Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for பிப்ரவரி 12th, 2007

Amitabh Bhachan to contest for Indian President Election?

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

ஜனாதிபதி பதவிக்கு அமிதாப்பச்சன் போட்டியா?

புதுடெல்லி, பிப். 12-

ஜனாதிபதி அப்துல்கலாமின் பதவி காலம் முடிகிறது. எனவே ஜுன் மாதத்துக் குள் புதிய ஜனாதிபதி தேர்ந் தெடுக்கப்பட வேண்டும். அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த சில கட்சிகள் விரும்பு கின்றன. ஆனால் அவர் 2-வது முறை யாக ஜனாதிபதியாக இருக்க விரும்பவில்லை.

காங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, முன்னாள் மத்திய மந்திரி கரண்சிங் இருவரில் ஒருவரை நிறுத்த முடிவு செய்துள்ளது. அப்துல்கலாம் மீண்டும் போட்டியிட பாரதீய ஜனதா கூட்டணி வற்புறுத்தி வருகிறது. அவர் நிற்காவிட்டால் தற்போதைய துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷேகாவத்தை நிறுத்த பாரதீய ஜனதா விரும்புகிறது.

சமாஜ்வாடி கட்சி நடிகர் அமிதாப்பச்சனை நிறுத்த விரும்புகிறது. தெலுங்கு தேசம், அ.தி.மு.க. கட்சிகளின் ஆதர வுடன் நிறுத்த அவர்கள் காயை நகர்த்தி வருகின்றனர். நான் அரசியலுக்கு ஏற்றவன் அல்ல என்று ஏற்கனவே அமி தாப்பச்சன் கூறி இருந்தார். எனவே அவர் இந்த பதவிக்கு போட்டியிட விரும்புவாராப என்று தெரியவில்லை.

கம்ïனிஸ்டு கட்சிகள் சபாநாயகர் சோம்நாத் சட் டர்ஜியை நிறுத்த விரும்பு கின்றன. இதற்கு காங்கிரசின் ஆதரவை பெறவே முயற்சித்து வருகின்றனர். ஆனால் கம்ï னிஸ்டு கட்சிக்கு துணை ஜனாதிபதி பதவியை வழங்க லாம் என காங்கிரஸ் நினைக் கிறது.

நாளை பஞ்சாப்பிலும், அடுத்து மே மாதத்தில் உத்தர பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலுக்கு எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போட வேண்டும் என்பதால் தேர்தல் முடிவுக்கு பிறகு கட்சிகள் இதுபற்றி முடிவு எடுக்க உள்ளன.

Dinamani Editorial (Feb 13, 2007)

மீண்டும் கலாம்

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்து இப் பதவிக்கான வேட்பாளராக யார் நிறுத்தப்படலாம் என்பது பற்றி ஊகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இப் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கரண்சிங், மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஷெகாவத் ஆகியோரின் பெயர்கள் அடிபடுவதாகச் செய்திகள் கூறுகின்றன.

குடியரசுத் துணைத் தலைவராக இருந்து வருபவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்துவது ஒரு சம்பிரதாயமாக இருந்து வந்த காலம் உண்டு. கே.ஆர். நாராயணன், சங்கர்தயாள் சர்மா, ஆர். வெங்கட்ராமன் போன்றவர்கள் இவ்விதம் குடியரசுத் தலைவர்களாக ஆனவர்களே. எனினும் மத்தியிலும் பெருவாரியான மாநிலங்களிலும் காங்கிரஸின் ஆதிக்கம் நிலவிய காலங்களில் இதெல்லாம் சாத்தியமாக இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை. காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் சேர்ந்து யாரை ஆதரிக்கிறார்களோ அவர்தான் குடியரசுத் தலைவராக முடியும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கிறார்கள். எனவே காங்கிரஸ் தனது சொந்த பலத்தை நம்பி யாரையும் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்ய இயலாது.

இப் பின்னணியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை இரண்டாம் முறையாக மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என மக்களின் பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இணையதளத்தில் இதற்கான தீவிர இயக்கம் நடந்து வருகிறது. இதுதொடர்பான கருத்துக்கணிப்புகளில் அப்துல் கலாமையே மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பெருவாரியானவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

நாடு இப்போது இருக்கின்ற தருணத்தில் குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாமைவிடப் பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது எனலாம். கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், விஞ்ஞானி, அப்பழுக்கற்றவர், எந்த அரசியல் சார்பும் பெற்றிராதவர் என பல பரிமாணங்களைக் கொண்ட அப்துல் கலாம், குடியரசுத் தலைவர் பதவிக்குப் புதிய இலக்கணம் வகுத்துள்ளார். குடியரசுத் தலைவர் பதவி என்பது அலங்காரப் பதவியாகவும் அப் பதவியில் உள்ளவரை யாரும் எளிதில் நெருங்க முடியாது என்றும் இருந்த காலம் உண்டு. ஆனால் “அறிவியல் முனிவர்’ என்று வர்ணிக்கத்தக்க அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இறங்கி வந்து மக்களுடன் நெருங்கிப் பழகி வருபவர். குழந்தைகளின் அபிமானத்தைப் பெற்றவர். இளைஞர்கள் மனத்தில் லட்சியக் கனவைத் தோற்றுவித்து அவர்களிடையே எழுச்சியை உண்டாக்கி வருபவர்.

அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவர் ஆக்குவதை பாஜக விரும்புவதாகத் தெரிகிறது. கடந்த டிசம்பரில் பாஜக தலைவர்கள் அப்துல் கலாமைச் சந்தித்து அவர் மீண்டும் போட்டியிடுவதானால் தங்களது ஆதரவு உண்டு என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இக் கட்டத்தில் தங்கள் நிலையை அறிவிக்க விரும்பவில்லை என்று தோன்றுகிறது. நீட்டிய காகிதத்தில் கையெழுத்துப் போடுகிறவர் அல்ல என்று அப்துல் கலாம் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நிரூபித்துள்ளதால் அவரை மீண்டும் நிறுத்துவதில் காங்கிரஸýக்குத் தயக்கம் இருக்கலாம். ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவை நிர்ணயிப்பதில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளுக்கும் போதுமான பலம் உள்ளது.

அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் மீண்டும் அப்துல் கலாமை தேர்ந்தெடுப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். அப்துல் கலாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காக அல்ல. அவர் இந்தியாவின் மாமனிதர் என்பதற்காக.

Posted in Affiliation, Amar Singh, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, APJ Abdul Kalam, Assembly, Author, BJP, Byron Singh Shekavat, Byronsingh Shekawath, Communist, Cong (I), Congress, Congress (I), Congress Party, CPI, CPI (M), Election, Indira Congress, Kalam, Karan Singh, KR Narayan, Lok Sabha, Marxist, Marxist Communist, MLA, MP, Mulayam, Mulayam Singh Yadav, Politics, President, President Election, Punjab, R Venkatraman, scientist, Shankar Dayal Sharma, SJP, Somnath Chatterjee, Sushil Kumar Shinde, Thinker, UP, Uttar Pradesh, vice-president | Leave a Comment »

India relies on the tried and trusted for World Cup – Sourav, Sehwag make it to squad

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

உலககோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு 15 பேர் தேர்வு

மும்பை, பிப். 12-

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 13-ந்தேதி வெஸ்ட் இண்டீசில் தொடங்குகிறது.

இதற்கான 15 வீரர்கள் கொண்ட அணியை 13-ந் தேதிக்குள் (நாளை) அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் சங்கம் கூறி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்வதற்காக தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று நடந்தது. அதன் தலைவர் வெங்சர்க்கார் தலைமை தாங்கினார். 4 தேர்வு குழு உறுப்பினர்கள் மற்றும் கேப்டன் டிராவிட், பயிற்சியாளர் கிரேக் சேப்பல் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். பகல் 11.15 மணிக்கு கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தின் முடிவில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

 1. டிராவிட் (கேப்டன்),
 2. தெண்டுல்கர்,
 3. ஷேவாக்,
 4. கங்குலி,
 5. உத்தப்பா,
 6. யுவராஜ்சிங்,
 7. டோனி,
 8. தினேஷ்கார்த்திக்,
 9. ஹர்பஜன்சிங்,
 10. ஜாகீர்கான்,
 11. முனாப்பட்டேல்,
 12. கும்ப்ளே,
 13. அகர்கர்,
 14. பதான்,
 15. ஸ்ரீசந்த்.

Posted in 2007, Agarkar, Batsman, Batsmen, Bowlers, Cricket, Dhoni, Dinesh karthik, Dravid, Fielder, Ganguly, Harbhajan Singh, India, Kumble, Munaf Patel, ODI, Pathan, Players, Rahul, Sachin, Sehwag, Sourav, Squad, Srichand, Team, Tendulkar, Uthappa, Vengsarkar, West Indies, WI, wicketkeeper, WK, World Cup, Yuvraj Singh, Zakir Khan | Leave a Comment »

‘Desamuduru’ hero Allu Arjun gets robbed by fans

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

ரசிகர்கள் போல் முற்றுகை: நடிகரின் நகைகளை பறித்த திருடர்கள்

நகரி, பிப். 11-

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன். அல்லு அர்ஜுன் நடித்த “தேச முதுரு” படம் 100 நாட்களைத் தாண்டி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் அநியாயங்களைச் தட்டிக் கேட்பவராக நடித்திருக்கிறார்.

இப் படத்தின் வெற்றி விழா குண்டூரில் உள்ள `ராஜ் சென்டர்’ அரங்கத்தில் நடந்தது. இவ்விழாவில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் அவருடன் கைகுலுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருட்டுக் கும்பல் ஒன்று அல்லு அர்ஜுனை ரசிகர்கள் போல சூழ்ந்து கொண்டது.

தன்னைச் சுற்றி நின்று கொண்டிருப்பது திருடர்கள் என்பதை அறியாத அர்ஜுன் அவர்களுடன் கை குலுக்கினார்.

அப்போது திருடர்கள், `அல்லு அர்ஜுன் வாழ்க’ என்று கோஷமிட்டனர். பின்னர் அவரை கட்டிபிடித்து வாழ்த்துவது போல நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த பெரிய தங்க செயின், கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட், வைர மோதிரம், தங்க கடிகாரம், செல்போன், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணிபர்ஸ்.. என்று ஒவ்வொன்றாகப் பறித்தனர்.

