Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for பிப்ரவரி, 2008

Feb 29: Eezham, Sri Lanka, LTTE – Updates & News

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 29, 2008


கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுவெடிப்பில் ஏழு பேர் காயம்

சம்பவ இடம்

கொழும்பு வடக்கு முகத்துவாரம் அலுத்மாவத்தை இக்பாவத்தை சந்திப்பகுதியில் அமைந்துள்ள மாடிவீடு ஒன்றில் பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்பட்ட சமயம் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தன்னைத்தானே வெடிக்கவைத்து தற்கொலை செய்திருக்கிறார்.

இந்தத் தற்கொலைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் மூன்று பொலிசார் உட்பட ஏழு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்ட இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, பொலிசாருக்குக் கிடைத்த தகவலொன்றின் பேரிலேயே இப்பகுதியில் அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்றும், ஒரு வீட்டினைச் சோதனை செய்வதற்காக பொலிசார் அங்கு நுழைய முயன்ற சமயம், திடீரென அந்த வீட்டிலிருந்து வெளியேவந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆண் தற்கொலைக் குண்டுதாரியொருவர் தன்னைத்தானே வெடிக்கவைத்து தற்கொலை செய்திருக்கிறார் என்று தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூன்று பொலிசாரும், இரண்டு பெண்கள் உட்பட நான்கு சிவிலியன்களும் அடங்குவதாகவும் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, குண்டுவெடிப்பின்னர் அந்த வீட்டிலிருந்து 9 மில்லி மீட்டர் பிஸ்டல் கைத்துப்பாக்கி ஒன்றினையும் அதற்குரிய தோட்டாப் பெட்டி ஒன்றையும், ஐந்து தோட்டாக்களையும் பொலிசார் கண்டெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.


இலங்கையின் உள்நாட்டு அகதிகளுக்காக 186 லட்சம் டாலர்கள் கோருகிறது யூ.என்.ஹெச்.சி.ஆர்.

வாகரையில் அகதிகள்

இலங்கையில் பல்லாண்டுகளாக நடந்துவரும் ஆயுத மோதல்கள் காரணமாக உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழுந்துவரும் அகதிகளுக்கு உதவுவதற்காக ஒரு கோடியே 86 லட்சம் டாலர்கள் உதவித் தொகை கோருவதாக அகதிகள் நலனுக்கான ஐ.நா.மன்ற உயர் ஆணையர் கூறியுள்ளார்.

இலங்கையில் சுமார் 5 லட்சம் பேர் இவ்வாறு உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்வதாக மதிப்பிடப்பபடுகிறது.

இலங்கையின் மனிதாபிமான செயற்பாடுகளுக்கான பொது செயல் திட்டத்தின் அங்கமாக கோரப்படும் இந்த நிதி, இடம்பெயர்ந்தவர்கள், தமது சொந்த இடங்களில் மீள்குடியமர திரும்பிவருபவர்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிற மக்களின் பாதுகாப்புக்காகவும், தங்குமிட வசதிக்காகவும், உணவு அல்லாத பிற பொருட்கள் வாங்குவதற்கும், அகதி முகாம்களின் நிர்வாகத்திற்காகவும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 மார்ச், 2008


மூதூர் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் இடங்களை பார்க்க கோரிக்கை

இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து கடந்த 2 வருடங்களாக அகதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருப்பவர்கள் தங்களின் மீள் குடியேற்றத்திற்கு முன்னதாக சொந்த கிராமங்களைச் சென்று பார்வையிட ஒழுங்குகளைச் செய்து தருமாறு மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர்களிடம் கோரிக்கையொன்றை முன் வைத்துள்ளனர்.

மூதூர் கிழக்கு பிரதேசத்தில் ஏற்கனவே 11 கிராம சேவையாளர்கள் பிரிவுகள் உயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் மீள் குடியேற்றங்களில் தாமதங்கள் ஏற்பட்டன.

இருப்பினும் அரசாங்கத்தினால் தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானமொன்றின் படி பாடட்டாளிபுரம், நல்லூர், பள்ளிக்குடியிருப்பு ஆகிய பிரிவுகளில் முழுமையாகவும், நவரத்னபுரம், சேனையூர், கட்டைப்பறிச்சான் தெற்கு ஆகிய பிரிவுகளில் ஒரு பகுதியிலும் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாக சிவில் அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே தமது கிராம பிரமுகர்களை உள்ளடக்கிய குழுவொன்றை மீள் குடியேற்றத்திற்கு முன்னதாக சென்று பார்வையிட அழைத்துச் செல்லுமாறு இவர்கள் கோரிக்கையொன்றை முன் வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கூறுகின்றார்.


விடுதலைப்புலிகளின் உடல்கள் கையளிப்பு

விடுதலைப் புலிகள்
விடுதலைப் புலிகள்

இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் ஆகிய போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 8 விடுதலைப் புலிகளின் உடல்களை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளித்திருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்லவரான பிரிகேடியர் உதயநாணயக்கார கூறும்போது, வவுனியாவில் கடந்த வாரம் கொல்லப்பட்ட 7 விடுதலைப்புலிகளின் உடல்கள் மற்றும் மன்னாரில் இருந்து எடுக்கப்பட்ட பெண் விடுதலைப்புலி உடல் ஒன்றையும் ஒப்படைத்திருப்பதாக கூறினார்.

இதற்கிடையே, இலங்கை இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகோ இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றார். ஆனால் இது தொடர்பான விபரங்களை எதுவும் தெரிவிக்க பிரிகேடியர் உதயநாணயக்கார மறுத்துவிட்டார்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 02 மார்ச், 2008


இலங்கையின் வவுனியாவில் வன்முறை

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா நகர்ப்புறத்திலும், வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் பகுதியிலும் இன்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற இருவேறு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டார். ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 4 படையினரும், 6 பொதுமக்களும் காயமடைந்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா புகை வண்டி நிலைய வீதியில் கதிரேசு வீதிச் சந்தியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்கு வைத்து மாலை 5 மணியளவில் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 2 பொலிசாரும் 2 ஊர்காவல் படையினரும் காயமடைந்ததாக வவுனியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் 6 பொதுமக்களும் காயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். படையினரை இலக்கு வைத்து சைக்கிள் ஒன்றில் இந்தக் கண்ணிவெடி பொருத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிசார் கூறுகின்றனர்.

வவுனியா மன்னார் வீதியில் பம்பைமடுவில் அமைந்துள்ள முக்கிய இராணுவ முகாம் பகுதியில் இராணுத்தினரை இலக்கு வைத்து இன்று ஞாயிற்றுகிழமை காலை விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இதனையடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.


மட்டகக்களப்பு உள்ளூராட்சி தேர்தல்கள் கிழக்கு மக்களுக்கு மிக முக்கியமானது – புளொட் தலைவர்

புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்
புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்

இலங்கையின் கிழக்கே, எதிர் வரும் 10 ம் திகதி திங்கள் கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலானது, வடக்கு கிழக்கு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய தேர்தலாக அமையப் போவதாக புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறுகின்றார்.

தமது கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தற்போது மட்டக்களப்பில் தங்கியுள்ள அவர், இன்று ஞாயிற்றுகிழமை மாலை அங்கு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பாரியளவு தேர்தல் வன்முறைகள் இது வரை இடம் பெறாது விட்டாலும், தேர்தல் தினமன்று என்ன நடக்கும் என்பதை தற்போதைக்கு ஊகிக்க முடியாதிருப்பதாகவும், ஆயுத நடமாட்டங்கள் மக்களிடையே ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தாலும், தேர்தல் சுதந்திரமாக நடைபெறும் என்ற உத்தரவாதத்தை பாதுகாப்பு தரப்பு வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.


மட்டக்களப்பில் பிக்கு உண்ணாவிரதம்

உண்ணாவிரதமிருக்கும் பிக்கு
உண்ணாவிரதமிருக்கும் பிக்கு

விடுதலைப் புலிகளுடன் தன்னைத் தொடர்புபடுத்தி பொலிஸில் செய்யப்பட்டுள்ள புகாரொன்றை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு நகரில் பௌத்த பிக்கு ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் பிரதம குருவான அம்பிட்டியே சுமனரத்ன தேரோவே இந்த போராட்டத்தை இன்று ஆரம்பித்துளார்.

ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரோவினால் தனக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் செய்யப்பட்டுள்ள புகாரொன்றில் விடுதலைப் புலிகளுடன் தன்னை தொடர்புபடுத்தியிருப்பதாக கூறும் அம்பிட்டியே சுமனரத்ன தேரோ, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு படுத்தப்பட்டிருப்பதை வாபஸ் பெற வேண்டும், அது மட்டுமன்றி இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி தொலைபேசி ஊடாக எல்லாவெல மேத்தானதந்த தேரோவிற்கு தன்னால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டையும் அவர் முற்றாக நிராகரித்தார்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 மார்ச், 2008

விடுதலைப்புலிகளின் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் பாலைக்குழி பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர சண்டையில், ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்பளவான இடத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியிருப்பதாகவும், உயிலங்குளம் சோதனைச்சாவடி தொகுதியில் விடுதலைப் புலிகளின் பொருட்களை மாற்றி ஏற்றும் நிலையம் அமைந்திருந்த இடம் உட்பட ஒன்றரை கிலோ மீற்றர் நீளமான வீதியைக் கைப்பற்றியிருப்பதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் பாலைக்குழி பகுதியில் இன்று அதிகாலை 4 மணிமுதல் காலை 10.30 மணிவரையில் இரு தரப்பினருக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றதாகவும், எம்.ஐ 24 ரக உலங்கு வானூர்திகளும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், அப்பகுதியில் இராணுவம் முன்னேறியிருக்கின்றதா என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

ஆனால், இந்தச் சண்டையில் இராணுவத்தினருக்குப் பெரும் இழப்புகள் நேர்ந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையில் மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் அமைந்துள்ள தட்சணாமருதமடு பகுதியில் உள்ள தமது வீடுகளைப் பார்ப்பதற்காக, உழவு இயந்திரம் ஒன்றில் சென்ற 4 சிவிலியன்கள் இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரின் கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் வழியான அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச்சம்பவம் குறித்து மீண்டும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் கேட்டபோது, அந்தப் பகுதியில் இராணுவத்தினர் இல்லை, அங்கு படையினர் நடவடிக்கையில் ஈடுபடுவதும் இல்லை எனப் பதிலளித்தார்.


இலங்கையில் காணாமல் போனவர்களில் பலர் திரும்பிவிட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு கூறுகிறது

காணாமல்போன தனது உறவினரின் படத்தை ஏந்தியவாறு ஒரு பெண்
காணாமல்போன தனது உறவினரின் படத்தை ஏந்தியவாறு ஒரு பெண்

இலங்கையில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் திரும்பி வந்து விட்டதாக காணாமல் போதல் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட தனி நபர் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாடெங்கிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் இதுவரை ஏழாயிரத்து நூற்று முப்பது பேர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அறிவித்த இந்த ஆணைக்குழுவின் ஆணையரான, மஹாநாம திலகரட்ண அவர்கள், இவற்றில் 6543 பேரது விடயங்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 6633 பேர் ஏற்கனவே வீடு திரும்பி விட்டதாக தெரியவந்துள்ளது என்றும் கூறினார்.

அதேவேளை 525 பேர் கடத்தப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் 295 பேரது விடயங்கள் தொடர்பில் புலன்விசாரணைகள் முடிவடைந்துவிட்டதாகவும், அதில், 250 பேர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முடிவடைந்த புலன்விசாரணைகளைக் கொண்டு பார்க்கும் போது, இந்த காணாமல் போனவர்கள் குறித்த விவகாரத்தில் பாதுகாப்புப்படையினருக்கோ அல்லது பொலிஸாருக்கோ எந்த தொடர்பும் கிடையாது என்று தெரியவந்திருப்பதாகவும் திலகரட்ண குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரங்கள் பொலிஸ் சம்பந்தப்பட்டவை என்பதால் இவை குறித்து ஆணைக்குழு விசாரிப்பதற்கான தேவை எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், இந்தக் கருத்துக்களை மறுக்கிறார் மேலக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மட்டக்களப்பு தேர்தல் மனு குறித்த தீர்ப்பு

 

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில், இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக, அங்கு செயற்படும் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும், வாக்களிப்பு முறைகேடுகள் நடக்கும் பட்சத்தில் மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட வேண்டும், அரச சொத்துக்களின் துஸ்பிரயோகம் நிறுத்தப்பட வேண்டும் போன்றவற்றை முன்வைத்தே பவ்ரல் அமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவில் எதிர்த்தரப்பினராக, தேர்தல் ஆணையர், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைப்பு, பொலிஸ் மா அதிபர் உட்பட 35 பேர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உட்பட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக இந்த மனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விடயங்கள் குறித்து ஏதேனும் தேவைகள் இருப்பின் தேர்தல் ஆணையருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் அவற்றை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அத்துடன் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிடும் அதிகாரம் தேர்தல் ஆணையருக்கே இருக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே மட்டக்களப்பு நகரில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த பௌத்த பிக்கு, இன்று தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாகவே இந்தப் போராட்டத்தை கைவிட்டதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்னை விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபடுத்தி பொலிஸில் செய்யப்பட்ட புகார் ஒன்றை அடுத்தே இவர் இந்த உண்ணாவிரதத்தை நேற்று ஆரம்பித்திருந்தார்.

—————————————————————————————————

புதுப்பிக்கப்பட்ட நாள்: 05 மார்ச், 2008

கடந்த பிப்ரவரி மாதத்தில் மாத்திரம் 104 இலங்கைப் படையினர் பலி என இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான மோதல்களில் கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் இலங்கைப் படையினரும் மற்றும் பொலிஸாருமாக 104 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தவிர 822 பாதுகாப்புப் படையினர் இந்த மோதல்களில் காயங்களுக்கு உள்ளானதாக, புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில், அவசரகால நிலையை நீடிப்பதற்கான சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய இலங்கை அமைச்சரும், அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

படையினரின் இழப்புக்கு அப்பால், இந்த ஒரு மாத கால மோதல்களில் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை, அவசரகாலச் சட்டம் 88 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர்
பொதுமக்களும் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர்

இதற்கிடையே இலங்கையின் வடக்கே வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் நான்காம் கட்டை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது புதன்கிழமை காலை நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் ஒரு பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு பொலிசார் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலையில் உயிரிழந்ததாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுப் போக்குவரத்தின்றி மூடப்பட்டுள்ள இந்த வீதியில் இடம்பெற்றுள்ள இந்த கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் காரணமாக இப்பிரதேசத்தில் காலையில் பெரும் பதற்றம் நிலவியது.

இளைஞர்கள் கொலை தொடர்பில் நீதிமன்றில் இராணுவத்தினர்

வவுனியா நீதிபதி இளஞ்செழியன்
வவுனியா நீதிபதி இளஞ்செழியன்

அதேவேளை, வவுனியா தவசிகுளம் பகுதியில் கடந்த நவம்பர் மாதத்தில் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 5 இளைஞர்களின் கொலைகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில், 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு, புதன்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

இவர்களை இராணுவ சட்டத்தரணியின் வேண்டுகோளுக்கிணங்க, வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரையில் இராணுவ பொலிஸ் பாதுகாப்பில் தடுத்துவைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

கொல்லப்பட்ட 5 இளைஞர்களில் ஒருவர் வழங்கிய மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய, இந்த 6 இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாகவும், இந்தக் கொலை வழக்கு தொடர்பான புலன் விசாரணைகள் நடைபெறுவதனால், இவர்களை இராணுவ பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்க உத்தரவிடுமாறு இராணுவத்தின் சார்பில் ஆஜராகிய இராணுவ சட்டத்தரணி விடுத்த வேண்டுகோளை அடுத்தே இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்தக் கொலைகள் தொடர்பான புலன் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

——————————————————————————————

புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 மார்ச், 2008 

இலங்கையின் மனித உரிமை மீறல் விசாரணைகள் தொடர்பான சர்வதேச கண்காணிப்புக் குழு பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது

இலங்கையில் நடந்த படுகொலைகள் உள்ளிட்ட பாரிய அளவிலான 16 மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட தேசிய விசாரணைக் குழுவின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக, சர்வதேச முக்கியஸ்தர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த குழு, தனது பணியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்திருக்கிறது.

Action contre la faim என்ற பிரஞ்சு தொண்டு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் கொல்லப்பட்டது, பள்ளிப் படிப்பு நிறைவடைந்ததை கொண்டாடிக்கொண்டிருந்த ஐந்து இளைஞர்கள் திருகோணமலையில் கொல்லப்பட்டது போன்ற பெரிய அளவிலான கொலைச் சம்பவங்களை, இலங்கை ஜனாதிபதி நியமித்த தேசிய விசாரணைக் ஆணையம் எவ்வாறு விசாரிக்கிறது என்று மேற்பார்வையிட வேண்டியது இந்த சர்வதேச மேற்பார்வைக் குழுவினரின் பணியாகும்.

தமது கண்காணிப்புப் பணிகளுக்கு இலங்கை அரச அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் என்றும், அரசின் விசாரணை முறைகளில் குறைகள் பல இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் இக்குழுவில் அங்கம் வகிக்கும் பிரிட்டிஷ் பிரதிநிதி சர் நைஜல் ரோட்லி குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்த மேலதிக விபரங்களையும், சர் நைஜல் ரோட்லி பிபிசிக்கு வழங்கிய பேட்டியையும் நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கண்ணிவெடி தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் பலி

கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.சிவநேசனும் அவரது வாகனச் சாரதியும் கொல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றுவிட்டு கொழும்பில் இருந்து வன்னிப் பிரதேசத்தில் மல்லாவி பகுதியில் உள்ள தமது வீட்டுக்கு அவர் திரும்பிச் சென்ற வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வவுனியா ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியைக் கடந்து சென்ற இவரது வாகனம் ஓமந்தையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் மல்லாவி வீதியில் உள்ள ஓரிடத்தில் கிளேமோர் கண்ணி வெடி தாக்குதலில் சிக்கியுள்ளது.

இந்த குண்டுத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுறுவும் அணியைச் சேர்ந்த படையினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை இராணுவம் மறுத்துள்ளது. இந்தச் சம்பவம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்றிருப்பதனால் அதற்கான பொறுப்பை விடுதலைப் புலிகளே ஏற்க வேண்டும் என இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசியிடம் தெரிவித்திருக்கின்றார்.

இன்றைய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசனுக்கு வயது 51. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதல்கள் தீவிரமடைந்த கடந்த சுமார் 2 வருட காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் வாகனத்தைச் செலுத்திச் சென்று உயிரிழந்த வாகன சாரதியாகிய 27 வயதுடைய பெரியண்ணன் மகேஸ்வரராஜா வவுனியா இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள செட்டிக்குளத்தைச் சேர்ந்தவராவார்.


ஆட்கடத்தல்கள் மோசமாக அரங்கேறும் இடம் இலங்கை: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

 

உலகில் மிக மோசமான அளவில் ஆட்கடத்தல்களைச் செய்யும் அமைப்பாகியுள்ளது இலங்கை அரசு என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

2006ல் உள்நாட்டுப் போர் மீண்டும் தொடங்கியதிலிருந்து பாதுகாப்புப் படையினரும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களுமாக நூற்றுக்கணக்கானோரைக் கடத்தியுள்ளனர் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

இலங்கையில் நடக்கும் ஆட்கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கையை ஒரு தேசிய நெருக்கடி என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வருணித்துள்ளது.

முக்கியமாக தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடிக்கடி கடத்தப்படுகிறார்கள். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இவர்களின் கடத்தலுக்கு பெரும்பான்மைக் காரணமாக அமைந்துள்ளது.

கடத்தப்பட்டவர்களில் பலர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று அஞ்சப்படுகிறது. ஆட்கடத்தலுக்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அரசு கிஞ்சித்தும் உறுதியாக இல்லை என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.

ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் குற்றச்சாட்டு மற்றும் அது குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள பதில் ஆகியவை தொடர்பாக எமது கொழும்பு செய்தியாளர் தரும் செய்திக் குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


மட்டக்களப்பில் பள்ளி மாணவிகள் இருவர் கடத்தல்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில் இரண்டு பாடசாலை மாணவிகள் அவர்களுடைய வீடுகளில் வைத்து இரவுவேளை ஆயததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்குடா நாமகள் விதிதியாலயத்தில் ஜி.சி.ஈ. கல்வி பயிலும் மாணவிகளே இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

வாகனமொன்றில் வந்த குறிப்பிட்ட ஆயததாரிகள் தமது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தேடுதல் நடத்தி பலாத்காரமான முறையில் இவர்களை கடத்திச்சென்றுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

இக்கடத்தலுடன் தொடர்புடைய நபர்களோ இதன் பின்னியோ தங்களுக்கு தெரியாது என்று கூறும் உறவினரக்ள், மனிதாபிமான ரீதியில் இவர்களை விடுதலை செய்யுமாறும் கோருகின்றனர்.

கடத்தப்பட்ட மாணவிகளின் உறவுகள் வெளியிடும் கருத்துகள் அடங்கிய செய்திக் குறிப்பினை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

Posted in Eelam, Eezham, LTTE, Sri lanka, Srilanka | Leave a Comment »

Feb 28: Eezham, Sri Lanka, LTTE – Updates & News

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 29, 2008

இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச தலையீட்டு முயற்சிகளுக்கு இந்தியா தலைமை: ஜே.வி.பி

இலங்கையில் தமிழ் பிரிவினைவாதத்தினை வளர்த்து, 1980 களில் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சிகளையும், ஆயுதங்களையும் இந்தியா வழங்கியதாகக் குற்றஞ்சாட்டியுள்ள மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி, இந்தியா தற்போது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் இடம்பெறுவதற்கு முன்னின்று செயற்படுவதாகவும் தெரிவித்திருக்கிறது.

புதன்கிழமையன்று இலங்கை வெளிநாட்டுப் பத்திரிகையாளர் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கருத்துவெளியிட்ட ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, புதுடெல்லியுடன் சேர்த்து இந்தக் கொடிய சர்வதேச தலையீடு எனும் கூட்டுமுயற்சியில், நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று தெரிவித்தார்.

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுமுயற்சிக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகள் எதனையும் தமது அமைப்பு ஏற்றுக்கொள்ளமாட்டாது என்று தெரிவித்த சோமவன்ச அமரசிங்க, இலங்கையின் 13வது திருத்தச் சட்டமூலத்தினை அடிப்படையாகக் கொண்ட எந்த யோசனைகளையும் தாம் ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் ஆட்சியிலுள்ள தற்போதைய அரசின் நன்மதிப்பு என்பது மக்கள் மத்தியில் நலிவடைந்து செல்வதாகத் தெரிவித்த அவர், ஆனாலும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கெதிராக அரசாங்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு தமது முழுமையான ஆதரவு உண்டென்றும் தெரிவித்தார்.

இது குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

கிளெமோர் தாக்குதல்களில் 8 பொதுமக்கள் பலி

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களில், 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தக் குண்டுத் தாக்குதல்களை இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரே நடத்தியிருப்பதாகவும், இரண்டு சம்பவங்களிலும் உழவு இயந்திரங்களில் சென்றவர்களே கொல்லப்பட்டதாகவும், விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் வழியான அறிக்கையொன்றின் மூலம் கூறியிருக்கின்றார்கள்.

எனினும் இந்தத் தாக்குதல்களைத் தாங்கள் செய்யவில்லை என இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் பனங்காமம் பிரதேசத்தில் உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்தில் சென்றுகொண்டிருந்த 4 பேரும், சில மணித்தியாலங்களின் பின்னர் நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள மருதமடு என்னுமிடத்தில் இருந்து ஒலுமடு என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மீது நடத்தப்பட்ட மற்றுமொரு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் மேலும் 4 சிவிலியன்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச்சம்பவங்கள் குறித்து இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது தமது படையணியினர் எவரும் நேற்று வன்னிப்பிரதேசத்தினுள் செல்லவில்லை எனக் கூறிய அவர் இந்தத் தாக்குதல்களுக்கும் இராணுவத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.

Posted in Eelam, Eezham, LTTE, Sri lanka, Srilanka | Leave a Comment »

Collections – Drafts: Op-eds, Thoughts, Todo – Dinamani, Viduthalai, Kalki

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 29, 2008

நிபந்தனைகளும் நியாயங்களும்

இரா.சோமசுந்தரம்

ஒரு சட்டம் அல்லது புதிய நிபந்தனை புகுத்தப்படும்போது அதற்கான காரணங்கள் இல்லாமல் செய்யப்படுவதில்லை.

அத்தகைய நிபந்தனை அல்லது சட்டத்தை எதிர்க்கும்போது ‘இதை இப்போது அமல்படுத்துவதன் அவசியம் என்ன?’ என்று கேள்வி கேட்பதும், அதற்கு அரசு சொல்லும் காரணத்தை விவாதத்துக்கு உட்படுத்துவதும், பெருந்திரளானோரின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அது அமலாகும்படி பார்த்துக் கொள்வதும் நியாயமான அணுகுமுறைதான்.

இப்போது பட்டியல் வகுப்பு மாணவர்கள் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே உதவித்தொகை தரப்படும் அல்லது தொடரும் என்ற நிபந்தனைக்கு பட்டியல் வகுப்பு மாணவர்கள் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள்) எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

திடீரென இப்படியொரு நிபந்தனையை மத்திய அரசு கொண்டுவரக் காரணம் என்ன? என்பது பற்றி மாணவர்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி, யாருமே பேசவில்லை.

இந்த நிபந்தனையை மத்திய அரசு விலக்கிக் கொள்ளாவிட்டாலும், மாநில அரசு தனது நிதியில் இந்த மாணவர்களுக்கு உதவித்தொகையை நிபந்தனையின்றி வழங்கும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவரும்கூட, இதன் பின்னணி என்ன? என்பது குறித்து விளக்கவோ, அல்லது மாணவர்களுக்கு அறிவுறுத்தவோ முயலவில்லை.

ஏன் இத்தகைய நிபந்தனையை மத்திய அரசு மேற்கொள்ள நேரிட்டது?

மத்திய, மாநில அரசுகள் மட்டுமன்றி சில தனியார் அறக்கட்டளைகளும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் உண்டுஉறைவிட வசதியும் அளிக்கின்றன. அல்லது அதற்கான செலவை ஏற்கின்றன.

இந்தத் தனியார் அறக்கட்டளைகளின் கருணை நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இவர்களிடம் சலுகையைப் பெறும் மாணவர், ஒரு பருவத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர் உதவித்தொகை அல்லது இலவச விடுதி சலுகையை இழந்துவிடுவார். மீண்டும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே (எந்தப் பாடத்திலும் ‘அரியர்ஸ்’ இல்லாத போதுதான்) அவருக்கு இலவச சலுகை மறுபடியும் தொடரும். அதுவரை, ஒன்று அவர் விடுதியிலிருந்து வெளியேற வேண்டும். அல்லது பொது மாணவர்களுக்கு இணையாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிபந்தனை, அந்த மாணவர்கள் தங்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் கவனம் சிதறினால், கல்விக் கட்டணம் கையைக் கடிக்கும்.!

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கும் அவர்களது இலவச உண்டுஉறைவிடத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாகச் செலவிடுகின்றன.

இந்த மாணவர்களுக்கு இதுவரையிலும் எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காத மத்திய அரசு, இப்போது அதை நடைமுறைப்படுத்துவது ஏன்? உயர்கல்வியில் இந்த மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு குறைந்துள்ளதுதான் காரணம். இதை உயர்கல்வி உலகம் நன்கு அறியும். ஆனால் அவர்களும் அரசியல்வாதிகள் போலவே மெüனம் சாதிக்கிறார்கள்.

எந்த நிபந்தனையும் இல்லாமல் இருந்துவிட்டு, இப்போது 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று அரசு நிபந்தனை விதிப்பது அதிகபட்சமான எதிர்பார்ப்பாக இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறவேண்டும் (அரியர்ஸ் இருக்கக்கூடாது) என்று எதிர்பார்க்கும் உரிமைகூட அரசுக்கு இல்லாமல் போகுமா?

நகரங்களில் உள்ள கல்லூரியில் இடம் கிடைத்து, இலவச உண்டுஉறைவிடத்தில் தங்குவதற்கும் இடம் கிடைத்துவிட்டால், பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வியை முடிக்கும்வரை (மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு) கல்வியில் ஆர்வம் செலுத்துவதில்லை.

இந்த உண்மையை அறிந்துகொள்ள ஒரு புள்ளிவிவரத்தை எடுத்துப் பார்க்கலாம். அரசின் கல்வி உதவித் தொகை மற்றும் உணவு உறைவிட சலுகை பெறும் மாணவர்களில் எத்தனை பேர் அனைத்துப் பருவத் தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் (அரியர்ஸ் இல்லாதவர்கள்) என்பதை கல்வித் துறை மிக எளிதில் கணினி உதவியுடன் பட்டியலிட முடியும்.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண் நிபந்தனையை வைத்தால், பெரும்பாலான மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காமல் போகும் என்ற அச்சம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இந்த மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. அத்துடன், பொது ஒதுக்கீட்டிலும் இடம்பெறும் அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.

அரசின் நிபந்தனையை எதிர்ப்பவர்கள் யார்? கல்லூரியிலும் மாணவர் விடுதியிலும் இடம் கிடைக்கப்பெற்று, கல்வியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, தங்கள் கவனத்தை நகர வாழ்வின் மோகத்தில் சிதறவிடும் மாணவர்கள்தான்.

அனைவரும் 60 சதவீத மதிப்பெண் பெறுவது கடினம் என்று கருதினால், பருவத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் குறைந்தது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நிபந்தனையை மட்டுமாவது ஏற்க முன்வர வேண்டும்.

எந்த நிபந்தனையும் இல்லாமல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கேட்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

————————————————————————————————————————————————————————–

இந்திய சமூகப் பண்பின் அடிப்படைக் கூறுகளை இந்துத்வா மறுதலிக்கிறது!

குல்தீப் நய்யார்


பாரதீய ஜனதாக் கட்சி மறுபடியும் இந்துத்வக் கோட்பாட்டுக்கே திரும்பிச் சென்றுவிட்டது. அந்த ஒரு கோட்பாட்டை மட்டுமே அது அறிந்துள்ளது. தாங்களே தனியாக அதிகாரம் பெற்றிருக்கும்போது நேரிடையாகவும், தேசிய ஜனநாயக முன்னணியின் அங்கமாக இருக்கும்போது மறைமுகமாகவும் அக் கோட்பாட்டை அது பின்பற்றுகிறது. 1977 – 1980 வரையிலான ஜனதா அரசில் அது முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஜனசங்கத்தின் முன்னாள் உறுப்பினர் களாக இருந்த அனைவரும் ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தினுடனான தங்கள் தொடர்புகளை அறுத்துக் கொள்கிறோம் என்று லோகநாயகர் ஜெயப்பிரகாச நாராயணனுக்கு வாக்குறுதி அளித்தவர்கள் அதிலிருந்து பின்வாங்கி அவரை ஏமாற்றி விட்டார்கள். இன்று பா.ஜ.க. முன்னிறுத்தி பரப்பி வரும் கோட்பாட்டையே அன்றும் பின்பற்றிய நிலையில், ஒரு இந்து மத வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் 60 ஆம் ஆண்டு நினைவு நாளன்று பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூடியது தற்செயலாக நேர்ந்த ஒன்றல்ல. கட்சியின் மதவெறிக் கூச்சல் முன்பு இருந்ததைப் போல ஓங்கி ஒலிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், இந்துத்வக் கோட்பாட்டை முன்னிறுத்தி நரேந்திரமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது, பா.ஜ.க.வின் தொனியை மாற்றியுள்ளது. குஜராத்தில் மோடியின் வெற்றி எதையோ மெய்ப்பித்துவிட்டது போல, இக்கட்சி இந்துத்வப் பாட்டையே திரும்பவும் பாடத் தொடங்கி விட்டது
எல்.கே. அத்வானி முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி கடுமையான நிலையை மேற்கொள்ளும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. ஆனால் எனக்கு வியப்பளித்தது என்னவென்றால், அந்த மேடையில் ஜஸ்வந்த் சிங்கும் இருந்ததுதான். பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் பற்றி அவர் மிகவும் மகிழ்ச்சி அற்றவராக இருந்தார்; ஒரு நிலையில் கட்சியை விட்டு விலகிச் செல்லும் எண்ணத்திலும் அவர் இருந்தார். அவ்வாறு கட்சியை விட்டுச் சென்றால் தான் தன்னந்தனியாக அரசியலில் அடையாளமற்றவராக நிற்க வேண்டுமே என்பதற்காக அவர் அவ்வாறு செய்யவில்லை போலும். வாஜ்யி உடல் நலமின்றி இருந்தபோதிலும், அக் கூட்டத்தில் ஏதேனும் ஒரு நேரத்தில் வந்து அவர் கலந்து கொள்வார் என்று நான் எதிர்பார்த்தேன். அவர் அந்த கூட்டத்திற்கு ஒரு செய்தியைக் கூட அனுப்பவில்லை. தன்னை பின்னுக்குத் தள்ளிவிட்டு, தன்னையே நிழல் பிரதமராக அத்வானி காட்டிக் கொண்ட கோமாளித் தனத்தை வாஜ்பேயி ரசிக்கவில்லை என்றே தெரிகிறது. அப்படியில்லையென்றாலும், அத்வானியின் கடுமையான நிலையை வாஜ்பேயி எப்போதுமே விரும்பியதில்லை. பிரதமர் வேட்பாளராகப் பரிந்துரைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலும், அய்க்கிய ஜனதா தளக் கட்சியின் சரத் யாதவும் கலந்து கொண்டது எனக்கு ஏமாற்றமளித்தது. ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு வழி வகுத்த ரதயாத்திரையை மேற்கொண்டவர் அத்வானிதான் என்பதை அவர்கள் மறந்திருக்க முடியாது. சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான அத்வானி, அவர்களுக்கு ஆதரவாக ஆக்கபூர்வ நடவடிக்கை என்னும் இட ஒதுக்கீட்டைக் கூட சிறுபான்மை மக்களை கவர்வதற்காகச் செய்யப் படுவதாகக் கூறுபவர்.
என்றாலும், பா.ஜ.கட்சிக்கு முன்னால் உள்ள மிகப் பெரிய சவாலே, நாட்டிலுள்ள விருப்பு பெறுப்பற்ற தாராளமனம் கொண்ட சக்திகளே. அவர்கள் எங்கு இருந்தாலும் சரி, என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் சரி, நம் நாட்டின் பன்முகத்தன்மையின் அடிப்படைக் கூறுகளை அழித்தொழிக்கும் இந்துத்வாவை எதிர்த்துப் போராடுவதே அவர்களின் முதல் வேலையாக இருக்கவேண்டும். மதத்தின் பெயரால் இந்திய மக்கள் சமூகத்தைப் பிளவு படுத்தி சிதைக்க பா.ஜ.க. தயாராக உள்ளது. அவர்களது இந்துத்வாவின் காரணமாக, நம் நாட்டின் கொள்கையாக எப்போதும் விளங்கும் மதச் சார்பின்மை என்பது தற்போது மிகவும் அவசரத் தேவையாக ஆகிவிட்டது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது தேசிய உணர்வை உருவாக்கி வளர்த்த மகாத்மா காந்தியின் தத்துவத்தையும் இந்தியாவின் பெருமையையும் முற்றிலுமாக அழிக்க பா.ஜ.க. முயல்கிறது. முன்பு ஒரு முறை ஜவஹர்லால் நேரு, நமது அரசியல் போர்க் களத்தில் நாம் போரிட்டு வென்றுவிட்டோம். ஆனால் அதற்கும் குறைவிலாத முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு போர்க்களம் இன்னும் நம்மை எதிர் கொண்டுள்ளது. எந்த வெளிநாட்டு எதிரியுடனான போரல்ல அது . .. அது நம்முள் நாமே எதிர்கொள்ள வேண்டிய போர் என்று கூறினார்.
இப்போர்க்களத்தை பா.ஜ.க. திறந்துவிட்டுவிட்டது. மோடியை மற்ற மாநில பா.ஜ.க. முதல்வர்கள் முன்னோடியாகப் பின்பற்ற வேண்டுமென்று இந்துத்வப் பிரச்சார குறுந்தகடு புகழ் ராஜ்நாத் சிங் கூறியபோது, குஜராத்தில் அவர் மேற்கொண்ட முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையை மிக உயர்வாகப் போற்றிப் பாராட்டுகிறார். நாட்டின் ஜனநாயகத்தையே அச்சுறுத்தும் அவர், பாசிச சக்திகளைப் பலப்படுத்துகிறார். மோடியின் ஆட்சியில் குஜராத் மிகவும் முன்னேற்றமடைந்து உள்ளதாக பறைசாற்றிக் கொள்ளும் கூற்றினை அளந்து அறிவதற்கான சரியான அளவுகோல், குஜராத்தில் முஸ்லிம்களும் மற்ற சிறுபான்மை யினரும் எந்த அளவுக்கு பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதுதான். இந்து தாலிபான்களின் கைஇறுக்கத்தில் குஜராத் இன்னும் தொடர்ந்து இருக்கிறது. பாரத ரத்னா விருது அளிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் உலகப் புகழ் பெற்ற ஓவியர் எம். எஃப். ஹுசைனியும் ஒருவர் என்று என்டிடிவி தொலைக்காட்சி சில நாட்களுக்கு முன் அறிவித்தபோது இந்து தாலிபான் சேனைகள் அகமதாபாத்தில் உள்ள அத் தொலைக் காட்சியின் அலுவலகத்தைத் தாக்கி அழித்தனர். மோடியின் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அத்தகையதொரு நோய்த்தன்மை கொண்ட வெறுப்பு நிலவுகிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற கேள்விக்கே அங்கு இடமில்லை. அவர்கள்தான் இந்துத்வ இயந்திரத்தின் இயங்கு சக்தி என்பதே அதன் காரணம். பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத்திடமிருந்து இது பற்றி ஒரு வார்த்தை விளக்கம் கூட வரவில்லை; கண்டிப்பது என்பது பற்றி கேட்கவே வேண்டியதில்லை. அவரது கட்சியான பா.ஜ.க. வின் முழுமையான கட்டமைப்பும் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வில் அமைக்கப்பட்டிருப்பதால், இதன் இளைய தொண்டர்களான சேனைகள், கட்சி அழைக்கும்போதெல்லாம், ஜாடை காட்டும்போது எல்லாம் பேரச்சத்தையும் கொடுமையையும் உருவாக்கத் தயாராக இருக்கும் கருவிகளைப் போல இருப்பது இயல்பேயாகும்.
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப் பெற்ற முஸ்லிம்களுக்கு நீதிமன்ற விசாரணையின் போது நியாயம் வழங்கப்படவில்லை என்பதுடன், அவர்களுக்கு அடிப்படை உரிமைகளும் மறுக்கப் பட்டன. இந்த வழக்கில் மொத்தமாக 135 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். 2004 அக்டோபர் 30 ஆம் தேதி ஜாமீன் உத்தரவை குஜராத் உயர் நீதி மன்றம் வழங்கியதுடன் சரி. அதன்பின் இது வரை வேறு எந்த ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் விசாரிக்கவே இல்லை. கைது செய்யப்பட்டதில் பல கடுமையான குறைகள், சில வெளிப்படையான முரண்பாடுகள் அரசுக்கு சுட்டிக் காட்டப்பட்டன. ஆனால் அரசோ இக் குறைகளைக் களைய மறுத்துவிட்டது. குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் இருந்து காவல்துறையினர் எவ்வாறு போலி சாட்சிகளைத் தயார் செய்து தப்பித் துக் கொண்டனர் என்பது வெளிப்பட்டது. பில்கிஸ் பானுவை வன்புணர்ச்சி செய்துவிட்டு, அவளது 3 வயது மகள் உள்பட 14 உறவினர்களைக் கொலை செய்த 11 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இறுதியில் சில குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதுவும் பில்கிஸ் பானு மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சி அமைப்புகளின் ஆதரவு பெற்ற மனித உரிமைப் போராளி டீஸ்டா சேடல்வாட் ஆகியோரின் இடைவிடாத முயற்சியால் இது நடந்தது. என்றாலும், இதில் தொடர்புடைய அய்ந்து காவல்துறையினர் விடுதலை பெற்றுள்ளனர். போலி சாட்சியம் அளித்ததற்காக அவர்கள் மீதான வழக்கைத் தொடர வேண்டும் என்று பில்கிஸ் விரும்புகிறார்.
முன்னாள் ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க. வின் அனைத்துக் கூட்டங்களையும், கருத்தரங்குகளையும், விவாதங்களையும், பேச்சுக்களையும் கடந்த நாற்பது ஆண்டு காலமாக நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்த இந்துக்களின் கட்சி ஏன் எப்போதுமே தீண்டாமை பற்றிய கேள்வியை எழுப்பியதே இல்லை? இந்துக்களிடையே உள்ள ஜாதி நடைமுறை மிகவும் அடக்குமுறை நிறைந்த ஒன்றாக உள்ளது. பா.ஜ.க.வைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் கட்சி என்பது இதன் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். இதனை சீர்திருத்தவேண்டும் என்று பா.ஜ.க. எப்போதாவது நினைத்திருக்கக்கூடும் என்று நான் நினைக்கவே இல்லை. உண்மையைக் கூறுவதானால், அனைத்து மக்களுக்கும் பொருளாதார சமத்துவம் அளிக்கும் எந்த சட்டத்தையும் பா.ஜ.க. விரும்புவது இல்லை. உயர்ஜாதி மக்களின் கட்சி அது. தொடக்க நாள் முதல் அக்கட்சிக்கு மிகவும் பிரியமானது என்ன வென்றால் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்களை, இழிவு படுத்தி கொடுமைப் படுத்துவதுதான். இந்து தாலிபான்களுடன் ஒப்பிடும்போது, முஸ்லிம் தாலிபான்கள் இந்தியாவில் தீவிரமாகச் செயல்பட வில்லை என்றாலும், இந்தியாவில் அவர்கள் இருந்து கொண்டுதான் உள்ளனர். சைத்தானின் பாடல்கள் என்ற நூலின் ஆசிரியர் சல்மான் ருஷ்டிக்கு விருந்து அளித்ததற்காக தொழிலதிபர் காத்ரெஜ்க்கு எதிராக தாலிபான்கள் சில நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தினார்கள். காத்ரெஜ் தயாரிக்கும் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கோரினார்கள். இந்தக் கலவரக்காரர்களுடன் பல முஸ்லிம்கள் தொடர்பு கொண்டவர்கள் அல்ல. என்றாலும் அவர்களுக்கு எதிராகப் பேச அந்த சமூகத்தினர் எவருக்கும் துணிவில்லாமல் போனது. அந்த மதவாத வெறியர்கள் என்ன செய்வார்களோ என்ற அச்சம் மக்களிடையே நிலவியது. பொதுமக்களின் மனதில் அத்தகைய அச்சத்தை உருவாக்குவதே அவர்களின் ஆயுதமாகும்.
வங்காளதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் விவகாரத்தில் அவர்கள் இந்திய அரசை ஏற்கெனவே ஊமையாக்கிவிட்டார்கள். உலகத்தாரிடமிருந்து அவரை தனிமைப்படுத்திய அரசு அவரை டில்லியிலேயே தங்கச் செய்துவிட்டது. இவ்வாறு வீட்டுக் காவலில் தான் வைக்கப்பட்டிருப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அரசோ அல்லது முஸ்லிம் சமூகமோ அவரது சுதந்திரத்தைப் பற்றி எந்த உணர்வும் அற்றவர்களாக உள்ளனர். ஒரு நாள் வெளியுறவுத் துறை அலுவலகத்துக்கு அழைக்கப் பட்ட அவரிடம் அய்ரோப்பாவுக்குச் சென்று விடுமாறு கூறப்பட்டது. நம்பிக்கை கொள்ள முடியாத இந்தியா எவ்வாறு அவரை நடத்தியிருக்கிறது பார்த்தீர்களா!

