Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 25th, 2007

India, Pakistan, Iran narrow down differences on gas price

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

குழாய்ப் பாதை கேஸ் விலை நிர்ணயம்: ஈரான், பாகிஸ்தான், இந்தியா பேச்சு தோல்வி

புது தில்லி, ஜன. 26: ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் குழாய்ப் பாதை அமைத்து வழங்கத் திட்டமிட்டுள்ள கேஸýக்கு விலை நிர்ணயிப்பதற்காக நடைபெற்ற முத்தரப்பு பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கான பேச்சு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.

இதில், பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் தனிச் செயலர் அனில் ரஸ்தான் தலைமையில் இந்தியக் குழு பங்கேற்றது.

ஈரான் சார்பில் தேசிய ஈரான் எண்ணெய் நிறுவனத்தின் (என்ஐஓசி) சர்வதேச விவகாரங்கள் பிரிவு இயக்குநர் ஹஜ்ஜதுல்லா கனீமிபார்த் கலந்துகொண்டார்.

கேஸ் விற்பனை செய்யும் நாடு என்ற முறையில் ஈரான் தெரிவித்த விலைக்கும், வாங்கும் நாடுகள் என்ற முறையில் பாகிஸ்தானும் இந்தியாவும் கோரிய விலைக்கும் பெரும் இடைவெளி இருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவ்வப்போது நிலவும் கச்சா எண்ணெய் விலையில் 10 சதவீதத்துக்கு நிகரான விலையுடன், நிலையான விலையாக 1.20 டாலர் சேர்த்து தர வேண்டும் என்று ஈரான் கேட்டது. ஒரு மில்லியன் பிரிட்டிஷ் அனல்மின் யூனிட் கேஸýக்கான (எம்பிடி யூனிட்) விலை இது.

தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 50 டாலராக உள்ளது. இதில் 10 சதவீதம் 5 டாலர். இதன் அடிப்படையில் கணக்கிட்டால், ஒரு எம்பிடி யூனிட் கேஸ் விலை 6.20 டாலர் என்று ஆகிறது.

பாகிஸ்தான் எல்லையில் ஈரான் சப்ளை செய்யும் கேஸýக்கான விலை இது. அதற்கு அப்பால் கேûஸ கொண்டு செல்ல ஆகும் செலவையும் சேர்த்தால் விலை இன்னும் அதிகமாகும்.

விலையை நிர்ணயிப்பதற்கான இந்த சூத்திரத்தை பாகிஸ்தானும், இந்தியாவும் ஏற்கவில்லை.

தங்கள் எல்லையில் சப்ளை செய்யப்படும் கேஸ் விலை ஒரு எம்பிடி யூனிட்டுக்கு 4.25 டாலருக்கு மேல் போகக் கூடாது என பாகிஸ்தானும், இந்தியாவும் வலியுறுத்தின. இதில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சு தோல்வி அடைந்தது. பின்னர் ஒரு தேதியில் மீண்டும் கூடிப் பேசுவது என தீர்மானிக்கப்பட்டது.

ஈரானில் இருந்து 2,700 கி.மீ. தொலைவுக்கு, ரூ.3,500 கோடி செலவில் குழாய்ப் பாதை அமைத்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் கேஸ் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Posted in barrel, Border, Brent crude, British thermal units, BTU, Diesel, External Affairs Minister, Gaffney Cline and Associates, Gas, India, Iran, Iran-Pakistan, IRNA, Islamic Republic News Agency, mBtu, natural gas, Pakistan, Petrol, Petroleum, pipe, pipeline, Price, trans-national, Transport costs | Leave a Comment »

Hema Malini rubs north Indians the wrong way

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

வட இந்தியர்கள் பற்றிய ஹேமமாலினியின் கருத்துக்கு பலத்த கண்டனம்

மும்பை, ஜன. 26: நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி (படம்), வட இந்தியர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.

இதுகுறித்த விவரம்:

மும்பை உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஹேமமாலினியிடம்

“மும்பையில் வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம், திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது குறித்த உங்கள் கருத்து என்ன’ என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு ஹேமமாலினி

“அவர்களுக்குப் பிரச்சினை என்றால் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்’

என பதிலளித்திருந்தார். ஹேமமாலினியின் இந்த பதிலால் பல தரப்பிலிருந்தும் அவருக்குக் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஹுசைன் தல்வாய் வியாழக்கிழமை கூறியுள்ளதாவது:

ஹேமமாலினி முதலில் தான் ஒரு பொறுப்புள்ள எம்.பி. என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகுதான் அவர் நடிகை. அவருடைய கணவர் -நடிகரும், எம்.பி.யுமான தர்மேந்திரா வட இந்தியர்தான்; அவருடைய மகள்களும் பாதி வட இந்தியர்கள்தான். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து ஹேமமாலினி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரிலிருந்து குடியேறிய வட இந்தியர்கள்தான் மும்பை மக்கள் தொகையில் ஏராளமானோர் என்பதும், ஹேமமாலினி தமிழில் அறிமுகமாகி இந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வட இந்தியர்கள் பற்றி நான் கூறிய கருத்து பத்திரிகைகளில் திரித்துக் கூறப்பட்டுள்ளது: ஹேமமாலினி

மும்பை, ஜன. 27: வட இந்தியர்கள் குறித்து தான் கூறியதாக தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் திரித்துக் கூறப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி.யும் நடிகையுமான ஹேமமாலினி தெரிவித்தார்.

தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், தொலைக்காட்சி நிருபர்கள் சிலர், வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு அவர், அவர்களுக்கு பிரச்சினை என்றால் சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்’ என்று பதிலளித்தார். ஆனால் இதற்கு பல தரப்பிலும் பலத்த கண்டனம் எழுந்தது.

இதையடுத்து இந்த சம்பவத்துக்கு மறுப்பு தெரிவித்து அவர் கையெழுத்திட்ட அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியானது. அதில் கூறியுள்ளதாவது:

வட இந்தியர்கள் குறித்து நான் தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் தவறாக திரித்துக்கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விஷயம் ஊதி பெரிதாக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தபோது, சில தொலைக்காட்சி நிருபர்கள் என்னை அணுகி கருத்து கேட்டனர். அப்போது மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு சத்தமாக இருந்ததால் தொலைக்காட்சி நிருபர்கள் கேட்ட கேள்வி எனக்கு சரியாக கேட்கவில்லை. இருப்பினும் அந்த சமயத்தில் நான் சிரித்துக்கொண்டேதான் அவர்களுக்கு பதிலளித்தேன்’ என்றார்.

