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாளின் “மண்ணாசை’ நீக்கப்பட்ட, இன்னொரு கதை. இந்தக் கதையின் நீக்கத்திலும் அரசியல் இருக்கிறது.

பட்டாளத்தில் வேலைபார்த்து சொந்த மண்ணுக்குத் திரும்பும் பட்டாளத்தார் தாம் கொண்டுவந்த பணத்தை எல்லாம் நிலத்தில்கொட்டி மா, பலா, கொய்யா என்று மரங்களை வளர்த்து, தன் வாழ்க்கையையே அவற்றோடு பிணைத்துக்கொள்கிறார்.

அவருடைய மகன் கொஞ்சம் தோட்டத்தை வைத்துக்கொண்டு, மீதித் தோட்டத்தை எல்லாம் மனைகளாகப் பிரித்து, புதிய நகரை உருவாக்கப்போகும் நபர்களுக்கு விற்க ஏற்பாடு செய்து, கடைசியில் தோட்டம் விற்கப்படுகிறது. பத்திரத்தைப் பதிவு செய்துவிட்டு வரும் பட்டாளத்தார், அதற்குள் மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்து, மரத்தோடு மரமாய் சரிந்து விழுகிறார். மரணப் படுக்கையில் நாள்கள் ஓடுகின்றன. மண்ணாசைதான் உயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் அவருடைய மைத்துனர், தோட்டத்திற்குப்போய் மண் எடுத்து வந்து, தண்ணீரில் கரைத்து பட்டாளத்தார் வாயில் ஊற்றுகிறார். சிறிது நேரத்தில் ஒரே விக்கலோடு உயிர்போய்விடுகிறது.

இந்தக் கதையைப் பாடத்திலிருந்து விலக்குவதில் ஓர் உள்ளார்ந்த அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. நிலங்களைக் கையகப்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், பெரும் தனியார் நிறுவனங்களுக்கும் மக்கள் மத்தியில் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்தச் சூழலில் “மண்ணாசை’ கதையைப் படித்தால் மண்ணாசை அதிகமாகுமே என்ற எண்ணமும் இக்கதையை நீக்க ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

தமிழ் ஒளி, சோலை சுந்தரபெருமாள் போன்றவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்கள். முற்போக்கு வாசத்தை மாணவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்பதும் குழுவின் குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். திருக்குறளின் அளவைக் குறைப்பது என்பது குழுவின் நோக்கமாக இருந்திருக்காது. தாங்கள் அரசியல்நோக்கில் எடுத்த முடிவை அமலாக்க “திருக்குறளிலேயே சில குறள்களை எடுத்துவிட்டோம்’ என்று காரணம் காட்டுவதற்குத்தான் திருக்குறளிலும் கைவைத்திருக்கிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது.

மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கைதான். அதற்காக மாணவர்கள் சிரமப்படும் பாடங்களில் சுமையைக் குறைக்க வேண்டுமே தவிர, சிந்திக்க வைக்கும் பாடங்களை நீக்கக்கூடாது.

தமிழக அரசு தாமதம் செய்யாமல் தன்னுடைய அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்.

(கட்டுரையாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர்)

Posted in 10th, Ami, Answers, Asokamithiran, Asokamithran, Asokamitran, Avoid, Books, Conservative, Couplets, Decrease, Delete, Education, Exams, Fiction, Kural, Kurunthogai, Kurunthokai, Language, Learn, Lessons, Liberal, Life, Lighten, Literature, Load, Main, Non-detail, Obsolete, PAK, papers, Planning, Poems, Poet, Questions, Read, Reduce, Sample, Sangam, Schools, Second, Songs, standard, State, Students, Tamil, Tamil Nadu, TamilNadu, Teach, Teachers, Tenth, Textbook, Textbooks, Thirukkural, Thirukural, Thiruvalluvar, TV, Valluvar | Leave a Comment »

Formation of Tamil Nadu – History of Madras Presidency: Potti Sreeramulu

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

மக்கள் விரும்பிய மாநிலம்

உதயை மு. வீரையன்

இன்று தமிழ் மாநிலம் அமைந்த 51ஆம் ஆண்டு தினம். கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் இதன் “பொன்விழா’ கொண்டாடப்பட்டது. இதுவரை சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஏனைய மாநிலங்கள் மட்டுமே மாநில உதயதினத்தை விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருந்தன.

இந்திய விடுதலைப் போராட்டம் வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தபோது, மாநிலங்களின் பிரிவினைக்கான குரல்களும் எழுந்தன. நாடு விடுதலைபெற்றதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கான கிளர்ச்சிகளும் வெடித்தன. முதல் பிரதமர் பண்டித நேரு இப்பிரச்னைக்குத் தீர்வாக இந்தியா முழுவதையும் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்தார்.

அவை தட்சிணப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என்பனவாகும். இவற்றுள் “தட்சிணப் பிரதேசம்’ என்பது தமிழ்நாடு, கன்னடம், கேரளம், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கியதாகும்.

இதை ராஜாஜி மட்டுமே வரவேற்றார்; பெரியார் கடுமையாக எதிர்த்தார்; அண்ணாவும் கண்டனம் தெரிவித்தார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு போராடின. நேருவும் வேறுவழியில்லாமல் இத்திட்டத்தை கைவிட நேர்ந்தது.

1953ஆம் ஆண்டுவரை தமிழ்நாடும் சென்னை மாகாணத்தின் ஓர் அங்கமாகவே விளங்கியது. இந்தப் பலமொழிக்கூட்டில் சிக்கிக்கிடந்தவர்கள், தனியாக “விசால ஆந்திரம்’ வேண்டுமெனவும், “ஐக்கிய கேரளம்’ வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பினர். இதற்காக ஆந்திர மகாசபை, கேரள சமாஜம் என்ற அமைப்புகளை உருவாக்கி கட்சிசார்பின்றி ஒன்றுபட்டுக் குரல்கொடுத்தனர்.

இதன் பிறகுதான், காங்கிரஸ் கட்சியிலிருந்த ம.பொ. சிவஞானம், முதன்முதலாக “தமிழ் அரசு’ அடைய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போது “வடவேங்கடம் முதல் குமரிவரையுள்ள தமிழகம்’ அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும்வகையில் தை மாதம் முதல்நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என விரும்பிய ம.பொ.சி., தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்று அறிக்கையும் வெளியிட்டார்.

1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டப்பேரவையில் மொழிவாரி மாநிலப் பிரிவினையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொழிவாரி மாநிலப் பிரிவினைபற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட “தார் குழு’ 1948 செப்டம்பர் 13-ல் சென்னைக்கு வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.

“தமிழக எல்லை மாநாட்டை’ தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. 1949-ல் சென்னையில் நடத்தினார். மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்து, பதவியைத்துறந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமையில் சென்னை மாகாண முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். “வடவேங்கடம் முதல் தென்குமரிவரையுள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும்’ என்ற தீர்மானம் இம்மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1953-ல் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். இதன்பிறகு நேருவின் மனம் மாறியது. நாடாளுமன்றத்தில் 1953 அக்டோபர் 2-ல் “ஆந்திர மாநிலம்’ அமைவதற்கான வாக்குறுதியை அவர் அளித்தார்.

இருப்பினும் “சென்னை யாருக்கு?’ என்ற பிரச்னை எழுந்தது. “தமிழகத்துக்கே உரியது’ என்பதை முடிவு செய்ய அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி, காங்கிரஸ் தலைவர் காமராஜர், சென்னை மேயர் செங்கல்வராயன், முன்னாள் மேயர் எம். ராதாகிருஷ்ண பிள்ளை, தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. முதலியோர் கடுமையாகப் பாடுபட்டனர். அன்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியையும், பிரதமர் நேருவையும் சம்மதிக்கவைப்பதற்குப் பெரும்பாடுபட்டனர்.

1953 மார்ச் 25-ல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு, ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை வெளியிட்டார். இதில் ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார். அதன் பிறகே சென்னை பற்றிய கவலை நீங்கியது.

மொழிவாரி மாநிலப் போராட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை தென்எல்லை மீட்புப் போராட்டமும், வடஎல்லை மீட்புப் போராட்டமும் வரலாற்றில் இடம்பெற்றவை. தென்எல்லைப் போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் விளைவாகவே தெற்கு எல்லை “கன்னியாகுமரி’யாகவே நீடிக்கிறது.

வடஎல்லைப் பாதுகாப்புக் குழு ம.பொ.சி. தலைமையில் அமைக்கப்பட்டது. அதற்கு கே. விநாயகம் செயலாளர். மக்களை அணிதிரட்ட உதவியவர் மங்கலங்கிழார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சர் ஹெச்.வி. படாஸ்கரை இந்திய அரசு நியமித்தது.

படாஸ்கர் பரிந்துரைப்படி, திருத்தணி தாலுகா முழுவதும் (ஒரே ஒருகிராமம் நீங்கலாக), சித்தூர் தாலுகாவில் 20 கிராமங்கள், புத்தூர் தாலுகாவில் ஒரு கிராமம் உள்பட 322 கிராமங்கள் ஆந்திரத்தில் இருந்து பிரித்து, தமிழகத்துடன் சேர்க்கப்பட்டன. அதேபோல, தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர், பொன்னேரி தாலுகாக்களிலிருந்து சில கிராமங்கள் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டன.

இந்தப் பெரும் போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தியாகிகள் பலர். ஆந்திர மாநிலம் அமைக்கக் கோரி போராடி, 1953-ல் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்ததையும், “தமிழ்நாடு’ பெயர் கோரி உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்க நாடார் 1956 அக்டோபர் 13-ல் உயிர்துறந்ததையும் தவிர்த்திருக்க வேண்டும்.

எனினும் மாநில முதல்வர் பொறுப்பிலிருந்த ராஜாஜி, காமராஜரின் பங்கு குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னை என்பது ஆந்திரத்தின் பிடிவாதமான கோரிக்கையாக இருந்தபோது ராஜாஜி பத்திரிகையாளர்களிடம் கூறினார். “”சென்னைப் பட்டணத்தை ஆந்திரத்துக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை அமல்படுத்தும் சக்தி எனக்கு இல்லை; இந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரதமரிடம் கூறிவிட்டேன்…” என்றார். பிரதமர் மனம்மாற இதுவும் ஒரு காரணம்.

அத்துடன், அவரது “தட்சிணப் பிரதேச’ அறிவிப்பின்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை எடுத்துக்கூறி, அதைக் கைவிடச் செய்த பெருமை அப்போதைய முதலமைச்சர் காமராஜரையே சேரும். இதற்கெல்லாம் மேலாக ம.பொ.சி.யின் பணியையும் மறக்க முடியாது.

மாநிலப் பிரிவினை குறித்து, எல்லா மாநிலங்களுக்கும் மனக்குறைகள் இருக்கின்றன. வட எல்லையான வேங்கடத்தை இழந்தது தமிழகத்திற்கு ஓர் குறையாகவே கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள மராட்டியப் பகுதியான பெல்காம் மாவட்டத்தைத் திரும்பப்பெற “மராட்டிய சமிதி’ தொடர்ந்து போராடி வருகிறது.

இச் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியவைதான்; ஆனால் தீர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதில் சில அரசியல்வாதிகள் கவனமாக இருக்கின்றனர்.

மொழிவாரிப் பிரிவினை மாநிலங்களுக்கான பிரிவினையே தவிர, மக்களுக்கானது அல்ல. மொழி என்பது பிரச்னைகளுக்கு முடிவாக இருக்க வேண்டுமே தவிர, தொடக்கமாக இருக்கக்கூடாது.

Posted in Andhra, Anna, AP, authority, Chennai, Congress, Dakshin, Democracy, Divide, EVR, Federal, Freedom, Independence, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Language, Madras, MaPoSi, MPs, Nehru, North, Periyar, Power, Presidency, Province, Rajaji, Region, Republic, Rule, Shree ramulu, Shreeramulu, Shri ramulu, South, Sree ramulu, Sreeramulu, Sri ramulu, Sriramulu, State, Tamil, Tamil Nadu, TamilNadu, Telugu, TN, Zone | Leave a Comment »

Tamil Language & Medium of Instruction – No Exam Fees

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 18, 2007

ஆவலுடன் தமிழ்த்தாய்!

தமிழினியன்

இன்னொரு “இலவச’ உத்தரவு! தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு – தேர்வுக் கட்டணம் இல்லை. தமிழை மேம்படுத்துவதுதான் இச் சலுகையின் நோக்கமென்றால், அது தவறு. பொதுவாக தமிழ்நாட்டில் எதை வளர்க்கிறோமோ இல்லையோ, இலவசங்களை வளர்த்துக்கொண்டே போகிறோம்.

தேர்தலின்போது, வாக்காளர்களுக்குத்தான் எத்தனை இலவசத் திட்டங்கள்! அவை சரியா, இல்லையா, நிலைக்குமா, நிலைக்காதா என்ற கேள்விகளுக்கு அப்பால்~ ஆட்சி அமைக்க அத் திட்டங்கள் அடிகோலியது மட்டும் என்னவோ மறுக்க முடியாத உண்மை.

ஆனால், தமிழ் வளர்ச்சி என்ற சாக்கில் தமிழ்வழிக்கல்வி மாணவர்களுக்கான இச் சலுகை தமிழையும் வளர்க்காது; மாணவர்களுக்கும் பயன் தராது. மாறாக, மாணவர்களிடையே அடுத்த தேர்வில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மெத்தனப் போக்கைத்தான் ஏற்படுத்தும். இலவசமாகப் படி என்பதாலோ இலவசமாகத் தேர்வு எழுது என்பதாலோ தமிழை வளர்க்க முடியும் என்பது நடைமுறையில் பயன் தராத கற்பனை.

ஏனென்றால், இலவசங்களுக்கு ஆசைப்பட்டுக் கற்கக்கூடிய மொழி அல்ல தமிழ். அப்படி ஒரு நிலைமை தமிழ்நாட்டில் தமிழுக்கு இருக்குமானால் அதைவிட வெட்கக்கேடு வேறில்லை. செம்மொழி என்ற சிகரத்தைத் தொட்டிருக்கும் தமிழை இதுபோன்ற இலவசத் திட்டங்களால் கொச்சைப்படுத்தலாகாது.

தமிழ்வழிக்கல்வியை முழுமையாகக் கொண்டு வருவதற்கான ஒரேவழி, தமிழைத்தான் படிக்க வேண்டும் என்ற சூழலைத் தமிழ்நாட்டில் உருவாக்குவதுதான். இத்தகையச் சூழலை, கேரளத்திலோ, கர்நாடகத்திலோ, ஆந்திரத்திலோ அல்லது மத்தியப் பிரதேசத்திலோ உருவாக்க முடியாது. தமிழ் மண்ணில் மட்டும்தான் அத்தகைய நிலைப்பாட்டை ஏற்படுத்த இயலும்.

அதற்கான ஆக்கப்பணிகளை இப்போதே தொடங்கினால்தான் வரும் கல்வியாண்டில் இருந்து தமிழ்வழிக் கல்வியை அமல்படுத்த முடியும். அதுதான் தமிழ் வளர்ச்சிக்கு நாம் ஆற்றும் உண்மையான தொண்டு.

ஏற்கெனவே மாணவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள். உதாரணமாக, இலவசப் பேருந்துப் பயணம். இது சலுகைதானா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி. எழுத்தறிவு, கண்ணொளிக்கு சமம். கண்ணில்லாவிட்டால் எப்படி உலகத்தைப் பார்க்க முடியாதோ, அதைப்போல் கல்வி இல்லாவிட்டால் உலகத்தை அறிய முடியாது.

