Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Jeeva’ Category

‘The Chennai Silks’: Rs 40 lakh sari from Tamil Nadu flaunts Ravi Varma & seeks entry for Guiness record

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

முந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்

Vivaha Chennai Silks Saris Saree Rich  Formal Wear


சென்னை சில்க்ஸ் அறிமுகம்
ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை
தங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது

சென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை

suhasini_chennai_silks_silk_sarees_gold_diamond_pearls_gems_40_lakhs_sari.jpgதமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.

தங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.

விலை ரூ.40 லட்சம்

51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.

விலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.

சுகாசினி அறிமுகப்படுத்தினார்

உலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.

அப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.

இந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.

சேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்

  • சென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,
  • ஆறுமுகம்
  • நந்தகோபால்,
  • சிவலிங்கம்,
  • சந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,
  • கவிஞர் வைரமுத்து,
  • நடிகை ஷோபனா,
  • நடிகர் ஜீவா,
  • பின்னணி பாடகி பி.சுசீலா,
  • கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,
  • டாக்டர் கமலா செல்வராஜ், மத்திய
  • பட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,
  • ஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்
வடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்
இளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.
பெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக
அதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய
மைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளதுHost unlimited photos at slide.com for FREE!

Posted in Aarani, aesthetics, Art, Banaras, Banares, Benaras, Benares, Bengal, blouse, Border, Budget, CAD, cat's eye, Chennai, clothing, coral, Cotton, Deepam, Deepavali, Deepavalli, Design, designers, Dharmavaram, Diamond, Diwali, Dress, embellishments, embroidery, emerald, Evening, Events, Expensive, Exports, Fabric, Fear, Feast, Festival, Formals, Formalwear, Garments, Gems, girls, Gold, Gowns, Guiness, Handicrafts, Heritage, Individual, Instruments, Jari, Jarigai, Jeeva, Jewels, Kala Niketan, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanchipuram Silk, Kanchivaram, Kanjeepuram, Kanjeevaram, Kanjipuram, Kanjivaram, Kasi, Kumaran, Ladies, Lady, Laundry, Limca, Marriages, music, musical, Musicians, Mylai, Mylapore, Mysore, Nalli, Nithashree, Nithashri, Nithyashree, Nithyashri, Nithyasree, Nithyasri, nylon, ornate, P Suseela, P Susheela, P Sushila, P Susila, Painter, Paintings, pallu, Party, Partywear, pearl, Platinum, Pochampalli, Polimer, polycot, polycotton, Polymer, Pothys, precious, Radha, Rasi, Ravi Varma, RaviVarma, RaviVerma, Receptions, Record, Records, Rich, RMKV, Roopkala, ruby, sapphire, Saree, Sarees, Sari, Saris, She, Shobana, Shobhana, Silks, silver, Skirt, stones, Sugasini, Suhasini, Sukasini, Synthetic, Tamil Nadu, TamilNadu, terrycot, terrycotton, Textiles, Thread, TNagar, topaz, Tussar, Varanasi, Vijayalakshmi, Wash, Weddings, Woman, Women, yellow sapphire, zari, Zarigai, Zhari | Leave a Comment »

The woes of a Tamil Cinema Producer – GV Films shoots off balance sheets

Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007

யாரைத்தான் நம்புவதோ?

ஜீ.வி. பிலிம்ஸ் நிறுவனம், புதிய படங்களை எடுப்பதோடு, பழைய கடன்களையும் பைசல் செய்து வருகிறது.

கம்பெனிக்கு வரும் இயக்குனர்களை முழுதாய் நம்பி, “முதல் பிரதி’ அடிப்படையில் படம் தயாரித்து வருகிறார்கள்.

“கைவந்த கலை’ படத்துக்கு பாண்டியராஜன் கொடுத்த பட்ஜெட்டைவிட பத்து லட்சம் அதிகம் செலவானதாம்!

அடுத்து ஜீவாவின் (சமீபத்தில் மறைந்த இயக்குனர்) உதவியாளர் சங்கர் கே. என்பவர் ஐம்பது லட்சம் செலவில், “திருடி’ என்ற படத்தை எடுப்பதாகக் கூறி ஒரு கோடி வரை செலவை இழுத்துவிட்டாராம்.

ஜீ.வி. பிலிம்சுக்கு, இப்போது “உற்சாகம்’ என்ற படத்தை இயக்கிவரும் ரவிச்சந்திரன் (ஏற்கெனவே, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்த வேளை, மஜ்னு படங்களை இயக்கியவர்) அனுபவம் உள்ள டைரக்டர் என்பதால் அவர் கேட்ட பட்ஜெட்டை கொடுத்து உதவினர் தயாரிப்பாளர்கள். ஆனால், ரவிச்சந்திரன் கொடுத்த பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவழித்து படத்தை உருவாக்கி இருக்கிறாராம்.

பழைய இயக்குனரும் கொடுத்த பட்ஜெட்டைக் காப்பாற்றவில்லை. புதிய இயக்குனரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. யாரைத்தான் நம்புவதோ என்று நேர்மையாக புலம்புகிறது தயாரிப்பு தரப்பு.

Posted in Budget, Cinema, Director, Economic, Expenses, Films, Finance, Flop, Gossip, GV, Hit, Jeeva, Kai Vantha Kalai, Kisukisu, Loss, Majnu, Manirathanam, Manirathnam, Maniratnam, Movies, Pandiarajan, Pandiyarajan, Profit, Ravichandran, Rumour, Rumours, Shankar, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Blogs, Tamil channels, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Magaizine, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thirudi, Urchagam, Urchakam, Venkatesvaran, Venkateswaran, Woes | Leave a Comment »

Healthcare: Blood Pressure

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

முதுமையும் ரத்த அழுத்த நோயும்

கு.கணேசன்

உயர் ரத்த அழுத்த நோய்க்கு நவீன சிகிச்சைகள் பல இருந்தாலும் ஆரோக்கிய உணவின் மூலம் சரியான அளவில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைப் பொதுமக்களுக்குப் புரிய வைப்பதே மருத்துவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று “உலக நலவாழ்வு நிறுவனம்’ வலியுறுத்தி வருகிறது.

ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இளைஞரானாலும் சரி, முதியவரானாலும் சரி, ஒருவருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை ரத்த அழுத்தம் இருந்தால் பாதிப்பு வராது. இதற்கு மேல் அளவு அதிகரித்தால் அதை “உயர் ரத்த அழுத்தம்’ என்கிறோம். இந்நோயைத் தொடக்கத்திலேயே கவனிக்கத் தவறினால் இதயம், மூளை, சிறுநீரகம், கண்கள் ஆகியவற்றுக்கு எமனாக அமைந்துவிடும்.

மாரடைப்புக்கு உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியக் காரணம். இது தவிர, இதயம் வீங்கிச் செயலிழத்தல், கண்களின் விழித்திரையில் ரத்தம் கசிந்து பார்வை இழத்தல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு. ஆகவே உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதுமானது. சிறுநீரக நோய் உள்ளவர்கள் 3 கிராம் வரை சேர்த்துக் கொள்ளலாம். உப்பு மிகுந்த உணவுப் பொருள்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி, முட்டை, இறால், தயிர், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம், சாஸ் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. பூரி, வடை, சமோசா, முறுக்கு, பஜ்ஜி, வறுவல் போன்ற எண்ணெயில் பொரித்த வறுத்த, ஊறிய உணவுகள் மற்றும் சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வேண்டாம்.

தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக்கூட குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகப்படுத்தினால் நல்லது. நார்ச்சத்து, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், கொய்யா, தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள், பீன்ஸ், பட்டாணி, கொண்டைக்கடலை போன்ற பயறுகள், வெந்தயம், பாகற்காய் போன்ற காய்கள், புதினா, கொத்துமல்லி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.

பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுச் சத்துககளுக்கு உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. பழங்கள், காய்கறிகள், கீரைகள் குறிப்பாக காரட், தக்காளி, உருளைக்கிழங்கு, பட்டாணி, அன்னாசி, அவரை போன்றவற்றில் இச்சத்துகள் அதிகம்.

உடலின் உயரத்துக்கு ஏற்ப உடல் எடையைக் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். தினமும் 40 நிமிடங்கள் நடப்பது ரத்த அழுத்தம் சீராக இருக்க மட்டுமல்ல, மாரடைப்பையும் தடுக்கவல்லது.

சிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றைப் புகைக்கும் பழக்கத்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. உடனே இப்பழக்கத்தை நிறத்துங்கள். மதுவுக்கும் விடை கொடுங்கள். யோகாசனம், தியானம் போன்றவை மன அழுத்தத்தைக் குறைத்து மனதுக்கு அமைதியைத் தரக்கூடியவை.

முதுமையில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் மற்றொரு முக்கியப் பிரச்னை “நிலை மயக்கம்’ முதுமை காரணமாக இவர்களுக்கு ரத்தக் குழாய்களின் உட்சுவர் கடினமாகி சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடும். உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல்பகுதிக்கு ரத்தம் செல்ல சிரமப்படும். இதனால் திடீரென ரத்த அழுத்தம் குறைந்து, மூளைக்கு செல்லும் ரத்தம் குறையும். அப்போது மயக்கம் வரும்.

இதனைத் தவிர்க்க கட்டிலின் தலைப் பகுதியை அரை அடி உயர்த்திக் கொள்ளலாம். தொடர்ந்து நீண்ட நேரம் படுப்பதையும் ஒரே இடத்தில் உட்காருவதையும் தவிர்ப்பது நல்லது. சட்டென்று நேராக எழுந்திருக்காமல் தலையைப் பக்கவாட்டில் திருப்பிக்கொண்டு மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்த அழுத்த மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

உலக அளவில் 100 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது. இந்தியாவில் 100-ல் 20 பேருக்கு இந்த நோய் உள்ளது. அதிலும் 60 வயதைக் கடந்தவர்களிடம் பாதிப் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

முதுமை என்பது இயற்கையான விஷயம். தாழ்வு மனப்பான்மை மற்றும் முதுமையின் காரணமாக ஏற்படும் இயலாமையை வெற்றி காண்பதுதான் ரத்த அழுத்தத்தை எதிர்கொள்ள முக்கியமான வழி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர், பொதுமருத்துவர்).

Posted in Advice, Aged, Angina, anginoplasty, Artificial, Attack, BP, Cigarette, cure, Death, diabetes, Diet, Disabled, Disease, Disorder, Doctor, Exercise, Food, Health, Healthcare, Heart, insulin, Jeeva, Kidney, Liver, medical, Obesity, oil, Old, Operation, Organs, Pain, paralysis, Run, smoking, Stroke, Sugar, Tips, Walk, WHO, Youth | 2 Comments »

Vijay’s ‘Azhagiya Thirumagan’ stops production due to Plagiarism issues

Posted by Snapjudge மேல் ஜூன் 5, 2007

விஜய் நடிக்கும் “அழகிய தமிழ் மகன்’ படப்பிடிப்புக்குத் தடை

சென்னை, ஜூன் 5: விஜய் நடிக்கும் “அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கிராண்ட் கிரியேஷன்ஸ் உரிமையாளர் முகமது பரூக் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி இத்தடையை விதித்தார்.

இத்திரைப்படத்தின் கதையை எழுதும் ஜீவா, ஏற்கெனவே இதே கதையை வைத்து என்னுடன் படம் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். எனது செலவில் கதையை உருவாக்கிய ஜீவா, வேறு நிறுவனத்துக்காக அதே கதையை “அழகிய தமிழ் மகன்’ என்ற பெயரில் படமாக்குவது சட்ட விரோதம் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் முகமது பரூக்.

“இப்பிரச்சினை குறித்து திரைப்பட வர்த்தக சபையில் நான் புகார் கூறினேன். இதையடுத்து இக்கதைக்காக ரூ.5 லட்சம் தருவதாக தயாரிப்பாளர் அப்பச்சன், கதை ஆசிரியர் ஜீவா ஆகியோர் ஒப்புக் கொண்டனர். முதலில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்த அவர்கள், மீதி 4 லட்சம் ரூபாயைத் தரவில்லை. அவர்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் அவர் மேலும் கூறியிருந்தார்.

நீதிபதி பி. ஜோதிமணி இவ்வழக்கை விசாரித்தார். “அழகிய தமிழ் மகன்’ படப்பிடிப்புக்கு இடைக்காலத் தடை விதித்தார். இவ்வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ஏ.சிதம்பரம் ஆஜரானார்.

Posted in Alagiya Thirumagan, Alagiya Thirumakan, Azagiya Thirumagan, Azagiya Thirumakan, Azhagiya Thirumagan, Azhagiya Thirumakan, Jeeva, Plagiarism, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Vijai, Vijay | 1 Comment »

Interview with Author Jeevabharathy – Tamil Literature researcher, Writer

Posted by Snapjudge மேல் மே 31, 2007

சந்திப்பு: “”முன்னோர்களை அடையாளம் காட்டுவதே முக்கியப்பணி!”

கே இளந்தீபன்

பாரதி பிறந்த எட்டயபுர மண்ணுக்கு பக்கத்துக் கிராமமான பூதலபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஜீவபாரதி. வேலுச்சாமி, கந்தசாமி என்ற இருபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் கந்தசாமியின் வாரிசாகப் பிறந்து- எழுத்து வயலில் பட்டுக்கோட்டைக் கவிஞனை முன் ஏர் உழவனாகக் கொண்டு- கவிதை, கட்டுரை, கள ஆய்வு, வரலாறு, புதினம், சிறுவர் இலக்கியம், தொகுப்பு நூல்கள் என்று பல்வேறு தளங்களில் 1970 முதல் எழுதிவருபவர்.

தற்போது தமிழ் எழுத்தாளர் சங்கப் பரிசை “லெனின்’ என்ற நூலுக்குப் பெற்று மகிழ்ச்சியும் களைப்புமாகத் திரும்பியிருந்தவரைச் சந்தித்தோம்.

எழுத்துத் துறைக்கு எப்போது வந்தீர்கள்?

ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற போது இட்டுக் கட்டிப் பாடத் தொடங்கினேன். எங்கள் ஊருக்கு அருகே மரியக்கண்ணு என்ற தாழ்த்தப்பட்ட சகோதரரை உயர் சாதியினர் கொன்றது என் பாடு பொருளானது. இந்தப் பாடல்தான் எனது ஊர்ப் பகுதியில் என்னைக் கவிஞனாக, பாடகனாக அறிமுகப்படுத்தியது.

முதல் படைப்பு பற்றி?

1969-ல் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் தோழர் பால தண்டாயுதத்தால் வேலைக்குச் சேர்க்கப்பட்டேன். அங்கு வேலை பார்த்த பழனி சுந்தரேசனிடம் “முல்லைச்சரம்’ இதழ் ஆசிரியர் பொன்னடியான் கவிதை கேட்டிருந்தார். அவருடைய கவிதையுடன் என்னுடைய கவிதையையும் கொடுத்தனுப்பினார். பூதலபுரம் ராமமூர்த்தி என்ற என் சொந்தப் பெயரில் கவிதை பிரசுரமானது. பொன்னடியான் என்னைப் புனைப் பெயர் வைத்துக் கொள்ளுமாறு ஆலோசனை சொன்னதால் நான் நேசிக்கும் ஜீவாவையும் பாரதியையும் இணைத்து ஜீவபாரதி ஆனேன்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பக்கம் உங்கள் கவனம் திரும்பியதற்கு என்ன காரணம்?