வட இந்தியர்களை அளவுக்கதிகமான மரியாதையுடன் உயரிய இடத்தில் வைத்துள்ளேன். மும்பையை விட்டு அவர்களை வெளியேற சொல்லவோ அல்லது அவர்களுக்கு ஆலோசனைக் கூறும் அதிகாரமோ எனக்கில்லை.

இதற்குமேலும் அரசியல் கட்சிகள் நான் கூறியதாக தெரிவித்த கருத்தை அரசியலாக்க வேண்டாம் என்றார்.

Posted in Bharatiya Janata Party, BJP, Bombay, Brihanmumbai Municipal Corporation, Civic Polls, Elections, Hema Malini, Hemamalini, India, Local Body Polls, Mumbai, north India, Polls, Quote, racism, Racist, Rajya Sabha | Leave a Comment »

Military men abuse train passengers in Patna get arrested by Railway Police

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

ரயில் பயணிகளிடம் தவறாக நடந்ததாக 4 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் கைது

பாட்னா(பிகார்), ஜன. 26: ரயில் பயணிகளை அடித்ததாகவும், அவர்களின் உடமைகளை தூக்கி வீசியதாகவும், பெண் பயணிகளிடம் தவறாக நடந்ததாகவும் 4 ராணுவ வீரர்கள், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 9 பேரை பாட்னா ரயில்வே போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

இது குறித்து பிகார் ரயில்வே டிஜஜி அஜய் வர்மா கூறியதாவது: புது தில்லியிலிருந்து குவாஹாட்டிக்கு செல்லும் வடகிழக்கு மாநிலங்களுக்கான விரைவு ரயில் புதன்கிழமை இரவு புறப்பட்டது. இதில் பொதுப்பெட்டியில் ஒரு குழுவாக ராணுவ வீரர்களும், பாதுகாப்பு படை வீரர்களும் பயணம் செய்தனர். முகல்சராய் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் போது ரிசர்வ் பெட்டிக்குள் நுழைந்த அவர்கள் அந்த பெட்டி தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் பயணிகளை வெளியேறுமாறும் கூறினர்.

அவர்கள் “பொய்’ சொல்கிறார்கள் என்பதை உணர்ந்த பயணிகள் பெட்டியை விட்டு இறங்க மறுத்தனர். இந்நிலையில் ரயில், அந்ந நிலையத்தை விட்டு புறப்பட்டது. ராணுவ வீரர்கள் பயணிகளிடம் தகராறு செய்து வந்தனர். தினா ரயில் நிலையம் அருகே ராணுவ வீரர்களும், பாதுகாப்பு படைவீரர்களும் பயணிகளை அடித்தனர். மேலும் அவர்களது உடமைகளை தூக்கி வெளியே வீசினர். பெண் பயணிகளிடம் தவறாக நடந்தனர்.

ரயிலை விட்டு இறங்கிய பயணிகள் சிலர் இது குறித்து தினா ரயில்வே போலீஸôரிடம் புகார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக 4 ராணுவ வீரர்கள், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

Posted in abuse, Bihar, Border Protection Force, Defense, Military, Patna, Power, Railways, Trains | Leave a Comment »

Vehicle strike in Kerala against insurance premium hike hits normal life

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

கேரளத்தில் போக்குவரத்து வாகனங்கள் வேலைநிறுத்தம்

திருவனந்தபுரம், ஜன. 26: வாகனங்களுக்கான இன்ஸþரன்ஸ் பிரீமியம் தொகையை கடுமையாக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

மோட்டார் பிரிவு சங்கங்கள் இந்த ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்தன.

கேரள அரசு போக்குவரத்து பஸ்களைத் தவிர அனைத்து ரக வாகனங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் தீவிரமாக இறங்கின.

தனியார் பஸ்கள், டாக்சிகள், ஆட்டோ-ரிக்ஷாக்களுடன் சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களும் ஓடவில்லை.

இருப்பினும் சொந்தமாக கார் அல்லது வாகனம் வைத்திருப்போர் செல்வதற்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில் அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்கவில்லை.

தனியார் பஸ்களையே பெரிதும் சார்ந்திருக்கும் வடமாவட்டங்கள் இந்த வேலைநிறுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன. மாநிலத்தின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களிலும் வேலைநிறுத்தத்துக்கு முழு ஆதரவு இருந்தது.

கோட்டயம் மாவட்டம் மீனாச்சில் தாலுகாவில் உள்ளூர் தேவாலயத்தில் திருவிழா நடைபெறுவதால் இந்த தாலுகாவுக்கு மட்டும் வேலைநிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

Posted in autorickshaws, church festival, Insurance, Kerala, Kottayam, KSRTC, Meenachil taluk, Premium, taxis, THIRUVANANTHAPURAM, Vehicle strike | Leave a Comment »

Tamil Language Defenders & Guardians Pension Fund – Selection Committee Nominated

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

தமிழ்மொழிக் காவலர் ஓய்வூதியத் திட்டம்: குழு நியமனம்

சென்னை, ஜன. 26: தமிழ் மொழிக் காவலர் ஓய்வூதியத் திட்டத்துக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான குழுவை முதல்வர் கருணாநிதி நியமித்துள்ளார்.

  • இக்குழுவின் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இருப்பார்.
  • சட்டப்பேரவை உறுப்பினர்கள் வ. முல்லைவேந்தன்,
  • வீ. கருப்பசாமி பாண்டியன்,
  • இ.எஸ்.எஸ். ராமன் (காங்),
  • என். நன்மாறன் (மார்க்சிஸ்ட்),
  • தி. வேல்முருகன் (பாமக) ஆகியோரும்
  • தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர்,
  • தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.

இக்குழுவினர் தமிழ்மொழிக் காவலர் ஓய்வூதியத் திட்டத்துக்காக பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து தேர்வு செய்வர்.

Posted in Communist, Congress (I), CPI (M), D Velmurugan, Defenders, DMK, ESS Raman, Guardians, Marxist, Marxist Communist, N Nanmaran, Nominations, PMK, Ponmudi, Selection Committee, Tamil Development, Tamil Development Department, Tamil Language, Tamil Nadu, V Karuppasamy Pandiyan, Va Mullia Vendhan | Leave a Comment »

Russia, India cement nuclear ties with offer of 4 new nuclear reactors

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகளை அமைக்க ரஷ்யா உதவும்

தமிழகத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்ய உதவியுடன் கட்டப்பட்டு வரும் அணுமின் நிலையத்தில் கூடுதலாக மேலும் நான்கு அணு உலைகளை அமைக்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக புதுடில்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இது தொடர்பான உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது.

வியாழக்கிழமை காலை புடின் புதுடில்லி வந்தடைந்தார்.

