Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 21st, 2006

EV Saroja – Lifesketch

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

ஈ.வி.சரோஜா!

எஸ்.விஜயன்


தமிழ் திரைப்பட ரசிகர்களின் முன்னாள் கனவு கன்னியரில் ஒருவர் நடிகை ஈ.வி. சரோஜா. கடந்த நவ., 3, ’06 அன்று காலமான அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி, “தஞ்சை மாவட்டத்தில் நான் வாழ்ந்த திருவாரூருக்கு அருகில் உள்ள எண்கண் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஈ.வி.சரோஜா!’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஐந்தாம் வகுப்பு வரை படித்த சரோஜா, தன் ஆறாவது வயதிலேயே நடனம் பயின்று அரங்கேற்றம் செய்தவர். 1948ல் தன் 13வது வயதில் சென்னை வந்தவர், 1952ல், தன் 15வது வயதில் “என் தங்கை’ யில் அறிமுகமானார். அதில், அவர் எம்.ஜி. ஆருக்கு தங்கையாக நடித்தார். இதற்கு பின் சரோஜா நடனத்திற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களாகவே பார்த்து நடித்தார். குலேபகாவலி சந்திர பாபு, காத்தவராயன், மதுரை வீரன், (“வாங்க… மச்சான் வாங்க வந்து வழியைப் பார்த்து போங்க…’ என்ற பாடல் பெரிதும் பிரபலம்) புதுமைப் பித்தன், படிக்காத மேதை (சிவாஜிக்கு தங்கை), பாக்யலட்சுமி (ஜெமினி ஜோடி) பிள்ளைக்கனியமுது மற்றும் மணப்பந்தல் (எஸ்.எஸ். ஆர்.ஜோடி) நல்லவன் வாழ்வான் (நம்பியார் ஜோடி)

“வீரத்திருமகன்’ (புரட்சிப் பெண்ணாக வருவார். “கேட்டது கிடைக்கும்… “பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…’ ஆகிய பாடல்களில் வரும் சரோஜாவின் நடனம் பிரபலம்) ஆகிய தமிழ்ப் படங்களிலும், தெலுங்கில் 30 படங்களிலும், கன்னடம், சிங்களம் (வட இந்திய நடனக் கலைஞர் கோபி கிருஷ்ணா நடித்த படம்) ஆகிய மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். நாகேஸ்வர ராவுடன் மட்டும் 10 படங்களில் நடித்திருக்கும் சரோஜா, “இத்ரு மித்ரலு’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

மீன்களை போன்ற கண்கள் என்பார்களே… அது ஈ.வி. சரோஜாவுக்கு இருந்தது. அவரது கண் அசைவுக்கே, அதிலும் புருவங்களை அவர் ஏற்றி இறக்கும் போது ரசிகர்களெல்லாம் ஆர்ப்பரிப்பர். நடனத்தில் அவரது வேகம் அபாரமானது. “குலேபகாவலி’யில், “குல்லா போட்ட நவாப்பு… செல்லாதுங்க ஜவாப்பு…’ என்ற பாடலில் சந்திர பாபுவுடன் அவரது நடன அசைவுகள் ரசிகர்களையும் ஆடச் செய்யும். எத்தகைய நடனப் பாடல் என்றாலும் அதில் சரோஜாவின் நடன அசைவுகளில் துளியும் விரசம் இருக்காது.


“உத்தம புத்திரன்’ படத்தில் சிவாஜியுடன், “யாரடி நீ மோகினி…’ பாடலில் ஹெலன் நடனம் ஆடியிருப்பார். அந்தப் பாடலில் நடிக்க முதல் அழைப்பு வந்தது ஈ.வி. சரோஜாவுக்குத் தான். அதில், ஆடை கொஞ்சம் குறைந்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட போது, மறுத்து விட்டார் சரோஜா.

சரோஜா நல்ல அழகி என்பதால் அவருக்கு கதாநாயகியாக நடிக்க ஆரம்பம் முதலே வாய்ப்புகள் வந்தன. ஆனால், பெரும்பாலும் அவற்றை தவிர்த்து வந்திருக்கிறார்.

