Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மே, 2007

Paul Wolfowitz – World Bank, Girlfriend, Shaha Riza, Compensation

Posted by Snapjudge மேல் மே 31, 2007

நெட்டில் சுட்டதடா…: பெரிய பதவிக்கு வேட்டு வைத்த சின்னப் பதவி!

பல வருடங்களுக்கு முன்பு ஒரு பொதுத்துறை நிறுவனத்திலிருந்து இண்டர்வியூவுக்கு அழைப்பு வந்திருந்தது. கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸின் முன் பதிவு செய்யப்படாத பெட்டியில், உரித்துப் போட்ட வேர் கடலைத் தோல்களின் நடுவே தரையில் உட்கார்ந்தபடியே டெல்லிக்குப் பயணமானேன். பயணம் நாற்பது மணி நேரம் இருந்தாலும், இண்டர்வியூ என்னவோ நாலே நிமிடத்தில் முடிந்துவிட்டது. ஆச்சரியத்துடன் வெளியே வந்தபோது, அங்கே அட்டெண்டராக இருந்த கோபால் என்ற தமிழர் என் பால் வடியும் முகத்தைப் பார்த்து அனுதாபப்பட்டு ஒரு தகவல் தெரிவித்தார்: ஏற்கனவே அந்த உத்தியோகம் உயர் அதிகாரி ஒருவரின் உறவினருக்குக் கொடுக்கப்பட்டு விட்டதாம்! நான் குமுறிக் கொந்தளித்து ஒரு கல்லை எடுத்துக் கண்ணாடி ஜன்னல் மீது வீசலாமா என்று யோசித்து, பிறகு தைரியம் போதாமல் கனாட் ப்ளேஸில் ஒரு ராஜேஷ் கன்னா படம் பார்த்துவிட்டு ராத்திரியே ரயிலேறிவிட்டேன்.

தான் வகிக்கும் பதவியை உபயோகித்துத் தன்னுடைய உறவினர்களுக்குச் சகாயம் செய்து வைப்பதற்கு ஆங்கிலத்தில் நெபாடிஸம் என்று பெயர். நெஃப்யூ -மருமகன் என்ற வார்த்தையிலிருந்து வந்தது இது. அந்த வார்த்தைக்கு அடி வேர், நபாத் என்ற பழைய சமஸ்கிருதச் சொல். ஒருவேளை, ரிக் வேத காலத்திலேயே நெபாடிஸம் இருந்திருக்கிறதோ?… அமெரிக்காவில் 1933-ம் ஆண்டு டெக்ஸôஸ் மாநிலத்தில் ஒரு சர்வே எடுத்தார்கள். சில அரசுத் துறைகளில் அறுபது சதவிகிதம் வரை ஊழியர்களின் உறவினர்களால் நிரம்பி வழிந்ததைக் கண்டுபிடித்து அதிர்ந்தார்கள். நெபாடிஸ ஒழிப்புக் கமிட்டி என்று ஒன்று போட்டு விசாரணை நடத்தினார்கள். (அந்தக் கமிட்டியில் யார் யாருடைய மருமகப் பிள்ளைகளெல்லாம் இடம் பெற்றார்களோ தெரியவில்லை). பிறகு எல்லா மாநிலங்களும் விதவிதமாக நெபாடிஸ மறுப்புச் சட்டங்கள் இயற்றின. இப்போது பெரிய தனியார் நிறுவனங்களில்கூட வேலைக்குச் சேரும்போதே, “”உங்கள் உற்றார் உறவினர்கள் யாருக்கும் நீங்கள் சுற்றி வளைத்துக் கூட சூபர்வைசராக இருக்க முடியாது; உங்களுக்கு வேண்டியவர்கள் நடத்தும் கடையிலிருந்து ஆபீசுக்கு குண்டூசி கூட வாங்கக் கூடாது” என்றெல்லாம் விதி முறைகள் அச்சடித்துத் தந்து கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இருந்தும் நெபாடிஸம் சாவதாகத் தெரியவில்லை. “”என் மகனுக்கு உன்னுடைய டிபார்ட்மெண்டில் வேலை போட்டுக் கொடு; உன் மகனுக்கு என் டிபார்மெண்டில்” என்று பேசி வைத்துக்கொண்டு சுலபத்தில் நிரூபிக்க முடியாத வகையில் ஊழல் செய்கிறார்கள்.

சமீபத்தில் நெபாடிஸக் குற்றச்சாட்டுக்கு ஆளாகிப் பதவியை இழந்தவர், உலக வங்கியின் தலைவராக இருந்த உல்ஃபோவிச் என்பவர். பிரிட்டிஷ் பிரதமர்கள் கூட ரிட்டையர் ஆன பிறகு உலக வங்கியின் இந்த உயர்ந்த பதவிக்குப் போட்டியிடுவது உண்டு. உலகத்தில் எங்கே வேண்டுமானாலும் பெரிய அளவில் போர், பஞ்சம் போன்றவற்றை ஆரம்பித்து வைக்கவும், முடித்து வைக்கவும் சக்தி படைத்த பதவி அது. உல்ஃபோவிச் வங்கியில் வேலை செய்த தன்னுடைய காதலி ரிஸô என்பவருக்குப் பதவி உயர்வு கிடைக்குமாறு பார்த்துக் கொண்டதுடன், ஒரேயடியாகச் சம்பளத்தையும் உயர்த்திக் கொடுத்துவிட்டார். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் டாலர்; அமெரிக்காவின் மத்திய அமைச்சர்களைவிட அதிகச் சம்பளம்! இந்த ஊழலைக் கண்டு வெகுண்ட சில ஊழியர்கள் மொட்டைக் கடிதாசு எழுதிப் போட்டுவிட்டார்கள். கடும், நெடும் விசாரணை நடந்தது. ஜனாதிபதி புஷ் நேரடியாகத் தலையிட்டுக் காப்பாற்ற முயன்றும் உல்ஃபின் தலை தப்பவில்லை. பொய்ச் சாட்சி சொல்ல மறுத்துத் தன் காலை வாரிய கீழ் மட்ட அதிகாரிகளை வண்டை வண்டையாகத் திட்டிக்கொண்டே வெளியேறினார் உல்ஃபோவிச்.

புனிதப் பீடங்களும் நெபாடிஸத்தின் நெடிய கைகளிலிருந்து தப்பிக்கவில்லை. கத்தோலிக்க போப்பாண்டவர்கள் கல்யாணம் செய்து கொள்வதில்லையாதலால், அவர்களுக்கு நேரடியான வாரிசுகள் இருக்க வாய்ப்பில்லை. எனவே தத்தமது தமக்கை மகன்களைப் பதவிக்குக் கொண்டு வந்து பரம்பரை ஆட்சியை நிலை நாட்டினார்கள். உதாரணமாக போப் கலிக்ஸ்டஸ் என்பவர் தன்னுடைய இரண்டு மருமகன்களைச் சக்தி வாய்ந்த கார்டினல் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார். அதில் ஒருவர் பிறகு போப் பதவிக்கு உயர்ந்தார். ஆறாவது அலெக்ஸôண்டர் என்ற அந்த போப், தன்னுடைய ரகசிய சினேகிதியின் தம்பியை ராவோடு ராவாக கார்டினல் ஆக்கினார். அந்தத் தம்பியும் பிறகு போப் ஆகிப் பரம்பரை வழக்கத்தைத் தொடர்ந்தார்: தெருவில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த தன்னுடைய பதினாலு, பதினைந்து வயது மருமகன்களை சாக்லெட் தந்து அழைத்து வந்து, சீனியர் பிஷப்பாக ஆக்கினார். கடைசியாக பதினேழாம் நூற்றாண்டு முடிவில் போப் இன்னசென்ட் என்பவர்தான் உறவினர்களுக்கு சர்ச் பதவி கொடுக்கும் வழக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்.

அரசியல்வாதிகளின் வாரிசுள், அப்பா மாதிரி முள் பாதையில் நடந்து மலையேறத் தேவையின்றி நேரடியாக ஹெலிகாப்டரில் ஏறி உச்சிக்குப் போய்விடுவது உலகம் முழுவதும் வழக்கம்தான். மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று நம்மை நாலு புறமும் சூழந்து கொண்டு இதற்கு உதாரணங்கள் உண்டு. உற்றார் உறவினர் தயவில், ஒரு வார்த்தை கூட ஃப்ரெஞ்சு மொழி தெரியாதவர்கள் ஃப்ரான்ஸ் நாட்டுக்குத் தூதராக நியமிக்கப்பட்ட வினோதமும் நடந்திருக்கிறது; தன் கணவருடைய நாற்காலிக்கு நெருக்கடி நேர்ந்தபோது கொல்லைப்புறத்தில் வறட்டி தட்டிக் கொண்டிருந்த மனைவி கையை அலம்பிக் கொண்டு வந்து பதவிக்கு பிரமாணம் எடுத்துக் கொண்ட விசித்திரமும் நடந்திருக்கிறது. அறுபதுகளில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான், தலைமை வக்கீல் பதவிக்கு ராபர்ட் என்பவரை நியமித்தது பெரிய சர்ச்சையானது. ஏனெனில் இரண்டு பேரின் குலப் பெயரும் கென்னடி! (தம்பியும் அண்ணன் போல அரசியலில் நுழைந்து தேர்தல்களில் ஜெயித்தார்; அண்ணன் போலவே சுட்டுக் கொல்லப்பட்டார்.)

இப்படி உள்ளிருப்பவரின் உறவினர்கள் குறுக்கு வழியில் நுழைந்துவிடுவதால், தகுதியும் திறமையும் கொண்ட வேறு பலருக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடுகிறது என்பதுதான் இதன் பிரச்சினை. ஆனால் எல்லா நம்பிக்கைகளையும் தட்டிக் கேட்கும் அமெரிக்காவில், நெபாடிஸம் நல்லதா, கெட்டதா என்றே ஒரு விவாதம் நடக்கிறது. ஆடம்பெல்லோ என்ற அறிஞர் பல வருடம் ஆராய்ச்சி செய்து பி.எச்.டி லெவலில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். நெபாடிஸம் என்பது, மனிதன் உள்பட எல்லாப் பிராணிகளின் இயற்கையான இனம் தழைக்கும் உந்துதலால் ஏற்படுவது என்கிறார் அவர். எறும்புக் காலனிகளில் எவ்வளவோ எறும்புகள் பசித்திருக்க, கிடைத்த உணவைத் தன் ரத்த சம்பந்தங்களுக்குக் கொடுப்பதை விஞ்ஞானிகள் கவனித்திருக்கிறார்கள். (ஆயிரம் எறும்புகளில் எந்த எறும்புக்கு எந்த எறும்பு சித்தப்பா என்பதை எப்படித்தான் அடையாளமிட்டுக் கண்காணித்தார்களோ?) தன்னுடைய நேரடி வாரிசுகளுக்கு உணவும் உடையும் கட்சிப் பதவியும் தந்து கவனித்துக் கொள்வது, நல்ல பெற்றோருடைய கடமைதானே என்கிறார் பெல்லோ.

ஜாப்ஸ்டர் போன்ற வேலை வாய்ப்பு தளங்களிலும் இதையேதான் நவீன பகவத் கீதை மாதிரி உபதேசிக்கிறார்கள். “”இந்தக் காலத்தில் வேலை கிடைப்பதே கழுதைக் கொம்பாக இருக்கிறது, இதில் லட்சிய வாதமெல்லாம் பேசிக்கொண்டு “சொந்தக் காலில்தான் நிற்பேன், சிபாரிசு பிடித்து வேலைக்கு அலையமாட்டேன்’ என்ற வறட்டு கெüரவத்தால் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். தகுதி அடிப்படையில் வேலை தானாகக் கனிந்து வந்து விழும் என்று மடியை விரித்துக் கொண்டு காத்திருந்தது, போன தலைமுறை. இப்போதையே டிஜிட்டல் தலைமுறைக்கு அவ்வளவு பொறுமையெல்லாம் கிடையாது. இது சோஷல் நெட்வொர்க்கிங் யுகம்: உங்களுக்கு யாரைத் தெரியும், அவர்களுக்கு யார் யாரையெல்லாம் தெரியும் என்ற இந்த வாலைப் பின்னல்தான் சமுதாயத்தில் நம்மைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. எனவே உங்கள் அப்பாவோ, மாமாவோ கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருக்கும் நன் மதிப்பைக் கூச்சமில்லாமல் உபயோகித்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள். இதற்குக் கூடப் பயன்படவில்லையென்றால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்ததுதான் என்ன பயன்?”

ஒரு அலுவலகத்தின் சீனியர் அதிகாரி, அங்கே வேலை செய்யும் வாலிபனிடம் சொன்னாராம்: “”இளைஞனே! நீ போன வருடம் இங்கே கடை நிலை க்ளார்க் வேலையில் சேர்ந்தாய்; மூன்றே மாதத்தில் கடின உழைப்பால் சூபர்வைசராக உயர்ந்தாய். ஆறு மாதம் கழித்து முதுநிலை மானேஜர் மண்டையைப் போட்ட போது, உன் திறமையின் காரணமாக அந்தப் பணியில் உன்னை அமர்த்தினேன். இப்போது உன் புத்திசாலித்தனத்தினால் உப தலைவர் பதவியும் உன்னுடையதாகிவிட்டது. அடுத்தது என்னுடைய நாற்காலிதான் பாக்கி. இப்போது நான் செய்ய வேண்டும்?

“”சீக்கிரமே ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டுவிடுங்கள், டாடி!” என்றான் இளைஞன்.

Posted in Analysis, Ancestry, Backgrounder, Blood, Compensation, dynasty, Favor, Friend, Girlfriend, hierarchy, Nepotism, Paul Wolfowitz, Raman Raja, relative, Riza, Salary, Scandal, Shaha Riza, WB, Wolfowitz, world bank | Leave a Comment »

Interview with Author Jeevabharathy – Tamil Literature researcher, Writer

Posted by Snapjudge மேல் மே 31, 2007

சந்திப்பு: “”முன்னோர்களை அடையாளம் காட்டுவதே முக்கியப்பணி!”

கே இளந்தீபன்

பாரதி பிறந்த எட்டயபுர மண்ணுக்கு பக்கத்துக் கிராமமான பூதலபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஜீவபாரதி. வேலுச்சாமி, கந்தசாமி என்ற இருபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் கந்தசாமியின் வாரிசாகப் பிறந்து- எழுத்து வயலில் பட்டுக்கோட்டைக் கவிஞனை முன் ஏர் உழவனாகக் கொண்டு- கவிதை, கட்டுரை, கள ஆய்வு, வரலாறு, புதினம், சிறுவர் இலக்கியம், தொகுப்பு நூல்கள் என்று பல்வேறு தளங்களில் 1970 முதல் எழுதிவருபவர்.

தற்போது தமிழ் எழுத்தாளர் சங்கப் பரிசை “லெனின்’ என்ற நூலுக்குப் பெற்று மகிழ்ச்சியும் களைப்புமாகத் திரும்பியிருந்தவரைச் சந்தித்தோம்.

எழுத்துத் துறைக்கு எப்போது வந்தீர்கள்?

ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற போது இட்டுக் கட்டிப் பாடத் தொடங்கினேன். எங்கள் ஊருக்கு அருகே மரியக்கண்ணு என்ற தாழ்த்தப்பட்ட சகோதரரை உயர் சாதியினர் கொன்றது என் பாடு பொருளானது. இந்தப் பாடல்தான் எனது ஊர்ப் பகுதியில் என்னைக் கவிஞனாக, பாடகனாக அறிமுகப்படுத்தியது.