எனவேதான் உணவு, உடை, உறையுள் ஆகிய அத்தியாவசியத் தேவைகளில் நான்காவதாகச் சேர்க்கப்பட்டுள்ளது கல்வி. எனவேதான் பட்டிதொட்டிகளில் எல்லாம் இன்று பாடசாலைகள் உள்ளன. இருந்தும் ஓர் ஊரில் உள்ள மாணவர்கள் இன்னோர் ஊரில் போய் படித்து வரும் நிலை நீடிக்கிறது.

நடுநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி நிலையங்கள் உள்ளூரில் இல்லை என்று வேற்றூர் போவோர் ஒருசாரார். கல்விக்கூடம் சரியாக இல்லை என்பதும் கற்றுத் தருவார் யாருமில்லை என்பதும் இன்னொரு காரணம்.

முதலாவது காரணத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் இரண்டாவது காரணத்துக்காக மாணவர்கள் வெளியூர் செல்வதைத் தவிர்க்க முடியும். கட்டட அமைப்புகளையும் பராமரிப்பையும் முறையாகச் செய்து, ஆசிரியர் நியமனங்களையும் தேவைக்கேற்ப செய்து முறைப்படி கல்வி நிறுவனங்களை நிர்வகித்தால் இரண்டாவது காரணத்தைத் தவிர்ப்பது சாத்தியம்.

இன்னொரு தேவையற்ற காரணமும் இருக்கிறது. இலவசப் பயணத்தை அனுபவிப்பதற்காகவே சில மாணவர்கள் (சிறுவர்கள்தானே) ஊர்விட்டுஊர் செல்கிறார்கள். அவர்களிடையேயும் கல்விபால் நாட்டத்தை ஊட்ட வேண்டும்.

இலவசப் பயணத்தின் எதிர்விளைவுகளைக் கவனிப்போம்:

மனிதநேரம் மதிப்பிட முடியாதது. ஒரு தொழிலாளி ஒருமணி நேரம் உழைக்க இயலாமல்போனால், உற்பத்தி குறையும். அதைப்போல் படிப்பதற்கு ஏற்ற அருமையான காலைப்பொழுதில், பேருந்துப் பயணம் மேற்கொள்வதால் “மாணவர் நேரம்’ விரயமாகிறது. தவிர புத்தக மூட்டையைத் தோளில் சுமந்து கொண்டு அவர்கள் பேருந்து நெரிசலில் படும் அவதி இருக்கிறதே… சொல்லும் தரமன்று. அத் தொல்லைக்கு உள்ளாகும்போது மாணவன் தன் சக்தியை இழந்து விடுகிறான். களைத்தும் சோர்ந்தும் வகுப்பறைக்கு அவன் செல்கிறான். அந்தப் பரிதாப நிலையில் அவனுக்குப் பாடம் கேட்கத் தோன்றுமா? தூக்கம்தான் வரும்.

அரசு மனது வைத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் இந்த இடையூறுகளைத் தவிர்க்க அல்லது குறைக்க நிச்சயமாக முடியும். ஆனால் இப்பணியில் ஒரு தயக்க நிலையே இன்னும் இருக்கிறது. அதனால்தான் இலவசச் சலுகைகளைக் காட்டி அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

பத்து ஆண்டுகள் படித்து, பத்தாவது ஆண்டு முடிவிலோ அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் பயின்று, பன்னிரண்டாம் ஆண்டு முடிவிலோ, இலவசத்தேர்வு எழுத முடியும் என்பதற்காக தமிழ் படிக்க மாணவர்கள் முன்வருவார்கள் என எதிர்பார்ப்பது பேதைமை.

அடிப்படைக் கல்வி அவசியம் என்றுதான் ஆரம்பக்கல்வியை இலவசமாக்கினோம். ஆறாம் வகுப்பிலிருந்து கட்டணம் செலுத்தி படிக்கும் நிலைமை ஐம்பதுகளில் இருந்தது. அப்போது அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழே பயிற்று மொழியாக இருந்தது. அப்போது இந்தப் பயிற்றுமொழிப் பிரச்னை எழவே இல்லை. தமிழில்தான் அனைவரும் உயர் கல்வி பயின்றார்கள். பட்டப்படிப்பு முடித்து, வேலையும் கிடைத்து வாழ்க்கையில் உயர்ந்தார்கள். நிலைத்தார்கள்.

ஆனால் அறுபதுகளின் ஆரம்பத்தில் அத் தவறு நேர்ந்துவிட்டதே. ஆமாம்: உயர்கல்வியும் இனி இலவசம் என்ற சட்டம் வந்தது அப்போதுதான்.

மேலோட்டமாகப் பார்த்தால் அரசின் தாராளமானபோக்காக அது தோன்றும். உண்மையும் அதுதான். ஏனெனில் வசதிக்குறைவான மாணவர்களும் தவறாமல் உயர் கல்வி பெற வேண்டும் என்ற பரந்த நோக்கத்தைக் கொண்டதல்லவா அத்திட்டம். எனவே அதற்கு பெருத்த வரவேற்பு கிடைத்ததில் நியாயம் உண்டு.

ஆனால் அதன் தாக்கம் எதிர்விளைவாகி ஒரு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது.

உயர்கல்வி இலவசமானதும் கல்வியின் தரம் குறைந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் இருதரப்பிலும் இலவசக் கல்வியை “பத்தியக்கஞ்சியாக’ பார்க்கத் தலைப்பட்டார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு தாக்கம்~ சமூகப் பார்வையிலானது.

நடுத்தர மக்களும் மேல்தட்டுவாசிகளும் இலவசக் கல்வி தரக்குறைவு என்பதோடு கௌரவக் குறைவு என்றும் கருதினார்கள். இத் தருணத்துக்கென்றே காத்திருந்த வியாபாரக் கல்வியாளர்கள் தங்கள் பணியைத் தொடங்கிவிட்டனர். கட்டணத்துடன் தமிழ்க்கல்வி என்றால் கவர்ச்சி இருக்காதே, ஆகவே கட்டணத்துடன் ஆங்கிலக் கல்வி என்று கடைவிரித்தார்கள். வியாபாரம் சூடு பிடித்தது. ஆங்கிலம் களைகட்ட, தமிழ் களைஇழந்தது.

இதிலிருந்து, ஆங்கிலக் கல்வி, தேவை அடிப்படையில் ஏற்பட்டது அல்ல; தற்செயலாக நேர்ந்த விபத்து என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் தாய்த் தமிழ்நாட்டில் தாய்த்தமிழை இலவசமாகவேனும் படியுங்கள் என்பது கேவலமாகத் தோன்றுகிறது. தமிழின் பெயரால் கொண்டுவரும் சலுகை எதுவாயினும், அது தமிழுக்குப் பின்னடைவே தவிர, தமிழ் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது.

சமச்சீர் கல்வி பற்றி பேசப்படுகிறது. இதன் சாராம்சம் உயர்கல்வி வரை தமிழ்தான் சகலருக்கும் பயிற்று மொழி என்று இருக்குமானால் – மாநில அரசும் அதை முழு மனதுடன் அமலாக்கத் துணியுமானால், தமிழ்நாட்டில் தமிழ் மீண்டும் அரியணை ஏறும்.

அந்த இனிய திருநாள் வாய்க்குமா? தமிழ்த்தாய் ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறாள்!

Posted in Cho, Education, English, Exam, Examination, Fees, Free, Freebies, Hindi, HSC, Instruction, Language, Necessity, Passion, Schools, Students, Survival, Tamil, Teachers, Test | Leave a Comment »

State of India – Public Policy, Planning commission goals, Regional Development: N Vittal

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

மக்களுக்காகவே நிர்வாகம்!

என். விட்டல்

இந்தியா என்ற ஒரு தேசத்தை இணைப்பது எது என்று கேட்டு தொடர்ச்சியாக சில கட்டுரைகளை வெளியிட்டது ஒரு பத்திரிகை. இந்தியச் சுதந்திர தினத்தின் வைர விழாவையொட்டி இக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்தியாவை இணைப்பது அதன் கலையா, கலாசாரமா, பண்பாடா, வரலாறா என்று பல கேள்விக் கணைகளை எழுப்பின அக்கட்டுரைகள்.

சுதந்திரம் அடைந்த பிறகு நாம் ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்புச் சட்டம் நமது நாட்டை, மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அழைக்கிறது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா 3 வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை 1. பிரிட்டிஷ் மகாராணியாரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதி. 2. பிரிட்டிஷ் மகாராணியைத் தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமாக ஆட்சி நடத்திய 600 சுதேச சமஸ்தானங்கள். 3. வட-மேற்கு எல்லைப்புற மாகாணம், வட-கிழக்கு மாநிலங்கள். இங்கு பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி கிடையாது. ஒரு ஏஜெண்ட் மட்டும் இருந்தார். வட-மேற்கும் வட-கிழக்கும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

மாகாணங்கள் என்ற அமைப்பு பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்டதே சுவையான வரலாறு. வட இந்தியாவில் வசித்தவர்கள், விந்திய மலைக்குத் தெற்கில் வசித்த அனைவரையும் மதறாசி என்ற ஒரே பெயரில் அழைத்தனர். மதறாஸ் மாகாணம் என்பதில் தமிழ்நாடு, ஆந்திரத்தின் சில பகுதிகள், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் சில பகுதிகள் சேர்ந்திருந்தன. எனவே மலையாளி, தெலுங்கர், கன்னடியரைக்கூட மதறாசி என்றே வட இந்தியர்கள் அழைத்தனர்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. தங்களுடைய தாய்மொழி மீது கொண்ட பற்றினால் மக்கள் இப்படி மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிப்பதை விரும்பினர். அப்படிப் பிரித்ததே சில இடங்களில் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அது, கலாசார ரீதியாகக் குறுகிய மனப்பான்மையையும் மக்களிடையே ஏற்படுத்தியது. இன, பிராந்திய அடையாளங்கள் புதிதாக உருவாயின.

தனி நாடு கோரிய திமுக, சீனப்படையெடுப்புக்குப் பிறகு “திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டது. அதே சமயம், “மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தை முன்னே வைத்தது. இப்போது மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சியான காங்கிரஸýடன் இணைந்து மத்தியில் கூட்டணி அரசு அமைத்துள்ளன. திமுகவின் கோரிக்கை நிறைவேறியிருப்பதாகக் கூட இதைக் கருதலாம்.

தேசப் பாதுகாப்பு, தனி மனிதப் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய மூன்றும் சுதந்திர இந்தியாவில் எப்படி இருக்கிறது என்று ஆராய்வோம். பொருளாதார வளர்ச்சி அவசியம் என்பதை எல்லா அரசுகளும் எல்லா தனி மனிதர்களும் ஏற்றுக்கொள்வார்கள். 1991-க்குப் பிறகு பொருளாதார தாராளமயம் அவசியம் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளக் கட்டமைப்பு மிகவும் அவசியம். இவற்றை அளிக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் அரசுக்குத்தான் இருக்கிறது.

அடித்தளக் கட்டமைப்பு என்றவுடன் தொலைத்தொடர்புத் துறைதான் முதலில் நினைவுக்கு வருகிறது. அது எப்படி வளர்ந்து பரவிவிட்டது! அடுத்தது ரயில்வே துறை. சரக்குகளைக் கையாள்வதில் திறமையும் வருவாய் ஈட்டுவதில் சாமர்த்தியமும் காட்டி, உபரி வருவாயைப் பெற்றுள்ளது ரயில்வேதுறை.

ரயில்வேயும் தொலைத்தொடர்புத் துறையும் மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பவை. இப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராத பல துறைகளில் வளர்ச்சி திருப்திகரமாகவும் சீராகவும் இல்லை. மின்சாரத்துறையையே எடுத்துக் கொள்வோம். என்.டி.பி.சி., பவர் கிரிட் என்ற இரு மத்திய நிறுவனங்களும் திறமையான செயல்பாடு, குறித்த நேரத்தில் திட்டங்களை முடிப்பது ஆகிய சிறப்புகளுக்காகப் புகழ் பெற்றவை. பெரும்பாலான மாநிலங்களில் மின்சார வாரியங்கள் நிதி நிலைமையில் மிகவும் பின்தங்கியும், ஏராளமான கடன் சுமையிலும் தள்ளாடுகின்றன. இதற்குக் காரணம் அந்த மின்வாரியங்கள் அல்ல. இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களால் அவற்றின் நிதி நிலைமை மிகவும் பலவீனமாகிவிட்டன.

வாக்குவங்கியைக் குறிவைத்துச் செயல்படும் மாநில அரசியல்கட்சிகளால் மின்சார வாரியங்கள் பலிகடாவாகிவிட்டன. மிக முக்கியமான மின்னுற்பத்தித் துறையை இப்படி விடுவது சரிதானா? ரயில்வே, தொலைத் தொடர்பு போல மின்சாரத்துறையையும் மத்திய அரசே தன் பொறுப்பில் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடுவதற்காகக் கூறப்படும் யோசனை அல்ல. பொருளாதார வளர்ச்சிக்காகவே கூறப்படுகிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர்வளத்துறையை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் காவிரி நிதிநீர்ப் பகிர்வு போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு வலுவாகத் தலையிட முடியும்.

வளர்ச்சிக்கு அடுத்தபடியாக ஆனால் வளர்ச்சியைவிட முக்கியத்துவம் வாய்ந்தது மனிதனின் உயிருக்குப் பாதுகாப்பு தருவது. கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைப் பார்க்கிறோம். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் விவகாரம் அல்லது குற்றச்செயல் என்றால் உடனே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவது வழக்கமாகிவருகிறது. சி.பி.ஐ. என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தல் என்று வந்துவிட்டால் மாநிலப் போலீஸôர் மீது நம்பிக்கை இல்லை, மத்திய துணை நிலை ராணுவப் படைகளை அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றனர். அப்படி இருக்க, மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை விசாரிக்க, ஃபெடரல் போலீஸ் படை இருந்தால் நன்றாக இருக்குமே?

மாநில உணர்வு, சொந்த அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைப் பற்றி மட்டும் கவலை கொள்ளாமல் மாநிலத்துக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று தெரிந்தால் அந்த மாற்றங்களைச் செய்யத் தயங்கக் கூடாது. நன்மை செய்யும் என்று நினைத்து மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் தீமை அதிகம் வந்தால், எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளவும் தயங்கக்கூடாது. நிர்வாகம் என்பது மக்களுக்காகத்தானே தவிர, நிர்வாகத்துக்காக மக்கள் இல்லை.

சாலை வசதி, மின்னுற்பத்தி, தண்ணீர் வளம் ஆகிய முக்கிய பிரச்னைகளில் மாநிலங்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய அதிகாரத்தை மத்திய அரசுக்கு ஒப்புக்கொடுத்து வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுக்காகக் காத்திராமல், மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை சி.பி.ஐ. விசாரிக்க புது ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அரசு நிர்வாகம் என்பது தனி மனித பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் மாற்றம் பெற வேண்டும்.

