Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for பிப்ரவரி 27th, 2007

Mu Ka Stalin to celebrate 55th Birthday on March 1st

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

1-ந்தேதி மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அன்று தி.மு.க. தொண்டர்களை சந்திக்கிறார்

சென்னை, பிப். 27-

தி.மு.க. துணைபொதுச் செயலாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 55-வது பிறந்தநாளை மார்ச் 1-ந்தேதி கொண்டாடுகிறார்.

அன்று காலை 7.30 மணி முதல் அவரது இல்லத்தில் கட்சி தொண்டர்களை சந்திக் கிறார். தொண்டர்களின் வாழ்த்துக் களை ஏற்றுக்கொள்கிறார்.

அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், இளைஞர்அணி நிர்வாகிகள், கட்சியின் அனைத்து சார்பு மன்ற நிர்வாகிகளும் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை கூறுகிறார்கள். மேலும் பிறந்தநாள் அன்று அனைத்து வட்டங்களிலும், கட்சி நிர்வாகிகளை கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப் படுகிறது.

இந்த தகவலை ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாதன் தெரிவித் துள்ளார்.

Posted in 1000 Lights, 55, 59, Birthday, DMK, Karunanidhi, MK Stalin, Mu Ka Stalin, Stalin, Thousand Lights | Leave a Comment »

Abhishek Bachan – Aiswarya Rai Marriage Details: Invitation

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

19-ந்தேதி ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம்: ஆடம்பர அழைப்பிதழ் தயாராகிறது 

ஐஸ்வர்யாராய்,அபிஷேக் பச்சன், திருமணம் நிச்சய தார்த்தம் ஒரு வழியாய் முடிந்த நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்கள் இல்லற வாழ்வில் இணையும் அந்த ஜொலி ஜொலிப்பு விழா எப் போது அரங்கேறும் எனற் ஆர்வம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்தியாவெங்கிலும் இருந்து பல்வேறு துறைகளின் வி.வி. ஐ.பிக்கள் ஒரே இடத்தில் குவியும் அந்த திருமண விழா அடுத்த மாதம் 19-ந்தேதி நடக் கிறது. இந்த தேதி முறைப்படி அறிவிக்கப்படவில்லை என் றாலும் அதில் திருமணம் நடத்துவதற்கான வேலைகள் தடபுடலாக நடந்து வருகின்றன. நேற்று நடிகர் பிரபுவின் மகன் திருமணத்திற்கு வந்த அமி தாப்பச்சன் மண்டபத்தில் இருந்த சில முக்கிய தமிழ் திரையுலகபுள்ளிகளிடம் 19-ந்தேதி திருமணம் அன் றைக்கு வேறு வேலைகள் ஏதும் வைத்துக்கொள்ளாதீர் கள் என்று அன்போடு கேட்டுக் கொண்டாராம்.

இவர்களிடம் மட்டுமல்ல தனது நெருங்கிய உறவினர்கள், அரசியல் வி.வி.ஐ.பி.க்கள், பாலிவுட் பிரபலங்கள் என தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் 19ந்தேதி திருமணம் என்பதை கூறி அன்று வேறு வேலைகள் எதையும் வைத்துக்கொள்ளா மல் தயாராக இருங்கள் என்று அன்புக்கட்டளை இட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நட்சத்திர திருமணம் ஜோத்பூரில் உள்ள உனமத்பவன் அரண்மனையில் கோலாகலமாக நடக்க உள்ளது.

இதே அரண்மனையில்தான் ஹாலிவுட் நடிகை எலிசபெத் குர்லேயும் இந்திய தொழில் அதிபர் அருண் நாயரும் திருமணம் செய்ய உள்ளனர். குறிப்பாக இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த அரண்மனையில் உம்ராவ் ஜான் பட ஷூட்டிங் நடந்த போது தான் ஐஸ்வர்யாராய்க்கும் அபி ஷேக்பச்சனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாம்.

திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த தீர்மா னிக்கப்பட்டுள்ளதால் அதற் கேற்ப விலை உயர்ந்த அழைப் பிதழ்களை அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு அழைப்பிதழின் விலை மட்டும் ரூ.5ஆயிரம் என்று கூறப் படுகிறது. அழைப்பிதழை பெறுபவர்கள் அதை வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாக்கும் அளவுக்கு அதன் வடிவமைப்பு இருக்குமாம்.

Posted in Abhishek, Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Bollywood, Cinema, Gossip, Invitation, Jodhpur, Jothpur, Marriage, Palace, Rumour, Umrao Jaan, Umrao Jan, Venue, Wedding | 1 Comment »

Mukesh to be world’s richest Indian

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

லட்சுமிமிட்டலை முந்தினார் மிகப்பெரிய பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி 

புதுடெல்லி, பிப். 27-

ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்து உலகின் மிகப்பெரிய பணக்கார இந்தியர் என்ற அந்தஸ்திலும் உலக அளவில் எடுக்கப்பட்ட பணக்காரர்கள் பட்டியலில் 5-வது இடத்திலும் இருந்தார்இரும்பு எஃகு தொழிலில் உலகின் நம்பர் ஒன் தொழில் அதிபர் லட்சுமி மிட்டல். இங்கிலாந்தில் 600கோடி ரூபாய்க்கு ஒரு ஆடம்பர மாளிகையை வாங் கியது, ரஷ்யாவின் அர் செலர் இரும்பு ஆலையை பல்வேறு சவால்களுக்கு இடையே விலைக்கு வாங்கி யது போன்றவற்றில் உலக பிரபலங்கள் பலரை வியக்க வைத்தார்.

தற்போது இந்த ஜாம்ப வானை சொத்து மதிப்பில் முந்தியுள்ளார் அம்பானி சகோதரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக கரு தப்படும் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட்டின் பங்குகளை அதிகஅளவு பெற்றதில் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் தனிபட்ட சொத்து மதிப்பு 1லட்சத்து 4ஆயிரத்து 40 கோடி ரூபாயாக உள்ளது.

லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 96ஆயிரத்து 480கோடி ரூபாயாக உள்ளதால் லட்சுமி மிட்டலை முந்தி உலகின் மிகப்பெரிய பணக்கார இந்தியர் என்ற அந்தஸ்தை முகேஷ் அம்பானி அடைந்துள்ளார். முகேஷ் அம்பானி இந்தியா விலேயே தொழில் செய்கிற வர் லட்சுமி மிட்டலின் பெரும்பாலான தொழில்கள் வெளிநாட்டிலேயே நடக்கின் றன. அவர் வெளிநாட்டில் வசிக்கிறார் என்றாலும் அவர் இந்திய பாஸ்போட்டை வைத்திருப்பவர் இந்தியா வில் பிறந்தவர் என்ற அடிப்படை யில் இந்திய தொழில் அதிபராக கருதப்படுகிறார்.

Posted in Ambani, Arcelor, Arcelor Mittal, Bill Gates, Birla, Cash, Equity, Forbes, Fortune, Guru, Lakshmi Mittal, Lakshmi Niwas Mittal, Manirathnam, Maniratnam, Microsoft, Mittal, Money, Mukesh Ambani, Poor, Reliance, Reliance Industries Limited, Rich, RIL, Shares, Steel, Stocks, TATA, Valuation, Vimal | Leave a Comment »

Congress receives drubbing in Punjab, Uttarakhand; retains Manipur

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: பஞ்சாப், உத்தரகண்டில் ஆட்சியை இழந்தது காங்.

சண்டீகர்/டேராடூன், பிப். 28: பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. மணிப்பூரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மூன்று மாநிலங்களுக்கும் நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளம் -பாரதீய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. உத்தரகண்டில் காங்கிரஸிடமிருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மணிப்பூரில் அரசு அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு ஒருசில இடங்களே தேவைப்படுவதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாபில் மொத்தம் 117 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற 116 தொகுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிரோன்மணி அகாலி தளம் 48 தொகுதிகளிலும், பாஜக 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 44 இடங்களைக் கைப்பற்றியது. சுயேச்சைகள் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். சிரோன்மணி அகாலி தளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், முதல் அமைச்சராகத் தேர்வு செய்யப்பட உள்ளார்.

உத்தரகண்டில் மொத்தம் 70 தொகுதிகளில் 69 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பாஜக 34 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாகப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 8 இடங்களிலும், ஐக்கிய கிராந்தி தளம் 3 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.

ஐக்கிய கிராந்தி தள ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பி.சி.கந்தூரி முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

மணிப்பூரில் பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாகப் பெற்று 30 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.

முடிவு அறிவிக்கப்பட்ட 60 தொகுதிகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், மணிப்பூர் மக்கள் கட்சி 5 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 5 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 3 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 3 இடங்களிலும், சுயேச்சைகள் 10 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.

Posted in Akali, Amarinder Singh, Assembly, BJP, BSP, Congress, Congress (I), Debacle, Elections, Manipur, Manipur People`s Party, MPP, Opposition, Polls, Punjab, Rajnath Singh, Results, RJD, SAD, SGPC, Shiromani Akali Dal, UKD, Utharakand, Utharakhand, Uttarakand, Uttarakhand, Uttarakhand Kranti Dal | Leave a Comment »

Congress receives drubbing in Elections: Lessons, Monetary Policy, Financial Impacts

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

தேர்தல் புகட்டும் பாடம்

3மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. ஒன்றில் கூட்டணி அரசுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் இத் தேர்தல் ஓர் உரைகல் போன்றதாகவே கருதப்படுகிறது.

பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியைத் தழுவியுள்ளது. இங்கு பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து போட்டியிட்ட பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான சிரோன்மணி அகாலிதளம் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

உத்தரகண்டில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.

இதற்கு ஆறுதலாக மணிப்பூரில் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தோல்விகளுக்கு ஆளும் கட்சி மீது வழக்கமாக மக்களிடையே ஏற்படும் அதிருப்தி மற்றும் உள்ளூர்ப் பிரச்சினைகள் முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. எனினும் முக்கியப் பிரமுகர்களுக்காக அரசுப் பணம் பெருமளவில் செலவிடப்பட்டது, விவசாய நிலங்களை, கல்வி என்ற பெயரில் வியாபாரம் நடத்தி வரும் பெரும் முதலாளிகளுக்கு விற்பனை செய்தது, இவ்வாறு நிலங்கள் விற்பனை செய்யப்பட்டதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட கடும் பாதிப்பு ஆகியவற்றால் மக்கள் அதிருப்தி அடைந்து உத்தரகண்டில் ஆளும் கட்சியைப் புறக்கணித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

தனியார்மயக் கொள்கை, தனியாருக்கு நிலங்களை விற்றது, மாநிலத்தில் மின்வாரியத்தைக் கலைத்தது, சுகாதார நலத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைத்தது, கடுமையான பணவீக்கம் முதலியன காங்கிரஸýக்கு நகர்ப்புற மக்களிடையே இருந்த செல்வாக்கைக் குறைத்துவிட்டது. இதுவே பஞ்சாபில் காங்கிரஸின் தோல்விக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

அதேசமயம், மக்கள், உள்ளூர்ப் பிரச்சினைகளை வைத்து மாநில அரசுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். எனவே, இத் தேர்தல் முடிவுகளால் மத்திய அரசுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர்களும் குறிப்பிட்டுள்ளனர். எனினும், அரசின் சில கொள்கைகள் குறிப்பாக கட்டுக்கடங்காத விலை உயர்வு, சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக விளைநிலங்களை தனியாருக்கு அளிப்பது போன்ற முக்கிய விஷயங்களில் அரசுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எனவே, மக்கள் மனமாற்றத்துக்கு, அதுவும் நகர்ப்புற மக்களின் மனமாற்றத்துக்கு உள்ளூர்ப் பிரச்சினைகள் மட்டுமே காரணமாகுமா என்பது பரிசீலனைக்குரிய விஷயமாகும்.