பின்னர் கூட்டத்தோடு கூட்டமாக திருடர்கள் நைசாக தப்பி ஓடிவிட்டனர்.

பொது நிகழ்ச்சி ஒன்றில் திருடர்களிடம் அத்தனை நகைகளையும், பணத்தையும் இழந்ததால் அல்லு அர்ஜுன் மிகுந்த வேதனை அடைந்தார்.

அவர் கூறும்போது `ரசிகர்கள்தான் என்னை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிப்பதாக நினைத்தேன். திருடர்கள் இந்த அளவுக்கு துணிச்சலுடன் பொது நிகழ்ச்சிலேயே எனது அத்தனை நகைகளையும் பறித்து சென்றது வேதனையாக உள்ளது. இனி நடிகர்கள், ரசிகர்கள் கும்பலாக வந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது’ என்றார்.

இதே விழாவில் பலரது செல்போன்களும், நகைகளும் திருட்டு போனது. இது பற்றி குண்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டு கும்பலை தேடிவருகிறார்கள்.

Posted in 100th day, Allu Arjun, Andhra, Andhra Pradesh, AP, Celebration, Chiranchivi, Chiranjeevi, Desamudru, Desamuduru, Fans, Pokkiri, Raj Center, Robbery, Siranjeevi, Telugu, Telugu Cinema, Telugu Films, Theft, Thief, Tollywood | Leave a Comment »

25 New movies by Pyramid Natarajan – Kickoff by Karunanidhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

ஒரே நேரத்தில் தயாராகும் 25 புதிய படங்கள்: கருணாநிதி தொடங்கி வைக்கிறார்

சென்னை, பிப். 12-

முதல்-அமைச்சர் கருணாநிதியின் வரிச்சலுகைகள் திரைப்படத்துறைக்கு புதிய வாசலை திறந்து விட்டுள்ளதால் இந்த ஆண்டு 25 புதிய படங்கள் தயாரிக்கப்படும் என்று தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் அறிவித்துள்ளார். பிரமிட் சாய் மிரா தியேட்டர்கள் நிறுவனம் சார்பில் இவை தயாரிக்கப்படுகின்றன. நீண்ட அனுபவம் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் சிறந்த டைரக்டர்களை வைத்து இப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இதற்கான மொத்த செலவு ரூ.200 கோடி.

திரையுலகம் மேம்பட தயாரிப்புத்துறை, விநி யோகஸ்த துறை, பட வெளியீட்டுத்துறை என எல்லா பிரிவினருக்கும் பல சலுகைகளை அறிவித்துள்ள முதல்- அமைச்சர் கருணாநிதியை அழைத்து இப்படங்களுக்கான தொடக்க விழா நடத்தப்படும் என்று பிரமிட் சாய்மிரா தலைவர் நடராஜன் தெரிவித்தார்.

முந்தைய காலங்களில் ஆண்டுக்கு 150 படங்கள் தயாராயின. அவை 100 படங்கள் என குறைந்து தற்போது 80 படங்கள் என ஆகி விட்டன. பிரமிட் தியேட்டர் நிறுவனம் அதிக படங்கள் தயாரிக்கும் பணியில் இறங்கி இருப்பதால் இனி பழைய மாதிரி வருடத்துக்கு 150 படங்கள் ரிலீசாகும் என்றும் தெரிவித்தார்.

இந்நிறுவனம் சார்பில் இந்தியாவில் 230 தியேட்டர்கள் நடத்தப் படு கின்றன. மலேசியா விலும் இது கால் பதிக்கிறது. சென்டி ரியான் பெர்ஹாட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அங்கு 150 புதிய தியேட்டர்களை திறக்கிறது.

தென்னிந்திய மொழி படங்களுக்கு அத்திரைப் படங்களை தயாரித்து முடிப்பதற்கான உறுதியை தருகின்ற வகை யில் மும்பையை சேர்ந்த இன்பினிட்டி இந்தியா அட்வைசர் நிறுவனத்தின் கிளை அமைப்பான `இன்பினிட்டி பிலிம் கம்ப்ளீஷன் சர்வீஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை பிரமிட் மேற் கொண்டுள்ளது. இதன் மூலம் புதிய படங்களுக்கு தாராளமாக நிதி கிடைக்கும் என்று பிரமிட் நிர்வாக இயக்குனர் பி.எஸ். சாமிநாதன் தெரிவித்தார்.

Posted in Cinema, Films, Infiniti India Advisor, Infinity Film Completion Service, Infinity India Adviser, Malaysia, Mu Karunanidhi, Producers, Pyramid, Pyramid Natarajan, Pyramid Saimira, Tamil movie producer, Theaters, Theatre Chain | 1 Comment »

‘Selvi’ actress Devi Priya Marriage – Allegations & dispelling the arguments

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

4 பெண்களை ஏமாற்றிய டி.வி.நடிகையின் காதலன் கேரளாவுக்கு தப்பி ஓட்டம்

சென்னை, பிப்.12-

டி.வி. நடிகை தேவி பிரியா கோழிப்பண்ணை அதிபர் வில்லியம் ஐசக்கை காதலித்தார். இருவரும் வருகிற 19-ந் தேதி பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

தேவிபிரியாவின் காதலன் ஐசக் ஏற்கனவே பல பெண் களை ஏமாற்றி திரு மணம் செய்தவர். அவரது முதல் மனைவி ஸ்டெல்லா ஐசக்கின் லீலைகளை உணர்ந்து கொடுமை தாங்காமல் பிரிந்து சென்று விட்டார். 2004-ம் ஆண்டு அவருக்கு ஐகோர்ட்டு விவாகரத்து வழங்கியது.

திருமணத்தின் போது வரதட்சணையாக வழங்கப் பட்ட 46 சவரன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்க பணத்தை ஸ்டெல்லாவுக்கு ஐசக் திருப்பி தரவில்லை. இது பற்றி மீண்டும் ஸ்டெல்லா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். உடனடியாக அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தர விட்டது. அதன்பேரில் அடையாறு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்தார்.

ஐசக்கின் தாய் குளோரியை போலீசார் கைது செய்தனர். போலீஸ் தேடி வருவதை முன் கூட்டியே அறிந்து கொண்ட ஐசக் தப்பி ஓடி விட்டார். அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தனிப்படை ஒன்று கேரளாவுக்கு விரைந் துள்ளது.

போலீசார் ஐசக் பற்றி விசாரித்த போது அவரது காம களியாட்டங்கள் அம்பல மானது.

அடையாறு வள்ளுவர் நகரில் வசித்து வந்த ஐசக்கின் குடும்பம் அரசியல்ë தொடர் புடையது. தாயார் குளோரி சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலராக இருந்தவர். அரசியல் செல்வாக் கால் ஐசக் மனம் போல் ஆட்டம் போட்டார்.

கால்கட்டு போட்டால் மகன் திருந்தி விடுவான் என்று குளோரி ஸ்டெல்லாவை திரு மணம் செய்து வைத்தார்.

மனைவி வந்த பிறகும் ஐசக் திருந்தவில்லை. திருமணத் திற்கு முன்பே இருந்த பெண் தொடர்புகளை மீண்டும் தொடர்ந்தார். இதுவே அவர்கள் குடும்பத்தில் புயலாக வீசி ஸ்டெல்லா பிரிந்து செல்லும் அளவுக்கு வந்தது.

முன்னாள் கணவரின் செக்ஸ் லீலைகள் பற்றி ஸ்டெல்லா விரக்தியுடன் போலீசில் கூறியதாவது:-

எங்கள் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே செல் போனில் பல பெண்கள் அவருடன் மணிகணக்கில் பேசுவார்கள். நான் ஆரம் பத்தில் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

அவருடன் நான் வாழ்ந்தது 3 மாதம்தான். அப்போது அனுபவித்த கொடுமைகள் ஏராளம். ஸ்டார் வீடியோ விஷன் என்ற பெயரில் சி.டி.விற்பனை கடை நடத்தினார்.

வீட்டில் வேலை இல்லாத நேரத்தில் கடைக்கு செல்வேன். கடையில் வேலை பார்த்த பிரேமா என்ற விதவை பெண் ணை என் கண் எதிரிலேயே காலால் உரசி சில்மிஷன் செய்வார்.

இரவில் வீட்டுக்கு வந்ததும் டி.வி.யில் புளூபிலிம் ஓட விட்டு என்னை பார்க்க சொல்வார். அதே போல் நீயும் நடந்து கொள் என்று படாத பாடு படுத்துவார். தினமும் மது குடிக்க சொல்லி வற்புறுத்துவார். அவரும் மது அருந்தி விட்டு செக்ஸ் டார்ச்சர் பண்ணுவார்.

மதுவின் மயக்கத்தில் தள்ளாடும் ஐசக் இரவில் தூங்கிவிடுவார். காலையில் 6 மணிக்கு எழுந்து வருவார். காலையில் மனதுக்கு இனிமையான பக்தி பாடல்கள்தான் எல்லோர் வீடு களிலும் ஒலிக்கும். ஆனால் எங்கள் வீட்டில் அப் போது புளூ பிலிம் ஓடவிட்டு படம் தெரியா மல் ஆப் செய்து விட்டு ஆடியோவில் முனகல் சத்தத்தை மட்டும் கேட்டு ரசிப்பார்.

மாம்பலத்தை சேர்ந்த கிருஷ்ணகுமாரின் மனைவி ஹேம்மாலினியுடன் கள்ள தொடர்பு வைத்தார். அவரது கணவர் விரட்டி விட்டதால் தனி வீடு எடுத்து ஹேமமாலி னியை தங்க வைத்தார். ஐசக் மூலமாக ஹேமமாலினிக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

மனைவி அடுத்தவருடன் இருந்து குழந்தை பெற்றதும் ஆத்திரம் அடைந்த கிருஷ்ண குமார் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். ஹேமமாலி னியை அனுபவித்த ஐசக் அவளிடம் இருந்து நைசாக கழன்று விட்டார்.

அதன் பிறகு நடிகை தேவிபிரியாவின் தங்கை பிரியாவுடன் சுற்றி திரிந்தார். அவளே கிதி என்று அவள் வீட்டிலேயே கிடந்தார். ஒரு கட்டத்தில் கோவிலில் வைத்து அவளை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு அவளையும் கழட்டிவிட்டு தேவிபிரியாவை பிடித்து கொண்டார் என்றார்.

தலைமறைவாக இருக்கும் ஐசக்கிற்கு புளூ பிலிம் கும்பலுடன் தொடர்வு இருப்பதாக கூறப்படுகிறது. புளூபிலிம் தயாரித்து விற்பனை செய்ததில் லட்ச லட்சமாய் பணம் கொட்டி உள்ளது. இதனால் கழுத்து நிறைய தங்கசங்கிலி, ஆடம்பர கார், தினமும் நட்சத்திர ஓட்டல்களில் விரும்பிய பெண்ணை அனுபவித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

அவர் பிடிபட்டால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

4 பெண்களுடன் காமகளியாட்டம் போட்ட கில்லாடி ஐசக் என்பது தெரிந்தும் அவர் மீது கொண்ட மோகத்தால் என் காதலன் பத்தரை மாற்று தங்கம் கோர்ட்டில் வழக்குகளை சந்தித்து புடம் போட்ட தங்கமாக வெளியே வருவார். அவரை நான் மணப்பது உறுதி என்று தேவிபிரியா பிடிவாதமாக இருக்கிறார்.

ஐசக்கின் லீலைகளை போலீசார் ஒன்றுவிடாமல் தேவிபிரியாவிடம் கூறினார்கள். அதை கேட்டதும் எல்லாம் எனக்கு தெரியும். என்று ஒரே போடாக போட்டார்.

இதற்கு பிறகுமா அவரை கட்டிக்க போகிறீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு `ஆமாம்’ என்று ஆணித்தர மாக கூறிவிட்டார்.

தேவிபிரியாவை 19-ந் தேதி பதிவு திருமணம் செய்ய ஐசக் திட்டமிட்டுள்ளார். எனவே அதற்குள் அவரை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளார்கள்.

தேவிபிரியா போனில் யார் யாருடன் பேசுகிறார் என்பதையும் அவர் எங்கு போகிறார் என்பதையும் போலீ சார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

என் திருமணத்தை தடுக்க சதி: நடிகை தேவிபிரியா பரபரப்பு பேட்டி

தொழில் அதிபர் வில்லியம் ஐசக் திருமண விஷயத்தில நடந்தது என்ன என்பது பற்றி நடிகை தேவிபிரியா “மாலைமலர்” நிருபரிடம் கூறியதாவது:-

என் சொந்த ஊர் மதுரை சொக்கிக்குளம். அங்கு தான் நான் பிறந்தேன். பிறகு என் குடும்பத்தினர் சென்னை வந்து விட்டனர். சென்னையில் படித்த நான் முதலில் ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றினேன்.

பிறகு சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் எனக்கு வில்லியம் ஐசக் அறிமுகமானார். 11 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் முதல் சந்திப்பு நடந்தது.

வில்லியம் ஐசக் பார்ப்பதற்கு பயங்கரமானவர் போல தெரிந்ததால் முதலில் எனக்கு அவரை கண்டாலே பயமாக இருக்கும். ஆனால் நாளடைவில்தான் அவர் மிகவும் நல்லவர் என்று தெரிய வந்தது.

ஐசக் முதலில் அடையாறில் சி.டி. கடை வைத்திருந்தார். சினிமாவில் நடிக்கும் ஆசையிலும் இருந்தார். இதற்காகவே ஒரு டெலிபிலிம் தயாரித்தார். அந்த டெலிபிலிமில் அவருடன் நானும் நடித்தேன்.

டெலிபிலிமில் சேர்ந்து நடித்ததால் ஐசக் குடும்பத்தினருக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் இடையே நட்பு மேலும் அதிகரித்தது. ஐசக்கின் தாய் குளோரி அப்போது காங்கிரஸ் கவுன்சிலராக இருந்தார். அரசியலில் இருக்கிறார்களே, இவர்களுடன் பழகலாமா என்று என் தாய் கூட முதலில் மிகவும் பயந்தார்.

ஆனால் ஐசக்கும் அவர் தாயும் நன்கு பழகியதால் எங்கள் நட்பில் நெருக்கம் ஏற் பட்டது. இந்த நிலையில்தான் ஐசக்குக்கு தாம்பரத்தில் உள்ள ஸ்டெல்லா என்ற பெண்ணை பேசி திருமணத்துக்கு நிச்சயம் செய்து இருப்பதாக அவர் தாய் குளோரி கூறினார்.

அப்போது ஐசக்குக்கு 25 அல்லது 26 வயது தான் இருக்கும். “என்ன இவ்வளவு சின்ன வயதில் திருமணம் செய்கிறீர்கள்” என்று கேட்டதற்கு “நல்ல காரியத்தை சீக்கிரம் நடத்தி விட வேண்டும்” என்றனர்.

தாம்பரத்தில் தான் ஐசக்- ஸ்டெல்லா திருமணம் நடந் தது. தி.மு.க.-காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரு மணத்துக்கு வந்திருந்தனர். மிகப் பிரமாண்டமாக அந்த திருமணம் நடந்தது.

இதுபற்றி நான் ஐசக்கிடம், “டேய் எனக்கே பொறாமையாக இருக்கிறது” என்று கிண்டலடித்தேன். திருமணத்தில் பங்கேற்று அவரை வாழ்த்தி விட்டு வந்தோம். அதன் பிறகு அவருடன் இருந்த நட்பு எனக்கு குறைந்து விட்டது.

நீண்ட நாட்கள் கழித்து ஐசக் குடும்பத்தினருடன் எனக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. அப்போது தான் ஐசக்-ஸ்டெல்லா இருவரும் சரியாக வாழவில்லை. திரு மணமான 3மாதத்திலேயே பிரிந்து விட்டனர் என்பது எனக்குத் தெரிய வந்தது.

ஐசக் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று நான் கூட வருத்தப்பட்டேன். விசாரித்த போது ஸ்டெல்லா குணம் சரி இல்லாதவர் என்று தெரிந்தது. ஐசக்கை அவர் சந்தேகத்துடன் பார்த்துள்ளார்.

தினம், தினம் ஐசக்கை ஸ்டெல்லா டார்ச்சர் செய்து இருக்கிறார். சூட்டிங் சமயத்தில் மற்றவர்களுடன் ஐசக் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எடுத்து வைத்து கொண்டு “இவளுடன் தொடர்பு வைத்து இருக்கிறீர்களாப” என்பாராம்.

ஐசக்கிடம் எப்போதுமே சந்தேகத்துடன் பழகி உள்ளார். 24 மணி நேரமும் தேள் மாதிரி கொட்டினால் எந்த புருஷனுக்குத்தான் கோபம் வராதுப ஸ்டெல்லா சந்தே கப்புத்தியால் அவர் மீது ஐசக் கிற்கு எரிச்சல், வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனாலே அவர்கள் பிரிந்து விட்டனர்.

4 ஆண்டுக்கு முன்பே அவர்கள் கோர்ட்டில் முறைப்படி விவாகரத்து பெற்று விட்டனர். இது தெரிந்த பிறகே ஐசக்கை நான் திருமணம் செய்ய நினைத்தேன். ஸ்டெல்லா வாழ்க்கையை நான் கெடுக்கவில்லை. அவர் வாழ்க்கையை அவரே கெடுத் துக் கொண்டார்.

கிராமங்களில் திமிர் பிடித்த பெண்ணை “ராங்கிப் பிடித்தவள்” என்பார்கள். ஸ்டெல்லா அந்த ரகத்தை சேர்ந்தவர். ஐசக் பல தடவை சமரசம் செய்தும் மனம் இரங்காதவர்.

“ஐசக்கை வாழ விடக்கூடாது, அவரை ஜெயிலில் தள்ளியே தீருவேன் என்று அவர் சவால் விட்டுள்ளதாக தெரிகிறது. எனவேதான் அவர் விவாகரத்து பெற்ற பிறகும் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

நானும், ஐசக்கும் 19-ந் தேதி திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்பதை அறிந்ததும் அவருக்கு தாங்க முடியவில்லை. எனவேதான் ஐசக் மீது இல்லாத புகார்களை எல்லாம் வாரி இறைத்துள்ளார். ஏதாவது ஒரு காரணம் வேண்டுமே என்பதற்காக வரதட்சணை பொருட்களை திருப்பி தரு மாறு மீண்டும் கதை விட் டுள்ளார்.

கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்த போதே ஐசக்- ஸ்டெல்லா இடையே எந்த கொடுக்கலும் வாங்கலும் இல்லை என்று தீர்ப்பாகி இருக்கிறது. இது ஸ்டெல்லாவுக்கும் நன்கு தெரியும். என்றாலும், எங்கள் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சதி செய்து பொய் புகார்களை அள்ளி விட்டுள்ளார்.

ஐசக்கும் அவர் குடும்பத்தினரும் நல்லவர்கள், கடவுளுக்கு பயந்தவர்கள். ஞாயிறு தோறும் தேவால யத்துக்குச் சென்று பிரார்த் திக்கும் பழக்கம் உடையவர்கள்.

அப்படிப்பட்டவர்கள் மீது ஸ்டெல்லா புழுதியை வாரி இறைத்துள்ளார். நிர்வாண படத்தை ஓட விட்டு செக்ஸ் சித்ரவதை செய்ததாக கூறி இருக்கிறார். ஐசக் சி.டி. கடை நடத்தியவர். வீட்டில் ஆங்கில சி.டி. படங்களை போட்டுப் பார்ப்பார். இது பெரிய தவறா?

என் தங்கை பிரியா என்றும் அவளை ஐசக் முதலில் திருமணம் செய்ததாக மற்றொரு அபாண்டமான பழி சுமத்தப்பட்டுள்ளது. என் பெயர் தான் பிரியா. என் தங்கை பெயர் பிரியா அல்ல. மீனா குமாரி, என்னை விட அவள் 8 வயது இளையவள்.

அதிகம் படிக்காத அவள் என்னுடன் சூட்டிங் நடக்கும் இடங்களுக்கு வருவாள். ஐசக் டெலிபிலிம் தயாரித்தபோதும் அவள் என்னுடன் இருந்தாள். சூட்டிங் முடிந்த பிறகு அவள் ஜாலியாக நீச்சல் குளத்தில் எங்களுடன் குளித்தாள்.

