Shankar, Rajni & AVM’s Sivaji release details in Puthuseri & Karnataka
Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007
சினிமா டிக்கெட் வெளியிட்ட புதுவை முதல்வர்
ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தின் டிக்கெட்டை புதன்கிழமை வெளியிடுகிறார் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி (வலது). உடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.
புதுச்சேரி, ஜூன் 14: புதுச்சேரியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து தனித்தனியாக ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான சிவாஜி பட டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இந்த இரு கோஷ்டியினரின் டிக்கெட்டுகளையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் பிரபலமான நடிகர்களின் படங்கள் திரையிடப்படும்போதும் ரசிகர் மன்றக் காட்சியின்போதும் பல்வேறு விதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
இதனை அடுத்து புதுச்சேரி திரையரங்குகளில் ரசிகர் மன்றக் காட்சிகளைத் தடை செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்தது.
ஆனால் பெரும் வரவேற்புடன் வரும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் புதுச்சேரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று திரையரங்குகளில் சிவாஜி படம் வெளியாவதால் ஆங்காங்கே கட்-அவுட்கள், பேனர்கள் என்று வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் புதுச்சேரியில் புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு கோஷ்டியாகவும், புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றனர்.
நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கூறுகின்றனர். நாங்கள்தான் முறையாகத் தலைமையின் உத்தரவுப்படி செயல்படும் அமைப்பு என்று புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சிவாஜி படம் திரையிடப்படும் மூன்று திரையரங்குகளிலும் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ரஜினிசங்கர் உள்ளிட்டோர் வந்து ஒரு திரையரங்குக்கான ரசிகர் மன்றக் காட்சிக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனை புதுவை முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டு தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து புதுவை மாநில அனைத்து ரஜினிகாந்த் மன்றங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஞானேவேல், கோபி, காமராஜ் உள்ளிட்டோர் மற்றொரு குழுவாக வந்து மற்ற இரு திரையரங்குகளின் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமியே வெளியிட்டு தொடங்கி வைத்தார்.
இரு தரப்பினரும் ரஜினிகாந்த் திரைடப்படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகள் நடத்திக்கொள்ள அனுமதி அளித்ததற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ரங்கசாமிக்கு மாலை அணிவித்தனர்.
ரஜினிகாந்த் ரசிகர்கர்கள் திரையரங்கில் சேர்களை உடைத்தல், திரைகளை கிழித்தல், குறிப்பிட்ட காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்ப திரையரங்கு ஊழியர்களை வற்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று ரசிகர் மன்றங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் ரசிகர் மன்றக் காட்சி டிக்கெட்டுகளின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளன.
——————————————————————————
சிவாஜி திரைப்படத்தை கர்நாடகத்தில் நான்கு தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம்: கன்னட சங்கத் தலைவர் அறிவிப்பு
பெங்களூர், ஜூன் 14: நடிகர் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தை கர்நாடகத்தில் 4 தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட ரக்ஷணா வேதிகே அறிவித்துள்ளது.
ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ~ ஷ்ரேயா நடித்த “சிவாஜி’ தமிழ் திரைப்படம் வெள்ளிக்கிழமை முதல் உலகம் முதல் திரையிடப்படுகிறது.
சங்கர் இயக்கத்தில் இப்படம் பல கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருப்பதால் இப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரி நீர்ப் பிரச்சினை காரணமாக கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதை கன்னட சங்கங்கள் சில மாதங்களாக தடுத்து வந்தன.
இதையும் மீறி தமிழ் படம் திரையிட்ட திரையரங்குகள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
அண்மையில்தான் தமிழ்ப்படங்கள் கர்நாடகத்தில் மீண்டும் திரையிடப்பட்டு வருகிறது.
இந் நிலையில் சிவாஜி படத்தை திரையிட கர்நாடகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் போன்ற பெரிய நடிகர்கள் படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது பெங்களூரில் 10-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இவர்களது படங்கள் திரையிடப்படும்.
ஆனால் சிவாஜி படத்தை கர்நாடகம் முழுவதும் நான்கு தியேட்டர்களிலேயே திரையிட வேண்டும் என்று கன்னட ரக்ஷணா வேதிகே கூறி வருகிறது.
இதுகுறித்து ரக்ஷணா வேதிகேயின் தலைவர் நாராயண கெüடா கூறியதாவது:
பிறமொழிப்படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது சில கட்டுப்பாடுகளை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை விதித்துள்ளது.
இதன்படி கர்நாடகத்தில் திரையிடப்படும் கன்னடம் அல்லாத பிற மொழிப்படங்களை நான்கு தியேட்டர்களில் மட்டுமே திரையிட வேண்டும்.
மேலும் சுவரொட்டிகள் கன்னடத்தில் மட்டுமே அச்சிடப்பட்டு ஒட்டப்பட வேண்டும். இதுபோல் பிற விளம்பரங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் கன்னடத்திலேயே வெளியிடப்பட வேண்டும்.
இந்த நிபந்தனைகள்படி ரஜினிகாந்த் படத்தை திரையிட நாங்கள் எதிர்க்கவில்லை.
இதை மீறி பல தியேட்டர்களில் திரையிட்டால் அந்த தியேட்டர்களில் படச்சுருளை கன்னட ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் பறிமுதல் செய்வர்.
இயக்குநர் சங்கரின் 23-வது புலிகேசி திரைப்படம் கர்நாடகத்தைச் சேர்ந்த புலிகேசி மன்னனை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டிருந்தது.
இதனால் இப்படத்தை கர்நாடகத்தில் திரையிட நாங்கள் அனுமதிக்கவில்லை.
அதுபோல் சிவாஜி திரைப்படத்திலும் ஏதாவது ஆட்சேபகரமான காட்சிகள் இருந்தால் அதற்கு எங்களது எதிர்ப்புகளைத் தெரிவிப்போம்.
இதற்காக ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் டிக்கெட் எடுத்து தியேட்டருக்குச் சென்று கண்காணிப்பார்கள் என்றார் அவர்.
13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை: இதற்கிடையே சிவாஜி படத்தை பெங்களூரில் 13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 13 தியேட்டர்களிலும் வியாழக்கிழமை முன்பதிவு செய்யப்படுகிறது.
bsubra said
சென்னையில் 21 தியேட்டர்களில் சிறப்பு காட்சி: இன்று இரவே சிவாஜி படம்- ரசிகர்கள் திரள்கிறார்கள்
சென்னை, ஜுன். 14-
ரஜினியின் “சிவாஜி” படம் பலத்த எதிர் பார்ப்பை கிளப்பியுள்ளது . உலகம் முழுவதும் நாளை இப்படம் ரிலீசாகிறது. திரையுலக வர லாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது.
சென்னை தியேட்டர்களில் “சிவாஜி” சிறப்பு காட்சிகள் இன்று இரவே திரையி டப்படுகின்றன. சென்னை மற்றும் சென்னை புறநகர்பகு திகளில் மொத்தம் 24 தியேட் டர்களில் சிவாஜி ரிலீஸ் ஆகிறது. நகரப் பகுதியில் உள்ள 21 தியேட்டர்களில் இரவு 9மணிக்கு சிறப்பு காட்சிகள் நடக்கின்றன. ரஜினி ரசிகர்களுக்காக இக் காட்சி கள் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு திரள்கிறார்கள். சிவாஜியில் ரஜினி மொட்டை கெட்டப்பில் தோன்றுகிறார். அந்த படம் பத்திரிகைகளில் வெளியானது. அதே கெட் டப்பில் ரசிகர்கள் பலர் மொட்டையடித்துக்கொண்டு தியேட்டர்களுக்கு வருகி றார்கள்.
நாளை காலை முதல் வழக்கமான காட்சிகள் தொடங்கும்.