முதல் படைப்பு பற்றி?

1969-ல் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் தோழர் பால தண்டாயுதத்தால் வேலைக்குச் சேர்க்கப்பட்டேன். அங்கு வேலை பார்த்த பழனி சுந்தரேசனிடம் “முல்லைச்சரம்’ இதழ் ஆசிரியர் பொன்னடியான் கவிதை கேட்டிருந்தார். அவருடைய கவிதையுடன் என்னுடைய கவிதையையும் கொடுத்தனுப்பினார். பூதலபுரம் ராமமூர்த்தி என்ற என் சொந்தப் பெயரில் கவிதை பிரசுரமானது. பொன்னடியான் என்னைப் புனைப் பெயர் வைத்துக் கொள்ளுமாறு ஆலோசனை சொன்னதால் நான் நேசிக்கும் ஜீவாவையும் பாரதியையும் இணைத்து ஜீவபாரதி ஆனேன்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பக்கம் உங்கள் கவனம் திரும்பியதற்கு என்ன காரணம்?

சின்னவயசில் பட்டுக்கோட்டையாருடைய “தூங்காதே தம்பி தூங்காதே’ பாடலைத்தான் எப்போதும் பாடிக்கொண்டு இருப்பேன். இதன்பிறகு என்.சி.பி.எச்.-ல் பணியாற்றியபோது பட்டுக்கோட்டையார் பாடல்களைத் தொகுத்து வெளியிட்ட பி.இ.பாலகிருஷ்ணன் தொடர்பால் பட்டுக்கோட்டையார் மீது தனிக்கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

பட்டுக்கோட்டையார் பாடல்களை காலவாரியாகத் தொகுத்து வெளியிட்டது, பட்டுக்கோட்டை நகரத்தில் அவருக்கு சிலை வைத்தது, அவருக்கு நினைவாலயம் அமைக்கவும் அவரது பாடல்களை நாட்டுடமை ஆக்கவேண்டும் என்றெல்லாம் குரல் எழுப்பி இரண்டும் நடந்துள்ளது. இந்த முயற்சிகளுக்கு எனக்குப் பக்கபலமாய் இருந்தவர் முன்னாள் அமைச்சர் அமரர் எஸ்.டி.சோமசுந்தரம் என்பதை பெருமையோடு சொல்வேன்.

திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் சாரிடம் சத்யராஜ் நடித்த “24 மணி நேரம்’ படம் துவங்கி, “பாலைவன ரோஜாக்கள்’, “சந்தனக்காற்று’, “தீர்த்தக்கரையினிலே’ என்று 11 படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன். “இனி ஒரு சுதந்திரம்’ படத்தில் கங்கை அமரன் இசையில் எழுதிய “கைகளிலே வலுவிருக்கு’ என்ற பாடலும் -சந்தனக்காற்று திரைப்படத்தில் சங்கர் கணேஷ் இசையில் விஜயகாந்துக்காக ஓபனிங் சாங் “சந்தனக்காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே’ என்ற பாடலும் அடிக்கடி ரீங்காரமிடுவதை நேயர்கள் பலரும் அறிவர். இப்போதும் எழுதத் தயாராய் இருக்கிறேன் தரமான பாடல்களுக்கு…


பாரதிதாசன் பற்றிய ஆய்வு பட்டுக்கோட்டை, ஜீவா, பசும்பொன்தேவர், போன்றவர்களின் படைப்புகளைத் தொகுப்பது என்று நீங்கள் பாதை வகுத்துக் கொண்டது ஏன்?

பாரதிதாசனைப் பற்றி விருப்பு வெறுப்புடன் ஆய்வுகள் நடந்து வந்ததால் முழுமையான புதுமையான ஆய்வுக்காக பாவேந்தரிடம் கூடுதல் கவனம் செலுத்தினேன். பட்டுக்கோட்டையாரை விஞ்சிவிட்டதாக சில அறிவுஜிவிகள் தங்களுக்கு வேண்டியவர்களைக் கொண்டு எழுதியபோது பட்டுக்கோட்டையின் கம்பீரத்தை நெஞ்சு நிமிர்த்திச் சொன்னேன். தமிழக அரசியல் உலகில் தியாகத்தால் உயர்ந்தவரும் மகாத்மா காந்தியால் “தேசத்தின் சொத்து ஜீவா’ என்று பாராட்டப்பட்ட அமரர் ஜீவாவை தமிழர்கள் கண்டு கொள்ளாததால் அவரை அவரது படைப்புகள் மூலம் முன்னிறுத்தியுள்ளேன். என்னுடைய முன்னோர்களைச் சரியாக அடையாளம் காட்டுவதன் மூலம் என் எழுத்துப் பணியைத் தனித்துவமாக்கியுள்ளேன் என்பதை ஆன்றோர்கள் பலர் அறிவர்.

பாரதி காலமும்-கவிதையும் என்று மிகப்பெரிய ஆய்வு நூல் பணியில் ஈடுப்பட்டிருக்கிறீர்களாமே?

அது மிகப்பெரிய ஆய்வு பணி. என்னுடைய நூல்களில் இது தனித்து இருக்கும். பாரதியைப் பற்றி சிலம்பொலி செல்லப்பனார், பேராசிரியர் சாலமன் பாப்பையா போன்றவர்களிடம் விவாதித்து வருகின்றேன். பாரதி என் பார்வையில் நிச்சயம் புதுமைக்கவிஞனாய் மிளிர்வான் என்பதை நூல் பணி நிச்சயம் நிரூபிக்கும்.

தமிழ் இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது?

வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடுகளே இங்கு நடைமுறையில் இருக்கிறது. படைப்புகளைப் பார்க்காமல் படைப்பாளியைப் பற்றிய செய்திகளே முன்னிறுத்தப்படுகின்றன. எவன் சமூகத்திற்கு தேவையானவன் என்பதைவிட எவன் நமக்குச் சாதகமானவன் என்ற கருத்தோட்டமே இங்கு கால் பரப்பி சிரிக்கின்றது. அத்தனையும் தாண்டி நல்ல படைப்பாளிகளும் படைப்புகளும் நேசிக்கப்படுவதும் வாசிக்கப்படுவதும் ஆரோக்கியமான அம்சம்தானே!

சாகித்ய அகாடமி, ஞானபீடம் என்று ஏதேனும் லட்சியம் உண்டா?

இதெல்லாம் எனக்கு லட்சியமாகப்படவில்லை. இதுபோன்ற பரிசுகளும் விருதுகளும் படைப்பாளியின் தகுதிக்குத் தரப்படுகிறதா? அல்லது படைப்பாளிகளால் தட்டப்பட்டு தரப்படுகிறதா? என்பது ஆய்வுக்குரியது. இந்த நிறுவனங்களின் மேல் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் விமர்சனங்கள் வைக்கிறேன். பட்டுக்கோட்டையாரைப் பற்றியும் ஜீவாவைப் பற்றியும் அதிக நூல்கள் எழுதியது நான்தான். இவர்களைப்பற்றி நூல் எழுத வேறு ஒருவரைத் தெரிவு செய்கிறார்கள். அவர்கள் எனது நூல்களைப் பார்த்து எழுதி பயனடைகின்றனர். இப்படிப்பட்ட நிறுவனர்கள் கொடுக்கும் விருதுகள் எப்படி இருக்கும்? என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

சரி. வேறு ஏதேனும் பரிசுகள், விருதுகள்?

“உலகப்பன் காலமும் கவிதையும்’ என்ற பாரதிதாசனைப் பற்றி முழுமையான ஆய்வு நூலும், “பொன்விழா சுற்றுலா’ என்று சிறுவர் இலக்கிய நூலும் தமிழ் வளர்ச்சித்துறையின் முதல் பரிசினைப் பெற்றுள்ளது. “அறிவை வளர்க்கும் சிறுவர் பாடல்கள்’ என்ற நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் விருதும் -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விருதும் “வேலுநாச்சியார்’ என்ற வரலாற்று புதினத்திற்கு பாரத வங்கியின் விருதும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பரிசும் பெற்றுள்ளதுடன், மூன்று மாணவிகள் என் நூல்களை ஆய்வு செய்து எம்.பிஃல் பட்டமும் பெற்றுள்ளனர். என்னுடைய கவிதை நூல்கள் அனைத்தையும் கும்பகோணம் கல்லூரி மாணவர் ஒருவர் ஆய்வு செய்து எம்.பிஃல் பட்டமும் பெற்றுள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மனைப்பற்றி நான் எழுதிய நூல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைப்பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்னுடைய “லெலின்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலுக்குப் பரிசு வழங்கி கெüரவித்துள்ளது. அதுமட்டுமின்றி மன்னார்குடியில் உள்ள “செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை’ எனது எழுத்துப் பணிகளைப் பாராட்டி “இலக்கியச் செம்மல்’ என்ற பட்டத்தையும் ஐம்பதினாயிரம் ரொக்கப்பரிசையும் தந்தது.

என்னுடைய வாசகர் ஒருவர் தனது குழந்தைக்கு எனது பெயரைச் சூட்டி மகிழ்கிறார். இன்னொரு வாசகர் தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு “ஜீவபாரதி இல்லம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். எல்லா விருதுகளையும் விட இவைகள் எல்லாம் என்னைப் பொறுத்தவரை மிகமிக உயர்ந்தது.

Posted in Author, Bharathi, Bharathidasan, Bharathy, Interview, Jeeva, Jeevabharadhi, Jeevabharadhy, Jeevabharathi, Jeevabharathy, Lenin, Literature, NCBH, Pasumpon, Pattukkottai, Pattukottai, Research, Writer | Leave a Comment »

Healthcare Advice – Fat content vs Thin weight: Exercise, Dietary Restrictions, Lifestyle choices

Posted by Snapjudge மேல் மே 31, 2007

ஆரோக்கியம்: பெண்ணுக்கு இளமை எதுவரை?

ரவிக்குமார்
Doctor Kausalya Nathan

என் பாதவிரல்களைப் பார்க்கமுடியாமல்

நானே எனக்கு எதிரியாய்…!

– இது தொந்தியால் ஏற்படும் பிரச்சினையைச் சொல்லும் ஒரு நொந்த கவிதை!

மாடிப்படியேறுவது தொடங்கி, உட்கார்ந்து, எழுந்து கொள்வதற்குக்கூட மூச்சு முட்டும். காரணம், நம் உடல் பருமன்.

உடல் பருமனுக்கான காரணங்கள், அதைத் தவிர்ப்பதற்கான விஷயங்கள் குறித்து இங்கே நமது கேள்விகளுக்கு நறுக்குத் தெறித்தாற்போல் பதில் கூறியிருப்பவர் டாக்டர் கௌசல்யா நாதன். சென்னையிலிருக்கும் அப்பல்லோ மற்றும் மலர் மருத்துவமனைகளில் வயது நிர்வாக மருத்துவ நிபுணரான டாக்டர் கௌசல்யா இனி உங்களுடன்…

Apollo Doctor Kowsalya

பொதுவாகவே நம் பெண்கள் பக்தியை வெளிப்படுத்துவதற்காக நாளுக்கொரு கடவுளுக்கு விரதம் இருப்பார்கள். விரதம் இல்லாத நாட்களிலும் சராசரி குடும்பத்தில் இருக்கும் பெண்கள் உணவு உண்பதில் ஆர்வம் காட்டாமல்தானே இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு உடல் பருமன் ஏன்?

விரதம் இருக்கும் நாட்களிலும் பழங்கள் சாப்பிடலாம். பாயசம், சூப்.. என ஏதாவது குடிக்கலாம். எதுவுமே சாப்பிடாமல் இருந்தால், நம் உடலில் ஹார்மோன்களின் சுழற்சி சமச்சீராக இருக்காது. வயிற்றில் சுரக்கும் அமிலங்களால் பலவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன. 18 முதல் 40 வயது நிலைகளில் இருக்கும் பெண்கள் பெரும்பாலோர்க்கு உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது.

“உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு’ என்று ஒüவையார் கூறியது தெரிந்தோ என்னமோ.. இன்றைய இளம் பெண்கள் குண்டாகி விடக்கூடாது என்பதில் ரொம்பக் கவனமாக இருந்து, அநியாயத்திற்கு மெலிதான உடல்வாகுடன் இருப்பது சரியா?

குண்டாகி விடக்கூடாது என்பதில் விழிப்புணர்வுடன் இருப்பது ஆரோக்கியமான விஷயம்தான். அதற்காகப் பிறர் பரிதாபப்படும் அளவுக்கு மெலிந்து போய்விட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஒவ்வொருவரின் உயரத்திற்கு ஏற்ற எடையை, அந்தந்த வயது நிலைகளுக்கு ஏற்ப கடைப்பிடிக்க வேண்டும்.

ஒருபக்கம் வீட்டில் தயாராகும் உணவுகளைக் குண்டாகிவிடுவோம் என்ற காரணத்துக்காகத் தவிர்க்கும் இன்றைய இளம் பெண்கள், துரித வகை உணவுகள், ஏற்கனவே தயார் செய்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பர்கர், பீட்ஸô, பாஸ்தா, குளிர்பானங்கள்… என நமது உணவுப் பழக்கத்தில் இல்லாத உணவுகளை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உணவுப் பழக்கங்களிலும் இன்றைய இளம் பெண்கள் தகுந்த விழிப்புணர்வைப் பெற்றிருக்க வேண்டும். இந்த மாதிரியான உணவுப் பழக்கங்கள் அவர்களை நிச்சயம் உடல் பருமன் பிரச்சினையில்தான் கொண்டு போய்விடும்.

உடல் பருமன் இந்தியாவில் மட்டுமே உள்ள பிரச்சினையா அல்லது உலகம் முழுவதும் உள்ள பிரச்சினையா?

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. அமெரிக்காவில் 60 சதவீதத்தினருக்கு இந்த உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. இந்தியாவில் 40 சதவிதத்தினருக்கு இருக்கிறது.

உடல் பருமனுக்கு தைராய்ட் பிரச்சினை முக்கியக் காரணமா?

அதுவும் ஒரு காரணம். தைராய்ட் பிரச்சினையைத் தவிர, பெண்களுக்கு வரும் பாலிசிஸ்டிக் ஓவரிஸ் நோய், மெனோபாஸ் காலங்களும் உடல் பருமன் நோய்க்கான இதர காரணங்கள்.

இது பரம்பரையாகத் தொடரும் நோயா?

பெரும்பாலும் உடல் பருமனுக்குப் பரம்பரை தொடர்பான காரணங்களும் இருக்கின்றன. இது தவிர, தூக்கமின்மை, ஒருவர் எந்தமாதிரியான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் முக்கியம். ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி செய்யும் பணியிலிருப்பவர்களுக்கும், ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த நோய் அதிகம் இருக்கிறது. இதுதவிர, மன அழுத்தம், பதட்டத்தில் இருப்பதும்கூட உடல் பருமனுக்குக் காரணமாகிறது.

இது வயதினால் வரும் கோளாறா?

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி பொதுவாக 40 வயதை நெருங்கும் போது கொஞ்சம் சதை போடும்தான். ஆண்களை விட பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் பருவம் முடியும்போது, சமச்சீரற்ற ஹார்மோன் பெருக்கத்தால் இடுப்பு, தொடை பகுதிகளில் சதை அதிகளவு போடும். வயதை ஒரு காரணமாகச் சொல்லலாமே தவிர அதுவே காரணமாகிவிடாது. சின்னச் சின்ன குழந்தைகளுக்குக்கூட உடல் பருமன் நோய் இருக்கிறது!