அப்போது அவளையும், என்னையும் சேர்த்து போட்டோ எடுத்தனர். சாதாரணமாக நடந்த அந்த நிகழ்வை கொச்சைப்படுத்தலாமா அந்த போட்டோவை வெளியிட்டு பழி சுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது.

ஐசக் கெட்டவர் என்றால் ஸ்டெல்லா ஒதுங்கிப் போய் இருக்கலாமே? ஆனால் ஸ்டெல்லா வேண்டும் என்றே 4 வருடங்கள் கழித்து எங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார். 4 ஆண்டாக சும்மா இருந்து விட்டு இப்போதே ஐசக்கை நான் திருமணம் செய்யப் போகிறேன் என்றதும் குறுக்கிடுகிறார்.

இது போல எத்தனை தடைகள் வந்தாலும் நான் கவலைப்பட போவதில்லை. நிராயுதபாணியாக நான் இப்போது நிற்கிறேன். எனக்கு அமைதி தேவை. எனவே எனக்கும் ஐசக்குக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும்.

இதில் ஒளிவு மறைவே இல்லை. எங்கள் திருமணம் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்துவேன்.

நான் பணத்துக்காக ஐசக்கை விரும்பவில்லை. நான் நினைத்தால் கோடீசுவரர்களை கூட வளைத்துப் போடமுடியும். ஆனால் நான் அப்படிப்பட்ட பெண் அல்ல. ஐசக்கை திருமணம் செய்து அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புகிறேன்.

விரைவில் ஐசக் மீதான புகார்கள் ஆதாரம் இல்லாதது என நிரூபமனமாகும். கடவுள் நல்ல வழி காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் காத்து இருக்கிறேன்.

இவ்வாறு நடிகை தேவிபிரியா கூறினார்.

டி.வி. நடிகை தேவிப்ரியா காதலர் விவகாரம்: தலைமறைவாக உள்ள விடியோ கடை உரிமையாளர் மீது 2-வது மனைவி புகார்

சென்னை, பிப். 14: வரதட்சிணை கொடுத்த நகைகளை திருப்பி தராத வழக்கில் தலைமறைவாக உள்ள விடியோ கடை உரிமையாளர் மீது அவரது 2-வது மனைவி போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

போனில் தொந்தரவு செய்து வரும் ஐசக் வில்லியம்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சென்னை அடையாறு திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த குளோரி ஜெயராஜின் மகன் ஐசக் வில்லியம்ஸ். 1999-ல் தாம்பரத்தை அடுத்த மெப்பேடு பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லாவை திருமணம் செய்தார்.

பின்னர், 2004-ல் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர். ஆனால், திருமணத்தின்போது வரதட்சிணையாகப் பெற்ற 47 சவரன் நகைகளை திருப்பித் தரவில்லை.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வரதட்சிணை பெற்ற நகைகளை திருப்பித் தரும்படி உத்தரவிட்டது. ஆனாலும் ஐசக் அவற்றைத் திருப்பித் தரவில்லை.

இதையடுத்து அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், ஸ்டெல்லா புகார் செய்தார்.

புகாரின்பேரில் முன்னாள் வார்டு கவுன்சிலரான குளோரி ஜெயராஜை போலீஸôர் கைது செய்தனர். ஐசக் வில்லியம்ஸ் தலைமறைவானார். மேலும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

இந்நிலையில் ஸ்டெல்லா தரப்பினர், ஐசக் வில்லியம்ஸýக்கு முன்ஜாமீன் தரக்கூடாது என்று கோரி நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு செய்ய உள்ளனர்.

டி.வி. நடிகையுடன் தொடர்பு: தலைமறைவாக உள்ள ஐசக் வில்லியம்ஸ் டிவி நடிகை தேவிப்ரியா மற்றும் அவரது தங்கையுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் ஐசக் வில்லியம்ûஸ திருமணம் செய்யப் போவதாக தேவிப்ரியா கூறியுள்ளார்.

2-வது மனைவி புகார்: இதற்கிடையில் ஐசக் வில்லியம்ஸின் இரண்டாவது மனைவி ஹேமாமாலினி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், தனக்கு போனில் தொந்தரவு செய்து வரும் வில்லியம்ûஸ கைது செய்யும்படி குறிப்பிட்டுள்ளார். இல்லையெனில் தீக்குளிக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேவிப்பிரியா ஆபாச சிடி சிக்கியது?முன் ஜாமீன்

4 பெண்களை மணந்த ஐசக்குடன் காதல், அரைகுறை உடையில் தங்கைஐசக் சகிதமாக கும்மாளம், புளு பிலிம் என சர்ச்சை பல்வேறு சிக்கல்களில் மாட்டி தங்கை, அம்மாவுடன் தலைமறைவாகிவிட்ட டிவி நடிகை தேவிப்பிரியாவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

19ம் தேதி ஐசக்கை கல்யாணம் செய்யப் போவதாக தேவிப்பிரியா அறிவித்த மறு நிமிடமே ஸ்டெல்லா, ஹேமமாலினி, பிரேமா உள்பட பல பெண்கள் பொங்கி எழுந்து ஐசக் என் கணவர், என்னை ஏமாற்றியவன் என புகார்களை அடுக்கினர்.

மேலும் தான் நடத்திய வீடியோ கடையில் வேலை பார்த்த பெண்களையும் கெடுத்துள்ளான், பல நடிகைகளை வைத்து ப்ளு பிலிம் எடுத்துள்ளான் என புகார் கூறினர்.

அத்தோடு தேவிப்பிரியா, அவரது தங்கை ப்ரியா என்ன மீனா குமாரி ஆகியோரோடும் ஐசக்குக்கு தவறான தொடர்பு உள்ளது, ப்ளு பிலிம் விஷயத்தில் இவர்களுக்கும் தொடர்புண்டு என்றனர்.

இதையடுத்து முதலில் ஐசக் தலைமறைவாக அடுத்ததாக தேவிப்பிரியாவும் அவரது தங்கையும் ஹேமமாலினியை ஆள் வைத்து மிரட்டிய வழக்கில் கைதாக இருந்த நிலையில் தலைமறைவாகிவிட்டனர்.

மாட்டியிருப்பது ஐசக்கின் தாயார் குளோரி மட்டுமே. இவர் சிறையில் உள்ளார். ஐசக்கின் முன் ஜாமீன் மன தள்ளுபடியாகிவிட்டது. இந் நிலையில் தேவிப்பிரியாவும் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். போலீஸார் தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாலும், கைதாக வாய்ப்புள்ளதாலும் முன் ஜாமீன் தர வேண்டும் என்று தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.

முன்னதாக ஹேமமாலினி கொடுத்த புகாரின் பேரில் தேவிப்பிரியா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏகப்பட்ட ப்ளு பிலிம் விசிடிக்கள் சிக்கியுள்ளன. அந்த சிடிக்களைப் போட்டுப் பார்த்தபோது அதில் நடித்திருந்தவர் தேவிப்பி>யா என்பது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை அதிகாரி ஒருவ>டம் கேட்டபோது, தேவிப்பி>யா வீட்டிலிருந்து நிறைய ஆபாசப் பட சிடிக்களைக் கைப்பற்றியுள்ளோம். அதில் சில சிடிக்களில் தேவிப்பிரியா முழு நிர்வாணத்தில் ஆபாசமாக நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு சிடியில் ஐசக், தேவிப்பிரியா, அவரது தங்கை மீனாகுமாரி ஆகியோர் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். இன்னொரு சிடியில் இவர்கள் தவிர வேறு சில பெண்களும் நிர்வாணமாக படுத்துக் கிடக்கின்றனர்.

இந்த ஆபாச சிடிக்களை விபச்சாரத் தடுப்பு பிரிவிடம் கொடுத்துள்ளோம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றார் அவர்.

இதனால்தான் தேவிப்பிரியா, தனது தங்கையைக் கூட்டிக் கொண்டு தலைமறைவானார்.

முன்னதாக தேவிப்பிரியாவை நக்கீரன் வார இதழின் நிருபர் செல்போனில் தொடர்பு கொண்டு நீங்கள் ப்ளு பிலிமில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, நான் நடிச்சா என்ன தப்பு, இதனால சமூகத்துக்கு என்ன கேடு என்று கேட்டாராம்.

சூப்பர்ர்ர்ர் கேள்வி…

முன் ஜாமீன்:

இந் நிலையில் தேவிப்பிரியாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. அவரது மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி,

உடனடியாக எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் பெறலாம். அடையாறு காவல் நிலையத்தில் 3 நாட்களுக்கு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

டி.வி. நடிகையின் ஆபாசக் காட்சிகள்

தற்போது விடியோ கடை அதிபர் ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த டி.வி. நடிகை தொடர்பான சில சி.டி.,க்கள் போலீசார் வசம் சிக்கியுள்ளதாம்.

அதில், தனது காதலர் மற்றும் மேலும் சில நடிகைகளுடன் அந்த பிரபல டி.வி. நடிகை ஆதிகாலத்துப் பெண்ணாக காட்சியளிக்கிறாராம்.

‘இது கிராபிக்ஸ் வேலை தான்’ என்று நடிகை தரப்பிலிருந்து எப்போதும் அறிக்கை வரலாம்.

எனினும், அதில் எந்த மாயஜாலங்களும் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

நடிகை தேவிபிரியா நீதிமன்றத்தில் ஆஜர்

கொலை மிரட்டல் புகார் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்த நடிகை தேவிபிரியா.

சென்னை, பிப். 24: நடிகை தேவிபிரியா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினார்.

சென்னையைச் சேர்ந்தவர் ஐசக். இவரது முதல் மனைவி ஸ்டெல்லா, வரதட்சிணை வழக்கில் தனது நகைகளை ஒப்படைக்காதது தொடர்பாக போலீஸôரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து ஐசக் தலைமறைவானார். ஆனால், ஐசக்கின் தாய் குளோரியை போலீஸôர் கைது செய்தனர்.

இந் நிலையில் ஐசக்கின் 2-வது மனைவி ஹேமமாலினி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக ஐசக் மற்றும் நடிகை தேவிபிரியா மீது அடையாறு காவல்நிலையத்தில் 2 முறை புகார் கொடுத்தார்.

இப் புகார்களின்பேரில், தன்னை போலீஸôர் கைது செய்யக்கூடும் என்பதால் உயர் நீதிமன்றத்தில் தேவி பிரியா முன்ஜாமீன் கோரினார்.

இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தேவிபிரியா ஆஜராகி, ஜாமீன் தொகையை செலுத்தினார்.

அவருக்கு நீதிபதி காயத்ரி முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஐசக்கும், நானும் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுதொடர்பாக என் மீது சுமத்தப்பட்ட புகார்களில் உண்மை இல்லை. சட்ட ரீதியாக இதைச் சந்திப்பேன். இந்த வழக்கு விவகாரம் முடிந்த பின் நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார் தேவிபிரியா.

Posted in Actress, Adyar, CD Sales, Congress, Congress (I), Devipriya, Divorce, Glamour, Glory, Images, Marriage, MLC, Nakkeeran, Nakkiran, Prema, Prostituition, Rumour, Selvi, Sensational, Serial, Sex Abuse, Star Video Vision, Stella, TV, Valluvar Nagar, VCD, Videos, Wedding, William Issac, XXX | 15 Comments »

‘Vyabaari’ song picturisation rumors – SJ Surya’s predatory moves against Malavika?

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா மீது நடிகை மாளவிகாவின் புதிய `செக்ஸ்’ புகார்கள்

கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா இடையில் வாய்ப்பின்றி இருந்தார். வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடல் மீண்டும் பிரபலப்படுத்தியது.

“திருட்டு பயலே” படம் அவரை மேலும் பிரபலப்படுத்தியது. தற்போது நிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார். கூடவே சர்ச்சைகளும் மாளவிகாவை துரத்துகிறது.

தெலுங்கு நடிகர் ராஜேந்திரபிரசாத் மீது ஏற்கனவே செக்ஸ் புகார் கூறினார். ஒரே போர்வைக்குள் இருவரும் நெருக்கமாக இருப்பது போல் ஒரு காட்சி எடுத்தனர். அப்போது ராஜேந்திரபிரசாத் சில்மிஷம் செய்தார். மாளவிகா ஆத்திரத்தில் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வெளியேறினார். நடிகர் சங்கத்திலும் புகார் செய்தார். இந்த சம்பவம் தெலுங்கு தமிழ் படஉலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் சபரி பட தயாரிப்பாளர் சேலம் ஏ. சந்திரசேகரன் சம்பளம் பாக்கி வைத்திருப்பதாகவும் அதை வசூலித்து தரும்படியும் நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். மாளவிகா சூட்டிங்குக்கு ஒழுங்காக வரவில்லை என்றும் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை கேட்டு அடம் பிடித்தார் என்றும் இவரால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தயாரிப்பாளர் குறைபட்டார்.

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா பாடல் காட்சியில் மாளவிகாவிடம் சில்மிஷம் செய்ததாக புகார் கிளம்பியுள்ளது.

ஷக்தி சிதம்பரம் இயக்கும் வியாபாரி படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள். இப்படத்துக்கான பாடல் காட்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரள ஹவுசில் படமாக்கப்பட்டது.

மாளவிகாவுக்கு கொசு கடிக்கும். உடனே அவர் கொசு கடிக்குது கொசு கடிக்குது என்று பாட ஆரம்பிப்பார். அவருடன் எஸ்.ஜே.சூர்யாவும் சேர்ந்து பாடுவார். தேவா இசையில் கவிஞர் வாலி இப்பாடலை எழுதியுள்ளார்.

பாடல் காட்சியில் மாளவிகாவிடம் நெருக்கமாக நடித்தபோது எஸ்.ஜே.சூர்யா கை விரல்கள் மாளவிகா உடலில் தப்புதப்பாக ஊர்ந்ததாம். இதனால் கடுப்பான மாளவிகா படக்குழுவினர் முன்னிலையிலேயே எஸ்.ஜே.சூர்யாவை கன்னா பின்னா வென்று திட்டினாராம். எஸ்.ஜே. சூர்யா மன்னிப்பு கேட்டாராம்.

மாளவிகா வருகிற 18-ந்தேதி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கிறார். அப்போது பரபரப்பான தகவல்களை வெளியிடுவார் என்று தெரிகிறது.

இதற்கிடையில் மாளவிகா மானேஜர் முனுசாமி கூறுகையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் மாளவிகாவுக்கும் மோதல் இல்லை என்றும் சுமூக உறவு உள்ளது என்றும் தெரிவித்தார். எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக பேட்டி எதுவும் கொடுக்கவில்லை என்றும் மறுத்தார்.

Posted in Allegations, Deva, ECR, Gossip, Malaiviga, Malavika, Manager, Molest, Munusami, Rumour, Scandal, Sex, Shakthi Chidhambaram, SJ Soorya, SJ Surya, Tamil Actor, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, Vaali, Viyabaari, Vyaabari | Leave a Comment »

Indian Government spends 0.035% of budgetary funds on Child Development Programmes

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

குழந்தைகள் பாதுகாப்புக்கு அற்பத் தொகையை செலவிடும் அரசு

புது தில்லி, பிப். 12: குழந்தைகள் பாதுபாப்புக்காக அற்பத் தொகையையே அரசு செலவிடுகிறது என்பது அதன் செலவின விவரத்தை ஆராய்ந்தால் தெரியவருகிறது.

ஆனால், உத்தரப் பிரதேசம் நிதாரியில் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நமக்கு உணர்த்துவது குழந்தைகள் பாதுகாப்புக்கு அதிக நிதியை அரசு செலவிடவேண்டும் என்பதே.

2005-06-ம் ஆண்டில் குழந்தைகள் பாதுகாப்புக்கு என பல திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகை நாட்டின் மொத்த செலவில் 0.035 சதவீதமே. இதிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் அரசு காட்டும் அக்கறை மிகக் குறைவாக உள்ளது என்பது புரியும்.

கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு பட்ஜெட் மூலம் ஒதுக்கப்படும் நிதி பற்றி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு செய்தது.

இதன்படி குழந்தைகள் பாதுகாப்புக்காக நிதி ஒதுக்கீடு அதிகரித்துக் காணப்பட்டாலும் அது மிக குறைவானதே என்பது தெரிய வந்துள்ளது.

2005-06ல் குழந்தைகள் பாதுகாப்புக்காக பட்ஜெட்டில் 0.035 சதவீத நிதி ஒதுக்கப்பட்டது. இது 2001-02ல் 0.027 சதவீதமாக இருந்தது.

குழந்தைகள் பாதுகாப்புக்காக அற்பத்தொகையை மத்திய அரசுக்கு ஒதுக்குவது பற்றி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 2005-06ம் ஆண்டுக்கான தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

குழந்தைகள் நல திட்டத்துக்காக பத்தாயிரம் கோடி ரூபாய் தேவை!

புது தில்லி, பிப். 17: குழந்தைகள் நல திட்டத்துக்காக மத்திய பட்ஜெட்டில் இம் முறை பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடமும் திட்டக்குழுவிடமும் முறையிட்டிருக்கிறார் மகளிர்-குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ரேணுகா செüத்ரி. மத்திய பட்ஜெட்டில் தொழில்வாரியாக, பிரதேச வாரியாக, சமூகவாரியாக முக்கியத்துவம் தந்து நிதி ஒதுக்கக் கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால் குழந்தைகளுக்கென்று தனி முக்கியத்துவம் தந்து போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரேணுகா தான் முதலில் வலியுறுத்தியுள்ளார்.

“குழந்தைகள் நலம் என்பது சாதாரண விஷயம் அல்ல; சமுதாயத்தின் முக்கிய அங்கமான குழந்தைகள்தான் மனித ஆற்றல் வளத்தில் முக்கிய பங்குதாரர்கள். எதிர்காலம் அவர்களைத்தான் நம்பியிருக்கிறது. இப்போது நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் 14 வயதுக்கு உள்பட்டவர்கள். 2020-ல் நமது நாடு இந்தத் தலைமுறையினரைத்தான் பெரிதும் சார்ந்திருக்கப் போகிறது. எனவே இப்போதே அவர்களுடைய நலனுக்கு சிந்தித்து செலவு செய்வது நல்லது.

“ஊட்டச் சத்து இல்லாத குழந்தைகளை வளரவிட்டு, பிறகு அவர்களுக்கு ஊட்டச் சத்து வழங்குவதற்கும், நோய்த்தடுப்பு மருத்துகளைத் தருவதற்கும் அரசுக்கு 3 மடங்கு செலவாகிறது. அதற்குப் பதிலாக சிறு வயதிலேயே அவர்களுக்கு சத்துள்ள உணவு கிடைக்க செலவிடுவது நிரந்தரப் பலன்களைத்தரும்.

“2005-06-ல் மத்திய பட்ஜெட்டில் குழந்தைகள் நலனுக்காக என்று மொத்தம் ரூ.3,550 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இது மொத்த பட்ஜெட் செலவில் 0.69 சதவீதம்தான். அதாவது ஒரு சதவீதம் கூட இல்லை.

மத்திய அரசு மட்டும் அல்ல, மாநில அரசுகளும் குழந்தைகளின் நலனுக்காக என்று தனி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி எல்லா மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.

குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அரசு அதிக அளவில் செலவிட வேண்டும். ஊட்டச் சத்து குறைவாக உள்ள குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்த, முதலில் செய்திருக்கக்கூடிய சாதாரணச் செலவைப் போல 32 மடங்கு செய்ய வேண்டியிருக்கிறது என்று அரசின் ஆய்வு தெரிவிக்கிறது. எனவே முதலிலேயே குழந்தைகள் நலனுக்கு நேரடியாகச் செலவிடுவது நல்லது. குழந்தைகளின் ஊட்டச்சத்து, படிப்பு என்று தனித்தனியாகவோ, அல்லது தவணை முறையிலோ செலவிடாமல், குழந்தை வளர்ப்பின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அதை அமல் செய்வது அவசியம். எங்களுடைய அமைச்சகம் அத்தகைய திட்டத்தைத் தயாரித்துவருகிறது.

இப்போதுள்ள அங்கன்வாடிகளையும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களையும் எல்லா மாவட்டங்களிலும் தொடங்க விரும்புகிறோம். குழந்தைகளின் ஊட்டச்சத்தை, குறைபாடுள்ள பகுதிகளில் மட்டும் மேம்படுத்தாமல் எல்லா பகுதிகளிலும் மேம்படுத்த திட்டம் தீட்டியிருக்கிறோம். எனவே இவற்றுக்கெல்லாம் மேலும் அதிக நிதி தேவைப்படுகிறது. இதை மத்திய நிதி அமைச்சகத்திடமும், திட்டக் குழுவிடமும் கேட்டிருக்கிறோம்’ என்றார் ரேணுகா செüத்ரி.

=============================================================
அமலுக்கு வந்து 6 மாதங்களாகியும் ஏட்டுச் சுரைக்காயாக செயலற்றுக் கிடக்கும் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம்

புதுதில்லி, ஏப். 10: வீடுகளில் சிறார்களை பணிக்கும் அமர்த்தும் போக்கு இன்னும் தொடர்கிறது. அமலுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் ஏட்டுச் சுரைக்காயாக செயலற்றுக் கிடக்கிறது குழந்தைத் தொழிளாளர் தடைச் சட்டம்.

உலகிலேயே குழந்தைத் தொழிலாளர்கள் மிகுந்த நாடு இந்தியாதான். இங்கு, சமூக அக்கறையற்ற நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகச் சிந்திப்பதற்குப் பதிலாக அதை ஊக்குவிக்கும் போக்கு உள்ளது.

தில்லி, சென்னை போன்ற பெருநகரங்களின் பங்களாக்களில், நடுத்தர வர்க்க வீடுகளில் தரை துடைக்க, வீடு கழுவ, பத்துப் பாத்திரம் தேய்க்க சிறுமிகளை வேலைக்கு அமர்த்தும் போக்கு சர்வ சாதாரணமாக உள்ளது.

துள்ளித் திரிந்து படித்து மகிழும் வயதில் சிறுவர், சிறுமியர்க்கு வீட்டு வேலை என்பது கொடூரமல்லவா? ஆனால் “செல்வச் செழிப்புள்ள அல்லது நன்கு பணம் சம்பாதிக்கும், கல்வி கற்ற, நவீனமான, சிறார் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுள்ள மனிதர்கள்தான் சிறார்களை வேலைக்கு அமர்த்துகின்றனர் என்பது வேதனையான உண்மை’ என்கிறார் யுனிசெஃப் அமைப்பைச் சேர்ந்த கார்லட்டோ பார்கரோ.

தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் பிற ஆபத்தான பணிகளில் 14 வயதுக்குட்பட்ட சிறார்களை பணிக்கு அமர்த்துவதை 1986-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் தடை செய்கிறது. 1986-லேயே குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம் வந்து விட்டாலும், வீடுகள் மற்றும் உணவகங்களில் சிறார்களை வேலைக்கு அமர்த்தும் விவகாரத்தில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் கவனம் திரும்பியுள்ளது.

“நீதித்துறை மற்றும் அதிகார வர்கத்தைச் சேர்ந்த பலரது வீடுகளில் சிறார்களை வேலைக்கு வைத்திருப்பது எந்த விதத்திலும் வியப்புக்கு இடமில்லாத சாதாரணமான செய்தி’ என்கிறார் குழந்தை உரிமைகளுக்காகப் போராடும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்.

குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை அபராதம், 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை என்பது வலிமையான ஆயுதமாகத் தோன்றினாலும் அதிகாரிகள் அதை ஏன் பிரயோகிப்பதில்லை?

“இந்தத் தடை அமலுக்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ளது. முதல்கட்டமாக, பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்கள் வழியாக தொடர் பிரசாரத்தின் மூலம் இது குறித்து விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்துள்ளோம். இதன் பிறகே மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு எங்களுக்கு சிறிது அவகாசம் வேண்டும்’ என்கிறார் தொழிலாளர் துறையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி.

அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் சிறார்களை பணிக்கு அமர்த்தக் கூடாது என்ற விதி 1999-ல் இருந்து அமலில் உள்ளது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இது தொடர்பாக ஒரு வழக்குக் கூட பதிவாகவில்லை. தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாத ஆய்வாளர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது? சட்டத்தின் அமல் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடக்கூடாது? பிரச்சினை என்னவெனில் ஆய்வாளர்களைப் பொருத்தவரையில் இந்தக் கணக்கெல்லாம் காட்ட வேண்டியதில்லை.

அது மட்டுமன்றி, குழந்தைத் தொழிலாளர் முறை என்பது தனித்த பிரச்சினை அல்ல. தொழிலாளர், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
=============================================================

Posted in Analysis, Anganwadi, Backgrounder, Budget, Child Abuse, Child Protection, Child Welfare, Children, Development Funds, Domestic, Economy, Finance, Healthcare, Help, History, Household, HR, Human Resources, Kid, Kids, Labor, Labour, Law, Nutrition, Order, Percentage, Plan, Police, Reference, Renuka Choudhry, Renuka Chowdhry, Rich, Schemes, Society, UNICEF, Welfare | 1 Comment »

Irrespective of decree, govt can acquire private land: SC

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

உரிமையாளருக்கு சாதகமாக ஆணை இருந்தாலும் பரவாயில்லை நிலத்தை அரசு கையகப்படுத்தலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுதில்லி, பிப். 12: நிலத்தின் உரிமையாளருக்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அந்த நிலத்தை கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

நிலத்தின் உரிமையாளருக்கு சாதகமாக நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்த நிலையில் அந்த நிலத்தை கையகப்படுத்தும் நோக்கில் அரசு அறிவிக்கை வெளியிட்டால் அதை தவறான நோக்கத்தில் வெளியிட்டதாக கருத முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.கே.தாக்கர், லோகேஷ்வர் சிங் பென்டா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி மற்றும் டிவிஷன் பெஞ்ச் ஆகியவை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்ற பெஞ்ச் மேற்சொன்ன தீர்ப்பை பிறப்பித்தது.

உரிமையாளருக்கு ஆதரவாக சிவில் கோர்ட் ஒன்று தீர்ப்பு பிறப்பித்த பிறகு அந்த நிலத்தை கையகம் செய்யலாம் என்று அறிவிக்கை பிறப்பிப்பது சட்ட விரோதமானது என்று தனி நீதிபதியும் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்சும் தீர்ப்பு பிறப்பித்திருந்தன.

கர்நாடக மாநிலம் தொடர்பானது இந்த வழக்கு. அரசு நிறுவனமான எச்எம்டி, கடிகார தொழிற்சாலை அமைப்பதற்காக தேவராயபட்டினத்தில் பல்வேறு சர்வே எண்கள் கொண்ட 120 ஏக்கர் நிலத்தை கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு வாரியம் கையகப்படுத்தியது.

இந்த 120 ஏக்கரில் சுமார் ஒரு ஏக்கர் நிலம் முத்தப்பா குடும்பத்துக்குச் சொந்தமானதாகும். இது தொடர்பாக முத்தப்பா என்பவர் பிரச்சினை எழுப்பியிருந்தார்.

எமது குடும்பத்தைச் சேர்ந்த நிலம் கையகப்படுத்தப்பட்ட படி விட்டுக் கொடுத்தோம். ஆனால் அதற்கு மேலாக சிறிது நிலத்தை எச்.எம்.டி ஆக்கிரமித்துள்ளது. இதிலிருந்து காலி செய்ய மாட்டோம் என்று முறையிட்டார் முத்தப்பா.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சிவில் கோர்ட், எச்எம்டி ஆக்கிரமித்த நிலத்தை உரிமையாளரிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து எச்எம்டி அப்பீல் செய்தபோதும் அது டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

எனினும் சிவில் கோர்ட் உத்தரவை எச்எம்டி ஏற்கவில்லை. அதற்கு பதிலாக மாநில அரசை அணுகி அந்த நிலம் தொடர்பாக புதிய அறிவிக்கையை பிறப்பிக்கும்படி கோரியது. இதனால் உயர்நீதிமன்றத்தை நில உரிமையாளர் அணுகினார். இதையடுத்து தனி நீதிபதியும், டிவிஷன் பெஞ்சும் நிலத்தை கையகப்படுத்தி அரசு வெளியிட்ட அறிவிக்கை செல்லாது என்று தீர்ப்பு வெளியிட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது எச்எம்டி.

Posted in appellate authorities, authorities, CK Thakkar, CK Thakker, Courts, decree, encroachment, Government, High Court, HMT, Industrial Area Development Board, Judgement, Jury, Justice, Karnataka, Land Acquisition, Land Acquisition Act, Law, Logeshwar singh Benda, Lokeshwar Singh Penta, Muthappa, Order, private land, Property Ownership, Public Property, Supreme Court | Leave a Comment »

Double decker trains and ‘Own Your Coach’ schemes in new budget likely

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

இரட்டை அடுக்கு ரயில்கள் அறிமுகமாகின்றன! 2007-08 பட்ஜெட்டில் அறிவிக்கிறார்- லாலு

புது தில்லி, பிப். 12: பயணிகள் நெரிசல் அதிகம் உள்ள மார்க்கங்களில் இரட்டை அடுக்கு ரயில் சேவையை அறிமுகப்படுத்த அமைச்சர் லாலு பிரசாத் திட்டமிட்டிருக்கிறார்.

சரக்கு ரயில்களில், “”உங்கள் பெட்டியைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக, சுற்றுலாத்துறையில் உள்ள தனியார் டூர் ஆபரேட்டர்களும், நிறுவனங்களும் தங்களுக்கென்றே தனியாக பயன்படுத்த “”உங்கள் ரயிலை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறார் லாலு.

அத்துடன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களை ஒரே டூரில் சேர்ந்தார் போல பார்க்கவும் சிறப்பு திட்டங்கள் அமலாகவிருக்கின்றன.

உள்நாட்டு ரயில் பயணிகளும் வெளிநாட்டு ரயில் பயணிகளும் வாய்க்கு ருசியாகவும் சுகாதாரமாகவும் நல்ல தின்பண்டங்கள், சிற்றுண்டி, உணவு ஆகியவற்றைச் சாப்பிட, “பட்ஜெட் ஹோட்டல்களை’ கட்டி, நிர்வகித்து, சிறிதுகாலம் பொறுத்து ரயில்வே வசம் ஒப்படைக்கும் திட்டத்தை சிறந்த தனியார் நிறுவனங்களைக் கொண்டு நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறார் லாலு.

