Vijay’s ‘Azhagiya Thirumagan’ stops production due to Plagiarism issues
Posted by Snapjudge மேல் ஜூன் 5, 2007
விஜய் நடிக்கும் “அழகிய தமிழ் மகன்’ படப்பிடிப்புக்குத் தடை
சென்னை, ஜூன் 5: விஜய் நடிக்கும் “அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கிராண்ட் கிரியேஷன்ஸ் உரிமையாளர் முகமது பரூக் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி இத்தடையை விதித்தார்.
இத்திரைப்படத்தின் கதையை எழுதும் ஜீவா, ஏற்கெனவே இதே கதையை வைத்து என்னுடன் படம் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். எனது செலவில் கதையை உருவாக்கிய ஜீவா, வேறு நிறுவனத்துக்காக அதே கதையை “அழகிய தமிழ் மகன்’ என்ற பெயரில் படமாக்குவது சட்ட விரோதம் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் முகமது பரூக்.
“இப்பிரச்சினை குறித்து திரைப்பட வர்த்தக சபையில் நான் புகார் கூறினேன். இதையடுத்து இக்கதைக்காக ரூ.5 லட்சம் தருவதாக தயாரிப்பாளர் அப்பச்சன், கதை ஆசிரியர் ஜீவா ஆகியோர் ஒப்புக் கொண்டனர். முதலில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்த அவர்கள், மீதி 4 லட்சம் ரூபாயைத் தரவில்லை. அவர்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் அவர் மேலும் கூறியிருந்தார்.
நீதிபதி பி. ஜோதிமணி இவ்வழக்கை விசாரித்தார். “அழகிய தமிழ் மகன்’ படப்பிடிப்புக்கு இடைக்காலத் தடை விதித்தார். இவ்வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ஏ.சிதம்பரம் ஆஜரானார்.
bsubra said
தடையை மீறி படப்பிடிப்பு: விஜய் படதயாரிப்பாளர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
சென்னை, ஜுன். 12-
விஜய்-ஸ்ரேயா நடிப்பில் அழகிய தமிழ் மகன் என்ற படம் தயாரிக்கப்பட்டு வரு கிறது. இதை அப்பச்சன் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தை எதிர்த்து கோடம்பாக்கத்தை சேர்ந்த முகமது பாரூக் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில் அழகிய தமிழ்மகன் கதை எனக்கு சொந்தமானது. எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். படப்பிடிப்புக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை ஏற்று நீதிபதி படத்தை வெளியிடவும், படப்பிடிப்பு நடத்தவும் தடை விதித்தார். தடையை ரத்து செய்ய வேண்டும் என்று அப்பச்சன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் முகமது பாரூக் ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனுதாக்கல் செய் துள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:-
கோர்ட்டு தடையை மீறி அழகிய தமிழ்மகன் படப் பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோ வில் விஜய்-ஸ்ரேயா சம்பந்தப் பட்ட காட்சிகளை எடுத்து வருகின்றனர். வருகிற 18-ந்தேதி வரை படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க இருக்கிறது.
எனவே தயாரிப்பாளர் அப்பச்சன், டைரக்டர் எஸ்.கே.ஜீவா மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படப்பிடிப்பு நடக்கிறதா என்பதை கண்காணிக்க அட்வகேட் கமிஷன் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். அதன் விசா ரணை பின்னர் நடைபெற உள்ளது.