அனைவருக்கும் பலனளிக்கக்கூடிய வளர்ச்சியையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். பங்குச்சந்தையில் விலைப்புள்ளிகள் அதிகரித்து வருவதால் மட்டுமே இந்தியா ஒளிர்வதாகக் கருதி விட முடியாது. எத்தகைய பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பயன் அளிப்பதாக இருக்க வேண்டும். ஒரு சிலர் சலுகைகளை அனுபவிப்பதும் பலர் எத்தகைய வசதியும் கிடைக்காமல் வாடுவதும் சமமான உயர்வுக்கு வழி வகுக்காது. இது மட்டுமன்றி சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்களை அனுமதிப்பது உள்ளிட்டவையும் மக்களின் மனமாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

பணவீக்கம் குறித்து நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையிலும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அதற்காக விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் விரைவாக மேற்கொள்ள வேண்டும். இது தேர்தலுக்கு மட்டுமல்ல, நாட்டின் சீரான வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

Posted in Analysis, BJP, Budget, Commerce, Congress, Elections, Employment, Finance, Growth, Issues, Jobs, Monetary, Op-Ed, Opinion, Policy, Reasons | Leave a Comment »

Global markets slide in reaction to Shanghai Stock Exchange plunge

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

சீனப் பங்குச் சந்தை விலையில் பாரிய வீழ்ச்சி

பங்குச் சந்தையின் அடிப்படை இன்னமும் பலமாகவே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
பங்குச் சந்தையின் அடிப்படை இன்னமும் பலமாகவே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்

சீனப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பாரிய விலை வீழ்ச்சியை அடுத்து உலகெங்கும் பங்கு விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சீனப் பங்குச் சந்தையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சி இதுவாகும்.

ஷாங்காய் பங்குச் சுட்டெண்ணில் ஏற்பட்ட 9 வீத வீழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கு 100 மில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் தடவையாக இந்தச் சுட்டெண்கள் 3000 புள்ளிகளை விட அதிகமாக வளர்ந்த மறுதினம், இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு முன்னர் இருந்த நிலைக்கு இந்தச் சுட்டெண்கள் தற்போது சென்றுள்ளன.

Posted in Bonds, BSE, China, Currency, DJIA, Economy, Exchange, Finance, Futures, Global markets, Hongkong, Index, Indices, markets, NSE, Options, plunge, Prices, Profits, Shanghai, Shares, Shenzhen, Stock Exchange, Stocks, World | 1 Comment »

Mahinda Rajapakse & LTTE made a deal? US, German and Italian ambassadors injured in a LTTE attack

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

விடுதலைப்புலிகளின் தாக்குதலில் அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அங்கு இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பார்வையிடச் சென்ற அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.

அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் உட்பட 14 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகவும், இவர்களில் இத்தாலிய தூதுவர் உட்பட 11 பேர் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் யுத்த அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக, இலங்கை அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள், அமெரிக்கா, இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் இன்று மட்டக்களப்பு சென்றிருந்தார்.

இவர்கள் சென்ற ஹெலிக்கொப்டர் மட்டக்களப்பு நகரில் உள்ள வெபர் மைதானத்தில் தரை இறங்கியதும், அங்கு படை மற்றும் சிவில் அதிகாரிகளால் இவர்கள் வரவேற்கப்பட்டனர்.

அப்போது அங்கு இரண்டு எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சம்பவத்தின் போது ஒரு எறிகணையின் சிதறல் அருகில் இருந்த வின்சன்ட் மகளிர் கல்லூரியில் விழுந்ததில் ஒரு மாணவியும் காயமடைந்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள், இராஜதந்திரிகள் அந்தப் பகுதிக்கு வருவது குறித்து தமக்கு முன்னரே அறிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

இது குறித்துக் கருத்துக் கூறிய இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல தோர்பினூர் ஒமர்சன் அவர்கள், இப்படியாக இத்தகைய பயணங்கள் குறித்து கூறவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்று கூறினார்.


‘ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக புலிகளுடன் மஹிந்த ரகசிய ஒப்பந்தம்’- சந்தேகம் எழுப்புகிறார் ரணில்

மஹிந்த ராஜபக்ஷவும் ரணிலும்
மஹிந்த ராஜபக்ஷவும் ரணிலும்

இலங்கையில் கடந்த 2005இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது என்பதில் ஏதோ உண்மை இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2 லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்திருந்தார்.

அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிறிபதி சூரியாராட்சி அவர்கள் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரர்களிற்கும் எதிராக பலவாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

ஜனாதிபதித் தேர்தலிற்கு முன்பதாக மஹிந்த ராஜபக்ச தரப்பினரிற்கும், புலிகளிற்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பில் இரகசிய ஒப்பந்தம் இருந்தது என்று மிகவும் பாரிய குற்றச்சாட்டு ஒன்றினை ஊடகங்கள் வாயிலாக ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கிறார்.

இந்த விடயம் குறித்து சந்தேகத்தை கிளப்பியுள்ள ரணில் விக்கிரமசிங்க, இப்படியாக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து இலங்கை ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும் என்று தற்போது கூறியுள்ளார்.

Posted in Ambassadors, Army, Attack, Batticaloa, Colombo, deal, German, Germany, Human Rights, Italy, LTTE, Mahinda Rajapakse, Mahinda Samarasinghe, Military, Rajapakse, Ranil, Ranil Wickremesinghe, Rebels, Siripathi, Siripathi Sooriyaarachchi, Siripathy, Sooriyaarachchi, Sooriyaarachi, Sri lanka, Srilanka, Tamil Tiger, US, USA, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »

Global Warming – Environmental Pollution: Analysis, History, Current Developments

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

வேலியே பயிரை மேயும் நிலை!

ந. ராமசுப்ரமணியன்

உலக வெம்மையின் மூல காரணம் எனக் கருதப்படும் நச்சு வாயுவான கார்பன் வெளியீட்டினால் உலகம் பல்வேறு துயரங்களை எதிர்கொள்ளும் என ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுமம் அச்சம் அடைந்தது.

எனவே 1988-ல் ஒரு சிறப்பு அமைப்பை ஏற்படுத்தியது. இதில் பல்வேறு நாடுகளும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி, 1997ம் ஆண்டு ஜப்பான் நாட்டு கியோட்டோ நகரில் ஓர் அரசியல் உடன்பாட்டை தயார் செய்தன.

அதன்படி 1990ஆம் ஆண்டு உலக கார்பன் வெளியேற்ற அளவிலிருந்து 5.2 சதவீதம் கார்பன் அளவை 2008ம் ஆண்டிலிருந்து 2012 வரை குறைக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த உடன்பாட்டில் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கையெழுத்திடவில்லை. 140 நாடுகள் கையெழுத்திட்டு, இந்த ஒப்பந்தம் 2005 பிப்ரவரி 16ம் தேதி அமலுக்கு வந்தது. தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் சீனா, இந்தியா போன்ற நாடுகள் அப்போது பொருளாதார, தொழில் வளர்ச்சியில் மந்த நிலையில் இருந்ததால், கார்பன் அளவு குறைப்புப் பொறுப்பு குறித்து கருத்தில் கொள்ளப்படவில்லை.

ஆக, கார்பன் வெளியீட்டைக் குறைக்க, உலக வெம்மையைத் தணிக்க உலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் புனிதக் கோயிலாக கியோட்டோ நகரம் கருதப்படுகிறது.

சமீபத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றிய சில முக்கிய ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் மிக முக்கிய அறிக்கை 2007 பிப்ரவரியில் ஐ.நா. சபையின் அரசுகளுக்கிடையேயான சீதோஷ்ண மாறுதல் பற்றிய குழு சமர்ப்பித்தது ஆகும்.

இந்த அறிக்கையின் சாராம்சங்களைப் பார்ப்போம்

ஐரோப்பாவில் தாங்க முடியாத அளவுக்கு கோடை வெம்மை அதிகரிக்கும். இந்தோனேஷியாவின் 2000க்கும் மேற்பட்ட தீவுகள் 2030க்குள் மறையும். இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தென் பகுதிகள் தாழ்வான பகுதியாக இருப்பதாலும், நீண்ட கடற்கரை அமைந்ததாலும் பெருமளவு பாதிக்கப்படும். 2050ல் உலகப் பொருளாதாரம் 0.5 முதல் 1 சதவீதம் வரை பாதிக்கப்படும்.

2500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளால், 130 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆறு ஆண்டு காலத்தில் தயார் செய்யப்பட்ட இந்த ஆய்வறிக்கை, 1990ம் ஆண்டிலிருந்து தயாரிக்கப்பட்ட நான்காவது உலக வெம்மை பற்றிய அறிக்கையாகும்.

இதைப்போல் மற்றோர் ஆய்வறிக்கை பிரிட்டனின் உலக முன்னேற்றத் துறையால் தயாரித்து வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் வற்றாத ஜீவநதிகள் எனப்படும் கங்கை, யமுனை, சிந்து, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் இன்னும் 40 ஆண்டு காலத்தில் வற்றிவிடும்.

உலக வெம்மையின் காரணமாக இமயமலைப் பனிக்கட்டிகள் அதிக அளவில் உருக ஆரம்பித்துவிட்டன. 1962ம் ஆண்டு 2077 சதுர கிலோமீட்டர் அளவிலிருந்து உறைந்த பனிக்கட்டிகள் சுமார் 21 சதவீதம் உருகி தற்போது 1628 சதுர கிலோமீட்டர் அளவு எனக் குறைந்துவிட்டது.

இதன் மற்றொரு விளைவாக 50 கோடி மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்பது போன்ற மிகவும் கவலை தரக்கூடிய செய்திகள் வெளியாகியுள்ளன.

சுருக்கமாகச் சொல்வதென்றால், கியோட்டோ ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, தனி மனிதர்களுக்கும், உலக நாடுகளுக்கும் உலக வெம்மையைக் குறைப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் தொழில் வளர்ச்சி 1973ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது மும்மடங்காகிவிட்டது. இதன் காரணமாக, ஜப்பான் நாட்டில், 1990ம் ஆண்டு இருந்த கார்பன் வெளியீட்டு அளவைவிட தற்போதைய கார்பன் வெளியீடு 14 சதவீதம் அதிகரித்துவிட்டது என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

உலகில் கார்பன் வெளியீடு குறைப்பு விவகாரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழிகாட்டியான ஜப்பான் நாடும், கியோட்டோ போன்ற நகரங்களும் தங்களது போதனையை தாங்களே நடைமுறைப்படுத்த இயலவில்லை. கார்பன் வெளியீடு அதிகமாகி உலக வெம்மை அதிகரித்துவிட்டது. இந்நிலையில் வேலியே பயிரை மேயும் நிலை வந்துவிட்டதோ?

“”கியோட்டோ நகரமே! நீயுமா?” என்ற கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.

(கட்டுரையாளர்: நிறுவனர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, மண்ணிவாக்கம், சென்னை).

===================================================

நீர்வளம் காப்போம்!

ஆ. மோகனகிருஷ்ணன்

இன்று உலக நீர்வள நாள்.

ஆண்டில் சில நாள்களைச் சிறப்பாகக் கொண்டாடும் முறை நம்நாட்டிலும் உலக அளவில் அன்னிய நாடுகளிலும் இருந்து வருகிறது.

இதில் மார்ச் மாதம் 22-ஆம் நாளை உலக நீர்வள நாள் என்றும் ஏப்ரல் 22ஆம் நாளை உலக பூமி நாளென்றும் குறிப்பிட்டு வருகிறோம்.

நீரின்றி மண்ணில் தோற்றம் இல்லை. மண்ணின்றி நீருக்குப் பயனில்லை. மண்ணும் நீரும் இணைந்தே செயல்படும். இரண்டுமே நமக்கு இயற்கையாகக் கிடைத்துள்ள அரிய சொத்துகள். காப்பாற்றப்பட வேண்டியவை. வீணாக்கக்கூடாதவை. வழிபட வேண்டியவை.

சூரியனின் வெப்பத்தினால் நீர் ஆவியாகி, மேல்நோக்கிச் சென்று மழையாகப் பொழிந்து மண்ணை வளமாக்குகிறது. அதில் ஒரு பகுதி மண்ணில் ஊடுருவி கீழ்நோக்கிச் செல்ல, மற்றது ஓடைகளிலும் ஆறுகளிலும் பாய்ந்து பயன்படுத்தியது போக மிஞ்சியது கடலில் சங்கமம் ஆகிறது. இதைத்தான் “நீரின் சுழற்சி’ எனக் கொள்கிறோம். இச் சுழற்சி எங்கும் எப்போதும் இடையறாது நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

புவியில் வாழும் எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாத நீரைப் பெறுவதற்கு ஒரே ஆதாரம், பெய்யும் மழைதான். அந்த மழையும் காலத்திலும் இடத்திலும் மாறி வருவதால், மழையினால் பெருகும் நீர்வளமும் வேறுபட்டே காணப்படும். பூமியின் மேற்பரப்பில் நிகழும் நீரோட்டமும் நிலத்தடியில் நகரும் நீரும் மழையைப் பொறுத்தே அமையும்.

இன்றைய நிலையில் உலக அளவில் கண்டம் வாரியாக நீர்வளத்தைத் தோராயமாகக் கணக்கிட்டால், ஆண்டொன்றிற்கு ஐரோப்பிய கண்டத்தில் 3,210 பில்லியன் கனமீட்டரென்றும், ஆசிய கண்டத்தில் 14,410 பில்லியன் கனமீட்டரென்றும், ஆப்பிரிக்க கண்டத்தில் 4,570, வடஅமெரிக்காவில் 8,200, தென் அமெரிக்காவில் 11,760, கடலில் ஆங்காங்கே பரவியுள்ள சில தீவுகளிலெல்லாம் சேர்த்தால் 2,388 என்றும் ஆக மொத்தம் 44,538 பில்லியன் கனமீட்டரென்று கொள்ளலாம்.

இதைப் பார்த்தோமானால், ஆசிய கண்டத்தில்தான் மிக அதிகமான நீர்வளம் இருப்பதை அறிகிறோம். ஆனால் ஆசியாவின் மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 59 சதவீதம். நபரொன்றுக்குக் கணக்கிட்டால் ஆண்டில் கிடைப்பது 4,745 கனமீட்டர் என்றாகும். அடுத்தபடி நீர்வளம் மிகுந்த கண்டம் தென் அமெரிக்கா.

ஆண்டில் ஒரு நபருக்குத் தேவையான நீர் அளவு 1,700 கன மீட்டர் ஆகும். அந்த அளவு நீர் கிடைத்தால் வாழ்க்கை வளமுடன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நாட்டில் 1000 கனமீட்டர் தான் பெறமுடியுமென்றால் அந்த நாடு நீர்வளம் குன்றிய நாடென்றே கொள்ள வேண்டுமென்றும், 1000 கனமீட்டருக்கும் குறைந்தால் அந்நாட்டில் நீர்ப்பற்றாக்குறையோடு பஞ்சம் ஏற்படும் நிலை உண்டாகுமென்றும் உலகளவில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் நீர்வளம் அதற்கீடான பல நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து திருப்திகரமாகவே உள்ளது எனலாம். நாட்டின் நிலப்பரப்பு உலக நிலப்பரப்பின் 2.45 சதவீதம், நீர்வளம் சுமார் 4 சதவீதம். ஆனால் மக்கள்தொகையோ 16 சதவீதம். எனவே, பெருகிவரும் மக்கள்தொகையை முடிந்தவரை கட்டுப்படுத்தி, கிடைக்கும் நீர்வளத்தை மாசுபடாமல் காத்து, வீணாக்காமல், மக்கள் பயனுள்ள வகையில் உபயோகிக்க வழிவகை செய்ய வேண்டும்.

இதில் யாருக்குப் பொறுப்பு என்று தேடாமல் எல்லோருக்கும் பொறுப்புண்டு என்பதை உணர வேண்டும். நீர்வளத்தை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்யும் செயல்பாடுகளில் அனைவரும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். இந்த நீர்வள நன்னாளில் இதற்கான உறுதியை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நீர்ப்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்து வருவதை நாம் அறிவோம். தமிழ்நாட்டின் நிலப்பரப்பு இந்திய நாட்டின் பரப்பில் 4 சதவீதம். ஆனால் மக்கள்தொகையோ 7 சதவீதம். நீர்வளம் 2.4 சதவீதம்தான். 2001-ல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நீர்வளம் ஒரு நபருக்கு ஆண்டிற்கு 575 கனமீட்டரே. இதனால்தான் நீர்வளம் மிகுந்த அண்டை மாநிலங்களை அணுகி நீரைப் பெறும் கட்டாயத்தில் நாம் உள்ளோம். பெற்று வந்த நீரைப் பறிபோகாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

பின் சந்ததியாரும் நலமாக வாழ, நாம் நீர் உபயோகத்தைக் கட்டுப்படுத்தி, கிடைக்கும் நீரை வீணாக்காமல், ஒவ்வொரு துளியும் நற்பயனைத் தர ஆவன செய்ய வேண்டுமென்று உலக அளவில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் அமைப்பு, வளர்ந்து வரும் மக்கள்தொகையையும் குறைந்து வரும் நீர் வளத்தையும் கருத்தில் கொண்டு, 1977-ல் முதன்முறையாக தானே முன்வந்து ஒரு பெரிய கருத்தரங்கை நடத்தியது.

அதன் விளைவாக “”சர்வதேச குடிநீர் மற்றும் துப்புரவு” செயல்திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு, பல நாடுகளில் அதற்கான பணிகளை மேற்கொள்ள நிதி உதவியும் தந்தது. அச்சமயம் இந்திய நாடும் சிறிது பயன்பெற்றது.

இதைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டில் “”நீரும் சுற்றுப்புறச் சூழலும் மனித வளர்ச்சியும்” என்ற தலைப்பில் விவாதிக்க ரியோடி ஜெனிரோ நகரில் ஒரு மாபெரும் சர்வதேச மாநாட்டைக் கூட்டி, அதில் சில கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவும் அதில் பங்கேற்றது. இவை யாவும் இயற்கையில் நமக்குக் கிடைக்கும் நீரினைச் சிறந்த முறையில் மேலாண்மை செய்ய வலியுறுத்தின. அதன் விளைவே ஐக்கிய நாடுகள் குழுமம் நிறுவிய “”உலக நீர்வளக் கூட்டாண்மை” தோற்றுவித்த, “”ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மை”.

மண்ணுக்கும் மழைக்கும் இணைப்பு உள்ளதால்தான் இப்புவியில் உயிர்கள் தோன்றி, வளர்ந்து, மடிகின்றன. நீரின் பயன்பாடு பல வகை. குடிக்க சுத்தமான நீர், குளிக்க, துப்புரவுக்காக, மற்ற உபயோகத்திற்காக நீர், உணவு உற்பத்திக்காக பாசன நீர், தொழிற்சாலைகளில் உபயோகம், நீர்மின் நிலையங்களில் உபயோகம். இப்படி பல உபயோகங்கள்.

ஆனால் அத்தனை உபயோகங்களுக்கும் தேவையான நீர் போதுமானதாக கிடைக்காத நிலை நேரலாம். நீரை ஆள்பவர்களும் மேலாண்மை செய்ய கடமைப்பட்டவர்களும் பல நிறுவனங்களாகவோ, பல அரசுத் துறைகளாகவோ இருக்கலாம். ஆயினும் அவர்கள் செயல்பாடுகள் அனைத்தும் பயனீட்டார்களின் நலனைக் கருதி அவர்களின் முழு ஒத்துழைப்புடன் அமைய வேண்டும்.

நீரும் நிலமும் இதர வாழ்வாதாரங்களும் ஒன்றோடு ஒன்று சார்ந்து வளர்வதை ஊக்குவிக்கும் ஒரு செயல்முறையே ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை எனலாம்.

இதற்கு அடிப்படையாக நீரைப் பங்கிடுவோரிடமும், நீரைப் பயன்படுத்துவோரிடமும், முரண்பாடுகளின்றி ஒத்துழைப்பு வளர வேண்டும். இதை வளர்க்கும் பொறுப்பு நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு என உலக நீர்வள நாளான இந்நன்னாளில் நாம் யாவரும் உணருவோமாக.

(கட்டுரையாளர்: நீர்வள ஆலோசகர்- தமிழக அரசு).

