Renowned economist Raja Chelliah passes away
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 8, 2009
பொருளாதார மேதை ராஜா செல்லையா காலமானார்
தமிழகத்தின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான ராஜா செல்லையா (86) சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
1991-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வரிச் சீரமைப்புக் குழுவின் தலைவராக பணியாற்றினார். தாராளமயமாக்கல் கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கத் தொடங்கிய பிறகு வரிச் சீரமைப்பில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அத்தகைய வரிச் சீரமைப்பு குழுவின் தலைவராக இருந்து பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த பெருமை இவருக்குண்டு.
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற செல்லையா, இந்தியா திரும்பியவுடன் பொருளாதாரத்துக்கான தேசிய கவுன்சிலில் முதுநிலை பொருளாதார நிபுணராகப் பணியாற்றினார்.
இவரது சேவையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கெüரவித்துள்ளது. பல பொருளாதார புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
சர்வதேச செலாவணி நிதியத்தில் (ஐஎம்எஃப்) நிதி விவகாரத்துறையின் தலைவராக பணியாற்றியுள்ளார். 1976-ம் ஆண்டு முதல் தேசிய பொது நிதி நிர்வாக மையத்தின் நிறுவன இயக்குநராக 10 ஆண்டுகள் பணியாற்றினார்.
9-வது ஐந்தாண்டு திட்டக் குழுவின் உறுப்பினராகவும் மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிப் பற்றாக்குறை ஆலோசகராகவும், சென்னை பொருளாதார கல்வி மையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்