கதாநாயகர்களுடன் டூயட் பாடுவது, நெருங்கி நடிப்பதிலெல்லாம் அவருக்கு உடன்பாடில்லை. அவரிடம் இருந்த கூச்ச சுபாவமும் அதற்கு ஒரு காரணம், அவர் கடைசியாக நடித்த படம், “கொடுத்து வைத்தவள்!’ அவரது சகோதரர் ஈ.வி. ராஜன், ஈ.வி.ஆர்., பிக்சர்ஸ் என்ற பேனரில் தயாரித்த இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். தன் சகோதரருக்காக எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுக்கிறார் என்பதால் நாயகியாக நடிக்க சம்மதித்தார் சரோஜா.

உலகமெங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை மேடையில் நடத்தியிருக்கிறார் சரோஜா. இயக்குனரும், டி.ஆர்.ராஜகுமாரியின் தம்பியுமான டி.ஆர்.ராமண்ணாவை திருமணம் செய்து கொண்டார்.

பொது நிகழ்ச்சிகளில் சரோஜா பங்கேற்று வந்தாலும், மேடையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாமல் கடைசி வரை தவிர்த்தே வந்திருக்கிறார்.

Posted in Anjali, Biosketch, EV Saroja, Kollywood, Lifesketch, Madurai Veeran, Memoirs, MGR, Sivaji, Tamil Cinema, Tamil Movies, TR Rajakumari, TR Ramanna | Leave a Comment »

Sandhana Kadathal – Vettaiyadu Vilaiyadu – AR Murugadoss

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

கொதிப்பு!

“வேட்டையாடு விளையாடு’ படத்தில் அரவாணிகளை கேவலப்படுத்தியிருப்பதாக ஒட்டுமொத்த அரவாணி இனமே கொதித்து நிற்கிறது. மேலும், வழக்கறிஞர் வித்யா என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். அரவாணியான இவர், இனி, அரவாணிகளை மீடியாவினர் கொச்சைப்படுத்துவதை தடை விதிக்க வேண்டும். அது மட்டுமின்றி, அரவாணிகளை இனி, “திருநங்கை‘ என்று அழைக்க வேண்டும்!’ என்றும் வாதாடி வருகிறார்.

* * *

விரிசல்!

தெலுங்கு ஸ்டாலினை முடித்து விட்டு இந்திக்கு செல்லவிருந்த ஏ.ஆர்.முருகதாஸை மடக்கி விட்டார் நடிகர் சூர்யா… “இன்னொரு “கஜினி’ கொடுப்போம். என்ன செலவானாலும் நானே ஏத்துக் கொள்கிறேன்…’ என்று தன் அடுத்த தயாரிப்பை தொடங்கி விட்டார். அது மட்டுமின்றி, தான் ஏற்கனவே நடிக்க ஒத்துக் கொண்டிருந்த, “சர்வம்‘ படத்தில் இருந்தும் விலகி விட்டார் சூர்யா. இதனால், திரைக்குப் பின்னால் டைரக்டர் விஷ்ணுவர்தனுக்கும், சூர்யாவுக்குமிடையே விரிசல் விழுந்துள்ளது.

— சினிமா பொன்னையா.

* * *

வெளிச்சத்துக்கு வரும் வீரப்பன் உண்மைகள்!

“சந்தன கடத்தல்’ வீரப்பன் கதையை படமாக்கியுள்ளார் “சயனைடு’ பட இயக்குனர் ரமேஷ். ஏற்கனவே, வீரப்பனின் கதையை பல டைரக்டர்கள். கிண்டி, கிளறி விட்டதால், வேர் போன்று இன்னும் வெளிச்சத்துக்கு வராத பல மர்ம முடிச்சுகளை இவர் அவிழ்க்கப் போகிறார். அதன் பொருட்டு தற்போது வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியின் உதவியை நாடியிருக்கிறார் ரமேஷ்.