Posted in Al Gore, Alternate, An Incovenient Truth, Analysis, Biofuel, Carbon, Developments, Economy, emissions, energy, Environment, EU, Europe, Fuel, Gas, Global Warming, History, Kyoto, Natural, Petrol, Pollution, UN, Water | 2 Comments »

The Quattrocchi fallout: Sonia’s gift to India?

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

குவாத்ரோச்சி சிக்குவாரா?

போபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான குவாத்ரோச்சியை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென மத்திய அரசை பாஜகவும் இடதுசாரிக் கட்சிகளும் வற்புறுத்தியுள்ளன.

மோசடி, ஏமாற்று வேலை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தென்அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவில் சர்வதேச போலீஸôரால் கைது செய்யப்பட்டுள்ள குவாத்ரோச்சி இப்போது அந்நாட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது இரண்டு அம்சங்களைப் பொறுத்தது. முதலாவதாக, இந்திய அரசு இதில் தீவிர முனைப்புக் காட்டியாக வேண்டும். இரண்டாவதாக, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய அளவுக்கு குவாத்ரோச்சி குற்றங்களைப் புரிந்துள்ளதாக ஆர்ஜென்டீனா திருப்தி அடைந்தாக வேண்டும்.

இந்தியாவை உலுக்கிய ஊழல் விவகாரங்களில் போபர்ஸ் விவகாரம் மிகப் பிரபலமானது. 1980களில் இந்திய அரசு சுவீடனைச் சேர்ந்த போபர்ஸ் என்னும் நிறுவனத்திடமிருந்து பெரிய பீரங்கிகளை வாங்கியது. இந்தப் பீரங்கிகளை வாங்கும்படி செய்ய இந்திய அரசியல்வாதிகளுக்கு ரூ. 64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சுவீடனின் வானொலி 1987ல் செய்தி ஒலிபரப்பியபோது இந்த விவகாரம் வெடித்தது. இதில் சிலர் இடைத்தரகர்களாகச் செயல்பட்டதாகவும் அப்போது கூறப்பட்டது.

போபர்ஸ் விவகாரத்தின் விளைவாக 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றது. இந்த ஊழலில், யார் யார் பணம் பெற்றார்கள் என்பது தொடர்பாகப் பலரின் பெயர்கள் அடிபட்டன. வழக்குகளும் போடப்பட்டன. ராஜீவ் காந்தியின் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என வர்ணிக்கப்பட்ட இத்தாலியரான குவாத்ரோச்சி அந்த இடைத்தரகர்களில் ஒருவர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் கடந்த பல ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர். சிலர் காலமாகிவிட்டனர். எஞ்சி நிற்கிற ஒருவர் குவாத்ரோச்சியே.

குவாத்ரோச்சி இந்தியாவில் இருந்தபோதே அவரைக் கைது செய்திருக்க முடியும். ஆனால் 1993 ஜூலையில் அவர் இந்தியாவிலிருந்து மலேசியாவுக்குத் தப்பினார். வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடித்து ஒப்படைக்க நாடுகள் இடையே பரஸ்பர உடன்பாடுகள் செய்து கொள்வது உண்டு. மலேசியாவுடன் இந்தியாவுக்கு அப்போது அவ்வித உடன்பாடு இல்லை. இப்போது ஆர்ஜென்டீனாவுடனும் இந்தியாவுக்கு அப்படிப்பட்ட உடன்பாடு கிடையாது.

குவாத்ரோச்சியை பிடித்து ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கை மலேசிய உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இந்திய அரசு தகுந்த ஆதாரங்களை அளிக்கவில்லை என்று அது கூறியது. இத் தீர்ப்பின் மீது இந்திய அரசு மேல் முறையீடு செய்ய இருந்த சமயத்தில் குவாத்ரோச்சி அங்கிருந்தும் தப்பினார்.

இது ஒருபுறமிருக்க, பிரிட்டிஷ் வங்கிகளில் குவாத்ரோச்சி போட்டிருந்த ரூ. 21 கோடி பணத்தை இந்திய அரசு கோரியதன் பேரில் பிரிட்டிஷ் அரசு முடக்கி வைத்தது. ஆனால் வேடிக்கையான வகையில் இப் பணம் போபர்ஸ் ஊழலில் தொடர்புடைய பணம் என்று நிரூபிக்க ஆதாரம் இல்லையென இந்திய அரசு கடந்த ஆண்டில் தெரிவித்ததன் பேரில் குவாத்ரோச்சியின் பணம் விடுவிக்கப்பட்டது.

குவாத்ரோச்சி ஆர்ஜென்டீனாவில் இம்மாதம் 6-ம் தேதி பிடிபட்டார். இருந்தாலும் இந்திய ஊடகங்கள் இதுபற்றி பெரிதாகச் செய்தி வெளியிட்டதற்குப் பிறகே இந்திய அரசு அதுபற்றி வாய் திறந்துள்ளது. மார்ச் 5-ம் தேதிக்குள் ஆர்ஜென்டீனா அரசிடம் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றால் குவாத்ரோச்சி விடுதலை செய்யப்படுவார் என்பதுதான் இப்போதுள்ள நிலைமையாகும்.

“சட்டம் தனது கடமையைச் செய்யும்’ என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் குவாத்ரோச்சி விஷயத்தில் இதுவரை நடந்துள்ளவை அவ்விதமாக இல்லை என்றே கூறியாக வேண்டும்.

Posted in Analysis, Argentina, BJP, Bofors, Congress, Corruption, Defense, Dinamani, Editorial, extradition, kickbacks, Military, Op-Ed, Opinion, Quattrocchi, Sonia Gandhi | Leave a Comment »

CPI & Tribals protest against Tata steel plant in Chhattisgarh

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

பழங்குடியினர் பகுதியில் டாடா உருக்காலை: இந்திய கம்யூ. எதிர்ப்பு

ராய்ப்பூர், பிப். 27: சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதியில் டாடா நிறுவனம் உருக்காலை அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பஸ்தார் மாவட்டம் லோஹனிகுன்டா பகுதியில் டாடா நிறுவனம் உருக்காலை அமைக்க தங்கள் நிலத்தை தரவிரும்பாத மக்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது.

Posted in Bastar, Chhattisgar, Chhattisgarh, Communist, Communist Party of India, CPI, CPI(M), Industry, Marxist, Protest, Singur, TATA, Tata Steel, Tribals, WB, West Bengal | Leave a Comment »

Indian Budget 2007-08 : Preview analysis – KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

பட்ஜெட் பற்றிய குறிப்புகள்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

மத்திய அரசின் பொது பட்ஜெட் பிப்ரவரி 28 அன்றும், தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் மாதத்திலும் தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த காலங்களில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 28 ஆம் தேதி பிற்பகலில்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது காலையிலேயே தாக்கல் செய்யப்படுகிறது.

பொருளாதார ஆய்வறிக்கையை நிதிநிலை அறிக்கைக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். அதன்பின் நிதிநிலை அறிக்கையில் எடுக்கப்பட்ட பணிகள் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படும். அதில்தான் மக்களின் வரிப்பணம் முறையாகச் செலவிடப்பட்டதா என்பது குறித்து அறியப்படும்.

நிதிநிலை அறிக்கையைப் பற்றி சில குறிப்புகள்: நமது அரசியலமைப்பில் எந்த இடத்திலும் “பட்ஜெட்’ என்னும் சொல் பயன்படுத்தப்படவில்லை. முன்னொரு காலத்தில் இங்கிலாந்தின் நிதி அமைச்சர், ஆண்டு நிதிச் செயற்குறிப்புகளை ஒரு தோல் பையில் எடுத்துக் கொண்டு மக்களவைக்கு சென்றார். அத்தோல் பைக்கு “பட்ஜெட்’ என்று பெயர். அந்தப் பைக்கு உரிய பெயர், நாளடைவில் அதன் உள்ளே இருந்த ஆவணங்களுக்கு ஆகுபெயராகியது. இந்திய அரசியலமைப்பில் இதற்கு “ஆண்டு நிதிநிலை அறிக்கை’ என்னும் பெயரே வழங்கப்படுகிறது.

நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும்போது, அடுத்துவரும் ஆண்டில் கிடைக்கக்கூடிய வரவுகளையும், செலவுகளையும் துல்லியமாக மதிப்பிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்தகால செலவினங்களையும் வருங்காலத்தில் எதிர்பார்க்கக்கூடிய செலவு மதிப்பீடுகளையும் கருத்தில்கொண்டு இம் மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன.

நிதிநிலை அறிக்கையில், அறிக்கை – ஐ – வருவாய்க் கணக்கு – செலவினங்கள் என்பதில் கூறப்பட்டுள்ள மொத்தச் செலவை, அறிக்கை – ஐ – வருவாய்க் கணக்கு – வரவினங்கள் என்று கூறப்பட்டுள்ள வருவாயிலிருந்து கழித்தால் வருவாய் உபரி கிடைக்கிறது. இதனைக் கொண்டு அந்த ஆண்டுக்கான மூலதனச் செலவுகள் செய்யப்படுகின்றன. எனினும், சமீப காலங்களில் வழக்கமாக, வருவாயைவிட செலவு அதிகமாக இருந்து வருகிறது. இது வருவாய்ப் பற்றாக்குறை என்ற அடிப்படையில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

நிலைநிதிக்குழு – அமைச்சரவை ஒப்புதல்: இந்தப் பகுதி – ஐஐ செயற்குறிப்புகள், சம்பந்தப்பட்ட துறைகளால் தயாரிக்கப்பட்டு, திட்டக்குழுவுக்கு அனுப்பப்படுகின்றன. திட்டக்குழு, திட்டமிடல் வளர்ச்சியின் ஒட்டுமொத்த நோக்கங்களைக் கருத்தில்கொண்டு, உயர் முன்னுரிமை வாய்ந்த திட்டங்களை, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பரிந்துரை செய்கிறது.

இக்குழு, ஒவ்வொரு திட்டத்தையும் கவனமாக ஆய்வு செய்கிறது. துறைகளின் ஒவ்வொரு திட்டத்தையும், துறைகளுக்கு இடையேயான ஒவ்வொரு திட்டத்தையும் முன்னுரிமைகளையும் நிதி ஆதாரங்களையும் கருத்தில்கொள்கிறது.

இறுதியாக புதிய திட்டங்களின் பட்டியலைத் தயாரிக்கிறது. பகுதி – ஐ, பகுதி – ஐஐ மதிப்பீடுகளைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்டு முடிவாக உருப்பெரும் இறுதி வடிவம், பொதுவாக, மத்திய திட்டக் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்ட அளவுக்கேற்பவும், அக்குழுவின் பரிந்துரைகளின்படியும் அமைகிறது.

நிதி ஒதுக்கீடு: இந்த வரவு – செலவுத் திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஏற்பளித்தவுடன் அதில் விவரிக்கப்பட்டுள்ள செலவுகளைச் செய்ய அரசு அனுமதியளிக்கிறது. இதுவே “நிதி ஒதுக்கீடு’ என்று அழைக்கப்படுகிறது.