(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத் துறை முன்னாள் ஆணையர்)

Posted in 50, 60+, 75, Andhra, AP, Bengal, Budget, Caste, Center, Centre, China, Commerce, Common, Communication, Community, Consruction, Country, Courts, Culture, Democracy, Development, Districts, Division, DMK, Economy, Electricity, Federal, Finance, Freedom, GDP, Govt, Growth, Heritage, Hinduism, Independence, India, infrastructure, Justice, Language, Law, Linguistics, National, North East, Northeast, Order, Pakistan, Patel, Planning, Power, Private, Province, Provinces, Public, Railways, Region, Religion, Resources, River, Roads, Sardar, Security, Sharing, Speak, Speech, States, TamilNadu, Telecom, Terrorism, Terrorists, TN, Tradition, Transport, Transportation, Water | Leave a Comment »

Islam religion & Muslims in Tamil Nadu – Backgrounders, Explanantions, Current State: Interview

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 14, 2007

தீவிரவாதத்துக்கு இஸ்லாமில் அனுமதி கிடையாது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆரம்பம் என்ன? எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?

எங்களது இயக்கத்தின் தொடக்கம் எண் பதுகளில் ஆரம்பித்தது. வரதட்சிணை, பெண் அடிமைத்தனம், புரோகிதம் போன்ற மூடநம்பிக்கைகள் முஸ்லிம்களிடமும் இருக்கின்றன. திருக்குரானுக்கு எதிரான செயல்கள் இவை என்பதை நாங்கள் எடுத் துரைத்தோம். அதனால், எங்கள் சமுதாயத்தினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட அதுதான் காரணமாக இருந்தது.

ஜாக் என்பது அந்த அமைப்பின் பெயர் ஜமியா அஹவி குர் ரான்-உல்-ஹதீஸ் என்பது அதன் விரிவாக்கம். திருக்குர்ரான் மற்றும் நபிகள் நாயகத்தின் பாதையைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதுதான் அர்த்தம். சுமார் பதினைந்து வருடங்கள் எங்களது பிரசாரம் தொடர்ந்தது. மெல்ல, மெல்ல சமுதாயத்தினர் மத்தியில் பெரிய அளவில் எங்களுக்கு வரவேற்பு அதிகரித்தது.

நமக்கு எதிராகத் தொடுக்கப்படும் கொடுமைகளையும், அடக்குமுறைகளையும் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதுதான் மக்க ளாட்சியில் சரியான வழியே தவிர தீவிரவாதம் அல்ல என்பது தான் அன்றும் இன்றும் எனது அழுத்தமான அபிப்பிராயம். தங்களது எதிர்ப்பை நியாயமாகத் தெரிவிக்க முடியாதபோதுதான், வன்முறையிலும் தீவிரவாதத்திலும் எங்களது சமுதாய இளைஞர் கள் இறங்குகிறார்கள்.

அதற்காக ஏற்பட்ட அமைப்புதானே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்?

ஆமாம். அதன் அமைப்பாளர் நான்தான். குணங்குடி ஹனீஃபா என்பவர் அந்தப் பெயரில், பெயரளவில் ஓர் அமைப்பை வைத்துக் கொண்டிருந்தார். அதனால் அவரைத் தலைவராக அறிவித்தோம். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழ கத்தைத் தொடங்கியபோது நாங்கள் இரண்டு விஷயங்களில் தீர் மானமாக இருந்தோம். அவை, எந்தக் காரணம் கொண்டும் தேர்த லில் போட்டியிடுவதில்லை என்பதும், எந்தவித அரசுப் பதவியும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதும்தான்.

அதற்கு என்ன காரணம்?

பதவியைக் காட்டிதான் எங்களது சமுதாயம் பல வருடங்க ளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. 1967-ல் “காயிதே மில்லத்’ முகம்மது இஸ்மாயில் அவர்கள் திமுகவுடனான கூட்டணியில் பெற்ற இடங்கள் 15. இப்போது ஓர் இடத்திற்குக் கூட்டணி கட்சிக ளிடம் கெஞ்ச வேண்டியிருக்கிறது. 1967-ல் திமுகவுடன் கூட் டணி அமைப்பதற்கு முன்னால் அண்ணா அளித்த வாக்குறுதி தான் எங்கள் சமுதாயத்துக்கான இடஒதுக்கீடு. அதனால்தான் ஒட் டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் தமிழ்நாட்டில் திமுக கூட்ட ணிக்கு வாக்களித்தது.

அண்ணா இறந்துவிட்டதும் அன்றைய முஸ்லிம் லீக் தலைவர்கள் தங்களது இடங்களுக்கான ஒதுக்கீட்டு டன் ஒதுங்கிக் கொண்டார்களே தவிர, சமுதாயத்துக்கான இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்படவில்லை. அதனால்தான் நாங் கள் தேர்தலில் போட்டியிடுவதோ, பதவிக்கு ஆசைப்படுவதோ கூடாது என்று தீர்மானம் போட்டோம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பிளவுபட என்ன காரணம்?

முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்கிற தவறான கண்ணோட்டம் மாறவேண்டும் சமுதாய நல்லிணக்கத்துக்காக நாம் பாடுபட வேண்டும் போன்ற உறுதியான கொள்கைகளுடன் பல்வேறு மாநாடுகளையும், ஆங்காங்கே கூட்டங்களையும் ஏற்பாடு செய் தோம். அப்படி நடத்திக் காட்டியதுதான் தஞ்சையில் நடத்திய பேரணி. அந்தப் பேரணியில் தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் எங்களில் சிலருக்கு அரசியல் ஆசையை ஏற்படுத்திவிட்டது. பதவி ஆசை வந்துவிட்ட பிறகு சமுதாய நலன் புறக்கணிக்கப்பட்டு விடும் என்பது எனது கருத்து.

அவர்கள் பாதையில் செல்ல எனது மனம் ஒப்பவில்லை. அதன் விளைவுதான் இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.

ஆமாம், தவ்ஹீத் ஜமாத் என்றால் என்ன அர்த்தம்?

தவ்ஹீத் என்றால் சரியான இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பது என்று அர்த்தம். நமது சீர்திருத்தப் பிரசாரம் கைவிடப்பட்டால் நமது செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் நாட்டமுடைய த.மு.மு.க. நிர்வாகிகளில் சிலர் கருதி னார்கள்.

“தவ்ஹீத்’ தங்களது அரசியல் ஆசைக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று அவர்கள் நினைத்தது தவறு என்று நிரூபிப்பதற் காகத்தான் எங்களது இயக்கத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்று பெயரிட்டோம்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு உங்களு டைய முயற்சிகள் முக்கியமான காரணம் என்று கருதப்படுகி றது. இட ஒதுக்கீட்டை நீங்கள் வலியுறுத்தியதன் காரணம் என்ன?

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கிறீர்களே, அது சரியா, அதிலென்ன நியாயம் என்று கேட்கிறார்கள். முதலாவதாக, முஸ் லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்பது பறிக்கப்பட்ட உரிமை திருப் பித் தரப்படுவதுதானே தவிர, புதிய சலுகை அல்ல. இந்தியா சுதந் திரம் அடைந்த நேரத்தில் எங்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது எங்க ளுக்கு இருந்த இட ஒதுக்கீடு ஏழு சதவீதம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இப்போது மதரீதியாக இட ஒதுக்கீடு அளிக் கப்பட்டிருந்தாலும் உண்மையில் ஏற்கெனவே இருக்கும் இட ஒதுக்கீடுதான் தனியாகப் பிரித்து அளிக்கப்படுகிறது. இந்த விஷ யத்தைப் பற்றி மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எங்களை அழைத்துப் பேசினார். அப்போது மதரீதியாக இட ஒதுக்கீடு அளிக்க அரசியல் சட்டம் இடமளிக்காது என்று கருத்துத் தெரிவித் தார். இதற்கு ஏதாவது மாற்று வழி இருக்கிறதா என்று எங்களிடம் கேட்டபோது, நாங்கள்தான் அந்த வழியைக் காட்டினோம்.

நீங்கள் காட்டிய மாற்று வழிதான் என்ன?

ஏற்கனவே லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் போன்ற எங்க ளது இஸ்லாமியப் பிரிவினர் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடில் இடம் பெற்றிருக்கிறார்கள். மொத்த பிற்பட்டோர் பட்டியலில் இருப்பதால் அதன் பயன் எங்களுக்கு கிடைப்பதில்லை. புதிதாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போதுதான் பிரச்னை வருமே தவிர, ஏற்கெனவே இருக்கும் பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு மட்டுமாகப் பிரித்து ஒதுக்குவதில் யாரும் குற்றம்காண முடியாது என்பதைக் கனிமொழியிடம் எடுத்துரைத்தோம். இடஒதுக்கீடு கிடைத்ததற்கு எங்கள் சமுதாயம் நன்றி சொல்லவேண்டியது முதல்வர் கருணாநி திக்கு மட்டுமல்ல, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கும் தான்.

முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தேவைதானா?

நிச்சயமாகத் தேவைதான். மதரீதியாக மட்டும் அதைப் பார்க் கக்கூடாது. சமுதாய நல்லிணக்க ரீதியாகவும் பார்க்க வேண்டும்.
எங்கள் சமுதாய இளைஞர்கள் பலர் படிப்பதில்லை. அப்படியே படித்தாலும் அவர்களுக்கு வேலையில்லை. இப்படிப் படித்த, வேலையில்லாத இளைஞர்களைத்தான் தீவிரவாத இயக்கங்கள் குறிவைத்துத் தங்களது வலையில் வீழ்த்துகின்றன. போதிய படிப் பறிவும், வேலையும், அதனால் ஏற்படும் சமூக அந்தஸ்தும் முஸ் லிம் சமுதாய இளைஞர்கள் தீவிரவாதிகளின் வலையில் விழுந்து விடாமல் தடுக்கும்.

இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்றுக்கொன்று பிணைந்தவை யாக இருக்கின்றன என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களது பதில் என்ன?

இது மேலைநாட்டவரால் வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்படும் ஏமாற்று வேலை. விடுதலைப் போராளிகளை மதத் தின் பெயரால் குற்றம் சாட்டுவது எந்தவிதத்திலும் நியாய மில்லை. ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவரும், இராக்கில் அந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவரும், பாலஸ்தீனத்தில் அந்த நாட்டின் விடுதலைக்கா கப் போராடுபவரும் இஸ்லாமியராக இருக்கிறார்கள். அதற்கு என்ன செய்யமுடியும்?

அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும், பிரான் ஸிலும் அவரவர் நாட்டின் சுதந்திரப் போராட்டம் நடக்கும்போது அமெரிக்க உள்நாட்டுப் போராளி, ரஷியப் புரட்சிக்காரர், பிரெஞ் சுப் புரட்சியாளர்கள் என்று சொன்னார்களே தவிர, கிறிஸ்துவப் புரட்சியாளர்கள் என்றா கூறினார்கள்?

அப்படியானால் இந்தத் தீவிரவாதிகளை எப்படித்தான் அழைப்பது?

அந்தந்தத் தீவிரவாத அமைப்பின் பெயரால் அழையுங்கள்.

அதற்கு ஏன் இஸ்லாமியத் தீவிரவாதம் என்று பெயரிட்டு அத் தனை இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று சித்திரிக்கிறீர்கள்? இப்படி அழைப்பதன் மூலம் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக மாறுவதற்கு வழி வகுக்கப்படுகிறது. அது தவறு என்கிறோம்.

இந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கு முஸ்லிம் சமுதாயத்தி னர் மத்தியில் வரவேற்பு இல்லை என்கிறீர்களா?

நிச்சயமாக. இஸ்லாமும் இஸ்லாமியர்களும் தீவிரவாத இயக் கங்களை ஆதரிப்பதே இல்லை. தீவிரவாதத்துக்கு இஸ்லாமில் அனுமதி கிடையாது என்பதுதான் உண்மை. இஸ்லாமியர்கள் மட் டும் அல்ல; எந்தவொரு சமுதாயமும், சமாதானமாகவும், பிரச் னைகள் இல்லாமலும் வாழவேண்டும் என்றுதான் விரும்புமே தவிர, இது போலத் தீவிரவாத அமைப்புகளுடன் ஒத்துழைக்கவே முன் வராது. அது மனித இயல்பு.

இதைக்கூடப் புரிந்துகொள்ளா மல், இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்று கூறுவது மடமை. விவரமில்லாத பேச்சு.

இந்தியாவில் காணப்படும் தீவிரவாதத்துக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

நக்சலைட்டுகள், காஷ்மீர தீவிரவாத இயக்கங்கள், அசாமி லுள்ள போடோ தீவிரவாதிகள் என்று பலர் இருந்தாலும், இந்தி யாவிலுள்ள தீவிரவாதிகளில் பலரும் பாகிஸ்தான் உளவு அமைப் பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடையவர்கள் என்பதை மறுப்பதற் கில்லை. இந்த விஷயத்தில் இந்திய முஸ்லிம்கள் அவர்களது சதி வலையில் விழுந்துவிடக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கை.

முஸ்லிம் சமுதாயத்தினரிடையே நிலவும் மூடநம்பிக்கை களை எதிர்க்கிறோம் என்கிறீர்கள். அப்படி என்ன மூடநம்பிக் கைகள் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?

வரதட்சிணை என்கிற பழக்கமே திருக்குர்ரானுக்கு எதிரான விஷயம். ஆண்கள்தான் பெண்களுக்கு “மஹர்’ தரவேண்டுமே தவிர, ஆண்களுக்குப் பெண்கள் வரதட்சிணை தரும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது. ஆனால் தற்போது இந்தப் பழக்கம் நிலவுகிறது. அதேபோல, தர்கா வழிபாடு திருக்குர்ரானில் மறுக் கப்பட்ட ஒன்று. ஆனால் பெண்கள் பலரும் தர்காவுக்குச் சென்று வழிபடுகிறார்கள். அது தவறு என்று கூறுகிறோம்.

புரோகிதம் என்பது இஸ்லாமியர்களுக்குக் கிடையாது. அதேபோல, ஆண்க ளைவிடப் பெண்களுக்கு அதிக உரிமைகளை இஸ்லாம் அளித்தி ருக்கிறது. ஆனால் அவை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. விவா கரத்து விஷயத்தில் ஆணுக்கு இருப்பதைவிட அதிக உரிமை பெண்களுக்குத்தான். அவர்களது உரிமைகளுக்காக நாங்கள் போராடுகிறோம்.

பெண்களின் சுயமரியாதை பாதிக்கப்படுகிறது என்று கூறும் நீங்கள், பெண்கள் “பர்தா’ அணிவதைப் பற்றி என்ன கூறுகிறீர் கள்?

“பர்தா’ என்பது உடலை மறைக்கும் ஆடை. அவ்வளவுதான்.

இஸ்லாமில் முகத்தை மறைக்கவேண்டும் என்று எங்கேயும் சொல் லவில்லை. ஆனால் முகத்தையும் கை,கால்களையும் விட்டுவிட்டு மற்ற பாகங்களை மறைக்க வேண்டும் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள பொதுவான நியதி. பெண்கள் “பர்தா’தான் அணியவேண்டும் என்பதில்லை. உடலை மறைக் கும் உடைகளை அணியவேண்டும், அவ்வளவே..!

அவரவர் இஷ்டப்படி உடையணியும் உரிமை ஏன் பெண்க ளுக்கு மறுக்கப்படுகிறது?

ஆண்கள் தொப்புளைக் காட்டியபடி உடையணிவதில் எந்தவி தக் கவர்ச்சியும் கிடையாது. ஆனால் அவர்கள் அப்படி உடையணிவதில்லையே? பெண்கள் தங்களது உடலழகை உலகுக்குக் காட்டியபடி பலரது உணர்வுகளைத் தூண்டும் வகையில் உடைய ணிவது, கலாசாரமற்றவர்கள் செய்கை. இதை நாகரிகம் என்று எப்படி ஏற்றுக் கொள்வது? ஆண்கள் உடலை மறைத்து உடை அணிவது போலப் பெண்களும் உடையணிவதில் தவறு காண் பவர்கள், வக்கிரபுத்தி உடையவர்கள். பெண்களின் உரிமை என்பது உடையணிவதில் அல்ல. அவர்களது நியாயமான அந் தஸ்தையும், மரியாதையையும் பெறுவதில்தான் இருக்கிறது.

