Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மார்ச், 2008

March 30 – LTTE, Eezham, Sri Lanka: News & Updates (BBC Tamil)

Posted by Snapjudge மேல் மார்ச் 30, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஏப்ரல், 2008

மூதூர் தொண்டர் நிறுவன பணியாளர் கொலைகளை அரசாங்கப் படையினரே செய்ததாக மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது

இலங்கையில் சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு தொண்டு நிறுவனமான அக்ஷன் பெஃய்ம் நிறுவனத்தின் உள்ளூர் பணியாளர்கள் 17 பேர் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களின் பெயரை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்தச் சம்பவத்தை மறைக்க முயற்சிப்பதாகவும் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

2006 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடனான மோதலை அடுத்து மூதூரை கைப்பற்றிய காலப்பகுதியில் நடந்த இந்த கொலைகள் தொடர்பில், இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்றும் விசாரணைகளை நடத்தி வருகிறது.

கோபாலசிங்கம் சிறிதரன்
கோபாலசிங்கம் சிறிதரன்

ஆனால், இந்தப் புலன் விசாரணை நடவடிக்கைகளை அரசாங்கம் மறைக்க முயலுவதாகக் குற்றஞ்சாட்டி, இதனைக் கண்காணித்துவந்த, சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று தனது கண்காணிப்புப் பணியில் இருந்து விலகிச் சென்று விட்டது.

துணைப்படையைச் சேர்ந்த ஒரு ஊர்காவற்படைச் சிப்பாயும், இரண்டு பொலிஸ்காரர்களும் இந்தக்கொலைகளைச் செய்ததாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கூறி அவர்களது பெயர்களையும் வெளியிட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவங்கள் குறித்த பொதுவிசாரணைகளில் இலங்கை ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதால், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அந்த ஆணைக்குழுவின் முன்பாக தமது ஆதாரங்களை காண்பித்து தகவல்களை வெளியிட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளிக்குமுகமாக தமிழோசையிடம் பேசிய மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோபாலசிங்கம் சிறிதரன் அவர்கள், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியை அந்த ஆணைக்குழுவின் முன்பாக ஆஜர் செய்யும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனாலும், அந்தச் சாட்சியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மின்னேரியாவில் மின்னல் தாக்கியதில் நான்கு படையினர் மரணம் 59 பேர் காயம்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வட-மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மின்னேரியா இராணுவத்தளத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இராணுவமுகாமொன்றினைச் சேர்ந்த ஒரு தொகுதி இராணுவ வீரர்கள் இன்று மாலை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் மிகவும் சக்திவாய்ந்த மின்னல் ஒன்று தாக்கியதில் சுமார் நான்கு படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் சுமார் 59 படையினர் காயமடைந்து பொலன்நறுவை தளவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் பொலன்நறுவை மாவட்டம் மின்னேரியா கட்டுக்கெலிய இராணுவ முகாம் பகுதியில் வழமையான இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ அணியினரே இந்த மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அதிதீவிர சத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சிறையுடைப்பு முயற்சி

இதேவேளை இன்று மாலை இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலுள்ள சிறைச்சாலையை உடைத்துத் தப்பி வெளியேறமுயன்ற நான்கு சிறைக்கைதிகள் அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமாகியிருப்பதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தின் போது மேலும் மூன்று சிறைக்கைதிகள் காயமடைந்து அண்மையிலுள்ள வைத்தியசாலையில் பொலிஸ்காவலுடன் சிகிச்சைபெற்று வருவதாகவும், நிலைமை தற்போது பொலிசாரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் பொலிசார்
தெரிவித்திருக்கின்றனர்.


 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 31 மார்ச், 2008

இயக்கத்திலிருந்து சிறார் 22 பேரை விடுதலை செய்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்

இயக்கத்தில் இளம்பிராயத்தினர் என்பது ஒரு நெடுங்கால சர்ச்சை

விடுதலைப் புலிகள் தமது படையிலிருந்து 22 சிறாரை விடுதலை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் படையில் நூற்றுக்கணக்கான சிறார் இன்னும் இருப்பதாக யுனிசெஃப் என்ற ஐ.நா.வின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்திருப்பதையும் புலிகள் மறுத்துரைத்திருக்கின்றார்கள்.

தங்களால் விடுவிக்கப்பட்டுள்ள சிறார் தொடர்பான விபரங்களை யுனிசெஃப் நிறுவனம் உறுதிப்படுத்துவதற்குத் தவறியிருக்கின்றது என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக விடுதலைப் புலிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இருபது சிறாரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் சி.பி.ஏ. என்ற சிறுவர் பாதுகாப்புக்கான தமது அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

நூற்றுக்கணக்கான சிறார் தமது அமைப்பில் இன்னும் இருப்பதாகக் கூறிவரும் யுனிசெஃப் நிறுவனம், இந்தச் சிறார் தொடர்பான பிந்திய தகவல்களை உறுதிசெய்து தனது பட்டியலை மாற்றியமைக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் குற்றஞ்சுமத்தியிருக்கின்றார்கள்.

அதேவேளை, தமது அமைப்பில் உள்ள வேறு 41 சிறாருக்கு பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ இல்லாத காரணத்தினால் அவர்களை விடுதலை செய்யமுடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இது குறித்த மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை ஏ9 வீதியில் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

ஓமந்தை சோதனைச் சாவடி

இலங்கையின் வடக்கே ஏ9 வீதியில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி சோதனைச்சாவடியிலும், வவுனியா, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியிலும் அரசாங்கத்தினால் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கும் இடையிலான பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தேவைகளுக்கான ட்ரக் வண்டிகளின் போக்குவரத்து என்பன தாமதமடைய நேரிட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றது.

இந்நிலையில் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சனிக்கிழமைகளிலும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான வாகனப் போக்குவரத்து நடைபெறுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் மேலதிக கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

திங்கள் முதல் வெள்ளிவரை என வாரத்தில் 5 தினங்களே ஓமந்தை சோதனைச்சாவடி வழமையாகப் பொதுப் போக்குவரத்துக்காகத் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்டு வவுனியாவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள வன்னிப்பிரதேச அரச வைத்தியசாலைகளுக்கான மருந்துப் பொருட்களை வவுனியாவில் இருந்து ஓமந்தை ஊடாகக் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவதில் நிலவுகின்ற காலதாமதம் காரணமாக ஓமந்தை சோதனைச்சாவடி சனிக்கிழமைகளிலும் திறக்கப்படுவதனால் பெரிதாகப் பயனேதும் ஏற்படாது என்கிறார் கிளிநொச்சி மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் நேயர்கள் கேட்கலாம்.


இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய இலங்கை வியாபாரிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கையிலுள்ள அரிசி வர்த்தகர்கள், தற்போது நாட்டில் நிலவும் அரிசி தட்டுபாட்டை தீர்க்கும் முகமாகவும், வரவுள்ள தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்படும் தேவைகளை சமாளிக்கும் முகமாகவும் இந்தியாவிலிருந்து ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய உதவுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்கள்.

இது தொடர்பில் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார் கொழும்பு பழைய சோணகர் தெரு வர்த்தக சங்கத் தலைவர் பழனியாண்டி சுந்தரம்.

பொதுவாக தங்கள் நாட்டுக்குத் தேவையான அளவுக்கு அரிசியைத் தாங்களே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய நிலைமை இருக்கும். ஆனால் இந்த முறை மழையில் ஏராளமான பயிர் நாசமடைந்துவிட்டதால், அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அது மட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள வியாபாரிகள் சோளம் மற்றும் சோயா போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் கோழித் தீவனம் மற்றும் கால்நடைத் தீவனங்களை இந்தியாவிலிருந்துதான் பெருமளவு இறக்குமதி செய்ததாகவும், ஆனால் அவற்றின் விலை இரட்டிப்பாகி அரிசி விலையைவிட உயர்ந்துவிட்டதால், கிட்டத்தட்ட 70,000 டன் அரிசி இவ்வாறு தீவனமாக உயயோகிக்கப்பட்டதும் அரிசி பற்றாக்குறைக்கு காரணம் எனவும் அவர் கூறுகிறார்.

சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்றும் அத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு உதவியாக இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மீதான தீர்வையையும் அவர் அகற்றியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சபைத் தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை

காத்தான்குடியில் நடந்த கூட்டம்

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி முஸ்லிம் வேட்பாளர்கள் குறித்து பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் பிரதேச ரீதியாக பேச்சுவார்ததை நடத்திவருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேம ஜயந்த், முஸ்லிம் அமைச்சர்கள், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் சகிதம் இப்பேச்சுவார்த்தையை பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் நடத்திவருகின்றார்.

திங்களன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் வேட்பாளர்களைத் தமது கட்சியில் இணைந்து போட்டியிட முன்வருமாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரான எம்.டி.எம். ஹாலித் ஹாஜியார் கூறுகின்றார்.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஆளும் கட்சியில் இணைந்து போட்டியிடுவதன் மூலம் முதலமைச்சர் பதவியை சுழற்சி அடிப்படையில் பகிர்ந்துகொள்ள முடியும் என்று ஆளும் கட்சியினால் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தமது சம்மேளனமானது அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதை இக்குழுவினரிடம் தாம் தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.


திருகோணமலை இளம்பெண்ணுக்கு ‘சவுதியரேபியாவில் சித்ரவதை’

மத்திய கிழக்கில் சித்ரவதைக்கு உள்ளாகும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை அதிகம்

சவுதியரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைபார்த்துத் திரும்பியிருக்கும் திருகோணமலை கிண்ணியா மாஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், சவுதியில் தான் வேலைபார்த்த வீட்டின் உரிமையாளர் தன்னைக் கொடுமைப் படுத்தியதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்ட நிலையில் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்ற நலினா உம்மாள் என்ற இளம்பெண், சவுதியரேபியாவிலும் இரண்டுவார காலம் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்.

தான் வேலைக்குச் சேர்ந்து ஒரு சில நாட்களில், அந்த வீட்டில் சிறு குழந்தை ஒன்று இறந்துபோகவே. வீட்டின் முதலாளியம்மா, தன்னை தரித்திரம் பிடித்தவள் என்று கூறி பலவித சித்ரவதைக்கும் ஆளாக்கியதாக நலினா தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில், தன்னை குவைத் அனுப்புவதாகச் சொல்லி ஏஜெண்டுகள் சவுதிக்கு அனுப்பிவிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

இது குறித்து திருகோணமலை செய்தியாளர் ரத்னலிங்கம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 30 மார்ச், 2008

இலங்கை கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு புதிய தமிழ் கூட்டணி

இலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி ஆகிய தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணியாக போட்டியிட தீர்மானித்துள்ளது.

தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணி புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் போராட்டம் காரணமாகவே 13 வது அரசியல் யாப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபை முறை ஏற்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், முதலமைச்சராக தமிழரொருவர் வரவேண்டும் என்பதே நியாயமானது என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு மாகாணம் சட்ட ரீதியாகவே தற்போது பிரிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று கூறிய அவர் இணைப்பு பற்றி கிழக்கு மாகாண மக்களே தீர்மானிக்க வேண்டியவர்கள் என்றார்.

தமது தமிழ் ஜனநாயக தேசிய முன்னனியில் 5 இடது சாரி கட்சிகள் இணைந்து போட்டியிட முன் வந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்


இலங்கை படையினருக்கு கொசுக்கடியினால் தொற்றுநோய்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் மன்னார், வவுனியா மற்றும் வெலிஓயா எனப்படும் மணலாறு போன்ற வன்னிப்போர்முனைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட கொசுக்களின் பெருக்கத்தினால் சுமார் 200 துருப்பினர் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட படையினருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு அங்கு ஏற்கனவே முகாமிட்டிருக்கும் படையினருக்கும் கொசு வலைகள் போன்றவை கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அப்பகுதிக்கு சென்ற அனுராதபுர வைத்தியசாலை உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள், இந்த தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார்.

 


இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது குறித்து ஐ நா கவலை

ஐக்கிய நாடுகள் சபை ஆசிய பசிபிக் பகுதிக்கான இந்த ஆண்டின் பொருளாதார சமூக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஆசிய பசிபிக் பகுதியில் பல நாடுகள் பொருளாதார நிலையில் வளர்ச்சியடைந்திருந்தாலும் விவசாயத்துறையில் பின்னடைவையே சந்தித்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்த பின்னடைவு கூடுதலாக உள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பற்றி கவலை வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கை, அது தொடர்பில் கொள்கை வகுப்பாளர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தியுள்ளது.

விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பெருமளவில் வறுமைக்கு வழி செய்யும் எனச் சுட்டிக் காட்டியுள்ள அந்த அறிக்கை, இலங்கை அரசு விவசாயத்துறைக்கு புத்துயிரூட்ட வேண்டியதை வலியுறுத்துவதே கொள்கை வகுப்பாளர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்
இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்

இலங்கையில் விவசாயத்துறைக்கு பல சலுகைகளை வழங்கியும் கூட விவசாயத்துறையில் உற்பத்தி திறன் அதிகரிக்கவில்லை என சுட்டிக் காட்டுகிறார் இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன். இதுதான் இலங்கை அரசுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது எனவும் அவர் கூறுகிறார்.

விவசாயத்துறையில் பொருளாதார சீர்திருத்தங்களும், விவசாய அணுகுமுறையில் எந்தவிதமான சீர்திருத்தங்களும் ஏற்படாமாலிருப்பததுதான் இதற்கான அடிப்படை காரணம் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார். விவசாய நிலங்கள் சீர்திருத்திருத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று என்றும் கலாநிதி சர்வானந்தன் கூறுகிறார்.

அரசும் விவசாயிகளும் நெல் உற்பத்தியில்தான் கூடுதலான கவனம் செலுத்தி வருவதும், பணப்பயிர்களில் கவனம் செலுத்தாததும் விவசாயத்துறையின் தேக்கத்திற்கான காரணங்களாக கருதலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார். விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் செய்வதற்கு தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தி, சந்தை வாய்ப்புகளை அதிகரித்து கொடுத்து, நில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே உடனடி தேவை எனவும் கலாநிதி சர்வானந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.


இலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் சுட்டுக்கொலை

இலங்கை காவல்துறையினர்
இலங்கை காவல்துறையினர்

இலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் டாக்டர் அண்ணாமலை நாராயணன் முத்துலிங்கம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணி முடித்து விட்டு அவர் திரும்பி கொண்டிருந்த வேளை, வேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதற்கிடையே, இலங்கையின் கிழக்கு மாகாணசபை தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து முதலமைச்சர் பதவியை வெல்வதற்காக ஒன்றுபட்டு தனித்துவமான சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், அல்லாத பட்சத்தில், மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தனித்துவமான முறையில் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாக இன்று சனிக்கிழமை மூதூர் ஆனைச்சேனை திடலில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர் பி.கே கலில் தெரிவித்துள்ளார்.

 


நீரில் தத்தளிக்கும் விவசாயம் – பெட்டகம்

மழையால் விவசாயம் நாசம்
மழையால் விவசாயம் நாசம்

இலங்கையின் வட மாவட்டங்களிலுள்ள விவசாய நிலங்கள் அண்மையில் பெய்த அடைமழையில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வழமைக்குப் புறம்பாக அறுவடைக் காலத்தில் மழை பெய்து பெரும் நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் ஆற்றாற்றுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் மட்டும் 12,500 ஏக்கர் விவசாய நிலம் மழை நீரில் மூழ்கி நாசமடைந்ததாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.

வட இலங்கையில் மழைப் பாதிப்புகள் குறித்து வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் தொகுத்தளிக்கும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 மார்ச், 2008


மனம் மாறும் தற்கொலை குண்டுதாரிக்கு ரொக்கப் பரிசு – கொழும்பில் அனாமதேய சுவரொட்டி

‘தற்கொலை குண்டுதாரியாக நினைப்பவர்கள் மனதை மாற்றிக்கொண்டால் ரொக்கப் பணம் பரிசாகக் கிடைக்கும்’ என்று கூறும் புதிய சுவரொட்டிகள் இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை செய்துவருகிறார்கள்.

கொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதியில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தச் சுவரொட்டிகளில் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் துண்டிக்கப்பட்டத் தலையைக் காட்டி, அதனருகே நீங்களும் வாழப் பிறந்தவர்தான்… ஏன் குண்டுதாரியாகி மடிய வேண்டும்? என்று எழுதப்பட்டுள்ளது.

கரும்புலிகள் என்று சொல்லப்படுகின்ற விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையில் சேர எண்ணம் கொண்டுள்ளவர்கள் தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் 118 என்று துவங்கும் அரசாங்க தொலைபேசி இலக்கம் ஒன்றை அழைக்க வேண்டும் என்றும் அந்த சுவரொட்டி கூறுகிறது.

அப்படி மனதை மாற்றிக்கொள்பவர்களுக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தொலைபேசி இலக்கம் இந்தச் சுவரொட்டியில் இடம்பெற்றிருந்தாலும், இப்படி ஒரு திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை, இது ஏமாற்று வேலை என்று இராணுவம் கூறுகிறது.

இந்தச் சுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருவதாகக் கூறிய இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார, அந்தச் சுவரொட்டியிலுள்ள தொலைபேசி எண்ணை தான் அழைத்தபோது பதிலே இல்லை என்றும் இது ஒரு ஏமாற்று வேலை என்று தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.


Posted in A9, BBC, Bombers, Child, Children, dead, Eelam, Eezham, Food, Grains, Hoax, ICRC, Imports, Kids, LTTE, Paddy, Prabakaran, Prabhakaran, rice, Soldiers, Sri lanka, Srilanka, Suicide, UN, War, Warriors | Leave a Comment »

Soundaram Ramachandran, Dr. Rajammal Devadas, Sigappi Aachi, Veerammal, Veena Artist Dhanammal, Dr S Dharmambal

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2008

Thiruvengimalai Saravanan

இந்த வார சாதனை மங்கை ஒரு வீரமங்கை. வீரம் என்றதும் வாள் சண்டை, கத்திச் சண்டை, போர் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். இந்த மங்கை சங்கீதத்தில் வீரத்தையும் தீரத்தையும் காட்டிய மங்கை.

இந்த சம்பவத்தைப் பாருங்கள். ஒருமுறை ஒரு நாதஸ்வர கச்சேரி நடந்துகொண்டிருந்தது. வாசித்துக் கொண்டிருந்தவர் நாதஸ்வர மாமேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. மிகப் பெரிய இசை மேதைகளெல்லாம் முன்வரிசையில் அமர்ந்து நாதஸ்வர இன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். வீணை தனம்மாளும் அமர்ந்திருக்கிறார். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத்திலிருந்து ‘தர்பார்’ ராகம் தவமாய் வந்து கொண்டிருந்தது. அதில் லேசாக ‘நாயகி’ ராகமும் கலந்துவிட்டது. சட்டென்று எழுந்துவிட்டார் வீணை தனம்மாள். தர்பாரில் எப்படி நாயகியைக் கலப்பது என்று அவருக்கு கோபம். எல்லோருக்கும்

அதிர்ச்சி. ராஜரத்தினம் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது. ‘தர்பாரில் நாயகிக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கக் கூடாதா?’ என்று சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு சமாளித்தார். பிறகு தனம்மாளுக்காக சுத்தமான தர்பாரை வாசித்தார். இது வீணை தனம்மாளின் கோபத்துக்கு ஓர் உதாரணம். அவரது கோபம் எப்போதும் சங்கீதத்தின் அடிப்படையில் வருவது. கர்நாடக சங்கீதத்தின் மேல் அத்தனை காதல். பாசம். சங்கீதத்துக்கு எந்தவித

சங்கடமும் வந்துவிடக்கூடாது.

இவரது கச்சேரிக்குச் செல்பவர்கள் எப்போதும் சற்று கவனத்துடன் இருப்பார்கள். அரங்கில் சின்ன பேச்சு சத்தம் வந்தால்கூட தனம்மாளுக்குப் பிடிக்காது. வாசிப்பதை நிறுத்திவிடுவார். அரங்கில் சங்கீதம் மட்டுமே

கேட்க வேண்டும் என்பது அவர் விருப்பம். இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவரது இசையைக் கேட்க கூட்டம் அலைமோதும். காரணம் அவரிடமிருந்த இசைக்கலை.

வீணை தனம்மாள் பிறந்தது 1868_ல். ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் அவரது பெயரை மிகுந்த மரியாதையுடன்தான் கர்நாடக சங்கீத மேதைகள் உச்சரிப்பார்கள்.

இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்த தனம்மாளுக்கு சிறு வயதிலேயே இசைமீது ஆர்வம் வந்துவிட்டது. அதற்குக் காரணம் அவரது குடும்பம். இவரது பாட்டி காமாட்சி அந்தக் காலத்தில் சிறந்த வாய்ப்பாட்டு வித்தகி. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஷ்யாமா சாஸ்திரிகளின் சிஷ்யை. இவரது பெண் வழிப் பேத்திதான் தனம்மாள். இவரது தாயார் சுந்தரம்மாளும் நல்ல இசைக்கலைஞர்.

இசைக்குடும்பத்தில் பிறந்துவிட்டதால் ரத்தத்திலேயே இசை ஊறியிருந்தது. என்றாலும் அன்றைய காலத்தில் பெண்கள் இசைத்துறைக்கு வருவது என்பது மிகவும் சிரமமான காரியம். வீட்டைவிட்டே பெண்கள் வெளியே வரக்கூடாது என்றிருந்த சமயத்தில், வீணை தனம்மாளுக்கு வீணை மீது ஆர்வம் பிறந்தது. ஆனால் வீட்டில் தாயாரும், பாட்டியும் வாய்ப்பாட்டுதான் சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் மிகச்சிறு வயதிலேயே அருமையாகப் பாடுவார் தனம்மாள்.

இந்த வாய்ப்பாட்டே அவருக்கு ஒரு வாய்ப்பை பெற்றுத்தந்தது.

வீணை தனம்மாளின் தாயார், மாணிக்க முதலியார் என்ற பெரிய செல்வந்தர் வீட்டில் பூஜைப் பாத்திரங்களை கழுவிக் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார். தாயுடன் தனம்மாளும் அவரது வீட்டுக்குச் செல்வ துண்டு. ஒருமுறை அங்கே தனம்மாள் பாட, மாணிக்க முதலியாருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. தனம்மாளின் தாயாருக்கு சம்பளத்தை ஏற்றிக்கொடுத்தார். இந்தப் பணத்தைக் கொண்டு தனம்மாள் வீணை பயில ஆரம்பித்தார்.

வீணை தனம்மாளின் முதல் கச்சேரி ஏழு வயதில் நடந்தது என்றால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. சகோதரி ரூபாவதியுடன் தனம்மாள் வாய்ப்பாட்டு பாட, வயலின் இசைத்தது தம்பி நாராயணசாமி. இந்த சிறுசுகளின் கச்சேரி மெல்ல பிரபலமடையத் துவங்கியது. தனம்மாளின் திறமை வெளிஉலகுக்கு தெரிய ஆரம்பித்தது.

அந்தக் காலத்தில் மயிலை சவுரியம்மாள்தான் வீணை வாசிப்பில் மிகப் பிரபலம். அவரைப் போல வரவேண்டும் என்பதுதான் தனம்மாளின் லட்சியம். அதற்காக வீணைக் கலையை ஒரு தவம் போலவே கற்றார். சவுரியம்மாளின் சீடரான பாலகிருஷ்ணனிடம் வீணை வாசிப்பின் நுணுக்கங்களை கற்றறிந்தார்.

சங்கீதம் பாடுவதில் இளம் வயதிலேயே நிறைய புதுமைகள் செய்யத் துவங்கினார் வீணை தனம்மாள். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா என்று அனைத்து பாடல்களையும் மேடையில் சீராகப் பாடி சங்கீத ரசிகர்களின் மனம் கவர்ந்தார். எட்டயபுரம் குமார எட்டேந்திரரின் சாகித்யங்களைப் பாடியதில் அவருடைய புகழ் மேலும் பரவியது.

வீணை தனம்மாளின் மிகப் பெரிய புதுமை அவரே பாடி, வீணை வாசித்தது. பொதுவாக கர்நாடக சங்கீத மேடைகளில் பாடுபவர் ஒருவராகவும் வீணை வாசிப்பவர் வேறொருவராகவும்தான் இருப்பார்கள். ஆனால் தனம்மாள் இந்த இரண்டு கலைகளிலும் வித்தியாசமாக இருந்ததால் பாடிக்கொண்டே வீணை வாசிப்பார். இரண்டிலுமே அவரது இசை மேதாவிலாசம் வெளிப்படும். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் பயணித்து இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினார். இவரது கச்சேரிகள் அனைத்திலும் கட்டுப்பாடுகள் நிறைய இருக்கும். யாரும் பேசக்கூடாது, ‘இந்தப் பாடல் வேண்டும்’ என்று துண்டுச்சீட்டு கொடுப்பது, கை தட்டுவது, ‘பேஷ்’ என்று சொல்வது போன்ற பல சங்கதிகளுக்கு அங்கே தடை. இசை ஒன்றே அங்கே ஆட்சி செய்யவேண்டும்.

1916_ல் பரோடாவில் நடந்த இந்திய இசை மாநாட்டில் கச்சேரி செய்ததும்; 1935_ம் ஆண்டு காங்கிரஸ் இல்லத்தில் பத்தாயிரம் பேர் சபையில் கச்சேரி செய்ததும் இவரது வாழ்க்கையில் திருப்புமுனைகள். கொலம்பியா நிறுவனம்தான் அன்றைய இசைக்கலைஞர்களின் இசைத் தட்டுகளை வெளியிட்டு வந்தது. ஆனால் ஒரு சமூகத்து இசைக்கலைஞர்களை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் வீணை தனம்மாளின் எழுச்சியைக் கண்டு, தவிர்க்க இயலாமல் அவரது இசைத்தட்டுகளையும் வெளியிடத் துவங்கியது.

தனக்குப் பிறகு தனது இசை நின்றுவிடக் கூடாது என்பதற்காக தனது வாரிசுகளுக்கும் இசை அறிவை போதித்தார் தனம்மாள். ராஜலட்சுமி, லட்சுமிரத்தினம் என்ற அவரது மூத்த மகள்கள் சிறந்த பாடகிகளாக உருவானார்கள். ஜெயம்மாள், காமாட்சி என்ற அடுத்த இரண்டு பெண்களையும் ‘இரண்டாவது தனம்மாக்கள்’ என்று இசையுலகத்தினர் அழைத்தார்கள். இவர்களில் ஜெயம்மாளின் மகள் பாலசரஸ்வதி பிற்காலத்தில் மிகப் பெரிய நாட்டிய மேதையாக உருவானார். தனம்மாளின் இரண்டு மகன்களில் ரங்கநாதன் மிருதங்கத்திலும், விஸ்வநாதன் புல்லாங்குழலிலும் கெட்டிக்காரர்கள்.

வீணையிலும் வாய்ப்பாட்டிலும் இசை ரசிகர்களுக்கு சந்தோஷப் பரவசத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த தனம்மாளின் வாழ்க்கை அத்தனை சந்தோஷமாக அமையவில்லை. பெரிய குடும்பம். சம்பாதிக்கும் பணம் முழுவதும் குடும்பச் செலவுக்கே சரியாக இருந்தது. தனம்மாளுக்கு நிரந்தர பணக்கஷ்டம்தான். உடல் தளர்ந்து போன காலத்தில் உறவினர்கள் எல்லோரும் தனம்மாளைக் கைவிட்டார்கள். அப்போதும் கக்சேரிகள் செய்தார். இசை ஆர்வத்தால் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை அந்தக் கஷ்டமான சூழலிலும் கற்றார். பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு போக, தனம்மாளின் வீடு ஏலத்தில் போனது. தனது இறுதிக் காலத்தை பேத்தி பாலசரஸ்வதியுடன் கழித்தார்.

1938_ம் வருடம் தனது அறு பதாவது வயதில் தனம்மாள் காலமானார். கர்நாடக இசையுலகம் தனது பேரரசிகளில் ஒருவரை இழந்தது.

ஆனால் அவரது இசை அவரை மறக்கமுடியாத மங்கையாக்கியிருக்கிறது..

நன்றி: டாக்டர் பக்கிரிசாமிபாரதி.

அரசு இசைக்கல்லூரி. சென்னை_28.

பைம்பொழில்மீரானின் ‘தலை சிறந்த தமிழச்சிகள்’ ‘தோழமை’ வெளியீடு. சென்னை_78.


தமிழ் கூறும் நல்லு லகம் அதிகம் அறி யாத பெயர். ஆனால், அறிய வேண்டிய பெயர். வீரம்மாள் என்ற பெயருக்கு ஏற்றபடி வாழ்க்கையை வீரத்துடன் எதிர்கொண்டவர்.

பள்ளியில் படிக் கும்போது விடு முறைக் காலங்களில் கூலி வேலை செய்த, குப்பை சுமந்த, களை எடுத்த, சித்தாள் வேலை செய்த ஒரு பெண், தன் வாழ்க்கையில் செய்த அற்புதமான காரியங்களைத் திரும்பிப் பார்க்கையில் பிரமிப்பாய் இருக்கிறது.

திருச்சி வானொலியில் மிகப் பிரபலமான நிலையக் கலைஞர், ஆதரவற்ற பெண்களுக்காக திருச்சியில் ‘அன்னை ஆசிரமத்தைத் துவக்கி யவர், பெண்கள் தங்கிப் படிக்க ‘நாகம்மை இல்லத்தை நிறுவியவர்… இப்படி அவரது பிற்கால வாழ்க்கையில் சாதித்தவை பல.

சரி, யார் இந்த வீரம்மாள்?

திருச்சி மாவட்டம். திருப்பராய்த்துறையில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட சமுதாயத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தவர் தான் அந்த வீரம்மாள். வேம்பு _ பெரியக்காள் என்ற தம்பதியரின் ஏழாவது குழந்தை. 1924_ம் ஆண்டு மே மாதம்

16_ம் நாள் பிறந்தவர். அப்பா வேம்பு சாதாரண விவசாயத் தொழிலாளி.

வீரம்மாளுக்கு வீட்டில் வைத்த பெயர் வீராயி. குழந்தைக்கு ஏழு வயதாகியும் பள்ளிக்கு அனுப்ப யாரும் முயற்சிக்கவில்லை. அண்ணன்மார்களும் அண்ணிமார் களும் ‘பெண்குழந்தை எதற்குப் படிக்கவேண்டும்’ என்று அலட்சியப்படுத்திவிட்டார்கள். அந்தத்தெரு பையன்கள் எல்லோரும் பக்கத்து ஊரில் இருந்த ஆரம்பப்பள்ளிக்குச் செல்வதைக் கண்டு அவர்களோடு வீரம்மாளும் வீட்டார் யாருக்கும் தெரியாமல் போய்விட்டார். 52 பிள்ளைகள் படித்த அந்த ஆரம்பப் பள்ளியில் வீரம்மாள் மட்டுமே பெண் குழந்தை. அதற்காக வீரம்மாள் வெட்கப்படவோ பயப்படவோ இல்லை.

வீரம்மாளின் கல்வி ஆர்வம் வெளியில் தெரிந்ததும் பெற்றோரும் தடை சொல்லவில்லை. அந்தக் காலத்தில் படிப்பில் ஆர்வமும் பெற்றோரின் ஆதரவும் இருந்தால் மட்டும் கல்வி கிடைத்துவிடாது. அதற்கு வேறு சில தடைகளும் அந்தச் சமயத்தில் உண்டு. இந்தத் தடையைப் பாருங்கள்.

ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்காக நடுநிலைப் பள்ளியில் சேர்க்க வீராயியை அவரது தந்தை அழைத்துச் சென்றார். ‘‘இது பிரா மணக் குழந்தைகளும், சாதி இந்துக் குழந்தைகளும் படிக்கும் பள்ளி. இங்கு ஹரிஜனக் குழந்தையான வீராயியைச் சேர்த்தால், தனியாகத்தான் உட்கார வைக்க முடியும். குழந்தைகள் அவளை கல்லால் அடித்து விரட்டினாலும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.’’ என்று கிராம முன்சீப்பும், தலைமை ஆசிரியரும் சொல்லிவிட்டார்கள். அதனால் அருகில் உள்ள ஜீயபுரத்தில் சேர்ந்து. தினமும் 8 கி.மீ. நடந்தே போய் படிக்க வேண்டியதாகிவிட்டது.

பள்ளியில் இப்படியரு பிரச்சினை என்றால் வீட்டில் ஒரு சிக்கல். வீட்டு வேலைகளைச் செய்தால்தான் பள்ளிக்கு அனுப்ப முடியும் என்று வீட்டில் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள், அதையும் செய்ய வேண்டிய கட்டாயம் அந்தப் பிஞ்சுக் குழந்தை வீராயிக்கு நேர்ந்தது.

ஆறாம் வகுப்பு சரித்திரப் பாடத்தில் மகாவீரர், புத்தர் ஆகியோர் பற்றிய பாடம் ஆசிரியரால் நடத்தப் பெற்றது. அதில் வரும் 1.பொய் சொல்லக் கூடாது. 2. திருடக் கூடாது. 3. உயிர் வதை செய்யக்கூடாது 4. மது அருந்தக் கூடாது. 5. ஒழுக்கம் தவறி நடக்கக் கூடாது என்ற புத்தரின் பஞ்சசீலத்தை வீரம்மாள் பள்ளிப் பருவத்திலேயே கற்று மனதில் பதித்துக் கொண்டார். அவர் இறக்கும்வரை அதைக் கடைப்பிடித்தும் வந்தார். புலால் உண்ணக்கூடாது என்று அன்றே முடிவு செய்து கடைசிவரை அதில் உறுதியாக இருந்தார். தினசரி பள்ளிக்கு நீண்டதூரம் நடந்து செல்லும்போது பாடங்களை மனப்பாடம் செய்து கொண்டே போவார். காலுக்குச் செருப்புகூட கிடையாது. எட்டாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை வீரம்மாள் ஊரிலிருந்து பன்னிரண்டு கி.மீ. தூரம் உள்ள குளித்தலைக்கு ரயில்மூலம் சென்று படித்து வந்தார்.

பள்ளியில் படிக்கும்போதே விடுமுறை நாட்களிலும், கோடை விடுமுறையிலும் கூலி வேலைக்குச் செல்வார். மண் சுமப்பது, வயலுக்கு குப்பை சுமப்பது, வாழைக்கு களை வெட்டுவது, சித்தாள் வேலை என்று செய்து காசு சேர்த்துதான் தன் பள்ளிப் படிப்பை அவரால் தொடர முடிந்தது.

பள்ளி இறுதி வகுப்பு படித்து முடிந்தவுடன் வீரம்மாளுக்குத் திருமணம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இலங்கையைச் சேர்ந்தவரை மணம் முடித்தார்கள். திருமணத் திற்குப் பின்பும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், அவர் கணவர் இதற்கு அனுமதிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் வீரம்மாள் ஆறு மாத கர்ப்பிணி ஆனார். வீட்டில் பல தொல்லைகளுக்கு இடையேயும் தொடர்ந்து படித்தார். ரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டு கி.மீ. நடந்து வந்து படிப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் பயிற்சிப் பள்ளி ஹாஸ்டலிலேயே தங்கிப் படிக்கத் துவங்கினார். இந்தச் சமயத்தில் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு நாள் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து அழைப்பு அவருக்கு வந்தது. ‘யுத்தத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் பேசச் சொல்லி யிருந்தார்கள். வானொலி நிலையத்தில் பத்து நிமிடம் பேசிவிட்டு வந்தார். பிறகு இரண்டுமுறை வெவ்வேறு தலைப்புகளில் ‘பெண் உலகம்’ நிகழ்ச்சியில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

1945 மே மாதம் 10_ம் தேதி அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதே நேரம் திருச்சி வானொலி நிலையத்தில் நிலையக் கலைஞர் பணியும் கிடைத்தது. வீரம்மாள் அந்த வேலையில் சேர்ந்துகொண்டார். தொடர்ந்து, இரண்டா வதாக ஆண் குழந்தையும் பிறந்தது. அப்போதுதான் தன் கணவருக்கு ஏற்கெனவே ஒரு இலங்கைப் பெண்னோடு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அதனால், அவர் கணவரை விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது.

வானொலியில் ஈரோடு, கோவை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சென்னை ஆகிய பகுதி மக்கள் பேசும் பாணியிலே பேசி நாடகங்களில் நடித்தார். வீரம்மாளின் பல குரல் திறமை இங்கு உதவியது. பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பி வந்த கிராம சமுதாயப் பகுதியான ‘ஆப்பக்கார அங்காயி’ என்ற ஒரு நிகழ்ச்சியில், வீராயி ஆப்பக்கார அங்காயி ஆக இருந்து ஆப்பக்கடைக்கு வரும் பலதரப்பட்ட மக்களுடன் பேசி, வானொலி ரசிகர்களை அசத்தினார்.

வானொலி நிலையக் கலைஞர் வேலைக்கு இடையிலும் தாழ்த் தப்பட்ட _ தீண்டப்படாத மக்கள் முன் னேற்றத்திற்காக கிராமம் கிராமமாய் சென்று சமூக சேவை புரிந்தார்.

அந்தக் காலகட்டத்தில் திராவிட இயக்கம் தமிழகத்தில் வேகமாய் பரவிக் கொண்டிருந்தது. வீரம்மாள் தந்தை பெரியாரின் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பெரியார் திருச்சிக்கு வரும் போதெல்லாம் அவர் தங்கி இருக்கும் வக்கீல் வீட்டிற்கு வீரம்மாளை வரும்படி சொல்லி அனுப்புவார். அவரும் தவறாமல் போய் சமூக சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வருவார்.

பேச்சோடு மட்டும் தனது சமுதாயப் பணிகள் நின்றுவிடக் கூடாது என்று நினைத்த வீரம்மாள், கிராமப்புற ஏழை எளிய மாணவிகளுக்கு உதவ நினைத்தார்.

அப்போது கிராம ஆரம்பப் பள்ளிகளில் எங்கோ ஒன்றிரண்டு ஆதிதிராவிட பெண் குழந்தைகள்தான் படித்து வந்தார்கள். அவர்களுக்கும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பு கிடையாது. காரணம், அந்தக் காலத்தில் ஏராளமான கிராமங்களில் உயர்நிலைப் பள்ளிகள் கிடையாது.

அதனால் திருச்சியில் தாழ்த்தப் பட்ட பெண்கள் தங்கியிருந்து உயர் நிலைப்பள்ளியில் படிக்க ஏதுவாக ஒரு விடுதி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு, அதற்காக பல இடங்களில் ஆதரவு திரட்டினார். இப்படி உருவானதுதான் ‘நாகம்மையார் மாணவியர் விடுதி’. அத்துடன் அவரது சேவை நிற்க வில்லை.

திருச்சியில் ‘அன்னை ஆசிரம’த்தை நிறுவி ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள் என்று பலருக்கும் அடைக்கலம் கொடுத்த வேடந்தாங்கல் அவர். திருச்சியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் ‘அன்னை’ என்றால், அது வீரம்மாள் தான் என்று போற்றும் அளவிற்கு சேவை புரிந்தவர். அதனால் தென்னகத்து அன்னை தெரஸா என்றே அழைக்கப்பட்டார்.

பலதரப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து இன்று தமிழ் உலகம் பேசும் சரித்திரமாக மாறியிருப்பதுதான், அவர் உருவாக்கிய ‘தமிழ்நாடு பெண்கள் நலச்சங்கம்’. சின்னஞ்சிறிய திண்ணை ஒன்றில் மூதறிஞர் ராஜாஜியின் வாழ்த்துக்களுடன் பெருந்தலைவர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட இந்தச் சங்கத்தின் தற்போதைய வயது அறுபதுக்கு மேல்.

கணவனை விட்டுப் பிரிந்த பின்னர் வெள்ளை ஆடை அணிய ஆரம்பித்தவர் கடைசிவரை, வெள்ளை ஆடையுடனேயே வாழ்ந்தார். சேவை மனப்பான்மைக்கு அந்த வெள்ளை உடை ஒரு குறியீடாக அமைந்தது.

2006_ல் வீரம்மாள் மறைந்தார். அவர் உருவாக்கிவிட்டுச் சென்றுள்ள பல நலப் பணிகள் இன்றைக்கும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சோகங்களும், சோதனைகளும், துன்பங்களும், போராட்டங்களும் நிறைந்தது வீரம்மாளின் வாழ்க்கை. இத்தகைய சோகங்களின் சோதனை களிலும் துவண்டு விடாது, மற்றவர்களின் வாழ்க்கையிலாவது அத்தகைய சோகங்கள், துயரங்கள் வராமல் பாடுபட்ட வீரம்மாள் உண்மையிலேயே வீர _ அம்மாதான்..


செல்வச் செழிப்பில் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும் எளிமைவாதிகளாகவும் இருப்பது மிக அரிது. இந்த அரிதான குணங்களுடன் கல்வி சேவையும் ஆன்மிக சேவையும் கலந்தால்… அப்படியரு ஆச்சரியமான, அபூர்வமான குணங்களுடன் வாழ்ந்தவர்தான் சிகப்பி ஆச்சி. செட்டிநாட்டு அரசர் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமியின் மனைவி.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் உண்டு என்பதை நாம் காலம் காலமாகக் கேட்டு வருகிறோம். ஆனால் கண்கூடாகப் பார்ப்பது டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமியின் வாழ்க்கையில்தான். அவரது ஒவ்வொரு வெற்றிகரமான செயலுக்குப் பின்பும் சற்று உற்று நோக்கினால் சிகப்பி ஆச்சியின் கைவண்ணம் இருக்கும்.

கைவண்ணம் என்று சொல்லும்போது இங்கே ஒரு சோகமான, அதேநேரம் தன்னம்பிக்கையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.

சிகப்பி ஆச்சிக்கு இடதுகை பாதி செயலிழந்து விரல்கள் மூடியேதான் இருக்கும். அதேபோல் இடது கால் பலவீனமடைந்து சற்று விந்திவிந்திதான் நடப்பார். ஆனால் சாதாரணமாய் பார்ப்பவர்களுக்கு இது தெரியாது. இந்த சோகம் அவருக்கு பக்கவாத நோயால் ஏற்பட்டது. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அந்தக் குறைகளுடன்தான் அத்தனை காரியங்களையும் செய்திருக்கிறார் என்றால், அவர் மறக்க முடியாத மங்கைதானே?

சிகப்பி ஆச்சி பிறந்தது 1938_ம் வருடம். செட்டிநாட்டு பள்ளத்தூரில் இவரது குடும்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. ராணி மெய்யம்மையின் உடன்பிறந்த தம்பி உ.அ.உ.க.ராம.அருணாசலம்தான் சிகப்பி ஆச்சியின் தந்தை. மிக செல்வச் செழிப்பான குடும்பம். செல்வம் குவிந்திருந்தாலும் அந்தக் குடும்பத்தினர் அதிகம் தேடியது கல்விச் செல்வத்தை. பெண்களை பள்ளிக்கு அனுப்பத் தயங்கிய காலகட்டம் அது. ஆனால், நகரத்தார்கள் பொருட்செல்வத்தைத் தேடியது மட்டுமில்லாமல் எப்போதும் கல்விச் செல்வத்தையும் சேர்த்தே தேடினார்கள். சிகப்பி சென்னையிலுள்ள குட் ஷெப்பர்ட் கான்வென்ட்டில் பள்ளிக் கல்வியை முடித்து, பிறகு ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இங்கே இன்னொரு முக்கிய விஷயம், பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பில் சிகப்பி ஆச்சிதான் முதலிடம்.

சிகப்பி ஆச்சியின் முறைமாப்பிள்ளைதான் எம்.ஏ.எம்.ராமசாமி. சிறுவயதிலிருந்தே இருவரும் ஒன்றாய் விளையாடி வளர்ந்தவர்கள். இவர்களுக்குத் திருமணம் நடக்கும்போது எம்.ஏ.எம்.முக்கு இருபத்தொரு வயது. சிகப்பி ஆச்சிக்குப் பதினாறு. கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். செட்டிநாட்டு அரசரின் குடும்பத்தில் மருமகளாய் அடியெடுத்து வைத்த பிறகும் தனது படிப்பைத் தொடர்ந்தார். இதற்கு அவரது கணவரும் அவரது குடும்பத்தாரும் நல்ல ஒத்துழைப்புத் தந்தார்கள்.

ராஜா வீட்டின் மருமகள் என்பது சாதாரண விஷயமல்ல. நிறைய குடும்பப் பொறுப்புகள் உண்டு. செட்டிநாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியாருக்கு இரண்டு மகன்கள். குமாரராஜா முத்தையா மூத்தவர். இவரது மனைவி குமார ராணி மீனா முத்தையா. எம்.ஏ.எம். ராமசாமி இளையவர். இவரது மனைவிதான் சிகப்பி ஆச்சி.

ஒரே வீட்டில் இரண்டு மருமகள்கள் இருந்தாலும் இருவருக்குள்ளும் எந்த சச்சரவோ சண்டையோ வந்தது கிடையாது. இருவரும் மிக ஒற்றுமையாக குடும்பக் காரியங்களைக் கவனித்தார்கள். அவர்களின் ஒற்றுமை செட்டிநாடு முழுவதும் பிரசித்தி பெற்றது.

குடும்பப் பொறுப்புகள் இருந்தாலும் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. பொதுவாய் ‘தாயைப்போல பிள்ளை’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், இங்கு மாமியாரைப் போல் மருமகள். மாமியார் ராணி மெய்யம்மைக்கு கல்வி சேவையில் ஆர்வம் அதிகம். ஏழை மக்களுக்குக் கல்வி கொடுக்கவேண்டும் என்பது அவர்களது தீராத ஆசை. அந்த சேவை மனப்பான்மை சிகப்பி ஆச்சிக்கும் வந்தது.

சென்னை அடையாறிலுள்ள ராணி மெய்யம்மை பள்ளி இவரது முயற்சியில் உருவானதுதான்.

1973_ம் வருடம் துவங்கப்பட்ட இந்தப் பள்ளியின் செயலாளராக தனது இறுதி மூச்சு வரை இருந்தார் சிகப்பி ஆச்சி. இந்தப் பள்ளியைத் தொடர்ந்து ஏழு பள்ளிகளையும் சென்னையில் துவக்கினார். இந்தப் பள்ளிகளில் கிட்டத்தட்ட பதினான்காயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளைத் துவக்கியதோடு அவரது பணி நின்றுவிடவில்லை. ஒவ்வொரு நாளும் அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று அன்றாடப் பணிகளைக் கவனிப்பார். பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தையும் நிர்வகித்துக்கொண்டு பள்ளிகளைக் கவனித்துக் கொள்வது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. ஆனால் சிகப்பி ஆச்சிக்கு அது எளிதாய் வந்தது. காரணம் அவர் நேரத்தை மிகவும் திட்டமிட்டு பயன் படுத்துவதில் கெட்டிக்காரர்.

அதிகாலை ஐந்து மணிக்கு அவரது தினசரி வாழ்க்கை துவங்கும். இரவு படுக்கச் செல்லும் நேரம் பதினொன்று. ஆறு மணி நேரம்தான் தூக்கம். பல செல்வந்தர் பெண்களைப் போல் மதியம் உறங்குவது, தோழிகளுடன் அரட்டையடிப்பது போன்ற பழக்கங்கள் சிகப்பி ஆச்சிக்குக் கிடையாது. உழைப்பு, எளிமை இவைதான் அவர் அதிகம் நம்பிய இரண்டு விஷயங்கள்.

நேரத்தை உபயோகமாய் செலவழிப்பது போன்று இன்னொரு நல்ல பழக்கமும் சிகப்பி ஆச்சியிடம் இருந்தது. அது, டைரிக் குறிப்புகள் எழுதுவது. உறவினர்கள், நண்பர்கள், முக்கியமானவர்கள் பற்றிய அத்தனை விவரங்களையும் அதில் எழுதி வைத்திருப்பாராம். கிட்டத்தட்ட முப்பது டைரிகளில் இந்தக் குறிப்புகள் இருந்தனவாம். இந்த டைரிகள் மூலம் எந்த உறவினர், நண்பர் பற்றிய விவரங்களையும் சட்டென்று தெரிந்துகொள்ள இயலும்.

பள்ளிகளைத் துவக்கிய சிகப்பி ஆச்சி சமூகத்துக்குப் பயன்தரும் இன்னொரு காரியத்தையும் செய்தார். சென்னைக்குப் படிக்க வரும் பெண்கள் தங்க ஒரு பெண்கள் விடுதியையும் எத்திராஜ் சாலையில் முப்பது வருஷத்திற்கு முன்பு துவக்கினார். ராணி மெய்யம்மை ஹாஸ்டல் என்றழைக்கப்படும் அந்தப் பெண்கள் விடுதி, இன்றும் சென்னையில் மிகப் பிரபலமானது.

கல்விப் பணி ஒருபுறமிருக்க, ஆன்மிகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. கணவர் எம்.ஏ.எம். ராமசாமி ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து சபரிமலைக்குச் சென்று வருவார். அதனால் சென்னையில் ஒரு ஐயப்பன் கோயிலைக் கட்டவேண்டும் என்று தீர்மானித்தார் சிகப்பி ஆச்சி. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதன் விளைவுதான், ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஐயப்பன் கோயில். அதேபோல் சிதம்பரம் அண்ணாமலைபுரத்திலும் ஐயப்பன் கோயிலைக் கட்டினார்.

கல்விப் பணி, ஆன்மிகப் பணியைத் தொடர்ந்து சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சிகப்பி ஆச்சி. அவரும் குமாரராணி மீனாவும் இணைந்து சென்னைக்கு அருகே உள்ள நாவலூர் கிராமத்தைத் தத்தெடுத்து அந்தக் கிராமத்துக்கு வேண்டிய சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.

சென்ற மாதம் கேளம் பாக்கத்தில் நூறு ஏக்கர் பரப் பளவில் ‘செட்டிநாடு ஹெல்த் சிட்டி’ என்ற ஒரு மருத்துவ நகரத்தின் திறப்புவிழா நடந்தது.

மருத்துவக் கல்லூரிகள், நர்சிங் பயிற்சிக் கல்லூரி, மருத்துவமனை, மருந்தியல் கல்லூரி என முழுக்க முழுக்க மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவ நகரம் அது. இந்த நகரம் வருவதற்கு மிக முக்கியக் காரணமாயிருந்தவர் சிகப்பி ஆச்சி. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் திட்டம் துவக்கப்படும்போது உயிரோடு இருந்தவர், அது முடிக்கப்படும்போது நம்முடன் இல்லை. சென்ற வருடம் சிகப்பி ஆச்சி காலமாகிவிட்டார்.

அவர் காலமாகிவிட்டாலும் அவர் உருவாக்கியவை காலம் காலமாக அவரது பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.றீ

மாமியார் மெச்சியவர்!

மாமியார் ராணி மெய்யம்மையார் வெளிநாட்டிற்குச் செல்லும் போதெல்லாம் கூடவே தனது சின்ன மருமகள் சிகப்பி ஆச்சியை அழைத்துச் செல்வது வழக்கம். மாமியாருக்கு உறுதுணையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளராகவும் இருந்தார். ஆங்கில இலக்கியம் படித்ததால் மாமியாருக்கு அழகாக மொழி பெயர்த்துச் சொல்வது அவருக்கு எளிதாக இருந்தது. தங்கள் பள்ளியில் வேலை செய்த ஆசிரியர்கள் பணியில் ஓய்வு பெறும் நாளில் ஆச்சியே வீட்டிலிருந்து குறைந்தது பத்து வகையான பலகாரங்களைச் செய்துகொண்டு வந்து அனைவருக்கும் விருந்து படைப்பது இவருடைய வழக்கமாக இருந்தது. பெண்களுக்கென்று உருவான பள்ளிகளுக்கு தன் மாமியார் பெயரையும், ஆண்களுக்கென்று உருவாக்கிய பள்ளிகளில் தன் மாமனார் பெயரையும் சூட்டுவது இவரது வழக்கம்.

‘‘அய்த்தான் எனக்கு ஒண்ணுமில்ல!’’

சிகப்பி ஆச்சியைப் பற்றி அவரது கணவர் செட்டிநாட்டரசர் டாக்டர். எம்.ஏ.எம்.ராமசாமியிடம் கேட்டோம். ‘‘நாங்கள் கணவன் மனைவியாக 42 வருடங்கள் வாழ்ந்தோம். அதற்கு முன்னால் சிறுவயதிலிருந்தே எனக்கு நல்ல பழக்கம். ஒருமுறை நாங்கள் திருப்பதிக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். வழக்கமாய் அதிகாலைப் பயணங்களின்போது கார் டிரைவர் குளித்துவிட்டுத்தான் வண்டி எடுப்பார். ஆனால் அன்று அவர் தூக்கக் கலக்கத்துடனே வண்டி ஓட்டியிருக்கிறார். திருப்பதி மலையில் ஏறும்போது ஒரு திருப்பத்தில் கார் தலைகீழா கவிழ்ந்து மலையில் உருளத் துவங்கியது. இரண்டாயிரம் அடி பள்ளம். எங்கள் புண்ணியம் கார் மரத்தில் சிக்கி அப்படியே தொங்கியது. எல்லோருக்கும் நல்ல காயம். சிகப்பிக்கு படுகாயம். மேலெல்லாம் ரத்தம். மெல்ல அவரை மேலே தூக்கினோம். என்மேல் உள்ள ரத்தத்தைப் பார்த்துவிட்டு என் ரத்தத்தைக் கழுவப் பார்த்தாங்க. நான் தடுத்து, ‘உனக்குத்தான் ரொம்ப காயம்’ என்றேன். அதற்கு சிகப்பி, ‘அய்த்தான் எனக்கு காயமில்லை. உங்களுக்கு இப்படியாகிவிட்டதே’ என்று சொல்லிக்கொண்டே மயங்கி விழுந்துவிட்டாங்க. ஒரு வாரம் சுயநினைவு இல்லாம இருந்தாங்க. என்னுடைய உலகமாய் இருந்தாங்க. இப்போது நான் தனி உலகமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்று சொல்லும்போது வார்த்தைகள் தடுமாறுகிறது. அது தடுமாற்றம் அல்ல மனைவி மேல் அவர் வைத்துள்ள பாசம்.


பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களில் இரண்டு வகையினர் உண்டு. எல்லா வசதிகளும் இருந்து பொதுத் தொண்டில் ஈடுபடுவது ஒரு ரகம். எந்த வசதியும் இல்லாமலேயே பொதுப்பணிகளில் தங்களை முற்றிலுமாக ஈடுபடுத்திக்கொள்வது மற்றொரு ரகம்.

இதில் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர் டாக்டர் தருமாம்பாள்.

பணம், பதவி எதுவுமே இல்லாமல் மக்களுக்குத் தொண்டு செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய வீரத்தமிழன்னைஅவர். தனது இறுதிக் காலம் வரை பொதுத் தொண்டிற்காக கடுமையாக உழைத்தவர். மனிதாபிமானத்தை மூலதனமாக வைத்து, எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காத புனிதமான தொண்டுள்ளம் அவருடையது. அதனால்தான் மறக்கமுடியாத மங்கையாக மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்திருக்கிறார் டாக்டர் தருமாம்பாள்.

தஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடிதான் இவரது சொந்த ஊர். அப்பா சாமிநாதன். அம்மா நாச்சியார். வேளாண் செட்டியார் வகுப்பைச் சேர்ந்த இவரது தந்தை சாமிநாதன் மிகப் பெரிய அளவில் துணி வியாபாரம் செய்தவர். கரந்தை தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் பிள்ளை நண்பர். இவரது தாத்தா திவான் பேஷ்கராக இருந்தவர்.

இவருக்கு அம்மா அப்பா வைத்த பெயர் சரஸ்வதி. இவரது பூர்வீகம் கருந்தட்டாங்குடியாக இருந்தாலும், இவர் பிறந்தது திருவையாறு. ஆண்டு 1890. இவ்வூர் இறைவன் பெயர் அய்யாறப்பன். இறைவி அறம் வளர்த்தாள். இறைவியை தர்மசம்வர்த்தினி என்று பேச்சு வழக்கில் அழைப்பதுண்டு. அதைத்தான் பின்னர் தருமாம்பாள் என்று சுருக்கி அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தப் பெயரே இவருக்கும் நிலைத்துவிட்டது. தருமாம்பாள் இளம்வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிட்டதால், ‘லக்குமி’ என்ற பெண்தான் இவரை வளர்த்தார். பெற்றோரை இழந்ததால் அவர் பள்ளிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பையும் இழக்க நேரிட்டது. இருந்தாலும், தருமாம்பாள் சும்மா இருந்துவிடவில்லை. தானாகவே கல்வி கற்கத் தொடங்கினார். தமிழ் மீது இருந்த அளவுகடந்த பற்றின் காரணமாக வேட்கை சீவகாருண்யம் சுப்ரமணியம், திருநாவுக்கரசு முதலியார், பண்டித நாராயணி அம்மையார் ஆகியோரிடம் சென்று தமிழ் கற்றார். இன்னும் சில பண்டிதர்களைத் தேடிப்போய் தெலுங்கில் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் பேசும் திறனை வளர்த்துக்கொண்டார்.

நாடகத் தமிழ் மீது இவருக்கு இருந்த பற்றினால், அந்நாளில் நாடக நடிகராக இருந்த குடியேற்றம் முனுசாமி நாயுடுவைக் காதலித்து மணந்துகொண்டார். முனுசாமி நாயுடு ராஜபார்ட் வேஷம் போடுவதில் வல்லவர். கணவரோடு ஆரம்பத்தில் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தாலும் சென்னையில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார்.

மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறவியிலேயே அவர் ரத்தத்தில் ஊறியிருந்தது. அதற்குப் பயன்படும் விதத்தில் அவர் சித்த மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்தார்.

1930_களின் தொடக்கத்தில் சென்னையில் மருத்துவர்கள் மிகமிகக் குறைவு. வேப்பேரி கங்காதர தேவர், தியாகராய நகர் எஸ்.எஸ்.ஆனந்தன், சைதாப் பேட்டை தணிகாசல வைத்தியர், தங்கசாலை சி.த.ஆறுமுகம்பிள்ளை போன்ற ஒரு சில சித்த வைத்தியர்களே புகழ்பெற்ற மருத்துவர்களாக அறியப்பட்டனர். அந்த வரிசையில் பெத்துநாய்க்கன் பேட்டையில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்தவர்தான் டாக்டர் தருமாம்பாள். மருத்துவ சேவைதான் இவருக்கு மக்கள் தொடர்பை அதிகளவு ஏற்படுத்திக் கொடுத்தது.

தருமாம்பாள் மருத்துவத்தோடு நிற்காமல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்கள் உயர்வு, விதவை மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என்று பல தரப்பட்ட பொதுத்தொண்டில் ஈடுபாட்டுடன் செயல்படத் தொடங்கினார். நோய்க்காக மட்டும் தேடி வராமல் பல பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகவும் இவரைத் தேடி பலர் வரத் தொடங்கினர். நேரடியாக அவரே தலையிட்டு பல பிரச்னைகளைத் தீர்த்து வைக்கத் தொடங்கினார். இதனால் அவரது புகழ் பரவத் தொடங்கியது.

தந்தை பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்ட தருமாம்பாள் அவரைப் போலவே விதவைத் திருமணம், கலப்பு மணம் ஆகியவற்றைத் துணிச்சலாக நடத்தி வைத்தார். வேலை கேட்டு வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து, அவர்களுக்கு விதவைகளைத் திருமணம் செய்து வைத்தார். எந்த ஒரு பிரச்னை என்றாலும் தருமாம்பாளிடம் சென்றால் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பி மக்கள் அவரைத் தேடி வரத் தொடங்கிவிட்டனர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறைத்தண்டனை பெற்றார். இதில் பெண்கள் பலரும் கலந்துகொள்ள முன் உதாரணமாக இருந்ததே தருமாம்பாள்தான். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியோடு இணைந்து மக்கள் முன்னேற்றப் பணிக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

தருமாம்பாளுக்கு இருந்த செல்வாக்கிற்கு அவர் எவ்வளவோ வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பொருளாசை அற்றவராக இருந்தார். தமது வீட்டை மகளிர் சரணாலயமாகவே மாற்றியிருந்தார். கணவனால் கைவிடப்பட்ட பெண்களை மீண்டும் அவரவர் கணவர்களோடு சேர்ந்து வாழ வைத்திருக்கிறார். ஏராளமான பெண்களுக்குக் கலப்புத் திருமணம் செய்து வைத்தார். படிக்க வசதியற்ற பெண்கள் கல்வி பயில செல்வந்தர்களை உதவ வைத்திருக்கிறார். ஏழைப் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார். இப்படி அவரது தொண்டுப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

புகழின் உச்சியில் இருந்தவர்கள்கூட தருமாம்பாளின் அறிவுரையைக் கேட்டு நடக்கும் அளவிற்கு அவரது பண்பு வளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர் பற்றி காதில் விழுந்த தவறான செய்திகளைக் கேள்விப்பட்டு, அவரை அழைத்து புகழுக்கும் உடலுக்கும் கேடு வராமல் நடந்து கொள்ளுமாறு அறிவுரை கூற, அவரும் அதன்படி மாறி நடந்தது பலரை வியப்பால் ஆழ்த்தியது.

1944_ல் ‘இந்து நேசன்’ பத்திரிகையை நடத்தி வந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாகவதருக்கும், கலைவாணருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அந்தமான் தீவில் தண்டனையைக் கழிக்க வேண்டும் என தீர்ப்பானது. கலைவாணரின் மனைவி டி.ஏ.மதுரம் செய்வதறியாது தருமாம்பாளை அணுகினார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சிலுக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இது சாதாரண காரியமல்ல என்றாலும், டாக்டர் தருமாம்பாள் சென்னையில் உள்ள பலரை அணுகி பொருள் திரட்டி, அந்த வழக்கினை நடத்தி வெற்றியும் பெற்றார். அப்போது கலை உலகமே தருமாம்பாளை எழுந்து நின்று வணங்கியது.

தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் தமிழ் அறிஞர்களுக்காகவும் தருமாம்பாள் பல வழிகளில் உதவியுள்ளார். கருந்தட்டான் குடியில் இருந்த தனது வீட்டை கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 1940_க்கு முன்பு வரை தமிழ் ஆசிரியர்களுக்கு சமூகத்திலும் அரசியலிலும் ஒரு பெரிய மரியாதையே இல்லாமல்தான் இருந்தது. பள்ளி, கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் இரண்டாந்தரமாக ஒதுக்கப்பட்ட நிலை. ஊதியத்திலும் அவர்களுக்கு அந்த நிலை இருந்ததை எதிர்த்து பெரிய போராட்டமே நடத்தினார். பல கூட்டங்களில் பேசினார்.

‘‘தமிழாசிரியர் களுக்கு சம்பளம் கூட்டவில்லை என்றால், பெண்களை எல்லாம் ஒன்று கூட்டி, ‘இழவு வாரம்’ கொண்டாடுவோம்’’ என்று அரசுக்கே எச்சரிக்கை விடுத்தார். அப்போது கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியார் தருமாம்பாளின் கோரிக்கையையும் போராட்டத்தின் நியாயத்தையும் உணர்ந்து ஏனைய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழாசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க உத்தரவிட்டார். இது தருமாம்பாள் மூலம் தமிழுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

தருமாம்பாள் திராவிட இயக்கங்களில் பங்கு கொண்டு அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். என்றாலும், பொதுத்தொண்டு என்று வரும்போது கட்சிக்கு அப்பாற்பட்டு நின்றே தொண்டு செய்ய விரும்பினார். பொதுப் பிரச்னைகளுக்காக மற்ற அரசியல் இயக்கங்களுடன் அனுசரணையாகவே சென்றார்.

இரண்டாம் தமிழிசை மாநாட்டிற்கு தருமாம்பாள் வரவேற்புக் குழு உறுப்பினராக இருந்து பணி ஆற்றினார். இன்று தமிழிசைப் பாடல்கள் மேடையில் முழங்குகிறது என்றால், அதில் அம்மையாரின் பங்கும் உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் தனக்காக வாழாமல், தனது உழைப்பு, சிந்தனை அனைத்தையும் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இசை, தமிழ் மக்கள் இவற்றுக்காகவே அர்ப்பணித்த தருமாம்பாளுக்கு 1951_ல் திரு.வி.க. தலைமையில் நடந்த மணி விழாவில் தமிழறிஞர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார் ‘வீரத்தமிழன்னை’ என்ற பட்டத்தை வழங்கினார்.

வீரத் தமிழன்னை பட்டம் பெற்ற தருமாம்பாள்தான் ஈ.வெ. ராமசாமி நாயக்கருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தையும், தியாகராஜ பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்தையும், எம்.எம். தண்டபாணி தேசிகருக்கு ‘இசையரசு’ பட்டத்தையும் வழங்கினார்.

மக்கள் தொண்டு ஒன்றை மட்டுமே தன் இறுதி மூச்சுவரை கொண்டு போராடி வெற்றி கண்ட இந்த வீரமங்கையின் மூச்சு 1959_ம் ஆண்டு தனது 69ஆவது வயதில் நின்று போனது.

பெரும் பதவிகளை விரும்பாமல், பண வசதி ஏதுமின்றி அம்மையார் செய்த பல மக்கள் பணிகள் பதிவு செய்யப்படாமலேயே போய்விட்டன. அவற்றை வெளி உலகிற்குக் கொண்டு வருவது ஒன்றே அம்மையாருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்றிக் கடனாக இருக்கும்..

நன்றி : க. திருநாவுக்கரசு, எழுதிய ‘திராவிடஇயக்க வேர்கள்’
நக்கீரன் பதிப்பகம், சென்னை_23.
பைம்பொழில் மீரானின்
‘‘தலை நிமிர்ந்த தமிழச்சிகள்’’ தோழமை வெளியீடு, சென்னை_78.


பிறந்தோம். படித்தோம். வளர்ந்தோம். வாழ்ந்தோம். என்று சிலர் வாழ்க்கை இருக்கும்.

ஆனால் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை அப்படியிருப்பதில்லை. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் சரித்திரங்களாகி விடுகின்றன.

அப்படி ஒரு சரித்திரப் பெண்தான் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்.

எல்லோரும்தான் கல்லூரி சென்று பாடம் படிப்பார்கள். ஆனால், எத்தனைபேர் தான் படித்த பாடத்துக்காகவே ஒரு தனிப்பட்ட கல்லூரியைத் துவக்கியிருக்கிறார்கள்? அது ராஜம்மாள் ஒருவர்தான்.

கல்வி. இதுதான் ராஜம்மாளின் இலட்சியம், ஆர்வம், ஆசை, கனவு எல்லாம்.

ஒரு சின்ன சம்பவம். ராஜம்மாளுக்கு திருமணம் நடக்கிறது. அப்போது அவருக்கு வயது பதினெட்டு. பள்ளி இறுதி வகுப்பு படித்திருந்தார். திருமணமானதும் தன் கணவரிடம் அவர் முதலில் பேசியது தனது மேற்படிப்பு பற்றித்தானாம். தன்னை கல்லூரி சென்று படிக்க அனுமதிக்குமாறு கேட்டிருக்கிறார். கணவர் பெருந்தன்மைக்காரர். மனைவியின் மனம் நோகாமலிருக்க கல்லூரி படிப்புக்காக மனைவியை சென்னை அனுப்பினார். இப்போது படிக்கும்போது இந்த விஷயங்கள் சாதாரணமானதாய் தெரியலாம். ஆனால், இந்த சம்பவம் நடந்தது 1937_ல் என்பதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

ராஜம்மாளுக்கு படிப்பின் மீது அத்தனை ஆர்வம். நிறையப் படிக்க வேண்டும். நிறைய பட்டங்கள் பெற வேண்டும் என்றெல்லாம் ஆசை. அதற்கு அவர் தந்தையும் ஒரு காரணம்.