நன்றி: டெக்கான் கிரானிகிள், 4.2.2008
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

————————————————————————————————————————————————————————–
அது பம்பாய் காலம்…

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

சில நாள்களுக்குமுன் காலமான பிரபல பத்திரிகையாளர் ஆர்.கே. கரஞ்சியாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலே பம்பாயில் ‘வட இந்தியர்’களை குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருந்தனர் குண்டர்கள். இரு சம்பவங்களுக்கும் தொடர்பு ஏதும் கிடையாது. ஆனால், சிறப்புமிகு விழுமியங்கள் ஒருபுறம் வீழ்ந்து கொண்டிருப்பதையும், மறுபுறம் அந்த இடத்தில் தேசபக்தி என்ற போர்வையில் குண்டர்களின் ஆட்சி தலைதூக்கிக் கொண்டிருப்பதையும் அவ்விரு சம்பவங்களும் சித்திரித்தன.

அந்த நாளைய பெருமைக்குரிய பம்பாயின் சின்னமாகத் திகழ்ந்தவர் ருஸ்ஸி கரஞ்சியா. சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும்பாலான சமயங்களில் காந்திஜி தங்கியிருந்தமையால் ஒரு வகையில் 1940-களில் இந்தியாவின் அரசியல் தலைநகரம் போலவே திகழ்ந்தது பம்பாய். காந்திஜி தங்கியிருந்த இடத்திலிருந்து கூப்பிடு தொலைவில்தான் இருந்தார் ஜின்னா.

1950-கள் மற்றும் 1960-களின் தொடக்கத்தில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக மட்டுமன்றி, நாட்டியம், நாடகம், இலக்கியம், ஓவியம் ஆகிய கலைகளின் தலைநகரமாகவும் மேட்டுக்குடி வாழ்க்கை நளினங்களின் இருப்பிடமாகவும் அறிவுச்சுடர் பிரகாசிக்கும் நகரமாகவும் திகழ்ந்தது பம்பாய். கொடுக்கவும் எடுக்கவும், பகிரவும் கற்கவும் உலகமே கூடும் இடமாக இருந்தது பம்பாய்.

எடுத்துக்காட்டாக, அன்று கலா கோதா பகுதியில் உள்ள ஓர் அறையில் முற்போக்குக் கலைஞர்கள் குழுவை அமைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சமுதாயத்துக்கு அறிமுகமே ஆகியிராத, படைப்பார்வமிக்க கே.எச். ஆரா, வி.எஸ். கெய்தாண்டே, எஸ்.எச். ராஸô, எப்.என். செüஸô, எம்.எப். ஹுசைன், கே.கே. ஹெப்பார் போன்றவர்கள். இன்று அவர்கள் கலை உலக மகுடத்தில் மாணிக்கங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். கலா கோதாவோ, இன்று உலகின் சிறந்த கலைநகரங்களுக்கு இணையானது என்று கூறும் அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது.

தற்செயலாக நிகழ்ந்ததோ, என்னவோ; ஆனால், அன்றைய கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் காக்க வந்த தேவதைகளைப்போல வந்தனர், ஜே.ஜே. கவின்கலைக் கல்லூரியின் முதல்வர் வால்டர் லாங்கமர், விளம்பர உலகின் குருவான ரூடி வான் லேடன், பத்திரிகை ஆசிரியரான சி.ஆர். மண்டி ஆகிய திரிமூர்த்திகள். ஒரு முழுத் தலைமுறையின் அழகியல் உணர்வுகளை, சிந்தனைகளை வடிவமைத்து வளர்த்தெடுத்தனர் அவர்கள்.

ஆனால் அவர்களைப் பார்த்து நீங்கள் இந்தியர்களா, வட இந்தியர்களா என்று யாரும் அன்று கேட்கவில்லை. அன்றைய பம்பாயின் சிறப்பு அத்தகையது. ‘இந்தியாவின் உயிரோடு கலந்தது; அதன் ஓர் அங்கம்’ என்ற, அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த பர்மா ஷெல் நிறுவன விளம்பர வாசகங்களைப்போல, இந்திய வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டவர்கள் அவர்கள்.

அன்று பாரீஸ் நகரிலிருந்து இந்தியா திரும்பிய ராஜா ராவ் அளித்த உத்வேகத்தில், ‘சேத்தனா’ என்ற பெயரில் சிற்றுண்டிச்சாலை ஒன்று அமைக்கப்பட்டது. அதுவும் கலா கோதா பகுதியில்தான் அமைக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க ழான் பால் சாத்தரின் சிற்றுண்டிச்சாலையாக இருக்கவில்லை. அங்கு வழக்கமாக வருவோரில் முல்க் ராஜ் ஆனந்தும் ஒருவர்.

அங்கிருந்து சில கட்டடங்கள் தள்ளி, வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது பயணத்தைத் தொடங்கியிருந்தார், நாடக உலகுக்குப் புதிய திசைவழியைக் காட்டிய இப்ராகிம் அல்காஜி. அப்போது அங்கிருந்த ஒரே ஆடம்பர ஹோட்டல் தாஜ் மட்டும்தான். அன்றைய வாடிக்கையாளர்களின் மனங்களில் இடம்பிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தது அம்பாசடர் ஹோட்டல். ஆனால் அவற்றையெல்லாம் விஞ்சி ஓஹோவென்றிருந்தது இந்தியா காபி ஹவுஸ்.

முற்றிலும் மாறுபட்ட நாகரிகத்துக்கு மாறத் தயாராக இருந்தவர்களுக்காகவே திறக்கப்பட்டிருந்தது கொலாபாவில் இருந்த லெப்போல்ட் கஃபே. ‘சாந்தாராமை’ப் பற்றி எழுதுவதற்கும். ‘லெப்போல்டை’ உலகம் முழுவதும் பிரபலமாக்குவதற்கும் கிரகோரி டேவிட் ராபர்ட்ஸýக்கு அரை நூற்றாண்டு காலம் ஆகியிருக்கும்.

மொரார்ஜி தேசாய் ஆட்சி நடந்துகொண்டிருந்ததும், அவரது மதுவிலக்குக் கொள்கையும் அமலில் இருந்ததும் அந்த பம்பாயில்தான். ஒரு சுவர் அலமாரி முழுவதும் உலகின் மிகச் சிறந்த விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மது வகைகள் அணிவகுத்து நின்ற, கரஞ்சியாவின் மெரைன் டிரைவ் இல்லம் இருந்ததும் அதே பம்பாயில்தான்.

உண்மையிலேயே உலகப் பண்பாட்டில் ஊறியவர் கரஞ்சியா. மாமனிதர்களுடன் பழகிய அதே நேரத்தில், சாமானியர்களின்பாலும் அக்கறை கொண்டிருந்தவர் அவர்.

தனது அலுவலக உதவியாளருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமானால், ஆசிரியர் குழுக் கூட்டத்தைக்கூட ரத்து செய்துவிட்டு, தானே காரை ஓட்டிக்கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடியவர் கரஞ்சியா. தினமும் காலை 11 மணிக்கு நீர் கொண்டு தரும் கடைநிலை ஊழியருக்கு நன்றி தெரிவிக்க ஒருபோதும் தவறாதவர் அவர்.

பழைய உலகின் மாண்புகளையும் நவீன உலகின் நளினங்களையும் சிறந்த கலாசார விழுமியங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தியவர் ருஸ்ஸி கரஞ்சியா. அன்றைய சிறப்புமிகு பம்பாயைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர் அவர்.

ஆனால் இன்றோ, போயேபோய்விட்டன அந்தப் பழைய பெருமைகளெல்லாம்.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)
————————————————————————————————————————————————————————–
சீனாவுக்கு இயற்கை விடும் சவால்!

க. ரகுநாதன்

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உறை பனியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது சீனா.

சீனாவின் மத்திய, தெற்கு மாகாணங்களில் பனி படர்ந்த சாலைகளால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டத்தால் விமானப் போக்குவரத்தும் நின்றுவிட்டது. இருக்கும் ஒரே வழி ரயில்வே மட்டுமே.

பிப்.7-ம் தேதி தொடங்கிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக இப்பகுதியில் இருந்து சென்ற லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்துப் போயினர். 4 லட்சம் பேருக்கு 3 ஆயிரம் ரயில்களே இயக்கப்பட்டன. மின் உற்பத்தி பாதிப்பால் பல நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன. ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இயற்கை விடுத்த சவாலை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில் சீன அரசு உள்ளது.

ஒருபுறம் தனது பொருளாதார வலிமை, உள்கட்டமைப்பு பிரமாண்டம் ஆகியவற்றை உலக நாடுகளுக்குப் பறைசாற்றும் பொன்னான வாய்ப்பாக ஒலிம்பிக் போட்டியை சீனா கருதுகிறது. மறுபுறம் ஜனநாயக சக்திகள் சீன அரசின் அடக்குமுறையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தயாராகி வருகின்றன. இன்னொரு புறம் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசு அரசுக்குப் பெரும் சவாலாக உள்ளது.

ஒலிம்பிக் வீரர்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகலாம் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாரத்தான் போன்ற ஒரு சில போட்டி அட்டவணை மாற்றப்படலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதனால் காற்று மாசடைவதைத் தடுக்க சீன சுற்றுச்சூழல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், போட்டியின்போது மழை வந்துவிடக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்க அரசும், விஞ்ஞானிகள் குழுவும் தயாராகி வருகின்றன. இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

கடும் உறை பனிக்கு ‘லா நினோ’ எனும் கடலடி குளிர் நீரோட்டமே காரணம் என்று அரசு கூறினாலும், இதற்கு புவி, வெம்மை அடைவதுதான் முதன்மைக் காரணம் எனலாம்.

உலகின் ஓரிடத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றோரிடத்தில் நிச்சயம் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இதைப் போன்ற காலநிலை மாறுபாடுகள் உதாரணம்.

உலகில் குறிப்பாக வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, நிலக்கரி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டால் எழும் புகை ஆகியவற்றால் வெளியேறும் கரியமில வாயு வளிமண்டத்தில் டன் கணக்கில் கலந்துள்ளது. இவைதான் புவி வெப்பம் அதிகரிக்க மூல காரணம். இது கடலடி நீரோட்டத்தையும் பாதிப்பதால் நிலப் பகுதியில் இது போன்ற பருவநிலை மாறுபாடு ஏற்படுகிறது.

பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க 1997-ம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தம் உலக நாடுகளால் கொண்டு வரப்பட்டது. அது 2012-ம் ஆண்டுடன் முடிவடைகிறது.

மரபுசாரா எரிசக்தியை அதிகரிப்பதன் மூலம் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறுவதை 2008-12ம் ஆண்டுக்குள் 5 சதவீத அளவுக்கு வளர்ந்த நாடுகள் குறைக்க வேண்டும் என்பது முக்கிய விதி.

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டாலும், தொழிலதிபர்கள் நிர்பந்தம், அரசியல் காரணங்களால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதுவரை ஒப்புதல் பெறப்படவில்லை (கடந்த டிசம்பரில் செனட் சபை மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது). இதனால் அதை நிறைவேற்றும் நிர்பந்தம் அரசுக்கு இல்லை. இதை நிறைவேற்றினால் தங்களது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறிவருகிறது.

உலக அளவில் இந்தியாவும், சீனாவும் 10 சதவீத வளர்ச்சியை நோக்கிச் சென்றாலும், உலக பசுமைக்குடில் வாயுவை 10 சதவீதமே வெளியேற்றுகின்றன. ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் 42 சதவீதம் வெளியிடுகின்றன.

வாயுக்கள் வெளியாவதைக் குறைப்பதற்காக தங்களது தொழில் வளர்ச்சிக்குத் தடையான கொள்கைகளை ஏற்க வளரும் நாடுகள் தயங்குகின்றன. வளர்ந்த நாடுகளும் (குறிப்பாக அமெரிக்கா) தங்களது உரிமையை விட்டுக் கொடுக்க மறுக்கின்றன. இதனால் 2012-ம் ஆண்டுக்குப் பிறகு எத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யாமல் டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடந்த பருவநிலை மாறுபாட்டுக்கான மாநாடு முடிந்துள்ளது.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், விவசாய மானியத்தைக் குறைக்கக் கோரும் உலக வர்த்தக ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களை வற்புறுத்தி உலக நாடுகளைப் பணியவைக்கும் அமெரிக்கா, உலகையே அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் உடன்பாட்டிற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற மறுப்பது வேடிக்கையானது.

எல்லாவற்றிலும் தனது முன்னிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா, சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புவி வெம்மையைக் குறைக்க முன்வர வேண்டும்.

உலக வெம்மை அதிகரிப்பால் புயல், பெரும் மழை வெள்ளம், கடும் வறட்சி, கடும் உறை பனி, அதன் காரணமாக உணவு உற்பத்தி பாதிப்பு, பஞ்சம் என்று பல்வேறு இன்னல்களை மனித குலம் சந்திக்க வேண்டி வரும். இவை முதலில் பாதிக்கப்போவது ஆப்பிரிக்க, ஆசியக் கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளைத்தான்.

பொருளாதார வளர்ச்சியைவிட முக்கியமானது, நாம் வாழும் பூமி வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பது. இயற்கையை அழித்து பொருளாதார வளம் பெறும் சமுதாயம் நீண்ட காலம் நிலைக்காது. எனவே இயற்கை வளத்தைப் பெருக்கி, பசுமையைக் காப்பது மட்டுமே எதிர்கால உலக நலனுக்கு உகந்தது என்பதை வளரும் நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளும் உணர வேண்டும்.

இல்லாவிடில் காதல் போயின்…காதல் போயின்…மட்டுமல்ல, பசுமை போயினும் சாதல்தான்!
————————————————————————————————————————————————————————–
சோகத்தின் முடிவில் உதித்த காப்பீட்டுத் திட்டம்

டி.ஆர். சுதாகர்

நம்நாட்டின் பழம்பெரும் மிகப்பெரிய துறை தபால்துறை. அனைத்து கிராமங்களையும் நாள்தோறும் இணைக்கும் துறையும் அதுவே. இந்தியாவில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் இயங்குகின்றன.

இத்துறை மௌனமாக ஒரு சாதனையையும் செய்துள்ளது. அது தான் காப்பீட்டுத் திட்டம்.

இந்திய அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டம் 125-வது ஆண்டில் தடம்பதித்து வெற்றி நடைபோடுகிறது.

இக் காப்பீட்டுத் திட்ட யோசனை உதித்ததே ஒரு சோகத்தின் முடிவில்தான்.

அது பிரிட்டிஷ் அரசு காலம். 1870-ம் ஆண்டு தபால் தந்தி துறையில் பணிபுரிந்த போஸ்ட் மாஸ்டர் ஒருவர் திடீரென்று நோய் தாக்கி உயிரிழந்தார். இவரது மறைவு அவரது குடும்பத்தை வறுமைச் சூழலில் தள்ளிவிட்டது. சக ஊழியர்கள் இக் குடும்பத்தினருக்கு உதவ பிரிட்டிஷ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அரசோ இம்மாதிரி உதவுவதற்கு சட்டத்தில் இடமில்லை என்று கைவிரித்து விட்டது.

பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்கள் ஆதரவற்றுத் தவிக்கும் நிலையை உணர்ந்து அக் குடும்பங்களைக் காப்பாற்ற கண்டிப்பாக ஒரு திட்டம் கொண்டுவர வேண்டும் என்ற யோசனை உதித்தது. அது நாளடைவில் உண்மை என உணரப்பட்டு 1883-ல் இலக்கை எட்டியது. அப்போது தபால்துறையை நிர்வகித்து வந்த நிதி மற்றும் வர்த்தக இலாகா செயலர், லண்டனில் இருந்த இந்தியாவுக்கான செயலருக்கு 27-7-1883-ல் கடிதம் எழுதினார். தனது யோசனையையும் வேண்டுகோளையும் அதில் தெளிவுபடுத்தினார். இது மனிதாபிமான முறையில் சிந்திக்கப்பட்டு அதற்கு பிரிட்டிஷ் அரசு செயல்வடிவம் கொடுத்தது.

1884-ம் ஆண்டு தபால் ஊழியர்களிடம் இத் திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு இந்தியாவின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்த எப்.ஆர்.ஹாக் என்பவரிடம் பிரிட்டிஷ் அரசு கேட்டுக் கொண்டது.

அப்போது, இத் திட்டத்தின்படி ஒரு தபால் ஊழியர் ரூ.50க்கு குறையாமல், ரூ.4 ஆயிரத்துக்கு மிகாமல் அஞ்சலக ஆயுள் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.

1888-ம் ஆண்டு தந்தித்துறை ஊழியர்களும், 1894-ம் ஆண்டு பெண் ஊழியர்களும் இத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 1884-ம் ஆண்டு, ரூ.14 லட்சம் மதிப்புள்ள பாலிசிகள் இருந்தன. தற்போது இத் திட்டத்தில் சுமார் 60 லட்சம் ஊழியர்கள் கோடிக்கணக்கான பாலிசி தொகைக்கு ஆயுள் காப்பீடு செய்துள்ளனர்.

தற்போது அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கென மாநில அளவில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு சென்னையை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது.

நகர மக்களுக்கு மட்டும் கிடைக்கும் இத்தகைய சலுகை ஏன் கிராம மக்களுக்கும் கிடைக்கக்கூடாது என்ற கேள்வி எழுந்தது. இதைப் பயன்படுத்தி கிராம மக்களும் பயன்பெற இத் திட்டம் கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

1995-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி முற்றிலும் கிராமப்புற மக்களுக்காக கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கிராமப்பகுதியில் நிரந்தரமாகக் குடியிருக்கும் அனைவருக்கும் அதாவது 19 லிருந்து 55 வயது வரை உள்ளவர்களுக்கு இத் திட்டம் பொருந்தும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகபட்சம் ரூ.3 லட்சத்திற்கும் காப்பீடு செய்யலாம்.

முழு ஆயுள் காப்பீடு, குறித்த கால காப்பீடு, மாறுதலுக்கு உட்பட்ட முழு ஆயுள் காப்பீடு, எதிர்பார்ப்பு குறித்த கால காப்பீடு, 10 ஆண்டு கிராமிய அஞ்சலக காப்பீடு என 5 திட்டங்கள் உள்ளன.

தற்போது கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் குழந்தைகளும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தில் தாய், தந்தை இருவரும் பாலிசிதாரர்களாக இருந்தால், அவரது குழந்தைகள் இருவருக்கு 5 முதல் 21 வயது வரை பாலிசி எடுக்கலாம். இதனால் அக் குடும்பத்தினருக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது. இதில் தாய், தந்தை யாராவது இறக்க நேரிட்டால் அந்த பாலிசிக்கான முதிர்வுத் தொகை உடனடியாக வழங்கப்படுகிறது. குழந்தைகள் இறக்க நேரிட்டால் அந்த பாலிசிக்கான பிரீமியம் வசூலிக்கப்படுவதில்லை. பாலிசி முதிர்வடைந்தபின் அக் குடும்பத்தினருக்கு இத் தொகை வழங்கப்படுவது இத் திட்டத்தின் சிறப்பம்சம்.

கடந்த ஆண்டு கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.34 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கோவை கோட்டத்தில் 4856 பரிந்துரைகள் செய்யப்பட்டு ரூ.40.64 கோடிக்கு பாலிசி எடுக்கப்பட்டது.

இந்த ஆண்டு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டு, சுமார் ரூ.10 கோடி அளவுக்குப் பாலிசி எடுக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தில் குறைந்தபட்ச பிரீமியம் மட்டுமன்றி ஒவ்வொரு 20 ஆயிரம் ரூபாய் காப்பீட்டுக்கும் மாத பிரீமியத் தொகையில் ரூ.1 வீதம் சலுகை, ஓராண்டுக்குமுன் மொத்தமாகப் பிரீமியம் செலுத்தினால் 2 சதவீதம் தள்ளுபடி, அரையாண்டுக்கு 1 சதவீதம், காலாண்டுக்கு அரை சதவீதம் தள்ளுபடி உண்டு. இதில் 3 ஆண்டுகளுக்குப் பின் தேவைப்பட்டால் கடனுதவியும் வழங்கப்படுகிறது.

கிராம மக்களைக் காப்பாற்ற, அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதமாக, சேமிப்பிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்.
————————————————————————————————————————————————————————–
மாற்றமும் ஏமாற்றமும்…

தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது என்பது உண்மை. இந்த வளர்ச்சியின் தொடர் விளைவாக ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளும் கொஞ்சநஞ்சமல்ல. முப்பது ஆண்டு உழைப்புக்குப் பிறகு ஒரு வங்கி அதிகாரி பெறும் ஊதியத்தைவிட, பட்டம் பெற்ற அடுத்த நாளே அவரது மகனோ மகளோ பெறும் ஊதியம் இரண்டு மடங்கு என்பது பெற்றோரைப் பொருத்தவரை மகிழ்ச்சியான விஷயம். ஆனால், சமுதாயத்தின் மிகச்சிறிய விழுக்காடு மட்டுமேயான இந்தத் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த இளைஞர்களிடம் காணப்படும் தாராளம், ஏனைய அனைத்துப் பிரிவினரையும் எல்லாவிதத்திலும் பாதிக்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.

நூறு கோடியைத் தாண்டிய மக்கள்தொகையில் அரை சதவிகிதம்கூட இல்லாத ஒரு பகுதியினரிடம் காணப்படும் பணப்புழக்கம், ஏனைய பிரிவினரின் அன்றாட வாழ்க்கையில் பெரிய புயலைக் கிளப்பி இருக்கிறது என்பது எரிமலைக் குமுறலாக இருந்து வருகிறது. அதிகரித்த வீட்டு வாடகை, எண்ணிப் பார்க்க முடியாத முன்பணம், அடங்க மறுக்கும் வீடு, மனை விலை, வாசனைத் திரவியங்கள், நுகர்பொருள்கள் மீதான மோகம் என்று ஏனைய பிரிவினரை கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் முடவர்களாக்கி இருக்கிறது இந்த திடீர் பணக்காரத்தனம்.

ஆனால், பணக்காரத்தனமும் அதன் வெளிப்பாடுகளும் தனி மனித சுதந்திரம் என்கிற கோஷத்துடன் வளையவரத் தொடங்கும்போது, அதன் எதிர்விளைவாக எழுகின்ற இயலாமையின் வெளிப்பாடு, அநாகரிகத்துக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் அச்சாரம் போடுமோ என்பதுதான் நமது அச்சம். எங்களுக்கு உரிமையில்லையா என்று கேட்கும் இளைஞர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. இதேபோல இருக்க உரிமை இருந்தும், அதற்கான வாய்ப்பில்லாத சக இளைஞர்களை நினைத்துப் பார்க்கும் கடமை அவர்களுக்கு இல்லையா?

அடுத்தாற்போல, இந்தத் தகவல் தொழில்நுட்பத் துறையினரின் வேலை நேரம், அந்தந்த நிறுவனங்கள் தொடர்பு வைத்திருக்கும் நாடுகளின் வேலைநேரமாக இருப்பது புரிகிறது. நேரங்கெட்ட நேரத்தில் இளைய தலைமுறையினர் தங்களது உடல்நலத்தைப் பொருள்படுத்தாமல் பணம் சம்பாதிக்க முற்பட்டிருப்பது காலத்தின் கட்டாயம். இவர்களுக்குத் தகுந்த பாதுகாப்புத் தரப்பட வேண்டும் என்பதும், அலுவலகங்களுக்குச் சென்று வர போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதும் நியாயமான கோரிக்கைகள்.

குறிப்பாக, பெண் ஊழியர்கள் போக்குவரத்து ஓட்டுநர்களால் பலாத்காரம் செய்யப்படும் நிகழ்ச்சிகளும், சக ஊழியர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படும் செய்திகளும் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்ச நீதிமன்றம் கர்நாடக நிறுவனம் ஒன்றின் தலைமை இயக்குநரை ஓட்டுநர் ஒருவரின் தவறான நடத்தைக்கு உத்தரவாதியாக்கும்படி கூறியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய பரிந்துரை.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர் குற்றம் சாட்டப்படுவார், தண்டிக்கப்படுவார் என்கிற பய உணர்வு இருந்தால்தான் இந்த நிறுவனங்களின் கண்காணிப்பு கடுமையாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொருத்தவரை, அந்தத் துறைக்கு இப்போது இருக்கும் முக்கியத்துவமும் அன்னிய நாடுகளின் ஆதரவும் குறைந்து விடுமோ என்கிற பயத்துடன் அரசு செயல்படாமல், நமது இளைய சமுதாயத்தினரின் வருங்கால நலனை முன்னிறுத்தி, அவர்களுக்கு நியாயமான உரிமைகள் தரப்படுவதற்கு வழிகோல வேண்டும்.

எந்தவொரு மாற்றத்தையும் வளர்ச்சியையும் சட்டம் போட்டுத் தடுத்துவிட முடியாது. இளைய தலைமுறையின் தனிமனித சுதந்திரத்தை முடக்குவது என்பதும் நல்ல முடிவாக இருக்காது. ஆனால், சமுதாயத்தின் எல்லா மாற்றங்களையும், செயல்பாடுகளையும் தொலைநோக்குப் பார்வையுடன் நெறிப்படுத்தும் கடமை ஓர் அரசுக்கு உண்டு. இதை ஆட்சியாளர்கள் மனதில் கொள்ள வேண்டிய தருணம் இது.
————————————————————————————————————————————————————————–
ஆளுக்கொரு நீதி…

அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தில் நீதித்துறை தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தக்க நேரத்தில் ஒரு தீர்ப்பு மூலம் அறிவுரை கூறியிருக்கிறது.

பிகார் மாநிலத்தில் பணிபுரியும் கால்நடைத்துறை டாக்டர்கள், தங்களுக்கும் மத்திய அரசில் பணிபுரியும் கால்நடைத்துறை டாக்டர்களின் ஊதிய விகிதமே வழங்கப்பட வேண்டும் என்று பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இரு அரசுகளின் டாக்டர்களும் செய்வது ஒரே வேலையைத்தானே, ஊதிய விகிதமும் ஒன்றாக இருந்தால் என்ன என்று பாட்னா உயர் நீதிமன்றம் பகுத்தறிவோடு சிந்தித்து, பிகார் கால்நடைத்துறை டாக்டர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.

உடனே பிகார் அரசு இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. “பிகார் மாநில கால்நடைத்துறை டாக்டர்களின் பணிமுறை, பணியாற்ற வேண்டிய பகுதி, அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதம் போன்றவற்றில் மத்திய அரசு டாக்டர்களுடன் ஒப்பிடும்போது வேறுபாடுகள் உள்ளன. அதுமட்டும் அல்லாது மத்திய அரசுக்குள்ள நிதி வசதி பிகார் போன்ற மாநிலங்களுக்குக் கிடையாது. அப்படியிருக்க மத்திய அரசின் ஊதிய விகிதத்தை கால்நடை டாக்டர்களுக்கு அமல்படுத்தினால் அதையே முன் உதாரணமாகக் கருதி மற்ற பிரிவினரும் கேட்கத் தொடங்கலாம். இது பெரிய பிரச்னையில் கொண்டுபோய்விடும்’ என்று சுட்டிக்காட்டியது.

உடனே பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், “ஊதிய விகிதத்தைத் தீர்மானிக்க வேண்டியது அரசின் நிர்வாகத்துறை; அதில் தேவையில்லாமல் நீதித்துறை தலையிட வேண்டியதில்லை’ என்று தக்க நேரத்தில் அறிவுறுத்தியிருக்கிறது.

தமிழக அரசுக்கு, அதிலும் குறிப்பாக முதல்வர் கருணாநிதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு; மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் ஊழியர்கள் கேட்க வேண்டும் என்றுகூட காத்திராமல் உடனே அறிவித்து அவர்களுடைய நன்றியையும் பாராட்டையும் பெற்றுவிடுவார்.

மத்திய, மாநில அரசுகளின் ஊதியக்குழுக்களின் நிழலே படியாத பொதுமக்கள்தான் பாவம், இதையெல்லாம் ஏக்கத்துடன் வேடிக்கை பார்க்க நேரிடுகிறது.

அமைப்புரீதியாகத் திரட்டப்படாத துறைகளில், “செய்யும் வேலைக்கு கூலி’ என்று மட்டுமே பேசப்படுகிறது. அதே போல வேலைக்கு வராத நாள்களுக்கு கூலி கிடைக்காது.

அரசு ஊழியத்தில்தான் அடிப்படை ஊதியம் தவிர, அகவிலைப்படி (விலைவாசி உயரும்போதெல்லாம் மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில் அதை 3 மாதங்களுக்கு ஒருமுறை ஈடு செய்யும் ஏற்பாடு), நகரங்களில் பணிபுரிந்தால் நகர ஈட்டுப்படி, வாடகைப்படி, சிறப்புப் படி, இடர்ப்படி என்று “படிப்படியாக’ பல படிகள் அளக்கப்படுகின்றன. (இவையே போதாது என்ற மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகளிலும் நியாயம் இல்லாமல் இல்லை.)

இவை போக, ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுதோறும் “இன்கிரிமெண்ட்’ எனப்படும் ஊதிய உயர்வு. அதுபோக ஊதியக் குழுக்களின் பரிந்துரைகளுக்குப் பிறகு -அதுவும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகே -ஊதிய உயர்வு என்று அரசு ஊழியர்களின் காலம் கழிகிறது.

நாடு முழுக்க ஒரே மாதிரியான தொழில் செய்கிறவர்களுக்கு, ஒரே மாதிரி ஊதியம் கிடைக்க “”தேசிய ஊதியக் கொள்கை நிர்ணயிக்கப்பட வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்போது அந்தக் கோரிக்கையே “கங்கை-காவிரி இணைப்பு’ போல நிறைவேற்ற முடியாத கோரிக்கைகள் பட்டியலில் சேர்ந்துவிட்டது.

வேளாண்மை, தொழில், சேவை ஆகிய துறைகளிலேயே வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே ஊதிய வேற்றுமை நிலவுகிறது. ஒரு மாநிலத்துக்குள்ளேயே வெவ்வேறு மாவட்டங்களில் ஊதியம் வேறுபடுகிறது. நாட்டிலேயே வடக்கு, மேற்கு மாநிலங்களில் ஊதியம் கட்டுபடியாகும் விதத்திலும் கிழக்கு, தெற்கு பகுதிகளில் மிகவும் குறைவாகவும் இருக்கிறது.

அமைப்புரீதியாகத் திரட்டப்படாதவர்களும் இந் நாட்டின் வாக்காளர்கள்தான் என்றாலும், அவர்களுக்கு அரசியல் தெளிவு இல்லாததால் அவர்களுடைய குடும்பங்களில் மொத்தம் எத்தனை வாக்குகள் என்று கணக்கிட்டு சலுகைகள் தரப்படுவதில்லை. கூலி உயர்வு கேட்கக்கூட ஒரு அந்தஸ்து தேவைப்படுகிறது இந்த நாட்டிலே!
————————————————————————————————————————————————————————–
கவியும் வாழ்வும்

அஜயன் பாலா

உலகம் சொற்களால் ஆனது! சொற்கள் இல்லாத ஓர் உலகத்தை நம்மால் கற்பனையில்கூட யோசிக்க முடியாது.

ஒரு சமூகம் தனது ஞாபகங்களைச் சொற்களின் பயன்பாட்டினூடே கதைகள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் சேகரித்து வைத்துக்கொண்டு, தலைமுறை தலைமுறையாக வரலாற்றையும் கலாசாரத்தையும் கடத்தி வருகிறது. இந்தச் செயல்பாடு இல்லாத ஒரு மொழியில் சொற்கள் அர்த்தகனத்தைச் சுலபமாக இழந்துவிடுகின்றன.