இந்த நோயிலிருந்து எப்படி ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்?

ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் 8-லிருந்து 10 டம்ளர் தண்ணீரை அருந்துங்கள். சில பெண்கள் இரவுப் பொழுதில் எதுவும் சாப்பிடாமல் தூங்குவார்கள். சில பேர் சாப்பாடு பாழாகிவிடக்கூடாதே என்பதற்காக, இருப்பதை எல்லாம் சாப்பிட்டு முடிப்பார்கள். பட்டினியாகப் படுப்பதும் தவறு. அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டுப் படுப்பதும் தவறு. ஒருசிலர் தலைவலி முதல் எந்தப் பிரச்சினை வந்தாலும் மருத்துவர்களை நாடாமல் அவர்களாகவே ஏதாவது மருந்து மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொண்டு சமாளித்து விடலாம் என்று நினைப்பார்கள். இது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.

அடிக்கடி இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது உடல் பருமனை வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பது மாதிரி அமைந்துவிடும். மாதத்திற்கு ஓரிரு முறை தரமான இனிப்பு வகைகளை, ஐஸ் க்ரீமை ருசிக்கலாம்.

காபி, டீக்கு சர்க்கரைப் போட்டு குடிப்பதைவிட வெல்லம் போட்டுக் குடியுங்கள். மது, சிகரெட் போன்ற எந்த கெட்ட பழக்கம் இருந்தாலும் அதை விட்டொழிப்பது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட கார்போ-ஹைட்ரேட் உணவுகளான மைதா, கோதுமை, பாசுமதி அரிசி போன்றவற்றையும், நொறுக்குத் தீனிகளான நூடுல்ஸ், பீட்ஸô, சிப்ஸ் போன்றவற்றையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

சில ஹெல்த்-சென்டர்களில் உடல் பருமனைக் குறைக்க மூன்று வேளை உணவுக்குப் பதில், ஐந்து வேளை உணவு உண்ணும் முறையைப் பரிந்துரைப்பது சரியா?

மூன்று வேளை உணவு; இரண்டு வேளை ஸ்நாக்ஸ் என்னும் அடிப்படையில் அப்படி சொல்லியிருப்பார்கள். பொதுவாக 90 கிலோவிலிருந்து 130 கிலோ எடை வரை இருப்பவர்களுக்கென்று பலவிதமான குணப்படுத்தும் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதில் இதுவும் ஒன்று. நீங்கள் சாப்பிடும் உணவு குறித்த நேரத்தில் சக்தியாக மாற்றப்பட வேண்டும். உணவின் மூலமாகக் கிடைக்கும் கலோரி எரிக்கப்பட வேண்டும். உடல் உழைப்பு இல்லாத நேரத்தில் நம் உடலில் தங்கும் அதீத கொழுப்பு உடல் பருமனுக்குக் காரணமாகிறது.

பரதநாட்டியம் கற்றுக் கொண்டு பாதியில் நிறுத்தி விடுவது, விளையாட்டில் ஈடுபட்டு பாதியில் நிறுத்திவிடுவது போன்ற காரணத்தால் கூட உடல் குண்டாகிவிடுமா?

எட்டு இட்லி சாப்பிட்டுவிட்டு பரதநாட்டியம் ஆடியிருப்பீர்கள் அல்லது ஒரு கேம் டென்னிஸ் ஆடியிருப்பீர்கள். நாளடைவில் விளையாட்டை, நடனத்தை உங்களால் தொடரமுடியாத சூழ்நிலை ஏற்படலாம். அப்போது என்ன ஆகும்? பரதநாட்டியம் ஆட மாட்டீர்கள். ஆனால் வழக்கம் போல் எட்டு இட்லியைச் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவே மாட்டீர்கள். நீங்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற உணவைப் பழகிக் கொண்டீர்கள் என்றால், அதிலேயே உடல் பருமன் பிரச்சினைக்குப் பாதி விடை கிடைத்துவிடும்.

“பெண்ணுக்கு இளமை எதுவரை? பிள்ளைகள் இரண்டு பெறும் வரை..’ என்கிறது கண்ணதாசனின் ஒரு திரைப்பாடல். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இளமை மனதுக்கா, உடலுக்கா? என்பதை நாம் யோசிக்க வேண்டும். அகத்தின் அழகுதான் முகத்தில் தெரிகிறது. நம் மனதை எந்தளவுக்குப் பக்குவமாக வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம். வயதின் காரணமாகப் புற அழகில் எத்தனையோ மாறுதல்கள் நடக்கும்தான்.

30 வயதிலிருப்பவர்கள் 50 வயதானவர்களைப் போல் தளர்ந்து போய், சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது. 30 வயதிலிருப்பவர்கள் அந்த வயதுக்குரிய அழகுடனும், தெளிவுடனும் இருந்தாலே போதும். பெண்களுக்குத் தன்னம்பிக்கைதான் என்றைக்கும் அழகு.

Posted in Advice, Aerobic, choices, Cycling, Diet, Dietary, Doctor, Exercise, Fat, Female, Food, Girl, Habits, Health, Healthcare, Kid, Lady, Life, Lifestyle, Muscle, Run, She, Slim, Thin, Tips, Treadmill, weight, Weights, Women | 1 Comment »

Gowri Kirupanandhan: Interview – Telugu to Tamil Translations

Posted by Snapjudge மேல் மே 31, 2007

முகங்கள்: ஒரு நாளில்…எட்டுமணி நேரம்!

உலகிலேயே மிகக் கடினமான காரியம் என்னவென்று பள்ளி மாணவர்களிடம் கேட்டுப் பாருங்களேன், “”தமிழைத் தவறில்லாமல் எழுதுவதுதான்” என்பார்கள். எந்த “ர’ போடுவது, எந்த “‘ந போடுவது என்பதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் தகராறுதான். இத்தனைக்கும் மழலையர் வகுப்பில் இருந்து தமிழை ஒரு பாடமாகவேனும் 12 ஆம் வகுப்பு வரை படித்திருப்பார்கள்.அவர்களுக்கே இந்தக் கதி.

ஆனால் இருபத்தொரு வயது வரை தமிழே தெரியாமல் இருந்துவிட்டு அதன் பின் தமிழ் கற்று இப்போது தெலுங்கிலிருந்து தமிழில் புத்தகங்களை ஒருவர் மொழிபெயர்க்கிறார் என்றால் அது சாதாரண விஷயமா? ஆம். அந்தச் சாதனையாளர் கௌரி கிருபானந்தன்.

அவர் தெலுங்கில் இருந்து கிட்டத்தட்ட நாற்பது புத்தகங்களுக்கு மேல் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைகளைத் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். அந்தச் சாதனையாளரை சென்னை பெசண்ட் நகரில் அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். உங்கள் தாய்மொழி எது?

எனது தாய்மொழி தமிழ்தான். ஆனால் நான் வளர்ந்தது படித்தது எல்லாம் ஹைதராபாத்தில். சிறுவயதில் இருந்தே தெலுங்கு மீடியத்தில்தான் படித்தேன். எனக்கு சிறுவயதில் தமிழே தெரியாது. எனக்கு 21 வயதில் திருமணம் ஆனது. அதன்பின்தான் தமிழ் படிக்க ஆரம்பித்தேன்.

தமிழில் என்ன படித்தீர்கள்?

தமிழில் பெரும்பாலும் நான் படித்தது கதைகள், நாவல்களே. அசோகமித்திரன், தி.ஜானகிராமன், இந்திராபார்த்தசாரதி, சுஜாதா, சிவசங்கரி, ராஜம்கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை விழுந்து விழுந்து படிப்பேன். ஏற்கனவே தெலுங்கு நாவல்களைப் படிக்கும் பழக்கம் இருந்தது.

தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

என்னுடைய 35 வது வயதில் – கிட்டத்தட்ட தமிழ் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து 14 ஆண்டுகள் கழித்து – ஒரு தெலுங்கு மொழிபெயர்ப்பு நாவலைத் தமிழில் படித்தேன். அந்த நாவலை ஏற்கனவே நான் தெலுங்கில் படித்திருந்ததால் தமிழில் அதை எந்த அளவுக்குக் கொலை செய்திருந்தார்கள் என்பதை அந்த நாவலைப் படிக்கும் போது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். ஏன் நாமே அதைத் தவறில்லாமல் தமிழில் மொழிபெயர்க்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. முதன்முதலாக எண்டமூரி வீரேந்திரநாத்தின் “பந்தயம்’ என்ற சிறுகதையை மொழிபெயர்த்தேன். அது குங்குமச் சிமிழ் இதழில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்தது.

தொடர்ந்து மொழிபெயர்க்கக் காரணம்?

என்னுடைய ஈடுபாடு என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் என் அப்பாவும் என் கணவரும் உற்சாகப்படுத்தினார்கள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டதால் அவர்களை கவனிக்க அதிக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக எனது புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட அல்லயன்ஸ் பப்ளிஷர்ஸ் எனக்குக் கிடைத்தது முக்கியக் காரணம். அவர்கள் கிடைக்கவில்லையென்றால் இத்தனை புத்தகங்களை மொழிபெயர்த்திருப்பேனோ என்னவோ?

தெலுங்கிலிருந்து யார் எழுதிய புத்தகங்களை அதிகமாக மொழிபெயர்த்துள்ளீர்கள்?

எண்டமூரி வீரேந்திரநாத் புத்தகத்தை அதிகமாக மொழிபெயர்த்துள்ளேன். 20 நாவல்களுக்கும் மேலாக மொழிபெயர்த்திருக்கிறேன். அதற்கடுத்து யத்தனபூடி சுலோசனா ராணியின் புத்தகங்கள், டி.காமேஸ்வரியின் புத்தகங்கள் என கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன்.

முறையாகத் தமிழ் படிக்கவில்லை என்கிறீர்கள். அப்படியிருக்க தமிழில் மொழிபெயர்ப்பது சிரமமாக இல்லையா?

ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. என் அப்பா எனக்குப் பெரிதும் உதவினார். நான் மொழிபெயர்த்து வைத்திருப்பதை எல்லாம் எடுத்து எத்தனை பக்கமானாலும் சரி பார்த்துத் தருவார். அவருக்கு தமிழ் நன்றாகத் தெரியும். இரண்டாவதாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் அமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். நிறைய ஒற்றுமைகள் இருக்கும். குறிப்பாக தெலுங்குக்கும் கன்னடத்திற்கும் நிறைய ஒற்றுமை இருக்கும். தமிழுக்கும் மலையாளத்திற்கும் நிறைய ஒற்றுமை இருக்கும். எனவே மொழிபெயர்க்கும் போது வாக்கிய அமைப்பில் சிக்கல் எதுவும் வரவில்லை. மேலும் நான் மொழிபெயர்ப்பது நன்றாக இருப்பதால்தானே எல்லாரும் என் மொழிபெயர்ப்பைப் படிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள் என்ற எண்ணம் இருந்தது. அது உற்சாகத்தை அதிகப்படுத்தியது. ஒரு நாளில் சுமார் எட்டு மணி நேரம் மொழிபெயர்ப்புக்காகச் செலவிடுகிறேன்.

தமிழில் இருந்து தெலுங்குக்கு மொழிபெயர்த்திருக்கிறீர்களா?

தமிழில் இருந்து சிறுகதைகளை தெலுங்கில் மொழிபெயர்த்திருக்கிறேன். அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி, சுஜாதா, அனுராதாரமணன், உஷாசுப்பிரமணியன், ஜெயகாந்தன் ஆகியோரின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். யாருடைய கதையை மொழிபெயர்த்தாலும் அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் மொழிபெயர்ப்பேன்.

உங்களுடைய பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் புத்தகமாக மட்டும்தான் வந்திருக்கிறதா? இல்லை இதழ்களிலும் வெளிவந்திருக்கிறதா?

என்னுடைய கதைகள் கணையாழி, மஞ்சரி, குங்குமம், மங்கையர் மலர், மஞ்சுளா ரமேஷின் சிநேகிதி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன.

மலையாள நாவல்களைப் படித்ததுண்டா? தமிழ், தெலுங்கு, மலையாள இலக்கியங்களில் என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்?

நான் சிறிதுகாலம் திருவனந்தபுரத்தில் இருந்திருக்கிறேன். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க நூலகத்தில் நிறைய புத்தகங்களை எடுத்துப் படித்திருக்கிறேன். எழுத்தாளர் நீல.பத்மனாபனின் அறிமுகம் அப்போது கிடைத்தது.

மலையாளத்தில் தகழி சிவசங்கரபிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர் ஆகியோரின் நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படித்திருக்கிறேன். நான் படித்தவரை மலையாள நாவல்கள், கதைகள் ஆழமான வாசிப்புக்கு உகந்தவை. பொழுதுபோக்காக, மேம்போக்காக அவற்றைப் படிக்க முடியாது. தமிழ், தெலுங்கு நாவல்கள், கதைகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை என்னால் பார்க்க முடியவில்லை.

தெலுங்கிலிருந்து நீங்கள் சரித்திர நாவல்கள் எதையும் மொழிபெயர்த்துள்ளீர்களா?

இல்லை. நான் மொழிபெயர்த்தவை எல்லாம் சமூக நாவல்கள். குறிப்பாக பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டவை. அவர்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் போன்றவையே நான் மொழிபெயர்த்த கதைகளின் கருப்பொருள்கள்.

தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்தேன் என்கிறீர்கள். தமிழில் வட்டார வழக்கு நாவல்கள், கதைகள் அதிகம் எழுதப்பட்டுள்ளன. அவற்றை மொழிபெயர்க்கும் எண்ணம் உண்டா?

இல்லை. என்னால் அது முடியாது என்றே தோன்றுகிறது. எந்த மொழியிலிருந்து மொழிபெயர்த்தாலும் அந்த மொழியில் உள்ள வாசனை மாறாமல், சாயை கெடாமல் மொழிபெயர்க்க வேண்டும் என்பதே என் விருப்பம். வட்டாரத் தமிழில் எனக்கு அதிக பரிச்சயம் இல்லாததால் அதை மொழிபெயர்த்தால் நன்றாக வராது.

சமீபத்திய உங்கள் முயற்சி?

சுலோசனா ராணி தெலுங்கில் எழுதிய மீனா என்ற நாவலைத் தமிழில் “முள்பாதை’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். அது ரொம்பவும் ஃபேமஸôன நாவல். சினிமாவாகக் கூட எடுத்தார்கள். இரண்டு பாகங்களாக உள்ள அந்த நாவலை மொழிபெயர்க்க ஒன்பது மாதங்கள் ஆனது.

Posted in Ambalam, Andhra, Andhra Pradesh, AP, Author, Books, Endamoori, Endamoori Virenderanath, Endamuri, Entamoori, Entamuri, Fiction, Gouri, Gowri, Gowri Kirupanandhan, Interview, Kameshwari, Kanaiaazhi, Kirubanandan, Kirupanandhan, Kirupananthan, Krupanandhan, Krupananthan, Kunguma Chimizh, Literature, Malayalam, Mangaiyar Malar, Novels, Story, Sulochana Rani, Tamil, Telugu, Translations, Translator, Veerenderanath, Veerendranath, Virenderanath, Virendranath, Writer | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Madhulai (Pomegranate)

Posted by Snapjudge மேல் மே 31, 2007

மூலிகை மூலை: மாதுளையின் மகிமை!

