Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 10th, 2007

Na Muthukumar pens the opening song for Rajinikanth in Sivaji (The Boss)

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

கவிஞருக்கு வசன “கிரீடம்’!

அஜீத் நடிக்கும் “கிரீடம்’ படத்தின் மூலம் வசனகர்த்தா ஆகியுள்ளார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். இயக்குநர் ஆகும் ஆசையில் பாலுமகேந்திராவிடம் நான்கு வருடங்கள் உதவியாளராகப் பணியாற்றியவர். இவருடைய பாடல்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கவே பாடலாசிரியராக நிலைத்துவிட்டார். சமீபத்தில் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்ற முத்துக்குமார், கடந்த வருடம் அதிக பாடல்கள் எழுதிய சினிமா பாடலாசிரியர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

அவர் பணியாற்றிய 34 படங்களில் 96 பாடல்கள் எழுதியிருக்கிறார். இவற்றில் 14 படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். தற்போது

  • “சிவாஜி’,
  • “போக்கிரி’,
  • “பீமா’,
  • “தீபாவளி’,
  • “தமிழ் எம்.ஏ.’ உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார். இவற்றுள் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அடுத்த வருடம் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கப்போகும் ஒரு முக்கியப் பாடலும் அடக்கம். அது “சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்தின் அறிமுகப் பாடல்!

Posted in Ajeeth, Ajith, Ajith Kumar, AR Rehman, Assistant Director, Author, Balu Mahendira, Balu mahendra, Beema, Doctorate, Na Muthukumar, Naa Muthukumar, Ph.d, Poet, Pokkiri, Rajini, Rajni, Singer, Sivaji, Sivaji the Boss, Song writer, Ultimate Star, Vijay, Writer, YSR, Yuvan, Yuvan Shankar Raja | 2 Comments »

Bharathi Puthakalayam to publish Children Books in Chennai Book Exhibition

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

புத்தக திருவிழாவில் புதிய முயற்சி

சென்னை, ஜன. 11:சென்னையில் துவங்கியுள்ள புத்தக திருவிழாவில் வியாழக்கிழமை முதல் நிறைவு நாள்வரை தினம் ஒரு தலைப்பில் புத்தகம் பேசுது இதழை பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது.

இதுகுறித்து பாரதி புத்தகாலயத்தின் பொது மேலாளர் நாகராஜன் கூறியது:

குழந்தைகளுக்கான நூல்கள் தமிழில் அதிகமாக இல்லை என்ற குறை இருந்தது. இதைப் போக்கும் வகையில் 2006 ம் ஆண்டு குழந்தைகளுக்கான 60 நூல்களை பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிட்டோம்.

புதன்கிழமை துவங்கும் சென்னை புத்தக திருவிழாவில் முதல் நாளில் இருந்து நிறைவுநாள் வரை தினம் ஒரு புத்தகம் பேசுது இதழ் வெளியிடுகிறோம். இந்திய இலக்கிய வரலாறு, கலை பண்பாடு, கவிதைகள் என பத்து தலைப்புகளில் பத்து ஆசிரியர்கள் இந்த இதழ்களை தயாரித்துள்ளனர். புத்தக ஆர்வலர்களுக்கு இந்த இதழ்கள் உதவியாக இருக்கும் என்றார்.

Posted in Bharathi Puthakaalayam, Bharathi Puthakalayam, Bharathy Puthakalayam, Book Exhibition, Book Fair, Chennai Book Exhibition, Chennai Book Fair, Children Books, Madras Book Exhibition, Madras Book Fair, Nagarajan, Publishers, Puthagam, Puthagam Pesuthu, Tamil Nool, Thamizh Nool, Thamiznool | 1 Comment »

Tamil Actor Pandiyan arrested for defraud

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: நடிகர் பாண்டியன் கைது

சென்னை, ஜன. 11: வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.35 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் பாண்டியன் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

இதுபற்றிய விவரம்:

“மண்வாசனை’, “ஆண்பாவம்’, “கிழக்கு சீமையிலே’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் பாண்டியன். இவர், விருகம்பாக்கத்தில் உள்ள சாய்நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது நண்பர் முருகேசன். திருவொற்றியூரைச் சேர்ந்த இவர், தனது சகோதரியின் மகனுக்கு காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் வேலை வாங்கித் தருவதற்காக, பாண்டியனிடம் ரூ.2.15 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், பாண்டியன் வேலை வாங்கித் தரவில்லை.

