Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 22nd, 2006

Madhavan’s ‘Rendu’ & Kiran’s Kasthoori Raja movie gets censored with ‘A’ Certificate

Posted by Snapjudge மேல் நவம்பர் 22, 2006

மாதவன், கிரண் படங்களில் ஆபாசம்-வன்முறை தணிக்கை குழு `ஏ’ சான்றிதழ்

சென்னை, நவ. 22- மாதவன் நடித்த `ரெண்டு’ படம் படப்பிடிப்பு முடிந்து தணிக்கை குழுவுக்கு அனுப் பப்பட்டது. இது குஷ்பு தயாரித் துள்ள படம் ஆகும். சுந்தர் சி. இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் மாதவன், இரு வேடத்தில் நடித்துள் ளார். ஒரு கேரக்டரில் பொருட்காட்சியில் வேலை பார்க்கிறார். இன்னொரு கேரக்டரில் தொடர் கொலை கள் செய்கிறார். கொலை செய்யும் கேரக்டரில் நிறைய வன்முறை இருப்பதாக தணிக்கை குழுவினர் கருத்து தெரிவித்தனர்.

அக் காட்சிகள் படத்துக்கு அவசியம் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப் படத்துக்கு `ஏ’ சான்றிதழ் கொடுத்து ரிலீசுக்கு அனுமதித்தனர். வடிவேலு, ரீமாசென் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

இது போல் `இது காதல் வரும் பருவம்‘ படத்துக்கும் `ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஹரீஸ்குமார் கதாநாயகனாக வும், லட்சுமி பிரியா கதாநா யகியாகவும் நடித்துள்ளனர். இருவரும் புதுமுகம். கிரண் மாடல் அழகியாக நடித் துள்ளார்.

10-வது வகுப்பு மாணவர் களின் காதல் இதில் சொல்லப் பட்டுள்ளதாம். 15 வயது பிள்ளைகள் பெற்றோரால் கவனிக்கபடாவிட்டால் வழி தவறிப் போவார்கள் என்ற கருத்து காதல், `செக்ஸ்’ போன்றவை கலந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சில காட்சிகள் ஆபாசமாக இருப்பதாக தணிக்கை குழுவினர் தெரி வித்தனர். இதையடுத்து அதிக மான ஆபாசமென எழு திய காட்சிகளை வெட்டி விட்டு `ஏ’ சான்றிதழுடன் ரிலீசுக்கு அனுமதித்தனர். கஸ்தூரி ராஜா இப் படத்தை இயக்கி உள்ளார்.

Posted in A, Adults Only, Censor, Certificate, Harishkumar, Idhu Kathal varum Paruvam, Irandu, Ithu Kaathal varum Paruvam, Ithu Kathal varum Paruvam, Kasthoori raja, Kasthuri Raja, Kiran, Kushbu, Lakshmipriya, Madhavan, Mermaid, Preview, Reema Sen, Rendu, School, Sex, Students, Sundar C, Tamil Cinema, Tamil Movies, Vadivelu, Violence | Leave a Comment »

Sivaji (The Boss) opening song details – Superstar gifts 3 Lakhs for Folklore

Posted by Snapjudge மேல் நவம்பர் 22, 2006

`சிவாஜி’ படத்தில் `மெகா’ கரகாட்டம்: 64 கிராமிய கலைஞர்களுக்கு ரஜினி ரூ.3 லட்சம் பரிசு

இயக்குனர் சங்கர் என்றாலே பிரமாண்டத்துக்கு குறைவு இருக்காது. ரஜினியின் “சிவாஜி” படத்துக்காக அவர் இதுவரை இல்லாத அளவுக்கு காட்சிக்கு காட்சி இரட்டிப்பு மடங்கு பிரமாண்டத்தை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக ரஜினி ஆடும் பாடல் காட்சிகள் பிரமாண்டத்தின், பிரமிப்பின் உச்சியைத் தொடும் அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அதிலும் ஒரு கிராமிய மணம் கமழும் பாடல் உலகத் தமிழர்கள் அனைவரிடமும் பரபரப்பாக பேசப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் சதாரா பகுதியில் வாய் எனும் மலை பிரதேசத்திலும், பஞ்ச தனி அணைக் கட்டிலும் இந்த பாடல் காட்சி 8 நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா, மராட்டிய மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் பங் கேற்றனர்.

இந்த பிரமாண்டத்துக்காக சங்கர் எடுத்த முயற்சிகள் ஏராளம். தமிழகத்தில் இருந்து முதலில் அவர் எதிர்பார்த்தது போல நாட்டுப்புறக் கலைஞர்கள் கிடைக்கவில்லை. கடைசியில் புஷ்பவனம் குப்புசாமி மூலம் முகப்பேரில் கலைக்கோட்டம் நடத்தி வரும் எம். அன்பரசனை அணுகினார். அன்பரசன் 2 நாள்அவகாசத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு சென்று 64 நாட்டுப்புறக்கலைஞர்களை தேர்வு செய்து ஒருங் கிணைத் தார்.