ராஜம்மாளின் தந்தை பெயர் பாக்கியநாதன் மைக்கேல். வனத்துறை அதிகாரி. பூர்வீகம் நாங்குநேரி அருகிலுள்ள பார்கவி நேரில் கிராமம் என்றாலும், அவர் பணிபுரிந்து கொண்டிருந்தது, திருவண்ணாமலை அருகிலுள்ள செங்கம் பகுதியில். ராஜம்மாள்தான் மூத்த பெண். அவரைத் தொடர்ந்து எட்டு குழந்தைகள். பாக்கியநாதனுக்கு ஒரு விருப்பம். தனது பிள்ளைகள் அனைவரும் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்று. இந்த விருப்பம் சாதாரணமாய் எல்லோருக்கும் வருவதுதான். ஆனால் இதைத் தொடர்ந்து வரும் விஷயத்தில் அதிசயம் இருக்கிறது. தனது பிள்ளைகளுக்குப் படிப்பறிவு இல்லாத குடும்பங்களில்தான் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று. விரும்பினார். படிப்பறிவு இல்லா குடும்பங்களிலிருந்து மருமகள், மருமகன் அமையும்போது, அந்தக் குடும்பங்கள் தன் குடும்பத்துடன் இணையும். படிப்பறிவு பெறும். அந்தக் குடும்பத்தினரும் அவர்களது உறவினரும் கல்வியின் அருமையை உணர்வார்கள் என்பது பாக்கியநாதனின் எண்ணம். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு சொந்த ஊரில் வேலை பார்த்தால் அங்கே உறவினர்கள் கட்டாயப்படுத்தி அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து விடு வார்கள். படிக்க விடமாட்டார்கள் என்று அஞ்சியே சொந்த ஊருக்கு வராமல் இருந்தாராம். அந்த அளவு படிப்பின்மேல் பிரியம். இப்போது புரிகிறதா மகள் ராஜம்மாளுக்குக் கல்வி மீது வந்த காதலுக்கான காரணத்தை.

எப்போதுமே நல்லவர்களை விதி அதிகம் சோதிக்கும். அந்தப் பொல்லாத விதி ராஜம்மாளின் வாழ்க்கை யிலும் பொய்க்கவில்லை. திடீரென நோய்வாய்ப்பட்டார் அவரது தந்தை. தான் இறப்பதற்கு முன் தன் மூத்த மகள் ராஜம்மாளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். அதனால் பள்ளிப் படிப்பு படித்ததுமே ராஜம்மாளின் திருமணம் நடந்தது. சொந்த தாய்மாமன்தான் மாப்பிள்ளை. திருமணமான சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட, குடும்பம் கஷ்டத்தில் தத்தளிக்கத் துவங்கியது. தாயின் நகைகள்தான் குடும்பத்தைக் காப்பாற்ற உதவியது.

கணவரின் உதவியுடன் கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்து ராணி மேரி கல்லூரியில் சேர்ந்தார் ராஜம்மாள். வேதியியல் பிரிவில் சேர்ந்தார். மூன்றாண்டுகள் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கத்துடன் தேர்ச்சியடைந்தார். அதன்பின் மேற்படிப்புக்கு ‘மனையியல்’ பிரிவுக்கு மாறினார். இப்போது ‘ஹோம் சயின்ஸ்’ என்று ஸ்டைலாக அழைக்கப்படும் படிப்புதான் மனையியல். அந்தக் காலத்தில் இதுவும் ஒரு சாதனைதான். எல்லோரும் இயற்பியல், வேதியியல், என்று படித்துக்கொண்டிருக்க, மனையியல் படிக்க முன்வந்தார் ராஜம்மா. இந்தப் படிப்பை அவர் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இது புதிய அறிவியல் என்பதால்.

நாட்டில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த சூழல் அது. மாணவியாக இருந்த ராஜம்மாள் தானே கை ராட்டையில் நூல் நூற்று, அதனால் தயாரிக்கப்பட்ட கதராடையேதான் அணிவார்.

மேற்படிப்பு முடிந்ததும் படித்த கல்லூரியிலேயே பேராசிரியை வேலை கிடைத்தது. இதில் ராஜம்மாளுக்கு மகிழ்ச்சி. இப்போதாவது தனது குடும்பத்தினருக்கு உதவ இயலுமே என்று தனது சம்பளத் தில் பாதியைத் தனது அம்மாவுக்குக் கொடுத்து விடுவார்.

இந்தியா சுதந்திரமடைந்த வருடம். அமெரிக்காவில் மனையியல் குறித்து ஆராய்ச்சி செய்ய ராஜம்மாளுக்கு வாய்ப்பு வந்தது. அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அன்றைய கல்வி அமைச்சர் அவிநாசிலிங்கத்தைச் சென்று சந்தித்தார். அமைச்சருக்குச் சந்தோஷம். அப்போதெல்லாம் அமெரிக்காவில் ஆராய்ச்சிப் படிப்பு என்பது மிகப் பெரிய விஷயம். அமெரிக்காவில் ஒஹையோ பல்கலைக்கழகத்தில் ராஜம்மாளின் ஆராய்ச்சிப் படிப்புத் துவங்கியது. மூன்று ஆண்டுகளில் டாக்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். மூன்றாண்டுகளில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றது இன்னொரு சாதனை. மனையியல் படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கிய முதல் இந்தியப் பெண் ராஜம்மாள் தேவதாஸ்தான்.

இன்று நமது பள்ளி மாணவர்களுக்கு மதியம் இலவச சத்துணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு முதல் சுழி போட்டவர் ராஜம்மாள் தேவதாஸ் என்பது இன்னொரு ஆச்சர்யமான செய்தி, ஏழை, எளிய மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு சமச்சீர் சக்தி கொண்ட உணவு கிடைப்பதில்லை, பள்ளியிலேயே மதியம் சத்தான உணவு கிடைத்தால் கல்வியும் வளரும், கற்பவர்களும் வளர்வார்கள் என்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

இவரது திறமைகளை அறிந்து அவிநாசிலிங்கம், மனையியல் படிப்புக்காகவே கோவையில் அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரியைத் துவக்கினார். அதற்கு ராஜம்மாள் தேவதாஸை முதல்வராக்கினார். அந்தக் கல்லூரி வளர்ந்து இன்று பல்கலைக்கழகமாக மாறி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பின்பு வேந்தராகவும் பணியாற்றினார். கல்லூரியில் படித்த காலத்தைப் போலவே எப்போதும் கதராடைதான். எளிமை, வார்த்தைகளில் இனிமை. இதுதான் ராஜம்மாள்.

வாரம் ஒருமுறை மாணவியர்கள் கதர் சேலை அணிய வேண்டும். வாரம் இரண்டு முறை கைத்தறிச் சேலை அணிய வேண்டும் என்று மாணவிகளுக்கு உத்தரவிட்டார். அந்த வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இந்தச் சின்ன உத்தரவினால் பல நெசவாளர்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இவருடைய பெண் கல்விச் சேவை, மனையியல் துறைச் சேவை இவற்றைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது. ஐ.நா.சபையில் சத்துணவு குறித்து பேசியிருக்கிறார். எழுபத்தொன்பதாவது வயதில்கூட டெல்லியில் நடந்த உலக வங்கிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். எங்கோ தமிழகத்தின் தென்கோடி கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் சாதனைகளைப் பாருங்கள்.

‘அம்மா’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ், 2002ஆம் வருடம் 83_வது வயதில் காலமானார்.

அவர் இன்று இல்லை. ஆனால் அவரது கல்விச் சேவை இன்றும் அவரது சாதனைகளைச் சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றது..


திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பத்தா வது கி.மீ.இல் உள்வாங்கியிருக்கிறது காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம். பல ஆயிரக்கணக்கான ஏழை எளிய கிராம மக்களின் கல்லூரிக் கனவுகளை நனவாக்கிய கல்விக்கூடம் அது. அனாதைகள், அபலைகள், ஆதரவற்ற பெண்கள், ஏழைகள் என்று சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்த அத்தனை மக்களுக்கும் இன்றைக்கும் கல்வி கொடுத்து, சுயதொழில் கற்றுக்கொடுத்து ஆதரித்து வரும் அறக்கட்டளை அது.

இன்று பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இந்தியாவின் முதுகெலும்பாய் விளங்கும் பல ஆயிரம் கிராமங்களுக்குக் கல்விக்கண் திறந்துகொண்டு இருக்கும் அந்த கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய சௌந்தரம் ராமச்சந்திரனின் போராட்ட வாழ்க்கை பல தமிழ்ப் பெண்களுக்கு வழிகாட்டி.

நசுக்கப்பட்ட_ ஒடுக்கப்பட்ட_ புறக்கணிக்கப்பட்ட சமூகம் அல்ல அவரது சமூகம். அவருக்காகவோ அவர் பிறந்த சமூகத் திற்காகவோ அவர் போராட வேண்டிய கட்டாயமும் இல்லை. சூழலும் இல்லை. அப்படியரு செல்வச்செழிப்புமிக்க குடும்பம் அவருடையது. ஆனாலும் சௌந்தரம் ராமச்சந்திரன் போராடினார். ஏழைப் பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் படும் துயர் கண்டு அவரால் சும்மா இருக்கமுடியவில்லை. தன் கண் முன்னால் பல சமுதாய மக்கள் குறிப்பாகப் பெண்கள் நசுக்கப் படுவதையும் _ ஒடுக்கப்படுவதையும் _ புறக்கணிக்கப்படுவதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தன் குடும்பத்தின் ஆச்சாரங்களை உடைத்துக்கொண்டு வெளியில் வந்தார். தன் சமூகத்தின் கட்டுப்பாடுகளை அறுத்துக்கொண்டு கல்வி கற்று சமூக சேவையில் ஈடுபட்டார். அதற்காக அவர் பட்ட துயரங்கள், இழந்த இழப்புகள் ஏராளம்.

நெல்லை மாவட்டத்திலுள்ள சின்னஞ்சிறிய கிராமம் திருக்குறுங்குடி. வேதநெறி தவறாமல் வாழ்ந்த வைதீக பிராமணக் குடும்பங்கள் வாழ்ந்த அந்த அழகிய கிராமத்தில்தான் பெருமைமிகு டி.வி.எஸ். நிறுவனத்தார் குடும்பமும் வாழ்ந்தது. அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்தான் சௌந்தரம்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே மோட்டார் தொழிலில் ஆர்வம் ஏற்பட, அதனையே தனது குடும்பத் தொழிலாக மாற்றி, இந்திய மோட்டார் வாகன உலகில் கொடி கட்டிப் பறந்தவர் டி.வி.சுந்தரம்அய்யங்கார். அவரது துணைவியார் லட்சுமி அம்மை யாரோ சமூக சேவைகள் மூலம் அவரளவிற்குப் புகழ் பெற்றிருந்தவர். இந்த உன்னதமான தம்பதியருக்கு மகளாக 1905_ல் பிறந்தவர்தான் சௌந்தரம். பேரழகியாக பெண் குழந்தை இருந்ததால் சௌந்தரம் (அழகானவள்) என்றே பெயர் வைத்துவிட்டார்கள் பெற்றோர். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள். பத்து வயதிலேயே வீணை வாசிப்பதிலும் வாய்ப்பாட்டிலும் தேர்ச்சி பெற்று வீணைவித்வான் முத்தையா பாகவதர் போன்றோரை வியப்பில் ஆழ்த்தினார்.

சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காலம். நன்கு வளர்ந்து கொண்டிருந்த மோட்டார் தொழிலை மட்டும் டி.வி.சுந்தரம் அய்யங்கார் கவனித்துக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவருக்குள் இருந்த சுதந்திர வேட்கை அவரை காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட வைத்தது. அதனால் தேசிய தலைவர்கள் நட்பு கிடைத்தது. பொதுப் பணியில் ஈடுபடுவதில் அவரது துணைவியார் லட்சுமியும் அவருக்கு இணையாகச் செயல்பட்டார்.

இதனால் பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இவர் இல்லத்திற்கு அடிக்கடி வந்து தேசிய பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பதுண்டு. விவாதத்தின்போது சிறுமி சௌந்தரமும் அருகில் இருப்பார். இதனால் சின்ன வயதிலேயே அவர் மனதில் தேசப்பற்று ஆழமாகப் பதிந்துவிட்டது.

அந்தக் காலத்தில் வைதீக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவது வழக்கம். அதன்படி, டி.வி.சுந்தரம் அய்யங்காரின் சகோதரியின் மகன் சௌந்தரராஜனுக்கும் சௌந்தரத்திற்கும் 1918_ல் திருமணம் நடந்தது. அப்போது சௌந்தரத்திற்கு 12 வயது. கணவருக்கு 16 வயது.

திருமணமான கையோடு அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் குடியேறினார்கள். 1922_இல் சௌந்தரத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குறைப்பிரசவம் என்பதால் குழந்தை இறந்தே பிறந்தது. துன்பம் என்பதே தெரியாமல் செல்வச் செழிப்பில் வாழ்ந்த சௌந்தரத்திற்கு இதுதான் முதல் சோகம். அதை மறக்க அவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. இந்தச் சோகத்திற்கு மத்தியிலும் கணவர் சௌந்தரராஜன் மருத்துவக் கல்லூரியில் தேர்ச்சி பெற்று மருத்துவர் பட்டம் பெற்றது சௌந்தரம் அம்மையாருக்குப் பெரிய ஆறுதல்.

இங்கிருந்துதான் சௌந்தரத்தின் வாழ்வில் ஒரு திருப்புமுனை விழுகிறது. பட்டம் பெற்ற கணவர் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவராகிறார். கூடவே தனியாக மருத்துவமனை ஒன்றைத் திறந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். ஏழைகளுக்கு வைத்தியம் பார்க்கும்போது சௌந்தரம்தான் கணவர்கூட இருந்து அவருக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து வந்தார். கூடவே அங்குள்ள மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு முழுநேர பொதுப்பணியில் ஈடுபடத் தொடங்கி விட்டார்.

இந்த இடத்தில்தான் அவரது வாழ்க்கையில் இரண்டாவது திருப்பு முனை விழுகிறது. மதுரையையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் பிளேக் நோய் தாக்கியது. பிளேக் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, கணவரும் மனைவியும் இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். தொடர்ந்து பிளேக் நோய்க்கு வைத்தியம் பார்த்ததில் கணவருக்கும் அந்த நோய் வந்து விட்டது. இனி பிழைப்பது கடினம் என்ற நிலையில், ‘‘நான் இறந்த பின்னர் நீ விதவைக் கோலம் பூணக் கூடாது. என்னைப் போல் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய். விரும்பினால் மறு மணம் செய்துகொள். பிற்காலத்தில் நீ சிறந்த சேவகியாக வேண்டும் என்பதே என் விருப்பம்’’ என்றபடி அவரது உயிர் பிரிந்தது. கணவர் இறந்த துக்கம் தாளாமல், சௌந்தரம் விஷத்தைக் குடித்துவிட்டார். மருத்துவர்கள் அவரை உயிர் பிழைக்க வைத்தார்கள்.

அன்று சௌந்தரம் முடிவு செய்தார். நாம் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம். நம் கணவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் நம் லட்சியம் என்று முடிவு செய்து மதுரையில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார். கணவர் எண்ணம்போல் டில்லி சென்று மருத்துவப் படிப்பு படித்தார். படிப்பு ஒரு புறம் என்றாலும் சமூக சேவையில் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டார்.

ஏழைக் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அவரே பாடமும் கற்றுத்தர ஆரம்பித்தார். இவரது சமூக சேவையில் ஈர்க்கப்பட்டு காந்தியடிகளின் தனி மருத்துவரான சுசிலா நய்யார் நட்பு கிடைத்தது. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்ற சுசிலா நய்யாரின் நட்பு கிடைத்ததால் பல தேசத் தலைவர் களைச் சந்திக்கும் வாய்ப்பு சௌந்தரம் அம்மையாருக்குக் கிடைத்தது. சுசிலா நய்யார் காந்தியைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் சௌந்தரத்தையும் அழைத்துச் செல்வார். அப்போது மகாத்மா காந்தி சேவாசிரமத்தில் சேர்ந்து பணிபுரிந்த தென்னிந்திய இளைஞரான ஜி.ராமச்சந்திரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

சௌந்தரம் மருத்துவக் கல்லூரியில் முதல் மாணவியாக தேர்வு பெற்று, சென்னையில் ஒரு மருத்துவமனை தொடங்கி சேவை செய்யத் தொடங்கினார். அப்போது தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச் செயலாளராக ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். டெல்லியில் ஆரம்பித்த அவர்களது நட்பு சென்னையிலும் தொடர்ந்தது. கணவரின் விருப்பத்தை நிறை வேற்றும் விதமாக மதுரை அரசு மருத்துவமனையில் கௌரவ உதவி மருத்துவராகச் சேர்ந்தார். தனியாக ஒரு மருத்துவமனை ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு உதவினார். மதுரையில் மருத்துவராக சேவை செய்த முதல் பெண்மணி இவர்தான்.

தனி மனுஷியாக இனி இயங்க முடியாத சமூகச் சூழல். அதனால் ஒரு ஆண் துணையைத் தேடினார். காந்தி வழியைப் பின்பற்றி சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜி. ராமச்சந்திரனைத் தேர்வு செய்தார். ஆச்சாரம்மிக்க அவரது குடும்பம் அதனை எதிர்த்தது. பிராமணப் பெண்கள் மறுமணம் செய்வது பாவம் என்று கருதப்பட்ட காலம் அது.

ராஜாஜிதான் முதலில் இவர்கள் திருமணத்தைப் பற்றி சுந்தரம் அய்யங்காரிடம் பேசினார். அவர் சம்மதிக்கவில்லை. இந்தச் செய்தி காந்தியடிகளுக்குச் சென்றது. உடனே காந்தி அழைத்தார். இருவர் விருப்பத்தையும் கேட்டார். சுந்தரம் அய்யங்காருக்கு கடிதம் எழுதினார். ‘‘சௌந்தரம் ராமச்சந்திரன் திருமணத்தை நடத்தி வையுங்கள். இல்லா விட்டால் நானே நடத்தி வைப்பேன்’’ என்றார். இதற்குப் பெற்றோர் சம்மதிக்காததால், சேவாசிரமத்தில் காந்தி முன்னிலையில் அவர்கள் திருமணம் நடந்தேறியது.

காந்தி இராட்டையில் தன் கையால் நூற்ற நூலில் செய்யப்பட்ட தாலிக் கயிற்றை ராமச்சந்திரன் சௌந்தரம் கழுத்தில் கட்டினார். காந்தி நெய்த நூலில் செய்யப்பட்ட வேட்டியை மணமகனும் கஸ்தூரிபாய் நூற்ற நூலில் செய்யப்பட்ட சேலையை சௌந்தரமும் ஆடையாக அணிந்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப்பின் சென்னை வந்தனர். சௌந்தரம் டாக்டர் முத்துலட்சுமியோடு இணைந்து கிராம மருத்துவ சேவையில் ஈடுபட்டார். ராமச்சந்திரன் புகழ்பெற்ற ஒரு ஆங்கில தினசரிக்கு ஆசிரியரானார். இருவரும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றனர்.

திண்டுக்கல் பகுதியில் காந்தி ஆசிரமம் ஒன்றைத் தொடங்கினார். கிராம சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

கிராம சேவைக்கென்றே சின்னாள பட்டியைத் தேர்வு செய்து 1947_ல் ஒரு தொடக்கப்பள்ளி, கிராம சேவை பயிற்சிப் பள்ளி கிராம மருத்துவ விடுதி ஆகியவற்றைத் தொடங்கினார். இன்று அவைதான் காந்தி கிராமிய பல்கலைக்கழகமாகவும், கிராமிய அறக்கட்டளைகளாகவும் நிமிர்ந்து நிற்கின்றன.

1956_ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கி வைத்த போது இந்தியாவே சௌந்தரம் அம்மை யாருக்கு நன்றி சொல்லியது.

எங்கு வறுமை தாண்டவமாடு கிறதோ, எங்கு சாதி, மதக் கலவரம் உருவாகிறதோ அங்கு சௌந்தரம் அம்மையார் ஓடோடிச் சென்று அவர்களை நல்வழிப்படுத்துவார். கிராம மருத்துவ சேவைதான் தன் இரு கண்கள் என்று நினைத்தார். இவர் வகிக்காத பதவிகளே இல்லை. 1962_ல் இவரது சேவைக்காக ‘பத்மபூஷண்’ விருது வழங்கப்பட்டது.

காந்தி கிராமத்தில் தயாரிக்கப்படும் எளிய உணவு, எளிய உடை இவற்றையே இறுதிக் காலம் முழுதும் அணிந்தார். 1984 அக்டோபர் 2_ம் தேதி அந்தச் சமூக சேவையின் ஜோதி அணைந்தது. தன் உடல் மீது மலர் அணிவிக்கக் கூடாது. எளிய கதர் ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். யாரும் தொட்டு வணங்கக் கூடாது என்ற அவரது கடைசி கட்டளையை நிறைவேற்றிய மக்கள், அவர் வழி இன்றும் கிராம சேவையில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர். இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களுக்கு ஒரு ஊன்றுகோல் சௌந்தரம் அம்மையார் என்பது கிராம மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை..

நன்றி: பைம்பொழில் மீரானின்

‘தலைநிமிர்ந்த தமிழச்சிகள்’ தோழமை வெளியீடு, சென்னை_78.

Posted in Aachi, Achi, artists, Arts, Carnatic, Chettinad, Classical, Devadas, Devdas, Dhanammal, Dharmaambal, Dharmambal, Faces, Females, Ladies, MAM, music, people, Rajammal, Ramasami, Ramasamy, Segappi, Sekappi, Sevappi, She, Sigappi, Sikappi, Sivappi, Thanammal, Tharmambal, Veena, Veenai, Veerammal | Leave a Comment »

VIP – Prabhudeva: Gossips, Change of Directors, Rani Mukherjee Smoking

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2008

திரைப்பட வரலாறு 886
பிரபுதேவா நடித்த “வி.ஐ.பி”
2 டைரக்டர்கள் மாற்றப்பட்ட பின்னணி

பிரபுதேவா நடித்த “வி.ஐ.பி” படத்தை தாணு தயாரித்தார். இதற்கு 2 டைரக்டர்கள் பரிசீலிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் அவர்கள் மாற்றப்பட்டு, எஸ்.டி.சபா டைரக்ட் செய்தார்.

திரையுலக அனுபவங்கள் பற்றி தாணு தொடர்ந்து கூறியதாவது:-

பாரதிராஜாவுக்கு மரியாதை

“கிழக்குச் சீமையிலே படம் வெற்றி பெற்றால், படத்தின் டைரக்டர் பாரதிராஜாவுக்கு நிச்சயமாக ஏதாவது செய்வேன் என்று சித்ராலட்சுமணனிடம் நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன் அல்லவா? இப்போது படம் வசூலைக் குவித்ததால், பாரதிராஜாவின் புதுவீடு கிரகப்பிரவேசத்தன்று திடீரென அவர் வீட்டுக்கு போனேன். தங்க நகைகளையும், கரன்சியையும் ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் குவித்து வைத்து கொடுத்தேன். இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத பாரதிராஜா கண்கலங்கி விட்டார்.

தமிழனின் பெருமையை, திரைவழியே பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றவர், பாரதிராஜா. தமிழர் பண்பாடு, கலாசாரத்தை நிலைக்க வைத்தவர். கிராமத்தின் மண்வாசனையை திரையில் கமழச் செய்தவர். தமிழ் மண் மணக்க வந்த `தரு’ அவர். என்றும் என் போற்றுதலுக்குரியவர் என்பதை என் அன்பினால் வெளிப்படுத்திவிட்டு வந்தேன்.

இதைத்தொடர்ந்து, படத்துக்கு அற்புதமாக பாடல்கள் எழுதிய கவிஞர் வைரமுத்து வீட்டுக்குப் போனேன். சூட்கேசில் எடுத்துப் போயிருந்த 50 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன். கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஆனந்த அதிர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. அப்போது அவர், “பாரதிராஜா படத்துக்கு பாட்டுக்காக நான் பணம் வாங்குவது இல்லை. இதுதான் முதல் முறை. அதுவும் படத்தின் இமாலய வெற்றியை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் நீங்கள் வழங்கும் இந்த சன்மானம், உங்கள் உயரிய பண்பை என் உள்ளத்தில் என்றென்றும் தேக்கி வைத்திருக்கும். கொடுப்பதில் நீங்கள் ஒரு குட்டி தேவர்” என்றார் வைரமுத்து.

அவரோடு நின்று விடாமல் படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் என் அன்பளிப்பு தொடர்ந்தது.

ரஜினி நடித்த `வீரா’ படத்தின் வெற்றி விழா மேடையில் ரஜினியின் பேச்சு, “கிழக்கு சீமையிலே” படம் பற்றியதாகவே இருந்தது. “ஒரு படத்துக்கு பிரமாண்டம் என்பது கதைதான். கதை பிரமாண்டமாக இருந்தால், பெரிய வெற்றி நிச்சயம் என்பதற்கு சமீபத்தில் வந்து சாதனை படைத்த “கிழக்குச் சீமையிலே” படம் ஒரு உதாரணம். நண்பர் தாணு தயாரிப்பில் வந்த இந்தப் படத்தை பார்த்தபோது படத்தின் வெற்றிக்கு கதைதான் முதுகெலும்பு என்ற உண்மை புரிந்தது” என்றார்.

ரஜினி இப்படி பாராட்டியதை, மறுநாள் பத்திரிகையில் விளம்பரமாக கொடுத்தேன். அதோடு `எழுத்துச்சிற்பி’ என்று கதாசிரியரையும், `கலைச்சிற்பி’ என்று பாரதிராஜாவையும் அடைமொழி கொடுத்து விளம்பரத்தில் போட்டேன்.”

இவ்வாறு தாணு கூறினார்.

வி.ஐ.பி.

தாணு தயாரிப்பில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்த `வி.ஐ.பி’ படத்துக்கு, முதலில் இரண்டு டைரக்டர்கள் பேசப்பட்டு மூன்றாவது டைரக்டர் சபா, படத்தை இயக்கினார். இதுபற்றி தாணு கூறியதாவது:-

“ஜென்டில்மேன் படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடிய பிரபுதேவா, பிரமாதமான டான்ஸ் மாஸ்டர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் `காதலன்’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்தபோது, நடிப்பாற்றல் கொண்ட நடிகர் என்பதையும் நிரூபித்தார்.

அந்தப்படம் வெற்றி பெற்ற நேரத்தில் சினிமா உலகமே பிரபுதேவா வீட்டில் காத்திருந்தது. தமிழில் புதிதாக ஒரு கதாநாயகன் கிடைத்திருக்கிறார் என்று நான் நினைத்த நேரத்தில், எதிர்பாராமல் ஒரு நாள் பிரபுதேவாவின் தந்தையும், பிரபல டான்ஸ் மாஸ்டருமான சுந்தரம் என்னை பார்க்க வந்தார். அப்போது அவர் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். காவி வேட்டி, காவி சட்டை அணிந்து வந்திருந்தார்.

“வாங்க மாஸ்டர்” என்று அவரை வரவேற்றேன். கொஞ்ச நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தவர், “பிரபு (தேவா) உங்க பேனர்ல நடிக்க ஆசைப்படறான்” என்றார்.

நான் அதுவரை தயாரித்த என் படங்களில் சுந்தரம் மாஸ்டரையோ, அவரது மகன்கள் ராஜ× சுந்தரத்தையோ, பிரபுதேவாவையோ வைத்து நடனம் அமைத்ததில்லை. அப்படிப்பட்ட நிலையிலும் “வெற்றிகரமான ஹீரோ” என்ற அடையாளத்துடன் வெளிப்பட்டிருக்கும் தனது மகன் பிரபுதேவாவை, எனது படத்தில் நடிக்க வைக்க அவர் விரும்பியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நான் மகிழ்ச்சியுடன் “நிச்சயமாக பண்ணலாம் மாஸ்டர்! ஒரு நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு வருகிறேன்” என்றேன்.

மறுநாளே நல்ல நாளாக இருந்தது. சுவீட் பாக்சுடன் பிரபுதேவா வீட்டுக்குப் போனேன். அதுவரை பிரபுதேவாவை நான் நேரில் பார்த்தது இல்லை. பார்க்க ரொம்ப சிம்பிளாக காணப்பட்டார். சுவிட் பாக்சுடன் அட்வான்ஸ் பணம் கொடுத்தேன்.

டைரக்டர் வசந்த்

தயாரிப்பது உறுதியானதும் படத்தை டைரக்டர் வசந்த் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி பிரபுதேவாவே என்னிடம் வசந்த்தை அழைத்து வந்தார்.

நான் வசந்த்திடம், “பிரபுதேவா பண்ணின படங்களிலேயே பெரிய படம், வசூலிலும் சாதனைப் படம் என்ற பெயர் ஒரு தயாரிப்பாளராக இந்தப்படத்தில் எனக்கு உங்கள் மூலமாகக் கிடைக்கவேண்டும்” என்றேன்.

“கண்டிப்பா அப்படியே பண்றேன் சார்” என்று வசந்த்தும் உற்சாகமாய் கூறினார். அதோடு, “உங்க பேனரில் ஒரு படம் டைரக்ட் பண்ணுவது எனக்கும் ஒரு லட்சியமாக இருந்தது” என்றார்.

நான் டைரக்டர் வசந்த்துக்கு அட்வான்ஸ் கொடுக்க முடிவு செய்தேன். அவரிடம் “படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்தால் நல்லது என்று பிரபு (தேவா) சொல்கிறார். ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் அல்லவா” என்று கேட்டேன்.

நான் இப்படிக் கேட்டதும், “சார்! ரிலீஸ் தேதியை மட்டும் தயவு செய்து முன்கூட்டி தீர்மானிக்காதீர்கள்” என்றார்.

“சரி. எப்பத்தான் படம் முடியும்னு சொல்லுங்க” என்றேன்.

“எப்பன்னு முடிவு பண்ணவேணாம் சார்” என்றார், வசந்த்.

நான் விடவில்லை. “ஒரு தயாரிப்பாளருக்கு படத்தின் ரிலீஸ் தேதி முக்கியம். அதை கருத்தில் கொண்டுதான் படத்தின் வியாபார விஷயங்கள் பேசமுடியும்” என்றேன்.

கொஞ்சம் யோசித்தவர், “நாளைக்கு சொல்றேன்” என்றார்.

சொன்னபடி மறுநாள் வந்தார். “சார்! நீங்க சொன்னது பற்றி யோசனை பண்ணினேன். எனக்கென்னவோ படம் எப்ப ரிலீஸ் ஆகும் என்பதை இப்போது முடிவு பண்ண வேண்டாம் என்றே தோணுது” என்றார்.

அப்போதும் நான், “அப்படீன்னா ரிலீஸ் தேதியை ஏப்ரலுக்கு பதிலா ஆகஸ்ட்டுன்னு வெச்சுக்குவோமா?” என்று கேட்டேன்.

டைரக்டர் வசந்த் இந்தக் கேள்விக்கும் யோசிப்பது தெரிந்தது. பதில் தாமதமானதால், நான் “அப்படீன்னா தீபாவளிக்கு?” என்று கேட்டேன்.

அப்போதும் வசந்திடம் இருந்து ரிலீஸ் தேதி வரவில்லை. சரி, படத்தை ரசிச்சு எடுக்க விரும்புகிறார் என்ற எண்ணத்தில் “சரி வசந்த்! படம் ஆரம்பிச்சு சரியா ஒரு வருஷத்தில் ரிலீஸ் தேதி வெச்சுக்கலாமா?” என்று கேட்டேன்.

ரிலீஸ் தேதி சொல்லாமல் நான் விடமாட்டேன் என்பதை ïகித்துக் கொண்டவர், “நாளைக்கு வரேன். அப்ப சொல்றேன்” என்றார்.

டைரக்டர் வசந்த் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி முன்கூட்டியே தீர்மானிக்க முடியாத நிலையில் இருப்பதைப்பற்றி பிரபுதேவாவிடம் பேசினேன். பிரபுதேவா என்னிடம், “சார்! நாளைக்கு ஒருநாள் பாருங்க. நாளைக்கும் அவர் ரிலீஸ் தேதி சொல்லலைன்னா, வேறு முடிவெடுப்போம்” என்றார்.

மறுநாளும் வசந்த் வந்தார். அப்போதும் ரிலீஸ் தேதியை அவரால் உறுதி செய்யமுடியவில்லை.

அன்று மதியம் பிரபுதேவாவை பார்த்து, விஷயத்தை சொன்னேன். “அப்ப வேற டைரக்டரை பார்க்கலாம்” என்றார்.

கதை சொல்ல வந்தவர்

இந்த நேரத்தில்தான் சசி அருண்டேல் என்ற இளைஞர் என்னிடம் கதை சொல்லவேண்டும் என்று வந்தார். `கவிதை’ என்ற பெயரில் ஒரு கதை வைத்திருக்கிறேன்” என்றார். சொல்லச் சொன்னேன்.

கதையை கேட்டு முடித்தபோது “கிழக்குச் சீமையிலே” கதை மாதிரி இதுவும் என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றே பிரபுதேவாவையும் கதை கேட்க வைத்தேன். அவருக்கும் பிடித்துவிட்டது.

நான் சசியிடம், “இந்தக் கதையை சினிமாவுக்கேற்ற விதத்தில் தயார் செய்யுங்கள்” என்று சொன்னதோடு, சென்னை அண்ணா நகரில் உள்ள திரு.வி.க. பார்க் அபார்ட்மெண்ட்டில் ஒரு பிளாட் வாடகைக்கு எடுத்து, அதில் சசியை தங்கவைத்தேன். அட்வான்ஸ் கொடுத்து திரைக்கதை தயார் செய்யச் சொன்னேன்.

நாற்பதே நாளில் செலவு அதிகம் பண்ணாமல் திரைக்கதையை பிரமாதமாக உருவாக்கி முடித்திருந்தார், சசி.

அதோடு அவரே படத்துக்கு பிரபுதேவா தலையை போட்டு ஒரு டிசைனும் உருவாக்கி கொண்டு வந்தார். அதில் `சசி அருண்டேல்’ என்று மேலே போட்டு, அதற்குக்கீழே `கவிதை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கமாக நான் தயாரிக்கும் படங்களில் தாணுவின் “கூலிக்காரன்” தாணுவின் “நல்லவன்”, தாணுவின் “புதுப்பாடகன்” என்றுதான் பெயர் இடம் பெறும். இப்போது சசி செய்திருந்த டிசைனில் சசி அருண்டேல் என்ற தனது பெயரை மேலே போட்டு, அதற்கு கீழே `கவிதை’ என்று போட்டிருந்தார். சசி அருண்டேல்க்கு கீழே `கலைப்புலி’ தாணு என்று குறிப்பிட்டு இருந்தார்.

புது இளைஞர்! ஆர்வத்தில் இப்படி செய்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு, அவர் விருப்பப்படியே விட்டுக் கொடுத்தேன். நமது பேனரில் ஒரு படத்தின் விளம்பரம் இப்படியும் வரட்டுமே என்று எண்ணி, “நல்லா இருக்கு தம்பி” என்று சொல்லி அனுப்பினேன்.

விபரீதம்

ஆர்வக்கோளாறு என்பது சில நேரங்களில் விபரீத விளைவையும் ஏற்படுத்தி விடும். சசி என்ன செய்தார் தெரியுமா? என்னிடம் டிசைனை காட்டிய அதே வேகத்தில் பிரபுதேவாவிடமும் போய் காட்டியிருக்கிறார். டிசைனை பார்த்த பிரபுதேவா எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல், “நல்லா இருக்கு. போய் உடனே தாணு சாரை பாருங்க” என்று சொல்லியனுப்பி இருக்கிறார்.

சசியை அனுப்பி வைத்த கையோடு, உடனே எனக்கு போன் செய்த பிரபுதேவா, “சார்! நீங்க எவ்வளவு பெரிய தயாரிப்பாளர்! அதைப் புரிந்து கொள்ளாத இந்த டைரக்டர் இயக்கும் படத்தில் நான் நடிக்கமாட்டேன்” என்றார்.

எடுத்த எடுப்பில் பிரபுதேவா இப்படிச் சொன்னதும், என்ன நடந்திருக்கும் என்பது புரிந்து விட்டது. “பிரபு! சசி உங்களிடம் டிசைனைக் கொண்டு வந்து காட்டினாரா?” என்று கேட்டேன். “பார்த்தேன் சார்! பார்த்துட்டுத்தான் உடனே உங்ககிட்ட பேசறேன். வேற டைரக்டரை பார்த்துக்கலாம்” என்றார்.

நான் விடவில்லை. “பிரபு! ஆர்வக்கோளாறில் அவர் பண்ணின விஷயம் இது. தன்னோட பேரை பெரிசா, முதல்ல போட்டுக்கணுங்கற ஆர்வத்தில் இப்படி நடந்திருக்கு. நான் இதை சகஜமா எடுத்துக்கிட்டேன். நீங்களும் `பீல்’ பண்ணாதீங்க” என்று சொல்லிப்பார்த்தேன்.

“இல்லை சார்! உங்க மாதிரி ஒரு தயாரிப்பாளரையே சரியா புரிஞ்சிக்காதவரின் டைரக்ஷன்ல படம் பண்ண விரும்பலை” என்றார் உறுதியான குரலில்.

நான் சசியை அழைத்து, “உங்களை யாரு அந்த டிசைனை பிரபுதேவாகிட்ட காட்டச் சொன்னது?” என்று கேட்டேன்.

இதற்குள் சசிக்கு விஷயம் புரிந்து விட்டது. “சார் ஒரு ஆர்வத்திலே…” என்று ஆரம்பித்தவரை, மறுபடியும் பிரபுதேவாவிடம் அனுப்பி வைத்தேன். அவரும் “சாரி” சொல்லி திரும்பியிருக்கிறார். ஆனாலும் பிரபுதேவா மனம் மாறவில்லை. என்னிடம் பேசியவர், “சார்! எத்தனை தடவை வந்தாலும் அந்த புது டைரக்டர் டைரக்ஷனில் படம் பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா நல்ல கதை. அதை மிஸ் பண்ணாமல் வேற ஒரு ஹீரோவை போட்டு நீங்க படம் தயாரிச்சாலும் எனக்கு சந்தோஷமே” என்றார்.

பிரபுதேவா இப்படி பிடிவாதமாக பேசினாலும், ஒரு தயாரிப்பாளருக்கு அவர் கொடுத்த மரியாதைதான் என் முன் நின்றது.

இதன் பிறகு பிரபுதேவா சிபாரிசு செய்த டைரக்டர்தான் எஸ்.டி.சபா.”

திரைப்பட வரலாறு 887
தாணு தயாரித்த “வி.ஐ.பி”
சிம்ரன் அறிமுகம்


கலைப்புலி தாணு தயாரித்த “வி.ஐ.பி” படத்தின் மூலம், தமிழ்ப்பட உலகுக்கு சிம்ரன் அறிமுகமானார்.

“வி.ஐ.பி” படம் தொடங்கப்பட்டது முதல், ரிலீஸ் ஆகும்வரை பல திருப்பங்களை தாணு சந்தித்தார்.

அதுபற்றி அவர் கூறியதாவது:-

“டைரக்டர் சசி உருவாக்கிய கதையில் பிரபுதேவா நடிக்க மறுத்த பிறகு, மனதளவில் சசி ரொம்பவும் உடைந்து போனார். நான்தான் அவரை சமாதானப்படுத்தி, நான் வாடகைக்கு பிடித்திருந்த அறையிலேயே கதை விவாதம் பண்ண வைத்தேன்.

இந்த நேரத்தில், பிரபுதேவா டைரக்டர் சபாவை என்னிடம் சிபாரிசு செய்தார். “பரதன்” பட ஷூட்டிங்கின்போது விஜயகாந்தை பார்க்கப்போன இடத்தில், அந்தப் படத்தை டைரக்ட் செய்த சபாவை பார்த்திருக்கிறேன். எனக்கும் அவருக்குமான அறிமுகம் அந்த அளவில்தான் இருந்தது.

என்றாலும் பிரபுதேவாவே விரும்பி சிபாரிசு செய்ததால் `சபா’ டைரக்டர் ஆனார். தாமதமின்றி கதை விவாதம் தொடங்கிவிட்டார்.

ஏவி.எம். பொன் விழா படம்

கதை விவாதம் முடிவுக்கு வந்து படத்துக்கான திரைக்கதை வடிவம் கிடைத்த நேரத்தில், பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர் என்னைப் பார்க்க வந்தார். வரும்போதே முகத்தில் ஏதோவொரு கோரிக்கை தெரிந்தது.

நான் அவரை வரவேற்று பேசிக்கொண்டிருந்த நேரத்தில், “உங்ககிட்ட ஒரு உதவி கேட்க வந்திருக்கிறேன்” என்றார்.

“சொல்லுங்க சார்!” என்றேன்.

“ஒண்ணுமில்லை சார்! நேற்று ஏவி.எம்.சரவணன் சார் திடீரென என்னிடம் போனில் பேசினார். ஏவி.எம்.மின் பொன் விழா ஆண்டையொட்டி ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் பிரபுதேவா கால்ஷீட் வேண்டும் என்றும் கூறினார். படத்தை ராஜீவ்மேனன் டைரக்ட் பண்றார். ஏ.ஆர்.ரகுமான் மிïசிக் பண்றார் என்றும் சொன்னார். எனக்கு ஒண்ணுமே ஓடலை. நான் யோசிப்பது தெரிந்ததும், “என்ன விஷயம்னாலும் சொல்லுங்க” என்று வெளிப்படையாக கேட்டார். `பிரபுதேவாவோட கால்ஷீட் இல்ல. தாணு சார் கிட்ட இருக்கு’ என்றேன். `அப்படீன்னா தாணு சார்கிட்டே கேட்டுக்குங்க. அவர் பிரபுதேவா கால்ஷீட்ஸ் எங்களுக்கு தர்றதா இருந்தா, படம் பண்றோம்’ என்றார். இந்த விஷயத்துல முடிவெடுக்கிறது தாணு சார் உங்க கையில்தான் இருக்கு” என்றார் மாஸ்டர்.

நான் மாஸ்டரிடம், “ஹெல்ப்னு கேட்டுட்டீங்க. அதனால் பிரபுதேவா முதலில் ஏவி.எம். படமே பண்ணட்டும். அவங்க படம் முடிஞ்ச பிறகு நான் பண்ணிக்கிறேன்” என்றேன்.

“என்ன பெருந்தன்மை சார் உங்களுக்கு!” என்று நெகிழ்ச்சியாக சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனார், சுந்தரம் மாஸ்டர்.

பிரபுதேவா கால்ஷீட்டை நான் விட்டுக்கொடுத்த விஷயத்தை ஏவி.எம்.சரவணனிடம் சுந்தரம் மாஸ்டர் சொன்னதும் அவரும் “தாணுவுக்கு என் நன்றியை சொல்லிடுங்க” என்று கூறியிருக்கிறார். இதற்குள் விஷயம் தெரிந்த பிரபுதேவா என்னிடம், “என்ன சார்! விட்டுக் கொடுத்திட்டீங்களாமே” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“ஆமா பிரபு! ஏவி.எம். பொன் விழா ஆண்டில் படம் எடுக்கிறாங்க. அதுல நீங்க நடிப்பதால், உங்களுக்கும்தானே பெருமை”

என்றேன்.ஏவி.எம். எடுத்த அந்தப்படம் “மின்சாரக்கனவு.”

அந்தப்படத்தை பிரபுதேவா முடித்துக் கொடுத்ததும், எனது “வி.ஐ.பி” படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் பூஜையை மாலையில் நடத்தினேன். படப்பிடிப்பு நடந்த ஏவி.எம். வளாக வாசல் முகப்பில் வி.ஐ.பி. என்ற பிரமாண்ட ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு பாதை உருவாக்கினேன். அதாவது “ஐ” எழுத்து வழியாக, விழாவுக்கு வந்தவர்கள் அரங்கினுள் வரும்படிபாதை உருவாக்கப்பட்டிருந்தது. இது, விழாவுக்கு வந்த பிரமுகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ரூ.40 லட்சத்தில் அரங்கு

வி.ஐ.பி. படத்தின் பாடல் காட்சியில் தமிழ் சினிமாவில் அதுவரை யாரும் செய்யாத ஒரு புதுமையை செய்தேன். படத்தில் இடம் பெறும் 3 நிமிட பாடல் காட்சிக்காக 40 லட்சம் ரூபாய் செலவில் ஏவி.எம். ப்ளோரில் செட் போட்டேன். இந்த செட் விஷயம் பட உலகில் பிரமிப்பாக பேசப்பட்ட நிலையில், பிரபல இந்தி, தெலுங்கு தயாரிப்பாளர்கள் என்னை அணுகி, “நீங்கள் இந்த செட்டை பயன்படுத்தி முடித்ததும் எங்களுக்கும் படப்பிடிப்புக்கு தந்தால், நீங்கள் கேட்கிற வாடகையைத்தர தயாராக இருக்கிறோம்” என்றார்கள்.

நான் அவர்களிடம், “இப்படியொரு பிரமாண்ட செட் போட்டது என் படத்துக்காகத்தான். என் படத்தின் பாடல் காட்சிக்காக மட்டுமே இந்த செட்டை பயன்படுத்துவேன். மற்ற தயாரிப்பாளர்களின் படங்களுக்கு இந்த செட்டை வாடகைக்கு விடும் நோக்கம் எனக்கு இல்லை” என்று சொல்லி அனுப்பினேன். 14 நாட்கள் தொடர்ந்து பாடல் காட்சி படமாக்கி முடிந்ததும், அந்த செட்டை பிரித்து விட்டேன்.

சிம்ரன் அறிமுகம்

“வி.ஐ.பி” படத்தில் பிரபுதேவா ஜோடியாக சிம்ரன் நடித்தார். தமிழில் சிம்ரன் அறிமுகமான முதல் படம் இதுதான்.

இந்தப் படத்தில் முதலில் சிம்ரன் நடிப்பதாக இல்லை. லைலாவைத்தான் `புக்’ செய்திருந்தேன். படத்தின் பூஜைக்கும் லைலாதான்

வந்திருந்தார்.தாமதமாக வந்ததுடன், தயாரிப்பு நிர்வாகிக்கு உரிய மரியாதை கொடுக்கத் தவறியது என் கவனத்துக்கு வந்தது.

எனவே, படத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

பிறகு, பூஜா என்ற பெண்ணை “கேமரா டெஸ்ட்” எடுத்துப் பார்த்தோம். `டெஸ்ட்’ திருப்திகரமாக இல்லாததால் அவரையும்

அனுப்பிவிட்டோம்.

ராணி முகர்ஜியின் “புகை வளையம்”

இதனால், மும்பைக்குப்போய் கதாநாயகியை தேர்வு செய்வோம் என்று டைரக்டர் சபாவுடன் புறப்பட்டு சென்றேன். ராணி முகர்ஜியைப் பார்த்தோம். அவர் அப்போதுதான் இந்திப் படத்தில் அறிமுகமாகிறார் என்றார்கள். நான் அவரைப் பார்த்த நேரத்தில் எங்கள் முன்னால் கால்மேல் கால் போட்டுக்கொண்டு சிகரெட் புகைத்தபடி இருந்தார். அந்த புகை வளையத்துக்குள்ளேதான் அவரிடம் பேசவேண்டி இருந்தது! இது எனக்கு அருவறுப்பைத் தர, அப்போதே அங்கிருந்து புறப்பட்டு வெளியேறிவிட்டோம்.

அப்போது மும்பையில் `தேரே மேரே சப்னே’ என்று ஒரு இந்திப்படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருந்தது.

இதே பெயரில், பல ஆண்டுகளுக்கு முன் தேவ்ஆனந்தும் ஒரு படம் எடுத்திருந்தார். புதிய படத்தில் புதுமுகமாக நடித்தவர்தான் சிம்ரன். அவரது போட்டோவைப் பார்த்ததும், `இவர் நமது படத்துக்கு பொருத்தமாக இருப்பார்’ என்று தோன்றியது.

அதே நேரத்தில் சென்னையில் இருந்து முனுசாமி என்பவர் என்னுடன் போனில் பேசினார். “சார்! நான் புதுமுக நடிகை சிம்ரனின் மானேஜர். உங்க படத்தில் சிம்ரனை நடிக்க வைக்க விரும்புகிறேன்” என்றார்.

இதுபற்றி பிரபுதேவாவிடம் நான் சொன்னபோது, அவரும் சிம்ரன் படத்தைப் பார்த்துவிட்டு, “ஓ.கே.சார்” என்றார்.

இதன் பிறகு சென்னை வந்த நாங்கள் சிம்ரனை முனுசாமி மூலம் சென்னைக்கு வரவழைத்தோம். உடனே 2 படங்களுக்கு அவரை புக் செய்தேன்.”

Posted in Abbas, AVM, Barathiraja, Bharathiraja, Cinema, Dhaanu, Directors, Films, Gossips, Kilakku Seemaiyiley, Kizhakku Cheemaiyile, Lalila, Movies, Mukherjee, Prabhudeva, Prabudeva, Ramba, Rani, Rumba, Sasi, Simran, smoking, Thaanu, Vasanth, VIP | Leave a Comment »

Economic upliftment for the needy – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஏழைகளின் எதிரி யார்?

“”இந்தியா அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சியால் பணக்காரர்களுக்குத்தான் லாபம் என்று பேசுகிறவர்கள் ஏழைகளுக்கு எதிரிகள்” என்று மதுரையில் ஒரு கல்லூரி விழாவில் பேசுகையில் காட்டமாக விமர்சித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

சிதம்பரம் எப்போதும் வார்த்தைகளை அளந்து பேசுபவர்; மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும்போதுகூட தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்காமல், தனது கருத்தை ஆழமாகப் பதிவு செய்யும் சொல்லாற்றல் மிக்கவர். அப்படிப்பட்டவர் கோபமாகப் பேசியிருப்பதற்குக் காரணம், பேசியவர்கள் மீது உள்ள கோபம் அல்ல; நல்ல நடவடிக்கைகளை இப்படியே தொடர்ந்து விமர்சித்து, எதிர்த்துக் கொண்டிருந்தால் நாடு முன்னேற வேறு என்னதான் வழி என்ற ஆதங்கம்தான். அப்படி விமர்சிக்கும் “”இடதுசாரிகளை” பெயர் குறிப்பிடாமல்தான் அவர் விமர்சித்தார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

இந்தியாவில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 9% என்ற அளவை நெருங்கிக் கொண்டிருந்தாலும் நாட்டு மக்களில் கணிசமானவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த உண்மைகளை அறியாதவர் அல்ல சிதம்பரம். எந்தத் துறை மூலமாவது நாட்டுக்கு வருமானம் கிடைத்தால்தான் அதை வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும், பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியும். இயற்கை வளங்கள் அனைத்தையும் அரசே தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானித்து வழிநடத்துவது கம்யூனிச நாட்டில் சாத்தியம். கலப்புப் பொருளாதார முறைமையே சிறந்தது என்று நம் முன்னோடிகள் தேர்வு செய்துவிட்டதால் அதே பாதையில் நாமும் போயாக வேண்டும்.

ஏழைகளுக்காக, சுரண்டப்படுகிறவர்களுக்காகக் குரல் கொடுப்பதில் இடதுசாரிகள் முன்னே நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், பிரச்னை தீரவும், வளமை பெருகவும் உருப்படியான நல்ல யோசனைகளை அவர்கள் கூறுவதும் இல்லை, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்துவதும் இல்லை என்பது மறுக்கப்படாத உண்மை. கேரளத்தில் மத்திய அரசின் உர நிறுவனத்தைத் தவிர அரசுத் துறையிலோ, தனியார் துறையிலோ அமைந்துள்ள மிகப்பெரிய தொழிற்சாலை என்ன?

மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால் நிலச் சீர்திருத்தத்தில் முன்னோடியாக விளங்குகிறது என்பதோடு சரி. மின்னுற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, பாசன வசதி ஆகிய துறைகளில் அது பின்தங்கியே இருக்கிறது.

தென் மாநிலங்களைப் போல தகவல் தொழில்நுட்பத்தில் மேற்கு வங்கம் வளரவில்லை. மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத் போல தொழில் வளர்ச்சியில் செழிக்கவில்லை. மருத்துவ வசதிகளும் தரமான மருத்துவமனைகளும் இல்லாததால்தான் வங்காளிகளும் வட-கிழக்கு மாநிலத்தவர்களும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்றுத் திரும்புகின்றனர்.

“”ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிலைமை கூடவே கூடாது. அது தொழிலாளர்களின் நிரந்தர வேலையைப் பறித்து, அவர்களை கூலி அடிமைகளாக்கிவிடும், சுரண்டலுக்கு அளவே இருக்காது” என்று இடதுசாரிகள் எதிர்க்கின்றனர். அதில் உண்மை இல்லாமல் இல்லை.

  • மேற்கு வங்கத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கை 19.42%;
  • தனியார் துறையில் அந்த எண்ணிக்கை வெறும் 13.69% தான்.
  • கேரளத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் 7.71%,
  • தனியார் துறையில் 5.39%.
  • தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை 8.58%,
  • தனியார் துறையில் 11.35%.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது, இடதுசாரிகள் தாங்கள் வலியுறுத்தும் வறட்டு சித்தாந்தங்களைத் தங்களுடைய மாநிலங்களில்கூட அமல் செய்வதில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே.

இந் நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு அவர்கள் மீது கோபம் வருவது நியாயம்தானே?

Posted in Budget, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dinamani, Economy, Editorial, Finance, GDP, Needy, Op-Ed, Poor, Prices, Rich, Wealthy | Leave a Comment »

Parimalam – Adopted son of late TN CM Arinjar Annadurai: Ira Sezhiyan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

பரிமளத்தைப் பறிகொடுத்தோம்

இரா. செழியன்

அறிஞர் அண்ணாவின் மகன் பரிமளம் திடீரென மறைந்தது என்னைப் போன்றோர்க்கு சோகம் மிக்க தாங்கொணாத அதிர்ச்சியைத் தந்துள்ளது.

1944இல் அண்ணாவுடன் நான் முதலில் காஞ்சிபுரம் சென்றபொழுது பரிமளம் மூன்று வயதுச் சிறுவனாக இருந்தான். அவனுடைய தம்பிமார்களாக இளங்கோவன், கௌதமன், பாபு ஆகியோர் இருந்தனர். பரிமளம் அண்ணாவினாலும், எங்களாலும் “பரி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டான். உற்சாகமான, பொறுப்புள்ள மகனாக, மாணவனாக, பிறகு மருத்துவராக பரிமளம் வளர்ந்தான். அண்ணா ஈடுபடும் ஒவ்வொரு காரியத்திலும், “திராவிட நாடு’ இதழாக இருந்தாலும், நூல் வெளியீடாக இருந்தாலும், அண்ணாவின் நாடகமாக இருந்தாலும், ஒவ்வொன்றிலும் பரிமளத்தின் பங்கு இல்லாமல் போகாது.

மலேசியா, சிங்கப்பூர், கிழக்கு நாடுகளுக்கு அண்ணாவுடன் நானும் சென்றிருந்தபொழுது, அங்கிருந்து அவனுக்காக ஒரு “ஸ்டெதாஸ்கோப்’ வாங்கி வந்தோம். பரிமளம் அப்பொழுது மருத்துவக் கல்லூரியில் மாணவன். அவன் டாக்டராக ஆவதில் அண்ணாவுக்குப் பெரும் மகிழ்ச்சி. பரிவும், பண்பும், பாசமும், நேசமும் உள்ள ஒருவராகவே பரிமளம் வளர்க்கப்பட்டார். அவரும் வளர்ந்து வந்தார்.

அண்ணாவின் காலத்திலேயே பரிமளம் அரசியல் கட்சியில் நேரடியாக ஈடுபாடு காட்டவில்லை. அண்ணாவும் அந்த முறையில் அவரை வளர்க்கவில்லை. அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு கூட நான்கு மாதங்கள் கழித்துத்தான் சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள அண்ணாவின் அறைக்குப் பரிமளம் சென்றார். அரசாங்க நிர்வாகத்திலும், அதிகாரிகளிடமும் எந்த வகையிலும் அவர் தொடர்பு கொண்டதில்லை.

அண்ணா மறைந்த பிறகு, ஓரிரு ஆண்டுகள் அண்ணாவின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய நிகழ்ச்சிகளின்பொழுது, நானும் கடற்கரைக்கு மற்ற கழகத் தலைவர்களுடனும், தோழர்களுடனும் சென்று அண்ணாவின் சமாதி முன் அஞ்சலி செலுத்துவதுண்டு. ஆனால், வர வர சமாதிக்குச் செல்லும் ஊர்வலத்தில் முந்திச் செல்வதற்கும், முன் நிற்பதற்கும் நடைபெறும் நெருக்கடியை என்னால் ஈடுகொடுக்க முடியாமல் அவ்வாறு செல்வதை நான் தவிர்த்துக் கொண்டேன். ஆனால், ஒவ்வோராண்டும் அண்ணாவின் பிறந்த நாள் – நினைவு நாள் அன்று அண்ணி ராணி அம்மையாரைக் காண பரிமளம் அல்லது இளங்கோவன் இல்லங்களுக்குச் சென்று வருவேன். அண்ணா வாழ்ந்த இடத்தில் அவர்களுடன் இருந்தவர்களைக் காண்பதில், அண்ணாவைப் பற்றிப் பேசுவதில் ஒருவகை ஆறுதல் இருந்தது.

ராணி அம்மையார் மறைந்த பிறகு, ஆண்டுதோறும் அண்ணாவின் பிறந்த நாள், நினைவு நாள் அன்று நுங்கம்பாக்கம் அவென்யு சாலையிலுள்ள அண்ணாவின் தாயகத்திற்குத் தவறாமல் சென்று பரிமளத்தையும், அவர் குடும்பத்தினரையும் நான் காண்பது வழக்கம். பரிமளம் ஒரு முறை கூறினார்: “”நான் கூட அண்ணா சமாதிக்கு இப்பொழுது செல்வதில்லை.”

அண்ணாவின் கட்டுரைகள், கதைகள் ஆகியவற்றில் பல வெளியிடப்படாமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அவற்றையெல்லாம் சேகரித்து வெளியிடுவதில் பரிமளம் ஈடுபட்டிருந்தார்.

புதைந்து கிடக்கும் வரலாற்றுச் சான்றுகளைத் தேடி எடுக்கும் அகழ்வாராய்ச்சியாளர்களைப் போல, மறைந்து கிடக்கும் அண்ணாவின் இலக்கியப் படைப்புகளை வெளிப்படுத்துவதில் அரிய அகழ்வாராய்ச்சியாளராக பரிமளம் விளங்கினார். அதன் விளைவாக, இதுவரை மறைந்து கிடந்த அண்ணாவின் பல கட்டுரைகள், பேச்சுகள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன.

சென்ற மாதம் அண்ணா நினைவு நாளன்று வழக்கம்போல் அவரது இல்லத்தில் பரிமளத்தைச் சந்தித்தேன். அப்பொழுதும் இதுவரை வெளிவராமல் உள்ள அண்ணாவின் கட்டுரைகளைத் திரட்டி வெளியிடுவது பற்றி ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் அவர் பேசினார்.

அண்ணாவின் குடும்பத்துடன் கலந்திருந்த நம்மில் பலருக்கு பரிமளத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அன்னாரைப் பிரிந்து துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Posted in Anjali, Anna, Annadurai, Biosketch, Faces, Foster, Memoirs, Parimalam, people, Sezhiyan, Son | Leave a Comment »

Mar 25: Eezham, Sri Lanka, LTTE, India, Tamil Nadu, War, TR – Updates & News

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 27 மார்ச், 2008 

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்

தேர்தல் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகண சபையின் முதலாவது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வியாழனன்று ஆரம்பமானது.

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்து 37 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை அடுத்த வியாழக்கிழமை வரை மாவட்ட செயலகங்களில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலையொட்டி வீதித் தடைகளும் வீதிச் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டு பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்படும் 35 உறுப்பினர்களுடன் கூடுதல் வாக்குககளைப் பெறும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு போனஸ் உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 37 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபைக்கான தேர்தலின்போது, 9 லட்சத்து 82 ஆயிரத்து 728 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள்.

1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, 1988ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கான தேர்தகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து திருகோணமலையில் வரதராஜபெருமாள் அவர்கள், ஒருங்கிணைந்த அந்த மாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றார். அவர் தலைமையிலான மாகாணசபையின் ஆட்சிமன்றம் சுமார் ஒரு வருட காலம் செயல்பட்டது.

அதன் பிறகு இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்த தேர்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் முடங்கிப்போயின.

இதனிடையே கடந்த ஆண்டு இலங்கையின் உச்சநீதிமன்றம் வடக்கையும் கிழக்கையும் தனித்தையாக பிரிக்கவேண்டும் என அளித்த தீர்ப்பை அடுத்து இவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்டன.

இவ்வாறு பிரிக்கப்பட்டு மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாண சபைக்கான முதல் தேர்தல் வரும் மேமாதம் நடைபெறவுள்ளது. .

ஏற்கனவே மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள், மத்திய அரசுகளினால் படிப்படியாக பறிக்கப்பட்டுள்ளதாக கூறும் வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான எஸ்.எஸ்.எம் ஹனீபா, நடைபெறவிருக்கும் தேர்தல் முதலமைச்சர் தெரிவுக்கான ஒன்றாகவே தான் நோக்குவதாகக் குறிப்பிடுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்படும் என மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையார் டி.கிருஷ்னானந்தலிங்கம் தெரிவிக்கிறார்.


‘பிரபாகரன்’ திரைப்பட இயக்குநர் இலங்கையில் உண்ணாவிரதம்

மருத்துவமனையில் இயக்குநர் பீரிஸ்

சென்னையில் ஜெமினி ஸ்டூடியோவுக்கு முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இயக்குநர் துஷாரா பீரிஸ், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு, இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினையும் ஆரம்பித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

பிரபாகரன் என்ற தனது திரைப்படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் வேலைகள் சென்னை ஜெமினி ஸ்டூடியோவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும்போதே, சுமார் 200க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் தனக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் தன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள இவர், தனது படச்சுருள்களும், பிரதிகளும் இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இந்திய அரசும், இலங்கை அரசும் இதில் உடனடியாகத் தலையிட்டு தனது படச்சுருள்களை தனக்கு மீளப் பெற்றுத்தரும் வரை தனது சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

தனது படம் தமிழர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவில்லை என்றும், இது தமிழர் விரோதத் திரைப்படம் அல்ல என்றும் தெரிவித்த துஷாரா பீரிஸ், 30 வருடகால யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிங்கள, தமிழ் பாமர மக்களே என்பதனை எடுத்துக்காட்டுவதையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் விளக்கமளித்தார்.

இதனிடையே சர்ச்சைகுரிய இந்தத் திரைப்படம் வியாழனன்று சென்னையில் தமிழ் ஆர்வலர்களுக்குத் திரையிடப்பட்டது. தமிழக திரைப்படத் துறையைச் சேர்ந்த பலருடன் இந்தப் படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்ட கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


பிரிட்டனில் தஞ்சம்கோரும் அகதிகள் நிலை மோசம்: சுயாதீன ஆய்வு முடிவு

அகதிகள் நிறைய பேர் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுகிறார்கள்

பிரிட்டனில் அகதிகளுக்கு தஞ்சம் வழங்கும் விவகாரம் பற்றி ஆராய்ச்சி செய்த சுயாதீன ஆணையம் ஒன்று, மனிதாபிமான மற்றும் நாகரீக வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்தில் இருக்கவேண்டிய தரத்திலல்லாமல் மோசமான நிலையை அகதிகள் எதிர்கொள்ள நேரிடுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச அரங்கில் பிரிட்டனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விஷயம் இது. தஞ்சம் கோருவோர் தொடர்பான பிரிட்டனின் கொள்கைகள் குறித்து நடத்தப்பட்ட இந்த சுயாதீன ஆராய்ச்சியில் அதிர்ச்சிதரும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர்கள், நீதிபதிகள், ஆர்வலர்கள் என்று பல் வேறு தரப்பினரோடு. தஞ்சம் கோரிய அகதிகளும் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்டனர். அவர்களது வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டு இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கையின் முடிவுகளை பிரிட்டனின் எல்லைகள் மற்றும் குடிவரவுத் துறை நிராகரித்துள்ளது. உறுதியாகவும் அதே நேரம் மனிதாபிமானத்துடனும் தமது செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும். கவனமாகவும் பரிவுடனும் தாங்கள் அகதிகளைக் கையாளுவதாகவும் அத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 மார்ச், 2008


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி முடிவு

அஸாத் சாலி

எதிர்வரும் மாதங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட உத்தேசிக்கப்பட்டிருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் வியாழனன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அதில் போட்டியிடப்போவதாக முடிவு செய்திருக்கின்றது.

இம்மாத முற்பகுதியில், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒன்பது உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பாதுகாப்பு காரணங்களைக் கூறி அதில் பங்குபெற ஐக்கிய தேசியக் கட்சி மறுத்திருந்தது.

ஆனால் தற்போது அங்கு இடம்பெற உத்தேசிக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலில் பங்கேற்பதற்கு கட்சி எடுத்துள்ள முடிவு குறித்து தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரும், கொழும்பு மாநகரசபை முன்னாள் மேயருமான அஸாத் சாலி, தமிழ்பேசும் மக்களின் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு முயற்சியாகவே கட்சி இதில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தமது கட்சி முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்த அஸாத் சாலி, இந்தத் தேர்தலின் தானும் ஒரு முக்கிய வேட்பாளராக போட்டியிடப்போவதாகத் கூறினார்.


வவுனியா தூப்பாக்கிசூட்டில் சிவிலியன்கள் பலி

இலங்கையின் வடக்கே வவுனியா ஓமந்தை இராணுவ முன்னரங்க பகுதியை நோக்கி விடுதலைப் புலிகளின் பகுதியில் இருந்து தப்பிவந்ததாகத் தெரிவிக்கப்படும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மீது இருதரப்பிலிருந்தும் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 3 பேர் காயமடைந்துள்ளனர், 5 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் மரணமடைந்தவர்களில் ஒருவர் தமிழர் என்றும் ஏனைய அனைவரும் சிங்களவர்கள் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களை இராணுவத்தினர் உலங்கு வானூர்தி மூலமாக உடனடியாக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்திருப்பதாகவும் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 5 பேரும் இராணுவ பொலிசாரின் விசாரணைகளின்போது தெரிவித்துள்ள தகவல்களின்படி, தாங்கள் மொத்தம் 12 பேர் என்றும், தங்களை 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி, 3 வள்ளங்களில் விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று முரசுமோட்டை – வள்ளிபுனம் பகுதியில் தங்களைத் தடுத்து வைத்திருந்ததாகக் கூறியிருக்கின்றனர்.

அங்கிருந்து 4 தினங்களுக்கு முன்னர் தப்பிவந்து, புதனன்று பகல் ஓமந்தை முன்னரங்கப் பகுதியில் இராணுவ பகுதியை நோக்கி வந்தபோது தங்களைக் கண்ட விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், எனினும் தாங்கள் தொடர்ந்து ஓடியபோது இராணுவத்தினரும் தங்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் மன்னார் ஆலங்குளம் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்கத் தளங்கள் மீதும், கிளிநொச்சி விசுவமடுக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் வள்ளங்கள் கட்டும் தளத்தின் மீதும் விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் உலங்கு வானூர்திகளும், தாக்குதல் விமானங்களும் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தி அவற்றை அழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.


மட்டக்களப்பில் அதிரடிப் படையினர் மீது கிளேமோர் தாக்குதல்

மருத்துவமனையில் காயம்பட்ட பெண்ணொருவர்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் புதன்கிழமை காலை இடம்பெற்ற கிளேமோர் குண்டு தாக்குதல் சம்பவத்தில் 2 பொலிசார் கொல்லப்பட்டுள்ளார்கள்.

சம்பவத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 4 பேர், 3 சிவிலியன்கள் என 7 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த பிரதேசத்திற்கு சென்றிருந்த ஜப்பானிய உதவி நிறுவனக் குழுவொன்றின் வாகனத் தொடரனிக்கு பாதுகாப்பின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிசாரே இதில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட வாகனத் தொடரனியும் வழமை போல் காலை நேர வீதிக் கண்கானிப்பில் ஈடுபடும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் வாழைக்காலை சந்தியை அடைந்தபோது, தூரத்திலிருந்து இந்த கிளேமோர் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு என பாதுகாப்பு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


பிரபாகரன் பற்றிய சிங்களப் படம் இயக்கியவர் சென்னையில் ‘தாக்கப்பட்டார்’

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்த படத்தை இயக்கிய இலங்கை திரைப்பட இயக்குநர் துஷாரா பீரிஸ் அவர்கள், தமிழகத் தலைகர் சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த இயக்குநருக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் நிறுவனர் சுப.வீரபாண்டியன் அவர்கள், இந்த சம்பவத்தின்போது என்ன நடந்தது என்பது குறித்தும், தங்களின் எதிர்ப்பு ஏன் என்பது குறித்தும் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

—————————————————————————————————————–

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து ராஜேந்தர் தனது தமிழக அரச பதவியை இராஜினாமா செய்தார்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தான் குரல் கொடுப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, தான் வகித்துவந்த தமிழக அரசின் சிறு சேமிப்புத் துறையின் துணைத் தலைவர் பதவியை திரைப்பட இயக்குனரும், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான டி. ராஜேந்தர் இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் இருக்கும் தமிழர்களைக் கொன்றுகுவிக்க இலங்கை இராணுவத்துக்கு, இந்தியா கைகொடுப்பதாகக் குற்றஞ்சாட்டும் ராஜேந்தர் அவர்கள், இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்களையும், உபகரணங்களையும் வழங்குவதையும், பயிற்சிகளை வழங்குவதையும் தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை இலங்கைத் தமிழர் ஒருவர்தான் கொலை செய்தார் என்பதற்காக, ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினத்தையும் புறக்கணிப்பது நியாயமல்ல என்றும் ராஜேந்தர் கூறினார்.