அதன்பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒன்பது உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

கூடங்குளத்தில் ஏற்கெனவே இரண்டு அணு உலைகள் ரஷ்ய உதவியுடன் கட்டப்பட்டு வருகின்றன. அத்துடன், மேலும் நான்கு அணு உலைகளை அங்கு அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்தியாவில் வேறு இடங்களிலும் புதிய அணுமின் நிலையங்களை ரஷ்ய தொழில்நுட்பத்துடன் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகக் கருதப்படுகிறது.

ரஷ்யாவின், உலக கடல்வழி தொடர்புடைய செயற்கைக் கோள் மூலம் கடல்வழி சமிக்ஞைகளை, அமைதிப் பணிகளுக்காக இந்தியா பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இரு நாட்டு எண்ணெய் நிறுவனங்களும் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணத் திட்டம் தொடர்பான பணிகளை, தங்கள் நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் இணைந்து மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.

புடின் மற்றும் மன்மோகன் சிங், பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். கடந்த பத்து ஆண்டுகளில், உலக அளவில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பொருத்தவரை, ரஷ்யாவுக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இந்தியாவுடனான சர்வதேச அணுசக்தி ஒத்துழைப்புத் தடைகளை நீக்கியதற்காக ரஷ்யாவுக்கு நன்றி தெரிவித்த மன்மோகன் சிங், பல நோக்கு விமானங்கள் மற்றும் நவீன ரக போர் விமானங்கள் உற்பத்தியில் கூட்டாகச் செயல்பட முடிவு செய்திருப்பது, இரு நாட்டு உறவில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

அதே நேரத்தில், பொருளாதார ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியடையவில்லை என்றும் அதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்..

ரஷ்யா – இந்தியா -சீனா இடையிலான முத்தரப்பு ஒத்துழைப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த புடின், எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், ரஷ்யா – இந்தியா – சீனா – பிரேசில் நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பும் வருங்காலத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் புடின்.

வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழா நிகழ்ச்சியில், கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்கிறார் புடின்.


Posted in A K Antony, China, Defense Minister, Electricity, energy, India, Kremlin, Kudankulam, Manmohan Singh, MiG-35, Moscow, Nuclear, Nuclear Suppliers' Group, Oil and Natural Gas Corp. Ltd, ONGC, Parade, Power, President, Putin, reactors, Republic Day, Rosneft, Russia, Sakhalin, Sakhalin-1, Sakhalin-3, Sergei Ivanov, T-90 tanks, United States, USSR, Vladimir Putin | Leave a Comment »

Donors pledge 7.6 billion dollars for Lebanon rebuilding

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

லெபனானின் மீள் கட்டமைப்புக்கு 7.6 பில்லியன் டொலர்கள்

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற அனைத்துலக உதவி வழங்கும் மாநாட்டில், லெபனானை மீண்டும் கட்டியெழுப்ப 7.6 பில்லியன் டொலர்களை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு அதிபர் ஜாக் ஷிராக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், சவுதி அரேபியா ஆகியவையும் உலக வங்கியும் இணைந்து வழங்கும் இந்த உதவி நிதியுதவியாகவும், கடனாகவும் வழங்கப்படவுள்ளது.

இஸ்ரேலுக்கும், ஹெஸ்பொல்லா அமைப்புக்கும் இடையில் கடந்த ஆண்டு நடந்த சண்டையை அடுத்து லெபனான் சாம்பலில் இருந்து மறு அவதாரம் எடுக்கிறது என்று ஜாக் ஷிராக் கூறினார்.

லெபனானுக்கு உதவி வழங்கும்படி அந்த நாட்டுப் பிரதமர் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.

Posted in Ain el-Helweh, Beirut, EU, Fouad Siniora, France, Hezbolla, Hezbollah, Israel, Jacques Chirac, Lebanon, Palestine, Saudi Arabia, US | Leave a Comment »

Isai Selvam, Iyal Selvam, Natya Selvam, Thavil Selvam, Mridanga Selvam Awards

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

தமிழகத்தில் “வேட்டைகள்’ தொடரும்: முதல்வர் கருணாநிதி


HONOUR: Chief Minister M.Karunanidhi with the awardees — Divya Kasturi, Geetha Rajasekhar, Kumbakonam A. Premkumar, Achalpuram Chinnathambi Pillai and Needmangalam Kannappa Pillai, at the 31st annual Music Festival of Muthamizh Peravai in Chen nai on Wednesday. Industrialist N. Mahalingam and Kundrakkudi Ponnambala Adigalar are also in the picture. — Photo : M. Vedhan

சென்னை, ஜன. 25: தமிழகத்தில் இயல், இசை, நாட்டியத்தைக் காக்கும் வகையில், ஆட வேண்டிய வேட்டைகள் தொடரும் என்று முதல்வர் கருணாநிதி சூசகமாகத் தெரிவித்தார்.

முத்தமிழ்ப் பேரவையின் 31-ம் ஆண்டு இசை விழாவில் இயல், இசை, நாட்டியக் கலைஞர்களுக்கு விருதுகளை அவர் புதன்கிழமை வழங்கிப் பேசியதாவது:

கடந்த 4 நாள்களாக பாராட்டு மழை தொடர்கிறது. தமிழின் பெயரால் ஒரு பேரவை 31 ஆண்டுகளாக நடந்து வருவது வியப்பான செய்தி.

திருவாவடுதுறையார், நீடாமங்கலத்தார்…என்று ஊரின் பெயரைச் சொல்லி புகழ் பெற்றனர் அக்காலத்தில். அப்படிப்பட்ட மேதைகள் நடத்திய விழாவில் கலந்து கொண்டு கலை, இசை நிகழ்ச்சிகளைக் கண்ணாரக் கண்டவன் நான்.

அவர்கள் வழங்கிய பல்வேறு செல்வங்கள் நம்மிடையே இருக்கிறது என்றால் அவற்றுக்கு என்றைக்குமே அழிவு இல்லை.

என்னுடைய வயது, அரசியல் வாழ்வு, இலக்கிய நுழைவு எப்போது என்பது உங்களுக்குத் தெரியும். தலைமுறைகளைச் சந்திக்கிற, வாழ்த்துகிற, பாராட்டப்படுகின்ற பேறு பெற்றுள்ளேன்.

குன்றக்குடி அடிகளார் தமிழுக்குப் புதுப் பொலிவைத் தந்தவர்.

மயிலாடுதுறையில் அவரும் நானும் சந்தித்துப் பேசியபோது, திராவிட, பெரியார் கொள்கைகள், அண்ணாவின் லட்சியம் மற்றும் மக்களிடயே குன்றக்குடி அடிகள் விதைத்த கருத்துகளுக்கும் இடையே ஒற்றுமை-வேற்றுமைகளை உணர்ந்தோம். இதனால்தான் நாங்கள் ஒன்றாகவும் முடிந்தது.