சின்னவயசில் பட்டுக்கோட்டையாருடைய “தூங்காதே தம்பி தூங்காதே’ பாடலைத்தான் எப்போதும் பாடிக்கொண்டு இருப்பேன். இதன்பிறகு என்.சி.பி.எச்.-ல் பணியாற்றியபோது பட்டுக்கோட்டையார் பாடல்களைத் தொகுத்து வெளியிட்ட பி.இ.பாலகிருஷ்ணன் தொடர்பால் பட்டுக்கோட்டையார் மீது தனிக்கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

பட்டுக்கோட்டையார் பாடல்களை காலவாரியாகத் தொகுத்து வெளியிட்டது, பட்டுக்கோட்டை நகரத்தில் அவருக்கு சிலை வைத்தது, அவருக்கு நினைவாலயம் அமைக்கவும் அவரது பாடல்களை நாட்டுடமை ஆக்கவேண்டும் என்றெல்லாம் குரல் எழுப்பி இரண்டும் நடந்துள்ளது. இந்த முயற்சிகளுக்கு எனக்குப் பக்கபலமாய் இருந்தவர் முன்னாள் அமைச்சர் அமரர் எஸ்.டி.சோமசுந்தரம் என்பதை பெருமையோடு சொல்வேன்.

திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் சாரிடம் சத்யராஜ் நடித்த “24 மணி நேரம்’ படம் துவங்கி, “பாலைவன ரோஜாக்கள்’, “சந்தனக்காற்று’, “தீர்த்தக்கரையினிலே’ என்று 11 படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன். “இனி ஒரு சுதந்திரம்’ படத்தில் கங்கை அமரன் இசையில் எழுதிய “கைகளிலே வலுவிருக்கு’ என்ற பாடலும் -சந்தனக்காற்று திரைப்படத்தில் சங்கர் கணேஷ் இசையில் விஜயகாந்துக்காக ஓபனிங் சாங் “சந்தனக்காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே’ என்ற பாடலும் அடிக்கடி ரீங்காரமிடுவதை நேயர்கள் பலரும் அறிவர். இப்போதும் எழுதத் தயாராய் இருக்கிறேன் தரமான பாடல்களுக்கு…


பாரதிதாசன் பற்றிய ஆய்வு பட்டுக்கோட்டை, ஜீவா, பசும்பொன்தேவர், போன்றவர்களின் படைப்புகளைத் தொகுப்பது என்று நீங்கள் பாதை வகுத்துக் கொண்டது ஏன்?

பாரதிதாசனைப் பற்றி விருப்பு வெறுப்புடன் ஆய்வுகள் நடந்து வந்ததால் முழுமையான புதுமையான ஆய்வுக்காக பாவேந்தரிடம் கூடுதல் கவனம் செலுத்தினேன். பட்டுக்கோட்டையாரை விஞ்சிவிட்டதாக சில அறிவுஜிவிகள் தங்களுக்கு வேண்டியவர்களைக் கொண்டு எழுதியபோது பட்டுக்கோட்டையின் கம்பீரத்தை நெஞ்சு நிமிர்த்திச் சொன்னேன். தமிழக அரசியல் உலகில் தியாகத்தால் உயர்ந்தவரும் மகாத்மா காந்தியால் “தேசத்தின் சொத்து ஜீவா’ என்று பாராட்டப்பட்ட அமரர் ஜீவாவை தமிழர்கள் கண்டு கொள்ளாததால் அவரை அவரது படைப்புகள் மூலம் முன்னிறுத்தியுள்ளேன். என்னுடைய முன்னோர்களைச் சரியாக அடையாளம் காட்டுவதன் மூலம் என் எழுத்துப் பணியைத் தனித்துவமாக்கியுள்ளேன் என்பதை ஆன்றோர்கள் பலர் அறிவர்.

பாரதி காலமும்-கவிதையும் என்று மிகப்பெரிய ஆய்வு நூல் பணியில் ஈடுப்பட்டிருக்கிறீர்களாமே?

அது மிகப்பெரிய ஆய்வு பணி. என்னுடைய நூல்களில் இது தனித்து இருக்கும். பாரதியைப் பற்றி சிலம்பொலி செல்லப்பனார், பேராசிரியர் சாலமன் பாப்பையா போன்றவர்களிடம் விவாதித்து வருகின்றேன். பாரதி என் பார்வையில் நிச்சயம் புதுமைக்கவிஞனாய் மிளிர்வான் என்பதை நூல் பணி நிச்சயம் நிரூபிக்கும்.

தமிழ் இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது?

வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடுகளே இங்கு நடைமுறையில் இருக்கிறது. படைப்புகளைப் பார்க்காமல் படைப்பாளியைப் பற்றிய செய்திகளே முன்னிறுத்தப்படுகின்றன. எவன் சமூகத்திற்கு தேவையானவன் என்பதைவிட எவன் நமக்குச் சாதகமானவன் என்ற கருத்தோட்டமே இங்கு கால் பரப்பி சிரிக்கின்றது. அத்தனையும் தாண்டி நல்ல படைப்பாளிகளும் படைப்புகளும் நேசிக்கப்படுவதும் வாசிக்கப்படுவதும் ஆரோக்கியமான அம்சம்தானே!

சாகித்ய அகாடமி, ஞானபீடம் என்று ஏதேனும் லட்சியம் உண்டா?

இதெல்லாம் எனக்கு லட்சியமாகப்படவில்லை. இதுபோன்ற பரிசுகளும் விருதுகளும் படைப்பாளியின் தகுதிக்குத் தரப்படுகிறதா? அல்லது படைப்பாளிகளால் தட்டப்பட்டு தரப்படுகிறதா? என்பது ஆய்வுக்குரியது. இந்த நிறுவனங்களின் மேல் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் விமர்சனங்கள் வைக்கிறேன். பட்டுக்கோட்டையாரைப் பற்றியும் ஜீவாவைப் பற்றியும் அதிக நூல்கள் எழுதியது நான்தான். இவர்களைப்பற்றி நூல் எழுத வேறு ஒருவரைத் தெரிவு செய்கிறார்கள். அவர்கள் எனது நூல்களைப் பார்த்து எழுதி பயனடைகின்றனர். இப்படிப்பட்ட நிறுவனர்கள் கொடுக்கும் விருதுகள் எப்படி இருக்கும்? என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

சரி. வேறு ஏதேனும் பரிசுகள், விருதுகள்?

“உலகப்பன் காலமும் கவிதையும்’ என்ற பாரதிதாசனைப் பற்றி முழுமையான ஆய்வு நூலும், “பொன்விழா சுற்றுலா’ என்று சிறுவர் இலக்கிய நூலும் தமிழ் வளர்ச்சித்துறையின் முதல் பரிசினைப் பெற்றுள்ளது. “அறிவை வளர்க்கும் சிறுவர் பாடல்கள்’ என்ற நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் விருதும் -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விருதும் “வேலுநாச்சியார்’ என்ற வரலாற்று புதினத்திற்கு பாரத வங்கியின் விருதும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பரிசும் பெற்றுள்ளதுடன், மூன்று மாணவிகள் என் நூல்களை ஆய்வு செய்து எம்.பிஃல் பட்டமும் பெற்றுள்ளனர். என்னுடைய கவிதை நூல்கள் அனைத்தையும் கும்பகோணம் கல்லூரி மாணவர் ஒருவர் ஆய்வு செய்து எம்.பிஃல் பட்டமும் பெற்றுள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மனைப்பற்றி நான் எழுதிய நூல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைப்பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்னுடைய “லெலின்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலுக்குப் பரிசு வழங்கி கெüரவித்துள்ளது. அதுமட்டுமின்றி மன்னார்குடியில் உள்ள “செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை’ எனது எழுத்துப் பணிகளைப் பாராட்டி “இலக்கியச் செம்மல்’ என்ற பட்டத்தையும் ஐம்பதினாயிரம் ரொக்கப்பரிசையும் தந்தது.

என்னுடைய வாசகர் ஒருவர் தனது குழந்தைக்கு எனது பெயரைச் சூட்டி மகிழ்கிறார். இன்னொரு வாசகர் தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு “ஜீவபாரதி இல்லம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். எல்லா விருதுகளையும் விட இவைகள் எல்லாம் என்னைப் பொறுத்தவரை மிகமிக உயர்ந்தது.

Posted in Author, Bharathi, Bharathidasan, Bharathy, Interview, Jeeva, Jeevabharadhi, Jeevabharadhy, Jeevabharathi, Jeevabharathy, Lenin, Literature, NCBH, Pasumpon, Pattukkottai, Pattukottai, Research, Writer | Leave a Comment »

Tamil nadu Government’s Kalaimamani Award Recipients – Announcement (2007-08)

Posted by Snapjudge மேல் மே 10, 2007

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்: பாலகுமாரன், இயக்குநர் பாலா, சிம்பு, த்ரிஷா உள்பட 60 பேருக்கு விருது அறிவிப்பு

சென்னை, மே 11: தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குநர் பாலா, நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா உள்பட 60 பேர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  1. கோவைத் தம்பி-திரைப்படத் தயாரிப்பாளர்
  2. சீமான்-திரைப்பட இயக்குநர்
  3. சிம்பு-திரைப்பட நடிகர்
  4. “ஜெயம்’ ரவி-திரைப்பட நடிகர்
  5. ஜீவா-திரைப்பட நடிகர்
  6. விஷால்-திரைப்பட நடிகர்
  7. த்ரிஷா-திரைப்பட நடிகை
  8. நவ்யா நாயர்-திரைப்பட நடிகை
  9. கஞ்சா கருப்பு-நகைச்சுவை நடிகர்
  10. ஆர்த்தி-நகைச்சுவை நடிகை
  11. வினித்-குணசித்திர நடிகர்
  12. பாலகுமாரன்-இயற்றமிழ் கலைஞர்
  13. வண்ணதாசன்-இயற்றமிழ் கலைஞர்
  14. கவிஞர் கலாப்பிரியா-இயற்றமிழ் கலைஞர்
  15. சுப.வீரபாண்டியன்-இலக்கியப் பேச்சாளர்
  16. மரபின் மைந்தன் முத்தையா-இலக்கியப் பேச்சாளர்
  17. கீதா ராஜசேகர்-இசை ஆசிரியர்
  18. சஞ்சய் சுப்ரமணியம்-குரலிசைக் கலைஞர்
  19. ஸ்ரீவத்சவா-மிருதங்கக் கலைஞர்
  20. சரஸ்வதி ராஜகோபாலன்-வீணைக் கலைஞர்
  21. டாக்டர் இரா.செல்வகணபதி-சமயச் சொற்பொழிவாளர்
  22. இறையன்பன் குத்தூஸ்-இறையருட்பாடகர்
  23. இஞ்சிக்குடி சுப்ரமணியன்-நாதஸ்வர கலைஞர்
  24. மலைக்கோட்டை எஸ்.சுப்ரமணியன்-தவில் கலைஞர்
  25. கிரிஜா பக்கிரிசாமி-பரதநாட்டிய ஆசிரியர்
  26. திவ்யா கஸ்தூரி-பரதநாட்டிய கலைஞர்
  27. சிந்தூரி-பரதநாட்டிய கலைஞர்
  28. திருநங்கை நர்த்தகி நடராஜ்-நாட்டிய நாடகக் கலைஞர்
  29. ஆர்.முத்தரசி-நாட்டிய நாடகக் கலைஞர்
  30. கவிஞர் இன்குலாப்-நாடக ஆசிரியர்
  31. பேராசிரியர் இரா.ராஜு-நவீன நாடக இயக்குநர்
  32. தங்கராஜ் என்ற எம்எல்ஏ தங்கராஜ்-நாடக நடிகர்
  33. வி.மூர்த்தி-நாடக நடிகர்
  34. தேவிப்பிரியா என்ற ரமணதேவி-நாடக நடிகை
  35. வி.ஆர்.திலகம்-பழம்பெரும் நாடக நடிகை
  36. சி.ஐ.டி.சகுந்தலா-பழம்பெரும் திரைப்பட நடிகை
  37. பா.விஜய்-திரைப்பட பாடலாசிரியர்
  38. நா.முத்துக்குமார்-திரைப்பட பாடலாசிரியர்
  39. கபிலன்-திரைப்பட பாடலாசிரியர்
  40. இயக்குநர் பாலா-திரைப்பட கதாசிரியர்
  41. வித்யாசாகர்-திரைப்பட இசையமைப்பாளர்
  42. மது பாலகிருஷ்ணன்-திரைப்பட பின்னணி பாடகர்
  43. திப்பு-திரைப்பட பின்னணி பாடகர்
  44. பாம்பே ஜெயஸ்ரீ-திரைப்பட பின்னணி பாடகி
  45. எம்.வி.பன்னீர்செல்வம்-திரைப்பட ஒளிப்பதிவாளர்
  46. விட்டல்-திரைப்பட எடிட்டர்
  47. நேஷனல் செல்லையா-திரைப்பட புகைப்படக் கலைஞர்
  48. அதிவீர பாண்டியன்-திரைப்பட பத்திரிகை ஆசிரியர்
  49. கே.அம்மச்சி விராமதி-நாட்டுப்புற இசைக் கலைஞர்
  50. ஆக்காட்டி ஆறுமுகம்-நாட்டுப்புற இசைக் கலைஞர்
  51. டாக்டர் கே.ஏ.குணசேகரன்-நாட்டுப்புற இசை ஆய்வாளர்
  52. டிராட்ஸ்கி மருது-ஓவியக் கலைஞர்
  53. சி.ஜெ.பாஸ்கர்-சின்னத்திரை இயக்குநர்
  54. விடுதலை-சின்னத்திரை கதை வசனகர்த்தா
  55. வேணு அரவிந்த்-சின்னத்திரை நடிகர்
  56. போஸ் வெங்கட்-சின்னத்திரை நடிகர்
  57. மௌனிகா-சின்னத்திரை நடிகை
  58. தீபா வெங்கட்-சின்னத்திரை குணச்சித்திர நடிகை
  59. டி.ஜி.தியாகராஜன்-சின்னத்திரை தயாரிப்பாளர்
  60. அலெக்ஸ்-தந்திரக்காட்சி கலைஞர்

Posted in Actor, Actress, Affiliation, Alex, Announcement, Arasi, Arts, Authors, Award, Awards, Bala, Balakumaran, Balu Mahendira, Balu mahendra, Bombat Jayashree, Bombat Jayashri, Bombat Jayasree, Bombat Jayasri, Bombat Jeyashree, Bombat Jeyashri, Bose Venkat, Campaign, Cinema, CJ Baskar, CJ Bhaskar, Comedian, Culture, Devipriya, Director, DMK, Dratski, Dratsky Maruthu, Financier, Government, Govt, Inquilab, Jayam, Jeeva, Jeyam, Kabilan, Kalaimamani, Kalapriya, Madhu Balakrishnan, Magician, Marudhu, Marudu, Maruthu, Maunika, Movies, music, MV Paneerselvam, Na Muthukumar, Nandha, Narthaki, Narthaki Nataraj, Narthaki Natraj, National Chellaia, National Chellaiah, Navya, Navya Nayar, Pa Vijai, Pa Vijay, Paa Vijai, Paa Vijay, Party, Pithamagan, Pithamakan, Poet, Producer, Radhika, Ravi, Recipients, Recognition, Sanjai Subramaniam, Sanjay Subramaniam, Seeman, Selvi, Serial, Sethu, Silambarasan, Simbu, Soaps, Stars, Suba Veerapandiyan, SubaVee, SubaVeerapandiyan, SubaVi, Sun TV, Tamil Nadu, Television, TG Thiagarajan, TG Thiakarajan, TG Thyagarajan, TG Thyakarajan, Thrisha, Tippu, Tratski, Tratsky, Trisha, TV, Vannadasan, Vannadhasan, Venu Aravind, Venu Aravindh, Venu Aravinth, Vidhyasagar, Vidyasagar, Vineet, Vineeth, Vishaal, Vishal, Vittal, VR Thilagam, Writer | Leave a Comment »

Reema Sen refuses to act with Jeyam Ravi in ‘Dham Thoom’

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

“தாம் தூம்” படத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்க ரீமாசென் மறுப்பு

சென்னை, ஜன. 31-

வல்லவன் படத்தில் சிம்புவுடன் நடித்து சர்ச்சை ஏற்படுத்தியவர் ரீமாசென். பாடல்காட்சியில் ஆபாசமான ஆடையை உடுத்த மறுத்து படப்பிடிப்பில் இருந்து வெளியேறினார். பிறகு சமரசப்படுத்தி நடிக்க வைத்தார்கள்.