தங்களது உடைப் பழக்கத்தாலும், பேச்சு வழக்காலும் இஸ்லாமியர்கள் மற்ற சமுதாயத்தினரிலிருந்து வேறுபடுகிறார் கள் என்கிற கருத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முஸ்லிம் சமுதாயத்தைப் பொருத்தவரை, உடைப் பழக்கம் மாறுபடுகிறது என்பது சரி, ஆனால் பேச்சு வழக்கு மாறுபட்டிருக் கிறது என்பது தவறு. உடைப் பழக்கம் என்றால், ஒவ்வொரு சமு தாயத்துக்கும் அவரவர் உடைப் பழக்கங்கள் இருக்கின்றன.
அதில் நாம் தவறு காண முடியாது. தமிழகத்தில் உள்ள பெருவாரி யான முஸ்லிம்கள் தமிழ் பேசுபவர்கள்தான். வெறும் ஐந்து சதவி கித முஸ்லிம்கள்தான் உருது பேசுபவர்கள்.

சினிமாவில் முஸ்லிம் கள் என்றாலே “நம்பள்கி, நிம்பள்கி’ என்று பேசுவது போலக் காட்டி தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்கள் அனைவருமே உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்கிற ஒரு தவ றான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விட்டார்கள். எங்கள் சமுதா யத்தினர் மத்தியில் இருக்கும் தமிழார்வம் எத்தகையது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

கிறிஸ்துவர்கள் மாதா கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தும்போது, இன்றும் பள்ளிவாசலில் அரபிதான் ஒலிக்கிறது என்கிற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி இருக்கிறது. ஆனால், ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய “ஜனகணமன’ என்கிற தேசிய கீதத்தை நாம் ஏன் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்? அந்த தேசிய கீதம் வங்காளத்தில் இருக்கிறது என்பதால் நாம் தமிழனாகவோ, இந்தியனாகவோ இல்லாமல் போய்விடுகிறோமா? கடவுளுக்கு எல்லா மொழியும் ஒன்றுதான். பிரார்த்தனைகளை எந்த மொழியில் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டப்படி செய்து கொள்ளலாம். பல்வேறு இனத்தவரையும், நாடுகளையும் கடந்தது மதமும் இறையும். அதை ஒருங்கிணைக்க, மத ஒற்றுமையை நிலைநாட்ட ஒரு மொழியை தொழுகை மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அது அரபி, அவ்வளவே. பள்ளிவாசலில் அரபியில் ஓதுவதால், நாங்கள் தமிழரல்ல என்று சொல்வது அபத்தமான வாதம்.

அயோத்தி பிரச்னையில் உங்களது அமைப்பின் நிலைப்பாடு என்ன?

இப்படி ஒரு பிரச்னையைத் தீர்வே இல்லாமல் இழுத்துக் கொண்டு போவது இந்தியாவின் ஒற்றுமைக்கும், நமது வருங்காலத்துக்கும் நல்லதல்ல. அப்படியொரு சூழ்நிலையை அரசும், அரசியல் கட்சிகளும் உருவாக்கி அதில் ஆதாயம் தேட முயலுகிறார்கள் என்பது ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நன்றாகவே தெரியும். இதற்காக இரண்டு தரப்பினருக்கும் ஏற்புடைய நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைத்து, விரைவாகத் தீர்ப்பளிப்பதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும். அந்தத் தீர்ப்பு எப்படி இருந்தாலும் இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்வதுதான் முறை. இதுதான் எங்கள் நிலைப்பாடு.

ராமர் பாலப் பிரச்னை பற்றி…?

இந்தப் பிரச்னைக்கும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் சம்பந்தமே கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும். எங்களை ஏன் அநாவசியமாக வம்புக்கு இழுக்கிறீர்கள்?

ஒவ்வொரு வருடமும் விநாயகர் ஊர்வலம் வரும்போது மட்டும் கலவரங்கள் ஏற்படுகின்றனவே, அது ஏன்?

எங்களைக் கேட்டால் எப்படி? கேட்க வேண்டியவர்களிடம் கேளுங்கள். எல்லா ஊர்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தேரோட்டம் நடைபெறுகிறது. கோயில் கும்பாபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அங்கெல்லாம் கலவரம் நடக்கிறதா? மதுரையில் மக்கள் லட்சக்கணக்கில் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று, இரண்டு பள்ளிவாசல்களைக் கடந்துதான் அந்தச் சப்பரம் செல்கிறது. எப்போதாவது ஏதாவது கலவரம் நடந்ததுண்டா? காரணம். அவை பக்தர்களால் நடத்தப்படுபவை. ஆனால், விநாயகர் ஊர்வலங்கள் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுபவை. மதமும் அரசியலும் ஓர் ஆபத்தான கலவை. அதனால்தான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சியாக மாறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

முஸ்லிம்கள் பலதார மணத்தை ஆதரிப்பதால் மக்கள்தொகை பெருகி, அவர்கள் பெரும்பான்மை சமுதாயமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது- இந்த வாதத்திற்கு உங்கள் பதில் என்ன?

முஸ்லிம்கள் பலதார மணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறதே தவிர, பலதார மணம் செய்து கொள்ளும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அகில இந்தியப் புள்ளிவிவரப்படி ஹிந்துக்களில்தான் ஒன்றுக்கு மேற்பட்ட தாரமுடையவர்கள் அதிகம் இருக்கிறார்கள். எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்க வேண்டும், தரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம் இவையெல்லாம் பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பதுதான் நிஜம்.

இஸ்லாமியர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். சின்ன விஷயத்தைக்கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களுடைய பதில் என்ன?

எங்களுக்கு இழைக்கப்படும் பல அவமானங்களை நாங்கள் வெளியில் சொல்வதில்லை. தாங்கிக் கொள்கிறோம். மனதிற்குள் புழுங்குகிறோம். நாங்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான். எங்களை இந்தியர்களாகப் பார்க்காமல், இஸ்லாமியர்களாக, பாகிஸ்தானின் கைக்கூலிகளாக சிலர் சித்திரிக்க முற்படும்போது நாங்கள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. இந்திய

முஸ்லிமுக்கு இருக்குமளவு சகிப்புத் தன்மை உலகில் வேறு யாருக்குமே கிடையாது என்று சொல்ல வேண்டும். அதையும் மீறி நாங்கள் இந்தத் தேசத்தை, இந்த மண்ணை நேசிக்கிறோம். ஏன் தெரியுமா? தலைமுறை தலைமுறையாக நாங்கள் இந்தியர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். இன்னும் சகிப்போமே தவிர எங்கள் இந்தியத் தனத்தை இழக்க மாட்டோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – இது இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் அமைப்பு. கும்பகோணத்தில் இந்த அமைப்பு நடத்திய பேரணியும் ஊர்வலமும், சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய முஸ்லிம் பேரணிகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜைனுல் ஆபிதீனை ஒரு மதச்சார்பு இயக்கவாதி என்பதைவிட ஒரு சீர்திருத்தவாதி என்றுதான் சொல்ல வேண்டும். இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கரைத்துக் குடித்தவர் என்பது ஒரு
புறம் இருக்க, இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை மாற்றுவதில் முனைப்பாக இருப்பவர் என்பதுதான் இவருடைய தனித்தன்மை.
சொல்லப் போனால் தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்திருக்கும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு, தவ்ஹீத் ஜமாத்தின் சிறை நிரப்புப் போராட்டத்தின் எதிரொலிதான் என்று கருத இடமுண்டு. இஸ்லாம் பற்றியும், இஸ்லாமிய
சமுதாயம் பற்றியும் என்ன கேள்வியைக் கேட்டாலும் அதற்குக் கோபப்படாமல் பதில் சொல்லும் இவரது லாவகம், பிரமிக்க வைக்கிறது. ஒரு சமுதாயத்தை நேர் வழியில் நடத்திச் செல்லும் திறமையும் தகுதியும் படைத்தவர் என்று மாற்று
மதத்தினரும் மதிக்கும் தலைவராக இருக்கும் ஜைனுல் ஆபிதீனின் இன்னொரு சிறப்பு – பதவி அரசியலில் இவருக்கு இல்லாத நாட்டம்.
தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் அளித்த சிறப்புப் பேட்டி~

Posted in Abhidheen, Abhitheen, Abhithin, Abidheen, Abitheen, Abithin, Ayodhya, Ayodya, Ayothya, Blasts, Caste, Child, Christ, Christianity, Christians, Cinema, Community, Democracy, Dhouheed, DMK, Eid, Explanantions, explosion, Extremism, Extremist, Extremists, Films, Ganesh, Ganesha, Id, Interview, Islam, Jainul, Jamadh, Jamat, Jamath, Jesus, Jihad, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kids, Kuran, Language, Mosque, mosques, Movies, Muslims, NGO, Outbursts, Pillaiyaar, Pillaiyar, Population, Purda, Purdah, Purtha, Purthah, Quran, Ram, Ramadan, Ramar, Ramazan, Ramdan, Ramzan, Religion, Sensitive, Sethu, SIMI, State, Tamil, Tamil Nadu, TamilNadu, Teerorism, Terrorism, terrorist, Terrorists, Thouheed, TMMK, TN, TNTJ, Touheed, Touheed Jamat, Urdu, Vinayak, Violence, Wakf | Leave a Comment »

Primary Education – Tamil as a Language in Schools for youth

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007

தமிழுக்கு இனி பொற்காலம்!

தமிழினியன்

தமிழர் வாழ்க்கை இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. தமிழர்கள் கணிசமாக வாழும் நாடுகளில் தமிழை விருப்பப் பாடமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. குடியேறிய நாடுகளில் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு, சொந்த மண்ணில் தமிழர்களுக்கு இல்லை என்பது வேதனை மட்டும் அல்ல, அதிர்ச்சியும் அளிக்கிறது.

சிபிஎஸ்இ-ல் முதல் வகுப்பிலிருந்து விருப்பப் பாடமாக தமிழ் உள்ளது; மெட்ரிக் முறையிலும் உள்ளது. கேந்திரிய வித்யாலயங்கள் மட்டும் தமிழைப் புறக்கணிக்கின்றன. தமிழ்நாட்டில் – தமிழ் மாணவர்களுக்கு – தமிழ் சொல்லித் தராத பள்ளிகள் இருக்கத்தான் இருக்கின்றன. நாமும் இந்த நிலைமையைச் சகித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

கேந்திரிய வித்யாலயங்களில் பயிலும் குழந்தைகளுக்குத் தமிழ் மொழிப் பயிற்சிக்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. இத்தகைய மாணவ, மாணவிகள் நாளைக்கு பெற்றோராகும்போது, அவர்களுடைய குழந்தைகளும் தாய்மொழியின் முக்கியத்துவம் அறியாமல்தானே வளர்க்கப்படும் நிலை ஏற்படும்!

தமிழர்களின் மனதைக் காயப்படுத்தும் நிகழ்கால உண்மை இது. இந்தச் சூழலில் “தமிழ் வளர்ந்தால் நாடு வளரும்’ என்று பேசுகிறோம்; செம்மொழி ஆய்வு நிறுவனம் அமைக்கிறோம்; தொல்காப்பியர், குறள்பீட விருதுகளின் மதிப்பை உயர்த்துகிறோம். ஆனால் இன்றைய தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுக்கொடுக்க நாம் சரியான வழிகளை வகுத்துக் கொடுத்திருக்கிறோமா என்றால் – இல்லை.

தமிழ் இலக்கியங்களைத் தனது ஆதரவுப் பதிப்புகளாக வெளியிடச் செய்து வரும் ஓர் ஆன்மிகப் பெரியவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மிக வருத்தமாகச் சொன்னார்: “சங்க இலக்கியங்களின் அருமை பெருமைகள் பற்றி நான் அடிக்கடி பேசி வருகிறேன். ஆனால் எதிர்காலத்தில் இவற்றை எல்லாம் யார் படிக்கப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது; ஏனென்றால் நம் தமிழகப் பள்ளிகளில் இப்போது தமிழை உரிய முறையில் சொல்லித் தருவதில்லை! என்பது அவரது ஆதங்கம்.

அந்த வருத்தமான உண்மையை அன்றைய கூட்டத்திலேயே காண முடிந்தது. அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் அரைநூற்றாண்டைக் கடந்தவர்களாகத்தான் இருந்தார்களே தவிர இளைஞர்களின் எண்ணிக்கை, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குக்கூட இல்லை.

ஆரம்பக் கல்வி தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்பது சர்வதேச மொழி ஆய்வாளர்களின் தீர்க்கமான முடிவு. இதை உலக நாடுகள் அனைத்தும் உணர்ந்திருக்கின்றன. அம் முறையை அங்கீகரித்தும் இருக்கின்றன. உலகம் ஏற்றுக்கொண்ட அந்த அறிவுபூர்வ உண்மை, தமிழ்நாட்டில் மட்டும்தான் போற்றப்படவில்லை. தமிழகத்தில் தமிழைக் கட்டாயப்படுத்தி முன்னர் ஒரு சட்டம் கொண்டு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கிலப் பள்ளிகள் அதற்கு நீதிமன்றத்தில் தடைவாங்கி விட்டன.

பிழைக்கும் வழியில் ருசி கண்டவர்கள், தமிழ்மொழி பிழைக்க வேண்டாம் என்று எண்ணியதில் ஆச்சரியம் இல்லைதான். ஆனால் அதைவிட ஆச்சரியம், அவர்களின் போக்கைக் கண்டு அரசும் மெத்தனமாக இருந்ததுதான்.

தமிழ்… தமிழ் என்று வாய் ஓயாமல் பேசுகிறோம். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கை முழங்கச் செய்கிறோம். இறைவணக்கத்துக்குப் பதிலாக தமிழ் வணக்கம்கூட பாடுகிறோம். ஆனால் மறுகணமே கொஞ்சமும் கூச்சப்படாமல் ஆங்கிலத்தின் காலடியில் சரணடைந்து விடுகிறோம்.

ஆங்கிலம் உலகப் பொதுமொழி என்பதும், அது செய்தி தொடர்புக்கும் வேலைவாய்ப்புக்கும் அவசியம் என்பதும் உண்மைதான். ஆனால் அது ஆரம்பப் பள்ளியில் ஆரம்பமாக வேண்டிய அவசியம் இல்லை. ஆறாம் வகுப்பில்தான் அதை அறிமுகப்படுத்த வேண்டும் – இரண்டாம் மொழியாக.

தமிழைப் போதனா மொழியாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் உயர்பதவி வகித்து வருகிறார்கள்.

உண்மை இவ்வாறு இருக்க, எல்.கே.ஜி.யில் நாம் ஆங்கிலம் படிக்க ஆசைப்படுவது ஏன்? சூழ்நிலையால் இது தூண்டிவிடப்பட்ட ஆசை. யாரால் தூண்டப்பட்டது? வியாபாரம் கருதியே ஆரம்பிக்கப்பட்ட ஆங்கிலப் பள்ளிகளால். அவர்களால்தான் தமிழ்ப் பெற்றோர்கள் மம்மி, டாடி என்ற மாயையில் மதி மயங்கி விட்டார்கள். எனவே இந்த மாயச் சூழல் உடனடியாகப் போக்கப்பட வேண்டும். அதற்கு அரசு மனது வைத்தால்தான் முடியும். அதற்கான ஒரேவழி, ஐந்தாம் வகுப்புவரை தமிழைத்தவிர வேறு எந்த மொழியையும் எந்தப் பள்ளியும் சொல்லித் தரக்கூடாது என்ற விதியைக் கொண்டு வரலாம்.

