Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி, 2007

Bangladesh’s controversial election commission members resign en masse

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

வங்கதேச தேர்தல் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்கள் ராஜினாமா

வங்கதேசம்
வங்கதேசம்

வங்காளதேசத்தில் பிரதான அரசியல் கூட்டணிகளில் ஒன்றின் பல மாத கால அழுத்தத்திற்குப் பிறகு அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்களும் தங்களது பதவியினை ராஜினாமா செய்து விட்டார்கள்.

இந்த ஐந்து பேரும் தேர்தல் ஆணைய உறுப்பினர்களாக இருக்கும் வரை தாங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பிரதான கூட்டணி ஒன்றின் தலைவியும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

இன்றைய ராஜினாமாக்கள், புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ஒரு தேர்தல் ஆணையத்தின் கீழ் பொதுத் தேர்தல்கள் நடைபெற வழி வகை செய்யும். வாக்குப் பதிவில் மோசடி செய்தனர் என்கின்ற குற்றச்சாட்டை இந்த ஐந்து ஆணையர்களும் எதிர்நோக்கியிருந்த நிலையில், ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


வங்காளதேசத்துக்கு தேர்தல் ஜனநாயகம் பொருந்தாது என்கிறார் அந்த நாட்டு இராணுவத் தளபதி

வங்காளதேசத்தை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கம் இல்லை என்கிறது இராணுவம்
வங்காளதேசத்தை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கம் இல்லை என்கிறது இராணுவம்

வங்காளதேசத்தில் மோசமான நிர்வாகத்தைச் சமாளிப்பதற்கு புதிய பாணியிலான ஜனநாயகம் ஒன்று தேவை என்று அந்த நாட்டின் இராணுவத் தளபதி, லெப்டினண்ட் ஜெனரல் மூயின் அஹ்மட் கூறியுள்ளார்.

தேர்தல் மாதிரியிலான ஜனநாயகத்தில் ஊழல் பரவி, அதனால் ஆட்சி பாதிக்கப்படும் என்று கூறிய அவர் அப்படியான ஒன்றை தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இராணுவ ஆதரவிலான இடைக்கால அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், அங்கு ஒரு நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்துவதே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குறித்த கால எல்லை குறித்துக் கருத்துக் கூற அவர் மறுத்துவிட்டார்.


Posted in Army, autocrat, Awami League, Bangladesh, Bangladesh Nationalist Party, CEC, Chief Election Commissioner, defence, Defense, Democracy, Democratic, election commission, executive, Fakhruddin Ahmed, Govt, Iajuddin Ahmed, interim government, Judiciary, Khaleda Zia, Legislature, M A Aziz, Mahfuzur Rahman, Military, President, Republic, Rule, Sheikh Hasina | Leave a Comment »

India’s Tata Steel wins Corus with $12 bln offer

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

கோரஸ் நிறுவனத்தை வாங்குவதில் இந்தியாவின் டாடா வெற்றி

இந்தியாவின் மாபெரும் நிறுவனங்களில் ஒன்று டாடா
இந்தியாவின் மாபெரும் நிறுவனங்களில் ஒன்று டாடா

ஐரோப்பாவின் மிகப் பெரிய எஃகு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோரஸ் என்கிற நிறுவனத்தை வாங்கும் போட்டியில் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான டாடா எஃகு நிறுவனம் வெற்றி கண்டுள்ளது.

பிரிட்டிஷ் எஃகு நிறுவனம் மற்றும் ஹீகுவென்ஸ் என்ற பிரிட்டிஷ்-டச்சு நிறுவனங்கள் இணைந்ததினால் உருவாக்கப்பட்ட கோரஸ் நிறுவனத்தை வாங்க டாடா நிறுவனத்திற்கும், பிரேசில் நாடின் சி எஸ் என் நிறுவனத்திற்கும் கடுமையான போட்டி இருந்தது.

கோரஸ் நிறுவனத்தை 11.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு வாங்க டாடா நிறுவனம் முன்வந்துள்ளது. உலக அளவில் ஒப்பிடுகையில், டாடா எஃகு நிறுவனம் ஒரு சிறிய எஃகு தயாரிக்கும் நிறுவனம்தான். இருந்த போதும் இதற்கு பெரிய டாடா வர்த்தக நிறுவனக் கூட்டமைப்பின் பின்புலம் இருக்கிறது.

இந்தியாவின் நான்கு மிகப் பெரிய நிறுவனங்களில் டாடாவும் ஒன்று, தவிர இந்தியாவில் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு வர்த்தகப் பெயரும் கூட.

எங்கும் டாடா என்பதே பேச்சு

உலக அளவிலான எஃகு வர்த்தகத்தில் ஈடுபடும் முயற்சியாக ஆங்கிலோ டச்சு நிறுவனமான கோரஸ் நிறுவனத்தை வாங்கியிருப்பதன் மூலம் இந்தியத் தொழில்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளது டாடா நிறுவனம்.

வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கிய நிகழ்வுகள் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன. ஜெர்மனி மருந்து நிறுவனம் பீட்டாபார்ம், பெல்ஜிய நிறுவனம் ஈவ்ஹோல்டிங் ஆகியவை இந்தியத் தொழிலதிபர்களால் முன்பு வாங்கப்பட்டன என்றாலும் அவற்றின் மதிப்பு ஏறக்குறைய 50 கோடி அமெரிக்க டாலர்கள்தான். ஆனால், கோரஸ் நிறுவனப் பங்குகளை மொத்தம் 1130 கோடி அமெரிக்க டாலர்களுக்கு இந்திய நிறுவனம் ஒன்று வாங்குவது இதுவே முதல்முறை. இதனால் டாடா நிறுவனம் இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு தகுதி பெற்றுள்ளது.

உலக எஃகு வர்த்தகத்தில் 56-வது இடத்தில் உள்ள டாடா நிறுவனம் (இதன் ஆண்டு உற்பத்தி 53 லட்சம் டன்), கோரஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் 5வது இடத்துக்கு வந்துள்ளது. இதனால் உலக அளவில் மிகப்பெரிய எஃகு நிறுவனமாக உருவெடுப்பதுடன், கோரஸ் நிறுவனத்தின் அதிநுட்ப உருக்கு தொழில்நுட்பத்தையும் டாடா நிறுவனம் பெறுகிறது. உலகச் சந்தையில் விற்பனையை அதிகரிப்பதுடன், மூலப்பொருள் வாங்குதல், சந்தைப்படுத்துதல் ஆகிய நடைமுறைச் செலவுகள் டாடா நிறுவனத்துக்குப் பெருமளவு குறைந்துவிடுகின்றன.

உலக எஃகு வர்த்தகத்தில் சென்ற ஆண்டு 9-வது இடத்தில் இருந்த கோரஸ் நிறுவனம் (ஆண்டு உற்பத்தி 182 லட்சம் டன்) தன்னை டாடா நிறுவனத்துக்கு விற்றுக்கொள்வதன் மூலம் உலக அளவில் அதிவேகமாக வளர்ந்துவரும் இந்தியச் சந்தையில் வெகு எளிதாக நுழைய முடியும்.

இந்த நிறுவனத்தை வாங்கியிருப்பதன் மூலம் டாடா நிறுவனத்துக்கு வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டாலும், சில தவிர்க்க முடியாத சுமைகளும் உண்டு. கோரஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 47,300 தொழிலாளர்களையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். மேலும் கோரஸ் ஓய்வூதிய நிதியம் மூலம் 1.65 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த ஓய்வூதிய நிதி நல்ல நிலையில் இருப்பதால் இப்போதைக்கு டாடாவுக்கு பிரச்சினை கிடையாது.

கோரஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் சர்வதேச சந்தையில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியது மட்டுமன்றி, உள்நாட்டுச் சந்தையில் டாடா நிறுவனத்தின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தியச் சந்தையில் டாடா குழுமத்தின் 96 நிறுவனங்கள் அனைத்து வகையான நுகர்பொருள்களையும் விற்பனை செய்து வருகின்றன. இனி இந்தப் பொருள்களுக்கு உள்நாட்டுச் சந்தையில் அதிக வரவேற்பு இருக்கும். விற்பனை அதிகரிக்கும்.

மேற்கு வங்க மாநிலத்தில் குறைந்த விலை கார் தயாரிப்புத் தொழிற்சாலை தொடங்கும் பிரச்சினையில் டாடா நிறுவனத்துக்கு எதிராக கிளர்ச்சிகள் நடந்தன. டாடா நிறுவனத்தின் பொருள்களைப் புறக்கணிக்கும்படி திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி கூறினார். ஆனால் எதையெல்லாம் புறக்கணிப்பது? டாடா நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களின் பட்டியல் விரிவானது. தேயிலை, கைக்கடிகாரம், அணிகலன்கள், கார், பேருந்து, கணிப்பொறித் தொழில்நுட்பம், செல்போன், மருந்து உற்பத்தி என நீண்டுகொண்டிருந்த பட்டியலில் புறக்கணிக்கக் கூடிய பொருள்கள்-தங்களுக்குத் தேவை இல்லாதவை என்பதாக மட்டுமே இருக்க முடியும்.

டாடா நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் மதிப்பு 2,100 கோடி அமெரிக்க டாலர்கள். அதாவது இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதம்.

டாடா நிறுவன புகழ் கிரீடத்தில் வேறு சில முத்துகளும் உண்டு. தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் விடுப்பு வழங்குவது, தொழிலாளர் சேம நலநிதி ஆகியன சட்ட வடிவம் பெறுவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பாகவே அவற்றை 1920ல் நடைமுறைப்படுத்திய நிறுவனம் டாடா.

Posted in ABN AMRO, acquisition, Arcelor, Benjamin Steinbruch, Brazil, Companhia Siderurgica Nacional, Corus, Credit Suisse Group, CSN, Deutsche Bank, Esmark, Goldman Sachs, Hoogovens, India, Industry, Iron, J.P. Morgan, Lazard, M&A, Mamtha bannerjee, Minerals, Mittal Steel, MNC, Muthuraman, Rothschild, Singur, Standard & Poor's, Steel, steel maker, TATA, Tata Steel, TISCO, TMC, Trinamool Congress | Leave a Comment »

Jothika & Surya to become parents – Kid expected around August

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

ஆகஸ்டு மாதம் ஜோதிகாவுக்கு குழந்தை பிறக்கும் 

சென்னை, ஜன.31-

பூ வெல்லாம் கேட்டுப்பார்’ படம் மூலம் தமிழிலில் அறிமுகமான ஜோதிகா ஏராளமான ஹிட்படங்களில் நடித்தார்.

அவரும் சூர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கல்யாணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். திருமணத்துக்கு முன்பே நடித்து கொடுத்த `பச்சைக் கிளி முத்துச்சரம்,’ `மொழி’ ஆகிய இரு படங்கள் பிப்ரவரியில் ரிலீசாகிறது.

ஜோதிகா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். வருகிற ஆகஸ்டு மாதம் குழந்தை பிறக்கும்.

தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவும் ஜோதிகாவும் தோழிகள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருந்தபோது மருத்துவம் பார்த்த டாக்டரிடம் ஜோதிகாவும் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். டாக்டர் ஆலோசனைப்படி உணவு மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்.

நட்சத்திர தம்பதிகள் பொதுவாக குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது வழக்கம். ஆனால் சூர்யாவும் ஜோதிகாவும் அதை விரும்பவில்லை. உடனே குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினர்.

ஜோதிகா, சூர்யா பெற்றோர் பேரக் குழந்தையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Posted in Child, Jothiga, Jothika, Jothikaa, Kid, Mozhi, Nagma, Pachaikili Muthucharam, Pachaikkili Muthucharam, parents, Paruthi Veeran, Sivakumar, Soorya, Sooryaa, Surya, Suryaa | 8 Comments »

Reema Sen refuses to act with Jeyam Ravi in ‘Dham Thoom’

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

“தாம் தூம்” படத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்க ரீமாசென் மறுப்பு

சென்னை, ஜன. 31-

வல்லவன் படத்தில் சிம்புவுடன் நடித்து சர்ச்சை ஏற்படுத்தியவர் ரீமாசென். பாடல்காட்சியில் ஆபாசமான ஆடையை உடுத்த மறுத்து படப்பிடிப்பில் இருந்து வெளியேறினார். பிறகு சமரசப்படுத்தி நடிக்க வைத்தார்கள்.

படம் ரிலீசான பிறகும் தனது முக்கியத்துவத்தை குறைத்து விட்டதாக குறைப்பட்டார். அது போல் தற்போது அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள “தாம்தூம்” படத்திலும் பிரச் சினை கிளப்பியுள்ளார்.

இந்த படத்தில் ஜெயம்ரவி கதாநயாகனாக நடிக்கிறார். ஜீவா இயக்குகிறார். இதில் ஜெயம்ரவிக்கு டாக்டர் வேடம்.

இதில் ஜெயம்ரவியுடன் நடிக்க ரீமாசென் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு சம்பளத்தில் அட்வான்ஸ் தொகையும் வழங்கப்பட்டது. வக்கீல் வேடத்தில் அவர் நடிப் பதாக இருந்தது.

இதற்காக படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டன. போட்டோ ஷூட்டும் முடிந் துள்ளது.

இந்த நிலையில் தாம்தூம் படத்தில் நடிக்க மறுத்து ரீமாசென் விலகிக் கொண்டார். அட்வான்ஸ் தொகையையும் திருப்பி கொடுத்து விட்டார்.

தாம்தூம் படத்தில் ரீமாசென் தவிர இன்னொரு கதாநாயகியும் நடிக்கிறார். பாடலுக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

ரீமாசென்னுக்கு சீரியஸ் வேடம் என்பதால் அவருக்கு பாடல் காட்சி ஒதுக்கப்படவில்லை. ஒரு பாடலாவது தனக்கு ஒதுக்க வேண்டும் என்று ரீமாசென் வற்புறுத்தினார். கதாபாத்திரத்தின் சீரியஸ் அடிபட்டு விடும் என்று டைரக்டர் மறுத்து விட்டார். கோபம் அடைந்த ரீமாசென் படத்தில் இருந்து விலகிக் கொண்டாராம்.

Posted in Dhaam Thoom, Gossip, Harris Jeyaraj, Jayam Ravi, Jeeva, Jeyam Ravi, Kisu Kisu, Nayanthara, Raiyma Sen, Reema Sen, Rumour, Silambarasan, Simbhu, Simbu, Tamil Actress, Tamil Cinema, Tamil Movies, Vallavan | Leave a Comment »

Abdul Kalam vs Bal Thackeray – Afsal & Hairstyle

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

அப்துல்கலாம் பற்றி விமர்சித்த பால்தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் வற்புறுத்தல்

மும்பை, ஜன. 31- மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரம் நடந்து வருகி றது. சிவசேனா தலைவர் பால் தாக்கரே தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சலை தூக்கில் போடாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் ஜனாதிபதியை விமர்சித்தார்.

`அப்சல் கருணை மனுவை ஜனாதிபதி இதுவரை தள்ளுபடி செய்யவில்லை. அவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அவருடைய நீண்ட தலைமுடி கண்ணை மறைக்கிறது. நில வையும், நட்சத்திரத்தையும் மட்டும் பார்க்க முடிகிறது’ என்று அவர் கூறினார்.

சோனியா காந்தி பற்றி கூறும் போது, வெளிநாட்டு காரரால் இந்த நாடு ஆளப்படுகிறது. மன்மோகன் சிங் என்ற பொம்மை பிரத மராக இருக்கிறார்என்று கூறினார்.

பொதுவாக ஜனாதிபதியை அரசியல் தலைவர்கள் யாரும் விமர்சிப்பது இல்லை. ஆனால் பால்தாக்கரே விமர்சித்து இருப்பது அரசியல் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்களும் வந்துள்ளன.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபன் கூறியதாவது:-

அரசியல் விவகாரத்தில் ஜனாதிபதியை இழுப்பது தவறானது. மும்பை மாநக ராட்சி தேர்தல் உள்ளூர் பிரச்சினைக்கு தொடர் பானது. எனவே இங்குள்ள பிரச்சினையை பேச வேண்டும். அப்சÛலை குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. அவருடைய கருணை மனு முறைப்படியான நடைமுறை ஆய்வில் உள்ளது. இதை விமர்சிக்க பால்தாக்கரேக்கு உரிமை இல்லை’ என்றார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் கூறும்போது, `ஜனாதிபதி பற்றி விமர்சித்தது நாட்டையே அவமானபடுத்துவதற்கு சம மாகும்’ ஜனாதிபதி என்பவர் தனி மனிதர் அல்ல. அது ஒரு அமைப்பு. பால்தாக்கரே கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.

பாரதீய ஜனதா தலைவர் வினோத் திவாதே கூறும்போது, `பால் தாக்கரே ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் பேசவில்லை, நிலவு மற்றும் நட்சத்திரங்களை ஒப்பிட்டு பேசவில்லை பாராளுமன்ற தாக்குதல் விவகாரம் பெரிய சம்பவம் என்பதால் தனது ஆதங்கத்தை தனக்கே உரித்தான பாணியில் சொன்னார்’ என்றார்.

Posted in Abdul Kalam, Afsal, Bal Thackeray, BMC, Bombay, Capital punishment, Elections, Hairstyle, Life sentence, Manmohan Singh, Mumbai, parliament, President, Shiv Sena, Sonia Gandhi, Terrorism, terrorist | Leave a Comment »

Saadhanai – Tamil Movie Review :: 9 year old kid’s directorial venture

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

சினிமா
சாதனை (விமர்சனம்) :: மனோஜ்கிருஷ்ணா

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

என்ற பாரதியின் வரிகளுக்கு வலிவூட்டியுள்ள தரமான படம்.

நகரின் மையப் பகுதியில் நகர்ப்புற பாதசாரிகளால் கண்டுகொள்ளப்படாத ஒரு வயதே நிரம்பிய அழுக்கான ஓர் அனாதைச் சிறுவன் சலவைத் தொழில் செய்யும் ஒரு சேரிப்பெண்ணின் வெள்ளை உள்ளத்தால் ஆதரிக்கப்படுகிறான். “ஸ்லம்’ என்ற பெயரில் வளரும் அவன் சேரிச் சிறுவர்களோடு குப்பை பொறுக்கும் (ஊரைச் சுத்தப்படுத்தும்) வேலை செய்கிறான். கிடைக்கும் சிறு தொகையை அவனை வளர்க்கும் ஆயாவிடம் தருகிறான். சிறுவர்களுக்கேயுரிய குறும்புகளோடு வாழ்க்கை நகருகிறது. ஒரு நாள் நடக்கும் சிறு சம்பவத்தில் அவன் வயதையொத்த, பள்ளி மாணவர்கள் அவனுடைய கல்வியறிவின்மையைச் சுட்டிக்காட்டி கேலி பேசுகிறார்கள். தானும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவன் மனதில் எழுகிறது. ஆனால் பள்ளியில் சேருவதற்கான உரிய வழிமுறைகளை அறியாத அவன், பள்ளி செல்லும் மாணவ, மாணவியரிடம் கெஞ்சிக் கூத்தாடி “அ, ஆ…’ கற்கிறான்.

அவனுக்குள் மாற்றம் நிகழ்கிறது. தொடர்ந்த முயற்சியாலும், பயிற்சியாலும் பள்ளிக்கே செல்லாமல் ஒன்பது வயதிலேயே பத்தாம் வகுப்பு பாடம் வரை படிக்கிறான். நேரடியாக பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத சட்டம் அனுமதி மறுக்கிறது. இந்த விஷயம் பத்திரிகைகளில் வெளியாகிறது. சிறுவனைத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என நாடெங்கிலும் கிளர்ச்சி நடக்கிறது. இறுதியில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது. ஸ்லம் என்னவாகிறான் என்பது மனதைத் தொடும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.

ஒன்பது வயது சிறுவன் கிஷன் படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறான். சிறு வயது குறும்புகள் கலகலப்பு. குப்பை பொறுக்கிக் கொண்டிருக்கும்போது நண்பர்களுடன் டீக்கடைக்காரரை ஏமாற்றி டீ குடிப்பவன், கல்வியறிவு பெற்றவுடன் இலவசமாகக் கிடைக்கும் சீருடையைக் கூட வீட்டைக் கழுவும் வேலை பார்த்துப் பெறுகிறான். தினமும் பள்ளி வரை செல்லும் அவன், உள்ளே செல்லமுடியாமல் வாசலிலேயே நின்று வாட்ச்மேனிடம் பிரச்சினை செய்வது, பள்ளி செல்லும் மாணவர்களைப் பார்த்து ஏங்குவது, உள்ளூர் “டுபாக்கூர்’ அரசியல்வாதி ரங்காவுடனான கலாட்டா, பள்ளியில் சேருவதற்காக ஆசிரியையை விடாமல் துரத்துவது போன்ற காட்சிகளில் கல்வியின் மேன்மையை சாமானியனும் உணரத்தக்க வகையில் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறான்.

கிஷனுடைய சேரித் தோழர்களாக வரும் சிறுவர், சிறுமியரின் இயல்பான நடிப்பும், வசனங்களும் அருமை. ஆசிரியையாக வரும் தாரா மனதில் நிற்கிறார். ஜாக்கிஷெராஃப் முதல்வராக நடித்துள்ளார். பாடல்கள் தன்னம்பிக்கையூட்டும் ரகம். இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இதுபோன்ற திரைப்படங்களை அனைவரையும் காணச் செய்யும் வகையில் அரசு வரி விலக்கு அளிக்கலாம். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இப்படத்தைத் திரையிட்டு அவர்கள் மூலம் கல்வியின் அவசியத்தை கல்லாதோருக்கு உணர்த்தச் செய்யலாம். படிக்க வாய்ப்பில்லாத சிறுவர், சிறுமியருக்கு இதுபோன்ற படங்களால் படிக்கும் ஆர்வம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

“அள்ளும்…’, “துள்ளும்…’ “…பருவம்’ என பெரிய மனிதர்களின் எத்தனையோ படங்களுக்கு மத்தியில் ஒன்பது வயது சிறுவன் இயக்கிய இந்தப் படத்தைப் பார்க்கும்போது “எத்தனை சிறிய மனிதருக்கு எத்தனை பெரிய மனமிருக்கு…’ என்ற எண்ணம் எழுவதே படத்தின் சாதனைதான்!

Posted in Bollywood, Child, Jackie Shroff, Kannada, Karnataka, Kid, Kishan, Movie Reviews, New Movies, Saadhanai, Saathanai, Sadhanai, Sathanai, Slum, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Theatre, Vimarsanam | 2 Comments »

Air Marshal Fali H Major to be new chief of Indian Air Force

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

இந்திய விமானப் படையின் புதிய தலைமைத் தளபதி ஃபாலி எச் மேஜர்

புதுதில்லி, ஜன. 31: இந்திய விமானப் படையின் அடுத்த தலைமைத் தளபதி(ஏர் சீஃப் மார்ஷல்)-யாக ஃபாலி எச் மேஜர் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டார்.

விமானப்படையின் கிழக்குப் பிரிவின் தலைமைத் தளபதியாக அவர் தற்போது இருந்து வருகிறார். தலைமைத் தளபதியாக பொறுப்பேற்க இருக்கும் முதல் “ஹெலிகாப்டர் பைலட்’ இவர்தான்.

தற்போது விமானப் படை தலைமைத் தளபதியாக இருக்கும் எஸ்.பி.தியாகி வரும் மார்ச் 31-ல் ஓய்வு பெறுகிறார். அதன்பிறகு மேஜர் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.

இவரைத் தேர்வு செய்ததன் மூலம், போர் விமான பைலட்டுகள்தான் இந்திய விமானப் படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்க முடியும் என்ற மரபு மாற்றப்பட்டுள்ளது.

Posted in Air Chief Marshal, Air Marshal, Defense, Fali H Major, fighter pilots, Helicopter pilot, IAF, India, Indian Air Force, Pakistan, S P Tyagi, seniority | Leave a Comment »

Rehabilitation scheme for human waste cleaners – Dalit development schemes

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

மனிதக் கழிவுகளை சுத்திகரிப்போருக்கு 2009 ல் மறுவாழ்வு திட்டம் அறிமுகம்: மத்திய அரசு முடிவு

புது தில்லி, ஜன. 31:மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது. 2009 ம் ஆண்டு முதல், நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் இத்திட்டத்தால் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மனிதக் கழிவுகளை மனிதர்கள் சுத்தம் செய்யும் நிலையை மாற்றவேண்டும் என இடதுசாரிக்கட்சிகள் கோரிவந்தன. இதையடுத்து அவர்களுடைய நலனுக்காக மத்திய அரசு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சுத்திகரிப்பு தொழிலாளிகளுக்கு ஒரு ஆண்டு சுயதொழில் பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தொழில் துவங்க ரூ. 5 லட்சம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு, உரிய வங்கிகள் மூலம் மத்திய அரசு மானியம் அளிக்கும்.

மாநிலங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப்படி, நாடு முழுவதும் தற்போது 7 லட்சத்து 70 ஆயிரத்து 338 சுத்திகரிப்பு தொழிலாளிகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களது குடும்பத்தினர் மற்றும் இவர்களைச் சார்ந்தோருடன் மொத்தம் 40 லட்சம் பேர் இந்தத் திட்டத்தால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய சஃபாய் கர்மாச்சாரி நிதி மற்றும் வளர்ச்சி வங்கி அல்லது குறிப்பிட்ட உயர்நிலை நிறுவனங்கள் மூலம் மானியங்கள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் அதேவேளையில் நாடுமுழுவதும் உலர் கழிவறைகள் ஏற்படுத்தப்படும். மத்திய வீட்டுவசதித்துறை மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம், மாநில நகராட்சி அமைப்புகள் ஊராட்சி அமைப்புகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இவை ஏற்படுத்தப்படும்.

இவர்களும் மனிதர்கள்தான்

நாட்டில் மனிதக் கழிவை மனிதனே எடுத்துச் செல்லும் கொடுமையை முற்றிலுமாக அகற்ற அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பெரும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சுமார் 8 லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இத்துடன் இவர்களை நம்பியுள்ள சுமார் 40 லட்சம் பேருக்குப் பலன் அளிக்கும் வகையில் இத் திட்டம் தீட்டப்படுகிறது.

இதன்படி இத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் தொடங்க மானியத்துடன் சலுகை வட்டியில் கடனுதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அவர்கள் தேர்வு செய்யும் தொழிலைப் பொருத்து குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். சுயஉதவிக் குழுக்கள் அல்லது என்ஜிஓவினர் மூலம் இதை வழங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய முறையை அகற்ற 1992ல் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆந்திரம், கோவா, கர்நாடகம், மகாராஷ்டிரம், திரிபுரா, மேற்குவங்க மாநிலங்களில் இத்தகைய தொழிலாளர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு மாற்றுத் தொழிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ. 600 கோடி செலவிட்டும் சில ஆயிரம் பேரே இதில் பலன் அடைந்தனர்.

இத்திட்டம் சரிவர அமல்படுத்தப்படாததால் 2003ல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. பல மாநிலங்களில் குறிப்பாக ரயில்வேயில் இது அதிகம் காணப்படுகிறது. இதை அகற்ற மத்திய, மாநில அரசுகள் கால வரம்புடன் கூடிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரில் 92 சதவீதம் பேர் தலித்துகளில் ஒரு பிரிவினர் என்றும் குறிப்பிடப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சரியான முறையில் கணக்கெடுத்து, அவர்களின் மறுவாழ்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

முன்னதாக, 1993ல் இந்த முறைக்குத் தடைவிதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி இத்தகைய தொழிலில் யாரையாவது ஈடுபடுத்தினால் சம்மந்தப்பட்டவருக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரை மாற்றுத் தொழிலில் ஈடுபடுத்த ரூ.58 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இத்தொழிலில் அவர்கள் தொடருவதற்கு வறுமையும் சமூக நடைமுறைகளும்தான் காரணம். பண்டைக்காலத்தில் நவீன கழிப்பறை வசதிகள் இல்லாததால் இந்த முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய நவீன சூழ்நிலையிலும் இம்முறை தொடர்வது கவலை அளிக்கிறது.

நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் இந்த நிலை காணப்படுகிறது. அங்கு குறைந்த செலவில் மானியத்துடன் கழிப்பறைகள் அமைக்கும் திட்டம் உள்ளது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் தனி கழிப்பறை ஏற்படுத்திக் கொள்ள வசதி இல்லாதோர்க்கு பொதுக் கழிப்பறைகள் கட்டித் தரப்படுகிறது. ஆனால் அவை சரிவர பராமரிக்கப்படுவதில்லை. அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

இதன் மூலம் கிராமங்களிலும் தூய்மையை ஏற்படுத்த முடியும். மேலும் இத்தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாகத் தெரிய வருகிறது. இதைத் தடுக்க முறையான மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இத்திட்டம் வெற்றி பெற அரசுகளுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Posted in 2009, Apartheid, Clean, Cleaners, Cleanup, Dalit, Dalit Human Rights, Development, dry latrines, Government, human excrement, Human Rights, Human Rights Watch, human waste, Loans, Manual Scavengers, Opportunities, Rehabilitation, Restroom, safai karamcharis, Safai Karmachari Andolan, scavengers, Schemes, Self employment | 1 Comment »

CM lays foundation for ‘Asia’s biggest’ Rs 616 crore drinking water project

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

ஜப்பான் நாட்டு உதவியுடன் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: தமிழக முதல்வர்

பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் நலத் திட்ட உதவியை ஊனமுற்ற மாணவருக்கு வழங்கி பரிவுடன் பேசுகிறார் முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து) மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.முத்துஸ்வாமி, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, சுப. தங்கவேலன், துரைமுருகன். (வலது) விழாவில் கலந்து கொண்ட பெண்களில் ஒரு பகுதியினர்.

பரமக்குடி, ஜன. 31: ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டதுபோல் சேலம், தருமபுரி மாவட்டங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ஜப்பான் நாட்டு உதவியுடன் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ. 616 கோடி மதிப்பிலான ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் இவ்வாறு பேசினார்.

இதற்கான விழா பரமக்குடியில் ராஜா சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சுப. தங்கவேலன் தலைமை வகித்தார்.

ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3,163 குடியிருப்புகளுக்கு பயனளிக்கும் இத் திட்டத்திற்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் மு. கருணாநிதி நாட்டினார். அதைத்தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் மேலும் பேசியது:

கடந்த ஒருவார காலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைந்துள்ளது பரமக்குடியில் இன்று நடைபெறும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்ட அடிக்கல் நாட்டு விழா.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துப்படி தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டிய முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் தூர்வரப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்னும் குடிநீர் பற்றாக்குறை உள்ளதை உணர்கிறேன். சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ஜப்பான் நாட்டு உதவியுடன் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.

இதில் தாமதம் ஏற்பட்டால் எனது சொந்த நிதியை கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்றுவேன்.

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 616 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து குழாய் மூலமாக 831 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் அமைத்து, புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயல், பொன்னமராவதி, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், இளையாங்குடி வழியாக ராமநாதபுரம், ராமேசுவரம், முதுகுளத்தூர், சாயல்குடிக்கு காவிரியில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்படும்.

இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு ஊரகப் பகுதியில் நபர் ஒருவருக்கு 40 லிட்டரும், பேரூராட்சிப் பகுதியில் 70 லிட்டரும், நகராட்சிப் பகுதியில் 90 லிட்டர் குடிநீரும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 20 லட்சம் பேர் பயன்பெறுவர். இத்திட்டத்தை 3 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் இத்திட்டத்தை 2 ஆண்டுகளில் அதிகாரிகள் நிறைவேற்றினால் விருது வழங்கப்படும் என்றார் முதல்வர்.

விழாவில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, தமிழக அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர் ரகுபதி ஆகியோர் பேசினர்.

Posted in Asia, Cauvery, Chief Minister, CM, District, Farming, Irrigation, Karunanidhi, M Karunanidhi, Mokkombu, Mukkombu, panchayats, Paramagudi, Paramakudi, Paramgudi, Paramkudi, pudhukottai, Pudukottai, Ramanad, Ramanadhapuram, Ramanathapuram, Ramnad, Ramnadhapuram, Ramnathapuram, River, Sivaganga, Tamil Nadu, Thiruchirappalli, Tiruchirappalli, TN, Trichy, Village, Water | Leave a Comment »

India to Build Four Fast Breeder Nuclear Reactors – Reactor prototype ‘will be ready by 2010’

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

தமிழகத்தில் 2020-ம் ஆண்டுக்குள் 4 அதிவேக ஈனுலைகளை நிறுவத் திட்டம்

சென்னை ராணி மேரி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இயற்பியல்-வேதியியல் துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற கல்லூரி முதல்வர் யூஜின் பின்டோ, ஜெ.டேனியல் செல்லப்பா, எம்.எஸ்.ஆனந்த், பி.வி.ராமலிங்கம், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கே.எஸ். விஸ்வநாதன், ஜி.அமரேந்திரா. இதில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த 15 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள.

சென்னை, ஜன. 31: தமிழகத்தில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் 4 அதிவேக ஈனுலைகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.

இயற்பியல் மற்றும் வேதியியல் துறையினருக்கு ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு ராணி மேரி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் ஈனுலைகள் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பிரிவு இயக்குநர் பி.வி. ராமலிங்கம் பேசியதாவது:

தமிழகத்தில் 4 அதிவேக ஈனுலைகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஈனுலைகள் தலா 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டவை ஆகும். இந்த 4 ஈனுலைகளும் ஒரே சமயத்தில் நிறுவப்படும்.

இதில் கல்பாக்கத்தில் மட்டும் 2 ஈனுலைகள் நிறுவப்படும். கல்பாக்கத்தில் புதிய ஈனுலைகளை நிறுவுவதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

இதனால் தொழில்நுட்ப உதவி, ஆலோசனை மற்றும் மனித வள ஆற்றல் கல்பாக்கம் வளாகத்தில் எளிதில் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதன் காரணமாக கல்பாக்கத்தில் 2 புதிய ஈனுலைகளை நிறுவுவதற்கான திட்டச் செலவு குறைய வாய்ப்புள்ளது.

மேலும் 2 ஈனுலைகளை அமைக்க விரைவில் இடம் தேர்வு: இவை தவிர தமிழகத்தில் மேலும் 2 ஈனுலைகளை அமைக்க விரைவில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

இந்தியத் தொழில்நுட்ப அடிப்படையில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் புதிய அதிவேக ஈனுலைகளை வடிவமைக்கும். அனைத்து ஈனுலைகளும் மிகுந்த பாதுகாப்பு வசதிகள் கொண்டதாக இருக்கும்.

வரும் 2020-ம் ஆண்டுக்குள் இந்த ஈனுலைகள் மூலம் 2,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். இந்த மின்சாரம் தமிழக மின் தொகுப்பில் சேர்க்கப்படும்.

கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறனுள்ள சோதனை அதிவேக ஈனுலையை நிறுவ பிரதமர் மன்மோகன் சிங் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்த ஈனுலையை நிர்மாணிக்கும் பணிகள் தீவிரமாக தற்போது நடைபெறுகிறது. ரூ. 3,200 கோடி செலவில் இந்த ஈனுலை அமைக்கப்படும்.

இதன் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 3.20 பைசாவுக்கு உற்பத்தி செய்ய முடியும்.

அனைத்து புதிய ஈனுலைகளையும் “பாவினி’ நிறுவனம் கட்டும். தேசிய அணு மின் கழகத்தின் பொறியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அறிவியல் நிபுணர்கள் இப் பணிகளை நிறைவேற்றத் தேவையான முழு ஒத்துழைப்பையும் அளிக்க உள்ளனர்.

நாட்டில் ஈனுலைகள் மூலம் வரும் 2020-ம் ஆண்டில் மொத்த அணு மின் உற்பத்தி 20 ஆயிரம் மெகாவாட் அளவாக உயரும் என்றார் ராமலிங்கம்.

இதில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் எம்.எஸ். ஆனந்த் பேசியதாவது:

உலகில் 6-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. எனினும், நச்சு வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா 11-வது இடத்தைப் பெற்றுள்ளது.

ஈனுலைகள் மூலம் அணுமின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதனால், சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் நச்சு வாயுக்களை வெளிப்படுத்தும் நாடுகளின் பட்டியலில் நாம் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியும்.

நாட்டில் யுரேனியம் தட்டுப்பாடு உள்ளது. அதிவேக ஈனுலைகளை நிறுவுவதன் மூலம் யுரேனியம் பயன்பாட்டைக் குறைத்து, தட்டுப்பாட்டையும் தடுக்கலாம் என்றார் ஆனந்த்.

இக் கருத்தரங்கில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஜி. அமரேந்திரா, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஜே. டேனியல் செல்லப்பா, கல்லூரி முதல்வர் யூஜின் பின்டோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Posted in Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited, BHAVINI, DAE, Defense, Department of Atomic Energy, Dr. Baldev Raj, Electricity, Fast Breeder, Fast Breeder Test Reactor, FBTR, Homi Bhabha National University, IGCAR, India, Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam, metallic fuel, Nuclear Reactors, P.V. Ramalingam, PFBR, Reactor Operation and Maintenance Group, Science, State Electricity Boards, structural mechanics, Technology, uranium-plutonium oxide | Leave a Comment »

New Invention by 7th grade student gets Intel innovation award

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

புதிய அறிவியல் கண்டுபிடிப்பு: தமிழக மாணவருக்கு 2 தங்கப்பதக்கம்


புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான இளம் சாதனையாளர் விருது பெற்ற கோவை மாணவர் அபிலாஷுடன் இன்டெல் நிறுவன இந்தியாவுக்கான மேலாளர் ராமமூர்த்தி, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த பேராசிரியர் அனுப் சின்ஹா (வலது).

கோவை, ஜன. 31: புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான இளம் சாதனையாளர் விருதாக கோவையைச் சேர்ந்த மாணவருக்கு இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இன்டெல் நிறுவனம் மற்றும் மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறை, இந்திய தொழில்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்த தேசிய அளவிலான கண்காட்சியை ஏற்பாடு செய்வதோடு, ஆண்டுதோறும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியையும் தில்லியில் நடத்துகின்றன.

கடந்த ஆண்டில் (2006) இத்தகைய போட்டி மற்றும் கண்காட்சிக்கான அழைப்பில் 2,000 பேர் விண்ணப்பம் செய்தனர். தேசிய அளவில் 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆக்கங்களை கண்காட்சியில் பார்வைக்கு வைத்தனர்.

இதில் கோவையைச் சேர்ந்த மாணவர் எம்.அபிலாஷ் (தற்போது திருச்சி சின்மயா வித்யாலயத்தில் ஏழாம் வகுப்பு பயில்கிறார்) இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். விலங்கியல் துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்காகவும் வயது வரம்புத் தகுதிக்குள்ளான புதிய கண்டுபிடிப்பாளருக்கான விருதாகவும் ஒரே சமயத்தில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

வரும் பிப். 13 முதல் 16 வரை தில்லியில் நடைபெறும் சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் அபிலாஷ் கலந்துகொள்கிறார்.

பயன்படுத்திய பின் வீசியெறியும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பயன்படுத்திய எக்ஸ்ரே பிலிம்களைக் கொண்டு புதுமையான, அரிய பூச்சிப் பொறியை வடிவமைத்துள்ளார் அபிலாஷ்.

இவரது தாயார் சங்கீதா பணிக்கர், திருச்சி தாவரவியல் துறையில் பேராசிரியையாக உள்ளார்.

Posted in Abhilash, Abilash, Award, Biology, Chinmaya Vidhyalaya, Chinmaya Vidyalaya, Coimbatore, Gold Medal, Industry, Intel, Kovai, M Abhilash, precollege, Prize, Research, Science, scientist, Talent, Technology, Thiruchirapalli, Thiruchirappalli, Trichy, Winner, Young Achiever, Zoology | Leave a Comment »

Raytheon Offers Frontline Weapons to Indian Armed Forces

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

5 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரியஆயுதச் சந்தையாக மாறும்: அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனம் தகவல்

புதுதில்லி, ஜன. 31: உயர் ரக போர் ஆயுதங்களை இந்திய ராணுவத்துக்கு விற்கத் தயாராக இருப்பதாக அமெரிக்காவின் முன்னணி ஆயுத தயாரிப்பு நிறுவனமான ரேதியான் கூறியுள்ளது.

5 ஆண்டுகளில் ரேதியான் நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பதற்கான மிகப்பெரிய, மிகமுக்கியமான சந்தையாக இந்தியா மாறும் எனவும் அந் நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரைத் தலைமையகமாகக் கொண்ட ஆயுத நிறுவனம் ரேதியான். அந் நிறுவனத்தின் ஆசிய விற்பனைப் பிரிவு தலைவர் அட்மிரல் (ஓய்வு) வால்டர் எஃப் டோரன், தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தட்டுப்பாடின்றி கிடைக்கக் கூடிய உயர் ரக போர்த் தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதில் எவ்விதத் தயக்கமும் இல்லை. அமெரிக்க ஏவுகணைகள், விண்வெளி சாதனங்கள் மற்றும் பிற முன்னணி தொழில்நுட்பங்களை இந்திய ராணுவத்திற்கு வழங்க ரேதியான் விருப்பம் கொண்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் ரஷிய தொழில்நுட்பங்களே பெருமளவு இடம்பெற்றுள்ளன. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் தயாரிப்பு போர்த் தளவாடங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் மிகப்பிந்தி நுழைந்துள்ள அமெரிக்க நிறுவனங்களால் இந்திய ஆயுதச் சந்தை மிகவும் போட்டி மிகுந்ததாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் மாற்றமடையும்.

தற்போது ரேதியான் நிறுவனத்தின் இந்திய விற்பனை ரூ.135 கோடி அளவில்தான் உள்ளது. ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் எங்கள் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறும் என்றார் டோரன். இது குறிப்பாக எந்த அளவு வளர்ச்சி அடையும் என்பதைத் தெரிவிக்க மறுத்த டோரன், பல நூறு கோடி அமெரிக்க டாலர்கள் அளவில் விற்பனை இருக்கும் என வல்லுநர்கள் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

Posted in armed forces, Arms, Army, Boeing, Bombs, cruise missiles, F-16, F-18/A, F18, IAF, India, Lockheed-Martin, Massachusetts, Military, Missile, missile shield, Pakistan, Patriot II, Raytheon, Technology, weapon | Leave a Comment »

Coconut Tree Farming – Rain water harvesting: Va Se Selvam

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

தென்னந் தோப்புகளில் மழைநீர் சேமிப்பு

வா.செ. செல்வம்

பணப் பயிர்களில் முக்கியப் பயிர் தென்னை. கோடையின் கடுமையைத் தாங்கி வளரும் குணமுடையது.

நெட்டைரக தென்னை மரங்கள் ஆண்டுக்கு 125 முதல் 150 காய்களைத் தருகின்றன. குட்டை மற்றும் ஒட்டுரகம், திருவையாறு – 2 ரக தென்னை மரங்கள் 300 முதல் 400 இளநீர்கள் அல்லது தேங்காய்களைத் தருகின்றன.

குலைகுலையாய் இளநீரும், தேங்காய்களும் தரும் தென்னை மரங்கள் ஒரு நாளைக்கு 55 லிட்டர் முதல் 65 லிட்டர் வரை தண்ணீரை பூமியிலிருந்து உறிஞ்சுவதாகக் கணக்கிடப்படுகிறது.

தென்னையின் வேர்கள் 150-அடிக்கு மேல் ஊடுருவி தண்ணீர் கிடைக்கும் இடத்தைத் தேடிச் செல்கின்றன. ஒரு வீட்டில் உள்ள தென்னை மரத்தின் வேர்கள் மூன்றாவது, நான்காவது வீட்டு பத்துப் பாத்திரம் கழுவும் நீரைக் கூட உறியச் செல்கின்றன.

தஞ்சாவூர் அருகில் உள்ள திருவையாற்றில் அமைந்துள்ள தென்னை ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வு விவரம்:

தென்னை மரங்களுக்கு மழை நீர் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. வாய்க்கால் மூலமும் குழாய்ப் பாசனம் மூலமும் நீர் பாய்ச்சப்படுகிறது. இவ்வாறு கிடைக்கும் தண்ணீர் கடும் சூரிய வெப்பத்தால் விரைவில் ஆவியாகி விடுகின்றது; இதனால் அடிக்கடி தென்னந்தோப்புகளில் தண்ணீர் பாய்ச்ச வேண்டி உள்ளது.

பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் சேமிப்பு (ஈரம்) போதுமான அளவில் இருந்தால்தான் தென்னை மரங்கள் தேவையான நீரை எடுத்துக் கொள்கிறது என்பதும் அத்தகைய தென்னை மரங்களில் பிஞ்சுகள் அதிகம் பிடித்து மகசூல் 50 சதவீதம் அதிகரிக்கிறது என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தென்னந்தோப்பில் நான்கு ஓரங்களிலும் வரப்பு அமைக்க வேண்டும். குறுக்கு வரப்புகளை அமைத்து, மழை நீர் வழிந்து ஓடிவிடாமல் தடுக்க வேண்டும். இதன் மூலம் மண்வளமும் பாதுகாக்கப்படும். மேலும் தோப்பில் உள்ள தேவையில்லாத உப்புத்தன்மையும் குறையும். நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

தோப்புக்குள் மழைநீர் சேமிப்புக் குட்டையை அமைத்து தண்ணீரை அதில் சேமித்து வைக்கலாம். அதில் மீன்களை வளர்த்து உபரி வருவாயையும் பெறலாம்.

தென்னை மரங்களின் அடிப்பகுதியைச் சுத்தம் செய்து, “கோகோஸ்’ என்ற உரமருந்தை இடவேண்டும். தென்னை மரங்களின் தூர் பாகத்தைச் சுற்றி கரையான் மருந்தை மணலில் கலந்து லேசாகத் தூவி கரையானைக் கட்டுப்படுத்த வேண்டும்.

மழை பெய்யும்போது தென்னை மரம் வழியாகத் தண்ணீர் வழிந்து இறங்கி தூர் பகுதியில் மழைநீர் சேமிக்கப்படுகிறது. கடும் வெப்பம் ஊடுருவுவது தடுக்கப்பட்டு, ஈரம் பாதுகாக்கப்படுகிறது. பூமியின் மேற்பரப்பும் குளிர்ச்சியுடன் இருக்க ஏதுவாகிறது.

மழை நீருடன் கலந்து வந்த நைட்ரஜன் (தழைச்சத்து) நிலை நிறுத்தப்பட்டு, தென்னை மரங்களின் வேர்கள் வழியாக உறிஞ்சப்படுகிறது. இதன்மூலம் தென்னை மரங்கள் செழிப்புடன் இருக்க வழியேற்படுகிறது.

உரி மட்டை, உரி மட்டைத் தூள், உமி, மரத்தூள், இலை, தழைகள், வாழை, தாழை, கரும்புச்சக்கை, சருகுகள் ஆகிய கழிவுகள் அனைத்தையும் வீணாக்காமல், தென்னை மரங்களைச் சுற்றி இரண்டு அடுக்குகளாக இட்டு, தென்னந்தோப்புகளில் மழைநீர் சேமிப்புக்குப் பயன்படுத்தலாம். இதனால் சுற்றுப்புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

“”பெத்த பிள்ளை சோறு போடாவிட்டாலும், நட்டபிள்ளை (தென்னம்பிள்ளை) சோறுபோடும்”.

(கட்டுரையாளர்: தென்னை ஆராய்ச்சியாளர், திருவையாறு).

Posted in Agriculture, Coconut Tree, Coconuts, Farming, harvesting, Rain water, Va Che Selvam, Va Se Selvam | 1 Comment »

Actor Balakrishna meets Naidu, may join politics & Telugu Desam

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

என்.டி.ராமராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியில் சேருகிறார்

ஐதராபாத், ஜன.30-

ஆந்திராவில் பிரபலமாக விளங்கிய நடிகர் என்.டி.ராமராவ். அந்த மாநில மக்களால் கடவுளாக மதிக்கப்பட்டவர். சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் போதே கடந்த 1982-ம் ஆண்டு திடீரென அரசியலில் நுழைந்தார்.

தெலுங்கு தேசம் என்ற கட்சியை தொடங்கிய அவர் 9 மாதத்திலேயே அந்த மாநிலத்தில் ஆட்சியை பிடித்து முதல் மந்திரி ஆனார்.

1995-ம் ஆண்டு என்.டி.ராமராவின் மருமகனும், கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், மந்திரி பதவி வகித்து வந்தவருமான சந்திரபாபு நாயுடு கட்சியில் என்.டி.ராமராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி அந்த கட்சியை கைப்பற்றினார். பின்னர் அவர் அடுத்த ஆண்டிலேயே தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தார்.

மறுவருடம் 1996-ல் என்.டி.ராமராவ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

என்.டி.ராமராவின் மூத்த மகன் ஹரிகிருஷ்ணா சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து அந்த கட்சியில் இருந்து வந்தார். பின்னர் அவர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மீண்டும் சமீபத்தில் அவர் கட்சியில் சேர்ந்தார்.

2-வது மகன் பாலகிருஷ்ணா. பிரபல முன்னணி நடிகர். பாலய்யா என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் கடந்த 2004-ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர்கள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டதாக வழக்கு தொடரப்பட்டது. 8 மாதங்களுக்கு பின்னர் இந்த வழக்கில் அவர் விடுதலையானார்.

கடந்த 18-ந் தேதி என்.டி.ராமராவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா “என் தந்தை 1982-ம் ஆண்டு திடீரென அரசியலுக்கு வந்தது போல நானும் திடீரென அரசியலுக்கு வருவேன்” என்று தெரிவிதார்.

இந்த நிலையில் பாலகிருஷ்ணா நேற்று திடீரென தனது மைத்துனரும், முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை சந்திரபாபு நாயுடு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடந்தது. ஆகவே பாலகிருஷ்ணாவின் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அவர் அரசியலில் குதிக்க முடிவு செய்திருப்பதாகவும் கருதப்படுகிறது.

இந்த சந்திப்பு பற்றி சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டதற்கு, “பாலகிருஷ்ணா அரசியலுக்கு வருவது பற்றி நாங்கள் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் குடும்ப விஷயங்கள் பற்றித்தான் பேசிக் கொண்டு இருந்தோம். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. அவர் அரசியலுக்கு வர விரும்பினால் அவரே அது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்” என்று தெரிவித்தார்.

ஆனால் பாலகிருஷ்ணாவின் ஆதரவாளர்களும், ரசிகர்களும் அவர் அரசியலுக்கு வந்தால் தெலுங்கு தேசம் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதாக அமையும். ஏனென்றால் அந்த கட்சி கடந்த 2004-ம் ஆண்டு நடந்த சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இப்போது நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. ஆகவே பாலகிருஷ்ணா அரசியலுக்கு வருவதை அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

Posted in Actors, Andhra, Andhra Pradesh, AP, Balakrishna, Chandrababu Naidu, Chief Minister, CM, Elections, Films, Harikrishna, Lok Sabha, Naidu, NT Rama Rao, NTR, Party, Politics, TDP, Telugu Cinema, Telugu Desam, Telugu Movies, Tollywood | Leave a Comment »

Dam across Palar will affect farmers: Jayalalithaa

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்- ஜெயலலிதா அறிக்கை

சென்னை, ஜன. 30-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணையைக் கட்டப் போவதாகவும், அதற்கான பூமி பூஜையை பிப்ரவரி 1-ந் தேதி அன்று தொடங்கப் போவதாகவும் ஆந்திர அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களில் விவசாயத்திற்கு பெரும் நெருக்கடியும், பின்னடைவும், விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவையும் சந்திக்க உள்ளார்கள்.

மேலும் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மற்றும் சென்னை புறநகர் பகுதி மக்களுக்கும் கடும் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படும்.

கர்நாடக மாநிலத்தோடு காவேரி தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை, கேரளா மாநிலத்தோடு முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்துவதில் பிரச்சினை, இப்போது பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவதில் ஆந்திராவோடு புதிய பிரச்சினை தொடங்கி இருக்கிறது.

பாலாறு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தாலுகாவில் உற்பத்தி ஆகின்றது. அது கர்நாடகாவில் சுமார் 35 கிலோ மீட்டர் தூரமும், ஆந்திர பகுதியில் 30 கிலோ மீட்டர் தூரமும் பயணித்து தமிழ்நாட்டை வந்தடைகிறது. ஆந்திராவில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் மட்டும்தான் பாலாறு பாய்கின்ற வழியில், “குப்பம்” என்ற பகுதியின் வழியாக தமிழ்நாட்டை வந்தடைந்து, செங்கல்பட்டு அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம் அருகில் கடலில் கலக்கிறது.

தமிழ்நாட்டில் பாலாறு பாய்கின்ற தூரம் சுமார் 140 கிலோ மீட்டர் ஆகும். அந்த 140 கிலோ மீட்டர் தூரத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்ட மக்களுக்கு ஜீவாதாரமாகப் பல்வேறு வகையில் விளங்குகிறது.

விவசாயம், குடிநீர் மற்றும் அங்குள்ள தொழிற் சாலைகளுக்குத் தண்ணீர் வசதி ஆகியவைகளை பாலாற் றின் வாயிலாகத்தான் அந்தந்த மாவட்ட மக்கள் பயன் பெறுகிறார்கள். கல்பாக்கம் அணு உலைக்கான நீர் ஆதாரமே பாலாறுதான். அந்த ஆற்றின் அமைப்பின்படி தமிழக நதிகளிலேயே பாலாற் றில்தான் நிலத்தடி நீர் அதிக மாக உள்ளது.

நான் முதல்-அமைச்சராக இருக்கும் போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி எடுக்கின்றது என்ற தகவல் கிடைத்தவுடனே, அவ்வாறு செய்யக்கூடாது என்று ஆந்திர முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் உடனே அழைத்துப் பல மணி நேரம் பல்வேறு முறை விரிவாக விவாதித்து 2006 பிப்ரவரி மாத இறுதி வாக்கில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதி மன்றத்தில் அசல் வழக்கு ஒன்றினை தமிழக அரசின் சார்பில் ஆந்திர அரசுக்கு எதிராக தாக்கல் செய்ய வைத்தேன்.

இவ்வழக்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம்தான் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வழக்கின் கோப்புகள் தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட உச்சநீதி மன்ற வழக்கறிஞர்களுக்கு மாற்றப்பட்டது.

தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் பாலாறு விஷயத்தில் இவர்கள் செயல்பாடுகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றது.

சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பாலாறு பிரச் சினை சம்பந்தமாக அமைச் சர் துரைமுருகன் பேசும்போது, “உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடருவோம்” என்று சொல்லி இருந்தார். அதாவது இனிமேல்தான் வழக்கு தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவருக்கு இப்பிரச்சினை சம்பந்தமாக எனது ஆட்சிக் காலத்திலேயே உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள விவரம் கூடத் தெரியவில்லை.

ஆற்காடு வீராசாமி பேசும்போது, “தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராஜாவிடம் சொல்லி, பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் துறையின் அனுமதியைத் தராமல் தடுத்திடுவோம்” என்றார்.

மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராஜா அனுமதி தராமலா, ஆந்திர அரசு இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடான 270 கோடி ரூபா யில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கும்ப

மத்திய அரசின் அனு மதியைப் பெறாமல் இத்திட்டத்திற்கு ஆந்திர அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என்பது, ஒரு பரமரனுக்குக் கூடத்தெரியும். ஆனால் பல முறை அமைச்சராக இருந்திருக் கின்ற ஆற்காடு வீராசாமிக்கு தெரியாமல் போனதுதான் மிகவும் வேதனையாகவும், வியப்பாகவும் இருக்கிறது.

வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் உயிர் நாடிப்பிரச்சினைக்குக் கூட முக்கியத்துவம் தராமல், ஆந்திர மாநிலத்திற்கு சாதகமாக தடுப்பு அணை கட்ட அனுமதி கொடுத்த மத்திய மந்திரி ராஜா, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

பா.ஜ.க. கூட்டணி மத்திய ஆட்சியில் அ.தி.மு.க. மந்திரிகள் பங்கேற்றபோது, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்ய வற்புறுத்திய போது அதற்கு பணிய மறுத்து எனது கட்சி மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லி, தமிழக மக்கள் நலனே முக்கியம் என்று கருதி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டேன்.

ஆந்திர முதல்-அமைச்சராக இருக்கும் ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வர். எனவே பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவதற்கு சோனியாகாந்தி மூலம் மத்திய மந்திரி ராஜாவிடம் அனுமதி பெற சிரமம் ஏதும் அடைய வாய்ப்பில்லை. மத்திய ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதியும், ராஜாவும் தமிழக மக்களின் நலனைக் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.

மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி. மாநிலத்திலும் தி.மு.க.வின் ஆட்சி. ஆனால் விவசாய மக்களின், பொதுமக்களின் குடிநீர் மற்றும் கோடான கோடி மக்களை பாதிக்கும் விஷயங்களில் தி.மு.க. எந்த உறுதியான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

3 அண்டை மாநிலங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மிகச் சாதூரியமான, சாணக்ச யத்தனமான, துணிச்சலான அணுகுமுறைகள் தேவை. எப்போது தி.மு.க. இந்த விஷயத்தில் வியாபார நோக்கோடு நடந்து கொள்ள ஆரம்பித்ததோ, அப்போதே தமிழகத்தின் நலன் பறிபோய் விட்டது. கருணாநிதி தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்கப் போகிறாராப என்பதை தமிழக மக்கள் பார்க்கத்தான் போகின்றார்கள்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை எதுவும் கட்டவில்லை: ஜெயலலிதாவுக்கு துரைமுருகன் பதில்

சென்னை, ஜன. 31-

பாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு அணை கட்டப்போவதாக அ.தி.மு.க. பொதுச்செயலார் ஜெயலலிதா அவரது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றில் ஆந்திரஅரசு தடுப்பனை ஒன்று கட்டுகின்ற பிரச்சினை குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு தடுப்பு அணை கட்ட முயற்சி செய்கிறது என்ற செய்தி வந்தபோதே சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வேலூர் மாவட்டத்திலும் இந்த பிரச்சினை குறித்து பேசி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் நானும் ஒருவன்.

ஏன், வேலூர் மாவட்ட மக்களின் ஆர்ப்பாட்டமே என் தலைமையின் கீழ்தான் நடந்தது. அன்று இந்த பிரச்சினை குறித்து மெத்தனமாக இருந்துவிட்டு உப்புக்கு சப்பாணி என்பது போல பெயருக்கு ஒரு வழக்கு உச்சநீதி மன்றத்தில் கொடுத்து விட்டு அதிலும் நமக்கு உள்ள உரிமைகளை எடுத்து வைக்காமல் பின்னர் அந்த வழக்கு என்னவாயிற்று என்று திரும்பியும் பார்க்காமல் வீட்டுக்கு போனவர் ஜெயலலிதா.

இந்த பிரச்சினை குறித்து ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்துக்கு ஓய்வு எடுக்க பல முறை சென்ற ஜெயலலிதா ஆந்திர முதல் மந்திரியிடம் அப்போது ஒரு முறையாவது விவாதித்தது உண்டாப

இல்லை எந்த அமைச்சரை யாவது ஆந்திராவிற்கு அனுப்பியது உண்டா?

ஆனால் கலைஞர் ஆட்சி அமைந்த பின் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர் பொன்முடியும் ஐதராபாத் சென்று அந்த மாநில முதல் மந்திரியை சந்தித்து தடுப்பணை விவகாரமாக விவாதித்தது ஜெயலலிதாவிற்கு உண்மையிலேயே மறந்து விட்டதா?

எந்த நடவடிக்கையும் ஆந்திரா அரசு இந்த பிரச்சினையில் எடுக்காது அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது குறித்து தமிழகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தியபின்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அந்த மாநில முதல் மந்திரி அன்று தமிழக அமைச்சர்களிடம் தெரிவித்து உள்ளார்.

அதையும் மீறி தடுப்பணை கட்ட முயன்றதாக செய்தி வந்ததும் நானே ஆந்திர நீர்பாசன துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆந்திர அரசோடு தொடர்பு கொண்டு இது குறித்து பேசி வருகிறார்.

தமிழக அரசு பொதுபணி துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டப்படும் என்று கூறப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று விசாரித்து உண்மை நிலையை அறிந்து சொல்லியிருக்கிறார்கள்.

ஆந்திர அரசு அப்படியொரு தடுப்பணையை கட்ட அதிகாரப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்கள்.

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி அண்டை மாநில உறவு கெடாமல் தீர்வு காண்பதற்கு பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஆந்திர அரசு ஜெயலலிதா திராட்சை தோட்டத்தில் கைவைத்து விட்டது என்று செய்தி வந்ததும் அறிக்கை விடுகிறார். பாலாற்றில் தடுப்பு அணை கட்டுகிறது என்றும் அதை தமிழக அரசு தடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார். உண்மையான விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் நுனிப்புல் மேய்வது என் பார்களே அது போன்ற நிலையில் விவாதத்தில் கலந்து கொள்வது ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான்.

சர்க்காரியா வழக்கை வாபஸ் வாங்குவதற்காக இந்திராகாந்தியிடம் பேரம் பேசியதாகவும் அதற்காக உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சினை குறித்து தொடுக்கப் பட்ட வழக்கை வாபஸ் பெற்றோம் என்று தி.மு.க மீது பழிபோட்டு பேரவையில் அறிவித்துவிட்டு உடனடியாக காங்கிரஸ் கட்சி தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் குறுக்கிட்டு அது தவறான தகவல் என்று கூறியதும் நானும் மனுஷி தானே தவறாக பேசி விட்டேன் நாக்கு தவறிவிட்டது என்று சட்டமன்றத்தில் பேசி மன்னிப்பு கேட்டவர்தான் இந்த ஜெயலலிதா. ஒன்று மட்டும் ஜெயலலிதா உணரவேண்டும். இந்த பிரச்சினை ஜெயலலிதாவுக்கு ஒரு அரசியல். ஆனால் எங்கள் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் உயிர் பிரச்சினை, உரிமை பிரச்சினை நாங்கள் இந்த பிரச்சினையில் எப்படி இருப்போம் என்று நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆந்திரத்தில் பாலாற்றில் அணை கட்டும் இடத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

வேலூர், பிப் . 2: ஆந்திர மாநிலம், குப்பம் கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்படவுள்ள பகுதியில் வியாழக்கிழமை பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூரிலிருந்து 15 கார்களில் குப்பம் கிராமத்திற்கு வந்த பாமக-வினர் 120 பேர், அணை கட்டும் மலைப்பகுதிக்கு கண்டன கோஷமிட்டபடி ஊர்வலம் போலச் சென்றனர். அணை கட்டப்படவுள்ள பகுதியில் சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பினர்.

பாமகவினர் வருகையை தெரிந்துகொண்ட சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயராம ரெட்டி காவல்துறை அதிகாரிகளுடன் வந்து, பாமகவினரிடம் கடுமையாக வாதிட்டார்.

இப்பகுதியில் மிகமோசமான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. அதற்காக அணை கட்டியே ஆகவேண்டும். நீங்கள் தமிழக அரசியல் காரணங்களுக்காக இங்கே வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். ஆந்திர மாநில காவல்துறை அனுமதியின்றி, தகவலும் தெரிவிக்காமல் வந்திருக்கிறீர்கள் என்று வாதிட்டு, வெளியேறும்படி கேட்டுக்கொண்டார்.

அதற்கு ஜி.கே.மணி, இந்தப் பிரச்சினை தமிழகத்தில் 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தைப் பாதிக்கும் என்பதால் நாங்கள் அக்கறையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்று அவரிடம் கூறினார்.

ஜெயராம ரெட்டியுடன் வந்தவர்கள், பாமகவினர் அப்பகுதியில் உள்ள மரங்களிலும், பாறைகளிலும் கட்டி வைத்திருந்த கொடிகளை எடுத்துக் கீழேபோட்டனர். ஆந்திர மாநில காவல்துறையினர் தலையிட்டு, பிரச்சினை பெரிதாகாமல் தடுத்தனர். பாமகவினருக்குப் பாதுகாப்பாக தமிழக எல்லை வரை வந்தனர்.

இதுகுறித்து ஜி.கே மணி கூறியது:

ஆந்திர மாநில எல்லைக்குள் பாலாற்றில் 20 கி.மீ.க்குள் 12 தடுப்பணைகளை ஏற்கெனவே உள்ளன. தற்போது குப்பம் பகுதியில் 110 மீட்டர் உயரத்தில் தடுப்பணையை கட்ட ஆந்திர அரசு கட்டவுள்ளது. வியாழக்கிழமை எளிய முறையில் அடிக்கல் நாட்டவுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் இங்கு வந்தோம். ஆனால் இங்கு வந்து பார்த்தபோது அடிக்கல் நாட்டு விழா தள்ளிப் போடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை நேரடியாக சந்தித்து, பிரச்சினையை அவரிடம் எடுத்துரைத்து, திட்டத்தைக் கைவிடச் செய்வதுதான் பாமகவின் நோக்கம்.

நாங்கள் அணை கட்டவுள்ள பகுதியை வியாழக்கிழமை காலை பார்வையிட்ட போது, பாலாற்றின் குறுக்கே, அணை கட்டும் இடத்துக்குச் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டு, பாறைகளில் பல இடங்களில் துளை இடப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆந்திர அரசு இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் சொல்வது பழைய செய்தி என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.எல். இளவழகன் (ஆர்க்காடு), டி.கே.ராஜா (திருப்பத்தூர்), மாநில துணைத் தலைவர் எம்.கே. முரளி, மாநில மகளிரணி தலைவி நிர்மலா ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், வேலூர் மாவட்ட பொருளாளர் கவிதா கோவிந்தன் உள்ளிட்டோர் பங்குகொண்டனர்.

பாலாற்றில் அணை: குப்பம் பகுதிக்குள் தமிழர்கள் நுழைந்தால் கைது செய்வோம்- ஆந்திர போலீஸ் அதிகாரி எச்சரிக்கை

பள்ளிப்பட்டு, பிப். 2-

வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட தமிழகத்தின் 5 வட மாவட்டங்களில் பாலாறு ஓடுகிறது. இந்த ஆறு ஆந்திராவில் இருந்து வருவதால், அவர்கள் தண்ணீர் திறந்து விட்டால்தான் பாலாற்றில் தண்ணீர் வரும். ஆந்திர மாநில எல்லைக்குள் பாலாற்றில் 20 கி.மீ. தூரத்தில் மட்டும் 12 தடுப் பணைகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது குப்பம் அடுத்துள்ள கணேசபுரத்தில் 110 மீட்டர் உயரத்தில் பெரிய அளவில் அணை ஒன்றை கட்ட உள்ளது. இந்த அணை கட்டினால் தமிழக பகுதியில் ஓடும் பாலாறு வறண்டு விடும் அபாயம் உள்ளது.

வேலூர் உள்பட 5 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். எனவே அணை கட்டுவதற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணை கட்டுவதை தடுக்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேலூரில் 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார்.

இந்த நிலையில் நேற்று பாலாற்றில் அணை கட்டும் பகுதிக்குள் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை அறிந்ததும் சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயராமரெட்டி தலைமையில் ஆந்திர விவசாயிகள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

பாலாற்று பகுதியில் உள்ள மரங்களில் பா.ம.க. வினர் தங்கள் கட்சிக் கொடிகளையும், “பாலாற்றில் அணை கட்டாதே” என்ற எதிர்ப்பு வாசகங்களையும் கட்டினார்கள். இதைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்த ஆந்திர விவசாயிகள் பா.ம.க.வினர் கட்டிய எதிர்ப்பு வாசகங்களை ஆவேசத்துடன் பிடுங்கி எறிந்தனர். கட்சி கொடிகளை சரமாரியாக கிழித்துப் போட்டனர். இதனால் அங்கு இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டது. ஆந்திர உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஜி.கே.மணியிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, “நாங்கள் இங்கு 110 மீட்டர் உயரத்தில் பெரிய அணை ஒன்றை கட்டியே தீருவோம்” என்றனர்.

பாலாற்றில் அணை கட்டும் பகுதி பதட்டமாக இருப்பதால் அங்கு ஆந்திர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலாற்றில் அணை கட்ட உள்ள குப்பம் தொகுதிக்குள் தமிழர்கள் யாராவது சித்தூர் மாவட்ட கலெக்டர் அனுமதி பெறாமல் நுழைந்தால் உடனே கைது செய்வோம்.

கணேசபுரம் பகுதியில் தமிழர்கள் கூட்டமாக வந்தால் விரட்டி அடிப்போம் வீணாக இங்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது. தமிழர்கள் பாலாற்று பகுதிக்குள் நுழைந்ததால் ஆந்திர விவசாயிகள் கொதிப் படைந்துள்ளனர். இதனால் நாங்கள் தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.

பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்யவும் ஆந்திர போலீசார் அறிவு றுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலாற்றில் அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது. குப்பம் தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தீட்டப்பட்டது.

தற்போது அடிக்கல் நாட்டு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அணை கட்டும் பணியை தொடங்கி விடுவோம். எங்களுக்கு மாநில மக்களின் நலன்தான் முக்கியம். இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. இதனால் இனியும் இந்த அணை கட்டும் திட்டத்தை தாமதப்படுத்த மாட்டோம்” என்றார்.

பாழாகும் பாலாறு

இராதாகிருஷ்ணன்

பாலாற்றுப் பிரச்சினை இன்றைக்கு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பாலாற்றின் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.

கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் சிக்பல்லபூர் வட்டத்தில் பல மலைகள் உள்ளன. இதில் சென்ன கேசவ மலையின் வடபகுதியில் தோன்றும் ஆறு உத்தரப்பிநாகினி. தென்பகுதியில் தோன்றும் ஆறு தட்சிணப் பிநாகினி. இவைதான் தமிழில் வடபெண்ணையாறு, தென் பெண்ணையாறு எனச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ஆறுகளுக்கும் இடையில் பாலாறு தோன்றுகிறது.

தற்போதைய பாலாற்றின் பயணம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

காவிரிப்பாக்கம் ஏரி மிகப் பெரியது. அந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், கொர்த்தலையாறு எனும் பெயரோடு கிழக்கில் பாய்கிறது. அது பயணிக்கும் வழியில் திருத்தணி கையாறு, நகரியாறு போன்றவற்றின் நீரைப் பெற்று, தற்போது சென்னைக்கு வடகிழக்கில், எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் சிலர், இக்கொர்த்தலையாறு பாயும் காவேரிப் பாக்கத்துப் பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் பாலாறு பாய்ந்திருத்தல் வேண்டும் என்று கருதுகின்றனர். இன்றைக்கும் பழைய பாலாறு என்ற பெயரில் சிற்றாறு ஒன்று இங்கு உள்ளது. அது கொர்த்தலையாற்றுப் படுகையையும் பாலாற்றுப் படுகையையும் இணைக்கும்படி அமைந்துள்ளது. இந்த சிற்றாறு சதுரங்கபட்டணம் அருகில் கடலில் சேர்கிறது. தமிழகத்தில் 140 கி.மீ. ஓடுகிறது.

கலிங்கத்துப்பரணியில் முதல் குலோத்துங்கனின் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான், காஞ்சியிலிருந்து கலிங்கத்திற்கு படையெடுத்துச் செல்லும்போது பல ஆறுகளைக் கடந்து சென்ற செய்தி பாடலின் வழி தெரிவிக்கப்படுகிறது. அதில் அவன் கடந்த முதல் ஆறு “பாலாறு’ என்று காட்டப்படுவதால், காஞ்சிக்கு வடக்கில் கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் பாலாறு பாய்ந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இத்தகைய சான்றுகள் மூலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை பாலாறு, காஞ்சிக்கு வடக்கில் உள்ள திருமாற்பேறு, வடகிழக்கில் உள்ள திருப்பாசூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில் வழியாகச் சென்று சென்னைக்கு வடக்கே உள்ள எண்ணூருக்கு அருகில் கடலில் கலந்து இருக்குமெனத் தெரிகிறது.

ஆனால் இன்று பாலாறு, சென்னைக்குத் தெற்கே எங்கோ மாற்றம் கண்டிருக்கிறது. தற்போது பாலாறு பெரும்பாலும் வறண்டு போய், கனமழை பெய்தால் நீர் வரும் ஆறாக மாறியிருக்கிறது. வரும் கொஞ்ச நஞ்ச நீரையும் தமக்கே தேக்கி வைக்க ஆந்திர எல்லையில் அணை கட்டும் வேலையில் ஆந்திர அரசு ஈடுபட்டு வருகிறது.

800 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வடக்கிலும், தற்போது சென்னைக்குத் தெற்கில் பெயரளவில் நீர் பாயும் தடத்தையும் கொண்டிருக்கும் பாலாறு, மனிதர் மனத்தால் இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் தமிழகத்தில் இப்படி ஓர் ஆறு இருந்தது என்று ஆராய்ச்சிக் கட்டுரையை யாரேனும் எழுதத் தூண்டலாம். இந்தத் துயர நிலையில் பாலாற்றுப் பிரச்சினையில் தமிழகம் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

ஆந்திர அரசு, தமிழகம் பாதிக்கக்கூடிய அளவில் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. கோலார் மாவட்டத்தில் துர்கா பகுதியில் உற்பத்தியாகி கர்நாடகத்தை அடுத்து ஆந்திரம் வழியாக தமிழகம் வருகிறது பாலாறு. பாலாற்றுப் படுகையில் உள்ள 11 ஆயிரம் கி.மீ பரப்பில் உள்ள தமிழக விவசாயிகள் பயன் பெறுகின்றனர். வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலாற்று மூலம் பாசன வசதிகளைப் பெறுகின்றன.

ராணிப்பேட்டைக்கு அருகில் அணை கட்டப்பட்டு இந்த அணையிலிருந்து மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம், சங்கரமல்லூர், தூசி என்ற நான்கு கால்வாய்கள் மூலம் பாசன நீர் கொண்டு செல்லப்படுகிறது. பல இடங்களுக்கு குடிநீர் வசதியும் பாலாறு மூலம் நீர்வரத்து கிடைக்கின்றது என்று கணக்கிடப்பட்டாலும் பாலாற்றின் நீர்வரத்து மழைக்காலத்தில்தான் அதிகமாக இருக்கும். பல சமயங்களில் தேவையான தண்ணீர் கூட வருவது இல்லை.

ஏனெனில் கர்நாடகமும் ஆந்திரமும் பாலாறு வரும் வழியில் வருகின்ற தண்ணீரை தாங்களே பயன்படுத்திக் கொள்கின்றன.

1850ல் இந்த ஆற்றின் குறுக்கே மண்ணாலான அணையைக் கட்டி காவேரிப்பாக்கம் ஏரிக்கு நீரைக் கொண்டு சென்றனர். நீண்ட கால கோரிக்கை ஏற்கப்பட்டு 1855-ல் ஒரு நிலையான அணையைக் கட்ட அரசு ஒப்புதல் அளித்தது. 1855ல் கட்டப்பட்ட அணை 1874ல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்தது. 1877ன் இறுதியில் வறட்சிப் பணிகளின் காரணமாக பாலாறு அணையை அகலப்படுத்தி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 1920-ல் மைசூர் அரசாங்கம் திடீரென (சென்னை மாகாண – மைசூர் அரசாங்க) ஒப்பந்தத்தை மீறி புது ஏரிகளை உருவாக்கி பாலாற்று நீரைத் தடுத்து விட்டது.

இப் பிரச்சினை குறித்து சென்னை மாகாணக் கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. அதன்பின்பு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கர்நாடக அரசு அணைகள் கட்ட நீரைத் தடுத்து விட்டது என்று குறிப்பிடப்பட்டது.

இதுகுறித்து சென்னை அரசு மைசூர் அரசிடம் புகார் தெரிவித்ததும் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திட்டமிட்டு மைசூர் அரசு பாலாறில் ஓடிய தண்ணீரை வறண்ட நிலைக்கு உள்ளாக்கி விட்டது.

1802ல் சென்னை மாகாணம் – மைசூர் அரசுகளுக்கிடையே ஓடும் நதிகளின் நீரை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஏற்பட்ட உடன்பாட்டின் 2வது பிரிவில் சென்னை மாகாணத்தின் அனுமதி இல்லாமல் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிகளில் புதிய அணைகளையோ நீர்த்தேக்கங்களையோ அமைக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டது. மொத்தம் 15 முக்கிய நதிகள் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நதிகளில் 8வது நதியாக பாலாறு இடம் பெற்றது. இவ்வாறு உடன்படிக்கை இருந்தும் கர்நாடக அரசு தொடக்கத்திலிருந்தே உடன்படிக்கைக்கு மாறாக நடந்து வந்து கொண்டிருக்கிறது.

1954-ல் வடஆற்காடு – செங்கல்பட்டு விவசாயிகள் மாநாட்டில் பாலாற்று பிரச்சினை குறித்து தீர்மானத்தில் “”100 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சினையில் தீர்க்க வேண்டுமென்று மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தினர்”.

தென்பெண்ணை பாலாறில் இன்றைக்கு தண்ணீர் இல்லாமல் பாழ் மண்ணாகத்தான் இருக்கின்து. இந்நிலையில் ஆந்திரத்தை ஆளும் காங்கிரஸ் அரசு ரூ. 250 கோடி செலவில் 160 அடி உயரத்தில் கணேசபுரம் அணை கட்ட பணிகளைத் துவக்கி விட்டனர்.

இந்த அணையின் மூலமாக ஆந்திரப் பகுதியில் உள்ள குப்பம் பகுதியை ஒட்டியுள்ள 120 கிராமங்கள் பயன் பெறும். மேலும் இங்கு கால்வாய்கள் வெட்டப்பட்டு சித்தூர் – திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலை நீடித்தால் தமிழகத்துக்கு பாலாறு மூலம் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் தேக்க முடியாத மழைநீர்தான் எதிர்காலத்தில் கிடைக்கும். நியாயமற்ற முறையில் அணை கட்டப்படுவதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தும் மத்திய அரசு பாராமுகமாக இருந்து வருவது அதிருப்தி அளிக்கிறது.

(கட்டுரையாளர்: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்).

பாலாறு விவகாரம்: கருணாநிதிக்கு ஆந்திர முதல்வர் உறுதி

சென்னை, பிப். 5: தமிழக அரசைக் கலந்து பேசாமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்க மாட்டோம் என்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசி மூலம் உறுதி அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில், குப்பம் பகுதியில், பாலாற்றின் குறுக்கே, தடுப்பணை ஒன்றைக் கட்ட, அந்த மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாக வரும் செய்தி குறித்து தமிழக முதல்வர் பிப்ரவரி 1-ம் தேதி ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு கடிதம் எழுதினார்.

அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை காலை ஆந்திர முதல்வருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கருணாநிதி பேசினார். அப்போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எடுத்துவரும் முயற்சி குறித்து பேசினார்.

அப்போது, “”ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஹைதராபாதுக்கு வந்து சந்தித்தபோது அவர்களுக்கு அளித்த உறுதி மொழி காப்பாற்றப்படும்.