Posted in AR Murugadas, AR Murugadoss, Arvaani, Gossip, Gowtham, Kamal, Lawsuit, Muthulakshmi, News Bits, Rumor, Sandhana Kadathal, Sarvam, Surya, Tamil Cinema, Tamil Movie, Thirunangai, Vambu, Veerappan, Vettaiyaadu Vilaiyaadu, Vettaiyadu Vilaiyadu, Vidya, Vishnuvardhan | 1 Comment »

Karunanidhi’s letter in Dinakaran – About the Protest Meet on Civic Elections Violence

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

கருணாநிதி கடிதம்

சென்னை, நவ. 17: கொள்கை மறவர் குருதியை குழைத்துக் கட்டிய திமுக கோட்டையை இடித்திட ஒரு கும்பல் கிளம்பியுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.  முதல்வர் கருணாநிதி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

Posted in Chennai, Dinamalar, DMK, Ira Sezhiyan, Iraa Sezhiyan, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kavithai, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maalan, Meet, Meeting, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, Tamil Nadu, Tamil Poem, The Hindu | Leave a Comment »

Hariri’s son blames Syria for assassination of Lebanese minister

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

லெபனான் தொழில் துறை அமைச்சர் சுட்டுக் கொலை

லெபனான் தொழில்துறை அமைச்சர், பியர் கமாயெல், பெய்ரூட் அருகே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நகரின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு கிறித்தவமக்கள் வாழும் பகுதியில் அவரது வாகனத்தொடரணி சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிதாரிகள் சுட்டார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.

அமைச்சர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு அவர் இறந்தார். தாக்கியவர்கள் அடையாளம் இன்னும் தெரியவில்லை. முன்னாள் லெபனான் அதிபர், அமின் கமாயெல் அவர்களின் மகனான, பியர் கமாயெல், ஒருமுன்னோடி சிரியா-எதிர்ப்பு கிறித்தவ அரசியல்வாதி ஆவார்.

முன்னர் படுகொலை செய்யப்பட்ட லெபனான் பிரதமர், ரபீக் ஹரிரியின் மகன் சிரியாதான் தனது தந்தையின் படுகொலைக்கும், இந்த கமாயெல்லின் படுகொலைக்கும் பின்னணியில் இருந்திருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். சிரியாவிடமிருந்து உடனடியாக எந்த ஒரு கருத்தும் வெளிவரவில்லை.

சிரியாவிற்கு ஆதரவான ஆறு அமைச்சர்கள் லெபனான் அரசிலிருந்து சமீபத்தில் பதவி விலகியுள்ள ஒரு நெருக்கடியான கட்டத்தில் கமாயெல்லின் கொலை வருகிறது.


இராக், சிரியா இடையே மீண்டும் ராஜதந்திர உறவுகள்

இராக்கும் சிரியாவும் தங்களுக்கு இடையேயான ராஜீய உறவுகளை இருபது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. சதாம் ஹூசேனின் ஆட்சிக் காலத்தின் துவக்கத்தில் இந்த உறவுகள் முறிந்தன.

சிரியா, இராக் இடையில் உடன்பாடு
சிரியா, இராக் இடையில் உடன்பாடு

பாக்தாத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிரியாவின் வெளிநாட்டு அமைச்சர் இந்த முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இராக்கில் நடைபெறும் வன்செயல்களைத் தடுக்க சிரியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

சிரியா, இராக் அரசுக்கு உதவ தனது உறுதிப்பாட்டினை காண்பிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் புஷ் அவர்களின் நிர்வாகம் கூறியுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் எல்லைப் பகுதிகள் மூலம் இராக்குக்குள் ஊடுருவதை தடுக்க சிரியா முன்வர வேண்டுமெனவும் அமெரிக்கா கோரியுள்ளது.

இராக்கில் அமெரிக்காவின் ஈடுபாடு எதிர்காலத்தில் குறையக் கூடிய சூழலுக்கு இராக்கும், சிரியாவும் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதாக பி பி சியின் ராஜாங்க விவகார செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இராக்குக்கும் இரானுக்கும் இடையேயான ஒரு உச்சிமாநாடு இந்த வார இறுதி நாட்களில் நடைபெறவுள்ளது. இதற்கு சிரியா அழைக்கப்பட்டுள்ளது.

