‘ஷில்பா ஷெட்டி மீது இனவாத ஏளனம்’- இந்தியா கண்டனம்
 |
 |
திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டி |
பிரிட்டனில் செலிபிரிட்டி பிக் பிரதர் எனப்படும் யதார்த்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பங்குபெறும் மும்பையைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டி இனப்பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி இந்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்திய அரசு விசாரித்து வருவதாகக் கூறிய இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒருவர்- ஷில்பா ஷெட்டியின் பெயரை உச்சரிக்க சிரமப்பட்டதால், அவரை இந்தியர் என அழைத்தார்.
இந்த நிகழ்ச்சி குறித்து பிரிட்டனிலுள்ள ஆயிரக் கணக்காணவர்கள் புகார் கூறியுள்ளார்கள்.
அதேவேளை இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உயர்ந்துள்ளது.
இது குறித்து பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேரின் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் கேட்ட போது, தாம் இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்றும், ஆனால் நிறவெறிக் கொள்கை என்பது எந்த வகையில் இருந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
லண்டன் டி.வி. நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்ட ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு குவிகிறது- உரிய நடவடிக்கை: வெளியுறவு அமைச்சகம்
புதுதில்லி, ஜன.18: “பிக் பிரதர்’ நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்ட இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பெருமளவில் ஆதரவு குவிகிறது. இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்த விவரம்:
இங்கிலாந்தில் ஒளிபரப்பாகி வரும் “சேனல் 4′ டி.வி.யின் பிரபல நிகழ்ச்சி “பிக் பிரதர்’. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் ஓர் தனியறையில் சில நாள்கள் தங்கவைக்கப்படுவர்.
அங்கு அவர்களுடைய தினசரி வாழ்க்கையை எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்பதையும், சக போட்டியாளர்களுடன் எவ்வாறு பழகுகிறார்கள் என்பதையும் சுவாரஸ்யமாக ஒளிபரப்புகிறார்கள்.
ஒவ்வொருவரின் நடவடிக்கைகளுக்கும் நேயர்கள் ஓட்டளிப்பார்கள்; அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு இறுதி வரை தாக்குப்பிடிப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் இந்தியா சார்பாக பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்றார். இதற்காக அவர் சுமார் சுமார் ரூ.3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதி கடந்த வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.
அதில் ஷில்பா ஷெட்டியை அவருடைய சக போட்டியாளர்களில் ஒருவர் “நாய்’ என்றும், மற்றொருவர் “அருவருப்பானவர்’ என்றும் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட ஷில்பா கண்ணீருடன் வெளியேறினார்.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான டி.வி. நேயர்கள் டி.வி. நிர்வாகத்துக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்காணிக்கும் அமைப்புக்கும் புகார் தெரிவித்தனர்.
சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் குவிந்தன. இன பாகுபாடு காரணமாகவே ஷில்பா ஷெட்டி அவமதிக்கப்பட்டுள்ளதாக பலரும் தங்கள் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.
இங்கிலாந்து அரசு நடவடிக்கை: தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எம்.பி.கீத் வாஸ் இப்பிரச்சினையை லண்டன் நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.
இக்குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. “சேனல் 4′ தொலைக்காட்சி நிறுவனமும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.
இந்திய அரசு நடவடிக்கை: இந்தியா இனம், மொழி என்ற பாகுபாடின்றி செயல்பட்டு வருவது உலகம் முழுவதும் அறிந்த ஒன்று. ஷில்பா ஷெட்டி அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
2-ம் இடத்தில் ஷில்பா: இந்நிலையில் ஷில்பா ஷெட்டிக்கு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அவர்களுடைய ஓட்டின் அடிப்படையில், இந்தப் போட்டி நிகழ்ச்சியில் தற்போது ஷில்பா ஷெட்டி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். காமெடி நடிகை கிளேயோ ரோக்காஸ் முதலிடத்தில் இருக்கிறார். ஷில்பா ஷெட்டி முதலிடத்தைப் பெறுவார் என்று பல இங்கிலாந்து பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகை ஷில்பா ஷெட்டி விவகாரம் குறித்த எதிர்ப்பு வலுக்கிறது
பிரிட்டனில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் கலந்துகொள்ளும், இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி, அவருடன் கூட கலந்துகொள்பவர்களால், இனரீதியாக ஏளனம் செய்யப்பட்டதைக் கண்டிக்கும் முறைப்பாடுகள் குவியும் அதே வேளையில், அந்தத் தொடருக்கான விளம்பர அனுசரணை வழங்கிய நிறுவனம் அதிலிருந்து விலகிக் கொண்டுள்ளது.
ஒரு மாளிகையில் வைக்கப்பட்டு, ஒளித்து வைத்த கமெராக்கள் மூலம் ஒளிபரப்பப்படும், ‘பிக் பிரதர்’ என்னும் இந்த யதார்த்தத் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் சக நடிக, நடிகைகளின் நடாத்தை, மீண்டும், மீண்டும் தமக்கு கவலையைத் தந்துள்ளதாக, இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கிய கார் போன் வேர்ஹவுஸ் என்னும் நிறுவனம் கூறியுள்ளது.
 |
 |
பிக் பிரதர் நிகழ்ச்சியில் சக நடிகர் ஒருவருடன் |
இந்த நடிக, நடிகர்களின் நடாத்தை விரும்பத்தக்கதாக இல்லை என்று கூறும், இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும், சனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி, ஆனால் நடிகை ஷில்பா கூட இந்த நடிகைகளின் நடத்தை இனவாதம் என்பதைவிட, கலாச்சார மற்றும் குடும்பப் படிநிலை வேறுபாடே அதற்குக் காரணம் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த விவகாரம் குறித்து, இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டனின் நிதி அமைச்சர் கோர்டன் பிரவுண் கூட அங்கு இந்தியத் தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.
டி.வி.நிகழ்ச்சியில் யாரும் என்னை அவமதிக்கவில்லை: ஷில்பா ஷெட்டி திடீர் பல்டி
லண்டன், ஜன. 19-
லண்டனில் உள்ள `சேனல் -4′ என்று நிறுவனம் `பிக்பிரதர்’ என்ற டெலிவிஷன் நிகழ்ச் சியை ஒளிபரப்பி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டு பிரபல கலைஞர்களுடன் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும் கலந்து கொண்டார். அப்போது ஷில்பா ஷெட்டியை மற்ற கலைஞர்கள் அவமதித்ததும், இனவெறியை தூண்டும் வகையில் அவரை திட்டியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவமதிக்கப்பட்ட ஷில்பா கண்ணீர் விட்டு அழுதார்.
இங்கிலாந்து பாராளுமன்றத்திலும் இது சர்ச்சையை எழுப்பியது. ரசிகர்களிடம் இருந்து இணைய தளம் மூலம் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பப்பட்டன.
இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி திடீர் பல்டி அடித்துள்ளார்.
`என்னை ஜேட்கூடி அல்லது வேறு கலைஞர்கள் யாரும் அவமதிக்கவில்லை. இனவெறியை தூண்டும் வகையில் யாரும் நடந்து கொள்ளவில்லை என்னை அவமதித்ததாக கூறப்படுவது உண்மை அல்ல என்றே நான் கருதுகிறேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாதம் நடந்தது உண்மைதான். இதில் இனவெறி எதுவும் இல்லை.
இதற்காக யாரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. அவர்கள் மன்னிப்பு கேட்கும் நிலை வந்தால் அவர்களிடம் நானும் மன்னிப்பு கேட்கிறேன் என்று ஷில்பா ஷெட்டி `சேனல்-4′ டி.வி. நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.
ஷில்பா ஷெட்டியை அவமதித்த பென் ஜேட்கூடி மீண்டும் ஷில்பாவிடம் “நான் உனக்கு மரியாதை கொடுக்க தேவையில்லை. நீ இளவரசியாக இருக்கலாம். இது பற்றி எனக்கு கவலை இல்லை” என்று கூறி வாக்கு வாதம் செய்தார்.
ஷில்பா ஷெட்டி அல்லது ஜேட் கூடி இருவரில் யாராவது ஒருவரை நிகழ்ச்சியில் இருந்து பார்வையாளர்களோ வாக்கெடுப்பு மூலம் நீக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இந்த டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தத்தை அதன் விளம்பரதாரர்கள் ரத்து செய்து உள்ளனர்.
ஷில்பா ஷெட்டியை திட்டிய டி.வி.நடிகை நீக்கம்: கண்ணீர் விட்டு கதறி மன்னிப்பு கேட்டார்
லண்டன், ஜன. 20-
இங்கிலாந்தில் சானல் 4 எனும் தொலைக்காட்சி `பிக் பிரதர்’ என்ற டி.வி. நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. இதில் உலகின் 5 பிரபலங்கள் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த அறைக்குள் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? சக போட்டியாளர்களுடன் எப்படி பழகுகிறார்கள் என்பது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்து அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். நேயர்களும் ஓட்டுப்போடுவார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக நீக்கப்பட்டு கடைசி வரை தாக்குப் பிடிப்பவருக்கு கோடிக்கணக்கில் பரிசு வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பிரபல இந்தி நடிகை ஷில்பாஷெட்டி பங்கேற்றுள்ளார். அவர் இந்த நிகழ்ச்சியில் முதலிடத்தைப் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் நிலவுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ஷில்பா ஷெட்டியை சக போட்டியாளரான டி.வி. நடிகை ஜேக் கூடி தரக் குறைவாக பேசி திட்டினார். அதோடு ஷில்பாவை `நாய்’ என்றும் கூறினார். இதைக் கேட்டு ஷில்பா ஷெட்டி கதறி அழுதார்.
ஷில்பாஷெட்டியை நடிகை கூடி திட்டியபோது இங்கிலாந்து முன்னாள் அழகி டேனியல் லாயிட் சிரித்தார். அதோடு ஷில்பாவை பார்த்து `அருவருப்பானவர்’ என்றார். இது நேயர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஷில்பா ஷெட்டியிடம், ஜேக் கூடியும், டேனியல் லாயிட்டும் இனவெறியுடன் நடந்து கொண்டதாக தெரிய வந்தது.
இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் கண்டனம் தெரிவித்து இ-மெயில் அனுப்பினார்கள். ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக உலகின் பல பகுதிகளில் இருந்து குரல் எழுந்ததால் பிக்பிரதர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அரண்டு போனார்கள்.
இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவித்ததால் இது அரசியல் ரீதியான பிரச்சினையாக மாறியது. இன வெறியர்களை தண்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
`இனவெறி’ முத்திரை குத்தப்பட்டதால் ஜேக்கூடி, டேனியல் லாயிட்டுக்கு விளம்பரத்துக்கு உதவிய நிறுவனங்கள் விலகிக் கொண்டன. அவர்கள் `மாடலிங்’ செய்திருந்த பொருட்களின் விற்பனைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
நிலமை மோசமாவாதை உணர்ந்த ஜேக்கூடி, டேனியல் லாயிட் இருவரும் நேற்று பணிந்தனர். ஷில்பா ஷெட்டியிடம் சென்று மன்னிப்பு கேட்டனர். அதோடு இருவரும் ஷில்பாவை கட்டித் தழுவி கண்ணீர் மல்க அன்பை வெளிப்படுத்தினார்கள்.
இதற்கிடையே போட்டி விதிகளின்படி ஷில்பா, ஜேக் கூடி இருவரில் ஒருவரை நீக்க தொலைக்காட்சி நேயர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சுமார் 82 சதவீத நேயர்கள் டி.வி. நடிகை ஜேக்கூடிக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர் `பிக்பிரதர்’ நிகழ்ச்சியில் இருந்து இன்று நீக்கப்பட்டார்.
ஷில்பாஷெட்டி நேயர்கள் ஓட்டெடுப்பில் அதிக ஆதரவுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார். நேற்றிரவு இந்த முடிவு விபரம் அறிவிக்கப்பட்டது.
தனக்கு `கல்தா’ கொடுக்கப்பட்டதை அறிந்ததும் டி.வி. நடிகை ஜேக்கூடி கண்ணீர் விட்டு கதறி அழுதார். `பிக் பிரதர்’ அறையில் இருந்து வெளியில் வந்த அவரிடம் பழைய காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இதில் அவர் ஷில்பாவை முறைத்தப்படி திட்டும் காட்சிகளும் இருந்தன.
அதை கண்டதும் ஜேக்கூடி அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவத்தால் உலகமே தன்னை இனவெறி பிடித்தவர் என்று முத்திரை குத்தி இருப்பதை தெரிந்து மனம் உடைந்து போனார்.
கண்ணீர் மல்க நின்ற அவரை பிக்பிரதர் அமைப்பாளர்கள் டைரி அறைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நான் ஷில்பாவை பட்டப்பெயர் சொல்லித்தான் பேசினேன். இதை எல்லாரும் தவறாக புரிந்து கொண்டு விட்டனர். பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதால் என்னை உலகமே இனவெறி பிடித்தவள் என்று சொல்லி விட்டது.
எல்லாரும் நினைப்பது போல நான் இனவெறி கொண்டவள் அல்ல. நான் அப்படி வளர்க்கப்படவும் இல்லை. இனவெறியுடன் நான் பேசவே இல்லை. இது ஷில்பாவுக்கு நன்றாக தெரியும்.
நான் இனவெறி பிடித்தவள் அல்ல என்று ஷில்பாவே கூறி உள்ளார். இது எனக்கு ஆறுதலாக உள்ளது. ஆனால் பத்திரிகைகள் என்னை ஒரு இன வெறியாளன் போல காட்டி விட்டனர்.
நேயர்கள் என்னை பிடிக்காமல் வாக்களித்திருந்தால் அதை ஏற்று இருப்பேன். ஆனால் தவறாக காரணம் காட்டி என்னை `பிக் பிரதர்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டனர். இப்படி வெளியேற்றப்படுவது எனக்கு கவலை தருகிறது.
ஷில்பாவை நாங்கள் `அப்பளம்‘ என்றும் `ஆங்கிலம் பேச தெரியவில்லை’ என்றும் சாதாரணமாகத்தான் சொன்னோம். ஆனால் அதுவே எனக்கு வினை ஆகி விட்டது.
நான் பேசிய காட்சிகளை பார்த்தபோது என் வார்த்தைகளால் கவுரவம் இல்லாமல் நடந்து கொண்டதாக நினைக்கிறேன். ஆனால் தவறு செய்யவில்லை என்று ஒரு கட்டத்தில் நியாயப்படுத்தினேன். ஆனால் இதை இனவெறி என நினைத்து விட்டனர். எனக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒவ்வொருவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
பிக்பிரதர் மூலம்தான் என் வாழ்க்கை 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரகாசமானது. இப்போது அதே பிக்பிரதர் மூலம் என் வாழ்க்கை முடிந்து விட்டது.
இவ்வாறு டி.வி.நடிகை ஜேக்கூடி கூறினார்.
Pap