மதமும் மருந்தும் ஒரு சாதி
நெல்லை சு. முத்து
மதம் மனிதனுக்கு நான்கு வகைகளில் உதவுகிறது என்று கருதுகிறார் உடலியங்கியல் நிபுணர் ராபின் டன்பர்.
முதலாவது, ஆண்டவன் இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கி ஆட்டிப் படைக்கிறான் என்கிற இறையாண்மை நம்பிக்கை. இரண்டாவதாக, இந்த உலகின் சகல துயரங்களிலிருந்தும் விடுதலை தருகிறான் அல்லது மனசாந்தி அருள்கிறான் என்னும் ஆன்மிக நம்பிக்கை. மூன்றாவதாக, சமூக வாழ்க்கைக்கு உகந்த ஒழுக்க நெறி காட்டுகிறது மதம் எனும் நன்னம்பிக்கை. நான்காவதாக, மதம் என்பது தன்னை ஒருவகைக் குழுவின் அங்கத்தினர் என்ற பாதுகாப்பு உணர்வு வழங்குகிறது. இன நம்பிக்கை, இதுவே மனித மனங்களை ஒட்ட வைக்கும் பசை மாதிரியாம்.
எமில் துர்ஹீம் (உம்ண்ப் ஈன்ழ்ட்ங்ண்ம்) எனும் விஞ்ஞானியின் கருத்துப்படி, இந்தப் பசையே சமுதாயத்தை ஒன்றிணைக்கிறதாம். இதற்குக் காரணம் – மூளைக்குள் இயற்கையாகச் சுரக்கும் “எண்டார்ஃபின்கள்’ (ங்ய்க்ர்ழ்ல்ட்ண்ய்ள்) என்னும் போதைச் சத்து, மனவலியைப் போக்கக் கூடியது.
குத்து விளக்கைச் சுற்றி வட்டமடித்துக் கும்மி அடிப்பது, உட்கார்ந்தபடி பஜனைகளில் கைகொட்டி சாய்ந்து ஆடுவது, மண்டி இட்டு ஆண்டவனிடம் பேரம் பேசுவது, பாசி மாலை அல்லது உத்திராட்சம் உருட்டுவது, ஆசனம் அது இது என்று பல்வேறு உடல் அசைவுகள் எல்லாம் எண்டார்ஃபின் தூண்டலுக்கான வேண்டுதல்கள். இத்தகைய செயல்களின்போது எண்டார்ஃபின்கள் கூடுதல் உற்பத்தி ஆவதால்தான் மதங்கள் மனிதனுக்கு மன வலிமை சேர்க்கிறது என்கிறார் இவர்.
அன்றியும் பாருங்கள், பெரும்பாலும் ஆன்மிகச் சிந்தனையாளர்கள் பொதுவாகவே, கொஞ்சம் அதிக சந்தோஷத்துடன் நீண்ட நாள் வாழ்கிறார்கள். அவர்கள் மூளையில் எண்டார்ஃபின்கள் பெருக்கெடுக்கிறதோ என்னவோ? நேர்மறைச் சிந்தனைக்கும் மதம் காரணம் என்கிறார்கள். தீவிரவாதிகளிடம் இந்த எண்டார்ஃபின் அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் மதம் ஒரு போதை மருந்தாகவே மாறி விடுகிறது.
சரி, மத உணர்வின் ஆரம்பம் எது? ஆதி காலத்தில் மதம் கிடையாது. ஆனால் மார்க்கம் இருந்தது. வாழ்க்கை நெறி இருந்தது. சம்பிரதாயங்கள் இருந்தன. இவை யாவும் பிற்காலத்தில் சடங்குகள் ஆக மாறி மதத்தோடு ஒன்றிவிட்டன.
பக்தி மனதுக்கு இதமூட்ட வல்ல அகவய விஷயம் என்று மேனாட்டு விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்கின்றனர். இன்று எதிர்மறை விளைவுகள் நடக்கிறது என்றால் அதற்குக் காரணம் நீங்கள் கடைப்பிடிக்கும் மதம் அல்ல, உங்களைப் பிடித்த “மதம்’. கட்டுப்படுத்துவது சிரமம்.
ஆண்டவனுக்கு ஏன் வழிபாடுகள்? “”இறைவன் விரும்புகிறார் என்று நம்புகிறேன்” என்பீர்கள். இந்தக் கேள்வியைப் புரிந்து கொள்ள முதலில் மனக்கோட்பாடு (பட்ங்ர்ழ்ஹ் ர்ச் ம்ண்ய்க்) பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். தத்துவஞானிகள் இதனை “இரண்டாம் நிலைக் குறிக்கோள்’ (ள்ங்ஸ்ரீர்ய்க்-ர்ழ்க்ங்ழ் ண்ய்ற்ங்ய்ற்ண்ர்ய்ஹப்ண்ற்ஹ்) என்கிறார்கள். நான் நம்புகிறேன் என்றும், கடவுள் விரும்புகிறார் என்றும் இரண்டு நிலைகள். அதாவது இறைவன் என்கிற இன்னொரு இரண்டாம் நபரின் மனநிலையை நாம் புரிந்து கொண்டதாகக் கருதுகிறோம். அது முடிகிற சமாசாரமா?
மூன்றாம் நிலை “”நாம் நல்லவை செய்ய வேண்டும் என்பதே ஆண்டவன் விருப்பம் என்று நம்புகிறேன்”. இதுதான் “தனிநபர் மதம்’ (டங்ழ்ள்ர்ய்ஹப் ழ்ங்ப்ண்ஞ்ண்ர்ய்). அதேவேளையில் “”நாம் அறம் செய்ய வேண்டும் என்பது ஆண்டவன் விருப்பம் என்று நீ நம்ப வேண்டுகிறேன்”. இது நான்காம் நிலை “சமூக மதம்’ (ள்ர்ஸ்ரீண்ஹப் ழ்ங்ப்ண்ஞ்ண்ர்ய்). அதையும் தாண்டி, “”நாம் அறம் செய்ய வேண்டும் என்பது ஆண்டவன் விருப்பம் என்று நாம் நம்புவதை நீ அறிந்து கொள்ள வேண்டும்”. இதுவே ஐந்தாவதான “குழு அல்லது இனச்சார்பு மதம்’ (ஸ்ரீர்ம்ம்ன்ய்ஹப் ழ்ங்ப்ண்ஞ்ண்ர்ய்).
இந்த மத உணர்வின் மூலஸ்தானம் நெற்றி மூளையின் (ச்ழ்ர்ய்ற்ஹப் ப்ர்க்ஷங்) சாம்பல் நிறப்பகுதி. விலங்குகளிடம் மதம் என்பது முதல் நிலையிலேயே தேங்கிவிட்டது.
பெரும்பாலான மனித நடவடிக்கைகள் மத நம்பிக்கையின் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையிலே நின்று விடுகின்றன. அவரவர் மனங்களில் தனித்தனி மதங்கள். “அயலானை நேசி. ஆனால் வேலியை அகற்றிவிடாதே’ என்று உபதேசித்த ஒவ்வொரு சன்னியாசிக்கும், துறவிக்கும், ஆன்மிகவாதிக்கும் அவரவர் பெயரில் தனித்தனி மதங்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.
அன்பு அடிப்படை மதங்களை நம்புவோர் கொலைத் தொழிலில் ஈடுபட என்ன காரணம்? நாம் எதையாவது நம்பும்போது மூளைக்குள் நடப்பது என்ன? விளையனூர் ராமச்சந்திரன் எழுப்பிய விஞ்ஞானக் கேள்வி இது.
இவர் இன்று கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் நரம்பியல் நிபுணர். “நம்பிக்கைக் கோளாறுகள்’ (க்ண்ள்ர்ழ்க்ங்ழ்ள் ர்ச் க்ஷங்ப்ண்ங்ச்) குறித்த ஆய்வில் கில்லாடி..
நம்பிக்கைக்கு இரண்டு பரிமாணங்கள் உண்டாம். ஒன்று அறிவு சார்ந்தது. பகுத்து அறிவதும், பகுத்து ஆய்வதும். இன்னொன்று உணர்வுப்பூர்வமானது. முன்னது “உறுதியாக அலசி ஆராய்ந்த அறிவுசார் நம்பிக்கை’ விவகாரம். பின்னது “எனது எந்தவித நம்பிக்கையிலும் குறுக்கிட உனக்கு உரிமையில்லை’ என்கிற உணர்ச்சி வில்லங்கம்.
அதனால்தான் மனிதன் நம்பிக்கையை உணர்கிறானே, அன்றி அது பற்றிச் சிந்திப்பது இல்லை. உயிரியல் ரீதியில் நம்பிக்கை உணர்வை விளக்குவதும் சிரமம். ஆனால் இத்தகைய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதுதான் மருந்து. ஏறத்தாழ எல்லா வகையிலும் கடவுள் நம்பிக்கை மாதிரிதான் மருந்து நம்பிக்கை என்கிறார் அலிசன் மோத்லக் (அப்ண்ள்ர்ய் ஙர்ற்ப்ன்ந். டஹழ்ற்ண்ஸ்ரீப்ங்ள் ர்ச் ஊஹண்ற்ட். சங்ஜ் நஸ்ரீண்ங்ய்ற்ண்ள்ற். 28-01-2006).
எந்த நோய்க்கும் உரிய மருந்து தராமல், தந்துவிட்டதாக நோயாளியை நம்ப வைத்துக் குணப்படுத்தும் முறையை ஜான்-கார் ஸþபியட்டா (ஒர்ய்-ஓஹழ் ழன்க்ஷண்ங்ற்ஹ) ஆராய்ந்தார். ஆன் ஆர்பர் நகரில் மிக்சிகன் பல்கலைக் கழகப் பேராசிரியர். இவர் 14 ஆரோக்கியவான்களைத் தேர்ந்து எடுத்து அவர்கள் தாடையில் வலியூட்டும் மருந்து செலுத்தினார்.
அந்தச் செயற்கை வலியைப் போக்குவதாகக் கூறி அவர்களுக்கு ஊசி மருந்து ஊட்டினார். “அட வலி போயோ போச்சு’ என்று ஆனந்தப்பட்டனர் சிலர். “என்ன சாமி, இதுக்கு நாட்டுக் கஷாயமே மேல். வலி பிராணன் போகுது’ என்று துடித்தனர் ஏனையோர். உண்மையில் இந்த இரு பிரிவினர்க்கும் கட்சிபேதம் பாராமல் வழங்கியது ஒரே உப்புத்தண்ணீர்.
இருந்தாலும் அனைவரின் மூளையையும் “பொசிட்ரான் உமிழ்வு பகுப்பாய்வு’ (டர்ள்ண்ற்ழ்ர்ய் உம்ண்ள்ள்ண்ர்ய் பர்ம்ர்ஞ்ழ்ஹல்ட்ஹ்) முறைப்படி கவனித்தார். நோய் குணம் அடைந்ததாக நம்பிய பேர்வழிகளின் மூளையில் “எண்டார்ஃபின்கள்’ பிரவாகம்!
இப்படி மருந்தே இல்லாத மருத்துவ முறை “பிளாசிபோ’ (டப்ஹஸ்ரீங்க்ஷர்) எனப்படும். லத்தீன் மொழியில் “நான் உன்னை சந்தோஷப்படுத்துகிறேன்’ (ஐ ள்ட்ஹப்ப் ல்ப்ங்ஹள்ங்) என்று அர்த்தம். கடவுள் நம்பிக்கையும் இந்த மாதிரிதான் என்று கருதுகிறார் டீன் ஹேமர் (ஈங்ஹய் ட்ஹம்ங்ழ்); மேரிலாந்தில் பெத்தெஸ்டா எனும் இடத்தில் அமெரிக்கத் தேசிய மருத்துவ நிறுவனப் பேராசிரியர். “கடவுள் மரபணு’ (எர்க் எங்ய்ங்) என்ற தனி நூலே எழுதி உள்ளார்.
நம்பிக்கை, கடவுளிடமோ மருந்திடமோ எதுவானாலும், மூளைக்குள் நடக்கும் நரம்பணுக் கடத்திகளின் திருவிளையாடல். பொதுவாக, ஆன்மிகச் சிந்தனைக்கும் மூளையில் அடங்கிய டோப்பாமின் (ஈர்ல்ஹம்ண்ய்ங்), செரோட்டினின் (நங்ழ்ர்ற்ண்ய்ண்ய்) ஆகிய உணர்வுக் கடத்திகளின் அருளே காரணம். ஆயின், இவற்றை ஒழுங்குபடுத்துவது “விமாட்-2′ (யஙஅப2) என்கிற மரபணுப் புரதம்.
ஏதாயினும் மதமே இல்லாத மதம் வளர்ப்போம்.