தான் எந்த விதமான வன்முறை இயக்கத்துக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்றும் இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்காகவே தான் குரல் கொடுப்பதாகவும் அவர் கூறினார்.

விடுதலைப்புலிகள் என்பது ஒரு அங்கம் என்றும், அது மாத்திரமே இலங்கையில் இருக்கக்கூடிய ஒட்டு மொத்தத் தமிழினம் என்று முத்திரை குத்தக் கூடாது என்றும் ராஜேந்தர் தெரிவித்தார்.

அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கடற்புலிகளின் படகை மூழ்கடித்ததாக இலங்கை கடற்படை கூறுகிறது

கடற்புலிகள்
கடற்புலிகள்

இலங்கையின் வடகிழக்குக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் படகுத் தொகுதி ஒன்றுடன் தாம் சண்டையிட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கடற்புலிகளின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ள போதிலும், அதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதா என்று அது எதுவும் கூறவில்லை.

கடற்படைப்படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டு, அதில் பத்து சிப்பாய்கள் கொல்லப்பட்டதை அடுத்த சில தினங்களில் இந்த மோதல் நடந்துள்ளது.

அந்தக் கடற்படைப்படகை தமது தற்கொலைக் கடற்கரும்புலிகள் தாக்கியதாக விடுதலைப்புலிகள் முன்னர் கூறியிருந்தனர்.

ஆனால், அந்தப் படகு கடற்கண்ணி ஒன்றால் மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்திருந்தது.


Posted in Eelam, Eezham, India, LTTE, Rajeev, Rajendar, Rajiv, Sri lanka, Srilanka, Tamil Nadu, TamilNadu, TR, War | 1 Comment »

TJS George – Good old Bombay days: India – North vs South in Mumbai

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

அது பம்பாய் காலம்…

டி.ஜே.எஸ். ஜார்ஜ்


சில நாள்களுக்குமுன் காலமான பிரபல பத்திரிகையாளர் ஆர்.கே. கரஞ்சியாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலே பம்பாயில் “வட இந்தியர்’களை குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருந்தனர் குண்டர்கள். இரு சம்பவங்களுக்கும் தொடர்பு ஏதும் கிடையாது. ஆனால், சிறப்புமிகு விழுமியங்கள் ஒருபுறம் வீழ்ந்து கொண்டிருப்பதையும், மறுபுறம் அந்த இடத்தில் தேசபக்தி என்ற போர்வையில் குண்டர்களின் ஆட்சி தலைதூக்கிக் கொண்டிருப்பதையும் அவ்விரு சம்பவங்களும் சித்திரித்தன.

அந்த நாளைய பெருமைக்குரிய பம்பாயின் சின்னமாகத் திகழ்ந்தவர் ருஸ்ஸி கரஞ்சியா. சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும்பாலான சமயங்களில் காந்திஜி தங்கியிருந்தமையால் ஒரு வகையில் 1940-களில் இந்தியாவின் அரசியல் தலைநகரம் போலவே திகழ்ந்தது பம்பாய். காந்திஜி தங்கியிருந்த இடத்திலிருந்து கூப்பிடு தொலைவில்தான் இருந்தார் ஜின்னா.

1950-கள் மற்றும் 1960-களின் தொடக்கத்தில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக மட்டுமன்றி, நாட்டியம், நாடகம், இலக்கியம், ஓவியம் ஆகிய கலைகளின் தலைநகரமாகவும் மேட்டுக்குடி வாழ்க்கை நளினங்களின் இருப்பிடமாகவும் அறிவுச்சுடர் பிரகாசிக்கும் நகரமாகவும் திகழ்ந்தது பம்பாய். கொடுக்கவும் எடுக்கவும், பகிரவும் கற்கவும் உலகமே கூடும் இடமாக இருந்தது பம்பாய்.

எடுத்துக்காட்டாக, அன்று கலா கோதா பகுதியில் உள்ள ஓர் அறையில் முற்போக்குக் கலைஞர்கள் குழுவை அமைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சமுதாயத்துக்கு அறிமுகமே ஆகியிராத, படைப்பார்வமிக்க கே.எச். ஆரா, வி.எஸ். கெய்தாண்டே, எஸ்.எச். ராஸô, எப்.என். செüஸô, எம்.எப். ஹுசைன், கே.கே. ஹெப்பார் போன்றவர்கள். இன்று அவர்கள் கலை உலக மகுடத்தில் மாணிக்கங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். கலா கோதாவோ, இன்று உலகின் சிறந்த கலைநகரங்களுக்கு இணையானது என்று கூறும் அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது.

தற்செயலாக நிகழ்ந்ததோ, என்னவோ; ஆனால், அன்றைய கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் காக்க வந்த தேவதைகளைப்போல வந்தனர், ஜே.ஜே. கவின்கலைக் கல்லூரியின் முதல்வர் வால்டர் லாங்கமர், விளம்பர உலகின் குருவான ரூடி வான் லேடன், பத்திரிகை ஆசிரியரான சி.ஆர். மண்டி ஆகிய திரிமூர்த்திகள். ஒரு முழுத் தலைமுறையின் அழகியல் உணர்வுகளை, சிந்தனைகளை வடிவமைத்து வளர்த்தெடுத்தனர் அவர்கள்.

ஆனால் அவர்களைப் பார்த்து நீங்கள் இந்தியர்களா, வட இந்தியர்களா என்று யாரும் அன்று கேட்கவில்லை. அன்றைய பம்பாயின் சிறப்பு அத்தகையது. “”இந்தியாவின் உயிரோடு கலந்தது; அதன் ஓர் அங்கம்” என்ற, அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த பர்மா ஷெல் நிறுவன விளம்பர வாசகங்களைப்போல, இந்திய வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டவர்கள் அவர்கள்.

அன்று பாரீஸ் நகரிலிருந்து இந்தியா திரும்பிய ராஜா ராவ் அளித்த உத்வேகத்தில், “சேத்தனா’ என்ற பெயரில் சிற்றுண்டிச்சாலை ஒன்று அமைக்கப்பட்டது. அதுவும் கலா கோதா பகுதியில்தான் அமைக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க ழான் பால் சாத்தரின் சிற்றுண்டிச்சாலையாக இருக்கவில்லை. அங்கு வழக்கமாக வருவோரில் முல்க் ராஜ் ஆனந்தும் ஒருவர்.

அங்கிருந்து சில கட்டடங்கள் தள்ளி, வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது பயணத்தைத் தொடங்கியிருந்தார், நாடக உலகுக்குப் புதிய திசைவழியைக் காட்டிய இப்ராகிம் அல்காஜி. அப்போது அங்கிருந்த ஒரே ஆடம்பர ஹோட்டல் தாஜ் மட்டும்தான். அன்றைய வாடிக்கையாளர்களின் மனங்களில் இடம்பிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தது அம்பாசடர் ஹோட்டல். ஆனால் அவற்றையெல்லாம் விஞ்சி ஓஹோவென்றிருந்தது இந்தியா காபி ஹவுஸ்.

முற்றிலும் மாறுபட்ட நாகரிகத்துக்கு மாறத் தயாராக இருந்தவர்களுக்காகவே திறக்கப்பட்டிருந்தது கொலாபாவில் இருந்த லெப்போல்ட் கஃபே. “”சாந்தாராமை”ப் பற்றி எழுதுவதற்கும். “லெப்போல்டை’ உலகம் முழுவதும் பிரபலமாக்குவதற்கும் கிரகோரி டேவிட் ராபர்ட்ஸýக்கு அரை நூற்றாண்டு காலம் ஆகியிருக்கும்.

மொரார்ஜி தேசாய் ஆட்சி நடந்துகொண்டிருந்ததும், அவரது மதுவிலக்குக் கொள்கையும் அமலில் இருந்ததும் அந்த பம்பாயில்தான். ஒரு சுவர் அலமாரி முழுவதும் உலகின் மிகச் சிறந்த விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மது வகைகள் அணிவகுத்து நின்ற, கரஞ்சியாவின் மெரைன் டிரைவ் இல்லம் இருந்ததும் அதே பம்பாயில்தான்.

உண்மையிலேயே உலகப் பண்பாட்டில் ஊறியவர் கரஞ்சியா. மாமனிதர்களுடன் பழகிய அதே நேரத்தில், சாமானியர்களின்பாலும் அக்கறை கொண்டிருந்தவர் அவர்.

தனது அலுவலக உதவியாளருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமானால், ஆசிரியர் குழுக் கூட்டத்தைக்கூட ரத்து செய்துவிட்டு, தானே காரை ஓட்டிக்கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடியவர் கரஞ்சியா. தினமும் காலை 11 மணிக்கு நீர் கொண்டு தரும் கடைநிலை ஊழியருக்கு நன்றி தெரிவிக்க ஒருபோதும் தவறாதவர் அவர்.

பழைய உலகின் மாண்புகளையும் நவீன உலகின் நளினங்களையும் சிறந்த கலாசார விழுமியங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தியவர் ருஸ்ஸி கரஞ்சியா. அன்றைய சிறப்புமிகு பம்பாயைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர் அவர்.

ஆனால் இன்றோ, போயேபோய்விட்டன அந்தப் பழைய பெருமைகளெல்லாம்.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

Posted in 1947, BJP, Bombay, Culture, Divided, Federal, Freedom, George, Heritage, Independence, Karanjia, Mumbai, Nation, National, North, Russy, Russy Karanjia, Sentimental, Sentiments, Separate, Separatists, Shiv Sena, Shivsena, South, State, Thackeray, Tradition, Unity | Leave a Comment »

Primary vs. General Election funds: USA & India Poll Finances: Madhavan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஊழலின் ஊற்றுக்கண்!

செ. மாதவன்

சரியோ தவறோ, இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிச் செல்கிற நிலைமை. அதைப்போல, இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதி, தேர்தல் செலவுகளிலும் அமெரிக்காவைப் பின்பற்றிச் செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் தொடங்க வேண்டும்.

அரசியல் செலவுகள் பெருகி வருகின்றன. இதன் விளைவாக அரசியல் லஞ்சம் பெருகி விடும். இன்றுள்ள நிலையே மோசமாக உள்ளது. அதிகாரம் செலுத்தும் சட்ட வலிமையுள்ள அனைத்து அரசு அமைப்புகளும், அதிகாரம் பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்களும் லஞ்சத்தில் மூழ்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.

விதிவிலக்காக உள்ள சிலர் மிகக் குறைவே. இதில் சதவீத வேறுபாடு இருக்கலாமே தவிர அதிக அளவில் லஞ்சம் பெருகி வருவது உண்மை.

அதிகாரம் செலுத்தும் வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சொத்துக் குவிப்பதில் உள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் நிறைந்த விதிமுறைகள் பயனற்றவைகளாக உள்ளன.

1959ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், அமைச்சர்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்ற சட்டவிதியை அமல்படுத்துமாறு அறிஞர் அண்ணா நடவடிக்கை எடுத்தார்.

அமைச்சர்கள் சொத்துகள் வாங்குவதை முறைப்படுத்தி பகிரங்கப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிடக் கூறினார். சில செய்திகள் வெளிவந்தவுடன் நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தனி நபர்களைப் பற்றி நினைப்பதைவிட இதுபோன்று அதிகாரங்களைப் பயன்படுத்திப் பணம் குவிப்பதைத் தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும்.

ஆட்சியின் அடித்தளத்தில் உள்ள ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைப் பரிசீலிக்கலாம். வீடு கட்ட அனுமதி கொடுப்பதில் பணம் வாங்கும் நிலை உள்ளது. ஒரு அரிசி ஆலைக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனுச் செய்த ஒருவர், அனுமதி பெற இயலவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்காவிட்டால், மனுச் செய்த விவரங்கள் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுவிட்டார் என்று கூறி, அரிசி ஆலை நடத்தலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பை நான் பெற்றுக் கொடுத்த வழக்கு நினைவில் நிற்கிறது. அனுமதி வழங்கும் விதிகளில் தெளிவான விவரங்கள் வகுக்கப்பட்டு இருந்தால் அனுமதி பெறுவதில் நடமாடும் லஞ்சங்கள் தவிர்க்கப்படலாம்.

உள்ளாட்சி மன்றங்கள் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் முறைகளில் ஒரு பகுதி நிதி ஊழல் செய்ய வழி வகுக்கிறது. சாலைகள், கட்டடங்கள், தொழிற்சாலைகள் அரசின் பல திட்டங்கள் மூலம் நிதி செலவழிக்கும்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல கட்டங்களில் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதியை பங்கிட்டுக் கொள்வது நடைமுறையாகிவிட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் சதவீத அடிப்படையில் மக்கள் வரிப்பணம் பாழடிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்? ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்த ஊழலின் தொடக்கம் தேர்தலில்தான் தொடங்குகிறது என்கிற நிலை அண்மைக்காலங்களில் தோன்றிய சரித்திரம். ஊராட்சித் தேர்தலில் லட்சக்கணக்கில் செலவழித்து விட்டேன், அதை ஈடு கட்டுங்கள் என்று ஊராட்சித் தலைவர்களாக வர விரும்புபவர்கள் கூறுகிற விசித்திரத்தைப் பார்க்கிறோம்.

பல லட்சங்கள் செலவழித்துத் தலைவர்களாக வருபவர்கள் கள்ளப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது பதவி கிடைத்தவுடன் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளை அடித்துப் பணத்தை ஈடுகட்ட முடியும் என்று நினைப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த உண்மைகள்தான் ஊராட்சித் தேர்தல்களிலும் லஞ்சம் தாண்டவமாடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த மோசமான தேர்தல் செலவுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெருமளவில் நடைபெறத் தொடங்கிவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இது சாதாரணமான நிகழ்ச்சிகளாகத் தோன்றலாம்.

ஆனால் 46 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல்களைச் சந்தித்தவர்கள், தேர்தல்களை நடத்திய தலைவர்கள், அன்றைய நிலைமைகளுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், நாடும் மக்களும் சந்திக்கும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பார்த்திடும் தேர்தல் செலவுகள் நாடு எங்கே, எதை நோக்கிச் செல்கிறது என்று கேள்வி கேட்க வைக்கிறது.

1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. தேர்தலுக்குப் பணம் கட்டி எழுத்து மூலம் வேட்பாளராகக் கேட்கும் காலம் தோன்றவில்லை. கோவையில் ஒரு மாநாட்டில் தொண்டர்களோடு அமர்ந்து தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டது. ஒரு சிலரோடு மட்டும் சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரு வாடகைக் காரில் மட்டும் தொகுதி முழுவதும் சில தோழர்களுடன் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன். ஊரில் முக்கியமானவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பது, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது என்ற முறைகள் பின்பற்றப்பட்டன. ஊர்ப் பெரியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த ஊருக்குத் தேவையான பொது வசதிகளை, சாலை அமைத்தல், குடிதண்ணீர் வசதி, பள்ளிக்கூடம் கட்டுதல் போன்ற பொதுக் கோரிக்கைகளை முன்வைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காரைக்குடியில் எம்ஜிஆர் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டத்துக்கு கட்டணம் வசூலித்து, அதில் கிடைத்த 5,000 ரூபாயைத் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்திய காட்சி நினைவுக்கு வருகிறது. அறிஞர் அண்ணா கட்சியிலிருந்து ரூ. 200 டி.டி. அனுப்பினார். மொத்தத் தேர்தல் செலவு சில ஆயிரங்கள்தான். ஆங்காங்கே கட்சித் தொண்டர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்டனர்.

அதே போல் 1967ஆம் ஆண்டு தேர்தலின்போதும் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தின் மூலம் ரூ. 5,000-ம் வசூல் செய்து கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற சிறப்புக் கூட்டங்கள் நடத்துவது அந்தக்கால அரசியல்.

1962ஆம் ஆண்டு தேர்தலைவிட சில ஆயிரங்கள் கூடுதலாகச் செலவழிந்தது. கட்சிக்காரர்களே முன்னின்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டாற்றி வெற்றி பெறச் செய்தனர். எதிர்த்து நின்றவர் ஒரு ஆலை அதிபர். அவர் வீட்டுக்கே சென்று வாக்குக் கேட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் அவருக்கே அரசின் மூலம் பல உதவிகள் செய்த நிகழ்ச்சிகள் அன்றைய நாகரிக அரசியல் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.

ஆனால் இன்று நடைபெறும் தேர்தல்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பது நடைமுறையாகிவிட்டது. தேர்தல் நிதி என்ற பெயரில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் கோடிக்கணக்கில் நிதி திரட்டுவது நடைபெறுகிறது. லஞ்சம் பெருகிவிட்டதற்குத் தேர்தல் செலவு பெருகிவிட்டதும் காரணமாக அமைந்துவிட்டது.

இப்போது அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் தேர்தல் நிதி திரட்டும் செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.

அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் ஒபாமா ஆகிய இருவரும், அதிபர் பதவி வேட்பாளராகத் தங்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட, தங்களுக்குள் மக்கள் ஆதரவை நிரூபிக்கும் தேர்தல்தான் இப்போது நடைபெறுகிறது. இதற்கு நிதி சேர்க்கிறார்கள். 2008 ஜனவரி வரை ஒபாமா சேர்த்திருக்கும் நிதி 13,82,31,595 டாலர்கள் அதாவது 552,92,63,800 ரூபாய் என்றும், ஹில்லாரி கிளிண்டன் சேர்த்திருக்கும் நிதி 13,45,36,488 டாலர்கள் அதாவது 538,14,59,520 ரூபாய் என்றும் வெளிவந்துள்ளது. இவர்களைப்போல அந்தக் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் இன்னும் பல வேட்பாளர்களும் நிதி திரட்டியுள்ளனர்.

இந்தியாவிலும் அமெரிக்கா போல் பண ஆதிக்கம் தோன்றாமல் இருக்க வேண்டும். நாடாளுமன்றச் சட்டங்கள் இல்லாமலே அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகள் போடலாம். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களைப்போல் நடைமுறைகளைக் கொண்டு வரலாம். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், கார்கள் பயன்படுத்தும் முறைகளை விதிகள் மூலம் வகுக்கலாம். ஊர்வலங்களைத் தடுக்கலாம். பொதுக்கூட்டங்களைக் குறைக்கலாம்.

ஒரு வேட்பாளர் கடந்தகாலச் சாதனைகளைப் பற்றி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி வாக்காளர்களுக்கு வேண்டுகோளாக அச்சடித்துக் கொடுக்கும் முறையை மட்டும் அனுமதிக்கலாம். வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குகள் கேட்கலாம்.

46 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கட்சியினரும் இன்று போலத் தேர்தல் செலவு செய்யவில்லை. அதிகாரத்தைக் காட்டித் தேர்தல் நிதிகளைக் குவித்ததும் இல்லை என்பதுதான் உண்மை. அமெரிக்காவில் பிரசார நிதி என்று சட்டப்படி வசூலிப்பது தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கறுப்புப் பணம் தேர்தலில் விளையாடுகிறது.

அரசியல் லஞ்சம் ஒழிந்தால், அதிகாரிகள் லஞ்சமும் ஒழியும். பண ஆதிக்கம் ஒழியும். தேர்தல் போர்வையில் லஞ்சங்களைக் குவிக்கும் அரசியல் அநாகரிகம் ஒழியும். ஏழைத் தொண்டர்களை ஆட்சிபீடத்தில் அமர்த்தும் காமராசர், அறிஞர் அண்ணா வளர்த்த அரசியல் மீண்டும் மலர்ந்திடும். அரசியல் தலைவர்கள் அனைவரும் புதிய சரித்திரம் படைப்பார்கள்.

நல்லாட்சி வேண்டுமானால் நல்ல அரசியல் வேண்டும். நல்ல அரசியல் வேண்டுமானால், தேர்தல் வெற்றிகள் மக்களின் செல்வாக்கின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பணபலத்தால் அமையக்கூடாது. மக்கள் சக்திக்கு மரியாதை கிடைக்கும் சூழ்நிலையை நமது தேர்தலில் ஏற்படுத்தும் கடமை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு உண்டு.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்)

Posted in Actors, AIADMK, America, Anna, Annadurai, Assets, Balance, Bribery, Bribes, Cinema, Clinton, Commission, Conferences, Corruption, DMK, EC, Elections, Expenditure, Films, Finance, Finances, Funds, Huckabee, Income, India, IT, JJ, kickbacks, KK, Madhavan, McCain, MGR, Mitt, Movies, Obama, Party, Polls, Poor, President, Primary, Rich, Romney, Tax, Taxes, US, USA, Wealthy | Leave a Comment »

“User development fees” at the Bangalore International Airport

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

சர்வதேச விமானநிலைய கட்டண வசூலை நிறுத்திவைக்க யோசனை

பெங்களூர் அருகே உள்ள தேவனஹள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை நிறுத்திவைக்குமாறு இந்த விமானநிலைய நிறுவனத்துக்கு மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.

பெங்களூரில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது சர்வதேச விமானநிலையம். இந்த விமானநிலையத்தில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விமானநிலையம் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ளதால் பெரும் முதலீட்டில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான திட்டச் செலவை ஈடுகட்டவும் பராமரிப்புச் செலவைச் சரிக்கட்டவும் இந்த விமானநிலையத்திற்கு வந்துசெல்லும் பயணிகளிடம் தனி மேம்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க முடிவுசெய்யப்பட்டது.

இந்தக் கட்டணத் தொகையானது உள்நாட்டுப் பயணிகளுக்கு சற்று குறைவாகவும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு சற்று கூடுதலாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

பெங்களூரில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் எச்ஏஎல் விமானநிலையத்தை ஒப்பிடும்போது தூரம், நேரம், பணம் அதிகமாக விரயமாவதால் புதிய சர்வதேச விமானநிலையத்திற்கு பல தரப்பில் ஆட்சேபம் எழுந்தது.

அதுமட்டுமன்றி, சென்னை உள்ளிட்ட அண்டை மாநில நகர்களுக்கு சர்வதேச விமானத்தில் இருந்து செல்லும்போது காலவிரயமும் பணவிரயமும் கட்டாயமாக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இரு விமானநிலையங்களையும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் தேவனஹள்ளி சர்வதேச விமானநிலையத்திற்கு வரும் பயணிகளிடம் அபிவிருத்திக் கட்டணம் வசூலிக்கும் முடிவை விமானநிலையத் திட்டச் செலவின் தணிக்கை அறிக்கை வரும்வரை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.

இதுபோன்ற யோசனையை ஹைதராபாத் சர்வதேச விமானநிலைய நிறுவனத்திடம் கூறியபோது அதைப் பரிசீலித்து அந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த யோசனைப்படி, முதல் 4 மாதங்களுக்கு உள்நாட்டுப் பயணிகளிடம் விமானநிலைய மேம்பாட்டுக் கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் மத்திய அமைச்சகம் கூறிய யோசனையைப் பரிசீலித்து முடிவு செய்யவேண்டியது பெங்களூர் சர்வதேச விமானநிலைய நிறுவனத்தின் நிர்வாகத்தின் பொறுப்பு என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பிரன்னர் தெரிவித்தார்.

கட்டண விலக்கு காலமாக அறிவிக்கப்பட்டுள்ள 4 மாத காலத்திற்குள் மேம்பாட்டுக் கட்டணம் எவ்வளவு என்பதை கணக்கிட ஹைதராபாத் சர்வதேச விமானநிலையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பெங்களூர் சர்வதேச விமானநிலையத்தில் வெள்ளிக்கிழமை முதல் விமானம் தரையிறங்கிப் புறப்பட்டுச் செல்லும். இந்த விழாவில் கலந்துகொள்ள பெங்களூர் வரும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறைச் செயலர் அசோக் சாவ்லா தலைமையிலான குழு இந்த விஷயம் குறித்து விமானநிலைய நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டுப் பயணிகளிடம் ரூ.675 மற்றும் வரியை மேம்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கவும் வெளிநாட்டுப் பயணிகளிடம் ரூ.955 மற்றும் வரியை வசூலிக்கவும் பெங்களூர் சர்வதேச விமானநிலைய நிறுவனம் முடிவுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Posted in AAI, Airport, Andhra, AP, aviation, Bangalore, Bengaluru, Devanahalli, Domestic, Hyderabad, International, Mandakalli, Mysore, UDF, User, Vayudoot | Leave a Comment »

Aadhimoolam – Anjali by Ku Pugazhendhi

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஆதிமூலம் – ஓவியர் கு. புகழேந்தி

ஓவியர் ஆதிமூலம் ஒரு சிறந்த மனிதர், சிறந்த கலைஞர். நவீன ஓவியம் தமிழ்ச் சூழலில் பரவலாக, அதாவது இதழ்களில் வெளிவருவதற்கு அவருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. “எழுத்து’ போன்ற சிற்றிதழ்களில் அவருடைய ஓவியங்கள் வெளிவந்தது, தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

அதேபோல் வணிக இதழ்களில், கதை, கவிதை, கட்டுைர போன்றவற்றிற்கான ஓவியங்கள், விளக்க ஓவியங்களாக மட்டும் வந்து கொண்டிருந்த நிலையில், அதை மட்டுமே வெளியிட்டு வந்த இதழ்களும், அதுபோன்ற ஓவியங்களை மட்டுமே பார்த்துப் பழகிப்போன வாசகர்களும் நவீன ஓவியத்தைப் பார்க்க, பயன் படுத்தத் தொடங்கி னார்கள் என்றால் அதைத் தொடங்கி வைத்தவர் ஆதிமூலம் அவர்கள்தான்.

ஒரு ஓவியம் கதை, கவிதைக்கான விளக்கப்படம் என்ற நிலையிலிருந்து, அந்தக் கவிதை, கதையின் ஒட்டுமொத்த சாரத்தை, ஓவியத்தில் வெளிப்படுத்தி, ஓவியத்தை தனித்துவமான படைப்பாக நிலைநிறுத்தியவரும் ஆதிமூலம் அவர்கள்தான். அவர் ஓவியங்கள் வாசகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் அதன் மூலம் நல்ல அடித்தளமும் போடப்பட்டது.

அந்த அடித்தளம் தான் என்னைப் போன்றவர்களை வணிக இதழ்கள் துணிந்து பயன்படுத்தியதற்கு துணை புரிந்தது.

அவருடைய கோடுகளுக்குத் தனி அடையாளம் இருக்கிறது. அவருடைய கோடுகள் வலிமையானவை, வீரியமானவை, அழுத்தமானவை. அவற்றை அவருடைய கருப்பு வெள்ளை ஓவியங்களில் நாம் பார்க்கலாம். தமிழ்த் தொன்மங்கள் என்று சொல்லக் கூடிய அய்யனார் போன்ற நாட்டுப்புற வடிவங்களை கோட்டோவியங்களில் வெளிப் படுத்தியவர். அவருடையக் கோட்டோ வியங்கள் தனித்துவமானது. பார்ப்பவர் களை எளிதில் ஈர்க்கக் கூடியது.

நடிகர்களுடைய நடிப்பைப் பார்க்கும் போது “சிவாஜியைப் போன்று’ நடிப்பு இருக்கிறது என்று சொல்வது போல, சில ஓவியர்கள் எப்படி வரைந்தாலும் அதில் “ஆதிமூலம் போன்று’ இருப்பதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவருடைய ஓவியங்கள் தனி அடையாளத்தோடு விளங்குகின்றன.

அதேபோல் அவருடைய அரூப வெளிப்பாடான வண்ண ஓவியங்களும், தனித்துவமான அடையாளத்தோடு விளங்குகிறது. சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற ஓவியரான அவர், புதிய தலைமுறைக் கலைஞர் களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர். நெருக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பவர்.

என்னுடைய “உறங்காநிறங்கள்’ ஓவியக்காட்சி நடைபெற்ற பொழுது அழைப்பு அனுப்பியிருந்தேன். அவர் ஊரில் இல்லை. வந்ததும் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது நான் அவரிடம் “ஓவியங்களின் ஒளிப் படங்களை ஒரு நாள் உங்களிடம் எடுத்து வருகிறேன்’ என்றேன்.

“”இல்லை, வேண்டாம் அந்த நிலையை நீங்கள் கடந்து விட்டீர்கள். வாய்ப்புக் கிடைக்கும் போது நானே வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்” என்றார்.

பணிச்சுமை, காலமாற்றம் இவை களால் இல்லத்திற்குச் சென்று சந்திப்பது குறைந்துவிட்டது. இலக்கிய அரங்குகள், சில கண்காட்சிகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒரு சிலவற்றில் சந்திப்பதும் குறைந்துவிட்டது.

அவ்வப்போது தொலைபேசி உரையாடல்கள். அப்படி ஒருநாள் அவைரத் தொலைபேசியில் அழைத்து மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தேன். “இல்லை புகழேந்தி, நான் வெளியில் எங்கும் வருவதில்லை, இனிமேல் நீங்கள் எல்லாம் தான் அவைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார்.

அவர் வெளியில் வராமல் இருந்தாலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தாலும், அவர் ஓவியங்கள் செய்வதில் இயங்கிக் கொண்டே இருந்தார். 2008 சனவரி 27 ஞாயிறு அதிகாலை அவருடைய இயக்கம் நின்று விட்டது. ஆனால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரது படைப்புகளாலும் பலரது நினைவுகளிலும் தமிழ்க்கலை இலக்கிய வரலாற்றில் ஆதிமூலம் அசைக்க முடியாத ஒரு பெயர்.

Posted in Aadhimoolam, Aadhymoolam, Aathimoolam, Adhimoolam, Anjali, artists, Arts, Athimoolam, Faces, Icons, Lit, Literature, Memoirs, Notable, Painters, Paintings, Pugalendhi, Pugazendhi, Pugazhendhi, Pugazhenthi, Sculpture, Works | Leave a Comment »

Balu Mahendira’s Vanna Vanna Pookkal – Interview with Producer Thaanu

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

திரைப்பட வரலாறு :(881)
“வண்ண வண்ண பூக்கள்”
பாலு மகேந்திரா டைரக்ஷனில் தாணு தயாரித்த படம்


பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான பாலுமகேந்
திராவின் இயக்கத்தில், “வண்ண வண்ணப்பூக்கள்” என்ற படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார்.

இந்தப் படத்தை தயாரித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி தாணு கூறியதாவது:-

பாலு மகேந்திரா சந்திப்பு

“எனது அலுவலகம் அப்போது தி.நகரில் இருந்தது. ஒருநாள் காலை நான் அலுவலகத்தில் இருந்தபோது, டைரக்டர் எம்.ஆர்.பூபதி டைரக்டர் பாலு மகேந்திராவை அழைத்துக்கொண்டு வந்தார்.

நான் அவர்களை வரவேற்று உபசரித்தேன்.

பாலுமகேந்திரா இயக்கிய படங்களை பார்த்திருக்கிறேனே தவிர, அவர் இயக்கிய படம் எதையும் தயாரித்ததில்லை. என்ன நோக்கத்துக்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்று நான் யோசித்த நேரத்தில் பாலு மகேந்திராவே என்னிடம், “தாணு சார்! நான் இதுவரை இயக்கிய படங்களில் ஒரு கமர்ஷியல் தயாரிப்பாளரை தேர்வு செய்யாமல் இருந்து விட்டேன். அதுதான் நான் செய்த பெரிய தவறு. அதன் விளைவாக இன்று நான் கஷ்டத்தை அனுபவிக்கும் நிலைக்கு வந்துவிட்டேன். எனது ஆபீசுக்கு 6 மாத வாடகை பாக்கி என்று சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. இந்த நேரத்தில் எனக்கு ஒரு படம் கொடுத்தீர்களானால், காலத்துக்கும் மறக்கமாட்டேன். இப்போது நீங்கள் எனக்கு அட்வான்சாக ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், அது எனக்கு ஒரு லட்சம் மாதிரி” என்று கூறினார்.

ஒரு பெரிய இயக்குனர் இப்படி தன் நிலை பற்றி வெளிப்படையாகப் பேசியதில், எனக்கு மனம் பதறிவிட்டது. அப்போதே அவரிடம், “சார்! என் தயாரிப்பில் ஒரு படம் இயக்குங்கள்” என்றேன்.

“ஒரு கதை வைத்திருக்கிறேன். 26 லட்ச ரூபாய் பட்ஜெட். படத்தில் விக்னேஷ், ஆதித்யா, மவுனிகா, வினோதினி நடிக்கிறார்கள். இவர்களுக்கு இந்தக் கதையை சொல்லி, வீட்டிலேயே ரிகர்சல் வைத்து ஷுட் பண்ணியும் இருக்கிறேன். ஏற்கனவே கதையின் கேரக்டர்கள் இவர்களுக்கு அத்துபடி என்பதால், சீக்கிரமாக படப்பிடிப்பை முடித்துவிடுவேன்” என்றார். அதோடு அவர் சொன்ன நட்சத்திரங்கள் நடித்த சில காட்சிகளுக்கான ஸ்டில்களையும் காண்பித்தார்.

பெரிய டைரக்டர் இப்படி சொன்னதும் நான் உடனே `கேஷ் பாக்சை’ திறந்து ஒரு தொகையை அவர் கையில் கொடுத்து “கவலைப்படாதீங்க சார்! நாம படம் பண்றோம்” என்றேன்.

இளையராஜா

அப்போதே அவர் படத்தின் டெக்னிஷியன்கள் பட்டியலையும் சொன்னார். அதில் இசை என்ற இடத்தில் இளையராஜா பெயர் இருந்தது. அந்தப் பெயரை பார்த்ததும் என் மனது மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறந்தது.