மொழிக்காக நடந்த போராட்டத்தில் குன்றக்குடி அடிகளார் பங்கேற்றதால் பட்ட துன்பங்களை அனைவரும் அறிவர்.

தற்போது இளம் அடிகளார் (பொன்னம்பல தேசிகர்) தன்னுடைய வாழ்க்கை மூலம் கருத்துகளை எடுத்துச் சொல்லும் செயலின் மூலம் நானும் குன்றக்குடி அடிகளைப் போன்றவர் என்பதை நிரூபித்துள்ளார்.

தமிழ், தமிழர் பண்பாட்டை வளர்க்கவும் பாதுகாக்கவும் வேண்டும். நான் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர்.

அவர்கள் தங்களை நம்பிச் சொன்னார்கள், ஆனால் நான் உங்களை நம்பிச் சொல்கிறேன்.

தமிழகத்தின் நிதி அமைச்சராக சிறப்பாக செயல்பட்டவர் சி. சுப்பிரமணியம். அவரது காலத்தில் ரூ. 100 கோடியில் பட்ஜெட் போடப்பட்டது.

ஆனால், தற்போது உலகப் பொருளாதாரம், இந்தியப் பொருளாதாரத்தை எண்ணிப் பார்க்கையில், ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு வரவு செலவுத் திட்டம் போட வேண்டியுள்ளது. பட்ஜெட் உயர்ந்ததா அல்லது பண மதிப்பு குறைந்ததா என்று பார்த்தால் அக்காலத்தில் ரூ. 100 கோடி போதுமானதாக இருந்தது.

கணக்கில் கொஞ்சம் “வீக்’:1957-ம் ஆண்டில் தமிழக சட்டப் பேரவையில் அண்ணா, அன்பழகன் போன்றோருடன் நாங்கள் அடியெடுத்து வைத்தோம். எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். எனக்கு கணக்கில் கொஞ்சம் “வீக்’.

தமிழ் ஆய்ந்த தமிழன் ஆட்சி வேண்டும் என்றார் பாரதிதாசன். இன்று தமிழகத்தில் திராவிட ஆட்சி நடக்கிறது.

பகுத்தறிவு, தன்மானச் செல்வங்களை தமிழக மக்களுக்கு வழங்க இந்த ஆட்சி நீடிக்க நீங்கள் (பொதுமக்கள்) துணை நிற்க வேண்டும்.

அண்ணா காலத்தில் திமுக ஆட்சியை ஓட்டை விழுந்த ஆட்சி என்றனர்.

திருவாரூர் ரசிகத் தன்மை வாய்ந்த ஊர். அந்த ஊரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணா பேசும்போது ஆமாம், இது ஓட்டைகள் நிறைந்த ஆட்சிதான்.

இது ஏனோதானோ என்று விழுந்த ஓட்டைகள் அல்ல. நாதஸ்வரத்தில், புல்லாங்குழலில் உள்ளதைப் போன்ற ஓட்டைகள்.

எந்த ஓட்டையை அடைத்தால் நாதம் வரும் என்று எனக்கு நன்றாகத் தெரியும் என அண்ணா சொன்னார்.

அதே போல அண்ணாவின் தம்பிகளாகிய நாங்கள் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எனவே, அடைக்க வேண்டிய ஓட்டைகளை அடைத்து, ஆட வேண்டிய வேட்டைகளையும் நடத்தி இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழை வளப்போம். காப்போம் என்றார் கருணாநிதி.

Posted in A. Premkumar, Achalpuram Chinnathambi Pillai, Awards, C Subramniam, C Subramniyam, Culture, Dance, Divya Kasturi, Drama, Geetha Rajasekhar, Isai, Isai Selvam, Iyal, Iyal Selvam, Karunanidhi, Kundrakkudi Ponnambala Adigalar, Kunrakkudi Adigal, Kunrakudi Adigal, Mridanga Selvam, music, Muthamizh Peravai, N. Mahalingam, Naattiyam, Natya Selvam, Needmangalam Kannappa Pillai, Ponnambala Desikar, Tamil, Tamil heritage, Thavil Selvam, Thiruvaaroor, Thiruvaroor, Thiruvarur | Leave a Comment »

‘Captain’ Vijaykanth’s DMDK to compete in Mumbai Civic Polls

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

மும்பை மாநகராட்சித் தேர்தலில் தேமுதிக போட்டி

சென்னை, ஜன. 25: மும்பை மாநகராட்சித் தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

179-வது வார்டு தாராவில் என். நவிகிருஷ்ணன், 168-வது வார்டு சயான்கோலிவாடாவில் லட்சுமி ராஜாமணி ஆகியோர் தேமுதிக வேட்பாளர்களாக முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Posted in Bombay, Civic body, Civic Polls, DMDK, Local Elections, maharashtra, Mumbai, Tamil, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | 1 Comment »

Auto Rikshaw fare increase in Chennai – Madras Auto riders to pay more

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

ஆட்டோவில் எழும்பூரில் இருந்து சென்னையில் பிற இடங்களுக்கு செல்ல கட்டணம் எவ்வளவு?

குடியரசு தினமான வெள்ளிக்கிழமை முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதையொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலைய வாயிலில் இருந்து பயணிகள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல அரசு நிர்ணயித்துள்ள கட்டண விவரப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து நகரின் பிறபகுதிகளுக்குச் செல்லும் தூரம் (அடைப்புக் குறிக்குள்) மற்றும் கட்டண விவரம்:

1. சென்ட்ரல் (2 கி.மீ) -ரூ.14.

2. பாரிமுனை (4 கி.மீ.) -ரூ.26.

3. சேப்பாக்கம் (4 கி.மீ) -ரூ.26.

4.திருவல்லிக்கேணி (4 கி.மீ) -ரூ.26.

5. ராயப்பேட்டை (4.2 கி.மீ.) -ரூ.27.20.

6.மந்தைவெளி (7.2 கி.மீ) -ரூ.45.20.

7.நந்தனம் (8 கி.மீ) -ரூ.50.

8.சைதாப்பேட்டை (9 கி.மீ) -ரூ.56.

9.அடையாறு (13 கி.மீ) -ரூ.60.

10. பெசன்ட் நகர் தேவாலயம் (16 கி.மீ) -ரூ.98.

11.திருவான்மியூர் (17 கி.மீ) -ரூ.104.

12.விமான நிலையம் (17 கி.மீ) -ரூ.104.

13.நுங்கம்பாக்கம் (4.5 கி.மீ) -ரூ.29.

14.தி.நகர் (8 கி.மீ) -ரூ.50.

15.வள்ளுவர் கோட்டம் (5 கி.மீ) -ரூ.50.