விஜயராஜன்

நீண்ட சின்னதான இலைகளையும், சிவப்பு நிறப் பூக்களையும் பழத்தினுள் சாறுள்ள விதைகளையும் உடைய முத்துக்களையும் உடைய முள் உள்ள செடி இனமாகும். ஆனால் இது செடி வகையிலும் சேராமல், மர வகையிலும் சேராமல் நடுத்தர வகையாக வளரக் கூடியது. ஐந்து அடி வரை வளர்கின்றது. இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவக் குணம் உடையவை.

நோயை நீக்கவும், உடலைத் தேற்றவும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யவும் உபயோகப்படுத்தப்படுகின்றது. பழம் மிகவும் குளிர்ச்சியைத் தருகின்றது. இந்தியாவிலும், தமிழகம் எங்கும் பழத்திற்காகவே தோட்டங்கள் வளர்க்கப்படுகின்றன.

வேறு பெயர்கள்: பல சாடவம், பலபூரகம்

ஆங்கிலத்தில் : Punica granetum, Linn; Punicaceze

மருத்துவக் குணங்கள்: மாதுளை பூச்சாறு பதினைந்து மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டு கலந்து இருவேளை தொடர்ந்து குடித்து வர வாந்தி, மயக்கம், உடல் சூடு, மூலக் கடுப்பு, அடிக்கடி மலம் கழிக்கும் உணர்ச்சி, இரத்த மூலம் குணமாகும்.

மாதுளம் பிஞ்சு, கொழுந்து, நாவல் மரப்பட்டை அல்லது நாவல் கொழுந்து வகைக்கு கைப்பிடியளவு எடுத்து அரைத்து சாறு பிழிந்து சங்களவு 48 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர நீரிழிவு இருந்த இடம் தெரியாமல் குணமாகும். இதைத் தொடர்ந்து குடித்து வர, சீதபேதி, இரத்த மூலம், மது மேகம், வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

மாதுளம் பூச்சாறும், அருகம்புல் சாறும் வகைக்கு 10 மில்லியளவு வீதம் எடுத்துக் கலந்து 3 வேளையாகக் குடித்து வர மூக்கில் இருந்து இரத்தம் வடிதல் நிற்கும்.

மாதுளம் பூவை கைப்பிடியளவு எடுத்து அத்துடன் கசகசாவை கொஞ்சம் எடுத்து வறுத்துச் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து அத்துடன் பொடுதலை பூண்டுக்காய் 5-ம், சிறிது நன்னாரி வேர் இரண்டையும் அரைத்து பாக்களவு எடுத்து நன்கு புளித்த மோரில் கலந்து முதலில் உள்ள மாதுளம் பூ விழுதையும் சேர்த்துக் கலக்கி தொடர்ந்து 21 நாட்கள் காலையில் மட்டும் வெறும் வயிற்றில் குடித்துவர நீரிழிவு, சொருக்கு மூத்திரம் குணம் அடையும்.

மாதுளம் பூ உலர்ந்தது 10 கிராம், பட்டை 20 கிராம், 2 டம்ளர் நீரில் போட்டு சிறிது படிகாரம் சேர்த்துக் கொதிக்க வைத்து வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், தொண்டை ரணம், விழுங்க முடியாத வலி குணமாகும்.

மாதுளம் பிஞ்சை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட உடனே பேதி நிற்கும். மாதுளம் பழச்சாற்றை புழு வெட்டு உள்ள இடத்தில் சூடேறத் தேய்க்க 3 நாளில் அரிப்பு நிற்கும். நாளடைவில் அந்த இடத்தில் முடியும் முளைக்கும்.

மாதுளம் பழத்தோலை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து அதேயளவு சுக்கு, மிளகு, சீரகம் பொடி செய்து கலந்து சிறிது நெய் அல்லது வெண்ணையோடு சாப்பிட காய்ச்சல் குணமாகும்.

மாதுளம் வேர்ப்பட்டை, செடிப்பட்டை விதை சம அளவாக எடுத்து இடித்து பொடி செய்து 3 கிராம் எடுத்து 2 வேளை வெந்நீரில் சாப்பிட்டு வர கர்ப்பாயாச நோய் தீர்ந்து பிள்ளைப் பேறு உண்டாகும். மாதுளம் பழச்சாறுடன் சிறிது கற்கண்டு கலந்து குடித்து வர உடல் சூடு தணிந்து குளிர்ச்சியடையும். மாதுளம் பழச்சாறு 100 மில்லியுடன் 20 மில்லி இஞ்சிச்சாறு, 30 மில்லி தேன் கலந்து 2 வேளையாக குடித்து வர ஈளை, இருமல் குணமாகும். மாதுளம் வித்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர மேகக் கடுப்பு நீங்கும்.

Posted in Antioxidants, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Health, Healthcare, Healthy, healthy snacks, Herbs, Madhulai, Madulai, Mathulai, Mooligai, Moolikai, Naturotherapy, Pomegranate, Punica granetum, Punicaceze | 1 Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid swelling in legs

Posted by Snapjudge மேல் மே 31, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் : “கால்’ வீக்கம் முழு நீக்கம்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)

இருதய வியாதிக்குப் பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டவர் என் தம்பி. மேலும் சர்க்கரை வியாதிக்கு இன்சுலின் 2 வேளையும் போட்டுக்கொள்கிறார். இரண்டு பாதங்களிலும் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறது. நடக்கமுடியவில்லை. வயது 72. விரைவில் குணமடைய வைத்திய ஆலோசனை கூறவும்.

என்.ஆர்.சீனுவாசன், பண்ருட்டி.

கால் பகுதியில் சேரும் நீரின் அம்சங்களை ரத்தம் தன் அணுக்களின் சக்தியால் குழாய்களின் மூலம் எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஏற்படும் செயல்களின் தொய்வு இது போன்ற நீர்த்தேக்கத்தை கால்களில் ஏற்படுத்துகிறது. இருதயப் பகுதியில் ஏற்பட்டுள்ள பலவீனம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த செயற்கையான மருந்துகளின் உட்சேர்க்கை போன்றவற்றாலும் திசுக்களின் செயல்பாடுகளின் தொய்விற்கு வழி வகுக்கும்.

தசைகள், வியர்வைக் கோளங்கள், சிறுநீரகம், ரத்தஅணுக்கள், திசுக்கள் போன்ற பகுதிகள் வலுப்பெறும் மருந்துகளால் மட்டுமே உங்கள் தம்பிக்கு கால் வீக்கம் வராமல் பாதுகாக்க முடியும். நெருஞ்சி விதையை 10 கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டிச் சாப்பிட்டால் கால் வீக்கம் வடியும்.

வாழைத் தண்டின் நீரைப் பருக நீர்ச்சுருக்கு, நீர்க்கல்லடைப்பு, சிறுநீரக அழற்சி, எலும்புருக்கி இவற்றில் குணம் கிட்டும். பசளைக் கீரை உணவில் அதிகம் சேர்க்க சிறுநீரை அதிகம் வெளியேறச் செய்யும். மலமிளக்கியாகவும் செயல்படும். பருப்புக் கீரையும் சாப்பிட நல்லது.

பழைய புழுங்கலரிசியை சிறிய அளவில் சாதமாக வடித்து அதில் பயித்தம் பருப்புக் கஞ்சியும், சுக்கு, மிளகு திப்பிலி ஆகியவற்றை வகைக்கு ஒரு கிராம் பொடித்துக் கலந்து, சிறிதளவு இந்துப்பு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நல்ல உணவாகும். மதிய வேளையில் ஒரு கிளாஸ் (250-300 மிலி) கொள்ளு ரசத்துடன், சிட்டிகை திப்பிலி சூரணத்தைக் கலந்து வெதுவெதுப்பாகக் குடிக்கலாம். புளிப்பில்லாத மோர் அருந்த வீக்கம் வடியும். மதிய உணவாக கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட சுக்கா ரொட்டியும் வெந்த காய்களுடன் சாப்பிட நல்லது.

கால் வீங்கியுள்ள பகுதியில் எருக்கு இலை போட்டுக் காய்ச்சிய தண்ணீரை வெதுவெதுப்பாக விடவும். பஞ்சாம்ல தைலம் எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலத்தை காலை மாலை உணவிற்கு முன்பாக கால்களில் வீக்கம் உள்ள பகுதிகளில் தடவி அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊறி அதன் பின்னர் எருக்கு மூலிகைத் தண்ணீரால் கழுவி விடுவதும் நல்லதே.

முருங்கைப் பட்டையைப் பசு மூத்திரத்துடன் அரைத்து வீக்கம் வந்துள்ள பகுதியில் இரவில் பூச, வீக்கம் வலி குறைந்து விடும்.

தவிர்க்கப்பட வேண்டியவற்றில் புலால் உணவு, உலர்ந்த கறிகாய் எனக் கலக்கப்பட்ட சாதம், வெல்லம் கலந்த நீர், மாவுப் பண்டங்களாகிய இட்லி, தோசை போன்றவை, தயிர், அதிக உப்புக் கலந்த பொருட்கள், வெண்ணெய், நெய், புளிப்பான மதுவகை, எண்ணெய்யில் பொரித்தவை, எளிதில் ஜீரணிக்காததும், பழக்கமில்லாததும், நெஞ்செரிவு உண்டாக்கக்கூடியதுமான உணவு, பகல் தூக்கம், பெண் சேர்க்கை ஆகியவை முக்கியமானவை.

ஆயுர்வேத மருந்துகளில் பலாபுனர்நவாதி கஷாயமும், பிருகத்யாதி கஷாயமும், கோகிலாக்ஷம் எனும் கஷாயமும் சிறந்தவை. வகைக்கு 5 மிலி எடுத்து 60 மிலி சூடானதைத் தண்ணீருடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். நல்ல பசியிருந்தால், தசமூலஹரீதகீ லேஹ்யம் ஒரு ஸ்பூன் (5 கிராம்), காலை இரவு -உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிடவும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Foot, Health, Healthcare, insulin, legs, Medicines, Natural, Sugar, surgery, Swaminathan, Swell, swelling | Leave a Comment »

How to ensure quality participation & responsibility from MLAs and MPs?

Posted by Snapjudge மேல் மே 31, 2007

தேவை திரும்ப அழைக்கும் உரிமை!

பி. சக்திவேல்

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய பதவிக் காலத்தில் தவறிழைத்தாலோ அல்லது அவர்களது கடமையில் தவறினாலோ அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி சமீபத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கூறியுள்ளார்.

இது மக்களாட்சி சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று எண்ணுகின்ற அனைவராலும் வரவேற்கக்கூடிய கருத்தாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமையானது ஒரு சில மக்களாட்சியின் சிறப்பு அம்சமாகும். மக்கள் பிரதிநிதிகள் சரிவரச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிரேக்க காலத்திலிருந்து இன்றுவரை பல நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.

நம் நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் வாக்குக் கேட்டு வரும் பிரதிநிதிகளை மீண்டும் அடுத்த தேர்தலில்தான் நம்மால் பார்க்க முடிகிறது!

இந்த ஐந்து ஆண்டுகள் அவர்கள் சரிவரச் செயல்படவில்லை என்றாலும், லஞ்சம் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டாலும் நாம் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைதான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மேலும் நாடாளுமன்ற ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் திரும்ப அழைக்கும் உரிமையானது அவசியமானது. அத்துடன்அத்தியாவசியமான உரிமையும் ஆகும்.

மேலைநாடுகளில் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள சில மாகாணங்களிலும் சுவிட்சர்லாந்து, ஜமைக்கா, வெனிசுலா போன்ற நாடுகளிலும் இந்த உரிமையானது வாக்காளர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

2003-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு மாநில ஆளுநர் சரியாகச் செயல்படவில்லை என்கிற காரணத்திற்காக பதவியிலிருந்து மக்களால் திரும்ப அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்

இந்தியாவில் சமீபகாலமாக இந்தக் கோரிக்கை எழுவதற்கான காரணங்கள்:

நம் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லாதது; இந்த ஆண்டு தொடக்கத்தில் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கியதற்காக 11 எம்.பி.க்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டது; போலி பாஸ்போர்ட் மோசடியில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; அதிக அளவு குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும் சில மாநில சட்டப்பேரவைகளில் இடம்பெற்ற சம்பவங்கள்.

தற்போதைய நாடாளுமன்றத்தில் கிரிமினல் மற்றும் குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 136. இவர்களில் சுமார் 26 பேர் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இந்தச் சூழ்நிலையில்தான் சரிவர செயல்படாத மற்றும் குற்றம்புரிந்த பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையானது மேலும் வலுப்பெற்றுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை நடவடிக்கைகள் 73 மணி நேரம் அலுவல் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. தனிநபர் விமர்சனம் மற்றும் முக்கியமில்லாத பிரச்னைகளுக்காக அமளியை உருவாக்குவதால் மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகள் விவாதிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

பட்டினியை எவ்வாறு நம் நாட்டிலிருந்து நீக்குவது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் மே 5-ஆம் தேதி நடைபெற்றது. ஆரம்பத்தில் 6 உறுப்பினர்களோடு விவாதம் தொடங்கி மொத்தம் 12 உறுப்பினர்களோடு விவாதம் முடிவடைந்தது. இது மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் இரண்டு சதவீதம் மட்டுமே ஆகும். கலந்து கொண்ட உறுப்பினர்களில் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் ஆவர்.

அதேசமயம் மற்ற நேரங்களில் தங்களது கட்சித் தலைவரை கைது செய்தாலோ அல்லது அரசியல் லாபத்திற்காக ஏதேனும் பிரச்னைகளை எழுப்ப வேண்டும் எனில் அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகி விடுகின்றனர்.

எதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தேர்தல் நடத்தி நாம் நம்முடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றோம்? மக்களுக்காக, மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடக்கூடிய உறுப்பினர்கள்தான் இன்றைய காலகட்டத்தில் நமக்குத் தேவை. அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் திரும்ப அழைக்கும் உரிமையானது மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் மூலமாக இந்திய குடிமக்களுக்கு வாக்குரிமையும் அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் சரிவர செயல்படாத மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடிய பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் அதிகாரத்தையும் அடிப்படை உரிமையாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இந்த உரிமை வழங்கப்படுவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் உருவாகும். பிரதிநிதிகள் மக்களுக்குக் கட்டுப்பட்டவராகவும் மக்களுக்குப் பொறுப்பானவர்களாகவும் மாறக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் கண்ணியமும் பாதுகாக்கப்படும்.

இதன் மூலம் மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை மற்றும் அதிக அளவில் பங்கேற்கக்கூடிய நிலை உருவாகும். பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பது நிரந்தரமல்ல; சிறப்பாகச் செயல்பட்டால்தான் பதவியில் நீடிக்க முடியும் என்ற சூழ்நிலையும் உருவாகும். இது நிச்சயமாக இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்தும்; மேலும் வலுப்படுத்தும்.

(கட்டுரையாளர்: இணைப்பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.)

Posted in Assembly, Attendance, Carrot, Corruption, Courts, Criminal, Democracy, discussion, Elections, Fire, Governor, Impeach, Impeachment, Incentives, Judge, Justice, kickbacks, Law, Lok Saba, Lok Sabha, LokSaba, LokSabha, Member, Minister, MLA, MP, Order, Performance, Politics, Polls, Quality, Removal, Representation, Stick, Suspension, Vote, voter | 1 Comment »

Two SC judges differ on courts giving directives to Government

Posted by Snapjudge மேல் மே 30, 2007

மார்க்கண்டேய கட்ஜு, மன்னிக்கவும்!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றில் இரண்டு நீதிபதிகள் இருவேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு நீதிபதிகளுமே அவர்களது அனுபவத்திற்கும், நாணயத்திற்கும், தெளிவான சிந்தனைக்கும் மதிக்கப்படுபவர்கள் என்பதால் அவர்களது தீர்ப்புகளும், கருத்துகளும் ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.