என் மகிழ்ச்சிக்குக் காரணம் இருந்தது. என் தயாரிப்பில் இரண்டாவது படமாக உருவான “நல்லவன்” படத்துக்கு இசைஞானி இளையராஜாவே இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினேன். அதற்காக அவரது தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரனுடன் சென்று சந்தித்தேன். என் விருப்பம் சொன்னதும் நான் எதிர்பார்த்திராத ஒரு தொகையை சம்பளமாக சொன்னார். அவர் கேட்ட தொகையினால், நான் அதிர்ச்சிவசப்பட்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டவர், “பொட்டி (ஆர்மோனியம்) போடத் தெரியாதவங்களே உங்க கிட்ட அதிகம் கேட்டு வாங்கும்போது நான் கேட்டாலென்ன?” என்றார்.

அவர் குறிப்பிட்டுச் சொன்ன அந்த இசையமைப்பாளருக்கு, நான் பலமுறை பல சூழ்நிலைகளில் உதவியிருக்கிறேன். அவர் இயக்கிய முதல் படம் ரிலீசின்போது பணப்பிரச்சினை. படத்தை வெளியிட முடியாத நிலையில் என்னிடம் வந்தார். 11/2 லட்சம் ரூபாய் பைனான்ஸ் வாங்கிக்கொடுத்து, ரிலீசுக்கு ஏற்பாடு செய்தேன்.

அடுத்த படத்துக்கு பூஜை போடும்போதே பிரச்சினை. பூஜைக்கான பணத்துக்காக எனக்கு போன் போட்டார். அப்போது எனது வினியோகத்தில் ஆவடி ராமரத்னா தியேட்டரில் “எங்கேயோ கேட்ட குரல்” படம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே போய் 10 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தேன். மூன்றாவதாகவும் ஒரு படத்துக்கு ரிலீசின்போது பிரச்சினை நேர, அப்போது 2 லட்சத்துக்காக ஓடோடி வந்தார். அதையும் பைனான்ஸ் வாங்கிக்கொடுத்து சரி செய்தேன்.

இப்படி வெவ் வேறு சமயங்களில் என்னிடம் உதவி பெற்றவர், நான் தயாரிப்பாளர் ஆனதும் “உங்கள் படத்துக்கு நானே இலவசமாக இசையமைத்துத்தருவேன். உங்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் இதுவாகத்தான் இருக்கும்” என்று உருக்கமாகப் பேசியதன் பேரில் இசை வாய்ப்பை அவருக்கு வழங்கினேன். அப்போதும் அவர் தனது அப்பாவுக்கு உடல் நலமில்லை என்று கூறி “ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்தால் போதும்” என்றார்.

இதுவரை நன்றாக இருந்த அவர் பேச்சு, படத்தின் வியாபாரத்தை நான் பேசி முடித்தபோது மாறிவிட்டது. படம் நல்ல விலைக்கு போயிருப்பதை தெரிந்து கொண்டவர், படத்தின் ஹீரோ வாங்கும் சம்பளம் அளவுக்கு தனக்கும் தந்தால்தான் ஆயிற்று” என்று அடம் பிடித்தார். “இது கூட நானல்ல! என் மனைவியின் கட்டாயத்துக்காகவே வாங்க வேண்டியிருக்கிறது” என்று அப்போதும் அவர் சொன்னதுதான் ஹைலைட்.

இந்த விஷயம் இசை ஞானியின் காதுக்கு எப்படியோ போய்ச் சேர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர் எடுத்த எடுப்பில் அதிக சம்பளம் கேட்டு அதிர வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு அவரை வற்புறுத்த விரும்பாமல் அப்போது நான் திரும்பி வந்துவிட்டேன்.

அதற்குப்பிறகு இப்போதுதான் அவரது இல்லத்தில் காலெடுத்து வைத்திருக்கிறேன். அவருக்கே உரிய பாணியில் வரவேற்றவர், “உங்களுக்கு இசையமைக்கிறேன். டைரக்டர் யார்?” என்று கேட்டார்.

நான் பாலுமகேந்திராவின் பெயரை சொன்னேன்.

இப்போது அவர் முகத்தில் சின்னதாய் ஒரு மாறுதல் தெரிந்தது.

“தாணு! `ரத்த சம்பந்தலு’ன்னு ஒரு தெலுங்குப்படத்தை பாலுதான் பண்ணினார். பானுசந்தர் – அர்ச்சனா நடிச்சாங்க. 2 வருஷம் ஆகியும் படம் இன்னும் ரிலீஸ் ஆகலை.”

பதிலுக்கு நான், “சார்! இப்ப அவரே என்கிட்ட அவரோட நிலை பற்றி உருக்கமா சொன்னதாலதான் அவரை வெச்சு படம் பண்றதா வாக்குக் கொடுத்திட்டு அட்வான்சும் கொடுத்திட்டு நேரா உங்க கிட்ட வந்திருக்கிறேன்” என்றேன்.

அப்போதும் அவர் இசையமைக்க யோசித்தார்.

நான் பலவாறாக சமாதானப்படுத்தி, அவர் மனதை மாற்றினேன்.

இளையராஜா இசையமைக்க சம்மதம் தந்ததும் மறுநாளே பாலு மகேந்திரா இளையராஜாவை சந்தித்தார். தனது படத்தின் கதை பற்றி விளக்கினார்.

மெட்டுகள்

மறுநாள் காலை 7 மணிக்கு பாடல் கம்போசிங்கிற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள `பிஷர்மேன் கேவ்’ போனோம். 8 1/2 மணிக்கு ஊதுபத்தி ஏற்றி வைத்து ஆர்மோனியத்தை தொட்டதும் முதல் பாட்டு `கண்ணம்மா காதலெனும் கவிதை சொல்லடி’ என்ற பாட்டு பிய்த்துக்கொண்டு வந்தது. அடுத்து `இளம் நெஞ்சே வா’ பாட்டு. அதையடுத்து `சின்னமணி கோவிலிலே’, `ஜின்ஜினாக்கடி’ என தொடர்ந்து மதியத்திற்குள் 6 பாடல்களுக்கான அற்புதமான டிïன்கள் போட்டுக் கொடுத்து விட்டார், இளையராஜா.

அவர் ஆர்மோனியத்தில் இசையமைத்தபோது பாலு மகேந்திரா ஒரு படம் எடுத்தார். அந்த புகைப்படத்தை பெயிண்ட் பண்ணி எனது அன்பளிப்பாக இளையராஜாவுக்குக் கொடுத்தேன். இந்த பெயிண்ட் நூறு வருஷத்துக்கும் மேலாக புகைப்படத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. இளையராஜா தன்னை மறந்து இசையமைக்க, அவரது தாயார் தனது மகனை பார்த்து ரசிப்பது போல அந்த புகைப்படம் இப்போதும் அவரது இல்லத்தில் இருக்கிறது.

திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கியது. பாலு மகேந்திராவிடம் ஏற்கனவே இந்த கதைக்காக நடிப்புப் பயிற்சி பெற்ற நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். 10 நாள் படப்பிடிப்பு தடங்கலின்றி போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடீர் என்று ஒரு சிக்கல் ஏற்பட்டது. நடிகை அர்ச்சனாதான் அந்த சிக்கலை உருவாக்கினார்.

தேசிய விருது கிடைத்தது!

பாலு மகேந்திரா டைரக்ஷனில் கலைப்புலி தாணு தயாரித்த “வண்ண வண்ணப்பூக்கள்” படத்துக்கு பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்தப் படத்தைத் தயாரித்தபோது, சில சிக்கல்களை தாணு சந்திக்க வேண்டி இருந்தது.

அதுபற்றி அவர் கூறியதாவது:-

அர்ச்சனா கோபம்

“வண்ண வண்ணப்பூக்கள்” பத்தாவது நாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, நடிகை அர்ச்சனா வேகமாக காரில் இருந்து இறங்கி செட்டுக்குள் வந்திருக்கிறார். “நான் சிபாரிசு செய்த ஆதித்யாவை, விக்னேஷ் நடிக்கிற கேரக்டரில் நடிக்க வைக்கவில்லையே, ஏன்?” என்று பாலு மகேந்திராவிடம் கோபம் கோபமாக பேசிவிட்டுப் போயிருக்கிறார்.

இந்த சம்பவம், என் காதுக்கு வந்திருந்தது.

மறுநாள் காலையில் டைரக்டர் பாலு மகேந்திரா என்னைப் பார்க்க வந்தார். “சார்! நான் எதிர்பார்த்த அளவுக்கு விக்னேஷ் நடிப்பு அமையவில்லை. அதனால் அவரை மாற்றிவிட்டு, வேற ஹீரோவைப் போடலாம்” என்றார்.

முந்தின நாள் அடித்த புயலுக்கு இன்று ரியாக்ஷனா? நடந்தது எதுவும் எனக்குத் தெரியாதது போல காட்டிக்கொண்டு, “நடிகர்களுக்கெல்லாம் ஏற்கனவே பயிற்சி கொடுத்து வைத்திருந்ததாகத்தானே சொன்னீர்கள்! இப்போது படப்பிடிப்பு தொடங்கி 10 நாள் கழித்து, நடிப்பு வரவில்லை என்று சொன்னால் எப்படி?” என்று கேட்டேன்.

எனக்கு விஷயம் தெரிந்து விட்டது என்பதை புரிந்து கொண்டவர், “அந்தப் பையனுக்கு காய்ச்சல். குளிர் வந்து கஷ்டப்படற மாதிரி தெரியுது” என்றார்.

புது ஹீரோ

இதற்கு மேல் அவரிடம் பேசிப் பயனில்லை என்று புரிந்து கொண்டு, “இப்போது, புதிதாக ஒரு ஹீரோ வேண்டும், அதானே சார்?” என்றேன். “அதேதான் சார்” என்றார், அவரும்.

அப்போது “வைகாசி பொறந்தாச்சு” என்ற படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அதுதான் முதல் படம் என்பதால், எங்கள் படத்தில் நடிக்க வைக்க விரும்பி பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜனை சந்தித்தேன்.

விஷயத்தைச் சொன்னதும் அவருக்கு சந்தோஷம். “உங்கள் படங்களின் பிரமாண்ட விளம்பரங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். “வண்ண வண்ணப் பூக்கள்” படத்துக்கான உங்கள் விளம்பரம் பார்த்தபோது “இந்த படத்தில் என் பையன் இருந்தால் எப்படிப்பட்ட `பப்ளிசிடி’ கிடைத்திருக்கும்” என்று கூட யோசித்திருக்கிறேன். இப்போது உங்களின் அதே படத்துக்கு என் பையனை அழைக்கிறீர்கள். அவன் இனி உங்க வீட்டுப்பிள்ளை” என்று அப்போதே சம்மதம் தந்தார்.

பிரசாந்த் நடிப்பில் படப்பிடிப்பு தொடர்ந்தது. பாதிப்படம் வளர்வதற்குள் பாலுமகேந்திரா முதலில் சொன்ன முழுப்படத்துக்குமான பட்ஜெட்டை தாண்டியது. முழுப்படத்துக்கு அவர் போட்டுக்கொடுத்த பட்ஜெட் 26 லட்சம் ரூபாய். இப்போதோ பாதி படத்துக்குள் 27 லட்சம் செலவாகியிருக்கிறது.

10 நாள் படப்பிடிப்பை நடத்திவிட்டு, மறுபடியும் அதே காட்சிகளை படம் பிடித்ததில் செலவு அதிகமாகியிருக்கிறது.

பாடல் காட்சி

படத்தில் வரும் “இளம் நெஞ்சே வா” பாட்டு, சைக்கிள் ஓட்டிக்கொண்டே பிரசாந்த் பாடும் பாட்டு. இந்தப் பாடல் பதிவு நடந்த நேரத்தில், நான் கோவையில் இருந்தேன். இப்போது ஒகனேக்கல்லில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தபோது பாட்டைக் கேட்கிறேன். எனக்கு அதிர்ச்சி. உடனே நான் டைரக்டரிடம், “சார்! இந்தப்பாட்டு சைக்கிளில் போகிற மாதிரியாக வரும் பாட்டுத்தானே! அன்றைக்கு ராஜா சார் இந்தப்பாட்டுக்கு போட்ட டிïன் இது இல்லையே! இது நடந்து போகும்போது பாடுகிற மாதிரியல்லவா இருக்கிறது” என்று கேட்டேன்.

நான் இப்படிக் கேட்டதும் பாலு மகேந்திரா கண் கலங்கி விட்டார். “சார்! ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு! 3 நாளைக்கு முன்னாடி திடீர்னு என் அப்பா இறந்து போனதால், பாட்டெழுத வந்த வாலி சாரிடம் `டிïன் கேசட்டை’ மாற்றிக்கொடுத்து விட்டேன்” என்றார்.

என்றாலும் ஜேசுதாஸ் பாடிய அந்தப்பாடல் `ஸ்லோ மெலடியிலும்’ கேட்க இனிமையாகவே அமைந்திருந்தது.

ரூ.60 லட்சம்

ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. 26 லட்சத்தில் போடப்பட்ட பட்ஜெட், 60 லட்சத்தில் வந்து நின்றிருந்தது! அதோடு படத்தில் ஏற்கனவே சொன்ன காமெடி சீன் எதுவும் எடுக்காமல் விட்டுவிட்டார்.

படம் இளையராஜாவின் பின்னணி இசைக்காக (ரீ ரிக்கார்டிங்) வந்தது. நான் இசைக் கூடத்தில் இளையராஜாவை சந்தித்தேன். என்னைப் பார்த்ததுமே, “என்ன தாணு! நான் சொன்னது நடந்ததா?” என்று கேட்டார்.

இசை அமைக்க ஒப்புக்கொண்டபோது, “இந்தப் படத்தால் ரொம்ப கஷ்டப்படுவீங்க” என்று அவர் சொன்னது என் நினைவில் இருந்தது. பட்ஜெட்டைவிட இரண்டு மடங்கு செலவானதைத் தெரிந்து கொண்டுதான் இளையராஜா இப்படிக் கேட்டார்.

நான் அவரிடம், “நீங்க சொன்னீங்க. நானும் படத்தை எடுத்து முடிச்சிட்டு வந்துட்டேன்” என்றேன்.

படம் தயாரானதும் கலைஞருக்கு போட்டுக்காட்டினேன். படம் முடிந்ததும் “இளமை எழுதிய ஓவியம்; காமிரா எழுதிய காவியம்” என்று பாராட்டி, எழுதித் தந்தார்.

தேசிய விருது

படம் ரிலீசானபோது வசூல் ரீதியாக தோல்விப்படமானது. எனக்கும் கணிசமான நஷ்டம். ஆனாலும் சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான மத்திய அரசின் “தேசிய விருது” கிடைத்து என் நஷ்டத்தை மறக்க வைத்தது.

விருது பற்றிய தகவல் கிடைத்ததும் கலைஞரை சந்தித்தேன். “வருக, வருக! வாழ்த்துக்கள்” என்றார். அப்போது முரசொலி பதிப்பகத்தில் இருந்து வந்து கொண்டிருந்த “தமிழன்” நாளேட்டில் இந்த விருது செய்தியை தலைப்புச் செய்தியாக்கினார்கள்.

படம் விருது பெற்ற பிறகு என்னை சந்தித்த பத்திரிகையாளர்களிடம், “பங்கு பெற்ற கலைஞர்களுக்கு களிப்பை தந்த படம். வினியோகஸ்தர்களுக்கு கவலையை தந்த படம்” என்று சொன்னேன்.

நான் இப்படி சொன்னதற்காக பாலு மகேந்திரா என்னிடம், “இப்படி சொல்லியிருக்க வேண்டுமா?” என்று வருத்தப்பட்டார். நான், “உண்மையைத்தானே சொன்னேன்” என்று அவருக்கு வருத்தத்துடன் மறுமொழி சொன்னேன்.

காயத்துக்கு மருந்து

என்றாலும் டெல்லியில் ஜனாதிபதி ஆர்.வெங்கடராமனிடம் சிறந்த பிராந்திய படத்துக்கான தேசிய விருது பெற்றபோது, இந்தப் படத்தயாரிப்பில் ஏற்பட்டிருந்த என் மனக் காயத்துக்கு மருந்து தடவியது போலிருந்தது.”

இவ்வாறு தாணு கூறினார்.

Posted in Balu Mahendhira, Balu Mahendira, Balu mahendra, Balu Mahenthira, Balu Mahenthra, Cinema, Dhaanu, Dhanu, Films, Ilaiaraja, Ilaiyaraaja, Ilaiyaraja, Interview, IR, Movies, Producer, Thaanu, Thanu | Leave a Comment »

Iran to India Natural Gas Pipeline vs Indo-US Nuclear Accord: Ka Ragunathan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

அணுசக்தி உடன்பாடா, அமைதிக் குழாய் திட்டமா?

க. ரகுநாதன்

இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அரசும், ஆட்சியா-ஒப்பந்தமா என்று இடதுசாரிகள் கேட்டால், ஆட்சிதான் முக்கியம் என்று இறங்கி வருவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

இந்தக் களேபரத்தில் முக்கியமான இன்னொரு திட்டத்தைப் பற்றி யாரும் விவாதிப்பதில்லை. அது ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா (ஐபிஐ) எரிவாயுக் குழாய் பாதைத் திட்டம். ரூ.28,000 கோடியிலான இத் திட்டம் அமைதிக் குழாய் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

2007-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் (ஐபிசிசி) தலைவரான ஆர்.கே.பச்செüரி, ஈரானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி ஷாம்ஸ் அர்டேகனி ஆகியோர் 1989-ம் ஆண்டு இத் திட்டத்தை வரைந்தனர். பின்னர் பல்வேறு பேச்சுகளைக் கடந்து 2005-ம் ஆண்டு இத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் போடுவது என முடிவானது.

ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வரை மொத்தம் 2,670 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் பதித்து 2012-ல் இருந்து எரிவாயு வழங்குவதே இத் திட்டம்.

பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், திட்டம் துவங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை. எரிவாயுவின் விலையைத் தீர்மானிப்பதில் இந்தியா-ஈரான் இடையே தொடர்ந்து வரும் இழுபறி நிலையே இதற்குக் காரணம் என்று மத்திய அரசு கூறியது.

இதனால் ஓரிரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா பங்கேற்கவில்லை. மார்ச் மாத கடைசியில் நடைபெறும் பேச்சுவார்த்தையே இறுதியானது; அதில் இந்தியா விலகுவதாகக் கூறினால் சீனா உதவியுடன் நிறைவேற்றுவோம் என ஈரானும் பாகிஸ்தானும் கூறியுள்ளன. ரஷியாவின் காஸ்ப்ரோம் நிறுவனமும் விருப்பம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வற்புறுத்தலால் இந்தியா தேவையற்ற காலதாமதம் செய்வதாகவும் அந்நாடுகள் கூறுகின்றன.

ஈரான், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா இடையிலான அரசியல் உறவுகளே இத்திட்டம் தாமதமாவதற்குக் காரணம்.

அணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கில் யுரேனியம் செறிவூட்டும் பணியில் உள்ளதாக அமெரிக்காவுக்கு ஈரான் மீது கோபம். தீயசக்திகளின் அச்சாணி எனக் கூறி போர் தொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதால் ஈரானுக்கு அமெரிக்கா மீது எரிச்சல்.

தன்னைச் சுற்றிலும் இராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் உள்ளதால் தன்னைக் காத்துக் கொள்ள சீனா, ரஷியா, இந்தியாவுடனான நட்பு உதவும் என்பது ஈரானின் எண்ணம்.

2025-ல் இந்தியாவுக்கு தற்போதைய தேவையைப் போல 4 மடங்கு எரிசக்தி தேவை. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எங்கிருந்தாவது எரிவாயு கிடைத்தால் போதும் என்பது இந்தியாவின் நிலை.

இத் திட்டத்தை நிறைவேற்றினால் கிடைக்கும் பணத்தை அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் பயன்படுத்தும். அதனால் முக்கிய நாடான இந்தியா, இதில் பங்கேற்கக் கூடாது என்பது அமெரிக்காவின் எச்சரிக்கை.

பாகிஸ்தான் பழங்குடியினத் தீவிரவாதிகளால் குழாய் பாதைக்கு ஆபத்து எனக் கூறியது அமெரிக்கா. அதற்குப் பதில் துர்க்மேனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வழியிலான குழாய் பாதைத் திட்டத்தை ஆதரித்தது. ஆனால் அல்-காய்தா தலைமையிடம் ஆப்கனில் உள்ளதை வசதியாக மறந்துவிட்டது!.

இந் நிலையில் எரிசக்தி தேவையை நிறைவேற்ற 2005-ல் இந்தியாவுக்கு அமெரிக்கா கூறியதே “123′ ஒப்பந்தம்.

இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் உடன்பாட்டை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு அணுசக்தி உடன்பாட்டை இறுதி செய்யாவிட்டால் உலக அளவில் இந்தியாவின் நம்பகத்தன்மை கெடும் என அமெரிக்கா கூறுகிறது.

அமெரிக்காவின் நெருக்குதலுக்குப் பயந்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கூட்டத்தில் ஈரான் மீதான நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவளித்தது.

இதையடுத்து, கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி ஈரான் ஒரு மில்லியன் யூனிட் எரிவாயுவுக்கு 7.2 அமெரிக்க டாலர் கேட்டது. இந்தியா 4.2 டாலர் மட்டுமே தரமுடியும் என்றது. பின்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் 4.93 டாலர் தருவதாக முடிவானது.

எப்படியும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தால் அதிகம் பயனடைவது இந்தியாதான். இதனால் பாகிஸ்தானில் இருந்து எரிவாயு கொண்டு செல்ல ஆகும் கட்டணத்தை முடிந்தவரை இந்தியாவிடம் இருந்து அதிகமாகக் கறந்துவிடுவது என்பது பாகிஸ்தானின் ஆசை. இதனாலும் இழுபறி நீடிக்கிறது.

ஆனால் திட்டத்தைக் கைவிடவில்லை. இழுபறிக்குக் காரணம் வணிக ரீதியிலான பிரச்னையே தவிர அமெரிக்க நிர்பந்தம் அல்ல என பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அணுசக்தி உடன்பாட்டையும் அமைதிக் குழாய் திட்டத்தையும் ஒன்றாக நிறைவேற்ற முடியாது என உறுதியாகத் தெரிவித்துவிட்டது அமெரிக்கா.

இந்தியா இல்லாவிட்டால் இன்னொரு நாடு என்ற நிலைக்கு ஈரானும், பாகிஸ்தானும் வந்துள்ளன. சீனா இத் திட்டத்தில் இணையத் தயாராக உள்ளது. ஆனால், இது குறித்து எந்தத் தகவலும் இல்லை என மத்திய அரசு கூறுகிறது.

அணுசக்தி உடன்பாடு இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கும் எதிரானது என இடதுசாரிகளும், எதிர்க் கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன. ஆனால், ஈரானுடனான அமைதிக் குழாய் திட்டம் தாமதம் ஆவது ஏன் என்று குறைந்தபட்ச கேள்விகள் கூட எழுப்புவதில்லை என்பதுதான் புதிராகவே உள்ளது.

Posted in Accord, Afghan, Afghanistan, Afghanisthan, Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, America, Atomic, China, Diesel, Electricity, energy, Gas, Gulf, India, Indo-US, Iran, Natural, Nuclear, oil, Pakistan, Persia, Petrol, Petroleum, pipeline, Power, Ragunathan, Resources, Russia, US, USA, USSR | Leave a Comment »

Sixth Pay Panel recommends hefty pay hikes for government staff: Deficit may widen

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

மத்திய அரசு ஊழியர்களுக்கு 40 சதவீதம் ஊதிய உயர்வு: 6-வது ஊதியக் குழு பரிந்துரை

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 6 வது ஊதியக்குழுத் தலைவர் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா.

புதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

புதிய ஊதிய விகிதத்தை 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

முன் தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி, இரு தவணைகளில் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஊதியக் குழு தனது பரிந்துரைகளை நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தது.

இந்தப் பரிந்துரைகளை நிதியமைச்சகம் ஆய்வு செய்து அதை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும். மத்திய அமைச்சரவை இப் பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தும்.

இதன் மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.

புதிய ஊதிய உயர்வு விகிதப்படி மத்திய அமைச்சரவைச் செயலரின் ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செயலரின் ஊதியம் ரூ. 80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து அதன் அடிப்படையில் புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 2.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.

திறமைக்குப் பரிசு: திறமையான ஊழியர்களை ஊக்குவித்து பாராட்டும் வகையில் “திறமை அடிப்படையிலான ஊதிய உயர்வு’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

வீட்டு வாடகைப்படி: வீட்டு வாடகைப்படி உள்பட பெரும்பாலான படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. குழந்தைகளின் கல்வி செலவு உதவித் தொகை ரூ. 50-லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் 40 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் உள்ள 35 கிரேடுகளை (பணி நிலை) 20 கிரேடுகளாக குறைக்கவும் ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது.

50 சதவீத அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஊதியம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ வீரர்களுக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஊதியக் குழு சிபாரிசு செய்துள்ளது.

ராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு இணையான பதவி வரை மாதப்படி ரூ. 6000- ஆக உயர்த்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியக் குழு பரிந்துரைகளால் அரசுக்கு 2008 – 09 நிதியாண்டில் ரூ. 12,561 கோடி கூடுதல் செலவாகும்.

முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி தொகைக்கு ஆகும் செலவு ரூ. 18,060 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

* அடிப்படை சம்பளத்தில் 40 சதவீதம் உயர்வு

* 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி

யிலிருந்து அமல்படுத்த வேண்டும்.

* முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி இரு தவணை

களாக வழங்கப்பட வேண்டும்.

* அதிகபட்சமாக அமைச்சரவை செயலரின் ஊதியம் ரூ. 90,000

* கீழ்நிலை ஊழியரின் குறைந்தபட்ச

சம்பளம் ரூ. 6600

* ஓய்வு பெறும் வயது 60 என்பதில் மாற்றமில்லை

* பணி நிலை 35 கிரேடுகள் என்பது 20 கிரேடுகளாக குறைப்பு

* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவத்தினருக்கும் ஊதியம்

* பிரிகேடியர் பதவி வரை மாதப் படி

ரூ. 6000-ஆக உயர்வு

* வார வேலை நாள் 5 என்பதில் மாற்றமில்லை

* ஆண்டுதோறும் ஊதிய உயர்வு 2.5 சதவீதம்

* திறமை அடிப்படையில் கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு

* மத்திய அரசு ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு

* வீட்டு வாடகைப் படி உள்பட பெரும்பாலான படிகள் இரு மடங்காக உயர்வு

* குழந்தைகளின் கல்விச் செலவுக்கான உதவித் தொகை ஆண்டுக்கு 50-திலிருந்து ரூ. 1000-ஆக உயர்வு

* விடுதி மானியம் ரூ. 3 ஆயிரமாக உயர்வு

* ஒரு பணி நிலையில், அதிகபட்ச ஊதியத்தை எட்டிய ஓராண்டுக்கு பிறகு, அவருக்குப் பதவி உயர்வு வழங்காவிட்டாலும் அடுத்த பணி நிலைக்கு உரிய ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.

—————————————————————————————————————————————————–
உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு

புதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள 6500 – 10,500 என்ற சம்பள விகிதத்தை 8700 – 34,800 என்று மாற்றி கிரேடு சம்பளம் ரூ. 4600-வுடன் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் பதிவாளர், இணைப் பதிவாளர் பணிகளை இணைத்து அப் பதவிகளுக்கான ஊதிய விகிதம் 18,400 – 22,400 தற்போது 39,200 – 67,000 என்று உயர்த்தி கிரேடு ஊதியம் 9 ஆயிரத்துடன் வழங்கப்படும்.

4 ஆண்டுகள் பணி முடிந்த சீனியர் ஜூடிசியல் உதவியாளர், சீனியர் தனி உதவியாளர், ரீடர், சீனியர் ஜூடிசியல் மொழி பெயர்ப்பாளர், நீதிமன்ற அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஊதியம் 6,500 – 10,500 என்பது தற்போது 8,000 – 13,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்று பல்வேறு பணிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————–
முப்படைத் தளபதிகளுக்கு ரூ. 90,000 ஊதியம்

புதுதில்லி, மார்ச் 24: தரைப்படை, விமானப் படை, கடற்படை தளபதிகளுக்கு ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்த ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.

தற்போது முப்படைத் தளபதிகளுக்கும் மாத ஊதியமாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 60 ஆயிரம் உயர்த்தி மொத்தம் ரூ. 90 ஆயிரம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் மத்திய அமைச்சரவை செயலருக்குத்தான் ரூ. 90 ஆயிரம் வழங்க ஊதியக்குழு சிபாரிசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த ராணுவ வீரர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 40 சதவீத ஊதிய உயர்வு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————–
ஆணையத் தலைவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை ஊதியம்

புதுதில்லி, மார்ச் 24: பங்கு பரிவர்த்தனையைக் கண்காணிக்கும் “செபி’ அமைப்பு, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், காப்பீட்டு ஒழுங்கு முறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட பல்வேறு ஆணையங்களின் தலைமைப் பதவிகளுக்கு மாத ஊதியம் ரூ. 3 லட்சம் வரை உயர்த்தி 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.

திறமையான நபர்களை வெளியிலிருந்து இப் பதவிக்கு ஈர்க்கும் நோக்கில் ஊதியம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஊதியக் குழு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார்.

இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ. 1.5 லட்சமும் ஆணையத்தின் தலைவருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கார் மற்றும் வீடு அளிக்கப்படாவிட்டால் தலைமைப் பதவிக்கு ரூ. 3 லட்சமும் உறுப்பினர் பதவிக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க குழு சிபாரிசு செய்துள்ளது.

—————————————————————————————————————————————————–
வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும்: இந்திய கம்யூனிஸ்ட்

ஹைதராபாத், மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கருத்துக் கூறியுள்ளது.

மத்திய அரசுப் பணி நிலைகள் 35 கிரேடுகளில் இருந்து 20 கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்புகள் குறையும் என்று அக் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார்.

மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு வெகுவாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு கணிசமாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்தியா போன்ற ஏழை நாடுக்கு இது தேவையில்லை என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
ஊதியக் குழு பரிந்துரைகள்: மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம்

சென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் தங்களுக்கு ஏமாற்றம் தருவதாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் எம். துரைப்பாண்டியன் கூறினார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

எங்களுடைய அனுபவத்தில் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கும் ஊதியக் குழு அறிக்கையாக இது இருக்கிறது. நான்காம் நிலை ஊழியருக்கும், உயர்நிலை அதிகாரிக்கும் இடையிலான ஊதிய வேறுபாடு 12 விழுக்காடு அளவுதான் இருக்க வேண்டும் என்றபோதிலும், அந்தக் கோட்பாடு இப்போது மீறப்பட்டுள்ளது.

நான்காம் நிலை ஊழியர்களின் ஊதிய உயர்வு 18 முதல் 25 விழுக்காடு வரைதான் உள்ளது. அமைச்சரவைச் செயலர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரை அமலுக்கு வரும் காலத்திற்கான நிலுவைத் தொகை மட்டுமே ரூ.17 லட்சம் வரை வரும்.

சமூகத்தில் மிகவும் பின்தங்கியோர் அதிக அளவில் வேலைபார்க்கும் நான்காம் நிலை ஊழியர் பணிகள் இனிமேல் இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் காப்பீடு, வங்கித் துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தம் செய்யப்படுகிறது. அவருடைய மேற்பார்வையில் இயங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதியத் திருத்தம் செய்யப்படுகிறது. அதிலும்கூட நான்காம் நிலை ஊழியர்களுக்கு 18 விழுக்காடுதான் உயர்வு கிடைத்துள்ளது.

விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது மிகவும் ஏமாற்றமான விஷயம்தான்.

இதைக் கண்டித்து புதன்கிழமை (மார்ச் 26) மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்தகட்டமாக அகில இந்திய அளவில் ஆலோசனை செய்து, போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
6-வது ஊதியக் குழு பரிந்துரை: “தனியாருடன் ஒப்பிடக் கூடாது’

சென்னை, மார்ச் 24: நிதித்துறை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம்:

இந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடும் வகையில் ஏதும் இல்லை. தேர்தல்கால அறிவிப்புகள் போலத்தான் இதுவும் இருக்கிறது. உயரதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு நன்றாக இருக்கிறது என்றாலும், கீழ்நிலை அலுவலர்களுக்கு அதைப் போன்ற நிலை இல்லை. அதனால் அவர்கள் போராடக் கூடிய நிலை ஏற்படுமா என்று தெரியவில்லை. நான்காம் நிலை பணியிடங்களை ஒழித்துவிட மறைமுகமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பொருத்தவரை, தனியார் துறையில் தரப்படும் ஊதியத்துடன் ஒப்பிடக் கூடாது. அரசுப் பணியில் உள்ளவரை, வீட்டு வசதி, மருத்துவ வசதி, வாகன வசதி, கல்வி வசதி போன்றவை இருப்பதை மறந்துவிடக் கூடாது. பணிக் காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனியார் துறையில் இதைப் போன்ற எந்த வசதியும் கிடையாது.

எனவே, அரசுத் துறையில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனியார் துறைக்குப் போய்விடுவார்கள் என்பதில் உண்மை ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
“ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தரும் சம்பளம் மிகவும் குறைவுதான்’

நமது சிறப்பு நிருபர்

சென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி பெரும்பாலான அதிகாரிகளுக்கு உயர்த்தப்படும் ஊதியத்தில் 33 சதவீதம் வருமான வரியாகப் பிடித்தம் செய்யப்பட்டுவிடும் என்பதால், அவர்களின் கைக்குக் கிடைக்கும் கூடுதல் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூறுகின்றனர்.

மத்திய அரசில் வருவாய்த் துறைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற எம்.ஆர். சிவராமன் (படம்) இதுபற்றிக் கூறியதாவது:

இப்போது உயர்த்தப்படும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் போக அரசுச் செயலாளர்களுக்கு ஏறத்தாழ ரூ.13,000 மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். அதன்படி பார்த்தால், அறிக்கையில் உள்ளவாறு நிறைய ஊதிய உயர்வு தரப்படுவதைப் போலத் தோன்றினாலும், வருமான வரி மூலமாக கணிசமான தொகை அரசுக்கே திரும்பச் சென்றுவிடும். அதனால், அரசுக்கு நிகர செலவு என்பது குறைவாகத்தான் இருக்கும்.

இயக்குநர், செயலாளர், இணைச் செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் ஏறத்தாழ 14 மணி நேரம் உழைக்கிறார்கள். நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவைகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டியுள்ளது. அவர்கள் மீது நிறைய பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப ஊதியம் நிர்ணயித்திருக்க வேண்டும்.