தமிழகத்திலுள்ள வேற்றுமொழிக்காரர்கள் நகரங்களில்தான் இருப்பார்கள். அவர்களுக்கும் தமிழ் கட்டாயம்தான். ஆனால் அவர்கள் தங்கள் தாய்மொழியை விருப்பப் பாடமாகக் கற்றுக் கொள்ளலாம். இந்த மொழியிலான மதிப்பெண்கள் கல்வித்திட்டத்தின் அடிப்படையிலான பாடங்களின் மொத்த மதிப்பெண்களில் சேராது. இந்த வசதி பிராந்திய மொழிப் பிள்ளைகளுக்கு மட்டுமே உள்ளது. விருப்பப்பாடம்தானே என்று தமிழ்க் குழந்தைகளுக்கு எக்காரணம்கொண்டும் அந்த வசதியை அளித்துவிடக் கூடாது.

தாய்மொழி அறிவு இளமையிலேயே விதைக்கப் பெற்றால்தான் மொழி அறிவு வளம்பெறும். பிறமொழி கற்க அது துணையாக அமையும்; உலக ஞானமும் பொது அறிவும் விரிவடையும்.

குழந்தைகளுக்கு தோட்டத்தில் காணும் பட்டாம்பூச்சி ஐந்தாம் வகுப்பு வரை பட்டாம்பூச்சியாகவே இருக்கட்டும். யானையை யானை என்றும் குதிரையை குதிரை என்றும் அவர்கள் சொல்லட்டும். ஐந்தாம் வகுப்பைக் கடந்த பிறகு, “இ’ ஃபார் எலிஃபண்ட்’ எனச் சொல்லித் தருவோம். அப்போதுதான் தமிழில் யானை, ஆங்கிலத்தில் “எலிஃபண்ட்’ என்பது தெளிவாகும்.

அதைவிட்டு, கீழ் வகுப்பில் “எலிஃபண்ட்’ என்று படித்துவிட்டு வரும் குழந்தைக்கு “தெருவில் யானை வருகிறது பார்’ என்றால் அது என்ன என்று தெரியாமல் குழப்பத்தால் குழந்தை திகைக்கக் கூடும்.

புத்தகத்தில் உள்ள படத்தைக் காட்டி இது “கேட்’ என்றால், இந்தப் பிராணியை கேட் என்றுதான் சொல்ல வேண்டும்; “கேட்’தான் அப் பிராணிக்குரிய சொல் என்று பிஞ்சு மனதில் பதிவாகிவிடுகிறது. பூனையைத்தான் ஆங்கிலத்தில் “கேட்’ என்கிறோம் என்பது அக் குழந்தைக்குத் தெரியாது. இதனால் தமிழ்க் குழந்தைக்கு பூனை அன்னியமாகி விடுகிறது. இப்படி அடுத்தடுத்து குழந்தை மனதில் ஆங்கில வார்த்தைகள் பதிவானபின், தமிழ் புகுத்தப்படுவதாய் எண்ணி, தமிழை அறிந்து கொள்ளத் தடுமாறுகிறது.

இத் தடுமாற்றம் நமக்கும் இருந்ததாலோ என்னவோ இதுநாள்வரை வாளா இருந்துவிட்டோம். இப்போது நீதிமன்ற உத்தரவு கிடைத்துவிட்டது. இனிமேலாவது நாம் இதை மனப்பூர்வமாகச் செயல்படுத்த வேண்டும்.

அரசின் பெரும்பாலான திட்டங்கள் சந்தர்ப்பவாதங்களாலும் தமக்குத் தாமே சரியான தெளிவின்மையாலும் செயலிழந்துவிடுகின்றன.

அந்த அவல நிலை இனி தமிழுக்கு வரக் கூடாது. தமிழ் வாழ்க என்பது அலங்கார மேடைப்பேச்சாக இல்லாமல், மனப்பூர்வமாகத் தமிழை வாழ வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழர்களும் மனப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: ஆலோசகர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம்).

————————————————————————————————-
தன்னாட்சிக் கல்லூரிகளில் கேள்விக்குறியாகி வரும் தமிழ் மொழிப் பாடம்

வி.என். ராகவன்

திருச்சி, செப். 5: தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, தமிழகப் பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலைப் பட்டப் படிப்புகளில் முதலாமாண்டிலும், இரண்டாமாண்டிலும் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் இடம் பெற்றுள்ளது.

ஒரு வகுப்பில் வாரத்துக்கு 6 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்தப்பட வேண்டும். தமிழ் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் வாரத்துக்குத் தலா 16 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டும். துறைத் தலைவருக்கு மட்டும் 12 மணிநேரம்.

இந்த நிலை அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் தொடர்கிறது. அரசு தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலைதான்.

ஆனால், அரசு உதவி பெறும் பல தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

சில தன்னாட்சிக் கல்லூரிகளில் வாரத்துக்கு 5 மணி நேரம் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. சில கல்லூரிகளில் வாரத்துக்கு 4 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகவியல் போன்ற பிரதான பாடங்கள் நடத்தப்படுகின்றன. பிரதான பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான் மாணவர்களின் மேல் படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் கை கொடுக்கும் என்பதே இதற்குக் காரணம் என்கின்றன தன்னாட்சிக் கல்லூரி வட்டாரங்கள்.

ஆனால், இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படுவது ஒட்டுமொத்தமாகவே கைவிடப்பட்டாலும் வியப்பதற்கில்லை என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.

தமிழ் பயில்வதற்கான வாய்ப்புகள் குறைந்தால், வருங்காலத்தில் தாய் மொழியான தமிழ், தமிழர் பண்பாடு போன்றவை மாணவர்களுக்குத் தெரியாமலே போய்விடும்.

தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு குறைக்கப்படுவது அரசுக்கே தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது. எனவே, தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் நிலையை முழுமையாகக் கண்டறிவதற்கு ஒரு குழு அமைத்து, ஆய்வு செய்ய வேண்டும். இதில், பயிற்றுவிக்கும் கால அளவு குறைந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள் பேரமைப்பினர்.

இந்தக் கால அளவு குறைப்பால், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்த் துறைகளில் ஆள் குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.

குழு அமைப்பு: இதுபற்றி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ கூறியது:

“கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவைக் குறைக்க முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை. இதுதொடர்பாக அரசு குழு அமைத்துள்ளது. இதில் நானும் இடம்பெற்றுள்ளேன்.

பாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்கு உள்பட்ட கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு குறையாது. தமிழக அளவிலும் கல்லூரிகளில் குறைக்க விடமாட்டோம். எனவே, தமிழ்ப் பேராசிரியர்கள் கவலைப்படத் தேவையில்லை’ என்றார் பொன்னவைக்கோ. தன்னாட்சிக் கல்லூரிகளில் முடிவு எடுப்பதற்கான உரிமை நிர்வாகத்துக்கு உள்ளதால், மொழிப்பாடத்தில் கை வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. மொழிப் பாடம் பயிற்றுவிப்பதற்கான கால அளவைக் குறைக்கக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழுவே விதிமுறையை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.

Posted in CBSE, Colleges, Education, HSC, ISC, KG, Language, LKG, Matric, Matriculation, Metric, Metriculation, Primary, Schools, Students, Tamil, Thamizh, UKG, univ, University, Youth | 4 Comments »

APJ Abdul Kalam – Why two party system will not work for India? (Op-ed)

Posted by Snapjudge மேல் மே 30, 2007

விபரீத யோசனை

சிப்பாய் புரட்சி ஏற்பட்ட 150-வது ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுப்பிய ஒரு கருத்து, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதில் வியப்பில்லை.

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைப் போல் இந்தியாவிலும் இரண்டு கட்சி ஆட்சி முறை ஏற்படுவது நல்லது என்பதுதான் அவர் கூறியிருக்கும் கருத்து. சாதாரணமாக அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கருத்துக் கூறாமல் இருக்கும் குடியரசுத் தலைவர், தனது பதவிக்காலம் முடிய இருக்கும் நேரத்தில் இப்படியொரு சர்ச்சையைக் கிளப்ப வேண்டிய அவசியம் தான் என்ன?

மேலைநாடுகளைப் பொருத்தவரை, நமது நாட்டில் இருப்பது போல இந்த அளவு

  • சாதி,
  • மத,
  • மொழி,
  • சமுதாய,
  • பொருளாதார ரீதியிலான பிரிவினைகள் கிடையாது. அதுமட்டுமல்ல, ஒரு சிலர் தவிர மற்ற அனைவருமே அடிப்படைக் கல்வி கற்றவர்களாக இருப்பதுடன், பொருளாதார ரீதியில் அடிப்படை வருமானம் உடையவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்தியாவைப் பொருத்தவரை, அத்தனை பிரிவினரின் குரலையும், தேவைகளையும் பிரதிபலிக்கவும், அவர்களது உணர்வுகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவும், தேசியக் கட்சிகளால் இயலாமல் போனதன் விளைவுதான் இத்தனை கட்சிகளும், மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியும்.

ஒட்டுமொத்த தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும்போது சில பல சிறிய பிரிவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போவது சகஜம். பல சந்தர்ப்பங்களில், சில பிரிவினரின் எதிர்ப்பார்ப்புகளும் உணர்வுகளும் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கும் சாத்தியமும் உண்டு. அதன் விளைவுதான் பல்வேறு அரசியல் கட்சிகள். பல கட்சி ஆட்சிமுறையில், குறிப்பாக நாடாளுமன்ற ஆட்சி முறையில் இது தவிர்க்க முடியாத நிர்பந்தம்.

பிரிட்டன் போன்ற மக்கள்தொகை குறைந்த, பொருளாதார மற்றும் கல்வி ரீதியில் வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், அதிபர் முறை ஆட்சி அமைப்புள்ள அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கும் இரு கட்சி ஆட்சிமுறை என்பது இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள, சமுதாய, மொழிவாரிப் பிரிவினைகளை உள்ளடக்கிய நாடுகளுக்குப் பொருந்தாது என்பது அரசியல் நிர்ணய சபை விவாதத்தின்போதே ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்.

இந்த இரு கட்சி ஆட்சி முறையில் இன்னோர் அபாயமும் உண்டு. சுயநல சக்திகள் விரும்பினால் இரண்டு கட்சிகளையும் விலைக்கு வாங்கி ஜனநாயகத்தையே தனது கைக்குள் போட்டுக்கொண்டுவிட முடியும். அதுவும் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்கிற நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தம், இதுபோன்ற விஷம சக்திகளுக்கு இரண்டு கட்சி ஆட்சி முறையில் பூரண சுதந்திரத்தை அளித்துவிடும்.

இந்தியப் பொதுமக்கள் அதிபுத்திசாலிகள். எந்த நேரத்தில் தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் தீர்மானித்துத் தேர்ந்தெடுப்பதில் நமது வாக்காளர்கள் கெட்டிக்காரர்கள். இரண்டு கட்சிக் கூட்டணிக்கு தேசிய அளவில் வழிகோலிய அவர்கள், இரண்டு கட்சி ஆட்சியைப் பல மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளவும் தயங்கவில்லை.

இரண்டு கட்சி ஆட்சி முறை அதுவாகவே உருவாக வேண்டும். உருவாக்கப்படக் கூடாது. அப்படி உருவாக்கப்பட்டால் அது இந்திய ஜனநாயகத்தையும், பொருளாதாரத்தையும், ஒரு சிலரின் கஜானாவிற்குள் அடகு வைத்துவிடும். பல்வேறு பிரிவினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்காத ஜனநாயகமாக இந்தியா மாறிவிடும். அதன் விளைவு பிரிவினைவாதத்திற்கு வழிகோலும். அதனால் வேண்டாமே இப்போது இரண்டு கட்சி ஆட்சி முறை!

Posted in ADMK, APJ Abdul Kalam, Assembly, BJP, BSP, Canada, Caste, Citizen, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Community, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Conservative, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Democracy, Democrats, Dems, Disintegration, DMK, Economy, Election, England, Federal, Foreign, France, Freedom, Globalization, Govt, Identity, Independence, India, Integration, Italy, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, Kalam, Labor, Language, Liberal, LokSaba, Minister, MP, National, Op-Ed, parliament, Party, PM, Politics, Polls, Population, President, Quebec, Region, Religion, Reps, Republic, Republicans, Rule, Sect, SP, Speaker, Tory, UK, USA, Vote | 4 Comments »

Tamil as a classical language

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 24, 2007

உயர்தனிச் செம்மொழியின் இனிய வருங்காலம்

மலையமான்

உலகில் ஒரு சில மொழிகளுக்கு எழுத்து வடிவமே இல்லை. அவை பேச்சு நிலையில் மட்டுமே உள்ளன. பல மொழிகள் இலக்கிய வளத்துடன் திகழ்கின்றன. இவற்றுள் ஆறு மொழிகள் மட்டுமே உயர்தனிச் செம்மொழி என்று போற்றப்படுகின்றன. இதில் தமிழும் ஒன்று.

காலத்தொன்மை, இலக்கிய வளமை என்ற இரண்டும் செம்மொழியின் அடித்தளப் பண்புகள் ஆகும். இவற்றைத் தவிர, உயர்ந்த கருத்துடமை, மரபுடைமை, உலகப் பொதுமைத்தன்மை உடைமை, எளிமை உடைமை, தெளிவுடைமை, நிலைபேறான பண்புடைமை, ஆழ்ந்த பொருளுடைமை முதலிய இயல்புகளைக் கொண்ட இலக்கியங்களை அம்மொழி பெற்றிருக்கும்.

செம்மொழியின் இலக்கணம் என்பதற்குரிய தன்மைகள் இதுவரை வரையறுக்கப்படவில்லை. எனவே வல்லவர்கள் பல்வேறு தகுதிகளைக் கூறுகிறார்கள்.

செவ்வியல் மொழி என்றும் சொல்லப்படுகின்ற – உயர்தனிச் செம்மொழியான – தமிழின் இனிய வருங்காலம் பற்றி எண்ணித் திட்டமிடுவது சரியான முறையாகும். உலக அளவிலும் இந்திய நாட்டின் அளவிலும் தமிழ்நாட்டின் அளவிலும் இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பல செயல்திட்டங்கள் உள்ளன.

பிரிட்டானியா, அமெரிக்கானா, காலியர் முதலிய கலைக் களஞ்சியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை கிரேக்கம், லத்தீன் என்ற இரண்டு மொழிகளை மட்டுமே உயர் தனிச் செம்மொழிகளாகக் கருதுகின்றன. இனி இத்தகைய உலகப் புகழ் கலைக் களஞ்சியங்களில் “தமிழ் – உயர் தனிச் செம்மொழி’ என்ற தலைப்பில் கட்டுரை இடம்பெறுமாறு செய்ய வேண்டும். தமிழ் ஆட்சிமொழியாக உள்ள இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் தமிழர்கள் வாழும் மலேசியா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளிலும் தமிழை உயர் தனிச் செம்மொழியாக அறிவிக்கும்படி தூண்டப்பட வேண்டும். இதன் விளைவாக பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு மன்றம் (யுனெஸ்கோ) தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளும். அதன் வளர்ச்சிக்கு நிதி உதவி நல்கும்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள தகுதியான பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை புதிதாகத் திறக்கப்படுவதற்கு ஆவன செய்ய வேண்டும். தமிழைக் கற்க விரும்பும் அயல்நாட்டு மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.