வரவு – செலவுத் திட்ட முன் மதிப்பீடுகள்: வரப்போகும் ஆண்டில் பல்வகை ஆதாரங்களிலிருந்தும் அரசுக்குக் கிடைக்கக்கூடிய வரவுகளை மதிப்பிடுதல்.

இந்தப் பணத்தையும் முந்தைய ஆண்டின் கையிருப்பையும் ஒருங்கு சேர்த்தால் எதிர்பார்க்கப்படும் எல்லாச் செலவுகளையும் ஈடுகட்ட முடியுமா என்பதை ஆய்வு செய்து மதிப்பிடுதல்.

வரவையும் செலவையும் ஈடுகட்ட வரி விதிப்பை எந்த அளவுக்குக் கூட்டுவது அல்லது குறைப்பது என்பதை முடிவு செய்தல் ஆகியவையாகும்.

“தொகு நிதி’ – Consolidated Fund என்பது வரவு – செலவுத் திட்ட அறிக்கை – ஐ -) வருவாய்க் கணக்கு வரவினங்கள் என்பதில் காட்டப்பட்டுள்ளபடி, ஓர் ஆண்டில் கிடைக்கும் அரசின் இயல்பான வருமானம், தொகு நிதியின் ஒரு பகுதியாக அமைகிறது.

“சாட்டிய செலவுகள்’ (Charged Expenditure) என்பவை தொகு நிதியில் முதல் பொறுப்பாக உள்ள செலவுகள் ஆகும். இவற்றுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை.

“எதிர்பாராத செலவு நிதி’ (Contingency Fund) என்பது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் முன்னர் நிர்வாகத்தினரின் அவசரச் செலவுகளுக்கு வகை செய்வதாகும்.

நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பற்றிய பல சுவையான விவரங்கள்:

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அதாவது நாலைந்து மாதங்களுக்கு முன்பே மத்திய நிதியமைச்சகம் இப்பணியைத் தொடங்கி விடுகிறது. நிதியமைச்சகத்தின் செயலாளர் பொருளாதார நிபுணர்களுடனும், நிதி ஆலோசகர்களுடனும், தொழிற்சங்கத் தலைவர்களுடனும் இதர பல தரப்பினருடனும் இதுகுறித்து ஆலோசிக்கிறார். பின் நிதித்துறை ஒவ்வோர் அமைச்சகத்தின் செலவு குறித்து அறிக்கையைப் பெறும். இறுதியாகக் கணினி மூலம் தயாரிக்கப்பட்டு நகல் அறிக்கை “தேசிய தகவல் மையத்திற்கு’ அனுப்பப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பு மிகவும் ரகசியமாக நடக்கிறது. அதைத் தயாரிக்கும் நிதித்துறை அலுவலகத்துக்குள் எவரும் எளிதில் செல்ல முடியாது.

பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் இடம் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். அங்கு நூறு பேர் பணியில் இருப்பார்கள். துணைச் செயலாளர்கள், அச்சடிப்போர், பிழை திருத்துவோர், பைண்டிங் செய்பவர்கள், உதவியாளர்கள் மட்டுமே அங்கு இருப்பர். இவர்கள் தங்கும் இடத்தில் படுக்கை வசதி, மருத்துவ வசதி, தொலைக்காட்சி என வசதிகள் செய்து தரப்படும். அங்கு பூட்டிய தொலைபேசி மட்டும் இருக்கும். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டும்தான் அதைப் பயன்படுத்த முடியும். இவர்களுக்குத் தேவையான உணவு நிதி அமைச்சக உணவு விடுதியிலிருந்து தயார் செய்து பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பி வைக்கப்படும். இப்பணியில் ஏழு நாள்கள் ஈடுபட்டு இருப்போருக்கு பரிசுகளும், மூன்று மடங்கு ஊதியம் உயர்த்தியும் தரப்படும்.

பட்ஜெட் பிரதிகள் மொத்தம் 12,500 அச்சடிக்கப்படும். அந்த அச்சகத்திற்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்பும் உண்டு. இந்தக் கட்டுப்பாடுகளையும் மீறி நிதிநிலை அறிக்கையின் விவரங்களோ நிதிநிலை அறிக்கையோ வெளியே தெரிந்தால் அரசு வெளியேற வேண்டும் என்ற மரபும் நடைமுறையில் உள்ளது. தேர்வெழுதும் மாணவரின் கேள்வித்தாள் போன்று பட்ஜெட் ரகசியம் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய “சிதம்பர’ ரகசியமே.

தற்போது வெளியிடப்படவுள்ள மத்திய பட்ஜெட் நாட்டின் 61-வது பட்ஜெட் ஆகும். சுதந்திர இந்தியாவின் முதலாவது வரவு – செலவுத் திட்டத்தை வழங்கியது ஆர்.கே. சண்முகம் செட்டியார் என்ற தமிழர்தான். மத்திய நிதி அமைச்சர் பதவியை வகிக்கும் 5-வது தமிழர் ப.சிதம்பரம். இதற்கு முன் ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி .டி . கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்பிரமணியம் மற்றும் ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் மத்திய பட்ஜெட்டைத் தயாரித்து வழங்கியுள்ளனர்.

எட்டு முறை பட்ஜெட்டுகளையும், இரண்டு இடைக்கால பட்ஜெட்டுகளையும் தயாரித்து வழங்கிய மொரார்ஜி தேசாயின் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

எனினும், 1951 – 52ஆம் ஆண்டிலிருந்து 1956 – 57 வரை மொத்தம் ஏழு பட்ஜெட்டுகளை (ஆறு முழுமையானவை, ஒரு இடைக்கால பட்ஜெட்) தொடர்ந்து வழங்கி சாதனை புரிந்துள்ளார் சி.டி . தேஷ்முக்.

நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோன் உயரும். அதுபோல் மக்கள் வளர்ந்தால் நாடு வளரும் என்ற அடிப்படைக்கு ஆதாரம் ஜனநாயகத்தில் ஆட்சியாளரின் வரவு – செலவுத் திட்டங்கள் ஆகும்.

இந்த வரவு – செலவுத் திட்டங்கள் வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் மக்களின் உணர்வுகள் என்ற அடிப்படையில் சிந்தித்து தங்களுடைய கடமைகளை ஆட்சியாளர்கள் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர், தலைமைக் கழக செயலாளர்}மறுமலர்ச்சி திமுக).

Posted in 2007, 2007-08, Analysis, Backgrounder, Budget, Cabinet, Chidambaram, Chidhambaram, Commerce, Consolidated Fund, Details, Economy, Finance, India, Indian, P Chithambaram, Predictions, Preview, revenue, Tax | Leave a Comment »

Laloo Prasad Yadav – Railway Budget 2007-08: Information, Analysis, Schemes & Opinion

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

ரயில்வே பட்ஜெட் 2007: தமிழக ஒதுக்கீடு ரூ.1232 கோடி – சேலம் கோட்டத்துக்கு ரூ.3 கோடி

நமது சிறப்பு நிருபர்

புதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்தின் ரயில் திட்டங்கள் மற்றும் திட்டம் சாரா செலவினங்களுக்கு ரூ.1232 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடான

  • ரூ.457 கோடியுடன் சேர்த்து, மொத்தம்
  • தமிழகத்துக்குக் கிடைத்தது ரூ.633 கோடி.
  • இந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடு மட்டும் ரூ.706 கோடி.
  • அதாவது, திட்டங்களுக்கு மட்டும் ரூ.249 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அத்துடன், திட்டம் சாரா செலவினங்களுக்காக ரூ.526 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மொத்தத்தில் ரூ.1232.77 கோடி தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது.

இதில்,

  • புதிய பாதைகள் அமைக்க ரூ.40 கோடி,
  • அகலப்பாதையாக மாற்றும் பணிக்கு ரூ.595 கோடி,
  • இரட்டைப் பாதை அமைக்க ரூ.195 கோடி,
  • போக்குவரத்து விளக்கு, பணிமனை மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.45 கோடி,
  • சாலைப் பாதுகாப்பு (லெவல் கிராஸிங்) ரூ.38 கோடி,
  • ரயில்வேயின் சாலை மேம்பாலம், சாலை கீழ்பாலம் கட்ட ரூ.40 கோடி,
  • இருப்புப் பாதை சீரமைக்க ரூ.152 கோடி,
  • புதிய மற்றும் நடைமுறையில் உள்ள பாலப் பணிகளுக்கு ரூ.5 கோடி,
  • சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்புப் பணிகளுக்கு ரூ.65 கோடி,
  • பயணிகள் வசதிக்கு ரூ.24 கோடி,
  • மின்மயமாக்குதல் ரூ.5 கோடி,
  • சிறப்பு ரயில்வே நிதியின் கீழ் ரூ.27 கோடி ஆகியவை இதில் அடங்கும்.
  • புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேலம் கோட்டத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.3 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இக் கோட்டம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்று வேலு தெரிவித்தார்.

அகலப்பாதையாக மாற்றும் பணிகளுக்காக நாடு முழுவதும் ரூ.2400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தென்னக ரயில்வேக்கான ஒதுக்கீடு ரூ.485 கோடி.

தமிழகத்தில் 4 புதிய ரயில் தடங்களுக்கு ஆய்வு நடக்கும்

நமது சிறப்பு நிருபர்

புதுதில்லி, பிப். 27: தமிழகத்தில் நான்கு புதிய ரயில் வழித்தடங்களுக்கான பூர்வாங்க சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மொரப்பூர் -தருமபுரி,
  • மதுரை -காரைக்குடி,
  • நீடாமங்கலம் -புதுக்கோட்டை,
  • திண்டுக்கல் -குமுளி (போடிநாயக்கனூர் வழி) ஆகியவை அந்த நான்கு புதிய வழித்தடங்கள்.

இத் திட்டங்களுக்கான ஆய்வுகள் இந்த ஆண்டிலேயே, விரைவில் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.
மின்மயமாக்கல் திட்டத்தில்,

  • ஈரோடு -எர்ணாகுளம் (ரூ.10 லட்சம்),
  • தாம்பரம் -செங்கல்பட்டு (ரூ.5.98 கோடி),
  • விழுப்புரம் -திருச்சி (ரூ.5 கோடி) ஆகிய மார்க்கங்களுக்கு மொத்தம் ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • திண்டுக்கல் -பொள்ளாச்சி -பாலக்காடு மற்றும்
  • பொள்ளாச்சி -கோவை மார்க்கத்தில் போத்தனூர் -கோவை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.6 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • விழுப்புரம் -காட்பாடி மார்க்கத்தில் வேலூர் -திருவண்ணாமலை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.84 கோடி,
  • திருச்சி -மானாமதுரை மார்க்கத்தில் காரைக்குடி -மானாமதுரை அகலப்பாதைக்கு ரூ.60 கோடி கிடைத்துள்ளது.
  • திருச்சி -நாகூர் -காரைக்கால் மார்க்கத்தில் திருவாரூர் -நாகூர் அகலப்பாதைக்கு ரூ.30 கோடி,
  • மதுரை -திண்டுக்கல் அகலப்பாதைக்கு ரூ.62 கோடி அளிக்கப்படும்.

தமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்கள்

நமது சிறப்பு நிருபர்

புதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்களும், 5 புதிய ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • மதுரை வழியாக கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்,
  • யஷ்வந்த்புரம் -சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ்,
  • சென்னை எழும்பூர் -நாகூர் எக்ஸ்பிரஸ்,
  • எழும்பூர் -ராமேஸ்வரம் (வாரம் 6 முறை),
  • புவனேஸ்வரம் -ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் புதியவை.

இதில், கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தவிர மற்ற ரயில்கள், மீட்டர்கேஜ் பாதை அகலப்பாதையாக்கும் பணி முடிந்ததும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், தற்போதைக்கு ஈரோடு வழியாக இயக்கப்படும். கோவை -மதுரை இடையிலான பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டதும் அறிவிக்கப்பட்ட பாதையில் இயங்கும் என ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.

ராமேஸ்வரம் வரையிலான மீட்டர்கேஜ் பாதை, மார்ச் 31-ம் தேதிக்குள் அகலப்பாதையாக மாற்றப்படும். நாகூர் பாதை இந்த ஆண்டு இறுதியில் அகலப்பாதையாக மாற்றப்பட்டுவிடும் என வேலு தெரிவித்தார்.

கோட்டயம் -திருவனந்தபுரம் இடையிலான பாசஞ்சர் ரயில், நாகர்கோவில் வரை நீடிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் நான்கு புதிய திட்டங்கள் ரூ.41 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.

  • கரூர் -சேலம் (ரூ.20 கோடி),
  • பெங்களூர் -சத்தியமங்கலம் (1 கோடி),
  • திண்டிவனம் -செஞ்சி -திருவண்ணாமலை (10 கோடி),
  • திண்டிவனம் -நகரி (10 கோடி) ஆகியவை இதில் அடங்கும்.

ரயில்வே மேம்பாலங்களைப் பொருத்தவரை, நாடு முழுவதும் 93 மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 38 மேம்பாலங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாக தமிழகத்துக்குக் கிடைத்திருப்பதாக வேலு தெரிவித்தார்.

அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி வசதியில்லாத தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் 4% கட்டணம் குறைப்பு

சென்னை, பிப். 27: வரும் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி செய்யப்படாத (நான்-ஏசி), தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் (அனைத்து காலங்களிலும்) 4 சதவீதம் கட்டண குறைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு (81 படுக்கை), ஏசி சேர் கார் (102 படுக்கை) ஆகிய பெட்டிகளில் மட்டும் விழாக்காலங்களில் 3 சதவீதமும், சாதாரண காலங்களில் 6 சதவீதமும் குறைக்கப்பட உள்ளது.

பாண்டியன், அனந்தபுரி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் பண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆனால், ரயில்களுக்கு ரயில் பண்டிகைக் காலம், சாதாரண காலத்தை நிர்ணயிப்பதில் வேறுபாடு தொடர்கிறது).

கட்டணம் குறைப்பு சலுகை யாருக்கு?: சாதாரண பாசஞ்சர் ரயில்களில் 2-ம் வகுப்பு கட்டணமும், சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களில் (நான்-சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள்) 2-ம் வகுப்பு கட்டணமும் ஒரு நபருக்கு தலா ரூ. 1 மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.

இச் சலுகை ரயில் நிலையங்களில் தினமும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி (முன்பதிவு செய்யாமல்) பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

பண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் முக்கிய ரயில்களில் மட்டும் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும்.

இந்த ரயில்களின் பட்டியல் குறித்து பின்னர் வெளியிடப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (முறையே தூங்கும் வசதியுள்ள 2-ம் வகுப்பு பெட்டி, ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, முதல் வகுப்பு) உள்ள தற்போதைய கட்டண விவரம் (ரூபாயில்):

தில்லி: 537, 3609, 2071, 1455. (ஏழைகள் ரதம் ரயிலில் கட்டணம் மாற்றம் இல்லை).

மும்பை: 405, 2660, 1534, 1084.

கோல்கத்தா: 469, 3120, 1794, 1264.

ஐதராபாத்: 301, 1915, 1113, 792.

புனே: 377, 2459, 1421, 1005.

பெங்களூர்: 195, 1176, 684, 493.

சென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் கட்டண விவரம்: கன்னியாகுமரி: 309, 1970, 1444, 910, 814.

நாகர்கோவில்: 304, 1933, 1123, 893, 899.

தூத்துக்குடி: 286, 1805, 1051, 000, 749.

நெல்லை: 286, 000, 1051, 835, 749.

திருவனந்தபுரம்: 342, 2209, 1279, 000, 907.

மதுரை (பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில்): 235, 1460, 844, 680, 604.

சென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி சேர் கார் கட்டணம் ரூ. 479; இரண்டாம் வகுப்பு சேர் கார் ரூ. 142.

திருச்சி: 166, 1069, 617, 491, 437.

கோவை: 235, 1460, 844, 000, 604.

சேலம்: 166 (2-ம் வகுப்பு அமர்ந்து செல்லும் இருக்கை வசதி ரூ. 101 மட்டும்) 1061, 617, 491, 437. சென்னை-சேலம் செல்லும் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி சேர் கார் ரூ. 372, 2-ம் வகுப்பு சேர் கார் ரூ. 111 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதர கட்டணம் ரூ.2 குறைப்பு: சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண 2-ம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கான இதர கட்டணங்கள் (எக்ஸ்ட்ரா) ரூ. 10-ல் இருந்து ரூ. 8 ஆக குறைக்கப்படும்.

புறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி: சென்னையில் புறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி இணைக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

Dinamani Editorial
லாலுவின் சாதனை

ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தொழில்துறையினர் மட்டுமன்றி பொதுமக்களில் பலதரப்பினரும் வரவேற்கத்தக்க ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.

சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. உயர்வகுப்பு பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுப்படையாகச் சொல்வதானால் லாலுவின் ரயில்வே பட்ஜெட் நாட்டில் தற்போதுள்ள பணவீக்கப் போக்கை மட்டுப்படுத்துகின்ற அளவில் உள்ளது.

லாலு ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது இது நான்காவது தடவையாகும். கடந்த மூன்று ரயில்வே பட்ஜெட்டுகளைவிட இந்தப் பட்ஜெட்டில் சில கொள்கைத் திட்டங்கள் தென்படுகின்றன. பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள மாதங்கள், பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள மாதங்கள் என வகை பிரிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் விமான நிறுவனங்கள் இவ்விதம் பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள காலங்களில் கட்டணச் சலுகைகளை அறிவிப்பது உண்டு. ரயில்வே அமைச்சர் அத்தகைய கட்டணச் சலுகை முறையை அமல்படுத்தியுள்ளார். இது இந்திய ரயில்வேயில் இதுவரை இல்லாத புதிய ஏற்பாடாகும்.

உயர்வகுப்புக் கட்டணங்கள் குறைக்கப்படுவதற்குக் காரணம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாகத் தனியார் துறையில் நகரங்களுக்கு இடையே விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிடமிருந்து எழுந்துள்ள போட்டியைச் சமாளிக்க ரயில்வேயின் இக் கட்டணக் குறைப்பு உதவும்.

ரயிலில் நீண்டதூரப் பயணங்களுக்கு டிக்கெட் வாங்குவதென்றால் ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்த நிலைமை இதுவரை இருந்து வந்துள்ளது. பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றிலும் ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் வசதி இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுவிஷயத்தில் நவீனத் தொழில்நுட்ப முறையை ரயில்வே பின்பற்றுவது வரவேற்கத்தக்கது. இவையெல்லாம் நடுத்தர வகுப்பினருக்குப் பயனுள்ளவை.

புதிய ரயில்களில் முன்பதிவு தேவைப்படாத ரயில் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. இது சாதாரண மக்களுக்கும் திடீர்ப் பயணம் மேற்கொள்வோருக்கும் பெரிதும் உதவும். காய்கறி, பால் போன்றவற்றை எடுத்துச் செல்வோருக்குக் கூடுதல் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இவை குளிர்சாதன வசதி கொண்டவையாக இருந்தால் மேலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

அமைச்சர் லாலு பிரசாத் கடும் எதிர்ப்பை வரவழைத்துக் கொள்ளாதவகையில் படிப்படியாகத் தனியார் துறையின் ஒத்துழைப்பைப் பெற்று வருகிறார். இது சரியான அணுகுமுறையே. ரயில்வே இலாகா நடப்பு நிதியாண்டில் ரூ. 20 ஆயிரம் கோடி லாபம் சம்பாதிக்க இருக்கிறது என்றால் அதற்கு இந்த அணுகுமுறையும் ஒரு காரணம். இதே ரயில்வே இலாகா முன்பு ஒருசமயம் மத்திய அரசுக்கு வழக்கமான ஈவுத் தொகையைக்கூட வழங்க முடியாமல் திண்டாடியது உண்டு.

கடந்த காலங்களில் ஒருவர் ரயில்வே அமைச்சர் ஆகிறார் என்றால் அவர் தமது மாநிலம் அதிக நன்மையை அடைகின்ற வகையில் பல புதிய ரயில்வே திட்டங்களை அறிவிப்பது வழக்கம். இந்த விரும்பத்தகாத போக்குக்கு இலக்கு ஆகாத ரயில்வே அமைச்சர் என்று லாலுவைக் குறிப்பிடலாம்.

கடந்தகாலத்தில் பல்வேறு ரயில்வே அமைச்சர்களும் அறிவித்த புதிய ரயில் பாதைத் திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்கு இன்னும் 38 ஆண்டுகள் ஆகும் என்று அண்மையில் ஒரு கமிட்டி கூறியுள்ளது. அமைச்சர் லாலு பிரசாத் இதில் கவனம் செலுத்தி இவற்றை நிறைவேற்றி முடிக்க காலக்கெடு நிர்ணயிப்பது அவசியம்.

தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இல்லாத ரயில் பெட்டிகளை வடிவமைத்தல், விபத்து என்றால் சுக்குநூறாக நொறுங்கிவிடாத ரயில் பெட்டிகளைத் தயாரித்தல் ஆகியவற்றில் நாம் இன்னும் போதிய கவனம் செலுத்தவில்லை. இத்தகைய ரயில் பெட்டிகளைத் தயாரிக்கச் செலவு அதிகமாகும். எனினும் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி விரைவில் இதுவிஷயத்தில் லாலு கவனம் செலுத்த வேண்டும்.