இதைத்தொடர்ந்து பாண்டியன், ரூ.80 ஆயிரம் பணத்தை முருகேசனுக்கு திருப்பி கொடுத்துள்ளார். இந்நிலையில், முருகேசன் புதன்கிழமை காலையில் மீதிப் பணத்தை கேட்கச் சென்றுள்ளார்.

அப்போது, முருகேசனை மிரட்டிய பாண்டியன் அவரை அடித்து உதைத்துள்ளார்.

இதுதொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில், முருகேசன் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் நடிகர் பாண்டியனை போலீஸôர் கைது செய்து, நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

Posted in Aan Paavam, Arrest, Cheating, Job Claim, Law, Madurai, Mann Vaasanai, Mann Vasanai, Murugesan, Order, Pandian, Pandiyan, Police, Private Polytechnic, Tamil Actor, Vadapalani, Vadapazhani | Leave a Comment »

Collector starts probe into attack on DPI MLA D Ravikumar

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

ரவிக்குமார் எம்.எல்.ஏ.வை போலீஸ் தாக்கியதாக புகார்: நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

கடலூர், ஜன. 11: காட்டுமன்னார்கோயில் சட்டப் பேரவை உறுப்பினர் ரவிக்குமாரை, போலீஸ் தாக்கியதாக கூறப்படும் புகார் குறித்து நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2-ம் தேதி கடலூர் வட்டம் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவாவின் சவ ஊர்வலம் சேடப்பாளையத்தில் நடந்தது. இதில், பங்கேற்ற ரவிக்குமார் எம்.எல்.ஏ.வை, காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த உண்மை நிலையை அறிய, மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட ஆட்சியத் தலைவரை விசாரணை அலுவலராக நியமித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியர் 25-1-2007 அன்று, காலை 11 மணிக்கு, ஆட்சியர் அலுவலக நீதிமன்றக் கூடத்தில் இதுகுறித்து விசாரணை நடத்த உள்ளார்.

சேடப்பாளையம் கிராமத்தில் 2-1-2007 அன்று, நடைபெற்ற சவ ஊர்வலத்தில் பங்கேற்ற ரவிக்குமாரை, காவல் துறையினர் தாக்கியதாக கூறப்படுவது குறித்த விவரங்களை நேரடியாகவோ, வேறு எந்த விதத்திலோ தெரிந்தவர்கள், இந்த விசாரணையில் ஆஜராகி அவர்களுக்கு தெரிந்த விவரங்களை ஆட்சியரிடம் தெரிவிக்கலாம். வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ இதைத் தெரிவிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Posted in abuse, Attack, civil rights, Collectorate, Cuddalore, D Ravikumar, Dalit Panthers, District Collector, District Magistrate, DPI, Gaikward Babu, Human Rights, Kattumanaar Koil, Kattumanaar Kovil, Kattumanar Koil, Kattumanar Kovil, Law, Makkal Civil Rights Kazhagam, Manitha Urimai Iyakkam, MLA, municipal chairman, Municipality, Nellikuppam, Order, Peoples Watch, Police, Puratchi Thamizhagam, Rajendra Ratnoo, Ravi kumar, Ravikkumar, S N Nagar, Thamarai Selvan, vice-chairman, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

Auto rickshaw fares revised in Tamil Nadu – KN Nehru

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

ஜன.26 முதல் ஆட்டோ கட்டணம் இரு மடங்காக உயர்வு

சென்னை, ஜன. 11: ஜன. 26-ம் தேதி முதல் தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் ரூ.14 ஆக உயர்த்தப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:

தற்போது ஆட்டோக்களுக்கு முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.7-ம் அதற்கு அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.3.50-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக் கட்டண விகிதம் 1996-ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

டீசல் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு ஆட்டோ கட்டணங்களை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.14-ம் அதற்கு அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.6-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட கட்டண விகிதம் ஜனவரி 26-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

காத்திருப்புக் கட்டணம் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் 40 பைசாவாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இரவு நேர கட்டணங்கள் (இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை) பகல் நேர கட்டணங்களை விட 25 சதவீதம் கூடுதலாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்படுகிறது.

இது குறித்த ஆணை வெளியான 45 நாள்களில் கட்டணம் திருத்தப்பட்ட மின்னணு மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும். மெக்கானிக்கல் மீட்டர்களில் 90 நாள்களுக்குள் கட்டணம் திருத்தப்பட வேண்டும். பழைய மெக்கானிக்கல் மீட்டர்களில் 6 மாதத்திற்குள் கட்டணம் திருத்தப்பட்டு பொருத்தப்பட வேண்டும்.

பொதுமக்கள் புகார் செய்யலாம்:ஆட்டோக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிமாக வசூலித்தால் 103, 26445511, 26444445 என்ற தொலைபேசி எண்களிலும் 9841808123 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலமும் தகவல் தெரிவிக்கலாம்.

இது குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீஸôருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகள் உதவிக்காக ஒவ்வொரு ஆட்டோவிலும் புதிய கட்டண விகித அட்டவணை வைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே உள்ள ஆட்டோக்கள் படிப்படியாக கேஸ் ஆட்டோக்களாக மாற்றப்படும் என்றார் அவர்.

மக்கள் கருத்து: ஆட்டோக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.7 ஆக இருந்தாலும் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் அதைப் பின்பற்றுவதில்லை.

இந் நிலையில் தற்போது ஆட்டோ கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்ட நிலையில், இக் கட்டண விகிதத்தை போலீஸôர் கடுமையாக அமல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆட்டோ வழி, தனி வழி

ஜனவரி 26 முதல் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ.14 ஆக உயர்த்தப்படுகிறது என்ற செய்தி குறித்து மக்களிடம் கருத்து கேட்டபோது, “இப்போதே அதைவிட அதிகமாகத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்’ என்று ஒரு விமர்சனத்தைக் கருத்தாகத் தெரிவித்தனர் பலர்.

ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கட்டணம் ரூ.7 நடைமுறையில் இல்லை என்கிற கசப்பான அனுபவத்தின் வெளிப்பாடு இது. தற்போது கர்நாடகத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.12. ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.6.50. ஆந்திரத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10. அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.5.60. கேரளத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10, அடுத்துவரும் ஒவ்வொரு 100 மீட்டருக்கும் 25 காசுகள். இக்கட்டணங்களும் விரைவில் மாற்றியமைக்கப்படலாம்.

கர்நாடகத்திலும், கேரளத்திலும் ஆட்டோக்களில் பேரம் பேசாமல் மீட்டர் கட்டணமே கணக்கிடப்படுகிறது. இந்த நிலை தமிழ்நாட்டில் இல்லை. ஆட்டோக்களைப் பயன்படுத்திக்கொள்ள நடுத்தர வருவாய்ப் பிரிவினர் தயாராக இருந்தாலும் ஆட்டோ கட்டணங்கள் அச்சுறுத்தலாக இருக்கின்றன. அவர்களை மீண்டும் பேருந்துகளுக்கே இழுத்துச் செல்கிறது.

