Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 15th, 2006

North Block nixes Lalu’s plan for Rae Bareli

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2006

ரேபரேலி தொகுதியில் ரெயில் பெட்டி தொழிற்சாலை: லல்லுவின் திட்டத்துக்கு நிதி அமைச்சகம் தடை

இந்தியாவில் 2 இடங்களில் ரெயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலைகள் உள்ளன. ஒன்று சென்னை ஐ.சி.எப். மற்றொன்று பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ளது. இந்த இரண்டு இடங்களில் இருந்தும் ஆண்டுக்கு 2,300 பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

3-வதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தொகுதியான ரேபரேலியில் ரெயில்பெட்டி தொழிற்சாலை அமைக்க லல்லுபிரசாத் திட்டமிட்டார்.

ரேபரேலியில் ரெயில் பெட்டி தொழிற்சாலையை அமைப்பதன் மூலம் ஆண்டுக்கு மேலும் 1,200 பெட்டிகளை தயாரிக்க முடியும் என்று ரெயில் அமைச்சகம் கருதியது. முதலில் இந்த திட்டத்துக்கு ரூ. 1,000 கோடி ஆகும் என்று கணக்கு காட்டப்பட்டது. தற்போது இதற்கான திட்டச் செலவு ரூ.1685 ஆகும்என்று தெரியவந்துள்ளது. இதற்கான அனுமதியை ரெயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகத்திடம் கேட்டது.

ரேபரேலியில் ரெயில் பெட்டி தொழிற்சாலை திட்டத்தை நிதி அமைச்சகம் நிராகரித்து உள்ளது. திட்டச்செலவு அதிகமாக இருப்பதாலும், தற்போது ரெயில் பெட்டி தொழிற்சாலை தேவை இல்லை என்று கருதுவதாலும் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இதேபோல லல்லுவின் தொகுதியான சாப்த்ராவில் டீசல் ரெயில் என்ஜீன் உற்பத்தி தொடர்பான திட்டத்துக்கு நிதி அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.

Posted in Ambathur, Business, Cabinet, Chapra, Coach, Economy, Factory, Finance, Five-Year Plan, Freight, ICF, India, Industry, Kapurthala, Laloo Prasad Yadav, Lalu, locomotives, Lok Sabha, Manufacturing, MP, North Block, parliament, passenger, Politics, Punjab, Rae Bareli, Railways, Sonia Gandhi, Trains | Leave a Comment »

New Mahabharath – Rani Mukherjee as Paanchali & Amitabh as Bhishmar

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2006

ரூ.150 கோடியில் புதிய மகாபாரத படம்: பாஞ்சாலியாக ராணிமுகர்ஜி; பீஷ்மராக அமிதாப்

தொலைக்காட்சி தொடரில் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியது மகா பாரதம் தொடர். 1988-ம் ஆண்டு ஒளிபரப்பாகி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மகா பாரதத் தொடர் 120 இந்திய மொழிகளிலும், 88 வெளிநாட்டு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப் பப்பட்டது.

ரவி சோப்ரா இந்த மெகா தொடரை இயக்கி தொலைக் காட்சி சரித்திரத்தில் இடம் பிடித்தார்.

இந்த “மகாபாரதம் சீரியலை அப்படியே சினிமாவாக தயா ரிக்க முடிவு செய்துள்ளார். இந்திப் பட உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரை இந்த படத்தில் நடிக்க வைக்க திட்ட மிட்டுள்ளனர்.

மகா பாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான பாஞ்சாலி வேடத்தில் ராணிமுகர்ஜியை நடிக்க வைக்கவும், பீஷ்மர் வேடத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்கவும் முயற்சித்து வரும் சோப்ரா அதற்காக அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

சினிமா உலகிலேயே இது வரை இல்லாத அளவுக்கு மிக நீண்ட நேரம் ஓடும் படமாக இப் படம் தயாராக உள்ளது. குறைந்தது ஆறு மணி நேரம் ஓடும் அளவுக்கு மகாபாரத படம் தயாரிக்க உள்ளது.

இந்தி மொழியில் தயாராகும் இப் படத்திற்கு ரூ.150 கோடி வரை செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹாலிவுட்டிலிருந்து ஸ்பெஷல் எபெக்ட் கலைஞர்கள் வர வழைக்கப்பட்டு மந்திர தந்திர காட்சிகள் உருவாக்கப்பட உள்ளன.

அடுத்த ஆண்டு மகாபாரதம் படத்தின் ஷுட்டிங்கை சோப்ரா தொடங்க உள்ளார்.

Posted in Amitabh, Bhishmar, Bollywood, Chopra, Cinema, Hindi, Mahabharat, Mahabharath, Movies, Paanchali, Rani Mukherjee, TV | Leave a Comment »

Rajni’s animated movie Hara – 18 Languages : AR Rahman Music

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2006

ரூ. 75 கோடியில் தயாராகும் ரஜினி `அனிமேஷன்’ படம் `ஹரா’: மகள் சவுந்தர்யா இயக்குகிறார்

ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா வெளிநாட்டியில் `அனிமேஷன்’ படித்துள்ளார். `சந்திரமுகி‘, `நியூ‘ உள்ளிட்ட சில படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளை இவர் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ரஜினியின் முழுநீள `அனிமேஷன்’ படம் ஒன்றை உருவாக்க சவுந்தர்யா திட்டமிட்டுள்ளார். இதற்கான ஆரம்பகட்டப்பணிகளை ஓசையில்லாமல் செய்து வருகிறார்.