Posted in Assassination, Beirut, Christian, Druse, Druze, Fouad Siniora, Hariri, Hezbolla, Hezbollah, Iran, Iraq, Islam, Lebanon, Mid-east, Middle East, Muslim, Phalange Party, Pierre Gemayel, Rafik Hariri, Saad Hariri, Sheik Hassan Nasrallah, Shiite, Sunni, Syria, terrorist, United States | Leave a Comment »

Dhal Exports – Govt. get 1 lac fine for stopping pulse shippings

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, நவ. 21- குஜராத் மாநிலத்தில் உள்ள “ஏசியன் புட் இன்ட்ஸ்டிரிஸ்” என்னும் நிறுவனம் மேற்காசிய நாடுகளுக்கு பருப்பு உள்ளிட்ட உணவு தானிய வகைகளை ஏற்றுமதி செய்ய ஆர்டர்கள் பெற்றிருந்தது. மொத்தம் 107 கண்டெய்னர்களில் தானி யங்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த ஜுன் மாதம் 22-ந் தேதி குஜ ராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் இருந்து 20 கண்டெய்னர்கள் அனுப்பப்பட்டன. மீதமுள்ள 87 கண்டெய்னர்களை அனுப்ப சுங்க இலாகாவிடம் அனுமதி பெறப்பட்டது.

இந்த நிலையில் ஜுன் மாதம் 22-ந் தேதி மத்திய அரசு திடீரென தானிய வகைகளை வெளிநாடுளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று கொள்கை முடிவு எடுத்து அறிவித்தது. இதைத் தொடர்ந்து 87 கண்டெய்னர் தானிய வகைகளை வெளிநாடு களுக்கு அனுப்ப சுங்க இலாகா அதிகாரிகள் தடை விதித்தனர்.

இதனால் ஏசியன் புட் இண்டஸ்டிரிஸ் நிறுவனம் அரசுக்கு பல தடவை கோரிக்கை விடுத்தது ஆனால் எந்த பலனும் கிடைக்க வில்லை.

இதையடுத்து ஏசியன் புட்இண்டஸ்டிரிஸ் நிறுவனம் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தானிய வகைகளை ஏற்று மதி செய்யலாம் என்று உத்தர விட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அப்பீல் செய்தது. அந்த மனுவை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், “தானிய ஏற்றுமதிக்கு ஜுன் மாதத்துக்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது” என்று கூறி மத்திய அரசுக்கு கண்ட னம் தெரிவித்தனர்.

சரியாக ஆராயாமல் அப்பீல் செய்ததற்காக மத்திய அரசுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் சுப்ரீம் கோர்ட்டு நீதி பதிகள் உத்தரவிட்டனர்.

Posted in Asian Food Industries, Beans, Customs, Dhals, Export, Fine, Grams, Paruppu, restrictions | Leave a Comment »

‘Why did we split’ – Nayan Thara chats about Simbu

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

`கதறி அழுதேன், கத்தியால் கிழித்தேன் என்று களங்கப்படுத்துவதா?’ நடிகர் சிம்புவுக்கு நயன்தாரா கண்டனம்

நயன்தாராவும், சிம்புவும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஒன்றாக சுற்றினார்கள். விரைவில் திருமணம் செய் வார்கள் என்றும் பேசப்பட்டது.

ஆனால் திடீரென்று காதல் முறிந்தது. இருவரும் பிரிந்து விட்டதாக நயன்தாரா கூறினார். சிம்புவுக்கு நயன் தாரா முடிவு அதிர்ச்சி அளித்தது.

அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வரும் அவர் இதுபற்றி கூறுகையில், “நயன்தாராவிடம் இரண்டு முறை பேச முயற்சித் தேன். முடியவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று தெரிவித்தார். நீ இல்லை என்றால் உயிரை விட்டு விடுவேன் என்று கையை கிழித்துக் கொண்டதையும் கட்டிப்பிடித்து கதறியதையும் நயன்தாரா வேண்டுமானால் மறந்து இருக்கலாம். நான் மறக்கவில்லை என்றும் சிம்பு கூறினார்.

