Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

J Jayalalitha’s power abuse over judiciary during her executive rule

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007

தனது அரசை கண்டித்ததால் நீதிபதி வீட்டுக்கு தண்ணீர் வினியோகத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா: கருணாநிதி அறிக்கை

சென்னை, பிப்.7-

தன்னுடைய அரசை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்கு தண்ணீர் வினியோகத்தை நிறுத்தியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளயிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நீதித் துறையை கேவலப்படுத்தி விட்டதாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு நீண்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளார். இவர் ஆட்சி நடத்திய காலத்தில் நீதித்துறையும் அரசு நிர்வாகமும் ஒற்றுமையாக நடந்து கொண்டதைப் போலவும், நீதிபதிகளையும், நீதித்துறையையும் இவர் போற்றிப் பாராட்டி வந்ததை போலவும் தற்போது அறிக்கை விடும் ஜெயலலிதா, அப்போது நீதிமன்றங்களை எந்த அளவுக்கு இழிவாக மதித்து நடந்தார் என்பதற்கு பல உதாரணங்களை நாம் கூறிட முடியும்.

நீதிபதி ஒருவர் தனது ஆட்சியைப் பற்றி தீர்ப்பிலே கண்டனம் தெரிவித்தார் என்ற காரணத்துக்காக நீதிபதியின் இல்லத்துக்கு செல்லும் தண்ணீர் விநியோகத்தையே தடை செய்யச்சொன்னவர் தான் ஜெயலலிதா.

உச்ச நீதிமன்றத்திலே தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நீதிபதி அப்போது சென்னை உயர்நீதி மன்றத்திலே பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் மீதுள்ள வெறுப்பினைக் காட்டுவதற்காக, அந்த நீதிபதியின் மருமகன் வீட்டிலே காவல் துறையின் மூலமாக “கஞ்சா” வைத்துப் பிடித்து வழக்கு போடச் செய்தவர் தான் இந்த ஜெயலலிதா.

இதையெல்லாம் விட இதோ மற்றொரு உச்ச கட்ட எடுத்துக்காட்டு. இதே ஜெயலலிதா, முதல்-அமைச்சராக இருந்து தமிழக சட்டப் பேரவையில் 4.2.2005 அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு:-

“உயர் நீதிமன்றமானாலும், எந்த நீதி மன்றமானாலும், நீதிபதிகள் மனிதர்கள்தான். அவர்களுக்கும், விருப்பு வெறுப்புகள் உள்ளன. சில சமயங்களில் பேசக் கூடாதவற்றையெல்லாம் நீதிமன்றங்களில் பேசுகிறார்கள். இதையே நாங்கள் பேசினால் எங்கள் மீது “கன்டம்ப்ட் ஆப் கோர்ட்” (நீதிமன்ற அவமதிப்பு) வழக்கு போடுவார்கள். ஆனால், நீதிபதிகள் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்லது அதற்கு கண்டனம் தெரிவித்து நாங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தால், எங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும்.

ஆனால் நீதிபதிகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆகவே, குறிப்பிட்ட இந்த நீதிபதி இதைச் சொன்னார், அதைச் சொன்னார் என்பதையெல்லாம் இந்த அவையில் தெரிவித்து, அதனால் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை, நிலைமை சீரழிந்து விட்டது என்று கூறுவது அபத்தமான கூற்று” என்று அவர் பேசியிருந்தார்.

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, நீதிபதிகளை தாக்கி இழித்துரைத்தால், அது மட்டும் அவர் வாயிலிருந்து சிந்திய முத்துக்களா?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

3 பதில்கள் to “J Jayalalitha’s power abuse over judiciary during her executive rule”

  1. thamilan said

    j and karunanithi not know how to respect others when they r in power.

  2. SARAVANAN said

    ASDFASFASF

  3. Vasanthan said

    உயர் நீதிமன்றமானாலும், எந்த நீதி மன்றமானாலும், நீதிபதிகள் மனிதர்கள்தான். அவர்களுக்கும், விருப்பு வெறுப்புகள் உள்ளன. சில சமயங்களில் பேசக் கூடாதவற்றையெல்லாம் நீதிமன்றங்களில் பேசுகிறார்கள். இதையே நாங்கள் பேசினால் எங்கள் மீது “கன்டம்ப்ட் ஆப் கோர்ட்” (நீதிமன்ற அவமதிப்பு) வழக்கு போடுவார்கள். ஆனால், நீதிபதிகள் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்லது அதற்கு கண்டனம் தெரிவித்து நாங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தால், எங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும்.

    ஆனால் நீதிபதிகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆகவே, குறிப்பிட்ட இந்த நீதிபதி இதைச் சொன்னார், அதைச் சொன்னார் என்பதையெல்லாம் இந்த அவையில் தெரிவித்து, அதனால் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை, நிலைமை சீரழிந்து விட்டது என்று கூறுவது அபத்தமான கூற்று
    muttrilum unmai..Jeyalalitha sonnalum mu.ka sonnalum ..muttrilum unmai

பின்னூட்டமொன்றை இடுக