இவ்வாறாக ஒரு சமூகத்தின் ஆன்ம வளர்ச்சிக்கு இறைச்சிப் பொருளாக விளங்கும் கவிஞனின் சொற்களும் வாழ்வும் காலங்காலமாக பரிதாபத்துக்குரிய நிலையில்தான் இருந்து வருகின்றன. வாழும்போது பாரதிபட்ட துன்பங்களும், அவமானங்களும் இன்று கதைகளாகவும் காவியங்களாகவும் சிலாகிக்கப்படுகின்றன. தனது ஒத்துவராத இயல்பு காரணமாக சமூகத்தில் அவர் பட்ட துன்பங்களின் கதைகள் நம் யோசனைக்கு அப்பாற்பட்டது. வாழும்போது கவிஞனை இம்சித்துப் பார்க்கும் இதே சமூகம், இறந்த பிறகு அவனுக்கு சிலை வைத்து கொண்டாடுவதுதான் மிகப்பெரிய வேடிக்கை.

பாரதிக்குப் பிறகு வந்த இத்தகைய தீவிர மனநிலை கொண்ட கவிஞர்களில் நகுலனும், பிரமிளும் குறிப்பிடத்தக்கவர்கள். மனித மனத்தின் இயல்பு குறித்தும், பிரபஞ்சத்திற்கும், இவற்றிற்குமிடையேயான தொடர்பு குறித்தும் கவிதை எழுதியவர்கள். அதேபோல வெளி உலகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளாமல் ஒரு வித எள்ளல் தன்மையுடன் அவதானித்தவர்கள். இருவருமே அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளைச் சிதறடித்துப் பதில்களையே கேள்விகளாக்கி தங்களது தீவிர மனநிலையை வெளிப்படுத்தியவர்கள். இருவரில் நகுலனுக்கு வீடே உலகமாக இருந்தது. ஆனால் பிரமிளுக்கு உலகமே வீடாக இருந்தது. இருவரில் பிரமிளுடன் நான் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவரோடு சில பொழுதுகளில் உரையாடியிருக்கிறேன்.

அப்போது சென்னை ரங்கநாதன் தெருவில் “முன்றில்’ என்ற பெயரில் ஒரு புத்தகக்கடை இருந்தது. முன்றில் சிற்றிதழின் ஆசிரியரான மா. அரங்கநாதன் மற்றும் அவரது மகன் மகாதேவன் ஆகிய இருவரும் அதனை நடத்தி வந்தார்கள். அப்போது மாலை நேரங்களில் எழுத்தாளர்கள் அங்கு கூடுவது வழக்கம். நான் அப்போது நகரத்திற்குப் புதியவன். நண்பர் ஒருவரின் பரிச்சயத்தின்பேரில் அந்தக் கடைக்குச் செல்லத் தொடங்கினேன்.

சஃபி, கோபிகிருஷ்ணன், லதா ராமகிருஷ்ணன், சி. மோகன், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், நாகார்ஜுனன், சாருநிவேதிதா, யூமா வாசுகி என பலரும் அங்கு வந்து செல்வர். இதனாலேயே அப்போது நான் பணி செய்து கொண்டிருந்த புலனாய்வு பத்திரிகையின் பணி முடிந்ததும் அந்த இடத்திற்கு விரைவேன். அதுபோல நான் விரைந்து சென்ற ஒரு நாளில் கால்மேல் கால்போட்டு அமர்ந்தவாக்கில் ஒல்லியாக, ஜோல்னா பை கண்ணாடி சகிதம் அமர்ந்திருந்தவரைப் பார்த்தேன்.

கூர்மையான நாசி மற்றும் விழிகளுடன், மீசை தாடி சுத்தமாய் ஷேவ் செய்யப்பட்டு மழுமழுவென முகம். அவர்தான் பிரமிள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

அவரிடம் பேசி பரிச்சயமும் செய்து கொண்டேன். பேச்சினூடே சினிமாக்கள் மீது அவருக்கிருந்த ஈடுபாடு என்னைக் கவர்ந்தது. ஒரு சினிமா தொடக்க காட்சியிலிருந்து இறுதிவரை க்ளைமேக்சை நோக்கியே நகர வேண்டும். நல்ல திரைக்கதை அப்படியாகத்தான் இருக்க வேண்டும் என பேச்சினூடே கூறினார்.

நண்பர்கள் மூலமாக அவரது முகவரியைப் பெற்றுக்கொண்டேன். அடுத்த இரு நாள்கள் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டைத் தேடிச் சென்றேன். அப்போது அவர் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தார். வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தால் கீழே பெரும் பன்றிக்கூட்டம் உணவுப்பொருள்களுக்காக சதா இரைச்சலிட்டபடி காணப்படும். அங்கே வசித்த யாரோ அதனைக் கூட்டமாக வளர்த்து வந்தனர். பிரமிள் தனியாக அங்கே வசித்து வந்தாலும் பெரும்பாலும் அங்கிருப்பவர்களிடம் நன்மதிப்பு பெற்றவராகவே இருந்தார். வீட்டைத்தேடி வந்தபோது குடியிருந்தவர்களின் பாவனையிலிருந்தே இதனை என்னால் யூகிக்க முடிந்தது. அந்தச் சிறிய அறையில் ஒரு மூலை முழுக்க வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள். அதற்கு முன் பிரமிளை சந்தித்தபோது வம்பை விலை கொடுத்து வாங்குவதுபோல என பலர் எச்சரித்தனர். ஆனால் அவர் என்னைச் சற்று கேலியும் கிண்டலுமாக அணுகினார்.

பேச்சினூடே சற்று நேரம் நிதானமாக என்னைத் தனது சோடாபுட்டி கண்ணாடி வழியாக ஊடுருவிப் பார்ப்பார். அன்றைய காலகட்டத்தின் சக எழுத்தாளர்கள்பற்றி விசாரித்தார். நீ அவனுடைய ஆளா என கேள்வி கேட்டார். அப்போது அவருக்கும் பல எழுத்தாளர்களுக்கும் மிகப்பெரிய சர்ச்சைகள் சிற்றிதழ்களில் ஓடிக் கொண்டிருந்த நேரம்.

அன்று எனக்கும் சேர்த்து அவரே உலை போட்டார். குக்கரில் வடிப்பதுபோல சிறிது தண்ணீர்கூட கஞ்சியாக வெளிப்படாமல் அலுமினியப் பாத்திரத்தில் சாதம் வடிக்கிறேன் பார் என்றார். அதுபோல வடித்துக் காண்பித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். அரிசிக்கும் தண்ணீருக்கும் ஒரு கணக்கு இருக்கிறது என்றார். பின் ரசம் மற்றும் ஊறுகாயுடன் அன்றைய என் பகல் பொழுது கழிந்தது.

அப்போது அவருக்கு எப்படியும் 54 வயதிருக்கும். அவரிடம் கேட்டபோது அப்படித்தான் சொன்னார். நானும் அவரும் அன்று வெளியில் இறங்கி நடந்தோம். எனக்கு உள்ளூர பெருமிதம். காலத்தின் மிகச்சிறந்த கவிஞனோடு வீதியில் நடந்து செல்கிறோம் என்ற உணர்வு.

ஆனால் எங்களைக் கடந்து சென்ற எவரும் அந்த ஸ்மரனை இல்லாது கடந்துபோவது என்னை ஆச்சரியப்படுத்தியது. இப்போது யோசிக்கும்போது என் அதீதம் நகைப்பை வரவழைக்கிறது என்றாலும் அப்போது பதட்டமான மனநிலையில் நகரத்திற்குப் புதிதாக அறிமுகமாகியிருந்த எனக்கு, அப்படியான உணர்வுதான் இருந்தது.

பின்னர் இருவரும் சற்றுதூரம் உஸ்மான் ரோட்டில் நடந்து சென்றபின் எதிரே ஒரு பசு எதிர்ப்பட்டது. அந்தப் பசுவின் முன் நெடுநேரம் அவர் நின்றார். அந்தப் பசுவும் சலனமில்லாமல் அவர் முன் நின்றது. இருவரையும் புறச் சூழலையும் நான் மாறி மாறிப் பார்த்தபடி அங்கே நின்றிருந்தேன். சாலையில் கடந்து செல்வோர் எங்களை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சில நிமிடங்கள் கழித்து அங்கிருந்து புறப்பட்டபோது அவரிடம் நான், ஏன் எதற்காக அப்படி நின்றீர்கள், என்றேன். நான் பசுவோடு பேசிக் கொண்டிருந்தேன் என்றார். சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாக நடந்து கொண்டிருந்தோம். அவர் சொன்னது உண்மையா, பொய்யா எதையும் நான் யோசிக்கவில்லை. ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனைப்போல ஒருவித களிப்பு அப்போது என்னுள் நிறைந்திருந்தது.

இரண்டாவது முறை அவர் வீட்டிற்குச் சென்றபோது இருவரும் வெளியில் இறங்கி வெகுதூரம் நடந்தோம். கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஏறி இறங்கி ஒரு புத்தக அலமாரி குறித்து விசாரித்தோம். அவர் எதிர்பார்த்ததை விட நல்ல அலமாரி கிடைத்தது. போதிய பணம் கொண்டுவராததால் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டு மீண்டும் பாலத்தில் ஏறி இருவரும் உஸ்மான் ரோடு பக்கமாக நடந்து வந்தோம்.

அப்போது பரவாயில்லை உன்னோடு வந்தால் காரியம் கூடுதலாகப் பலிதமாகிறது என மகிழ்ச்சியுடன் கூறினார். எல்லாம் சில நொடிகள்தான். சட்டென பேச்சு, மா. அரங்கநாதன் குறித்து எழுந்தது. அப்போது இருவரும் சிற்றிதழ்களில் கடுமையாக மோதிக் கொண்டிருந்தனர். இந்தப் பிரிவு எனக்குள் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

நான் இதுகுறித்து பேச்சு எடுத்ததும் உடனே அவர் முகம் மாறியது. எனக்குத் தெரிந்துவிட்டது நீ அவனுடைய ஆள் எனக் கூறியபடி அவசரமாக என்னைப் பிரிந்து எதிர்சாரிக்கு வேகமாக ஓடி ஒரு “ஸ்டூடியோ’வினுள் நுழைந்துகொண்டார். அங்கிருந்த நபர்களிடம் என்னைக் காண்பித்து ஏதோ சொன்னார். கடைக்காரர்கள் வெளியில் வந்து என்னைப் பார்த்தனர். உடனே நானும் அந்த இடத்தைவிட்டு அகன்றேன். எனக்கு வருத்தமாக இருந்தது.

அவரிடம் ஏன் இதுகுறித்து பேச வேண்டும் என என்னை நானே நொந்துகொண்டேன். ஒரு குழந்தையைப்போல அவர் ஓடிச்சென்றது இப்போது என் மனதில் காட்சி சித்திரமாக என்னைத் துன்புறுத்துகிறது. இது நிகழ்ந்து சில ஆண்டுகள் கழித்து அவர் இறந்த சேதி கேள்விப்பட்டபோது உண்மையில் என் கண்களில் நீர் துளிர்த்தது.

கடைசிவரை ஒரு நிம்மதியின்மை அவரை அலைக்கழித்தது. உலக நியதிக்கு ஆட்படாதவராக அவர் தன்னை முழுவதுமாக வேறு உலகத்தில் இருத்திக்கொண்டு வாழ்ந்து வந்தார்.

இதுபோன்ற கவிஞர்கள் குறித்து ஒரு சமூகம் எப்போதும் பிரக்ஞை இல்லாமல் சுழல்கிறது. இப்போது ஓரளவு நிலைமைகள் சாதகமாகத் தெரிகின்றன. ஆனால் எல்லா காலத்திலும் தீவிர மனநிலையும் சொற்களின் தேடலும் கொண்ட கவிஞன் சமூகத்தின் புறக்கணிப்புக்கு ஆளாகவே செய்வான்.

இந்த முரணைப் புரிந்து கொள்வதும், இத்தகைய கவிஞர்கள் குறித்து நமது பொதுபுத்திக்கு உட்படுத்துவது மட்டுமே அவர்களுக்கு நாம் செய்யும் சரியான காரியமாக இருக்க முடியும்.

————————————————————————————————————————————————————————–

கல்கி 1

ஹிந்து நாளிதழில் ‘வாசகர் ஆசி¡¢யர்’ என்பதாக ஒருவர் −ருக்கிறார். −வர் வாசகர்கள் சார்பில் அவர்களுடைய விமர் சனங்களை ஏற்று, தேவைப்படும்போது விளக்கங்களும் அளிக்கிறார். −ன் றைய வாசகர் ஆசி¡¢யர் திரு. கே. நாரா யணனிடம் ஒரு வாசகர், “−றந்து போன வர்களின் சடலங்களைப் புகைப்பட மெடுத்துப் பிரசு¡¢க்கத்தான் வேண்டுமா? அதுவும் முதல் பக்கத்தில்?” என்று கேட் டிருக்கிறார். “பரபரப்புக்காகவே செய் யப்பட்ட கா¡¢யமாகத் தோன்றுகிறது. அருவருப்பை ஏற்படுத்துகிறது” என்கிறார்.

திரு. நாராயணன் பதிலளிக்கையில், தமக்கு அதில் விருப்பமில்லை என்றும் ஆனால், செய்தியின் முக்கியத்துவம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வென்றுவிடுகிறது என்றும் சொல்கிறார். −ன்று வன்முறை உலகெங்கும் தலை வி¡¢த்தாடுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.

−து குறித்து, பலமணி நேரம் நீடிக்கும் பட்டிமன்றமே நடத்த நிறைய வாய்ப்புண்டு. வன்முறையையும் அதன் விளைவுகளையும் “டாம் அண்ட் ஜெர்¡¢” போன்ற கார்ட்டூன் சினிமாவாய்க்கூடக் காண்பிக்கக்கூடாது என்று அறிவுறுத்தும் மனநல நிபுணர்கள் −ருக்கிறார்கள்.

‘கல்கி’ −றந்தவா¢ன் உடலைப் படம் பிடித்து, தமது பத்தி¡¢கையில் பிரசு¡¢க்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக −ருந்தார். மிகப்பொ¢ய தலைவர்கள் காலமானால்கூட, அவர்கள் ஆரோக்கிய மாக −ருந்த நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பிரசு¡¢த்துத்தான் அஞ்சலி செலுத்துவார். ஒரே ஒரு சமயம் −தற்கு விதிவிலக்கு செய்தார். அது, மகாத்மா காந்தி காலமானபோது. அவரது −றுதி யாத்திரை படங்கள், ‘லாங்ஷாட்’ டில் மக்கள் வெள்ளத்தையும் ‘குளோஸ் அப்’பில் அண்ணல் மீளாத் துயில் கொண்டிருப்பதையும் காட்டின. “−தை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்?” என்று கேட்டபோது, “காந்தியடிகள் மானுடர் அல்ல; அவதார புருஷர். அவ ருக்கு ஜனனமும் −ல்லை மரணமும் −ல்லை” என்றார் ‘கல்கி’. ‘மாந்தருக் குள் ஒரு தெய்வம்’ என்று மகுடமிட்டு, காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து எழுதினார்.

‘கல்கி’ அவர்களுக்கு வேறு சில உறுதியான கொள்கைகளும் −ருந்தன. அவற்றை, −ன்று வரை கல்கி பத்தி¡¢கை மட்டுமின்றி, கல்கி குழுமப் பத்தி¡¢கை கள் அனைத்துமே கடைபிடிக்க முயன்று வருகின்றன. மது விளம்பரங்களை கல்கி பத்தி¡¢கை தொடக்க காலத்திலிருந்தே விலக்கிவிட்டது. மதுவிலக்கு பிரசாரத்துக் கென்றே திருச்செங்கோடு காந்தி ஆசிர மத்தில் ராஜாஜியால் நடத்தப்பட்ட ‘விமோசனம்’ பத்தி¡¢கையில் பல சிறு கதைகளை, பிரசார நோக்கிலேயே எழுதி யவர் ‘கல்கி’. தமது பத்தி¡¢கையில் மது விளம்பரங்கள் மட்டுமின்றி, மது அருந் துதல் பற்றிய வர்ணனையோ படமோ −டம்பெறக் கூடாது என்பதில் கண்டிப் பாக −ருந்தார்.

ஆரம்ப காலத்தில் கல்கி, சிகரெட் விளம்பரங்களைப் பிரசு¡¢த்து வந்தது. ஒரு கால கட்டத்தில் சிகரெட் பிடிப்பதால் புற்றுநோய் வரும் என்று தொ¢ய வந்த போது, சிகரெட் விளம்பரங்களை ஒதுக்கி விடும்படி சதாசிவம் அவர்களிடம் ராஜாஜி கேட்டுக்கொண்டார். அதை உடனே ஏற்றுக்கொண்ட சதாசிவம், வரு மான −ழப்பை லட்சியம் செய்யாமல், ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்த விளம்பரங்களைக்கூட ரத்து செய்து, சம் பந்தப்பட்டவர்களுக்கு விளக்கமும் வருத் தமும் தொ¢வித்துக் கடிதங்களை எழுதினார்.

சில தினங்கள் சென்று பேச்சு வாக்கில் ராஜாஜியிடம், அவர் விருப்பம் நிறைவேற்றப்பட்டதை சதாசிவம் தொ¢ வித்தார். “அது சா¢, ஆனால், நமக்குப் பூரணமாக நம்பிக்கை −ல்லாத ஒரு விஷயத்தில், சமுதாய நன்மைக்காக ஈடு பாடு காட்டுவதுகூட தர்மமாகாது” என் றார் ராஜாஜி. அவர் என்ன நோக்கில் சொல்கிறார் என்பதை உடனே பு¡¢ந்து கொண்ட சதாசிவம், “புகையிலை போடுவதை −ந்த வினாடியிலிருந்து விட்டுவிட்டேன்” என்று மின்னல் வேக சபதம் செய்தார். ராஜாஜிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது சதாசிவத் துக்கு ரொம்பச் சிரமமாகத்தான் −ருந் தது. ஆனால், அவருடைய மனோதிடம் வென்றது. கிராம்பு அதற்குப் பொ¢தும் உதவியது. சில மாதங்களில் கிராம்பு மெல் வதையும் துறந்துவிட சதாசிவத்தால் முடிந்தது.

ஜனத்தொகை பெருக்கத்தைக் குறைக்க, குடும்பக் கட்டுப்பாடு விளம்பரங்களையும் ஆணுறை விளம்பரங்களையும் சமுதாய நலன் நோக்கில் பிரசு¡¢க்கலாமா என்பது குறித்து, கல்கி கா¡¢யாலயத்தில் பொ¢ய விவாதமே நடந்தது. கடைசியில் பிரச்னை ராஜாஜியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ‘குடும்பக் கட்டுப்பாடு சாதனங்கள் மனிதனுக்குத் துணிவைத் தந்து, தவறான திசைகளில் செல்ல ஊக்கு விக்கும்; சமுதாய சீர்கேட்டுக்கே வழிவகுக் கும்’ என்பது ராஜாஜியின் வாதமாக −ருந் தது. ‘மனக் கட்டுப்பாடே முக்கியம்’ என்று ராஜாஜி உறுதிபட எழுதியும் −ருக்கிறார். −தையட்டி, ஆணுறை விளம்பரங்களை கல்கியில் ஏற்பதில்லை என்று முடிவா யிற்று. −ன்று பத்தி¡¢கைகளில் −டம் பெறும் ஆணுறை விளம்பரங்கள் ஆபா சத்தின் உச்சத்துக்கே சென்றிருப்பதைப் பார்த்தால், ராஜாஜி கூறியது எவ்வளவு உண்மை என்பது தொ¢யவரும். முறை கேடான வாழ்க்கையால் நிகழக்கூடிய பின் விளைவு பற்றிய பயம் அடியோடு போய் விட்டது.

‘கல்கி’, பகுத்தறிவுப் போட்டியின் (ஞிணூணிண்ண் தீணிணூஞீ) எதி¡¢ அல்ல. ஆனால், பெருந் தொகைகளைப் பா¢சாக வைத்து ஆசை காட்டி, கூப்பனுக்குக் கட்டணம் வசூலிப் பதைக் கடுமையாகக் கண்டித்தார். குதி ரைப் பந்தயம் போன்ற சூதாட்டங்களை எதிர்த்து, கதைகளும் கட்டுரைகளும் நிறைய எழுதினார்.

நேரடியாகவோ மறைமுகமாகவோ தனி நபர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றி எழுதுவதும் வதந்திகளைப் பரப்புவதும் ‘கல்கி’ அவர்களுக்கு ஒவ்வாத விஷயங்கள். யாரையும் தனிப்பட்ட முறையில் அவர் தாக்கியது கிடையாது. கொள்கை அளவில் தான் அவருடைய பேனா யுத்தங்கள் எல் லாமே நிகழ்ந்தன. எனக்குத் தொ¢ந்து −ரண்டே தடவைகளில் அவர் தமது கொள்கையிலிருந்து சற்றே சறுக்கி, தனி மனிதர்களைத் தாக்குவது போன்ற தலைப் புகள் தந்துவிட்டார்!

பாரதி மணிமண்டபம் திறப்பு விழாவின்போது, அழைக்கப்பட்டு வந்த வர்களுக்குப் போதிய கவனிப்பு, உபசாரம் −ல்லை என்று குறைப்பட்ட பேராசி¡¢யர் அ.சீனிவாசராகவன் அவர்களுக்கு, பதி லளிக்கும் விதமாக எழுதிய கட்டுரைக்கு, ‘அட, சீ! ராகவா!’ என்று தலைப்பு தந்து விட்டார். (‘சாவி’ நடத்தி வந்த ‘வெள்ளி மணி’ பத்தி¡¢கையில் −டம்பெற்ற கட்டுரை). −தேபோல் ராஜாஜியிடம் கொண்டிருந்த அபா¢மித பக்தி காரணமாக, காமராஜரை விமர்சித்து எழுதிய ஒரு கட்டுரைக்கு ‘பொ¢ய மனிதரும் சின்ன புத்தியும்’ என்று தலைப்பு கொடுத்துவிட் டார். கட்டுரைகளில் தனி நபர் தாக்குதல் −ல்லை; கொள்கை அளவில் விவாதம் தான் என்றாலும், தலைப்புகள் −ப்படி அமைந்துவிட்டதற்காக ‘கல்கி’ வருத்தப் பட்டதுண்டு; வெளிப்படையாக ஒப்புக் கொண்டதும் உண்மை.

நான் கல்லூ¡¢யில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த காலத்தில், “காலேஜி லிருந்து திரும்பி வரும்போது, ‘ஹிக்கின் பாதம்’ஸில் நுழைந்து நவீன நாவலாசி¡¢ யர்கள் எழுதிய புத்தகங்கள் ஒன்றிரண்டு வாங்கி வா” என்று உத்தரவு போடுவார். குஞிணிணாணா, ஏதஞ்ணி, ஈதட்ச்ண் போன்றவர்கள் எழுதிய நாவல்களைப் படித்த அதே ஆர்வத்துடன் அன்றைய சமகால நாவலாசி¡¢யர்களின் நாவல்களையும் விரும்பிப் படிப்பார். ணிணூஞித்தூ, ஓšடூடூச்ணஞீ, ஙிடšச்ணாடூšதூ, ஙிணிஞீšடணிதண்š, šதிடிடூ ண்டதணாš போன்ற பல எழுத்தாளர்களின் நாவல்களை, அவருக்காக நான் வாங்கி வந்து தந்திருக்கிறேன். ஒரு சமயம், புதிய எழுத்தாளர் ஒருவரது புத்தகத்தைத் தேர்வு செய்தேன். பின் அட்டையில் அந்த நாவ லைப் பற்றிய சிறு அறிமுகத்தைப் படித்த போது, மிக நன்றாக −ருக்கும் என்று தோன்றியது. வாங்கி வந்து கொடுத்தேன்.

மறுநாள் காலை கையில் காப்பியுடன் அப்பாவை எழுப்ப அவர் அறைக்குள் நுழைந்தபோது, அந்தப் புத்தகம் சுக்கு நூறாகக் கிழிக்கப்பட்டு, குப்பைத் தொட்டி யில் போடப்பட்டிருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டேன். காப்பியைக் கொடுத்து விட்டு, “என்னப்பா −து!” என்று குப்பைத் தொட்டியைச் சுட்டிக்காட்டிக் கேட்டேன். “வெறும் குப்பை” என்றார். “ஐயோ! ஐந்து ரூபாய் ஆயிற்றே!” என்றேன். (அந்த நாளில் ஐந்து ரூபாய் மிகப் பொ¢ய தொகை.) “தொலையட்டும்! ஐந்து ரூபாய் கெட்டுப் போனால் சம்பாதித்துக்கொள்ள லாம்; மனம் விகாரமடைந்தால் சா¢ பண்ண முடியாது” என்றார். பத்தாவது பக்கத்தி லேயே படிப்பதை நிறுத்தி, கிழிப்பதை ஆரம்பித்துவிட்டார் என்றும் தொ¢ய வந் தது. −ந்தத் தண்டனையை, சில தமிழ்ப் பத்தி¡¢கைகளும் ‘கல்கி’யிடம் பெற்றிருக் கின்றன. ஒரு கதை ஆபாசத்தின் விளிம்பை நெருங்கினால் போதும்; கோபம் பொங் கும்; ‘டர்ர், டர்ர்’ தொடரும்! ஆபாச திரைப் படங்களைக் கிழிக்க முடியாததால், விமர் சனங்களில் அவற்றைக் கிழி கிழி என்று கிழித்தார்! நல்லனவற்றை வரவேற்கவும் எப்போதும் தயாராயிருந்தார்.

‘பத்தி¡¢கை தர்மம் என்றால் என்ன?’ என்று கல்கி பத்தி¡¢கை தொடங்கி −ரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வி¡¢வாக எழுதி னார் அதன் ஆசி¡¢யர். ஆனால், முதல் −தழிலேயே அவர் ‘கல்கி பத்தி¡¢கையின் நோக்கம்’ என்று சொல்லி எழுதிய −ரண்டு வார்த்தைகள், பத்தி¡¢கை தர்மத்தைக் குறித்து பல பக்கங்கள் எழுதுவதற்குச் சம மானது. அந்த −ரு சொற்கள்: ‘தேச நலன்.’
-பத்திரிகை தர்மம் என்றால் என்ன – கல்கி ராஜேந்திரன்
————————————————————————————————————————————————————————–

கல்கி 2

மகாராஷ்ட்ராவின் புதிய அரசியல் தாதா ராஜ் தாக்கரே! சிவசேனாவின் மூத்த தலைவர் சஜ்ஜன் பூஜ்பல் கட்சியைவிட்டு 1992ல் வெளியேறியபோது, கட்சிக்குள் தனது மகன் உத்தவ் தாக்கரே மற்றும் சகோதரர் மகன் ராஜ் தாக்கரே ஆகியோரை கட்சிக்குள் கொண்டுவந்தார் பால் தாக்கரே. −டை யில் உத்தவுக்கும் ராஜுக்கும் மோதல் வரவே, −ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனையில் −ருந்து விலகி, மகா ராஷ்ட்ரா நவநிர்மாண் சேனாவைத் தொடங்கினார் ராஜ் தாக்கரே. பொ¢யப்பா பால் தாக்கரே, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ஆயுதத்தைக் கொஞ்சம் தூசு தட்டி எடுத்து, பளபளப்பாகக் கூர்தீட்டிப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். ஆயு தத்தின் பெயர், ‘மராட்டியம் மராட்டியர் களுக்கே’! கொஞ்சம் பு¡¢யும்படி சொல்ல வேண்டும் என்றால், ‘−து எங்க ஏ¡¢யா, உள்ள வராதே!’

பிஹா¡¢களும் உத்தரபிரதேசக்காரர் களுமே ராஜ் தாக்கரேவின் பிரதான −லக்குகள். முக்கியமாக, பாலிவுட்டைக் கலக்கும் வெளிமாநில நட்சத்திரங்கள்.

அவா¢ன் நாற்காலிக் கனவுக்காகக் கிடைத்த துருப்புச் சீட்டு அமிதாப்பச்சன். எடுத்த எடுப்பிலேயே அவரைக் குறி வைத்து வார்த்தைகளை வீசினார்.

‘அமிதாப்புக்கு மும்பையைவிட பிறந்த மண்ணான உத்தரபிரதேசம் மீதுதான் விசுவாசம் அதிகம். அவரை சூப்பர் ஸ்டா ராக்கிய மும்பையின் நினைவு அவருக்குத் தேர்தலில் நின்றபோதுகூட வரவில்லை. அலகாபாத்தில்தான் நின்றார். மும்பைக்கு ஒன்றுமே செய்யவில்லை. கல்லூ¡¢யைக் கூட உ.பி.யில்தான் கட்டுகிறார்’ என்று சீண்டினார்.

பதிலுக்கு, ‘யார் −ந்த ராஜ் தாக்கரே?’ என்று அமிதாப்பின் மனைவி ஜெயாபச்சன் கேட்டு வைக்க, பற்றிக்கொண்டது நெருப்பு.

‘பிஹா¡¢கள் எதற்காக சத்பூஜையை மகாராஷ்ட்ராவில் வைத்துக்கொண்டாட வேண்டும்? உ.பி.காரர்கள் அவர்களுடைய மாநிலத் தொடக்க விழாவை மும்பையில் கொண்டாடுவது முட்டாள்தனமாக −ருக்கிறது. மகாராஷ்ட்ராவுக்கு வருபவர்கள் மராத்திய மொழியில் பேச வேண்டும். அதன் கலாசாரத்தை மதிக்க வில்லை என்றால் பாதிப்பைத் தவிர்க்க முடியாது.’

சீறித் தள்ளினார் ராஜ் தாக்கரே. ஆத்திர மடைந்த சமாஜ்வாதி கட்சியினர் ராஜ் தாக் கரேவை எதிர்த்துப் பேச, அடுத்த ரவுண்ட் வன்முறை அரங்கேறியது!

‘மக்கள் மத்தியில் வகுப்புவாதத்தையும் பிராந்திய உணர்வையும் தூண்டிவிட்டு, வன்முறை வழியில் அர சியல் லாபம் பார்க்க நினைக்கிறார் ராஜ் தாக்கரே’ என்று வெடித்தார் சமாஜ்வாதி பொதுச் செயலாளரும் அமிதாப்பின் நண்பருமான அமர்சிங்.

‘−தோ வருகிறேன்’ என்று எழுந்த ராஜ் தாக்கரே, பத்தி¡¢கை ஒன்றுக்குக் கடிதம் எழுதினார்.

‘·பிரான்ஸில் சீக்கியர்கள் டர்பன் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை பற்றி, −ந்தியா வந்த ·பிரான்ஸ் அதிபா¢டம் மன்மோகன்சிங் பேசுகிறார். −லங்கைத் தமிழர்களுக்காகவும் ராஜீவ்காந்தியைக் கொன்ற விடுதலைப் புலிகளுக்காகவும் தமிழ்நாட்டில் −ருக்கும் பல கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்டுகின்றன. ஆனால், மராத்திய மக்களின் தார்மீக உணர்வுகள் பற்றி நான் பேசினால் மட்டும் ரௌடி பட்டம் கொடுக்கிறார்கள். ஆம். மராத் தியை அவமதிப்பவர்களுக்கு நான் ரௌடி தான். அவர்களை அடக்கிவிட்டுத்தான் மறுவேலை. மும்பை முதலில் மகா ராஷ்ட்ராவின் தலைநகரம். −ங்கு நுழைய வேண்டுமானால் மராத்தியர்களின் அனு மதி பெற வேண்டும்.’

−துதான் கடிதத்தின் சாரம். வார்த் தைக்கு வார்த்தை அனல் பறந்தது. ‘ராஜ் தாக்கரேவின் அடியாட்கள் எங்கள் மக் களின் உயிரைப் பறித்துவிடுவர் போலத் தொ¢கிறது. எங்கள் உயிரைப் பாது காத்துக்கொள்ள மூங்கில் கொம்புகளை விநியோகிக்கப் போகிறோம்’ என்று அறி வித்தார் மகாராஷ்ட்ரா மாநில சமாஜ்வாதி தலைவர் அபு ஆஸ்மி. வெகுண்டெழுந்த ராஜ் தாக்கரே, ‘நான் மராத்தியர்களுக்கு வாளைக் கொடுக்க நோ¢டும்’ என்றார்.

ஒரு காலத்தில் உணர்வுபூர்வமாக −ந்தியாவை −ணைத்த சாதுக்களின் பூமி மஹாராஷ்ட்ரம்… −ன்று தேசத்தை உருக்குலைக்கும் உணர்வுகள் அங்கே கொந்தளிக்கின்றன!
– ரணகள ராஜ் தாக்கரே
————————————————————————————————————————————————————————–
ராஜ் தாக்கரேவை எதிர்த்துக் கூட்டறிக்கை!

மிகுந்த யோசனைக்குப் பிறகு ராஜ் தாக்கரேவைக் கண்டித்துப் பேசியிருக்கிறார் அத்வானி. “−ந்தியா முழுதும் ஒரு நாடு. அதில் யாரும் எங்கும் போய் வாழ்ந்து பணியாற்றி, பொருளீட்ட உ¡¢மை உண்டு” என்கிற உண்மையை அவர் எடுத்துச் சொல்வதற்குள் மும்பையில் ரகளை, கலாட்டா, வன்முறை, கடையடைப்பு – எல்லாம் நடந்துவிட்டன! அத்தனைக்கும் பிறகு தயங்கித் தயங்கி ராஜ் தாக்கரேவைக் கைது செய்திருக்கிறது மும்பை போலீஸ்.

குறுகிய நோக்கில் பேசி, பி¡¢வினை வளர்த்து, மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, வோட்டுகளைப் பெற முயற்சி செய்வதுதான் மிகச் சுலபமான குறுக்கு வழி அரசியல். ராஜ் தாக்கரே செய்தது போலவே −ந்தக் கா¡¢யத்தைத்தான் பல்வேறு மாநிலங்களில், பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களும் செய்து வருகிறார்கள். −ந்தத் தவறைச் சுட்டிக்காட்டி கண்டனம் செய்து, −க்கட்சிகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, தேசியக் கட்சிகளும் அவற்றின் மாநில கிளைகளும் −வற்றுடன் கைகோத்து கூட்டணி அமைத்துக்கொண்டு, அரசியல் ஆதாயம் காண்பதற்குத்தான் முற்படுகின்றன. மொத்தத்தில், தேசிய பார்வையை தேர்தல் பார்வை எ¡¢த்து அழித்துவிட்டது!

ஒரு சில வோட்டுகளுக்காக தேச ஒருமைப்பாடை அடகு வைக்கத் துணியும் கட்சிகள், தேர்தலில் போட்டியிட முடியாத படி செய்ய வேண்டும். சட்டத் திருத்தம் கொண்டு வந்தோ அல்லது ஏற்கெனவே உள்ள சட்டங்களை உறுதியாகவும் கடுமையாகவும் அனுசா¢த்தோ −தனைச் செய்யலாம். தற்போது மத்தியில் ஆளும் முக்கிய கட்சியான காங்கிரஸ¤ம் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் −ணைந்து செயல்பட்டால், −தற்கான சட்டத்தைப் பலப்படுத்துவதும் சாத்தியமே.

ஆனால், அரசியல் ¡£தியான, நிர்வாக ¡£தியான −ந்தச் சீர்திருத்தம் மட்டுமே பிரச்னையைத் தீர்த்துவிடாது. நடைமுறையில், பிற மாநில மக்கள் குடியேறி, ஒரு மாநிலத்தின் வளத்தையும் வேலைவாய்ப்புகளையும் ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறபோது, அதற்கு எதிரான உணர்வுகள் தோன்றுவது −யல்புதான். −ந்த எதிர்ப்புணர்வைத் தவிர்க்க வேண்டுமானால், மாநில தலைவர்களிடையே ஒருமித்த சிந்தனை வேண்டும். தொழில், வர்த்தக, விவசாய முயற்சிகளை ஒருங்கிணைக்கலாம். மாநிலங்களை −ணைக்கும் பொருளாதார மண்டலங்களை உருவாக்கி, எல்லோருக்கும் வேலைவாய்ப்புகள் பெருக்கலாம். ஐரோப்பிய நாடுகளேகூட −ன்று ஒரே பொருளாதார மண்டலமாக −யங்குகின்றன.

கல்வித் திட்டத்தையும் பரந்ததாக்கி, பள்ளிக் கல்வி பெற்ற யாருமே தன் தேவைக்குச் சம்பாதித்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு தொழில் அறிவையும் அதற்கான முனைப்பையும் ஊட்டலாம்.

ஆனால், −ங்கே நடப்பவை எல்லாம் நேர் மாறாகத்தான் −ருக்கின்றன! நதி நீர் பகிர்வில் தகராறு தொடங்கி, மொழி வெறி, ஜாதி கண்ணோட்டம், மதப் பி¡¢வினை வரை அனைத்து வேற்றுமைகளையும்தான் தலைவர்கள் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள், வளர்க்கிறார்கள். −தை −ப்படியே தொடர அனுமதித்தால், மாநிலத்துக்கு −ரண்டு ராஜ் தாக்கரேக்கள் உருவாகி, −ந்தியாவை −ருபதே ஆண்டுகளில் −ருக்கும் −டம் தொ¢யாமல் அழித்துவிடுவார்கள்!

ஆகவே, தேசிய உணர்வும் பொறுப்புணர்வும் படைத்த மன்மோகன் சிங், அத்வானி போன்ற தலைவர்கள் உடனடியாக −ணைந்து −ந்த வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும். ராஜ் தாக்கரேவுக்கு எதிராக −ருவரும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கை விட்டாலே அதன் வலிமை அசாத்தியமானதாக −ருக்கும்!
————————————————————————————————————————————————————————–

பிப்ரவரி கடைசி நாளன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதேன்?

புது தில்லி, பிப். 28: பட்ஜெட் குறித்து குறைந்தது ஒரு மாதம் விவாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் பொது பட்ஜெட் பிப்ரவரி மாதம் கடைசி நாளன்று தாக்கல் செய்யப்படுகிறது.

பொதுவாக பிப்ரவரி 28-ம் தேதியும் லீப் ஆண்டுகளில் பிப்ரவரி 29-ம் தேதியும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

நிதியாண்டு ஏப்ரல் முதல் தேதி தொடங்குகிறது. மார்ச் மாதத்தில் பட்ஜெட் மீது நாடாளுமன்றம் விவாதித்துமுடித்து ஒப்புதல் வழங்கிய பிறகே அரசின் செலவுகளுக்கு பணம் எடுக்க முடியும். இதற்காகவே பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கலாகிறது.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இது. ஆனால் லீப் ஆண்டில் அவர் தாக்கல் செய்யும் முதலாவது பட்ஜெட்.

லீப் ஆண்டில் (தனது பிறந்த நாளில்) இரண்டு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த பெருமை மொரார்ஜி தேசாய்க்கு உண்டு. அதிக எண்ணிக்கையில் (10) பட்ஜெட்டை தாக்கல் செய்தவரும் மொரார்ஜிதான்.

லீப் ஆண்டில் சி.டி. தேஷ்முக், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, பிரணாப் முகர்ஜி, என்.டி. திவாரி, மன்மோகன் சிங், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் 23 நிதியமைச்சர்கள் முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளனர்.

சிதம்பரம் 5 முழு பட்ஜெட்டையும் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள்ளார்.

மொரார்ஜி தேசாய் தாக்கல் செய்த 10 பட்ஜெட்டில் 2 இடைக்கால பட்ஜெட்டாகும்.

சி.டி. தேஷ்முக் 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.

மன்மோகன் சிங் மற்றும் யஷ்வந்த் சின்ஹா தலா 5 பட்ஜெட்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

பொதுத் தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில் மட்டும் இரண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

பொதுவாக பட்ஜெட் இரு பகுதிகளைக் கொண்டதாயிருக்கும். முதல் பகுதி நாட்டின் பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் பகுதியாக இருக்கும். இரண்டாம் பகுதி வரி விதிப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

பட்ஜெட் குறித்த விவாதம் மக்களவையில் முதலில் விவாதிக்கப்படும். பின்னர் மாநிலங்களவையிலும் விவாதிக்கப்படும்.

மக்களவையில் முதலில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் தனது உரையின் பிரதியை மாநிலங்களவையில் தாக்கல் செய்வார்.

இந்தியாவின் முதலாவது பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பெருமையும் தமிழரையே சாரும். 1948-ம் ஆண்டு நேரு தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதுமட்டுமின்றி, அதுதான் ஒரே சமநிலை பட்ஜெட்டாகும்.

1947-ம் ஆண்டிலிருந்து மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அந்த நடைமுறை 1999-ம் ஆண்டு மாற்றப்பட்டு பகல் 11 மணிக்குத் தாக்கல் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது.

இதற்கு முன் லீப் ஆண்டில் பிப்ரவரி 29-ம் தேதி 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 9-வது முறையாக சிதம்பரம் தாக்கல் செய்கிறார்.

————————————————————————————————————————————————————————–

அதுதான் கடைசிப் பக்கம்…

கி. கஸ்தூரி ரங்கன்

அறுபது ஆண்டு பந்தம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதே என்று மனதில் சோகம் நிரம்பி வழியும் இத் தருணத்தில் பழைய நினைவுகள் அலை மோதுகின்றன.

ரங்கராஜன், சுஜாதாவைக் கைப்பிடித்து அதே பெயரில் பிரபல எழுத்தாளராகப் பிரகாசிக்கத் தொடங்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, அவருடனும் அவருடைய குடும்பத்தினருடனும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. 1950ம் ஆண்டுகளில் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது ரங்கராஜனின் அண்ணன் என் வகுப்புத் தோழன். அப்போது ஏற்பட்ட நட்பில் தியாகராய நகர் மூஸô சேட் தெருவில் இருந்த அவன் வீட்டுக்கு அடிக்கடி செல்வதுண்டு. அவன் அப்பா, மின்வாரியத்தில் தலைமைப் பொறியாளர். மாடியும் கீழுமாகப் பெரிய வீடு. ரங்கராஜன் அரை டிராயரில் காட்சியளிப்பான். அவன் தம்பி ராஜப்பா, அண்ணன் கிச்சாய் அக்கம் பக்கத்து விடலைப் பசங்கள் எல்லாரும் மாடி வராந்தாவில் கவர் பால், அரை மட்டை சகிதம் கிரிக்கெட் விளையாடுவோம். அந்த இடத்தில் தடுப்பாட்டம் தான் ஆட முடியும். பந்தை ஓங்கி அடித்தால் அடுத்த வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்துவிடும். எனவே அரை மணியில் அலுத்துவிடும். ஆட்டம் முடிந்தது என்று கலைந்து செல்வோம்.

நானும் ரங்கராஜனும் ஏதாவது விஷயம் பற்றி அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். இருவருக்கும் பொதுவாக இருந்த எழுத்தார்வம் காரணமாகப் பத்திரிகைகள் பற்றிப் பேசுவோம். அப்போதே “”குப்பை பத்திரிகை”களுக்கு மாற்றாக வித்தியாசமான பத்திரிகை வெளியிட வேண்டும் என்று பேசிக்கொள்வோம்.

அதற்கான சந்தர்ப்பம் வெகு ஆண்டுகள் கழித்து இருவரும் வேலை நிமித்தமாக தில்லியில் குடியேறியபின்தான் வந்தது. ரங்கராஜன் மதறாஸ் இன்ஸ்டிடியூட்டில் எலக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு தில்லியில் சிவில் ஏவியேஷன் துறையில் வேலைக்குச் சேர்ந்தான். நான் ஜர்னலிஸம் படித்துவிட்டு நியூயார்க் டைம்ஸ் நிருபரானேன். பிரம்மச்சாரிகளாக இருந்தவரை இருவரும் வேறு சில தனிக் கட்டைகளுடன் அறை ஒன்றில் தங்கியிருந்தோம். இருவருக்கும் குடும்பம் என்று ஏற்பட்ட பிறகு கரோல்பாக்கில் வேறுவேறு வீடுகளுக்கு மாறினோம். அப்போதும் நாங்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவதுண்டு.

மீண்டும் பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை பலமாகப் பிடித்துக் கொண்டது. “”நீ தைரியமாக ஆரம்பி. நான் எழுதுகிறேன்” என்று சொன்னான். நானும் 1965 ஆகஸ்டில் “கணையாழி’ மாத இதழைத் தொடங்கிவிட்டேன். ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்று அவனுக்குப் புனைப்பெயர் சூட்டி கடைசிப் பக்கம் எழுத வைத்தேன்.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இடையிடையே நீண்ட இடைவெளி விட்டு ஸ்ரீரங்கம் எஸ்.ஆரின் கடைசிப் பக்கம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. 2006ல் கணையாழி நின்று போயிற்று. அவனுடைய விருப்பத்தின் பேரில் கணையாழியின் பழைய பக்கங்களை மீண்டும் வெளியிட முயற்சி மேற்கொண்டேன். சித்தன் ஆசிரியர் பொறுப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் “”யுகமாயினி”யில் கடைசி 16 பக்கங்களை கணையாழி பக்கங்கள் என்று அறிவித்து, அதில் மீண்டும் சுஜாதாவின் கடைசிப் பக்கத்தைத் தொடங்கச் செய்தோம்.

துரதிர்ஷ்டவசமாக சுஜாதா ஓர் இதழில் மட்டுமே எழுத முடிந்தது. திடீரென்று நிமோனியா ஜுரத்தில் படுத்துவிட்டார். மருத்துவமனையிலிருந்து மீண்டுவரவில்லை. அவருடைய கடைசி எழுத்து கணையாழி கடைசிப் பக்கத்துக்கு எழுதியதாகத்தான் இருக்கும்.

100 நாவல்கள், 250 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள், ஒரு டஜன் நாடகங்கள், அரை டஜன் வெற்றிப் படங்கள் என்று எழுத்துலக சகலகலாவல்லவனாகத் திகழ்ந்த போதிலும் சுஜாதாவுக்கு ஓர் ஆதங்கம் இருந்தது. தமிழ்நாட்டில் தனக்கு உரிய இலக்கிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்பதுதான். அதைக் கடைசியாக எழுதிய கணையாழி பக்கத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

முதிர்ந்த வயதில் அவருடைய ஈடுபாடு திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும், திவ்யப் பிரபந்த பாசுரங்களிலும் சென்றது. அவற்றில் மூழ்கி ரசித்து சிறுசிறு கட்டுரைகளில் தந்திருக்கிறார். மாணவர்களுக்கும் புரியும்படி திருக்குறளை எளிய தமிழில் தந்திருக்கிறார்.

இலக்கியத்திற்கு அப்பால் அவர் நிகழ்த்திய சாதனை அவர் உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வந்த “”அம்பலம்” இணையதளம். மற்றொரு மகத்தான சாதனை தேர்தல் நடைமுறையை எளிதாக்கியிருக்கும் வாக்குப் பதிவு இயந்திரம். இதற்காகவாவது அவருக்கு ஒரு பத்ம விருது வழங்கியிருக்கலாம்.

(கட்டுரையாளர்: தினமணியின் முன்னாள் ஆசிரியர்)

————————————————————————————————————————————————————————–
தேவை வட்டி குறைப்பு

எஸ். கோபாலகிருஷ்ணன்

சென்ற பல மாதங்களாக வங்கிக் கடனுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தவண்ணம் இருந்தது. காரணம், கடந்த ஆண்டு வங்கிக் கடனுக்கான வட்டிவீதம் – குறிப்பாக வீட்டுக் கடனுக்கான வட்டிவீதம் – முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட கணிசமாக அதிகரிக்கப்பட்டது. வட்டி வீதம் உயர்ந்ததால் புதிதாக வீடு அல்லது பிளாட் வாங்குபவர்களின் எண்ணிக்கை சரிந்தது. அதுமட்டுமல்லாமல், 2007ம் ஆண்டில் வங்கிகள் வழங்கிய ஒட்டுமொத்தக் கடன்தொகை, முந்தைய ஆண்டுகளில் வழங்கிய கடன்தொகையைவிடக் குறைவு என பாரத ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி சென்ற ஜனவரி மாத இறுதியில் வெளியிட்ட புதிய கடன் கொள்கையில், கடன்களுக்கான வட்டி வீதம் குறைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. சமீபத்திய கடன்கொள்கையில், எந்தவித கடனுக்கான வட்டிவீதமும் குறைக்கப்படவில்லை. காரணம், ரிசர்வ் வங்கியின் முழுக்கவனமும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே இருந்தது. வட்டிவீதம் குறைக்கப்பட்டால், பணவீக்கம் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கருதியிருக்கக் கூடும். அதேநேரம், எதிர்காலத்தில் அவசியம் ஏற்பட்டால் வட்டிவீதத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே ரிசர்வ் வங்கிக்கு மேலோங்கியிருந்தது.

பாரத ரிசர்வ் வங்கி இந்த நிலைப்பாட்டை எடுத்த சில தினங்களுக்கு முன், அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ், அந்த நாட்டில் வட்டி வீதத்தை 1984ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக ஒரே மூச்சில் முக்கால் சதவீதம் குறைத்தது. அதற்கு அடுத்த சில தினங்களில் மேலும் அரை சதவீதம் குறைத்தது.

அமெரிக்கப் பொருளாதாரம் மந்தமடைந்து வரும் சூழலில், அதற்குப் புத்துணர்ச்சி ஊட்டும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் அப்படியொரு மந்த நிலை இல்லை என்பது உண்மையே. எனினும், வட்டி அதிகரிப்பால், வீடு கட்டுவதற்கு அல்லது வாகனங்கள் வாங்குவதற்கு அல்லது தொழில் நடத்துவதற்குத் தேவையான வங்கிக் கடன் பெற மக்கள் முன்வரவில்லையெனில் அது நல்ல அறிகுறி அல்ல.

பொதுமக்களின் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் வட்டி வீதத்தைக் குறைப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

சில தினங்களுக்கு முன் வெளியான தகவலின்படி, சென்ற டிசம்பர் மாதம் தொழில்துறை வளர்ச்சி வீதம் 7.6 சதவீதமாகக் குறைந்து உள்ளது.

2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழில்துறை வளர்ச்சி 13.4 சதவீதமாக இருந்தது. இதனைக் கருத்தில்கொண்டால், சென்ற டிசம்பர் மாதத்தில் 7.6 சதவீத வளர்ச்சி என்பது மிகப்பெரும் சரிவு என்பது தெளிவு.

தொழிற்சாலைகளில் உற்பத்தி, மின்சாரம், நுகர்பொருள்கள் உற்பத்தி ஆகிய துறைகளில் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. பின்னர் வரக்கூடிய மந்த நிலைக்கு இது ஓர் அபாய அறிவிப்பு போன்றது.

இந்தப் பின்னணியில், சில தினங்களுக்கு முன், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பேசியது கவனிக்கத்தக்கது. கடந்த சில மாதங்களில் வங்கிகள் கடன் வழங்கும் தொகை கணிசமாகக் குறைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக, வீடு கட்டும் துறையிலும் நுகர்பொருள் உற்பத்தித் துறையிலும் வளர்ச்சி குறைந்திருப்பதற்கு வங்கிக் கடன் குறைந்திருப்பது ஒரு முக்கியக் காரணம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன், வரும் காலத்தில் இந்தத் துறைகளில் வளர்ச்சி அதிகரிக்கும் வகையில், இவற்றுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வங்கிகளை வலியுறுத்தியுள்ளார்.

எதிர்பார்த்தபடி, பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் தனது பிரதான கடன் வட்டி வீதத்தை 12.75 சதவீதத்திலிருந்து 12.50 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அலகாபாத் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தங்களது வீட்டுக்கடன் வட்டி, சில்லறைக்கடன் வட்டி வீதங்களையும் குறைத்துக் கொண்டுள்ளன.

இதுவரை வட்டிக் குறைப்பை அறிவிக்காத இதர வங்கிகள் விரைவில் அவ்வித அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக, வணிக ரீதியில் அவ்வப்போது வட்டி வீதத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கு வங்கிகளுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. ரிசர்வ் வங்கிதான் அறிவிக்க வேண்டும் என்பதில்லை. எனினும், ரிசர்வ் வங்கி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தனது கடன் மற்றும் நிதிக் கொள்கையை வெளியிடுகிறது. இதிலிருந்து வரும் சமிக்ஞைகளுக்காக வங்கிகள் காத்திருப்பது வழக்கம். இந்த முறை, நிதி அமைச்சர் தெரிவித்த சூசகமான அறிவுரை, வங்கிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

முன்னதாக, கடன் கொள்கை வெளியானபோது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் கடன் வழங்குவதில் சற்று நிதானப்போக்கு இருக்கட்டும் என ரிசர்வ் வங்கி கருதியது புரிந்து கொள்ளக்கூடியதே. அதிலும் குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படாத நேரம் அது. அது ஏற்றப்படும்போது, பணவீக்கம் உயரும் என்பது அறிந்ததே. தற்போது, நீண்டகாலமாகத் தள்ளி வைக்கப்பட்ட பெட்ரோல் விலை ஏற்றம் அறிவிக்கப்பட்டு விட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளதால் பணவீக்கம் எந்த அளவு உயரக்கூடும் என்பதும் அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும்.

அதேநேரம், வளர்ச்சி விகிதம் குறைவதும் ஏற்புடையது அல்ல.

தற்போது, பல வங்கிகள் ஏற்கெனவே வட்டி வீதத்தைக் குறைத்துள்ள புதிய சூழலில், பாரத ரிசர்வ் வங்கி நிலைமையை மறு ஆய்வு செய்வதே பொருத்தமாக இருக்கும். ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய கடன் கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்யாமல்விட்ட “பேங்க் ரேட்’ (வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டிவீதம்); “ரெப்போ ரேட்’ எனப்படும் ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு முதலீட்டுப் பத்திரங்களின் மீது வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதம்; மற்றும் “ரிவர்ஸ் ரெப்போ ரேட்’ எனப்படும் வங்கிகளிடம் உள்ள உபரிப் பணத்தைக் குறுகிய காலத்துக்கு ரிசர்வ் வங்கி பெற்றுக்கொள்ளும் ஏற்பாட்டுக்கான வட்டிவீதம் ஆகிய அனைத்துவகை கடன்களுக்குமான வட்டிவீதத்தை விஞ்ஞான ரீதியில் மாற்றி அமைக்க பாரத ரிசர்வ் வங்கி முன் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

அப்படிச் செய்வதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் தற்போதைய வட்டிக் குறைப்பு செயல்பாடு ஸ்திரத்தன்மை அடைவதற்கு உதவுவதுடன் அது நீண்டகால அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவும் அமையும்.

வீட்டுக் கடன்களுக்கு வட்டிக் குறைப்பை அறிவித்துள்ள வங்கிகள், அறிவிப்போடு நின்றுவிடாமல் வீட்டுக் கடன் மற்றும் சில்லறைக் கடன்களுக்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, உரிய கடன் வழங்குவதில் ஆக்கபூர்வமான ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான், சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்று சதா கனவு காணும் நடுத்தர மக்களின் கனவு நனவாகும்.
————————————————————————————————————————————————————————–
ஒன்பது வீத வளர்ச்சியை எட்டுவது கடினம் என்கிறது இந்திய பொருளாதார அறிக்கை

இந்தியாவின் வருடாந்திர நிதி நிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்து, 9 சதம் வளர்ச்சி விகிதத்தை நிலை நிறுத்துவது மிகவும் கடினமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, இந்தியப் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக 2007-08 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் ப. சிதம்பரம், பொருளாதார வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கத்துக்குக் கொண்டுவருவதற்கு மேலும் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் அறிவித்தார்.

சில்லறை வர்த்தகத்தில் குறிப்பிட்ட அளவு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது, நவரத்தினங்கள் என்று அழைக்கப்படும் லாபம் ஈட்டும் அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை குறிப்பிட்ட அளவுக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட பல யோசனைகள் அதில் அடங்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக 9 சதத்துக்கும் மேல் இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 2007-2008-ம் ஆண்டில் அதைவிடக் குறைந்து, 8.7 சதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

உலக அளவிலான சந்தை நிலவரங்களால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்திருப்பதை, வலுவான நிதி மற்றும் வர்த்தகக் கொள்கைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. கடந்த நிதியாண்டில் 5.4 சதமாக இருந்த பணவீக்கம், இந்த நிதியாண்டில் 4.4 சதமாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் சரிவுகள் குறித்தும் பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பீதியடையாமல், நம்பகமான தகவல்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையைப் பொருத்தவரை, இந்தியா சில ஆண்டுகளாக முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், இலங்கை, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் சுகாதார நிலை திருப்திகரமாக இல்லை என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

————————————————————————————————————————————————————————–

தனியார் மயத்துக்கு பச்சை விளக்கு…?

ஒளிமயமான எதிர்காலம் நம் கண்ணுக்குத் தெரிகிறது என்று ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் “அரசியல் ரீதியாக’ மகிழத்தக்க வகையில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் லாலு பிரசாத்.

புதிதாக 53 ஜோடி புதிய ரயில் சேவை (அவற்றில் தமிழ்நாட்டுக்கு மட்டும் 9), ரூ.25,000 கோடிக்கு ரொக்க உபரி, ஏராளமான புதிய திட்டங்கள், 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ரயில் திட்டங்களில் முதலீடு, மாணவிகள் பட்ட மேல்படிப்பு வரை இலவசமாகச் செல்ல சலுகை, போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாகவே சென்று வரும் சலுகை, மூதாட்டிகளுக்கு கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிப்பு என்று தன்னுடைய வழக்கமான முத்திரைகளைப் பதித்திருக்கிறார்.

மக்களவைக்குத் தேர்தல் நெருங்குவதாலேயே ரயில்வே பட்ஜெட்டில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்று கூறிவிட முடியாது. கடந்த 4 பட்ஜெட்டுகளாகவே அவர் கட்டணங்களைக் குறைத்தும், சீரமைத்தும் மக்களுடைய மனங்களிலிருந்து சுமையைக் குறைத்து வருகிறார்.

சமீபகாலமாக அதிகரித்து வரும் தனியார் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களால் ஏற்படும் தொழில் போட்டியைச் சமாளிக்க முதல் வகுப்பு மற்றும் குளிர்பதன வசதி பொருத்தப்பட்ட உயர் வகுப்பு பெட்டிகளுக்கான கட்டணத்தைக் குறைத்திருக்கிறார்.

பெட்ரோல், டீசல், எரிசாம்பல் ஆகியவற்றைக் கொண்டு செல்லும் கட்டணத்தைக் குறைத்திருப்பது பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்தும் விவேகமான செயல்.

ஆனாலும் சில உறுத்தலான விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லாமல் இல்லை. நாடு முழுக்க சமச்சீராக வளர்ச்சி அடைந்தால்தான் முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டே திட்டங்களை பிகாரை மட்டும் மையமாக வைத்துச் செயல்படுவது சரிதானா?

குஜராத் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்று பாரதிய ஜனதாவினரும், மேற்கு வங்கம் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்று மார்க்சிஸ்டுகளும், உத்தரப் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்று பகுஜன் சமாஜ், சமாஜவாதி கட்சியினரும் வெளிநடப்பு செய்திருப்பது கவனிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களே ஆத்திரத்தை அடக்கமுடியாமல் கொட்டியிருக்கிறார்கள். நாடு முழுக்க பலன்பெற வேண்டிய ரயில்வே துறை பிராந்திய நோக்கில் நிர்வகிக்கப்படுவது நல்லதல்ல என்று மட்டும் லாலுவுக்குக் கூறுவது நமது கடமையாகிறது.

ரயில்வேதுறையில் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்று தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமுதாய ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினரும் கல்வித்தகுதி இல்லாத நிலையிலும் நிரந்தர வேலைவாய்ப்பு பெறுவதற்கு ரயில்வேதான் இதுவரை கருவியாக இருந்து வந்திருக்கிறது.

இப்போது ரயில்வே துறையில் புதியவர்கள் வேலைக்கு எடுக்கப்படுவது மிகவும் குறைந்து வருகிறது. அதுபற்றி இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு ஏதும் இல்லை. பொறியாளர்கள், கணினித் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் என்று மட்டுமே தேர்வு செய்வதால், சமூகத்தின் மேல் தட்டு அல்லது நடுத்தர வர்க்கத்துக்குத்தான் வேலை கிடைக்கிறது. இந் நிலையில் ரயில்வேயில் துப்புரவுப் பணியாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் விடும் செயல், சமூக நீதிக்கே துரோகம் செய்வதாகிவிடும்.

சமூக நீதிக்காகப் பாடுபடும் லாலு போன்றவர்களே அந்தத் தவறைச் செய்யக்கூடாது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி, பாமக நிறுவனர் ச. ராமதாஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் தலையிட்டு உரிய வகையில் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

வட இந்தியாவுக்கு யாத்திரை செல்பவர்களும், தென்னிந்தியாவுக்கு யாத்திரை வருபவர்களும் முக்கியமான சில ரயில் நிலையங்களில் பிளாட்பாரங்களிலேயே தங்குகின்றனர். அவர்கள் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக தங்கிச் செல்ல, கழிப்பறை, குளியலறை, பாதுகாப்பான தங்கும் இடம் ஆகியவற்றை அந்த ரயில் நிலையங்களிலேயே ஏற்படுத்துவது அவசியம். அதற்குப் பணம் இல்லையே என்று கையை விரிக்காமல், உபரித் தொகையிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

————————————————————————————————————————————————————————–

மோரிஷஸ் (வரிஏய்ப்பு) பாதை!

உ . ரா. வரதராசன்

மோரிஷஸ், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறு தீவு. அதன் மக்கள்தொகை வெறும் 12 லட்சம் மட்டுமே; நிலப்பரப்பைக் கணக்கிட்டால் இந்தியாவில் நூறில் ஒரு பங்குக்கும் (ஒரு சதவிகிதத்திற்கும்) குறைவானதே. இந்த நாட்டோடு இந்தியா செய்து கொண்டுள்ள ஓர் ஒப்பந்தம் இந்திய நாட்டின் சட்டங்களைச் செல்லாக் காசாக ஆக்கிவிட்டு, வரியை ஏய்த்துக் கொள்ளை லாபம் கொழிப்பதற்கான ராஜபாட்டை ஆகி இருக்கிறது.

இந்தியா – மோரிஷஸ் நாடுகளுக்கிடையே இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கை என்ற பெயரில் 1983-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறு ஒப்பந்தம் செய்து கொள்ளும் இரண்டு நாடுகளின் குடிமக்கள் அல்லது நிறுவனங்கள் பரஸ்பரம் வியாபாரம் மற்றும் தொழில் தொடர்புகளை மேற்கொள்கிறபோதோ அல்லது வேறு வகையில் வருமானம் ஈட்டுகிறபோதோ சொந்த நாட்டிலும் வருமான வரி கட்ட வேண்டும். வெளிநாட்டிலும் வரி கட்ட வேண்டும் என்ற நிலைமை ஏற்படுவதுண்டு. இது ஒரே வருமானத்தின் மீது இரண்டுமுறை வரி கட்டுகிற இரட்டை வரி விதிப்பாக அமைந்தது. இதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, ஏதாவது ஒரு நாட்டில் வரி விதிப்புக்கு ஆட்பட்டால் மற்றொன்றில் வரிவிலக்கு அளிப்பதற்காகவே இந்த உடன்படிக்கை உருவானது.

இந்தியா இதுபோன்ற உடன்படிக்கைகளை 50-க்கும் மேற்பட்ட நாடுகளோடு செய்து கொண்டுள்ளது. ஆனால் இந்த உடன்படிக்கைகள் அனைத்தும் ஒரே விதமான சரத்துகளை உள்ளடக்கியதாக இல்லை. மோரிஷஸ் நாட்டோடு செய்யப்பட்டுள்ள உடன்படிக்கையை ஒத்த தன்மையில் குறிப்பிட்ட சில நாடுகளோடு மட்டுமே இந்தியா மேற்கொண்டுள்ளது. இந்திய – மோரிஷஸ் உடன்படிக்கை அமலில் இருந்த முதல் பத்தாண்டுகளில், பிரச்னை எதுவும் பெரிதாக எழவில்லை.

1991ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற உலகமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், இந்த மோரிஷஸ் உடன்படிக்கைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தது. 1992-ம் ஆண்டு முதல், வெளிநாட்டுப் பெரும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் நுழைய அனுமதிக்கப்பட்டது. அதே 1992ஆம் ஆண்டில் மோரிஷஸ் அரசாங்கமும் கடல் கடந்த வியாபார நடவடிக்கைகளுக்கான ஆணையம் (ஞச்ச்ள்ட்ர்ழ்ங் ஆன்ள்ண்ய்ங்ள்ள் அஸ்ரீற்ண்ஸ்ண்ற்ண்ங்ள் அன்ற்ட்ர்ழ்ண்ற்ஹ்) ஒன்றை நிறுவச் சட்டம் இயற்றியது. அதன் கீழ் எந்த ஒரு வெளிநாட்டுக் கம்பெனியும், மோரிஷஸில் ஒரு துணைக் கம்பெனியைப் பதிவு செய்து கொண்டு, வெளிநாடுகளில் (பங்குச்சந்தை) வர்த்தகத்தில் ஈடுபட வழிவகை செய்யப்பட்டது.

இதற்குப் பிறகுதான் மோரிஷஸ் பாதை வழியாக வெளிநாட்டு நிதி மூலதனம் வேக வேகமாக இந்தியாவிற்குள் நுழையத் தொடங்கியது. 1992 – 93இல் மோரிஷஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் (பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு) வந்த முதலீடுகள் ரூ. 17 கோடியாக இருந்தது. இதுவே 2000 – 01ஆம் ஆண்டில் ரூ. 74,050 கோடியாக உயர்ந்தது. சராசரியாக, இந்தியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு மூலதன வரவுகளில் மூன்றில் ஒரு பகுதி மோரிஷஸ் பாதை வழியாக வந்ததுதான் என்று மத்திய அரசின் அதிகாரபூர்வமான தகவல்கள் உணர்த்துகின்றன. 12 லட்சம் மக்கள்தொகையை மட்டுமே கொண்டுள்ள மோரிஷஸ் நாட்டில் இவ்வளவு பெருந்தொகைகள் மூலதனமாக ஆண்டுதோறும் உருவாகி வெளிநாடுகளுக்குப் படையெடுக்கும் வாய்ப்பு அறவே இல்லை; எனவே, மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மூலதனம் மோரிஷஸ் பாதை வழியாக அனுப்பப்படுகிறது என்பதே யதார்த்தம்!

மோரிஷஸ் பாதை மீது பன்னாட்டு மூலதனத்திற்கு ஏன் இவ்வளவு மோகம்? வெளிநாட்டுக் கம்பெனி மோரிஷஸ் நாட்டில் துணைக் கம்பெனியைப் பதிவு செய்வது மிக மிக எளிது. பன்னாட்டு பகாசூரக் கம்பெனிகள் இவ்வாறு துணைக் கம்பெனியைப் பதிவு செய்து அவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களை மோரிஷஸ் பாதை வழியே இந்தியாவுக்கு அனுப்புவதும், பங்குச் சந்தை வர்த்தகத்தில் லாபம் பெருக்குவதும், அந்த லாபத்தை மோரிஷஸ் வழியாகவே திருப்பி வரவழைத்துக் கொள்வதும் மிக எளிதாக நடைபெற்று வருகிறது.

இப்படிப் பெறப்படும் லாபத்திற்கு இந்திய – மோரிஷஸ் உடன்படிக்கை காரணமாக, இந்தியாவில் எந்த வரியும் மோரிஷஸ் நாடு கட்ட வேண்டிய அவசியமில்லை. எனவே, எந்த வரிச்சுமையும் இல்லாமல் வருமானம் கொழிக்கிற வழியாக மோரிஷஸ் பாதை மாறிவிட்டது.

இப்படி 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மோரிஷஸ் கம்பெனிகளாக, இந்தியப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு சற்றும் சளைக்காமல் வெளிநாடு வாழ் இந்தியர்களும், இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இயங்கும் கம்பெனிகளும் மோரிஷஸ் பாதையை வரி ஏய்ப்புக்குப் பயன்படுத்தி வருகின்றன. இதன் விளைவு, மோரிஷஸ் பாதையில் வலம் வந்து பங்குச்சந்தை சூதாட்டத்தில் சம்பாதிக்கும் கொள்ளை லாபத்துக்கு இந்தியாவிலும் சரி, மோரிஷஸிலும் சரி எந்த வரியும் கிடையாது.

இந்த மோரிஷஸ் பாதையை வரி ஏய்ப்புக்காகப் பயன்படுத்திய சில உள்நாட்டுக் கம்பெனிகள் மீது இந்திய வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து மார்ச் 29, 2000 அன்று ஆணை பிறப்பித்தது. இதன் காரணமாக வெளிநாட்டு மூலதனம் வருவது தடைபட்டு விடும்; வந்த மூலதனமும் வெளியே பறந்தோடி விடும் என்ற அச்சம் காரணமாக, அவசர அவசரமாக ஏப்ரல் 13, 2000 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. மோரிஷஸ் அரசாங்கம் ஒரு கம்பெனிக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கியிருந்தாலே, அந்தக் கம்பெனியின் உரிமையாளர்களோ, அதன் மூலம் முதலீடு செய்பவர்களோ மோரிஷஸில் குடியிருப்பதாகக் கருதப்படுவார்கள்; அது தொடர்பாக எந்தவித விசாரணையோ, ஆட்சேபமோ எழுப்பக்கூடாது என்பது அந்த சுற்றறிக்கையின் கட்டளை!

இது நியாயமற்றது என்று “சுதந்திரம் காப்போம் இயக்கம்’ என்ற அமைப்பு தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கைத் தொடுத்தவர்களில் சிவ காந்த் ஜா என்ற வருமான வரித்துறை முன்னாள் முதன்மை ஆணையரும் ஒருவர். தில்லி உயர் நீதிமன்றம் இந்த சுற்றறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்தது. “”இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு என்பது, இரண்டு நாடுகளிலும் வரி கட்டுவதைத் தவிர்ப்பதற்காகத்தானே தவிர, எந்த நாட்டிலும் வரியைக் கட்டாமல் ஏய்ப்பதற்காக அல்ல; அதை அனுமதிக்க முடியாது” என்பது அத்தீர்ப்பின் சாரம்.

மத்திய அரசோ இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது; “குளோபல் பிசினஸ் இன்ஸ்டிட்யூட்’ என்ற சர்வதேச முதலீட்டாளர்களின் கூட்டமைப்பு ஒன்றும் இந்த மேல்முறையீட்டில் மனுதாரராகச் சேர்ந்து வழக்காடியது. (இதன் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், பின்னர் மத்திய அரசின் சட்ட அமைச்சரானவர்!) உச்ச நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்துத் தீர்ப்பளித்தது.

மோரிஷஸ் உடன்படிக்கை வரிஏய்ப்புக்கான வசதியான பாதையாகப் பயன்படுகிறது என்பதை 2005இல் மத்திய கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முன்பாக 2001இல் கேத்தன் பாரிக் பங்குச்சந்தை ஊழலை விசாரித்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அறிக்கையும் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தக் கூட்டுக்குழுவின் முன் சாட்சியமளித்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, “”மோரிஷஸ் பாதை தவறாகப் பயன்படுத்தப்படுவது எனக்குத் தெரியும். ஆனால் (மத்திய அரசின்) வரி வருவாயைப் பெருக்குவதை விட வெளிநாட்டு மூலதனத்தின் வரவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், மோரிஷஸ் உடன்படிக்கையின் ஓட்டைகளை அடைக்க முற்படவில்லை” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.

2004-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு “இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்போம்’ என்று குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் கூறியிருந்தது. ஆனால் குறைந்தபட்சப் பொதுத்திட்டத்தின் வாக்குறுதி “இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்வதற்கான உறுதிமொழியல்ல. அதை இந்தியக் கம்பெனிகள் தவறாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது மட்டுமே’ என்று நிதியமைச்சர் புதிய விளக்கமளித்தார். இது முந்தைய அரசு விட்டுச்சென்றுள்ள பிரச்னை; சர்வதேச ராஜிய உறவுகள் சம்பந்தப்பட்ட ஒன்று; தன்னிச்சையாக இந்தியா இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் அவர் கைவிரித்துவிட்டார்.

இந்தியாவைப் போலவே மோரிஷஸýடன் உடன்படிக்கை செய்துகொண்ட இன்னொரு நாடு இந்தோனேஷியா. மோரிஷஸ் நாடு தனது சட்டத்தைத் திருத்தி வெளிநாட்டவர்கள் மோரிஷிஸில் துணைக் கம்பெனிகளைப் பதிவு செய்து மற்ற நாடுகளில் வர்த்தகம் செய்ய அனுமதித்ததைக் காரணம் காட்டி 2005ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இந்தோனேஷியா மோரிஷஸ் நாட்டுடனான உடன்படிக்கையை ஒட்டுமொத்தமாக ரத்தே செய்துவிட்டது. இந்தோனேஷியாவுக்கு சாத்தியப்படுகிற இந்த வழிமுறை இந்தியாவுக்கு மட்டும் பொருந்தாது என்பதில் எந்த நியாயமும் இல்லை.

வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கபுரியாக மோரிஷஸ் பாதை தொடர்கிறது.

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)

Posted in Tamil | Leave a Comment »

India Cuts Taxes as Election Looms, GDP Slows to 8.4%; aids farmers with big rise in social outlay

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 29, 2008

2008-09 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்

நாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி;
கல்விக்கு ரூ.34 ஆயிரம் கோடி
பெண்கள்,குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.72 ஆயிரம் கோடி;
பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவிகிதமாக இருக்கும்!
மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்

புதுடில்லி, பிப். 29- மத்திய நிதிய மைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக் கையில் விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்தார்.

விவரம் வருமாறு:

2008 – 09 ஆம் நிதியாண்டுக் கான பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பொருளாதார வளர்ச்சி விகி தம் 8.8 சதவீதமாக இருக்கும் என அறிவித்தார். மத்திய பட் ஜெட் இன்று தாக்கல் செய்யப் படும் என்று அறிவிக்கப்பட்டி ருந்த் நிலையில், மிகுந்த எதிர் பார்ப்பு மற்றும் பரபரப்புக்கி டையே பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது.
நிதியமைச்சர் ப.சிதம்ப ரத்தை பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு சபாநாயகர் சோம் நாத் சாட்டர்ஜி கேட்டுக் கொண்ட அடுத்த வினாடியே, எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஒரு சில பிரச்சினைகளை எழுப்பி கூச்சலிட்டனர்.

பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவிகிதம்
மிகுந்த சிரமத்திற்கிடையே அவர்களை அமைதிபடுத்தி சிதம்பரம் பட்ஜெட்டை தாக் கல் செய்தார். பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவீதமாக இருக்குமென அறிவித்தார். அதேபோன்று பண வீக்கம் கட்டுக்குள் வைக்கப்படும் என் றும் அவர் கூறினார்.
மேலும் பல்வேறு அறிவிப்பு களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.7,200 கோடி
வரும் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.7,200 கோடி ஒதுக்கீடு செய் யப்படுகிறது.
குழந்தைகள் மேம்பாட்டுக் கான ஒதுக்கீடு 24 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி
இன்று தாக்கல் செய்யப் பட்ட மத்திய பொதுபட்ஜெட் டில் சிறிய மற்றும் மிகக் குறைந்த லாபமடையும் விவ சாயிகள் அனைவருக்கும் வேளாண் கடன்கள் முற்றிலும், ஏறக்குறைய ரூ.60,000 கோடி தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.
இதன் மூலம் 4 கோடி விவ சாயிகள் பயனடைவார்கள்.2 ஹெக்டேர் வரை வைத்துள்ள சிறிய மற்றும் மிகக் குறைந்த லாபமடையும் விவசாயிகள் இந்தப் பயனாளிகள் பட்டிய லில் வருவார்கள். தேசிய வேளாண் காப்பீட்டு திட் டத்திற்கு 644 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
நாடு முழுவதும் மண் பரி சோதனைக் கூடங்கள் அமைக்க 500 சோதனைக் கூடங்கள் அமைக்கப்படும்.
200 மாவட்டங்களில் நட மாடும் மண் பரிசோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்படும்.
சொட்டு நீர்ப்பாசன திட் டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக் கீடு செய்யப்படும் 53 சிறு நீர்ப் பாசன திட்டங்கள் அமல் படுத்தப்படும் எனறு சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்புக்கு ஒதுக்கீடு ரூ.1,05,600 கோடியாக உயர்வு
பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.1,05,600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 10 சதவிகிதம் அதிகமாகும். 2007-08-ம் நிதியாண்டில் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு ரூ.96 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. கல்விக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு
2008-09- ஆம் நிதியாண்டுக் கான மத்திய அரசின் பொது பட்ஜெட்டில், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுக் கான ஒதுக்கீடு 20 சதவிகித அளவில் உயர்த்தப்படுகிறது.
கல்விக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு
அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு 13,500 கோடி ஒதுக்கீடு.
6,000 மாதிரி உயர்நிலைப் பள்ளிகள் அமைக்கப்படும்.
6 ஆயிரம் மாவட்டங்களில் நவோதய வித்யாலயாக்கள்.
410 கிராமங்களில் வித்யா லயாக்கள்.
மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
மதிய உணவுத் திட்டம் நடு நிலைப் பள்ளிகள் வரை நீட் டிப்பு
புதிதாக 16 மத்திய பல் கலைக்கழகங்கள் அமைக்கப் படும் ஆந்திரா, பிகார் மற்றும் ராஜஸ்தானில் புதிய அய்.அய்.டி. கல்வி நிறுவனங்கள்.
அறிவுசார் சமுதாயம் அமைக்க ரூ.85 கோடி.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மத்திய பல்கலை.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் வீதம் ஒரு மத் திய பல்கலைக்கழகம் அமைக் கப்படும் கல்வி மற்றும் சுகா தாரம் ஆகிய துறைகளுக்கான ஒதுக்கீடு 20 சதவிகித அளவில் உயர்த்தப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு 16 மாநிலங்களில் மத்திய பல் கலைக் கழகங்கள் முதற்கட்ட மாக அமைக்கப்படுகிறது.

சென்னை அருகே ரூ.300 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க ஒதுக்கீடு
அனைவருக்கும் கல்வித் திட் டத்திற்கான ஒதுக்கீடு ரூ.13,500 கோடி.

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான ஒதுக்கீட்டில் 20 சதவிகிதம் உயர்வு.
பாரத் நிர்மாண் திட்டத் திற்கு ரூ.31,250 கோடி ஒதுக்கீடு.
சுகாதாரத் துறைக்கு ரூ.16,534 கோடி ஒதுக்கீடு – 15 சதவிகிதம் உயர்வு.
எய்ட்ஸ் / எச்.அய்.வி. கட்டுப் படுத்த அதிக நிதி ஒதுக்கீடு.
தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்திற்கான ஒதுக்கீட்டில் 15 சதவிகிதம் உயர்வு.
தனி நபர் வருமான வரி – விலக்குக்கான உச்சவரம்பு ரூ.1,10,000-லிருந்து ரூ.1,50,000-ஆக உயர்வு.
பெண்களுக்கு ரூ.1,80,000 ஆக நிர்ணயம்.
மூத்த குடிமக்களுக்கு ரூ.2,25,000 வரை வருமான வரி விலக்கு.
இந்த சலுகை மூலம் வரு மான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் குறைந்தது ரூ.4000 சேமிப்பு.
வருமான வரி விகிதங்கள்:
ரூ.1,50,000 – ரூ.3 லட்சம் வரை 10 சதவிகிதம்.
ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை 20 சதவிகிதம்.
ரூ.5 லட்சத்திற்கு மேல் 30 சதவிகிதம்.
மத்திய அரசு ஊழியர்களின் 6 ஆவது ஊதியக் குழு அறிக்கை மார்ச் 31-க்குள் சமர்ப்பிக்கப்படும்.
காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டிக ளுக்கு ரூ.624 கோடி ஒதுக்கீடு.
ஜவுளி பூங்காக்கள் அமைக்க ரூ.450 கோடி.
மின்துறை சீரமைப்புக்கு ரூ.800 கோடியில் திட்டம்.
ராஜீவ் காந்தி குடிநீர் திட் டத்திற்கு ரூ.7300 கோடி ஒதுக் கீடு.
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ரூ.16,447 கோடி ஒதுக்கீடு.
ஒருங்கிணைந்த குழந்தை கள் மேம்பாட்டுத் திட்டத் திற்கு ரூ.6,300 கோடி ஒதுக்கீடு.
சிறுபான்மையினர் அதிக மாக வாழும் மாவட்டங் களுக்கு ரூ.540 கோடி ஒதுக்கீடு.
மகளிருக்கான தனித் திட்டங்களுக்கு ரூ.11,460 கோடி.
தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியுதவி கழகத் திற்கு ரூ.75 கோடி.
——————————————————————————————————————————–
மேலும் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு காப்பீடு: சிதம்பரம்

புதுதில்லி, பிப். 29: மேலும் ஒரு கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அமைப்பு சாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு படிப்படியாக சமூகப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், சாதாரண மக்களுக்கான காப்பீட்டுத் திட்டம், தேசிய காப்பீட்டுத் திட்டம், இந்திரா தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் மேலும் ஒரு கோடி ஏழைக் குடும்பங்கள் பயனடையும். சாதாரண மக்களுக்கு காப்பீடு திட்ட செயலாக்கத்தின் 2 வது ஆண்டிற்காக ஆயுள்காப்பீட்டு நிறுவனத்திற்கு கூடுதலாக ரூ. 1000 கோடி தருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்த போது தெரிவித்தார்.

தேசிய சுகாதார காப்பீடுத் திட்டம் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு 2008-09 ம் ஆண்டில் ரூ.3343 கோடி ஒதுக்கப்படும்.

இதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை 87 லட்சத்திலிருந்து 1 கோடியே 57 லட்சமாக உயரும்.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரும் கடந்த நவம்பர் 19 ம் தேதியில் இருந்து இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

————————————————————————————————————————————————————————–
சிதம்பரமும் மேற்கோள்களும்

புது தில்லி, பிப். 29: மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, தமிழ் இலக்கியம் மற்றும் மூத்த அறிஞர்களின் மேற்கோள்களை சுட்டிக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பெரும்பாலும் இவரது பட்ஜெட் உரையில் திருக்குறள் இடம்பெறும்.

வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் வள்ளுவரின் திருக்குறள் வரிகளுடனே தனது 2 மணி நேர உரையை நிறைவு செய்தார் சிதம்பரம்.

“கொடை அளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்

உடையான்ஆம் வேந்தர்க்கு ஒளி.”

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். அத்துடன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மேற்கோளான,””யார் அதிகம் செய்கிறானோ, அதிக தடவை முயல்கிறானோ, அவனே அதைத் திறம்பட செய்யத் தகுதியுடையவன்,” என்பதைச் சுட்டிக்காட்டினார்.

பட்ஜெட் உரையில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய அவர், இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினால், ஆம் நம்மால் நிச்சயம் முடியும் என்பதே பதிலாக இருக்கும் என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டதையும் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.

1996-97-ம் ஆண்டு சிதம்பரம் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில்,

“”இயற்றலும், ஈட்டலும், காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு.”

என்ற குறளை மேற்கோள் காட்டினார்.

2004-05-ம் ஆண்டு பட்ஜெட்டில் டிக்கன்ஸன் நாவலில் வரும் ஒரு கதாபாத்திரத்துடன் தன்னை உவமைப்படுத்தி, “நல்ல காரியங்கள் நற்செயல்களால் விளையும், நற்சொற்களால் அல்ல,” என்று குறிப்பிட்டார்.

அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் “மேன் ஹுன் நா’ என்றார். அது அப்போது மிகவும் பிரபலமாகும். இறுதியில்

“”அறன்இழுக்காது அல்லவை நீக்கி, மறன் இழுக்கா

மானம் உடையது அரசு.”

என்ற குறளுடன் நிறைவு செய்தார்.

2005-06-ம் ஆண்டு பட்ஜெட்டில்,

“”பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்

அணிஎன்ப நாட்டிற்கு இவ் வைந்து.”

என்ற குறளை சுட்டிக்காட்டினார். அத்துடன் பொருளாதார நிபுணர் அமார்த்தியா சென் தனது புத்தகத்தில் குறிப்பிட்ட,””மேம்பாட்டு நடவடிக்கைகளே உண்மையான சுதந்திரமாகும். இதன்மூலம்தான் மக்கள் மகிழ்ச்சியடைவர்,” என்ற வாசகங்களைச் சுட்டிக்காட்டினார்.

2007-08-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில்,

“”கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்து இவ்வுலகு.”

என்ற குறளை மேற்கோள் காட்டினார் சிதம்பரம்.

அத்துடன் ஹென்றி டேவிட் தோரோவின் வாசகங்களான,””காற்றில் அரண்மனை கட்டினால், அதில் உங்கள் உழைப்பு வீணாகாது.

நீங்கள் எப்படி கட்டவேண்டும் என்று நினைத்தீர்களோ அப்படியே இருக்கும். அதற்கான அடித்தளத்தை தற்போது அமையுங்கள்,” என்று குறிப்பிட்டதைப்போல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வலுவான பொருளாதாரத்துக்கு அடித்தளம் அமைக்கிறது, அதிலிருந்து வரும் தலைமுறையினர் கோட்டையைக் கட்டலாம் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் விவேகானந்தரின் பொன்மொழிகளான, “”எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். நமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கிறோம்.

தற்போது காற்று வீசுகிறது; காற்றின் திசைக்கு எதிர்த் திசையில் சில கப்பலும், காற்றின் திசைக்கேற்ப சில கப்பலும் செல்லும்.

காற்றை பயன்படுத்திக் கொள்ளாததது காற்றின் குற்றமல்ல. அதைப்போல நாம் செல்ல வேண்டிய இலக்கை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்,” என்ற மேற்கோளையும் சிதம்பரம் நினைவுகூர்ந்தார்.

2007-08-ம் ஆண்டு பட்ஜெட்டில்,

“”உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை.”

என்ற திருக்குறளை சுட்டிக் காட்டினார்.

அதிவேகமான பொருளாதார வளர்ச்சி அவசியம். அதன்மூலம்தான் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்ற நோபல் அறிஞர் டாக்டர் யூனுஸின் மேற்கோளோடு உரையை நிறைவு செய்தார்.

————————————————————————————————————————————————————————–
சிதம்பரத்தின் சலுகைகள் நிறைந்த தேர்தல் பட்ஜெட்: ரூ. 60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் ரத்து

ரத்து செய்யப்பட்ட கடன் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதை எந்த வகையில் சமாளிக்கலாம் என்பதை திட்டமிட்டுள்ளோம். }ப. சிதம்பரம்

புது தில்லி, பிப். 29: பல்வேறு சலுகைகள் நிறைந்த தேர்தல் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்தார்.

அனைத்துத் தரப்பினரையும் குறிப்பாக விவசாயிகளை அதிகம் திருப்திபடுத்தும் வகையிலான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

சிதம்பரம் தாக்கல் செய்யும் ஐந்தாவது முழு பட்ஜெட் இது.

2008-09-ம் ஆண்டின் வரி வருவாய் ரூ. 6,02,935 கோடி. செலவு ரூ. 6,58,119 கோடி. வருவாய் பற்றாக்குறை ரூ. 55,184 கோடி.

2008-09-ம் ஆண்டின் திட்டச் செலவு ரூ. 2,43,386 கோடி. இது மொத்த செலவில் 32 சதவீதமாகும். திட்டம் சாரா செலவு ரூ. 5,07,498 கோடி.

ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை ரூ. 1,33,287 கோடி.

விவசாயக் கடன் ரூ. 60 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 கோடி விவசாயிகள் பயனடைவர்.

இதேபோல மாதாந்திர சம்பளதாரர்களுக்கு ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு தற்போது ரூ. 1.10 லட்சத்திலிருந்து ரூ. 1.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு வருமான வரிச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி பண பரிமாற்ற வரி விதிப்பு முறை முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.

சிறிய ரகக் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றுக்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீர் சுத்திகரிப்பு கருவிகள், காலை உணவு, காகிதம், காகித அட்டை உள்ளிட்டவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஃபில்டர் அல்லாத சிகரெட் விலை உயரும்.

உற்பத்தித் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்காக சென்வாட் வரி 16 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வரிச் சலுகை அளிக்கப்பட்டதால் மறைமுக வரி ரூ. 5,900 கோடி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி பண பரிமாற்ற வரி கைவிடப்பட்டதை ஈடுகட்டும் வகையில் பொருள்கள் பரிமாற்றக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய விற்பனை வரி 3 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ராணுவத்துக்கான ஒதுக்கீடு ரூ. 1.05 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் காமன்வெல்த் போட்டி 2010-ம் ஆண்டு நடைபெற உள்ளதால் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்கு ரூ. 624 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுவிநியோக உணவுப் பொருளுக்கான மானியத் தொகை ரூ. 32,667 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கனவு திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 16 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதான திட்டமான “பாரத் நிர்மாண்’ திட்டத்துக்கு ரூ. 31,280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பப் புரட்சியை கிராமப்பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்காக மாநில தகவல் மையம் ஏற்படுத்தப்படும். இத்தகைய மையத்துக்காக ரூ. 275 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய மையங்களை ஒருங்கிணைக்க ரூ. 450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதியோர் நலனுக்காக ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில் பயிற்சி மையங்கள் 300-ஐ மேம்படுத்த ரூ. 750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடன் சுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதற்காகவும், வேளாண் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்காகவும் ரூ. 60 ஆயிரம் கோடி சலுகை அளிக்கப்பட்டதை பல கட்சிகள் வரவேற்றுள்ள போதிலும், இது தேர்தலை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

விவசாயக் கடன் தள்ளுபடிக்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, இதுகுறித்து சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,””இந்தத் தொகை வங்கிகளுக்கு திரும்ப அளிக்கப்படலாம் அல்லது அளிக்காமலும் போகலாம். இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் நிதிச் சுமை மூன்று ஆண்டுகளில் அவற்றுக்கு திரும்ப அளிக்கப்படும்,” என்றார்.

ரத்து செய்யப்பட்ட கடன் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதை எந்த வகையில் சமாளிக்கலாம் என்பதை திட்டமிட்டுள்ளோம். அந்த நுணுக்கங்களைக் கடைப்பிடித்து அதை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்பதை நம்புங்கள் என்றார் சிதம்பரம்.

“”இது தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட் அல்ல. இந்தியாவில் ஆண்டுதோறும் தேர்தல் நடைபெறுகிறது. இதனாலேயே ஆண்டுதோறும் தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட்,” என்று கூறுவது வழக்கமாக உள்ளது என்றார் சிதம்பரம்.

சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு 300 கோடி

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சென்னை அருகே செயல்படுத்தப்படும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார்-பொதுத்துறை இணைந்து செயல்படுத்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமொன்றுக்கு தமிழக அரசு தற்போது அனுமதி கேட்டுள்ளது. இத்திட்டம் பரிசீலனை செய்யப்படும் என்றார் அவர்.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இதன் மூலம் ரூ.1000 மாத ஊதியமாக பெற்று வந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். ரூ.500 பெற்று வந்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ரூ.750 வழங்கப்படும்.

இதன் மூலம் 18 லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6-வது ஊதிய கமிஷன் மார்ச் 31-ல் அறிக்கை

ஆறாவது ஊதிய கமிஷன் மார்ச் 31-ம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கிறது.

நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஊதிய கமிஷன் அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் என்று தெரிவித்தார்.

சாதா சிகரெட்களுக்கு கடும் வரி உயர்வு

மத்திய பட்ஜெட்டில் சாதாரண சிகரெட்களுக்கான உற்பத்தி வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் இவ் வகை சிகரெட்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

அதேநேரத்தில் பில்டர் சிகரெட்களுக்கான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நீளம் குறைந்த (60 எம்.எம்) சாதாரண சிகரெட்டுகளுக்கு உற்பத்தி வரி தற்போது 1000-க்கு ரூ. 168 விதிக்கப்படுகிறது. இது ரூ.819 -ஆக உயர்த்தப்படுகிறது.

————————————————————————————————————————————————————————–

வரிச் சலுகைகள் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும்: சிதம்பரம்

புதுதில்லி, பிப். 29: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் தொழில்துறை வளர்ச்சிக்கு தூண்டுதலாக அமையும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

வரிச் சலுகைகளால் மக்களுக்கு பணம் மிச்சமாகும். கையில் பணம் மிச்சமாகும் போது அதைக் கொண்டு புதிய பொருள்கள் வாங்குவார்கள். இது தொழில்துறை வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் என்றார் அவர்.

வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டதால் மக்களின் கைகளில் பணப் புழக்கம் அதிகரிக்கும். இதனால் நுகர்வு அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

நுகர்வு அதிகரிக்கும் போது தேவை அதிகரிக்கும். குறிப்பாக கார், இரண்டு சக்கர வாகனங்கள் போன்றவற்றின் தேவை அதிகரிக்கும். இது உற்பத்தி பெருக வழிவகுக்கும் என்றார் அவர்.

நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி வீதம் சராசரியாக 8.8 சதவீதமாக இருக்கும்.

இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி வீதம் 9.1 சதவீதத்திலிருந்து 8.4 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்த சரிவுக்கு தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட தேக்கமே காரணம்.

உற்பத்தி வரி 16 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டது, சில பொருள்களுக்கு சுங்க வரிக் குறைப்பு போன்ற மறைமுக வரிக் குறைப்புகளால் அரசுக்கு ரூ. 5900 வருமான இழப்பு ஏற்படும்.

இந்த பட்ஜெட்டில் தொழில்துறை புறக்கணிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டபோது, அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது. அவர்கள் மீது எந்த சுமையையும் சுமத்தவில்லையே என்றார் சிதம்பரம்.

அதற்குப் பதிலாக வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கார்ப்பரேட் துறை பயன் அடையும் என்றார் சிதம்பரம்.

————————————————————————————————————————————————————————–
4 கோடி விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் பட்ஜெட்

புது தில்லி, பிப். 29: நான்கு கோடி விவசாயிகளின் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்வதாக நிதி அமைச்சர் ப. சிதம்பரம் 2008-09-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தார்.

அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் 2007 மார்ச் 31 வரை அளித்த கடன்கள் அனைத்தும் ரத்தாகிறது. இவை 3 கோடி சிறு, குறு விவசாயிகள் வாங்கியது. வசூலிக்கப்பட முடியாமல் நிலுவையில் இருந்த 50,000 கோடி ரூபாய் இந்த வகையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சிறு விவசாயிகள் என்போர் 1 ஹெக்டேர் முதல் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருப்பவர்கள். குறு விவசாயிகள் என்போர் அதிகபட்சம் ஒரு ஹெக்டேர் மட்டுமே நிலம் வைத்திருப்போர்.

வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடனை பாக்கி வைத்திருக்கும் இதர விவசாயிகள், தாங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையில் 75 சதவீதத்தை அதாவது முக்கால் பங்கைச் செலுத்திவிட்டால், அரசு 25 சதவீதத்தை அதாவது கால் பங்கைத் தள்ளுபடி செய்துவிடும். அப்படி தள்ளுபடியாகக் கூடிய தொகை மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய். இதனால் ஒரு கோடி விவசாயிகள் கடன் நிவாரணம் பெறலாம். அதாவது 30 ஆயிரம் கோடி ரூபாய் கடனை இவர்கள் திருப்பிச் செலுத்தினால் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரத்தாகிவிடும்.

இந்தக் கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் 2008 ஜூன் 30-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துக் கொண்டுள்ளது.

2,80,000 கோடி: சாகுபடிக்கு புதிதாகக் கடன் தேவைப்படும் விவசாயிகள் உடனடியாக வங்கிகளை அணுகலாம். ரூ.2,80,000 கோடி கடன் தொகை தயாராக இருக்கிறது. குறுகிய கால விவசாயக் கடன்களுக்கான வட்டி 7 சதவீதமாகவே தொடரும். விவசாயத்துக்கான வட்டி குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அரசு 2008-09-ம் நிதி ஆண்டுக்கு ரூ.1,600 கோடியை ஒதுக்கியிருக்கிறது.

பாசனத்துக்கு: பாசன வசதிகளை அளிக்க 2008-09-ம் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இது 11,000 கோடியாகத்தான் இருந்தது.

விரைவுபடுத்தப்பட்ட பாசன பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் 24 பெரிய -நடுத்தர திட்டங்களும் 753 சிறு பாசன திட்டங்களும் இந்த நிதியாண்டில் நிறைவேற்றப்படும். இதனால் 5 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதி கூடுதலாகக் கிடைக்கும்.

4 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு சொட்டுநீர், இறைவைப் பாசனம் மூலம் தண்ணீர் வழங்க ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது.

புதிய கார்ப்பரேஷன்: பெரிய, நடுத்தர பாசன திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க புதிய பாசன-நீர்வள நிதி கார்ப்பரேஷன் உருவாக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ஆரம்ப மூலதனமாக ரூ.100 கோடி வழங்கப்படவுள்ளது.

தோட்டக்கலை பயிர்: தோட்டக்கலைப் பயிர் சாகுபடியின் கீழ் மேலும் 2,76,000 ஹெக்டேர் நிலங்கள் வந்திருப்பதால் ஊக்குவிப்பு அடைந்துள்ள அரசு தேசிய தோட்டக்கலை இயக்கத்துக்கு ரூ.1,100 கோடி வழங்குகிறது. தென்னை, முந்திரி, மிளகு ஆகியவற்றில் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

2009 மார்ச்சுக்குள் நாட்டின் 250 மாவட்டங்களில் மண் பரிசோதனைக்கான நடமாடும் ஆய்வுக்கூடங்களை நிறுவ ரூ.75 கோடி மத்திய வேளாண் துறைக்கு ஒதுக்கப்படும்.

இதுமட்டும் அல்லாமல் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அரசுத்துறையிலும் தனியார் துறையிலுமாக 500 மண் பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு ஆய்வகத்துக்கும் அரசு ரூ.30 லட்சம் நிதி உதவி அளிக்கும் என்றார் சிதம்பரம்.

————————————————————————————————————————————————————————–
சிறுபான்மையினர் நலனுக்கு நிதிஒதுக்கீடு இருமடங்கு உயர்வு

புதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கான நிதிஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்காக பல்நோக்கு வளர்ச்சித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சிறுபான்மையினர் நல அமைச்சகத்துக்கு 2007-08 ஆம் ஆண்டு ரூ.500 கோடி மட்டுமே நிதிஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2008-09 ஆம் ஆண்டில் இந்த நிதி ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டு ரூ.1000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 90 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு வசிக்கும் சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்துக்காக ரூ.3780 கோடியில் பல்நோக்கு வளர்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் முதல்கட்டமாக ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதுதவிர மதரஸôக்களை நவீனப்படுத்த ரூ.45 கோடியும் சிறுபான்மையின பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.80 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டங்களில் அரசு வங்கிகளின் 288 கிளைகள் நடப்பு ஆண்டில் கூடுதலாக திறக்கப்படும்.

மத்திய பாதுகாப்புப் படையில் சிறுபான்மை இனத்தவர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.

————————————————————————————————————————————————————————–
ஈரோட்டில் விசைத்தறி மேம்பாட்டுக் கழகம்

புதுதில்லி, பிப். 29: ஈரோட்டில் விசைத்தறி மேம்பாட்டுக்காக மிகப்பெரிய குழுமம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

ஜவுளித்துறையில் உள்கட்டமைப்பையும், உற்பத்தியையும் மேம்படுத்துவதற்காக 6 மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகப்பெரிய குழுமங்களாக உருவாக்கப்படவுள்ளன.

விசைத்தறிக்காக ஈரோடு மற்றும் பிவண்டியும், கைத்தறிக்காக வாராணசி மற்றும் சிப்சாகரும், கைவினைக் கலைகளுக்காக நர்சாபூர் மற்றும் மொராதாபாத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுமத்திற்கும் ரூ. 70 கோடி தேவைப்படுகிறது. 2008-09 ம் துவக்க நிதியாண்டில் ரூ.100 கோடியுடன் இத்திட்டதிற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன.

————————————————————————————————————————————————————————–
ஏழைகளுக்கான வீட்டுவசதி திட்டத்துக்கு மானியம் அதிகரிப்பு

புது தில்லி, பிப். 29: பாரத் நிர்மாண் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் இந்திரா வீட்டுவசதி திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் மானியத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:

சமவெளி பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கான மானியம் வீடு ஒன்றுக்கு ரூ.25,000-லிருந்து ரூ.35 ஆயிரமாக ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படும்.

மலை மற்றும் சிக்கலான பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்தொகை ரூ.27,500-லிருந்து ரூ.38.500 ஆக அதிகரிக்கப்படுகிறது.

தேசிய வேளான் காப்பீட்டுத் திட்டம்: தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.644 கோடி ஒதுக்கப்படும். இத்திட்டம் தற்போதைய நிலையிலேயே கரீப் மற்றும் ராஃபி பருவங்களிலும் தொடரும். ஐந்து மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சோதனை ரீதியாக செயல்படுத்தப்படவுள்ள தட்ப வெப்ப அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்படும்.

தேயிலைச் செடிகளை மறுநடவு செய்யவும், புத்துருயிரூட்டவும் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட தேயிலை நிதியத்துக்கு ரூ.40 கோடி அளிக்கப்படும். இதே போன்று ஏலக்காய்க்கு ரூ.10.68 கோடியும், ரப்பர் பயிருக்கு ரூ.19.41 கோடியும், காபி பயிருக்கு ரூ.18 கோடியும் நிதியுதவி அளிக்கப்படும்.

ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியம்:: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் தொகுப்பு நிதியை ரூ.14,000 கோடியாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் கீழ் கிராமப்புற சாலைகளுக்கான தனிப்பிரிவு ரூ.4,000 கோடி தொகுப்பு நிதியுடன் அமைக்கப்படவுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம்: தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.10,867 கோடியிலிருந்து ரூ.12,966 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம்: தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவைகளின் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு ரூ.1,500 கோடியிலிருந்து 1,680 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொது சேவை மையங்களுக்கு ரூ.75 கோடியும், சவான் திட்டத்துக்கு ரூ.450 கோடியும், மாநில தகவல் மையங்களுக்கு ரூ.275 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான முதலீடுகளுக்கும் அரசு ஊக்கம்: நடப்பு நிதியாண்டில் இறுதியில் சேமிப்பு விகிதம் 35.6 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 36.3 சதவீதமாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதே போக்கு அந்நிய முதலீட்டிலும் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 12.7 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் அந்நிய நிறுவன முதலீடு 18 பில்லியன் டாலராகவும் இருந்தது.

அனைத்து விதமான முதலீட்டையும் உள்நாடு, வெளிநாடு தனியார் மற்றும் பொதுத்துறையை ஊக்கப்படுத்துவதே அரசின் கொள்கையாகும்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு பங்குகள் வாயிலாக ரூ.16,436 கோடியும், கடன்கள் வாயிலாக ரூ.3,003 கோடியும் மத்திய அரசு அளிக்கவுள்ளது. இதுவரை 44 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் அதிக நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை மேம்படுத்துவதே அரசின் திட்டம் என்றார் அவர்.

————————————————————————————————————————————————————————–
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ. 22,948 கோடி

புதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு மொத்தம் ரூ. 22,948 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உதவித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இதை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.

இதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின விமான ஓட்டிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம், உயிரி தொழில்நுட்பத் துறை மூலம் இப் பிரிவினருக்கான உயிரி தொழில்நுட்பத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ரூ. 3965 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 3,450 கோடி.

இதுதவிர தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மொத்த நிதிஒதுக்கீடு ரூ. 22,948 கோடி. இதில் ஊனமுற்றோருக்கான நிவாரண திட்டங்கள், இந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களும் அடங்கும்.

————————————————————————————————————————————————————————–
மருத்துவக் காப்பீட்டுக்கு வரிச் சலுகை

புது தில்லி, பிப். 29: பெற்றோரின் மருத்துவ சுகாதாரக் காப்பீட்டுக்கு செலுத்தப்படும் தொகைக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி வழக்கமான வரி சலுகையுடன் கூடுதலாக ரூ.15 ஆயிரத்துக்கு வரிச் சலுகை அளிக்கப்படும். பெற்றோர் மூத்த குடிமக்களாக இருக்கும்பட்சத்தில் ரூ.20 ஆயிரத்துக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நீதிமன்றங்கள் கணினிமயம்: நீதிமன்றங்களுக்கு அடிப்படைக் கட்டுமான வசதிகள் மற்றும் கணினிமயமாக்குவதற்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை நிர்வாகத்துக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் ரூ.108.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2008-09 பட்ஜெட்டில் இது 253.12 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்படுவதை விரைவுபடுத்துவதற்காக மாவட்ட மற்றும் கீழ்நீதிமன்றங்களை கணினிமயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே இந்த ஆண்டு ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு நீதிமன்றங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி இந்த பட்ஜெட்டில் ரூ.2 கோடியிலிருந்து ரூ.13 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அருணாசலப் பிரதேசத்துக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி: அருணாசலப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சிறப்பு நிதியாக ரூ.500 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய-பாக். எல்லை பணி: இந்தியா -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.124 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காகும்.

இந்திய -வங்கதேச எல்லையில் முள்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.484.23 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.76.74 கோடி குறைவாகும்.

————————————————————————————————————————————————————————–
ராணுவ ஒதுக்கீடு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது


புதுதில்லி, பிப். 29: பொது பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 5600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 96 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 92 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் 155 மி.மி. பீரங்கிகள் வாங்கும் பேரம் கடைசி நேரத்தில் ரத்தானதால் ரூ.3500 கோடி செலவழிக்கப்படவில்லை.

முதன்முறையாக பாதுகாப்பு பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டினாலும், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளோடு ஒப்பிடும்போது இந்த நிதி குறைவு என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ராணுவத்துக்கு இரண்டு சதவீதத்துக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 5 சதவீதமும், சீனாவில் 7 சதவீதமும் நிதி ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

————————————————————————————————————————————————————————–
கிராமப்புற சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு


புது தில்லி, பிப். 29: தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்திற்கான ஒதுக்கீட்டை ரூ.12,050 கோடியாக உயர்த்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம்தான் கிராமப்புற மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கான முக்கிய திட்டம்.

சமுதாயமே நடத்தும் பரவலாக்கப்பட்ட சுகாதார கட்டமைப்பை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். இதற்காக 4,62,000 பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

1,77,924 கிராம சுகாதார மற்றும் கழிப்பிட குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 323 மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு ரூ.993 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளம்பிள்ளைவாத நோய் ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.1042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
————————————————————————————————————————————————————————–

கிராமங்களில் கட்டப்படும் மருத்துவமனைகளுக்கு 5 ஆண்டுகள் வரிவிலக்கு

புதுதில்லி, பிப். 29: கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனைகளுக்கு பொது பட்ஜெட்டில் ஐந்து ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும், குறிப்பிட்ட சில நகரங்கள் மட்டும் இந்த சலுகையைப் பெற முடியாது என்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இதன்படி 2008 ஏப்ரல் 1 முதல் 2013 மார்ச் 31 வரை வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களில், 3 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் கட்டுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வருமான வரிச் சலுகை அளிக்கப்படும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

————————————————————————————————————————————————————————–

கல்வித் துறைக்கு ரூ.34,400 கோடி

புது தில்லி, பிப். 29: பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். கல்வித்துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட 20 சதவீதம் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூ.28, 674 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.34,400 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதில் சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூ.13,100 கோடியும், மதிய உணவு திட்டத்திற்கு ரூ.8,000 கோடியும், இடைநிலைக் கல்விக்கு ரூ.4,554 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2008-09-ம் ஆண்டின் மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ் 6,000 உயர்தர மாதிரிபள்ளிகள் துவக்கப்படவுள்ளன. இந்த திட்டத்திற்காக ரூ.650 கோடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

————————————————————————————————————————————————————————–
வடகிழக்கு பகுதிக்கு சிறப்பு கவனம்

புதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் வடகிழக்கு பகுதிக்கு தொடர்ந்து சிறப்பு கவனமும், அதிக நிதி ஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்திற்கு ரூ.1445 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பிராந்தியத்திற்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு 2007-08 ல் ரூ.14,365 கோடியாக இருந்தது. 2008-09 ல் ரூ.16,447 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு எல்லைப்புற பகுதிகள் சில பிரத்யேக சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இவற்றை வழக்கமான திட்டங்களின் கீழ் சரி செய்ய இயலாது.

எனவே சிறப்பு ஏற்பாடுகள் மூலம் பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

————————————————————————————————————————————————————————–
பட்ஜெட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டங்கள்: பச்சோரி வரவேற்பு

புதுதில்லி, பிப். 29: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழில்நுட்பம், எண்ணங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நிலையான அமைப்பை ஏற்படுத்த பட்ஜெட்டில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதை ஆர்.கே.பச்சோரி வரவேற்றுள்ளார்.

நோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஐ.நா.வின் தட்பவெப்ப மாறுதல் குழுவின் தலைவருமான ஆர்.கே.பச்சோரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதைத் தெரிவித்துள்ளார்.

அரசின் முக்கியமான கொள்கைகளில் தட்பவெப்ப மாறுதல் தொடர்பான திட்டங்கள் இடம்பெறும் என்பது நிதியமைச்சர் சிதம்பரத்தின் பட்ஜெட் முலம் விளங்குகிறது. இது திருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

————————————————————————————————————————————————————————–

தகவல் ஒலிபரப்புக்கு ரூ. 300 கோடி கூடுதல் நிதி

புதுதில்லி, பிப். 29: தகவல் ஒலிபரப்புத்துறைக்கு 2008 – 09 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரசார பாரதிக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு 95.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டுக்கு ரூ. 326.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 160 கோடி அதிகம்.

சர்வதேச ஒலிபரப்பு மையத்தைத் தொடங்குவதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார். 2010-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பிரசார் பாரதி பெற்றுள்ளது.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு 79 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2008 – 09 ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 8 கோடி.

கேளிக்கை மற்றும் ஊடகம், சினிமா துறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

————————————————————————————————————————————————————————–

விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி

புதுதில்லி, பிப். 29: விரைவுபடுத்தப்பட்ட நீர்பாசன திட்டத்திற்கான 2008-09 ம் ஆண்டிற்கான மதிப்பீட்டுச் செலவாக ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், விரிவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 24 பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன திட்டங்களும், 753 சிறிய நீர்ப்பாசன திட்டங்களும் இந்த நிதியாண்டியில் நிறைவேற்றப்படுகிறது.

மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ.348 கோடியாகும். மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் குறு நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 4 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பயன்பெறும் என்றார்.

————————————————————————————————————————————————————————–

பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க முயற்சி

புது தில்லி, பிப். 29: பட்ஜெட் தயாரிப்பின்போது 3 வகையான பற்றாக்குறைகளை குறைப்பது அல்லது கட்டுக்குள் வைப்பதில்தான் நிதியமைச்சரின் திறமை இருக்கிறது. இப்படி பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்பதை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே “”நிதி பொறுப்பு, பட்ஜெட் நிர்வாகச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.

பட்ஜெட் பற்றாக்குறை, வருவாய் இனத்தில் பற்றாக்குறை, அரசுக்கு வர வேண்டிய நிதி, அரசு செய்ய வேண்டிய செலவு ஆகியவற்றுக்கு இடையிலான பற்றாக்குறை என்று இவை 3 வகைப்படும்.

பொது வரவு செலவில் பற்றாக்குறை என்பது, அரசு தனக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்று கூறுவதற்கும், தனக்கு எவ்வளவு செலவாகும் என்று கூறுவதற்கும் இடையே உள்ள இடைவெளி ஆகும்.

வருவாய் இனத்தில் பற்றாக்குறை என்பது நேர்முக, மறைமுக வரிகள் மூலம் அரசு எதிர்பார்க்கும் தொகைக்கும் உண்மையில் கையில் கிடைக்கும் (இலக்கைவிடக் குறைவாக உள்ள) தொகைக்கும் இடையிலான பற்றாக்குறையாகும்.

மற்றொரு பற்றாக்குறை அரசுக்கு உண்மையிலேயே கிடைக்கும் வருவாய்க்கும், அதுசெய்யும் செலவுகளுக்கும் இடையிலான பற்றாக்குறை எவ்வளவு என்று பட்ஜெட்டிலேயே தெரிவிக்கப்படுவதாகும்.

பொது வரவு-செலவில் பற்றாக்குறை என்பது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி, சேவை மதிப்பில் 3 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் “நிதி பொறுப்பு, பட்ஜெட் நிர்வாகச் சட்டம்’ விதிக்கும் முக்கிய நிபந்தனையாகும்.

நிதியமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசின் பட்ஜெட்படியிலான பற்றாக்குறை ரூ.1,33,287 கோடியாக இருக்கிறது. இது மொத்த உற்பத்தி மதிப்பில் 2.5 சதவீதம்தான்.

2007-08 ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிட்டால் இதன் அளவு 3.1% ஆக இருக்கிறது. இதை நிதியமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது சுட்டிக்காட்டினார்.