இந்திய அரசு சமஸ்கிருதத்தைச் செம்மொழியாக ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுள்ளது. அது தமிழைச் சமஸ்கிருதத்திற்கு இணையாகக் கருத வேண்டும். 2004-ல், இந்திய அரசு சமஸ்கிருதத்திற்கு நேரடியாக நாற்பது கோடி ரூபாயும், அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் நூறு கோடி ரூபாயும் ஒதுக்கி, அம் மொழியின் வளர்ச்சிக்கு உதவியது. இந்நிலை தமிழுக்கும் அமைய வேண்டும்.

தற்போது மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ், செம்மொழித் தமிழ் உள்ளது. இது கல்வித் துறையின் கீழிருக்கும் நிலைமை உருவாக வேண்டும். அப்போதுதான், பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு, இந்தியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைவதற்கு உதவ முடியும்.

சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்கள் என்று அறிஞர்களால் போற்றப்படுகின்றன. இந்த இலக்கியங்கள் நம் நாட்டின் முக்கிய மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும். (இவை ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய உலக மொழிகளிலும் முழுமையாக மொழி பெயர்க்கப்பட வேண்டும்).

புனேயிலுள்ள முதுநிலைக் கல்வி ஆராய்ச்சிக் கல்லூரி, 60 தொகுதிகளைக் கொண்ட சமஸ்கிருத – ஆங்கில அகரமுதலி ஒன்றைத் தயாரிக்கும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ளது. இதேமுறையில் தமிழ்ப் பேரகராதி, பல துறைத் தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் போன்ற பார்வை நூல்கள் உருவாவதற்கும் இந்திய அரசு ஆதரவு புரிய வேண்டும்.

இந்தியப் பண்பாட்டுக்குத் தமிழ்ப் பண்பாடே அடித்தளம் என்பது அயல்நாட்டு அறிஞர்களின் கருத்து. இதுபற்றிய முறையான – முழுமையான – ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

காஞ்சிபுரம் தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரம் எனலாம். காஞ்சிபுரத்திலும், பழைமை சான்ற மாமல்லபுரத்திலும், சங்ககாலத்திற்குரிய செங்கத்திலும், இத்தகைய பழைமை மிக்க ஊர்களிலும், அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அரிய கட்டடக் கலை – சிற்பக் கலை ஆகியவை பற்றியும் ஆராய்ச்சி நடைபெற வேண்டும்.

தமிழகத்தின் மையப் பகுதியில் மாபெரும் நூலகம் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் இதுவரை வெளிவந்த அத்தனை நூல்களும் திரட்டப்பட்டு, குறுந்தகடு வடிவில், அங்கு அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

கீழ்த்திசைச் சுவடி நூலகம், சரசுவதி மகால் நூலகம் முதலியவற்றிலுள்ள, அச்சு வடிவம் பெறாத தமிழ் நூல்களை அச்சிடல் வேண்டும். தமிழ்க் கலை, பண்பாடு ஆகியவற்றை உணர்த்தும் வகையில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். (சிங்கப்பூரில் இத்தகைய அருங்காட்சியகம் இருக்கிறது).

தமிழுடன் தொடர்புடைய சித்த மருத்துவமும் தமிழிசையும் தழைத்தோங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மேற்சொன்னவற்றை நிறைவேற்றப் பெருமளவு நிதி தேவைப்படும். ஆனால் முறைப்படி திட்டமிட்டு, சரியான வழியில் படிப்படியாக, இவற்றைச் செய்து முடிக்க முடியும். இதனால் செவ்வியல் தமிழ் வருங்காலத்தில் இனிதோங்கும். அதன் வாழ்வும் சிறக்கும்!

Posted in Antiquity, Culture, Dravidian, Europe, Heritage, History, Language, Op-Ed, Opinion, Sanskrit, Tamil | 2 Comments »

Unity in Diversity – Regional affinity vs Naturalized out-of-state Indians

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2007

இவர்களும் இந்தியர்கள்தான்!

பி. சக்திவேல்

சமீபகாலமாக இந்தியாவில் வெளிமாநிலத்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தாக்கப்படுவதும், அவர்களுடைய உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நடைபெறுவதும் அதிகரித்து வருகின்றன.

இந்தச் சம்பவங்களால் “பிராந்திய உணர்வுகள்’ முக்கியத்துவம் அடைந்து “தேசிய உணர்வுகள்’ முக்கியத்துவம் இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த வளர்ச்சி இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் சமூகக் கட்டமைப்புக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் ஆரோக்கியமானதல்ல.

“பிராந்திய உணர்வுகளை’ காட்டிலும் “இந்தியா’ என்ற தேச உணர்வுக்கு முன்னுரிமை அளித்துதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. உதாரணமாக, அரசியலமைப்புச் சட்ட விதி 1-ல் இந்தியா என்பது “”மாநிலங்களை உள்ளடக்கிய ஓர் ஐக்கியம்” என்றுதான் வரையறுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளைக் காட்டிலும் மத்திய அரசு மிகவும் வலிமையானதாகவும் அதிக அதிகாரம் படைத்ததாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அந்நாட்டுக் குடிமக்களுக்கு “இரட்டைக் குடியுரிமை’ வழங்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இந்தியாவில் தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்காகவும், இந்தியா என்கிற உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காகவும் ஒரே ஒரு குடியுரிமையைத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

மேலும் அடிப்படை உரிமைகளில் இந்திய குடிமக்களுக்குச் சுதந்திரமாக இடம் பெயர்ந்து செல்வதற்கும், ஓர் இடத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தி வசிப்பதற்கும், விரும்பிய தொழில் செய்வதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக, பல மாநிலங்களில் நடக்கும் சம்பவங்கள், அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், மற்ற மாநிலத்திலிருந்து வந்தவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாகப் பாவித்து நடத்தக்கூடிய சூழ்நிலையும் உருவாகி உள்ளது. மகாராஷ்டிரத்தில் வசித்து வரும் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரைச் சார்ந்தவர்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும்; அதேபோல், வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மகாராஷ்டிரத்தில் நுழைவதைக் கட்டுப்படுத்த வேண்டும்; இது சிவசேனையின் பிரதான கோஷம். இதை வலியுறுத்தித்தான் சமீபத்தில் நடைபெற்ற மும்பை உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றது. “வாக்கு வங்கியை’ கவர்வதற்காக இனிவரும் காலத்தில் இந்தக் கோஷம் மேலும் வலுப்பெறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

சென்ற ஆண்டு ரயில்வே பணிக்கான எழுத்துத் தேர்வு எழுதச் சென்ற வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அசாமில் ரயில் நிலையத்தில் தாக்கப்பட்டனர். அவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஹிந்தி பேசும் மாநிலத்தைச் சார்ந்த அனைவரும் அசாமை விட்டு வெளியேற வேண்டும் என “உல்பா’ தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர். ஹிந்தி பேசும் மக்கள் மீது தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். அசாம் மாநில அரசும் மத்திய அரசும் உறுதி அளித்தபோதிலும் பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த ஹிந்தி பேசும் மக்கள் தங்கள் உடமைகளை விட்டு விட்டு குடும்பத்தோடு அகதிகளாக வெளியேறும் அவலமும் நீடித்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் அரசியலமைப்புச் சட்டங்களின் மூலம் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள், குடிமக்கள் அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அசாம் மாநில அரசும் மத்திய அரசும் இந்த விஷயத்தில் சரிவர செயல்படாதது மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையிலும் தேசிய உணர்வுகள் முக்கியத்துவம் இழந்து பிராந்திய உணர்வுகள் மேலோங்கி விட்டன. இதையடுத்து நாள்தோறும் உருவாகிவரும் சச்சரவுகளும் முரண்பாடுகளும் நமது ஜனநாயகத்திற்கு கேடுகளை விளைவித்து வருகின்றன. இந்நிலை நீடிக்குமானால், மக்கள் படிப்படியாக அரசின் மீது நம்பிக்கை இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும்.

குஜராத்தில் நடப்பது வேறுவிதமான நிகழ்வுகள். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் “கோத்ரா’ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் இவர்கள் எவ்வாறு தங்களை தேசிய நீரோட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும்?

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிய பல்வேறு இனம் மற்றும் மொழி பேசக்கூடிய மக்களைப்பற்றி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவு நாம் அனைவரும் கவனிக்கப்படக்கூடியதாக அமைந்துள்ளது. அதாவது, மற்ற எல்லா நாட்டினரைக்காட்டிலும் இந்தியாவிலிருந்து குடியேறிய மக்களிடம் மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு வேற்றுமைகள் குறைந்து காணப்படுகிறது.

தெளிவாகக் கூற வேண்டுமென்றால், மற்ற நாட்டினரைக் காட்டிலும் இந்தியர்கள் மிகவும் ஒற்றுமையோடு, தங்கள் மொழி மற்றும் கலாசார அடையாளத்தை மறந்து, வாழ்ந்து வருகின்றனர். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒற்றுமையோடு செயல்படும்போது ஏன் இந்தியாவில் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை. இது கண்டிப்பாக நாம் கவனம் செலுத்தப்பட வேண்டிய கேள்வி.

அடிப்படையில் நம்மிடம் “இந்தியா’ மற்றும் “இந்தியன்’ என்கிற உணர்வு உள்ளது. இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதனால்தான் சுனாமி வந்தபோதும், குஜராத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்தபோதும், வடமாநிலங்களில் வெள்ளச் சேதம் ஏற்பட்டபோதும் கார்கில் போர் நடைபெற்ற தருணத்திலும் நம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், நம்மால் முடிந்த உதவிகளை அளித்தோம்.

தங்களுடைய அரசியல் செயல்பாட்டிற்காகவும் மற்றும் லாபத்திற்காகவும் பிராந்தியத்தில் செயல்படும் ஒரு சில அமைப்புகள்தான் இந்த வேற்றுமை விதையை விதைத்துத் தங்களுடைய குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன. இந்த அமைப்புகளுக்கு நாம் துணைபோகக் கூடாது. உடனடியாக இத்தகைய அமைப்புகளை தடை செய்ய உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இந்தியக் குடிமக்களாகிய நாம் தேசிய உணர்வுகளுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் பிறகே மாநில அல்லது பிராந்திய உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பல்வேறு காரணங்களால் மாநிலங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அந்த மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதியைப் பாதித்துவிடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அன்னிய நேரடி முதலீடுகள் மற்ற மாநிலங்களுக்குச் சென்றடையக்கூடிய நிலையும் ஏற்பட்டுவிடும்.

எனவே அண்டை மாநிலங்களையும் பிற மாநிலங்களையும் சார்ந்தவர்களை சமமாக நடத்தக்கூடிய மனோபாவத்தையும் பண்பையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களும் இந்தியர்கள்தான்!

(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).

Posted in Affinity, Citizen, Citizenship, Conflicts, Cooperation, Diversity, Duality, Foreign, Hindi, Identity, Independence, India, Language, Nationalism, Naturalization, Region, Regional, Republic, State, Tamil, Unity, Zone | Leave a Comment »

Interview with D Rambabu – Publisher & Editor of English to Telugu to Tamil Dictionary

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

முகங்கள்: தமிழுக்கு ஒரு புது வரவு!

ந. ஜீவா

சிலர் ஒன்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நினைத்துச் செய்வார்கள். ஆனால் அது பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்துவிடும். ஆனால் சிலர் செய்யும் செயல்களோ அவர்களே எதிர்பாராத வகையில் சிறப்பாக அமைந்துவிடும். தமிழ் வழிக் கல்வி என்றாலே ஏளனமாகப் பார்க்கும் இக்காலத்தில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் நர்சு பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் ஏன் நோயாளிகளுக்கும் பயன்படும் விதமாக மருத்துவத்துறையில் வழக்கத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சொற்களுக்கு ஓர் அகராதியைத் தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார், டி.ராம்பாபு. இது ஆங்கிலம் – தெலுங்கு – தமிழ் அகராதியாகும்.

சென்னை விஜயா குரூப் ஆஃப் ஹாஸ்பிட்டலின் நிதி, கணக்குப் பிரிவின் பொது

மேலாளராகப் பணிபுரியும் ராம்பாபு,

தமிழுக்கோ, தெலுங்குக்கோ பெரிய தொண்டு செய்வதாக நினைத்தெல்லாம் இதைச் செய்யவில்லை.

அவரைச் சந்தித்துப் பேசிய போது…

தமிழிலும் தெலுங்கிலும் இப்படியொரு மருத்துவ அகராதியைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

நான் விஜயா குரூப் ஆப் ஹாஸ்பிட்டலில் 1984 ல் வேலைக்குச் சேர்ந்தேன். நிறைய பேஷன்ட்ஸ் ஆந்திராவிலிருந்து இங்கு வந்து அட்மிட் ஆவார்கள். எனது பூர்வீகம் ஆந்திரா என்பதால் டாக்டர்கள் ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்த மருத்துவக் குறிப்புகள் என்னவென்று தெரியாமல் அவர்கள் என்னிடம் வந்து கேட்பார்கள். எனக்குத் தெரிந்த அளவுக்கு த் தெலுங்கில் அவர்களுக்குச் சொல்வேன். ஆனால் பல வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. அதற்காக எத்தனையோ டிக்ஷனரிகளைப் புரட்டியிருக்கிறேன். இருந்தும் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது.

ஆங்கிலத்தில் உள்ள மருத்துவத் துறை சொற்களுக்குத் தமிழிலோ, தெலுங்கிலோ பொருள் கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று உணர்ந்தேன். எனவே நான் கண்டறிந்த சொற்களுக்கான பொருளைத் தொகுத்து ஓர் அகராதியாக வெளியிட்டால் என்ன என்று தோன்றியது.

நீங்கள் தயாரித்துள்ள இந்த அகராதி யாருக்குப் பயன்படும்?

சாதாரண மனிதனுக்கே இந்த அகராதி பயன்படும். டாக்டர் தனது மெடிக்கல் ரிப்போர்ட்டில் ஏ/பஎன்று போட்டிருப்பார். இதற்கு என்ன அர்த்தம் என்று பேஷன்ட்டுக்குத் தெரியாது. இந்த அகராதியைப் பார்த்தால் ஏ/ப என்றால் ஹைப்பர் டென்சன் என்றும் தமிழில் மிகை ரத்த அழுத்தம் என்றும் தெரிந்து கொள்ளலாம். க்ஷ.ண்.க். என்று மருந்துச் சீட்டில் குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு அர்த்தம் ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று இந்த அகராதியின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு, நர்சிங் பயிலும் மாணவர்களுக்கு இந்த அகராதி பயன்படும். ஆங்கிலத்தில் புரியாத சொற்களுக்கு தமிழில், தெலுங்கில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக நர்ஸ்களுக்கு அதிகம் பயன்படும். டாக்டர் என்ன எழுதியுள்ளார், மெடிக்கல் ரிப்போர்ட் என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து வேலை செய்ய வேண்டியவர்கள் அவர்கள். அவர்களுக்கு இது அதிகம் பயன்படும்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகள் எதற்கு?

தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்குச் சென்று மருத்துவம், நர்சிங் பயிலும் மாணவர்கள் இருக்கின்றனர். அதுபோல ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வந்து பயிலும் மாணவர்களும் உள்ளனர். எனவே இருமொழிக்காரர்களுக்கும் பயன்படும்விதமாக இந்த மருத்துவ அகராதியைத் தயாரித்தேன். மேலும் எனக்குத் தாய்மொழி தெலுங்கு என்பதால் இந்தப் பணி சிரமமாகத் தெரியவில்லை.

மருத்துவ அகராதியைத் தயாரிப்பது என்பது வேறு; புத்தகப் பதிப்புத் துறை என்பது வேறு. அப்படியிருக்க நீங்களே இதை ஏன் வெளியீட்டீர்கள்?

அடிப்படையில் நான் டாக்டர் இல்லை. நான் அக்கவுன்ட்ஸ் படித்தவன். மருத்துவமனையில் நீண்டநாள் பணி புரிந்தாலும் நிறைய மருத்துவர்களுடன் பழக்கம் வைத்திருப்பதாலும் இந்த டிக்ஷனரியைத் தொகுக்க முடிந்தது. மேலும் நீங்கள் நினைப்பது மாதிரி புத்தகப் பதிப்புத் துறை எனக்குப் புதியதல்ல. நான் ஏற்கனவே “அனைத்து தேவதை காயத்ரி மந்திரங்கள்’ என்ற சிறு புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன். அது இப்போது மூன்று பதிப்புகள் வந்துவிட்டது. எனவே எனக்குப் புத்தகத் தயாரிப்பு புதியதல்ல.

ஒரு டாக்டர் அல்லாத நீங்கள் இப்படி ஓர் அகராதியைத் தொகுத்ததற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

இது நூலாக வெளிவரும் முன்பு ஆந்திராவில் உள்ள ஒரு டாக்டரிடம் கையெழுத்துப் பிரதியைக் காட்டினேன். “நீ ஒரு டாக்டரா?’ என்று கேட்டார். “இல்லை’ என்றதும் கையெழுத்துப் பிரதியைப் புரட்டிக் கூடப் பார்க்கவில்லை. ‘சர்ய்-ம்ங்க்ண்ஸ்ரீஹப் – ஆ இருந்துக்கிட்டு எப்படி எழுதுற? நீ மெடிக்கல் ஆள் இல்ல. அதனால பார்க்க மாட்டேன்’ என்று சொன்னார். மூன்று வருடங்களுக்கும் மேலாக இரவு இரண்டு மணி வரை கண்விழித்து செய்த முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பு. ரொம்பவும் மனம் வருத்தப்பட்டேன். ஆனால் சென்னை ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் காலேஜின் டாக்டர் தணிகாசலம் என்னை மிகவும் பாராட்டினார். இதைப் புத்தகமாக வெளியிடணும்

என்று என்கரேஜ் பண்ணினார். “இது மருத்துவத்துறை ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலை, நீங்க

பண்ணியிருக்கீங்க’ன்னு புகழ்ந்தார். அது எனக்கு மிகுந்த

தெம்பைக் கொடுத்தது. அப்புறம் எனக்குப் பழக்கமான நிறைய டாக்டர்கள் அகராதியைத் தொகுக்கும் போது ஏற்பட்ட நிறையச் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தனர். அவர்கள் கொடுத்த ஊக்கத்தினால்தான் இது எனக்குச் சாத்தியமானது.

ஆங்கிலத்தில் உள்ள மருத்துவத் துறை சொற்களுக்கு தமிழில் பொருள் கண்டுபிடிப்பது சிரமமான காரியமாயிற்றே?

இந்த மருத்துவ அகராதியில் உள்ள எல்லாச் சொற்களையும் தொகுத்தது, அதற்கு விளக்கமளித்தது என் வேலையாக இருந்தது. அதை மொழிபெயர்த்தவர் வி.வி.ரத்னஸ்ரீ. என்றாலும் மொழிபெயர்க்கும் போது உடனிருந்து அதிலும் பங்கு பெற்றவன் என்கிற முறையில் அதன் சிரமங்களை அறிவேன். மேலும் இந்த அகராதி தயாரிப்பதற்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என்று மொழிகள் மட்டும் தெரிந்தால் மட்டும் போதாது. மருத்துவத்துறை தொடர்பான அறிவும் அவசியம். இல்லையென்றால் சரியாக மொழிபெயர்க்க முடியாது.

தெலுங்கைவிட தமிழில் மொழிபெயர்க்கச் சிரமப்பட்டோம். காரணம், தெலுங்கில் நிறைய எழுத்துகள் உள்ளன. உதாரணமாக தெலுங்கில் நான்கு “க’ உள்ளது. தமிழிலோ ஒன்றே ஒன்றுதான். அதுபோல ந, ண, ழ, ள, ல போன்றவற்றில் எந்த “ந’ போடுவது, எந்த “ல’ போடுவது என்பது பிரச்சினையாக இருந்தது. இது எங்களுடைய முதல் முயற்சி என்பதால் எங்களுக்கே தெரியாமல் பிழைகள் இருக்கக்கூடும். சுட்டிக்காட்டினால் அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்திக் கொள்வோம்.

இப்போது தமிழ்வழிக் கல்வி கற்பதில் ஆர்வம் குறைவாக உள்ளது. அப்படியிருக்க இந்த அகராதி மாணவர்களுக்கு எப்படி உதவும்?

நீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மையிருக்கிறது. என்றாலும் ஆங்கில வழி பயிலும் மாணவர்கள் என்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழில் அதைத் தெரிந்து கொண்டால் சிறப்பாகப் படிக்க முடியும். மேலும் ஆங்கிலத்தில் உள்ள ஒரு மருத்துவம் தொடர்பான சொல்லுக்குத் தமிழில் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ள இந்த அகராதி உதவும்.

சினிமாவை ரசிக்கப் புரிந்து கொள்ள மொழியே தேவையில்லை என்றாலும் எத்தனை டப்பிங் திரைப்படங்கள் வருகின்றன? டி.வி.யிலும் கூட டப்பிங் படங்களை ஒளிபரப்புகிறார்களே! எனவே தாய்மொழிக்கெனத் தனிச் சிறப்பு இருக்கவே செய்கிறது.

உங்களுடைய அகராதியில் மருத்துவத் துறை தொடர்பான சொற்களுக்கான பொருள்கள் தவிர வேறென்ன சிறப்பு அம்சம் உள்ளது?

இந்த அகராதியில் நிறைய மருத்துவம் தொடர்பான பொதுவிஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அகராதி மொத்தம் 6 பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதியில் மனித உடல், உடல்நலன் தொடர்பான பொதுவான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு நோய்க்கும் என்னென்ன உணவு சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் சுருக்கக் குறியீடுகளுக்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நான்காம் பகுதியில் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் எல்லாவற்றையும் பற்றிய விளக்கம் உள்ளது. ஐந்தாம் பகுதி அகராதி. ஆறாம் பகுதியில் மனித உடலின் பல்வேறு பாகங்களின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புத்தகத்திற்கு வரவேற்பு?

சாதாரண மனிதனுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் என்ற நோக்கத்தில் தான் இந்த அகராதியைத் தொகுத்து வெளியிட்டேன். ஆனால் அது தமிழுக்குச் செய்த சேவையாகக் கருதப்படுவது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.

Posted in Accountant, Andhra Pradesh, AP, Books, D Rambabu, Dictionary, Dinamani, Doctor, Editor, Education, English, Enrichment, Explanation, Help, Interview, Kathir, Language, Learn, Medicine, service, Students, T Rambabu, Tamil, Teach, Technical, Telugu, Terminology, Translation, Vijaya Hospital | Leave a Comment »

B Kanagaraj: Border dispute between Karnataka & Maharashtra – Belgaum: Analysis, History, Backgrounder

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

சிக்கலாகும் எல்லைப் பிரச்சினை

பி. கனகராஜ்

கர்நாடகம், மகாராஷ்டிரம் இடையே பெல்காம் எல்லைப் பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது.

பெல்காம் மட்டுமல்ல; நமது நாட்டின் பல மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகள் தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.

வரலாற்றிலேயே முதன்முறையாக கர்நாடக சட்டமன்றத்தின் கூட்டம் தலைநகரான பெங்களூரை விட்டு பெல்காமில் கூட்டப்பட்டது. கர்நாடக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பெல்காமை கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆண்டுதோறும் சட்டமன்றக் கூட்டத்தை இங்கு கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்குப் போட்டியாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் அமைப்பான “மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி’ ஒரு எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தியது. மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இவ்வாறு பெல்காம் எல்லைப் பிரச்சினை இரண்டு மாநிலங்களிடையே அரசியல் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது.

கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் கோவா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் முக்கோணமாக பெல்காம் மாவட்டம் உள்ளது. “மூங்கில் கிராமம்’ என்ற பொருள்படும் சமஸ்கிருதப் பெயரைப் பெற்றிருக்கும் பெல்காம் 1956ஆம் ஆண்டு வரை மராட்டியர்கள் அதிகம் வாழ்ந்த பம்பாய் மாநிலத்தில்தான் இருந்தது.

பஸல் அலி கமிஷன் பரிந்துரையால் ஏழாவது அரசியல்சாசன திருத்தச் சட்டம் மொழிவாரி மாநில சீரமைப்பை அமல்படுத்தியதால் பெல்காம் மாவட்டம் அண்டை மாநிலமான மைசூருக்கு வழங்கப்பட்டது.

அன்று முதல் இன்றுவரை “மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ பெல்காம் மீட்பு போராட்டத்தை மராட்டியர்களுக்காக நடத்தி வருகிறது. மராட்டியர்களின் “சம்யுக்த மஹாராஷ்டிரம்’ என்ற நீண்டகால கனவின் முக்கிய துருவமாக பெல்காம் உள்ளது.

“மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ இம்மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான இடங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இம்மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகளிலும் இவ்வமைப்பு ஆதிக்கம் செலுத்துகிறது. பெல்காம் மாநகராட்சி மன்றம் சென்ற ஆண்டு மகாராஷ்டிரத்துடன் இணைய தீர்மானம் இயற்றியது. எரிச்சலுற்ற கர்நாடக மாநில அரசு மாநகராட்சி மன்றத்தையே கலைத்து விட்டது.

இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே இப் பிரச்சினை வெடிப்பதற்கு மொழி, பொருளாதார, மற்றும் கலாசார காரணங்கள் உள்ளன. மராட்டியர்கள் தற்போது தங்களது கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்துவதற்கு கர்நாடக மாநில அரசின் மொழிக் கொள்கை முக்கியக் காரணமாகும்.

கர்நாடகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கன்னட மொழியில் கட்டாயமாக பாடம் போதிக்கப்பட வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பெல்காமில் பெரும்பான்மையாக உள்ள மராட்டியர்கள் கன்னட மொழித் திணிப்பை எதிர்க்கின்றனர்.

நமது அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மொழியினருக்கு அவர்களது தாய்மொழியிலேயே கல்வி வழங்கப்பட வேண்டும் என்று மாநிலங்களை அறிவுறுத்துகிறது. கர்நாடக அரசின் மொழிக்கொள்கை அரசியலமைப்புச் சட்டத்தின் இப்பிரிவை மீறுவதாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் எதிர்க்கின்றனர். மராட்டிய மொழியைப் பாதுகாக்க போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

பொருளாதாரக் காரணமும் இப்பிரச்சினையைப் பெரிதாக்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் பெல்காம் மாவட்டம் இதமான தட்பவெப்ப நிலையில் அமைந்துள்ளது. விவசாய வளத்தைப் பெற்றுள்ள இம்மாவட்டம் கரும்பு உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவேதான் விவசாய ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பெல்காமை மகாராஷ்டிரத்துடன் இணைக்க மராட்டியர்கள் விரும்புகின்றனர்.

இரண்டு மாநிலங்களும் பெல்காமின் மேல் விருப்பம் காட்டுவதற்கு பெல்காமின் கல்வி வளர்ச்சியும் ராணுவ முக்கியத்துவமும் காரணமாக உள்ளன. பெங்களூருக்கு அடுத்தபடியாக கல்வி வளர்ச்சி பெற்ற நகரம் பெல்காமாகும். மேலும் இந்திய ராணுவத்தின் பல பயிற்சி மையங்கள் இங்கு உள்ளன. இதனை “தரைப்படையின் தொட்டில்’ என்றே பலர் வர்ணிக்கின்றனர்.

ஆகவே மகாராஷ்டிரம் இம்மாவட்டத்தைப் பெறுவதற்கு ஆரம்பம் முதலே தீவிரம் காட்டி வருகிறது. 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநில சீரமைப்புச் சட்டம் அமலானபோது உருவான குழுவின் முன் தனது கோரிக்கையை வைத்தது. மேலும் 1966ம் ஆண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாஜன் தலைமையில் நடுவர் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. ஆனால் மகாஜன் குழு தனது பரிந்துரையில் பெல்காம் மாவட்டம் கர்நாடகத்தில்தான் இருக்க வேண்டும் என கூறிவிட்டது.

இம்மாவட்டத்தில் மகாராஷ்டிரம் கோரும் 864 கிராமங்களில் 264 கிராமங்களை அதற்கு வழங்க இக்குழு பரிந்துரை செய்தது. மேலும் மகாராஷ்டிரத்தில் இருந்து கர்நாடகம் கோரும் 516 கிராமங்களில் 247 கிராமங்களை அதற்கு வழங்கவும் இக்கமிஷன் அறிவுறுத்தியது. இக்கமிஷனின் பரிந்துரைகளை கர்நாடகம் ஏற்றுக்கொண்டாலும் மகாராஷ்டிரம் நிராகரித்து விட்டது.

இல கார்புசர் என்ற கட்டட வல்லுநரால் நிர்மாணிக்கப்பட்ட, சண்டி என்ற கிராம காவல் தெய்வத்தின் பெயரால் வழங்கப்படும் சண்டீகர் ஒரு நீண்ட கால எல்லைப் பிரச்சினை ஆகும். 1966ம் ஆண்டு முதல் ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இடையே, சண்டீகர் யாருக்குச் சொந்தம் என்பதில் தீராத பிரச்சினை இருந்து வருகிறது. சீக்கிய தீவிரவாதிகள் காலிஸ்தான் என்ற தனி நாடு கோரியபோது சண்டீகர் நகரம் அரசியல் சச்சரவின் மையமாக இருந்தது. தற்போது தீவிரவாதம் தணிந்து போனாலும் பஞ்சாபியர்களின் நீண்ட கால ஏக்கமாகவே உள்ளது சண்டீகர் நகரம்.

கர்நாடகத்தில் உள்ள மங்களூரை கேரளம் கோரி வருகிறது. கேரளத்தில் உள்ள காசர்கோடு பகுதியை கர்நாடகம் கோருகிறது.

அண்மையில்கூட அசாம் மற்றும் அதனுடைய அண்டை மாநிலங்களில் இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க ஒரு கமிஷனை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற எல்லைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பரஸ்பர பேச்சுவார்த்தைதான் சரியான வழிமுறைகளாகும். விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இப்பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும். விடவும் மாட்டேன், கொடுக்கவும் மாட்டேன் என்ற குறுகிய மனப்பான்மையுடன் மாநிலங்கள் செயல்படக் கூடாது. பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

“கூட்டுறவு கூட்டாட்சி’ என்ற உயரிய கொள்கையை நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது. தேசிய வலிமைக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் அமைதிக்கும் இக் கொள்கை அவசியமானதாகும்.

(கட்டுரையாளர்: விரிவுரையாளர், அரசியல் அறிவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோவை).