தனியார் துறையில் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தைவிட இது மிகவும் குறைவானதாகும். செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்களின் செயல்பாடுகளுக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் அல்லது ரூ.3 லட்சம் என சம்பளம் தரலாம்.

இதுபோன்ற பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கு முன்பாக, பொதுமக்கள் முன்பாக நிறுத்தி, அவரின் சொத்து விவரம், பணித் திறன் போன்றவற்றைக் கேட்டுப் பதிவு செய்யலாம். அதில் திருப்தி ஏற்பட்டால் அப் பதவிக்கு நியமிக்கலாம். தகுதி, பணித் திறன் அடிப்படையில் அதிகமான சம்பளத்தைத் தரலாம் என்பதுதான் சரியானதாக இருக்கும்.

வெளிநாடுகளில் உயரதிகாரிகளுக்கு வாகனங்கள் தரப்படுவதில்லை. இந்தியாவில் வாகனங்கள், அதற்கு ஓட்டுநர்கள் என தேவையற்ற செலவுகள் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, மொத்தமாக ஒரு சம்பளத்தை உயரதிகாரிக்குக் கொடுத்துவிட்டால், வாகன ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்பு போன்ற செலவுகள் அரசுக்கு மிச்சமாகும்.

மேலும், சில துறைகளில் செயலர் அந்தஸ்துக்கு மேல் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியில் இருப்பது தேவையற்றது என்று அவர் கூறினார்.

தற்போது தமிழக அரசுப் பணியில் இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியதாவது:

15 முதல் 20 ஆண்டு வரை அனுபவம் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை சம்பளம் தருவதற்குத் தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந் நிலையில் இப்போது செயலர் அளவில் ரூ.80 ஆயிரம் என சம்பளம் நிர்ணயித்திருப்பது போதுமானதல்ல. இதில் வரிகள் பிடித்தம் போக ரூ.50 ஆயிரம் அளவுக்குதான் கைக்கு வரும். ஆக, ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருப்பதைவிட கூடுதலாக ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.

அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, தக்க வைத்துக் கொள்வதற்கு இந்தச் சம்பள விகிதம் உதவாது. ஊதியக் குழு அறிக்கை அமலுக்கு வருவதற்காக பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இது அமலுக்கு வந்து, நிலுவைத் தொகைகள் கைக்கு வந்ததும் சில மாதங்களில் அவர்கள் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்வார்கள்.

வெளியில் மாதம் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். அதிலும் பெரும் பகுதி வருமான வரி பிடித்தத்தில் வராத வகையில் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். அதனால், அதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.

20 ஆண்டு அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளியேறினால், அதிக அனுபவம் இல்லாத, புதிய அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசு நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.

எனவே, அனுபவம் பெற்றவர்கள் வெளியேறாமல் தடுக்க வேண்டுமானால், தனியார் துறையில் உள்ள சம்பளத்துக்கு இணையான அளவுக்கு சம்பளம் தர அரசு முன் வர வேண்டும். ஏனெனில், 20 வருட அனுபவம் பெற்றவர்களை திடீரென உருவாக்கிட முடியாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுத் துறையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்ப்பதே சிரமமாகிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

—————————————————————————————————————————————————–
ஊதியக் குழு பரிந்துரை: “பண வீக்கம் அதிகரிக்கும்’

சென்னை, மார்ச் 24 : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத் தலைவருமான என். முருகன் கூறினார்.

ஊதியக் குழு பரிந்துரை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள்:-

“”மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விலைவாசி வெகுவாக உயர்ந்துவிட்டது. மேலும் பண வீக்கமும் 4 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக அதிகரித்துவிட்டது. ஊதியக் குழு பரிந்துரை அமலாகும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும். இது தன்னிச்சையாக ஏற்படும்.

சம்பள உயர்வு அவசியம்: இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட சம்பளக் கமிஷன்கள், விலைவாசி உயர்வு, தகுந்த ஊதிய ஊக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊதிய உயர்வு விகிதத்தை பரிந்துரை செய்தன.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் உலக தாராளமயமாக்கலுடன் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டு விட்டதாலும் தனியார் துறையில் மிக அதிக அளவு தொழிற்சாலைகள், தொழில் வாய்ப்புகள் பெருகியதாலும் அவற்றில் வேலை செய்வோருக்கு சம்பள விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன.

இதனால் பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு தனியார் வேலைக்குப் போக துணிந்து விட்டனர். அரசு வேலையில் சம்பளம் எனும் விஷயம்போக, சம்பளம் அல்லாத பல சலுகைகள் (உதாரணம்: பங்களா வசதி, வாகன வசதி உள்ளிட்டவை) இருப்பதால் கவர்ச்சி இருந்தது. ஆனால், தனியாரும் இத்தகைய வசதிகளைக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

எனவே இந்த ஊதிய உயர்வு பரிந்துரை மிகவும் தேவையான ஒன்று. இந்த ஊதிய உயர்வாவது இல்லையெனில் அரசுப் பணிக்கு திறமையானவர்கள் வர மாட்டார்கள்.

ஊதியக் குழு பரிந்துரை காரணமாக அரசுக்கு ரூ.12,561 கோடி செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. விவசாயக் கடன் ரூ.60,000 கோடி அளவுக்குத் தள்ளுபடி, வருமான வரி வரம்பை அதிகரித்தது போன்ற சலுகைகளைக் கணக்கில் கொள்ளும்போது இது ஒன்றும் பெரிய செலவு அல்ல.

குறிப்பாக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 3.2 கோடி சம்பளதாரர்களுக்கு அளிக்கப்பட்ட வருமான வரி வரம்பு உயர்வுச் சலுகையினால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய இழப்பு ரூ.30,000 கோடி.

ஆனால், இந்த சம்பள உயர்வு பரிந்துரையைப் பார்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களது ஊழியர்களுக்கும் அதே விகிதத்தில் மாநில அரசுகள் கொடுத்து விடும். இதுதான் நமது பழைய அனுபவம்.

இவ்வாறு கொடுப்பது மாநில நிதி நிலைமையை வெகுவாகப் பாதிக்கும். ஏனெனில் மத்திய அரசின் பொருளாதார நிலை வேறு, மாநில அரசுகளின் பொருளாதார நிலை வேறு” என்றார் முருகன்.

—————————————————————————————————————————————————–

Posted in 6, Army, Bonus, Bribery, Bribes, Commission, Compensation, Corruption, defence, Defense, Deficit, Economy, employee, Employers, Employment, Females, Finance, Flexitime, Government, Govt, hikes, Hours, Income, Increases, Increments, Inflation, job, kickbacks, Ladies, Military, Navy, panel, Pay, pension, Raises, recommendations, Remuneration, retrospective, salaries, Salary, She, SriKrishna, Staff, Timings, Women | Leave a Comment »

Tamil Nadu budget focusses on farmers, women: loan waiver for poor

Posted by Snapjudge மேல் மார்ச் 24, 2008

வேளாண் கடன் வட்டி விகிதக் குறைப்பு; நதிகள் இணைப்பு; இரு புது மருத்துவக் கல்லூரிகள்;
ரூ.1720 கோடி மதிப்பீட்டில் மின்சார விநியோகம் கட்டமைப்பு

தொழில் துறையில் 13 நிறு வனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
1,41,640 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கம்

மகளிர், குழந்தைகள், ஊனமுற்றோர், ஒடுக்கப்பட்டோர்,
விவசாயிகள் நலன் காக்கும் மக்கள் நலத் திட்டங்களின் அணிவகுப்பு!

2008-09 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை தமிழகச் சட்டப்பேரவையில் அளித்தார் நிதியமைச்சர்

வரவு ரூ.51,505.62 கோடி; செலவு ரூ.51,421.57 கோடி

வரிச் சலுகைகள் ஏராளம்! ஏராளம்!!

சென்னை, மார்ச் 20- 2008-09 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக் கையினை நிதியமைச்சர் பேரா சிரியர் க. அன்பழகன் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அளித்து உரையாற்றினார்.
விவரம் வருமாறு:
விவசாயத்துறை
வரும் 2008-09 ஆம் ஆண் டிற்கு மேலும் ரூபாய் 1,500 கோடி அளவில் புதிய பயிர்க் கடன்கள் வழங்க ஆவன செய்யப்படும்.
வேளாண் கடன்களுக்கான வட்டி வீதத்தை 2006-07 ஆம் ஆண்டில் 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைத்து, அதனைக் கடந்த நிதிநிலை அறிக்கையில் 5 சதவீதமாக மேலும் குறைத்து இந்த அரசு வழங்கி வருகிறது. விவசாயி களுக்கு வழங்கப்படும் பயிர்க் கடனுக்கான வட்டி வீதம் 4 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்ற பல வேளாண் பொருளாதார வல்லுனர்களின் கருத்தை ஏற்று, விவசாயத் தொழிலுக்கு மேலும் ஊக்கம் அளிக்க, வரும் நிதியாண்டி லிருந்து தற்போதுள்ள வட்டி வீதம் 5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைக்கப்படும்.
தற்போதைய 2007-08 ஆம் ஆண்டில், மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், உணவு தானிய உற்பத்தி 100 இலட்சம் டன்னுக்கும் மேலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
வரும் நிதியாண்டில் 25 லட் சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு செய்து கொள்ள நிதி யுதவி அளிக்கப்படும். இதற்காக ரூ 40 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.
நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு, தரிசு நிலங் களைப் பண்படுத்தி இலவச மாக அளிக்கும் திட்டத்தின் கீழ், இது வரை ஒரு இலட்சத்து 51 ஆயிரம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு ஒரு இலட் சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவசமாக வழங் கியுள்ளது. இந்த நிலங்களைத் தொடர்ந்து சாகுபடி செய்யும் வண்ணம், நீராதாரங்கள் ஏற்படுத்தப்பட்டு, மற்ற உதவி களும் வழங்கப்பட்டு உள்ளன. வரும் ஆண்டுகளிலும் இந்தத் திட்டம் தொடாந்து செயல் படுத்தப்படும்.
வரும் நிதியாண்டில் 18.75 இலட்சம் ஏக்கர் பரப்பில் செம்மை நெல் சாகுபடி முறை கடைப்பிடிக்கப்படத் தேவை யான நடவடிக்கைகள் எடுக் கப்படும்.
22 முக்கிய உழவர் சந்தை களில், விற்பனைக்கான காய் கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றைப் பாதுகாத் திட தேவையான குளிர்பதன வசதிகள், தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் மூலமாக அமைக்கப்படும்.
நெல் நடவு, கரும்பு அறு வடை போன்ற பணிகளில் பயன்படுத்தும் இயந்திரங்களை வாங்கிப் பயன்படுத்த முன் வரும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட் டத்தின் கீழ் 25 சதவீத மானியம் இனி வழங்கப்படும். மேலும் வேளாண் இயந்திரங்கள் மற் றும் கருவிகளை உற்பத்தி செய் யும் தொழில் முனைவோருக்கு இந்த அரசின் தொழிற் கொள் கையில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளோடு கூடுதலாகத் தேவைப்படும் சலுகைகளும் வழங்கப்படும்.
பயிறு வகைகளைப் பயிரிட நமது விவசாயிகளை ஊக்கு விக்கும் வகையில், வரும் ஆண் டிலிருந்து தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ் நாடு கூட்டுறவு விற்பனை இணையம் ஆகியன; மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பயறு வகை களைக் கொள்முதல் செய்யும்.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள்
தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போலவே, நமது விவசாயிகளும் செயல் படின் பல்வேறு பயன்களைப் பெற இயலும் எனக் கருதி, வரும் நிதியாண்டில் விவசா யிகள் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும். முதற்கட்ட மாக, தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெறும் ஒரு இலட்சம் விவசாயிகளை உறுப் பினர்களாகக் கொண்ட பத்தா யிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். இக்குழுக்கள் கூட்டுப் பொறுப்புடைய அமைப்புகளாக செயல்பட்டு கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத் துறை வங்கிகளிட மிருந்து எளிதில் கடன் பெற இயலும். இந்த குழுக்களுக்குச் சுழல் நிதியாக அரசின் சார்பில் ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கூட்டுறவு வங்கி கள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம், இந்த குழுக் களைச் சார்ந்த உறுப்பினர்கள், தங்களின் அவசரத் தேவைக ளுக்கான கடனையும் குழு விடமிருந்தே பெறலாம். இது மட்டுமன்றி, உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து வேளாண் இடு பொருட் களைக் குறைந்த விலையில் வாங்கவும், விளைபொருட் களை நல்ல விலைக்கு விற்கவும் வாய்ப்பு உருவாகும்.
1990 ஆம் ஆண்டில் தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப்படும். இத்திட்டத் திற்காகத் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு அரசின் மானிய உதவியாக ரூ 268 கோடி இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பால் உற்பத்தி:
பால் உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது பால் உற்பத்தியை மேலும் பெருக்கவும், பால் உற்பத்தி செய்யும் விவசாயக் குடும்பங்கள் கூடுதல் வருவாய் பெறும் வகையிலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10,000 உயர் கலப்பினக் கறவை மாடு கள் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை, இந்த அரசு செயல் படுத்தும். நமது மாநிலத்தில் பால் உற்பத்தி செய்யத்தகுந்த 200 கிராமங்களில் தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் மூலமாக, வரும் இரண்டாண்டுகளில் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் இத் திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 5,000 மகளிர் பயன டைவர்.
பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு
தமிழ்நாட்டில் உள்ள பாசன வேளாண்மை மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தி, 15.4 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறச் செய்யும் நோக் கோடு, உலக வங்கி உதவியுடன் ரூபாய் 2,547 கோடி மதிப் பீட்டில் நீர்வள நிலவளத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2007-08 ஆம் ஆண் டில் இத் திட்டப் பணிகள் 9 துணை வடிநிலங்களில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. 2008-09 ஆம் ஆண்டில் மேலும் 16 துணை வடிநிலங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்விரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் பணி களால் 9.4 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பயன் பெறும். வேளாண் வளர்ச்சிக்குத் துணை புரியும் பல்வேறு துறைகளின் பணிகளை ஒருங்கைணைத்துச் செயல்படுத்தப்படுகிற இத் திட்டத்தின் வாயிலாக, பாச னப் பரப்பு அதிகரிப்பதோடு, விளைபொருள் உற்பத்தித் திறனும் விவசாயிகளின் வரு வாயும் உயரும். இத்திட்டத்திற் காக 2008-09 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூபாய் 585 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
கல்லணைக் கால்வாய் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டி லும், காளிங்கராயன் கால்வாய் ரூபாய் 12 கோடி மதிப்பீட் டிலும் மேம்படுத்தப்படும்.
நதிகள் இணைப்பு
மாநில அரசின் நிதியிலி ருந்து தமிழ்நாட்டில் பாயும் பின்வரும் நதி இணைப்பு களுக்கான பணிகள் வரும் 2008-09 ஆம் நிதியாண்டில் தொடங்கப்படும்.
(1) வெள்ளக் காலங்களில் காவிரி ஆற்றில் பெருகும் உபரி நீரை, வறண்ட மாவட்டங் களுக்குக் கொண்டு செல்வதற் கான காவிரி – அக்னியாறு- கோரையாறு-பாம்பாறு-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாகக் காவிரியாற்றின் குறுக்கே கட்டளைப் பகுதியில் கதவணை அமைக்கும் திட்டம் ரூபாய் 165 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட் டத்தின் அடுத்த கட்டமாக, இந்நதிகளை இணைப்பதற் காக 255 கிலோ மீட்டர் நீள முள்ள கால்வாய்கள் அமைப் பது குறித்து தயாரிக்கப்பட்டு வரும் விரிவான திட்ட அறிக் கையின் அடிப்படையில் கால் வாய் அமைக்கும் பணி மேற் கொள்ளப்படும்.
(2) தாமரபரணி ஆற்றின் உபரி நீரை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங் களின் வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கான தாமி ரபரணி – கருமேனியாறு-நம்பி யாறு இணைப்புத் திட்டம் ரூபாய் 369 கோடி மதிப்பீட் டில் செயல்படுத்தப்படும்
மாநிலமெங்கும் ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் ஓடை களின் குறுக்கே 48,500 தடுப் பணைகள், ஊருணிகள் ஆகிய வற்றை அத்து நீரைச் சேமிப் பதற்கான பெரும் திட்டம் ஒன்று வகுக்கப் பட்டுள்ளது. சுமார் 550 கோடி மதிப்பீட்டி லான இத் திட்டம், நீர்வள ஆதாரத்தை, வேளாண் பொறி யியல் துறை, வனத்துறை மற் றும் தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியம் மூலமாக, பொது நல அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங் கேற்புடன் வரும் நிதி யாண்டி லிருந்து செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக, இந்த வரவு செலவு திட்டத்தில் இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டம்
நமது நாட்டிலேயே மிகக் குறைவான விலையில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரி சியை இந்த அரசு வழங்கி வருகிறது. ஏழை எளியோரின் பசிப்பிணி போக்கவும், வெளிச் சந்தையில் அரிசியின் விலை உயராமல் கட்டுப்படுத்தவும் வழி வகுத்துள்ள இந்த முன் னோடித் திட்டத்தை, நமது நாட்டில் உள்ள மற்ற சில மாநி லங்களும் தற்போது செயல் படுத்த முனைந்துள்ளன. இது மட்டுமன்றி, பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் உணவுப் பொருள்களாகிய துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் மற்றும் செறிவூட் டப்பட்ட கோதுமை மாவு போன்றவற்றை அரசே கொள் முதல் செய்து, நியாய விலைக் கடைகள் மூலமாகக் குறைந்த விலையில் வழங்குவதற்கான சிறப்புத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இவற் றைத் தொடர்ந்து செயல்படுத் திட, இந்த அத்தியாவசிய உணவுப் பொருள்களின் மானி யத்திற்காக இந்த வரவு செலவு திட்டத்தில் ரூபாய் 1,950 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
காவல்துறைக்கு ரூ.2427 கோடி ஒதுக்கீடு
குற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்த அவசரத் தகவல்களை உடனுக்குடன் தெரியப்படுத்த ஏதுவாக, வரும் நிதியாண்டில் மாநிலத்தில் உள்ள அனைத் துக் காவல் நிலையங்களுக்கும் அகண்ட அலைவரிசை இணைய இணைப்பு வழங்கப்படும். மொத்தமாக 2005-06 ஆம் ஆண்டில் ரூபாய் 1,346 கோடி யாக இருந்த காவல் துறைக்காக நிதி ஒதுக்கீடு 2008-09 ஆம் நிதியாண்டில் ரூபாய் 2,427 கோடியாக உயர்த்தப்பட்டுள் ளது.
சாலைப் பாதுகாப்பு நிதிக் கான மாநில அரசின் நிதி ஒதுக் கீடு ரூபாய் 6 கோடியிலிருந்து இந்த வரவு செலவு திட்டத்தில் ரூ 10 கோடியாக உயர்த்தப் பட்டு, விபத்துத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நீதித்துறை
நீதித்துறைக்கு இந்த வரவு -செலவுத் திட்டத்தில் ரூபாய் 316 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
தமிழக மக்களின் நீண்ட காலக் கனவாக விளங்குவதும், பல ஆய்வுகளின் மூலமாக சாத்தியக் கூறுகள் கண்டறியப் பட்டு, வல்லுநர்களால் வர வேற்கப்பட்டதுமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட் டத்தை நிறைவேற்றும் பணி யில்; உள்நோக்கத்துடன் அர சியல் அடிப்படையில் எழுப் பப்பட்டுள்ள தடைகளை விலக்கி, தமிழ்நாடும் இந்தியத் திருநாடும் மேலும் வளமும் வலிவும் பெறுவதற்குப் பயன் படக் கூடிய இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண் டும் என்று மத்திக அரசை இந்த அரசு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
பள்ளிக் கல்வி
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, தொகுப்பூதியம் பெற்று வந்த 45,987 ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப் பட்டுள்ளதோடு, காலியாக இருந்த 21,574 ஆசிரியர் பணி யிடங்களும் நிரப்பப்பட்டுள் ளன. இது மட்டுமன்றி, 7,979 புதிய ஆசிரியர்கள் பணியிடங் களும் தோற்றுவிக்கப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கற்க உதவும் செயல்வழிக் கல்வி முறை மாநி லத்தில் உள்ள அனைத்துத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் செயல்படுத்தப் பட்டுள்ளது. வரும் கல்வி யாண்டில் 100 நடுநிலைப் பள் ளிகள் உயர்நிலைப் பள்ளிக ளாகவும், 100 உயர்நிலைப் பள் ளிகள் மேல்நிலைப் பள்ளிகளா கவும் நிலை உயர்த்தப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணி களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைகள் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு வருகின்றன. 343 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டடங்கள் நபார்டு வங்கியின் உதவியுடன் கட்டப்பட்டு வருகின்றன. இதுமட்டுமன்றி மாநிலமெங் கும் உள்ள பள்ளிகளுக்கு மேசைகள், இருக்கைகள் மற்றும் நாற்காலிகள் ரூபாய் 69 கோடி மதிப்பீட்டில் வழங்கப் பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில் மேலும் 450 அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்குத் தேவை யான கட்டடங்கள் ரூபாய் 312 கோடி மதிப்பீட்டில் நபார்டு வங்கியின் நிதியுதவி பெற்றுக் கட்டப்படும். இத்தகைய பள்ளிக் கட்டடப் பணிகளுக் காக வரும் நிதியாண்டில் ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும்
கல்வித் திட்டம்
அனைவருக்கும் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்து வதில் முன்னணி மாநிலமாகத் தமிழகம் விளங்கி வருகிறது. இத்திட்டம் வரும் நிதியாண் டில், ரூபாய் 800 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இதற்காக, மாநில அரசின் பங்காக வரும் நிதியாண்டிற்கு ரூபாய் 280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் அனைவருக்கும் தொடக்கக் கல்வி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பதினொன்றாவது அய்ந்தாண் டுத் திட்ட காலத்தில் அனை வருக்கும் இடைநிலைக் கல்வி கிடைக்கச் செய்யும் இலக்கை எய்தும் நோக்கத்தோடு, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள புதிய (Scheme of Access to and Improvement of Quality of Education at Secondary Stage – SUCCESS) திட்டத்தை வரும் ஆண்டிலிருந்து இந்த அரசு சிறப்பாகச் செயல் படுத்தும். இத்திட்டத்திற்கான மாநில அரசின் பங்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்வழிக் கல்வியில்
1999-2000 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினிப் பாடம் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த அரசு 2006 ஆம் ஆண்டில் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநி லத்தில் உள்ள 1,880 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும், 1,525 அரசு உயர்நிலைப் பள்ளி களுக்கும் கணினிகள் வழங் கப்பட்டுள்ளன. வரும் நிதி யாண்டில் எஞ்சியுள்ள 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக் கும், 606 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்கவும், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் 6,650 நடுநிலைப் பள்ளிகளில் முதற்கட்டமாக 2,200 பள்ளி களுக்குக் கணினிகள் அளிக் கவும், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்வழிக் கல்வியில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் 1,000 மாணவ மாணவி யர்களுக்கு ஊக்கப் பரிசாக கணினிகள் அளிப்பதற்கான இந்த அரசின் புதிய திட்டத் திற்காக வரும் நிதியாண்டில் ரூபாய் 2 கோடியே 37 இலட் சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.
சிவகங்கை பெரம்பலூர் – மருத்துவக் கல்லூரிகள்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக் கப்பட வேண்டும் என்ற இந்த அரசின் குறிக்கோளை நிறை வேற்றும் நோக்கத்தோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் விழுப்புரம், திருவாரூர், தரும புரி ஆகிய மாவட்டத் தலைநக ரங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஆணை யிடப்பட்டு, அதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதே போன்று, சிவகங்கை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டத் தலைநகரங்களில், வரும் நிதி யாண்டில் இரு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
வருமுன் காப்போம்
நோய்த் தடுப்பு நடவடிக் கைகளில் நமது நாட்டிற்கே முன்னோடித் திட்டமாக விளங்கும் வருமுன் காப்போம் திட்டம் இந்த அரசால் மீண் டும் செயல்படுத்தப்பட்டு, மருத்துவ வல்லுநர் குழுக்கள் மூலம் மாநிலமெங்கும் மருத் துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற் றுள்ள இத்திட்டத்தின் கீழ், இதுவரை நடத்தப்பட்டுள்ள 5,204 மருத்துவ முகாம்களில் சுமார் 54.5 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
மொத்தமாக, 2005-2006 ஆம் ஆண்டில் ரூபாய் 1,487 கோடியாக இருந்த மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான ஒதுக் கீடு, இந்த வரவு-செலவுத் திட் டத்தில் ரூபாய் 2,741 கோடியாக உயர்ந்துள்ளது.
தொழில் துறை
இந்த அரசு பொறுப்பேற்று முதல் இரண்டாண்டு காலத் திற்குள்ளேயே, ரூபாய் 17,583 கோடி அளவிலான முதலீட் டுடன் 1,41,640 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய பெரும் தொழிற்சாலை களை நிறுவுவதற்காக, 13 நிறு வனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் பட்டுள்ளன. ஆண்டுக்கு சுமார் 6 இலட்சம் கார்களை உற்பத்தி செய்யும் அளவிலான ஹூண் டாய் கார் தொழிற்சாலை விரிவாக்கம்; ரெனோ-நிசான் கூட்டு முயற்சியான 4 இலட்சம் கார்களை உற்பத்திச் செய்யக் கூடிய புதிய தொழிற்சாலை; 3 இலட்சம் வணிக வாகனங் களை உற்பத்திச் செய்யும் நிசான்-அசோக்லேலண்ட் புதிய தொழிற்சாலையென, பல வாகன உற்பத்தித் தொழிற் சாலைகள் தமிழ்நாட்டில் நிறுவப்பெற்று வருகின்றன. இதுபோலவே, கணினி மற்றும் மின்னணு சாதனங்கள் உற் பத்தியிலும், டெல் கம்ப்யூட் டர்ஸ், மோட்டரோலா, சாம் சங், மோசர் பேயர், சிக்நெட் சோலார் என முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தமது தொழிற்சாலைகளை நிறுவ முன்வந்துள்ளன. இவற் றின் மூலம் வாகன உற்பத்தியி லும், மின்னணு சாதனங்கள் உற்பத்தியிலும் நமது நாட்டி லேயே முன்னணி மாநிலமாகத் தமிழகம் மாறியுள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலம்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் 255 ஏக்கர் பரப்பளவில் போக்கு வரத்து பொறியியல் சாதனங் கள் சிறப்புப் பொருளாதார மண்டலம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் 255 ஏக்கர் பரப்பளவில் தானியங்கி / தானியங்கி உதிரி பாகங்க ளுக்கான சிறப்புப் பொரு ளாதார மண்டலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 263 ஏக்கர் பரப்பளவில் பொறி யியல் பொருட்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்ட லம்
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் 260 ஏக்கர் பரப்பளவில் தோல் தொழில் சிறப்புப் பொருளா தார மண்டலம்.
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்
இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கும் இந்த அரசின் திட்டத்தின் கீழ் ஒளிவு மறைவற்ற முறையில் 59 இலட்சத்து 55 ஆயிரம் பெட் டிகள் கொள்முதல் செய்ய ஆணையிடப்பட்டு, இதுவரை 27,86,255 பயனாளிகளுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடே இல்லை என்ற நிலையை எட்டும் வகையில், இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த, 2008-2009 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மேலும் ரூபாய் 750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. பொழுதுபோக்குக்கு மட்டுமன்றி மக்களின் வாழ்க் கைத் திறனை மேம்படுத்தவும் இவை பயன்படும் வகையில், ஆங்கிலத்தில் பேசும் திறன், யோகா பயிற்சி, மாணவர் ஆலோசனை மற்றும் போட் டித் தேர்வுகளுக்கான பொது அறிவுப் பயிற்சி போன்றவற் றிற்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரும் ஆண்டிலி ருந்து தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் மூலம் நடத் தப்படும். இதற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மின்சாரம்
தமிழகத்தில் மின் தேவை ஆண்டுதோறும் வளர்ந்து வரு வதையும், மாநிலத்தின் நீண்ட கால மின் தேவையைக் கருத் தில் கொண்டும், போதிய மின் உற்பத்தி செய்வதற்கான பல திட்டங்களை வகுத்து இந்த அரசு முனைப்புடன் செயல் படுத்தி வருகிறது. வட சென்னை அனல் மின்நிலை யத்தில் 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட புதிய அலகு அமைப்பதற்கான பணிகள் ரூபாய் 2,475 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் கூடு தலாக 600 மெகாவாட் உற் பத்தித் திறன் கொண்டஓர் உற்பத்தி நிலையத்தை நிறுவுவ தற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இது போல, தூத்துக்குடி அனல் மின்நிலையத்திலும் கூடுதலாக 1,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நிலையத்தை நிறுவத் திட்டமிடப்பட்டுள் ளது. இத்திட்டங்கள் அனைத் தும் தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் மேற்கொள்ளப்படும். இவை தவிர, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக வடசென்னையில் 1,500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட புதிய மின் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. மேலும், தமிழ்நாடு மின் சார வாரியம் பாரத மிகுமின் கழகத்தோடு (BHEL) இணைந்து, தூத்துக்குடி மாவட்டம் உடன் குடியில் 1,600 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய புதிய மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைத்திடவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டுள்ளது. வரும் 2008-2009 ஆம் நிதியாண்டில் மாநிலத் தின் மின்சார விநியோகக் கட்டமைப்பு ரூபாய் 1,720 கோடி மதிப்பீட்டில் மேம் படுத்தப்படும். இதன் கீழ் 90 புதிய துணை மின் நிலையங் கள் அமைக்கப்படும்.
போக்குவரத்து
2006-2007 மற்றும் 2007-2008 நிதி ஆண்டுகளில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 6,025 புதிய பேருந்துகள் வாங்க ஆணையிடப்பட்டு, அரசின் நிதி உதவியாக ரூபாய் 477 கோடி அளிக்கப்பட்டு, இது வரை 5,451 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. பயணியர் நலன் கருதி, வரும் நிதி ஆண்டில் மேலும் 3,500 புதிய பேருந் துகள், ரூபாய் 482 கோடி மதிப்பீட்டில் வாங்கப்படும். இதற்காக அரசின் நிதி உதவி யாக ரூபாய் 330 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ இரயில் திட்டம்
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மற்றுமொரு தீர்வாக, மெட்ரோ இரயில் திட்டத்தைச் செயல்படுத்த இந்த அரசு முனைந்துள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டு, மத்திய அரசு மற்றும் ஜப்பான் பன்னாட்டுக் கூட் டுறவு வங்கியின் ஒப்புதல் மற் றும் நிதியுதவி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட் டத்தைச் செயல்படுத்துவதற்கு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் என்ற பொதுத்துறை நிறுவனம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. இத்திட்டத் திற்கு மாநில அரசின் பங்காக, இந்த வரவு-செலவுத் திட்டத் தில் ரூபாய் 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர்த் திட்டம்
வளர்ந்து வரும் சென்னை மாநகரின் நீண்ட காலக் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு, சென்னைக்கு அரு கில் மீஞ்சூரில் கடல் நீரிலி ருந்து நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் திட்டத்தின் பணிகள் நடைபெற்று வருகின் றன. இப்பணிகள் நிறைவுற்று வரும் ஜூன் திங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு 15 மில்லியன் லிட்டர் குடிநீரும், செப்டம்பர் திங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடி நீரும் சென்னை மாநகருக்குக் கிடைக்கும். பரந்து விரிந்து வளர்ந்து வருகின்ற சென்னை மாநகருக்குத் தேவையான குடிநீர் வசதியை மேலும் உறுதி செய்யும்பொருட்டு, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை யில் நெம்மேலியில் கடல் நீரிலிருந்து நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் தயாரிக்கும் மற்றுமொரு நிலையத்தை ரூபாய் 994 கோடி மதிப்பீட்டில், மைய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்த ஏதுவாக இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மைய அர சுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மைய அரசின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இத் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூபாய் 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட் டத்திற்கான பணிகள் வரும் நிதியாண்டில் மேற்கொள் ளப்படும்.
22 ஆயிரம் வீடுகள்
குறைந்த வருவாய்ப் பிரி வினர், நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் அரசு அலுவலர் களுக்கு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம், நகரங் களுக்கருகில் உள்ள பகுதி களில் 22,000 வீடுகள் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் கட்டப் படும். ஊரக வளர்ச்சி
இந்த அரசால் தொடங்கப் பட்டுள்ள அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட் டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூபாய் 1,020 கோடி செலவில் 5,074 கிராமங் களில் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்காக 2008-2009 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத் திலும் ரூபாய் 504 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் 2,521 கிராம ஊராட் சிகளில் அடிப்படை வசதிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தந்தை பெரியார் சிலையுடன்
240 சமத்துவபுரங்கள்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தவாறு, தந்தை பெரியார் அவர்களின் சமத்துவக் கொள்கையை நிலைநாட்டும் வகையில், அவ ரது திருவுருவச் சிலையுடன் கூடிய 95 புதிய சமத்துவபுரங் களை அமைப்பதற்கு இந்த அரசு ஒப்புதல் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அனைத்து சமூகத் தினரும் சகோதர பாசத்துடன் ஒருமித்து வாழ வழிவகுக்கும் இந்த சமத்துவபுரங்கள், வரும் மூன்று ஆண்டுகளில் அமைக் கப்படும். இப்பணிகள் நிறைவுற்ற பின், ஏற்கெனவே இந்த அரசால் அமைக்கப் பட்ட 145 சமத்துவபுரங் களையும் சேர்த்து, பெரியார் சிலையுடன் கூடிய 240 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமையப்பெறும். இப்பணி களுக்காக வரும் நிதியாண்டில் ரூபாய் 75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் நலன்
சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத குடும்பங் களுக்கு, இலவச எரிவாயு அடுப்பும், சமையல் எரிவாயு இணைப்பும் வழங்கும் திட் டம் இந்த அரசால் செயல் படுத்தப்பட்டு வருகிறது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங் களைச் சேர்ந்த பெண்களுக்கு பயனளிக்கும் இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு அடுப்புகளும், இலவச எரிவாயு இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை வரும் நிதியாண் டிலும் தொடர்ந்து செயல் படுத்தி, மேலும் 8 இலட்சம் இலவச எரிவாயு அடுப்புகள் மற்றும் இணைப்புகள் வழங்க ரூபாய் 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, வழங்கப்படும் உதவித் தொகையை 2006-2007 ஆம் ஆண்டிலிருந்து 10,000 ரூபாயிலிருந்து, 15,000 ரூபாயாக இந்த அரசு உயர்த்தி வழங்கி வருகிறது. ஏழைக் குடும்பங்களின் திருமணச் செலவுகளுக்குப் பெரும் உதவியாக விளங்கி வரும் இத்திட்டத்தின் கீழ், இதுவரை ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஏழைப் பெண்கள் பயனடைந் துள்ளனர். அதிகரித்துவரும் திருமணச் செலவுகளைக் கருத் தில் கொண்டு, வரும் நிதி யாண்டிலிருந்து இத்திட்டத் தின் கீழ் வழங்கப்படும் நிதி யுதவி ரூபாய் 15,000-லிருந்து ரூபாய் 20,000 ஆக உயர்த் தப்படும். சுமார் 65,000 ஏழைப் பெண்கள் பயனடையும் வகை யில் இத்திட்டத்திற்காக ரூபாய் 130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் ஆணையத்திற்கு சட்டபூர்வமான அதிகாரம் பெண்களுக்குச் சமச் சொத்துரிமையையும், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீட்டையும் வழங்கி தி.மு. கழக அரசுதான் பெண்ணுரிமையை நிலைநாட் டியது. இந்த வகையில், தமிழ் நாட்டில் மகளிர் நலன் பேணி டும் வண்ணம் செயல்பட்டு வரும் மகளிர் ஆணையத்திற்கு இந்த அரசு சட்டபூர்வமான அதிகாரம் (Statutory Status) அளிக்கும். இதற்கான சட்ட முன்வடிவு இந்தக் கூட்டத் தொடரிலேயே அறிமுகப் படுத்தப்படும். ஊனமுற்றோருக்கு உதவித்தொகை
உடல் ஊனமுற்றோர் படும் துன்பங்கள் போலவே தசைச் சிதைவு (Muscular Dystropy) நோயினால் பாதிக்கப்பட்டுள் ளோரும் கடும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். அவர் களுக்கு உதவும் வகையில் இந் நோயினால் பாதிக்கப்பட்டுள் ளோருக்கும் வரும் நிதியாண்டி லிருந்து, கடும் ஊனமுற்றோ ருக்கு அளிக்கப்படுவது போலவே மாதாந்திர உதவித் தொகையாக ரூபாய் 500 அளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெசவாளர் நலன் கைத்தறி நெசவாளர்களுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பொங் கல் திருநாளையொட்டி ஏழை எளியோருக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கும் திட்டம், வரும் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப் படும். இதற்காக ரூபாய் 256 கோடி இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. கைத்தறி நெச வாளர் கூட்டுறவுச் சங்கங் களுக்கு அளிக்கப்பட்டு வந்த வட்டி மானியம் 2003 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட் டுள்ளது. வரும் நிதியாண்டி லிருந்து இக்கடன்களுக்கு 4 சதவீத வட்டி மானியம் மீண் டும் அளிக்கப்பட்டு, வட்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்படும். இதற்காக அரசுக்கு ஆண்டு தோறும் ரூபாய் 12 கோடி செலவாகும். மேலும், ஹட்கோ நிறுவனத்தின் மூலம், தொழிற்கூடங்களுடன் கூடிய குடியிருப்புகள் அமைப்ப தற்காக கைத்தறி நெசவாளர் கள் கடன் பெற்று, திருப்பிச் செலுத்த இயலாமல் நிலுவை யில் உள்ள ரூபாய் 15 கோடி கடன் தொகை இரத்து செய்யப்படும்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர் நலன்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை அளிக்கும் திட்டத்தின் கீழ், இதுவரை 3,53,488 இளைஞர்கள் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டத் திற்காக வரும் ஆண்டில் ரூபாய் 95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமது மாநிலத்தில் பெருகிவரும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுப் பயனடைய, நமது இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது. இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித் திட ரூபாய் 8 கோடி ஒதுக் கீட்டில் கடந்த ஆண்டிலிருந்து திறன்மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வரும் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினரின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பல்வேறு திட்டங்களை வகுத்து இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த அரசு பதவியேற்ற பின் னர், கடந்த இரண் டாண்டுகளாகச் சிறப்பு மாநில ஒதுக்கீடாக ஆண்டுதோறும் ரூபாய் 25 கோடி அளித்து; இந்நிதி முழுவதையும் படித்த ஆதிதிராவிட இளைஞர் களுக்கான பயிற்சித் திட்டங் களுக்காக மட்டுமே பயன் படுத்தப்பட ஆவன செய்துள் ளது. இத்திட்டத்திற்கு வரும் ஆண்டிலும் ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பட்டப் படிப்பு பயின்ற ஆதிதிராவிட இளைஞர்கள், தேசிய அளவில் நடத்தப்படும் பல்வேறு பட்ட மேற்படிப்புத் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு உதவக் கூடிய சிறப்புப் பயிற்சித் திட் டம் ஒன்று வரும் ஆண்டி லிருந்து செயல்படுத்தப்படும். கூட்டுறவு வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட விவசாயக் கடன் கள் இரத்து செய்யப்பட் டதைப் போன்றே, ஆதிதிரா விட விவசாயிகள் தாட்கோ நிறுவனத்திடமிருந்து பெற்று நிலுவையில் உள்ள 5 கோடியே 50 இலட்சம் ரூபாய் விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய் யப்படும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின, ஆதிதிராவிட மற்றும் பழங் குடியின மாணவர்கள் அரசு நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயின்று வருகின்றனர். 2001 ஆம் ஆண்டிலிருந்து உயர்த்தப் படாமலிருந்த பள்ளி மாணவர்களுக்கான மாதாந்திர உணவுப் படியை ரூபாய் 400 ஆகவும், 1998 ஆம் ஆண்டிலி ருந்து உயர்த்தப்படாமலிருந்த கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்திர உணவுப் படியை ரூபாய் 500 ஆகவும், இந்த அரசுதான் கடந்த ஆண்டு உயர்த்தி வழங்கியது. இந்தப் படிகளை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என வந் துள்ள பல்வேறு கோரிக்கை களைக் கருத்தில் கொண்டு, இவை மேலும் 50 ரூபாய் அளவில் உயர்த்தப்பட்டு பள்ளி விடுதிகளுக்கு மாதம் ரூபாய் 450 ஆகவும், கல்லூரி விடுதிகளுக்கு மாதம் ரூபாய் 550 ஆகவும் வரும் கல்வி ஆண்டிலிருந்து வழங்கப்படும்.
சிறுபான்மையினர் நலன்
அரசு மற்றும் தனியார் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளையும், சுய வேலை வாய்ப்புகளையும் பெற, சிறுபான்மையின இளைஞர் கள் மற்றும் பெண்களைத் தகுதி பெறச் செய்யும் நோக் குடன் அவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தைக் கடந்த ஆண்டு இந்த அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ரூபாய் 2.5 கோடி மதிப்பீட்டில் 5,000 சிறுபான்மையினர் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப் படும். இதுமட்டுமன்றி, வரும் நிதியாண்டில் 25 ஆயிரம் சிறு பான்மையினர் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சிறு பான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ரூபாய் 40 கோடி கடன் உதவி வழங்கப்படும். சிறுபான்மை யின மாணவர்கள் தொழில் பட்டப்படிப்பு பயில்வதற்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ரூபாய் 2 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
இலங்கைத் தமிழர்
இலங்கைத் தமிழ் அதி களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தி இந்த அரசு வழங்கி வருகிறது. அவர்கள் தங்கி யுள்ள அகதிகள் முகாம்களில் உள்ள வசதிகளை மேம்படுத்த ஆவன செய்யப்படும். பிறந்த மண்ணில் வாழ வழியின்றி பல ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் சந்தித்துவரும் துயரங்களைத் துடைத்திட, பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்சினைக்கு அமைதி யான அரசியல் தீர்வு காணப் படவேண்டும் என இந்த அரசு விரும்புகிறது. இந்த விருப் பத்தை நிறைவேற்றக் கூடிய பொறுப்பும், அதிகாரமும் மத்திய அரசிடம்தான் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டு கிறோம்.
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இடையறாத முயற்சிகளால் மைய அரசு தமிழைச் செம்மொழியாக அறி வித்து பெருமைப்படுத்திய தோடு மட்டுமல்லாமல், தமிழ் செம்மொழி ஆய்வுக்கான மத்திய நிறுவனத்தைச் சென்னையில் ரூபாய் 76 கோடி மதிப்பீட்டில் அமைக்கவும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இந்நிறுவனம் செயல்படவும் ஆணையிட்டுள்ளதை நன்றி யோடு குறிப்பிட விரும்பு கின்றேன். தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு நாளாக நடைமுறைப்படுத்திட சட்டமியற்றிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அருஞ்சாதனையைத் தமிழ் கூறும் நல்லுலகத்தார் அனை வரும் அகமகிழ்ந்து வரவேற் றுள்ளனர்.
நல்லறிவாளர்கள் நூல்கள் நாட்டுடைமை
இந்த ஆண்டு, கவிஞர் பெரியசாமித் தூரன், பேரா சிரியர் க.வெள்ளைவாரண னார், பண்டிதர் க.அயோத்தி தாசர், ஆபிரகாம் பண்டிதர், சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர், டாக்டர் ரா.பி.சேதுப் பிள்ளை, மகாவித்வான் ரா.ராகவையங்கார், உடுமலை நாராயணகவி, கு.மு.அண்ணல் தங்கோ, அவ்வை தி.க.சண் முகம், விந்தன், லா.ச.ராமா மிர்தம், வல்லிக்கண்ணன், நா.வானமாமலை, கவிஞர் புதுவைச் சிவம், அ.இராகவன், தொ.மு.சி.ரகுநாதன், சக்திதாசன் சுப்பிரமணியன், டாக்டர் ந.சஞ்சீவி, முல்லை முத்தையா, கவிஞர் எஸ்.டி.சுந்தரம், கவிஞர் மீரா, பேராசிரியர் ஆ.கார் மேகக் கோனார், புலவர் முகமது நயினார் மரைக்காயர், சு.சமுத்திரம், கோவை இளஞ் சேரன், பேராசிரியர் ந.சுப்பு ரெட்டியார் ஆகிய தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்கள் உருவாக்கிய நூல் களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையர் களுக்குப் பரிவுத் தொகை வழங்கப்படும். அலுவலர்கள் நலன்
அரசு அலுவலர்கள், ஆசிரி யர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதிய தாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 41 சதவீதத் திலிருந்து 47 சதவீதமாக 1.1.2008 முதல் உயர்த்தி வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர் கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் பெற்றுவரும் அகவிலைப்படியையும் 6 சதவீதம் உயர்த்தி, 1.1.2008 முதல் 47 சதவீதமாக இந்த அரசு வழங்கும். இந்த உயர்வினால் ஏற்படும் நிலுவைத் தொகை யும் ரொக்கமாக வழங்கப் படும். இதனால் நடப்பாண் டில், ரூபாய் 136 கோடியும், வரும் நிதி ஆண்டில் ரூபாய் 817 கோடியும் அரசுக்குக் கூடுதல் செலவு ஏற்படும்.
பேரறிஞர் அண்ணா புகழ் மணக்கும் நூற்றாண்டு
எங்களையெல்லாம் ஆளாக்கிய எங்கள் உயிராக உயிர் மூச்சாக இதயத் துடிப் பாக இருக்கின்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற் றாண்டு; இந்த 2009 ஆம் ஆண்டாகும். அந்தப் பெருந் தகைக்கு நூற்றாண்டு விழா வினை எடுக்கும் வாய்ப்பு, ஆளுங்கட்சியாக நாம் இருக் கும் ஆண்டில் வாய்த் திருப்பதை நாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். அண் ணாவின் நூற்றாண்டு விழா வினை இந்த உலகமே வியக்கும் வண்ணம் ஓராண்டு முழுவதும் கட்சி வேறுபாடின்றி தமிழக அரசின் சார்பில் கொண் டாடுவோம். அண்ணாவின் அருமை பெருமைகளையெல் லாம் அவனிக்கு எடுத்துக் கூறுவோம்.
ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் மட்டுமே வாழ்ந்த நிலையிலும் ஜனநா யகத்தின் மாண்பினை உலகத் திற்கு எடுத்துக் காட்டிடும் வகையில் ஆட்சி புரிந்த பெருமை அண்ணாவிற்கு உண்டு. தமிழகத்திற்கு தமிழ் நாடு என்று அண்ணா பெயர் சூட்டியது அந்த இரண்டு ஆண்டு காலத்திலேதான். பிறமொழி ஆதிக்கம் தமிழை அழித்து விடக் கூடாது என்ப தற்கு பாதுகாப்பாக தமிழ கத்திற்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டும்தான் தேவை என்ற அறிவிப்பைச் செய்ததும் அந்த இரண்டாண்டு காலத்திலே தான். சமுதாயச் சீர்திருத்தக் கொள்கைகளில் அக்கறை கொண்டு சுயமரியாதை திரு மணங்கள் சட்டப்படி செல்லு படியாகும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற் றியதும் அந்த இரண்டாண்டு காலத்திலேதான். மாநில சுயாட்சிக் கொள்கையைத் திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்பிட அதற்கு முதலில் வித்தூன்றியதும் பேரறிஞர் அண்ணா அவர்கள் தான். அவருடைய பெருமையை நாம் பாடிட தற்போதைய இளை ஞர் சமுதாயம் அந்த மறக்க முடியாத மாமனிதரைப் பற்றி நன்றாக அறிந்திட, 2009 ஆம் ஆண்டு அண்ணாவின் நூற் றாண்டாக தமிழகமெங்கும் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பையும் தமிழக முதல் வர் கலைஞர் அவர்களின் சார்பில் செய்திட விரும்புகிறேன்.