இந்த `அனிமேஷன்’ படத்துக்கு ரூ. 75 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முதலீடு செய்ய பிரபல கம்பெனிகள் முன்வந்துள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, போஜ்புரி 18 மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது.

ரஜினியின் நடைஉடை பாவனைகள் 40 நாட்கள் படம் பிடிக்கப்பட்டு அவர் தோற்றத்தில் `அனி மேஷன்’ ஹீரோவை உருவாக்குகிறார்கள். அவர் குரலும் இதில் சேர்க்கப்படுகிறது. சிவாஜி படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தை எடுக்க ரஜினி நேரம் ஒதுக்குகிறார்.

ஆஸ்திரேலியா, ஸ்பெயின், லண்டனில் இருந்து 240 `அனிமேஷன்’ நிபுணர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இவர்கள் சென்னையில் தங்க வசதி செய்யப்படுகிறது. இந்த படத்துக்காக ஜெமினி மேம்பாலம் அருகில் பிரத்யேக அலுவலகம் திறக்கப்படுகிறது. படத்துக்கு கதை வசனம் ரெடியாகிவிட்டது. 18 மொழிகளுக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ரஜினி அனிமேஷன் படத்துக்கு `ஹரா‘ என்ற பெயர் சூட்ட சவுந்தர்யா முடிவு செய்துள்ளாராம். ஹரிஹரன் என்ற கடவுள் பெயரை ஹரா என்று சுருக்கி சூட்டுகிறார்.

Posted in 3D, Animation, AR Rehman, Hara, Movies, music, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Sivaji, Sivaji the Boss, Soundarya, Superstar, Tamil Cinema | 1 Comment »

Tharun deceived me – Arthi Aggarwal

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2006

`காதலித்து என்னை ஏமாற்றி விட்டார்’: நடிகர் தருண் மீது ஆர்த்தி அகர்வால் புகார்

பழைய நடிகை ரோஜா ரமணியின் மகன் தருண். தமிழில் `எனக்கு 20 உனக்கு 18‘, `காதல் சுகமானது‘, `புன்னகை தேசம்‘ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோவாக உள்ளார்.

தருணும் நடிகை ஆர்த்தி அகர்வாலும் காதலித்தனர். இந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் மனம் உடைந்த ஆர்த்தி அகர்வால் தூக்கமாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமானார்.ஆர்த்தி அகர்வாலும் அவரது குடும்பத்தினரும் திருப்பதி கோவிலுக்கு சாமிகும்பிட வந்தனர். அப்போது நிருபர் களிடம் ஆர்த்தி அகர்வால் கூறியதாவது:-

சொந்த பிரச்சினைகளில் சிக்கி நிறைய கஷ்டப்பட்டேன். விரும்பத்தகாத சம்பவங்களெல்லாம் நடந்து போச்சு.

காதல், கல்யாணம், மரணம் ஆகிய மூன்றும் நாம் நினைக்கும் போது வராது. என்னை ஏமாற்றியவர் தூரமாய் போய் விட்டார். என்னை வேண்டாம் என்று போனவர்கள் பற்றி நான் கண்டுக்க வேண்டிய அவசியம் இல்லை.

நடந்த விஷயங்களை மறந்துட்டு வர்றேன். இனிமேல் அது மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்வேன். ஏற்கனவே செய்த தவறை திரும்பவும் செய்ய மாட்டேன். இதுவரை நடந்த தவறுகள் இனி நடக்காது இனிமேல் நான் ஏமாறவும் மாட்டேன்.

என் வாழ்க்கையில் தான் இது மாதிரி நடந்திருப்பதாக நினைக்க வேண்டாம். என்னை மாதிரி ஏமாற்றங்களை சந்தித்த நடிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னைப் பற்றி வெளியே தெரிந்து போச்சு அவர்களை பற்றி வெளியே தெரியல.

இவ்வளவு கஷ்டத்துக்கு இடையிலும் நான் நடிச்ச `அந்தாலராமுடு‘ தெலுங்கு படம் நன்றாக ஓடுது. மேலும் சில படங்களில் நடிக்க கதை கேட்கிறேன்.

என் சரிவுக்கு என்னுடைய குடும்பத்தினர் தான் காரணம் என்பது சரியல்ல. நான் சினிமாவில் உயர என் தந்தை தான் காரணமாக இருந்தார்.இவ்வாறு ஆர்த்தி அகர்வால் கூறினார்.

Posted in Aarthi Agarwal, Arthi Aggarwal, Cheat, Deception, Dharun, Dupe, Enakku 20 Unakku 18, Kaathal Sugamanathu, Kollywood, Love, Marriage, Punnagai Desam, Roja Ramani, Suicide, Tamil Cinema, Tamil Movies, Telugu, Tharun, Tollywood | Leave a Comment »

Venkatesh’s Vaathiyar movie plot was stolen from me – Rajkumar

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2006

வாத்தியார் படகதை திருட்டு: போலீஸ் கமிஷனரிடம் டைரக்டர் புகார் 

வடபழனி அழகர்பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது33). இவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது

டைரக்டர் ஏ.ஆர்முருகதாசிடம் நான் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளேன். வாத்தியார் படத்தின் கதையை ஏற்கனவே உருவாக்கி விஜய், விக்ரம், சூர்யாவை சந்தித்து சொல்லியுள்ளேன். தற்போது அந்த கதை படமாக வெளிவந்துள்ளது. எனவே இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Arjun, Copyright, Fear, Imman, Mallika Kapoor, Rajkumar, Screenplay, Steal, Story, Tamil Cinema, Tamil Movie, Vaathiyaar, Vaathiyar, Vathiyar | Leave a Comment »