`சிவாஜி’ படப்பிடிப்பு; ரஜினி, ஸ்ரேயா அமெரிக்கா பயணம்; தந்தை `கெட்டப்’ படமாகிறது
ரஜினி நடிக்கும் சிவாஜி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. 50 சதவீதத்துக்கு மேல் படப்பிடிப்பு முடிந்துள் ளது. புனேயில் நயன்தாராவின் நடன காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் கல்லூரி காட்சிகளும் எடுக்கப்பட்டன.
கதைப்படி அமெரிக்காவில் வாழும் கோடீசுவர இந்தி யரின் மகனான ரஜினி தமிழக மக்களுக்கு சேவை செய்ய பணத்துடன் வருகிறார். பள்ளி, கல்லூரிகள் தொடங்கி உதவி செய்கிறார். ஏழைகளுக்கு இலவச கல்வி கொடுக் கிறார்.
இதனால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைகிறார். அவர் மீது எரிச்சல்படும் அரசியல் வாதிகள் பொய் வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்புகிறார்கள். சொத்துக் கள் பறிபோகிறது. ஏழையா கும் அவர் மீண்டும் பணக்கார ராகிறார்.
சிவாஜிக்காக புனேயில் உள்ள கம்ப்ïட்டர் நிறுவனங் களில் சிவாஜி யுனிவர்சிட்டி கல்லூரி என்றெல்லாம் பெயர் பலகைகள் வைத்து ஆடம்பமாக படமாக்கப்பட்டது.
கல்லூரியை ரஜினி திறப்பது போல் காட்சி கள் எடுக்கப்பட்டன. மாண வர்களை அந்த கல்லூரியில் ரஜினி சேர்த்து இலவசமாக படிக்க வைக்கும் காட்சிகளும் எடுக்கப்பட்டுது.அடுத்த கட்டமாக அமெரிக்காவில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
சிவாஜியில் ரஜினிக்கு இரட்டை வேடம் தந்தை, மகன் கெட்டப்பில் நடிக் கிறர். தந்தை கேரக்டர் அமெரிக் காவில் தொழில் அதிபராக இருப்பது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தந்தை `கெட்ப்’புக்காக ரஜினி நடித்த பழைய படங்களின் ஸ்டில்களை டைரக்டர் ஷங்கர் பார்த்து அதிலிருந்து தலையில் வகிடெடுத்துள்ள தோற்றத்தை தேர்வு செய்துள்ளார். அதே கெட்டப்பில் தந்தை பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தோற்றத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படுகின்றன. `டூயட்’ பாடல் காட்சியும் படமாக் கப்படுகிறது.
இதற்காக ரஜினி, ஸ்ரேயா, டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்கள்.
`சிவாஜி’ படத்தில் பிரபு தேவா நடன பயிற்சி அளித் துள்ளார். 10 நாட்கள் இந்த நடன காட்சிகள் படமாக் கப்பட்டு உள்ளன. ரஜினி வளைந்து நெளிந்து அபாரமாக ஆடி நடித்ததாக பிரபுதேவா கூறினார்.
வில்லன் பாத்திரத்தில் சுமன் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. ரஜினி நண்பராக ரகுவரன் நடிக்கிறார். ரகுவரன் நடிக்கும் காட்சிகளும் புனேயில் படமாக்கப்பட்டு விட்டது.
அறிமுக பாடல்
`சிவாஜி’ படத்தில் ரஜினி அறிமுக பாடல் ஒன்று இடம்பெறுகிறது. எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்த பாடல் காட்சியும் புனேயில் படமாக்கப்பட்டது. 5 ஆயிரம் துணை நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவையும் இப்பாடல் காட்சியில் படமாக்கப்பட்டது.
சிவாஜி படத்தில் ரஜினி உடுத்தும் ஆடைகள் இதுவரை இல்லா அளவிற்கு மிகவும் வித்தியசமாகவும், ஸ்டைலாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளன. ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ஐஸ்வர்யாராய், ப்ரீத்தாஜிந்தா, ராணிமுகர்ஜி போன்ற பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருப்ப வரான மணிஷ் சிவாஜி படத்திற்கு அடை ஆலங்காரம் செய்கிறார்.