அதன் பயனாக 64 கலை ஞர்களும் சிவாஜி படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஆடும் அரிய வாய்ப்பை பெற்றனர். ரஜினியுடன் இவர்கள் மயி லாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை என்று விதம் விதமாக கிராமிய நடனங்களை ஆடி தூள்கிளப்பி இருக்கிறார்கள். ரஜினியும் இந்த பாட்டில் பட்டையை கிளப்பி உள்ளாராம்.

இந்த பாடல் “சூட்டிங்” நடந்த 8 நாட்களும் 64 கலைஞர்களும் ரஜினியின் பாசத்தையும் துளி கூட பந்தா இல்லாத பண்பையும் கண்டு, அனுபவித்து நெகிழ்ந்து போய் விட்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி இவ்வளவு இறங்கி வந்து அன்பாக பழகுபவரா என்று 64 கலைஞர்களும் மெய்சிலிர்த்து விட்டனர். 64 பேரிடமும் தனித்தனியாக குடும்ப சூழ்நிலையை விசாரித்து அவர் தன் உணர்வையும் பகிர்ந்து கொண்டதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது என்கிறார்கள்.

இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல பாடல் காட்சி படமாக்கி முடித்ததும் தமிழ் நாட்டுக்கு புறப்பட்ட 64 கலைஞர்கள் கையிலும் ரஜினி ஒரு கவரை திணித்தார். ஒவ்வொரு கலைஞனுக்கும் அதில் ரஜினி தன் சொந்த பணத்தில் இருந்து தலா ரூ.5 ஆயிரம் வைத்திருந்தார். அதைப் பார்த்ததும் ரஜினியின் இரக்க குணத்தை நினைத்து 64 கலைஞர்களும் நெகிழ்ந்து விட்டனர். அவர்களுக்கு ரஜினி மீது இருந்த மதிப்பும் மரியாதையும் இரட்டிப்பாக உயர்ந்தது.

உணர்ச்சிப் பெருக்கில் இருந்த அவர்களை ரஜினி அத்துடன் விடவில்லை. 64 கலைஞர்களுடனும் தனித் தனியாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த போட்டோக்கள் 64 பேருக்கும் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார்.

அதனால் தானோ என்னவோ இந்த 64 கலை ஞர்களும் ரஜினியுடன் பழகிய 8 நாள் அனுபவத்தை 8 ஜென்மத்துக்கு சமமானது போல கருதுகிறார்கள்.

இந்த 64 கலைஞர்களையும் ரஜினியுடன் ஆட வைத்த கலைக்கோட்டம் நிறுவனர் அன்பரசனும் ரஜினியின் பாசமழையில் நனைந்து விட்டு வந்துள்ளார். கலைமாமணி பட்டம் பெற்ற இவர் குடி யரசு தினவிழாவில் 300 கலைஞர்களை புதுமையான முறையில் ஆட வைத்து பாராட்டு பெற்றவர். இவர் கைவண்ணத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் முத்திரை பதித்துள்ளன. ஆனாலும் ரஜினியுடன் பழகிய 8 நாட்களும் மறக்க முடியாதவை என்கிறார்.

இது பற்றி அவர் கூறுகையில், “ரஜினி மனித நேயம் மிக்க நடிகர். ஒவ்வொருவருடனும் அவர் எளிமையாக நெருங்கி பழகினார். சூப்பர் ஸ்டார் என்ற பந்தா இல்லவே இல்லை. என்னைப் பார்க்கும் போதெல்லாம் புன்னகைப் பார். நான் அடையார் இசைக்கல்லூரியில் பேரா சிரியராக பணிபுரிகிறேன் என்றதும் சரிக்கு சமமாக உட்கார வைத்தே பேசினார். மற்றவர்கள் மனதுக்கு நன்கு மரியாதை கொடுக்கிறார். நான் அழைத்துச் சென்ற 64 பேருக்கும் 3 லட்சம் ரூபாயை அவர் கொடுத்து விட்டு, கலைஞர்கள் முகத் தில் மகிழ்ச்சியை கண்டதும், அவரும் சிரித்தார். அப் பப்பா… இவ்வளவு ஈகை குணம் உள்ளவரா என்று சிலிர்த்து போனேன். அவர் காட்டிய அன்பு கள்ளங் கபடலம் இல்லாதது. நினைத்து, நினைத்துப் பார்த்து மகிழக்கூடியது” என்றார்.

இயக்குனர் சங்கரை, “மக்கள் ரசனையை நன்கு புரிந்தவர்” என்றார். புறப்படும் போது “சஸ்பென்ஸ்” வைத்தப்படி அன்பரசன் மேலும் ஒரு தகவல் சொன்னார். “எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ரஜினி கிராமிய கலைஞர்களுடன் ஆடிய பாடல் 2007-ல் சூப்பர் ஹிட் பாட்டாக இருக்கும். பட்டி தொட்டி எல்லாம் இது தான் ஒலிக்கும். அது ஒரு மனம் கவரும் பாடல்” என்றார்.

அவர் சொல்ல, சொல்ல ரஜினியின் கிராமிய இசை, நடன பாட்டை எப்போது கேட்போம் என்ற ஆவல் அதிகமாகி விட்டது… கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். விரைவில் “சிவாஜி” பாடல் கேசட் வரப்போகிறது.

Posted in Folklore, Kalaikottam, M Anbarasan, music, Preview, Pushpavanam Kuppusamy, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Shankar, Shivaji, Sivaji, Sivaji the Boss, Songs, Superstar, Tamil Cinema, Tamil Movies | 2 Comments »

Rainwater damage prevention scheme to get Rs. 410 Crores – M Karunanidhi

Posted by Snapjudge மேல் நவம்பர் 22, 2006

வெள்ளப்பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண ரூ.410 கோடியில் திட்டம்: கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு 

சென்னை, நவ. 22- பொதுப்பணித்துறையில் உள்ள நீர் வள ஆதாரத் துறை மற்றும் கட்டிட பிரிவுகளில் செயல்படும் திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி சென்னை கோட்டையில் நேற்று ஆய்வு நடத்தினார்.

சிறு பாசன குளங்களை செப்பனிடும் திட்டங்கள் பற்றியும், ஏற்கனவே எடுக்கப்பட்டு முடிக்கப்படாமல் இருந்த நீர் தேக்க திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தால் சமீபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விரிவான ஆய்வு நடத்தினார்.

சென்ற ஆண்டு மழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை சரி செய்வதற்கும், இந்த ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்டு இருக்கிற சேதங்களை சரி செய்வதற்கும், இனி வரும் மாதங்களில் ஏற்படக் கூடிய வெள்ளசேதங்களை முன் எச்சரிக்கையாக தடுப்பதற்கு தேவையான பணிகளைச் செய்யவும் ரூ. 25 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

ஏற்கனவே துவக்கப்பட்டு முடிவு பெறாமல் இருந்த 34 நீர் பாசன திட்டங்களில் இப்போது 6 மாதத்தில் முடிந்த திட்டங்களை உடனடியாக திறந்து வைத்து பாசனத்திற்கு தண்ணீர் அளிக்குமாறு உத்தரவிட்டார். மீதமுள்ள திட்டங்களை வரும் நிதி ஆண்டிலேயே விரைந்து முடிக்குமாறு ஆணையிட்டார்.

உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாட்டிலுள்ள பொதுப் பணித் துறை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான 8,326 ஏரிகளை நவீனப் படுத்துவதற்கும் பாசன அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் ரூ 2,500 கோடி செலவில் திட்டங்கள் தயாரித்து செயல்படுத்துவதை விரைவு படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பெருநகரத்தில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள சேதங்களை தடுப்பதற்கு முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க ரூ.4 கோடியும், திருச்சி பகுதியில் குடமுருட்டி ஆற்றில் உடைப்பு காரணமாக ஏற்படும் வெள்ள சேதங்களை தடுப்பதற்கு ரூ.5 கோடியும், ஒதுக்கி தந்து இருந்தார். இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்தும் முதல்வர் அவர்கள் ஆய்வு நடத்தினார்.

தமிழகத்தினுடைய நிதிநிலை அறிக்கையில் நீர் வள ஆதார துறைக்கு 524 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிதி ஒதுக்கீடு மூலம் நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள். அதே போல் பொதுப் பணித் துறையில் உள்ள கட்டிட பிரிவிற்கு ரூ. 225 கோடி நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பணிகளினுடைய முன்னேற்றம் குறித்தும் முதல் – அமைச்சர் ஆய்வு நடத்தினார். பொதுவாக, தமிழ்நாட்டில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்ற சென்னை பெருநகருக்கு நிரந்தர பரிகாரம் காண 27 திட்டங்கள் பொதுப் பணித் துறை மூலம் ரூ. 410 கோடிமதிப்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர பரிகாரம் காண ரூ 230 கோடி, கல்லணை கால்வாய் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள சேதங்களுக்கு நிரந்தர பரிகாரம் காண 220 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் திருச்சி நகரை வெள்ளத்தில் இருந்து பாதுகாத்து வெள்ள நீரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திருப்பும் ரூபாய் 295 கோடிக்கான திட்டத்தினையும் விரைவாக செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இந்த திட்டங்களை விரைவில் நபார்டு மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டார்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Posted in Agriculture, Budget, Dams, Drinking Water, Floods, Irrigation, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Lakes, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Perambalur, Plan, Pumps, Rain, Rivers, Tamil Nadu, Trichy, Water | Leave a Comment »