படம் ரிலீசான பிறகும் தனது முக்கியத்துவத்தை குறைத்து விட்டதாக குறைப்பட்டார். அது போல் தற்போது அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள “தாம்தூம்” படத்திலும் பிரச் சினை கிளப்பியுள்ளார்.

இந்த படத்தில் ஜெயம்ரவி கதாநயாகனாக நடிக்கிறார். ஜீவா இயக்குகிறார். இதில் ஜெயம்ரவிக்கு டாக்டர் வேடம்.

இதில் ஜெயம்ரவியுடன் நடிக்க ரீமாசென் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு சம்பளத்தில் அட்வான்ஸ் தொகையும் வழங்கப்பட்டது. வக்கீல் வேடத்தில் அவர் நடிப் பதாக இருந்தது.

இதற்காக படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டன. போட்டோ ஷூட்டும் முடிந் துள்ளது.

இந்த நிலையில் தாம்தூம் படத்தில் நடிக்க மறுத்து ரீமாசென் விலகிக் கொண்டார். அட்வான்ஸ் தொகையையும் திருப்பி கொடுத்து விட்டார்.

தாம்தூம் படத்தில் ரீமாசென் தவிர இன்னொரு கதாநாயகியும் நடிக்கிறார். பாடலுக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

ரீமாசென்னுக்கு சீரியஸ் வேடம் என்பதால் அவருக்கு பாடல் காட்சி ஒதுக்கப்படவில்லை. ஒரு பாடலாவது தனக்கு ஒதுக்க வேண்டும் என்று ரீமாசென் வற்புறுத்தினார். கதாபாத்திரத்தின் சீரியஸ் அடிபட்டு விடும் என்று டைரக்டர் மறுத்து விட்டார். கோபம் அடைந்த ரீமாசென் படத்தில் இருந்து விலகிக் கொண்டாராம்.

Posted in Dhaam Thoom, Gossip, Harris Jeyaraj, Jayam Ravi, Jeeva, Jeyam Ravi, Kisu Kisu, Nayanthara, Raiyma Sen, Reema Sen, Rumour, Silambarasan, Simbhu, Simbu, Tamil Actress, Tamil Cinema, Tamil Movies, Vallavan | Leave a Comment »

Mohanlal gets Ujala-Asianet Film ‘best actor’ award

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

ஏசியாநெட் விருது: சிறந்த நடிகை-பத்மபிரியா; சிறந்த நடிகர்-மோகன்லால்

திருவனந்தபுரம், ஜன.21-

ஏசியா நெட் நிறுவனம் ஆண்டுதோறும் மலையாள சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு விருது பெறுவோர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

சிறந்த நடிகராக மோகன்லாலும், சிறந்த நடிகையாக பத்மபிரியாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் விருது வழங்கப்படுகிறது.

சிறந்த படமாக `கிளாஸ் மெட்’ மலையாள படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ரூ.1 லட்சம் பரிசு மற்றும் விருது வழங்கப்படுகிறது. சிறந்த நகைச்சுவை நடிகராக இன்னசென்ட், சிறந்த வில்லன் நடிகராக சித்திக், சிறந்த இசையமைப்பாளராக ரவீந்திரன், சிறந்த டைரக்டராக ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருது வழங்கும் விழா வருகிற 28-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

Posted in Actress, Aran, Army, Asianet, Award, Cinema, Classmate, Films, Jeeva, Keerthicharka, Kerala, Major Ravi, Malayalam, Mohanlal, Movies, Padmapriya, Sobhana Parameshwaran Nair, Ujala | Leave a Comment »

Dhanush claims Simbu is his friend – Jeeva’s new film Pori launch

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

சிம்பு என் மச்சான்  தனுஷ் 

சிம்புவுக்கும், எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருவரும் மாமா, மச்சான் என்றுதான் பேசிக் கொள்வோம் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

சிம்புவும், தனுஷûம் பள்ளிக் கூட தோழர்கள். ஆனால் நடிக்க வந்த பிறகு இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. தனுஷை கிண்டலடித்து தனது படங்களில் சிம்பு வசனம் வைக்கும் அளவுக்கு நிலைமை போனது.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் சிம்பு எதிரே வர, மறுபக்கம் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் (இவரும் சிம்புவின் தோஸ்து தான், ஒருகாலத்தில்!) வர ஹலோ சொல்லிக் கொள்வார்கள் என எல்லோரும் எதிர்பார்க்க கண்டு கொள்ளாமல் விருட்டென்று ஐஸுடன் பறந்து விட்டார் தனுஷ்.

இப்படி அனலும், உலையுமாக இருவரும் இருந்து வரும் நிலையில் திடீரென சிம்புவை தூக்கி வைத்துப் பேசியுள்ளார் தனுஷ். ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள பொறி படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ்,

இங்கே மேடையில் உள்ள அனைவருமே இளைஞர்கள். சந்தோஷமாக இருக்கிறது. என் நண்பன் சிம்புவும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவர் இந்த மேடையில் இல்லாதது குறையாக உள்ளது.

எங்களைப் பற்றி வெளியில்தான் வேறு மாதிரியாக பேசுகிறார்கள். எங்களுக்குள் மோதல் என்ற இமேஜ் இருக்கிறது. ஆனால் உண்மையில், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். மாமன், மச்சான் என்றுதான் பேசிக் கொள்வோம் (மாமா யாரு, மச்சான் யாரு??). சத்தியமா நம்புங்க, சிம்பு என் நண்பன்தான்.

இதை நான் தனியாக சொன்னால் நன்றாக இருக்காது. நான் சின்னப் பையன் மாதிரி இருப்பது தான் என் பலமும் பலவீனமும்.

திருடா திருடி மூலம் என்னைத் தூக்கி விட்டவர் சுப்ரமணியம் சிவா. மன்மத ராசாவை மறக்க முடியுமா? அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பொறியும் சிறப்பாக அமையும். இப்படத்தில் தீப்பொறி உள்ளது. நிச்சயம் ஜீவா சாதிப்பார். படமும் வெற்றி பெறும் என்றார் தனுஷ்.

நண்பன் ‘துயரத்தில்’ இருக்கும்போது கை கொடுப்பவன், ஆறுதல் சொல்பவன்தான் உண்மையான நண்பன் என்பார்கள். ‘லிட்டில்’ சிம்பு இப்போது ‘கஷ்டத்தில்’ இருப்பதை உணர்ந்து அவருக்கு ஆறுதல் கூறுவது போல பேசியுள்ளார் தனுஷ்.

இதுவல்லோ நட்பு!

Posted in Aishwarya Rajnikanth, Aiswarya Rajiniganth, Asiwarya Rajinikanth, Audio, CD Release, Dhanush, Jeeva, Little Superstar, Manmadhan, Manmatha Raasa, Pori, Sathyam Cinemas, Sify.com, Silambarasan, Simbu, Simbu vs Dhanush, Subramania Siva, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Thatstamil.com, Thiruda Thirudi, Thiruvilayadal Aarambham, Tiruvilayadal Arambham, Vallavan | 1 Comment »

Recent Tamil Movie Reviews

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2006

இருவர் மட்டும்
காட்டில் இருகேரக்டர்களை உலவவிட்டு பின்னியுள்ள கதை…

சிறு வயதிலேயே காட்டில் வசிக்கும் அழகு அனாதை. மலை அடிவாரத்தில் நீர் வீழ்ச்சி அருகில் ஆங்கிலேயர்கள் கட்டிப்போட்ட பழைய மரவீட்டில் தனியாக குடியிருக்கிறான். பறவைகள், விலங்குகளிடம் பாசம் காட்டுகிறான். வெளியுலக அறிவு இல்லை.

திருமணத்திற்கு வற்புறுத்தும் குடும்பத்தினரை விட்டு பிரிந்து அதே காட்டின் வழியாக பஸ்சில் செல்லும் செல்வி டிரைவர், கண்டக்டரிடம் தகராறு செய்ய வற்புறுத்தி இறக்கி விடப்படுகிறாள். மிருகங்கள் சத்தத்தில் பயந்து ஓடும் அவள் அழகு வீட்டில் பதுங்க விறுவிறுப்பு…

அழகு, செல்வி இடையே மோதல், நட்பு, காதல் என நீண்டு திருமணத்துக்கு தயாராக திருப்பம்…

கல்யாணத்துக்கு அம்மா ஆசிர்வாதம் வாங்குவோம் என்று செல்வியை அழைத்து போய் மூடிக்கிடந்த அறையை திறக்க… செத்துப்போன அவன் தாய் பலகாலம் நாற்காலியில் அப்படியே பிணமாக சாய்ந்து கிடக்க மரண பயம். தப்பி ஓடுகிறாள் செல்வி. அவளை விரட்டி பிடித்து ஆவேசமாக தூக்கி வந்து பலவந்தமாக தாலி கட்டுகிறான், அழகு அறியாமையில் இருந்து மீண்டானா? செல்வி அவனோடு வாழ்ந்தாளா? என்பது கிளைமாக்ஸ்…

இரு பாத்திரங்கள் மட்டுமே கதையை நகர்த்துவது வித்தியாசம்… அழகுவாக வரும் அபய், பாத்திரத்துக்கு கச்சிதம். மரங்களில் ஏறி குருவிக்குஞ்சிக்கு பொறியை சவைத்து நாக்கில் வைத்து உணவூட்டுவது… தாயை இழந்த குஞ்சுகளை மீட்டு வந்து வீட்டில் தொட்டிலில் வைத்து தாலாட்டுவது பளிச்…

தாய் உயிருடன் இருப்பதாக அவள் பிணத்துடன் பேசும்போது திடுக்கிட வைக்கிறார். செல்வியாக வரும் சுனிதாவர்மா இளமைச்சாரல்… காடு, மலை, நீர் வீழ்ச்சி பின்னணியில் அரைகுறை ஆடையுடன் சூடேற்றுகிறார்.

அழகு தாய் பிணத்தை தன்னோடு வைத்து வாழ்வதை பார்த்து மிரண்டு ஓட்டம் பிடிப்பது மரண பயம்… குழிதோண்டி மண்ணில் புதைந்த அழகுவை மீட்க அழுது போராடுவது ஜோர்…

படத்துக்கு ஜீவனாக இருப்பது அருவியும், காடு, மலை இயற்கை காட்சிகளும் பி.கே.தாஸின் காமிரா அவற்றின் கொள்ளை அழகை மொத்தமாகஅள்ளியுள்ளது. அந்த பகுதியில் வாழவேண்டும் என்ற ஆவலை தூண்ட வைக்கிறது.

புத்திசாலித்தனமாக பேசவும் ஊருக்குள் நடமாடிவிட்டு வரவும் செய்யும் அழகுக்கு மரணம் பற்றிய அறிவு இல்லை என்பது சறுக்கல் இருவரை மட்டுமே வைத்து படம் பண்ணியது துணிச்சல் என்றாலும் சிலஇடங்களில் அலுப்பு…

விஜய் ஆண்டனி இசையில் வைரமுத்துவின் பாடல் சுகராகம்… இயற்கையின் ஜில்லிப்போடு கவித்துவமாக படத்தை செதுக்கியுள்ளார். இயக்குனர் துவாரகிராகவன்.

நெஞ்சில்
சுற்றுப்பயணத்தில் உருவாகும் காதல் கதை…

தனியார் நிறுவனம் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களை தேர்வு செய்து லண்டனுக்கு இலவச சுற்றுலா அனுப்புகிறது.

பயணக்குழுவில் உள்ள நவ்தீப்-அபர்ணாவுக்கு காதல். அவர்களை பிரிக்க அதே குழுவில் சென்ற கிருஷ்ணமூர்த்தியும் கல்யாணியும் சதி செய்கின்றனர்.ஆனந்த் மோசமானவன் என்று பிரியாவை நம்ப வைத்து அவனை வெறுக்கச் செய்கின்றனர்.

மோதலை சாதகமாக்கி பிரியாவை அடைய துடிக்கிறான் லண்டனில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி. காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ்.

காதலர்களாக வரும் நவ்தீப், அபர்ணா துருதுரு ஜோடி. இருவரும் மோதிக் கொள்ளும் ஆரம்ப காட்சிகள் கல கல…

போதையில் ரஞ்சிதா நவ்தீப் நெருக்கம் திருப்பம். காதல் தோல்விக்கு பின் கதையில் வேகம்… மணிசுடன் சுற்றி நவ்தீப்பை அபர்ணா வெறுப்பேற்றுவது நறுக்…

அபர்ணா நடிப்பில் மெருகு… காதல், கோபம், தோல்வி, வெறுப்பு என ஒவ்வொன்றிலும் வித்தியாசம். காதலனை இன்னொரு பெண்ணுடன் பார்த்து நொறுங்குவது நச்…

ஆண்களை வெறுப்பவராக ரஞ்சிதாவும் பெண்களை வெறுப்பவராக தலைவாசல் விஜயும் கச்சிதம்… காதலர்களை பிரிக்கும் சூழ்ச்சி திக்.. இருவரும் மனம் மாறி காதலர்களாவது கலகலப்பு…

வடிவேலு-மயில்சாமி சிரிக்க வைக்கின்றனர். இங்கிலீஸ்காரன் வடிவேலு, கேரக்டர் நச்… கலகலப்பும் விறுவிறுப்புமாக கதை சொல்லியுள்ளார் இயக்குனர் செல்வா. இமான் இசையில் பாடல்கள் தாளரகம்.

ரெண்டு
மாதவனின் இருவேட ஆக்ஷன், காமெடி படம்.

பட்டிணத்துக்கு வேலை தேடி வரும் மாதவன் பொருட்காட்சியில் மேஜிக் ஷோ நடத்தும் மாமா கிரிகாலனிடம் அடைக்கலமாகிறார். எதிரில் நாகக்கன்னி ஷோ நடத்தும் வெள்ளி மீது காதல்.

மாதவன் உருவத்தில் இன்னொருவர் தொடர் கொலைகள் செய்ய போலீஸ் இவரை பிடிக்கிறது. அதிலிருந்து மீண்டாரா, கொலைகள் ஏன் நடக்கின்றன என்பதை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் சுந்தர்.சி.

பொருட்காட்சி அரங்கில் மாதவன், வடிவேலு பண்ணும் காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ரகம்.

மேஜிக் ஷோவுக்கு பணம் கொடுத்து ஆட்களை வர வைப்பது, சவாரி வந்த ஆட்டோ டிரைவரிடம் ஆர்.சி. புக்கை வாங்கி அடகு வைத்து பணம் வாங்குவது.. என மாதவன் காமெடி அவதாரம் எடுத்துள்ளார். பெண் மனதில் இடம் பிடிக்க வடிவேலுவுக்கு ஆலோசனை சொல்லி சிக்கலில் மாட்ட வைப்பது ரகளை.

