Bhogi, Chain Snatcher Thieves, Auto Rikshaw ripoffs – Police Commissioner Lathikha Charan
Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2007
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் டிரைவர்கள் மீது நடவடிக்கை: லத்திகா சரண் சென்னை, ஜன. 12: பொதுமக்களிடம் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேலாக கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
“போகி’ பண்டிகையின்போது டயர், ரப்பர் உள்ளிட்ட பழைய பொருள்களை தீயிட்டு எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், திருட்டு போன பொருள்களை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது போலீஸ் கமிஷனர் லத்திகா சரண், நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், ராயபுரத்தில் உள்ள சாந்தி காலனியைச் சேர்ந்த சீனிவாசன் (எ) பர்மா சீனு (38) மற்றும் பாபு (21) உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
60 பவுன் பறிமுதல்: இவர்களிடம் இருந்து 60 பவுன் தங்க நகைகள், 9 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.2,700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.6.89 லட்சமாகும்.
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம்: ஆட்டோக்களில் கூடுதல் கட்டண முறை வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக போக்குவரத்து போலீஸின் “103′ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
டயர் எரித்தால் நடவடிக்கை: போகி பண்டிகையின் போது டயர், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் உள்ளிட்ட பழைய பொருள்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. எனவே, பழைய பொருள்கள் எரிப்பவர்கள் மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸôர் ரோந்து வாகனங்களில் வந்து கண்காணிப்பர்.
காணும் பொங்கலை முன்னிட்டு போலீஸôர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், குடிசைப் பகுதிகளில் வாழும் சிறுவர்களிடையே விளையாட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம்.
விமான நிலைய பாதுகாப்பு: விமான நிலையத்தில் தீவிரவாதச் செயல்களை தடுப்பதில் போலீஸôர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். வாகனங்கள் சோதனைக்கு பின்னரே விமான நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாகனங்களின் எண்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்றார் லத்திகா சரண்.
மறுமொழியொன்றை இடுங்கள்