இம் மாதம் 26-ம் தேதி 2007-08-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறார் லாலு பிரசாத். பட்ஜெட் குறித்து ரயில்வே பவன் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

“ரயில்களில் பயணக் கட்டணமோ, சரக்குக் கட்டணமோ, சீசன் கட்டணமோ அதிகரிக்கப்படமாட்டாது. அதே சமயம் சில கட்டண விகிதங்கள் சீரமைக்கப்படலாம்.

சில மார்க்கங்களில் ஆண்டு முழுக்க பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயில்களில் 24 பெட்டிகளுக்கு மேல் இணைத்து ஓட்ட முடிவதில்லை. எனவே இருக்கும் பெட்டிகளிலேயே படுக்கை, இருக்கை வசதிகளை அதிகப்படுத்த, இரட்டை அடுக்கு ரயில் பெட்டிகளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

படுக்கை வசதி கீழ் தளத்திலும், உட்கார்ந்தே பயணம் செய்யும் வசதி (சேர்-கார்) மேல் தளத்திலும் இருக்குமாறு பெட்டிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பெüத்த தலங்களுக்கு சிறப்பு ரயில்கள்: புத்தர் பிறந்து 2,500 ஆண்டுகள் ஆனதையொட்டி அவர் பிறந்த இடம், அவருடைய வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்த இடம், அவர் புனிதப்பயணம் சென்ற தலங்கள் போன்றவற்றை ஒரு சேர பார்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

வரலாற்று ரீதியான, கலாசார ரீதியான சுற்றுலாப் பயணங்களுக்கென்று தனித்தனி ரயில்கள் விடப்படும். ரயில்கள் செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு, உள் அலங்காரம், பணியாளர்களின் சீருடைகள் போன்றவை இருக்கும்.

தில்லி-ஆக்ரா, தில்லி-ஜெய்பூர், தில்லி-ஸ்ரீநகர் மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் விடப்படும். உத்தரப் பிரதேசத்திலும் பிகாரிலும் உள்ள புத்த தலங்களுக்கு தனி ரயில் விடப்படும். இதில் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ரயில்வேதுறை செயல்படும்.

90 நாள்களுக்கு முன்னதாகவே முன்பதிவு: வெளியூர் பயணம் செய்ய முன்கூட்டியே திட்டமிடுகிறவர்கள் வசதிக்காக, 90 நாள்களுக்கு முன்னதாகவே டிக்கெட் வழங்கும் திட்டம் அமலுக்கு வரவிருக்கிறது. இதில் ரயில்வேதுறைக்கு நல்ல வருவாய் கிடைக்கவிருக்கிறது.

உபரி ரூ.20,000 கோடி: ரயில்வேயின் வருவாய் பெருகியதால் ரூ.20,000 கோடிக்கு உபரி இருக்கிறது. இது மார்ச் 31-ம் தேதிவரை நீடிக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரயில் ஊழியர்களுக்கு ரூ.37 கோடி பரிசு

பாட்னா, மார்ச் 2: இருபதாயிரம் கோடி ரூபாய் உபரி வருமானம் பெற உதவிய ரயில்வே ஊழியர்களைப் பாராட்டி அமைச்சர் லாலு பிரசாத் ஹோலிப் பரிசாக ரூ.37 கோடியை வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார்.

நாலாவது பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு தலா 400 ரூபாய் ரொக்கம் தரப்படும். அவர்களுடைய நல நிதியில் (ஸ்டாஃப் பெனிஃபிட் பண்ட்) தலா ரூ.100 சேர்க்கப்படும். இதர அலுவலர்களுக்கும் ரொக்கப் பரிசு உண்டு.

ரயில் பெட்டிகளில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை நிறுவ நடவடிக்கை

புதுதில்லி, மார்ச் 2: சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை ரயில்களில் நிறுவ உள்ளது ரயில்வே. இதற்காக தற்போதைக்கு ரூ.3 கோடியில் 80 கழிப்பறைகள் நிறுவப்பட உள்ளன. அதற்குரிய ஆர்டர் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.

மக்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரயில்வே துணை அமைச்சர் ஆர்.வேலு இதனைத் தெரிவித்தார்.

================================================

முக்கிய நகரங்களை இணைக்க அதிவேக பயணிகள் ரயில் சேவை: ரயில்வே துறை திட்டம்

புதுதில்லி, ஏப். 2: முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக பயணிகள் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கியமான நகரப்பகுதிகளை இணைப்பதில் இந்திய ரயில்வே முனைப்பு காட்டி வருகிறது. 600 முதல் 1,000 கி.மீ. வரையிலான தூரத்தை இரண்டரை முதல் நான்கு மணி நேரங்களில் கடக்கும் வகையில் அதிக வேக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்திட்டத்தை அரசும் தனியாரும் இணைந்து செயல்படுத்துதல் உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.

சரக்குப் போக்குவரத்துக்கென முக்கியமான 4 வழித்தடங்களான தில்லி-மும்பை, தில்லி-கோல்கத்தா, சென்னை-கோல்கத்தா, மும்பை-சென்னை ஆகியவற்றை இணைக்கும் வகையில் தனி ரயில்பாதைகளை அமைக்க ரயில்வே ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. அவற்றில் தில்லி-மும்பை, தில்லி-சென்னை ஆகிய தனி சரக்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்த திட்டங்களுக்கு ஜப்பான் கடனுதவியும், தொழில்நுட்ப உதவியும் வழங்க முன்வந்துள்ளது. இருப்பினும், அரசும் தனியாரும் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றும் சாத்தியக்கூறும் உள்ளது.

ரயிலுக்கு தேவையான என்ஜின்கள், பெட்டிகள், சரக்கு வேகன்கள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ரயில் பெட்டிகளின் தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள வித்தியாசத்தை குறைக்கும் வகையில் சென்னை பெரம்பூரில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை ஆகிய நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும். மேலும் அரசும் தனியாரும் இணைந்து புதிய ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கப்படும்.

ஏப்.06 முதல் பிப். 07 இடைப்பட்ட காலத்தில் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் இலக்கைக் காட்டிலும் 24 பெட்டிகள் கூடுதலாக 1,110 பெட்டிகளும், கபூர்தலாவில் 4 பெட்டிகள் கூடுதலாக 1,164 பெட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டன.

11வது திட்ட காலத்தில் மின்சாரம், டீசலில் இயங்கும் என்ஜின்களின் தேவை 1,800 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 360 என்ஜின்கள் தேவை.

ஆனால் தற்போது ஆண்டுக்கு 150 என்ஜின்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

அதை 200 ஆக அதிகரிக்க முடியும். எஞ்சியுள்ள தேவையை பூர்த்தி செய்ய புதிய தொழிற்சாலையை உருவாக்க வேண்டியது அவசியம்.

கடந்த ஆண்டு டீசல் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையில் 175 என்ஜின்களும், சித்தரஞ்சனில் உள்ள மின்சார ரயில் என்ஜின் உற்பத்தி நிறுவனத்தில் 133 ரயில் என்ஜின்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

Posted in 2007, Analysis, Bombay, Bonus, Buddhism, Budget, Calcutta, Carriage, Chennai, City, Coach, Crap, Delhi, Double decker, Economy, Engines, Environment, Express, Finance, Freight, Goods, Guide Operator, human waste, Hygiene, ICF, Incentives, Interlink, Japan, Kapurthala, Kolkata, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Loans, Madras, Manufacturing, Ministry, Mumbai, New Delhi, Own Your Coach, passenger, Perambur, Piss, Pollution, Predictions, Preview, Public-Private-Partnership, Railways, Reservation, Restrooms, Safety, Schemes, Security, Shit, Smell, Superfast, Toilets, Tour, Trains, Transportation, Travel, Urin, Urine, Velu, Waste | 1 Comment »

14 Tamil Scholars & Authors works gets nationalised by Mu Karunannidhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

14 தமிழ்ச் சான்றோரின் நூல்கள் நாட்டுடமை

சென்னை, பிப். 12: மாயூரம் வேதநாயகம் பிள்ளை உள்பட தமிழ்ச் சான்றோர்கள் 14 பேரின் நூல்களை நாட்டுடமையாக்கி முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

தமிழ்ச் சான்றோர்கள் 14 பேரின் குடும்பத்தாருக்கும் தலா ரூ. 6 லட்சம் வீதம் பரிவுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றிச் சிறப்புமிக்க நூல்களைப் படைத்துள்ள தமிழ்ச் சான்றோர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவர்களின் படைப்புகள் பெருமளவில் மக்களைச் சென்றடையும் நோக்கிலும், அவர்களது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன.

அவர்தம் வாரிசுகளுக்கு பரிவுத் தொகைகளை அரசு அளித்து வருகிறது. தமிழ்ச் சான்றோர்கள் விவரம்:

1. மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

2. சக்தி வை.கோவிந்தன்.

3. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.

4. த.நா.குமாரசாமி.

5. கா.சு.பிள்ளை.

6. புலவர் குலாம் காதிறு நாவலர்.

7. தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்.

8. டாக்டர் சி.இலக்குவனார்.

9. மகாவித்வான் தண்டபாணி தேசிகர்.

10. தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர.).

11. நாரண துரைக்கண்ணன்.

12. டாக்டர் மா.ராசமாணிக்கனார்.

13. டாக்டர் வ.சுப.மாணிக்கம்.

14. புலவர் கா.கோவிந்தன்.


 

தமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ. 66 லட்சம்: முதல்வர் வழங்கினார்

சென்னை, மார்ச். 22:தமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ. 66 லட்சம் பரிவுத் தொகையை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வழங்கினார்.

சிறந்த தமிழறிஞர்களின் படைப்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற சீரிய நோக்கில், அவர்களது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு பரிவுத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி செயல்படுத்தி வருகிறார்.

திமுக அரசு பொறுப்பேற்றதும் 17 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டு அவர்களது மரபுரிமையர்க்கு ரூ. 1.29 கோடி பரிவுத் தொகை வழங்குவதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

தற்போது 14 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ. 6 லட்சம் வீதம் ரூ. 84 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.

இதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் 11 தமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ. 6 லட்சம் வீதம் ரூ. 66 லட்சத்துக்கான சான்றாவணத்தை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வழங்கினார்.