வில்லன்களை பழிவாங்கும் கேரக்டரில் வேகம். திருமண மண்டபத்தில் விலிப்பு நோயால் ஒரு பெண்ணின் திருமணம் நிற்க அவளுக்கு தனது அண்ணனை மணமுடித்து வைப்பது ஜீவன். அனுஷ்கா காதல் கவிதை.

வில்லன்களை தீர்த்து கட்டுவது மிரட்டல். திருமண மண்டபத்தில் பலரை கொன்று சாய்ப்பது தூக்கலான வன்முறை. வில்லன் ரகசியம் தெரிந்தவர் மாதவன் தந்தை மட்டும்தான். அவரோடு மொத்த குடும்பத்தையும் கொல்வது ஒட்டவில்லை.

அனுஷ்கா அழகு பதுமையாய் ஜொலிக்கிறார். கவர்ச்சியில் தாராளம்.

வெள்ளியாக ரீமாசென் பளிச். மேஜிக் நிபுணர் கிரிகாலனாக வடிவேலு பண்ணும் காமெடி ஜோர்.. தப்பு தப்பாக மேஜிக் செய்து பார்வையாளர்களிடம் மாட்டி விழிப்பது.. ஒரு பெண்ணின் இதயத்தில் இடம் பிடிக்க வீர சாகசம் செய்ய முயன்று தோற்று தவிப்பது என கலகலப்பூட்டுகிறார்.

மணிவண்ணன், மயில்சாமி, சந்தானம், விச்சு, தாரிகா ஆகியோரும் உள்ளனர்.

முதல் பாதி கலகலப்பாகவும் மறுபாதி விறுவிறுப்பாகவும் செல்கிறது. இமாம் இசை பலம். ரசனையான ரெண்டு.

ஆவணி திங்கள்
கிராமத்தில் வசிக்கும் அனாதை இளைஞன் ராசப்பா. உதவாக்கறை நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறான். குடும்ப பாசத்துக்கு ஏங்குகிறான்.

திருமண ஆசை ஏற்படுகிறது. உள்ளூர் புரோக்கர் மூலம் பெண் பார்க்கிறான். புரோக்கர் அவனை ஏமாற்றி பணம் பறிக்கிறார். பெண் அமையவில்லை. ஏதேச்சையாக புரோக்கர் மகள் காயத்ரியை காணும் ராசப்பா அவள் மீது காதல் கொள்கிறான். காயத்ரியும் விரும்புகிறாள்.

சொந்த பந்தம் இல்லாத ராசப்பாவுக்கு பெண் கொடுக்க புரோக்கர் மனைவி மறுக்கிறாள். அதை சவாலாக ஏற்று பாறையில் வெடி வைத்து உடைக்கும் ஆபத்தான வேலையில் சேர்ந்து பணம் சம்பாதித்து வீடு வாசல் என்று வசதியாகிறான் ராசப்பா. அதன் பிறகு அவனுக்கு பெண் கொடுக்க புரோக்கர் குடும்பம் சம்மதிக்கிறது. திருமணத்துக்கும் நாள் குறிக்கிறார்கள்.

அப்போது ஜமீன்தார் பேத்தி தீபிகா மூலம் ராசப்பா வாழ்வில் விதி விளையாடுகிறது. தீபிகா விளையாட்டாக செய்யும் காரியத்தால் ராசப்பா ஒரு கையை இழக்கிறான். திருமணம் தடைபடுகிறது. மனம் உடையும் தீபிகா தன் திருமணத்தை தள்ளி வைத்து ராசப்பாவுக்கு பெண் தேடுகிறாள் பெண் அமையவில்லை. திருமணம் நடந்ததா? என்பது கிளைமாக்ஸ்.

ராசப்பாவாக வரும் ஸ்ரீகுமார் கிராமத்து இளைஞனாக கச்சிதம். ஒற்றைக் கையுடன் மனதை பிழிகிறார். காயத்ரியாக மதுஷா, தீபிகாவாக தேஜினி போட்டி போட்டு நடித்துள்ளனர். கிணற்றுக்குள் வெடி வைத்து விபத்து ஏற்படும் காட்சி தத்ரூபம்.

லிவிங்ஸ்டன், டெல்லிகுமார், காதல் சுகுமார், அஜய்ரத்னம் ஆகியோரும் உள்ளனர். ஆர்.சங்கர் இசையில் பாடல்கள் நீண்ட இடைவெளிக்குபின் இனிமை. வேதா செல்வத்தின் ஒளிப்பதிவு கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. ஹரிகிருஷ்ணா வின் இயக்கத்தில் ஆவணித் திங்கள் மனதை வருடுகிறது.

சிவப்பதிகாரம்
அரசியல்வாதிகளை மாணவன் பழிவாங்கும் கதை…

கல்லூரியில் படிக்கும் ஒழுக்கமான முதல் மாணவன் சத்தியமூர்த்தி. இடைதேர்தல் பற்றி சகமாணவர்களுடன் கருத்துகணிப்பு வெளியிட பலிக்கிறது.

தோற்றுபோன சண்முகராஜன் தனது தோல்விக்கு கருத்து கணிப்புதான் காரணம் என்று அடியாட்களுடன் கல்லூரியை முற்றுகையிட்டு கலாட்டா செய்கிறார்.

மந்திரி உதவியோடு கல்லூரிக்குள் கேஸ் சிலிண்டர்களை வெடிக்க செய்து பல மாணவர்களை சாகடிக்கிறார்.

சத்தியமூர்த்தியின் வாட்சுமேன் தந்தையும் தீயில் பலியாகிறார்.

கண் முன்னே நடக்கும் இந்த கொடூரத்தை பார்த்து பழிவாங்க துடிக்கும் சத்தியமூர்த்தியை பேராசிரியர் ரகுவரன் தடுக்கிறார்.

பொது தேர்தலில் வேட்பாளர்களாக அவர்கள் நிறுத்தப்பட்டதும் கொலைகார அரசியல்வாதிகளை ஒவ்வொருவராக அழிப்பது கிளைமாக்ஸ்…

சத்யமூர்த்தியாக வரும் விஷால் கச்சிதம். நல்ல மாணவராக மனதில் நிற்கிறார். நாட்டுப்புற பாடல் ஆராய்ச்சியாளராக கிராமத்தை வலம் வருவது வேகத்தடை. பொது தேர்தல் அறிவிப்பு வெளியானதும் சூடுபிடிக்கிறது.

வேட்பாளர்களை சாகடிப்பது திக்… திக்… வேட்பாளர்கள் மிரண்டு மொத்தமாக வேட்புமனுவை வாபஸ் பெறுவது… தேர்தலை தேர்தல் கமிஷன் தள்ளி வைப்பது வித்தியாசம்.

விஷாலை காதலிப்பவராக வரும் மம்தா அழகு, கவர்ச்சியில் ஜொலிக்கிறார். அமைதியான பேராசிரியராக வந்து போகிறார் ரகுவரன். கலெக்டர் வேலை பார்த்தவர் என்ற முடிச்சு அவிழும்போது திக்…

கஞ்சா கருப்பு கலகலப்பூட்டுகிறார். அழுத்தம் இல்லாத முதல் பாதி கதை இவரால்தான் நகர்கிறது.

மணிவண்ணன், சண்முக ராஜன், உபேந்திரா லிமாயே, ஸ்ரீகாந்த் ஆகியோரும் உள்ளனர்.

இடைவேளை வரை வயலும் வயக்காடுமாக மெதுவாக நகரும் கதைக்கு பிற்பகுதியில் வேகம் கொடுத்துள்ளார் இயக்குனர் கரு.பழனியப்பன். வித்யாசாகர் இசையில் பாடல் கள் கிராமிய மணம் வீசுகிறது. கோபிநாத் கேமராவில் பசுமை.

வாத்தியார்
ஆசிரியர் தாதாவாகும் கதை…

அர்ஜ×னுக்கு இன்னொரு `ஜென்டில்மேன்’ பாணி படம். அநீதிகளை எதிர்க்கும் ஆசிரியர் `கெட்டப்`பில் வெளுத்துள்ளார்.

பரீட்சை பேப்பரில் அதிக மதிப்பெண் போட மிரட்டும் ரவுடி மாணவன். அர்ஜ×ன் மாணவியை மானபங்கம் செய்யும் சக வாத்தியார் போன்றோரை நொறுக்க வேலை பறிபோகிறது.

பள்ளிக் கட்டிட கூரை எரிந்து 48 மாணவர்கள் பலியாக ஆவேசமாகும் அர்ஜ×ன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை துவைத்து மக்கள் முன் நிறுத்துகிறார். அதில் ஒரு அதிகாரி செத்துப்போக கொலைப்பழி சுமந்து சிறைக்கு போகிறார். ரிலீசாகும் போது தீயவர்களை அழிக்குமாறு பலர் படையெடுக்க தாதா கெட்டப்புக்கு மாறுகிறார்.

ஊனமுற்றோருக்காவும், ஆதரவற்ற முதியோர்களுக்காவும் அன்னை இல்லம் திறந்து காப்பாற்றுகிறார். ரவுடிகளை ஒழித்து கட்டுகிறார். அவரை ஆதாரத்தோடு பிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது.

முதல்- மந்திரி பதவியை குறுக்கு வழியில் பிடிக்க முயலும் நாச்சியார் வழிபாட்டு தலங்களில் குண்டு வைக்க அர்ஜ×ன் உதவியை நாட அவர் மறுக்க விறுவிறுப்பான அடிதடி கிளைமாக்ஸ்.

வாத்தியார் கெட்டப்பில் அர்ஜ×ன் கச்சிதம். பள்ளியில் சாராயம் காய்ச்சும் ரவுடி வீராவை வீழ்த்தும் அறிமுகம் தூள்..

பள்ளி கூரை எரிந்து குழந்தைகள் பலியாகக் காரணமான கல்வி அதிகாரிகள், என்ஜினீயர்களை தோல் உரிப்பது நச்…

கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்காத தோல் கம்பெனி முதலாளிக்கு எதிராக தொழிலாளர்களை தூண்டுவது நறுக்…

மகளை பழித்த ரவுடியை தந்தையை விட்டு கொல்ல வைப்பது திடுக்…. சவக்குழிக்குள் இருந்து அர்ஜ×ன் மீள்வது ஹாலிவுட் மிரட்டல்.

அர்ஜ×ன் காதலியாக வரும் மல்லிகா கபூர் அன்னை இல்லத்தில் புகுந்து கல கலப்பூட்டுகிறார். அன்னையாக வரும் சுஜாதா ஜீவன்.

வில்லத்தன போலீஸ் அதிகாரி சாயலில் வந்து இறுதியில் நல்ல அதிகாரி என்ற உண்மையை வெளிப்படுத்தும் பிரகாஷ்ராஜ் பாத்திரம் திருப்பம்….

வடிவேலு காமெடி ஆரவாரம். மல்லிகா கபூர் தன்னை காதலிப்பதாக ஏங்குவது…. பஸ்சில் கண்டக்டரிடம் மீதி கேட்டு ரவுடிகளிடம் சிக்கி அடிவாங்குவது ரகளை….

பிரதீப் ராவன், மணிவண்ணன், தலைவாசல் விஜய் கேரக்டர்கள் கச்சிதம்.

தெளிவான கதை… அழுத்தமான சீன்கள்… வித்தியாசமான கதை களத்தில் படத்தை விறு விறுப்பாக்கியுள்ளார். இயக்குனர் வெங்கடேஷ்… கும்பகோணம் பள்ளி விபத்து, ரேஷன் கடை தில்லு முல்லு… அரசியல் சாக்கடை, நோய் பரப்பும் ஆலைகள் என சமூக அவலங்களை பொறுக்கி பிரமிப்பான கதையாக்கியுள்ள வெங்கடேஷ் முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்துள்ளார்.

இமான் இசை, கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு பலம். `என்னடி முனியம்மா ரீ மிக்ஸ் பாடல் தாளம்.

சபாஷ் வாத்தியார்!

கிழக்கு கடற்கரை சாலை
சுனாமியில் சொந்தங்களை இழந்து அனாதையான இளைஞனின் கதை.

பெட்ரோல் பங்கில் வேலை செய்பவன் கணேஷ். தனது சக கூட்டாளிகளுடன் ஊர் சுற்றி திரிகிறான். அப்போது வக்கீல் வி.டி.ஆரின் தங்கை பிரியாவை சந்திக்க நேரிடுகிறது. அந்த பெண்ணை காதலிக்க வை பார்க்கலாம் என்று நண்பர்கள் சபதம் போடுகிறார்கள். இதை ஏற்கும் கணேஷ் அவள் காதலை பெற கடும் போராட்டம் நடத்துகிறான்.

நம்மால் ஒரு உயிர் போககூடாது என்ற பரிதாபத்தில் தினமும் பத்து நிமிடம் கணேசை சந்தித்து பேசுகிறாள் பிரியா. அப்போது அவளுக்கு காதல் பற்றி கொள்கிறது. இருவர் திருமணத்துக்கும் பிரியா அண்ணன் சம்மதிக்கிறான். பிறகு அவனே பிரியாவை கடத்தி நாடகமாடுகிறான்.

இந்த உண்மையை கணேஷ் வெளி கொண்டு வருகிறான். இறுதியில் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்து காதல் ஜோடிகளை கடலுக்குள் தள்ளி விடுகிறான் பிரியா அண்ணன். இருவரும் உயிர் பிழைத்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

கணேசனாக ஸ்ரீகாந்த் கச்சிதம். அப்பா அம்மாவை நினைத்து கடல் அலைகளுடன் உரையாடுவது உருக்கம். கடலில் தள்ளிவிட்ட பிறகும் காதலியை விடாமல் துரத்துவது வேகம். காதலியின் கனவுகளை நிறைவேற்ற செய்யும் சில்மிஷம் ரசிப்பு.

பிரியாவாக பாவனா. அழகு பதுமையாக கண்களை குளிர வைக்கிறார். கைதேர்ந்த நடிப்பை பாவனாவிடம் பார்க்க முடிகிறது. கிரிமினல் வக்கீல் பாத்திரத்தில் சுரேஷ் வில்லத்தனம் பளிச்.

முத்துக்காளை, கஞ்சா கருப்பு நகைச்சுவை கூட்டணி களை கட்டுகிறது. பால்ஜே இசையில் பாடல்கள் இனிமை.

முரட்டு காதலை சொல்லியவிதம் அருமை. காதல் காட்சிகளை ரசிக்க வைத்துள்ளார், இயக்குனர் ஸ்டான்லி. கதையில் அழுத்தம் குறைவு பன்னீர்செல்வத்தின் கேமரா கடலோர அழகை அள்ளியுள்ளது.

வல்லவன்
நிஜக் காதல் அழகு பார்க்காது என்பதை பதிவு செய்யும் படம்.

மனசுக்கு பிடித்த பெண்ணை காதலித்து மணக்க லட்சியம் வைத்துள்ள வள்ளுவன் கண்ணில் அழகான சுவப்னா பட காதல்… நீண்ட பல்லுடன் முகத்தை விதார மாக்கி சுவப்னாவிடம் காதல் யாசி என்றான் அவளே அவனை அழகற்றவன் என்று வெறுக்கிறாள். பிறகு அவளுக்காக சிறு சிறு உதவிகள் செய்து மனதை தொடுகிறான். காதலிக்க சம்மதிக்கிறாள். அதன் பிறகு கோர பல்லை அகற்றி உண்மை உருவத்தை வெளிப்படுத்துகிறான்.