ஆட்டோ ஒட்டுநர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வாடகைக்கு ஓட்டுகின்றனர். நாள்வாடகை கொடுத்து, ரூ.50 வரையிலான சிறு பழுதுபார்ப்பு செலவுகளையும் ஏற்று, பெட்ரோல் போட்டு, அதற்குப்பின்தான் தங்களது வருவாயைப் பார்க்க வேண்டியிருக்கிறது என்பது உண்மையே. அதைக் காரணம் காட்டி, மீட்டருக்கு மேல் அதிகம் கேட்காமல், அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் ஆட்டோவை இயக்கினால் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகும். ஆட்டோக்களின் வருவாயும் அதிகமாகும். பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க சில நகரங்களில் சாதாரண ஆட்டோக்களும் ஷேர்ஆட்டோ போன்று இயங்குகின்றன. குறிப்பிட்ட வழித்தடத்தில், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல ஒரு நபருக்கு இவ்வளவு கட்டணம் என தீர்மானிக்கப்படுகிறது. (உதாரணமாக சென்னை கிண்டி- அடையாறு; ஒரு நபருக்கு ரூ.10, வேலூரில் காட்பாடி – பழைய பேருந்து நிலையம்; ஒரு நபருக்கு ரூ.5) மூன்று பேரை ஏற்றிக் கொள்கிறார்கள். இதற்குப் பயணிகளிடம் ஆதரவு இருக்கிறது. இத்தகைய ஆட்டோக்கள் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கின்றன. இந்த ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 100 கிமீ அளவுக்கு இயக்குகின்றனர்.

உழைப்பு இருக்கிறது. இந்த உழைப்புக்குத் தயங்கி, இரண்டு மூன்று சவாரிகளிலேயே பணம் பார்த்துவிட நினைக்கும்போதுதான் அதிக கட்டணத்தைக் கேட்கும் நிலை ஏற்படுகிறது.

அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், காவல்துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த அவலத்தை ஒழிக்க முடியும்.

தமிழகத்தின் புறநகர், கிராமப் பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. மினி பஸ் வசதி இல்லாத வழித்தடங்களில் இவற்றின் பங்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் இவை அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன. இந்த வாகனத்தின் நீளம் மூன்று சக்கர வாகனத்துக்குப் பொருந்துவது அல்ல எனப் பொறியியல் துறையினர் சொல்கின்றனர்.

அதிகப் பயணிகளுடன் செல்லும் இந்த ஷேர் ஆட்டோக்கள் சிலசமயங்களில் குழிகளில் அல்லது திருப்பங்களில் எளிதில் சமன்குலைந்து கவிழ்கின்றன. இத்தகைய விபத்துகளில் குறைந்தது 20 பேர் காயமடைகின்றனர் என்பதைக் காண முடிகிறது. ஷேர் ஆட்டோக்களுக்கு 4 சக்கரம் பொருத்திக் கொள்ளும் அனுமதியை அரசு வழங்கினால், இத்தகைய விபத்துகள் பெருமளவு குறையும்.

Posted in 103, abuse, Auto, Auto driver Complaints, Auto rickshaw, Complaint, Diesel, Fares, Gas, KN Nehru, Petrol, Phone Numbers, Police, Report, Transportation Minister | Leave a Comment »

NRI Investments and Return to India plans – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

வெளிநாடு வாழ்வோருக்கு அழைப்பு

தில்லியில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டியுள்ளதுபோல வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு இன்னும் நிறைய பங்காற்ற முடியும். இந்த மாநாட்டில் பிரதமர் மட்டுமன்றி மத்திய அமைச்சர்களும் உரையாற்றினர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் சுமார் இரண்டரைக் கோடி இந்திய வம்சாவளியினரின் பிரதிநிதிகளாக இப்போதைய மாநாட்டில் 1200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்டனர். மாநாட்டில் அவர்களது கருத்துகளும் பெறப்பட்டன.

பிரதமரும் மற்ற அமைச்சர்களும் ஆற்றிய உரையின் முக்கிய அம்சம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இன்னும் அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்பதாகும். இன்று சீனாவின் பெருத்த முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணம் வெளிநாடுகளில் வாழும் சுமார் 6 கோடி சீனர்கள், கணிசமான அளவில் சீனாவில் முதலீடு செய்துள்ளதே ஆகும். உதாரணமாக 2003-ம் ஆண்டில் சீனாவில் செய்யப்பட்ட மொத்த வெளி முதலீட்டில் 65 சதவீதம் இவ்விதம் வெளிநாடுவாழ் சீனர்களிடமிருந்து கிடைத்ததாகும். இத்துடன் ஒப்பிட்டால், இந்தியாவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் செய்யும் முதலீடு சதவீத அளவில் மிகக் குறைவே ஆகும்.

வெளிநாட்டுக்குச் சென்று அங்கு தங்களது உழைப்பின் மூலம் செல்வநிலைக்கு உயர்ந்த இந்தியர்களில் சிலர் தங்களது தாய்நாடான இந்தியா பயன் பெற அவ்வப்போது நன்கொடையாகவும் முதலீடாகவும் நிதி அளித்துள்ளனர் என்பது உண்மையே. ஆனால் இவை சிறு துளிகளாகத்தான் உள்ளன. வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீட்டைப் பெருத்த அளவில் கவர முடியாமல் போவதற்கு இந்தியாவில் தொழில் துவங்குவதில், முதலீடு செய்வதில் உள்ள எண்ணற்ற எரிச்சலூட்டும் விதிமுறைகளும் காலதாமதமும் முக்கியக் காரணங்களாகும். இவை எளிதாக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியமாக இந்தியாவில் உள்ள விதிமுறைகளை எளிதில் புரிந்து கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

கடந்த காலத்தில் இந்தியா உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கிய காலத்திலும் அன்னியச் செலாவணி பிரச்சினையில் சிக்கித் தவித்த காலத்திலும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் வெட்கித் தலைகுனிந்தது உண்டு. ஆனால் இன்று தங்களை இந்தியன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிற அளவுக்கு இந்தியா முன்னேறி வருகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் சரி தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் நன்கு முன்னேறி தொழிலதிபர்களாக, நிபுணர்களாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் திகழ்கின்றனர்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கென கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசு சலுகைகளையும் சில வசதிகளையும் அளித்து வருகிறது. குறிப்பிட்ட 16 நாடுகளில் வாழும் இந்தியர்கள் இரட்டைக் குடியுரிமையைப் பெறலாம் என்பது அவற்றில் முக்கியமான ஒன்று. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கென இந் நாட்டில் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவும் திட்டமும் உள்ளது.

வெளிநாடுவாழ் இந்தியர்களில் இப்போதைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுடன் இன்னமும் வலுவான கலாசாரப் பிணைப்புகளைப் பெற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து செல்லும் இசைக் கலைஞர்களுக்கு அங்கு கிடைக்கிற ஆதரவு, இந்தியத் திரைப்படங்களுக்குக் கிடைக்கிற வரவேற்பு முதலியவை இதைக் காட்டுகின்றன. அடுத்த தலைமுறையினர் இடையே இயல்பாக இந்த ஆர்வம் குறையலாம். அவர்களை மனத்தில்கொண்டு இந்தியா தகுந்த திட்டத்தை வகுக்க முடியும். சுற்றுலா ஏற்பாடு இந்த வகையில் உதவும்.

சீனாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளில் கணிசமானவர்கள் வெளிநாடுகளிலிருந்து வரும் சீனர்களாக உள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. இதேபோல வெளிநாடுகளில் வாழும் இளம் இந்தியர்களைக் கவர்வதற்கென தனி சுற்றுலாத் திட்டத்தை உருவாக்குவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கலாம்.

Posted in China, Dual citizenship, Economy, Finance, India, investments, Manmohan Singh, NRI, Person of Indian Origin, PIO, Plans, PM, Return to India, Strategy, Tamil | Leave a Comment »

Chennai Book Fair – M Karunanidhi to open the Madras Festival in St. George Anglo Indian HSS

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

5 கோடி புத்தகங்கள் இடம்பெறும் கண்காட்சி: சென்னையில் கருணாநிதி நாளை தொடங்கி வைக்கிறார்

30th Book Exhibition – Chennai Book Fair : Idly Vadai
IdlyVadai – இட்லிவடை: 30வது புத்தக கண்காட்சி

30th Chennai Book Fair – Badri : First Day Announcements & Karunanidhi Visit
பத்ரியின் வலைப்பதிவுகள்

Official Website

வலைத்தள: http://www.bapasi.org/

வலைப்பதிவுகள்
சென்னை புத்தகக் கண்காட்சி – முதல் நாள் ( படங்கள் )
சென்னை புத்தகக் காட்சி: நாள் 1 – பத்ரி
குழந்தைகளுக்கான புத்தகங்கள் – தமிழில்

செய்திகள்:
More space, more books, some films: fair from today – The Hindu
Chennai Book Fair has new venue – The Hindu
Chief Minister’s largesse to book publishing industry – The Hindu
தினத்தந்தி செய்தி
தினமலர் செய்தி
தினமணி செய்தி

சென்னை,ஜன.9-

தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 30-வது புத்தக கண்காட்சி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோஇந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நாளை(புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. கண்காட்சியை முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். அமைச்சர் துரை முருகன், நல்லி குப்புசாமி உள்படபலர் கலந்து கொள்கிறார்கள்.

கண்காட்சியில் 474 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 கோடி புத்தகங்கள் இடம் பெறுகின்றன. இதில் சர்வ தேச அளவிளான அனைத்து தரப்பு புத்தகங்களும் கிடைக்கும். தினமும் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

தினமும் கலைநிகழ்ச்சிகள், இலக்கிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் நேர்காணல்கள் இடம் பெறுகின்றன. குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி கண்காட்சியில் நடைபெற உள்ளது. புத்தகங்கள் வாங்கும்போது 10 சதவீத தள்ளுபடி உண்டு.

சிறந்த எழுத்தாளருக்கான மணிவாசகம் பதிப்பகம் ச.மெய்யப்பன் விருது எழுத்தாளர் பிரபஞ்சனுக்கும்,

சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகசெம்மல் க.கணபதி விருது பிரேமா பிரசுரத்திற்கும் வழங்கப்படுகிறது.

குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர் அழ.வள்ளியப்பா விருது ஹரிஹரன் என்ற ரேவதிக்கும்,

சிறந்த புத்தக விற்பனையாளர் விருது திருச்சி அகத்தியர் புத்தக சாலைக்கும் வழங்கப்பட உள்ளது.

கண்காட்சி நுழைவுக்கட்டணம் 5 ரூபாய். 12-வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கட்டணம் கிடையாது.

கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்த வசதி உண்டு. அதற்கு கட்டணமும் உண்டு. மொத்தம் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காட்சி 21-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தகவலை தென்இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் காந்தி கண்ணதாசன் பேட்டியின் போது தெரிவித்தார். அருகில் செயலாளர் சண்முகம் இருந்தார்.

சொந்தப் பணத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ. 1 கோடி: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஜன. 11: தனது சொந்தப் பணத்தில் ரூ. 1 கோடி நிதியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு (பபாசி) வழங்குவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சேத்துப்பட்டு பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் 30-வது புத்தகக் கண்காட்சியை புதன்கிழமை மாலை அவர் தொடங்கி வைத்தார்.

“பபாசி’ தேர்வு செய்த சிறந்த எழுத்தாளர் பிரபஞ்சன், குழந்தை எழுத்தாளர் ஹரிஹரன் என்கிற ரேவதி, சிறந்த பதிப்பகத்தாரான பிரேமா பிரசுரம், சிறந்த புத்தக விற்பனையாளர் திருச்சி அகஸ்தியர் புத்தக நிலையம் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.

பின்னர் முதல்வர் பேசியது:

சிறந்த எழுத்தாளர் உள்ளிட்டோருக்கு கேடயம் மற்றும் சால்வை உள்ளிட்டவற்றை வழங்குமாறு சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன் கூறினார்.