விஷயம் வேறொன்றுமில்லை. அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு அந்த மாநிலத்தில் நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைப்பதைப் பற்றி சில வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது.

  • குறைந்தது ஐந்து நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும்,
  • அந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும்,
  • இதற்கான மாற்றங்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தமாகக் கொண்டுவர வேண்டும்

என்பதும்தான் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு வழங்கியிருந்த வழிகாட்டுதல்கள்.

ஒரு மாநில அரசுக்கும் நிர்வாகத்திற்கும் எப்படி செயல்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது

என்பது உத்தரப் பிரதேச அரசின் வாதம். அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அந்த மாநில அரசு தொடுத்த மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹாவும், மார்க்கண்டேய கட்ஜுவும்.
“”அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு, பொதுமக்களின் அன்றாடப் பிரச்னைக்குத் தீர்வு வழங்குவதற்காக சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் நீதி வழங்கும் அமைப்புகளைப் பாதிக்குமேயானால், உயர் நீதிமன்றங்கள் தலையிட்டு முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள் முறையாகச் செயல்படுகின்றனவா, அரசு நடைமுறைப்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டிய கடமையை அரசியல் சட்டம் நீதிமன்றங்களுக்கு வழங்கி இருக்கிறது” என்பது எஸ்.பி. சின்ஹாவின் அபிப்பிராயம்.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நேர் எதிராக அமைந்திருக்கிறது. “”சட்டப்பேரவை மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகளில் தலையிடும் எண்ண ஓட்டத்தை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் நீதித்துறை சுயகட்டுப்பாட்டுடன் செயல்படுவதுதான் முறையானது.

எந்தவொரு சட்டமும் அரசியல் சட்டத்துக்கு முரணானதாக இருக்குமேயானால் அதை நிராகரிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு நிச்சயமாக உண்டு. ஆனால், சட்டத்தை மாற்றவோ, சட்டப்பேரவைகளின் சான்றாண்மையை விமர்சிக்கவோ நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை” – இதுதான் மார்க்கண்டேய கட்ஜுவின் வாதம்.

மார்க்கண்டேய கட்ஜு கூறியிருக்கும் அத்தனை கருத்துகளுமே ஏற்புடையவைதான். சட்டப்பேரவையும் அரசியல்வாதிகளும் வருங்காலச் சிந்தனையுடன் செயல்படுவார்களேயானால், ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்களாக இருப்பார்களேயானால், ஓட்டு வங்கி அரசியலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாதவர்களாக இருப்பார்களேயானால், மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நூற்றுக்கு நூறு ஏற்புடையது, சரியானதும்கூட.

ஆனால், மக்களின் வெறுப்புக்கும், அவமரியாதைக்கும், கண்டனத்துக்கும் உரிய அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் ஒருபுறம். அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியில் இருப்பவர்களுக்கும் துதிபாடிப் பதவி உயர்வு பெற்று மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் பற்றிக் கவலையேபடாத அதிகார வர்க்கம் இன்னொரு புறம்.

இந்த நிலையில், நீதிமன்றங்களும் நீதிபதிகளும்தான் அரசியல் சட்டத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த இந்தியக் குடியரசையும், சராசரி குடிமகனையும் காப்பாற்ற முடியும் என்கிற நிலைமை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், எஸ்.பி. சின்ஹாவின் கருத்துகள் ஏற்புடையதே தவிர, மார்க்கண்டேய கட்ஜுவினுடையது அல்ல. கட்ஜுவின் வாதம், சராசரி இந்தியக் குடிமகனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத நிர்வாகியின் வாதமாக இருக்கிறதே தவிர, நியாயத்தை சீர்தூக்கிப் பார்க்கும் நீதிபதியின் தீர்ப்பாக இல்லை.

Posted in activism, administrators, Allahabad, Bench, Center, Centre, Citizen, Consumer, Consumer Court, Consumer Protection Act, Consumer Rights, Court, CPA, Customer, directives, domain, Government, Govt, High Court, Judges, Jury, Justice, Katju, Law, Lawsuit, legislators, Legislature, Markandey Katju, Order, Party, Politics, Protection, provisions, rights, S.B. Sinha, SC, Sinha, State, temptation, UP, Uttar Pradesh, verdict | Leave a Comment »

Massacres, Encounters, Jail Deaths, TADA, POTA, Torture killings – TSR Subramanian

Posted by Snapjudge மேல் மே 30, 2007

மோதல்களா, படுகொலைகளா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

குஜராத்தில் நடந்த “”போலி மோதல்” சம்பவம் எல்லோருடைய மனதையும் பாதித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் வேறு சில தலைவர்களையும் தீர்த்துக்கட்ட வந்ததாகக் கூறப்பட்ட “”தீவிரவாதி” சோரபுதீன் என்பவர் போலீஸôருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. சோரபுதீனுடன் அப்போது இருந்த அவருடைய மனைவி கெüசர் பீவி பிறகு காணாமல் போய்விட்டார்; சோரபுதீன் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த மற்றொரு சாட்சி அச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு கொல்லப்பட்டார்.

குஜராத் மாநில அரசின் சி.ஐ.டி. போலீஸôர் இப்போது இச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். முழு உண்மைகளும் இன்னும் தெரியவில்லை. ரத்த வெறிபிடித்த திரைப்பட கதாசிரியர் கூட கற்பனை செய்யத் தயங்கும் ஒரு “”கோரமான கதை” அரங்கேறி முடிந்திருக்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கொலைகாரர்களாக மாறும்போது, சமூகம் தன்னுடைய பாதுகாப்புக்கு யாரை நாடும்?

“”மோதல்கள்”, அதிலும் “”போலி மோதல்கள்” சமீபகாலத்தில்தான் இந்திய சமுதாயத்தில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளை எதற்காகவும் மன்னிக்க முடியாது.

1960-களிலும் 1970-களிலும் மேற்கு வங்க மாநிலத்தில் சித்தார்த்த சங்கர் ராய் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்தான், நக்ஸல்களை வேட்டையாடும் போலி மோதல்கள் ஆரம்பித்தன. சாரு மஜும்தார் என்ற நக்ஸலைட் தலைவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் ஒழிக்க, மேற்கு வங்கப் போலீஸôர் சட்டத்துக்குப் புறம்பான இந்த வழிமுறையைக் கையாண்டனர்.

நக்ஸல்கள் பலர் கொல்லப்பட்டபோதும், நக்ஸல்பாரி இயக்கமும் வளர்ந்தது; நக்ஸல்கள் உருவாகக் காரணம் வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்னை மட்டும் அல்ல. சமூக, பொருளாதார நிலைகளில் மக்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதெல்லாம் இம் மாதிரியான வன்செயல்கள் மக்களிடமிருந்து வெடிக்கும்.

நக்ஸல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தீவிரம் காட்டிய பிறகு, பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஆளுநராக சித்தார்த்த சங்கர் ராய் நியமிக்கப்பட்டார். காவல்துறைத் தலைவராக இருந்த கே.பி.எஸ். கில் அவருடன் சேர்ந்து காலிஸ்தான் தீவிரவாதிகள் பலரை இப்படிப்பட்ட மோதல்களில் வெற்றிகரமாக அழித்தனர். அதே சமயம் இருதரப்பிலும் ஏராளமாக ரத்தம் சிந்த நேர்ந்தது.

அதன் பிறகு இந்த “”மோதல்” முறை ஒழிப்பு, உத்தரப்பிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதியில் கொள்ளைக்காரர்களைத் தீர்த்துக் கட்ட பயன்படுத்தப்பட்டது. இதிலும் ஓரளவுக்குத்தான் வெற்றி கிடைத்தது. உண்மையான வெற்றி எப்போது கிடைத்தது என்றால், கொள்ளைக்காரர்களுக்கென்று உழைத்துப் பிழைக்க அரசே நிலம் கொடுத்தபோதுதான் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தன.

ஆனால் இத்தகைய முறை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலன் தரவில்லை. அங்கு ராணுவம், போலீஸôரின் அடக்குமுறையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராகச் சண்டையிடும் மனோபாவத்திலேயே இருந்தனரே தவிர சமாதான வழிமுறைகளை ஏற்கத் தயாராக இல்லை.

வட இந்திய மாநிலங்களில் சமூக விரோதிகளை ஒடுக்க துணை நிலை ராணுவப் படைகளைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளும் ஜவான்களும் இதே போலி மோதல் முறையைக் கையாண்டனர். அத்துடன் சிறந்த போலீஸ் அதிகாரி என்ற பதக்கத்தையும் பாராட்டையும் வாங்க இந்த மோதல்களை ஒரு கருவியாகவும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

முதலில் சில சமூக விரோதிகள் கொல்லப்பட்டாலும் சில அப்பாவிகளும் தவறுதலாக பலியாக ஆரம்பித்தனர். பிறகு, திட்டமிட்டே “”இந்த மோதல்கள்” மூலம் பலரைக் கொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

போலி மோதல்கள் மூலம் அப்பாவிகள் கொல்லப்படுவது அதிகரித்ததால்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் வட-கிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்புப் படையினர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்தது. இப்போதோ போலி மோதல்கள் என்பது பாதுகாப்புப் படையினருக்கு பணம் கொடுத்தால் நடைபெறும் “”கூலிக்குக் கொலை” என்றாகிவிட்டது. காக்கிச் சீருடையில் இருப்பவர்கள் பண ஆதாயத்துக்காகக் கொல்லும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இங்கே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன. சட்டத்தை மீறுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனே, கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த நீதித்துறை தவறிவிட்டது.

பயங்கரவாதிகளும் கொள்ளைக்காரர்களும் போலீஸôரால் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆவதும் பிறகு தலைமறைவு ஆவதும் பின்னர் அதே குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதும் தொடர்கதையாகிவிட்டதால், இது நேரத்தை விரயமாக்கும் வேலை, நீதித்துறைக்கு முன்பிருந்த தண்டிக்கும் அதிகாரம் போய்விட்டது, இனி நாமே தண்டித்துவிடலாம் என்ற முடிவுக்கு போலீஸôரையும் பாதுகாப்புப் படையினரையும் தள்ளியது.

இத்தகைய போலி மோதல்கள் அதிகரிக்க, இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் நீதிமன்ற நடைமுறைகள் முக்கிய காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நோக்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை அடைவதற்கான நடைமுறையும் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.

பயங்கரவாதிகள், கொள்ளைக்காரர்கள், தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் போன்றவர்களைத் தண்டிப்பதில் நீதித்துறை தவறினாலும் சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளைச் செய்வதில் நியாயமே இல்லை.

சட்டத்தை அமல் செய்ய வேண்டியவர்களுக்கு தரப்படும் அதிகாரம் அல்லது அவர்களே தங்களுக்கு வழங்கிக் கொள்ளும் அதிகாரம், அதிகார துஷ்பிரயோகமாகவே முடியும் என்பதுதான் இயற்கை.

1970-களில் “மிசா’, “காஃபிபோசா’ போன்ற சட்டங்களையும், பின்னாளில் “தடா’ சட்டத்தையும் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தரும் இதைப்போன்ற அதிகாரங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும், மேல் அதிகாரிகளின் கண்காணிப்பும் இருக்க வேண்டும்; இல்லையென்றால் இவை தவறாகவே பயன்படுத்தப்படும்.

சோரபுதீன் விஷயத்தில் அவரைப் போலீஸôர் போலி மோதலில் சுற்றி வளைத்துக் கொன்றுள்ளனர். அவரைப் போலீஸôர் தடுத்து அழைத்துச் சென்றபோது உடன் இருந்த அவருடைய மனைவி கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டார். சோரபுதீனைக் கொன்றதை நேரில் பார்த்த சாட்சியும் கொல்லப்பட்டுவிட்டார்.

இச் சம்பவத்தில் குஜராத் போலீஸôர் மட்டும் சம்பந்தப்படவில்லை, வேறு மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் காவலர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இதே அளவுக்கு இல்லாவிட்டாலும், இத்தகைய போலி மோதல்கள் இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எங்காவது நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் இத்தகைய போலி மோதல்கள் நடைபெறுகின்றன என்றால்கூட அதைப் புரிந்து கொள்ளமுடியும், ஆனால் அவற்றை நியாயப்படுத்திவிட முடியாது. ஆனால் இதை பிற மாநிலங்களில் அரங்கேற்றுவதை சகித்துக் கொள்ளவே முடியாது.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட இச் சூழலில் இதுபோன்ற மோதல் சம்பவங்களையும், படுகொலைகளையும் மக்களும், பத்திரிகைகளும் கண்டுகொள்ளாமல் விடுவது கவலையை அளிக்கிறது. இந்த விசாரணைகளே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரானவை என்று சிலர் நினைப்பது அதைவிட வேதனையாக இருக்கிறது.

சமூகவிரோதிகளை ஒழிக்க புனிதமான நடவடிக்கையாக போலீஸôரால் கருதப்பட்ட இச் செயல் பணத்துக்காகக் கொலை செய்வது என்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. இதை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒழிக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)

Posted in Agitation, Army, Bengal, Blast, Bomb, Bundelkand, Bundelkhand, Cell, Chaaru Majumdar, COFEEPOSA, COFEPOSA, Convict, conviction, Correctional, deaths, defence, Defense, Democracy, Encounter, escape, Federal, Force, Freedom, Govt, Gujarat, Independence, India, Innocent, J&K, Jail, Jammu, Judge, Justice, Kashmir, Khalistan, Khalisthan, killings, KPS Gill, Law, Leninist, Liberation, Majumdar, Majumdhar, massacre, Mazumdar, Mazumdhar, Military, Misa, ML, Modi, Naxal, Naxalbari, Order, Police, POTA, Power, Protest, Punjab, regulations, Shorabudhin, Sidhartha Sankar Roy, Sorabudheen, Sorabudhin, Srinagar, SS Roy, State, Subramanian, Suppression, TADA, terrorist, Thief, Torture, UP, Uttar Pradesh, Victim, WB, West Bengal | 2 Comments »

APJ Abdul Kalam – Why two party system will not work for India? (Op-ed)

Posted by Snapjudge மேல் மே 30, 2007

விபரீத யோசனை

சிப்பாய் புரட்சி ஏற்பட்ட 150-வது ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுப்பிய ஒரு கருத்து, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதில் வியப்பில்லை.

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைப் போல் இந்தியாவிலும் இரண்டு கட்சி ஆட்சி முறை ஏற்படுவது நல்லது என்பதுதான் அவர் கூறியிருக்கும் கருத்து. சாதாரணமாக அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கருத்துக் கூறாமல் இருக்கும் குடியரசுத் தலைவர், தனது பதவிக்காலம் முடிய இருக்கும் நேரத்தில் இப்படியொரு சர்ச்சையைக் கிளப்ப வேண்டிய அவசியம் தான் என்ன?

மேலைநாடுகளைப் பொருத்தவரை, நமது நாட்டில் இருப்பது போல இந்த அளவு

  • சாதி,
  • மத,
  • மொழி,
  • சமுதாய,
  • பொருளாதார ரீதியிலான பிரிவினைகள் கிடையாது. அதுமட்டுமல்ல, ஒரு சிலர் தவிர மற்ற அனைவருமே அடிப்படைக் கல்வி கற்றவர்களாக இருப்பதுடன், பொருளாதார ரீதியில் அடிப்படை வருமானம் உடையவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்தியாவைப் பொருத்தவரை, அத்தனை பிரிவினரின் குரலையும், தேவைகளையும் பிரதிபலிக்கவும், அவர்களது உணர்வுகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவும், தேசியக் கட்சிகளால் இயலாமல் போனதன் விளைவுதான் இத்தனை கட்சிகளும், மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியும்.

ஒட்டுமொத்த தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும்போது சில பல சிறிய பிரிவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போவது சகஜம். பல சந்தர்ப்பங்களில், சில பிரிவினரின் எதிர்ப்பார்ப்புகளும் உணர்வுகளும் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கும் சாத்தியமும் உண்டு. அதன் விளைவுதான் பல்வேறு அரசியல் கட்சிகள். பல கட்சி ஆட்சிமுறையில், குறிப்பாக நாடாளுமன்ற ஆட்சி முறையில் இது தவிர்க்க முடியாத நிர்பந்தம்.

பிரிட்டன் போன்ற மக்கள்தொகை குறைந்த, பொருளாதார மற்றும் கல்வி ரீதியில் வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், அதிபர் முறை ஆட்சி அமைப்புள்ள அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கும் இரு கட்சி ஆட்சிமுறை என்பது இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள, சமுதாய, மொழிவாரிப் பிரிவினைகளை உள்ளடக்கிய நாடுகளுக்குப் பொருந்தாது என்பது அரசியல் நிர்ணய சபை விவாதத்தின்போதே ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்.

இந்த இரு கட்சி ஆட்சி முறையில் இன்னோர் அபாயமும் உண்டு. சுயநல சக்திகள் விரும்பினால் இரண்டு கட்சிகளையும் விலைக்கு வாங்கி ஜனநாயகத்தையே தனது கைக்குள் போட்டுக்கொண்டுவிட முடியும். அதுவும் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்கிற நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தம், இதுபோன்ற விஷம சக்திகளுக்கு இரண்டு கட்சி ஆட்சி முறையில் பூரண சுதந்திரத்தை அளித்துவிடும்.

இந்தியப் பொதுமக்கள் அதிபுத்திசாலிகள். எந்த நேரத்தில் தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் தீர்மானித்துத் தேர்ந்தெடுப்பதில் நமது வாக்காளர்கள் கெட்டிக்காரர்கள். இரண்டு கட்சிக் கூட்டணிக்கு தேசிய அளவில் வழிகோலிய அவர்கள், இரண்டு கட்சி ஆட்சியைப் பல மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளவும் தயங்கவில்லை.

இரண்டு கட்சி ஆட்சி முறை அதுவாகவே உருவாக வேண்டும். உருவாக்கப்படக் கூடாது. அப்படி உருவாக்கப்பட்டால் அது இந்திய ஜனநாயகத்தையும், பொருளாதாரத்தையும், ஒரு சிலரின் கஜானாவிற்குள் அடகு வைத்துவிடும். பல்வேறு பிரிவினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்காத ஜனநாயகமாக இந்தியா மாறிவிடும். அதன் விளைவு பிரிவினைவாதத்திற்கு வழிகோலும். அதனால் வேண்டாமே இப்போது இரண்டு கட்சி ஆட்சி முறை!

Posted in ADMK, APJ Abdul Kalam, Assembly, BJP, BSP, Canada, Caste, Citizen, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Community, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Conservative, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Democracy, Democrats, Dems, Disintegration, DMK, Economy, Election, England, Federal, Foreign, France, Freedom, Globalization, Govt, Identity, Independence, India, Integration, Italy, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, Kalam, Labor, Language, Liberal, LokSaba, Minister, MP, National, Op-Ed, parliament, Party, PM, Politics, Polls, Population, President, Quebec, Region, Religion, Reps, Republic, Republicans, Rule, Sect, SP, Speaker, Tory, UK, USA, Vote | 4 Comments »

Slum Clearance Board housing collapses – Daily Routine of the Poor

Posted by Snapjudge மேல் மே 30, 2007

விழுந்து நொறுங்கும் வீடுகள்: அலறும் குடும்பங்கள்

சென்னை, மே 30: 5-ம் வகுப்பு படிக்கும் மீனா, நண்பர்களுடன் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. சாப்பாட்டில் மண். அலறியடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்தச் சம்பவம் சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேற்கூரை விழுந்து நொறுங்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாகி விட்டது என்பதால் யாரும் அவ்வளவு கவலைப்படவில்லை. காரணம், மேற்கூரை இடிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

6 மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் மாதவராஜ் என்பவர் உயிரிழந்தார்.

“”சென்னையில் குடிசைகளை அகற்றி அப்பகுதியில் குடியிருப்புகளை கட்டும் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது நொச்சிக்குப்பத்தில் தான். 786 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், கடந்த 1972-ல் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கால மாற்றங்களால் தற்போது கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன” என்றார் 75 வயதான ஆர்.எஸ்.மணி.

வசதி படைத்தவர்கள் தங்களின் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொள்கின்றனர்.

“”கடந்த 6 ஆண்டுகளாக எங்களின் வீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. வீடுகளை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டித் தருவதாக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகள் பட்டியலை எடுத்தார்கள். அதன்பின்பு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் ஜெயசீலி.

குடிசைப் பகுதி தடையா? நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை ஒட்டி, நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்போரின் வாரிசுகள், குடிசை வீடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

“”புதிதாக கட்டித் தருவதாக அரசு உறுதி அளித்துள்ள வீடுகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என குடிசைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், அவர்களிடம் ரேஷன் அட்டை உள்ளிட்ட சான்றுகள் இல்லை. இதனால், வருவாய்த் துறை சார்பில் இரண்டு முறை பயனாளிகள் பட்டியல் வெளியிட்ட போதும், அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்” என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சேகர்.

மாற்று இடம் வழங்கப்படவில்லை: “”நொச்சிக்குப்பத்தில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், அங்கு இருப்பவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர்” என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பாரதி.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது,””சேதமடைந்த கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கான வரைபடம் தயாராக உள்ளது. விரைவில் குடியிருப்புகள் கட்டப்படும்” என்றனர். எப்போது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

——————————————————————————————————————-

குறட்டை விடும் குடிசை மாற்று வாரியம்

எம். மார்க் நெல்சன்

Kalainjar DMK Slum Clearance board abuse power Karunanidhi banner

சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள்.

சென்னை, ஜூலை 15: சென்னையில் குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சுவர்கள் வருமானம் ஈட்டித் தருபவையாக மாறி வருகின்றன.

ஆனால், வருமானம் தொடர்பான வரவு -செலவு கணக்குகளைப் பராமரிப்பதில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் இருந்தாலும், கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அங்குள்ள பிளாக் ஹெச்-8 முதல் ஹெச்-15 வரையுள்ள குடியிருப்புச் சுவர்களில் தனியார் விளம்பரங்களும், ஹெச்-5, 6, 7, 16 மற்றும் பிளாக் ஆர் -18, 19 ஆகிய குடியிருப்புச் சுவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களும் இடம்பெற்றுள்ளன.

சுவர் விளம்பரங்களுக்கு ஆண்டுக்கு, சதுர அடிக்கு அதிகபட்சமாக ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விளம்பரப் பலகைகளை வைக்க ஆண்டுக்கு, சதுர அடிக்கு ரூ. 26 வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் அனைத்தும் 1,200 சதுர அடி அளவில் அமைக்கப்படுகின்றன.

இதன்படி, கோட்டூர்புரம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆறு விளம்பரப் பலகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சமும், எட்டு சுவர் விளம்பரங்கள் மூலம் ரூ. 1 லட்சமும் அரசுக்கு வருமானம் வருகிறது.

இதே பகுதியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 60 முதல் 70 வரை வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் 1200 சதுர அடி கொண்ட ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 84 ஆயிரம் வருமானம் தனியாருக்குக் கிடைக்கிறது.

ஆனால், குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

பராமரிக்கப்படாத கணக்குகள்: இந்நிலையில் குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலகக் கணக்குப் பதிவேட்டில் இந்த விளம்பரங்கள் குறித்த சில கணக்குகள் 1-4-2003 வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரக் கட்டணங்கள் வசூலிப்பது, விளம்பரக் காலம் முடிந்ததும், அந்த விளம்பரங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளை கே.கே. நகரில் அமைந்துள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தினரும், எஸ்டேட் அலுவலரும் (ஈ.ஓ.7) செய்து வருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்த கணக்குகளையும், விவரங்களையும் அவர்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு சரிவர தெரிவிக்காததால் கணக்குப் பதிவேட்டில் சரிவர இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதனால் விளம்பரங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறதா அல்லது வசூலிக்கப்படும் பணம் வேறு வகையில் செலவழிக்கப்படுகிறதா என்பது மர்மமாக உள்ளது.

ஆளுங்கட்சி என்பதால்… அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது.

பொன்விழா முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், அந்த இடங்களில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது அதிகாரிகளின் கருத்து.

ஆனால், ஆளுங்கட்சி என்பதால் அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு பயந்து அப்படியே விட்டுவைத்துள்ளனர் அதிகாரிகள்.

ஏற்கெனவே குறைந்த விலைக்கு விளம்பரங்களை வைக்க அனுமதிக்கும் நிலையில், வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு முறையாக பணத்தை வசூலிக்காமலும், வசூலித்த பணத்தை சேர்க்கவேண்டிய இடத்தில் சரிவர சேர்க்காமலும் அரசுக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் இழப்பை ஏற்படுத்துவது ஏன் என்பதுதான் கேள்வி.

Posted in 50, Ad, Advt, Affordability, Area, Banner, Board, Celebrations, City, Civil, Clearance, collapses, Construction, Cost, Daily, Disabled, DMK, Dwelling, Education, eligibility, encroachments, Engineering, Eviction, facilities, facility, Flats, Floods, Free, Functions, Government, Govt, Handicapped, Hoardings, Home, Houses, Housing, Huts, Hygiene, improvement, Income, infrastructure, Issues, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kottoor, Kottur, Kotturpuram, kutcha, Labor, Labour, Lands, Loss, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maintenance, migration, Mu Ka, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, multistorey, Necessity, NGO, Party, Plots, Politics, Poor, Poster, Power, Problems, Rain, Rehabilitation, Rent, revenue, Routine, Rural, sanitation, Santhome, settlements, shelter, Sleep, Slum, Society, Structure, Tenements, TN, TNSCB, TV, unhygienic, Worker, Youth | 1 Comment »

MP3 Audio Books by Kizhakku pathippagam – Introduction for Avid Readers

Posted by Snapjudge மேல் மே 30, 2007

புதிய வாசகர்களை உருவாக்கும் “ஒலிப் புத்தகம்’: படிக்க வேண்டியதில்லை; கேட்டாலே போதும்

கே. வாசுதேவன்

திருநெல்வேலி, மே 30: தமிழகத்தில் தற்போது புதிதாக விற்றுவரும் ஒலிப் புத்தகம் (ஆடியோ புக்) புதிய புத்தக வாசகர்களை உருவாக்கி வருகிறது.

கேட்டாலே போதும், புத்தகத்தை வாசித்த திருப்தி கிடைப்பதாக அதன் வாசகர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய அவசர உலகில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. பள்ளி – கல்லூரிகளில் பயிலும்போது மட்டுமே இளைய சந்ததியினர் பாடம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிக்கின்றனர்.

இவற்றைத் தவிர்த்துப் பிற புத்தகங்களை அவர்கள் படிப்பது மிகவும் அரிதாகிவிட்டதால், வரலாறு, கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு, கலைகள் போன்றவை பற்றிய அறிவு இன்றைய இளைஞர்களிடம் எதிர்பார்க்க முடியாதாகிவிட்டது.

10 ஆண்களுக்கு முன்வரை புத்தக வாசிப்பு, விளையாட்டு ஆகியவை மட்டுமே பொழுதுபோக்கு. இன்று அப்படியில்லை டி.வி., இன்டர்நெட், இ மெயில், திரைப்படம் எனப் பல.

படிக்கும் ஆர்வம் குறைவு: அனைத்தும் வணிக நோக்கில் செயல்படும் சூழ்நிலையில், புத்தகம் படிக்கும் ஆவல் குறைகிறது.

மேலும், தேவையான தகவல்களை உடனுக்குடன் இன்டர்நெட், இ மெயில் போன்றவற்றின் மூலம் பெற்றுவிடுவதால் புத்தக வாசிப்பும் விற்பனையும் குறைந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் வாசகர்களைக் கவர புதிய யுக்திகளைப் புத்தகப் பதிப்பாளர்கள் புகுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் புதிய யுக்தியில், ஒரு புத்தகத்தில் உள்ள அனைத்தையும் ஒலிப் புத்தகமாக -“எம்பி3′ குறுந்தகடுகளாக இந்தப் பதிப்பகங்கள் வெளியிடுகின்றன.

இந்த ஒலிப் புத்தகத்தில் மெல்லிய பின்னணி இசையுடன், வசீகரமான குரலுடனும் புத்தகம் சிறிது தணிக்கை செய்யப்பட்டு வாசிக்கப்படுகிறது.

அதாவது நாம் ஒரு புத்தகத்தை படிக்காமலேயே, அந்த புத்தகத்தில் உள்ளது பற்றி முழுமையாகக் கேட்க முடிகிறது.

மேலும், புத்தகத்தின் விலையை ஒப்பிடும்போது, இதன் விலை மிகவும் குறைவாகவே உள்ளது.

புத்தகத்தில் நாள்கணக்கில் வாசித்து தெரிந்துகொள்ளும் விஷயத்தை, சில மணி நேரங்களிலேயே ஒலிப் புத்தகங்கள் மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

புத்தகத்தை வாசிப்பதற்கு என்று சில சூழ்நிலைகள் நமக்கு கிடைத்தால் மட்டுமே, அதை முழுமையாக வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்த ஒலிப் புத்தகத்தை கேட்கும் வசதிகள் மட்டும் நம்மிடம் இருந்தால் போதும், எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

இதுவரை பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள், ஆன்மிக உரைகள் ஆகியவற்றை மட்டுமே ஒலியின் வடிவில் கேட்டு வந்த மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்.

Posted in Audio, Biography, Books, Chokkan, Commerce, Digital, Disabled, Download, Hear, Internet, Introduction, Kilakku, Kizakku, Kizhakku, Media, MP3, padhippagam, padhippakam, pathippagam, pathippakam, Publishers, Read, Readers, Tamil Book, Venture, Voice | 5 Comments »

Chikun Kunya attacks Kerala – 62 ill

Posted by Snapjudge மேல் மே 30, 2007

கேரளத்தில் 62 பேருக்கு சிக்குன் குன்யா

திருவனந்தபுரம், மே 30: கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 62 பேர் சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் 5 உறுப்பினர்கள் குழுவுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் பி.கே. ஸ்ரீமதி இது குறித்து கூறியது:

சிக்குன் குன்யா நோய்க்கு எவரும் பலியாகவில்லை. பதனம்திட்டா மாவட்டம் சித்தூரில் அதிக அளவாக 49 பேர் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடுக்கி, கோட்டயம், பாலக்காடு, திருச்சூர், ஆலப்புழை மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களிலும் இந்நோய் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.

—————————————————————————————————————–

தமிழகத்தில் மீண்டும் சிக்குன் குனியா?

சென்னை, ஜூன். 3: தமிழகத்தில் சிக்குன் குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சனிக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது:

கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த மாவட்டங்களில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. சித்த மருந்துகளும் இப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் ராமச்சந்திரன்.

——————————————————————————-

கேரளாவில் சிக்குன்குனியாவால் சாவு எண்ணிக்கை 70-ஐ தாண்டியது

திருவனந்தபுரம், ஜுன்.12-

கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் சிக்குன் குனியா வைரஸ் காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோட்டயம், பத்தினம்திட்டை, இடுக்கி, ஆலப்புழை, கொல்லம் ஆகிய மாவட்டங் களில் தான் சிக்குன்குனியா தாக்கம் அதிகமாக உள்ளது.

இம்மாவட்டங்களில் மட்டும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் 10, 319 பேரும், இடுக்கி ஆஸ்பத்திரியில் 3073 பேரும், ஆலப்புழை மாவட்டத்தில் 1515 பேரும் சிகிச்சை பெற்றனர். இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிக்குன்குனியாவுக்கு பலி யானோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. நேற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குட்டப்பன் (வயது56), அன்னம்மா (59), வேலாயுதன் (67), அய்யப்பன் (60), தோமஸ் (76), லீலா (56), பொன்னன்குட்டி (78) ஆகிய 7 பேர் பலியாகி உள்ளனர்.

இதன் மூலம் சாவு எண்ணிக்கை 70-ஐ தாண்டியது.

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வந்த திருவனந்தபுரம் வெம்பாயம் பகுதியை சேர்ந்த அனில்குமார் என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். இவருக்கும் உஷாகுமாரி என்ற மனைவியும், ஆதிரா, அஞ்சு, ஆரியா என்ற 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

அனில்குமாரின் உடலை பார்த்து அவரது மனைவி உஷாகுமாரி மற்றும் 3 குழந்தைகளும் கதறி அழுதது நெஞ்சை உறுக்குவதாக இருந்தது. இனிமேல் இந்த 3 குழந்தைகளும் நான் எப்படி காப்பாற்றுவேன் என உஷாகுமாரி கதறி அழுதார்.

சிக்குன்குனியா காய்ச்சலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ராணுவ டாக்டர்கள் முகாம் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கோட்டயம், திருவனந்தபுரம் அம்பூரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ராணுவ டாக்டர்கள் அமைத்துள்ள தற்காலிக முகாமில் தினமும் ஆயிரக்கணக் காணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Posted in Alapula, Alapuza, Alapuzha, Chicken, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chicken pox, Chickenkunya, Chickenpox, chickun gunya, Chikan Kunya, Chiken Gunya, chiken kunya, Chikun Gunya, Chikun kanya, Chikun Kunya, Chikungunya, Chikunkunya, Chithoor, Chithur, Chitore, CPI, dead, Disease, DMK, Kerala, KKSSR, Kollam, Kottayam, Outbreak, Palacaud, Palaghat, Palakode, Quilon, Sathoor, Sathur, Thrichoor, Thrichur, TN, Trichoor, Trichur | 4 Comments »

S Gurumurthy – Why only Hindu Gods are subjected to vulgarity in Arts?

Posted by Snapjudge மேல் மே 28, 2007

ஹிந்து தெய்வங்கள் மட்டும் ஆபாசகலைக்கு இலக்காவது ஏன்?

எஸ். குருமூர்த்தி

பிள்ளையார் சுழி போடுவதுபோல தொடக்கத்திலேயே எல்லோருக்கும் ஓர் எச்சரிக்கை.

எதை எழுதினாலோ, பார்த்தாலோ நாகரிகமானவர்கள் ஆபாசமாகக் கருதுவார்களோ அதைப் புனிதம் என்று மதச்சார்பற்றவர்கள் என்று தங்களைப் பறைசாற்றிக் கொள்பவர்கள் அடித்துக் கூறுவதால், அந்த ஆபாசத்தை வெளிப்படையாக எழுதித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்தக் கட்டுரை.

இங்கு சித்திரிக்கப்பட்டிருக்கும் ஆபாசத்துக்கு மன்னிப்புக் கோரி… பிரச்னையின் மையம் இதோ. ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட காட்சியை ஓர் ஓவியர் வரைந்தால் அது எப்படி இருக்கும்? அவருடைய கைகள் சிலுவையின் இருபக்கமும், கால்கள் சிலுவையின் அடிபாகத்திலும் வைத்து ஆணி அடிக்கப்பட்டு அவரது உடலிலிருந்து ரத்தம் சிந்துவதும்தானே அந்தச் சித்திரத்தின் மையம்.

ஆனால் இப்போதைய நவீன ஓவியர்கள் இந்த மையக் காட்சியை அரைகுறை ஓவியமாகவே கருதுகிறார்கள். மேலும் தங்களுடைய கற்பனையினால் எப்படி ஏசுவை சிலுவையில் அறைந்து சித்திரத்தை முழுமையான கலைச்சின்னமாக்குகிறார்கள் பாருங்கள்.

சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் துயிலுரியப்பட்டு – ஆம் நம்புங்கள்! முழு நிர்வாணமாகச் சித்திரிக்கப்பட்டு – அவருடைய ஆண்குறியிலிருந்து விந்துகள் சிந்தி ஆச்சரியப்படாதீர்கள், அதோடு மட்டும் நிற்கவில்லை – அந்த விந்து துளிகள் அந்தச் சிலுவைக்குக் கீழே வைக்கப்பட்டிருக்கும் மேற்கத்திய பாணி டாய்லெட் ஓட்டையில் விழுவதுபோலவும், அந்த டாய்லெட் அடியில் மீன்கள் இருப்பதுபோலவும், அந்த மீன்கள் அந்த விந்துகளை விழுங்குவதுபோலவும்… வக்கிரமான கற்பனையின் உச்சாணிக்குச் சென்று ஆபாசத்தைக் கலையாக்கிச் சித்திரித்து சிலுவையில் ஏசுநாதர் அறையப்பட்ட “அரைகுறை’ ஓவியத்தை முழுமையாக்குவதுதான் நவீன ஓவியம் (ம்ர்க்ங்ழ்ய் ஹழ்ற்). நம்புங்கள்; இது கற்பனையல்ல. இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த விஷயம். இது நடந்தது குஜராத்தில். ஆனால் செய்தது நரேந்திர மோடி அல்ல. அவர் இந்தக் கேவலத்தைத் தடுக்கத்தான் செய்தார். ஆனால் இதைத்தான் அற்புதமான ஓவியம்; அந்த ஓவியரின் சுதந்திரம் புனிதமானது என்று கூறுகிறார்கள் மதச்சார்பற்ற அறிவு ஜீவிகளில் சிலரும், பத்திரிகையாளர்களில் பலரும்.

இத்தோடு முடியவில்லை இந்த வக்கிரம்; இது ஓர் ஆரம்பம்தான். மேலும் பாருங்கள்; ஒரு பெரிய ஓவியத்தில் முழு நிர்வாணமான ஒரு பெண்.

இது அந்த ஓவியத்தின் முன்னுரை, முடிவல்ல. அந்தப் பெண்ணின் கர்ப்பப் பையிலிருந்து ஒரு சிசு துடித்து வெளியில் வர முயற்சி செய்வதுபோல அமைகிறது அந்த ஓவியத்தின் அருவருப்பான அடுத்தகட்டம். இப்போதும் முழுமையடையவில்லை அந்த ஓவியரின் அந்தப் படைப்பு. கடைசியில நிர்வாணமாக எல்லோரும் பார்க்கும்படி குழந்தை பெறும் அந்தப் பெண் “துர்க்கை அம்மன்’ என்று எழுதி அந்த ஓவியத்தை முடிக்கிறார் அந்த ஓவியர். அப்படி அநாகரிகமாக சித்திரிக்கப்பட்ட பெண்தான் துர்க்கை!

இந்த இரண்டு கீழ்த்தரமான ஓவியங்கள் மட்டுமல்ல; சிவ பெருமான் மற்றும் விஷ்ணுபகவான் போன்று ஹிந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் இதுபோலவே வக்கிரமாகச் சித்திரிக்கப்பட்டு அந்த ஓவியங்கள் குஜராத்தில் பரோடா மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இந்த அநாகரிகமான ஓவியக் கண்காட்சியை பொதுமக்கள் ஆட்சேபித்தனர்; ஆர்ப்பாட்டமும் செய்தனர்; போலீஸôரிடம் புகார் செய்தனர்; அதன்மேல் போலீஸôர் நடவடிக்கையும் எடுத்து அந்த ஓவியரைக் கைதும் செய்தனர்.

போலீஸ் நடவடிக்கை எடுத்த அடுத்த நிமிஷம் நாடு முழுதும் மதச்சார்பற்ற அறிவுஜீவிகளும் மற்றவர்களும் ஒட்டுமொத்தமாக ஆங்கிலப் பத்திரிகைகளும் குஜராத் முதல்வர் நரேந்தி மோடியைக் குறி வைத்து தாக்க ஆரம்பித்தனர். அவர் சட்டாம்பிள்ளையாக நடந்து கொள்வதாகவும் கலைஞர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

“சுதந்திரமில்லையென்றால், கலைக்கு உயிரில்லை’ என்றெல்லாம் கோஷம் எழுப்பினார்கள் மும்பையிலும் தில்லியிலும்.

ஆனால் அப்படி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தாங்கள் எந்தவிதமான ஓவியக்கலையையும், எந்த ரகமான ஓவியங்களையும் பாதுகாக்க போராடுகிறோம் என்பதைக் கூறவும் இல்லை; அவர்களை யாரும் எதற்காகப் போராடுகிறீர்கள் என்று கேட்கவும் இல்லை. தைரியமிருந்தால் அவர்கள் எந்தவிதமான சித்திரங்களை வரையும் உரிமைக்காகப் போராடுகிறோம் என்று வெளிப்படையாகக் கூறியிருக்க வேண்டும்.

வக்கிரமாகச் சித்திரிக்கப்பட்ட ஏசுநாதர் ஓவியத்தையும், பெண்ணை கீழ்த்தரமாக்கி துர்க்கை என்று எழுதப்பட்ட அந்த ஓவியத்தையும் மக்கள் முன்னால் வைத்து “”இந்த ஓவியங்களை வரைந்து காட்சிக்கு வைத்தால் என்ன தவறு?” என்று நாணயமாக மக்களைக் கேட்டிருக்க வேண்டும் அவர்கள்.

ஆனால் அப்படிச் செய்ய அவர்களுக்குத் துணிவு கிடையாது. அவர்கள் அப்படிச் செய்தால், பரோடாவில் நியாயமாகத்தான் பொதுமக்கள் கொதித்தெழுந்தனர் என்கிற “குட்டு’ வெளியாகிவிடுமே! என்ன கலை என்பதை மறைத்து எல்லா பத்திரிகைகளும் “கலை சுதந்திரம் பறிபோகிறது’ என்று ஒப்பாரி வைத்தன.

ஆனால் எந்த மாதிரி கலை, எந்த மாதிரி படங்கள் பரோடாவில் காட்சிக்கு வைக்கப்பட்டன என்பதை எந்தப் பத்திரிகையும் நாணயமாக வெளியிடவில்லை. காரணம் ஆபாசத்தை எப்படி வெளியிடுவது என்பதுதான். பின் எப்படி ஆபாசம் கலையாக முடியும்? அதுமட்டுமல்ல; பரோடாவில் ஓவியக் கண்காட்சி நடத்துபவர்களுக்கு எதிராகப் புகார் கொடுத்தது ஏசுநாதரை அப்படி கீழ்த்தரமாகச் சித்திரித்ததால் மனம் புண்பட்ட ஒரு கிறிஸ்தவர். இந்த உண்மைகளைக் கூட வெளியிடாமல், ஹிந்து வெறியர்கள் கண்காட்சியை எதிர்க்கின்றனர் என்று கூசாமல் பொய் கூறின பத்திரிகைகள்! இன்று வரை உண்மையை எழுதவில்லை எந்தப் பத்திரிகையும்.

ஹிந்துக்கள் வழிபடும் ஆண் தெய்வங்களையும் பெண் தெய்வங்களையும் ஆபாசமாகச் சித்திரிப்பதையே தங்கள் கொள்கையாகக் கொண்ட ஓவியர்கள் பலர் நம் நாட்டில் இருக்கின்றனர். இவர்களில் தலைசிறந்து விளங்குபவர், பலராலும் பாராட்டப்படுகிற எம்.எஃப். உசேன்தான்.

ஹிந்துக்களின் எல்லா தெய்வங்களை – ஏன் எல்லோருக்கும் பொதுவான, பாரதியார் போற்றிய பாரத அன்னையையும்கூட துயிலுரிந்து, நிர்வாணமாகச் சித்திரித்த அற்புதமான கலைஞர் அவர். பதிவிரதையான சீதை நிர்வாணமாக பிரம்மசாரியான அனுமனின் வாலின் நுனியில் அமர்ந்திருப்பதுபோல ஓவியம் தீட்டினார் இந்த பிருகஸ்பதி!

“ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ என்பதுபோல ஏன் இப்படி ஹிந்து தெய்வங்களை மட்டும் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் சித்திரித்து ஓவியம் தீட்டுகிறார்கள் இவர்கள்? இந்தக் கேள்விக்குப் பதில் எல்லோருக்கும் புரிந்ததே.

ஹிந்து தெய்வங்களை எப்படிக் கேவலமாகச் சித்திரித்தாலும் அதைத் தட்டிக் கேட்கவோ, அதற்காகக் கோபப்பட்டு வெகுண்டு எழுந்து பஸ்களைக் கொளுத்துவோர் அப்படிச் செய்கிறவர்களை தீர்த்துக் கட்ட உத்தரவிட்டு மதக்கட்டளை பிறப்பிக்கவோ ஹிந்து மதத்தில் வழியில்லை. வேறுமத நம்பிக்கையை இப்படி ஆபாசமாக்க முடியுமா? மற்ற மதத்தினரிடம் இப்படி விளையாடிப் பாருங்கள் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தோ அல்லது சங்கராச்சாரியர்களோ சவால் விடவில்லை. இப்படிக் கூறியது தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி கபூர்.

2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆபாசமான படங்களை வரைந்ததற்காக ஓவியர் உசேனுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதியளித்தது, உசேன் மனுவைத் தள்ளுபடி செய்து வழங்கிய தீர்ப்பில் கூறுகிறார் நீதிபதி கபூர்.

கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் தெய்வங்களைக் கேவலப்படுத்தினால் அதனால் அந்த மக்களுடைய மதஉணர்வுகள் புண்படுகின்றன. அதுமட்டுமல்ல; மதங்களுக்கிடையே நிலவி வரும் நல்லுறவுகளையும் அது பாதிக்கிறது. அதுபோன்ற சித்திரங்களை கலையென்று சிலர் கூறினாலும் வழிபடப்படும் தெய்வங்களை நிர்வாணமாக்கிச் சித்திரிப்பதால், அது மதநம்பிக்கை உள்ள மக்களின் மனத்தை வேண்டுமென்றே புண்படுத்தும் செயல் என்பதை மறக்க முடியாது. கலை சுதந்திரம் என்கிற போர்வையில் மதஉணர்வுகளை நோக அடிக்கும் செயல்களை அனுமதிக்க முடியாது. இது வேற்றுமதத்தைச் சேர்ந்த மனுதாரராருக்கு (உசேன்) இன்னும் நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும்.

தெய்வங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எவ்வளவு ஆழமானது என்பதை (உசேன்) மனுதாரர் சோதித்துப் பார்க்க வேண்டுமென்றால், அவர் சார்ந்த மதக் கடவுளையோ அல்லது வேறு மதத் தெய்வங்களையோ இதுபோன்ற கலைக்கண்ணோட்டத்தோடு வரைந்து தன் கைவரிசையை காட்டிப் பார்க்கட்டும்”. இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

நீதிபதி கபூர் கூறியுள்ளதுபோல, மதச்சார்பற்ற அறிவுஜீவிகளும் பத்திரிகையாளர்களும் உசேன் போன்றவர்கள் ஹிந்து அல்லாத மற்ற மததெய்வங்களிடத்திலும் தங்கள் கைவரிசையைக் காட்ட வேண்டும் என்று கூறுவார்களா? அவர்கள் ஏன் கூறுவார்கள்? நீதிபதி கபூர் கொடுத்த தீர்ப்பையை அவர்கள் பிரசுரிக்கவில்லையே!


RaayarKaapiKlub : Message: cultural policingnagarajan63இன்றைய திணமணி நாளிதழில் திரு எஸ்.குருமூர்த்தியின் “ஹிந்து தெய்வங்கள் மட்டும் ஆபாசக் கலைக்கு இலக்காவது ஏன்?” என்னும் தலைப்பில் வந்துள்ள கட்டுரையை படிக்க நேர்ந்தது. அண்மையில் குஜராத் மாகாணத்தில் வதோதரா நகரில் அமைந்திருக்கும் ஓவியக் கல்லூரியில் நிகழ்ந்தவற்றையும் அதன் தொடர்பான சலசலப்பையும் அது பற்றி ஊடகங்களிலும், ஆங்கில தினசரிகளிலும் விவரமான விவாதங்களை பாராதவரோ படிக்காதவரோ இருக்க மாட்டார்கள்.அக்கட்டுரை சார்ந்த பல செய்திகள் அவர் நிலைகொண்டுள்ள இயக்கத்தின் சார்புடையதாக உள்ளது. ஒரு நாணயத்துக்கு இருபக்கங்கள் உண்டு. அதன் ஒரு பக்கம் அவர் கட்டுரை. படிப்பவருக்கு ஒரு எச்சரிக்கையுடன் தமது நீண்ட கட்டுரையை “எதை எழுதினாலோ, பார்த்தாலோ நாகரீகமானவர்கள் ஆபாசமாகக் கருதுவார்களோ, அதைப் புனிதம் என்று மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை பறைசாற்றிக் கொள்பவர்கள் அடித்துக் கூறுவதால், அந்த ஆபாசத்தை வெளிப்படையாக எழுதித் தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக் கிறது” என்று துவக்கியுள்ளார்.கட்டுரையை பலமுறை படித்தபின் அது சார்ந்த என் எதிர் வினைகளை பதிவு செய்கிறேன் ஒரு ஓவியனாக.கட்டுரையாளர் தாம் ஆபாசம் என்று கருதும் ஓவியங்கள் பற்றி நுணுக்கம் மிகுந்த விவரங்களுடன் அதன் பிரச்சனையை அணுகுகிறார். நிகழ்ந்தவற்றை நான் இங்கு திரும்பக் கூற விழையவில்லை. அந்த ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டவையல்ல. அந்த ஓவிய மாணவரின் செயல்முறை தேர்வுக்கானவை. கல்லூரி வளாகத்தில் அத்துமீறி ஒரு கும்பல் நுழைந்து வன் முறையில் ஈடுபட்டது. காவல்துறையில் அந்த மாணவரை கைது செய்வதும் நடந்தது. அதை நியாயப்படுத்துவதும் தொடர்கிறது.அவர் ஆபாசம் என்று விவரிக்கும் ஓவியங்களின் வரிசையில் மாமல்ல புரத்தில் வீற்றிருக்கும் இலட்சுமி (ஆடையின்றி), க்ருஷ்ணர் கோபியர்களின் சீலைகளை திருடும் காட்சி ஓவியமாக்கப்பட்ட விதம், ஜெயதேவரின் ‘கீதகோவிந்தம்’ கவிதை ஓவியங்கள், குஜராத் மாநிலத்தில் இன்றளவும் பரவலாகப் பின்பற்றப்படும் வழிபாட்டில்
“லஜ்ஜா தேவி” சிலை அமைக்கப் பட்டிருக்கும் விதம், தாந்திரிக வழிபாட்டில் சிவன் மேல் காளி அமைந்திருக்கும் கோலம், தாண்டவமாடும் நடராஜரின் சிலை (உருவத்தில் குறி சிதைக்கப் பட்டிருக்கும்) போன்ற சிலவற்றையும் நான் சேர்க்க விரும்புகிறேன். அவையெல்லாமும் ஹிந்து கடவுளர், தேவியர்கள்தான். இது போன்ற எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் கிடைக்கும். அவையும் ஆபாசம்தானா? வக்கர மனத்தின் வெளிப்படுதானா? “ஆபாசம் எப்படி கலையாகமுடியும்” என்னும் கேள்வி எழுப்பும் கட்டுரையாளர் அவற்றை மீண்டும் ஒருமுறை பார்க்கட்டும்.

இந்த வகையில் ஓவியர் ஹுசைன்தான் இந்த வகை சிந்தனையாளர்களுக்கு ‘மெல்லக் கிடைத்த அவல்.’ மாமல்லபுரத்தில் உள்ள பெரும்பாலான சிற்பங்கள் உடையின்றித்தான் உள்ளன. இந்தியாவின் எண்ணற்ற கோயில்களிலும் உடையில்லாத கடவுளர் சிலைகளும் ஓவியங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றையெல்லாம் ஆபாசத்துடன் சேர்த்துவிடலாமா? அவற்றுக் கெல்லாம் உடை உடுத்திவிடலாமா? அல்லது தீயிட்டுக் கொளுத்திவிடலாமா?

ஜெர்மனி, ருஷ்யா போன்ற மேலை நாடுகளில் யதேச்சாதிகாரம் கோலோச்சிய போது அரசு, ஒரு கலைஞன் எதை படைப்புக்கருவாக கொள்ள வேண்டும் என்னும் திட்டத்தையும் செயற்படுத்தியது என்பது வரலாறு கூறும் உண்மை. அதன் காரணமாக, ஓவியர்கள் வேறு நாடுகளுக்கு ஓடியதும் உண்மை. கட்டுரை ஆசிரியர் இங்கும் -அதாவது பாரதத்திலும்- அதை நடைமுறைபடுத்த விரும்புகிறாரா?

ஊடகங்களின் மூலம் வீட்டினுள் வன்முறையும், ஆபாசமும், தங்கு தடையின்றி நுழைந்து அவர் குறிப்பிடும் கலாசாரத்தையும் சமுதாயக் கட்டுப் பாட்டையும் நாசமாக்கிக் கொண்டுள்ளனவே! அங்கெல்லாம் அவர்கள் கண்கள் மூடிக்கொண்டு விடுமா?

படைப்பாளிகளின் படைப்பு சுதந்திரம் என்பது சுய கட்டுப்பாடுகளுடன் தான் இயங்குகிறது. படைப்பை விமர்சிப்பது படைப்பளியின் வளர்ச்சிக்கு உதவும். படைப்பாளியை வன்முறையாக விமர்சிப்பது என்பது நாகரீகமான வழியல்ல. எல்லாவற்றையும் அரசியலுக்குள் இழுத்துச்செல்வது ஆபத்தான எதிர் காலத்திற்கு இட்டுச்செல்லும். ஆனால் விதிவசமாக அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அந்தக்கல்லூரியில் பல ஆண்டுகளாக குழுச்சண்டை நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதையும், இந்த சலசலப்பும் அதன் விளைவுதான் என்பதையும் ஒரு செய்தியாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

nagarajan63

————————————————————————————————

Some Blogger Feedbacks (if anything is missing, please leave a comment)

சந்திப்பு:
குருமூர்த்தியின் கவலை இந்துக்களின் கவலையா?


அரவிந்தன் நீலகண்டன்:
அகப்பயணம்: இந்துத்துவமும் கலை சுதந்திரமும்

————————————————————————————————-

நிர்வாணமாக சீதை நிர்வாண ராவணன் மடியில்
Naked Lord Hanuman and Goddess Sita
This picture shows a naked Lord Hanuman attacking a naked demon king Ravana while Goddess Sita is sitting naked on Lord Ravana’s thigh. Goddess Sita is the epitome of chastity and is role model for women the world over.

நிர்வாண சீதை அனுமானின் வாலை தன் கால்கள் இரண்டின் நடுவில் வைத்திருக்கும் காட்சி
Naked Goddess Sita sitting on the tail of Naked Lord Hanuman
According to the Indian History, Goddess Sita or Lord Hanuman has never been shown in the Naked form. Goddess Sita has never been rescued by Lord Hanuman. Over here Husain is interfering with the cultural principles. Not only this, he is trying to devise new imaginative indecent pictures of the manifest forms of God who are respected by millions of Hindus. Showing the use of the tail of Lord Hanuman for such an act has crossed all the limitations of indecency.

நிர்வாண அனுமான் முன் நிர்வாண பெண்

சிவன் பார்த்திருக்க பார்வதியை பின்புறமாக புணரும் நந்தி முன்புறமாக பார்வதியின் பிறப்புறுப்பை நக்கும் குழந்தை
A bull having sexual intercourse with Goddess Parvati and Lord Shiva watching on the auspicious day of Shivratri
Lord Shiva is the Principle of Absolute Knowledge and the principle of Destruction in the Universe.

புலியை புணரும் துர்கா

யானை மீது நிர்வாண துர்கா

நிர்வாண சரஸ்வதி : பிறப்புறுப்பை மறைக்கும் வீணை

அதே நேரம் ஹுசைன் தன் அன்னை, மகள் மற்றும் முகமது நபியின் மகள் பாத்திமா ஆகியோரை வரைந்துள்ள ஓவியங்கள்:


Posted in Artist, Arts, Buddhism, Christ, Christianity, Community, Culture, Dinamani, Exposure, expression, Female, Feminism, Freedom, Girl, Glamor, Glamour, Gods, Gurumoorthi, Gurumoorthy, Gurumurthi, Gurumurthy, Hindu, Hinduism, Hindutva, Humanity, Hussain, Hussein, Independence, Intolerance, Islam, Jesus, Lady, Media, MF Hussain, Muslim, Objectification, Obscene, Obscenity, Op-Ed, Opinions, Painter, Paintings, Portrayal, Propaganda, Religion, RSS, Sculpture, Thoughts, Tolerance, vulgarity, Women | 9 Comments »

DMK Government’s One year Completion – Analysis of woes & achievements: Election, Politics, manifesto

Posted by Snapjudge மேல் மே 28, 2007

சாதனைகளும் வேதனைகளும்

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக அரசு ஒரே ஆண்டில் நிறைவேற்றிவிட்டது என்று முதல்வர் கருணாநிதி சமீபத்தில் பேசி இருப்பது சற்றே வியப்பையும் திகைப்பையும் ஏற்படுத்துகிறது.

கடந்த ஓர் ஆண்டில் எட்டுத் தொழில் நிறுவனங்களுடன் சுமார் 6985 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகள் தொடங்கத் தமிழக அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக தொழில்துறையின் குறிப்பு தெரிவிக்கிறது. இந்த முதலீட்டின் கணிசமான பகுதி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் தொழிலுக்குரியது என்கிறது அந்தக் குறிப்பு. இதன் மூலம் 37,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் சுமார் 60,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்பது அரசின் எதிர்பார்ப்பு.

கடந்த ஓர் ஆண்டில் தமிழகத்தை நோக்கி முதலீட்டாளர்கள் படையெடுத்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. சொல்லப்போனால், தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியில் தமிழகம் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது என்பதையும் ஒத்துக்கொண்டே தீர வேண்டும். இந்த விஷயத்தில் அரசின் பங்கு கணிசமானது என்பதையும் மறுப்பதற்கில்லை.

அதேநேரத்தில், ஆட்சிக்கு வந்த புதிதில் தொழிற்சாலைகளை நிறுவுவதிலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும் அரசு காட்டிய முனைப்பு இப்போது காணப்படவில்லை. இரண்டு ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறோம் என்று சொல்லி சந்தோஷப்படும் அரசு, வெளிமார்க்கெட்டில் அரிசி விலை தாறுமாறாக ஏறி இருப்பதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இரண்டு ரூபாய் அரிசி என்று விளம்பரப்படுத்தி, முதல் இரண்டு மாதங்களுக்கு முறையாக விநியோகமும் நடந்தது. இப்போது பல ரேஷன் கடைகளில் அரிசி ஸ்டாக் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. ரேஷன் அரிசி கள்ளமார்க்கெட்டில் விற்கப்படுகிறது என்கிற முணுமுணுப்பு தெருவெல்லாம் கேட்கிறது. ஆனால் அரசின் காதுக்கு மட்டும் கேட்கவில்லை. சராசரி பொதுமக்களின் பார்வையில் ஒரு நல்லரசு என்பது விலைவாசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு. எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய சாதனை என்று அவரது ஆதரவாளர்கள் இப்போதும் சொல்வது, அவரது பதிமூன்று வருடகால ஆட்சியில் அரிசி விலை ஏறவே இல்லை என்பதைத்தான்.

ரேஷன் கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை என்கிற அறிவிப்பு மத்தியதர வகுப்பினருக்கும் அரசு அலுவலர்களுக்கும் பெரிய அளவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்பது அரசுக்கு ஏனோ தெரியவில்லை. இந்த அறிவிப்புகள் மூலம் பலர் இரண்டு ரூபாய் அரிசியையும், மற்ற ரேஷன் பொருள்களையும் வாங்க முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அது கள்ளச்சந்தையில் ரேஷன் பொருள்கள் விற்கப்பட வழிகோலும் என்று மக்கள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

அதேபோல, அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுத்தும் எரிச்சலும் ஆத்திரமும் கொஞ்ச நஞ்சமல்ல. கடந்த அதிமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து மின்வெட்டு இருக்கவில்லை என்று நினைவுகூறாதவர்கள் குறைவு.

புதிய பஸ்கள் பல அறிமுகப்படுத்தப்படுகின்றன என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் அந்த சொகுசு பஸ்களில் அநியாயக் கட்டணம் என்று மனம் நொந்து சபித்தபடி பிரயாணம் செய்பவர்களே அதிகம். போக்குவரத்துத் துறையின் வருமான அதிகரிப்புக்காகக் குறைந்த கட்டண பஸ் சர்வீஸ்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது மக்களுக்குப் புரியாமல் இல்லை.

சாதனைகளைப் பட்டியலிடுவதிலும், வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று மார்தட்டிக் கொள்வதிலும், பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கின்றன என்று புள்ளிவிவரங்களை அடுக்குவதிலும் ஓர் அரசின் பணி முடிந்துவிடுவதில்லை. சராசரி மனிதனின் அடிப்படைத் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொண்ட அரசாகவும் அந்த அரசு செயல்பட வேண்டும்.

அப்படிப் பார்த்தால், ஓர் ஆண்டு சாதனைகளைப் பாராட்டவிடாமல் தடுக்கின்றன சராசரி மனிதன் படும் வேதனைகள்!

Posted in Achievement, Analysis, Bus, Business, Coop, Defaltion, DMK, Economy, Elections, Employment, Finance, Govt, Inflation, investments, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Manifesto, markets, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Op-Ed, Politics, Polls, Prices, promises, Ration, Recession, solutions, Stagflation, Tamil Nadu, TamilNadu, TN, Transport, TUCS, TV, voter | Leave a Comment »