ஐதராபாத்தில் படப்பிடிப் பில் இருக்கும் நயன்தாராவிடம் மாலைமலர் நிருபர் இன்று செல்போனில் தொடர்பு கொண்டு சிம்பு பேட்டி குறித்து கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:-

சிம்பு பேட்டி பற்றி செல் போனில் என்னிடம் தெரி வித்தனர். அவரைப் போல் நானும் நிறைய விஷயம் சொல்லலாம். ஆனால் சொல்ல விரும்பவில்லை.

சிம்புவும் நானும் பிரிந்து விட்டோம் என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன். இது தவிர அவருக்கு எதிராக அவமரியாதையான வார்த்தை எதையும் கூறவில்லை.

அவருடன் பழகியதால் பட வாய்ப்புகள் குறைந்தது என்று நான் சொன்னதாக கூறியுள்ளார். அப்படி நான் சொல்லவே இல்லை. அவராக அப்படி நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பாக முடியாது.

தேவை என்றால் நானும் அழுது இருக்கலாம். அவர் அப்படி செஞ்சிருக்கார் இப்படி பேசியிருக்கார் என்று பத்திரிகைகளில் சொல்லி இருக்கலாம். அது மாதிரி சொல்லவே இல்லை. சிம்பு வும் நீங்களும் பிரிந்து விட்டீர்களா என்று நிருபர்கள் கேட்டனர். ஆமாம் பிரிந்து விட்டோம் என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன்.

பிரிவதற்கு நிறைய விஷ யங்கள் இருக்கிறது. அதை யெல்லாம் சொல்வது மரியாதை அல்ல என்று கருதி னேன். இன்று அவர் என்ன வெல்லாமோ சொல்லி இருக் கிறார். நானும் அது போல் மரியாதையை விட்டு பேச மாட்டேன்.

நானும் அவரும் என் னென்ன பேசினோம் எங்கள் இருவருக்குள்ளும் என்னென்ன நடந்தது என்பதை பொது ஜனங்களுக்கு தெரிவிக்க அவசியம் இல்லை.

இருவரும் சேர்ந்து நடித் தோம். பழகினோம். பிரிந் தோம். பிரிவதற்கு 1001 கார ணம் இருக்கலாம். ஒவ்வொன் றையும் சொல்ல முடியாது.

நான் கதறி அழுதேன். கத்தியால் கையை கீறிக் கொண்டேன் என்று சிம்பு கூறியுள்ளார். அவரைப் பற்றி சொல்லவும் என்னிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது.

இருவர் காதலிக்கும் போது நல்ல விஷயங்களும் நடக்கும். சண்டையும் நடக்கும். அது எனக்கும் சிம்புவுக்கும் உள்ள விஷயம். கத்தியால் கிழித்து இருக்கலாம் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம். அவற்றை வெளிப் படுத்துவது நாகரீகமாகாது.

சிம்புவை பிரிந்ததற்கு 1000 பேர் காரணம் கேட்டனர். நான் ஒரு பொண்ணு. ஒரு பொண்ணு சொன்னால் நம்புவார்கள். எல்லாவற்றையும் சொல்லி இருக்கலாம். ஆனால் சொல் லாமல் தவிர்த்தேன். அதுதான் எனக்குள்ள மரியாதை.

இவ்வாறு நயன்தாரா கூறினார்.

சிம்பு மீது நயன்தாரா பாய்ச்சல்

சென்னை, பிப். 9: நடிகை நயன்தாராவும் நடிகர் சிம்புவும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் வெளியானதால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  “சிம்புதான் இதை வெளியிட்டிருப்பார்; அவரது தவறான புத்தியை இது வெளிப்படுத்துகிறது“ என நயன்தாரா கூறியிருக்கிறார்.