மன்னார்குடி – நீடாமங்கலம்: இடையே ரயில் விட மத்திய அரசு முடிவு

சென்னை, பிப். 28 : மன்னார்குடி – நீடாமங்கலம் இடையே மீண்டும் ரயில் பாதை அமைத்து ரயில்களை இயக்க மத்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி. ஆர். பாலுவுக்கு ரயில்வே துறை இணை அமைச்சர் வேலு கடிதம் அனுப்பியுள்ளார்.

“”நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடிக்கும் அங்கிருந்து பட்டுக்கோட்டை வரை ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும்.

திருக்குவளை வழியாக…: “”மேலும் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்க, வேளாங்கண்ணி – திருத்துறைப்பூண்டி இடையே திருக்குவளை, எட்டுக்குடி வழியாக புதிய ரயில் பாதை அமைக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது” என்று அக் கடிதத்தில் வேலு குறிப்பிட்டுள்ளார்.

ரெயில்வே பட்ஜெட்: முதல் வகுப்பு-புறநகர், 2-வது வகுப்பு கட்டணம் குறைந்தது; மாணவர்கள்-பெண்களுக்கு சலுகை

புதுடெல்லி, பிப். 26-

2007-08-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை பாராளு மன்றத்தில் இன்று ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத் யாதவ் தாக்கல் செய்தார்.

பயணிகளை கவரும் வகையிலும், அவர்கள் பாது காப்பை கவனத்தில் கொண் டும் பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளதாக லல்லுபிரசாத் கூறினார். பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் இதை பிரதிபலிப்பதாக இருந்தன.

ரெயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இந்திய ரெயில்வேக்கு கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது. ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு கட்டண வருமானம் இதே காலக்கட்டத்தில் 17 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறிப்பாக சிமெண்ட்-சரக்கு போக்குவரத்து நாடெங்கும் 30 சதவீத அளவுக்கு அதிகரித் துள்ளது. தனியார் கண் டெய்னர்கள் 15 பேருக்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலான பயணிகள் பயணம் செய்ய வசதியாக ஜெய்ப்பூர்-பிபவா இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட “டபுள் டெக்கர் ரெயில்” விடப்படும். சரக்கு போக்குவரத்து மேம் படுத்தப்படும். 2008-ல் கூடுதலாக 6 கோடி டன் சரக்குகளை கையாளும் வகையில் ரெயில்வே துறை நவீனப்படுத்தப்படும்.

இது ஏழைகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட். ரெயில்வே துறை முழுமையாக சீரமைப்பு செய்யப்படும். பயணிகள் வசதிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சரக்குபெட்டி பயணிகள் பெட்டிகள் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்படும்.

முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக 800 பயணிகள் பெட்டிகள் சேர்க்கப்படும். தற்போது முன்பதிவு செய்யப்படாத ரெயில்களில் சாதாரண வகுப்புகளில் பயணம் செய் பவர்களுக்கு கட்டை சீட்களே உள்ளன. அடுத்த நிதி ஆண்டு இந்த மரக்கட்டை இருக்கைகள் மாற்றப்பட்டு சொகுசாக பயணம் செய்வதற்காக மெத்தை இருக்கைகள் (குசன்சீட்) பொருத்தப்படும்.

தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 முன்பதிவு செய்யாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இனிவிடப்படும் புதிய ரெயில் களில் முன்பதிவு செய்யாத 6 பெட்டிகள் இணைக்கப்படும்.ஊனமுற்றோருக்கு எளி தில் உதவும் வகையில் இனி ரெயில் பெட்டி வடிவமைப்பு களில் மாற்றம் கொண்டு வரப்படும்.

தற்போது ரெயில் பெட்டி களில் தூங்கும் வசதி கொண்ட படுக்கை சீட்டுகள் 72 உள்ளன. இனி இது 84 ஆக உயர்த்தப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆயிரம் தானியங்கி டிக்கெட் கொடுக்கும் எந்திரங்கள் நிறுவப்படும்.

டிக்கெட்டுக்களை முன் பதிவு செய்ய ரெயில்வே கால் சென்டர்கள் உருவாக்கப்படும். மத்திய அரசு தேர்வு மற்றும் ரெயில்வே அலுவலக தேர்வு எழுத செல்பவர்களுக்கு ரெயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப் படும்.

ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க சேரும் கூட்டத்தை தவிர்க்கவும், பயணிகள் வசதிக்காகவும் இனி பெட்ரோல் பங்குகளிலும் பணம் எடுக்கும் ஏடிஎம் மையங்களிலும், தபால் நிலையங்களிலும், ரெயில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும்.

பயணிகள் ரெயிலில் இனி காய்கறி வியாபாரிகளுக்கும், பால்காரர்களுக்கும் தனி பெட்டி இணைக்கப்படும். நாடெங்கும் விரைவில் 200 நவீன மாதிரி ரெயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

படுக்கை வசதியில் கீழ் இருக்கையை வழங்க பெண்களுக்கும், முதியோர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும். மும்பை புறநகர் ரெயில் பயணிகள் மேம்பாட்டுத்திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சரக்கு போக்கு வரத்துக்கான விசேஷ இருப்புபாதைகள் கட்டும்பணி 2007-08-ல் தொடங்கும். அதற்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்யப்படும்.

வரும் மார்ச் மாதத்துக்குள் நாடெங்கும் புதிதாக 225 ரெயில் நிலையங்கள் கட்டப் படும்.

ரெயில் போக்குவரத்து மற்றும் டிக்கெட் போன்ற விசாரணைகளுக்கு நாடு முழுவதும் 139 என்ற ஒரே மாதிரியான டெலிபோன் நம்பர் அறிமுகம் செய்யப்படும். ரெயில்வேத்துறை எக் காரணம் கொண்டு தனியார் மயமாகாது.

குறைந்த தூரங்களுக்கு இடையே அதிவேக ரெயில்கள் இயக்கப்படும். இருப்புப் பாதைகளை மின் மயமாக்குவது அதிகரிக்கப் படும். நாடெங்கும் முக்கிய நகரங்களின் புறநகர் ரெயில் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு பயணத்துக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும்.

ரெயில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. சரக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை. பயணிகள் நலனுக்காக 32 புதிய ரெயில்கள் விடப்படும். ஏழைகள் பயன்பெறுவதற்காக 8 ஏழைகள் ரதம் புதிதாக அறிமுகம் செய்யப்படும்.

அனைத்து உயர் வகுப்பு கட்டணங்களும், ஏ.சி. வகுப்பு கட்டணங்களும் குறைக்கப்படும். எல்லா புறநகர் ரெயில்களின் கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்படும்.

அனைத்து ரெயில்களிலும் 2-ம் வகுப்பு கட்டணத்துக்கான கூடுதல் வரிவிதிப்பில் 20 சதவீதம் குறைக்கப்படும். இதனால் 2-ம் வகுப்பு கட்டணம் குறைகிறது. 23 ரெயில்களின் தூரம் நீட்டிக்கப்படும்.

உயர் வகுப்பு கட்டண குறைப்பு விவரம் வருமாறு:-

நெருக்கடி இல்லாத சாதாரண நாட்களில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 6 சதவீதம் குறைக்கப்படும். ஆனால் பிசியான சீசனில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 3 சதவீதம் குறைக்கப்படும். இது போல ஏ.சி. இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான கட்டணம் பிசியான சீசனில் 2 சதவீதம் குறைக்கப்படும். சாதாரண நாட்களில் இந்த வகுப்புக்கான கட்டண குறைப்பு 4 சதவீதமாக இருக்கும்.

ஏ.சி. சேர் கார் கட்டணம் பிசியான சீசனில் 4 சதவீதமும், சாதாரண நாட்களில் 8 சதவீதமும் குறைக்கப்படும். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளில் கட்டண குறைப்பு அனைத்து சீசன்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பை தடுக்க ரெயில்களில் கேமரா- மெட்டல் டிடெக்டர்

ரெயில்களில் குண்டு வெடிப்பு, நாசவேலைகளை தடுக்க ரெயில் கதவுகளில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்படும்.

கண்காணிப்பு கேமரா, டெலிவிஷன் ஆகியவையும் ரெயில் பெட்டிகளில் அமைக்கப்படும்.

ரெயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 8 ஆயிரம் பணியிடம் நிரப்பப்படும்.

ஏழை மக்களும் ஏ.சி. ரெயிலில் பயணம் செய்யும் வகையில் மேலும் 8 ஏழைகள் ரதம் ரெயிலை லல்லுபிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்தார். அதன் விவரம்:-

1.செகந்திராபாத்- யெஷ்வந்த்பூர் (வாரம் 3 முறை)

2. ஜெய்ப்பூர்-பந்த்ராஅகமதாபாத் வழியாக(வாரம் 3 முறை)

3. கொல்கத்தா- பாட்னா (வாரம் 3 முறை)

4. புவனேஸ்வர்-ராஞ்சி (வாரம் 3 முறை)

5. திருவனந்தபுரம்- லோக்மான்யா திலக் (வாரம் 2 முறை)

6. கொல்கத்தா- கவுகாத்தி (வாரம் 2 முறை)

7. புதுடெல்லி- டேராடூன் (வாரம் 3 முறை)

8. ராய்பூர்- லக்னோ (வாரம் 2 முறை)

ரெயில் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்

மத்தியமந்திரி லல்லுபிர சாத்தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் அறி விக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*முதல்வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டணம் குறைப்பு.

* புறநகர் ரெயில்களுக்கு பயணிகள் கட்டணம் ரூ.1 குறைக்கப்படுகிறது.

*சூப்பர் பாஸ்ட் ரெயில் களில் 2-வதுவகுப்புகளில் கூடுதல் கட்டணம் (சர் சார்ஜ்) 20 சதவீதம் குறைக் கப்படுகிறது. இதனால் கட்டணம் குறைகிறது.

* பயணிகள் பெயர்களுக்கு பயணஅட்டை முறை அமு லுக்கு வருகிறது.

*23ரெயில் பாதைகள் நீட்டிக்கப்படுகிறது.

* 800 புதிய வேகன் கள் (பெட்டிகள்) சேர்க்கப் படுகின்றன.

* ரெயில்வே துறையில் தனியார் மயமாக்கல் இல்லை.

* முக்கிய ரெயில் நிலையங் களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

*காஷ்மீர் முதல் கன் னியாகுமரி வரை மின் மயமாக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

*கூடுதல் ரெயில் என் ஜின்கள் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படும்.

* 32 புதிய ரெயில்கள், 8 ஏழைகள் ரதம் இந்த ஆண் டில் விடப்படும்.

* மும்பையில் புறநகர் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

*பாசஞ்சர் ரெயில்களில் வியாபாரிகள், பால் ஆகியவற்றை கொண்டு செல்ல தனி பெட்டிகள் விடப்படும்.

