Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Attack’ Category

Tamil Tiger chief says peace with Sri Lanka govt impossible – Air force bombs LTTE radio

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

Maaveerar Day – LTTE: Happy Birthday Prabhakaran & Heroes’ Day

விடுதலைப் புலிகளின் வானொலி நிலயம் தாக்கப்பட்டது-பலர் பலி

புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்
சில மாதங்களுக்கு முன்னர் தாக்கப்பட்ட புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்திர மாவீர்கள் தின உரையை நிகழ்த்தவிருந்த நிலையில், அவர்களின் முக்கிய வானொலி நிலையத்தை இலங்கை அரசின் விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் என்றாலும் , அது பிரபாகரன் அவர்களின் உரை ஒலிபரப்பாவதை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்றைய தனது மாவீர் தின உரையில், இலங்கை அரசுடன் சமாதான வழிமுறைகள் சாத்தியமில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கை அரசு இனப்படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர், சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அளித்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


சர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமது அமைப்பின் மாவீரர் தின உரையின் போது, சர்வதேச சமூகத்தின் மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் தமது அமைப்பு முப்படையாக விரிந்து நிற்பது குறித்த பெருமிதம் ஆகியவற்றுடன் தனது உரையை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், அதில், சர்வதேச நாடுகள் மீதும் இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் மீதும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீதும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஆராயும் அனைத்துக் கட்சிக் குழு ஆகியவற்றின் மீது தனது அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக விபரித்த பிரபாகரன் அவர்கள், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீதான தாக்குதல், இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி என்று வர்ணித்தார்.

ஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் ஆதிக்க வெறியோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், உலக கவனத்தை திசை திருப்பவே அரசு அனைத்துக் கட்சிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.

அதேவேளை, தமிழர் பிரச்சினையை நீதியான வகையில் தீர்த்து வைக்கும் அரசியல் நேர்மையும், உறுதிப்பாடும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் கட்சியிடமும் கிடையாது என்றும் பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

கிழக்குத் திமோர் மற்றும் மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் தீர சர்வதேச சமூகம் ஆதரவும் அனுசரணையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரபாகரன், ஆயினும், தமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

இலங்கை அரசின் போக்கை சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வனின் மரணம் இடம்பெற்றிருக்காது என்று கூறிய பிரபாகரன், இணைத்தலைமை நாடுகளும் சமாதானத்துக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியா முன்னர் விட்ட தவறையே சர்வதேச நாடுகள் தற்போது விட்டு நிற்கின்றன என்றும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.

தமது அமைப்பு இழந்துவிட்ட இறையாண்மைக்காகவும், சுதந்திர தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் போராடுவதாகக் கூறிய அவர், தமது மக்கள் அல்லல் பட்ட வேளைகளில் உலகம் கண்ணை மூடி நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஆகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கேட்டுக்கொண்டுள்ளார்.


வட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி

கிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்
கிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தின வாரத்தின் இறுதி நாளாகிய இன்று அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முக்கியத்துவம் மிக்க தனது கொள்கை விளக்க உரையை ஆற்றுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் வானொலியாகிய புலிகளின் குரல் நிலையக் கட்டிடத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழி குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்

புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் 5 ஊழியர்களும், அந்த நிலையத்தின் அயலில் உள்ள வீடுகளில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் 4 பேருமே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுமி என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலின் போது விமானப்படையினர் பத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை அடுத்தடுத்து வீசி வானொலி நிலையத்தைத் தரைமட்டமாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் குரல் வானொலி நிலையம் அரச படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலில் பெரும் சேதமடைந்துள்ள போதிலும் அதன் ஒலிபரப்ப்பு வழமைபோல இடம்பெற்றது என்பதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உரையும் அந்த வானொலியில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒலிபரப்பாகியுள்ளது.

கிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சியில் இருந்து மேற்குத் திசையில் 25 கிலோ மீற்றர் தொலைவில் துணுக்காய் – கொக்காவில் வீதியில் மல்லாவி – ஐயங்கேணி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அரச படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 9 மாணவிகளும், அம்புலன்ஸ் வண்டியின் சாரதியும் மற்றும் ஒருவருமே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு மாணவிகள் காயமடைந்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலில் தமக்குத் தொடர்பில்லை என்று இராணுவத்தினர் மறுத்துள்ளனர்.


Posted in Air Force, Airforce, Arms, Attack, Bombs, Communications, dead, Eelam, Eezham, infrastructure, Kilinochi, Kosovo, LTTE, Military, mines, montenegró, Norway, Peace, Prabaharan, Prabakaran, Prabakharan, Radio, Sri lanka, Srilanka, Tigers, Timor, War, Weapons, World | Leave a Comment »

Masked men burn ‘Anti government’ Sunday Leader newspaper office – Military Aided Press Attack?

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2007

 

எரிக்கப்பட்ட பத்திரிகை அச்சகம்
எரிக்கப்பட்ட பத்திரிகை அச்சகம்

இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டுவரும் இந்த பத்திரிகை நிறுவனத்திலிருந்து சண்டே லீடர், மோர்னிங் லீடர் மற்றும் இரிதா பெரமுன என்ற சிங்களமொழி வார இதழ்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான பத்திரிகையாகப் பரவலாகக் கருத்தப்படும் இந்தப் பத்திரிகை நிறுவனத்துக்குள், இன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் சுமார் 15 பேர், அங்கு அச்சிடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்களை உட்கார்ந்து இருக்கும்படி உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்த அச்சிடும் இயந்திரங்களுக்கும், ஏற்கனவே இன்றைய வெளியீட்டிற்காக அச்சிடப்பட்டிருந்த மோர்னிங் லீடர் பத்திரிகை இதழ்களுக்கும் பெற்ரோல் ஊற்றி எரியூட்டியதாக அந்த நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.

அத்துடன் இந்த சம்பவம் மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இரத்மலானை விமானப்படைத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள அலுவலக வளவினுள்ளேயே இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இதுவரை எவரையும் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்ததாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட இதேமாதிரியானதொரு சம்பவம் இந்த நிறுவனத்துக்கு, இதே இடத்தில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


ஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு

அகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம்
அகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்.

அண்மையில் தமது பகுதிகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே தாம் இவ்வாறு மீண்டும் இடம்பெயர நேர்ந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர்.

ஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்களை மீண்டும் முகாம்களில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவை குறித்து இடம்பெயர்ந்த சிலரது கருத்துக்கள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கருத்துக்கள் அடங்கலான செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன்
வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன்

வவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

இந்த இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையின்போது, அவர்களது உறவினர்கள், இராணுவத்தினர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று மாலை 6 மணியளவில் வேப்பங்குளம் இராணுவ முகாமில் தன்னை இராணுவத்தினர் வைத்திருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்ததாக இறந்தவரின் மனைவி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

மேலும் 3 இளைஞர்களை இராணுவத்தினர் குறிப்பிட்ட இராணுவ முகாமினுள் சம்பவ தினத்தன்று கொண்டு சென்றதைக் கண்டவர்கள் மூலமாகத் தாங்கள் அறிந்ததாகவும் இறந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பின்னணியில் வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 15 இராணுவத்தினரின் துப்பாக்கிகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

ஐந்து இளைஞர்களும் சடலங்களாகக் காணப்பட்ட இடத்திலிருந்து பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ள 16 வெற்றுத் தோட்டாக்களும், இந்த துப்பாக்கிகளுடன் ஒத்து இணங்குகின்றனவா என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மாவட்ட நீதிபதி, இன்றைய வழக்கு விசாரணையின்போது, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக இரத்துச் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான தனியார் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகிய திலீபனின் உருவச்சிலை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தவேளை, திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்பன கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.


Posted in Airforce, Arms, Asia Tribune, Attack, Blasts, Bombs, Burnt, Colombo, dead, Death, Deface, defence, Defense, Democracy, Dhileepan, Displaced, Editor, Eelam, Eezham, equipment, Extremism, Extremists, Fire, Freedom, Govt, HSZ, IDP, Independence, Irudina, Jaffna, Journal, journalism, journalist, Karuna, Lasantha, Law, Leader, LTTE, Mag, magazine, Magazines, Magz, Media, Military, Morning Leader, News, Newspaper, Office, Opposition, Oppression, Order, owner, paramilitary, Passport, Pillaiaan, Pillaian, Pillaiyaan, Pillaiyan, Police, Press, Propaganda, Rajapaksa, Rajapakse, Rajasingam, Rajasingham, Rajasinkam, Ransack, Rathmalana, Ratmalana, Rebel, Refugees, Reporter, Samarasinghe, Security, Sinhala, Sonali, Statue, Sunday, Sunday Leader, Suppression, Terrorism, terrorist, Terrorists, Thamilselvan, Thileepan, Triconamalee, triconmalee, Vavuniya, wavuniya, Weapons, Wikramatunga | Leave a Comment »

Political Leader of Tamil Tigers Brig. SP Tamilselvan killed in Sri Lanka Air Force aerial bombardment

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2007

“யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியாகச் செயல்பட்டவர்! ‘

சென்னை, நவ. 2: இலங்கை விமானப்படைத் தாக்குதலில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண மாவட்ட சிறப்புத் தளபதியாகச் செயல்பட்டவர்.

1984-ல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழ்ச்செல்வன், படிப்படியாக பல்வேறு உயர்ந்த பொறுப்புகளை வகித்தவர்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4வது பயிற்சி முகாமில் அவர் பயிற்சிப் பெற்று, புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நெருக்கமாக பணியாற்றினார்.

1986-ல் பிரபாகரன் தமிழகம் வந்து செல்வதற்கு தமிழ்ச்செல்வன் முக்கியப் பங்காற்றினார். அப்போது விடுதலைப் புலிகள் மத்தியில் அவருடைய பெயர் தினேஷ்.

1987 மே மாதம் யாழ்ப்பாணம், தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 1991 வரை அப்பதவியில் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

1991-ல் யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியாக செயல்பட்டார். இலங்கை ராணுவத்துக்கு எதிராக விமான, கடல்வெளி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

மன்னார் சிலாபத்துறை ராணுவத்தளம் மீதான தாக்குதலுக்கு தளபதியாக செயல்பட்டார். பூநகரி ராணுவ முகாம் மீதான தாக்குதலின்போது தனது காலை இழந்தார்.

தென்மராட்சிப் பகுதி மீட்புத் தாக்குதலில் கட்டளைத் தளபதியாக பங்காற்றினார்.

1992-ல் “பலவேகய-2′ சண்டையில் தலைமை வகித்து இலங்கை ராணுவத்தை எதிர்த்து சண்டையிட்டது, தச்சன்காடு ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது, காரைநகரில் இலங்கைப் படையினர் மீதான தாக்குதல் ஆகியவற்றில் தலைமையேற்று பணியாற்றினார்.

1993-ல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையைப் பெற்று சாகும்வரை அப்பதவியில் இருந்தார்.

1994-95ல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தலைமை தாங்கினார்.

2002-ல் நார்வே பேச்சுவார்த்தைக் குழுவில், ஆன்டன் பாலசிங்கத்துடன் இணைந்து பணியாற்றினார். பாலசிங்கம் மறைவுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப் பணியை செய்துவந்தார்.

தாயகத்திலும், தமிழகத்திலும் அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.


தமிழ்ச்செல்வன் மறைவு: நவ. 5 வரை தமிழீழ தேசிய துக்க நாளாக புலிகள் பிரகடனம்
கொழும்பு, நவ. 2: தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவையடுத்து நவம்பர் 5-ம் தேதி வரை தேசியத் துக்க நாளாக விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்து வவுனியாவிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியிட்ட செய்தி:தமிழ்ச்செல்வன் மறைவினால் தமிழீழ தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். வன்னிப் பகுதி முழுவதும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் மக்கள் கறுப்பு-சிவப்பு-மஞ்சள் கொடிகளை தங்கள் வீடுகளில் கட்டிவருகின்றனர் என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்: சு.ப.தமிழ்ச்செல்வனின் மரணச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழத் தேசத்தின் விடுதலைக்கு மேலும் மிக உயர்ந்த தியாகம் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ச்செல்வனின் இந்த அளப்பரிய தியாகத்தினால் இன்னும் ஆயிரமாயிரம் தமிழ்ச்செல்வன்கள் உருவாகுவார்கள். தமிழீழ விடுதலைக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொள்வார்கள் என்பது உறுதி என்றார்.


“உலகத் தமிழினத்துக்கே இழப்பு’சென்னை, நவ. 2: விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனின் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.தமிழ்ச் செல்வனின் மரணம் உலகத் தமிழர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவருடைய இழப்பு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி உலகத் தமிழினத்துக்கே நேர்ந்த மாபெரும் இழப்பாகும்.சமாதானத்தையும் அமைதியையும் விரும்பும் சர்வதேச சமூகம் தமிழ்ச் செல்வன் இழப்பால் மிகுந்த வேதனைப்படும். ஈழச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு இறுதியானது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்.

அத்தகைய அரசியல் தெளிவும், போர்க்குணமும் கொண்ட தமிழ்ச் செல்வன் சிங்கள இனவெறிக் கும்பலின் ராணுவ வெறியாட்டத்தில் பலியாகி இருப்பது வேதனைக்குரியது.


“அதிர்ச்சியில் உள்ளம் உறைந்தது’சென்னை, நவ. 2: விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் சுப. தமிழ்ச் செல்வன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் சுப. தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்தது உள்ளம்.

தமிழ் ஈழ மக்களின் உரிமைக்காக தாய் மண்ணின் விடுதலைக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துப் பணியாற்றி வந்த தமிழ்ச் செல்வன் ராணுவத்தோடு ஈழத்தின் விடுதலைப் போரில் பல போர்க்களங்களில் மரணத்தை எதிர்கொண்டு போராடி உள்ளார்.

1993 முதல் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவராகச் செயல்பட்டார். அரசியல் பிரிவுக்குத் தலைமை ஏற்று நார்வே அரசு முன்னின்று நடத்திய பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து பங்கு ஏற்று வந்தார். இலங்கையிலும் அயல் நாடுகளிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் பங்கேற்றார்.


தமிழ்ச்செல்வன் படுகொலை: பழ. நெடுமாறன் இரங்கல்சென்னை, நவ. 2: விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப்படை குண்டு வீச்சில் உயிரிழந்ததற்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்ச்செல்வன் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கடந்த 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கையைப் பெற்றவர் அவர். பல்வேறு களங்களில் தலைமை தாங்கி போராடியவர்.

சந்திரிகா அரசு இருந்தபோது நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் பின்னர், நார்வேயின் முயற்சியால் நடைபெற்ற அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் புலிகளின் பிரதிநிதியாக கலந்துகொண்டவர்.

இளம் வயதில் சர்வதேச ராஜதந்திர அரசியலில் சிறந்து விளங்கியவர். புலிகளின் சார்பில் சமரச பேச்சுகளுக்கு தலைமை தாங்கிய தளபதியை குறிவைத்து குண்டு வீசி படுகொலை செய்ததன் மூலம் இனி சமரசப் பேச்சுக்களுக்கு சிங்கள அரசு தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்திவிட்டது.

மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு இணங்க, மறைந்த தமிழ்ச்செல்வன் சிந்திய ரத்தத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றி விடுதலைப் போரை தொடர்ந்து நடத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.

மறைந்த தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகமெங்கும் கூட்டங்களை நடத்தும்படி அனைத்து தமிழ்த் தேசிய அமைப்புகளையும் வேண்டிக்கொள்கிறேன்.


சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவுகள்…பா. கிருஷ்ணன்
சென்னை, நவ. 2: கிளிநொச்சியில் வெள்ளிக்கிழமை காலையில் இலங்கை விமானப் படையின் தாக்குதலில் உயிரிழந்த சு.ப. தமிழ்ச்செல்வன் நிதானமாகப் பேசும் திறனுள்ளவர். இதனால், நார்வே தூதுக் குழுவினரும், இலங்கை அரசு தரப்பினரும்கூட அவரிடம் மிகுந்த நட்பு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.2002-ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதைலப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட பிறகு, கிளிநொச்சியில் 2002 மே மாதம் அவருடன் 3 நாள்கள் தங்கியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அவரை நாங்கள் சந்தித்த அதே நேரத்தில் சுமார் 15 சிங்கள பத்திரிகையாளர்கள் அவரைச் சந்தித்தனர். அதில் பங்கேற்க பிரத்யேக அழைப்பு விடுத்தார் தமிழ்ச்செல்வன்.

அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேட்டி கண்டனர். அங்கே “சைலன்ட் ஸ்பெக்டேடராக’ அனுமதிக்கப்பட்டபோதும், “”நீங்களும் இப்பேட்டியின் கருத்துகளைப் பதிவு செய்து கொள்ளுங்கள்” என்றார் தமிழ்ச்செல்வன்.

“”ஆயுதத் தரகர்களே இந்தப் போரை நீடிக்க விரும்புகிறார்கள். உண்மையில் நாங்கள் சிங்களர்களுடன் சமாதானமாக வாழ விரும்புகிறோம். மக்களைச் சமாதானத்துக்குத் தயாராக்கி வருகிறோம்” என்றார்.

பிறகு சுமார் அரை மணி நேரம் பிரத்யேக பேட்டி காண நேர்ந்தது. பிறகு, தமிழ்ச்செல்வனிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, மக்களின் அல்லல்களைப் பற்றியே அவரது பேச்சு அமைந்திருந்தது. இந்தியாவைப் போன்ற அதிகாரங்கள் கொண்ட தனி மாநிலம் கூட அமைந்தால் ஏற்கத் தயார் என்ற ரீதியில் அவர் பேசினார். முதல் வேலையாக தமிழீழத்தின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது என்றார்.

“”எல்லாவற்றுக்கும் இந்தியாவைத்தான் நாங்கள் பெரிதும் நம்பியிருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகத்தில் காலையில் விவசாயிகள், வியாபாரிகள், வயதானோர் என்று ஏராளமானோர் மனுக்களைக் கொண்டுவருவர். அவற்றைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்குத் தேவையானவற்றுக்கு ஏற்பாடு செய்வார். அவர்களில் பெரும்பாலானோர் தங்களது மகன்களைப் போரில் பலிகொடுத்தவர்களாக இருப்பர். சிலரை அழைத்து பேசுவதும் உண்டு.

கிளிநொச்சியில் இரவு தங்கியிருக்க ஏற்பாடு செய்தார். ஒரு ஏசி காரையும் கொடுத்து, வன்னிப் பகுதியில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்தார். அதையடுத்த தினம் யாழ்ப்பாணம் வரை சென்று கிளிநொச்சிக்குத் திரும்பியபோது, கொழும்பு திரும்புவதற்கு டூரிஸ்ட் பஸ்ஸில் ஏற்றி வழியனுப்பச் செய்தார் தமிழ்ச்செல்வன்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த தமிழ்ச்செல்வன் ஒரு கால் ஊனமடைந்தவர். நிதானமான நடப்பது மட்டுமின்றி, நிதானமாகப் பேசுவதும் அவரது பழக்கம். இலங்கையில் அனைத்து தரப்பு பத்திரிகையாளர்களுடனும் நட்பு கொண்டிருந்தார். போட்டி போராளிக் குழுக்களில் கூட அவருக்கு விரோதிகள் இல்லை என்றே சொல்லலாம். புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த ஆன்டன் பாலசிங்கம் மறைந்த வெற்றிடத்தை எளிதாக நிரப்பிய பெருமை தமிழ்ச்செல்வனுக்கு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் “பாலா’ உடல் நலம் குன்றியிருந்தபோது, நார்வே முன் முயற்சியால் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டிருக்கிறார்.

“பாலா’ மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை குறுகிய காலத்தில் இட்டு நிரப்பிவிட்டார் தமிழ்ச்செல்வன். ஆனால், அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை புலிகள் எப்படி நிரப்பப் போகிறார்கள்?


விமானப் படை குண்டுவீச்சில் புலிகள் உயர் தலைவர் பலிகொழும்பு, நவ. 2: இலங்கை விமானப் படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்.இலங்கையில் வடக்குப் பகுதியில் உள்ள கிளிநொச்சியில், விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் திரண்டிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அப்பகுதியில் இலங்கை விமானப் படையினர் குண்டுவீசினர்.இத்தாக்குதலில் “பிரிகேடியர்’ என்று அன்பாக அழைக்கப்படும் சு.ப.தமிழ்ச்செல்வன், லெப்டினன்ட் கர்னல் அன்புமணி (எ) அலெக்ஸ், மேஜர் மிகுதன், கேப்டன் நேதாஜி, லெப்டினன்ட் ஆட்சிவேல், லெப்டினன்ட் வாகைக்குமரன் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த செய்தியைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக செயலர் சோ.சீரனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் மறைவுக்குப் பிறகு விடுதலைப் புலிகளின் அரசியல்துறையின் முக்கியப் பொறுப்பை சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றுக்கொண்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அடுத்த முக்கியப் பொறுப்பில் தமிழ்ச்செல்வன் இருந்தார். பிரபாகரனின் வலதுகரமாகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர்.

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகள் சார்பாகத் தமிழ்ச்செல்வன் பங்கேற்றார்.

அரசியல்துறைக்கு வருவதற்கு முன், விடுதலைப் புலிகளின் ராணுவத்தில் முக்கியப் பொறுப்பை வகித்துவந்தார். குறிப்பாக இந்திய அமைதிக் காப்புப் படை இலங்கை சென்றிருந்தபோது, விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவராக தமிழ்ச்செல்வன் இருந்தார்.

இலங்கையில் சாவகச்சேரியில் பிறந்த தமிழ்ச்செல்வன், கொழும்பில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்துக்குப் பிறகு 1984-ல் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்தார். அவருடைய மனைவியும் புலிகளின் மகளிர் படைப் பிரிவில் வடக்கு யாழ்ப்பாண நகரின் தளபதியாக இருந்தவர்.

பூநகரியில் நடந்த சண்டையில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வன் ஒரு காலை இழந்தார்.

2001ல் இலங்கை ராணுவம் திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பினார் தமிழ்ச்செல்வன்.

இலங்கை ராணுவம் யாழ்ப்பாணம் நகரை கைப்பற்றியதற்கு பிறகுதான் புலிகள் அமைப்பில் தமிழ்ச்செல்வனின் செல்வாக்கு ஓங்கியது.

அமைதிப் பேச்சில்… ஆன்டன் பாலசிங்கம் நோய்வாய்ப்பட்டிருந்தபோது நார்வே அமைதிப் பேச்சில் தமிழ்ச்செல்வன் பங்கேற்றார். அதேபோல் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தமிழ்ச்செல்வன் பங்கேற்றார்.

விமானப்படை தாக்குதல்

வடகிழக்கு இலங்கையில் புலிகளைக் குறிவைத்து இலங்கை விமானப் படை கடந்த திங்கள்கிழமை முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை முல்லைத்தீவு அருகே விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவினரின் முக்கிய இடமான புதுக்குடியிருப்பு பகுதியில் இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர்.

அதன் பிறகு கொக்குதொடுவாயில் வியாழக்கிழமை அதிகாலை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் புலிகளின் பயிற்சி முகாம் கடும் சேதமடைந்தது.

33 புலிகள் சாவு: இலங்கையில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களில் நடந்த தாக்குதலில் விடுதலைப் புலிகள் 33 பேர் கொல்லப்பட்டனர்.


கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வனின் இறுதி ஊர்வலம்; ஏராளமானோர் அஞ்சலி

இலங்கை அரச விமானப்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியாகிய விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இறுதிக்கிரியைகள் இன்று திங்கட்கிழமை மாலை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்றதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

காலை முதல் பிற்பகல்வரை நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் , விடுதலைப் புலிகளின் காவல்துறை பொறுப்பாளரும் புதிய அரசியல்துறை பொறுப்பாளருமாகிய பா.நடேசன், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் வே.பாலகுமார், முக்கிய தளபதிகள், உறுப்பினர்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், அரச, அரசு சார்பற்ற நிறுவன அதிகாரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தியுள்ளனர்.

அஞ்சலி நிகழ்வையடுத்து கிளிநொச்சி நகரப்பகுதியில் இருந்து பாடசாலை மாணவர்களின் அணியிசையுடன் தமிழ்ச்செல்வனின் உடல் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்ச்செல்வனின் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றவேளை, கிளிநொச்சி நகரப்பிரதேச வான்பரப்பில் இலங்கை அரச விமானப்படையின் வேவு விமானம் வட்டமடித்து நோட்டம் விட்டதாகக் கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தமிழ்ச்செல்வனின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காகக் கிளிநொச்சிக்குச் சென்ற தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதகுருமார்கள் ஓமந்தை சோதனைச்சாவடியில் கெடுபிடிகளுக்கு உள்ளாகியதன் பின்னரே தமது பிரயாணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி இன்று நண்பகலின் பின்னர் மூடப்பட்டிருந்ததனால், தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கிளிநொச்சியிலிருந்து ஓமந்தை வரையில் வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல நேரிட்டதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெறிச்சோடிக்கிடக்கும் வவுனியா வீதி

இதேவேளை, மறைந்த தமிழ்ச்செல்வனின் இறுதிக்கிரியைகளையொட்டி, இன்று வவுனியா மன்னார் மாவட்டங்களில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னாரில் காலையில் மூடப்பட்ட கடைகள் பின்னர் படையினரின் உத்தரவுக்கமைய திறக்கப்பட்டதாகவம் தகவல்கள் கூறுகின்றன.

வவுனியாவில் கடைகள், அரச தனியார் அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள் என்பன மூடிக்கிடந்தன. போக்குவரத்துக்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நடைபெற்றன. படையினரும் பொலிசாரும் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர் சந்தேகத்திற்கிடமானர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் இயல்பு நிலை காணப்பட்டபோதிலும், இனந்தெரியாத ஒரு சோகம் காணப்பட்டதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் பல்கலைக்கழகத்தைச் சூழ்ந்த பகுதிகளில் பெருமளவு இராணுவத்தினர் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


தமிழ்ச்செல்வன் இரங்கல் – தமிழ்நாட்டில் சர்ச்சை

விடுதலைப் புலிகள் இயககத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ தமிழ் நாளேடான ஜனசக்தி தனது தலையங்கத்தில், புன்னகை மாறாத முகப்பொலிவைப் பெற்றிருந்த தமிழ்ச்செல்வன் கொலைசெய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் மிகுந்த வேதனையை அளித்திருககிறது என்று கூறியிருக்கிறது.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதி தமிழ்செல்வனுககாக எழுதிய இரங்கல்கவிதை கருணாநிதிககும் விடுதலைப்புலிகளுக்குமிடையே இருக்கும் ரகசியத் தொடர்பினைத்தான் வெளிப்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டி, எனவே திமுக அரசு கலைககப்படவண்டும் எனக் கோரி அறிககை வெளியிட்டிருந்தார்.

ஜெயலலிதாவின் கண்டனங்களுகு பதில்தெரிவித்த முதல்வர் கருணாநிதி, ஒருவர் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது ஓர் அடிப்படை மனிதநேயப் பண்பாடென்று கூறினார்.

இதனிடையே மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஜி.கே.வாசன் காங்கிரஸ் ராஜீவ் கொலையை மறக்கவும் இல்லை, அவரது கொலையாளிகளை மன்னிககவும் இல்லை எனக் கூறியிருககிறார்.

தமிழ்செல்வனுககு இரங்கல் தெரிவித்து சுவரொட்டிகள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருககின்றனவே என செய்தியாளர்கள் கேட்டபோது, இது குறித்து தங்கள் வேதனையினை கட்சியின் தலைமைக்கு தெரிவிக்க இருப்பதாகக் கூறினார்.


மாவீரர்கள், Heroes: 1967 – 2.11.2007

Direct Report of personal incidents from a close LTTE associate in Eezham :: பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் – : “கே.பி.அறிவன்”

Global Voices Online » Sri Lanka: Death of LTTE’s Thamilselvan

எண்ணங்கள்: தமிழ்ச்செல்வனின் கொலையும் ஈழத்தின் எதிர்காலமும்

க(வெ)ண் புறாவும் களவாணிப் பயல்களுமான கூத்தமைப்பு, மற்றும் தமிழ்நாட்டு தன்மானங் கெட்டவனுகளுக்கும்… (வாசகர் ஆக்கம்)

REPORTER

Nitharsanam.Net » Blog Archive » புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மரணம் குறித்தும் அது தொடர்பானதுமான: விரிவான செய்திகள் (புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது)

பன்னாட்டு சமூகங்களின் விடுதலைப்புலிகளுடனான தொடர்பாடலுக்குரிய முதன்மைப் பிரதிநிதி தமிழ்ச்செல்வன்: ஜோன் ஹன்சன் பௌவர்

சு.ப.தமிழ்ச்செல்வன் இலக்கானாரா?

குண்டுமணி: தமிழ்செல்வன் படுகொலை பழிவாங்கல் அல்ல. சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கம்.

ஈழம் செய்திகள்: சர்வகளப் போராளி தமிழ்ச்செல்வன் – இதயச்சந்திரன்

பனிமலர்: வீரவணக்கம் தமிழ்ச்செல�

தோழர் பெரியார்: உயிர்நடுங்கும் – வேண்டுகோள்கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி

கவியரங்கம் உங்களை வரவேற்கிறது…: ஏய் பகையே… அடாது செய்தாய்!

சுந்தரவடிவேல்: இலங்கை அரசு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறதா?

JVP Janatha Vimukthi Peramuna
JHU Jathika Hela Urumaya

SLFP Sri Lanka Freedom Party
UNP United National Party

UPF Upcountry People’s Front
CWC Ceylon Workers Congress

Political Leader of Tamil Tigers Brig. SP Tamilselvan killed in Sri Lanka Air Force aerial bombardment « Tamil News

சசியின் டைரி: தமிழ்ச்செல்வனின்

தமிழ் குரல்: கலைஞர் இரங்கல்

“சாத்தான்”குளத்து வேதம்: தமிழ்ச்செல்வனோடு சில நிமிடங்கள்

கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: ‘தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. -தமிழ்ச்செல்வனின் இறுதி உரை

IdlyVadai – இட்லிவடை: தமிழ்ச்செல்வன் மரண�

கதம்பம்: ஹே ராம் சிங்கள ரத்னா !

செய்தி அலசல்: தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது: வே.பிரபாகரன்

எனக்குள் உலகம்: சு. ப. தமிழ்ச்செல�

குண்டுமணி: தமிழ்செல்வனைக் கொல்ல பாவிக்கப்பட்டது thermobaric குண்டு..?!

மானாவளை: பிரிகேடியர் தமிழ்ச்செ�

சு.ப.தமிழ்ச்செல்வன் பற்றி …………. «

குறிஞ்சிமலர்: தமிழ்செல்வன் மறைவு குறித்து – சுவிஸ் வானொலி

வரவனையான்: ” நின்ற இடம் நடுகல் ; யாழ் வீரருக்கு “



Media Double Standards: (The Hindu & N Ram)

RAM Watch in Tamil: “மீண்டும் செய்திகளிலே கருணா அம்மான்”

RAM Watch in Tamil: “இந்துவின் இரண்டு செய்திகள்”


Podcasts, Audio:

குறிஞ்சிமலர்: சு.ப.தமிழ்ச்செல்வன் அஞ்சலி நிகழ்வு – சுவிஸ்


Counterpoints & Alternate Views: அகதி!:Fluechtlinge.: தமிழ்ச் செல்வன் சிந்திய

archunan: கண்டனங்களை விட அனுதாபங்களை மட்டுமே தந்த தமிழ்ச்செல்வன் படுகொலை – அர்ச்சுனன்

தமிழரங்கம்: உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகள் சமூகத்தை மாற்றாது.

நெருப்பு இணையத்தளம் » புலிகளின�: “புலிகள் மனிதர்களின் மரணங்களை மூலதனமாக்குபவர்கள். அதை வைத்து பணம் பண்ணுபவர்கள். அதை வைத்து தமது அதிகாரத்தை ஸ்தாபிப்பவர்கள். வாழ்வின் மீது நம்பிக்கையற்றவர்கள். மரணங்களை பூசிப்பவர்கள். உயிரோடு இருக்கும் மனிதர்களை வெறுத்து நடுகற்களை வழிபடுபவர்கள்.

அண்மையில் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தின் மரணமும் தற்போது தமிழ்ச்செல்வனின் மரணமும் அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மற்றவர்களின் உயிர்கள் அற்பமானவை என்றும் புலிகளின் தலைவர்களின் உயிர்கள் உப்பரிகை துயரங்கள் போலவும் ஏதோ சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகவும் சித்தரிக்கப்படுகின்றது. புலிகள் எட்டடி பாய்ந்தால் புலிகளின் ஊதுகுழலான தமிழ் ஊடகங்களோ பதினாறடி பாய்வார்கள். தமிழர்களுக்கு ஒரேயொரு ரட்சகர் இருந்தார் அவரும் போய்விட்டார் என்பது போல அரற்றுவார்கள்.

யாருடைய மரணமும் மனித நேயம் கொண்டவர்களுக்குஇ நாகரீகமான மனிதர்களுக்கு உவப்பானவையல்ல. தமிழ்ச்செல்வனின் மனைவி பிள்ளைகள் உற்றச் சுற்றத்தை பொறுத்தவரை அவர்களுக்கு இது ஒரு துயரம். இதேபோன்றதுதான் புலிகளால் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கானவர்களின் உறவுகளினதும், உற்ற சுற்றத்தாரினதும் துயரம்.”

Nitharsanam.Net » Blog Archive » 21 கரும்புலிகளை பலி கொடுத்தும் சிறீலங்கா வன்படையின் தாக்குதலில் இருந்து தமிழ்ச்செல்வனைக் காப்பாற்ற முடியாத பிரபாகரன்!

நெருப்பு இணையத்தளம் » செல்வா எங்கு சென்றாய்? தம்பி ஸ்ரீசபாரத்தினத்தை, பத்மநாபாவை, ராஜீவை தேடி சென்றனையோ? கலைஞர் கருணாநிதியின் நீலிக்கண்ணீர்!

நெருப்பு இணையத்தளம் » எச்சரிக்கை- கலைஞரின் கவிதாஞ்சலி மறுவடிவம்:

எப்போதும் சிரித்திடும் முகம்- அதில்
தமிழ்கொலைகளை மறைத்திடும் அழகுவிதம்
இளமை இளமை இதயமோ-அது
தமிழ் மங்கையர் பலர் துணை இழந்து
வெண்மை வெண்மை சேலை தந்ததே

தூஷண சிங்கம் பாலசிங்கம்- வழியில்
பழமாய் பொய் உரைக்க
பக்குவம்பெற்ற படைத்தளபதி
உரமாய் தன்னையும்-தமிழர்
உரிமை மறுப்பு பாசிசபோருக்கென உதவிய
உடன்பிறப்பணையான்

தமிழர் வாழும் நிலமெல்லாம்
அவர்தம் உளமெல்லாம்- இவன் சுயரூபம்
இன்னும் அறிந்திலர் பலர்
நன்புகழ் செதுக்கிய செல்வா
கொன்ற தமிழரை-மீண்டும்
கொ(ன்று)ண்டுவர சென்றனயோ

-ஸ்ரீசபாரத்தினம்

நெருப்பு இணையத்தளம் » ஊராவீட்டு பிள்ளைகள் 21 கரும்புலிகள் இறப்பில் கொண்டாட்டம்! தமிழ்செல்வன் இறப்பில் மூன்று நாள் துக்கம். வன்னிபுலிகளின் இரைட்டைவேடம்!

ஒசாமா பீன்லேடனையே மிஞ்சிவிட்ட நயவஞ்சகத்தனமான பயங்கரவாதி பிரபாகரன்:

தமிழ் செல்வன் விமானத் தாக்குதலில் கொல்லப்படவில்லை என்பதனை உறுதியாக நாம் கூறுவதுடன் பிரபாகரனின் பணிப்பின்பேரிலேயே அவார் கொல்லப்பட்டார் என்பதனை சந்தேகத்திற்கிடமின்றி தெரிவிக்கும்

விமானத் தாக்குதலில் தமிழ்செல்வன் கொல்லப்படவில்லை எனவும் கடந்த சில மாதங்களாக புலிகளின் தலைமையுடன் தமிழ் செல்வனுக்கு எற்பட்டிருந்த முரண்பாடு காரணமாக விமானத் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தினை சாதகமாகப் பயன்படுத்திய புலிகளின் தலைமை தமிழ் செல்வனை மாத்தையாவின் பாணியில் சுட்டுக்கொன்றதாகவும் வன்னியிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல் உறுதிப்படுத்தியுள்ளது

புலிகள் அமைப்பில் நீண்டகாலமாக பணியாற்றும் தமிழ் செல்வன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரெனவும் அண்மைக் காலமாக பேச்சுவார்த்தைமூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் ஒரே வழி என்பதனை வலியுறுத்தியமை இன்றைய யாழ் மேலாதிக்கவர்க்கமென தெரிவிக்கப்படும் வல்வெட்டித்துறை புலித் தலைமை ஏற்றக்கொள்ளாமையே தமிழ் செல்வனுக்கும் பிரபாகரனுக்குமிடையிலான முரண்பாடு வளர்ச்சியடைந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zeroing In On Prabhakaran : outlookindia.com: “The successful air strike at Kilinochi will encourage the SLAF to re-double its efforts for a decapitation strike on Prabhakaran himself. He becomes more vulnerable to an air strike than in the past.”

The Hindu : International : Thamilchelvan was involved in many attacks: Colombo: “Lt. Colonel Anupumani alias Alex was the chief of LTTE’s “strategic communication division” and in charge of handling all communication activities between LTTE leader V. Prabhakaran and the other “international terrorist agents.”

Mr. Thamilchelvan, “terrorist turned political head” played a pivotal role in a number of attacks on members of the security forces in the most recent past including the assaults on Kilaly, Muhamale, Nagarkovil Forward Defence Lines (FDLs) in August 2006, just eight months after Mahinda Rajapaksa had taken over as President.

The MCNS claimed that he escaped death twice with injuries during Kilaly operation in October 1993 and counter attacks on Yaladevi operation launched by Security Forces. It said he also played a prominent role in the Elephant Pass “debacle” while commanding terrorist groups way back in July 1991.”


More Anjali & Memoirs:

மடத்துவாசல் பிள்ளையாரடி: உணர்விழந்து நிற்கின்றேன் 😦

மிளகாய்: தம்பி தமிழ்ச்செல்வா: ப�

முத்துகுமரன் குடில்: சுப.தமிழ்ச�

மிளகாய்: புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக நடேசன் நியமனம்

நெஞ்சின் அலைகள்: நெஞ்சை எரிக்கி

கீழ்வானம்: தியாகிகள் புதைக்கப்�

பாரதிய நவீன இளவரசன்: சு.ப. தமிழ்ச�

ஓசை செல்லாவின் கடல் நீர் கண்ணீர் போல் வற்றட்டும் .. சில பத்தடிகள்

ஓசை செல்லாவின் மறைந்தது தமிழ்.. கண்ணீரஞ்சலி

பேசலாம்: என் ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்கிறேன்.

ஈழம் செய்திகள்: சமாதான : “முன்னெடுப்பாளரை படுகொலை செய்த காட்டுமிராண்டி சிறிலங்கா அரசு: பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம்”

IdlyVadai – இட்லிவடை: சுப.தமிழ்ச்செல்வன் ் கொல்லப்பட்டார்

சு.ப.தமிழ்ச்செல்வன் வீரமரணம் | ச�

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன� ் வீரவணக்க படங்கள்

SKETCH: மரணம் வலி தருமா?

S.P. Thamilchelvan killed in an air force attack « தமி்ழ் உலகம்

மஹிந்த தரப்பிடம் நிதி பெற்றோமா?: “சு.ப.தமிழ்ச்செல்வன் கேள்வி”

தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவு

முக்கிய நிகழ்வுகள்: “எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் இல்லை: தமிழீழ விடுதலை புலிகள்”

ஈழம் செய்திகள்: பிரிகேடியர் ் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வித்துடல் மக்கள் வணக்கத்திற்கு.

அகரா: ஆகாயப் புழுகர்களை வென்ற பிரபா-ஞ்சப் புழுகு: ” பொய்யாமொழி தண்டாயுதபாணி (நன்றி தாயகம்)”

கடகம்: துக்கத்தில் பங்கேற்கிறேன்…!

LTTE cannot Guarantee Safe Passage of International Aid Vehicles « Tamil News

வான் தாக்குதலில தமிழ்ச்செல்வன் மறைவு: வி.புலிகள் துக்கதினம் அறிவிப்பு

ஒரு மனதின் ஒலம்….: உன் ரத்தத்தின் ் ஈரம் காய்வதேது..

மறுமலர்ச்சி: பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு !

நாட்டு நடப்பு: தமிழ்ச்செல்வன் ் வீரச்சாவு.தமிழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஈழம் செய்திகள்: தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றுவார்கள்: பழ.நெடுமாறன்

Ilakku.com » விமானத் தாக்குதலில்(?) புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி!!

ஒரு தகவல் » Blog Archive » வான் குண்டுத்தாக�

ஈழப்பெரும்சுவர்: அநுராதபுரத் த�: “சுப.தமிழச்செல்வன் படுகொலை- ராஜபக்ச அரசின் பேடித்தனம்!”

புலிகளின் அரசியல்துறைப் : “பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் உட்பட ஆறு முக்கிய புலியுறுப்பினர்கள் பலி!!”

தமிழ்: சுப. தமிழ்ச்செல்வன் வீரமர

நயனம் – nayanam: சுப தமிழ்ச்செல்வன் மறை�

ஈழம் விளையாட்டு கழகம் Nürnberg


Lifeskecthes, Biography, History:

செய்தி அலசல்: தமிழ்ச்செல்வன் – ஒ�

சிந்தாநதி : ❒ யார் இந்த தமிழ்ச்ச�

Video: நான் காணும் உலகங்கள்: அனல் காற்�

நாம் ஒரு நாள் ஆறுபோல் ் சுதந்திரமாய் பாய்வோம்: மீளாத்துயில் கொள்ளும் அண்ணன்களுக்கு ஒர் சமானியனின் வீரவணக்கம்


Earlier News bits, op-eds, Opinions, Thoughts: LTTE « Tamil News

LTTE vs Sri Lanka – Eezham imbroglio: Lack of interest by Indian Leaders « Tamil News: “ஏன் இந்தத் தயக்கம்?” (Dinamani)


ஏகலைவா: சுப.தமிழ்ச்செல்வனின் நி�

TamilBrisbane.com :: Tamil Speaking Community Portal – Brisbane – Queensland – Australia – India : Tamilnadu Chief Minister Karunanithi remembers slain Tamil Political Head Brig. TamilSelvan

PRINCENRSAMA: அந்தோ! கொடுமை! கொடுமை! – திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வீரவணக்கம்

வரவனையான்: தானாய் ஆடும் தசைகள்


ஒரு தகவல் » Blog Archive » தமிழ்ச்செல்வன் ் படுகொலை: விடுதலைப்புலிகள் பதிலடிக்கு தயார்- இலங்கையில் பதட்டம்

*புலிகளின் அரசியல் பொறுப்பாளரா�: “புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றி வந்தவர் பா.நடேசன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முன்பு சிறிலங்கா பொலிஸ்துறையில் சார்ஐன்ட் தரத்தில் கடமையாற்றியவர் என்பதும் இவரது மனைவி சிங்கள இனத்தைச் சே�”

புதுவை கோ.சுகுமாரன்: பிரிகேடியர�

ENB – English: S.P.Thamilchelvan killed

புதிய ஈழம்: சுப.தமி்ழ்ச்செல்வன்

குசும்பு: வீர வணக்கம் சு.ப.தமிழ்�

உலக தமிழ் மக்கள் அரங்கம்..: சுப.தம�

குப்பை வலை: மனதை பாதித்த மரணம்

English Blogs:

LTTE is back to zero – TULF leader :: Sri Lanka News by MulPituwa.Com: “With the death of the LTTE’s Political Wing Leader S. P. Thamilselvan, the Leader of the Tamil United Liberation Front (TULF) Veerasingam Anandasangaree, the politician who had written the highest number of letters and pleas to the terrorists, has again requested the LTTE leadership to comeback to the negotiating table to save young lives. In an interview with the Sunday Observer he said that the Tamil political parties are willing to help the LTTE if the terrorists end the armed struggle and entre the democratic stream. These youth have the courage to achieve whatever the deadly desires of the leadership risking their lives. So it is high time to use these valuable lives to develop the country. It is sad that they are sacrificing their lives for an unrealisable cause,’ he said.”

» Have the LTTE’s succession wars begun? | INI Signal: “Who’ll succeed Prabhakaran? His son Charles Anthony…or Pottu Amman, the intelligence chief? There is a strong belief among the Tiger leaders that Pottu Amman was involved in leaking this vital piece of information which only the first level of Tiger leaders knew.”

ENB – English: Thamilchelvan MURDER: World media round up

News from The Permanent Mission of Sri Lanka to the United Nations Office at Geneva: “This study will examine the multiple methods of fund generation by terrorist groups and the modalities used by such groups to transfer funds for weapons procurement and logistic support. The operations of the international network of the Liberation Tiger of Tamil Eelam (LTTE) will be used as a case study in relation to the topic on terrorist financing. The study will have two main focus areas namely, methods used by groups such as the LTTE for resource mobilization and the processes by which such funds are moved for procurement activity. The study recognizes that the LTTE has an active domestic fundraising operation, however the focus of this study will be limited to operations of the international network of the LTTE. Within the scope of the first focus area, the study will identify methods of fundraising and assess the progression of such methods in terms of institutionalization and sophistication. The study will expand on this by developing a four-tiered progression typology which reflects the growth and expansion of fundraising methods. The second part of the study will examine the illusive network of financial nodes and controllers that transfer funds for procurement purposes. The study will also identify the processes of fund transfer used by the LTTE for weapons procurement.”

Media & Op-Eds:

Sri Lanka Kills Rebel Leader – TIME

Lankan Army’s game plan: Seize East and weaken LTTE in North- Hindustan Times: “The attack on Commander, Lt. Gen. Sarath Fonseka triggered the aerial war in which Sri Lankan jets began bombarding the Tamil North almost daily,displacing lakhs of civilians and causing an international uproar.”

TheStar.com | News | Decades of Sri Lankan violence

FACTBOX-Slain Sri Lanka Tiger was public face of rebels | Reuters

The Associated Press: Sri Lanka Violence Timeline

The Associated Press: Background on Conflict in Sri Lanka

A return to full-blooded war | The Guardian | Guardian Unlimited: “With both sides in Sri Lanka’s civil war increasingly committed to military means, prospects for peace have all but evaporated, writes Randeep Ramesh”

CHRONOLOGY-Sri Lanka’s long running civil war | Reuters

Editorial: After Thamilselvan:”It was the Tigers who balked at the degree of autonomy on offer from Colombo after the 2002 cease-fire and walked away from the talks.”

Sri Lanka chronology | The Guardian | Guardian Unlimited

AFP: In Sri Lanka, war dead don’t add up: “The security forces say they killed 3,284 Tiger rebels between December 2005, when a Norwegian-brokered truce began falling apart, and September this year. Independent estimates put the size of the LTTE force at between 5,000 and 12,000 men and women — meaning that at this rate of killing they should soon be running out of recruits. Senior officials have in the past claimed there were only 500 Tiger rebels left, or that 85 percent of the guerrilla army had been wiped out.

Last year, they paid respects to 18,742 cadres killed since 1982.”

BBC NEWS | South Asia | Public face of the Tamil Tigers

BBC NEWS | South Asia | Civilians’ plight in Sri Lanka

BBC NEWS | South Asia | Sri Lanka: Stories from conflict zones

BBC NEWS | South Asia | Tales from Sri Lanka’s front line

BBC NEWS | South Asia | Full text: Tamil Tiger proposals

BBC NEWS | South Asia | Country profiles | Timeline: Sri Lanka

Security News | Sundayobserver.lk – Sri Lanka: “His vow to take revenge from the Security Forces once they lose entire Eastern province very clearly indicates that he was not at all committed for a political solution to the North east conflict. He had to choose the military fatigue once again when the leadership directed him to oversee the Pooneryn sector at a time when the movement was fast distancing itself from political affairs.

He did not give up his military activities even after participating in a number of peace talks rounds with his large contribution towards the attack on Kilali, Muhamalai and Nagar Kovil Security Forces defences on August 11, 2006

The assassination of former Indian Prime Minister Rajiv Gandhi, former Sri Lankan President Ranasinghe Premadasa, Opposition Leader Gamini Dissanayake, Dr. Neelan Thiruchelvan, former Foreign Minister Lakshman Kadirgamar and the assassination attempts on President Chandrika Bandaranaike Kumaratunga should also be put on the other side of the scale”


Post-Mortem Analysis, Op-eds, News:

IdlyVadai – இட்லிவடை: தமிழ்ச்செல்வன் மறைவு – ஜி.கே.வாசன், சுப்பிரமணியசாமி, வீரமணி கருத்து

தமிழ்ச்செல்வனின் : “மறைவால் ஏற்பட்டுள்ள சமாதான வெற்றிடம்”

ஒரு தலைபட்சமான : “சுதந்திரப் பிரகடனங்கள் – ஒரு பார்வை”


Democracy Now! | Assassination of Tamil Leader Prompts Fears of Escalated Sri Lankan Civil War: “Senator Patrick Leahy issued a statement Friday expressing concern at abuses by both the L.T.T.E and the Sri Lankan army. He said US aid to the Sri Lankan government was “not a blank check” and urged Congress to support a political and not a military resolution to the conflict. In the past year alone, Sri Lanka has seen over 4,000 people killed, 250,000 internally displaced, and more than a 1,000 civilians “disappeared.””

தமிழகத்தில் இலங்கை தமிழர் களுக்காக 25 மாவட்டங்களில் 117 முகாம்கள் உள்ளன. இவற்றில் 74 ஆயிரத்து 219 பேர் தங்கியுள்ளனர். வெளியே 23 ஆயிரத்து 489 பேர் தங்கியுள்ளனர்


1. King Of Mars…: தமிழ்ச்செல்வன்: விமானங்கள் வருகையில் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையா அந்த விமானத்தளத்தையே வேவு பார்த்து புலனாய்ந்த திறமைமிக்கவர்கள் ஒரு முக்கிய நபருக்குரிய பாதுகாப்பு விசயத்தில் இவ்வளவு கவனக்குறைவாகவா இருப்பார்கள்

2. பதிலடி: திருநெல்வேலியும் திருவ�: ‘தேசியத்தலைவரின்’ கைவண்ணம் அழகாகத் தெரிந்தது. தனது மகனையும் கையோடு கூட்டிவந்து தமிழ்ச்செல்வனின் தலைமாட்டில் நிற்கவைத்து தான் சடலத்துக்கு மாலை போடும் காட்சியை புகைப்படமாக்கினார். இங்கு புலிகளின் முக்கிய உறுப்பினர்களுக்கு சொல்லாமல் ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளது.

பாலசிங்கம் இறந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகவிருக்கும் போதும் அவரது இடத்துக்கு இன்னும் எவரும் நியமிக்கப்படவில்லை. ஆனால் தமிழ்ச்செல்வனின் இறுதி நிகழ்வு நிறைவு பெற முன்பே புலிகளின் பொலிஸ் பொறுப்பாளர் நடேசனுக்கு மேலதிக பதவியாக அவர் பதவி வகித்த அரசியல் துறையும் கொடுக்கப்பட்டது. இந்த அவசர அவசரமான புலித் தலைமையின் செயல் வழமைக்கு மாறானது. புலிகளின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இதற்கு விளக்கவுரை மேலதிகமாக தேவைப்படாது.

புலிகள் இயக்கத்தில் உயர் பதவிகளை அடைவதற்கு அதன் தலைமை விரும்பும் திறமைகளுடன் ‘வல்வெட்டித்துறை’ என்பதும் சிறப்புத் தகுதியாகும். இந்த நடேசனின் பின்னணியும் இங்கு மிக முக்கியமானது. அவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் மட்டும் அல்ல பிரபாகரனுக்கு தாய் வழியில் சொந்தக்காரரும் ஆவார்.

கடந்த சில மாதங்களாக தமிழ்ச்செல்வன் அரசியல்துறை பொறுப்பாளராக வெளிக்காடிக்கொண்டாலும் உண்மையில் அவரிடமிருந்து அந்த பதவி பறிக்கப்பட்டிருந்தது. இந்த கால பகுதியில் நடந்த அரசியல் தொடர்பாடல்களிலும் அறிக்கைகளிலும் ‘அரசியல் துறை’ என்ற பொதுப்படையான கையப்பமிட்டு இருந்தது. இது நடேசனுக்கும் தமிழ்ச்செல்வனுக்கு இடையில் இருந்த பனிப்போர் ஒரு நிர்ணயமான இறுதிக்கட்டத்தை தொட்டுவிட்டது என்பற்கு சான்றாகும். சுவிஸ்சில் நடந்த சமாதான பேச்சு வார்த்தையின் போது தமிழ்ச்செல்வனுக்கும் நடேசனுக்கும் வாய்த்தர்க்கம் முற்றி பேச்சின் சுற்று முழுமை பெற முன்பே அதை விட்டு வெளியேறி தனி விமானம் எடுத்து கொழும்பில் இறங்கி வன்னி போன சங்கதி அனைவரும் அறிந்த இரகசியமே.

நடேசன் வெளியில் காட்டிக் கொள்ளாமல் நாசூக்காக ”சாதி” பார்ப்பவர் என்பது அவரின் மீது உள்ள மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில் முதன்மையானது.

தமிழ்ச்செல்வனின் மரணச்செய்தி அறிவித்த கையோடு ‘தீபம்’ தொலைக்காட்சி தனது வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்தி தமிழ்ச்செல்வனின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுகளையும் பேட்டிகளையும் தொடர்ந்து மூன்று நாட்களாக ஒளிபரப்பியது. தமிழ்ச்செல்வன் தனது வாழ்நாளில் ‘தீபம்’ தொலைக்காட்சிக்கென பிரத்தியேக நேர்காணல் எதையும் வழங்கியது கிடையாது. அப்படி இருந்தும் ‘தீபம்’ வழமைக்கு மாறாக தமிழ்ச்செல்வனின் மரண ஒளிபரப்பில் நடந்து கொண்டமுறையில் முன்கூட்டிய திட்டமிடல் நன்கு வெளிப்படையாகத் தெரிந்தது.

பிரேமதாச காலத்தில் மாத்தையா தலைமையில் புலிகளின் அரசியல் துறை இலங்கை தேர்தல் ஆணையகத்தில் ‘விடுதலை புலிகள் மக்கள் முன்னணி’ (Peoples Front of Liberation Tigers – PFLT) என்ற பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்தது. அதன் பொறுப்பாளர் மாத்தையாவுக்கும் அவரது விசுவாசிகள் கிட்டத்தட்ட 800 பேருக்கும் நடந்த கோரமான முடிவை சொல்ல தனியாக பல கட்டுரைகள் எழுதலாம். இன்றும் உயிருடன் இருக்கும் தமிழ்ச்செல்வனின் அண்ணன் மூர்த்திக்கும் யோகிக்கும் அதைப் பற்றி மனதைத் திறந்து சொல்ல ஆயிரம் சம்பவங்கள் இருக்கும். புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்களுக்கும் தலைமைக்கும் அப்படி ஒரு பொருத்தம்.

3. ஒரு தகவல் » Blog Archive » : “அனைத்துலக சமூகங்களின் புலிகளுடனான தொடர்பாடலுக்குரிய முதன்மைப் பிரதிநிதி தமிழ்ச்செல்வன்: ஜோன் ஹன்சன் பௌவர்”

4. நெருப்பு இணையத்தளம் » : “தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா”

5. TamilNet: 05.11.07 Thamilchelvan laid to rest, 25 000 attend funeral

6. TamilNet: 05.11.07 Loss of Thamilchelvan, a consequence of International injustice says Poddu Ammaan

7. TamilNet: 08.11.07 Peace keeper’s silence regretted – Nadesan

8. Sri Lanka | A war strange as fiction | Economist.com: “An opportunistic president and a dyed-in-the-wool rebel appear to have ended Sri Lanka’s best-ever hope for peace”

In the east the army now holds more ground than it has for a decade. With 25,000 soldiers around Batticaloa, it is trying to drive an estimated 500 Tigers from their last two eastern hideouts, in thick jungle to the north-west and south-west of the town. General Fonseka says this will be done within two weeks. Yet whether the army can retain its ground as the refugees return, with Tigers hiding among them, is uncertain. Either way, it would be wrong to call this campaign a military triumph. It owes more to the defection in 2004 of the Tigers’ eastern commander, Vinayagamoorthy Muralitharan, who is known as Colonel Karuna.

the many-times proven ability of 10,000 self-trained guerrillas to defeat the government’s 250,000 armed forces in conventional battles. A shimmering example of this is the Tigers’ latest weapons system: a fleet of ten light aircraft, imported in pieces during the ceasefire and unveiled in two recent bombing raids on Colombo. One night in April, as the capital’s air defences blazed wildly into the night sky, the flying Tigers dropped bombs on a gas installation and an air force base. The Czech-made planes are believed to have a top speed of 260kph. To shoot them down, the government is negotiating to buy five Russian MIG-29s, capable of a speed of 2,400kph. A top official suggested it would do better to buy a couple of second-world-war British Spitfires.

secret to Mr Rajapakse’s election was that, at the Tigers’ command, north-eastern Tamils did not vote. Had they done so, most would have plumped for Mr Wickremesinghe, whose peacemaking delivered freedoms to travel and trade that they had not enjoyed in decades. This had represented a challenge to Mr Prabhakaran. Autocratic to his fingertips, incapable of sharing power even with trusted deputies such as Colonel Karuna, he wanted out of the peace process.

Mr Prabhakaran declared the election a Sinhalese affair, not for independence-seeking Tamils. A Sinhalese-chauvinist government suits Mr Prabhakaran, helping bolster Tamil support for the Tigers. Recent reports have even suggested that he struck a secret deal with the opportunistic Mr Rajapakse. In return for, in effect, delivering Mr Rajapakse to power, Mr Prabhakaran was promised cash, Colonel Karuna in chains and recognition of the Tigers’ control of the east. Yet no sooner was Mr Rajapakse elected than both sides were shelling and murdering each other.

What could break the cycle? It is rather hard to imagine. As in other ethnic conflicts, from Palestine to Northern Ireland, the solution to Sri Lanka’s conflict seems obvious. Tamils require an end to the discrimination that has virtually barred them from holding jobs in the army and police. After so long a struggle, they also require a fair apportioning of power to a united north-eastern province. Nothing less will bind them to Sri Lanka and diminish Mr Prabhakaran’s brutish hold over them.

If Sri Lanka is to have peace, it may not be under Mr Rajapakse. And it may not be soon, with no general election due in Sri Lanka until 2010.

9. Sri Lanka’s war | The northern front | Economist.com: “The army thinks it can win. It is wrong”

In the east, meanwhile, the government has an opportunity to show Tamils they are better-off under the government than they were under the rebels. But its commitment to this goal is questionable. In a Trincomalee town hall with views of the glittering Indian Ocean, more than 80 families sleep on a concrete floor amid battered cardboard boxes of possessions. They have lived here for more than a year, since they were shelled out of their homes in nearby Sampur, a former Tiger stronghold; thousands more of their fellow townspeople languish in camps outside the town. Though few of them seem to know it, they are unlikely to return home: Sampur has been turned into a no-go high-security zone for the army.

10. Liberation Tigers of Tamil Eelam (Sri Lanka, separatists) – Council on Foreign Relations

The Sri Lankan Conflict – Council on Foreign Relations

11. INDIA TODAY – The most widely read newsweekly in South Asia.: “The Rajapakse Government’s relentless military onslaught on the LTTE suffers a big blow as the Tigers reinforce their presence with a devastating attack on the Anuradhapura airbase.”

12. Urban Battle Fields of South Asia: Lessons Learned from Sri Lanka, India & Pakistan – Google Book Search – By C. Christine Fair

Examines several case studies of sustained campaigns of urban terrorism perpetrated by various domestic groups in the countries of India, Pakistan and Sri Lanka.

Complete copy of the Research as an e-book: RAND_MG210.pdf (application/pdf Object)

13. Terrorism – In the Spotlight: Liberation Tigers of Tamil Eelam (LTTE)

14. ICT – International Institute for Counter-Terrorism – Articles – Countering NBC Terrorism: “According to Bruce Hoffman, it was not Aum but the Liberation Tigers of Tamil Eelam (LTTE) who were the first insurgent, guerrilla or terrorist organization to stage a chemical weapons attack. In June 1990, the group used chlorine gas in its assault on a besieged Sri Lankan Armed Forces camp. The attack, like Aum’s five years later, was relatively crude: thus again suggesting the impediments to mounting more sophisticated operations employing CBRN weapons.”

This article is reprinted from the book The New Terrorism – Anatomy, Trends and Counter-Strategies by Andrew Tan and Kumar Ramakrishna (eds.) (Singapore: Eastern Universities Press, 2002), pp. 193-206.

The first one concerns the problem of definition. Today many authors and specialists, especially Americans, use a variety of terms: mega-terrorism, super-terrorism, terrorism of weapons of mass destruction (WMD), and—one of the latest—catastrophic terrorism. We prefer to use the more classical term, non-conventional terrorism, referring thus to the use, or the threat to use, chemical, biological, nuclear and radiological agents or weapons.

The second remark is more substantial. It concerns the effect of non-conventional terrorist attacks. Most researchers consider such weapons WMD.

We distinguish between limited—or mass destruction—non-conventional terrorist attacks and extreme—or mass annihilation—attacks. The difference lies in the number of potential victims from such an attack. Only extreme non-conventional terrorist attacks could produce the destruction of a whole city with many thousands of victims and contaminate a large area for a long period of time. The limited attacks might cause hundreds, perhaps even more victims, but only on a limited scale (for instance in a stadium, an embassy, a mall, etc.), and without contaminating the place for a long period of time.

15. ICT – International Institute for Counter-Terrorism – Articles – Suicide Terrorism: Development & Characteristics: “It is the only organization that succeeded in assassinating two heads of states.”

16. International Institute for Strategic Studies – June 6th – – Straits Times – LTTE poses growing threat outside Sri Lanka: “In 2003, LTTE attacked the Chinese trawler Fu Yuan 225, killing 15 Chinese nationals and two Sri Lankans off the north-eastern coast of Sri Lanka. Last year, Tamil militants hijacked a Jordanian-owned cargo vessel and earlier this year they attempted to ram a Cambodian-owned cargo vessel carrying relief supplies.”

17. Creating Peace in Sri Lanka: Civil War and Reconciliation – TamilCanadian

Robert I. Rotberg, ‘Sri Lanka’s Civil War: From Mayhem toward Diplomatic Resolution’
Chris Smith, ‘Sri Lanka’s Enduring War’
David Little, ‘Religion and Ethnicity in the Sri Lankan Civil War’
Darini Rajasingam-Senanayake, ‘The Danger of Devolution: The Hidden Economics’
Saman Kelegama, ‘Economic Costs of Conflict in Sri Lanka’
Donald R. Snodgrass, ‘The Economic Development of Sri Lanka: A Tale of Missed Opportunities’
Chandra R. de Silva, ‘The Role of Education in Ameliorating Political Violence in Sri Lanka’
Teresita Schaffer, ‘Peacemaking in Sri Lanka: The Kumaratunge Initiative’
William Weisberg and Donna Hicks, ‘Overcoming Obstacles to Peace: An Examination of Third-Party Processes’
Jayadeva Uyangoda, ‘A Political Culture of Conflict’
Rohan Edirisinghe, ‘Constitutionalism, Pluralism, and Ethnic Conflict: The Need for a New Initiative’
Neelan Tiruchelvam, ‘Devolution and the Elusive Quest for Peace’

18. Blackwell Synergy – Int Affairs, Volume 83 Issue 1 Page 69-86, January 2007 (Enhanced Abstract): “The Eelam endgame? * CHRIS SMITH”

19. Propaganda blitzkrieg :: Frontline: “In making the ceasefire offer, the LTTE appears to have two main objectives: to buy time to equip itself to meet the new security situation, and to come out of its growing international isolation. V. SURYANARAYAN”

20. U.N. Wire | 2004.01.28 | Crossette :: Much of World’s Conflict Fueled by Small Arms: “South Asia’s most developed country, dehumanized by the Tamil rebellion, which was initially trained by Indian intelligence agencies, and by the violence of the Sinhalese leftist-nationalist People’s Liberation Front in the country’s south, fueled at one stage by a wave of anti-Indian anger.”

21. IngentaConnect Nurturing a Nation on the Net: The Case of Tamil Eelam: “This study deals with the use of the Internet to construct national identity. It argues that the Internet is an ideal tool to instil and reinforce distinct political identities among ethnonational diasporas by both nation-states and yet-to-be nation-states, and draws attention to the need to study the discourse on the Internet with regard to construction of national identity. It uses the example of the struggle of the Sri Lankan Tamils for recognition as a nation-state to highlight the potential of the Internet to instil a sense of nationhood among widely dispersed members and mobilize them in the struggle for transformation into a nation-state.”

Global Media Journal – Indian Edition: “Nurturing the nation on the Net: the selective presentation of culture in political websites :: Maya Ranganathan”

22. Political Bureau Release-Let’s make 2005, the year for rebuilding the country!: “Chandrika – Piribaharan agreement is as worst as the betrayal of Ranil – Piribaharan agreement!”

23. Srilanka Assessment 2007: “Fatalities between 2000 and 2006”

24. CJO – Abstract – Ethnonationalist networks and transnational opportunities: the Sri Lankan Tamil diaspora: “This article presents an empirical case study of a type of nonstate actor largely overlooked in the IR literature on transnationalism: the diaspora or transnational ethnic actor. Building upon findings from contentious politics or social movements scholarship, I highlight the nexus of domestic and transnational politics by demonstrating how actors form ethnic networks and utilise transnational opportunities to pursue political goals in various states. Specifically, I argue that the formation of ethnic networks in the Tamil diaspora has enabled the Liberation Tigers of Tamil Eelam (LTTE) or ‘Tigers’ to engage in protracted insurgency against the Sri Lankan government army. Whereas traditional contentious politics scholarship is unable to explain the longevity and intensity of that conflict, a consideration of the transnational dimension provides new insight into how ethnic conflicts may be sustained. The combination of greater political freedom, community organising and access to advanced communications and financial resources in receiving states has allowed Tamil separatists in the diaspora to maintain ‘transnational ethnic networks’ which are in turn used to mobilise funds that have prolonged the secessionist campaign in Sri Lanka.”

25. “A World of Exiles.” The Economist.: Why does Macedonia have no embassy in Australia? Macedonia has no embassy in Australia because Greeks think the former Yugoslav republic that calls itself Macedonia has purloined the name from them, and the Greek vote counts for a lot in Australia. The case of the missing embassy is an extreme, but typical, example of how diasporas have long exerted their influence: they have lobbied in their adopted countries for policies favorable to the homeland. Some 60 million Tamils live in India, and Sri Lanka’s politics have on at least one occasion fatefully affected India’s: Rajiv Gandhi, a former prime minister of India, was assassinated by a Tamil suicide bomber in 1991 in retribution for India’s involvement in Sri Lanka’s civil war.

26. Socialist Review: “Sri Lanka: On the March Back to Civil War? – Third World Report (Asia) by Barry Pavier, June 2006 :: Since the beginning of April this year at least 300 civilians have died as the ceasefire between the Sri Lankan government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) has begun to unravel.”

a resolution will only come if Sri Lankan politics can break from the ethnic nationalism that has consumed Sri Lanka since 1948. Here lies the constant problem. Large socialist parties were formed in the colonial period. Uniquely, at the end of the 1930s, the majority of the Communist Party supported Trotsky against Stalin and went on to form the largest Marxist party, the LSSP. A significant Communist Party continued to exist and activists from both parties were involved in the development of large trade unions.

The tragedy was that by 1970 both were drawn into government alliances with the main Sinhala nationalist party, the SLFP. This fatal compromise prevented them from promoting a decisive break with the politics of ethnic nationalism. In the 1970s this pattern continued, with a split from the Communist Party � the JVP � which moved from radical socialism to ethnic nationalism (although their supporters still parade their socialist credentials based on what they were, not what they have become).

27. Gender Mainstreaming in Conflict Transformation :: Building Sustainable Peace: The United National Party (UNP) Government launched an equally brutal counter-offensive. Because the police force had been particularly targeted by the JVP, the police and other security personnel had a vested interest in revenge and were motivated to extinguish the JVP. Those targeted, however, were not only members of the JVP (many youth were killed on mere suspicion of being JVP sympathies), but also men who worked for the opposition Sri Lanka Freedom Party (SLFP) in its various organisational committees. Words denoting ‘terror’, the ‘disappeared’ and ‘torture chamber’ entered the popular vocabulary (Perera, 1999: 19). Security personnel and paramilitary groups like the Black Cats and Kola Koti (Green Tigers), specially formed to eliminate the JVP.


Theory

Fully democratic regimes will always be more willing to accommodate separatist movements than less democratic or non-democratic regimes. In order to maintain legitimacy and stability of the regime a democracy must be willing to provide forums for free speech and minority requests to be heard.

Democratic regimes will seek democratic and non-violent means to a resolution. We also theorize that the length of the con°ict will increase the willingness of the government to accommodate separatist movements regardless of the regime type of the government. As the con°ict spreads over many years the cost both in monetary and human life terms will result in an increased willingness to accommodate. As elites weigh the costs of continuing to fight with no peaceful end in sight and the costs of some accommodation, they will see that greater progress toward peace can be made through negotiations rather than a continuation of current policies.

Contrary to perceptions of some separatists leaders we believe that increased levels of violence may not urge governments to accommodate. Higher levels of violence could have both positive and negative e®ects on attaining the goals of the independence movement. As violence increases it can alienate public support for the cause and force the government to respond with an even more resistant stance toward the movement.

As elites must respond to the threat of continued violence it is also possible that the government may be willing to accommodate to prevent further violence and loss of life. The level of violence is not a reliable predictor of how government will respond to ethnic separatist movements.

Hypotheses
* Democratic regimes will be more accommodating to separatist movements than non-democratic regimes.

* The level of violence used in an ethnic separatist movements does not predict the willingness of governments to accommodate.

* The longer the duration of the separatist movement the more willing governments will be to accommodate.



Consolidated History:

1. Sri Lanka’s Continuing War on Eelam Tamils -’02 todate…in the Shadow of the Ceasefire

2. CSAS I Centre for South Asian Studies

3. Welcome :: SPUR – Society for Peace, Unity and human Rights in Sri Lanka

4. Liberation Tigers of Tamil Eelam (LTTE), Terrorist Group of Sri Lanka

5. MIPT Terrorism Knowledge Base

6. P.O.V. – No More Tears Sister . History of the Conflict in Sri Lanka | PBS

7. Sri Lankan Civil War – Wikipedia, the free encyclopedia

———————————————————————————————————————————————————–
தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்சென்னை, நவ. 3: விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் எஸ். ஜெகத்ரட்சகன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து இவர்கள் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத் தமிழர்களின் உரிமைக்குரலை உலக அரங்கில் ஒலித்து வந்த சுப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்ற செய்தி, உலகத் தமிழர்கள் மட்டுமல்லாது அமைதியை விரும்பும் மனித சமுதாயத்துக்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ராணுவத்தின் இந்த இனவெறித் தாக்குதலை மனித குலம் நிச்சயம் மன்னிக்காது. அதிலும் குறிப்பாக தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது இலங்கை இனப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நமது அண்டை நாட்டில் இத்தனை கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கே கொடுமைகளுக்கு இலக்காகியிருக்கும் மக்களுடன் இனம், மொழி, கலாசாரம் ஆகியவற்றால் ஒன்றுபட்டுள்ள தமிழர்கள் வசிக்கும் இந்தியா இதனை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

போர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் ஈழத் தமிழர்களின் நியாயமான அரசியல் உரிமைகளையும், மனித உரிமைகளையும் வழங்க வேண்டும் என இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

தாமதமின்றி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக மக்கள் சார்பில் முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும். இந்த விஷயத்தில் தமிழர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளதாக ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தா. பாண்டியன்:

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் தருவதாக உள்ளது. இலங்கை அரசு ஆயுத பலத்தை கொண்டு, போர் நடத்தி இனப்பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சிப்பது, இலங்கை வாழ் தமிழ் மக்களை கொன்று அழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இருதரப்பினரையும் இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

எஸ். ஜெகத்ரட்சகன்:

சுப. தமிழ்ச்செல்வன் மறைவு தனிப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு மட்டும் இழப்பல்ல, மானமுள்ள அனைத்து தமிழர்களுக்கும் அதிர்ச்சியை அளிப்பதாகும்.

இதற்கு மேலும், இந்திய அரசு மௌவுனம் காட்டாமல் இலங்கையுடன் இருக்கிற எல்லா உறவுகளையும் உடனடியாக விலக்கிக் கொண்டு, ஐ.நா. மூலம் இந்த கொடுமைகளுக்கு முடிவு காண வேண்டும் என ஜெகத்ரட்சகன் வலியுறுத்தியுள்ளார்.

கி. வீரமணி:

ஆன்டன் பாலசிங்கம் மறைந்த நிலையில், அந்த இடத்தை நிரப்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும், சிந்தனையாளராகவும், அமைதிக்குழுவிடம் அடக்கத்தோடும், உறுதியோடும் தமது உரிமைகளை எடுத்து வைத்து பேச்சுவார்த்தைகளைத் திறம்பட நடத்திய தமிழ்ச்செல்வன் மறைவு ஒரு பேரிடி போன்ற செய்தி என தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் இரங்கல்

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறி க்கை: சில தினங்களுக்கு முன்னர்தான் விடுதலைப்புலிகள் மீதுள்ள தடையை அகற்றி தேர்தல்களில் அவர்கள் நேரடியாக போட்டியிட சட்டம் கொண்டு வரப்போவதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு பின்னர் தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல் நடத்தி இருப்பது அந்த அரசு நம்பத்தகுந்த அரசு அல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளது என விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
———————————————————————————————————————————————————–

தமிழ்ச்செல்வன் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

சென்னை,நவ. 3: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கவிதை நடையில் அவர் தெரிவித்துள்ள இரங்கலில் கூறி

யிருப்பதாவது:

எப்போதும் சிரித்திடும் முகம்-

எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம் !

இளமை; இளமை; இதயமோ;

இமயத்தின் வலிமை ! வலிமை !

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்

பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி !

உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய

உத்தம வாலிபன்- உயிரனையான்-

உடன்பிறப்பினையான்;

தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம்

தன் புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய் ?

———————————————————————————————————————————————————–

புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு: ஜெயலலிதா பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை, நவ. 3: தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியதை அடுத்து முதல்வர் கருணாநிதிக்கும் விடுதலைப் புலிகளுக்கு ரகசியத் தொடர்பு இருப்பது வெளிப்பட்டுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்பதால் திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை இரவு அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு கருணாநிதி மறைமுகமாக ஆதரவு தருகிறார் என பலமுறை தெரிவித்தேன்.

இதை நிரூபிக்கும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் போர்த்தளவாடங்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை புலிகளுக்கு கள்ளத்தனமாக அனுப்பிவைத்ததை போலீஸôர் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். ஆனால், அன்று மாலையே அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து முதல்வர் கருணாநிதி மெüனம் சாதித்தார்.

அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு கவிதை வடிவில் அவர் இரங்கல் தெரிவித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி.

1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு முதல்வர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சார்ந்தவருக்கு ஆதரவாக கவிதை எழுதி புகழ்ந்துரைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

விடுதலைப்புலிகள் பிரமுகர் மரணத்துக்கு கவிதை எழுதும் கருணாநிதி, கடந்த 17 மாத ஆட்சியில் எந்த எந்த வகைகளில் ரகசியமாக விடுதலைப்புலிகளுக்கு உதவியுள்ளார் என்பதை கண்டறியும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.

இந் நிலையில் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மையக் கருத்து கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார் ஜெயலலிதா.

———————————————————————————————————————————————————–

———————————————————————————————————————————————————–

Posted in Air Force, Airforce, Attack, dead, Eezham, Eezlam, LTTE, Nedumaran, Sri lanka, Srilanka, Tamilchelvan, Tamilselvan, Thamilchelvan, Thamilselvan, Thamizhchelvan, Thamizhselvan, VaiKo, Vidudhalai, Viduthalai, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Vituthalai, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | 2 Comments »

LTTE vs Sri Lanka – Eezham imbroglio: Lack of interest by Indian Leaders

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

ஏன் இந்தத் தயக்கம்?

விடுதலைப் புலிகள் எப்போது, எப்படி, எங்கே தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை ராணுவம் குழம்பிப் போயிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும், அனுராதபுரம் ராணுவ விமானத்தளத்தின் மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, உலகமே இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பிரமித்துப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதாரண விமான நிலையமாக இருந்தால்கூடப் பரவாயில்லை. சாத்தியம் என்று சமாதானப்படலாம். தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இலங்கை ராணுவத்தின் விமானத்தளம். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள அனுராதபுரம் விமானத்தளத்திற்குள், அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி, காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் எப்படி நுழைய முடிந்தது என்பது, இலங்கை அரசையே உலுக்கிவிட்டிருக்கிறது.

மூன்று பெண் புலிகள் உள்பட 21 பேர் கொண்ட கறுப்புப் புலிகள் எனப்படும் தற்கொலைப் படையினரின் தாக்குதலில் சேதமடைந்திருப்பது 18 இலங்கை ராணுவ விமானங்கள் மட்டுமல்ல, உலக அரங்கில் இலங்கை அரசின் மரியாதையும்தான். தற்கொலைப் படையினரின் தரைவழித் தாக்குதல் போதாது என்று, விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தாக்குதலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்ததுதான் அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம்.

கடந்த மார்ச் மாதம் கொழும்பு நகரத்தை அடுத்த இலங்கை விமானப்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. விடுதலைப் புலிகளிடம் உள்ள இரண்டு விமானப் படை விமானங்களும் சுமார் நாற்பது நிமிடங்கள் எந்தவிதக் கண்காணிப்பு வளையத்திலும் அகப்படாமல் பறந்து வந்து, தாக்குதல் நடத்திவிட்டு, வந்த சுவடே தெரியாமல் பத்திரமாகத் திரும்பியது எப்படி?

பிரச்னை அதுவல்ல. விடுதலைப் புலிகள் தாக்குவதும், இலங்கை ராணுவம் பழிக்குப் பழி நடவடிக்கையாகத் திருப்பித் தாக்குவதும் கடந்த கால்நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் விஷயம். எப்போது விமானம் வரும், தாக்குதல் நடக்கும் என்பதறியாமல் பயத்தில் நடைப்பிணமாக வாடும் அந்த நாட்டு மக்களின் நிலைமையை நாம் மனிதாபிமான அடிப்படையில் ஏன் பார்க்க மறுக்கிறோம்? மடிவது சிங்கள உயிரா, தமிழரின் உயிரா என்பதைவிட, மனித உயிர் என்பதை உணர முடியாதவர்களாக இருக்கிறோமே, ஏன்?

ஈழப் பிரச்னைக்கு முடிவு துப்பாக்கி முனையில் ஏற்படாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது வறட்டு கௌரவமும் முரட்டுப் பிடிவாதமும் நடைமுறை யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது நியாயமல்ல.

இலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால் இந்திய அரசு தனது தார்மிகக் கடமையிலிருந்து விலகி நிற்பது எந்தவகையிலும் நியாயமாகப்படவில்லை. மத்தியில் கூட்டாட்சி நடத்தும் திமுகவும் பாமகவும் இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்று கூறுவது உண்மையானால், மத்திய அரசின் மௌனத்தைக் கலைக்க வைப்பது அவர்களது கடமை.

ஈழப் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. அவரே முன்னின்று பேச்சுவார்த்தைகளை நடத்தினால் நல்ல முடிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் சரி, வெறுமனே தனது அதிகாரிகள் மூலம் ஓர் அரசியல் பிரச்னைக்குத் தீர்வுகண்டுவிட முடியும் என்று நினைப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மேலும், இலங்கை அரசின் நட்புக்காக மௌனம் காப்பதும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. தமிழக முதல்வரை முன்னிறுத்தி இலங்கைப் பிரச்னைக்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஏன் இந்தத் தயக்கம்?

Posted in ADMK, AFB, Air Force, Airforce, Anuradapura, Anuradhapura, Anurathapura, Arms, Assassin, Assassination, Attack, Attacks, Bombs, Citizens, Colombo, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Cyanide, Danger, dead, DMK, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eelctions, Eezam, Eezham, Extremism, Extremists, Flights, guns, India, Initiatives, Jaffna, Kill, Killed, Leaders, LTTE, Military, Party, Peace, people, Politics, Sri lanka, Sri Lankan Navy, Srilanka, Suicide, terror, Terrorism, Terrorists, Vanni, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, Wanni, Weapons | 1 Comment »

Turkey seeks OK for military move into northern Iraq

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 17, 2007

குர்து பிரிவினைவாதிகள் மீது எல்லை கடந்து தாக்க துருக்கிய நாடாளுமன்றம் அங்கீகாரம்

வட இராக்கில் குர்து இன பிரிவினைவாதிகளின் தளங்களின் மீது எல்லை கடந்த தாக்குதல்களை நடத்த, துருக்கிய இராணுவத்துக்கு அனுமதி அளித்து, துருக்கிய நாடாளுமன்றம் பெரும் ஆதரவுடன் வாக்கெடுப்பு ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இந்த தாக்குதல்களை ஓராண்டு காலம் நடத்த அரசுக்கு அனுமதி அளிக்கும் தீர்மானம் ஒன்றை, 550 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 19 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.

துருக்கிய பிரதமர் ரசெப் தயிப் எர்தோவான், இராக்குக்குள் ஊடுருவல்கள் என்பது உடனடியாக நடக்கப்போவதில்லை என்று கூறினார். ஆனால் குர்துகளின் பிராந்திய அரசோ, இந்த ஆமோதிக்கும் வாக்கெடுப்பு சர்வதேச சட்டத்தை மீறியதாகும் என்று கூறியது.

இந்த முடிவு அறிவிக்கப்படும்போது, அமெரிக்க அதிபர் புஷ், துருக்கியை பெரிய எல்லைகடந்த ஊடுருவல் எதையும் தொடங்கவேண்டாம் என்று வலியுறுத்தினார்.

 

அத்தகைய தாக்குதல் எதுவும், துருக்கியின் நலன்களுக்கு உகந்தது அல்ல என்றும் அவர் கூறினார்.

துருக்கிய நாடாளுமன்றத்தின் இந்த நடவடிக்கை, ஒரு புதிய இராஜிய முயற்சிகளை தூண்டியுள்ளது. இந்த இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்பதுதான் ஒருவேளை இந்த நடவடிக்கையின் பின்னுள்ள பிரதானமான நோக்கமாக இருக்கலாம்.

ஆனால், இராக்கின் வடக்கே உள்ள, பெரும்பாலும் சுயாட்சி பெற்ற குர்திஷ் பகுதியில் இராக்கின் மத்திய அரசுக்கு பெருமளவு செல்வாக்கு, அதிகாரம் இல்லை என்பது துருக்கிக்கு தெரிந்ததுதான்.

உடனடியாக ஏதும் போர் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சாத்தியக்கூறு பெருமளவு இல்லை என்று துருக்கிய பிரதமர் ரெசெப் தயிப் எர்தோவான் கூறியுள்ளார்.

பெரிய அளவில் ஏதும் ஆயத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளிப்படையாகத் தெரியவில்லை என்றுதான் மேலை நாடுகளின் இராணுவ வட்டாரங்களும் கூறுகின்றன.

ஆனால் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு துருக்கியில் பெருத்த மக்கள் ஆதரவு இருக்கும். எந்தவொரு தாக்குதலுக்கும் குறிப்பிடத் தகுந்த பின்விளைவுகளும் இருக்கும் என்பது நிச்சயம்.

இராக்கிய எல்லைக்கு அருகே துருக்கிய காவலரண்
இராக்கிய எல்லைக்கு அருகே துருக்கிய காவலரண்

துருக்கிய இராணுவம் சிறிய தாக்குதல்களை அல்லது வெறும் விமானத் தாக்குதல்களை மட்டும் நடத்துவது என்பதோடு நிறுத்திக் கொண்டால்,அதற்கு சிறிய பின்விளைவுகள்தான் இருக்கும்.

ஆனால் அவைகளில் கூட ஆபத்துக்கள் இருக்கின்றன.

கிர்க்குக் நகருக்கு அல்லது அருகில் உள்ள எண்ணெய்க் கிணறுகளுக்கு அச்சுறுத்தல்களை விளைவிப்பது போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் ஒரு பெரிய நெருக்கடியை தோற்றுவித்து, இராக்கிய படைகளையோ, அமெரிக்காவையோ அல்லது இரானையோகூட மோதலில் ஈடுபடுத்திவிடக்கூடும்

கவலையில் அமெரிக்கா

அதிபர் புஷ்
அதிபர் புஷ்

நிச்சயமாக அமெரிக்கா கவலையில் இருக்கிறது. இராக்கில் இதற்கு மேலும் இராணுவ சவால்களை சந்திக்க அதற்கு வசதிகள் இல்லை.

மேலும்,அங்கு அது இருப்பதற்கே, துருக்கியின் ஆதரவு அமெரிக்காவுக்கு பெருமளவில் தேவைப்படுகிறது.

மேலும், முதலாம் உலகப்போர் காலத்தில் துருக்கியில் ஆர்மீனியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டது ஒரு இனப்படுகொலை என்று கண்டனம் செய்து, அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி ஒன்று வாக்களித்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே, அமெரிக்க-துருக்கி உறவுகள் ஒரு சிக்கலான கட்டத்தில் உள்ளன.

அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையேயான உறவுகளில் விரிசல் ஏற்படும் ஆபத்தை உணர்ந்தோ என்னவோ, அமெரிக்க காங்கிரசில், இந்த பிரேரணைக்கு ஆதரவு குறைந்து வருவது போல் தோன்றுகிறது.

குழப்பத்தில் இருக்கும் ஒரு பிரதேசத்தில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முயலும் துருக்கியின் ஆட்சியாளர்களுக்கு, இவை எல்லாம் ஒரு சிக்கல் நிறைந்த கணக்குகள்தான்.


Posted in Abdullah, al-Assad, al-Maliki, America, Armenia, Attack, Bashar al-Assad, Cicek, defence, Defense, Diesel, Erdogan, Extremism, Extremists, Foreign, Gas, Government, Govt, guerrillas, Gul, incursion, International, Iraq, Kurd, Kurdish, Kurdistan Workers Party, Military, NATO, Nouri al-Maliki, oil, Ottoman, parliament, Petrol, PKK, Rebels, Syria, Talabani, Terrorism, Terrorists, Turkey, Turks, US, USA, War, World | Leave a Comment »

Tamil Eelam Fighter jet: LTTE vs Sri Lanka

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 3, 2007

தமிழ் ஈழத்தின் போர் விமானம்?

Tamil Eelam Eezham LTTE Sri Lanka jet Plane

எல்.டி.டி.ஈ. தரப்பில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டதாக ஈ-மெயில் மூலம் தகவல்கள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டு
வருகிறது. எனினும், யார் இந்த புகைப்படத்தை வெளியிட்டார்கள் என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை. இலங்கை அரசை மிரட்ட வேண்டும் என்பதற்காக விடுதலைப்புலிகள் இரு விமானங்களை பறக்க விட்டனர்.
எனவே அவர்களிடம் உண்மையான விமானங்கள் இல்லை என்ற விமர்சனம் எழுந்ததையடுத்து இந்த புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

Posted in Airplane, Ammunitions, Arms, Attack, Attacks, Bombs, dead, Eelam, Eezam, Eezham, Extremism, Extremist, Extremists, Fighter, Freedom, Images, Jets, LTTE, Photos, Pictures, Plane, Prabhagaran, Prabhakaran, Srilanka, Tamil, Terrorism, terrorist, Terrorists | 2 Comments »

Nuke Deal With US Draws Domestic Opposition – Indian Communists Say US Nuclear Accord Lacks House Support

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

எண்ணங்கள்: 1…2…3… ஷாக் – ஞாநி – ஓ பக்கங்கள் பதில்


இடதுசாரிகளின் இரட்டைவேடம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதையும், இடதுசாரிகளின் தயவில்தான் இந்த அரசு ஆட்சியினைத் தொடர்கிறது என்பதையும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதும் இடதுசாரிக் கட்சிகள்தான். இந்தியாவும் அமெரிக்காவும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தது முதல் அதை எதிர்த்து வருவதும் அதே இடதுசாரிக் கட்சிகள்தான்.உண்மையிலேயே, இந்த ஒப்பந்தம் ஏற்படுவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று இடதுசாரிகள் கருதியிருந்தால், ஆரம்ப நிலையிலேயே இந்த முயற்சியைக் கைவிடச் செய்திருக்க முடியும். தொழிலாளர் காப்பீட்டுத் திட்டப் பிரச்னையிலும், பொதுத்துறை நிறுவனங்களின் விஷயத்திலும் அரசை அடிபணிய வைக்க முடிந்த இடதுசாரிகளால் இதுபோன்ற தேசத்துக்கே ஆபத்தான விஷயத்தில் ஏன் தலையிட்டுத் தடுத்து நிறுத்த முடியவில்லை?

இந்திய மற்றும் அமெரிக்க தரப்பினர், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்திற்கு ஒரு முழுவடிவமும் கொடுத்து, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நவம்பர் மாதம், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அமெரிக்கக் காங்கிரசுக்கு உரிமை உண்டே தவிர, இந்த ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றங்களையும் இனிமேல் செய்ய முடியாது என்பதும் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம்.

இந்தியத் தரப்பைப் பொருத்தவரை, இதுபோன்ற ஒப்பந்தம் என்பது ஓர் அரசின் நிர்வாக உரிமை (Executive Prerogative). அரசு சம்மதித்தால், இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். ஆனால், அமெரிக்கக் காங்கிரசுக்கு இதில் மாற்றம் செய்ய எப்படி உரிமை இல்லையோ, அதேபோல, இந்திய நாடாளுமன்றமும் இந்த உடன்படிக்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இதை நிராகரிக்கும் உரிமையும் கிடையாது.

இதெல்லாம், இடதுசாரிகளுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆரம்பம் முதலே, தாங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதுபோலப் பேசுகிறார்களே தவிர, இந்த ஒப்பந்தம் கூடாது என்று அரசைத் தடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடருமானால் எங்களது ஆதரவு இந்த அரசுக்குக் கிடையாது என்று இடதுசாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தால், அரசு இந்த விஷயத்தைக் கைவிட்டிருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.

அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில், எந்தவித பயமுமின்றி மன்மோகன் சிங் அரசு செயல்பட்ட விதத்தில் இருந்து, இடதுசாரிகளின் மறைமுக ஆதரவுடன்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இல்லையென்றால், “”அணுசக்தி ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமில்லை” என்று தைரியமாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதிலிருந்தே, இந்த விஷயத்தில் இடதுசாரிகளிடம் பேசி வைத்துக் கொண்டுதான் அரசு செயல்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாக இந்த ஒப்பந்தம் பற்றி இதுவரை நாடாளுமன்றத்தின் அனுமதி பெற அவசியம் இல்லாமல், நிர்வாக விஷயமாக இதைக் கையாண்டிருக்கிறது அரசு. இனிமேல், நாடாளுமன்றம் வேண்டாம் என்று நிராகரித்தால் மட்டும் போதாது. இந்த அரசு கவிழ்ந்தால் மட்டுமே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகும். இந்த நிலைமை ஏற்படும்வரை இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களே தவிர, ஒப்பந்தத்தைக் கைவிட நிர்பந்திக்கவில்லையே, ஏன்?

நாளைக்கே, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு என்று வந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றுவோம் என்கிறார் ஜோதிபாசு. அதாவது, “இந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை’ என்று பிரதமர் கூறுவதை சொல்லாமல் சொல்கிறார் அவர்.

தேச நலனுக்கு ஆபத்து என்று தெரிகிறது. தங்களது கட்சியின் கொள்கைகளுக்கு மாறானது என்று அவர்களே கூறுகிறார்கள். இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டிய துர்பாக்கியம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அரசுக்கு ஆதரவு மட்டும் தொடரும் என்கிறார்கள்.

ஏன் இந்த இரட்டை வேடம்?

——————————————————————————————————————————-
அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதியா?

என். ராமதுரை

இந்தியாவில் அமெரிக்காவும் பிற நாடுகளும் அணுமின் நிலையங்களை அமைக்க வழி செய்வது தொடர்பாக அமெரிக்கா – இந்தியா இடையே இப்போது விரிவான உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதுபற்றி நாட்டில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியா இதன் மூலம் அமெரிக்காவிடம் அடிமைப்பட்டு விட்டது போல ஒரு சாரார் கூறுகின்றனர். ஆளும் கட்சித் தரப்பினரோ இதை வன்மையாக மறுக்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியான ஒப்பந்தம் ஏற்படுவது இது முதல் தடவையல்ல. இந்தியாவில் அமெரிக்க உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுவதும் முதல் தடவையல்ல. சொல்லப்போனால் இப்படியான ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க உதவியுடன் 1969-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையம் மும்பை அருகே தாராப்பூரில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல கனடாவின் உதவியுடன் ராஜஸ்தானில் 1972-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையமும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

அணுமின் நிலையம் தொடர்பான கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் இப்போது இந்தியா மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதாக நினைத்தால் அதுவும் தவறு. தாராப்பூர் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும், கனடிய உதவியுடன் ராஜஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும் நாம் இப்போது சொல்லப்படுகிற கட்டுதிட்டங்களை – கண்காணிப்பு ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தோம்.

தமிழகத்தில் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் அணுமின்சார நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இது குறித்து ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சகலவித கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் கீழ்தான் செயல்படும். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ஒப்பந்தங்களில் இவை அடங்கியுள்ளன. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ரஷியாவுடனான ஒப்பந்த விவரங்கள்~அவசியமில்லை என்ற காரணத்தால்~ வெளியிடப்படவில்லை.

ஆகவே அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டால் அது அமெரிக்காவிடம் சரணாகதி ஆவது போலவும் ரஷியாவுடன் அதே மாதிரியான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால் அப்படியான சரணாகதி இல்லை போலவும் வாதிப்பதும் தவறு.

அணுசக்தி விஷயத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா ஒரு விதமாகவும் ரஷியா வேறு விதமாகவும் நடந்து கொள்வதாக நினைத்தால் அதுவும் தவறு. அணுசக்தியைத் தவறாக (அணுகுண்டு தயாரிப்புக்கு) பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு நாட்டுக்கும் அணுசக்தி எரிபொருள், அணுஉலை இயந்திரங்கள், அணுமின் நிலைய இயந்திரங்கள் முதலியவற்றை அளிக்கக்கூடாது என்று கூறும் 45 நாடுகள் அடங்கிய குழுவில் அமெரிக்காவும் ரஷியாவும் அங்கம் வகிக்கின்றன.

இந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க ஆரம்பத்தில் உதவிய அமெரிக்காவும் கனடாவும் பின்னர் பின் வாங்கியதற்குக் காரணம் உண்டு. இந்தியா 1974ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டை வெடித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதைச் சார்ந்த பல நாடுகளும் இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான எந்த உதவியையும் அளிக்க மாட்டோம் என்று அறிவித்தன. இந்தியா மீது பல தடைகளை அமல்படுத்தின. 1988-ல் இந்தியா நிலத்துக்கு அடியில் பல அணுகுண்டுகளை வெடித்தபோது இத் தடைகள் நீடித்தன. இந்தியா மீது 1974-க்குப் பிறகு விதிக்கப்பட்ட தடைகள் இந்தியாவுக்கு ஒருவகையில் நல்லதாகியது. இந்தியா சொந்தமாக அணு ஆராய்ச்சி உலைகளை அமைத்துக் கொண்டது. சொந்த முயற்சியில் பல அணு மின் நிலையங்களை அமைத்துக் கொண்டது. தேவையில்லை என்று கருதி அமெரிக்கா பின்பற்றாத தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பாக முன்னேறியுள்ளது. அது தோரியத்தைப் பயன்படுத்துகிற முறையாகும்.

ஆனால் இவ்வளவு முன்னேற்றம் இருந்தும் எதற்கு நாம் சுமார் 30 ஆண்டுக்காலத்துக்குப் பிறகு அணுசக்தி விஷயத்தில் பிற நாடுகளின் உதவியை நாட வேண்டும்? முதலாவதாக இப்போது இந்தியாவுக்கு மின்சாரப் பசி உள்ளது. அணுசக்தி மூலம் தான் இதைத் தீர்க்க முடியும். இந்தியா சொந்தமாக உருவாக்கியுள்ள அணுமின் நிலையங்கள் பெரும்பாலானவற்றின் திறன் 220 மெகாவாட் அளவில் உள்ளது. அண்மையில்தான் 500 மெகாவாட் அணுமின் உலையை நிர்மாணித்துள்ளோம். 1000 மெகாவாட் திறனை எட்ட இன்னும் அதிக காலம் ஆகலாம். தவிர, “”நாட்டில் போதுமான யுரேனியம் இல்லை” என்று இந்திய அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த யுரேனியத்தை நாம் விலை கொடுத்து வாங்கத் தயாராக இருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், அணுசக்திப் பொருள் அளிப்போர் குழு பின்பற்றும் கட்டுதிட்டங்கள், சர்வதேச அணுசக்தி அமைப்பின் விதிமுறைகள் ஆகியவை குறுக்கே நிற்கின்றன.

தோரியம் முறை இருக்கிறதே என்று கேட்கலாம். இத் தொழில்நுட்பம் சிக்கலானது. சுருங்கச் சொன்னால் முதலில் யுரேனியத்தை அணு ஆலைகளில் “”அவிக்க” வேண்டும். பிறகு ஈனுலைகளில் (Breeder Reactors) யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் பயன்படுத்தி தோரியத்தை “”அவிக்க” வேண்டும். இப்படியான பல கட்டங்களுக்குப் பிறகுதான் அணுமின் நிலையங்களுக்கான யுரேனியம் – 233 என்ற அணுப் பொருள் கிடைக்கும். இதற்கெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

அணுசக்தி விஷயத்தில் உலகில் பல கட்டுதிட்டங்கள் இருப்பதற்குக் காரணம் உள்ளது. அணுமின் நிலையம் இருந்தால்போதும். ஒரு நாடு அணுகுண்டு தயாரித்துவிட முடியும். உலகில் சர்வாதிகாரப் போக்கு கொண்ட நாடுகள் அணுகுண்டு தயாரித்து உலகை மிரட்டும் நிலை ஏற்படக்கூடாது என்பதே இவற்றின் நோக்கம். அணு உலையில் (அணுமின் நிலையத்திலும்) யுரேனியம் அடங்கிய நீண்ட குழல்கள் உண்டு. அணுமின் நிலையம் செயல்படும்போது “”முக்கால் வேக்காட்டில்” இந்த தண்டுகளை வெளியே எடுத்தால் ஏற்கெனவே ஓரளவு எரிந்துபோன யுரேனியத்தில் வேறு பல அணுசக்திப் பொருள்கள் இருக்கும். இவற்றில் புளூட்டோனியமும் ஒன்று. இந்த புளூட்டோனியத்தைத் தனியே பிரித்தால் அதைக் கொண்டு அணுகுண்டு செய்து விடலாம். ஆகவே எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் யுரேனியத் தண்டுகள் எப்போது வெளியே எடுக்கப்படுகின்றன அவை என்ன செய்யப்படுகின்றன என்பதற்கு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தானியங்கி கேமராக்களும் வைக்கப்படும்.

இந்தியா இப்போது எல்லா அணுமின் நிலையங்களிலும் இந்தக் கண்காணிப்பு ஏற்பாடுகளைப் பின்பற்ற உடன்பட்டுள்ளது. ஆனால் ஒன்று. இந்தியா ராணுவ காரியங்களுக்கான அணு உலைகள் என்று பட்டியலிட்டு அறிவிக்கின்ற அணு உலைகளில் இந்தக் கண்காணிப்பு இராது. ஆகவே இந்தியா அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிப்பதைப் பொருத்தவரையில் எந்தப் பிரச்னையும் கண்காணிப்பும் இராது. எரிந்த யுரேனியத் தண்டுகளிலிருந்து அணுப் பொருள்களைப் பிரிப்பதில் இந்தியாவின் உரிமை பறிபோய்விட்டது போல கூக்குரல் கிளப்பப்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சு நடத்தி இதற்கான ஆலை அமைக்கப்படும் என இப்போதைய ஒப்பந்தம் கூறுகிறது. தவிர, இந்தியாவில் உள்ள ராணுவ காரிய அணு உலைகளுக்கு இது விஷயத்தில் கட்டுப்பாடு கிடையாது.

இந்தியா விரும்பினால் மேற்கொண்டு அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்க இயலாதபடி இப்போதைய ஒப்பந்தம் தடுப்பதாகக் கூறுவதும் தவறு. அணுகுண்டுகளை மேலும் செம்மையாகத் தயாரிக்க அணுகுண்டுகளை அடிக்கடி வெடித்துச் சோதிக்கும் முறையை மேலை நாடுகள் முன்பு பின்பற்றின என்பது வாஸ்தவமே. ஆனால் இப்போதெல்லாம் புதிய வகை அணுகுண்டின் திறன் எப்படி இருக்கும் என்பதை கம்ப்யூட்டர் மூலமே கண்டறியும் முறை வந்து விட்டது. ஆகவே புது வகை அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தாக வேண்டிய அவசியமும் இல்லை எனலாம்.

இப்போது அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தமானது நாம் அமெரிக்காவிடமிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அணுமின் நிலைய அணு உலைகள், தேவையான இயந்திரங்கள் ஆகியவற்றையும் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிடமிருந்து யுரேனியத்தை வாங்குவதற்கும் உதவி புரியும்.

இப்படியாக வாங்குவது எல்லாம் அடிப்படையில் வர்த்தக பேரங்களே. இவற்றை அளிக்கப்போவது அந்தந்த நாடுகளின் தனியார் நிறுவனங்களே. அவை இந்தியாவுக்கு இவற்றை விற்றுப் பணம் பண்ணத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு அவ்வப்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டு அரசின் மீது நிர்பந்தத்தைச் செலுத்தி~இந்தியாவுக்கு சாதகமான வகையில்~ பிரச்னையைத் தீர்க்க முயலும். ஆகவே அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

——————————————————————————————————————————-

அரசுக்கு “கெடு’ ஆரம்பம்?

நீரஜா செüத்ரி

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டு அமல் செய்யக்கூடாது, அப்படியே கிடப்பில் போட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýக்கு விடுத்த இறுதி எச்சரிக்கையை அடுத்து, “”இரண்டின் எதிர்காலம்” என்ன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதில் ஒன்று, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எதிர்காலம், மற்றொன்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம்.

இந்த அரசு போய்விடுமா என்பதல்ல, இப்போதுள்ள கேள்வி, இந்த அரசு எப்போது போகும் என்பதுதான் கேள்வி. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2008 ஜனவரியிலோ அல்லது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளோ நடைபெறலாம்; அது காங்கிரஸின் விருப்பத்தைப் பொறுத்தது.

இனி அரசியல் களத்தில் அரங்கேறக்கூடிய காட்சிகளைப் பின்வருமாறு ஊகிக்கலாம்.

காட்சி 1:

பிரதமர் எடுத்த முடிவுப்படி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க விருப்பம் இருந்தால் எங்கள் அரசை ஆதரியுங்கள், இல்லையென்றால் உங்கள் விருப்பப்படி செய்துகொள்ளுங்கள் என்று இடதுசாரிகளிடம் முகத்துக்கு நேராகக் கூறிவிடுவது. இப்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் கெüரவத்தைக் காக்க இதுவே நல்ல வழி என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.

நாட்டு நலனில் அக்கறை கொண்டுதான் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என்று மக்களிடம் விளக்கி, அடுத்த பொதுத் தேர்தலை இடதுசாரிகள் போன்ற தோழமைக் கட்சிகளின் துணை இல்லாமல் சந்தித்து, வெற்றிபெற்று மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை அமைப்பது; அப்படியே ஒப்பந்தத்தையும் தொடர முடியும் என்று அத் தலைவர்கள் கூறுகின்றனர்.

அப்படி என்றால் உடனே தேர்தலை நடத்தியாக வேண்டும். தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன்தான் தீர்மானிக்கும் என்றாலும், அரசு கவிழ்ந்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம்.

மன்மோகன் அரசு ஆட்சியை இழந்தால், இடைக்கால அரசால் ஒப்பந்தத்தை அமல் செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்க முடியாது, எனவே ஒப்பந்தமே ரத்தாகிவிடும்.

காட்சி 2:

இடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றாலும் சிறுபான்மை அரசாகவே காலம் தள்ளுவது, அப்படி இருக்கும்போதே இந்த ஒப்பந்தத்தை அமல்செய்ய தொடர் நடவடிக்கைகளை எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானிப்பது. அதற்காக மாயாவதி கட்சியின் 18 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அந்தக் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஆளும் கூட்டணியின் வலுவை 219-லிருந்து 237 ஆக உயர்த்துவது.

ஆதரவை விலக்கிக் கொண்டாலும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து இடதுசாரி கட்சிகள் வாக்களிக்காது, எனவே மேலும் சில மாதங்களுக்கு அரசை இப்படியே ஓட்டலாம்.

அப்போது இடதுசாரிகளுக்கு தருமசங்கடமான நிலைமை ஏற்படும். தாங்கள் தீவிரமாக எதிர்த்த ஒப்பந்தத்தை அமல் செய்யும் அரசை நீடிக்க விடுவதா, அல்லது அதைக் கவிழ்ப்பதற்காக மதவாதிகள் என்று முத்திரை குத்திய பாரதீய ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதா என்பதே அது.

காட்சி 3:

ஏதாவது ஒரு சாக்கு சொல்லி, அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் நிறுத்திவிடுவது, அரசை காப்பாற்றிக் கொண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார் ஆவது.

அப்படி என்றால் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிக்க முடியாது. அவர்தான் இந்த ஒப்பந்தத்தைத் தீவிரமாக ஆதரித்துப் பேசினார், எனவே தார்மிக அடிப்படையில் அவர் விலகியே தீரவேண்டும்.

அதே சமயம் பிரதமரின் முடிவுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சி விலகி இருக்க முடியாது. அவரது கருத்தைத்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஆதரித்தது, சோனியா காந்தியும் ஒப்புதல் வழங்கினார்.

“”இந்த ஒப்பந்தம் இறுதியானது, இதை ஏற்க முடியாவிட்டால் ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று பேசி இடதுசாரிகளை பிரதமர் மன்மோகன் சிங் உசுப்பிவிட்டதை, சோனியா காந்தி விரும்பவில்லை.

அதிகாரிகளுடன் பேசுவதையும் செயல்படுவதையும் மிகவும் விரும்பும் மன்மோகன் சிங், “”இடதுசாரிகளுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்” என்று அவர்களில் யாரோ சொன்ன மந்திராலோசனையைக் கேட்டு, பெரிய வம்பில் மாட்டிக்கொண்டுவிட்டார்.

சிங்குர், நந்திகிராம் விவகாரங்களில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பதாலும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் உள்பூசல் உச்ச கட்டத்தில் இருப்பதாலும் உடனடியாக மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடப்பதை இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் என்றாலும் வேறு வழியில்லாவிட்டால், அதற்கும் அவர்கள் தயாராகிவிடுவார்கள்.

காட்சி 4:

பிரதமர் பதவியிலிருந்து மன்மோகனை மாற்றிவிட்டு, புதியவரைக் கொண்டுவருவது. சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆறப்போடுவது. மக்களை பாதிக்கும் விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி மக்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பது. அமெரிக்காவுடன் நெருங்கியதால் புண்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்களுக்கு மருந்து போடுவது.

இதையெல்லாம் செய்யக் கூடியவர், மார்க்சிஸ்டுகளையும் பாரதீய ஜனதாவையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரிந்தவர் – ஜார்ஜ் புஷ்ஷை சமாதானப்படுத்தக்கூடியவர் – பிரணாப் முகர்ஜிதான். வங்காளியான முகர்ஜியைப் பிரதமராக்குவதற்காகவே இடதுசாரிகள் இப்படி நாடகம் ஆடுகின்றனரோ என்றுகூட சில காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ளூர சந்தேகம் இருக்கிறது.

இந்தச்சூழலைக் கையாளும் திறமை முகர்ஜியைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மையே ஆனாலும், “”இவரைப் பிரதமராக்கினால் நாளை நம் செல்வாக்கு என்ன ஆகும்” என்ற அச்சம் சோனியா காந்திக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.

————————————————————————————————————————————————

விதியின் விளையாட்டு!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது என்று கூறினால், இப்போது அது சிறிது அதிகபட்சமாகத் தோன்றும். அதுவும், அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்கும் மனப்போக்கில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசுக்குக் கடிவாளம் போல இடதுசாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அவ்வாறு கூறுவது கொஞ்சம் அதிகமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சற்று உற்றுநோக்கினால், நமது பார்வைகள் மாறுகின்றன. சர்வதேச விவகாரமொன்றில் தேசிய நலனைக் காப்பதற்காக பிரகாஷ் காரத் போராடிக்கொண்டிருக்கிறார்; ஆனால், முக்கியமான மாநிலங்களில் ஒழுங்கீனமாக நடக்கும் தனது கட்சியைச் சேர்ந்த சொந்தத் தோழர்களையே கட்டுப்படுத்த முடியாமல் அவர் தவிப்பது தெரிகிறது. இதுதான் பிரச்சினை.

தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பலம் பொருந்தி இருப்பதற்குக் காரணம், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அக் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கே ஆகும். மேற்கு வங்கக் கட்சியில் உள்ள பிரச்சினைகளை காரத்தால் எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், “காலத்துக்கு ஏற்ப கட்சியின் கொள்கைகளில் மாற்றம் தேவையா? புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா?’ என்பது போன்ற தத்துவார்த்தப் பிரச்சினைகள்தான் மேற்கு வங்கத்தில் எழும் பிரச்சினை. அதோடு, புத்ததேவ் பட்டாச்சார்ஜி, ஜோதி பாசு போன்ற பெருமைக்குரிய தலைவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, மேற்கு வங்க அரசுக்கும் கட்சிக்கும் இடையே செயல்பாடுகளில் ஒற்றுமை நிலவுகிறது.

ஆனால், கேரளத்தில் இதற்கு நேர்மாறான நிலை. அக் கட்சிக்குள் நடந்துகொண்டிருக்கும் உள்பூசல், பொறுத்துக்கொள்ளத் தக்க எல்லைகளைத் தாண்டிச் சென்றுவிட்டது. முதலாளித்துவ ஊழல் கூட்டத்தின் பிடியில் கட்சி சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது; அதைக் கண்டு அக் கட்சியின் தோழர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அங்கு ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தலையிடுவதைப்போல ஒரு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுத்தது. ஆனால், இன்னும் ஒழுங்கீனம்தான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில், கட்சியின் மாநிலக் குழுச் செயலாளரையும் முதலமைச்சரையும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தது கட்சி; அவர்கள் பகிரங்கமாக மோதிக்கொள்வதை அந் நடவடிக்கையால்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. முதல்வரின் ஆதரவாளர்களைக் “கட்டுப்படுத்தி’ வைக்கும் மாநிலச் செயலரின் நடவடிக்கைகளுக்கு இப்போதைக்கு அரசியல் தலைமைக் குழு தடை போட்டிருக்கிறது. அந்தத் தடையால் பயன் விளையும் என்று யாரும் நினைக்கவில்லை.

கேரளத்தில் மக்களின் நம்பிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இவ்வளவு வேகமாக இழந்துவிட்டது என்பது குறித்துத்தான் இப்போது பிரகாஷ் காரத் கவலைப்பட வேண்டும். தமது கட்சி மீது எந்த விமர்சனம் வந்தாலும் பொறுத்துக்கொள்வார்கள்; ஆனால், ஊழல் புகார்கள் கூறப்படுவதைத்தான் தொழிலாளி வர்க்கத்தாலும் இடதுசாரி அறிவுஜீவிகளாலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. அனைத்துப் புகார்களுமே ஒரு குறிப்பிட்ட கோஷ்டியின் மீதே கூறப்படுகின்றன. அதைச் சீர்படுத்துவதற்கு பெயரளவுக்குத்தான் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. நோய் குணமாக வேண்டுமானால் அறுவைச் சிகிச்சையே செய்ய வேண்டும் என்னும் பொழுது, அமிர்தாஞ்சன் பூசிக்கொண்டிருக்கிறது, கட்சியின் அரசியல் தலைமைக் குழு. இதைப் பார்த்து யாரும் ஏமாந்துவிட மாட்டார்கள்.

இதைத் தவிர, காரத் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த பிறகு, அடுத்த தேர்தலிலும் மீண்டும் இடது முன்னணியே தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரளத்தில் ஒரு வரலாற்றையே உருவாக்கக்கூடிய அளவுக்கு அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களையெல்லாம் கைப்பற்றுவதற்கான அதிரடி நடவடிக்கையை கேரள அரசு எடுத்தபொழுது, அந்த அளவுக்கு பொதுமக்கள் அந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தொடக்கத்தில், உயர் நீதிமன்றமே அதற்கு ஆதரவாக இருந்தது.

ஆனால், விரைவிலேயே தான் அத்தகைய நிலையை எடுத்ததற்கு வெட்கப்படுவதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம், அரசின் அந்த நடவடிக்கைகளையெல்லாம் அப்பட்டமான அதிகாரப் போட்டி சீர்குலைத்துவிட்டதுதான். அந்தச் சீர்குலைவுச் செயலில் முன்னிலையில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இடது முன்னணி ஆட்சிக்கு நீடித்த பெருமையைத் தேடித் தந்திருக்க வேண்டிய ஒரு நடவடிக்கையானது, அதிகாரப் போட்டியால், ஓர் அவமானகரமான அத்தியாயமாக மாறிவிட்டது. அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, அடுத்துக் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே மக்களால் தூக்கி எறியப்படத்தக்க நிலைக்கு இடது முன்னணி அரசின் மதிப்பு தாழ்ந்துவிட்டது.

கேரளத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி.க்களே தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால் என்ன செய்வார் காரத்? பிரகாஷ் காரத் போன்ற பலமான தலைவரைக் கொண்ட வலுவான இடதுசாரிக் கட்சியொன்று தில்லியில் இருக்க வேண்டியது இன்று நாட்டின் தேவை. ஆனால், கொழுத்த மோசடிப் பேர்வழிகளைத் தலைவர்களாகக் கொண்ட பணக்கார நிறுவனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறிவிட்டதென்றால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்; சுய லாபத்துக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே இவ்வளவு சுலபமாக சீர்குலைவுச் செயலில் ஈடுபடுமென்றால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இறுதியில், தான் நினைத்ததை ஜார்ஜ் புஷ் சாதித்துக்கொள்ள காரத் அனுமதிப்பாராயின், அதுவே விதியின் இறுதி விளையாட்டாக ஆகிவிடும்!

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

———————————————————————————————————-

தேர்தலைச் சந்திக்க கட்சிகள் தயாரா?

நீரஜா செüத்ரி

இந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் காங்கிரஸýக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருப்பதை அடுத்து, “கால அவகாசம் தேடும்’ அரசியல் விளையாட்டுதான் தில்லியில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

எந்தக் கட்சியும் இப்போது தேர்தலைச் சந்திக்கத் தயாரில்லை. எனினும், 2008, மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்குமாறு மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதற்கும், கட்சி அமைப்புகளைத் தயார் செய்வதற்கும் இன்னும் சிறிது கால அவகாசம் இருந்தால் நல்லது என்றே ஒவ்வொரு கட்சியும் நினைக்கும்.

“ஹைட் சட்ட’த்தின் விளைவுகள் குறித்து ஆராய ஒரு குழுவை அமைப்பதன் மூலமும், நாடாளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலமும் அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னையில், “”ஒன்று, நீங்கள் திருப்திகரமான விளக்கத்தைத் தாருங்கள்; அல்லது, நாங்கள் உங்களுக்குத் திருப்திகரமான விளக்கத்தை அளிக்கிறோம்” என்ற நிலையில் காங்கிரஸýம் இடதுசாரிக் கட்சிகளும் நிற்கின்றன. அடுத்த இரு மாதங்களிலும் தமது நிலைகளை விளக்கிப் பிரசாரம் செய்ய இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.

பிரகாஷ் காரத் சென்னையிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்; ஏ.பி. பரதன் கோல்கத்தாவிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார். இரு பிரசாரப் பயணங்களும் விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 8-ம் தேதி பிரமாண்ட பேரணியுடன் நிறைவடைகின்றன. இரு அணுமின் உலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மும்பைக்குச் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் மூலமாக, நாட்டின் அணுமின் திட்டங்களில் எந்த சமரசத்தையும் தாம் செய்துகொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அவரது நோக்கம்.

அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டால், அதாவது சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுப்பதற்கு, அக் கட்சியின் மத்தியக் குழு அதிகாரம் அளித்திருக்கிறது. ஆனால், அக் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு இப்போது தேர்தலைச் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நந்திகிராமும் சிங்குரும் அக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.

ஹால்டியாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. காங்கிரஸýடன் மம்தா பானர்ஜி உடன்பாடு செய்துகொண்டதே அதற்குக் காரணம். மக்களவைத் தேர்தல் வந்தால் அதிலும் இது தொடரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மம்தாவும் அதை மறுக்கவில்லை; அதோடு, அணுசக்தி உடன்பாட்டில் பிரதமரின் நிலையை ஆதரித்துள்ளார் அவர்.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்றுவரும் உள்கட்சிப் பூசலைப் பார்க்கும் பொழுது, தற்போதைய ஆதரவை அங்கு அக் கட்சி நிலைநிறுத்திக்கொள்வது கடினம் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான நிலையை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருப்பதால் நாடு முழுவதும் முஸ்லிம்களின் ஆதரவு அதற்குக் கிடைக்கக்கூடும். ஆனால், அதை வாக்குகளாக மாற்றுவது அக் கட்சிக்குக் கடினம். ஏனென்றால், நாட்டின் பல பகுதிகளில் அக் கட்சிக்குச் செல்வாக்கு இல்லை. 10,000-த்திலிருந்து 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அக் கட்சி தோல்வியுற்ற தொகுதிகளில் வேண்டுமானால், அக் கட்சிக்குப் பயன் கிடைக்கலாம்.

பாரதீய ஜனதாவும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. இடதுசாரி ~ ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (3-வது அணி) ஆகியவற்றுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் நடுவில் சிக்கி நசுங்கிப் போய்விடுவோம் என்று அஞ்சுகிறது பாரதீய ஜனதா கட்சி. தேர்தலுக்கு அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னை காரணமாகிவிட்டால், இடதுசாரிகளின் மறுபிரதியாகக் குறுகிப் போய்விடுவோம் என்று பாஜகவில் உள்ள பல தலைவர்கள் கருதுகின்றனர். விலைவாசி உயர்வுப் பிரச்னையோடு, தமக்கே உரித்தான பிரச்னை ஏதாவது கிடைக்காதா என்று அவர்கள் – எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இன்றைய சூழலில் தேர்தலை எதிர்கொள்ள பாரதீய ஜனதாவுக்குத் தலைமை தாங்கக்கூடிய தகுதி படைத்த தலைவர் எல்.கே. அத்வானிதான். இயல்பாகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராகவும் அவர்தான் இருக்க முடியும். வாஜ்பாயோ உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்; ராஜ்நாத் சிங்கின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ்-ûஸப் பொருத்தவரை விரும்பத்தகாத நபராக ஆகிவிட்டார் அத்வானி. பாரதீய ஜனதாவின் முடிவுகளில் தான் தலையிடாமல் விலகிக்கொள்வதாக ஆர்எஸ்எஸ் இப்போது கூறக்கூடும். ஆனால், பூசல்களால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டதுதான்.

நவம்பரில் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் பாஜக வெற்றிபெற்றால், மக்களவைத் தேர்தலிலும் அது அக் கட்சிக்கு உதவுவதாக இருக்கும். அத்வானியின் செல்வாக்கிலும் அதன் தாக்கம் இருக்கும்.

காங்கிரûஸப் பொருத்தவரை, அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அது பின்வாங்க முடியாது. அதன் சாதக, பாதகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அந்த உடன்பாட்டைச் செயல்படுத்துவதைத் தாமதப்படுத்தினால், காங்கிரஸின் அதிகாரத்தை அது பாதிக்கக்கூடும்; சர்வதேச அளவில் அதன் மதிப்பைக் குறைக்கக்கூடும்; இடதுசாரிகளின் நெருக்குதலுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு அதைத் தள்ளிவிட்டுவிடும்; அதோடு, தேச நலனுக்கு விரோதமான எதையோ அக் கட்சி செய்ய முனைந்தது போன்ற ஒரு கருத்தையும் ஏற்படுத்திவிடும்.

இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பது பிரதமரது கெüரவம் மட்டுமல்ல; காங்கிரஸýம் அதன் தலைவர் சோனியா காந்தியும் அந்த உடன்பாட்டைப் பகிரங்கமாக அங்கீகரித்து இருப்பதால் அவர்களின் கெüரவத்தையும் பாதிக்கக்கூடியதாகிவிட்டது இப் பிரச்னை. சோனியாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன்தான் அமெரிக்காவுடன் அந்த உடன்பாட்டை விவாதித்து முடிவு செய்தார்.

எனவே, உடன்பாட்டுக்கு ஆதரவாகப் போராடுவதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இல்லை.

எனவே, 2008 ஏப்ரலில் தேர்தலை எதிர்கொள்வது என்பது அவ்வளவு மோசமான முடிவல்ல என காங்கிரஸ் நினைக்கிறது. அதோடு பாஜகவும் பலமிழந்து காணப்படுகிறது. தேர்தல் வந்தால், ஆந்திரத்திலும் அசாமிலும் காங்கிரஸýக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்; ஆனால், மம்தாவின் துணையுடன் மேற்கு வங்கத்தில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்; கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், தேசியவாதக் காங்கிரஸ் கூட்டுடன் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்.

இன்றைய சூழலில் மத்தியதர வர்க்கத்தின் ஆதரவையும் காங்கிரஸ் பெறக்கூடும். அதே நேரத்தில் விலைவாசி உயர்வால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; அதோடு, முஸ்லிம்களிடமிருந்தும் அக் கட்சி அன்னியப்பட்டு நிற்கிறது.

காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை கடந்த தேர்தலில் பெற்றதைப் போன்ற வெற்றியை இப்போதும் பெறுமா என்று கூற முடியாது. எனவே, மம்தா, எச்.டி. தேவெ கெüடா மற்றும் பல மாநிலங்களில் உள்ள சிறிய குழுக்களின் ஆதரவு காங்கிரஸýக்கு மிக முக்கியமானதாகிவிடும்.

மக்களவை உறுப்பினர்களிடம் தேர்தலைப் பற்றிப் பேசினாலே கதிகலங்கிவிடுகிறார்கள். இடைத் தேர்தலைத் தவிர்ப்பதற்காக தேசிய அரசை அமைப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்றுகூட கடந்த வாரம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிலர் கூறிக்கொண்டிருந்தனர்.

இப்போதைய நெருக்கடியின் இறுதி முடிவு எப்படி இருந்தாலும் சரி; இதுவரை சில விஞ்ஞானிகளும் கொள்கை வகுப்பாளர்களும் மட்டுமே விவாதித்துக்கொண்டிருந்த அணுவிசைப் பிரச்னை குறித்தும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்கள் விவாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் கோயில் ~ மசூதி போன்ற உணர்ச்சிகரமான விஷயங்கள் தேர்தல் பிரச்னைகளாக இருந்ததற்குப் பதிலாக, வரவிருக்கும் தேர்தல்களில் அணுசக்தியும் வெளியுறவுக் கொள்கையும் பிரச்னைகளாக இருக்கும் என்பது நிச்சயம்!

Posted in abuse, Accord, Alliance, America, Army, Artillery, Assembly, Atom, Atomic, Attack, Bombs, Brinda, China, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Comunists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), deal, defence, Defense, Duty, EU, Europe, Force, House, Jothibasu, Karat, Left, LokSaba, LokSabha, Manmohan, Marines, MP, Navy, NCC, NSS, Nuclear, Nuke, Opposition, Pakistan, Party, Planes, Pokhran, Politics, Power, Prakash, Rajasthan, Reserve, Russia, Somnath, Sonia, Soviet, support, US, USA, USSR, Wars | 1 Comment »

USS Nimitz loaded with hi-tech weapons to dock off Chennai coast – Issues, Details

Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007

எண்ணங்கள்: USS நிமிட்ஸ்: தேவையில்லாத ஆர்பாட்டம்
—————————————————————————————————–

“யுஎஸ்எஸ் நிமிட்ஸ்’-சில சந்தேகங்கள்

டி.எம்.விஸ்வநாதன்

யுஎஸ்எஸ் நிமிட்ஸ் சிவிஎன் 68.. அணு உலைகளைக் கொண்டுள்ள, அமெரிக்காவுக்குச் சொந்தமான, போர் விமானங்களைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல். அது சென்னை துறைமுகத்துக்கு வரவிருப்பது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சிறிய ரக சாதாரண போர்க்கப்பல்கள் இதற்கு முன்னரும் சென்னை துறைமுகத்துக்கு வந்து சென்றுள்ளன. அப்போதெல்லாம் எந்தவிதப் பிரச்னையும் எழுந்ததில்லை. ஆனால் இப்போது என்ன வந்தது இந்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு? இதுவும் வழக்கம்போல அரசியல்தானா என்ற கேள்வி சாதாரண குடிமகனுக்கு ஏற்படுவது சகஜம்.

ஆனால் இந்த விஷயத்தில் வலுவான எதிர்ப்புக்குரல் கொடுத்து தொடங்கி வைத்த அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா தொடங்கி பாஜக, பாமக விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனைத்து தலைவர்களுமே பாராட்டுக்கு உரியவர்கள். காரணம் ஒரு மிகப்பெரிய அபாயத்திற்குத்தான் அவர்கள் தடை போட நினைக்கிறார்கள்.

அப்படி “நிமிட்ஸில்’ என்னதான் அபாயம் உள்ளது? இதற்கு விடைகாணும் முன் நிமிட்ஸ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

செஸ்டர் வில்லியம் நிமிட்ஸ். டெக்சாசின் பிரெடிரிக்ஸ்பர்க் நகரில் பிறந்தவர். அமெரிக்க நாவல் அகாதெமியில் தனது பணியைத் தொடங்கிய இவர் அமெரிக்க கப்பற்படைக்காக மாபெரும் சாதனைகளைப் புரிந்தவர். புகழ்பெற்ற பியேர்ல் ஹார்பர் (டங்ஹழ்ப் ஏஹழ்க்ஷர்ன்ழ்) மீதான தாக்குதல் உட்பட பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் கூட அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தவர் நிமிட்ஸ். சென்னைக்கு வரவிருக்கும் கப்பலுக்கு அவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.

அதுதான் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலும்கூட. 1972-ம் ஆண்டு மே 13-ம் தேதி துவக்கி வைக்கப்பட்ட நிமிட்ஸ் கப்பல் 1975-ல் தனது முழுநேரப் பணியைத் தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை சர்வதேச கடல் பரப்பில் பல்வேறு இடங்களில் போர்ப்பணியாற்றி வருகிறது.

விமானம் தாங்கிப் போர்க்கப்பலான நிமிட்ஸ் அணு சக்தியால் இயங்கக்கூடியது. இதற்கேற்றார்போல் அதில் இரண்டு மென்நீர் (லைட் வாட்டர்) அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே நிமிட்ஸ் அணுசக்தியால் இயங்கக்கூடிய கப்பல் என்பதுதான் இப்போதைய சர்ச்சைக்கே காரணம். இதே கப்பல் இந்து மகா சமுத்திரத்தில் இதற்கு முன்னர் இரண்டு 3 முறை பயணித்துள்ளது. ஆனால் இந்தியாவின் எந்தத் துறைமுகத்திலும் இது நின்றதில்லை. இப்போது வரவேண்டிய அவசியம் என்ன?

ஹென்றி ஜெ.ஹைட் அமெரிக்க-இந்திய அமைதி அணு சக்தி ஒத்துழைப்புச் சட்டம்- 2006-க்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்து சில மாதங்கள்தான் ஆகின்றன. இந்நிலையில் நிமிட்ஸ் அணுசக்தி கப்பல் இந்தியாவுக்கு அதுவும் சென்னைக்கு வருவதுதான் சந்தேகங்களை அதிகப்படுத்துகின்றன.

சென்னைக்கு மிக அருகில் கல்பாக்கத்தில் நமது அணுசக்தி ஆய்வு உலைகளும் மையங்களும் உள்ளன. மேலும் அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இன்னும் 40 அணுஉலைகள் கூடுதலாக அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

அவ்வாறு அமையும் பட்சத்தில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளத்தில் கூடுதலான அணு உலைகள் அமைய வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் நியூக்ளியர் பார்க் அதாவது அணுசக்தி ஆய்வுகள் சார்ந்த அமைப்புகள் ஒரே கூரையின் கீழ் அல்லது ஒரே இடத்தில் அமைவதுதான் நிர்வாகத்திற்கும் போக்குவரத்துக்கும் எளிதானது என்கிற ரீதியில் தமிழகத்தில் கூடுதல் அணு உலைகள் அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இதற்கேற்றார்போல் அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் இந்திய அரசோ அமெரிக்க அரசோ இரு நாட்டு மக்களுக்கும் தெரியும் வகையில் இதுவரை எந்தவித வெளிப்படையான அணுகுமுறையும் கொண்டிருக்கவில்லை. நமது நாடாளுமன்றத்தில்கூட, தேசத்தின் நலன் சார்ந்த இவ்வளவு பெரிய ஒப்பந்தம் இதுரை விவாதிக்கப்படவே இல்லை.

சரி, நாடாளுமன்றத்திற்கு வெளியே கூட இதுபற்றி வெளிப்படையாக விவாதிக்க சில சிக்கல்கள் உள்ளன. இதற்கு நமது மத்திய அரசு சொல்லும் ஒரே காரணம் தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களைப்பற்றி யாரும் கேள்வி எழுப்பக்கூடாது என்பதுதான். இந்திய அணுசக்தி சட்டம் 1962-ன் 18-வது ஷரத்தானது, “”அணுசக்தி திட்டங்கள் அல்லது திட்டமிடப்பட்டுள்ள அணுசக்தி மையங்கள்பற்றி கடந்தகால, நிகழ்கால, எதிர்காலத் தகவல்களை வெளியிடவோ, கேட்கவோ கூடி விவாதிக்கவோ கூடாது” என்கிறது. எனவேதான் அணுசக்தி தொடர்பான விஷயங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்கள் அடக்கியே வாசிக்கின்றன.

இத்தகைய சூழலில் நிமிட்ஸ் சென்னை துறைமுகத்துக்கு அருகே வர அமெரிக்க அரசும், நமது மத்திய அரசும் இத்தனை பிரம்ம பிரயத்தனங்களை எடுப்பதற்கு காரணம் ஒரு வேளை இந்த கப்பலின் “வருகை’ என்பதே இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்குமோ என்பதுதான் விஷயமறிந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இரு நாடுகளுமே பரஸ்பரம் அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டதோ என்ற மற்றொரு சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

சரி, இவையெல்லாம் ஒருபுறம் இருக்க எத்தகைய பாதிப்புகள் நிமிட்ஸôல் எழும் என்றும் பார்க்கவேண்டியுள்ளது. கப்பல் ஏற்படுத்தலாம் எனக்கருதப்படும் கதிர்வீச்சு அபாயம்தான் மிக முக்கியமான பிரச்னையாக தற்போது எழுப்பப்பட்டு வருகிறது. “”ஒருவேளை கதிர்வீச்சு ஏற்பட்டால்” என்பது அவ்வளவு வலுவான வாதமாகத் தெரியவில்லை. ஏனெனில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அக்கப்பலில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். எனவே அவ்வாறு பாதிப்பு இதுவரை ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. அப்படியானால் என்னதான் பிரச்னை என்ற கேள்வி எழுகிறது.

நிமிட்ஸ் கப்பலில் உள்ள இரண்டு அணு உலைகளும் இயங்க வேண்டுமானால் இயக்கத்தின்போது அந்த அணு உலைகளைக் குளிர்விக்க தண்ணீர் வேண்டும். அது கடலில் இருந்து எடுக்கப்பட்டு அணு உலைகள் குளிர்வித்த பின் மீண்டும் கடலுக்குள்ளேயே விடப்பட்டுவிடும்.

கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவை ஒரே இடத்தில் இருப்பதால் அந்தப் பகுதி மட்டும்தான் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் நிமிட்ஸ் மெரீனா கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படுவதால் அந்தப்பகுதி பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாமல் கப்பலில் உள்ள அணுஉலைகள் உருவாக்கும் அணுக்கழிவுகளை எங்கே கொண்டுபோய் அவர்கள் கொட்டுகிறார்கள்? தெளிவில்லை. ஒருவேளை கடலுக்குள்ளேயே அவற்றைக் கொட்டினால்? விளைவு…மிகவும் விபரீதமானது. ஏனெனில் அமெரிக்காவில் உள்ள பல அணு உலைகள் உருவாக்கிய டன் கணக்கான அணுக்கழிவுகளையே என்ன செய்வது என்று இன்னமும் அந்நாட்டு அணுசக்திக்கு எதிரான, அணுசக்தி ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு எதிரான கோஷம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில் அந்நாட்டில் இதுபோன்ற விஷப்பரீட்சைகளை அமெரிக்க அரசு செய்ய முடியாத நிலையில் உள்ளது. எனவே அணுக்கழிவுகளை, கட்டாயம் ஆள் இல்லாத நடுக்கடலுக்குள் கொட்டியாக வேண்டிய நிலையில் உள்ளது. இதுதான் மிகவும் அதிர்ச்சியான உண்மை என்கின்றனர் அணுசக்தி எதிர்ப்பாளர்களும் ஆராய்ச்சியாளர்களும்.

அப்படிப்பார்த்தால் சர்வதேச கடல்பரப்பில் எத்தனை இடங்களில் அணுக்கழிவுகளை அமெரிக்கா கடலுக்குள் கொட்டியுள்ளதோ என்று எண்ணிப்பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது.

இத்தகைய கழிவுகள் இப்போதைக்கு உடனே பிரச்னையை ஏற்படுத்தாது. இன்னும் சில ஆண்டுகளில் அல்லது கழிவுகளை கடலுக்குள் பத்திரமாக ஒரு பெட்டியில் போட்டு இறக்கியிருந்தாலும் கூட கடலில் ஏற்படும் புவி மாற்றங்கள் காரணமாக அதில் கசிவு ஏற்பட்டால் முதலில் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகும்.

குறிப்பாக மீன்கள். மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை உணவாகக் கொள்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் எதிர்ப்பாளர்களின் வாதமாக இருக்கிறது. இந்த வாதத்தை புறம் தள்ளிவிட முடியாது. ஏனெனில், கல்பாக்கத்திலேயே அங்குள்ள கடல்பரப்பில் மீன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஆனால் இதனை நமது அணுசக்தித் துறை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை என்பது வேறு விஷயம்).

மேலும் தமிழகத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக கடற்கரை சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ள பகுதியாகவும் உள்ளது. அத்தகைய தருணங்களில் சென்னைக் கடற்கரையோரம் வந்து நிற்கும் நிமிட்ஸ் தனது கழிவுகளை அந்த இடத்திலேயே கொட்டினால் அது கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் வாயிலாகவோ, அல்லது பேரலைகள் வாயிலாகவோ கடற்கரைக்கு கதிர்வீச்சை ஏன் கொண்டு வராது என்பது மற்றொரு வலுவான வாதமாக உள்ளது.

எனவேதான் பல்வேறு அபாயங்களைக் கருத்தில் கொண்டு நிமிட்சை நமது கடல் எல்லைக்குள் அனுமதிக்காமல் இருப்பது நலம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, கல்பாக்கத்தில் மருத்துவராகப் பணியாற்றிவரும் டாக்டர் புகழேந்தி, “இராக் போரின்போது அமெரிக்காவுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நாடு ஆஸ்திரேலியா. ஆனால்அந்த நாடே நிமிட்ஸ் கப்பலை தங்கள் நாட்டு எல்லைக்குள் அனுமதிக்கவில்லை. அப்படி என்றால் அந்த நாட்டு அரசுக்கும் கப்பற்படை அதிகாரிகளுக்கும் நிமிட்ஸ் கப்பலின் உண்மையான முகம் தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். ஏன் ஆஸ்திரேலியா இக்கப்பலை அனுமதிக்கவில்லை? நாம் ஏன் அனுமதிக்கிறோம்? இதற்கு விடை கண்டாலே விஷயம் புரிந்துவிடும்” என்றார்.

மொத்தத்தில் “நிமிட்ஸ்’ நிமிடத்துக்கு நிமிடம் நமது மக்களின் ஆரோக்கியத்துக்கு உலை வைக்காமல் இருந்தால் சரி.

———————————————————————————————————

யு.எஸ். கப்பலால் அணுக் கதிர்வீச்சு ஏற்படுமா?: 3 இடங்களில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு – டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் ஏ.ஆர். ரெட்டி தகவல்
சென்னை, ஜூலை 1: சென்னை துறைமுகத்துக்கு ஜூலை 2-ம் தேதி வரவுள்ள “யு.எஸ்.எஸ். நிமிட்ஸ்’ கப்பலில் இருந்து அணுக் கதிர்வீச்சு வெளியாகிறதா என்பதை மூன்று இடங்களில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் ஏஆர். ரெட்டி தெரிவித்தார்.

சென்னை வரவுள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பல் “நிமிட்ஸ்’ குறித்து சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியது:

“நிமிட்ஸ்’ கப்பலில் இருந்து கதிரிவீச்சு வெளியாகிறதா என்பதைக் கண்காணிக்க, அந்தக் கப்பலைச் சுற்றி ரோந்து கப்பல் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்படும். துறைமுகத்தில் இருந்தபடியும் ஒரு குழு கப்பலைக் கண்காணிக்கும். மேலும் இரண்டு மொபைல் ஆராய்ச்சிக் கூடங்கள் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இதோடு மண், நீர், காற்று, உணவு ஆகியவற்றிலும் கதிர்வச்சு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தச் சோதனை கப்பல் வருவதற்கு முன், கப்பல் வந்தபின் மற்றும் கப்பல் சென்றபின் என மூன்று முறை நடத்தப்படும்.

“நிமிட்ஸ்’ கப்பல் நிற்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு வேறு கப்பலோ, படகுகளோ அனுமதிக்கப்படாது.

இந்தக் கப்பலில் 190 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. இது கப்பலை இயக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கல்பாக்கத்தில் 220 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் குடியிருப்புகள் உள்ளன. இதனால் எந்த பாதிப்பு ஏற்பட்டதில்லை.

“நிமிட்ஸ்’ கப்பல் துறைமுகத்திலிருந்து 3.7 கிலோ மீட்டர் (இரண்டு கடல் மைல்கள்) தொலைவில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது. இதுவரை 10 வெளிநாட்டு அணு ஆயுதப் போர் கப்பல்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்தக் கப்பல்களால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றார் அவர். தமிழ்நாடு கப்பல்படை அலுவலர் (பொறுப்பு) வான் ஹால்டன் கூறியது: ஜூலை 2-ம் தேதி வரும் இந்தக் கப்பலில் 450 உயர் அதிகாரிகளும், 5,000 ஊழியர்களும் உள்ளனர். இந்தக் கப்பல் 5-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.

அரசு அனுமதியின் பேரிலேயே இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வருகிறது. போதுமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

————————————————————————————————-

அமெரிக்க கப்பலில் வந்த போர் வீரர்கள் சமூக சேவை- சென்னை பள்ளியில் குப்பையை அள்ளினார்கள்

சென்னை, ஜுலை. 2-

அமெரிக்கா போர் கப்பல் சென்னை வந்தது. அவர்கள் கடற்கரை ஓட்டல்களில் உல்லாசமாக பொழுதை கழிக்கிறார்கள்.

அமெரிக்காவின் மிகப் பெரிய விமானத்தாங்கி கப்பலான நிமிட்ஸ் வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத் துடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளது. இதன் பயண திட்டத்தில் சென்னையும் இடம் பெற்று இருந்தது.

இந்த கப்பல் அணுசக்தி மூலம் இயங்க கூடியது. எனவே அணு கசிவு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சென்னை வர எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மத்திய அரசு அனுமதித்ததன் மூலம் திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு சென்னை வந்தது.

தற்போது சென்னை மெரீனா கடற்கரைக்கு கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் அது நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் கப்பல் பணியாளர் கள், அதிகாரிகள் உள்பட 6 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை நகருக்குள் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

இன்செட் வரும் உல்லாசம்

அவர்கள் உல்லாசமாக பொழுதை போக்கி மகிழ்வ தற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைவரும் படகு மூலம் சென்னை துறை முகத்துக்கு அழைத்து வரப்படு கிறார்கள். முதல் படகு இன்று காலை கரைக்கு வந்தது.

இரவில் அனைவரும் சென்னை ஓட்டல்களில் தங்கு கின்றனர். இதற்காக முக்கிய ஸ்டார் ஓட்டல்கள் சென்னை யில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் அவர்களுக்காக “புக்” செய்யப்பட்டுள்ளன. அங்கு அமெரிக்க சுதந்திர தின விழாவை கொண் டாடுகிறார்கள். அப்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதே நேரத்தில் அவர்கள் பல்வேறு சமூக சேவை பணி களிலும் ஈடுபடுகின்றனர். அனாதை இல்லம், மன நல காப்பகம் போன்றவற்றுக்கு சென்று உதவி செய்கிறார்கள்.

நிமிட்ஸ் போர் கப்பல் அணுசக்தி மூலம் இயக்குவதால் அதில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கசிவு ஏற்பட்டால் சென்னை நகரமே அழிந்து போகும் அளவுக்கு ஆபத்தானகும்.

எனவே அணு கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என் பதை கண்காணிக்க இந்திய அணு விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்திய போர் கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென் றுள்ளனர். நிமிட்ஸ் கப்பல் அருகே இந்திய கப்பல் முகா மிட்டுள்ளது. அணு கசிவை கண்டு பிடிக்கும் கருவி அதில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 மணி நேரமும் கண் காணிப்பார்கள். 5-ந்தேதி அமெரிக்க கப்பல் புறப்பட்டு செல்கிறது. அதுவரை விஞ்ஞானிகள் அங்கேயே தங்கி இருப்பார்கள்.

அதே போல 2 வேன்களில் விஞ்ஞானிகள் குழு கடற்கரை யில் சுற்றி வரும். அவர்களும் கருவி மூலம் அணு கசிவை கண்காணிப்பார்கள்.

பொதுவாக அணுசக்தி கப்பலை கடற்கரையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் நிறுத்துவது வழக்கம். ஆனால் சென்னையில் 3 கிலோ மீட் டருக்கு அப்பால் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி துறை பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏ.கே.ரெட்டி கூறினார்.

கப்பலில் அணு ஆயுதம் எதுவும் எடுத்து செல்லவில்லை என்று அமெரிக்க ராணுவ அதி காரிகள் தெரிவித்தனர்.

இந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம், 252 அடி அகலம் உள்ளது. 23 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 65 போர் விமானங்கள் உள்ளன. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம், ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் உள்ளன. 30 வினாடியில் ஒரு விமானம் கப்பலில் இருந்து புறப்படும் அளவுக்கு வசதி உள்ளது.

1975-ம் ஆண்டு மே 3-ந் தேதி இந்த கப்பல் கட்டி முடிக் கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 32 வருடமாக பணியில் இருக்கிறது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் பசிபிக் கடல் பகுதி ராணுவ கமாண்டராக இருந்து பெரும் சாதனை புரிந்த ஜெஸ்டர் நிமிட்ஸ் பெயர் இந்த கப்ப லுக்கு சூட்டப்பட்டது.

கப்பலில் 53 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி உள் ளது. அதில் 6 டாக்டர்கள் பணி யாற்றுகிறார்கள். தனியாக 5 பல் டாக்டர்களும் இருக்கின்றனர். இதில் முகமது கமிஸ் என்ற இந்திய வம்சாவளி டாக்டரும் பணியாற்றுகிறார்.

கடல் நீரை நல்ல நீராக மாற்றி பயன்படுத்த அதற்கான தனி தொழிற்கூடம் உள்ளது. இவற்றின் மூலம் தினமும் 4 லட்சம் காலன் நல்ல தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை வீரர்களின் தேவைக் கும் மற்ற பணிகளுக்கும் பயன் படுத்தப்படுகிறது.

உணவு பொருட்களை 70 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகளும் உள்ளன.

கப்பலிலேயே தனி தபால் நிலையம் உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கடிதங்களை இது கையாள்கிறது. தினமும் தபால் நிலைய கடிதங்களை பட்டுவாடா செய்யும். இதற்காக தினமும் வேறு கப்பல்கள் மூலமாகவோ அல்லது விமானங்கள் மூலமாகவோ இங்கு கடிதங்கள் கொண்டு வரப்படும்.

வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் வழிபாடு நடத்துவதற்காக 3 வழிபாட்டு தலங்களும் கப்பலில் உள் ளன.

கப்பலில் தேவைக்கு மேல் 50 சதவீதம் ஆயுதங்களை வைத்து கொள்ளவும், விமா னங்களுக்கு தேவையான 2 மடங்கு எரி பொருளை சேமித்து வைக்கவும் வசதி உள்ளது. விமானங்களை உள் பகுதிக்குள் கொண்டு சென்று பழுது பார்க்கும் தனி ஒர்க்ஷாப் உள்ளது.

தனி உணவு கூடம், மாநாட்டு அறை, பொழுது போக்கு கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. மொத்தத் தில் ஒரு சிறிய நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும் உள்ளன. இந்த கப்பலை மிதக்கும் நகரம் என்று அழைக்கின்றனர்.

————————————————-
அணுவிசைக் கப்பல்கள்

என். ராமதுரை

அண்மையில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் “நிமிட்ஸ்’ சில நாள்கள் சென்னை துறைமுகம் அருகே நங்கூரம் பாய்ச்சி நின்றது. அது அணுவிசையால் இயங்குவதால் அக்கப்பலை சென்னை துறைமுகத்தில் அனுமதிக்கலாகாது என்று சில வட்டாரங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

விமானம் தாங்கிக் கப்பல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று டீசலில் இயங்குவது. இரண்டாவது வகை அணுவிசையில் இயங்குவது. உலகில் இப்போதைக்கு அமெரிக்காவிடம் மட்டுமே அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன.

பிரான்ஸ் இப்போதுதான் அணுசக்தியால் இயங்குகிற விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இவ்வகையான கப்பலை உருவாக்க சுமார் 7 ஆண்டுகள் பிடிக்கும். நிமிட்ஸ் கப்பலை உருவாக்க ஆன செலவு ரூ. 18,000 கோடி. அமெரிக்காவிடம் அணுவிசையில் இயங்கும் 11 விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன.

வடிவில் மிகப் பெரியதான இவ்வகைக் கப்பல் மெதுவாகச் செல்லக்கூடியது. எதிரி நாடு ஒன்று தாக்க முற்பட்டால் இக் கப்பலினால் எளிதில் அத் தாக்குதலிலிருந்து தப்ப இயலாது. ஆகவேதான் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுடன் அதற்குக் காவலாக போர்க்கப்பல்கள் செல்லும். மிக நவீன ஏவுகணைகள் வந்துவிட்ட இந்த நாள்களில் விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டிக் காப்பது எளிது அல்ல.

அமெரிக்காவிடம், வானிலிருந்து இரவு பகலாகத் தொடர்ந்து கண்காணிக்க வேவு செயற்கைக் கோள்கள் உள்ளன. எதிரி நாட்டின் கப்பல்களை மற்றும் நீர்மூழ்கிகளை அமெரிக்காவால் எளிதில் கண்காணிக்க இயலும். எதிரி விமானங்கள் விஷயத்திலும் இது பொருந்தும். எதிரி நாடு செலுத்தக்கூடிய ஏவுகணைகளை எதிர்கொண்டு நடுவானில் அவற்றை அழிப்பதற்கான ஏவுகணைகளும் அமெரிக்காவிடம் உள்ளன.

உலகின் எந்த நாடாக இருந்தாலும், அந்த நாட்டுக்கு அருகே அணுவிசை விமானம் தாங்கிக் கப்பலை நிறுத்தி, அந்த நாட்டின் மீது கடும் விமானத்தாக்குதலை நடத்துவதற்கு இக்கப்பல் நன்கு உதவும். ஆப்கன் போர், முதல் இராக் போர், இரண்டாம் இராக் போர் ஆகியவற்றின்போது அமெரிக்காவின் இவ்வகைக் கப்பல்கள் முக்கியப் பங்கு பெற்றிருந்தன.

இந்தக் கப்பலை நடமாடும் ராணுவ விமானத் தளம் என்றும் சொல்லலாம். மேல் தளத்தில் நிறைய போர் விமானங்களை நிறுத்த இடம் இருக்கும்; ஓடுபாதையும் இருக்கும். விமானம் தாங்கிக் கப்பலில் நீண்ட ஓடுபாதை அமைக்க முடியாது. ஆகவே “கேட்டபுல்ட்’ மாதிரியில் ஓர் ஏற்பாடு உள்ளது. போர் விமானம் எடுத்த எடுப்பில் 300 கிலோ மீட்டர் வேகம் பெற இது உதவுகிறது.

எல்லாக் காலங்களிலும் விமானங்கள் மேல் தளத்தில் நிறுத்தப்பட மாட்டா. லிப்ட் மூலம் உட்புறத்தில் அமைந்த கீழ் தளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே நிறுத்தி வைக்கப்படும். தேவையான போது மேல் தளத்துக்குக் கொண்டு வரப்படும்.

சாதாரண விமானம் தாங்கிக் கப்பலில் அடிக்கடி டீசலை நிரப்பிக் கொண்டாக வேண்டும்.

அணுவிசை விமானம் தாங்கிக் கப்பலுக்கு எரிபொருள் பிரச்னையே கிடையாது. அக்கப்பலில் உள்ள அணு உலையானது, தொடர்ந்து பல ஆண்டுகளுக்குக் கப்பல் இயங்குவதற்கான ஆற்றலை அளித்துக் கொண்டிருக்கும். உதாரணமாக நிமிட்ஸ் கப்பல் 1975 ஆம் ஆண்டில் செயலுக்கு வந்தது. புதிதாக எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் இன்றி அது 23 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்பட்டது. 1998 வாக்கில் புதிதாக எரிபொருள் நிரப்பப்பட்டது. இனி அது மேலும் சுமார் 25 ஆண்டுகள் செயல்பட்டு வரும்.

இவ்விதக் கப்பலின் அணு உலையில் மிகுந்த செறிவேற்றப்பட்ட யுரேனியம் பல குழல்களில் நிரப்பப்படும். பின்னர் கட்டுகட்டாகப் பல குழல்கள் அருகருகே வைக்கப்பட்டிருக்கும். (செறிவேற்றப்பட்ட யுரேனியம் என்பது குறிப்பிட்ட வகை யுரேனிய அணுக்கள் மிகுதியாக உள்ள யுரேனியமாகும்). யுரேனியம், இயல்பாக நியூட்ரான்களை வெளிப்படுத்தும். இந்த நியூட்ரான்கள் அருகில் உள்ள குழல்களில் அடங்கிய இதர யுரேனிய அணுக்களைத் தாக்கும்போது மேலும் நியூட்ரான்கள் வெளிப்பட்டு மிகுந்த வெப்பம் தோன்றும். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி தோற்றுவிக்கப்படும். இந்த நீராவியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அந்த மின்சாரம் கப்பலின் அடிப்புறத்தில் உள்ள ராட்சத சுழலிகளைச் சுழல வைக்கும்போது கப்பல் நகரும்.

ஒருவகையில் இது அந்தக் காலத்தில் நிலக்கரியைப் பயன்படுத்திய ரயில் என்ஜின் நீராவியால் இயங்கியதைப் போன்றதே ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் கப்பல்கள் அனைத்துமே நிலக்கரி மூலம் இயங்கின. பின்னர் கப்பல்களை இயக்க ராட்சத டீசல் என்ஜின்கள் வந்தன. ஆனால் விமானம் தாங்கிக் கப்பல்களைப் பொருத்தவரையில் அவை மறுபடி நீராவிக்கே வந்துள்ளன. ஒரு முக்கிய வித்தியாசம் – நீராவியைத் தயாரிக்க செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. விமானம் தாங்கிக் கப்பலின் அணு உலைகளில் எவ்வளவு செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது என்பது மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

எந்த ஓர் அணுசக்திப் பொருளிலிருந்தும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய கதிரியக்கம் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். விமானம் தாங்கிக் கப்பல்கள், அணுவிசை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றில் பணியாற்றும் மாலுமிகள் பாதிக்கப்படாதபடி, இவற்றில் அடங்கிய அணு உலைகளிலிருந்து கதிரியக்கம் வெளியே வராதபடி தடுக்க அணு உலையைச் சுற்றிக் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டு.

அணுவிசையில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் உள்ளன.

இந்தியாவிடம் உள்ள இரு விமானம் தாங்கிக் கப்பல்களும் வெளிநாடுகளிடமிருந்து வாங்கப்பட்டவையே. இவை டீசலில் இயங்குபவை. இந்தியா இப்போது இதே மாதிரியில் சொந்தமாக விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டுவதில் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில் அணுவிசையில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதற்கு ஆயத்தங்கள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்.)

Posted in ADMK, Aircraft, Arms, Atom, Attack, Backgrounders, Ban, Boat, carrier, Coast, Communists, defence, Defense, Details, energy, Fighter, Foreign, Fuel, Govt, Gulf, Harbor, Harbour, International, Iran, Iraq, Issues, Jets, Madras, Navy, Nimitz, Nuclear, Ocean, Pakistan, Party, Politics, Protest, Sea, Ship, Spy, Submarines, Terrorism, US, USA, USS Nimitz, Vessel, warship, Weapons, World | 1 Comment »

India’s RAW & CBI Backgrounder – Infiltrations

Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007

உளவுத் துறையில் ஊடுருவல்

டி.புருஷோத்தமன்

நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் முக்கிய இடம் வகிப்பது “ரா’ (ரிசர்ச் அண்டு அனலிசிஸ் விங்) என்னும் உளவுத் துறையாகும்.

உலகின் தலைசிறந்த அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ. (சென்ட்ரல் இண்டெலிஜென்ஸ் ஏஜென்சி) அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு “ரா’ உளவு அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

1968 செப்டம்பர் 18-ல் “ரா’ அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ரூ. 2 கோடி முதலீட்டில் 250 ஏஜெண்டுகளுடன் இது செயல்படத் தொடங்கியது. பின்னர் 200 ஏஜெண்டுகளாக அதிகரிக்கப்பட்டு தற்போது 10 ஆயிரம் ஏஜெண்டுகளுடன் ரூ.1500 கோடி பட்ஜெட்டில் விரிவான அளவில் செயல்பட்டு வருகிறது. இதை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தவர் ஆர்.என்.காவ்.

இதன் தலைமையகம் தில்லியிலும் அதன் பிராந்திய அமைப்புகள் நாட்டின் இதர பகுதிகளிலும் அமைந்துள்ளன. “ரா’ இயக்குநர் முக்கியத் தகவல்களை பிரதமரிடம் உடனுக்குடன் தெரிவிப்பார். நாடாளுமன்றத்துக்கு இத்தகவல்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

அண்டை நாடுகள் அனைத்திலும் நடைபெற்றுவரும் சம்பவங்கள் நமது நாட்டுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்னும் உளவுத் துறை நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களைத் தூண்டிவிட்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களையும் நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறியாட்டம் ஆடுவதற்கு ஐ.எஸ்.ஐ. முக்கிய காரணமாகும்.

மேலும் பஞ்சாபில் சீக்கியர்களிடையே தீவிரவாதத்தை விதைக்கும் பணியிலும் பாகிஸ்தான் உளவுத் துறை ஈடுபட்டது.

இவற்றையெல்லாம் முறியடிக்கும் முக்கியப் பணியை “ரா’ மேற்கொண்டது. 1983-93 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானில் இந்திய உளவு அமைப்பின் ஏஜெண்டுகள் 35 ஆயிரம் பேர் பணியாற்றியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

வங்கதேசத்தில் முஜிபுர் ரகுமானின் தலைமையிலான முக்தி வாகினி அமைப்புக்கு “ரா’ உளவுத் துறை முழு ஒத்துழைப்பை அளித்து தனி வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்தது என்பது உலகறிந்த உண்மை.

இத்தகைய முக்கியத்துவம் பெற்ற “ரா’ உளவு அமைப்பில் சதிகாரர்களின் ஊடுருவல் இருந்துவருவது கவலையளிக்கும் விஷயமாகும்.

பிரதமர் அலுவலகத்தில் பல்வேறு உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் “ரா’ அமைப்பின் இணை இயக்குநராக இருந்து வந்தவர் தேவன்சந்த் மாலிக். 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுவரை அங்கு உயர் அதிகாரியாக அவர் பணியாற்றி வந்தார். உளவு அமைப்பின் அனைத்து ரகசியங்களையும் சேகரித்து வைத்திருந்தார்.

இதற்கிடையில் உளவு அமைப்பின் மிக முக்கிய ரகசியங்கள் பிற நாடுகளுக்குக் கசியத் தொடங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அமைச்சரவை செயலகம் புலனாய்வில் இறங்கியது. தேவன் சந்த் மாலிக் மீது கண்காணிப்பு தொடங்கியது. உளவு அமைப்பின் ரகசியங்களை மாலிக்தான் வெளிடுவது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகியது.

எனவே மாலிக் மீது தில்லி காவல் நிலையத்தில் மத்திய அமைச்சரவைச் செயலகத்தில் உள்ள “ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்’ இயக்குநர் அனுஜ் பரத்வாஜ் புகார் செய்தார். போலீஸ் கிடுக்கிப்பிடி இறுகியதை அடுத்து வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார் மாலிக்.

மாலிக்கை பற்றிய விவரங்களை சேர்க்க முற்பட்ட போலீஸôர் அதிர்ச்சி அடைந்தனர். அரசு பதிவேட்டில் அவரைப் பற்றிய விவரம் ஆய்வு செய்யப்பட்டது. மேற்குவங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று அந்தப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த முகவரியில் விசாரித்தபோதுதான், மாலிக் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. வங்கதேசத்துக்காக ஒற்றர் வேலை பார்த்தார் என்பதும் உறுதியானது.

மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில், குறிப்பாக உளவுப் பிரிவுகளில் உளவாளிகள் ஊடுருவது அடிக்கடி நடைபெறும் விஷயமாகிவிட்டது.

2004 ல் “ரா’ உளவுப் பிரிவின் இணைச் செயலராகப் பணியாற்றிவந்த ரவீந்தர் சிங் என்பவரும் இதேபோன்று அமெரிக்க அரசுக்கு ஒற்றராகச் செயல்பட்டார். அவரைப் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கு முன்பாகவே அவர் அமெரிக்காவுக்கு தப்பியோடி விட்டார். அத்துடன் “ரா’ உளவுப் பிரிவின் முக்கிய ஆவணங்களையும் தம்முடன் எடுத்துச் சென்றுவிட்டார்.

நமது நாட்டின் உளவுத் துறையில் பணியாற்றுவோரை அந்நிய நாடுகள் ரகசியமாக விலைகொடுத்து வாங்கி முக்கிய ஆவணங்களைப் பெற்றுவிடத் துடிக்கின்றன.

எனவே இனியாவது இத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை நன்கு ஆய்வுசெய்து பணிப் பொறுப்புகளை அளிக்க வேண்டும். இல்லாவிடில் அரும்பாடுபட்டு சேகரிக்கப்படும் முக்கியத் தகவல்கள் எதிரி நாடுகளுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும் எளிதில் கிடைத்துவிட ஏதுவாகிவிடும். இது நமது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

Posted in 007, agent, Arms, Attack, Bad, Bangladesh, Bengal, Betray, Bribery, Bribes, Budget, CBI, Cells, Cheat, China, CIA, Corruption, counterintelligence, defence, espionage, Extremism, FBI, Foreign, Govt, Infiltration, Influence, Intelligence, International, Investigation, ISI, J&K, Jammu, Kashmir, KGB, kickbacks, Military, Negative, Pakistan, RAW, secret, Spy, Srinagar, Tamil, Terrorism, Terrorists, Undercover, Weapons, World | Leave a Comment »

Healthcare: Blood Pressure

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

முதுமையும் ரத்த அழுத்த நோயும்

கு.கணேசன்

உயர் ரத்த அழுத்த நோய்க்கு நவீன சிகிச்சைகள் பல இருந்தாலும் ஆரோக்கிய உணவின் மூலம் சரியான அளவில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைப் பொதுமக்களுக்குப் புரிய வைப்பதே மருத்துவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று “உலக நலவாழ்வு நிறுவனம்’ வலியுறுத்தி வருகிறது.

ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இளைஞரானாலும் சரி, முதியவரானாலும் சரி, ஒருவருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை ரத்த அழுத்தம் இருந்தால் பாதிப்பு வராது. இதற்கு மேல் அளவு அதிகரித்தால் அதை “உயர் ரத்த அழுத்தம்’ என்கிறோம். இந்நோயைத் தொடக்கத்திலேயே கவனிக்கத் தவறினால் இதயம், மூளை, சிறுநீரகம், கண்கள் ஆகியவற்றுக்கு எமனாக அமைந்துவிடும்.

மாரடைப்புக்கு உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியக் காரணம். இது தவிர, இதயம் வீங்கிச் செயலிழத்தல், கண்களின் விழித்திரையில் ரத்தம் கசிந்து பார்வை இழத்தல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு. ஆகவே உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதுமானது. சிறுநீரக நோய் உள்ளவர்கள் 3 கிராம் வரை சேர்த்துக் கொள்ளலாம். உப்பு மிகுந்த உணவுப் பொருள்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி, முட்டை, இறால், தயிர், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம், சாஸ் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. பூரி, வடை, சமோசா, முறுக்கு, பஜ்ஜி, வறுவல் போன்ற எண்ணெயில் பொரித்த வறுத்த, ஊறிய உணவுகள் மற்றும் சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வேண்டாம்.

தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக்கூட குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகப்படுத்தினால் நல்லது. நார்ச்சத்து, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், கொய்யா, தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள், பீன்ஸ், பட்டாணி, கொண்டைக்கடலை போன்ற பயறுகள், வெந்தயம், பாகற்காய் போன்ற காய்கள், புதினா, கொத்துமல்லி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.

பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுச் சத்துககளுக்கு உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. பழங்கள், காய்கறிகள், கீரைகள் குறிப்பாக காரட், தக்காளி, உருளைக்கிழங்கு, பட்டாணி, அன்னாசி, அவரை போன்றவற்றில் இச்சத்துகள் அதிகம்.

உடலின் உயரத்துக்கு ஏற்ப உடல் எடையைக் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். தினமும் 40 நிமிடங்கள் நடப்பது ரத்த அழுத்தம் சீராக இருக்க மட்டுமல்ல, மாரடைப்பையும் தடுக்கவல்லது.

சிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றைப் புகைக்கும் பழக்கத்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. உடனே இப்பழக்கத்தை நிறத்துங்கள். மதுவுக்கும் விடை கொடுங்கள். யோகாசனம், தியானம் போன்றவை மன அழுத்தத்தைக் குறைத்து மனதுக்கு அமைதியைத் தரக்கூடியவை.

முதுமையில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் மற்றொரு முக்கியப் பிரச்னை “நிலை மயக்கம்’ முதுமை காரணமாக இவர்களுக்கு ரத்தக் குழாய்களின் உட்சுவர் கடினமாகி சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடும். உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல்பகுதிக்கு ரத்தம் செல்ல சிரமப்படும். இதனால் திடீரென ரத்த அழுத்தம் குறைந்து, மூளைக்கு செல்லும் ரத்தம் குறையும். அப்போது மயக்கம் வரும்.

இதனைத் தவிர்க்க கட்டிலின் தலைப் பகுதியை அரை அடி உயர்த்திக் கொள்ளலாம். தொடர்ந்து நீண்ட நேரம் படுப்பதையும் ஒரே இடத்தில் உட்காருவதையும் தவிர்ப்பது நல்லது. சட்டென்று நேராக எழுந்திருக்காமல் தலையைப் பக்கவாட்டில் திருப்பிக்கொண்டு மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்த அழுத்த மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

உலக அளவில் 100 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது. இந்தியாவில் 100-ல் 20 பேருக்கு இந்த நோய் உள்ளது. அதிலும் 60 வயதைக் கடந்தவர்களிடம் பாதிப் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

முதுமை என்பது இயற்கையான விஷயம். தாழ்வு மனப்பான்மை மற்றும் முதுமையின் காரணமாக ஏற்படும் இயலாமையை வெற்றி காண்பதுதான் ரத்த அழுத்தத்தை எதிர்கொள்ள முக்கியமான வழி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர், பொதுமருத்துவர்).

Posted in Advice, Aged, Angina, anginoplasty, Artificial, Attack, BP, Cigarette, cure, Death, diabetes, Diet, Disabled, Disease, Disorder, Doctor, Exercise, Food, Health, Healthcare, Heart, insulin, Jeeva, Kidney, Liver, medical, Obesity, oil, Old, Operation, Organs, Pain, paralysis, Run, smoking, Stroke, Sugar, Tips, Walk, WHO, Youth | 2 Comments »

Battle royale in Tamil Nadu – Kodanadu estate: Jayalalitha vs Karunanidhi

Posted by Snapjudge மேல் ஜூன் 10, 2007

இன்ஸ்பெக்டர் உயிரோடு எரிப்பு: வானூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது கொலை முயற்சி வழக்கு- கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்

புதுச்சேரி, ஜுன். 8-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பற்றி தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி விமர்சனம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய அ.தி.மு.க. வினர் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் வானூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கணபதி தலைமையில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது கருணாநிதியின் உருவ பொம்மையை அ.தி.மு.க. வினர் தீவைத்து எரித்தனர்.

தீயை அணைக்க போலீசார் தண்ணீரை ஊற்றினார்கள். இதனால் ஆவேசம் அடைந்த அ.தி.மு.க.வினர் பெட்ரோல் ஊற்றினார்கள். இந்த பெட்ரோல் ஆரோவில் இன்ஸ்பெக்டர் ஜவகர்லால் மீது பட்டு உடலில் தீப்பிடித்தது. படுகாயம் அடைந்த அவர், புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா உத்தரவின் பேரில் கணபதி எம்.எல்.ஏ. உள்பட 28 பேரை ஆரோவில் போலீசார் உடனடியாக கைது செய்தனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவர். பின்னர் அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கணபதி எம்.எல்.ஏ. உள்பட 28 பேர் மீதும்

  • 307(கொலை முயற்சி),
  • 143 (கலவரத்தில் ஈடுபட கும்பலாக கூடுதல்),
  • 147(கையில் ஆயுதங்கள் வைத்திருத்தல்),
  • 188(அரசு பேச்சை மீறுதல்),
  • 285 (தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு வருதல்),
  • 427(பொருட்களை சேதப்படுத்துதல்) மற்றும்
  • 332 (பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிப்பது) ஆகிய 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

———————————————————————————————

இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற 28 பேர் தவிர அ.தி.மு.க.வினர் அனைவரும் விடுதலை: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஜுன். 9-

கொடும்பாவிகள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து பல இடங்களில் தி.மு.க. வினருக்கும், அ.தி.மு.க. வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டசுமார் 12 ஆயிரம் அ.தி. மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஆங்காங்கே உள்ள கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள அ.தி.மு.க.வினர் தங்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று ஜெயில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி, சேலம் மத்திய சிறைகளில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சிறையில் உள்ள அ.தி.மு.க.வினரை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வானூர் இன்ஸ்பெக்டர் ஜவகரை உயிரோடு தீ வைத்து எரித்து கொல்ல முயன்றதாக கைதான 28 அ.தி.மு.க.வினர் தவிர மற்ற அனைவரையும் விடுவிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

அரசுக்கு எதிராக அ.தி. மு.க.வினர் முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் உரிய முன் அனுமதியும் பெறாமல் மாநிலம் முழுவதும் நடத்திய திடீர் போராட்டத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக் கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆரோவில் காவல் நிலைய குற்ற எண் 207-07-ல் இந்திய காவல் சட்டத்தின் பிரிவுகள் 143, 147, 188, 332, 426 மற்றும் 307 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள 28 பேரை தவிர்த்து மீதமுள்ள அனைவரையும் இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் விடுதலை செய்ய நட வடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு அரசு ஆணை யிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்படாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ள கணபதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 28 அ.தி.மு.க.வினரும் வானூர் இன்ஸ்பெக்டரை எரித்து கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. மனோகரன்,

2. கணபதி எம்.எல்.ஏ.,

3. ஒன்றிய செயலாளர் விசுவநாதன்,

4. முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன்,

5. கோட்டக்குப்பம் நகர செயலாளர் அம்ருதீன்,

6. இக்பால் பாஷா,

7. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சக்கரபாணி,

8. முன்னாள் ஒன்றிய சேர்மன் ஜானகிராமன்,

9. ஜெயலலிதா பேரவை ஒன்றிய தலைவர் முருகையன்,

10. எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் அறிவழ கன்

11. ஆகாசம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன்,

12. மாவட்ட துணை செயலா ளர் நாகம்மாள்,

13. சிவக் குமார்,

14. ராமச்சந்திரன்,

15. முருகையன்,

16. ராஜி,

17. கண்ணன்,

18. அப்துல் ரசித்,

19. இப்ராகிம்,

20. பிரத்திவி ராஜ்,

21. ஜெயவேல்,

22. சுப்பு ராயன்,

23. அய்யப்பன்,

24. மற் றொரு கண்ணன்,

25, சந்திரன்,

26.வெங்கடேசன்,

27. பரசு ராமன்,

28. சிவமணி.

————————————————————————————-

Sunday, June 10, 2007

சேலம் சிறையில் அதிமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம்

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் மாரடைப்பால் சனிக்கிழமை அதிகாலையில் இறந்தார். இதையொட்டி சிறை முன்பு ஏராளமான அதிமுகவினர் கூடினர். சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரையும் விடுதலை செய்ய வேண்டும் என சிறை வளாகத்துக்குள் இருந்த கட்சியினர் வலியுறுத்தினர். இதனால் சுகுமாரன் சடலத்தை, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது தாமதமானது.

சேலம் மாநகர எம்ஜிஆர் மன்ற இணைச்செயலர் எம். சுகுமாரனுக்கு (52) சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் சுகுமாரன் திடீரென்று இறந்தார்.

சுகுமாரின் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்; உடனடியாக அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கவில்லை, சிறையில் உள்ள தங்கள் அனைவரையும் விடுதலை செய்து அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி அங்கு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு கூடியிருந்த அதிமுகவினரை முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி அமைதிப்படுத்தினார். பின்னர் அரசு உத்தரவுப்படி, சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அதிமுக புகார்: சேலம் சிறையில் இருந்த சுகுமாரனுக்கு நெஞ்சு வலி என அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும், உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லை. அதனால் அவர் மரணமடைய நேர்ந்தது. இதற்குச் சிறை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று மாநகர அதிமுக செயலாளர் வெங்கடாசலம் புகார் கூறியுள்ளார்.

தினமணி

————————————————————————————-

Saturday, June 9, 2007

சிறையில் இருக்கும் 38 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

அ.தி.மு.க. வினர் நேற்று நடத்திய மறியல், கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. பி.கே.சேகர்பாபு (ஆர்.கே.நகர்)
2. கு.சீனிவாசன் (பூங்கா நகர்)
3. கே.எஸ்.விஜயகுமார் (கும்மிடிப்பூண்டி)
4. பி.பல ராமன் (பொன்னேரி)
5. கோ.அரி (திருத்தணி)
6. கு.பாண்டு ரங்கன் (அணைக் கட்டு)
7. சி.வி.சண்முகம் (திண்டிவனம்)
8. இரா.குமரகுரு (திருநாவலூர்)
9. செல்வி ராமஜெயம் (புவனகிரி)
10. அருண்மொழித்தேவன் (சிதம்பரம்).

11. கணபதி (வானூர்)
12. சி.சண்முகவேலு (உடுமலைபேட்டை)
13. எஸ்.தாமோதரன் (கிணத்துகடவு)
14. ஏ.கே.சின்ன ராஜ் (மேட்டுப்பாளையம்)
15. ஆர்.பிரேமா (அவினாசி)
16. சி.பொன்னுதுரை (பெருந்துறை)
17. எல்.ரவிச் சந்திரன் (சேலம்-1)
18. பி.தங்க மணி (திருச்செங்கோடு)
19. கே.பி.அன்பழகன் (பாலக்கோடு)
20. ஆர்.டி.கணேசன் (தேனி)

21. ம.குணசேகரன் (மானாமதுரை)
22. மு.சந் திரா (ராஜபாளையம்)
23. அனிதா ஆர்.ராதா கிருஷ் ணன் (திருச்செந்தூர்)
24. எல்.ராதாகிருஷ்ணன் (கோவில் பட்டி)
25. பெ. மோகன் (ஓட்டப்பிடாரம்)
26. போ.சின்னப்பன் (விளாத்திக்குளம்)
27. மு.பரஞ்ஜோதி (ஸ்ரீரங்கம்)
28. செ.சின்னச்சாமி (மருங்காபுரி)
29. ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு)
30. துரைக்கண்ணு (பாப நாசம்)

31. எஸ்.இளமதி சுப்பிர மணியன் (வலங்கைமான்)
32. ஆர்.கே.பாரதிமோகன் (திருவிடைமருதூர்)
33. வீர கபிலன் (பேராவூரணி)
34. ஆர்.நெடுஞ்செழியன் (புதுக் கோட்டை)
35. ந.சுப்பிர மணியன் (குளத்தூர்)
36. செந்தில் பாலாஜி (கரூர்)
37. மா.சந்திரகாசி (வரகூர்)
38. க.ராஜேந்திரன் (ஜெயங் கொண்டம்)

எம்.பி.க்கள்

  1. பெருமாள்,
  2. சையதுகான் தங்க தமிழ்ச் செல்வன்,
  3. காம ராஜ்,
  4. நாராயணன் கோவிந்த ராஜன்

மாலைமலர்

Posted in ADMK, AIADMK, Arrest, Attack, Burnt, dead, Effigy, Inspector, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya TV, Jeyalalitha, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Law, MLA, MP, Order, Protest, Torture, Vaanoor, Vaanur, Vanoor, Villupuram | 1 Comment »

Rajasthan CM – Gujjars talks: Quota’s macabre face in Rajasthan Gujjar ire and police brutality

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மீனா சமூகத்தினர் எதிர்ப்பு

ஜெய்ப்பூர், மே 30: பழங்குடியினர் பட்டியலில் குர்ஜார் சமூகத்தினரைச் சேர்த்தால் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மீனா சமூகத்தினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘ராஜஸ்தானில் மீனா சமூகத்தினர் மட்டுமே பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். அதில் பிற பிரிவினரைச் சேர்ப்பதை ஏற்க முடியாது. அவ்வாறு சேர்ப்பதைத் தடுக்க எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக தியாகங்களைச் செய்ய தயாராக உள்ளனர்’ என்று ராஷ்ட்ரீய மீனா மகாசபை தலைவர் பன்வர் லால் மீனா கூறினார்.

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் வசுந்தரா ராஜே அரசு சேர்த்தால் அவர் மீண்டும் பதவிக்கு வர முடியாது என்றும் அவர் கூறினார்.

தௌசா, பண்டி மாவட்டங்களில் நடந்த தீவைப்பு சம்பவங்களுக்கு மீனா சமூகத்தைச் சேர்ந்த காவல்துறையினரே காரணம் என்று கூறப்படுவது குறித்து கேட்டபோது, “இது ஆதாரமற்ற, முட்டாள்தனமான குற்றச்சாட்டு” என்றார்.

———————————————————————————————-
07.06.07 ஹாட் டாபிக்
குமுதம் ரிப்போர்ட்டர்
நேற்று நந்திகிராம்
இன்று ராஜஸ்தான்

தொடரும் துப்பாக்கிச்சூடு கலாசாரம்

இருள் விலகி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. சரக்கு லாரிகளும், ஏர் பஸ்களும் சீரான இடைவெளியில் ராஜஸ்தான் மாநிலம் தௌசாவின் _ ஜெய்ப்பூர் _ ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தன. அத்தனை அதிகாலையில் அந்த நெடுஞ்சாலையில் திடீரென பொதுமக்கள் குழும ஆரம்பித்தனர். பேருந்தில் சென்றவர்கள் எல்லாம் ஒன்றும் புரியாமல் யோசித்தபடியே சென்று கொண்டிருந்தனர். அதிகாலை ஐந்து மணிக்கு வெறும் நான்காயிரம் பேர்தான் கூடியிருந்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பொதுமக்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்தது.

விஷயம் கேள்விப்பட்ட காவல்துறை, சம்பவ இடத்துக்கு விரைந்தது. என்ன ஏது என்று விசாரித்ததில் அவர்கள் எல்லாம் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் தங்கள் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபடவே குழுமியிருப்பதாகவும் தெரிய வந்தது. அவ்வளவுதான். அடுத்த அரை மணி நேரத்தில் தடியடி. கண்ணீர்ப் புகை. துப்பாக்கிச்சூடு. கலவரம். ரத்தத் தெறிப்பு. எல்லாம் வரிசைக்கிரமமாக நடந்தது. இரண்டு காவலர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பதினான்கு உயிர்கள் காவு வாங்கப்பட்டன.

நந்திகிராமத்தில் நடந்ததற்குக் கொஞ்சமும் சளைக்காமல் நடந்துள்ள இந்தச் சம்பவம் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. துணை ராணுவப்படை எல்லாம் குவிக்கப்பட்டுள்ளது. பதற்றம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது. ராஜஸ்தானின் முக்கிய மாவட்டங்களான டோங்க், ஜெய்ப்பூர், தௌசா, புண்டி, சவாய் மதோபூர், கரௌலி ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? யார் இந்த குஜ்ஜார் மக்கள்? அவர்களுடைய பின்னணி என்ன?

குஜ்ஜார் என்பது கிழக்கு ராஜஸ்தானில் அதிக அளவில் வசிக்கும் மக்களின் இனப்பெயர். குர்ஜார் என்றும் சொல்வார்கள். இவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, ஒசாமா பின்லேடன் புகழ் ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறார்கள். பர்வேஸ் முஷாரப் இருக்கும் பாகிஸ்தானிலும் இருக்கிறார்கள். இந்த இனத்தில் சுமார் ஐநூறு உட்பிரிவுகளும் இருக்கின்றன. ஆரம்பத்தில் குஜ்ஜார் இனத்தில் இந்துக்கள் மட்டும்தான் இருந்தனர். பின்னர், அராபிய முஸ்லிம்கள் இந்த இனத்தால் கவரப்பட்டு, அந்த இனத்தோடு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு, தங்கள் பெயரோடு குஜ்ஜார் என்பதையும் சிலர் இணைத்துக் கொண்டனர். உதாரணம் குஜ்ரன் வாலா, குஜார் கான். இதனால் இந்தியாவில் இந்த இனம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிந்தது. இந்து குஜ்ஜார்கள், முஸ்லிம் குஜ்ஜார்கள். இவை எல்லாமே எட்டாம் நூற்றாண்டில் இருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை நடந்த சங்கதிகள்.

இந்தியாவில் மட்டும் இந்த இன மக்களின் எண்ணிக்கை மூன்று கோடியைத் தாண்டும். இவர்கள் அனைவருக்கும் பொதுவான மொழி கோஜ்ரி. ஆனால், தாங்கள் வசிக்கும் இடத்தில் என்ன மொழி புழக்கத்தில் இருக்கிறதோ, அதைப் பழகிக் கொண்டனர். சர்தார் வல்லபபாய் படேல், இந்தர் குமார் குஜ்ரால், ஃபக்ருதீன் அலி அகமது, ராஜேஷ் பைலட் ஆகிய அரசியல் ஜாம்பவான்கள், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் போன்றோர் இந்த இனத்தவர்கள்தாம். இந்த இன மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், மாடு வளர்ப்பு, பால் விற்பனை.

கிழக்கு ராஜஸ்தானில் மிகப்பெரிய வாக்கு வங்கியைக் கொண்டுள்ள இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள். கண்ணை மூடிக் கொண்டு கை சின்னத்துக்கு வாக்களிப்பவர்கள். ராஜஸ்தானில் குஜ்ஜாரைப் போலவே மேலும் இரண்டு இனங்கள் இருக்கின்றன. ஜாட் மற்றும் மீனா. இவர்களில் ஜாட் இனத்தை 1999_ல் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர்.

ஏற்கெனவே தங்கள் இனம் அரசு வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுகிறது, ஜாட் இன மக்களே உயர்பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்று மனம்புழுங்கிக் கொண்டிருந்த குஜ்ஜார் மக்களை, இந்த அறிவிப்பு சிந்திக்க வைத்தது. ‘இனிமேல் வேலைவாய்ப்பு விவகாரங்களில் ஜாட் இனத்தவரோடு போட்டி போட வேண்டியிருக்கும். இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்குச் சமம். ஆகவே, எங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துவிடுங்கள்’ என்று போராட ஆரம்பித்தனர்.

இந்தச் சமயத்தில்தான் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் வந்தது. அப்போது குஜ்ஜார் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தான் உதவுவதாக வசுந்தரா வாக்குறுதி அளிக்கவே, அதுநாள்வரை காங்கிரஸை ஆதரித்த அவர்கள் தாமரைக்குக் கை நீட்டினர். ஆட்சிக்கு வந்தார் வசுந்தரா ராஜே. அவ்வளவுதான். அத்தோடு எல்லாவற்றையும் மறந்துவிட்டு தனது பணிகளில் பிஸியாகிவிட்டார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த குஜ்ஜார்கள் போராட்டத்தில் குதித்தனர். விளைவு.. இப்போது பன்னிரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதல் குறித்து குஜ்ஜார் சங்கர்ஷ் சமிதியின் தலைவர் பைய்ஸ்லா, “எங்கள் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரானது’’ என்று கொதித்துள்ளார்.

“சாலை மறியலில் ஈடுபடுவது நமது போராட்ட முறைகளுள் ஒன்று. இதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தி மரண தண்டனை கொடுத்திருக்கிறது பா.ஜ.க. அரசு. இதற்குத் தகுந்த பதிலை அவர்கள் சொல்லியாக வேண்டும்’’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சின் பைலட். இவரும் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்தான்.

“நான் எந்த வாக்குறுதியையும் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்து, சரிசெய்யவேண்டிய விஷயம். இருந்தாலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளேன். இதுகுறித்து ஒரு முடிவெடுக்க குறைந்தது 15 நாட்களாவது அவகாசம் தேவை. அதுவரை பொறுமை காப்பது அவசியம்’’ என்று கூறியுள்ளார் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா.

ஆனால், இதுகுறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பாதவரை போராட்டம் நிறுத்தப்படாது என்று கூறியிருக்கின்றனர் குஜ்ஜார் அமைப்பினர்.

‘இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் விதமாக குஜ்ஜார் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்று திடீரென போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றனர் ராஜஸ்தானின் மீனா இன மக்கள். இவர்கள்தாம் ராஜஸ்தானில் இருக்கும் ஒரே பழங்குடியின மக்கள். ஆக, ஒரு பிரச்னையின் தீர்வு அடுத்த பிரச்னைக்கான ஆரம்பமாக இருக்கக்கூடாது. ஆகவே, மிகவும் எச்சரிக்கையாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ராஜஸ்தான் அரசு! ஸீ

– ஆர். முத்துக்குமார்

—————————————————————————-

அன்னியப்பட்ட ஆட்சியாளர்கள்!

நீரஜா சௌத்ரி – தமிழில்: சாரி

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜர் என்ற சமூகத்தவர் தங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி, வன்செயல்களுடன் மேற்கொண்ட கிளர்ச்சி உச்ச கட்டத்தை அடைந்திருப்பதைப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து வருகிறோம்.

ஆண்டுக்கு 9.5% பொருளாதார வளர்ச்சியை எட்டிவரும் நாட்டில், 21-வது நூற்றாண்டில் கால்பதித்துள்ள நிலையில் நடைபெறக்கூடிய சம்பவங்கள் அல்ல இவை. ஆனால் அப்படிப்பட்ட சம்பவங்கள்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.

அரசு வேலை வாய்ப்புக்காகத்தான் குஜ்ஜர்கள் திடீரென்று இப்படியொரு வன்முறைக் கிளர்ச்சியில் இறங்கினார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. அரசுப் பணியிலும் அரசுத் துறைகளிலும் மட்டும் அல்லாது தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று வலியுறுத்திவரும் நேரம் இது.

இட ஒதுக்கீட்டுக்காக இப்படி வன்முறையில் இறங்க வேண்டிய அவசியம் குஜ்ஜர்களுக்குக் கிடையாது. அப்படியானால் வன்செயல்கள் ஏன் நிகழ்ந்தன, அவர்களுடைய உண்மையான நோக்கம்தான் என்ன?

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, பிற்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது என்று வி.பி. சிங் தலைமையிலான அரசு எடுத்த முடிவையடுத்து காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் பின்னாலிருந்து தூண்டிவிட்டு, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்தன.

ஆனால் பிறகு தேர்தலில் வெற்றிபெற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும் அவசியம் என்பதால் காங்கிரஸ், பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இட ஒதுக்கீட்டு கொள்கையை ஏற்று, அமல்படுத்த ஆரம்பித்தன.

ராஜஸ்தானில் ஜாட் சமூகத்தவருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்தை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் அளித்தது.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முதலில் தீர்மானித்த வி.பி. சிங்கால் கூட அமல்படுத்த முடியாத காரியம் அது. ஜாட் சமூகத்தவருக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகையை அளித்திருந்தால் தேவிலாலின் ஆதரவு வி.பி. சிங்குக்குத் தொடர்ந்திருக்கும், மத்திய ஆட்சியும் பிழைத்திருக்கும். வட இந்திய அரசியல் வரலாறுகூட மாறியிருக்கும்.

வாக்கு வங்கிகள் மூலமே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதால், இட ஒதுக்கீடு என்பதை இனி எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று புரிகிறது. நேற்று ஜாட் சமூகத்தவர் போராடிப் பெற்றனர். இன்று குஜ்ஜர்கள் போராடுகின்றனர். நாளை மற்றொரு சமூகம் போராடத் தொடங்கலாம்.

குஜ்ஜர்கள் சமீபகாலமாக மிகவும் கொந்தளிப்பாக இருக்கின்றனர் என்பது உண்மையே. ராஜஸ்தான் மாநில மக்கள் தொகையில் 5% ஆக இருக்கும் குஜ்ஜர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுகின்றனர்.

ஜாதீய அடுக்கில் மேலே உள்ள ஜாட்டுகளுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்து தரப்பட்டதும், இட ஒதுக்கீட்டின்கீழ் வரும் பதவிகளையும் இடங்களையும் அவர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டனர். எனவேதான் குஜ்ஜர்கள் இப்போது பழங்குடி அந்தஸ்து கேட்டுப் போராடுகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் இமாசலத்திலும் குஜ்ஜர்கள் பழங்குடி சமூகத்தவராகவே பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ராஜஸ்தான் மக்கள் தொகையில் 10% ஆக இருக்கும் “”மீனா” வகுப்பினர், குஜ்ஜர்களுக்கு பழங்குடி அந்தஸ்து தரப்படுவதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். அப்படித் தந்தால் தங்களுக்குரிய இடம் குறைந்துவிடும் என்பதுதான் அவர்களுடைய அச்சம்.

தெüசா மாவட்டத்தில் மீனா-குஜ்ஜர் இடையிலான மோதலில் 8 பேர் இறந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இவ்விரு சமூகத்தவரும் அருகருகில் வசிக்கின்றனர். இருவரும் க்ஷத்திரியர்கள். எனவே மோதல் தீவிரமானால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்னால், குஜ்ஜர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தவர் வசுந்தரா ராஜ சிந்தியா என்பது உண்மை. ஆட்சிக்கு வந்த பிறகு அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த விஷயம் குறித்துப் பரிசீலிக்க 18 மாதங்களுக்கு முன்னால் ஒரு கமிட்டியை நியமித்தார். அதைப்பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்புகூட வெளியிடப்படவில்லை. அந்தக் கமிட்டியில் இருக்கிறோம் என்பதே சில உறுப்பினர்களுக்குத் தெரியாது!

வாக்குறுதிகளைத் தருவதும் ஆட்சிக்கு வந்தபிறகு அதை மறப்பதும் ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை. ஆனால் சில அரசியல்வாதிகள், இப்படிப்பட்ட நிலைமை தோன்றியவுடனேயே சுதாரித்துக் கொண்டு, நிலைமை முற்றாமல் ஏதாவது செய்துவிடுவார்கள். ஆனால் வசுந்தராவோ அகந்தையின் உச்சத்தில் இருக்கிறார். அவரை கட்சித் தொண்டர்கள்கூட எளிதில் பார்க்க முடிவதில்லை.

தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயகத்தில் அனுமதித்துள்ளபடி கிளர்ச்சி செய்தனர் குஜ்ஜர்கள். ஆட்சியாளர்கள் சொல்லாமல் போலீஸôர் அடித்து நொறுக்கமாட்டார்கள். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிலருடைய மார்பிலே குண்டுகள் பாய்ந்துள்ளன. வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதாக இருந்தால்கூட காலில்தான் சுட்டிருக்க வேண்டும்.

இச் சம்பவம் நடந்த 48 மணி நேரத்துக்குப் பிறகுகூட, “”கிளர்ச்சிக்காரர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என்று முதல்வர் பேசியிருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல இருந்தது. பிறகு பாரதீய ஜனதாவின் தேசியத் தலைவர்கள் தில்லியிலிருந்து அளித்த நெருக்குதல் காரணமாக, குஜ்ஜர் சமூகத் தலைவர்களுடன் பேச குழுவை நியமித்தார். பிறகு வழக்கமாக அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தார்.

இட ஒதுக்கீட்டின்படி ஒதுக்கிய இடங்கள் முழுவதையும் ஜாட் சமூகத்தவரே கைப்பற்றிவிடாமல் தடுக்க, பிகார் பாணியில் “”இணைப்பு 1”, “”இணைப்பு 2” என்று ஜாட்டுகளுக்கும் குஜ்ஜர்களுக்கும் தனித்தனியாக இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை அளித்திருக்கலாம். ஆனால் குஜ்ஜர்களும் இந்த இட ஒதுக்கீட்டை வேலைக்காக மட்டும் கேட்கவில்லை.

இப்போது ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பழங்குடிகளுக்கென்று 31 தனித் தொகுதிகள் உள்ளன. அவற்றை மீனாக்கள் பெற முடிகிறது. பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலுமே சேர்த்து மொத்தம் 7 குஜ்ஜர்கள்தான் வெற்றிபெற முடிந்தது. இதனால் அரசியல்ரீதியாக அதிகாரம் செலுத்தும் இடத்தில் குஜ்ஜர்கள் இல்லை. இதற்காகத்தான் அவர்கள் தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்திய சமுதாயத்திலே புதிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அரசியல் கட்சி வாரியாக மக்கள் இப்போது அணி திரள்வதில்லை. அவரவர் சமூகத்தின் பின்னணியில்தான் அணியாக உருவெடுத்து வருகின்றனர்.

கலிங்க நகர், சிங்கூர், நந்திகிராமம், தெüசா ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி உணர்த்துவது இதுதான். புதிய பொருளாதார வளர்ச்சியின் பலன் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

சமுதாயரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரே சமூகமான மக்கள் தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் போராட ஆரம்பித்துள்ளனர்.

இதை உணரமுடியாத அளவுக்கு ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து மிகவும் அன்னியப்பட்டு நிற்கின்றனர். இது நம்நாட்டு ஜனநாயக முறைக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

Posted in AA, abuse, Agitation, Ashok Gehlot, Assembly, Attack, Banjaras, BC, BJP, brutality, Caste, Community, Conflict, Congress, Crisis, Dausa, dead, Devi lal, Devilal, Education, EEO, Elections, Employment, FC, Gadia Lohars, Gujar, Gujjar, Gujjar Sangharsh Samiti, Gujjars, Himachal Pradesh, HP, institution, J&K, Jaipur, Jammu, Jammu & Kashmir, Jammu and Kashmir, Jobs, Karauli, Kashmir, Kirori Lal Meena, Law, Lohars, Mandal, Mathur, MBC, Meena, Meena-Gujjar, Meenas, Nadhigram, Nandhigram, Nandigram, OBC, OC, Order, Police, Polls, Power, Protest, Quota, Rajasthan, Raje, Rajnath, Rajnath Singh, Reservation, SC, scheduled tribes, Shiv Charan Mathur, ST, State, Talks, Tribes, UPA, Vasundhra, Vasundhra Raje, Violence, VP Singh | 3 Comments »

Attack Pandi – Sun TV & Dinakaran Madurai office ransacking: How the innocent employees got butchered?

Posted by Snapjudge மேல் மே 9, 2007

நாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி?

மதுரை, மே 10: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் தீயில் சிக்கி 2 பொறியாளர்களும், காவலாளியும் புதன்கிழமை உயிரிழந்தனர்.

கம்ப்யூட்டர் பொறியாளர்கள்

  • வினோத்குமார் (26),
  • கோபிநாத் (25),
  • காவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் அலுவலக அறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

அவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

வினோத்குமார்: பொறியாளர் வினோத்குமாரின் தந்தை முருகேசன். தாய் பூங்கொடி. மதுரை வானமாமலை நகர் நேரு தெருவில் வசித்து வருகின்றனர்.

முருகேசன் கட்டடங்களுக்கு மார்பிள் போடும் காண்டிராக்ட் தொழில் செய்துவருகிறார்.

கம்ப்யூட்டர் பிரிவில் பி.இ. பட்டம் பெற்ற வினோத்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி கார்த்திக்பாண்டியன் கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

கோபிநாத்: ராமநாதபும் மாவட்டம், சக்கரைக் கோட்டையைச் சேர்ந்த கோபிநாத், கம்ப்யூட்டரில் பி.இ. பட்டம் பெற்றவர். இவரது சகோதரர் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

இவரது தந்தை கோகுலதாஸ் மின்வாரிய உதவிப் பொறியாளராக உள்ளார். தாயார் கோகுலவள்ளி.

இறந்தது எப்படி?: ஊழியர்கள் இறந்ததை நேரில் பார்த்த ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

கருத்துக்கணிப்பு வெளியானதை அடுத்து கும்பல் கும்பலாக வந்த பலர் எங்கள் அலுவலகத்தின் முன் பத்திரிகை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10 மணிக்கு வந்த கும்பல் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால் பெண் ஊழியர்கள் பலரையும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம்.

பின்னர் 11 மணியளவில் அட்டாக் பாண்டி தலைமையில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை அலுவலகத்தின் வரவேற்பறை, கணினி அறை, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட 6 இடங்களில் வீசினர். இதனால், தீ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை. போலீஸ் நடவடிக்கையும் தாமதமாக இருந்தது. இதனையடுத்து அலுவலகம் புகையால் சூழப்பட்டது. பலரும் தப்பி வெளியேறினோம். இந் நிலையில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் கோபிநாத், வினோத்குமார் ஆகியோர் தங்கள் அறையில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர்.

தீயணைப்புத் துறையினர் வந்து நீண்ட நேரத்துக்கு பிறகே 2 பேரையும் மீட்க முடிந்தது. காவலாளி முத்துராமலிங்கம் சடலத்தை மாலையில் தான் மீட்கமுடிந்தது என்றனர்.


பலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்மதுரை, மே 10 மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தீயில் சிக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கும், தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்தார்.மதுரையில் புதன்கிழமை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளான தினகரன் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, தாக்குதலில் இறந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவோம். திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், இச் சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.இது தனிநபர் மீது நடந்த தாக்குதல் அல்ல. பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.கருத்துக் கணிப்பு தேவையில்லை என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதியே கூறியுள்ளாரே? எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா? என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம்? எனக் கேட்டதற்கு, நீங்கள் (செய்தியாளர்கள்) நினைப்பதைத்தான் நாங்களும் நினைக்கிறோம் எனப் பதிலளித்தார் கலாநிதி மாறன்.

இச் சம்பவத்துக்கு மு.க அழகிரியின் தூண்டுதலே காரணம் என, சன் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எம். ரமேஷ் தெரிவித்தார்.


மதுரையில் மறியல்} 7 பஸ்கள் உடைப்பு: மேயர், துணை மேயர் உள்பட 200 பேர் மீது வழக்குமதுரை, மே 10: தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்பது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட 7 பஸ்கள் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் புதன்கிழமை காலையிலிருந்தே மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினகரன் நாளிதழ்களை எரித்துப் போராட்டம் நடத்தினர்.திமுகவின் 4-ம் பகுதிச் செயலர் எம்.ஜெயராமன் தலைமையில் சுமார் 40 பேர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கூடி அந்த நாளிதழ்களை எரித்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 அரசு பஸ்களை கல் வீசியும், கட்டையால் தாக்கியும் சேதப்படுத்தினர்.மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் அங்கிருந்த பஸ்ûஸ கல் வீசித் தாக்கி சேதப்படுத்தினர். உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற மறியல் சம்பவத்தில் தனியார் பஸ்ûஸயும், அரசு பஸ்ûஸயும் சிலர் சேதப்படுத்தினர்.இதேபோல், மணிநகரத்தில் திமுக பிரமுகர் சரவணன் தலைமையிலும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே 1-ம் பகுதிச் செயலர் ரவிச்சந்திரன், மகால் பகுதியில் தொண்டர் அணி அமைப்பாளர் வி.பி.பாண்டி தலைமையிலும், நேதாஜி சிலை அருகே 38-வது பகுதிச் செயலர் கே.பி.செல்வம் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டனர்.

மதுரையில் முனிச்சாலை, விரகனூர் சுற்றுச்சாலை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது.

இதனால் ஆங்காங்கே கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் ஏ.சுப்பிரமணியன் கூறியது: பல்வேறு இடங்களில் நாளிதழ்கள் எரிப்பு மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட மதுரை மேயர், துணை மேயர், சில கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்கட்ட நடவடிக்கையாக மதுரை நகரில் 7 பேரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 பேரையும் கைது செய்துள்ளோம். மேலும், நகரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.


It all started here with Dinakaran – Sun TV Network’s Survey Results from AC Nielsen
கலைஞரின் அரசியல் வாரிசு யார்? கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு தமிழக அளவில் 70 சதவீதம் மக்கள் மு.க.ஸ்டாலின் என்று பதிலளித்துள்ளனர். மு.க.அழகிரி என்று 2 சதவீதம் பேரும், கனிமொழி என்று 2 சதவீதம் பேரும் பதில் அளித்தனர். 20 சதவீத மக்கள் வேறு பெயர்களை பதிலாக தெரிவித்தனர். 6 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.“ஸ்டாலின்தான் கலைஞரின் அரசியல் வாரிசு’’ என அதிகம் பேர் சொல்லியிருப்பது

  • கோவை பகுதியில்தான். அங்கு 78 சதவீத மக்களிடம் இந்தக் கருத்து காணப்படுகிறது. அதனையடுத்து
  • வேலூர் பகுதியில் 77 சதவீதம் பேரும்,
  • திருச்சி பகுதியில் 71 சதவீதம் பேரும் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். மாநில சராசரியை விட சற்று குறைவாக
  • சென்னையில் 68 சதவீதம் பேர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டனர்.
  • மதுரையில் இந்த சதவீதம் 67 ஆக,
  • புதுச்சேரியில் 65 ஆக உள்ளது.
  • சேலத்தில் 61%.

“அரசியல் வாரிசு அழகிரி’’ என்று கூறியிருப்பவர்கள் எண்ணிக்கை

  • மதுரையை விட நெல்லையில் அதிகமாக இருக்கிறது.
  • மதுரையில் 6 சதவீதம் பேரும்
  • நெல்லையில் 11 சதவீதம் பேரும் அழகிரி பெயரை சொல்லியிருக்கிறார்கள்.
  • புதுச்சேரியில் 2 சதவீதம் பேரும்,
  • வேலூர்,
  • கோவை,
  • திருச்சி,
  • நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 1 சதவீதம் பேரும் அழகிரிதான் கலைஞரின் அரசியல் வாரிசு என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
  • சென்னை மற்றும்
  • சேலத்தில் அதற்கும் குறைவானவர்கள் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.

“கனிமொழியே கலைஞரின் அரசியல் வாரிசு’’ என்று

  • மதுரையில் 5 சதவீத மக்களும்
  • சேலத்தில் 4 சதவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை
  • நெல்லையில் 3 சதவீதமாகவும்
  • நாகர்கோவில் பகுதியில் 2 சதவீதமாகவும் இருக்கிறது.
  • சென்னை,
  • வேலூர்,
  • புதுச்சேரி,
  • கோவை பகுதிகளில் தலா 1 சதவீதம் பேர் கனிமொழி பெயரை குறிப்பிட்டனர்.

இந்த மூன்று பேரை தவிர வேறு பெயர்களை சொன்னவர்கள் சென்னையில் அதிகம். 31 சதவீத சென்னைவாசிகள் அத்தகைய கருத்து தெரிவித்தனர். சேலத்தில் 23, வேலூர், கோவையில் தலா 19, நாகர்கோவில் பகுதியில் 18, திருச்சியில் 16, புதுச்சேரி பகுதியில் 15 சதவீதம் மக்கள் இவ்வாறு வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தவர்களில் 33 சதவீதம் பேர் “அரசியலில் அவர் அனுபவசாலி’’ என்ற காரணத்தால் அவரை குறிப்பிட்டதாக சொல்கின்றனர். வேலூர் (40), புதுச்சேரி (38), கோவை (37) சேலம் (35) பகுதிகளில் மாநில சராசரியை விடவும் அதிகமானவர்கள் ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தை காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தலா 32 சதவீதம் பேரிடம் இதே கருத்து வெளிப்பட்டது. “கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்திருப்பது ஸ்டாலினுக்குரிய பிளஸ் பாயின்ட்’’ என்று பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டினர்..


சிறப்பாக செயல்படும் மத்திய அமைச்சர்கள் யார்? தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

  • தயாநிதி மாறன் என்று தமிழக அளவில் 64 சதவீத மக்கள் கூறியுள்ளனர்.
  • 27 சதவீத மக்கள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.
  • கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு பெயரை 7 சதவீதம் பேர் தேர்வு செய்தனர்.
  • ஒரு சதவீதம் பேர் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பெயரை குறிப்பிட்டுள்ளனர்.
  • வேலூரில் அதிகபட்சமாக 79% பேர் எங்கள் சாய்ஸ் தயாநிதி மாறன் என கூறியுள்ளனர்.
  • சேலம்,
  • கோவையில் தலா 73 சதவீதம் பேரும்,
  • சென்னையில் 61 சதவீதம் பேரும் சிறந்த அமைச்சராக தயாநிதி மாறனை தேர்வு செய்துள்ளனர்.
  • புதுச்சேரியில் 67%,
  • திருச்சி,
  • மதுரையில் தலா 58%,
  • நாகர்கோவிலில் 57%,
  • நெல்லையில் 53% பேர் தயாநிதி மாறன் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.

அமைச்சர் சிதம்பரம் நன்றாக செயல்படுகிறார் என்று

  • மதுரையில் 36 சதவீதம் பேரும்
  • சென்னையில் 24 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

டி.ஆர்.பாலுவின் செயல்பாடு நன்றாக இருப்பதாக தெரிவித்தவர்கள்

  • திருச்சி,
  • நாகர்கோவிலில் தலா 12%.
  • சென்னை மக்களில் 11 சதவீதம் பேர் பாலு சிறப்பாக செயலாற்றுவதாக கூறினர்.
  • நெல்லை 9%,
  • சேலம்,
  • மதுரை தலா 4%,
  • புதுச்சேரி 3%.

சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் செயல்பாடு பிடித்திருப்பதாக

  • புதுச்சேரி பகுதியில் 4 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.
  • சென்னையில் இந்த கருத்து கொண்டிருப்பவர்களின் சதவீதம் 2.
  • வேலூர்,
  • திருச்சி,
  • நெல்லையில் தலா 1 சதவீதம்.
  • சேலம்,
  • கோவை,
  • மதுரை,
  • நாகர்கோவிலில் யாரிடமும் இக்கருத்து வெளிப்படவில்லை.
  1. ஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் போனில் பேசும் வசதி,
  2. செல்போன் கட்டணங்கள் குறைப்பு,
  3. பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தமிழக வருகை ஆகிய காரணங்களால் தயாநிதி மாறனின் செயல்பாட்டை சிறந்ததென குறிப்பிட்டதாக 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
  4. இளமைத் துடிப்புடன் அவர் செயலாற்றுவது தங்களைக் கவர்ந்ததாக 24 சதவீதம் பேர் குறிப்பிட்டனர்.

இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு சரியான வழி காட்டுகிறார் என்று சிதம்பரம் பெயரை வழி மொழிந்தவர்களில் 52 சதவீதம் பேர் கூறினர். நிதித் துறையை அரசியல்வாதி போல் அல்லாமல் நிபுணர்போல அவர் கையாள்வதாக 11 சதவீதம் மக்கள் கருத்து கூறினர்.

அமைச்சர் பாலு பெயரை குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் சேது சமுத்திர திட்டத்தில் அவர் காட்டும் ஈடுபாட்டை காரணமாக கூறினர். சென்னை பகுதியில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவதில் அவரது ஆர்வத்தை சுட்டிக்காட்டினர்.

அமைச்சர் அன்புமணி சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் தங்களை கவர்ந்ததாக தெரிவித்தனர்.


கருணாநிதி பதவி விலக வேண்டும் } விஜயகாந்த்சென்னை, மே 10: மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலில் மூவர் உயிரிழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மதுரையில் புதன்கிழமை காலை “தினகரன்’ அலுவலகமும் சன் டி.வி. அலுவலகமும் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் வெளியே வர முடியாமல் மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.அவர்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கூக்குரலிட்டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு இருந்தனர். அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களால் மதுரை மாநகரமே வெறிச்சோடி கிடக்கிறது.மதுரை மாநகரில் இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அங்கேயே இருந்தும் யாரால் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்று மக்கள் அறிய விரும்புகிறார்கள்.மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை ஆகும். தீ பரவாமல் தடுத்திருக்க வேண்டியது தீயணைப்புத்துறையின் கடமையாகும். ஆனால் எல்லாத் தரப்பினரையும் செயலிழக்க வைத்தது எது?

ஏற்கெனவே, மதுரையில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் படுகொலைக்குப் பிறகு மக்கள் நடக்கவே பயப்படுகிறார்கள். இன்றைய வன்முறை வெறியாட்டத்திற்குப் பிறகு மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதேபோன்று இந்த படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

தனது குடும்பப் பிரச்சினை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையைப் போக்க, முதல்வர் கருணாநிதி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: காட்டுமிராண்டித் தனமான இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைத்துறையினருக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன்: மதுரையில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் ஜனநாயக விரோதமான வன்முறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மு.க. அழகிரி உள்ளிட்டோர் மீது புகார்மதுரை, மே 10: மதுரை தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசி தீவைத்ததில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.அழகிரிக்கு ஏற்கெனவே ஒரு வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யவேண்டும் என்றும் தினகரன் நாளிதழ் நிர்வாகம் கோரியுள்ளது.முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி 1980 -ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மதுரையில் குடியேறினார். முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனிக்கும் பணியில் ஈடுபட்டார்.இதையடுத்து கட்சியின் தென்மாவட்ட நிர்வாகத்தின் அதிகார மையமாகவும் அவர் விளங்கினார். இந் நிலையில் மூத்த நிர்வாகிகள் சிலருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து மீண்டும் 1984-ல் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றார்.பின்னர் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுரையில் குடியேறிய அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கினார்.இந் நிலையில் தினகரன் நாளிதழில் முதல்வரின் அரசியல் வாரிசு யார்? என வெளியான கருத்துக்கணிப்பில் அழகிரிக்கு 2 சதவிகிதம் மட்டுமே ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இச் செய்தி அவரது ஆதரவாளர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாளிதழைத் தீ வைத்தும், அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக அந் நிறுவனத்தினரே பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.

பத்திரிகை நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலர் மீது ஒத்தக்கடை போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தமிழகத்தில் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் மூன்று பேர் பலி

தமிழகத்திலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்டத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் தினகரன் நாளிதழின் இன்றைய(புதன்கிழமை) பதிப்பில், தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்த கருத்துக்கணிப்புபின் முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மதுரையில் 67 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினையும், 6 சதவீதம் பேர் மு.க.அழகிரியையும் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு மதுரையில் தனது செல்வாக்கை குறைத்துவிட்டதாக அழகிரி அவர்கள் கருதியதாகவும், காலையில் பத்திரிகை வெளியானது முதலே தமது அலுவலகத்திற்கு மிரட்டல்கள் வந்ததாகவும் தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பின் ஆசிரியர் முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.

ஆர்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்

இதையடுத்து மதுரை மேயர் தேன்மொழி உட்பட அழகிரி அவர்களின் ஆதரவாளர்கள் தமது அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்தியத் தாக்குதலில் மூன்று ஊழியர்கள் பலியானதாகவும் அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரில் இருவர் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், ஒருவர் பாதுகாப்பு ஊழியர் எனவும் அவர் கூறினார்.

ஆனால், தாங்கள் எவ்விதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பத்திரிகைகளை மட்டுமே எரித்ததாக தேன்மொழி கூறுகிறார். வன்முறைகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது எனவும் அவர் கூறுகிறார். இன்றைய சம்பவங்களில் அழகிரி அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


பத்திரிகைத துறை மீதான தாக்குதல் என்கிறார் தினகரனின் தலைமை நிர்வாகி

எரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்
எரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்

சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக் கணிப்பை தினகரன் பத்திரிகைக்காக ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இது பற்றி கருத்து வெளியிட்ட தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ் அவர்கள், ஏ சீ நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பைத்தான் தினகரன் வெளியிட்டது எனக் கூறினார்.

இந்தத் தாக்குதல் தினகரன் பத்திரிகையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் என்பதனை விட பத்திரிகைத் துறை மீது நடத்தப்பட்டத் தாக்குதலாகத்தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார். மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் எனவும் ரமேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பாக தங்களிடம் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன எனவும் அவர் கூறினார். இந்தியாவில் பல பத்திரிகைகள் கருத்துக் கணிப்பை நடத்தி கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்தான் என்பதால் இவ்வாறான ஒரு வன்முறை நிகழும் எனத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.

 


தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் கூறுகிறார்

இன்று நடைபெற்ற வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று
இன்றைய வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று

இன்றைய வன்செயல்கள் கருத்து வெளியிட்ட தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி, இன்று காலையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க நடைபெற்ற மூன்று முயற்சிகளின் போது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர் எனவும் ஆனால் நான்காவது முறையாக தாக்குதலை நடத்தவந்த கூட்டம் அந்த அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்தார்.

போலீசார் மீது தவறு இருப்பது தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வழக்கு விசாரணையில் இருப்பதால் இந்த வன்செயல்களில் யார் ஈடுபட்டிருந்தார்கள் என இப்போது கூறமுடியாது எனவும் முகர்ஜி கூறினார். நான்காவதாக நடைபெற்ற தாக்குதலில் மதுரை மேயர் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான முக்கிய வழக்கில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதாகவும், வன்முறை தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 25 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தெரிவித்தார்.

தற்போது மதுரையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வழக்கு விசாரணை சுதந்திரமாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


 

தனக்கு யார் வாரிசு என்கிற பேச்சுகே இடமில்லை என்கிறார் கருணாநிதி

தமிழக முதல்வர் கருணாநிதி
தமிழக முதல்வர் கருணாநிதி

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். பலியான ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

திமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி என்றும், எனவே தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் தனது அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அழகிரியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றத் தவறிவிட்ட திமுக அரசை, மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெ ஜெயலலிதா கோரியுள்ளார். மதுரை போலீசார், முதல்வர் கருணாநிதிக்கு கட்டுப்படாமல் அவரது மகன் மு க அழகிரிக்கே கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

 


 

தினகரன் மீதான தாக்குதலை சி பி ஐ விசாரிக்கும்; கருணாநிதி

தினகரன் நாளிதழ் தாக்குதல் குறித்து சி பி ஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை தமிழக அரசு கோரும் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.

கருணாநிதியின் அரசியல் வாரிசு .யார் என்பது பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகள் தினகரன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டதை அடுத்து மதுரையில் புதன்கிழமை பிரச்சினை உருவானது. வெறும் 2 சதவீத மக்களே கருணாநிதியின் மகனான அழகிரிக்கு ஆதரவு அளித்ததாக இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது.

இதனால் கொதிப்படைந்த சிலர், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு பணிபுரிந்து வந்த 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தப் பிரச்சனையில் தனது குடும்பம் சம்மந்தப்பட்டுள்ளதால், இதை தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு பதிலாக மத்திய அரசின் சி பி ஐ விசாரணை நடத்தும் என்று குறிப்பிட்டார்.

அதே நேரம், தனது யோசனையையும் மீறி தேவையில்லாத கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு தினகரன் நாளிதழ்தான் குழப்பத்துக்கு வழிவகுத்ததாக முதல்வர் தெரிவித்தார்.

தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக கோரியுள்ள நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமார், இது குறித்து பேசுகையில் குடும்பமும், உள் துறையும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.


பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலல்ல – ஞானி

ஸ்டாலினும், அழகிரியும் சில சமயங்களில் இணைந்தும் பல சமயங்கலில் எதிர்எதிராகவும் செயல்பட்டு வந்துள்ளனர்
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஸ்டாலினும், அழகிரியும்

தினகரன் பத்திரிக்கையின் மீதான தாக்குதல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல குடும்பத்துக்குள் நடக்கும் ஆட்சி அதிகாரப் போட்டியின் விளைவு என்று அரசியல் விமர்சகர் ஞானி தெரிவித்தார்.

இதை கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று காட்டுவது, திமுகவின் அதிகார மையங்கள், தங்களின் அதிகாரப் போட்டிக்காக எத்தகைய கருவியையும் கைகொள்ளவார்கள் என்பதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று முதல்வர் மு கருணாநிதி கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்று குறிப்பிட்ட ஞானி, மாவட்ட அளவில் கூட திமுகவினர் தங்களின் வாரிசுகளை பதவிகளுக்கு கொண்டு வருவதாகக் கூறினார்.

மு க ஸ்டாலின் படிப்படியாக கொண்டுவரப்பட்டார் என்றால் தயாநிதி மாறன் எவ்வித அரசியல் கள அனுபவமும் இல்லாமல் நேரடியாக அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சராக்கப்பட்டார் என்றும் ஞானி குறிப்பிட்டார்.

திமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை

 

பத்திரிக்கையாளர் ஞானி

இந்தப் பிரச்சனையில் சி பி ஐ விசாரணை என்பது அபத்தமானது என்று கருத்து வெளியிட்ட ஞானி, ஒரு குற்றத்தை யார் செய்தார்கள் என்பது குறித்து புலனாய்வு செய்ய முடியாத நிலையில் இருக்கும் பட்சத்திலோ அல்லது மாநில காவல் துறை நம்பகத் தன்மையை குறைந்து போய்விட்ட நிலையிலோதான் சி பி ஐ விசாரணை கோரப்படும் என்று அவர் கூறினார்.


தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்?: கைதானவர் வாக்குமூலம் மேலூர், மே 11: மதுரை தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணத்தை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பாட்ஷா (41) போலீஸôரிடம் அளித்துள்ள வாக்குமூலம் விவரம்:”நான் கீரைத்துறையில் வசித்து வருகிறேன். அட்டாக் பாண்டியிடம் மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் டிரைவராகப் பணிபுரிகிறேன்.அண்ணன் அழகிரியிடம் அட்டாக் பாண்டி மிக நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். 9.5.2007-ல் தினகரன் நாளிதழில் மக்கள் மனசு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், எங்கள் தலைவருக்கு ஆதரவே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது மிகுந்த வேதனை அளித்தது.

அதனால் அட்டாக் பாண்டியும் நீண்ட மனவேதனை அடைந்தார். தினகரன் பத்திரிகை அலுவலகத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அங்கு சுமோ காரில் சென்றோம். எங்கள் பின்னால் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

அங்கு பெட்ரோல் குண்டுகளை வீசி, அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தோம். வாகனங்களைத் தீயிட்டோம். பின்னர் கூட்டம் திரண்டதால் தப்பி ஓடிவந்து ரிங் ரோடு அருகே மறைந்து இருந்தோம்.

அதற்குப் பிறகுதான் 3 ஊழியர்கள் இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு என்ன நடக்கிறது என அறிய ரிங் ரோடு வழியாக காரில் வந்தபோது போலீஸôர் எங்களைக் கைது செய்து காரையும் கைப்பற்றினர்’ என்று போலீஸôரிடம் கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

 


மு.க.அழகிரி பேட்டி:கருத்து கணிப்பில் என் பெயரை சேர்த்திருக்கவே கூடாது. கருத்து கணிப்பில் அமைச்சர்களைப் பட்டியலிட்டனர்; அவர்களின் செல்வாக்கை சொன்னார் கள். அது ஒருவகை ஒப் பீடு. ஆனால், இப்போது தம்பி ஸ்டாலின் அமைச்சராக இருக்கிறார்; நான் அமைச்சராகவா இருக் கிறேன்? இல்லையே!

நான் அவர் இடத்துக்கு வரவேண்டும் என என்றைக் காவது நினைத்திருக் கிறேனா? அதுவும் இல்லை. பதவிக்கு வர ஆசைப்படுபவனல்ல நான். அப்படி ஒதுங்கியிருக்கும் என்னை, ஏன் வீணாக இழுத்திருக்கின்றனர் என்பது தான் என் கேள்வி, ஆதங்கம் எல்லாம்…

 


தினகரன் அலுவலகம் மீது தாக்குதல் செய்தி விவகாரம்
‘தமிழ் முரசு’ மீது உரிமை மீறல்

சென்னை, மே 15: தமிழ் முரசு நாளிதழ் மீது உரிமை மீறல் பிரச்னையை, காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கொண்டு வந்தனர். இதை உரிமைக் குழுவுக்கு பேரவைத் தலைவர் அனுப்பி வைத்தார்.சட்டப் பேரவையில் தமிழ் முரசு நாளிதழ் மீது, உரிமை மீறல் பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசேகரன், ஜெயக்குமார், இஎஸ்எஸ்.ராமன், கோவை தங்கம் ஆகியோர் எழுப்பினர்.

இதில், ஞானசேகரன் பேசியதாவது:

பத்திரிகைகளுக்கு நாங்கள் மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறோம். பேரவையில் சொல்லப்பட்ட கருத்தை அடிபிறழாமல் அப்படியே பத்திரிகையில் போட வேண்டும். சொல்லப்பட்ட கருத்தை திரித்து வெளியிடக் கூடாது.

கடந்த 9ம் தேதி மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த வன்முறையின் போது, தீ வைக்கப்பட்டதில் புகையில் சிக்கி 3 பேர் இறந்தார்கள்.

இது பற்றி அனைத்துக் கட்சியினரும், பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து 10ம் தேதி பேசினர்.
அப்போது முதல்வர் பதிலளிக்கையில்

“இந்த சம்பவத்தில், என் குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தி இருப்பதால், மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும்”

என்று அறிவித்தார்.

ஆனால், அன்றைய தமிழ் முரசு பத்திரிகையில்

“அழகிரி நடத்திய படுகொலைகள், சிபிஐ விசாரிக்கும், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு”

என்று செய்தி வந்துள்ளது.

அதே செய்தியின் லீடில்

“மதுரை தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஏவி விட்ட ரவுடி கும்பல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்தார்”

என்று செய்தி வந்துள்ளது.

இது குறித்து முதல்வர் சொன்ன பதில் மட்டுமே வந்திருக்க வேண்டும். அது திரித்து சொல்லப்பட்டுள்ளது. இதற்கு நீதி வேண்டும். எங்கள் உரிமையையும் பேரவை உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஞானசேகரன் பேசினார்.

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், Ôமேலெழுந்த வாரியாக பார்க்கையில் இந்த பிரச்னையில் உரிமை மீறல் இருப்பது தெரிகிறது. எனவே, இதனை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன்Õ என்றார்.

 


அமைச்சர் பொன்முடி பேசியதாவது:என் வீட்டிற்கு இன்று (நேற்று) மதியம் செல்வம் வந்தார். அவர் என்னிடம் “தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விபரீதம் உண்டாகும். உங்கள் நண்பர் ஸ்டாலினுக்காக கட்சியை விட்டு விடாதீர்கள். தயாநிதி சாதாரணமான ஆள் இல்லை. எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க அவர் காரணமாக இருந்தார். அதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர் மீது தவறான முடிவு எடுத்தால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தயாநிதி என்ன தவறு செய்தார். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் எங்கே மீறினார்.

  • கருத்துக் கணிப்பு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஏன் கலவரத்தை நடத்த வேண்டும்.
  • தி.மு.க.,வில் அழகிரி என்ன பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் அவர் வட்ட செயலரா? அல்லது மாவட்டச் செயலரா?
  • அவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத போது அவருக்கு ஏன் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது’

என்று கேட்டார்.இதுமாதிரியான எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் தி.மு.க., பயப்படாது. தயாநிதியை கட்சியிலிருந்து நீக்குவோம்,” இவ்வாறு பொன்முடி பேசினார்.

 


மதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

மதுரை, ஆக. 7: தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக “அட்டாக்’ பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர்.

இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.

 


முதல்வர் விருந்து: அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லைசென்னை, மே 10: சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி புதன்கிழமை இரவு அளித்த விருந்தில், அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.ஆண்டுதோறும் பட்ஜெட் விவாதம் முடிவடையும் போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் விருந்து அளிப்பது வழக்கம்.இதன் அடிப்படையில், புதன்கிழமை மாலை உறுப்பினர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.இதில் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

  • காங்கிரஸ்,
  • பாமக,
  • விடுதலைச் சிறுத்தைகள்,
  • இந்திய கம்யூனிஸ்ட்,
  • மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அனைத்துத்துறை செயலர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.

விருந்தில்

  • சிக்கன் பிரியாணி,
  • மீன் வறுவல் மற்றும்
  • தக்காளி ரசம்,
  • மோர் குழும்பு,
  • பாயசம்,
  • குல்பி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.

Posted in Aavudaiappan, Aavudaiyappan, Aavudayappan, AC Nielsen, ADMK, AIADMK, Alagiri, Alakiri, Anbumani, Approver, Arrest, Attack, Attack Pandi, Azagiri, Azhagiri, Azhakiri, Baalu, Basha, Batcha, Biotech, Bombs, Cabinet, Celebrations, Chargesheet, Chidambaram, Chidhambaram, Cigar, Cigarette, Dayanidhi, Dayanidhy, dead, destroy, Dharmapuri, Dharmapury, Dhinakaran, Dinagaran, Dinakaran, Dinakaran.com, DMDK, DMK, dynasty, employee, employees, Feast, Finance, FIR, Health, Healthcare, InfoTech, IT, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kiruttinan, Law, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maaran, Madurai, Maran, Mayor, Minister, MK Azhagiri, MP, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Murder, Nelson, network, Nielsen, Nielson, Opinion, Order, P Chidambaram, Pa Chidambaram, Paandi, Pandi, Police, Poll, Ramadas, Ramadoss, Ransack, Sethu, Smoke, smoking, Statistics, Sun, Sun TV, Survey, Telecom, Television, Tha Krishnan, Thaa Krishnan, Thayanidhi, Thayanidhy, Thenmoli, Thenmozhi, Thenmozi, Thinagaran, Thinakaran, Thinakaran.com, TR Balu, Transport, TV, Velu, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth, Worker | 12 Comments »

Turkey Wants to Launch Incursions Into Iraq

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 12, 2007

குர்திஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று துருக்கிய இராணுவத் தளபதி கூறுகிறார்

ஜெனரல் யாசர் புயுகாணிட்
ஜெனரல் யாசர் புயுகாணிட்

இராக்கின் வடபகுதியில் உள்ள குர்திஸ்தான் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க தமது நாட்டின் இராணுவம் படை நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என துருக்கியின் இராணுவப் படைகளின் தலைவர் கூறியுள்ளார்.

எல்லை தாண்டி இராக்கிலுள்ள குர்திஸ்தானிற்குள் சென்று இராணுவ நடவடிக்கைகளை எடுக்க துருக்கி அரசு அனுமதிக்க வேண்டும் என துருக்கியின் இராணுவத் தலைவர் ஜெனரல் யாசர் புயுகாணிட் கேட்டுக் கொண்டுள்ளார்.

குர்திஷ் பிரிவினைக் குழுவினரான பிகேகே யின் ஆயிரக்கணக்கானவர்கள் வட இராக்கை தளமாக வைத்துக் கொண்டு துருக்கி மீதான தாக்குதல்களை நடத்துகிறார்கள் என துருக்கி எண்ணுகிறது.

இதனிடையே அடுத்த மாதம் துருக்கியில் நடைபெறவுளள அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் மதசார்பற்றவராக இருக்க வேண்டும் எனவும் துருக்கியின் இராணுவத் தளபதி ஜெனரல் புயுகாணிட் மேலும் கூறியுள்ளார்.

Posted in Ankara, Attack, defence, Erdogan, General, Iraq, Kurdistan, Kurdistan Workers Party, Kurdisthan, Military, PKK, terror, Terrorism, terrorist, Turkey, Yasar Buyukanit | Leave a Comment »

Sri Lanka: Attack on fishermen serious issue – No concerns when the fishermen from Tamil Nadu died

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 4, 2007

கண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்

த.நா. மதிவாணன்

“”ஆழ்கடல் சென்று மீன்பிடிப்போம்; நாளும் உழைத்து நாமும் முன்னேறி, நமது நாடும் வளம்பெற பாடுபடுவோம்” எனத் தன் ஆசைக் கணவருக்கு அன்புமொழி கூறி கடலுக்கு மீன்பிடிக்க இன்முகத்துடன் வழியனுப்புவது வழக்கமான காட்சி.

ஆனால் இன்று…! “”எப்பம்மா அப்பா வருவாருன்னு” கேள்வி கேட்டுத் துளைக்கும் தன் மூன்று பிள்ளைகளுக்கும் கண்ணீரை மட்டும் பதிலாகச் சொல்லி இனித் தன் வாழ்வு செல்லும் வழியறியாது தவிக்கும் தமிழக மீனவப் பெண்ணின் வேதனை சொல்லி மாளாது.

முருங்கைவாடி கிராமத்தில் வசித்து வந்த ராமு என்ற மீனவர் இலங்கைக் கடற்படையால் சுடப்பட்டு மாண்டு போக அவரது மனைவி முத்துலட்சுமி, நான்கு குழந்தைகளுடன் ஓலைக்குடிசையில் ஒட்டிய வயிறுடன் எதிர்காலத்தை எண்ணிக் கலங்கி காலம்கழிக்கும் வேதனைச் சம்பவம்.

நாகையில் அக்கரைப்பேட்டை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு. இது ஏதோ நிகழ்வு அல்ல. நித்தம் நடக்கும் கண்டனத்துக்குரிய சம்பவங்கள்.

இதுவரை சுமார் 112 மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுடப்பட்டு மாண்டு போயுள்ளனர். பலர் காயமுற்றுள்ளனர். இத்தகைய சூழலில் எப்படி மகிழ்வோடு மீன்பிடிக்கச் செல்ல இயலும்? எப்படி மீனவப் பெண்கள் தங்கள் கணவன்மார்களை தைரியமாக வழியனுப்பிட முடியும்?

வான் பொய்த்துப் போனாலும், வருகின்ற நீர் வராது போனாலும், விவசாயம் குறைந்து போனாலும், வற்றாது வளம் கொழிக்கும் கடல் வளம் கண்டு நாட்டின் ஏற்றத்திற்கு கடலை உழுபவன்தான் மீனவன்.

“”மீனவர்களின் உழைப்பு சிந்திடும் வியர்வைத் துளிகளால் கடல் நீர் உப்பானது” இது கவிதையல்ல. மீனவனின் உழைப்பின் சிறப்பு.

இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய மீனவன் நாட்டின் பொருளாதார ஏற்றத்திற்கும் அன்னியச் செலாவணியின் அதிக வருவாய்க்கும் ஓய்வின்றி நித்தமும் உழைக்கும் உழைப்பாளி.

இத்தாலி, நார்வே, சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ள மீனவர்கள் செல்வச் செழிப்பில் மேலோங்கி உள்ளனர்.

ஆனால் நம் நாட்டில் மீனவர்களின் நிலை என்ன? அரை வயிற்றுக் கஞ்சிக்கும் அவதி! கடலுக்குச் சென்றால் மீண்டும் கரைக்குத் திரும்புவோமா என்ற அச்சம்.

ரூ. 2500 கோடிக்கு மேல் அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிற மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும். கரையில் வீழ்ந்த மீன் தத்தளிப்பதுபோல் கண்ணீரில் தத்தளிக்கின்றனர் மீனவர்கள்.

தமிழகத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் வசிக்கும் சுமார் 65 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தொழில் மட்டுமே.

தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்கையில் அவ்வப்போது இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது சாதாரண நிகழ்வாகிப் போய்விட்டது வேதனைக்குரியது.

இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் பின்னர் அதைப்பற்றி மறந்துபோவதும் இயல்பாகிவிட்டது.

பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணம் தருவதால் மட்டும் அவர்களின் இன்னல்கள் தீரப் போவதில்லை. மீனவர்கள் இனியும் பாதிக்காதவண்ணம் காக்கப்பட வேண்டியது அரசின் பொறுப்பு.

படிப்பறிவில்லா பாட்டாளி மீனவர்கள் உழைப்பைத் தவிர வேறொன்றுமறியா ஏழை மக்கள். இவர்கள் கடல் எல்லையைத் தாண்டி அன்னிய நாட்டுக்குள் செல்வதால் சுடப்பட்டார்கள் என்பது ஏற்புடையதா? நடுக்கடலில் கண்ணுக்குத் தெரிகிற வகையில் எல்லைக்கோடு ஏதுமுள்ளதா? வழி தவறி வந்தாலும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிவிட வேண்டும் அல்லவா? அல்லது அவர்களை எச்சரித்து இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைக்கலாம் அல்லவா?

இவ்வாறு மனிதாபிமான முறையில் செயல்படுவதை விட்டுவிட்டு, கடல் எல்லையை அறியாமல் தாண்டி வரும் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்ல எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை. இதை இலங்கைக் கடற்படையினருக்கு உணர்த்த வேண்டியது இந்திய அரசின் முக்கியக் கடமை.

இந்திய அரசு கடலோரக் காவல் படைக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழிக்கிறது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் கொடூர நிகழ்வுகளின்போது நமது கடலோரக் காவல் படை எங்கே போனது?

பன்முறை இந்நிகழ்வுகள் நடந்தேறிய போதும், ஒருமுறைகூட நம் கடலோரக் காவல்படையினர் கண்களில் இச்சம்பவங்கள் படாதது வியப்பூட்டுகிறது. கடலோர மீனவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடலோரக் காவல்படை தங்கள் கடமையைச் செய்யாமல் எங்கே போனது?

கிழக்கே வங்கக் கடல், மேற்கே அரபிக் கடல், தெற்கே இந்துமாப் பெருங்கடல் என முக்கடலாலும் நமது நாடு சூழப்பட்டுள்ளது. ஓர் உயரிய குன்றின் மீது நின்று பார்த்தால் மூன்று கடல்களும் தனித்தனியாகத் தெரிகிறதா? ஏதேனும் தனித்தனி எல்லைக்கோடுகள்தான் உள்ளனவா? இவையாவும் நம் மூதாதையர்கள் வைத்த பெயர்கள். இதுதான் கடல்எல்லை என்பதை திட்டவட்டமாக மீனவர்கள் அறிந்துகொள்ள வழியேதும் செய்யப்பட்டதா? இல்லையென்றுதான் கூற வேண்டும். எனவே, மனித உள்ளங்கள் எண்ணிப் பார்க்க வேண்டிய மனிதாபிமான விஷயம் இது.

பல நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் இறந்தும் உலகில் மிகச் சிறப்பிடம் பெற்ற நமது இந்தியக் கடற்படை ஒருமுறைகூட இலங்கைக் கடற்படையினருக்கு எச்சரிக்கை விடுக்காதது மீனவர்கள் நெஞ்சில் நீங்காத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?

ஒரு ராணுவ அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே அந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காகத்தான்.

அதைவிடுத்து இலங்கை நட்புநாடு எனக் கூறிக்கொண்டு இந்திய அரசு தமிழக மீனவர்கள் விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொண்டு வருகிறது.

இலங்கைக் கடற்படை மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த அவலநிலைக்கு ஓரளவு முடிவு ஏற்பட்டிருக்கும்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவிடம் இந்தியா புகார் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசிடமிருந்து இழப்பீடு பெற்று மீனவர்களுக்குத் தரவேண்டும்

நித்தம் கடல் காற்றை மூச்சாய் வாங்கி, உப்பு நீரால் வாழ்க்கை நடத்தி, நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்த அயராது உழைத்துவரும் மீனவர்களின் வாழ்வு விடிவும் இன்றி முடிவும் இன்றி வினாக்குறியாகவே இருக்க வேண்டுமா? அவர்களின் துயரத்துக்கு விடிவுகாலம் ஏற்படுவது எப்போது?

(கட்டுரையாளர்: நிர்வாகத் தலைவர், தமிழக மீனவர் இளைஞர் அணி).


மீனவர்களை மீட்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூறுகிறது

தமிழக மீனவர்களுக்காக திமுக நடத்திய பேரணி-ஆவணப் படம்
தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக திமுக பேரணி-ஆவணப்படம்

தமிழகத்திலிருந்து காணாமல் போன இந்த மீனவர்களை மீட்க இந்தியாவின் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தை ஆளும் திமுக கூறியுள்ளது.

இந்தச் சம்பவம் இந்திய எல்லையைக் கடந்து சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்றதால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சட்டபூர்வமான அதிகாரம் கிடையாது என திமுகவின் அதிகாரபூர்வ பேச்சாளர் இளங்கோவன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மத்திய அரசை வற்புறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோருவதுதான் தமிழக அரசு தற்போதைய நிலையில் செய்யக் கூடியது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய அரசால் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மீனவர்கள் தற்போது இலங்கையில் இருப்பதால், இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசி அவர்களை மீட்க ஆவன செய்யுமாறு இந்திய அரசு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.


ஜோர்டான் நாட்டு கப்பலில் இருந்த சரக்குகளை விடுதலைப் புலிகள் அப்புறப்படுத்திவிட்டனர் என அந்த கப்பல் நிறுவனம் கூறுகிறது

கப்பலிருந்து சரக்குகள் அகற்றப்படுவதை காட்டும் படம்
சரக்குகள் அகற்றப்படுவதை காட்டும் படம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவுப் பகுதியில் வைத்து ஜோர்டான் நாட்டு சரக்கு கப்பலான ஃபாரா கால நிலை கோளாறு காரணமாக சிக்கிக் கொண்டது.

ஜோர்டான் நாட்டுக் கப்பலில் இருந்த சரக்குகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக அந்தச் சரக்குக் கப்பலுக்கு உரிமையாளரான சலாம் சர்வதேச போக்குவரத்து மற்றும் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் சையத் சுலைமான் கூறியுள்ளார்.
அந்தக் கப்பலில் இருந்து எடுத்துச் செல்லக் கூடிய அரிசி, விளக்குகள், ஜெனரேட்டர்கள் போன்றவை எடுத்துச் செல்லப்பட்டு விட்டன என்றும் கப்பல் சுத்தமாக துடைத்தெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இச்சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யார் மீதும் பழி போட தனக்குத் தெரியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

கப்பலை மீட்பதற்காக ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக தொடர்பு கொண்டதாகவும், காப்புறுதி நிறுவனங்கள், மதிப்பீடு செய்பவர்கள் போன்றோரை பாதுகாப்பாக அங்கு அனுப்ப வழியினை ஏற்படுத்திக் கொடுக்க இலங்கை அதிகாரிகள் முயற்சிகள் எடுத்த போதிலும், அது நடைபெற இயலாமல் போயிற்று என்றும் தங்களுடைய முயற்சிகள் தோல்வியடைந்தன எனவும் சையது சுலைமான் தெரிவித்தார்.

தமது கப்பலை மீட்பது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்த தங்களுக்கு அனுமதி, அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், இந்தச் சம்பவம் ஒரு கடற்கொள்ளை என்பது தனது கருத்து மட்டுமல்ல, நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.


Posted in abuse, ADMK, ammunition, Arms, Attack, Contraband, dead, DMK, Eelam, Eezham, Fish, fishermen, Freight, Government, Jordan, LTTE, Military, Naval, Navy, Pirate, Robbery, Sea, Ship, Sri lanka, Theft, TN, Transport, Transportation, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal | 4 Comments »