காதலர்கள் சந்தோஷத்தில் திளைக்கும்போது வள்ளுவன் தன்னை விட வயது குறைந்தவன் என்றும் தனது கல்லூரி மாணவன் என்றும் சுவப்னாவுக்கு தெரிய அதிர்ச்சியாகிறாள்.

அதன் பிறகு கதையில் வேகம்…. வள்ளுவனை உதறி விட்டு வெளிநாட்டு மாப்பிள்ளையை மணக்கத் தயாராகிறாள்.

இருவரும் இணைந்தார்களா? என்பது பிற்பகுதி விறுவிறுப்பு…

வள்ளுவனாக சிம்பு, துடுக்கத்தனம், காதல், அழுகை, ஆத்திரம் அத்தனையிலும் முத்திரை….

போடு ஆட்டம் போடு என குழந்தைகளுடன் நடனத் தோடு அறிமுகமாகும் ஆரம்பம் நச்… நீண்ட பல் சோடா புட்டி கண்ணாடியுடன் ஜோக்கர் உருவத்துக்கு மாறி காதலிக்காக ரவுடிகளிடம் அடிவாங்குவது… சுவப்னா விரும்பிய செருப்பை திருடி போலீசிடம் மாட்டி சித்திரவதைப்படுவது… மனதை பிழிபவை…

காதலியுடன் நடத்தும் முதலிரவு கிளு கிளு…. அந்த நேரம் இருவரும் பேசிக் கொள்ளும் வசனம் “ஏ” ரகம்…

காதலி வெறுத்து ஒதுக்கிய பின் வரும் சிம்பு, ரீமாசென் `பிளாஸ்பேக்’ பள்ளிக் காதல் சரவெடி…. சைக்கோவான ரீமாசென்னிடம் செருப்படி வாங்குவது… வாந்தியை அள்ளுவது… மனதை தொடுபவை.

சுவப்னா பாத்திரத்தில் நயன்தாரா ஜொலிக்கிறார். மாணவனை காதலித்து விட்ட தவறை உணர்ந்து அவன் மீது ஆவேசப்பட்டு கதறுவது சபாஷ். `பல்லன்’ தோற்றத்தை பார்த்த உடனே சிம்புவிடம் ஒட்டுவது மனதில் ஒட்டவில்லை.

காதல் சைக்கோ’ பாத்திரத்தில் ரீமாசென் நிஜமாய் கச்சிதம். காதலன் வீட்டு போன் துண்டிக்கப்பட்ட நிலையிலும் விடிய விடிய காத்திருந்து போன் நம்பரை சுழற்றுவது திக்…. திக்… ஷுவை கழற்றி காதலன் மேல் வீசுவது… காலில் விழுந்து கெஞ்ச வைப்பது… திகில் காதல்..

சிம்புவின் தோழியாக சந்தியா வந்து போகிறார். எஸ்.வி.சேகர், சந்தானம், சுகுமார், கொட்டாச்சி கலகலப்பு…

கதையில் `லாஜிக்’ நெருடல்கள் இருந்தாலும் காட்சிகளின் பிரமாண்டம் மறக்கச் செய்கிறது.

யுவன் சங்கர்ராஜா இசையில் `லூசுப் பெண்ணே’, `வல்லவா’ யம்மாடி ஆத்தாடி பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. ப்ரியன் ஒளிப்பதிவு அபாரம்..

காதல் “வல்லவன்”

வட்டாரம்
முழு நீள ஆக்ஷன் படம்…

லாஜிக் பார்க்காமல் இருந்தால் பெரிய துப்பாக்கிகளின் மேஜிக்.

சின்ன வயதில் தன்னையும் தன் தந்தையையும் அவமானப்படுத்தி தன் தந்தையின் தற்கொலைக்கு காரணமான அமைந்த குருபாதத்தை பழி வாங்கி அவர் இருக்கும் இடத்தில்தான் இருக்க வேண்டும் எனும் எண்ணம் ஹீரோ பர்மாவிற்கு!

வளர்ந்து பெரியவன் ஆனதும் பெரிய மனிதர், பெரிய பிஸினஸ்மேன் போர்வையில் வலம் வரும் ஆயுத வியாபாரி தாதா குருபாதத்திடம் வேலைக்கு சேருகிறான்.

குருபாதத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி ஒரு கட்டத்தில் அவரது கூட்டாளிகள், அடியாட்கள் என்று சகலரையும் போட்டுத் தள்ளிக்கொண்டே மற்றொரு பக்கம் குருபாதத்தின் எதிராளி என்.கே.சாமி எனும் கருப்புசாமிக்கும் ஆயுத சப்ளை செய்து அந்த கேங்கையும் குருபாதத்திற்கு எதிராக தூண்டிவிடுகிறான் பர்மா.

குருபாதத்தின் ஆட்களை தீர்த்து கட்டி அந்த கொலைகளை கருப்பசாமி குரூப் செய்ததாக கதை கட்டி இரண்டு குரூப்பையும் மோத விடுகிறான்.

எதிர்பாராமல் குருபாதத்தின் மகளுக்கும், கருப்பசாமியின் மகனுக்கும் திருமண பேச்சு வார்த்தை எழுந்து இரு குரூப்பும் சமாதானமாகிறது. இதை விரும்பாத பர்மா குருபாதத்தின் மூத்த மகனோடு சென்று கருப்பசாமியின் மகனை தீர்த்து கட்டி விட்டு குருபாதத்தின் மூத்த மகன், உன் பிள்ளையை தீர்த்து கட்டி விட்டான் என்று கருப்பசாமிக்கு தகவல் அனுப்புகிறான். அதில் கடுப்பாகும் கருப்பசாமி குருபாதத்தின் மூத்த மகனை போட்டுத்தள்ளுகிறான்.

இப்படி பழிக்கு பழி வாங்கியபடி துப்பாக்கி சப்தம் கேட்க செல்லும் கதையில் பர்மா, குருபாதத்தை ஒழித்துக்கட்டிவிட்டு அவரது இடத்திற்கு வந்தனா? இல்லையா? என்பது கிளைமாக்ஸ்.

ஹீரோ பர்மாவாக ஆர்யா, குருபாதமாக நெப்போலியன் இருவரும் தங்கள் பாத்திரங்களில் கச்சிதம்.

துப்பாக்கிகளும் கையுமாக ஆர்யா, ஆக்ஷனில் ஜேம்ஸ்பாண்டு ரேன்ஜ×க்கு அசத்தல். நெப்போலியனும் கலக்கல். அரிவாள், கம்பு என்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இதுவரை திரிந்து நெப்போலியனுக்கு இந்தப் படம் மூலம் வித்தியாச `கெட்அப்’.

கதாநாயகியாக கீரத், அவரது தோழியாக அதிசயா என்று இரண்டு புதுமுகங்கள் இருவருமே வலுவாக காலூன்றும் தன்மை. கீரத்தின் நடை, உடை பாவனை அதிசயாவின் வித்தியாசமான குருல் மைனஸ். தண்டபாணி, ரமேஷ்கண்ணா, வையாபுரி, ராம்ஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

வட்டாரம் எனும் பெயரில் பெரிய தொழில் அதிபர்கள் போர்வையில் இருக்கும் தாதாக்களின் `வட்டாரங்களை டச் பண்ணியிருக்கும் சரண் காட்சியமைப்புகளில் சபாஷ். கதை விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை.

பரத்வாஜின் இசையில் வைர முத்துவின் பாடல்களையும் ஏ.வெங்கடேசனின் ஒளிப்பதிவையும், சரணின் இயக்கத்தையும் ரசிக்கலாம்.

தலைமகன்
சரத்குமாரின் நூறாவது படம்…

பத்திரிகை, அரசியல், தண்ணீர் பிரச்சினை மூன்றிலும் சவாரி செய்கிறது கதை.

மினரல் வாட்டர் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு எதிர்கால சமுதாயத்தை தண்ணீர் தட்டுப்பாடு உலுக்கும் என்ற கருவை ஆக்ஷன் கலந்து பதிய செய்துள்ளனர்.

வெளிநாட்டு நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கி நெடுங்குளம் கிராமத்தில் தண்ணீர் பேக்டரி, திறக்க அனுமதி கொடுக்கிறார் மந்திரி சண்முக வடிவேலு. இத்திட்டத்தால் வறட்சி உருவாகி மக்கள் பாதிக்கப்படுவர் என்று சரத்குமார் எதிர்க்கிறார்.

பத்திரிகையிலும் கட்டுகரை எழுதுகிறார். சரத் மீது எரிச்சல் ஆகும் மந்திரி போலீசை ஏவி பத்திரிகை ஆபீசில் வெடி குண்டுகளை பதுக்கச் செய்கிறார். சரத்குமாருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பொய் வழக்கை பதிவாக்கி கைது செய்ய வைக்கிறார்.

கோர்ட்டில் ஆஜர்படுத்த சரத்குமாரை அழைத்து போகும் போலீஸ் நடுவழியில் அவரை கொல்லத் துணிகிறது. சரத்குமார் தப்பினாரா? தண்ணீர் கம்பெனி தடுக்கப்பட்டதா? என்பதை விறு விறுப்பாக சொல்லியுள்ளனர்…

பத்திரிகை நிருபர் பாத்திரத்தில் சரத்குமார் கச்சிதம். மந்திரி அக்கிரமத்துக்கு துணை போகும் போலீஸ் அதிகாரி, ரவுடிகள் என மூன்று தரப்பினரிடமும் மோதுவதில் வேகம்…

பத்திரிகை எடிட்டர் விஜயகுமாரை சித்ரவதை செய்தும் அவர் மகளை கற்பழித்து கொல்வது கொடூரம்… அதுவரை மெதுவாக நகரும் கதை பின் சூடு பிடிக்கிறது.

சரத்குமாரை ஏற்றி வந்த வேனை தண்டவாளத்தில் நிறுத்தி ரெயிலை மோதச் செய்வது பயங்கரம்….

சரத்குமார் உடல் முழுவதும் ரத்த காயம் ஆகி கேரள மூலிகை சிகிச்சை எடுத்துக் கொண்டு பழைய விஷயங்களை நினைப்பது போல் கதையை பிளாக் பேக்கில் நகர்த்தியது. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டெக்னிக்…

சிகிச்சைக்குப் பின் நீண்டமுடி, உருக்குலைந்த முகம், தெத்தும் பேச்சு, நொண்டும் நடை என வித்தியாசமான தோற்றத்தில் நெடுங்குளம் கிராமத்தில் ஆஜராவது அபாரம்.

மந்திரி, போலீஸ் அதிகாரியை வீழ்த்த சரத்குமார் தொழிற்சாலைக்குள் கம்ப்ïட்டரை இயக்கி விïகம் அமைப்பது… மயானத்தில் கல்லறையை பெயர்த்து ஊழல் பைல்களை தோண்டி எடுப்பது… திக்… திக்… மந்திரியுடன் மோதும் கிளைமாக்ஸ் சண்டை அனல்…

சரத்குமார் காதலியாக நயன்தாரா. குறைவாக வந்தாலும் நிறைவு. தீன் தேனா பாடலில் திறமை காட்டுகிறார்…

போலீஸ் டி.ஜி.பி.யாக வரும் சீமா பிஸ்வாஸ் வில்லன்களுடன் சேர்ந்து மிரட்டுகிறார். மந்திரி கேரக்டரில் வரும் முகேஷ் தீவாரிக்கு சத்தத்தில் மட்டும் வேகம்… கதாபாத்திரங்களின் வசன உச்சரிப்பின் போது சில இடங்களில் பின்னணி இசை கோர்க்காதது வேகத்தடை…

படத்தின் பிற்பகுதியை விறுவிறுப்பாக இயக்கி உள்ளார் சரத்குமார்.

வடிவேலு ஒளியும் வில்லன்களை காட்டி கொடுத்து மாட்டும் காமெடி ரகளை…

விஜயகுமார், சங்கிலிமுருகன், அலெக்ஸ், டெல்லி கணேஷ் ஆகியோரும் உள்ளனர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், குஷ்பு ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுகிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா, பால் இசையில் `நூறு நூறு’ பேனாகாரன் பாடல் முணு முணுக்க வைக்கிறது. டைரக்டர் சேரன் திரைக்கதையமைத்துள்ளார்.

வரலாறு
அஜீத்குமார் நடிப்பை பறைசாற்றும் படம்… மூன்று பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

விபத்தில் கால் இழந்ததாக சொல்லி சக்கர நாற்காலியில் வலம் வரும் கோடீஸ்வர தொழில் அதிபர் சிவனுக்கு மகன் விஷ்ணு மீது பிரியம். மனைவியும் அதே விபத்தில் பலியாகி விட்டதாக மகனிடம் சொல்லி வளர்க்கிறார்.

விஷ்ணுவுக்கு கல்லூரி மாணவி திவ்யா மீது காதல். அவன் ஆசைப்பட்ட பெண்ணை மணமுடித்து வைக்க பேசி நிச்சயம் செய்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்ததும் திருப்பம். பூனைக் கண்களோடு வெறி பிடித்தவனாக விஷ்ணு தோற்றத்தில் ஜீவா என்பவன் ஆஜர்ஆக படம் படுவேகம்.

விஷ்ணுவாக திவ்யா வீட்டுக்குள் போதையில் நுழைந்து ரகளை, அடி-தடி செய்து திருமணத்தை நிறுத்துகிறான். திவ்யா தோழியை கற்பழிக்க முயன்று அவள் வெறுப்பை விஷ்ணு மீது திருப்புகிறான். சிவனை கத்தியுடன் பாய்ந்து கொல்லத் துணிகிறான்… மொத்த பழியும் விஷ்ணு மீது விழ அவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கின்றனர்.

விஷ்ணு தோற்றத்தில் வந்த ஜீவா யார்? சிவனை பழி வாங்க துடிப்பது ஏன் என்பது பிளாஸ்பேக்கில் ஜெட் வேகத்தில் நகர்கிறது.

வயதான சிவன், அப்பாவி விஷ்ணு, பழிவாங்கும் வெறியில் அலையும் ஜீவா என முன்று கேரக்டரில் வெளுத்துள்ளார் அஜீத்.

செய்யாத தப்புக்கு தந்தையிடம் அடி வாங்குவது… பைத்தியக்காரன் என முத்திரைகுத்தி மனநல ஆஸ்பத்திரியில் மின்சார அதிர்ச்சி சிகிச்சைக்குள் மாட்டி அலறுவது… அனுதாபத்தை நிறைய அள்ளகிறார் விஷ்ணு அஜீத். தந்தை சிவனாக வரும் கேரக்டரில் உச்சத்தை தொட்டுள்ளார்.

மகன் தன்னை கொலை செய்ய வந்ததை பார்த்து அதிர்வது… அவனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுப்பதை சகிக்காமல் பதறுவது அபாரம்.

ஜீவா கேரக்டர் தன்னை கொல்ல பாய்வதை பார்த்து ஆவேசமாக சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நின்று கால்களை லாவகமாக சுழற்றி சண்டைக்கு தயாராவது படுபயங்கர திருப்பம்… இருபத்தைந்து வருடமாக கால் ஊனமாக சிவன் நடித்தது ஏன்? அதிலிருந்து பிளாஸ்பேக் விரிகிறது.

இளம் பரத நாட்டிய கலைஞராக சிவன் வரும் காட்சிகள் நச்…நச்…

இடையை குலுக்கி தலையை ஆட்டி, கைகளை பரதக்கலை முத்திரையில் அசைத்து பெண்மைத்தனமாய் நடக்கையில் நடிப்புலகை குலுக்குகிறார்.