எல்லா தியேட்டர்களிலும் 10நாட்கள் வரை டிக்கெட் டுகள் விற்று தீர்ந்தன. 17 தியேட்டர்களிலும் கடந்த 10ந்தேதி முன்பதிவு தொடங் கியது. ஒரே நாளில் ரூ.1 கோடியே 70 லட்சத்துக்கு டிக்கெட் விற் பனையாகி இருக்கிறது. இது தமிழ் திரையுலகம் கண்டிராத சாதனை என்று சென்னை நகர”சிவாஜி” விநியோக உரிமை பெற்றுள்ள அபிராமி ராமநாதன் கூறினார். இதுவரை விற்கப்பட்ட படங்களை விட இப் படத்துக்கு 4மடங்கு அதிகம் விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அபிராமி, சத்யம், மெலடி, பாரத், மகாராணி, ஆகிய தியேட்டர்களில் டிஜிëட்டல் முறையில் சிவாஜி படம் காண்பிக்கப்படுகிறது. அதில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் ரசிகர்கள் ஏமா றக்கூடாது என்பதற்காக இந்த 5 தியேட்டர்களிலும் ஒரு பிரிண்ட் தயாராக வைக்
கப்பட்டுள்ளது.சென்னையில் ஓட்டுரிமை உள்ளவர்கள் 60 லட்சம் பேர் சிறுவர் சிறுமிகளையும் சேர்த்து படம் பார்ப்பவர்கள் ஒரு கோடி பேர் இவர்களில் 30 லட்சம் பேர் படம் பார்த்தால் போதும் லாபம்தான் என்றார். அபிராமி ஒரு காட்சிக்கு 15 ஆயிரம் வீதம் 4காட்சிகளுக்கு ஒரு நாளில் 60ஆயிரம் பேர் பார்ப்பார்களாம்.
சென்னை நகரெங்கும் ரஜினியின் டிஜிட்டல் பேனர்கள் பளிச்சிடுகின்றன. தியேட்டர் வாயில்களில் ரஜினி கட்- அவுட்களை ரசிகர்கள் நிறுவியுள்ளார்கள். கொடி தோரணங்களும் கட்டப்பட்டு உள்ளன.
ஜப்பான் ரசிகர்கள் பலர் சிவாஜி படம் பார்க்க சென்னை வந்துள்ளனர். நட்சத்திர ஓட்டல்களில் அவர்கள் தங்கி இருக்கிறார்கள்.
bsubra said
மதுரையில் இரு தியேட்டர்களில் சிவாஜி படம் திரையிடத் தடை
மதுரை, ஜூன் 15: ரஜினி நடித்த சிவாஜி திரைப்படத்தை மதுரையில் இரு தியேட்டர்களில் திரையிட மதுரை நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.
மதுரை தங்கம் பரமேஸ்வரி உரிமையாளர் ரமேஷ் சார்பில், மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சிவாஜி படத்தை வெளியிட முருகன் சினி ஆர்ட்ஸ் செல்வத்திடம் ரூ. 50 லட்சம் கொடுத்து பட உரிமையை எடுத்துள்ளதாகவும், அதன்படி 4.6.07-ல் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தத்தில், தங்கம் பரமேஸ்வரி தியேட்டருக்கு அருகே உள்ள
* மாப்பிள்ளை விநாயகர்,
* குரு,
* சோலமலை,
* சக்தி-சிவம்,
* அண்ணாமலை
ஆகியவற்றில் படத்தை திரையிடக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் குரு, சக்திசிவம் காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் படத்தை வெளியிடப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எனவே இது ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதில் எதிர்தரப்பாக ஏ.வி.எம். நிறுவனம், செந்தில் ஆண்டவர் பிலிம்ஸ், மதுரை முருகன் சினிஆர்ட்ஸ் செல்வம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மனுவை விசாரித்த நீதிபதி, குரு, சக்திசிவம் ஆகிய தியேட்டர்களில் படத்தை வெளியிடத் தடை விதித்து விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.