Ôவல்லவன்Õ படத்தில் நடிக்கும்போது சிம்புவும் நயன்தாராவும் நெருக்கமாக பழகினர். அதில் ஒரு முத்தக்காட்சியிலும் நடித்தனர். வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்று வந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் வல்லவன் படம் வெளியான சில நாட்களில் அவர்களுக்குள் மன வேறுபாடு ஏற்பட்டது.

Ôசிம்புவுடன் உறவு முறிந்தது. இனி அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்Õ என்று நவம்பர் மாதம் நயன்தாரா ஒரு பேட்டியில் அறிவித்தார். அப்போது அமெரிக்கா சென்றிருந்த சிம்பு, சென்னை திரும்பியதும், Ôஇனி நயன்தாரா வாழ¢க்கையில் குறுக்கிடமாட்டேன். அவர் எங்கிருந்தாலும் வாழ்கÕ என்றார்.

இந்த முறிவுப் பிரகடனம் முடிந்து ஒரு மாதமான நிலையில் இப்போது இன்டர்நெட்டில் இந்த நட்சத்திர ஜோடியின் அன்னியோன்யமான படங்கள் வெளியாகியுள்ளன. இருவரும் கன்னத்துடன் கன்னம் வைத்து சிரிப்பது போலவும், இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடுவது போலவும் படங்கள் உள்ளன.

இது குறித்து கேட்க சிம்புவை தொடர்பு கொண்டபோது அவர் மொபைலை  எடுக்கவில்லை. அவரது தந்தை டி.ராஜேந்தர், Ôபோலிப் படங்களை நிஜம்போல காட்டும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லைÕ என்றார்.

நயன்தாரா கூறியதாவது:

சிம்பு எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொண்ட பிறகுதான் அவரை விட்டு விலகினேன். இருவரும் பழகியபோது அடிக்கடி என்னை போட்டோ எடுப்பார். பேப்பர் படிப்பது போல, பல் துலக்குவது போல, சோபாவில் அமர்ந்திருப்பது போல என்று பல கோணங்களில் படங்கள் எடுத்திருக்கிறார். அதையெல்லாம் அவ்வப்போது அழித்துவிட்டதாக கூறுவார்.

அது பொய் என்று இப்போது தெரிகிறது. அவர்தான் இந்த படங்களை வெளியிட்டிருக்க முடியும். முத்தம் போட்டோ எங்கே எப்போது எடுத்தார் என்று தெரியவில்லை. ஒரு பெண் என்றும் பாராமல் என் படத்தை இப்படி உலவ விட்டிருப்பது அவரது தவறான புத்தியை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு நயன்தாரா கூறினார்.

Posted in Allegation, Camera, Cellphone, Gossip, Hotel, Kiss, Manmadhan, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Photos, Pictures, Room, Rumor, Rumour, Sex, Silambarasan, Simbhu, Simbu, T Rajendar, T Rajendhar, Tamil Cinema, Tamil Movies, Usha Rajenthar, Vallavan, Vijaya T Rajendar | 12 Comments »

Naa Muthukumar gets Honorary Doctorate

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

நா.முத்துகுமாருக்கு முனைவர் பட்டம்

தமிழ்த் திரைப்படப் பாடல்கள் குறித்து ஆய்வு செய்த பாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு சென்னை பல்கலைக் கழகம் அண்மையில் முனைவர் பட்டம் வழங்கியது. அதற்கான சான்றிதழை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா வழங்குகிறார். உடன் (இடமிருந்து) அமைச்சர் பொன்முடி, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன்.

Posted in Chennai University, Doctor, Madras University, Na Muthukumar, Naa Muthukumar, P Chidambaram, Ponmudi, Ramachandiran, Surjeet Singh barnala, Tamil songs, Vice-chancellor | Leave a Comment »

K.P. Kottarakara passes away – Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

பழம்பெரும் தயாரிப்பாளர் கே.பி.கொட்டாரக்கரா மரணம்

சென்னை, நவ.21 பழம்பெரும் சினிமா தயாரிப்பாளர் கே.பி.கொட்டாரக்கரா (85) ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

கே.பி.கொட்டாரக்கரா சிவாஜிகணேசன் நடித்த “பாசமலர்’, “ஆண்டவன் கட்டளை‘ படங்களுக்கு கதை எழுதியவர்.