இந்த பட்ஜெட்டில் சிதம்பரம் அறிவித்துள்ள சலுகைகள், வரிச் சீரமைப்பு காரணமாக அரசுக்கு வரும் வருவாய் சற்று குறையும் வாய்ப்பு தெரிகிறது. எனவே அரசுக்கு வருவாய் கணக்கில் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிகிறது.

வறுமை ஒழிப்புக்கும், கடன் நிவாரணத்துக்கும், சமூகத்தின் அடித்தள கட்டமைப்பை மேம்படுத்தும் துறைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இப்போது அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய்க்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் வருவாய்க்கும் இடையிலான பற்றாக்குறை 1.5% ஆக இருக்கிறது. அடுத்த பட்ஜெட்டில் இது 1% ஆக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மத்திய அரசுக்கு வருவாய் இனங்கள் மூலம் ரூ.6,02,935 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் செலவு ரூ.6,58,119 கோடியாக இருக்கும்.

வருவாய் கணக்கில் இப்போது நிலவும் பற்றாக்குறையை முழுதாகப் போக்க மேலும் ஓராண்டு பிடிக்கலாம் என்று நிதியமைச்சர் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.

————————————————————————————————————————————————————————–
ரூ.1.50 லட்சம் வரை வருமான வரி இல்லை

புதுதில்லி, பிப். 29: மாத ஊதியம் பெறுவோருக்கான வருமான வரி விலக்கு ரூ.1.10 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.1.50 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மக்களவையில் அறிவித்தார்.

வருமானத்துக்கு ஏற்ப விதிக்கப்படும் வரி விகிதத்தில் சில மாறுதல்களையும் அவர் செய்துள்ளார்.

இதன்படி ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் சுமார் 4000 ரூபாய் வரை பலன் கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் தற்போதுள்ள வரி விகிதத்தின்படி ரூ.2,49,000 வருமான வரி செலுத்துகின்றனர். இனிமேல் புதிய வரி விகிதப்படி அவர்களது வருமானவரி 2,05,000 ரூபாயாகக் குறையும். அதாவது அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.44,000 வரி குறையும்.

பெண்களுக்குச் சலுகை

ஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் வரை வருமானம் உள்ள பெண்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து இதுவரை விலக்கு அளிக்கப்பட்டது. இனிமேல் (2008-2009) ரூ.1.80 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள பெண்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ள பெண்கள் செலுத்த வேண்டிய வருமானவரி 2,45,500 ரூபாயில் இருந்து 2,02,000 ரூபாயாகக் குறையும்.

மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு தற்போதுள்ள ரூ.1.95 லட்சத்திலிருந்து ரூ.2.25 லட்சமாக உயர்த்தப்படும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ள மூத்த குடிமக்கள் செலுத்த வேண்டிய வருமான வரி 2,36,000 ரூபாயில் இருந்து 1,97,500 ரூபாயாகக் குறையும்.

புதிய வரி விகிதம் கணக்கிடப்படும் முறை

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு அவர்களது வருமானத்தில் ரூ.1.50 லட்சம் வரை வருமான வரி கணக்கிடப்படமாட்டாது.

ரூ.1.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15,000 ரூபாயும், ரூ. 3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 40,000 ரூபாயும், ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரியும் கணக்கிடப்படும்.

பழைய வரி விகிதப்படி இந்த வரியானது ரூ.4000, ரூ.35,000, ரூ.60,000, ரூ.1.50 லட்சம் என்று கணக்கிடப்பட்டது. அதே நேரத்தில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் சர்சார்ஜ் 10 சதவீதம் வசூலிக்கப்படுவது தொடரும்.

பெற்றோருக்காக மருத்துவ இன்சூரன்ஸ் தொகை செலுத்துவோருக்கு வருமான வரியில் இருந்து ரூ.15,000 குறைக்கப்படும். வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவின்கீழ் தற்போதுள்ள சேமிப்பு உச்சவரம்பான ஒரு லட்சம் ரூபாய் தவிர இந்த 15,000 ரூபாய் வரிக்குறைப்பு இருக்கும்.

————————————————————————————————————————————————————————–
தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட போலீஸôருக்கு சிறப்பு பயிற்சி மையங்கள்

புதுதில்லி, பிப். 29: தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட போலீஸôருக்கு சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ. 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகள் இந்த சிறப்புப் பயிற்சி மையங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த மையங்களில் போலீஸôருக்கு நவீன பயிற்சி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் தமது பட்ஜெட் உரையில் கூறினார்.

இது தவிர சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க நேபாளம் மற்றும் பூடான் எல்லைகளில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். இதற்கு ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நக்ஸலைட்டுகள் உள்ளிட்ட தீவிரவாதிகளை ஒடுக்க பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும். பாதுகாப்புப் படையினரின் திறமையை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிரிமினல் குற்றங்கள் மற்றும் கிரிமினல்களை துப்புத் துலக்கும் நெட்வொர்க் முறைக்கு ரூ. 210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர காவல் நிலையங்களை நவீனப்படுத்தவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

————————————————————————————————————————————————————————–
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ. 22,948 கோடி

புதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு மொத்தம் ரூ. 22,948 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உதவித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இதை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.

இதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின விமான ஓட்டிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம், உயிரி தொழில்நுட்பத் துறை மூலம் இப் பிரிவினருக்கான உயிரி தொழில்நுட்பத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ரூ. 3965 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 3,450 கோடி.

இதுதவிர தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மொத்த நிதிஒதுக்கீடு ரூ. 22,948 கோடி. இதில் ஊனமுற்றோருக்கான நிவாரண திட்டங்கள், இந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களும் அடங்கும்.

————————————————————————————————————————————————————————–

மோடி மஸ்தான் பட்ஜெட்…

“அடேங்கப்பா…’ என்று வாயைப் பிளக்கும்படியான சலுகைகள் – 60,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து; வருமானவரி விலக்குக்கான வரம்பு அதிகரிப்பு; மருந்துகள் மீதான கலால் வரி பாதிக்குப் பாதி குறைப்பு; தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், அமைப்புசாரா தொழிலாளர்கள், பெண்கள், முதியோர் என்று அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன், 55 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் நமது நிதியமைச்சர்.

“இது ஒரு விவசாயிகள் பட்ஜெட்’ – என்று பிரமிக்க வைக்கும் இந்த நிதிநிலை அறிக்கையின் தாக்கம் எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால், நோக்கம் என்னவோ நிச்சயமாகத் தேர்தல்தான் என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு அப்பட்டமாகத் தெரிகிறது. அது பலமா அல்லது பலவீனமா என்பது இப்போது தெரியாது.

இந்த 60,000 கோடி ரூபாய் கடன் ரத்து, நமது விவசாயிகளின் பிரச்னைகளை எல்லாம் தீர்த்து, விவசாயிகள் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மீண்டுமொரு விவசாயப் புரட்சிக்கு வழிகோலும் என்று யாராவது நினைத்தால், மிஞ்சுவது என்னவோ ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், இந்தக் கடன் நிவாரணம், பெரும் நிலச்சுவான்தார்களுக்குத்தான் ஆறுதலாக அமையப் போகிறதே தவிர சிறு விவசாயிகளுக்கு அல்ல என்பதுதான் உண்மை.

பொருளாதாரப் புள்ளிவிவர அறிக்கையின்படி, இந்தியாவிலுள்ள மொத்த விவசாயிகளில் 48.6 சதவிகிதம் பேர் கடனில் தத்தளிக்கிறார்கள். அவர்களில் 61 சதவிகிதம் பேர் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாயம் செய்பவர்கள். அதுமட்டுமல்ல, விவசாயிகளின் மொத்தக் கடனில் 57.7 சதவிகிதம்தான் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவைகளிலிருந்து பெறப்பட்டவை.

மீதி 42.3 சதவிகிதம் தனியாரிடமும், வியாபாரிகளிடமும், நிலத்தை ஒத்திக்கு வைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் பெற்ற கடன்கள். இதுபோன்று தனியாரிடம் விவசாயிகள் பெற்ற கடன் தொகை 2003 புள்ளிவிவரப்படி சுமார் 4,800 கோடி. இப்போது வட்டி, குட்டி போட்டு எத்தனை ஆயிரம் கோடிகள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இரண்டு ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் ஏழைகளில் மிகக் குறைந்த சதவிகிதத்தினர்தான் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள். பெரும்பகுதி கிராமப்புற விவசாயிகளும் தனியாரிடம் கடன்பட்டவர்களாக இருப்பதால்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர்களுக்கு இந்த 60,000 கோடி ரூபாய் நிவாரணம் எந்த வகையில் உதவப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

அப்படியே அத்தனை கடன்களும் ரத்து செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அடுத்த போக விளைச்சலுக்குத் தயாராவார்களா என்றால் அதுவும் இல்லை. அதற்குப் பணம் வேண்டுமே? மீண்டும் கடன் வாங்க வங்கிகளுக்குப் போகப் போகிறார்களா, இல்லை தனியாரிடம் போகப் போகிறார்களா? இனி அடுத்த கடன் தள்ளுபடியை எதிர்பார்த்துக் காலத்தை ஓட்டப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இதேபோலத்தான், இந்த நிதிநிலை அறிக்கையில் வாரி இறைக்கப்பட்ட சலுகைகள் பலவும், குறுகிய கண்ணோட்டத்துடன் செய்யப்பட்டதாகத் தெரிகிறதே தவிர, தொலைநோக்குப் பார்வையுடனும், பிரச்னைகளுக்கு முழுத் தீர்வாக அமையும் விதத்திலும் இருக்கிறதா என்றால் இல்லை. போதாக்குறைக்கு, விலைவாசியை அதிகரிக்கும் விதத்தில் 55,184 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை வேறு.

இந்த நிதிநிலை அறிக்கையைப் பலரும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பட்ஜெட் என்று வர்ணிக்கிறார்கள். தெரிந்து சொல்கிறார்களோ, தெரியாமல் சொல்கிறார்களோ, உண்மையைச் சொல்கிறார்கள். தேர்தலுக்குக் காங்கிரஸ் செலவழிக்க வேண்டிய பணத்தை அரசு கஜானா மூலம் செலவழித்துத் தனது வாக்கு வங்கியை விஸ்தரிக்க முற்பட்டிருக்கும்போது, அதை காங்கிரஸின் தேர்தல் பட்ஜெட் என்று சொல்வதில் தவறே இல்லை.

மோடி மஸ்தான் பாணியில் ஒரு கண்கட்டு வித்தையை, நிதிநிலை அறிக்கை என்கிற பெயரில் அரங்கேற்றி இருக்கிறார் நிதியமைச்சர்

ப. சிதம்பரம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், ஆஹா ஓஹோ… ஆழ்ந்து சிந்தித்தால், ஊஹும்… ஊஹும்…

Posted in Budget, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Economy, Elections, Farmers, Finance, India, Polls | 1 Comment »

BJP terms railway budget disappointing; Left opposes role for private players: Lalu’s last lap – Dinathanthi – Part 2

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

Part – 1 (Dinamani)
Railway Budget: India to invest billions in rail revamp – Fares slashed, freight untouched as profits rise « Tamil News

கட்டணக் குறைப்புக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள்

மத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரெயில் கட்டணக் குறைப்புக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரெயில்வே போர்டு (போக்குவரத்து) உறுப்பினர் வி.என்.மாத்தூர் விளக்கி கூறியதாவது:-

* 5 சதவீத கட்டணக் குறைப்பு என்பது சாதாரண மற்றும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் 2-ம் வகுப்பிற்கு பொருந்தும். இந்த ரெயில்களிலும் கூட தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு இச்சலுகை பொருந்தாது.

* ரெயில்கள் பிரபலமான ரெயில்கள், பிரபலம் அல்லாதவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் பிரபலம் அல்லாத 1,200 ரெயில்கள் இயங்குகின்றன. இந்த ரெயில்களின் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் 7 சதவீத கட்டணக் குறைப்பு கிடைக்கும்.

* பிரபலமான ரெயில்களில் இது 3.5 சதவீத கட்டணக் குறைப்பாக இருக்கும். இதர ரெயில்களில் இதே அளவு கட்டணச்ë சலுகை மக்கள் அதிகம் பயணம் செய்யும் காலங்களிலும் கிடைக்கும்.

* விரைவில் ரெயில்வே இலாகா பிரபலமான ரெயில்களின் பெயர்களை அறிவிக்கும். மக்கள் குறைவாக பயணம் செய்யும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் குறைந்த அளவு மக்கள் பயண சீசனுக்கான கட்டணச் சலுகை கிடைக்கும்.

* ஏசி-2 அடுக்கு பெட்டிக்கான பயணக் கட்டணச் சலுகை, பிரபலமல்லாத ரெயில்களிலும், மக்கள் குறைவாக பயணம் செய்யும் காலங்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.

* தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கூடுதல் பயணிகள் செல்லும் விதத்தில் அதிகபட்சமாக 81 படுக்கைகள் இருந்தால் அங்கு 6 சதவீத கட்டணச் சலுகை கிடைக்கும். எனினும் இது போன்ற பெட்டிகள் ரெயில்களில் குறைந்த அளவே இருக்கும் என்பதால் அதிகமான பயணிகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. ரெயில்வே இலாகா அதிக பயணிகள் செல்லும் வகையில் இதுபோன்ற பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இந்த கட்டணச் சலுகைகளால் ரெயில்வே இலாகாவுக்கு சில நூறு கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும். எனினும் கட்டணச் சலுகைகளால் அதிக அளவில் மக்கள் ரெயில்களில் பயணம் செய்வார்கள்.
———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை:
இந்திய கம்ïனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. சாமானியர்களுக்கு ஒன்றும் இல்லை என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

வெளிநடப்பு

மத்திய ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கே சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன, சாதாரண மக்கள், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள், உள்ளூர் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்று கூறி பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ரெயில்வே பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசியதாவது:-

இந்திய கம்ïனிஸ்டு

குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்ïனிஸ்டு):-

இந்த பட்ஜெட்டை தயாரித்தது ரெயில்வே மந்திரி லாலுபிரசாத்தா அல்லது நிதி மந்திரி சிதம்பரமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கூடுதலாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உள்ளூர் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கும், மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கும், 2-ம் வகுப்பு பயணிகளுக்கும், புறநகர் பயணிகளுக்கும் ஒரு நன்மையும் அறிவிக்கப்படவில்லை.

ரெயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றியோ, புதிய வேலைவாய்ப்புகள் பற்றியோ ஒன்றுமே அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த பட்ஜெட் விளங்குகிறது. அத்துடன் ஒப்பந்த வேலைகள் மற்றும் தனியார்-அரசு கூட்டு வேலைகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நாங்கள் இந்த பட்ஜெட்டை எதிர்க்கிறோம்.

சமாஜ்வாடி கட்சி

சுதாகர் ரெட்டி (இந்திய கம்ï.):- இது ஒரு குறுகிய பட்ஜெட். பாட்னா-சென்னை இடையேதான் புதிய ரெயில்கள் விடப்பட்டு உள்ளன. வசதியானவர்களுக்கு மட்டுமே வசதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சாதாரண மக்களுக்கு ஒன்றுமே இல்லை.

மோகன்சிங் (சமாஜ்வாடி கட்சி):- ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் ரெயில் தேர்தலை சந்திப்பதற்கு முன்னால் பெரிய விபத்துக்குள்ளாகி விட்டது. இது போல 5 பட்ஜெட்டுகள் இருந்தால் போதும், எதிர்காலத்தில் வேறு பட்ஜெட்டே தேவைப்படாது. ஏனென்றால் அதற்குள் ரெயில்வே துறை முழுவதும் தனியார்மயமாகி இருக்கும்.

பா.ஜனதா

சுஷ்மாசுவராஜ் (பா.ஜனதா):- இந்த பட்ஜெட்டில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்கள் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாகுபாட்டுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.

வி.கே.மல்கோத்ரா(பா.ஜனதா):- இந்த பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட்டை எதிர்த்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பது, லாலுவின் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதையே பிரதிபலிக்கிறது.

சிவசேனா

மனோகர் ஜோஷி (சிவசேனா):- இது தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நிறைய உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பலன் ஒன்றுமே இல்லை.

இவ்வாறு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சுஷ்மாசுவராஜ், மோகன் சிங், பிரஜ்கிஷோர் மொகந்தி ஆகியோர் பேசுகையில் இந்த பட்ஜெட்டில் உத்தரபிரதேசம், ஒரிசா, குஜராத் போன்ற பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன என்று குற்றம் சாட்டினார்கள்.

காங்கிரஸ்

ஆனால் காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் பேசுகையில், “5 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது சாதாரண மக்களுக்கு நன்மையே பயக்கும். புறநகர் பயணிகளுக்கு குறிப்பாக மும்பை பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் அளிக்கப்பட்டு உள்ளன என்று பாராட்டு தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழக புதிய திட்டங்கள்
சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணி 2010-க்குள் முடிவடையும்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய பாதைகள் மற்றும் அகல ரெயில் பாதை மாற்றம் போன்ற திட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணிகளை, 2010-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ரெயில்வே பட்ஜெட்டில் வெளியான தமிழக திட்டங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-

புதிய ரெயில் பாதைகள்

தமிழகத்தில் மூன்று புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை-புதுச்சேரி-கடலூர் இடையே மகாபலிபுரம் வழியாக ஒரு ரெயில் பாதையும், ஈரோடு – பழனி மற்றும் அத்திப்பட்டு – புத்தூர் இடையே ரெயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.

இது தவிர, ஜோலார்பேட்டை – திருவண்ணாமலை இடையிலான புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

அகல ரெயில் பாதை

மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி, விருத்தாசலம் – ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு இடையிலும், நெல்லை – திருச்செந்தூர் இடையிலும் முடிவடைந்து விட்டன. தற்போது பணிகள் நடைபெற்று வரும் காரைக்குடி – மானாமதுரை பாதையும், திருவாரூர் – நாகூர் இடையிலான பாதையும் விரைவில் முடிவடையும்.

இந்த நிலையில், வேலூர் – விழுப்புரம் இடையிலான பாதை, தஞ்சாவூர் – விழுப்புரம் (பகுதி மட்டும்) பாதை மற்றும் போத்தனூர் – கோவை ஆகிய பாதைகளை அடுத்த நிதி ஆண்டுக்குள் (2008-09) அகல ரெயில் பாதையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதுரை – போடிநாயக்கனூர் பாதையையும் அகல பாதையாக மாற்ற அறிவிப்பு வெளியானது.

இரட்டை ரெயில் பாதை

தமிழகத்தில், மதுரை – திண்டுக்கல் (பகுதி) மற்றும் திருவள்ளூர் – அரக்கோணம் (3-வது லைன்) ஆகிய பாதைகளில் 2008-09 நிதி ஆண்டுக்குள் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, திருவள்ளூர் – அரக்கோணம் (4-வது லைன்) மற்றும் விழுப்புரம் – திண்டுக்கல் (மின்மயமாக்கலுடன்) இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓமலூர் – மேட்டூர் அணை இடையே இரட்டை பாதை அமைப்பதற்காக ஆய்வு பணிகள், அடுத்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும்.

பறக்கும் ரெயில்

காரைக்குடி – ராமநாதபுரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள், இந்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும். இது தவிர, பெரம்பலூர் வழியாக சிதம்பரம் – ஆத்தூர் இடையிலும், தஞ்சாவூர் – அரியலூர் இடையிலும் புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

சென்னை புறநகர் மின்சார ரெயில் திட்டத்தில், வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான புறநகர் மின்சார ரெயில் பாதை பணி 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் உள்ள பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையை நவீனமயமாக்கவும் ரெயில்வே துறை தீர்மானித்துள்ளது.

———————————————————————————————————————————————————————–

ரெயில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது
பாராளுமன்றத்தில் ருசிகர காட்சிகள்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசினார். அப்போது சபையில் சில ருசிகர காட்சிகளை காண முடிந்தது.

* ரெயில்வே பட்ஜெட் தாக்கலான போது பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி ஆகியோர் சபையில் இருந்தனர்.

சோனியாவுடன் ஆலோசனை

* பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும் முன், சோனியா காந்தியுடன் லாலு பிரசாத் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

* ரெயில்வே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய லாலு பிரசாத்; “நாங்கள் கனவு மட்டும் காணவில்லை. அதை நனவாக்கி இருக்கிறோம்” என்று கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சபையில் சிரிப்பொலியும் எழுந்தது.

* லாலு பிரசாத் பட்ஜெட்டை வாசித்துக் கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த லாலு பிரசாத்தின் மகள்கள், மருமகன் ஆகியோர் அவர் உரை நிகழ்த்துவதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தனர்.

கனிமொழி எம்.பி.

* முன்வரிசையில் ரெயில்வே மந்திரி லாலு பிரசாத்தின் இருக்கைக்கு அருகில்தான் நிதி மந்திரி ப.சிதம்பரம் அமர்ந்து இருப்பார். லாலு பிரசாத் நின்று கொண்டு ரெயில்வே பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு வசதியாக, ப.சிதம்பரம் அடுத்த வரிசைக்கு சென்று லாலு பிரசாத்தின் பின்னால் அமர்ந்து இருந்தார்.

* தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் மந்திரிகளுக்கான இருக்கையில் லாலு பிரசாத்துக்கு பின்னால் மந்திரிகள் ரகுவன்ஷ் பிரசாத், இ.அகமது ஆகியோர் அருகே அமர்ந்து இருந்தார்.

* கனிமொழி எம்.பி., சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏராளமான மேல்-சபை உறுப்பினர்கள் எம்.பி.க்களுக்கான காலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்தனர்.

* சில எம்.பி.க்கள் ரெயில்வே பட்ஜெட் உரை மொழி பெயர்ப்பு முறை சரியாக இயங்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனே லாலு பிரசாத், தான் மொழி பெயர்ப்பு செய்வதாக கூறி சில இந்தி வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார்.

———————————————————————————————————————————————————————–


சென்னை-திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்
வாரம் ஒருமுறை இயக்கப்படும்

புதுடெல்லி, பிப்.27-

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகமாகிறது. இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படும்.

ஏழைகள் ரதம்

பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய மந்திரி லாலு பிரசாத், 53 புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், 16 ரெயில்களை நீட்டிப்பு செய்யவும், 11 ரெயில்களின் சேவையை அதிகரிக்கவும் ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.

இது தவிர, 10 ஏழைகள் ரதம் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதில் பெங்களூர்யஷ்வந்த்பூர்-புதுச்சேரி மற்றும் பெங்களூர்-கொச்சுவேலி ஆகிய இரண்டு ரெயில்கள் அடங்கும். இவை இரண்டும் வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும்.

புதிதாக அறிமுகமாக இருக்கும் சில ரெயில்களின் விபரங்கள்:-

* சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* காசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* புத்த கயா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்)

* சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)

* சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(விருத்தாசலம் வழியாக இயக்கப்படும்)

* மதுரை-தென்காசி பாசஞ்சர் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு இயக்கப்படும்)

* விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்த பிறகு இயக்கப்படும்)

* திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (தினசரி)

* பெங்களூர் யஷ்வந்த்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* நியு திப்ருகர் டவுண்-பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

நீட்டிப்பு செய்யப்பட்ட சில ரெயில்கள்

* பெங்களூர்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் வரை

* சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி நிலையம் வரை

* மதுரை-மன்மாட் (மராட்டியம்) எக்ஸ்பிரஸ் ரெயில், முறையே ராமேசுவரம் வரை ஒரு புறமும் வாக்காய் (குஜராத்) வரை மறுபுறமும்

* கோயம்புத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மயிலாடுதுறை வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)

* பெங்களூர்-சேலம் பாசஞ்சர் ரெயில், நாகூர் வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)

* தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர் வரை

இது தவிர, டெல்லி நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் இருமுறைக்கு பதிலாக வாரம் மூன்று முறை இயக்கப்படும்.

———————————————————————————————————————————————————————–

பயணிகளுக்கு புதிய சலுகைகள்
60 வயதுக்கு மேல் பெண்களுக்கு பாதி கட்டணம்
சென்னை – திருச்செந்தூர் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்
மாணவ- மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்
லாலுபிரசாத் தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில்
கட்டணம் குறைப்பு


பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கலë செய்து பேசிய லாலு பிரசாத், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

புதுடெல்லி, பிப்.27-

2008-2009-ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை அந்த இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி லாலு பிரசாத் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும்.

சலுகைகள்

கடந்த 4 பட்ஜெட்களை போலவே, இந்த பட்ஜெட்டிலும் அவர் பயணிகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்கு பதிலாக, பயணிகளுக்கு கட்டண சலுகைகளை அறிவித்தார். புதிய ரெயில்கள், ரெயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கட்டணம் குறைப்பு

குளு குளு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 7 சதவீதம் குறைக்கப்படுகிறது.

குளு குளு வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.

பயணிகள் ரெயில், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது.

50 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட் கட்டணத்துக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். 50 ரூபாய்க்கு குறைவான கட்டணங்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு ரூபாய், கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படும்.

கூடுதல் படுக்கை வசதி

கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்பதிவு பெட்டிகளில் கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது. இந்த பெட்டிகளில், படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதே, இதற்கு காரணம்.

படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை, பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில், இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72-ல் இருந்து 81 ஆக உயர்ந்துள்ளது. குளு குளு வசதி கொண்ட மூன்றடுக்கு பெட்டிகளில் படுக்கைகள், 64-ல் இருந்து 72 ஆகவும், குளு குளு வசதி கொண்ட உட்கார்ந்து பயணம் செய்யும் (சேர் கார்) பெட்டிகளில் இருக்கைகள் 67-ல் இருந்து 102 ஆகவும் உயர்ந்துள்ளன. எனவே, இந்த பெட்டிகள் அனைத்திலும், 2 சதவீத கட்டண குறைப்பு அளிக்கப்படுகிறது.

ஆனால், குளு குளு வசதி கொண்ட பெட்டிகளில் கட்டண குறைப்பு என்பது, மக்கள் அதிகமாக பயணிக்கும் ரெயில்களிலும், நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களிலும், சரிபாதி அளவுக்கே (50 சதவீதம்) அளிக்கப்படும்.

கல்லூரி மாணவிகளுக்கும் இலவச `சீசன் டிக்கெட்’

தற்போது, 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கும், 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கு இலவச மாதாந்திர `சீசன் டிக்கெட்’டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சலுகையை, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரையிலும் விரிவுபடுத்துவதாக லாலுபிரசாத் யாதவ் அறிவித்தார்.

முதியவர்கள்

60 வயதை தாண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து வகுப்புகளிலும் 30 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

இனிமேல், 60 வயதை தாண்டிய பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும். 60 வயதை தாண்டிய ஆண்களுக்கு 30 சதவீத கட்டண சலுகையே நீடிக்கும்.

புதிய ரெயில்கள்

53 புதிய ரெயில்கள் விடப்படும் என்று அறிவித்த லாலு பிரசாத், புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ், சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர், மதுரை-தென்காசி பாசஞ்சர் உள்பட புதிதாக 9 ரெயில்கள் விடப்படுகின்றன. தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் சில ரெயில்களின் பயண தூரமும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

எய்ட்ஸ் நோயாளிகள்

தற்போது, பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, ஆகிய விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் குளு குளு வசதி கொண்ட இரண்டடுக்கு பெட்டிகளில் `கார்டு பாஸ்’ வசதியுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த `கார்டு பாஸ்’ வசதி, அசோக் சக்ரா விருது பெற்றவர்களுக்கும் இனிமேல் அளிக்கப்படும். அத்துடன், அவர்களுடன், துணைக்கு ஒருவரும் பயணம் செய்யலாம்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையங்களுக்கு பயணம் செய்வதற்கு, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்.

பெட்ரோல், டீசலுக்கு கட்டணம் குறைப்பு

ரெயில்களில் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. நாட்டில் உபயோகப்படுத்தப்படும் 40 சதவீத பெட்ரோல், டீசல், ரெயில்கள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது. இதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 100 கி.மீ. தூரத்துக்கு பெட்ரோல், டீசலை கொண்டு செல்வதற்கான கட்டணம், டன்னுக்கு ரூ.181-ல் இருந்து ரூ.172.40 ஆக குறைக்கப்படுகிறது.

ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.1,243.60-ல் இருந்து ரூ.1,184.40 ஆக குறைக்கப்படுகிறது. 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.2,238.40-ல் இருந்து ரூ.2,131.80 ஆக குறைக்கப்படுகிறது.

தேயிலை

இந்த கட்டண குறைப்பு மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.50 கோடி மிச்சம் ஆகும். இதனால் சாலை வழியாக பெட்ரோல், டீசலை கொண்டு செல்வது குறையும் என்று ரெயில்வே அமைச்சகம் நம்புகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை குறையாது.

சாம்பல் கழிவை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 14 சதவீதம் குறைக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தேயிலை, நிலக்கரி, பாக்சைட் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 6 சதவீதம் குறைக்கப்படுகிறது.

ரூ.52,700 கோடி திரட்ட இலக்கு

நடப்பு (2007-2008) நிதி ஆண்டில் 79 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வரும் (2008-2009) நிதிஆண்டில், அதைவிட 6 கோடி டன் சரக்குகளை கூடுதலாக கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு கட்டணங்கள் மூலம் நடப்பு நிதிஆண்டில் ரூ.47 ஆயிரத்து 743 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரும் நிதி ஆண்டில் ரூ.52 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு லாலுபிரசாத் யாதவ், தனது ரெயில்வே பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.

2 மணி நேரம் வாசித்தார்

லாலுபிரசாத் யாதவ், மொத்தம் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் தனது உரையை தொடங்கும்போதே, தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி தொடங்கினார். இருப்பினும், தங்களது மாநிலத்துக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

ரெயில்வே பாதுகாப்பு படை

ரெயில்வே பாதுகாப்பு படையில் 5,700 போலீசார் மற்றும் 993 சப்-இன்ஸ்பெக்டர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அந்த இடங்கள் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.

இதில் போலீசார் பதவியில் 5 சதவீதமும், சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

———————————————————————————————————————————————————————–

`தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத் தரும்’
ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரிகள் கருத்து


புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வேயில் தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத்தரும் என்று இடதுசாரி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரவேற்பும் எதிர்ப்பும்

லாலு பிரசாத்தின் ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரி தலைவர்கள் வரவேற்பும், கண்டனமும் தெரிவித்து இருக்கிறார்கள். பயணிகள் கட்டணத்தை குறைப்பு செய்திருப்பதையும், சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படாததையும் பாராட்டியுள்ள இடது சாரி தலைவர்கள் அதே சமயம் பட்ஜெட் தனியாருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

இது குறித்து இந்திய கம்ïனிஸ்டு கட்சி தலைவர்கள் ஏ.பி.பரதன், சமீம் பைசி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எதுவும் இல்லை

இந்த பட்ஜெட்டால் உள்ளூர் மற்றும் புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற விஷயங்கள் கவலையளிக்க கூடியதாகும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் ரெயில்வே இலாகா செயல்பட்டாலும், ரெயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சம் இடங்களை நிரப்புவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.

ரெயில்வேயின் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், அசவுகரிய குறைவுகள் பற்றி பட்ஜெட்டில் முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை.

அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவையும் கூட தனியார் வசம்தான் ஒப்படைக்கப்பட்டவையில்தான் அடங்குகின்றன. கடந்த 2 வருடங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட வசதிகளை திரும்ப அளிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.

மேற்கண்டவாறு அவர்கள் இருவரும் கூறினார்கள்.

பேரழிவை தரும்

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான பிருந்தா கரத் கூறும்போது, `இந்த பட்ஜெட்டில் தனியார் துறையின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது பேரழிவைத் தரும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் உள்ள நிலையில் அந்தப் பணத்தை லாலு பிரசாத் ரெயில்வேயின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் முதலீடு செய்திருக்கலாம். இந்த தொகையை சாதாரண பயணிகளுக்கு திரும்பச் கிடைக்கச் செய்திருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.

சிதம்பரம் பட்ஜெட்

இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அவைத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறும்போது, `மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும் நிலையில் சரக்கு ரெயில்களில் ஏற்றுவது, இறக்குவது போன்ற சேவைகளையும், சரக்குப் பெட்டிகளை பராமரிப்பதை குத்தகைக்கு விடுவதும் எந்தவிதத்தில் நியாயம்?… இது லாலு பிரசாத் யாதவின் பட்ஜெட்டாக தெரியவில்லை. நிச்சயமாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்டதுதான். வசதி படைத்தவர்களுக்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வோருக்கும், மாதாந்திர சீசன் டிக்கெட்தாரர்களுக்கும் சலுகைகள் இதில் அளிக்கப்படவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

ரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் 7 சதவீதம் குறைப்பு.

* ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டணம் 4 சதவீதம் குறைப்பு.

* புறநகர் ரெயில்கள் நீங்கலாக மற்ற ரெயில்களில் 2-ம் வகுப்பில் பயணம் செய்ய ரூ.50 வரையிலான கட்டணத்துக்கு 1 ரூபாய் கழிவு.

* மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.

* கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2-ம் வகுப்பு கட்டணம் கூடுதலாக 2 சதவீதம் குறைப்பு.

* 60 வயதை கடந்த பெண்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்வு.

* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை.

* பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இலவச மாதாந்திர சீசன் டிக்கெட்.

* பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.

* 53 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகம்.

* புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகம்.

* மும்பை புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 300 மின்சார ரெயில் சேவை.

* சென்னை பெரம்பூர், ஜமால்பூர், லில்லுவா, அஜ்மீர் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.

* விரைவு வண்டிகளில் எவர்சில்வர் தகடுகளாலான நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும்.

* கேரளாவில் புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்.

* ரெயில்வேயின் ஆண்டு திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி.

* ரூ.1,730 கோடி செலவில் புதிய ரெயில்பாதைகள் அமைக்கப்படும்.

* அகலபாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.2,489 கோடி ஒதுக்கீடு.

* மின்மயமாக்கல் திட்டத்துக்கு ரூ.626 கோடி ஒதுக்கீடு.

* ரெயில் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.852 கோடி ஒதுக்கீடு.

* சரக்கு போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.52,700 கோடி. பயணிகள் போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.21,681 கோடி.

* 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.

———————————————————————————————————————————————————————–

கட்டண குறைப்பு எவ்வளவு?

ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள படி புறநகர் அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைக்கப்பட்டுள்ள 2-வது வகுப்பு கட்டண விகிதம் கிலோ மீட்டர் வாரியாக வருமாறு:-

தூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு

100 – ரூ.33 – ரூ.32 – ரூ.1

200 – ரூ.55 – ரூ.53 – ரூ.2

300 – ரூ.76 – ரூ.73 – ரூ.3

400 – ரூ.95 – ரூ.91 – ரூ.4

500 – ரூ.114 – ரூ.109 – ரூ.5

700 – ரூ.146 – ரூ.139 – ரூ.7

900 – ரூ.173 – ரூ.165 – ரூ.8

குறிப்பு: மேற்கண்ட கட்டணங்களில் முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவை சேர்க்கப்படவில்லை.

———————————————————————————————————————————————————————–

ரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இல்லை
செல்போன் மூலமே, டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இருக்காது என்றும், செல்போன் மூலம் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வாங்கலாம் என்றும் ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் தெரிவித்துள்ளார்.

நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அவர் இது பற்றி கூறியதாவது:-

நீண்ட வரிசை இருக்காது

இன்னும் 2 ஆண்டுகளில் ரெயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட கிï வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமையை முற்றிலும் அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2010-ம் ஆண்டில் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படாது.

பயணிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே கம்ப்ïட்டர், செல்போன், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டர்கள், தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் ஆகியவை மூலம் எளிதாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

எந்திரங்கள் அதிகரிப்பு

முன்பதிவு இல்லாமல் டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அத்துடன் செல்போன்கள் மூலமும் முன்பதிவு டிக்கெட்டுகளையும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் 250-லிருந்து 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

இப்போதுள்ள ஜன்சதாரன் டிக்கெட் வசதி அனைத்து மண்டலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருவார்கள். அத்துடன் மக்களும் எளிதில் டிக்கெட் பெற முடியும்.

கம்ப்ïட்டர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோர் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் பெற முடியாது. இனிமேல் அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வேண்டுமானாலும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் `இ-டிக்கெட்’ பெருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிக்கும்.

இவ்வாறு லாலுபிரசாத் தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

Posted in Avadi, billions, Biz, Budget, Business, Congress, Economy, Fares, Finance, Freight, Govt, ICF, Income, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Loss, Manmohan, Perambur, Profits, Rail, Railway, Railways, Sonia, Tamil, Trains, Travel, Traveler, Visit, Visitor | 1 Comment »

Railway Budget: India to invest billions in rail revamp – Fares slashed, freight untouched as profits rise

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

சென்ற வருடம்:
Laloo Prasad Yadav – Railway Budget 2007-08: Information, Analysis, Schemes & Opinion « Tamil News
Double decker trains and ‘Own Your Coach’ schemes in new budget likely « Tamil News

2008022752331701.jpgஇந்திய ரயில்வே பட்ஜெட்

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட, ரயில்வே பட்ஜெட்டில், ரயில் பயணிகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பெண்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

2008-2009 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் அவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஐந்து சதம் குறைக்கப்பட்டுள்ளது. ஐம்பது ரூபாய் கட்டணம் வரை உளள இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு ஒரு ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

லாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே
லாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே

குறைந்த கட்டண விமான சேவையால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்கும் வகையில், குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஏழு சதவீதமும், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணிகளுக்கான கட்டணம் நான்கு சதவீதமும் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், முக்கிய ரயில்களுக்கும், நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த சலுகை 50 சதம் மட்டுமே கிடைக்கும்.

மூத்த பெண் குடிமக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சத ரயில் கட்டண சலுகை, இனி 50 சதமாக அதிகரிக்கப்படுகிறது. மூத்த ஆண் குடிமக்களுக்கான சலுகை தொடர்ந்து 30 சதமாக இருக்கும்.

12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர இலவச சீசன் டிக்கெட், இனி மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையிலும் வழங்கப்படும்.

ஏழைகள் ரதம் என்று அழைக்கப்படும், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட மேலும் 10 புதிய ரயில்களும், 53 புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.

 

எப்போதும் இல்லாத அளவாக, இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு 37,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் தொகை வழங்குவதற்கு முன்னதாக, ரயில்வேயின் வருவாய் உபரி 25 ஆயிரம் கோடியாக இருப்பதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.

ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் கவுன்டர்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக அதிகரிப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொபைல் தொலைபேசி மூலமாகவும் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டுவருவதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக செல்லும்போது, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 50 சதம் கட்டண சலுகை வழங்கப்படும்.

2008022752680101.jpgஆள் இல்லாத ரயில்வே சந்திப்புக்களில் ஆட்களை நியமிக்க ரயில்வே முடிவு செய்துள்ள நிலையில், அந்தப் பணிகளுக்கு, உரிமம் பெற்ற ரயில்வே போர்ட்டர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகுதி அடிப்படையில் ஒரு தரம் மட்டுமே அமல்படுத்தும் வகையில் இது இருக்கும் என்றும் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.

ரயில் பயணிகளுக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்
உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்

லாலு பிரசாத் யாதவ் பட்ஜெட் தாக்கல் செய்த அதே நேரத்தில், பாஜக, சமாஜவாதி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது என்று ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இந்த பட்ஜெட்டில், சாதாரண மக்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டினார்

ரயில்வே பட்ஜெட்டின் முக்கியத்துவம் குறித்தும், இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் பலன்கள் குறித்தும், ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு செய்தியாளர்களிடம் விளக்கினார். நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 53 புதிய ரயில்களில் தமிழகத்துக்கு 12 ரயில்கள் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வேலு தெரிவித்தார்.


தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள்2008022752530601.jpgபுது தில்லி, பிப். 26: தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.

ரயில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மேம்பட்ட வசதி அளிக்கும் வகையில் 10 ஏழை ரத ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:

ஏழைகளுக்கான குளிர்சாதன வசதி கொண்ட 10 ரயில்களும், 53 ரயில்களும் புதியதாக அறிமுகப்படும். புதியதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஏழை ரத ரயில்களில் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி ரயில், பெங்களூர்-கொச்சுவேலி ரயில் ஆகியவையும் அடங்கும். இந்த ரயில்கள் இரண்டும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும்.

2008022752600701.jpgபுதிய ரயில்கள் விவரம்: 1.சென்னை-திருச்செந்தூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

2.வாரணாசி-ராமேஸ்வரம் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

3.கயா-சென்னை விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

4.சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் (தினசரி) (அகலப்பாதை பணிகள் முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை காரைக்குடி வழியாக இயக்கப்படும்)

5.சென்னை-திருச்சி விரைவு ரயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)

6.சென்னை-சேலம் விரைவு ரயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும்)

7.மதுரை-தென்காசி பாசஞ்சர் (தினசரி)

8. (அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு இயக்கப்படும்) 8.விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் (தினசரி)

9.திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் (தினசரி)

2008022756941201.jpg10.கொச்சி வேலி-டேராடூன் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

11.அமிர்தசரஸ்-கொச்சிவேலி விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

12.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

13.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில்( வாரம் ஒரு முறை)

14.நியூ திப்ருகர் டவுன்-யஷ்வந்தபூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

நீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: 1.பெங்களூர்-கோயமுத்தூர் விரைவு ரயில் எர்ணாகுளம் வரை

2.சென்னை-பெங்களூர் விரைவு ரயில் ஸ்ரீ சத்தியசாயி பிரசாந்தி நிலையம் வரை

3.மதுரை-மன்மாட் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை ஒருபுறமும், ஒக்கா வரை மறுபுறமும்

4.கோயமுத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி விரைவு ரயில் மயிலாடுதுறை வரை ( அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)

5.பெங்களூர்-சேலம் பாசஞ்சர் நாகூர் வரை (அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)

6.தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் திருச்செந்தூர் வரை

நிஜாமுதின்-திருவனந்தபுரம் ராஜ்தானி விரைவு ரயில் வாரத்திற்கு இருமுறைக்கு பதிலாக மூன்று முறை இயக்கப்படும்.
—————————————————————————————————————————————-
பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம்: லாலு

புதுதில்லி, பிப். 26: ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.

பயணிகளின் லக்கேஜ்களை சோதனையிட நவீன ஸ்கேனிங் முறை முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

022708_07.jpgபயங்கரவாதிகள் மற்றும் நக்ஸலைட்டுகளின் தாக்குதலை முறியடிக்க ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் ஒன்றை ரயில்வே அமல்படுத்த உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி, உரிய நிதியும் ஒதுக்கப்படும்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 5700 காவலர் பணியிடங்களும் 993 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.

இதில் காவலர் பணியிடங்களில் 5 சதவீதமும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
—————————————————————————————————————————————-
என்னுடைய கணவர் தான் “பெஸ்ட்’

பாட்னா, பிப். 26: “இதுவரை ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்களிலேயே என்னுடைய கணவர்தான் பெஸ்ட்’ என்று மனதாரப் பாராட்டினார் ராப்ரி தேவி. பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தனது மகள்கள், மாப்பிள்ளை ஆகியோருடன் பார்வையாளர் மாடத்திலிருந்து, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைப் பெருமிதத்துடனும் பூரிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்.

2008022757960101.jpg“என்னுடைய கணவரை பிகாரின் ரயில்வே அமைச்சர் என்றே மட்டம்தட்டிப் பேசுகின்றனர்; 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே அதிக வருவாயை ரயில்வேக்கு பெற்றுத்தந்து மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்.

நஷ்டத்தில் நடந்துகொண்டிருந்த ரயில்வேதுறையை லாபகரமாக்கிக் காட்டியிருக்கிறார்.

ரயில்வே வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5% இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். பெண் பயணிகள் பயணிக்க இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.

ரயில் பெட்டிகளில் வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் நல்லவிதமாக பிரசவிக்க, போதிய மருத்துவ உதவிகள் செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.

மாணவியர்கள் மேல்படிப்பு படிக்க உதவியாக ரயில் கட்டணச் சலுகை அளித்திருப்பதும், வேலைவாய்ப்புக்காக போட்டித் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் இலவசமாக ரயிலில் செல்லலாம் என்று அறிவித்திருப்பதும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள்’ என்றார் ராப்ரி தேவி.

—————————————————————————————————————————————-
ரூ.25 ஆயிரம் கோடி லாபம்

புதுதில்லி, பிப். 26: 2007-08 ஆம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.

வரும் ஆண்டில் ரயில்வே சரக்கு போக்குவரத்து இலக்கு 850 மில்லியன் டன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதன் அளவு 790 மில்லியன் டன்களாகும்.

அடுத்த நிதியாண்டில் சரக்கு கட்டண வருமானம் 10.38 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிகர சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.52,700 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

பயணிகள் கட்டணம் குறைப்பு மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு கட்டணம் குறைப்பு போன்றவை அறிவிக்கப்பட்டபோதிலும் அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர வருமானம் 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர போக்குவரத்து வருமானம் ரூ.81,801 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு வருமானத்தை விட இது ரூ.9146 கோடி அதிகமாகும்.

பயணிகள் கட்டண வருவாய் எட்டு சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.21,681 கோடியாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் இதன் அளவு ரூ.20,075 கோடியாகும்.

ரூ.2.50 லட்சம் கோடி

முதலீடு

ரயில்வே நிர்வாகத்தை நவீனமயமாக்கவும் ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,50,000 கோடியை முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகையை தனது சொந்த நிதியிலிருந்து ரயில்வே நிர்வாகம் முதலீடு செய்ய இயலாது.

எனவே ரயில் நிர்வாகம்-தனியார் பங்களிப்பு முறையில் இத்திட்டத்துக்கான முதலீடு அமையும். முதல்கட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய முறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும்.

11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 36 ஆயிரம் ரயில் பெட்டிகளில் நவீன “பசுமை கழிவறைகள்’ ரூ.4 ஆயிரம் கோடி செலவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் 15 ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.

ரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை அறிவிப்பதற்காக ரயில் நிலையங்களில் எல்.சி.டி. திரை நிறுவப்படும்.

இணையதளம் மூலம் பெறப்படும் “இ-டிக்கெட்களிலும்’ காத்திருப்போர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். செல்போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.

—————————————————————————————————————————————-
ரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை!

ரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை!

புது தில்லி, பிப். 26: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் திறமையான பேச்சாளர். எதிரிகளைக்கூட தனது நகைச்சுவையான பேச்சால் சிரிக்க வைத்துவிடுவார். இந்த ரயில்வே பட்ஜெட்டிலும் அது தொடர்ந்தது.

நடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்த “”சக்-தே இந்தியா”வுக்குக் கிடைத்த வெற்றியைக் கவனித்து வந்த லாலு, அதே சுலோகத்தைக் கையாண்டு கலகலப்பு ஊட்டினார். “சக்தே ரயில்வே’ என்று அவர் அறிவித்தபோது அவையே அதிர்ந்தது. தன்னுடைய துறையும் அத் திரைப்படத்தில் வரும் இந்திய ஹாக்கி அணியைப் போல, ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலுக்கு மேல் கோலாகப் போட்டு வெற்றிகளைக் குவித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அதைக் குறிப்பிடும்போது உருது மொழியில் முதலில் கவிதை வாசித்தார். உருது தெரியாத உறுப்பினர்களுக்கும் புரியட்டும் என்று அதை தனக்கே உரித்தான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவருடைய தனித்துவமான ஆங்கிலம், கவிதைக்கு மேலும் நகைச்சுவையை ஊட்டியது. அதுவும் புரியவில்லை என்றதும் ஹிந்தியில் அதை விளக்கி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

“”சப்கா ரஹே ஹை ஹம்நே கஜாப் கியா ஹை

கர்தோன்கா முனாஃபா ஹர் ஏக் ஷாம் தியா ஹை

பால் சலோன் மே அப் தேகா பெüதா ஜோ லகாயா ஹை

சேவா கா ஸ்மரண்கா ஹம்நே ஃபர்ஸ் நிபாயா ஹை”

இதுதான் அந்தக் கவிதை.

—————————————————————————————————————————————-
முக்கிய அம்சங்கள்

ரயிலில் அனைத்து வகுப்புகளிலும் கட்டண சலுகை

சரக்கு கட்டணம் உயர்வு இல்லை

பெண்கள் மற்றும் வயோதிகர்களுக்கு கூடுதல் வசதிகள்

இரட்டை ரயில் பாதைகளுக்கு முன்னுரிமை

தாய்சேய் நல விரைவு ரயில் தொடங்கப்படும்

முக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்

எய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை

குளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 ரயில்கள் அறிமுகம். மேலும் 53 புதிய ரயில்கள் அறிமுகம்.

வடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்களில் சிறப்பு கவனம்

காமன்வெல்த் போட்டிகளுக்காக தில்லி-புணே இடையே சிறப்பு ரயில்.

ஓடும் ரயில்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு

வடகிழக்கு மாநிலங்களில் சரக்குகளை கொண்டு செல்ல

சதவீத கட்டண சலுகை

—————————————————————————————————————————————-
லாலுவின் ஐந்தாவது பட்ஜெட்: பெட்டி பெட்டியாக சலுகைகள்

உயர்வகுப்பு, 2-ம் வகுப்பு கட்டணம் குறைப்பு
சரக்கு கட்டண உயர்வு இல்லை
பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச பாஸ்

புதுதில்லி, பிப். 26: நீண்டதூர ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரயில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று உயர்வகுப்பு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு சிறப்பு கட்டணச் சலுகை 6 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரயில்வே துறை ரூ.25 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது சாதனை அளவாகும்.

2008-09 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது ரயில்வே பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிறுவனங்களின் குறைந்த கட்டணத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்க கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் லாலு பிரசாத் சாதனை படைத்து வருகிறார்.

புறநகர் அல்லாத ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான ரூ.50-க்கு உள்பட்ட கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.

புறநகர் அல்லாத சாதாரண, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.50-க்கும் அதிகமான இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஏ.சி. முதல்வகுப்பு பயணிகள் கட்டணத்தில் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏ.சி. இரண்டடுக்கு பயணிகள் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகுப்புகளிலும் மூதாட்டிகளுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதேசமயம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் முதியவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 30 சதவீத கட்டணச் சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும்.

பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கும் தற்போது இலவச மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இனி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையும் மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையும் இலவச பாஸ் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

53 ஜோடி புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

குளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.

தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே இயங்கிவரும் 16 ரயில்கள் நீண்டதூரம் நீடிக்கப்படும்.

2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

ரூ.1730 கோடி செலவில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரூ.2489 கோடி செலவில் அகலப்பாதை மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். ரூ.626 கோடி செலவில் ரயில்பாதைகள் மின்மயமாகும்.

பயணிகளுக்கு ரூ.852 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்துதரப்படும்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.

பெண் பயணிகள் பயணம் செய்ய இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.

எய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.

தாய்-சேய் நல சுகாதார விரைவு ரயில் ஒன்று விரைவில் இயக்கப்படும். 7 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் தாய்க்கும் சேய்க்கும் மருத்துவ சேவை செய்வதற்கான வசதிகள் இடம் பெற்றிருக்கும்.

“இது எனது கடைசி பட்ஜெட் அல்ல’

இது எனது கடைசி பட்ஜெட் அல்ல என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.

தங்கள் பகுதிக்கு மேலும் பல ரயில் திட்டங்கள் தேவை என்று கோரிய உறுப்பினர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், இது எனது கடைசி பட்ஜெட் என்று நினைத்துவிடக் கூடாது. அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். இந்திய ரயில்வே வரலாறு காணாத அளவில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எட்டி உள்ளது. ரயில்வே போக்குவரத்து மூலம் இந்த ஆண்டு ரூ. 72,755 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அடுத்த ஆண்டு வருமான இலக்கு ரூ. 82,000 கோடி என்றார் லாலு.

—————————————————————————————————————————————-
“ரயில்வே 2025′ தொலைநோக்கு அறிக்கை: 6 மாதத்தில் தயாராகும்-லாலு

புதுதில்லி, பிப். 26: வரும் 2025-ல் ரயில்வேயின் திட்டங்கள் என்னென்ன என்பதை தற்போதே விவரிக்கும் “ரயில்வே 2025′ அறிக்கை இன்னும் 6 மாதத்தில் தயாராகி விடும் என அத் துறைக்கான அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

ரயில்வே பட்ஜெட்டில் அவர் கூறியது:

17 ஆண்டுகளுக்குப் பிறகு (2025-ல்) இந்திய ரயில்வேயின் திட்டங்கள், வளர்ச்சிகள், முதலீடு ஆகியன குறித்து தற்போதே தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கை இன்னும் 6 மாதத்தில் நிறைவுபெறும்.

எதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் பல்வேறு புதிய யோசனைகள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கும், பணியாளர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

—————————————————————————————————————————————-
வட்டார நோக்கிலான, பாரபட்சமான பட்ஜெட்: இடதுசாரிகள், பாஜக, சமாஜவாதி
புது தில்லி, பிப். 26: பிகாரையும் தமிழ்நாட்டையும் மட்டும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட குறுகிய வட்டார நோக்கிலான, பாரபட்சமான ரயில்வே பட்ஜெட் என்று இடதுசாரிகள், பாரதிய ஜனதா கூட்டணியினர், சமாஜவாதி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கண்டித்தனர்.

மக்களவை பொதுத் தேர்தலின்போது மக்களுடைய வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்று கட்டண உயர்வு இல்லாமல் போடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களுக்கு நல்ல திட்டங்கள் ஏதும் இல்லாததால், மிகப்பெரிய அரசியல் விபத்தை (தேர்தலில் தோல்வி) சந்திக்கப் போகிற பட்ஜெட் இது என்று அவர்கள் சபித்தனர்.

தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னதாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிவிட்டது என்று சாடினார் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சித் தலைவர் மோகன் சிங்.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்தப் பலனும் போய்விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக போடப்பட்ட பாரபட்சமான, குறுகிய நோக்குடைய பட்ஜெட் இது என்று சாடினார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.

இந்த பட்ஜெட்டை ப. சிதம்பரம் போட்டாரா, லாலு பிரசாத் போட்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று பூடகமாகத் தாக்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா.

“ஏ.சி. வகுப்புகளில் பயணிக்கும் பணக்காரர்களுக்கும், மத்திய தர வர்க்கத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவர்களுக்கும் சலுகைகளை அள்ளித்தந்துள்ள பட்ஜெட் இது.

மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டு புறநகர் ரயில்களில் செல்லும் ஏழை மக்களுக்கும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சலுகைகள் ஏதும் இல்லாத பட்ஜெட் இது’ என்றார் குருதாஸ் தாஸ் குப்தா.

“குறுகிய வட்டார நோக்கில் போடப்பட்ட பட்ஜெட்; எல்லா ரயில்களும் பாட்னாவில் தொடங்கி சென்னையில் முடிகின்றன.

நாட்டின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுடைய கட்சிக்கு செல்வாக்குள்ள இடங்களுக்கு மட்டும் பயன்கள் கிடைக்குமாறு பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்’ என்று சாடினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதாகர் ரெட்டி.

குஜராத், உத்தரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பிஜு ஜனதா தள கட்சியின் பிரஜ்கிஷோர் மொஹந்தி கூறியதை அப்படியே ஆமோதித்தார் சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி).

மக்களவையின் அனைத்து தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பி ஆட்சேபித்ததும், வெளி நடப்பு செய்ததுமே இந்த பட்ஜெட் எவ்வளவு குறுகிய அரசியல் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது என்று பொருமினார் மக்களவை பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் நடுநிலையாக இருந்து பயன்பட வேண்டிய பட்ஜெட் இப்படி வோட்டுக்காக சீரழிக்கப்பட்டிருப்பது வேதனையைத்தான் தருகிறது என்றும் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார்.

மக்களவை பொதுத் தேர்தலையொட்டி தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, ஏதும் இல்லாமல் பெருத்த ஏமாற்றமாக முடிந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்தார் மனோகர் ஜோஷி (சிவ சேனை).

தனியார் மயத்துக்கு அச்சாரம்: “லாலு பிரசாத் இதைப்போல இன்னும் 5 பட்ஜெட்டுகளைப் போட்டால், அதற்குப் பிறகு ரயில்வேக்கு என்று பட்ஜெட் போட வேண்டிய அவசியமே இல்லாமல் எல்லாம் தனியார் கைக்குப் போய்விடும். ரயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும்போது, அந்தப் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடாமல் பட்ஜெட்டைத் தயாரித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தனியார் -அரசு நிறுவன கூட்டு என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார்வசம் பெரிய அளவில் ஒப்படைப்பதற்கான தொடக்க கட்ட வேலைகளை அறிவித்திருக்கிறார் லாலு பிரசாத்’ என்று மோகன் சிங் (சமாஜவாதி), குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் கண்டித்தனர்.

காங்கிரஸ் பாராட்டு: கட்டணத்தில் 5% குறைத்து சாமானியர்களுக்குச் சலுகை அளித்திருக்கிறார் லாலு பிரசாத் என்று பாராட்டினார் ஏக்நாத் கெய்க்வாட் (காங்கிரஸ்). மும்பை மாநகரைச் சேர்ந்த புறநகர் ரயில் பயணிகளின் நலனுக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பாராட்டினார்.

—————————————————————————————————————————————-

டிக்கெட் மையங்களில் நெரிசலை தவிர்க்க 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்கள்

புதுதில்லி, பிப். 26: வரும் 2010-க்குள் ரயில்வே டிக்கெட் மையங்களின் பயணிகளின் நெரிசலை தவிர்க்க புதிதாக 5,750 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பது:

ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க தற்போது நாடு முழுவதும் 250 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை வரும் 2 ஆண்டுகளுக்குள் (2010-க்குள்) 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் மையங்களில் கூட்டம் குறைந்து விடும். மேலும் அலுவலகம், வீடு ஆகியவற்றில் இருந்தவாறே செல்போன் மூலமாக டிக்கெட் பதிவு செய்யும் முறையும் தீவிரமாக செயல்படுத்த புதிதாக 12 ஆயிரம் மையங்கள் திறக்கப்படும் எனவும் லாலு அறிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————-
ரயில் கட்டணச் சலுகை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவுமா?

சென்னை, பிப். 26: எய்ட்ஸ் மருந்து வாங்க 50 சதவீத ரயில் கட்டணச் சலுகை அறிவிப்பு உண்மையில் பலன் தருமா என எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்து (ஏ.ஆர்.வி.) மையங்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

“”இச் சலுகையை ரயில்வே துறை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் தங்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதை நோயாளியோ அல்லது அவர்களுக்கு உதவும் நண்பர்களோ பகிரங்கப்படுத்த விரும்ப மாட்டார்கள். எனவே சலுகையை நடைமுறைப்படுத்தும்போது இந்த விஷயத்தை ரயில்வே துறை கருத்தில் கொள்வது அவசியம்” என்று எச்ஐவி பாதித்த பெண்களுக்கு உதவும் அமைப்பின் (“எச்ஐவி பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்’) தலைவர் டி. பத்மாவதி கூறினார்.

காச நோயாளிகள், ரத்தப் புற்று நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் உள்ளிட்டோருக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி 50 முதல் 75 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே துறை அளிக்கிறது.

இந் நிலையில் மருந்து வாங்கும் மையங்களுக்குச் சென்றால் மட்டுமே எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சலுகை என அறிவித்திருப்பதை மாற்றி எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சலுகை அளிக்க வேண்டும் என சில தன்னார்வ அமைப்பினர் கூறினர்.

ஊக்கம் அளிக்கும்: “”இருப்பிடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு மருந்து வாங்கச் செல்லும் ஏழை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த கட்டணச் சலுகை பலன் அளிக்கும். இதன் மூலம் அவர்களது ஒரு நாள் தினக் கூலி இழப்பு சரிக்கட்டப்படும்.

மருந்து வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற ஊக்கத்தை இச் சலுகை தரும். எனவே இந்தச் சலுகை வரவேற்கத்தக்கது. நோயாளிகளின் ரகசியத் தன்மையை காக்கும் வழிமுறைகளை உருவாக்குவது ரயில்வே துறைக்கு கடினமாக இருக்காது” என்றார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு.

—————————————————————————————————————————————-

AN EYE TO THE HUSTINGS

CUTS

FREIGHT

5% Petrol/diesel
14% Fly ash
6% Traffic to north-east
5% 2nd class fares for tickets >Rs 50
Re 1 Fares for tickets <Rs 50
7% AC 1st class
4% AC 2nd class
The Pay Commission’s impact
Operating ratio
07-08* 76.3
08-09** 81.4

Cash surplus

07-08* Rs 25,065 cr
08-09** Rs 24,782 cr
* Revised estimate ** Budget Estimate
 
 

Posted in Avadi, billions, Biz, Budget, Business, Congress, Economy, Fares, Finance, Freight, Govt, ICF, Income, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Loss, Manmohan, Perambur, Profits, Rail, Railway, Railways, Sonia, Tamil, Trains, Travel, Traveler, Visit, Visitor | 1 Comment »

Feb 27: Eezham, Sri Lanka, LTTE, Dead, War, Rajapakse – Updates & News

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

மணலாறு பகுதியில் கொல்லப்பட்ட 14 விடுதலைப் புலிகளின் சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பு

மணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து இராணுவத்தால் மீட்கப்பட்டதாக கூறப்படும் பதுங்குகுழி ஒன்று

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மணலாறு பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதல்களின் போது கொல்லப்பட்ட சுமார் 14 விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்கள் இன்று அநுராதபுரம் வைத்தியசாலை அதிகாரிகளினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இராணுவ வட்டாரங்கள், கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் மணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை நோக்கி முன்னேறிய இராணுவத்தினர் அங்கிருந்த அவர்களது பாதுகாப்பு நிலைகள் சிலவற்றை அழித்திருப்பதோடு, இதன்போது ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் எண்மரது சடங்களையும், ஆயுதத் தளபாடங்கள் சிலைவற்றையும் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து பி.பி.சியிடம் கருத்துவெளியிட்ட அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார, வெள்ளிக்கிழமை மாலை ஆறு புலி உறுப்பினர்களது சடலங்களும், சனிக்கிழமை இரவு மேலும் எட்டு புலி உறுப்பினர்களது சடலங்களும், இராணுவத்தினரால் அநுராதபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனையின் பின்னர் இன்றைய தினம் இந்த 14 சடலங்களும் விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைவிட நேற்றைய தின மோதல்களின்போது கொல்லப்பட்ட மேலும் ஏழு விடுதலைப்புலிகளின் சடலங்கள் அநுராதபுர வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அவை பிரேதப் பரிசோதனையின் பின்னர் நாளையோ அல்லது நாளை மறுதினமோ விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிக்கப்படுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இடையில் இன்று மாலை அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருக்கிறது.

அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படும் இன்றைய இந்த சந்திப்பின்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத்திட்டம், மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலக உயர் அதிகாரியொருவர் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அத்துடன் இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றினைக் காண்பதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு தனது கட்சி ஆதரவினை வழங்குமென எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் உறுதி கூறியதாகவும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதற்கும் அக்கட்சி ஆதரவினை வழங்கும் என்று அவர் தெரிவித்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்புக்கு முன்னர் இது குறித்துக் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவி கருணாநாயக்க, இந்த மாத முற்பகுதியில் பாராளுமன்ற வளவினுள் முன்னாள் ஜானாதிபதி ஆர். பிரேமதாஸவின் உருவச்சிலையின் திரைநீக்க விழாவில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டில் தற்போதுள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாட சந்திப்பொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இன்றைய இந்தச் சந்திப்பு இடம்பெறவிருந்ததாகவும் தெரிவித்தார்.


Posted in dead, Eelam, Eezham, LTTE, Rajapakse, Ranil, Sri lanka, Srilanka, War | Leave a Comment »

1.5 mn Commercial (lorry) vehicles keep off roads in Karnataka – Truckers strike enters second day

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு

நாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

வேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.

கர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்

சென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்பட மாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

எனவே, தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி
தமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

சென்னை, பிப்.24-

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.

லாரிகள் வேலைநிறுத்தம்

கர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.

இந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

பல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

மேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.

விலை உயர வாய்ப்பு

சென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-

வழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

சேலம்

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

லாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் லாரியில் கொண்டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.

இவ்வாறு சென்னகேசவன் தெரிவித்தார்.

வேலைநிறுத்தம் தொடரும்

இதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Posted in Accidents, Biz, commercial, Dangerous, dead, Death, drivers, DUI, DWI, Economy, Employment, Erode, Exports, Finance, Food, Freight, Goods, Impact, Jobs, Karnataka, Law, Limits, Lorry, Loss, Operators, Order, Parcel, Perishable, Profit, Salem, Services, Speed, Strike, Transport, Transporters, Truckers, Trucks, Vegetables | Leave a Comment »

Feb 24 – LTTE, Eezham, Batticaloa, Sri Lanka – News & Updates: BBC Tamil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

கொழும்பில் பேருந்தில் குண்டுத்தாக்குதல்: 18 பேர் காயம்

இலங்கைத் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பஸ் வண்டி ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட வெடிகுண்டு ஒன்றை விழிப்பாக இருந்த பயணி ஒருவர் கண்டறிந்து தெரியப்படுத்தியதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

பேருந்து கல்கிசை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் இருக்கைக்கு அடியில் மர்ம மூட்டை ஒன்று கிடப்பதை கண்டு பயணி ஒருவர் பேருந்தின் ஒட்டுநரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து அனைவரும் இறக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், இருந்த போதிலும் பொலிஸார் வருவதற்கு முன்பாக குண்டுவெடித்து விட்டதாக பேருந்தின் ஒட்டுநர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பயணிகள் அனைவரும் வெளியேறிவிட்டாலும் குண்டுவெடித்ததில் அருகில் நின்றிருந்தவர்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளே இக்குண்டுவெடிப்பின் காரணம் என்று இராணுவத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

 


உயிர் அச்சத்தில் வடப்பகுதி மக்கள் – பெட்டகம்

வான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்
வான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்

இராணுவ நடவடிக்கை மூலம் கிழக்கை மீட்ட இலங்கை அரசு அதே அணுகுமுறை மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க முடியும் என்று நம்புவதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதே நேரம் ஆயுதம் மூலம் தனி ஈழத்தை பெறலாம் என்ற நம்பிக்கையை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அமைதி முயற்சிகள் பின் தள்ளப்பட்டு இராணுவ நடவடக்கைகளுக்கே முன் உரிமை கொடுக்கப்படுகிறது.

தினந்தோரும் நடக்கும் மோதல்களால் தொடர்பாக இரு தரப்பும் மாறுப்டட தகவல்களைத் தந்தாலும் மோதல்களால் கடுமையாக பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதே மாறாத உண்மை உள்ளது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்ற அரசாங்கம் அவர்களைத் தோற்கடிப்பதில் வெற்றியடைந்து வருவதாகக் கூறுகின்றது.

விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை குறைக்க அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் முகாம்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அரசு கூறுகின்றது. ஆயினும் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களே இந்தத் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றார்கள்.

இந்த வான் தாக்குதல்கள் எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வருவபர்கள் தெரிவிக்கின்றார்கள்.

வடக்கே நிலவும் போர் சூழலால் மக்கள் நாளாந்தம் உயிரச்சத்துடனேயே தமது வாழ்வைக் கழித்து வருகின்றனர். இது தொடர்பாக நமது வவூனியா செய்தியளர் மாணிக்கவாசகம் தயாரித்து அனுப்பிய பெட்டகத்தை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கில் விமானப்படை தாக்குதல்

இலங்கை விமானப்படையின் விமானம்
இலங்கை விமானப்படையின் விமானம்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானுக்கு வடகிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ தளம் ஒன்று சனிக்கிழமை காலை தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள மன்னாகண்டல் என்னுமிடத்தில் சனிக்கிழமை காலை குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் 4 குண்டுகளை வீசியதாகவும், இதனால் வீதியில் சென்று கொண்டிருந்த 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையில் நேற்று வெள்ளிக்கிழமை புனகரி பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பொதுமக்களது இறுதிக்கிரியைகள் நடைபெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டு வீச்சுச் சம்பவத்தில் காயமடைந்த 11 பேரில் 9 பேர் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 4 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் இவர்கள் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும் அவரிகளது உடல் நிலை பிரயாணம் செய்யக் கூடியதாக இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முழங்காவில் வைத்தியசாலையில் ஏனைய 2 காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஐ.நா உயரதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்

ஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே
ஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே

இலங்கைக்கான ஒரு வாரகால விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் அரசியல் விவகார துணைச் செயலாளர் ஏஞ்சலினா கனே கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மட்டக்களப்பு சென்றுள்ளார்.

கடந்த கால யுத்த அனர்த்தத்தின் பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்படுகின்ற மனிதநேய நிவாரணப் பணிகள், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கறித்து அறிந்து கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், யுத்த அனர்த்தத்தின் போது இடம் பெயர்ந்தவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள சில கிராமங்களை பார்வையிட்டதோடு இது வரை மீளக் குடியேற்றப்படாதவர்களையும் சந்தித்து உரையாடினார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும் சந்தித்து மாவட்ட நிலவரம் தொடர்பாகவும் குறிப்பாக நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்

இருப்பினும் இந்த விஜயம் தொடர்பாகவோ சந்திப்புகள் தொடர்பாகவோ ஏஞ்சலினா கனே செய்தியாளர்களிடம் கருத்துக் கூற மறுத்து விட்டார்

புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 பிப்ரவரி, 2008

 


இலங்கையின் களுவாஞ்சிக்குடியில் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்

சம்பவம் நடைபெற்ற இடம்
சம்பவம் நடைபெற்ற இடம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு- கல்முனை நெடுஞ்சாலையிலுள்ள களுவாஞ்சிக்குடியில் ஞாயிற்றுகிழமை முற்பகல் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில், தற்கொலையாளியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த இருவரும் என 3 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் பெண்னொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த வேளை, குறுக்குவீதியொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் சைக்கிளொன்றுடன் காணப்பட்ட இளைஞரொருவரை அழைத்து விசாரனைக்குட்படுத்தியபோது
அந்நபர் தம் வசமிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.

தற்கொலையாளி இது வரை அடையாளம் காணப்படவில்லை எனக் கூறும் பொலிசார் விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதே குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானாவும் முன்வைத்துள்ளனர்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 பிப்ரவரி, 2008


பண்டாரவளையில் யாழ் இளைஞர் கடத்தல்

இலங்கையின் மலையகப் பகுதி
இலங்கையின் மலையகப் பகுதி

இலங்கையின் மலையகத்தில் பண்டாரவளைப் பகுதியில் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வெள்ளை நிற வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியில் அண்மைக்காலத்தில் இடம்பெறும் முதலாவது சம்பவம் இதுவென்பதால், அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதியில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

அப்பகுதியில் உள்ள கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காரைநகரைச் சேர்ந்த சடாச்சரன் திருவருள் (22 வயது) என்ற இளைஞர், வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து, பொலிஸாரிடமும் ஏனையவர்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் சார்பிலான ஊவா மாகாணசபையின் உறுப்பினரான அரவிந்தன் அவர்கள் பிபிசிக்குத் தெரிவித்தார்.

Posted in Arms, Attacks, Batticaloa, Blast, Bombs, Bus, Citizens, Colombo, dead, Eelam, Eezham, Explosions, Extremism, Highways, Hurt, Injured, LTTE, Northeast, Peace, Sri lanka, Srilanka, Suicide, Terrorism, Terrorists, UN, War | Leave a Comment »

Happy Valentines Day – Love Facts & Statistics: Sales, Flowers, Economy, Exports

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

இளமை பக்கம்  – காதல் டேட்டா

* இந்த ஆண்டு காதலர் தினத்தன்று பரிசுப் பொருள் விற்பனை ரூ. 55 ஆயிரம் கோடியைத் தாண்டுமாம். கடந்த ஆண்டு விற்பனை ரூ. 50 ஆயிரம் கோடி.

* சராசரியாக ஒவ்வொரு காதலரும் செலவிடும் தொகை ரூ. 4,000.

* காதலர் தினத்தை விடுமுறை தினமாகக் கொண்டாட 61 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.

* பெண்கள் சராசரியாக தங்கள் காதலர்களுக்குப் பரிசு வாங்க ரூ. 3,000 வரை செலவிடுகின்றனராம் (ஆச்சர்யமான விஷயம்தான்!).

* காதலர் தினத்தை அதிகம் கொண்டாடுவது டீன் ஏஜ் பருவத்தினர் அல்ல. 40 வயது முதல் 45 வயதுப் பிரிவினர்தான் காதலர் தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனராம்.

* காதலர் தினத்தில் குறைந்தபட்சம் வாழ்த்து அட்டையை வாங்கி அளிப்போர் 60 சதவீதம் பேர்.

* சாக்லேட் வாங்கி இனிப்புடன் கொண்டாடுவோர் 40 சதவீதம் பேர்.

* 42 சதவீதம் பேர் காதலியுடன் வெளியே சென்று பொழுதைக் கழிக்கவே விரும்புகின்றனர்.

* மலர் கொத்து, மலர்ச் செண்டு வாங்கி வழங்குவோர் 52 சதவீதத்தினர்.

* நகை வாங்கி பரிசளிக்க விரும்பும் ஆண்கள் 22 சதவீதம். பெண்கள் 7 சதவீதம்.

* காதலர் தினத்தில் ரோஜாக்கள் விற்பனை மட்டும் 18 கோடி.

* காதலர் தினத்தில் அமெரிக்காவில் மட்டும் 200 கோடி டாலருக்கு நகை விற்பனையாகுமாம்.

* இதேபோல வாழ்த்து அட்டை விற்பனை 18 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* காதலைப் பறைசாற்றும் இருதய வடிவிலான பெட்டிகள், சாக்லேட்டுகள் விற்பனை அமோகமாக இருக்குமாம். இந்த வடிவ பெட்டிகள், சாக்லேட் விற்பனை 3 கோடிக்கும் அதிகம்.

Posted in America, Chocolates, Consumer, Culture, Customer, Economy, Expenses, Exports, Facts, Finance, Flowers, Gifts, greetings, Heart, Jewelry, Love, Lovers, Marriage, Money, Roses, sales, Statitistics, Stats, Tradition, US, USA, Valentines, Wedding, West, Wishes | Leave a Comment »

Writer Tha Naa Kumarasamy – Biosketch, Profile: Charukesi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

தொடர்கட்டுரை  – எழுதுங்கள் ஒரு கடிதம்!

சாருகேசி

தமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைச் சென்ற வாரம் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், சுமார் நூறு பேரே கலந்துகொண்ட மிக எளிமையான நிகழ்ச்சியாக, அவர் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அவருடைய உறவினர்கள் சிலருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

த.நா. குமாரசுவாமியின் மகன் அசுவினிகுமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், த.நா.கு.வுடன் நெருங்கிப் பழகிய சா. கந்தசாமி பேசும்போது, அவருடைய எளிமையையும் நட்புணர்வையும் நினைவுகூர்ந்தார். ஒருமுறை ஆனந்தகுமாரசாமியின் “த டான்ஸ் ஆஃப் சிவா’ என்ற நூல் தமக்குத் தேவைப்படுகிறது என்றாராம் கந்தசாமி. பரணில் இருந்த பெட்டியில் இருந்து புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொண்டு இரண்டு மாடி ஏறி வந்து கொடுத்தாராம் குமாரசுவாமி.