16.வடபழனி (12 கி.மீ) -ரூ.74.

17.அசோக் நகர் (10 கி.மீ) -ரூ.62.

18.கே.கே.நகர் (12 கி.மீ) -ரூ.74.

19.புரசைவாக்கம் (3 கி.மீ) -ரூ.20.

20.கீழ்ப்பாக்கம் (5 கி.மீ) -ரூ.32.

21.அயனாவரம் -(5 கி.மீ) -ரூ.32.

22. செனாய் நகர் (6 கி.மீ) -ரூ.38.

23. அண்ணாநகர் ஆர்ச் (7 கி.மீ) -ரூ.44.

24. அண்ணாநகர் கிழக்கு (8 கி.மீ) -ரூ.50.

25.கோயம்பேடு (10 கி.மீ) -ரூ.62.

26. முகப்பேர் கிழக்கு (12.5 கி.மீ) -ரூ.77.

27. முகப்பேர் மேற்கு (13.5 கி.மீ) -ரூ.83.

சாதாரண மீட்டரில் இருந்து எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்த ரூ.3,500 செலவாகும்: ஆட்டோ டிரைவர்கள்

சென்னை, ஜன. 25: ஆட்டோக்களில் சாதாரண மீட்டரில் இருந்து எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்த ரூ.3,500 செலவாகும் என ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் ஜன.26 முதல் ஆட்டோக்களில் மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டண முறை அமலாகிறது. இதற்காக சாதாரண மீட்டர் பொருத்திய ஆட்டோக்களில் 6 மாத காலத்துக்குள் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தும்படி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

“”சென்னை நகரில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இதில் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு தயாரித்து வெளியே வந்த ஆட்டோக்களில் மட்டுமே எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட ஆட்டோக்களில் சாதாரண மீட்டரே பொருத்தப்பட்டுள்ளது. சாதாரண மீட்டரை, எலெக்ட்ரானிக் மீட்டாராக மாற்ற சுமார் ரூ.3,500 வரை செலவாகும்” என்றார் ஆட்டோ டிரைவர் சடகோபன்.

சாதாரண மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்களின் எண்ணிக்கை 16,948 ஆகும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஷேர் ஆட்டோக்களுடன் பிரச்சினை: சென்னையில் உள்ள திருவான்மியூர், முகப்பேர், அண்ணா நகர், மீனம்பாக்கம் பகுதிகளில் உள்ள ஷேர் ஆட்டோக்களால் தங்களுக்கு வருவாய் பாதிக்கப்படும் என்று ஆட்டோ டிரைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இத்துடன், வேன் மற்றும் உரிமம் இல்லாமல் இயங்கும் ஆட்டோக்களினால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

“”ஷேர் ஆட்டோ இயங்கும் பகுதிகளுக்குச் செல்லும்போது அங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக அரசு தான் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இத்துடன், ஆட்டோ தொழிலை நம்பி லட்சக் கணக்கானோர் உள்ளனர். அவர்களின் நலனுக்கான ஆட்டோ நல வாரியம் அமைக்க வேண்டும்” என்றார் உமாபதி என்ற ஆட்டோ டிரைவர்.

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் டிரைவர்கள் மீது புகார் தெரிவிக்க ஏற்பாடு

சென்னை, ஜன. 25: ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் டிரைவர்கள் மீது புகார் தெரிவிக்க “கட்டுப்பாட்டு அறை’ அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ஆட்டோக்களில் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதில் 2 கிலோ மீட்டருக்கு ரூ.14 என்றும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.6 கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

5 நிமிஷத்துக்கு காத்திருக்கும் கட்டணமாக 40 பைசாவும், இரவு நேர கட்டணமாக கூடுதலாக 25 சதவீதம் அதிகம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் 16,498 ஆட்டோக்களில் சாதாரண மீட்டரும், 32,595 ஆட்டோக்களில் எலக்ட்ரானிக் மீட்டரும் உள்ளன. சாதாரண மீட்டர் உள்ள ஆட்டோக்களில் 6 மாதத்துக்குள் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மாற்றியமைக்கப்பட்ட ஆட்டோ கட்டணம் தொடர்பான விவரங்கள் குறித்து பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட 34 முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் எந்த இடத்தில் இருந்து எங்கு செல்வதற்கு எவ்வளவு கிலோ மீட்டர் என்ற விவரமும், அதற்கு வசூலிக்கப்படும் கட்டணத் தொகை குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இந்த கட்டுப்பாட்டு அறை இயங்கும். ஜன.26-ம் தேதி முதல் இந்த கட்டுப்பாட்டு அறைகள் எந்நேரமும் இயங்கும்.

10 கட்டுப்பாட்டு அறைகள்: அனைத்துப் பகுதியிலும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் விபரம்:

1. கிழக்கு -26670993.

2.மேற்கு- 24898240.

3.மத்திய சென்னை -26445959.

4.வடக்கு -26732525.

5.வட மேற்கு -26215959.

6.தெற்கு -24450404.

7.தென் மேற்கு -24867733.

8.மீனம்பாக்கம் -22325555.

9.போக்குவரத்து துறை இணை ஆணையர் அலுவலகம் -26445511, 26444445.

10.சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை -103, 9841808123.

புகார் கொடுத்தவுடன் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Auto, Auto Rikshaa, Auto Rikshaw, Chennai, fare, Madras, Share Auto, Transport, Transportation | Leave a Comment »

Temple welcoming Dalits turns 100 – Lakshmi Narayan Temple by Bachraj Bajaj

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

தீண்டாமைக்கு எதிரான முதல் புரட்சி: தலித்துகள் நுழைய அனுமதிக்கப்பட்ட லட்சுமி நாராயணன் கோயிலுக்கு வயது 100

நாகபுரி, ஜன. 25: இந்தியாவில் முதன்முதலாக தலித்துகள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்ட கோயில் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன.

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இருந்து 80 கி.மீ தொலைவில் வார்தாவுக்கு அருகே உள்ளது லட்சுமி நாராயணன் கோயில். 1907 ஜனவரி 23 அன்று இக்கோயிலின் முதல் கும்பாபிஷேகம் நடந்தது. 1928ல் சுமார் 2000 தலித் சமூக மக்கள் இக்கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்தனர். இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமை அதிகமாக நடந்த அந்தக் காலகட்டத்தில் இந் நிகழ்வு ஒரு புரட்சியாகவே கருதப்பட்டது.

மிகப் பெரும் தொழிலதிபரும், சமூக சீர்திருத்தவாதியுமான பஜ்ராஜ் பஜாஜ் இக்கோயிலைக் கட்டினார். இவரது வளர்ப்பு மகனான ஜம்னாலால் பஜாஜ் காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டவர். இவரும் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாவார். இவரது முயற்சியாலேயே தலித்துகள் கோயிலுக்குள் செல்ல முடிந்தது.