எம்.ஜி.ஆர். நடித்த “பரிசு’, கமல்ஹாசன் மலையாளத்தில் நடித்த “மதுர சொப்னம்’, விஜயகாந்த் நடித்த “நீதி பிழைத்தது’ உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் சுமார் 47 படங்களைத் தயாரித்தவர்.

மலையாளத்தில் மட்டும் மறைந்த பிரபல நடிகர் பிரேம் நசீரை வைத்து 17 படங்கள் தயாரித்தவர். கே.பி.கொட்டாரக்கராவுக்கு சாரதா என்ற மனைவியும், கணேஷ், ரவி என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

கொட்டாரக்கரா உடலுக்கு முதல்வர் கருணாநிதி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கேஆர்.ஜி., தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சென்னை அண்ணாநகரில் உள்ள மின்சார மயானத்தில் கே.பி.கொட்டாரக்கராவின் உடல் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.

Posted in Aandavan Kattalai, Biosketch, Kottaarakara, KP Kottarakara, Lifesketch, Memoir, Paasa Malar | Leave a Comment »

Jayalalitha assassination scene in ‘Kutra Pathirikai’ – Does it support banned Terrorist Organization?

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

தணிக்கைச் சான்றிதழ் பிரச்சினை: “குற்றப்பத்திரிகை’ திரைப்படத்தை தலைமை நீதிபதி நாளை பார்க்கிறார்

சென்னை, நவ.21: தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாதது பற்றிய வழக்கு தொடர்பாக, “குற்றப்பத்திரிகை’ திரைப்படத்தை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் புதன்கிழமை பார்க்கின்றனர்.

பல ஆண்டுகளாக இத்திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை. இப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் தர மறுத்து தில்லியில் உள்ள தணிக்கைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கடந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரவி யாதவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கொல்ல இலங்கை தீவிரவாதிகள் முயற்சிப்பது போலவும் அத்திட்டத்தைத் தடுத்து, ராமகிருஷ்ணன் என்பவர் ஜெயலலிதாவை காப்பது போலவும் அப்படத்தில் காட்சி வருகிறது. அந்த காட்சிகளை நீக்குமாறு கடந்த மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக்காட்சிகளை நீக்கிவிட்டால் “குற்றப்பத்திரிகை‘ திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கலாம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் சென்னை மண்டல அதிகாரி பாபு ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இத்திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் தருமாறு தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் தவறு உள்ளது. படத்தின் மூலக்கதையே, தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தை ஆதரிப்பதாக உள்ளது. இந்நிலையில் சில காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டால், பொதுமக்களுக்காகக் திரையிட தணிக்கைச் சான்றிதழ் தரலாம் என்று நீதிபதி கூறியிருப்பது சரியல்ல.

இலங்கையில் தற்போது பதற்றமான சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் தீவிரவாதிகளை ஆதரிக்கும் இப்படத்துக்கு அனுமதி அளித்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவு பாதிக்கும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவைத் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் திங்கள்கிழமை விசாரித்தனர். இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு அதன்பிறகு முடிவு செய்வதாக நீதிபதிகள் கூறினர். அதன்படி சென்னையில் உள்ள குட்லக் பிரிவியூ தியேட்டரில் இத்திரைப்படத்தை நீதிபதிகள் புதன்கிழமை மாலை பார்க்கின்றனர். அதன்பிறகு வியாழக்கிழமை இவ்வழக்கை மீண்டும் விசாரிப்பர்.

Posted in ADMK, AIADMK, Eezham, High Court, Jayalalitha, JJ, Kutr Pathirikai, Kutra Pathirigai, Kutrapathirikai, LTTE, Ravi Yadav, Tamil Cinema, Tamil Movie, Terrorists | 1 Comment »