மணமேடைக்கு மாப்பிள்ளையாக அன்ன நடையில் வரும் லாவகம்… மணப்பெண் கனிகா ஆண்மையில்லாதவன் என்று தன்னை பழித்ததும் கூட்டத்தினர் மத்தியில் அவமானப்பட்டு கூனி குறுகும் தன்மை… தாய் அதிர்ச்சியில் இறந்ததும் ஆவேசமாக வீட்டுக்குள் போய் பெண்மைக்கான நளினம் ஆண்மை வேகம் கலந்த பாத்திரமாகவே மாறி கற்பழிக்கும் ஆவேசம் என அத்தனையும் அவார்டு பெற்றுத்தருபவை.

ஜீவா பாத்திரத்தில் கொலை வெறியனாக பளிச்.. தந்தை பாத்திரத்தோடு மோதும் கிளைமாக்ஸ் சண்டை அனல்.. பைத்தியகாரத் தாயிடம் காட்டும் பாசம் ஜீவன்.

அஜீத்தின் மூன்று கேரக்டர்களை கச்சிதமாக செதுக்கி விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியுள்ளார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

திவ்யாவாக வரும் அசின் விஷ்ணுவிடம் விலைமாது என ஏமாற்றி பரிதாபப்பட வைப்பது பளிச்…

கனிகா கொஞ்சம் ஆவேசம். கொஞ்சம் அமைதி. ராஜேஷ், சந்தானபாரதி, சுமன்ஷெட்டி, ராஜலட்சுமி, ரமேஷ்கன்னா, பாண்டு, விஜயன், பொன்னம்பலம், மன்சூர் அலிகான், சுஜாதா ஆகியோரும் உள்ளனர்.

இருபத்தைந்து வருடமாக நொண்டியாக நடிக்க அழுத்தமான காரணம் சொன்னாலும் அது சாத்தியமா என்பது போன்ற சில லாஜிக்- தொய்வுகள் இருந்தாலும் அஜீத்தின் வலுவான கேரக்டர்கள் அவற்றை மறக்கடிக்கச்செய்கின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு பலம்.

அஜீத் “வரலாறு” படைத்துள்ளார்…


புதுமையான கதை களம்.

`ஈ’ என்கிற பெயரில், தனது முழுப்பெயர் ஈஸ்வர் என்பதுக் கூட தெரியாமல் ஒட்டுமொத்த திருட்டு தனமும் நிறைந்த குப்பத்து ராஜாவாக சுற்றித் திரிகிறான் ஹீரோ.

காசுக்காக எதையும் செய்யும் `ஈ’க்கு கையாளாக டோனி. சின்ன அளவில் பிக்பாக்கெட், செயின் பறிப்பு வழக்குகளுக்காக உள்ளே போய் வரும் `ஈ’க்கு பெரிய அளவில் கடத்தல், கத்திக்குத்து நடத்தி ஏரியா தாதா ஆக வேண்டும் என்பது ஆசை.

அதற்கான வாய்ப்பு அமையும்போது மும்பையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து ஸ்டார் ஹோட்டல் பார்களில் டான்ஸ் ஆடிப் பிழைக்கும் ஜோதி குறுக்கிடுகிறாள். `ஈ’ மீது காதல் கொள்கிறாள். `ஈ’ யை திருத்த முயற்சிக்கிறாள்.

அந்த ஏரியாவிலேயே பிரபலமான மருத்துவராக இருக்கும் டாக்டர் ராமகிருஷ்ணனின் கையாளாக இருக்கிறான் `ஈ’. அவர் என்ன செய்கிறார் என்பதே தெரியாமல் அவர் சொல்வதை செய்து வருகிறான். ராமகிருஷ்ணன் சட்டத்திற்கு புறப்பாக செய்யும் மருந்து பரிசோதனைக்கு எதிரியாகி அவரை தீர்த்துகட்ட சபதம் பூண்டிருக்கும் நெல்லைமணியை ஒருகட்டத்தில் கடத்தி டாக்டரிடம் பல லட்சங்களை சம்பாதிக்க திட்டம் போடுகிறான் `ஈ’.

திட்டமிட்டபடியே நெல்லை மணியை கடத்தினானா. ஜோதியும் `ஈ’யும் விரும்பியபடி திருமணம் செய்து கொண்டார்களா? டாக்டர் ராமகிருஷ்ணன் சமூக விரோதி என்பதை மக்கள் புரிந்து கொண்டார்களா என பல முடிச்சுகளுக்கு விடை சொல்லும் எதிர்பாராத கிளைமாக்ஸ். வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் படமாக்கியுள்ளார் இயக்குனர் ஜனநாதன்.

`ஈ’ என்கிற ஈஸ்வர் பாத்திரத்தில் ஜீவா வாழ்ந்திருக்கிறார். கறைபடிந்த `பற்கள்’, குளிக்காத முகம், எண்ணையே பார்க்காத பரட்டை தலை என்று ஒரு சேரிப்பையனாக பிரமாதம். மார்வாடிக்கடையில் டூப்ளிகேட் செயினை வைத்துபணம் கேட்பது, புரோக்கர் சிலர் ஜீவாவின் காதலி ஜோதியை விபச்சாரத்திற்கு கூட்டி வரச்சொன்னதும் கூசாமல் போய் அவளை விபச்சாரத்திற்கு அழைப்பது இது மாதிரி பல காட்சிகளில் ஜீவாவின் நடிப்பில் குப்பத்து படிக்காதவர்கள் குறும்பு பழக்க வழக்கங்கள் பிளிச்.

`ஈ’யின் காதலி ஜோதியாகவும், `பார் டான்ஸராகவும் நயன்தாரா பட்டையை கிளப்புகிறார். `ஈ’ யை எடுத்த எடுப்பிலேயே சிக்கலில் மாட்டிவிடும் நயன்தாரா, அந்த காரணத்திற்காகவே அவன் மீது காதல் கொள்வதும், காதலன் தன் பேச்சை மீறி விட்டான் என்று `ஈ’யை பிரிந்து செல்வதும் நெருடல்.

டாக்டர் ராமகிருஷ்ணனாக ஆஷிஸ்வித்யார்த்தியின் வில்லத்தனம் கொடூரம், தனக்கு நெருக்கமான அடியாளாக இருக்கும் `ஈ’ யின் பாட்டியையே தன் மருந்து பரிசோதனைகள் மூலம் பலி கொள்வது படுபயங்கரம். நெல்லை மணியாக வரும் பசுபதி பிரமாதம்.

`ஈ’யின் நண்பராக வரும் கருணாஸ் நடிப்பு உருக்கமாக உள்ளது. அஜய்ரத்னம், அசினா, ஆரியா, சேரன்ராஜ், மாதவி, வானி என்று இன்னும் பலரும் நடித்திருக்கின்றனர். என்.கே. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ஸ்ரீகாந்த்தேவா இசை படத்திற்கு பெரிய பக்க பலம். மிரட்டலான படம் `ஈ’.

தர்மபுரி
விஜயகாந்த் `இமேஜை’ உயர்த்த அவரைச் சுற்றிப் பின்னப்பட்ட அரசியல் நெடி படம்.

மண்பாண்ட தொழில் செய்யும் ஒரு கிராமம். படத்தின் களம். அந்த ஊரையும் மண்ணையும் நேசிப்பவராக விஜயகுமார். ஊர் மக்கள் மண் எடுத்து தொழில் செய்ய தனக்கு சொந்தமான இரு நூறு ஏக்கர் நிலத்தை எழுதி கொடுக்கிறார். ஊர் கோவிலுக்கு மண் குதிரைகள் வாங்கியதில் ஊழல் செய்ததாக அவர் மீது பழி விழ குடும்பத்தோடு ஊரை விட்டு வெளியேறி ராமேஸ்வரத்தில் குடியÚறுகிறார்.

ஊருக்கு அவர் இலவசமாக கொடுத்த நிலத்தை சிவந்தி கருப்பு, பெருச்சாளி கருப்பு என்ற அண்ணன்- தம்பி தாதாக்கள் பறித்துக் கொள்ள ஊரால் தவிக்கின்றனர்.

ராமேஸ்வரத்துக்கு போய் மெய்யப்பன் மகன் சிவராமிடம் நிலத்தை மீட்டுத்தர வேண்டுகின்றனர். சிவராம் கிராமத்துக்கு வந்து ரவுடிகளை வீழ்த்தி நிலத்தை பிடுங்கி ஊராருக்கு கொடுப்பது பின் பகுதி கதை…

மக்களுக்கு நன்மை செய்யும் சிவராம் பாத்திரத்தில் விஜயகாந்த் கச்சிதம். சிறு வயது போட்டோவை கம்ப்ïட்டரில் கொடுத்து அவரை அறிமுகப்படுத்தும் இடம் அமர்க்களம். திருமண வீட்டில் தனது நாற்காலிகளுக்கு வாடகையாக தரும் பணத்தை திருப்பி கொடுப்பது, ரவுடிகள் ஆக்கிரமித்து மதுக்கடையாக்கிய பள்ளியை மீண்டும் திறப்பது, சூதாட்ட விடுதிÖக்கிய பிரசவ ஆஸ்பத்திரியை மீண்டும் திறப்பது என வாக்காளர்களை வசியப்படுத்தும் காட்சிகள் நிறைய….

இவன் தமிழன், தமிழ் நாட்லேதான் இருப்பான். ஏ போலீசு இப்ப இவர் முன்ன நிக்கிறீங்க சீக்கிரம் பின்னால் வரப்போறீங்க. இவர் பின்னால் இந்த காலத்துல இவ்வளவு கூட்டம் கூடுது என்று விஜயகாந்தை தலைவராக சித்தரிக்கும் வசனங்கள். `இவர் கோட்டையிலே கொடு பறக்குமோ வந்துட்டாரு வந்துட்டாரு வாத்தியாரு என்பன போன்ற பாராட்டு பாடல்களும் நிறைய… உன்கிட்ட இருப்பது கூலிப்படை என்கிட்ட இருப்பது மக்கள் படை. கள்ள ஓட்டு, குறுக்கு வழியில் அரசியல் நடத்துறே என்று ரவுடி எம்.எல்.ஏ.வை பார்த்து விஜயகாந்த் கர்ஜிப்பது ஆவேசம்.

வேலைக்காரனை தன் உருவில் மாற்றி அவனுக்கு வேலைக்காரன் வேடத்தில் விஜயகாந்த் கிராமத்தில் நுழையும் உத்தி பளிச்.

விஜயகாந்த் வேலைக்காரனாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் காமெடி ரசனை. மெய்யப்பன் மகன் நான்தான் என்று கிராமத்தில் ஆஜராகி ரவுடிகளிடம் மாட்டி தவிப்பது, விஜயகாந்த் முறைப்பெண்ணை விரும்பி நிச்சயதார்த்தத்தில் தட்டு மாற்றுவது என கல கலப்பூட்டுகிறார்.

மணிவண்ணன், பாபி, ராஜ்கபூர், ஜெயபிரகாஷ் ரெட்டி மூவரும் வில்லத்தனத்தில் மிரட்டல். லட்சுமிராய் அழகாய் ஜொலிக்கிறார். நடனம் பளிச்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் படல்கள் துள்ளல் ரகம். சரவணன் ஒளிப்பதிவு மண்மேடு கிராமத்தை கண்ணில் பதிக்கிறது.

கட்சிகளில் விறுவிறுப்பு காட்டியுள்ளார் இயக்குனர் பேரரசு. கதையில் அழுத்தம் குறைவு.

விஜயகுமார், சுமித்ரா, ராஜேஷ், பீலிசிவம், மனோ பாலா ஆகியோரும் உள்ளனர்.

விஜயகாந்த் புகழ் பாடும் தர்மபுரி.

துள்ளுற வயசு
இளசுகளின் காதல் கதை…

பள்ளியில் ஒன்றாய் படிப்பவர்கள் ராகவ், தீபிகா. நட்பாய் பழகும் அவர்கள் மனதில் காதல்…

இருவருக்கும் காதலை வெளிப்படுத்த தயக்கம். பள்ளி முடியும் நாளில் ஆட்டோ கிராப் எழுத நோட்டை மாற்றும்போது ஒருத்தருக்கு தெரியாமல் ஒருத்தர் கடிதம் எழுதி வைக்கின்றனர்.

கடிதம் தீபிகா அண்ணன் கைக்கு போகிறது. ராகவின் காதல் கடிதத்தை படித்து அவனுக்கு அதிர்ச்சி.

தீபிகாவுக்கு மயக்க ஊசி போட்டு செத்து விட்டதாக ராகவை நம்ப வைத்து பிரிக்கிறான்.

காதலியை இழந்த தூக்கத்தில் ராகவ் பட்டினத்தில் படிக்க வர திருப்பம்.

அதே ஊரில் மருத்துவக்கல்லூரி மாணவியாக தீபிகா…

காதலை பிரிக்க அண்ணன் செய்த சூழ்ச்சி இருவருக்கும் புரிகிறது. ராகவை தீர்த்துக் கட்ட தீபிகா அண்ணன் ரவுடிகளை ஏவுகிறான். தீபிகாவையும் வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறான். இருவரும் சேர்ந்தார்களா? என்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ்.

பள்ளி மாணவனாக அமைதியாக வரும் ராகவ் பிற்பகுதியில் ஜொலிக்கிறார். காதலி செத்து விட்டதாக அழுது புலம்புவது உருக்கம். ரவுடிகளிடம் அடிபட்டு ரத்த சகதியாவது அனுதாபம். காதலியை பார்க்க விடாமல் தடுப்பவர்களுடன் கிளைமாக்ஸ் சண்டை வேகம்…

தீபிகா குருத்தோலை மாதிரி வருகிறார். `மிடி’யில் கைப்பந்து ஆடுவது இளமை நச்…

தீபிகா அண்ணனாக வரும் பிரணவா மிரட்டல்… தங்கையை மயக்கமடைய வைத்து செத்து விட்டதாக ஒப்பாரி வைத்து நடிப்பது, தங்கைக்கு உளவு சொன்ன வேலைக்காரியை தீர்த்து கட்டுவது வில்லத்தனத்தில் கச்சிதம்… ஷர்மிலி, ஆசிரியையாக வந்து கிறங்கடிக்கிறார்.

`டீன் ஏஜ்’களின் இளமைப் படையல் பாதி… காதல் வலி மீதி என தெவிட்டாமல் கொடுத்துள்ளார் இயக்குனர் கோபால்… இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன.

கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் தாளம்.

இளமை துள்ளல்…

Posted in Aashish Vithiyaarthy, Aavani Thingal, Ajeeth, Ajith, Anushka, Aparna, Arjun, Arya, Ashish Vithyarthi, Asin, Bharadhwaj, Bhardvaaj, Bhardwaj, Bhavna, Bhawana, By2, Captain, Clips, Comedy, Dharmapuri, Director, Dwaragi Ragavan, Dwaraki Raghavan, E, ECR, Imaan, Irandu, Iruvar Mattum, Jananathan, Jeeva, Jenanathan, Kanika, Karthk Raja, Karu Palaniappan, Karu Pazhaniyappan, Kizhakku Kadarkarai Saalai, Kollywood, KS Ravikumar, KSR, Maadavan, Madhavan, Manivannan, Mayilsaamy, Mayilsami, Navdeep, Nayanthara, Nenjil, Nepolean, Pasupathy, Raghuvaran, Reema Sen, Rendu, Reviews, Sandhiya, Sandhya, Santhanam, Saran, Sarathkumar, Selva, Silambarasan, Simbu, Sivappathigaram, Sivappathikaram, Srikanth, Sundar C, Tamil Cinema, Tamil Movies, Thala, Thalai Makan, Thalaimagan, Thullara Vayasu, Vaathiyaar, Vaathiyar, Vadivelu, Vallavan, Varalaaru, Vattaaram, Vijay Antony, Vijayakanth, Vijayganth, Vimarsanam, Vishal, YSR, Yuvan Shankar Raja | Leave a Comment »

Diwali Tamil Release Movies – Maalaimalar.com

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2006

Added Later:
திரை விமர்சனம்: வல்லவன்மீனாக்ஸ் | Meenaks

Vallavan – Film Review « விழியன் பக்கம்

The Phoenix Arises: Vallavan: First day, first show

Desicritics.org: Movie Review: Vallavan: Melodrama of the Twisted Kind

ஒரு படம் » Blog Archive » வரலாறு [Godfather]

அண்ணாகண்ணன் வெளி: தலைமகன் – திரை விமர்சனம்

ஏதோ சொல்கிறேன்!!! ( Etho Solkiren!!! )

சும்மா டைம் பாஸ் மச்சி…..: – திரை விமர்சனம்

தீபாவளி விருந்தாக 7 புதிய படங்கள்

தீபாவளி விருந்தாக 7 புதிய படங்கள் திரைக்கு வருகின்றன. அந்த படங்கள் வருமாறு:-

1. தர்மபுரி:- விஜயகாந்த் கதாநாயகனாக நடித்து, பேரரசு டைரக்டு செய்த படம். கதாநாயகி, லட்சுமிராய். இந்த படத்தில் விஜயகாந்த் திருமண மண்டபங்களுக்கு நாற்காலி-மேஜைகளை வாடகைக்கு விடுபவராக வருகிறார். மணிவண்ணன், பிரகாஷ்ரெட்டி (தெலுங்கு), ராஜ்கபூர், பாபி ஆகிய 4 பேரும் வில்லன்களாக வருகிறார்கள்.

கெட்டது பண்ணப்போனால் 40 பேர் கூட வருவார்கள். நல்லது பண்ணப்போகும்போது 4 பேர் எதிரியாக வருவார்கள். அவர்களை மீறி, கதாநாயகன் எப்படி ஜனங்களுக்கு நன்மை செய்கிறார் என்பதே கதை.

2. தலைமகன்:- சரத்குமார் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்த படம். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். தண்ணீர் பிரச்சினைதான் இந்த படத்தின் மைய கரு.

படத்தில், சரத்குமார் பத்திரிகை ஆசிரியராக வருகிறார். நேர்மையாகவும், துணிச்சலாகவும் பத்திரிகை நடத்தும் அவரையும், பத்திரிகையையும் அழிப்பதற்கு ஒரு கும்பல் முயற்சிக்கிறது. அந்த கும்பலின் சதித்திட்டங்களை, சரத்குமார் எப்படி முறியடிக்கிறார்? என்பது கதை.

3. வரலாறு:- அஜீத்குமார் நடித்த `காட்பாதர்’ படம்தான், `வரலாறு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் அஜீத் 3 வேடங்களில் நடித்து இருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்து இருக்கிறார்.

அஜீத், ஒரு பரதநாட்டிய கலைஞர். நடனம் ஆடி ஆடி, அவருடைய தோற்றத்தில் பெண்மைத்தனமும், நளினமும் வந்து விடுகிறது. அவருக்கு, கனிகாவை பெண் கேட்கிறார்கள். “பார்ப்பதற்கு பொம்பளை மாதிரி இருக்கும் இவருக்கு நான் எப்படி மனைவியாகி, குழந்தை பெறுவது?” என்று கனிகா அவமரியாதை செய்து விடுகிறார். அவரை, அஜீத் கடத்திப்போய் கற்பழித்து விடுகிறார். கனிகாவுக்கு பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒருவன் தாதாவாகவும், இன்னொருவன் அந்த தாதாவை எதிர்த்து நிற்கும் நல்லவனாகவும் வளர்கிறார்கள். இப்படி போகிறது, `வரலாறு’ படத்தின் கதை.

4. வல்லவன்:- சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்த படம். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, ரீமாசென், சந்தியா ஆகிய 3 கதாநாயகிகள் நடித்து இருக்கிறார்கள்.

ஒரு கல்லூரி பின்னணியில் அமைந்த கதை. சிலம்பரசன் கல்லூரி மாணவராக வருகிறார். கதைப்படி, ரீமாசென் ஏறக்குறைய வில்லி. `படையப்பா’ படத்தில் ரஜினிகாந்தும், ரம்யாகிருஷ்ணனும் அடிக்கடி மோதிக்கொள்வது போல், இந்த படத்தில் சிலம்பரசனும், ரீமாசென்னும் மோதிக்கொள்கிறார்கள். இந்த மோதலில், யார் ஜெயிக்கிறார்கள்? என்பதே கதை.

5. வாத்தியார்:- அர்ஜ×ன் நடித்த படம். அவருக்கு ஜோடி, புதுமுகம் சுஜா. இந்த படத்தை ஏ.வெங்கடேஷ் டைரக்டு செய்து இருக்கிறார்.

ஒரு மோசமான அரசியல்வாதி தனது சுயநலத்துக்காக, ஒரு பள்ளிக்கூடத்துக்கு தீ வைக்கிறான். அந்த விபத்தில் அப்பாவி மாணவ-மாணவிகள் கருகி பலியாகிறார்கள். இதை நேரில் பார்க்கும் பள்ளிக்கூட ஆசிரியர் அர்ஜ×ன், அந்த அரசியல்வாதியை பழிவாங்குவதற்காக தாதாவாக மாறுகிறார். அந்த அரசியல்வாதி, முதல்-அமைச்சர் ஆவதற்காக கனவு காண்கிறான். அவனுடைய ஒவ்வொரு முயற்சிகளையும் முறியடித்துக் காட்டுகிறார், அர்ஜ×ன்.

6. வட்டாரம்:- ஆர்யா நடித்து, சரண் டைரக்டு செய்த படம். இந்த படத்தில் அர்ஜ×ன் ஜோடியாக புதுமுகங்கள் கீரத் பட்டேல், அதிசயா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள்.

அவன் பெயர், `பர்மா.’ வெளிநாட்டில் இருந்து துப்பாக்கிகளை வரவழைத்து விற்பனை செய்வது இவன் தொழில். இவனுடைய வாழ்க்கையில் மூன்று எதிரிகள் குறுக்கிடுகிறார்கள். அவர்களை, பர்மா எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறான்? என்பது கதை.

7. :- ஜீவா கதாநாயகனாக நடித்த படம். கதாநாயகி, நயன்தாரா. `இயற்கை’ படத்தை இயக்கிய ஜனநாதன் டைரக்டு செய்து இருக்கிறார்.

மாநகராட்சியில், கொசுக்களை ஒழிக்க மருந்து அடிக்கும் அடிமட்ட தொழிலாளி அவன். அப்பாவியான அவன், அரிவாள் தூக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அது ஏன்? என்பதை `சஸ்பென்சாக’ வைத்து இருக்கிறார்கள்.

Posted in Ajith, Arjun, Arya, Deepavali, Dharmapuri, Diwali, E, Godfather, Jeeva, New Films, Sarathkumar, Tamil Movies, Vaathiyaar, Vallavan, Varalaaru, Vattaram, Vijayganth | 27 Comments »

Naarana Duraikannan – Biosketch : 100th Anniversary

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 23, 2006

“உயிரோவியம்’போல் உயர்ந்த மனிதர்

உதயை மு. வீரையன்

ஒருவரே தேசியவாதிகளுக்கும், திராவிட இயக்கத்தவர்க்கும் தோழமையாக இருக்க முடியுமா? சிறந்த பத்திரிகையாளரே ஒரு சமுதாய சீர்திருத்தவாதியாகவும் திகழ முடியுமா? நல்ல நாவலாசிரியரே நல்ல நாடக ஆசிரியராக விளங்க முடியுமா?

“முடியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவரே நாரண. துரைக்கண்ணன். இவரது புனைபெயர் “ஜீவா’.

இவரது காலம் சுதந்திரப் போராட்டக் காலம்; தேசபக்தர் பரலி சு. நெல்லையப்பர் மூலம் “லோகோபகாரி‘ வாரப் பத்திரிகையில் உதவி ஆசிரியராக அறிமுகம். அந்தக்காலத்தில் பத்திரிகைகளுக்கும் அற்ப ஆயுள்தானே! அதன்பின் தேசபந்து, திராவிடன், தமிழ்நாடு எனத் தொடர்ந்தது. இறுதியாக 1932 ஆம் ஆண்டு “பிரசண்ட விகடன்‘ ஆசிரியர் பொறுப்பினை ஏற்றார். 1934-ல் “ஆனந்த போதினி‘யின் ஆசிரியர் பொறுப்பும் வந்தது.

இவர் பத்திரிகையாளராக மட்டும் இருந்துவிடாமல் மிகச் சிறந்த படைப்பாளராகவும் இருந்தார். ஆரம்ப காலத்தில் தமிழ்ப் பத்திரிகை உலகில் நாவலுக்கென ஓர் இடம் பெற்றுத் தந்தவர்கள் கல்கியும், நாரண. துரைக்கண்ணனுமே! ஆனந்த விகடன் மூலம் கல்கியும், பிரசண்ட விகடன் மூலம் “ஜீவா‘ என்ற புனைபெயரில் நாரண. துரைக்கண்ணனும் தமிழ் எழுத்துலகில் புதிய மாற்றத்தினை உருவாக்கினர்.

இவர் எழுதிய “உயிரோவியம்’, “நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?’, “தாசி ரமணி’ முதலிய பெண்ணுரிமை பற்றிய புதினங்கள் படித்தவரைச் சிந்திக்கத் தூண்டின. “தீண்டாதார் யார்?’ என்னும் சமுதாயப் புரட்சி நாடகமும், “காதலனா? காதகனா?’ என்னும் மாணவர் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டும் நாவலும், “இலட்சிய புருடன்’ என்னும் அரசியல் புதினமும், வேலைக்காரி, நடுத்தெரு நாராயணன் முதலிய சமூக சீர்திருத்தக் கதைகளும் என இவர் எழுதிய நூல்கள் 130-க்கும் மேல். இந்தப் பட்டியலில் இவரது கவிதைகளும், கட்டுரைகளும், ஆராய்ச்சிகளும், மொழியாக்கங்களும் அடங்கும்.

டி .கே.எஸ். சகோதரர்கள் நடத்திய நாரண. துரைக்கண்ணனின் “உயிரோவியம்’ நாடகத்தைப் பார்த்துவிட்டு, “”காதலைப் பற்றி மிகத் தூய்மையாகவும், மேன்மையாகவும், புனிதமாகவும் சித்திரித்துள்ள நாடகம்…” என்று பாராட்டி தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் எழுதி அனுப்பிய கட்டுரையே “உயிரோவியம்’ நாடக நூலில் முன்னுரையாக அச்சிடப்பட்டது.

இவர் எழுத்தாளர் மட்டுமல்ல, எழுத்தாளர்களின் உரிமைக்கும் போராடியவர். பாரதியார் பாடல்களுக்குத் தனியொருவர் உரிமை கொண்டாடுவது சரியல்ல, அவை நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று உரிமைக்குரல் எழுந்தது. அதற்காக “பாரதி விடுதலைக் கழகம்‘ அமைக்கப்பட்டது. அதன் தலைவர் நாரண. துரைக்கண்ணன் – செயலாளர்கள் “சிவாஜி’ ஆசிரியர் திருலோக சீதாராம் மற்றும் வல்லிக்கண்ணன்.

அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார். அவரது உதவியை நாடியபோது, பாரதியார் மனைவியான செல்லம்மாள் பாரதியிடமிருந்து ஓர் இசைவுக் கடிதம் வாங்கி வந்தால் ஆவன செய்வதாகக் கூறிவிட்டார்.

செல்லம்மாள் பாரதியும் ஒப்புதல் கடிதம் தந்தார். பின்னர் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முயற்சியால், ஏ.வி.எம். செட்டியார் மனமுவந்து பாரதி பாடல்கள் மீதிருந்த உரிமையை விட்டுக் கொடுத்தார். பாரதியார் பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

செல்லம்மாள் பாரதியைச் சந்திக்கும் நெல்லைப் பயணத்தின்போது நாரண. துரைக்கண்ணனின் மகன் நோய்வாய்ப்பட்டிருந்தவர் இறந்து போனார். அந்தச் சோகத்தையும், இழப்பையும் சுமந்து கொண்டு, வெளியில் காட்டாமல் கருமமே கண்ணாக இருந்தார் என்பது அவரது தன்னலமற்ற தொண்டுகளுக்குச் சிகரமாகும்.

சென்னை மயிலாப்பூரில் 1906 ஆகஸ்ட் 24 அன்று இவர் பிறந்தார். தந்தையார் நாராயணசாமி; தாயார் மீனாம்பாள். இவரது இளமைக்கல்வி திண்ணைப் பள்ளியிலும், திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும்!

பட்டம் பதவிகளுக்கு அப்பாற்பட்டவராகவே வாழ்ந்தார். தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், சென்னை கம்பர் கழகச் செயலாளராகவும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், தென்னிந்திய பத்திரிகையாளர் பெருமன்றத்தின் துணைத் தலைவராகவும், தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவராகவும் பணியாற்றியதும்கூட தவிர்க்க முடியாத தேவையின் காரணமாகவே.

1952-இல் உலக மொழிகளில் நடத்தப்பட்ட நாடகங்களில் தலைசிறந்ததெனப் பிரெஞ்சு நாட்டு ஏடொன்று இவரது “உயிரோவிய’த்தைத் தேர்வு செய்து பாராட்டியது.

மனிதனுக்கு உயிர்; மனித சமுதாயத்துக்கு உயிரோவியம். இவர் படைத்த “உயிரோவியம்’போல் இவரும் உயர்ந்த மனிதரே!

(இன்று நாரண. துரைக்கண்ணன் நூற்றாண்டு தினம்).

Posted in Anandha Vikatan, Anniversary, Biosketch, Jeeva, Journals, Magazines, Memoirs, Naarana Duraikannan, Prasanda Vikadan, Tamil, Vikadan | Leave a Comment »

Jeeva – Lifesketch

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 21, 2006

ஜீவா எனும் குறிஞ்சிப்பூ

இரா. நாறும்பூநாதன்

“”ஜீவா உங்களுக்கு என்ன சொத்து இருக்கும்?” காரைக்குடி வந்த தேசப்பிதா காந்திஜி, ராஜாஜியை அழைத்துக்கொண்டு, சிராவயலில் இருந்து காந்தி ஆசிரமத்தை நடத்திக் கொண்டிருந்த 20 வயது இளைஞன் ஜீவாவைப் பார்க்கச் சென்றபோது கேட்ட கேள்வி இது.

“”சொத்தா.. அது கோடிக்கணக்கில் உள்ளது…” என்று சிரித்தார் ஜீவா.

“”புரியும்படி சொல்லுங்கள்…” என்றார் காந்திஜி.

“”இந்தியாதான் எனது சொத்து” என்று கூறினார் ஜீவா. “”இல்லை ஜீவா! நீங்கள்தான் இந்தியாவின் சொத்து…” நெஞ்சாரப் பாராட்டினார் காந்திஜி.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்படும்போது, செய்தித்தாள்களைப் படிக்கும் இளைஞர்கள் ஆவேசப்படுகிறார்கள். சாதாரணப் பொதுமக்கள் பொருமுகிறார்கள். “அரசியலே சாக்கடை’ என்று வியாக்யானம் செய்கிறார்கள். “இந்தியாவின் சொத்து’ என்று காந்தியடிகளால் புகழப்பட்ட ஜீவாவும் இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர்தான்!

சென்னை வீதியில் கையில் ஒரு துணிப்பையுடன் வேகவேகமாய் நடந்து செல்லும் ஜீவாவைப் பார்த்து எதிரே வந்த நண்பர் கேட்டார், “”தோழர் ஜீவா! ஏன் நடந்து செல்கிறீர்கள்?”

“”பஸ்ஸில் செல்வதற்கு காசில்லை. அதான் நடந்து செல்கிறேன்” என்றார் ஜீவா.

நண்பர் விடவில்லை. “”கையிலே என்ன வைத்திருக்கிறீர்கள்?”

“”அதுவா? தோழர்கள் கொடுத்த கட்சி நிதி. கட்சி அலுவலகத்திற்குத்தான் கொண்டு போகிறேன்” என்றார் ஜீவா.

“”பஸ்ஸிற்குத் தேவையான காசை அதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே?” என்றார் நண்பர்.

“”கட்சி நிதி என்று தோழர்கள் தந்த பணமுடிப்பிலிருந்து ஒரு சல்லிக்காசு எடுத்தால்கூட அது பெரிய குற்றம். அந்தக் கணக்கை அப்படியே கட்சி அலுவலகத்தில் ஒப்படைப்பதுதானே சரி” நடந்தபடியே கூறினார் ஜீவா.

உதிரம் சிந்தித் தந்த தொழிலாளர்களின் நிதியை, சொந்த உபயோகத்திற்காக சல்லிக்காசு எடுக்கத் துணியாத ஜீவானந்தம் போன்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய பெருமை தமிழகத்திற்கு உண்டு.

கம்பராமாயணத்திலிருந்தும், திருக்குறளிலிருந்தும் மேற்கோள்காட்டி அற்புதமாய் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர் தோழர் ஜீவா. 1952 சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களைக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றபோது, வடசென்னை வேட்பாளராக வெற்றி பெற்ற ஜீவா, சட்டமன்றத்தில் பேச ஆரம்பித்தால் வெளியே நிற்கும் உறுப்பினர்களும் உள்ளே வேகவேகமாய் வந்து அமர்வார்களாம். “”பயிற்று மொழி தமிழாய் இருக்க வேண்டும்” என்று அப்போதே சட்டமன்றத்தில் முழங்கினார். 1956-லேயே சென்னை மாகாண அரசு தமிழை ஆட்சிமொழியெனப் பிரகடனம் செய்தது. எல்லாம் ஏட்டிலேயே இருக்கிறது என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

மாநில முதல் அமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்குமான உறவு அன்று எப்படிப்பட்டதாக இருந்தது?

ஜீவாவின் வீட்டருகே உள்ள பள்ளி ஆண்டு விழாவிற்கு முதல்வர் காமராஜரும், அன்றைய செங்கல்பட்டு மாவட்டக் கலெக்டர் திரவியமும் போகும்போது ஜீவாவையும் அழைத்துச் செல்ல எண்ணி அவரது குடிசை வீட்டிற்கு காரில் சென்றனர்.

“”ஜீவா! அருகில் உள்ள பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகிறீர்களா?” என்றபடியே உள்ளே நுழைந்தார் காமராஜர்.

“”நான் வர வேண்டுமென்றால், கால் மணி நேரம் நீங்கள் காத்துக் கிடக்க வேண்டும்” என்று உள்ளிருந்து குரல் கேட்டது.

உள்ளே ஜீவா, ஈர வேட்டியை உலர்த்தியபடி நின்று கொண்டிருந்தார். மாற்று வேட்டி கூட இல்லாமல், துவைத்த கதர் ஆடை காயும் வரை இடுப்பில் துண்டு கட்டிய நிலையில் நின்ற ஜீவாவைப் பார்த்து காமராஜர் திகைத்துப் போனார்.

“”ஜீவா! எவ்வளவு நாளைக்கு இதே குடிசையில் இருப்பது?” என்று கேட்டார்.

பளிச்சென்று பதில் கூறினார் ஜீவா. “”மக்களெல்லாம் மாடி வீட்டில் வாழ்கின்றபோது நானும் மாடி வீட்டில் வாழ்வேன்”.

கோடிக்கணக்கில் தன் பெயரிலும், குடும்பத்தாரின் பெயரிலும் ஏனைய பினாமிகள் பெயர்களிலும் சொத்து சேர்க்கும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே? ஜீவா எங்கே?

காந்திஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் இயக்கத்திலும், பின்னர் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும், இறுதியில் பொதுவுடைமை இயக்கமே மனித குல விடுதலைக்கு மாற்று என பொதுவுடைமை இயக்கத்திற்கு வந்தபோதும், இறுதிவரை கதராடையையே உடுத்தி வந்தார். அவரது அன்னையார் இறந்தபோது ஈமக்கிரியை சடங்கிற்காக கதராடை கொடுக்காமல் மில் துணியைக் கொடுத்ததால், தாய்க்கு கொள்ளி வைக்க மறுத்து விட்டார் ஜீவா.

1946-ல் அவரது தலைமறைவு வாழ்க்கையின்போது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர். ராதா, டி .கே. பகவதி மற்றும் குத்தூசி குருசாமி போன்றோர் அவருக்கு உதவி செய்தனர்.

தமிழகத்தின் பொதுவுடைமை இயக்க முன்னோடிகளில் ஒருவரான சிங்காரவேலரின் தொடர்பு கிட்டியபோது, பகத்சிங்கின் “”நான் ஏன் நாத்திகனானேன்?” என்ற நூலை மொழிபெயர்த்து வெளியிட்டதற்காக காரைக்குடியில் போலீஸôர் அவரது காலில் விலங்கிட்டு அழைத்துச் சென்று காவலில் வைத்தனர்.

குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்ற சிற்றூரில் பிறந்த சொரிமுத்துப்பிள்ளை என்ற மூக்காண்டி, ஜீவானந்தமாகப் பரிணமித்து, தமிழக அரசியலுக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுக்கும் வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவரது நூற்றாணடு தொடங்கும் இந்நாளில் அவரது எளிய வாழ்க்கை, சோர்வுற்ற இளைஞர் களுக்கு நம்பிக்கையளிக்கட்டும்!

————————————————————————————————————————————————

ஜீவாவின் வாழ்வும் வழியும்

ஆர். நல்லகண்ணு

2007 ஆகஸ்ட் 21. பொதுவுடைமை இயக்கத் தலைவர் ப. ஜீவானந்தம் நூற்றாண்டு நிறைவு நாள்.

ஓராண்டாக ஜீவா எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வந்துள்ளது; விடுதலைப் போராட்டமே அவருடைய முதல் மூச்சாக வெளிப்பட்டது. தன்னைப் பெற்ற தாயின் இறுதிச் சடங்கு முடிந்து வீடு திரும்பிய வேளையில் உறவு முறையினர் கொடுத்த புதுத் துணியும் கதராகத்தானிருக்க வேண்டுமென்று பிடிவாதம் செய்தவர்.

அவர் பிறந்த “பூதப்பாண்டி’யில் கட்டுப்பாட்டை மீறி, தலித் சிறுவர்களை மேல் ஜாதிக்காரர் தெருக்களில் அழைத்துச் சென்றதற்காகக் கல்லெறியும் அடியும் மிதியும் பட்டவர்.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும், இவருடைய செயலுக்கு அச்சிற்றூர் இடம் கொடுக்காததைக் கண்டு ஊரைவிட்டு வெளியேறினார்; செட்டிநாட்டுக்குச் சென்றார்; “சிராவயல்’ என்ற ஊரில் “ஆசிரமம்’ நடத்தினார். எல்லா ஜாதி சிறுவர்களுக்கும் படிப்பு சொல்லிக் கொடுத்தார்.

ஜீவாவின் “ஜாதி மறுப்புக் கொள்கையும்’ “தலித்’ மக்களின் மீதுள்ள பற்றையும் கடிதங்கள் மூலம் தொடர்புகொண்ட மகாத்மா காந்தி தமிழகம் வந்தபோது ஜீவானந்தம் என்ற இளைஞனைப் பார்க்க விரும்பினார்; காரைக்குடியின் காங்கிரஸ்காரர்களிடம் தெரிவித்தார்; “சிராவயலில் இருக்கிறார்; அவரை அழைத்து வருகிறோம்’ என்று சொன்னதும் மகாத்மா காந்தி மறுத்துவிட்டார்; அந்த இளைஞனைத் தாமே போய்ப் பார்க்க வேண்டுமென்று சொன்னதும், காந்தியை சிராவயலுக்கு அழைத்துச் சென்றார்கள். ஜீவாவைச் சந்தித்து உரையாடினார்; ஆசிரமம் நடத்த உமக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா? என்று மகாத்மா கேட்டதும் ஜீவா “”இந்த நாடு தான் என் சொத்து” என்றாராம்.

மகாத்மா பெருமகிழ்ச்சியடைந்தார்; “ஜீவா’ நீதான் இந்த நாட்டின் மதிப்புமிக்க சொத்து’ என்று தட்டிக்கொடுத்துப் பாராட்டினார்; இந்நிகழ்ச்சி 1930-ல் நடந்தது.

பெரியார் நடத்திய வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்திலும் சிறுவனாகவே ஜீவா கலந்துகொண்டார். சேரன்மாதேவி பரத்வாஜ் ஆசிரமத்தில் ஜாதி வேற்றுமையை எதிர்த்து நடந்த சம்பவத்திலும் பங்கேற்றார்.

சுதந்திரம், ஜாதி மறுப்பு, தீண்டாமை ஒழிப்பும் அவர் உள்ளத்தில் ஊற்றெடுத்துக் கிளம்பிய உயிர்மூச்சாகும். பெரியாருடன் சேர்ந்து பகுத்தறிவு, சுயமரியாதை இயக்கத்திலும் ஈடுபட்டார்.

தன்னுடைய சுதந்திர வேட்கையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் தனக்குச் சரியான புரிதலைத் தேடி அலைந்தார்.

தமிழ் இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்கள், கம்பராமாயணம் மற்றும் பக்தி இலக்கியங்கள் போன்ற அனைத்து தமிழ் இலக்கியங்களையும் படித்து உள்வாங்கிக் கொண்டார்.

அரசியலில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முறியடிப்பது முதல் கடமை; ஏகாதிபத்திய அரணை உடைத்துவிட்டால், மானிட சக்தி விலங்கொடித்து, வீறுகொண்டெழுந்துவிடும் என்று உணர்ந்தார்.

இரண்டாவது உலகப்போரில் சோவியத் எழுச்சி உலக இளைஞர்களுக்கு வழிகாட்டியது; ஜீவாவை ஒத்த வயதுடைய இளைஞன் மாவீரன் பகத்சிங். நவயுக சோஷலிஸ்ட் சமிதியை அமைத்தார்.

லாகூர் சதி வழக்கில் சிறை வைக்கப்பட்டபோது “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற நூலை எழுதினார். அதை ஜீவா தமிழாக்கம் செய்து வெளியிட்டார். அந்நூலில் “பிரிட்டிஷ் ஷார் நம்மை ஆள்வது ஆண்டவன் அருளால் அல்ல; நம்மிடையே உள்ள பிளவைப் பயன்படுத்தி பிரித்தாலும் சூழ்ச்சியால் இரு நூற்றாண்டுகளாக ஆண்டு வருகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பகத்சிங்கின் அந்த ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்ததால் ஜீவாவுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது; “குடியரசு’ப் பதிப்பாசிரியருக்கு அபராதமும், தண்டனையும் வழங்கப்பட்டன.

பகத்சிங்கின் வழக்கில் தண்டிக்கப்பட்டு பட்டுகேசுவர தத் மற்றும் சிலர் சென்னை சிறையில் இருந்தார்கள்; அவர்களோடு ஜீவாவும் சிறையிலிருந்தார்; தத் மூலம் கிடைத்த மார்க்சிய நூல்களை ஜீவா கற்றுத் தேர்ந்தார்; ஜீவா சிறந்த மார்க்சிய அறிஞராக வெளியே வந்தார்.

1937-ல் சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனசக்தி வார இதழ் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியராக ஜீவானந்தம் பொறுப்பேற்றார். அன்றிலிருந்து 1963 ஜனவரி 18-ல் ஜீவா மறையும் வரை அவரே ஆசிரியராகச் செயல்பட்டு வந்தார்; அவர் தொடங்கிய அதே ஜனசக்திதான் 70-வது ஆண்டில் தின இதழாக இப்போது நடத்தப்பட்டு வருகிறது.

ஜீவா முற்போக்கு இயக்கத்தில் பன்முகப் போராளியாகத் திகழ்ந்து வந்தார்.

இலக்கியத்தில் கலை, கலைக்காகவே என்ற கருத்து நிலவி வந்த காலம்; ரசனைக்காகவே கலை பயன்பட வேண்டுமென்று கருத்து வலுவாக இருந்த காலத்தில் “கலையும் இலக்கியமும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் இயக்கங்களில் நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும்’ என்று வாதிட்டு நிலைநிறுத்தினார்.

கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் என்று பாரதி பாடியதை ஆதாரமாகக் கொண்டார். மானுடத்தின் மேன்மைகளை விளக்கினார். வள்ளலாரின் “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ என்பதையும், இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகு இயற்றியான் என்ற திருக்குறளையும் “அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்’ என்ற சிலப்பதிகாரத்தின் அடிகளையும் தனது பொதுவுடைமைக் கருத்துகளுக்கு ஆதரவாக மக்களிடம் பரப்பி வந்தார்.

பாரதியின் பெருமையைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பினார்; “பாரதியைச் சிலர் இழிவுபடுத்திய காலத்தில் பாரதியை “மகாகவி’ என்று உலகறியச் செய்த பெருமை, ஜீவா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், வ.ரா., திரு.வி.க., வெ. சாமிநாதசர்மா ஆகியோருக்கு உண்டு. தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்ததில் ஜீவா, பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ் மூவரும் மூலவர்களாக விளங்கினார்கள்.

ஜீவாவின் பாடல்களுக்கு முன்னுரை எழுதிய சாமிநாத சர்மா “ஜீவா சிறந்த கவிஞர் மட்டுமல்ல, கர்மயோகி’ என்று பாராட்டினார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், “துன்பச் சுமைதாங்கும் அன்புத் தோழன் ஜீவானந்தம்’ என்று தனது இரங்கற்பாவில் குறிப்பிட்டார்.

முற்போக்கான அரசியல்வாதி, ஜாதிமறுப்பு, பகுத்தறிவு சிந்தனையாளர், மார்க்சிய அறிஞர், தொழிலாளர், விவசாயிகள் போராட்டங்களில் களம் கண்டவர்; இலக்கிய வழிகாட்டி ஜீவா, தாம் வாழ்ந்த காலத்தில் எல்லாத் தளங்களிலும் தடம் பதித்தவர்; ஜீவாவின் வாழ்வும் வழியும் புதிய தலைமுறைக்கு ஒளிவீசும் கலங்கரை விளக்காகும்.

(கட்டுரையாளர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்).

Posted in Bio, Biography, Independence, India, Jeeva, Jeevanandham, Jeevanantham, Kumari, Lifesketch, Old, Politics, Tamil, Tamil Nadu, TN | 1 Comment »