“”த.நா. குமாரசுவாமியின் நூல்கள் இப்போது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டன. நான் க.நா.சு.வின் நூல்களும், த.நா. குமாரசுவாமியின் நூல்களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்களும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும். அப்படியும், என் கடிதம் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடத்தில் சேர்ந்து, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நான் செலவழித்தது என்னவோ ஏழே ரூபாய்தான். அதேபோல, சாகித்திய அகடமிக்கு நீங்களும் ஒரு கடிதம் எழுதுங்கள். “த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கடிதம் எழுதி அனுப்புங்கள். அவர்கள் அதைக் கவனிப்பார்கள். அவருடைய நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் சோம்பல்பட்டு, கடிதம் அனுப்பாமல் மட்டும் இருக்கக் கூடாது!” என்றார் சா. கந்தசாமி.

இன்றைய தலைமுறைக்கு த.நா. குமாரசுவாமி என்ற ஓர் எழுத்தாளர் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்களையும், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் படித்தவர்கள், அவர் கையாண்ட தமிழ் நடையில் சொக்கிப் போய் விடுவார்கள். “அரசு’ பதில்களில் ஒரு முறை எஸ்.ஏ.பி. த.நா. குமாரசுவாமியின் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, த.நா.கு. மட்டும் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், தேர்ந்தெடுத்த தமிழ் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து எழுதுவார்’ என்று கூறியிருக்கிறார்.

வங்க நாவலாசிரியர் பங்க்கிம் சந்திரரின் “விஷ விருட்சம்’, “ஆனந்த மடம்’, “கபால குண்டலா’, “கிருஷ்ணகாந்தன்’, “உயில்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்தவர். தாகூரின் நாவல்கள், சிறுகதைகளையும், பின்னர் தாரா சங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதன்’ முதலிய நாவல்களையும் த.நா.கு. மொழி பெயர்த்திருக்கிறார்.

ஏ.கே.செட்டியார் காந்திஜி பற்றிய டாகுமென்டரி படத்தைத் தயாரித்தபோது, விளக்க உரையை எழுதிக் கொடுத்தவர் த.நா.கு.

நேதாஜியின் “புது வழி’, “இளைஞன் கனவு’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். காந்திஜியின் நூல்களைத் தமிழில் வெளியிட அமைக்கப்பட்ட குழுவில் அவரும் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். (கருத்து வேறுபாடு காரணமாக, பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி வந்துவிட்டாராம்.)

அவருடைய சிறிய நாவல் “ஒட்டுச் செடி’ கிராமப்புறத்துக் காதல் காவியம். பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்படும்போது வீட்டையும் கிராமத்தையும் இழந்து வரும் விவசாயியின் பின்புலம் கொண்ட கதை. முடிவு புரட்சிகரமான முடிவு. இன்றைய நவீன எழுத்தாளர் எவரும் கூட நினைத்துப் பார்கக முடியாதபடி அமைந்திருந்தது. (திரைக்கதை தேடி ஓடுபவர்கள் “ஒட்டுச் செடி’ நாவலை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்!)

காந்திஜியின் கொள்கைகளில் இயற்கையாகவே ஈடுபாடு கொண்டவர் த.நா.கு.

“”சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.கு. ஊர் மக்கள் அவரை “காந்தி ஐயர்’ என்று அழைத்தனர்.

“”சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது” என்று த.நா.கு. கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து “சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

“”சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஆகியோர் பாடல்களில் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. சங்கக் கவிதைகள் பலவற்றை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்” என்கிறார் சா. கந்தசாமி. அப்படியானால் ஏ.கே. ராமானுஜன் மொழிபெயர்ப்புக்கு முன்னேயே த.நா.கு.வின் கவிதைகள் வெளியாகி இருக்க வேண்டுமே? “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை!” என்கிறார் கந்தசாமி, தன் கட்டுரையில்.

காஞ்சிப் பெரியவர் பக்தர்கள் சிலருடன் பாடியில் வசித்த த.நா.குமாரசுவாமியின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். அவருடைய எதிர்பாராத வருகை த.நா.கு. குடும்பத்தினரை மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியதாம். “த ஏஜ் ஆஃப் சங்கரா’ என்ற நூலை த.நா.கு.வின் தகப்பனார் எழுதியிருந்தார். அதில் பல புதிய தகவல்களைச் சேர்த்து முழுமையான ஆய்வு நூலாக த.நா.கு. உருவாக்கினார் என்று கூறுகிறார் “சக்தி’ சீனிவாசன்.

சுமார் 25 மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் த.நா.கு. அவருடைய குமாரர் அசுவினிகுமார் தம் தந்தை பற்றி எழுதிய நூல் ஒன்றை சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கிறது. தவிர, மறைந்த எழுத்தாளர் “முகுந்தன்’ இலக்கியச் சிந்தனைக்காக எழுதிய “குடத்திலிட்ட விளக்கு’ என்ற வானதி பதிப்பக வெளியீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாயிற்று.

தேவனின் இனிய நண்பர் த.நா.குமாரசுவாமி. விகடன் தீபாவளி மலர் தயாரிக்கும் சமயம் த.நா.கு.வுடன் கலந்து ஆலோசனை செய்ய, வீடு தேடி வருவாராம்.

தாகூரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார் த.நா.குமாரசுவாமி. ஆனால் சாந்திநிகேதனில் தங்கி, வங்காள மொழி கற்க முயன்றும், அங்கே போதிய ஆதரவு கிடைக்காததால், தாமே பிறகு அம்மொழியைக் கற்றவர்.

இத்தனை தகுதிகள் இருக்கிற ஓர் எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவை விரிவாக, கருத்தரங்கம், ஆய்வுரைகள், சொற்பொழிவுகள் என்று குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் கொண்டாடலாம். சாகித்திய அகாதெமி கொண்டாடுகிறதோ இல்லையோ, தமிழ் எழுத்தாளர் சங்கம் கொண்டாடலாம். தமிழ் அன்பர்கள் கொண்டாடலாம். த.நா.கு.வின் படைப்புகளை ரசித்த நண்பர்கள் கொண்டாடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இவரைக் கண்டுகொள்ளாததுதான் வருத்தம் தரும் செய்தி.

“கல்கி’, உ.வே.சா., மஞ்சேரி ஈசுவரன், பி.எஸ். ராமையா, க.நா.சு., கி.வா.ஜ. தவிர தம் சகோதரர் த.நா. சேனாபதி ஆகியோரைப் பற்றி நிறையப் பேசுவாராம். ஆனால் அவர் நெருங்கிப் பழகி, அதிகம் குறிப்பிடுவது “தேவன்’ பற்றியும், “மர்ரே’ ராஜம் பற்றியும்தான் என்கிறார் சா. கந்தசாமி.
———————————————————————————————————————————————-

சாரா ஆப்ரகாம் எண்பது வயதுப் பெண்மணி. பெங்களூரில் பெரிய ஆர்ட் காலரி நடத்தி வந்தார். அந்த காலரியிலேயே நடன நிகழ்ச்சிகளும் கூட நடத்தியிருக்கிறார். அவருடைய 80-வது வயதைக் கொண்டாடுகிற வகையில், அவர் ஐம்பது ஆண்டுகளாகச் சேர்த்திருந்த ஓவியங்களை சென்னையில் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள “கேலரி சுமுகா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் கண்காட்சியைக் காணலாம்.

லட்சுமண் கெüட், கே.ஜி.சுப்பிரமணியன், எம்.எஃப். ஹூசைன், பி.வி. ஜானகிராமன், கிருஷேன் கன்னா, ராம்குமார் என்று வெவ்வேறு பிரபல ஓவியர்களின் ஓவியங்களில், தனித்துத் தெரிகிற மூன்று ஓவியங்கள் இருக்கின்றன.

ஒன்று ரவிவர்மாவின் ஓவியம். ஒரு பெண் உல்லாசமாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் என்ன ஒய்யாரம்!

இரண்டாவது ஷ்யாமல் தத்தா ரே வரைந்தது. ஒரு பெரிய, சிதைந்த பாத்திரம். ஆளுயர தடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காப்பது போல் நிற்கும் மனிதர்கள்.

மூன்றாவது, மிகப்பெரிய குடும்பச் சித்திரம். சாரா ஆபிரகாம் கணவர், குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் இந்த ஓவியத்தின் தத்ரூபம் நம்மை அசத்துகிறது. ஓவியர் பிகாஷ் பட்டாசார்ஜி.

புரியாத ஓவியங்கள் என்று ஒன்றிரண்டு இருக்கின்றன. (நமக்குப் புரியவில்லை என்பதற்காக அவை ஓவியங்களாக இல்லாமல் போய்விடுமா என்ன?)

ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் சாராவை, எம்.எஃப். ஹூசைன் ஓர் ஓவியமாக வரைந்திருக்கிறார்!

Posted in artists, Arts, Author, Biosketch, Chaarukesi, Charukesi, Coomarasaami, Coomarasaamy, Coomarasami, Coomarasamy, Devan, Display, Exhibitions, Faces, Famous, Gallery, Gandhi, Kumarasaami, Kumarasaamy, Kumarasami, Kumarasamy, Kumaraswami, Kumaraswamy, Mahatma, names, Painters, Paintings, people, profile, Translations, Translator, Works, Writer | Leave a Comment »

Learning Tamil as a Foreign Language – South Travancore Hindu College, Nagercoil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

சொல்றாங்க.. – தமிழுக்காக ஒரு தாற்காலிக வேடந்தாங்கல்!

அ. அருள்தாசன்

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்தின் தென் கோடிக்கு வந்து தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. தமிழில் அனா ஆவன்னா தெரியாதவர்கள் 7 மாதங்களில் தமிழ்ப் பாடல்களை ரசித்துப் பாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றால் இந்த ஆச்சர்யம் உங்களுக்கு இரட்டிப்பாகும். நாம் அவர்களைச் சந்திக்கச் சென்ற நேரத்தில் பாரதியின் “சிந்து நதியின்..’  பாடலைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

தமிழை ஒற்றுப் பிழையில்லாமல் எழுதும் அவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் வெளிநாட்டினர். இங்கு மாணவர்களாக இருக்கும் அவர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் ஆசிரியர்கள் என்பது அடுத்த சுவாரஸ்யம். இனியும் காலம் கடத்தாமல் அவர்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லிவிடுகிறோம்.

மைசூரில் செயல்படும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தமிழ்த் துறையில் அவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேர்ந்து, தமிழைக் கற்று வருகிறார்கள்.

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய வந்திருந்த அவர்கள்,

  1. கர்நாடகம்,
  2. ஹிமாச்சலப்பிரதேசம்,
  3. மணிப்பூர்,
  4. ஒரிசா,
  5. மேற்கு வங்கம்,
  6. அசாம்,
  7. இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் துணையுடன் நாட்டிலுள்ள மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆண்டுதோறும் இதுபோன்று ஆசிரிய, ஆசிரியைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் இந்த கல்வியாண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்த 24 பேருக்கும் தமிழ் கற்கும் காலத்தில் அவர்களுக்கான மாத ஊதியம் மற்றும் ரூ.800 ஊக்கத் தொகையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் வரையில் இவர்கள் தமிழைக் கற்கின்றனர்.

நாகர்கோவிலுக்கு வந்திருந்த இந்த ஆசிரியர்களை வழிநடத்தும் பேராசிரியர் எஸ். சுந்தரபாலு கூறியதாவது:

இந்தியா, “மொழிகளின் பொக்கிஷம்’. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 18 மொழிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றவை. அங்கீகாரம் பெற்ற அல்லது பெறாத மொழிகள் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றைக் கற்றுக் கொள்ளும் வழிகளை உருவாக்கித் தரும் பணியிலும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளைக் கற்க ஆசிரிய, ஆசிரியைகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பழமையான, இலக்கியத்துவம் வாய்ந்த, இனிமையான செம்மொழியாகத் தமிழ் இருப்பதால் பல்வேறு மாநிலத்தவரும் தமிழைக் கற்க ஆர்வமாக வருகின்றனர் என்கிறார் சுந்தரபாலு.

தமிழுக்காக இந்துக் கல்லூரியில் தாற்காலிகமாக குழுமியிருந்த வெளிமாநில ஆசிரிய, ஆசிரியைகள் சிலரிடம் தமிழைக் குறித்தும், தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் குறித்தும் பேசியபோது கொஞ்சும் தமிழில் அவர்கள் கூறிய சில சுவாரஸ்ய தகவல்கள்:

புலேகொடா ஆர்ச்சிகாந்தி (இலங்கை):

“”இலங்கை ருகுண தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். அங்கு சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பித்து வருகிறேன். ஆனால், சிங்கள மாணவர்களுக்குத் தமிழைக் கற்பிக்க முடியவில்லை. இதனால், தமிழைக் கற்க இங்கு வந்துள்ளேன்.

இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களிடையே தகவல் தொடர்பு பிரச்னை இருக்கிறது. அதைத் தவிர்க்க இந்தப் பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்றார்.

நெப்ரம் புஷ்பராணிதேவி (மணிப்பூர்):

“”மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளைக் கற்பது கடினம். இதில் தமிழ் மொழி எனக்குப் பிடித்திருக்கிறது. மணிப்பூரில் முரே மாவட்டத்தில் தமிழ் பேசுவோர் அதிகம் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க இதனால் எனக்கு முடியும்.”

லொரெம்பம் கோமோடோன்சனா தேவி (மணிப்பூர்):

“”கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சுற்றுலா வந்திருந்தபோது தமிழர்களின் நடவடிக்கைகள் என்னைக் கவர்ந்தது. இங்குள்ள பெண்கள் நெற்றில் பொட்டு வைப்பதும், ஆண்கள் விபூதி வைப்பதும் பிடித்திருக்கிறது. கடவுள் என்றால் அன்பு என்பதைத் தமிழ் மொழி உணர்த்துகிறது” என்றார்.

ஷபியூர் ரஹ்மான், அப்துர் ரஹீம் (அஸ்ஸôம்):

“”அசாம் மாநிலம், போர்பெட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், சமஸ்கிருத ஆசிரியர்கள். தமிழ் மொழி இனிமையானது என்பதனால் இதைக் கற்கிறோம். சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் 30 சதவீதம் தொடர்பு இருக்கிறது. ஏலேலோ ஐலசா போன்ற நாட்டுப்புற பாடல் தெரியும். (இவர்களில் ரஹீமுக்கு அசாமி, பெங்காலி, சமஸ்கிருதம், ஹிந்தி, தமிழ், அரபி ஆகிய 6 மொழிகள் தெரியும்).

அசோதோஸ் மாலிக் (ஒரிசா):

“”ஒரிய மொழி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். தற்போது தமிழைக் கற்பதால் தமிழுக்கும் ஒரிய மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிந்து கொள்கிறேன். தமிழைக் கற்றபின் தமிழில் உள்ள நூல்களை ஒரிய மொழியிலும், ஒரிய மொழி நூல்களைத் தமிழிலும் மொழி பெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன்.

தமிழகத்தில் இலக்கியத்திலும் தீவிர ஆர்வம் மிக்கவராக இருப்பவர் என முதல்வர் கருணாநிதியைப் பற்றி அறிந்திருக்கிறேன்” என்றார்.

தட்டுத் தடுமாறினாலும் தமிழில் பேசிய இந்த வெளிமாநில ஆசிரியர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியதுதான்.

Posted in Bengal, Ceylon, Foreign, HR, Instructors, Integration, Language, Learn, Literature, Manipur, Manipuri, Nagercoil, Orissa, Singala, Sinhala, Sinhalase, Srilanka, Students, Tamil, Teachers, Unity, University, WB, World | Leave a Comment »

Parambikulam Wildlife Sanctuary – Parks & Forests – Tourism development without Intrusions

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

முன் மாதிரி: காடர்… மலசர்… நேச்சுரலிஸ்ட்!

வி. கிருஷ்ணமூர்த்தி

எங்கு, என்ன புதிய திட்டம் என்றாலும், முதன் முதலில் அடிபடுவது அங்கு பல ஆண்டுகளாக வசித்து வரும் மண்ணின் மைந்தர்கள்தாம். அங்கு வசிப்பவர்களை வெளியேற்றுவது நமது நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வாடிக்கை. ஆனால் இதிலிருந்து மாறுபட்டு செயல்பட்டிருக்கிறது பரம்பிக்குளம் விலங்குகள் சரணாலயம்.

இந்த மாற்றத்தின் பின்னணி என்ன?

வன விலங்கு சரணாலயங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களில் அவர்களுக்கு அந்தப் பகுதிகளைப் பற்றிய தகவல்களைச் சொல்ல வழிகாட்டிகள் இருப்பார்கள். ஆனால், தமிழக எல்லையில், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் வனப்பகுதியில் பார்வையாளர்களுக்கு வழிகாட்ட அப்படி தனிப்பட்ட “கைடுகள்’ கிடையவே கிடையாது.

இங்குவரும் பார்வையாளர்களுக்கு வன வளம், விலங்குகள், பறவைகள், பூச்சியினங்கள் பற்றியெல்லாம் சொல்ல இந்தப் பகுதியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடியின இளைஞர்களை “நேச்சுரலிஸ்ட்’ என்ற பெயரில் வனத்துறையினர் பணியமர்த்தி உள்ளனர் என்பதுதான் இங்கே சிறப்பு. அவர்கள்தான் அங்கு கெய்டு, வழிகாட்டி எல்லாம்.

இந்தச் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நண்பர்களாய், வழிகாட்டியாய், தகவல் களஞ்சியமாய் இந்த “நேச்சுரலிஸ்ட்’கள் ஆற்றிவரும் பணிகள் அடடா…உண்மையிலேயே பாராட்டுக்குரியவை. பறவைகள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் பெயர்களை வேறுமொழி கலப்பில்லாமல், துல்லியமாக உச்சரித்து விளக்கும் இவர்களில் பலர் மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காதவர்கள் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளதுதான் இந்தப் பரம்பிக்குளம் வனப்பகுதி. இங்கு காடர், மலசர், மடுவர், மலமலசர் ஆகிய 4 பழங்குடி பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். 300 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த குகைகள் எல்லாம் இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இவர்கள் தவிர, தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக 1950-ம் ஆண்டுகளில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் அணை கட்டும் பணிகளுக்காகத் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து வேலைக்காக வந்த குறிப்பிட்ட பிரிவு மக்களும் இங்கு குடியேறினர்.

பரம்பிக்குளம் ஆழியாறு அணைத் திட்டம், இங்கு தண்ணீரின் போக்கை மனிதனின் வசதிகளுக்காகத் தடம் மாற்றியது. அதுமட்டுமா, இந்தப் பகுதி பழங்குடியினரின் வாழ்க்கைப் பாதையையும் வேறு நாகரிகமான முறையில் மாற்றியமைத்து விட்டதே.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் பாதுகாப்புக்கு உடன் செல்லும் உதவியாளர்களாக இந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்களை வனத்துறையினர் நியமித்தனர். இது இங்கு நிகழ்ந்த ஒரு திருப்பம்.

அங்கு வனத்துறை அதிகாரியாகப் பணி புரிந்த நெல்சன் என்பவர் பறவையியல் அறிஞர் சலிம் அலி எழுதிய புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பெயர்களைத் துல்லியமாக உச்சரிக்க இவர்களுக்குப் பயிற்சி அளித்தார். இதனால் பறவைகள், விலங்குகளின் அத்தனை ஆங்கிலப் பெயர்களும் இவர்கள் நாவில் துள்ளி விளையாடுகின்றன.

இந்நிலையில் இங்கு வனப்பாதுகாவலராக வந்த சஞ்சயன் குமார் என்பவர் இவர்களுக்கு முறையான ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். இங்கு வரும் பார்வையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ஒரு தொகுப்பு நிதியாக உருவாக்கியுள்ளார்.

பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தச் சூழலியல் மேம்பாட்டு கவுன்சில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பழங்குடியினரும் உறுப்பினர்கள்.

இங்கு பள்ளியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள பழங்குடியினர் அனைவருக்கும் தாய்மொழி தமிழ். ஆனால் கல்வி கற்பிக்கப்படுவதோ மலையாளத்தில். அது ஒன்றுதான் வேதனை!

இவர்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள பழக்கங்களின்படி சில கிலோ மீட்டர்கள் தொலைவில் வரும் விலங்குகளைக் கூட வாசனை மூலம் அறிந்து கொள்கிறார்கள். பறவைகளை பார்க்காமலேயே அதன் குரல் ஓசையை வைத்தே இன்ன பறவையென்று இவர்களால் சொல்ல முடியும்.

“”வன வளப் பாதுகாப்பில் இவர்களுக்கு இணை இவர்களேதான்” என்கிறார் “நேச்சர் டிரஸ்ட்’ அமைப்பின் திருநாரணன்.

இங்குள்ள பழங்குடியினரின் பாரம்பரிய இசையையும், நினைவு சின்னங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் பார்வையாளர்களுக்கு விளக்கும் வகையிலான திட்டங்களும் வனத்துறையினரால் உருவாக்கப்பட்டுள்ளன.

மண்ணின் மைந்தர்களான பழங்குடியினரை வெளியேற்றாமல் அவர்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பரம்பிக்குளம் வன விலங்கு சரணாலயத்தை மட்டுமல்ல, நாட்டின் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் சிறப்பாக நிறைவேற்றலாம் என்பதற்கு இந்தத் திட்டமே ஒரு பெரிய சிறந்த உதாரணம்.

Posted in Anamalai, Caste, Community, Development, Displaced, Environment, Forests, Guides, Intrusions, Kerala, Naturalist, Nature, Palacad, Palacaud, Palacaut, Palacode, Palaghat, Palagode, Palakkad, Palakode, Parks, Protection, Refugee, reservoir, safari, Sanctuary, SC, ST, Tour, Tourism, Tourist, Travel, Traveler, tribal, Tribes, Visit, Visitor, Wild, Wildlife | Leave a Comment »

Why Democracy survives in India? – N Vittal

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2008

ஜனநாயகம் நீடிப்பது இந்தியாவின் அதிர்ஷ்டமா?

என். விட்டல்

இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. 1940-களில் இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், அவற்றில் இந்தியா மட்டுமே தனித்துவமிக்க, உண்மையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கும், துடிப்புமிக்க ஜனநாயகத்துக்கு வெற்றிகரமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அது குறித்து இந்தியர்களாகிய நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.

விடுதலைக்குப் பிறகு செயல்திறன் மிக்க ஜனநாயக நாடாக இந்தியா நடைபோடும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் பெற்றவுடன் தகுதியற்றவர்கள் அதிகாரத்துக்கு வருவார்கள்; எனவே, வெகு விரைவிலேயே இந்தியா பல நாடுகளாகச் சிதறுண்டு போய்விடும் என எதிர்பார்த்தார் சர்ச்சில். இந்தியா சுதந்திர நாடாக ஆகிய உடன் ஊழல் ஆறாகப் பெருக்கெடுத்தோடும் என 1920-களிலேயே கருதினார் ராஜாஜி. நமது அண்டையில் உள்ள நாடுகளிலெல்லாம் ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டபோதிலும், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பது எவ்வாறு?

அதற்குப் பல விளக்கங்களைக் கூறலாம். எனது விளக்கம் இதுதான்: தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, கணினி மென்பொருள் ~ வன்பொருள் என்ற வகையில் நமது நாட்டில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.

உண்மையிலேயே இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நீடிப்பது அதிர்ஷ்டத்தாலா? ஜனநாயக ஆட்சி முறை தோல்வி அடைந்து, ராணுவத்தின் தலையீடும் சர்வாதிகாரிகளின் ஆட்சியும் நடந்துகொண்டு இருக்கும் நமது அண்டை நாடுகளின் வரிசையில் நாமும் சீக்கிரம் சேர்ந்துவிடுவோமா?

60 ஆண்டுகளாக இந்தியாவில் உயிர்ப்புள்ள ஜனநாயகம் வளர்ந்து வந்திருப்பதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல. அந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்துவதற்கு பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்ததே காரணமாகும்.

முதலில் அதற்குக் காரணமான மென்பொருள் என்ன எனப் பார்ப்போம். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அடிப்படைக் கலாசாரம் சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இந்துக் கலாசாரமாகும்.

இந்து தர்மம் அதாவது சனதான தர்மம் என்பது எப்போதும் இரு அம்சங்களை வலியுறுத்திவந்துள்ளது. ஒன்று, திறந்த மனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம்; மற்றொன்று, முரணான விஷயங்களை சகித்துக்கொள்ளும் குணம். இதுவே வேதத்தில் “ஆனோபத்ரஹஹா க்ருதவி யந்து விஷ்வாதஹா’ எனப்படுகிறது. நல்ல சிந்தனைகள் உலகில் எங்கிருந்து வந்தாலும் அவற்றை வரவேற்க வேண்டும் என்பது இதன் பொருள். இரண்டாவது முக்கியமான கொள்கை, தர்மத்தின்படி நடப்பதாகும். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு தர்மங்கள் இருக்கின்றன. மகாபாரதத்தின் சாந்திபருவத்தில் பீஷ்மரின் வாயிலாக ராஜ தர்மம், அதாவது நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கான கொள்கைகள் போதிக்கப்படுகின்றன. டாக்டர் அமார்த்தியா சென் எழுதியிருக்கும் “தி ஆர்கியுமென்டேட்டிவ் இந்தியன்’ என்ற நூலில், வாதம் செய்யும் இந்தியாவின் பாரம்பரியம் சரியான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, வன்பொருளுக்கு ~ அமைப்பு ரீதியான அம்சத்துக்கு வருவோம். சிறிது காலத்துக்கு முன் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்செய்ய முஷாரப் மேற்கொண்ட முயற்சியானது, 1975-ல் இந்தியாவில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதை ஒத்திருந்தது. அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வியை எழுப்பியதால் நீதிமன்றத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைப்போலவே இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிப்பது குறித்து அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு கேள்வி எழுப்பியதால், நெருக்கடி நிலையைப் பிறப்பித்ததன் மூலம் நீதித் துறை மீது தாக்குதலைத் தொடுத்தார் இந்திரா காந்தி. தனது பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் ஓர் ஆட்சியாளர் தொடுத்த தாக்குதலாகும் அது.

ஒரே இரவில் அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் நாடு முழுவதும் ராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.

நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது இந்திரா காந்தி கடைப்பிடித்ததும் இதே பாணியைத்தான். இந்திய ஜனநாயக வளர்ச்சிப் போக்கில் நெருக்கடி நிலையானது, வரலாற்று நோக்கில் அதைப் புடம்போட்ட நிகழ்வாக அமைத்துவிட்டது.

இந்தியாவில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைதான் உள்ளபடியே சோதனைக் காலமாகும். அதை நாடு சமாளித்துக் கடந்துவிட்டது. தனது பதவியை சட்டபூர்வமாக ஆக்கிக்கொள்வதற்காக இரு ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்த முன்வந்தார் இந்திரா. தேர்தல் நடத்த அவர் நிர்பந்திக்கப்பட்டாரா அல்லது உளவுத் துறையினர் கருத்தைக் கேட்டு ஏமாந்துபோய் தேர்தலை நடத்தினாரா? அல்லது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எந்தப் பிரதமரும் இந்திரா காந்தியின் வழியில் செல்லத் துணிய மாட்டார் என்று கூறும் அளவுக்கு, நெருக்கடி நிலைப் பாதிப்புகளின் பிரதிபலிப்பு தேர்தலில் கடுமையாக இருந்தது.

இந்திய ஜனநாயகத்தின் வன்பொருள் என்ன? துடிப்புமிக்க, பலம் பொருந்திய சுயேச்சையான அமைப்புகள்தான் இந்தியாவில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகின்றன. அவற்றில் ஒன்று பத்திரிகைத் துறை. தூக்கிலிடப்படுவதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோ எழுதிய, “நான் படுகொலை செய்யப்பட்டால்…’ என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “”உத்வேகம் மிக்க ஜனநாயகத்தினால்தான் இந்தியா வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் அவர்.

நெருக்கடி நிலை உச்சத்தில் இருந்தபொழுதுகூட ராம்நாத் கோயங்கா, இரானி போன்ற மன உறுதி மிக்க, துணிச்சலான பத்திரிகையாளர்கள், மக்களின் ஜனநாயக உணர்வும் விடுதலை வேட்கையும் அணைந்துவிடாமல் காத்தனர். நெருக்கடிநிலையின் கொடூரமான அனுபவத்துக்குப் பின், மீண்டும் அத்தகையதொரு நிலை வந்துவிடாமல் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடைமுறைகளை நாடாளுமன்றமும் நீதிமன்றமும் வகுத்திருக்கின்றன. காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்தபோது ~ நாட்டில் ஒரு கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அக் கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால் இப்போது ஒரு கட்சி ஏகபோகம் என்பது இல்லை. அதோடு, பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம், 356-வது பிரிவைப் பயன்படுத்துவதற்குப் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துவிட்டது. அதன் வாயிலாக, ஜனநாயக நடைமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை அவ்வளவு சுலபமாக சீர்குலைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த அமைப்புகள் கட்டிக்காத்து வருகின்றன. சோதனையான காலகட்டங்களில் அந்த அமைப்புகள் மேற்கொண்ட நிலைகளின் காரணமாக அத்தகைய பலத்தை அவை பெற்றிருக்கின்றன.

ஜனநாயகம் வளரத் தேவையான மற்றொரு முக்கிய அம்சம், பொதுவாழ்வில் நேர்மை. இவ் விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற நமது தலைவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்; நமது ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பொழுது, முன்னுதாரணமாக விளங்கியவர்கள். ஆனால் இன்று பொதுவாழ்க்கையில் பெருகிவிட்ட ஊழல் தலைவர்களால், நாம் அந்தத் தலைவர்களில் பலரை மறந்தே போய்விட்டோம்.

அதே நேரத்தில் ஆறுதலான சில விஷயங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சையான அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகளும், பொதுவாழ்வில் சிறிது அளவாவது அடிப்படை நேர்மை இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.

எனவே, இந்தியாவில் ஜனநாயகம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதிர்ஷ்டத்தைக் காரணமாகக் கூற முடியாது. மாறாக துடிப்புமிக்க ஜனநாயகமாக வருங்காலத்தில் வளர்ந்தோங்குவதற்குத் தேவையான வன்பொருளும் மென்பொருளும் இந்தியச் சமூகத்தில் இருக்கின்றன என்பதே காரணம்.

Posted in 144, Amartya, Bhutto, Churchil, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Culture, Democracy, Emergency, Epic, Federal, Freedom, Govt, Hindu, Hinduism, Hindutva, History, Independence, Indhra, India, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Law, Liberation, Mahabharatha, Misa, National, Naxal, Oppression, Order, Pakistan, Police, POTA, Republic, Sen, TADA, Tradition, Values, Vittal | Leave a Comment »

What is behind DMK’s war of words with Congress? – Dinamani ‘Ajathasathru’

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2008

கருணாநிதி கோபப்படுவது ஏன்?

 அஜாத சத்ரு

காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு பொறுப்பாளர் அருண்குமார் தற்செயலாக சென்னை விமான நிலையத்தின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தும், அவருடன் ஒன்றாக விமானத்தில் பயணித்ததும் ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வு.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீங்கள் விஜயகாந்துடன் அரசியல் பேசினீர்களா என்கிற நிருபர்களின் கேள்விக்கு, “ஆமாம், அரசியல் பேசினோம். என்ன பேசினோம் என்பதை நேரம் வரும்போது வெளியிடுகிறேன்’ என்று சர்வசாதாரணமாக தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் சொன்ன பதிலிலும் எந்தவித அதிசயமோ ஆச்சரியமோ இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், இதை ஏதோ விபரீதமாகவும், அருண்குமார் இமாலயத் தவறு செய்துவிட்டது போலவும் திமுக தலைமை சித்திரிக்க முயல்வது ஏன் என்பதுதான் பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவோ, வழிகாட்டுதலோ இல்லாமல், திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடமிருந்து முதல் கண்டனம் வந்திருக்காது.

“”அருண்குமார் ஒரு பார்ப்பனர். அவர் மரியாதை நிமித்தம் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காத நிலையில் விஜயகாந்தை மட்டும் சந்தித்துப் பேசுவது எப்படி?” என்கிற விதத்தில் கி. வீரமணியின் காட்டமான அறிக்கையால் விஷயம் முடிந்துவிட்டது என்று நினைத்தால், திமுகவின் நிர்வாகக் குழு தனது தீர்மானத்தில், காங்கிரசுக்கு எச்சரிக்கையும், அறிவுரையுமாகத் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறது.

இந்த அளவுக்கு திமுக ஒரு சாதாரண சம்பவத்தைப் பெரிதுபடுத்துவானேன்? அருண்குமார், விஜயகாந்த் சந்திப்புக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டா?

“”தலைவர்கள் சந்தித்துக் கொள்வது, பேசுவது என்பது சாதாரணமான விஷயம். சமீபத்தில் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொண்டார்களே! இல. கணேசன் அடிக்கடி முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கத்தானே செய்கிறார்? இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதைநிமித்த சந்திப்புகள். இதற்கெல்லாம் கோபப்பட்டால் எப்படி?” என்று கேட்ட காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டார்.

1998 நாடாளுமன்றத் தேர்தலின்போது, மதுரையிலிருந்து சென்னை வரும் விமானத்தில் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகிய மூவரும் வந்ததாகவும், திமுக கூட்டணியில் இருந்தபோதும் த.மா.கா. தலைவர் மூப்பனார் ஜெயலலிதாவிடம் சிரித்துப் பேசியதை முதல்வர் கருணாநிதி விமர்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

கருணாநிதி பயப்படுவது ஏன் என்று புரியாமல் குழம்பும் காங்கிரசார்தான் அதிகம். “”யார் யாரைச் சந்தித்துப் பேசினாலும், காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, சோனியா காந்தி என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொருத்துத்தான் கூட்டணி அமையும். பிறகு ஏன் இப்படி அலட்டிக் கொள்ள வேண்டும்?” ~ இப்படிக் கேட்பது மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.

விஜயகாந்தை முன்னிலைப்படுத்தி ஒரு கூட்டணிக்குக் காங்கிரஸ் சம்மதிக்கப் போவதில்லை. அதுமட்டுமல்ல, தேமுதிக – காங்கிரஸ் கூட்டணி என்பது திமுக மற்றும் அதிமுக அமைக்கும் கூட்டணிகளுக்கு மாற்றாகவோ, அந்த அளவுக்கு பலமானதாகவோ இருக்க முடியாது என்பது பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். இடதுசாரிகள் சேர்ந்தால் ஒருவேளை அந்தக் கூட்டணி பலம் பெறலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

“”எங்களைப் பொருத்தவரை நாங்கள் திமுகவுடன் கூட்டணி என்பதில் தெளிவாக இருக்கிறோம். இடதுசாரிகள் நிச்சயமாகக் காங்கிரசுடன் எந்தவிதக் கூட்டணியும் வைக்கப் போவதில்லை” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையும் அதுதான் என்று உறுதிப்படுத்துகிறார் டி. ராஜா.

காங்கிரஸ், திமுகவின் தோழமைக் கட்சியாகத் தொடரும் என்பதில் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை ஏன் முதல்வர் கருணாநிதிக்கு மட்டும் இல்லை?

காங்கிரஸ் வாக்கு வங்கி என்பது எப்போதுமே திமுகவை ஏற்றுக்கொள்வதில்லை. திமுக எதிர்ப்பு என்பது இந்த காங்கிரஸ் அனுதாபிகளின் ரத்தத்தில் ஊறிய விஷயம்” என்று தெரிவிக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

சோனியா காந்தியைக் கடுமையாக விமர்சித்ததன் மூலம் காங்கிரஸ் அனுதாபிகளின் வெறுப்பை ஜெயலலிதா சம்பாதித்துக் கொண்டதால்தான் அவர்கள் திமுகவை ஆதரிக்க முற்பட்டிருக்கிறார்களே தவிர, அடிப்படையில் அவர்கள் திமுகவைவிட அதிமுகவுடனான கூட்டணியைத்தான் விரும்புவார்கள் என்கிறார் அவர். அந்தப் பிரமுகர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

காங்கிரசைப் பதவியிலிருந்து இறக்கிய கட்சி என்கிற கோபமும், காமராஜரைத் தோற்கடித்த கட்சி என்கிற வெறுப்பும் பழைய தலைமுறை காங்கிரஸ்காரர்களுக்கு எப்போதுமே உண்டு. அதனால்தான், நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பெறும் அளவுக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை.

1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததையும், சுட்டிக்காட்டிய திமுக பிரமுகர் ஒருவர், கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலையும் உதாரணம் காட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, சட்டமன்றத் தேர்தலில் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது மட்டுமல்ல, திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம் என்கிறார்.

முதல்வர் கருணாநிதியின் பயம் அதுதான். இதுபோன்ற சந்திப்புகள், யூகங்களுக்கு இடமளிக்கும் என்பதால், காங்கிரஸ் வாக்கு வங்கியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சோனியா காந்தி இருக்கும்வரை தனது தனிப்பட்ட நெருக்கத்தின் மூலம் கூட்டணி தொடர்வதில் எந்தவிதத் தடையும் இருக்காது என்று முதல்வர் கருணாநிதிக்குத் தெரியும். ஆனால், காங்கிரசின் வாக்கு வங்கி முழுவதுமாகக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லாமல் போனால், கூட்டணி தொடர்ந்தும் பயனில்லாமல் போய்விடும்.

காங்கிரஸ் வாக்கு வங்கி சிதறி, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக பலமடைந்து விட்டால்? அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி அதிமுகவின் தயவை நாடாது என்று என்ன நிச்சயம்?

கருணாநிதிக்கு ஏன் கோபம் வருகிறது என்பது இப்போது புரிகிறதா?

Posted in Ajathasathru, Alliance, Andhra, Andhrapradesh, AP, Arunkumar, Coalition, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dinamani, Dismiss, DK, DMDK, DMK, Govt, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Modi, Sonia, support, Veeramani, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »