Delhi University to honour Amitabh, Sheila Dikshit, RK Laxman
Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006
நடிகர் அமிதாப்பச்சனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: டெல்லி பல்கலைக்கழகம் வழங்குகிறது
புதுடெல்லி, நவ. 2-
இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கடந்த ஜுலை மாதம் இங்கிலாந்தில் உள்ள மான்ட் போர்ட் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் பிரான்ஸ் அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அமிதாப் பச்சனின் திரையுலக சாதனை களை பாராட்டி 4-ந் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்க டெல்லி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இது பற்றி டெல்லி பல்கலைக்கழக பதிவாளர் ஏ.கே.துபே கூறும் போது, டெல்லி பல்கலைக்கழகம் முதன் முதலாக திரையுலகைச் சேர்ந்த ஒருவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. அமிதாப்பச்சன் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன் னாள் மாணவரும் கூட அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க கடந்த ஆண்டே முடிவு செய்தோம்.
ஆனால் ஒரு சில காரணங்களால் அது தள்ளி வைக்கப்பட்டது. நாங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு முன்பே மான்ட் போர்ட் பல்கலைக்கழகம் வழங்கி விட்டது என்றார்.
அமிதாப்பச்சன் தவிர
- டெல்லி முதல்-மந்திரி ஷீலாதீட்சித்,
- விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்,
- எழுத்தாளர் மகஸ்வேதா தேவி,
- கார்ட்டூன் ஓவியர் ஆர்.கே.லட்சுமன்,
- டாட்டா நிறுவன அதிபர் ரத்தன் டாட்டா
ஆகியோருக்கும் 4-ந் தேதி டெல்லி பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்