*மத்திய தேர்வாணை குழு தேர்வு(யு.பி.எஸ்.சி.) எழுத செல்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை.

*பெட்ரோல் நிலையங்கள், மற்றும் ஏடிஎம் மையங்களில் ரெயில் டிக்கெட் விற் பனை.

* படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72ல் இருந்து 84 ஆக உயருகிறது.

*2007-2008ம் ஆண்டை ரெயில்வே சுத்தமான ஆண்டாக கடைபிடிக்கும்.

*300 ரெயில் நிலையங்கள் மாதிரி ரெயில் நிலையமாக உயர்த்தப்படும்.

* முக்கிய நகரங்களில் 6000 தானியங்கி டிக்கெட் இயந்திரம் வைக்கப்படும்.

* ரெயில் பயணிகள் 139 என்ற எண்ணை டயல் செய்து உள்ளூர் கட்ட ணத்தில் தொலை பேசியில் பேசலாம்.

*உடல் ஊனமுற்றோ ருக்காக 1250 சிறப்பு பெட் டிகள் உருவாக்கப்பட்டு வரு கின்றன.

*முதியோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் களுக்கு ஏ.சி. மற்றும் 2வது வகுப்பு படுக்கை வசதியில் முன்னுரிமை வழங்கப்படு கிறது.

*ஒவ்வொரு ரெயிலிலும் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளின் எண் ணிக்கை 4ல் இருந்து 6ஆக உயர்த்தப்படும்.

*பயணிகளுக்கு இருக் கைகள் மெத்தை வசதி செய் யப்படும் மரஇருக்கைகள் இனி கிடையாது.

*கண்டெய்னர் போக்கு வரத்து 5 மடங்காக அதிக ரிக்கும்.

* 3 அடுக்கு கண்டெய்னர் ரெயில்கள் விடப்படும்.

* சிமெண்ட், ஸ்டீல் சரக்கு போக்குவரத்து 30 சதவிதம் அதிகரிக்கப்படும்.

* பயணிகளின் அனைத்து புகார்களும் 3 மாதத்தில் கவ னிக்கப்படும்.

2006-2007ல் ரெயில்வே துறைக்கு 20 ஆயிரம் கோடி லாபம்.

=====================================================================
பாதுகாப்புக்கு 8000 பேர் நியமனம்: ரயில்வே இணை அமைச்சர் வேலு

வேலூர், மார்ச் 19: ரயில்வே துறையில் பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்தும் வகையில் 8 ஆயிரம் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்தார்.

நடப்பாண்டில் நாடு முழுவதும் 334 ரயில் நிலையங்கள் முன்மாதிரி நிலையங்களாக மாற்றப்படும் என்றார் அவர்.

வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அமைச்சர், நிருபர்களிடம் கூறியதாவது:

வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ.2.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைப்பாதை பணிகளும், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை பணிகளும் நடந்து வருகின்றன.

வேலூர்-விழுப்புரம் அகல ரயில் பாதை பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தேறி வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் இப்பணி நிறைவடையும்.

திண்டிவனம்-நகரி, திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் பாதை ஆய்வுப் பணிகளுக்காக தலா ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 71 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10-வது ஐந்தாண்டு திட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விழுப்புரம்-திருச்சி இடையிலான 167 கி.மீட்டர் தூரத்துக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போது திருச்சி-மதுரை இடையிலான 147 கி.மீட்டர் தூரத்தை மின்மயமாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

2006-07-ம் ஆண்டில் 104 மேம்பாலங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டது. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 33 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில் நாட்டில் 93 மேம்பாலங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 38 மேம்பாலங்கள் தமிழகத்தில் வருகின்றன என்றார் வேலு.
===================================================================================================================
கலாசார மையமாகிறது வேலூர் கோட்டை!: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில்

சென்னை, மார்ச் 19: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

சிப்பாய் கலகம் நடந்த வேலூர் கோட்டையை நாட்டின் மிகப் பெரிய கலாசார மையமாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காந்தியடிகளின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவில், அறப்போரில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படக் கண்காட்சியை அவர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படங்களை எனது துறையின் மூலம் பல்வேறு மாநில மக்களும் அறியும் வகையில் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150-வது ஆண்டு விழா விரைவில் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், டெக்கான் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சுற்றுலா சொகுசு ரயில் சேவை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவையை ரயில்வே துறையும், சுற்றுலா துறையும் இணைந்து நடத்தும்.

நடப்பு ஆண்டில் 300 மண்டலங்களில் வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது என்றார் அம்பிகா சோனி.

—————————————————————————————-

ரயில் சேவைகள் போதாது!

ரயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் முக்கியத்துவத்தைத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் முழுக்க உணரவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க வேண்டும்.

ஒன்று, தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் வசதி இருப்பதால் இதுவே போதும் என்கிற திருப்தி அல்லது பஸ் முதலாளிகளாகவும் இருந்த அந்நாளைய அரசியல் பிரமுகர்கள் பலர், ரயில் போக்குவரத்தைத் தங்களுடைய தொழிலுக்குப் போட்டியாளராகக் கருதி, அது வளராமல் இருந்தால்தான் நமக்கு நல்லது என்று நினைத்து அதைப் பற்றி அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம்.

ரயிலைப் பயன்படுத்துவோர் ஏன் குறைவு என்று எந்த மார்க்கத்திலும் யாரும் சர்வே எடுப்பதில்லை. ரயில் நிலையங்களுக்குச் செல்ல சரியான போக்குவரத்து வசதி, பகல் நேரங்களில் ரயில் பயண சேவை, ரயில் நிலையங்களில் பாதுகாப்பான சூழல் போன்றவை இருந்தால் ரயில்களைப் பயன்படுத்துவதற்குப் பயணிகளுக்குத் தயக்கம் இருக்காது.

இப்போதும்கூட ரயில் போக்குவரத்துக்கும் பஸ் போக்குவரத்துக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. பல ஊர்களில் ரயில் நிலையங்களுக்கும் பஸ் நிலையங்களுக்கும் அடிக்கடி சென்றுவரும் “டவுன்-பஸ்’ இணைப்புகூட கிடையாது. அதேவேளையில் கேரளத்தில் விழிப்புணர்வு உள்ள அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்தியாவின் எல்லா நகரங்களுக்கும் கேரளத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளன. சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கூட எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்படுவது அவர்களின் விழிப்புணர்வுக்குச் சான்று.

சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோவை, வேலூர், திருப்பத்தூர், பெங்களூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு கழிப்பறை வசதியுடன் கூடிய, இருக்கை வசதி மட்டுமே உள்ள ரயில்களைப் பகல் நேரங்களில் அதிக எண்ணிக்கையில் இயக்குவதன் மூலம், சாலைப் போக்குவரத்து நெரிசலையும், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் கணிசமாகக் குறைக்க முடியும். விபத்துகளும் பெரிய அளவில் குறைய வாய்ப்புண்டு. அதற்கு இந்த ஊர்களுக்கு இடையில் இரட்டை ரயில் பாதைகளை அமைப்பதும் அவற்றை மின்மயமாக்குவதும் அவசியம். இது எரிபொருள் (டீசல்) செலவைக் கணிசமாக மிச்சப்படுத்தும். சரக்கு போக்குவரத்துக்கும் கை கொடுக்கும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைப்பதால் நமது நாட்டு அன்னியச் செலாவணி விரயமாவது தடுக்கப்படும்.

முன்பதிவு செய்யாத இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளும் கட்டணம் செலுத்தித்தான் பயணம் செய்கிறார்கள். தங்களுடைய பயணத்தை முன்கூட்டியே திட்டமிட முடியாததாலும், அவசரத் தேவையாலும், அறியாமையாலும் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்கிறார்கள் என்பதை ரயில்வே துறை உணர வேண்டும். அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தக் கூடாது.

முன்பதிவு செய்யாத ரயில் பெட்டியில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், மனநிலை சரியில்லாதவர்கள், குடிகாரர்கள், பெண்களைச் சீண்டுவோர், ஏறும்வழி, நடக்கும் வழி ஆகியவற்றில் அதிக சுமைகளை வைக்கும் அடாவடி சிறு வியாபாரிகள், அரிசி கடத்துவோர், சீசன் டிக்கெட் பயணிகள், ரயில்வே பாஸ் வைத்துள்ளவர்கள் (ஊழியர்களும் சேர்ந்துதான்), இளநீர், வேர்க்கடலை, முந்திரி, சப்போட்டா, மாம்பழம், மாங்காய் போன்றவற்றை விற்போர் என்று ஒரு பெரிய இம்சைப் பட்டாளமே ஏறி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறது.

கழிப்பறை தண்ணீரின்றி, சுத்தப்படுத்தாமல் நாறினாலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டியானால்- அது எவ்வளவு தூரம் போகும் ரயிலாக இருந்தாலும் வழியில் அதற்கு கதி மோட்சமே கிடையாது. விபரீதமாக ஏதாவது நடந்து சங்கிலியைப் பிடித்து இழுத்தால் மட்டுமே அந்தப் பெட்டி இருப்பதையே அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் கண்டுகொள்கிறார்கள். இவையெல்லாம் களையப்பட்டால் ரயில் பயணங்கள் சுகமாவதுடன், அரசுக்குப் பணம் கொழிக்கும் கற்பக விருட்சமாக மேலும் வளம் பெறும்.

நாம் இந்தியாவின் வளர்ச்சியைக் கூர்ந்து கவனித்தால், ரயில் போக்குவரத்து எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அதைச் சார்ந்தே அந்தந்தப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியும் காணப்படுகிறது. தண்டவாளம் இல்லாத தாலுகாவே இல்லை என்கிற நிலையைத் தமிழகம் எப்போது அடையப் போகிறது என்பதைப் பொருத்துதான் நமது பொருளாதார வளர்ச்சி அமையும்!

Posted in 2007, 2007-08, AC, Accidents, Ambika Soni, Analysis, Bridges, broadgauge, Budget, Capex, Capital Expenses, Cashflow, Commerce, Dinamani, Employment, Ettukkudi, Ettukudi, Expenditure, Expenses, Express, Features, Finance, First Class, Flyovers, Freight, Guides, Income, Information, Initiatives, Insights, Jobs, Karunanidhi, Keypoints, Laloo, Laloo Prasad Yadav, Lalu, Mannargudi, Meter gauge, Needamangalam, Notes, Opinion, passenger, Pattukkottai, Pattukottai, Planning, Profits, Railway, Railways, Rates, Revenues, Safety, Satyagraha, Schemes, Second AC, Sleeper, Statement, Takeaways, Tamil Nadu, Thirukkuvalai, Thirukuvalai, Thiruthuraipoondi, Thiruthuraippoondi, Three Tier, Tourism, Tourist, TR Balu, Train, Trains, Velaankanni, Velanganni, Velankanni, Vellore, Velu, Visit, Visitor | 7 Comments »