 1. மாயூரம் வேதநாயகம் பிள்ளை,
 2. சக்தி வை. கோவிந்தன்,
 3. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்,
 4. த.நா. குமாரசாமி,
 5. கா.சு. பிள்ளை,
 6. புலவர் குலாம் காதிறு நாவலர்,
 7. டாக்டர் சி. இலக்குவனார்,
 8. தி.வை. பண்டாரத்தார்,
 9. மகாவித்வான் தண்டபானி தேசிகர்,
 10. தி.ஜ. ரங்கநாதன் (திஜர),
 11. நாரண. துரைக்கண்ணன்,
 12. மா. ராஜமாணிக்கனார்,
 13. டாக்டர் வா.சுப. மாணிக்கம்,
 14. புலவர் கா. கோவிந்தன் ஆகியோரது மரபுரிமையர் முதல்வரிடமிருந்து பரிவுத் தொகைக்கான சான்றாவணத்தை பெற்றுக் கொண்டனர்.

 

நாட்டுடைமையாகும் நூல்களும் பரிவுத்தொகையும்

எஸ்.கே. அரவிந்தன்
முன் எப்போதும் இல்லாத புதுமையாய், முதல் தடவையாகப் பதினான்கு தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை ஒருசேர நாட்டுடைமையாக்கப்பட்டு, ஒவ்வொரு சான்றோரின் வாரிசுதாரர்களான மரபுரிமையருக்கு ரூ. 6 லட்சம் பரிவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

சான்றோர் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர்களின் வாரிசு உரிமையுள்ளவர்களுக்குக் கணிசமாக ஒரு தொகையினை அளிப்பது முன்பெல்லாம் மிகவும் அரிது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகள்தாம் முதன்முதலில் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.

அன்றைய தமிழ்நாடு உள்ளிட்ட சென்னை ராஜதானியில் நூல்கள் நாட்டுடைமையாகப் பெறும் இலக்கியப் படைப்பாளி என்கிற கௌரவம் பாரதியாருக்கு அவர் மறைந்து இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டியது.

இந்த இருபத்தேழு ஆண்டுகளில் அவர் விட்டுச் சென்ற துணைவியார் செல்லம்மா தாழ்வுற்று வறுமை மிஞ்சிப் படாத பாடுகள் எல்லாம் பட்டு முடித்துவிட்டிருந்தார்! இருப்பினும் வாழ்க்கையின் இறுதிக்காலத்திலேனும் விடியலைக் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது ஆறுதலான விஷயந்தான். செல்லம்மாவைச் செல்வம் மிக்க அம்மாவாகச் செய்தது, பாரதி நூல்கள் நாட்டுடைமை.

பின்னர், 1971ல் மு. கருணாநிதியின் தலைமையில் தொடர்ந்த தி.மு.க. ஆட்சியிலிருந்துதான் இலக்கியப் படைப்பாளிகளின் நூல்களை நாட்டுடைமையாக்கும் நடைமுறை தொடரலாயிற்று. வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு நடைமுறை வழக்கத்திற்கு வரவில்லை.

நாட்டுடைமையாக்குவதால் சான்றோரின் நூல்கள் எளிதாகவும் பல பதிப்பகங்கள் மூலமாகவும் வாசகர்களுக்குப் பரவலாகக் கிடைப்பது ஒரு நன்மை என்றால் சான்றோரின் வாரிசுதாரர்களுக்குக் கணிசமான ஒரு தொகை பரிவுத் தொகையாக அரசிடமிருந்து கிடைத்துவிடும். பதிப்பகத்தாரிடமிருந்து தவணை, தவணையாகக் கிடைக்கக்கூடிய தொகையைக் காட்டிலும் அது மிகவும் கூடுதலாகவும் இருக்கும்.

ஒவ்வொரு சான்றோரின் வாரிசுதாரர்களுக்கும் பரிவுத் தொகை ரூபாய் ஆறு லட்சம் என்னும்போது அது ஒரு கணிசமான தொகையாகத் தெரிந்தாலும் ஒரு சான்றோருக்கு அதிக எண்ணிக்கையில் வாரிசுதாரர்கள் இருக்கும்பட்சத்தில் அது பலவாறாகப் பகிர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு வாரிசுதாரருக்கும் கிடைக்கும் தொகை மிகவும் அற்பமாகப் போய்விடும் சாத்தியக்கூறும் உள்ளது.

ஒவ்வொரு முறையும் சான்றோரின் நூல்கள் நாட்டுடைமையாவதையொட்டி அறிவிக்கப்படும் பரிவுத்தொகையின் அளவை ஒப்பிட்டுப் பார்க்கையில் பரிவுத்தொகை வெவ்வேறாக இருப்பது தெரிய வரும்.

இவ்வாறு சான்றோர்களிடையே பேதம் ஏற்படுவதற்கு இடமளிக்காமல் சான்றோர் அனைவர் நூல்களுக்கும் உரிய பரிவுத்தொகை ரூபாய் பத்து லட்சம் என நிரந்தரமாக நிர்ணயம் செய்து விடுவது பொருத்தமாக இருக்கும்.

ஓர் ஆண்டில் இருபது சான்றோரின் நூல்களை நாட்டுடைமையாக்கினாலும் அதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய மொத்தச் செலவு இரண்டு கோடி ரூபாய்தானே!

மேலும், ஒரு சான்றோரின் வாரிசுதாரர்கள் அனைவருமே பொருளாதாரத்தில் சரிசமமாக இருப்பார்கள் எனக் கருதுவதற்கில்லை. ஒரே குடும்பத்தில் ஒருவர் கூடுதலான வருவாய் பெற்று வசதியாக வாழ்க்கையில் இன்னொருவர் வறிய நிலையில் திண்டாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

சான்றோரின் வாரிசுதாரர்களில் ஒருவருக்கு நாட்டுடைமையின் பயனாகக் கிடைக்கும் தொகை அவரது சேமிப்பை மேலும் கூடுதலாக்கும் அதிர்ஷ்டப் பரிசாக அமைந்துவிடுகையில் அதே சான்றோரின் மற்றொரு வாரிசுதாரருக்கு அந்தத் தொகை பற்றாக்குறையாக இருக்கக்கூடும்.

குடும்ப நபர்களின் எண்ணிக்கை, மருத்துவச் செலவு, கல்வி எனப் பல காரணிகளால் ஒரு வாரிசுதாரருக்குப் பரிவுத்தொகை கிடைத்தாலும் அது போதிய பயன் தராது போய்விடக்கூடும்.

எனவே நாட்டுடைமையினையொட்டி ஒரு சான்றோரின் வாரிசுகளான மரபுரிமையர் அனைவருக்கும் பரிவுத்தொகையைச் சரிசமமாகப் பகிர்ந்தளிப்பதைவிட, வாரிசுதாரர் ஒவ்வொருவரின் செல்வ நிலை, வருமானம் ஆகியவற்றை விசாரித்தறிந்து, தேவை மிகுதியாக உள்ள வாரிசுதாரர்களுக்குக் கூடுதலாகவும், தேவையே இல்லாத அளவுக்கு செல்வந்தர்களாக இருப்பவர்களுக்கு ஓரளவுக்குமேல் மிகாமலும் பரிவுத்தொகையினைப் பகிர்ந்தளிப்பது பொருள்மிக்கதாக இருக்கும்.

வாரிசுதாரர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு பரிவுத்தொகையினை விகிதாசார முறையில் பங்கிட்டு அளிப்பது அவர்களிடையே பிற்காலத்தில் பூசல்கள் எழ வாய்ப்பில்லாமலும் செய்துவிடும் அல்லவா?


மிகச்சிறந்த படைப்புகளை படைத்தவர்களின் இலக்கியங்களே நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்கிறார் வல்லுநர்

தமிழக அரசின் தலைமைச் செயலகம்
தமிழக அரசின் தலைமைச் செயலகம்

தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே இலக்கியவாதிகளின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டு அதற்குண்டான தொகை அந்தப் படைபாளியின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தை ஆளும் திமுக அரசால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 36 படைப்பாளிகளின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழக அரசு

 • குன்றக்குடி அடிகளார்,
 • கி.ஆ.பெ,
 • கி.வா.ஜ ஆகியோரின் படைப்புகள் உட்பட பலரது படைப்புகள் நாட்டுடையாக்கப்படுவதாக அறிவித்தது.

ஆனால் உலக அளவிலும் சரி, இந்தியாவின் வேறு மாநிலத்திலும், இவ்வாறாக இலக்கியத்தை நாட்டுடமையாக்கும் வழக்கும் இல்லை என்றும், காந்தி, தாகூர் போன்றவர்களின் படைப்புகள் கூட நாட்டுடமையாக்கப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார் தமிழ் மொழி மற்றும் பண்பாடு குறித்த வரலாற்று ஆய்வாளரும் சென்னை வளர்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான ஆ. இரா. வெங்கடாஜலபதி.

பல்வேறு தமிழக அரசுகள், தமிழ் வளர்ச்சிக்கு ஆதரவு தருவதாக காட்ட வேண்டிய அரசியல் நெருக்கடிகளின் போது, பல்வேறு எழுத்தாளர்களுடைய படைப்புகளை நாட்டுடமையாக்குவதாக தொடர்ந்து அறிவித்து வருகிறது எனக் கருத்து கூறும் அவர், மறைந்த எழுத்தாளர்களுடைய குடும்பத்திற்கு உதவுவதற்காக இவ்வாறாக செய்வதைவிட அரசு வேறு வகையில் அவர்களுக்கு உதவும் வகையில் கடமையாற்ற வேண்டும் என்றும் கூறினார். மிகச்சிறந்த படைப்புகளே நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வாதிடுகிறார்.


 

Posted in Analysis, Authors, Backgrounder, Culture, Dr C Lakkuvanaar, Dr Ma Rasamanickanaar, Essays, Fiction, Heritage, Insights, Kaa Govindhan, Kaa Su Pillai, Karunanidhi, Literature, Mahavidhwan Thandapani Desikar, Mayooram Vedhanayagam Pillai, Nationalisation, Nationalization, Non-fiction, Op-Ed, Publishers, Pulavar Kulam Kaathiru Navalar, Sakthi vai Govindhan, Solution, Story, Tamil Nadu, Tamil Works, Tha Naa Kumarasamy, The Po Meenakshi Sundharanaar, The Po Meenakshisundaranaar, Thi Ja Ranganathan, Thi Vai Sadasiva Pandarathaar, Va Subha Manickam, Works, Writers | 2 Comments »