நிதிநிலை அறிக்கை 2008-2009 புதிய திட்டங்கள்

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு.

தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டென கொண்டாட முடிவு.

சமத்துவக் கொள்கையை நிலைநாட்ட பெரியார் சிலையுடன் கூடிய சமத்துவபுரங்கள்

தாலி மற்றும் பிற மதத்தினர் மணவிழாவில் பயன்படுத்தும் சிலுவை, கருகமணி ஆகியவற்றுக்கு எடை
வரம்பின்றி வரி விலக்கு.

சித்த மருந்துகளுக்கு வரி விலக்கு.

பன், ரஸ்க், சோயா எண்ணெய், வெல்லம் ரப்பர் பூச்சுள்ள நெசவுத் துணிகள் ஆகியவைகளுக்கு வரி விலக்கு
மற்றும் பல பொருள்களுக்கு வரி குறைப்பு

பயிர்க் காப்பீட்டுத் திட்டம் – 25 இலட்சம் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையில் 50 சதவிகிதத்தை அரசே வழங்கும்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் 1500 கோடி புதிய பயிர்க்கடன்.

கூட்டுறவுப் பயிர்க்கடன் வட்டி 4 சதவிகிதம் ஆகக் குறைப்பு.

சிவகங்கை மற்றும் பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள்

திண்டிவனம், விழுப்புரம், பண்ணுருட்டி, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக புதிய பொறியியல் கல்லூரிகள்

புதிய திருப்பூர் மாவட்டம் உதயம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடி மற்றும் பொன் னமராவதி புதிய வருவாய் வட்டங்கள்.

திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டடம்.

வேலூர் நகராட்சி மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும்

3500 புதிய அரசு பேருந்துகள் வாங்கப்படும்

ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம் – ரூபாய் 15,000- லிருந்து ரூபாய் 20,000 ஆக உயர்வு.

ரூபாய் 6000 மகப்பேறு நிதி உதவி பெற இனி வருமான சான்றி தழ் தேவையில்லை.

சிறு வணிகம் செய்யும் மகளிர் உட்பட 2 இலட்சம் வணிகர் களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூபாய் 50 கோடி கடன்.

கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்ட வாங்கிய ரூபாய் 15 கோடி கடன் அறவே ரத்து.

ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோவிலிருந்து பெற்ற விவசாயக் கடன்கள் ரூபாய் 5 கோடி அறவே தள்ளுபடி.

கேபிள் டிவி நடத்துவோர் மீதான கேளிக்கை வரி ரத்து ஏற்க னவே உள்ள நிலுவை 16 கோடி ரூபாய் முழுவதும் தள்ளுபடி.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் பெற்ற கூட்டுறவு வீட்டு வசதிக் கடன் நிலுவை முழுவதும் தள்ளுபடி. குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் மற்றும் உயர் வருவாய் பிரிவினர் கட னைத் திருப்பி செலுத்தினால் அபராத வட்டி முழுவதும் தள்ளு படி செய்யப்படுவதோடு, வட்டியில் ஒரு பகுதியும் தள்ளுபடி.

50 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளி களில் சிறப்புக் கட்டணம் முற்றிலும் ரத்து

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சிறப்புக் கட்டணம் ரத்து

விசைத்தறி நெசவாளர்களுக்கு தனி நல வாரியம்

புத்தகப் பதிப்புத் துறையில் பணிபுரிவோருக்கு ஒரு தனி நல வாரியம்

கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஒரு தனி நல வாரியம்.

நரிக்குறவர்களுக்கு தனி நல வாரியம்

அரவாணிகள் நல வாரியம் – மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு – பரிந்துரை செய்ய நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு
நபர் குழு நியமனம்

விபத்தின்றி ஓட்டும் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு ரொக்கப் பரிசு.

கழிவு நீர்க் குழாய்களில் தூய்மைப்பணி புரிவோருக்கு பாது காப்பு உடைகள், இலவச மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச உடல்நலப் பரிசோதனை.

கழிவு நீர் குழாய்களில் இறங்கி பணிபுரிவதைத் தவிர்க்க சிறப்பு இயந்திரங்கள்.

27 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டு அவர்கள் குடும்பங்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும்.

தமிழகத்தின் சிறப்புகளை ஒருங்கே சித்திரிக்கும் கையளவில் தமிழகம் கவின் கலைக் கூடமாக!

சின்னத்திரை கலைஞர்களுக்கு நல நிதியம் – ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஓர் உடற்பயிற்சி நிலை யம்.

தமிழ்வழிக் கல்வியில் பயின்று பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் 1000 மாணவ மாணவியர்களுக்கு கணினி பரிசு

சமுதாயக் கல்லூரிகளில் ஏழை மாணவ மாணவியருக்கு ரூபாய் 1000 உதவித்தொகை

எயிட்ஸ் நோயினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க அரசின் சார்பில் அறக்கட்டளை – ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு

5440 கிராமங்களில் இணைய வசதிகளுடன் கூடிய பொதுச் சேவை மையங்கள் – அங்கே அரசு சான்றிதழ்கள், விண்ணப் பங்கள் பெறவும், கட்டணங்கள் செலுத்தவும் வசதி

மீனவர் மற்றும் மீனவ மகளிருக்கான நவீன மீன்பிடி தொழில்நுட்பப் பயிற்சி மையம் அமைக்கப்படும்

குளச்சலில் புதிய மீன்பிடி துறைமுகம்.

வேலூர் நகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா

குறைந்த செலவில் அதிக விளைச்சலைத் தரும் புதிய செம்மை நெல் சாகுபடி 18.75 லட்சம் ஏக்கரில் அறிமுகம்.

அனைத்து மாவட்டங்களுக்கும் துல்லிய பண்ணை முறை விவசாயம் விரிவாக்கம்.

விவசாயிகள் நடவு, அறுவடை இயந்திரங்கள் வாங்க 25 சத விகித மானியம்.

இந்த ஆண்டிலிருந்து பயறு வகைகளை அரசே கொள்முதல் செய்யும்.

ஒரு இலட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பத்தாயி ரம் விவசாயிகள் சுயஉதவிக் குழுக்கள் – 10 கோடி ரூபாய் சுழல்நிதியாக அரசு நிதியுதவி.

ரூபாய் 150 கோடியில் கல்லணைக் கால்வாய் மேம்பாட்டுத் திட்டம்.

ரூபாய் 12 கோடியில் காளிங்கராயன் கால்வாய் மேம்பாட்டுத் திட்டம்.

காவிரியுடன் மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளான அக்னி யாறு – கோரையாறு – பாம்பாறு – வைகை – குண்டாறு ஆகிய வற்றுடன் இணைக்கும் திட்டம்.

ரூபாய் 369 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டம்.

ரூபாய் 550 கோடி செலவில் 48,500 தடுப்பணைகள், ஊருணி கள் அமைக்கும் பெருந்திட்டம்.

ரூபாய் 12 கோடியில் மதுரை வெள்ளத் தடுப்புத் திட்டம்.

ரூபாய் 211 கோடி மதிப்பீட்டில் திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் காவிரி கொள்ளிடம் ஆறுகளில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம்.

அரசு அலுவலர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – ரூபாய் 2 இலட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை.

அரசு அலுவலர்களுக்கு 47 சதவிகிதமாக 1.1.2008 முதல் அக விலைப்படி உயர்வு.

ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவு ஈட்டுத் தொகை ரூபாய் 50,000லிருந்து ரூபாய் ஒரு இலட்சமாக உயர்வு.

10,000 உயர் கலப்பின கறவை மாடுகளை 5000 பெண்களுக்கு வழங்கும் திட்டம்.

அனைத்து காவல் நிலையங்களுக்கும் இணைய வசதி.

போலீஸ் கமிஷனின் பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆவன செய்யப்படும்

ரூபாய் 100 கோடியில் புதிய நீதிமன்றக் கட்டடங்கள் கட்டப்படும்.

புதிய சட்டமன்ற வளாகம் கட்ட வரும் நிதியாண்டில் ரூபாய் 75 கோடி ஒதுக்கீடு

100 புதிய அரசு உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

100 புதிய அரசு மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

450 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூபாய் 312 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி புதிய திட்டம் – ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு

100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கணித ஆய்வகங்கள் – ஆய்வக மற்றும் அறிவியல் சாதனங்கள்

500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொழி ஆய்வகங்கள்

100 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 100 மேல்நிலைப் பள்ளி களில் நூலக வசதிகள்

100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 606 அரசு உயர் நிலைப் பள்ளிகளுக்கும் 2200 நடுநிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் – ரூபாய் 71 கோடி ஒதுக்கீடு

அரசு கல்லூரிகளில் 500 கூடுதல் வகுப்பறைகள்

அரசு மகளிர் கல்லூரிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள்

அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் டிஜிடல் எக்ஸ்ரே (Digital X-ray) கருவிகள்

வேலூர் மற்றும் தேனியில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி கள்

தமிழகமெங்கும் ஒரே தொலைபேசி எண் மூலம் அவசர மருத்துவ ஊர்தி சேவை (Ambulace Service)

227 அரசு மருத்துவ மனைகளுக்கு கட்டடங்கள், உபகர ணங்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் (Specialist) நியமனம்

இயற்கை சீற்றங்கள் மற்றும் பெரும் விபத்துக்கள் நடை பெற்று ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப் படும்போது அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏதுவாக சென்னையில் சிறப்பு மருத்துவ மையம்.

தொழிலில் பின்தங்கிய பகுதிகளான திருநெல்வேலி மாவட் டத்தில் கங்கைகொண்டான், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை மற்றும் வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டையில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்.

ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமெண்ட் தொழிற்சாலையை ரூபாய் 82 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கும் திட்டம்

கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவாரூர், அரி யலூர் மாவட்டங்களில் மின்னணு மாவட்ட திட்டம் அறிமுகம்

1350 கி.மீ நீள மாநில நெடுஞ்சாலைகள் இருவழித் தடங் களாக மாற்றப்படும்.

90 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

நாகர் கோவில் மற்றும் அரியலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி உட்பட 5 மாநகராட்சிகள் – 7 நகராட்சிகளில் நகர்புறச் சாலை கள் மேம்பாடு

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை மாநகரில் அதிவேக உயரச் சாலை

இந்திரா வீட்டு வசதித் திட்டம் – கான்கிரீட் கூரைகள் அமைக்க தமிழக அரசு வழங்கும் கூடுதல் மானியம் ரூபாய் 12000-லிருந்து ரூபாய் 20000 ஆக உயர்வு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 22,000 வீடுகள் கட்டப்படும்.

மேலும் 2521 கிராம ஊராட்சிகளில் அனைத்து அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம்

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தம் சொந்த ஊர்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓர் அறக்கட்டளை

மேலும் 8 இலட்சம் இலவச எரிவாயு அடுப்புகள் மற்றும் இணைப்புகள் வழங்க ரூபாய் 160 கோடி ஒதுக்கீடு.

ரூபாய் 750 கோடி செலவில் இந்த ஆண்டு, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்

25,000 மகளிர் புதிய சுய உதவிக் குழுக்கள்.

1,50,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 150 கோடி சுழல் நிதி.

மகளிர் ஆணையத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் (Statutory Status)

தசைச் சிதைவு (Muscular Dystropy) நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூபாய் 500 மாதாந்திர உதவித் தொகை.

காதுகேளாத குழந்தைகளுக்கு அனைத்து மாவட்டங் களிலும் தொடக்க நிலையிலேயே பயிற்சி அளிக்கும் மையங்கள்.

அரவாணிகளாக உணர்வோருக்கு இடைக்கால தங்கும் விடுதி

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் நிதி ஆண்டிலிருந்து 4 சதவீத வட்டி மானியம்.

கைத்தறி நெசவாளர் காப்பீட்டுத் திட்டம் – நெசவாளர் பங்கையும் அரசே செலுத்தும்.

காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.

பனைத் தொழிலாளர்களுக்கு இலவசக் கருவிகள்.

கைவினைஞர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

ஆதிதிராவிட மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25 புதிய மாணவர் இல்லங்கள்.

25 ஆதிதிராவிடர் மாணவர் இல்லங்களுக்கு சொந்தக் கட்ட டங்கள்.

8 புதிய ஆதிதிராவிடர் உயர் நிலைப் பள்ளிகள் – 3 புதிய பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மர பினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர் களுக்கான உணவுப்படி, மாதம் ஒன்றுக்கு பள்ளி மாணவர் களுக்கு ரூபாய் 400 லிருந்து ரூபாய் 450 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 500 லிருந்து ரூபாய் 550 ஆகவும் உயர்வு.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான மாநில அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.50,000 லிருந்து ஒரு இலட்சமாக உயர்வு.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சீர்மரபின மாணவர்களுக்கு 25 புதிய இல்லங்கள்- இவர்கள் தங்கி பயிலும் 25 இல்லங்களுக்கு புதிய கட்டடங்கள்.

சிறுபான்மையினருக்கு இந்த ஆண்டு ரூபாய் 40 கோடி கடன் உதவி.

350 சத்துணவு மையங்கள் மற்றும் 2000 குழந்தைகள் மையங் கள் நவீனமயம் ஆக்கப்படும் – எரிவாயு இணைப்பு மற்றும் ப்ரஷர் குக்கர்கள் வழங்கப்படும்.

சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காடு பகுதியில் கட லின் அடியில் மீன் அருங்காட்சியகம்.

25,000 ஏக்கர் பரப்பில் ஒரு கோடி மரக் கன்றுகள் நடும் திட்டம்.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சங்கங்கள்.


தமிழ்நாடு அரசு நிதி நிலை அறிக்கையின் முத்துகள் (20.3.2008)

பத்திரிகையாளர் நலநிதியம் ஒன்று அமைக்கப் பட்டு, ரூபாய் ஒரு கோடி வழங்கப்பட்டுள்ளது. இத் தொகையை வைப்பீடு செய்து, கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து கடுமையான நோயினால் பாதிக்கப் பட்ட பத்திரிகையாளர்களின் மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி அளிக்கப்படும்.

தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்கச் செய்யவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழை வழக்கு மொழி யாக்கவும் தொடர்ந்து முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதற்காக இந்த அரசால் குறிப்பிடப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கிட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு நபர் குழுவினை அமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் படித்து வரும் அரசு நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப்படித்து வருகின்றனர். அவர்களுக்கான உணவுப்படி மாதந்தோறும் 50 ரூபாய் உயர்த்தப்படுகிறது. அதன்படி பள்ளி விடுதிகளுக்கு மாதம் ரூ 450 ஆகவும், கல்லூரி விடுதிகளுக்கு மாதம் ரூ 550 ஆகவும் வரும் கல்வி ஆண்டிலிருந்து வழங்கப்படும்.

நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி மற்றும் மாற்றுத் தொழில் புரிவதற்காக உதவி அளிக்க தனிநல வாரியம் ஒன்று அமைக்கப்படும்.

முதியோர், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப் பட்டோர் ஆகியோருக்கு ஓய்வூதியச் செலவினம் ரூ 830 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட மாநில அரசின் பங்காக ரூ 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் நகராட்சி வரும் ஆண்டிலிருந்து மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும்.

Posted in 2008, Budget, Economy, Farmers, Finance, Poor | Leave a Comment »

Angayarkkanni – Faces: Thiruchi Uraiyur Panchavaransamy Temple – Muthiah Vellaiyan

Posted by Snapjudge மேல் மார்ச் 24, 2008

முகங்கள்: நான்கு காலமும் ஓதும் குயில்!

முத்தையா வெள்ளையன்

திருச்சி- உறையூர் பஞ்சவர்ணசாமி திருக்கோயில். வைகறைப் பொழுது. கணீரென்று ஒலிக்கிறது தேவாரப் பாடல். “இதிலென்ன ஆச்சரியம்?’ என்று நினைக்கலாம். அந்தக் கோயிலில் தேவாரத்தைப் பாடிக் கொண்டிருந்தது ஒரு பெண்.

அவர் பெயர் அங்கயற்கண்ணி. திருப்பள்ளி எழுச்சி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்… எனப் பஞ்சவர்ணசாமி கோவிலின் நான்குகால பூஜையிலும் தேவாரம் ஒலிப்பது இவரின் குரலில்தான்!

இறைப்பணியைச் செய்து கொண்டிருக்கும் முதல் பெண் ஓதுவாரான அங்கயற்கண்ணி, இந்தப் பணியின் மேன்மை குறித்தும், அவர் இந்தப் பணிக்கு எப்படி வந்தார் என்பதைக் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

“”திருச்சிக்குப் பக்கத்திலே இருக்கும் செம்பட்டு கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். என் கூடப் பிறந்தவங்க ஆறு பேர். நான் நான்காவதா பிறந்தேன். அப்பாவுக்குத் தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணி. அவருடைய வருமானத்துக்கு ஏற்ப எங்களின் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டோம். நான் பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு, மேல் படிப்பு படிக்க ஆசைப்பட்டேன். குடும்ப சூழ்நிலையை நினைத்து செலவில்லாமல் படிக்க என்ன செய்யறதுன்னு தேடியபோது, சிலர் திருச்சி மாவட்ட இசைப் பள்ளியில் சேரலாம்னு சொன்னாங்க. என்னோட சின்ன வயசுலே தினமும் எங்க வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற அங்களம்மாள் கோவிலுக்குப் போவேன். அங்கு ஒரு பெரியவர் வந்து தினமும் தமிழில் கணீரென்று பாடுவார். எங்களைப் போன்ற பிள்ளைகளையும் பாடச் சொல்லிக் கேட்பார். அந்த அனுபவம்தான் இசைப் பள்ளியில் சேர்வதற்கு எனக்குக் கை கொடுத்தது.

இசைப் பள்ளியில் மூன்றாம் வருடம் படிக்கும் போதுதான், இந்தப் படிப்பை முடித்தவர்கள் தமிழிசை கச்சேரி செய்யலாம் அல்லது கோவிலில் ஓதுவாராகப் பணியாற்ற முடியும்னு தெரிந்தது. சிறிது நாட்கள் கழித்து ஓதுவார் பணியில் சேர்வதற்கான முயற்சியை செய்து கொண்டிருந்தேன்.

எனது ஆசிரியர் சரவணன் மாணிக்கம் ஐயாதான் படிக்கும் போதும் சரி, நான் பணியைத் தேடிக் கொண்டிருந்த போதும் சரி எனக்கு நல் வழிகாட்டினார். நான் சோர்ந்து போன போது எல்லாம் பல கதைகளைச் சொல்லி என்னை உற்சாகப்படுத்துவார்.

இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அரசு இசைப் பள்ளி மாணவிகளை ஓதுவாராக அனுமதிக்க வேண்டும் என்று எப்போதும் கூறிக்கொண்டே இருப்பார் எனது ஆசிரியர்.

என் ஆசிரியரைப் போன்றவர்களின் தொடர் முயற்சியினால், 2006-ம் ஆண்டு அரசு உத்தரவு மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவாரானேன். இந்த உத்திரவு வருவதற்கு முன் தினமும் கோவிலுக்குச் சென்று திருமுறைகளைப் பாடி வந்தேன். அந்த பயிற்சியின் போது ஓரளவுக்கு இருந்த பயமும் தெளிந்தது.

திருப்பள்ளி எழுச்சி, கால சந்திக்குப் பிறகு பாராயணம், உச்சிக்காலம்… என்று பாடிய பிறகு வீட்டுக்கு சாப்பிடப் போய்விடுவேன். மாலையில் சாயரட்சை, அதற்குப் பிறகு பாராயணம், அர்த்த ஜாமம்… என்று பாடிய பிறகுதான், ஒருநாள் முழுவதும் இறைவனைப் பாடிய திருப்தியோடு வீட்டிற்குப் போவேன்!

கோவிலில் நான் பாடும்போது, அதைக் கேட்கும் பெண்கள், “”சாமி சன்னதியில் பாடுவதற்கு நீ கொடுத்து வச்சிருக்கணும்மா… எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது..” -என்று சொல்வார்கள். எல்லாம் இறைவன் செயல் என்று நினைத்துக் கொள்வேன்.

பொதுவாக கோவிலில் ஆண் பணியாளர்கள் அதிகம் இருந்தாலும் என்னை மரியாதையோடுதான் நடத்துகிறார்கள்.

தேவாரமும், திருவாசகமும் முன்பு எல்லோர் வீடுகளிலுமே பெண்கள் பாடிய காலம் உண்டு. நாளடைவில் இந்தப் பழக்கம் பெண்களிடம் குறைந்துவிட்டது. மீண்டும் பெண்கள் தேவாரம், திருவாசகத்தைப் பாடவேண்டும்!” என்கிறார் அங்கயற்கண்ணி.

Posted in Angayarkanni, Angayarkkanni, Faces, Females, Hindu, Hinduism, Interview, music, people, She, Singer, Temple, Trichy | Leave a Comment »