அவர்களிடம், கூறியபடி, தமிழக அரசை கலந்து பேசாமல் தடுப்பணை கட்டும் விஷயத்தில் ஆந்திர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையில் மாநிலங்களுக்கிடையே உள்ள உறவு பாதிக்கின்ற வகையில் ஆந்திர அரசு ஈடுபடாது.

இந்தப் பிரச்சினை தொடர்பான அனைத்து விவரங்களையும் தனது நேரடி கவனத்திற்குக் கொண்டு வரச் சொல்லி இருப்பதாகவும் கூறினார். அத்துடன் இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இரண்டு தினங்களில் விரிவான கடிதத்தை முதல்வருக்கு அனுப்பவிருப்பதாகவும் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.


பாலாற்றில் அணைகட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு

09 ஏப்ரல், 2007

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திரா வழியாக தமிழ்நாட்டிற்குள் பாயும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிய அணை கட்டினால், அதை சட்ட ரீதியாக எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி தமிழக அரசு சந்திக்கும் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்கள், ஆந்திர அரசு, தமிழக எல்லையை ஒட்டிய சித்தூர் மாவட்டம் குப்பம் என்கிற இடத்திற்கு அருகே பாலாற்றின் குறுக்கே அணைக் கட்ட போவதாகவும், இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். ஆந்திர அரசு இந்த அணையை கட்டினால், தமிழ்நாட்டின் வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப் படும். என்றும் கவலை தெரிவித்தனர்.

தமிழக அமைச்சர் துரைமுருகன்
தமிழக அமைச்சர் துரைமுருகன்

இதற்கு பதிலளித்துபேசிய துரைமுருகன் பாலாற்றின் குறுக்கே அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு மிகவும் அக்கறையுடன் முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஆந்திரா சென்று அம் மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து பேசியதாகவும், அப்போது தமிழக மக்கள் நலனுக்கு எதிராக ஆந்திரா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று ஆந்திர முதல்வர் உறுதி அளித்ததாகவும் துரைமுருகன் கூறினார்.

நேற்று முன்தினம் இந்திய தலைநகர் டில்லியில் ஆந்திர முதல்வரை சந்தித்து பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுவதாக வெளியான செய்திகள் பற்றி தாம் கேட்ட போது, அடிக்கல் நாட்டுவதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை என்றும் முழு விவரம் தெரிந்ததும் தம்மிடம் தெரிவிப்பதாக ஆந்திர முதல்வர் தம்மிடம் தெரிவித்ததாகவும் துரைமுருகன் கூறினார்.

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்திவருவதாக துரைமுருகன் தெரிவித்தார்.

இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை, திண்டிவனம் அருகே செண்டூர் கிராமத்தில் 17 பேர் பலியான வெடிவிபத்து பற்றி விசாரிக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையருமான எம்.எப்.பாரூக்கி, விபத்துக்குள்ளான ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட வெடிமருந்து எந்த வகையைச்சேர்ந்தது என்பது குறித்தும் விசாரிப்பார் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பாக இன்று பேசிய எதிர் கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இந்த சம்பவத்திற்கு காரணமான வெடிமருந்து எம்மாதிரியான வெடிமருந்து என்பதையும் பாரூக்கி ஆய்வு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த கருணாநிதி, தமது அரசு இந்த விடயத்தில் எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும், இந்த வெடிவிபத்துக்கு காரணமான வெடிமருந்து எந்த வகையைச்சேர்ந்தது என்பதையும் பரூக்கி விசாரிப்பார் என்றும் அறிவித்தார்.

 

——————————————————————————————————
மெல்லச் சாகிறது பாலாறு

எம். மதனகோபால்

வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் – பாலாறு.

இந்த ஒரு நதியை நம்பி விவசாயமும் குடிநீர் வழங்கலும் தொழிலும் தடையின்றி நடைபெற்ற காலம் மறைந்து, இன்று தோல் தொழிலுக்கு மட்டுமே பாலாறு என்ற நிலைமையே மேலோங்கி இருக்கிறது.

மழைக்காலத்தில் பாலாற்றின் வெள்ளப் பெருக்கு தொண்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு ஏரி, குளங்களை நிரப்புவதாலும், நிலத்தடி நீரை உயர்த்துவதாலும் இதுவரை பிரச்னை இல்லாமல் இருந்துவந்தது.

தற்போது ஆந்திர அரசு தமிழகத்தின் எல்லையில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டவுள்ளதால், தமிழகத்துக்கு கிடைத்துவரும் தண்ணீரில் ஆண்டுக்கு 450 மில்லியன் கனஅடி தண்ணீர் குறையும்.

இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்பது ஒருபுறம் இருக்க, குடிநீருக்கும் தட்டுப்பாடு உண்டாகும் என்பது நிச்சயம். தமிழகத்தில் தண்ணீர் வருவது கட்டுப்படுத்தப்படுவதால் ஏரி குளங்களுக்கு நீர் கிடைப்பது அரிது.

படிப்படியாக மூன்று மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் செய்ய முடியாத நிலைமை நிச்சயம் ஏற்படும். இதற்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

பாலாற்றில் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும்போது தண்ணீர் ஊறி பல மாதங்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்த நிலைக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பாலாற்றின் படுகையில் மணல் வரம்புமீறி அள்ளப்படுவதுதான்.

ஆனால் பாலாற்றில் உள்ள மணலை கொள்ளையடிக்கிறார்கள். இதில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே தகராறும், லாரிகள் மறிப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மணல் கொள்ளை நின்றபாடில்லை.

மிக நீண்ட தொலைவுக்கு வெள்ளை மணல் பரவிக்கிடந்த பாலாற்றுப் படுகையில் இப்போது புல்பூண்டுகள் முளைத்து செம்மண் நிலமாக காணப்படுகிறது. ஓர் ஆறு மறைந்து வருகிறது. இதற்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது?

மேலும் பாலாற்றுக் குடிநீர் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு, பழையசீவரம், வில்லியம்பாக்கம் பகுதி வழியாக குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த இடங்களில் உள்ள கிணறுகள் வறண்டு வருகின்றன. அதனால், இனிமேல் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு குடிதண்ணீர் கிடைக்காது. அதனால், அப்பகுதி மக்கள் புதிய வீராணம், கிருஷ்ணா நதி குடிதண்ணீர் கிடைக்கும் இடங்களுக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்படும்.

இன்றைய சூழ்நிலையில் காஞ்சி நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. எதிர்காலத்தில் முழுமையாக குடிதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு காஞ்சி நகர மக்கள் குடிதண்ணீருக்காக சென்னையில் குடியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.

பாலாற்றுக் குடிநீர் என்பது மற்றவகை குடிநீரைவிட இயற்கையிலேயே கிடைக்கும் நிலத்தடி நீராகும். மிகவும் சுத்தமானது; சுவையானது.

இயற்கையாகவே கிடைக்கும் சுத்தமான பாலாற்றுக் குடிநீர், தற்போது வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று நகரங்களிலும் உள்ள 500-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்கூட ரசாயனக் கழிவுகளால் மாசுபட்டு இருக்கிறது. நிலத்தடி நீரும் கெட்டுள்ளது. பாலாற்றுப் படுகையையொட்டி நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலத்தடி நீரில் ரசாயன நச்சு கலந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தோல்நோய், புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனக் கழிவுகள் இவை.

இப்போதைய அரசு, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையையும், ஆற்றில் ரசாயன நச்சுக் கழிவுகள் கலப்பதையும் தடுக்கும் வகையில், பாலாறு பாதுகாக்கப்பட்ட ஆறு என அறிவிக்க வேண்டும்.

பாலாறு தற்போது மத்திய அரசின் அட்டவணை-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அப்படியிருந்தும்கூட இந்த ஆறு பல்வேறு விதிமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசு பாலாற்றுக்குத் தனி முக்கியத்துவம் தந்து பாதுகாக்கப்பட்ட ஆறு என்ற அறிவிப்பை செய்யத் தவறினால் விவசாயம் முற்றிலும் இயலாததாக மாறுவதுடன் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகும்.

மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களும், தோல் தொழிற்கூடங்களும் கேட்கும் கேள்விகள்என்னவென்றால் – மணல் இல்லாவிட்டால் எப்படி கட்டுமானப் பணிகள் நடக்கும்? தோல் தொழிலால் ரூ.5000 கோடி ஏற்றுமதி நடக்கிறது. இவை தடைபட்டால் பல லட்சம் மக்கள் வேலை இழப்பார்கள் என்பதே!

மணல் கொள்ளையர்களும் தோல் தொழிற்கூட உரிமையாளர்களும் குடிநீரை விலை கொடுத்து வாங்கக் கூடும். நோய்களுக்கு மிகப் பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடும். ஆனால் சாதாரண மக்கள் குடிநீருக்கும் தோல் அல்லது புற்றுநோய் சிகிச்சைக்கும் வழியின்றி சாவது மட்டுமே நிச்சயம்.

எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் காரணம் காட்டி, அம்மக்களின் வாழ்க்கையை அழிப்பது எந்த வகையில் புத்திசாலித்தனமானது, நியாயமானது?

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

———————————————————————————————————–
ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டும் பணி தாற்காலிக நிறுத்தம்

வேலூர், ஆக. 9: பாலாற்றின் குறுக்கே கணேசபுரத்தில் அணை கட்டும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பாமக தொடர்ந்த பொதுநல வழக்கைத் தொடர்ந்து இப்பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் எஸ். ராவட் புதன்கிழமை கூறியதாவது:

ரூ. 55 கோடியில் கட்டப்படும் தடுப்பணை திட்டம் நீதிமன்ற நடவடிக்கையால் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குப்பம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இந்த சிறிய திட்டம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தீர்ப்பு ஆந்திர அரசுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறோம் என்றார்.

தற்போது உச்சநீதிமன்றத்தில் 4 வழக்குகள் இந்த அணை கட்டுமானப் பணியை எதிர்த்து தொடரப்பட்டுள்ளன. ஒரு வழக்கு அதிமுக அரசும், மற்றொரு வழக்கு திமுக அரசும் தொடர்ந்துள்ளன. பொதுநல வழக்குகளாக பாட்டாளி மக்கள் கட்சியும், வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.எம். பஷீரும் தொடர்ந்துள்ளனர்.

———————————————————————————————————–

Posted in A Raja, ADMK, Agriculuture, AIADMK, Analysis, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Andhra Pradesh, AP, Arcot N Veerasamy, Backgrounder, Cauvery issue, Chennai, Chitore, Chittoor, Chittore, Chittur, Dam, Details, Developments, DMK, Duraimurugan, Environment Minister, Events, Farming, Floods, Future, Ganesapuram, GK Mani, Government, Happenings, History, Irrigation, Jayalalitha, Jayalalithaa, JJ, Kachipuram, KANCHEEPURAM, Kanchi, Kanjeepuram, Kerala, Kolar, Kuppam, Madras, MDMK, Mullai Periyar, Paalaar, Paalaaru, Paalar, Paalaru, Palar, PMK, Public Works, Public Works Department, PWD, PWD Minister, R&D, Rajasekara Reddy, Ramadas, Ramadoss, Research, River, solutions, Tamil Nadu, Thiruvalloor, Thiruvallur, Thiruvannamalai, TN, Vaaniyambadi, VaiKo, Vaniyambadi, Vellore, Water, YSR | 6 Comments »