Posted in Analysis, Backgrounder, Belgaum, Bombay, Border, British, Chandigarh, Civic body, Climate, Commerce, Conflict, Coop, Cooperative, Defense, Dispute, Economy, Education, Facts, Goa, Growth, Haryana, History, India, Industry, Issues, Kannada, Karnataka, Kasargode, Kerala, Khalisthan, Language, Mahajan, maharashtra, Mangalore, Marathi, Military, Mumbai, Municipality, Op-Ed, Province, Punjab, Race, Region, Research, Rural, Society, State, Unity, Village | Leave a Comment »

‘Arundhathi caste needs separate reservation quota’ – Thol Thirumavalavan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

அருந்ததியர் இனத்துக்கு தனி இட ஒதுக்கீடு: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை துவக்க விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் . உடன் சட்டப் பேரவை உறுப்பினர் செல்வ பெருந்தகை, மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை செயலர் கோவிந்தராஜ், பொருளாளர் நந்தகோபால், பொதுச் செயலாளர் பாபு நாயுடு, மாநிலத் தலைவர் முத்துவேல்ராஜ் மற்றும் புரவலர் சி.எம்.கே. ரெட்டி.

சென்னை, பிப். 5: அருந்ததியர் இனத்துக்கு தனி இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் வலியுறுத்தினார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை துவக்க விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் கூறியது:

தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கான ஒதுக்கீட்டுடன் சேர்த்து அருந்ததியினர் இனத்துக்கும் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக அருந்ததியினர் இனத்துக்கு தனி ஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

தாழ்வு மனப்பாண்மையால் ஒரு மொழி அழிந்துவிடக் கூடாது. இதற்காகவே தமிழைப் பாதுகாப்பதில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் பங்கெடுத்து வருகிறது.

இதனால் மற்ற மொழிகளுக்கு இந்த இயக்கம் எதிரிகள் கிடையாது.

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதே விடுதலை சிறுத்தைகளின் முதல் குறிக்கோளாகும். ஆதிக்கம், அடக்குமுறை மற்றும் சுரண்டல் ஆகிய மூன்றையும் ஒழித்தால்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும். இதனடிப்படையில்தான் தற்போது மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை துவக்கப்பட்டுள்ளது.

மொழியின் வழியில் மக்களை ஒருங்கிணைத்து வளம் பெறச் செய்யும் உயர்ந்த நோக்கத்துக்காக துவக்கப்பட்டுள்ள இந்தப் பேரவைக்கு விடுதலை சிறுத்தைகளின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்றார் திருமாவளவன்.

விழாவில்

  • அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தலைவர் சி.எம்.கே. ரெட்டி,
  • ஹைதராபாத் ஹனுமந்தராயா கல்வி அறக்கட்டளை செயலாளர் பி. பாலாஜி,
  • தமிழ்நாடு மகாஜன சங்க மாநிலத் தலைவர் சி. வெங்கடசுப்பு,
  • பி. முத்துராஜ்,
  • எஸ். பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மொழிச் சிறுபான்மையினர் நலத்துக்கென தனி வாரியம் ஒன்றை அரசு அமைத்திடவேண்டும்.

விடுதலைக்கு முழக்கமிட்டு உயிர்நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்கவேண்டும். மாமன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாளை மீண்டும் அரசு விழாவாக அறிவிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் விழாவில் நிறைவேற்றப்பட்டன.

மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை: தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, சௌராஷ்டிரம் உள்ளிட்ட தமிழல்லாத பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டோருக்கான பாதுகாப்புப் பேரவை தொடங்கப்பட்டுள்ளது.

மொழி சிறுபான்மையோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். இந்தப் பேரவையின் புரவலராக சி.எம்.கே. ரெட்டி, மாநிலத் தலைவர் பி. முத்துவேல்ராஜ், பொதுச் செயலராக பாபு நாயுடு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

—————————————————————————————————————————-
அருந்ததியர் உள் ஒதுக்கீடு: நியாயமும் அவசியமும்

பிரபஞ்சன்


தலித்துகளில் ஒரு பெரும் பிரிவான அருந்ததியர்கள், தலித்துகளுக்கான 18 சதம் இட ஒதுக்கீட்டில், தமக்கு ஆறு சதம் உள் ஒதுக்கீடு வேண்டுகிற இயக்கம் மேலெழுந்திருக்கிறது. அறம், மற்றும் நியாயம் சார்ந்ததுமான கோரிக்கை இது. தமிழக அரசும், உள் இட ஒதுக்கீடு தொடர்பான பரிசீலனையைத் தொடங்கி இருக்கிறது. பரிசீலனையின் முடிவு அருந்ததியர்களுக்கு நியாயம் வழங்குவதாகவே இருக்கும். இருக்க வேண்டும்.

மிகுந்த கொந்தளிப்புகள் நிறைந்த சூழ்நிலையில், அருந்ததியர் பக்கம் உள்ள அனைத்து நியாயங்களையும் எடுத்துச் சொல்லும் ஆவணங்கள் போல, வரலாற்றுச் செறிவோடு இரண்டு அறிவார்ந்த வெளியீடுகள் வந்திருக்கின்றன. ஒன்று, சிறந்த கவிஞரும் எழுத்தாளருமான ம. மதிவண்ணன் எழுதிய உள் ஒதுக்கீடு சில பார்வைகள் எனும் புத்தகம். மற்றது, “சுவடு -ஐனவரி 2008′ மாத இதழில் வெளிவந்திருக்கும், தமிழக மனித உரிமைக் கழகத்தின் தலைவரும் சிறந்த சிந்தனையாளருமான அரங்க.குணசேகரனின் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான, ஆழம் கொண்ட மிகச் சிறந்த நேர்காணல்.

மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பெரும் கவனம் பெற்றுள்ள அருந்ததியர் எழுச்சி, இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. 1920-ம் ஆண்டு எல்.சி. குருசாமியால் அருந்ததிய மகாசபை தோற்றுவிக்கப்பட்டது. 1942-ல் அருந்ததியர் ஊழியர் சங்கம், சமத்துவ சமாஜம், 1958-ல் அருந்ததியர் முன்னேற்ற சங்கம் என்று ஒரு தொடர்ச்சி இயக்கமாக அது இருக்கிறது.

1993 முதல் உள் ஒதுக்கீடுப் போராட்டம் தீவிரம் அடைகிறது.

1996-ல் ஆதித் தமிழர் பேரவை உள் ஒதுக்கீடுக் கோரிக்கையை முன் எடுத்து, எழில் இளங்கோவன் எழுதிய “அடுக்குமுறை இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்குச் சமூக நீதி’ என்ற முக்கியமான நூலை வெளியிடுகிறது. 4.8.1995-ல் தினமணியில் வெளியான பெருமாள் ராஜின், “கடையனுக்குக் கடையன் கதி என்ன?’ என்னும் கட்டுரை பொதுமக்கள் கவனத்தைக் கவர்ந்தது.

23.4.2000-ம் நாள் சென்னையில் பெருமாள் ராஜை முதன்மை ஆலோசகராகவும், வழக்கறிஞர் சேகரை அமைப்பாளராகவும் கொண்டு அமைக்கப்பட்ட “அருந்ததியர் தனி இட ஒதுக்கீடு போராட்டக் குழு’ , அக்காலத்து முதல் அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கைகள் இச்சமயத்தில் முக்கியமாகக் கருதத்தக்கவை. சாத்தியமான கோரிக்கையும் அதுவே.

முதல் கோரிக்கை: அருந்ததியர்க்கு ஆறு சதவீத தனி இடஒதுக்கீடு.

இரண்டாம் கோரிக்கை: தமிழ்நாடு ஷெட்யூல்ட் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 78 சாதிப் பெயர்களில் உள்ளவற்றில், குலத் தொழில் மற்றும் செய் தொழில் முறையை அடிப்படையாகக் கொண்டு கீழ்காணும் பிரிவுகளாகப் (குரூப்) பிரிக்கலாம்:

குரூப் (அ)

  • அருந்ததியர்,
  • சக்கிலியர்,
  • மாதாரி,
  • மாதிகா,
  • பகடை,
  • செம்மான் முதலானவர்கள்.

குரூப் (ஆ)

  • பறையர்,
  • சாம்பவார்,
  • மாலா,
  • சம்பன்,
  • தோட்டி,
  • வெட்டியார்,
  • வள்ளுவர் முதலானவர்கள்.

குரூப் (இ)

  • தேவேந்திர குலத்தார்,
  • பள்ளர்,
  • காலாடி,
  • பண்ணாடி.

குரூப் (ஈ)

  • குரவன்,
  • தொம்பர்,
  • சித்தனார்,
  • நாயாடி,
  • புத்திரி,
  • வண்ணார்,
  • மற்ற பட்டியல் சாதிகளில் மேலே சொல்லப்படாதவர்கள்.

இந்த “குரூப்’ வகை அடிப்படையில் விகிதாச்சார அளவுப் பிரிப்பு சாத்தியமான யோசனையாக அமைந்தது. இதுபோன்ற ஒரு பிரிப்பு, ஆந்திராவில் நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. சுமார் மூன்று ஆண்டுகள், இம்முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மாதிகாக்கள் என்கிற அருந்ததியர் வேகமான வளர்ச்சி பெற்றனர்.

தாழ்த்தப்பட்டவர்களிலேயே தாழ்த்தப்பட்டவர்களாகவும், அடித்தள மக்களிலேயே அடித்தள மக்களாக வைக்கப்பட்டவர்களாகவும், கண்ணியமற்ற பணிகளிலேயே ஈடுபடுத்தப்பட்டவர்களாகவும், முன்னேற்ற வெளிச்சம் என்பதையே இதுவரை காணாத மக்களாகவும், மிகச் சாதாரண வாழ்க்கைக்கும் கூட போராட வேண்டியவர்களாகவும் வாழ்கின்ற அருந்ததியர் இன மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு ஈரமற்ற அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் இல்லை. முக்கியமான அடித்தள மக்கள் அரசியல் தலைவர்கள் எல்லோருமே, உள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையில் இப்படிக் குறிப்படப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில், அருந்ததியர் தொகை கணிசமாக இருப்பதால், ஆந்திராவில் உள்ளதுபோல இம்மக்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தனி இட ஒதுக்கீடு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் (2006) அறிக்கையில் தாழ்த்தப்பட்டோரில் சாதி வாரி இட ஒதுக்கீடு எனும் தலைப்பில் தரப்பட்ட வாக்குறுதி:

அருந்ததியர் கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் உரிய பங்கினைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையை மாற்றிட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தனித்தனியான மக்கள் தொகை அடிப்படையில், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதே ஏற்ற வழியாகும்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, உள் ஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்துகிறார். தமிழக மனித உரிமைக் கழகத் தலைவர் அரங்க குணசேகரன், எப்போதுமே அருந்ததியர்களை ஆதரித்தும், உள் இட ஒதுக்கீட்டை ஒப்புக்கொண்டும் வந்திருக்கிறார்.

ஆக, அருந்ததியர் சகோதரர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கிடைப்பதில் பெருந்தடை ஏதும் இல்லை என்பது மகிழ்ச்சி தருகிறது.

என்றாலும், உள் இட ஒதுக்கீட்டுக்கு மிகச் சிலரால், ஐயம் காரணமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ எதிரான ஓரிரண்டு கருத்துகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை இவை:

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கோருவதால் தலித்துகளின் ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படாதா?

அரங்க குணசேகரன், “சுவடு’ இதழில் முன்வைத்த பதிலில் இருந்து சில பகுதிகள், அக்கேள்விக்குச் சிறந்த தெளிவைத் தரும்.

“”1931-ல் வட்ட மேசை மாநாட்டில் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை, தனி வாக்காளர் தொகுதிகள் கேட்டு டாக்டர் அம்பேத்கர் பிரிட்டிஷாரிடம் கோரியபோது, அதை மறுத்த காந்தி, இது இந்துக்களின் ஒற்றுமையைச் சிதைத்துவிடும் என்றார்.

1980-ல் தொடங்கி 1990-ஐயும் தாண்டி முற்போக்குத் திசைவழியில் கருக்கொண்டு உருவான தலித் இயக்கங்கள் கிராமங்களில் சாதித் தமிழர்கள் அல்லது சாதி இந்துக்கள் என்பவர்கள் தலித்துகள் மீது தொடுக்கின்ற அடக்குமுறைகள் குறித்து, தமிழின, தமிழ்த்தேச அரங்குகளில் விவாதத்தைக் கிளப்பியபோது, இத்தகைய கேள்விகள் தமிழின ஒற்றுமைக்கு எதிரானது என்று சில தலைவர்களால் விமர்சிக்கப்பட்டது.

நிறைவாக உள் இட ஒதுக்கீடு பெறுவதால் தலித் ஒற்றுமை கெட்டுவிடுமானால் கெட்டுவிட்டுப் போகட்டும். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பெறமுடியாத அவல நிலை தொடர்வதால் தலித் ஒற்றுமை பாதுகாக்கப்படுமானால் அந்த ஒற்றுமையைத் தூக்கிக் கடலில்தான் போடவேண்டும்.”

உள் இட ஒதுக்கீடு தொடர்பாக, மற்றுமொரு முக்கியமான கேள்விக்கு அரங்க குணசேகரன் சொன்ன பதில் வருமாறு: “”மொத்தப் பரப்பான 18 விழுக்காட்டில் தங்கள் பங்கைப் பெற முடியாமல்தான் இவர்கள் ஆறு விழுக்காடு கேட்கிறார்கள். 18 விழுக்காட்டில் பறையர், பள்ளர்களுக்கு இணையாக அருந்ததியர் தங்கள் பங்கைப் பெற்றிருந்தால் உள் இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையே எழுந்திருக்காதே. போட்டித் தேர்வுகளில், பள்ளி, கல்லூரி மதிப்பெண்களில் பறையர், பள்ளர் அளவுக்கு உரிய மதிப்பெண் குறியீட்டை எட்ட முடியாமல்தான் இவர்கள் பின்தங்கிக் கிடக்கிறார்கள். இதே காரணங்களுக்காகத்தான் பார்ப்பனர்களிடமிருந்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களிலிருந்து மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மீண்டும் பிற்படுத்தப்பட்டவர்களிடமிருந்து இன்று இசுலாமிய, கிருத்துவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.”

அருந்ததியர், தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டில் ஆறு சதம் உள் ஒதுக்கீடு கோருவதில் எந்தத் தவறும் இல்லை. சகல நியாயங்களும் அவர்கள் பக்கமே இருக்கின்றன.

தமிழக முதல்வரின் மேசை மேல் இருக்கும் இக் கோரிக்கை துரிதமாகச் செயல் உருப்பெற ஒருங்கிணைந்த பிரசாரம் மிக அவசியம். தலித்துகள் மட்டுமல்ல, தலித்துகள் அல்லாதோர்கள் அருந்ததியர் பக்கம் திரள வேண்டும். மனிதர்கள், தாங்கள் மனிதர்கள்தாம் என்று நிரூபித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. மனிதர்களாக இருந்து சிந்திப்போம். செயல்படுவோம்.

Posted in Arundhathi, Arunthathi, Babu Naidu, Caste, Chennai, CMK Reddy, Communities, Community, Dalit, Govindharaj, Govindhraj, Govindraj, Groups, Language, Languages, Madras, Muthuvelraj, Nandhagopal, Organizations, Reservation, SC, Scheduled Caste, Scheduled Tribe, ST, Telugu, Thiruma, Thirumavalavan, Thol Thiruma, Thol Thirumaa, Thol Thirumavalavan, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal | 6 Comments »