மேட்டுப்பாளையம் நகரசபையில் வீடு, வீடாக சென்று குப்பை சேகரித்த கவுன்சிலர்
மேட்டுப்பாளையம், நவ. 26- மேட்டுப்பாளையம் நகராட்சி 15-வது வார்டுக் குட்பட்ட நிï எக்ஸ்டென்சன் வீதி, பெரிய பள்ளிவாசல் வீதி, திரு.வி.க. வீதி, அண்ணாஜிராவ் ரோடு ஆகிய பகுதிகள் உள்ளது. கடந்த 4,5 நாட்காக 15-வது வார்டில் உள்ள வீடுகளில் குப்பை சேகரிக்க நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் யாரும் வரவில்லையெனத் தெரிகிறது.
இதனால் வீடு களில் மலைபோல் குப்பை தேங்கியது. இதுபற்றி வார்டு கவுன்சிலர் முகமது யூனுஸ் நகராட்சி நிர்வாகம் மற்றும் மேஸ்திரியிடம் பலமுறை எடுத்துக் கூறினார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகி றது.
இதனால் வேதனையும், வெறுப்பும் அடைந்த கவுன்சிலர் முகமது ïனுஸ் காலை குப்பை வண்டியை தள்ளிக்கொண்டு பெரிய பள்ளிவாசல் வீதி, நிï எக்ஸ்டென்சன் வீதி, தி.ரு.வி.க. வீதி ஆகிய வீதிகளில் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்தார். சேகரித்த குப்பை களை காயிதேமில்லத் திடலில் உள்ள குப்பை சேகரிக்கும் மையத்தில் கொட்டினார்.
இதே நிலை கடந்த வாரம் 3-வது வார்டிலும் காணப்பட்டது. உடனே வார்டு கவுன்சிலர் முகமது உசேன் வார்டுக்குட்பட்ட சிறுமுகை ரோடு, தோல்-ஷாப், சீரங்கராயன் ஓடை ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று குப்பை வண்டியில் குப்பையை சேகரித்தார்.
நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு, துப்பு ரவு தொழிலாளர்களின் மெத்தனப்போக்கு பொது மக்களிடையே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது.