Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூன் 5th, 2007

Thamilan Express: ‘Murasoli’ – Arcot – Vijaikanth vs Karunanidhi vs Jayalalitha

Posted by Snapjudge மேல் ஜூன் 5, 2007

”பெரும் அரசியல் தலைவர் ஜெ”

தி.மு.க. தீடீர் ஆதரவு

dinamani thamizhan express aarkadu murasoli Vijaikanthவிஜயகாந்திற்கு எதிராக அ.தி.மு.க. வும், தி.மு.க.வும் காய் நகர்த்தத் தொடங்கிவிட்டன. தமிழக அரசியலில் “நாங்கள்தான் என்றுமே பிக் பிரதர்ஸ்’ என்பதை அவ்வப்போது “டிக்ளேர்’ செய்வதில் இரு கட்சித் தலைமையுமே “கில்லாடிகளாக’ இருக்கின்றனர்.

1972ல் தி.மு.க. பிளவுபட்டு அ.தி.மு.க. உருவாகிய காலத்திலிருந்து இன்று வரை தமிழக பாலிடிக்ஸின் எதிர்கட்சி, ஆளுங்கட்சி அந்தஸ்தை தங்களுக்குள் அச்சுப்பிசகாமல் இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அதோடு இவர்களிடமிருந்து ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்த “மூன்றாவது சக்திகளை’ இவர்கள் கடந்த 40 வருடங்களில் வெற்றிகரமாகவே முறியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர்., தி.மு.க.வை உடைத்த பிறகு, 67ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சித்தது. இதனால் 1977 சட்டமன்றத் தேர்தலில் மூன்று அணிகளாகப் பிரிந்து தேர்தல் களத்தை சந்தித்தன.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ பிரதான எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியாமல் வெறும் 27 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 48 இடங்களைப் பெற்ற தி.மு.க. பிரதான எதிர்கட்சியானது. இதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க.வே என்பது உறுதியானது.

1980 தேர்தலில் தி.மு.க.வுடன் “சமபங்கு’ கூட்டாளியாக காங்கிரஸ் போட்டியிட்டுக்கூட ஆட்சியையும் பிடிக்க முடியவில்லை; பிரதான எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற முடியவில்லை. இம்முறையும் “எம்.ஜி.ஆர்.ஸ்ள். கருணாநிதி’ என்ற ஃபைட்டில் எம்.ஜி.ஆரே வென்று ஆட்சியை அமைத்தார்.

“இனியும் காங்கிரûஸ வெளியேவிட்டால் நம்மைத் தோற்கடித்துவிடுவார்கள்’ என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர். 1984ல் காங்கிரஸýடன் கூட்டணி வைத்தார். இந்த முறைதான் ஏறத்தாழ 17 வருடம் கழித்து காங்கிரஸýக்கு தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்து கிடைத்தது.

இதைப் பலமாகக் கருதியது காங்கிரஸ். அது மட்டுமின்றி எம்.ஜி.ஆர். மறைந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தைச் சாதகமாக வைத்துக் கொண்டு “ஆட்சியைப் பிடித்துவிட வேண்டியதுதான்’ என்று 1989ல் தனியாகக் களம் இறங்கினார் மூப்பனார். இதற்காக ராஜீவ் காந்தியை 13 முறை தமிழகத்திற்கு அழைத்து வந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

பலமான தி.மு.க., எதிரே “ஜா-ஜெ’ அணிகள் என்று பிளவுபட்ட அ.தி.மு.க. -இப்படி 89 தேர்தல் களம் களை கட்டியது. ஆனால் அப்போதும் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி, பிரதான எதிர்கட்சி வாய்ப்பைக்கூட இழந்தது. பிளவுபட்ட அ.தி.மு.க.வில் எதிர்கட்சி அந்தஸ்துக்கு வந்தது ஜெயலலிதா தலைமையில் அன்று இருந்த “ஜெ-அ.தி.மு.க.’ காங்கிரûஸ விட ஒரு எம்.எல்.ஏ. அதிகம் பெற்று (காங்கிரஸ் 26, ஜெ. அ.தி.மு.க. 27) எதிர்கட்சித் தலைவியாக அமர்ந்தார் ஜெ. ஆகவே அ.தி.மு.க.வுக்கு புதிய சக்தியாக வந்த ஜெ., தி.மு.க.வுக்கு மாற்றாக உருவானார்.

1996 சட்டமன்றத் தேர்தலின்போது இதே போன்றதொரு முயற்சியை மூப்பனார் மீண்டும் செய்தார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க அன்றைய பிரதமர் நரசிம்மராவ் தயாராகிக் கொண்டிருந்தபோது ரஜினி போன்றவர்களை எல்லாம் அனுப்பி ராவை சமாதானப்படுத்திப் பார்த்தார். “ரஜினி தமிழக காங்கிரஸ் தலைவராக வரட்டும்.

நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்றே க்ரீன் சிக்னல் கொடுத்தார் மூப்பனார். தி.மு.க. மீது ஏற்கெனவே வெறுப்பு. அ.தி.மு.க. மீதோ அதைவிட மக்களுக்கு வெறுப்பு. இந்த நேரத்தில் ரஜினியை களம் இறக்கினால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடும் என்று கணக்குப்போட்டார் அவர்.

ஆனால் அதிலும் வெற்றி கிட்டவில்லை. பிறகு காங்கிரஸில் இருந்துகொண்டு காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர முடியாது என்று கருதி வெளியேறினார் மூப்பனார். புதிதாக தமிழ் மாநில காங்கிரûஸ தோற்றுவித்தார். உடனே “வருங்கால முதல்வர் மூப்பனார்’ என்ற பேச்சு தொடங்கியது.

கட்சி ஆரம்பித்தவுடன்கூட்டணியாக தேர்தல் களத்தில் புகுந்து 40 இடத்தில் போட்டியிட்டு 39 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றார் மூப்பனார். இந்த வெற்றியால் இளம் தலைமுறையினர் (இன்று விஜயகாந்திடம் போயிருப்பவர்கள்) அன்று மூப்பனார் பின்னால் நின்றனர். மூப்பனாரும் “கிராம தரிசனம்’ செய்து மக்களிடம் சென்றடைய முயற்சித்தார்.

ஆனால் ஆட்சியில் இருந்த முதல்வர் கருணாநிதியோ, “எனக்கு எதிரி அ.தி.மு.க.வே’ என்ற ரீதியில் ஜெயலலிதாவை அரெஸ்ட் பண்ணி, “கருணாநிதி ஸ்ள். ஜெயலலிதா’ என்று அரசியல் ரூட்டை மாற்றினார்.
இன்னும் சொல்லப்போனால், 96ல் நடைபெற்ற மோசமான ஆட்சியால் அ.தி.மு.க.வும், 91ல் ராஜீவ் கொலைப் பழியால் தி.மு.க.வும், வாக்கு வங்கி ரீதியாக “வீக்’ ஆகியிருந்த நேரம்.

இந்த நிலையில் மூப்பனார் போன்ற தலைவர்கள் மூன்றாம் அணிக்குத் தலைவராகிவிடக் கூடாது என்பதற்காகவே ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் அதிரடியாகக் கைது செய்தது அன்றைய தி.மு.க. அரசு.
இந்நிலையில் தி.மு.க.- த.மா.கா கூட்டணியை முறியடிக்க “மெகா கூட்டணி’ அமைக்கும் முதல் முயற்சியை மேற்கொண்டார் ஜெ! அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கி, 1998 பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை தோற்கடித்தார்.

ஆனால் 98ல் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாமல் காங்கிரûஸ ஏறக்குறைய “ஜீரோ’ நிலைக்குக் கொண்டு வந்தவர் ஜெ. இதே ரூட்டை 1999 பாராளுமன்றத் தேர்தலில் கடைப்பிடித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அன்று “உண்மையான காங்கிரஸ்’ என்ற நிலையில் மூப்பனார் தலைமையில் இருந்த த.மா.கா.வை தனியே விட்டார்.

இதனால் இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று த.மா.கா. என்ற இமேஜுக்கு பங்கம் வந்தது. ஆகவே 2001 சட்டமன்றத் தேர்தலில் வேறு வழியின்றி, கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தார் மூப்பனார். அது வெற்றிக் கூட்டணி என்ற பெயரும் வாங்கியது.

ஆனால் 23 இடங்களில் வெற்றி பெற்ற மூப்பனாரையோ, 20 இடங்களில் வெற்றி பெற்ற டாக்டர் ராமதாûஸயோ ஒரு பொருட்டாக நினைக்காமல், 31 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க.வைப் பலப்படுத்தவே ஜெ. விரும்பினார்.

அதனால் நள்ளிரவில் திடீரென்று கருணாநிதியைக் கைது செய்து, தி.மு.க. ஊர்வலத்தில் வெட்டு, குத்து என்றெல்லாம் வந்து தோல்வியில் துவண்டு கிடந்த தி.மு.க.காரனை உசுப்பி விட்டார் ஜெ. ராமதாஸ், மூப்பனார் போன்ற தலைவர்கள் இருந்தாலும், மீண்டும் “ஜெ ஸ்ள். கருணாநிதி’ என்று தமிழக அரசியல் பயணிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் மூப்பனாரும், காங்கிரஸýம் இழந்த “மூன்றாவது சக்தி’ ஸ்தானத்தைப் பிடிக்கவே விஜயகாந்த் களமிறங்கினார். 2006 சட்டமன்றத் தேர்தலில் அதற்கு அமோக ஆதரவு மக்கள் மத்தியில் இருந்தது. தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெறாமல் போனதற்கும், அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனதற்கும் விஜயகாந்தே காரணம் என்ற நிலை உருவானது.

இன்று “கருணாநிதி ஸ்ள்.. ஜெயலலிதா ஸ்ள். விஜயகாந்த்’ என்று அரசியல் ரூட் பயணித்துக் கொண்டிருக்கிறது. விஜயகாந்தை விட்டால் 67க்குப் பிறகு உருவாகாமல் தடுக்கப்பட்டு வரும் மூன்றாவது புதிய சக்தி தோன்றி விடும் என்றே அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நினைக்கின்றன. அதனால்தான் இரு கட்சிகளுமே விஜயகாந்த் விஷயத்தில் பாலிடிக்ஸ் பண்ணுகின்றன.

திருமண மண்டப விவகாரம், விஜயகாந்த் வீட்டில் இன்கம்டேக்ஸ் ரெய்டு என்று எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகளை பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. எதிர்க்கவில்லை. விஜயகாந்த் “குடிகாரர்’ என்ற குற்றச்சாட்டை முதலில் முன்னாள் முதல்வர் ஜெ. சொன்னார். பிறகு இந்நாள் முதல்வர் கருணாநிதியும் அதையே கூறினார்.

சென்னை மாநகராட்சி தேர்தலைப் புறக்கணித்தார் ஜெ: தேர்தல் களத்தில் தி.மு.க.வை விஜயகாந்தால் சமாளிக்க முடியாது என்று மக்கள் மத்தியில் நிரூபிப்பதற்காக ஜெ. செய்த முயற்சி அது. அதில் அவர் வெற்றியும் கண்டார். ஏனென்றால் பல தே.மு.தி.க. மாநகராட்சி கவுன்சிலர்கள் தேர்தலிலேயே நிற்க முடியாமல் தடுமாறினார்கள். வெற்றி பெற்றவர்களில் சிலர் கூட, தி.மு.க. பக்கம் போனார்கள்.

ஜெ.வின் ரூட்டை அப்படியே ஃபாலோ பண்ணிய முதல்வர் கருணாநிதி, ராஜ்ய சபா தேர்தலில் அ.தி.மு.க.வுடன் சமாதானமானார். “நமக்குள் போட்டி வேண்டாம். நாம் விஜயகாந்தின் ஓர் ஓட்டிற்காகத் தேடி அலைய வேண்டாம்’ என்பது முதல்வர் அதில் விடுத்த மெùஸஜ். அதைச் சரியாகப் புரிந்துகொண்டு, “இதுதான் நியாயமான தேர்தல்’ என்று டிக்ளேர் செய்தார் முன்னாள் முதல்வர் ஜெ.

தே.மு.தி.க.வில் உள்ள உள்கட்சி குழப்பங்களால் அங்குள்ள பழைய நிர்வாகிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போட்டுக் கொண்டு தே.மு.தி.க.வை “க்ளோஸ்’ பண்ண முயற்சி செய்கின்றன.

அதன் வெளிப்பாடுதான் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் அட்டாக் பண்ணி வெளியிட்ட விஜயகாந்த்தின் அறிக்கைக்கு “ஆர்க்காடு’ என்ற தலைப்பில் தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது. அதுவும் முரசொலியில் ஜெயலலிதாவை “பெரிய அரசியல் கட்சியின் தலைவர்’ என்று முதல் முறையாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த அறிக்கையில், “”இரண்டு கட்சிகளும் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக் கொள்ளும். இடையிலே நாம் பயன்பெறலாம்’ என்று எண்ணுவது, “காட்டில் இரண்டு மான்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் போது, அதன் காரணமாக ரத்தம் வடியும்; அதனை நாம் குடிக்கலாம்’ என்று காத்துக் கொண்டிருக்கும் ஓநாயின் மனநிலையைப் போலத்தான் அமையும்” என்று கடுமையாகச் சாடிவிட்டு,

“”தன்னுடைய ஒரு வாக்குக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதே என்ற வயிற்றெரிச்சலோடு, தமிழ்நாட்டிலே உள்ள இரண்டு பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை “உளுத்துப் போன அரசியல்வாதிகள்’ என்று இந்தத் தலைவர் வர்ணித்திருப்பது “கொழுத்துப் போன’ காரணத்தால் எழுதப்பட்ட வார்த்தைகள்” என்று அ.தி.மு.க.வுக்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆக, “பெரிய அரசியல் கட்சியின் தலைவர்’ என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை முரசொலியிலேயே பாராட்டியுள்ளார்கள். அதுவும் “ஆர்க்காடு’ என்ற பெயரில் பாராட்டியுள்ளதைப் பார்த்து தி.மு.க. -அ.தி.மு.க.வினர் மட்டுமில்லை, விஜயகாந்தே திகைத்துப் போய்தான் இருக்கிறார்.

எம். காசிநாதன்

********************

Posted in Tamil | 1 Comment »

China Olympics evict 1.5 million

Posted by Snapjudge மேல் ஜூன் 5, 2007

சீனாவின் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்காக 15 இலட்சம் பேர் இடமாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

பீஜிங் இல் கட்டப்படும் தேசிய ஒலிம்பிக் அரங்கம்
பீஜிங் இல் கட்டப்படும் தேசிய ஒலிம்பிக் அரங்கம்

சீனாவின் தலைநகர் பீஜீங்கில் 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்துவதற்காக, சுமார் 15 லட்சம் பேர் இடமாற்றம் செய்யப்படுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள் என்று சர்வதேச வீட்டு உரிமை அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் முன்பு நடத்தப்பட்ட இடங்களிலும், இனி நடத்தப்படவுள்ள இடங்களிலும் இருக்கும் உள்ளூர்வாசிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்ந்துள்ள வீட்டு உரிமை மற்றும் வெளியேற்றம் குறித்த மையம், 1988 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் சியோல் நகரில் இருந்து 7 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளது.

ஆனால் ஒலிம்பிக் போட்டிகளுக்காக யாரும் கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட ஆறாயிரம் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Posted in Asset, Beijing, China, Evictions, Freedom, Games, Homeless, Homes, Houses, Korea, Land, Olympics, Peking, Property, Seoul, South Korea, venues | Leave a Comment »

Vijay’s ‘Azhagiya Thirumagan’ stops production due to Plagiarism issues

Posted by Snapjudge மேல் ஜூன் 5, 2007

விஜய் நடிக்கும் “அழகிய தமிழ் மகன்’ படப்பிடிப்புக்குத் தடை

சென்னை, ஜூன் 5: விஜய் நடிக்கும் “அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கிராண்ட் கிரியேஷன்ஸ் உரிமையாளர் முகமது பரூக் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி இத்தடையை விதித்தார்.

இத்திரைப்படத்தின் கதையை எழுதும் ஜீவா, ஏற்கெனவே இதே கதையை வைத்து என்னுடன் படம் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். எனது செலவில் கதையை உருவாக்கிய ஜீவா, வேறு நிறுவனத்துக்காக அதே கதையை “அழகிய தமிழ் மகன்’ என்ற பெயரில் படமாக்குவது சட்ட விரோதம் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் முகமது பரூக்.

“இப்பிரச்சினை குறித்து திரைப்பட வர்த்தக சபையில் நான் புகார் கூறினேன். இதையடுத்து இக்கதைக்காக ரூ.5 லட்சம் தருவதாக தயாரிப்பாளர் அப்பச்சன், கதை ஆசிரியர் ஜீவா ஆகியோர் ஒப்புக் கொண்டனர். முதலில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்த அவர்கள், மீதி 4 லட்சம் ரூபாயைத் தரவில்லை. அவர்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் அவர் மேலும் கூறியிருந்தார்.

நீதிபதி பி. ஜோதிமணி இவ்வழக்கை விசாரித்தார். “அழகிய தமிழ் மகன்’ படப்பிடிப்புக்கு இடைக்காலத் தடை விதித்தார். இவ்வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ஏ.சிதம்பரம் ஆஜரானார்.

Posted in Alagiya Thirumagan, Alagiya Thirumakan, Azagiya Thirumagan, Azagiya Thirumakan, Azhagiya Thirumagan, Azhagiya Thirumakan, Jeeva, Plagiarism, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Vijai, Vijay | 1 Comment »

Ooty – Smoking Earth

Posted by Snapjudge மேல் ஜூன் 5, 2007

நிலத்தில் வெளியேறும் புகை: பீதி வேண்டாம் புவியியல் துறை அதிகாரி தகவல்

உதகை, ஜூன் 5: தலைக்குந்தா வனப்பகுதியில் நிலத்திற்கடியிலிருந்து வெளிவரும் புகை 2 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தலைக்குந்தா வனப்பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதியிலிருந்து நிலத்திற்கடியிலிருந்து தொடர்ந்து புகைவெளிவருகிறது. இதில் கடந்த 2 நாட்களாக புகையுடன் தீக்கனல்களும் வெளிவந்ததால், அருகிலிருந்த செடி, கொடிகளும் அவ்வப்போது திடீரென தீப் பிடித்து எரிந்தன. இதனால், உதகை பகுதி மக்கள் பெரும் பீதியடைந்திருந்தனர்.

இது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தலைக்குந்தா வனப்பகுதியில் நிலத்திற்கடியில் படிந்த ஒரு வனப்பகுதி நாளடைவில் மட்கி ஒரு படிமம்போல உருவாகியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இப்பகுதியில் ஏற்பட்ட வனத்தீயின் வெப்பத்தால் இப்பகுதி தூண்டப்பட்டு அதிலிருந்து தற்போது புகை வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய படிமங்கள் நிலத்திற்கடியில் சுமார் 300 மீட்டர் நீளம் வரை உள்ளது.

தற்போது நடத்தப்பட்ட சோதனையில் 2 மீட்டர் ஆழத்திற்கு கீழே நெருப்பு, சுட்ட மண் எதுவும் வராததால் அதற்கு கீழே புகை வர வாய்ப்பில்லை. எனவே, மொத்தமுள்ள 300 மீட்டர் நீள பரப்பளவிலிருந்தும் நிலத்திற்கடியிலேயே எரிந்து புகை வரும். அதன்பின்னரே இது முழுமையாக அணையும் என்றார் அவர்.

——————————————————————–

நெருப்புகிரியானதா நீலகிரி?
எரிமலை பீதியால் ஏற்பட்ட பரபரப்பு
குமுதம் ரிப்போர்ட்டர்
03.06.07

மூடுபனி முக்காடு போட்டிருக்கும் இடம் நீலகிரி. குளுகுளுவென குளிர் கூடாரம் போட்டுத் தங்கியிருக்கும் அங்கே நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு விபரீதம் நிகழ்ந்து வருகிறது. அங்கே பூமிப்பிளவு ஒன்று திடீரென கரியையும், புகையையும், சாம்பலையும் கக்கத் தொடங்கியிருப்பதால் எரிமலை பீதியில் உள்ளனர் நீலகிரி மக்கள். இது நீலகிரியா? நெருப்பு கிரியா? என்ற சந்தேகம் அவர்களிடம் உழன்று வருகிறது.

நீலிகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தலைகுந்தா. இங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றால் மீப்பி வனப்பகுதி. இதற்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில் முத்தநாடு மந்து, அத்திக்கல் நீபி ஆகிய மலைவாழ் மக்களின் கிராமங்கள் உள்ளன.

மீப்பி வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அப்போது இந்தப் பகுதியில் அடர்ந்த கரும்புகை வருவதை மலைவாழ் மக்கள் பார்த்திருக்கிறார்கள். ‘கோடைக்காலம் இல்லையா? ஏதாவது காட்டுத்தீ ஏற்பட்டிருக்கும்!’ என்று, அவர்கள் அலட்சியமாக இருந்து விட்டனர்.

வழக்கமாக மழைக்குப் பிறகு காட்டுத்தீ அணைந்து விடும். ஆனால், இந்த மர்மப்புகை விடாமல் தொடர்ந்திருக்கிறது. கூடவே கடந்த 24_ம் தேதி பெய்த மழையின் போது காதைப் பிளக்கும் இடிச்சத்தம் கேட்டதோடு தீப்பிழம்பும் தெரிந்து, புகைமூட்டம் அதிகமாகியிருக்கிறது.

இதனால் பயந்துபோன முத்தநாடு மந்துவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அடுத்த நாள் அந்தப் பகுதிக்குப் போய் பார்த்திருக்கிறார்கள். அங்கு நடந்திருந்த பயங்கரத்தை அவர்களது கண்களே நம்ப மறுத்துவிட்டன. அங்கே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மரங்கள் வேரோடு சரிந்து பூமிப்பிளவுக்குள் சிக்கியிருக்க, அதிலிருந்து அக்னி குண்டம் போல புகையும், நெருப்பும் வந்து கொண்டிருந்தது. அரண்டு போன இளைஞர்கள், அதுபற்றி பக்கத்து ஊரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவரும் இதை நேரில் பார்த்து விட்டு அதிர்ந்து போயிருக்கிறார்.

‘‘இது நிச்சயம் எரிமலைதான்!’’ என்று முடிவு கட்டிய அவர், ஊட்டியில் உள்ள தீயணைப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் ஓட்டமாய் ஓடி வந்திருக்கிறார்கள். பூமிப்பிளவுகளில் இருந்து வெளிவரும் புகையை ஒருவித மிரட்சியுடன் பார்த்த அவர்கள், அது கக்கிய கரி, மண் ஆகியவற்றை எடுத்து ஆராய்ந்திருக்கின்றனர். அந்த மண் சுண்ணாம்புப் பவுடர் போலவும், கரிக்கட்டைகள் நிலக்கரி போலவும் இருப்பதைப் பார்த்து நிலைகுலைந்த அவர்கள், மாவட்ட கலெக்டருக்கும், புவியியல்துறை நிபுணர்களுக்கும் தகவல் அனுப்பினார்கள்.

அதையடுத்து, குன்னூரில் உள்ள புவியியல்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம், அந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார். அவர் நடத்திய முதல் கட்ட ஆய்வில் தெளிவாக எதையும் அறிவிக்க முடியவில்லை. அந்தப் பாறை இடுக்குகளிலிருந்து கந்தகம் போன்ற ஒருவித துர்நாற்றம் வீசியதால், ஒரு தீக்குச்சியை நீட்டி பாலசுப்ரமணியம் ஆராய்ந்திருக்கிறார். அது ‘பக்’கென பற்றிக் கொண்டு ஜூவாலை விட்டு எரிந்திருக்கிறது. ஆகவே, அங்கு மீத்தேன் வாயு கசிந்து கொண்டிருக்கலாம்’ என்றார் பாலசுப்பிரமணியம்.

அதுமட்டுமல்ல! ஒருவேளை உயரழுத்த மின்கம்பிகள் மண்ணில் புதைந்திருந்து அதன் காரணமாகக்கூட பூமி இப்படி புகை கக்கலாம் என்று இரண்டு விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார் பாலசுப்பிரமணியம். இதனால், அங்கு நின்ற இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் குழம்பிப் போனார்கள். ‘‘இது நிச்சயம் எரிமலைதான். மக்கள் பீதியடையக் கூடாது என்பதற்காகத்தான், இந்தத் தகவலை மறைக்கிறார்கள்’’ என அடித்துப் பேசினார்கள் அவர்கள்.

‘‘இங்குள்ள முத்தநாடு மந்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உசில்மேடு என்ற குன்று உள்ளது. அது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எரிமலையாக இருந்து அணைந்து போனது. அது நிச்சயம் ஒருநாள் மீண்டும் வெடித்து தீக்குழம்பைக் கக்கும். அதன் ஆரம்ப அறிகுறிதான் இது’’ என்றார் இயற்கை ஆர்வலர் ஒருவர். இதுபற்றி நிலவியல் நிபுணர்கள் உரிய விளக்கம் எதையும் சொல்லாததால், ‘இது எரிமலைதான்’ என்று மீடியாக்கள் எழுத, இந்தப் பகுதியில் பதற்றம் பந்தி போடத் தொடங்கி விட்டது.

இந்தச் செய்திகள் வெளியானதையடுத்து வெளிமாநில விஞ்ஞானிகள், சுற்றுலா வாசிகளின் படையெடுப்பு அங்கே தொடங்கி விட்டது. கல்லூரி மாணவ, மாணவிகளின் கூட்டமும் களை கட்ட ஆரம்பித்து அவர்கள் மண் மாதிரிகளையும், கரிக்கட்டிகளையும் ஓடி ஓடிச் சேகரிப்பதும், ஆராய்வதுமாக இருந்தனர். நில வெடிப்புகளில் இருந்து வெளிவந்து விழும் கரிக்கட்டிகளும் சாம்பலும் படுபயங்கர சூடாக இருந்தன. அவற்றைத் தொடக்கூட முடியவில்லை. அத்துடன் அந்தப் பகுதி நிலம் வெப்பத்தால் தகதகத்தது. பலர் புகையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மயக்கமடைந்து விழுந்து விட்டனர். இதையடுத்து அந்தப் பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு போலீஸ் காவல் போடப்பட்டு அந்நியர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா ஓர் அறிக்கை வெளியிட்டார், அதில் ‘‘நீலகிரியில் எரிமலை ஏற்பட வாய்ப்பே இல்லை. எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை. பூமியில் ஏற்பட்ட இந்த மாறுதல் குறித்து புவியியில் ஆய்வு மையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.

‘‘சரி! நீலகிரியில் தோன்றியிருப்பது எரிமலையின் அறிகுறியா?’’ இப்படியரு கேள்வி நம் கழுத்தைப் பிடித்து உந்த, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலத்தியல் பேராசிரியர் மணிமாறனிடம் இதுபற்றிப் பேசினோம். அவர் அழுத்தம் திருத்தமாக சில விவரங்களைத் தந்தார்.

‘‘நீலகிரியில் எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை. பூமியில் அடித்தட்டுகள் இரண்டு ஒன்றையன்று முட்டக்கூடிய இடத்தில்தான் எரிமலை ஏற்படும். ஆனால் நீலகிரி ஒரு மலைப்பகுதி என்பதுடன், அது நிலத்தட்டுகளுக்கு வெகு தூரத்தில் உள்ளது. ஆகவே அங்கு எரிமலை ஏற்பட நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை.

ஆனால், நீலகிரியில் இப்போது புகை வெளியாகிக் கொண்டிருக்கும் பகுதியில் நிலக்கரி, லிக்னைட் போன்றவற்றுக்கு முந்தைய கரிப்படிவம் இருக்க வாய்ப்புள்ளது. பூமியில் புதையும் மரங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் வெப்பத்தால் இறுகி நமக்கு நிலக்கரியாகக் கிடைக்கிறது. நிலக்கரிக்கு முந்தைய லிக்னைட் படிவமாகவும் நமக்குக் கிடைக்கிறது.

இப்படி பலகோடி ஆண்டுகளாக பூமிக்கு அடியில் இருக்கும் நிலக்கரி, லிக்னைட் போன்றவை எளிதில் தீப்பற்றக் கூடிய பாஸ்பரஸ், ஸல்ஃபர் போன்ற வேதியியல் பொருட்களை உருவாக்குகிறது. பூமிக்குள் கிடைக்கும் வெப்பத்தால் சிலவேளைகளில் இவை எரியவும் ஆரம்பிக்கின்றன. கோடை மழையின் போது பூமி நன்றாகச் சுருங்கி விரியும். அந்தத் தருணத்தில் எங்கே இடைவெளி கிடைக்கிறதோ அங்கே இவை பொத்துக் கொண்டு புகையாகவும், நெருப்பாகவும் தலைகாட்டுகின்றன.

இதை வைத்து, இந்தப் புகை வரும் இடத்துக்கு நேர் கீழே நிலக்கரி இருப்பதாகக் கருதிவிட முடியாது. நிலக்கரி, லிக்னைட் படிவங்கள் பல மைல்களுக்கு அப்பால் இருந்து பீறிட்டால் கூட புகையும் நெருப்பும் அந்தப் பகுதியில் தரைக்கு மேலே தலை நீட்ட முடியாமல் பல மைல்களுக்கு அப்பால் உள்ள ஓரிடத்தில் தலைகாட்ட வாய்ப்புள்ளது.

நிலத்துக்கு வெளியே இந்த மாதிரி வெளியாகும் புகையும், நெருப்பும் இரண்டு மாதங்கள் வரை கூட நீடிக்கும். அதன் பிறகு தானே அடங்கி விடும். பூமிக்குள் இப்படி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை, வெளிநாடுகளில் செயற்கைக் கோள் மூலம் படம்பிடித்துத் தெரிந்து கொள்கிறார்கள்!’’ என்றார் அவர். ஸீ

– கா.சு. வேலாயுதன்

Posted in Aravenu, Blue Mountains, Coimbatore, Disaster, Disasters, Dodabetta, Earth, Earthquake, Environment, Fire, Forest, Gudalur, industrialisation, Kattabettu, Kodanadu, Kotagiri, Kunjapanai, Land, Marlimundh, Mettupalayam, Mountain, Mudumalai, Munnamachi, Nature, Nilgiris, Ootacamund, Ooty, Padanthorai, Perar, Pollution, Protection, Recovery, Smoke, Srimadurai, ST, Thalaigunda, Thalaigundha, Thalaikunda, Thalaikundha, Thalaikuntha, theppakadu, Thorapalli, Threat, tribal, Ubrrani Hada, UDHAGAMANDALAM, Volcano, Warming, Water, WetLand, Wetlands | Leave a Comment »