ஜம்னாலாலின் சமூக சேவைகளை தனது “யங் இந்தியா’ பத்திரிகையில் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் காந்திஜி. சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் வார்தா பகுதிக்கு வந்த காந்திஜி இக் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

ஜம்னாலாலின் பேரன்கள்தான் தற்போது பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களாக இருக்கும் ராகுல் பஜாஜ் மற்றும் சேகர் பஜாஜ் ஆகியோர் ஆவர்.

Posted in Bachraj Bajaj, Bajaj, Bajaj Auto, Bajaj Electricals, Dalits, Harijan, Jamnalal Bajaj, Lakshmi Narayan Temple, Lakshmi Narayanan Temple, maharashtra, Mahatama Gandhi, Nagpur, Rahul Bajaj, Shekhar Bajaj, Untouchability, Vardha, Wardha | Leave a Comment »

Car Wars: Maruti takes on Tata Motors

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

சிங்குரில் போராட்டத்தைத் தூண்டிவிடும் போட்டி நிறுவனத்தின் பெயரை வெளியிடத் தயாரா?: டாடாவுக்கு மாருதி சவால்

புது தில்லி, ஜன. 25: மேற்கு வங்க மாநிலம் சிங்குரில், டாடா கார் தொழிற்சாலைக்கு விளைநிலங்களை கையகப்படுத்தியதற்கு எதிரான போராட்டத்தை, எந்த போட்டி நிறுவனம் தூண்டி விடுகிறது என பெயரை வெளியிடத் தயாரா என்று டாடா நிறுவனத்துக்கு மாருதி கார் நிறுவனம் சவால் விடுத்துள்ளது.

டாடா நிறுவனஅதிபர் ரத்தன் டாடா எழுப்பிய இந்தப் புகார் குறித்து, மாருதி உத்யோக் நிறுவன நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜகதீஷ் கத்தர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

டாடா எந்தப் போட்டி நிறுவனத்தைக் குறிப்பிடுகிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவருக்குத் தெரிந்திருப்பதால், அதை அவர் வெளியில் சொல்ல வேண்டும்.

போட்டியாளர்களின் திட்டங்களைக் குலைக்கும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடுவது இல்லை. ஆரோக்கியமான போட்டியில்தான் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் என்றார்.

சிங்குர் ஆலையில் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ரூ.1 லட்சம் விலையிலான மக்கள் கார் சந்தைக்கு வந்தால் அது மாருதி நிறுவனத்தின் எம்-800 கார் விற்பனையை பாதிக்கும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஏனெனில், எம்-800 கார்தான் தற்போது நாட்டிலேயே மிகவும் விலை குறைவாக சுமார் ரூ.2 லட்சத்துக்குக் கிடைக்கிறது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜகதீஷ் கத்தார் கூறியதாவது: எம்-800 விற்பனைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இரு சக்கர வாகனங்களுக்கும் கார்களுக்கும் உள்ள இடைவெளியை, ரூ.1 லட்சம் விலையிலான கார், குறைக்கும் என்பதால், எம்-800-க்கு அது உதவிகரமாகவே இருக்கும் என்றார்

Posted in Auto Industry, Automotive, Business, Cars, Competition, Fights, Maruthi, Maruti, Maruti Udyog, Marutih, Ratan Tata, Singur, Suzuki Motor Corp, TATA, Tata Motors, Wars, WB, West Bengal | Leave a Comment »

80 year old bridge over Nasuvini collapses in Tamil Nadu

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

80 ஆண்டு பழமையான பாலம் ஆற்றுக்குள் இடிந்து விழுந்தது

பட்டுக்கோட்டை, ஜன. 25: பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூர் நசுவினியாற்றில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலைப் பாலம் செவ்வாய்க்கிழமை மாலை இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.

அப்போது எந்த வாகனமும் பாலத்தில் செல்லவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது.

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலத்தின் நீளம் 40 மீட்டர், உயரம் சுமார் 4 மீட்டர். இதில் சுமார் 25 மீட்டர் நீளத்துக்கு பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

இதனால் அதிராம்பட்டினம் -மன்னார்குடி (துவரங்குறிச்சி வழி) மார்க்கத்தில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

புதிய பாலம் கட்டப்படும் வரை இவ்வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்துக்காக இடிந்த பாலம் அருகில் இன்னும் 1 மாதத்தில் மாற்றுப் பாதை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Posted in Adhirampattinam, Bridge, Congestion, Dam, Floods, Issue, Mannargudi, Mannarkudi, Mullai Periyar, Nasuvini River, Palanjoor, Palanjur, Pattukkottai, Pattukottai, Pazhanjoor, Pazhanjur, Safety, Thuvarangurichi, Thuvarankurichi, Traffic, Water | Leave a Comment »

Tamil Exam papers – Sample III

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

மாதிரி வினாத் தாள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு – பொதுத் தமிழ்: தமிழ் இரண்டாம் தாள்

(உரைநடை, துணைப் பாடம், செய்யுள் நயம் பாராட்டல், தமிழாக்கம், படைப்பாற்றல், மொழித்திறன்) (தொடர்ச்சி)

ஐய. பின்வரும் வினாக்களுள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் விடை எழுதுக.

2*10 = 20

13. “பால்வண்ணம் பிள்ளை (அல்லது) “சட்டை’ கதையைக் கருப்பொருளும், சுவையும் குன்றாமல் சுருக்கி வரைக.

(அல்லது)

“ஓர் உல்லாசப் பயணம்’ (அல்லது) “பழிக்குப் பழி’ கதையில் வரும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை நாடகமாக வரைக.

14. “ஒவ்வொரு கல்லாய்’ (அல்லது) “மண்’ சிறுகதையில் நும் மனம் கவர்ந்த கதை மாந்தர் குறித்துத் திறனாய்வு செய்க.

(அல்லது)

ஒரு குடும்பத்தில் பொறுப்பான தந்தை, அன்பான தாய், நல்ல குழந்தைகள் அமைந்துள்ள சூழலைக் கருவாய் அமைத்து ஒரு கதை எழுதுக.

(அல்லது)

சுனாமியில் சிக்கி வழி தவறி வந்த குழந்தையை எடுத்து வளர்த்து ஆளாக்குவது போல் ஒரு கதை எழுதுக.

ய. 15. பின்வரும் செய்யுளைப் படித்துணர்ந்து அதில் அமைந்துள்ள மையக் கருத்தை நயத்துடன் எடுத்துரைத்து அதில் அமைந்துள்ள எதுகை, மோனை, இயைபு, முரண், அணி, சந்தச்சுவை, உவமை, உருவகம், கற்பனை ஆகியவற்றுள் ஏற்புடையவற்றைச் சுட்டி எழுதுக.

1*10 = 10

நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்தே

நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமு கத்தை!

கோலம்முழு தும்காட்டி விட்டால் காதற்

கொள்கையிலே இவ்வுலகம் சாமோ? வானச்

சோலையிலே பூத்தனிப் பூவோ நீதான்?

சொக்க வெள்ளிப் பாற்குடமோ? அதிக ஊற்றோ?

காலை வந்த இளம்பரிதி கடலில் மூழ்கிக்

கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ?

– கவிஞர் பாரதிதாசன்

யஐ. பின்வருவனவற்றுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் தமிழாக்கம் தருக:

3*2 = 6

16. ஆஹழ்ந்ண்ய்ஞ் க்ர்ஞ்ள் ள்ங்ப்க்ர்ம் க்ஷண்ற்ங்.

17. உம்ல்ற்ஹ் ஸ்ங்ள்ள்ங்ப்ள்ம்ஹந்ங்ற்ட்ங்ம்ர்ள்ற்ய்ர்ண்ள்ங்.

18. ஏஹள்ற்ங் ம்ஹந்ங் ஜ்ஹள்ற்ங்.

19. ரட்ங்ழ்ங் ற்ட்ங்ழ்ங் ண்ள் ஜ்ண்ப்ப், ற்ட்ங்ழ்ங்ண்ள்ஹஜ்ஹஹ்.

20. அப்ப் ஸ்ரீர்ஸ்ங்ற், ஹப்ப் ப்ர்ள்ள்.

21. ஓண்ய்க்ய்ங்ள்ள் ஸ்ரீஹய்ய்ர்ற் க்ஷங்க்ஷர்ன்ஞ்ட்ற்.

யஐஐ. 22. பின்வரும் பழமொழிகளுள் ஒன்றினை விளக்கும் வகையில் வாழ்க்கை நிகழ்வில் அமைத்து (பத்து வரிகளில்) எழுதுக.

1*4 = 4

அ) உரிய காலத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்

ஆ) சிறுதுளி பெருவெள்ளம்

இ) வருமுன் காத்தலே சிறந்தது

(அல்லது)

“எரிபொருள் சிக்கனம் தேவை’ (அல்லது) நல்ல நண்பன்’ என்ற தலைப்பில் சிந்தித்து உமது சொந்தப் படைப்பாகக் கவிதை ஒன்றை (எட்டு அடிகளுக்குக் குறையாது பத்து அடிகளுக்கு மிகாது) எழுதுக.

யஐஐஐ. பின்வரும் வினாக்களுக்கு அடைப்புக் குறிகளுக்குள் குறிப்பிடப்பட்டுள்ளவாறு விடை எழுதுக.

10*1 = 10

23. புலி வந்தன; எருதுகள் ஓடியது.

(வாக்கியப் பிழையைத் திருத்துக)

24. நெல்லிகாய், தான்றிகாய், கடுகாய் ஆகிய மூன்று சரக்குகளை கொண்டது திரிபலை எனப்படும்.

(தேவையான இடங்களில் வல்லின மெய்களை இட்டு எழுதுக).

25. அலை, அழை (அல்லது) ஆணி, ஆனி (பொருள் வேறுபாட்டை உணர்த்தும் வகையில் தனித்தனி வாக்கியங்களில் அமைத்து எழுதுக?)

26. டி.வி.யில் சீரியல் பார்க்காவிட்டால் லைஃபே போர் அடித்து விடும்’ என்கிறாள் பாட்டி.

(பிறமொழிச் சொற்களை நீக்கி இனிய தமிழில் எழுதுக)

27. சுபதினத்தில் கிருகப் பிரவேசம் முடித்த தம்பதிகள் அனைவரையும் உபசரித்தார்கள்.

(பிறமொழிச் சொற்கலப்பை நீக்கி நல்ல தமிழில் எழுதுக)

28. கோளிமுட்டை தாவாரத்தில் உருண்டது.

(கொச்சையான வழுஉச் சொற்களைத் திருத்தி எழுதுக)

29. நீரோச் சோறோ எதுக் கிடைத்தாலும் உண்டுச் செல்வேன்.

(தேவையற்ற இடங்களில் அமைந்த வல்லின மெய்களை நீக்கி எழுதுக.)

30. தோட்டத்தில் உள்ள வாழைச் செடி பார்க்க அழகாக உள்ளது.

(மரபு வழுவை நீக்கி எழுதுக)

31. பரவை இறையாகப் பயரு வகைகளைத் திண்ணும்.

(எழுத்துப் பிழைகளைத் திருத்தி எழுதுக)

32. ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் கடிதம் எழுது என்று என் தந்தை சொன்னார்.

(பொருத்தமான நிறுத்தற்குறிகளை இட்டெழுதுக)

விடைகள் -கேள்வி எண் 16-21; 23-32

16. குரைக்கின்ற நாய் கடிக்காது

17. குறைகுடம் தளும்பும்

18. பதறிய செயல் சிதறும்

19. மனம் இருந்தால், மார்க்கமுண்டு

20. பேராசை பேரிழப்பு

21. அருளை வாங்க முடியாது

23. புலி வந்தது; எருதுகள் ஓடின.

24. நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் ஆகிய மூன்று சரக்குகளைக் கொண்டது திருபலை எனப்படும்.

25. அலை -கடல் அலை, அலைந்து திரிதல்

அழை -கூப்பிடு

ஆணி -கூரிய இரும்புத்துண்டு

ஆனி -ஒரு மாதம்

26. “தொலைக்காட்சியில் தொடர்களைப் பார்க்காவிட்டால் வாழ்க்கையே வெறுத்துவிடும்’ என்கிறாள் பாட்டி.

27. நன்னாளில் புதுமனை புகுவிழாவை முடித்த கணவன் மனைவியர் அனைவரையும் ஒப்பினார்கள்.

28. கோழி முட்டை தாழ்வாரத்தில் உருண்டது.

29. நீரோ சோறோ எது கிடைத்தாலும் உண்டு செல்வேன்.

30. தோட்டத்தில் உள்ள வாழைக்கன்று பார்க்க அழகாக உள்ளது.

31. பறவை இரையாகப் பயறு வகைகளைத் தின்னும்.

32. “”ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் கடிதம் எழுது”, என்று என் தந்தை சொன்னார்.

Posted in Exam, Examinations, Genral Tamil, papers, Public Exam, Q&A, Questions | 22 Comments »

Neelima Naidu & TV Actress Meenakshi arrested – Prostitutes are warned & let go

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

நடிப்பதற்கு ஒத்திகை பார்ப்பதாக கூறி தயாரிப்பு நிர்வாகியுடன் படுக்கையில் புரண்ட தென்இந்திய அழகி கைது

சென்னை, ஜன. 24-

சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சங்கரபாண்டியனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலை பேசியில் ரகசிய தகவல் வந்தது.

அதில் பேசிய நபர் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு, வீட்டில் நடிகைகள் சிலர் பலான தொழிலில் ஈடுபடுவதாகவும் சிலர் கார்களில் அங்கு வந்து செல்வ தாகவும் புகார் கூறினார்.

இதையடுத்து உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் அந்தப் பகுதியில் மாறு வேடத்தில் கண்காணித்தனர். பின்னர் அதிரடியாக சம்பந்தப்பட்ட வீட்டினுள் நுழைந்த போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு அறையில் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நீலிமா நாயுடு ஒரு வாலிபருடன் கட்டிபுரண்டு கிடந்தார். நீலிமா நாயுடு தென்னிந்திய அழகி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அறையில் ஆழ்வார் பேட்டையை சேர்ந்த டி.வி. நடிகை மீனாட்சி ஒரு நடுத்தர வயது ஆணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மீனாட்சி பிரபல ஜவுளி கடையின் விளம்பர டடத்தில் நடித்துள்ளார்.

பெண் போலீசார் உதவியுடன் விபசார தடுப்பு பிரிவு போலீசார் 2 ஜோடிகளையும் கையும், களவுமாக மடக்கினர். இதில் 2 அழகிகளையும் விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் சரவணன் போலீஸ் பிடியில் சிக்கினார்.

மேலும் நீலிமா நாயுடுவிடம் உல்லாசமாக இருந்தவர் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி. மீனாட்சியுடன் இருந்தவர் பிரபல தனியார் தொலை காட்சி ஊழியர். இவர்கள் 2 பேரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இதையடுத்து போலீசார் நீலிமா நாயுடுவிடம் விசாரித்தனர். அவர் போலீசில் கூறியதா வது:-

நான் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளேன். என்னுடைய அழகையும், இளமையையும் பார்த்த பல சினிமா டைரக்டர்கள் என்ëனை நடிக்க அழைத்தனர். நான் ஐதராபாத்தில் மாடலிங் செய்து வந்தால் அங்குள்ள ஆண் நண்பர்கள் மூலம் நிறைய புதிய தொடர்புகள் ஏற்பட்டது.

அதில் சரவணனும் ஒருவர். அவ்வப்போது அழகி போட்டிகளில் பங்கு பெற பெங்களூர், மும்பை என செல்வேன். அப்போது சரவணனும் என்னுடன் வருவார். ஆரம்பத்தில் தொழில் முறை நண்பராக பழகிய அவர் எங்கள் குடும்ப நண்பரானார். அதோடில்லாமல் எனது லைனில் அக்கறை உள்ளவர் போல் நடந்து கொண்டார். இதனால் நான் அவரை முழுமையாக நம்பினேன்.

வாரத்திற்கு ஒரு முறை என்னை சில தொழில் அதிபர்கள் சந்திக்க வருவார்கள். அவர்களை சரவணன்தான் அழைத்து வருவார். அவர்களுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்வேன். அப்படி வந்த சினிமா தயாரிப்பு நிர்வாகி ஒருவர் சென்னை வந்தால் சினிமாவில் நடிக்க எளிதில் வாய்ப்பு கிடைக்கும். உனது உடற்கட்டு, தமிழக ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் உள்ளது.

மேக்கப் டெஸ்ட் எடுப்பதற்கு என்று எனக்கு தெரிந்த பலர் சென்னை அண்ணா நகரில் உள்ளனர் என்று கூறி இங்கு அழைத்து வந்தார்.

இங்கு நான் தங்கியிருந்த அறைக்கு, டி.வி.நடிகை மீனாட்சி சில மணி நேரத்திற்கு முன்பு வந்தார். உடலை எப்படி இளமை பொலிவுடன் வைத்துக் கொள்வது என 2 பேரும் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது சரவணன் 2 பேரை அழைத்து வந்தார். அதில் ஒருவர் ஏற்கனவே அறிமுகமான தயாரிப்பு நிர்வாகி, மற்றொருவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்றும் கூறி என் அருகில் அமர்ந்தனர்.

சிறிது நேரம் என்னிடம் பேசிக் கொண்டிருந்த அவர் மீனாட்சியை அழைத்துக் கொண்டு அடுத்த அறைக்கு சென்று விட்டார். எனது அறையில் இருந்த தயாரிப்பு நிர்வாகி என்னிடம் சிறிய அளவிலான வண்ண வண்ண ஆடைகளை உடுத்தச் சொல்லி மேக்கப் டெஸ்ட் எடுத்தார்.

தனது செல்போன் காமிராவால் பல கோணங்களில் படம் பிடித்தார். ஒரு கட்டத்தில் நெருக்கமான பாடல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என ஒத்திகை பார்ப்பதாக கூறி என்னை இறுக்கி அணைத்தார். அவர் பிடியில் என்னை இழந்தேன். பின்னர் தான் தெரிந்தது சரவணன் என்னை நடிக்க வைப்பதாக கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியது.

நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தப்பி செல்ல முயன்றேன். அதற்குள் 2-வது முறையாக என்னை பிடித்து வலுக்கட்டாய படுக்கையில் தள்ளி பலவந்தப்படுத்தினார்.

இவ்வாறு கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

ஆனால் சரவணனோ நீலிமா நாயுடு தாமாக விரும்பிதான் சினிமா தயாரிப்பு நிர்வாகியோடு படுக்கையை பகிர்ந்து கொண்டதாக கூறினார். இதற்கிடையே போலீசிடம் இருந்து தப்பி சென்ற தயாரிப்பு நிர்வாகியும், தனியார் தொலைக்காட்சி ஊழியரும் தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு சரவணனை விடுவிக்க நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து சரவ ணனிடம் இருந்து ரூ.22 ஆயி ரம் ரொக்கப் பணத்தை கைப்பற்றிக் கொண்டு போலீ சார் அவரை எச்சரித்து அனுப்பினர். தென் இந் திய அழகி நீலிமா நாயுடு, டி.வி.நடிகை மீனாட்சி ஆகிய 2 பேரையும் விபசார வழக் கில் கைது செய்தனர். அவர் களிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Posted in Age Restriction, Andhra Pradesh, Anna Nagar, Casting Couch, Consensus Sex, Films, Hyderabad, Illegal Sex, Legal Sex, Meenakshi, Movies, Neelima Naidu, Pictures, Prostitutes, prostitution, Raid, Saravanan, TV | Leave a Comment »