இதைத் தொடர்ந்து விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொற்கிழி வழங்கச் சொல்வார் என எதிர்பார்த்தேன். அந்த வகையில் காந்தி கண்ணதாசன் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தார்.

இனிவரும் காலங்களில் இந்நிலை தொடரக் கூடாது என்று கருதி, இச்சங்கத்துக்கு ரூ. 1 கோடி தொகையை எனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்குகிறேன்.

ரொக்கத் தொகையை வங்கியில் நிரந்தரக் கணக்கில் போடுவதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து சிறந்த எழுத்தாளர், சிறந்த பதிப்பாளர், சிறந்த விற்பனையாளர் என ஆண்டுதோறும் 5 பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்குவதற்கு இத்தொகை பயன்படட்டும்.

ஏற்கெனவே சன் டி.வி. நிறுவனம் மூலம் எனது மனைவியின் பங்குத் தொகையாக கிடைத்த பணம் வங்கியில் போடப்பட்டுள்ளது. இத்தொகை மூலம் கிடைக்கும் வட்டியிலிருந்து ஏழை எளியவர்களின் படிப்புக்கு உதவி, மருத்துவ சிகிச்சைக்கு உதவி போன்றவற்றுக்கு அத்தொகை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார் கருணாநிதி.
புத்தகக் கண்காட்சிக்கு நிரந்தர இடம் ஒதுக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் 30-வது புத்தகக் கண்காட்சியை புதன்கிழமை தொடங்கிவைத்து,

  • திருச்சி அகஸ்தியர் புத்தக நிலையத்தை சார்ந்த எஸ். கோபாலகிருஷ்ணன் (சிறந்த புத்தக விற்பனையாளர்),
  • பிரேமா பிரசுரத்தை சார்ந்த ஆர்.எம்.ரவி (சிறந்த பதிப்பகத்தார்),
  • ஹரிஹரன் என்கிற ரேவதி (சிறந்த குழந்தை எழுத்தாளர்),
  • எழுத்தாளர் பிரபஞ்சன் (சிறந்த எழுத்தாளர்) ஆகியோருக்கு விருதுகளை வழங்குகிறார்
  • முதலமைச்சர் கருணாநிதி. உடன் (இடமிருந்து)
  • தொழிலதிபர் நல்லி குப்புசாமி,
  • சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன்.

சென்னை, ஜன. 11: புத்தகக் கண்காட்சிக்கு நிரந்தர இடம் ஒதுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சென்னை எழும்பூர் மற்றும் சைதாப்பேட்டையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கூறினால் அதை அளிப்பதற்கு அரசு தயாராக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 30-வது புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:

இதுபோன்ற கண்காட்சியை நடத்துவதற்கு நிரந்தர இடம் தர வேண்டும் என்று நல்லி குப்புசாமி செட்டி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்கும் வகையில் சென்னையில் எத்திராஜ் கல்லூரி அருகிலும் சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலும் இடம் இருப்பதாக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். இந்த இரண்டு இடங்களில் ஏதேனும் ஒன்றை வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கும் பணியைத்தான் எனக்கு விட்டு வைத்திருக்கிறார்.

சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இவ்விரண்டு இடங்களையும் சென்று பார்வையிட்டு இதில் எது வசதியான இடம் என்று முடிவு செய்து கூறினால், அதை வழங்குவதற்கு அரசு தயாராக உள்ளது.

இதற்கான கட்டடத்தை அரசு கட்டுவதா அல்லது பதிப்பகத்தாரே கட்டிக் கொள்வதா என்று அடுத்த கட்டமாக பேசப்பட்டது. இருவரும் சேர்ந்து கூட்டாக கட்டுவதே சிறந்தது என்று நான் கருதுகிறேன்.

மாலை, சால்வைக்குப் பதில் புத்தகம்: அரசு விழாக்களில் முக்கியப் பிரமுகர்களுக்கு மாலை, சால்வை அணிவிப்பதற்குப் பதில் புத்தகங்களை பரிசாக வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டு அதற்கான அரசாணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்டது. அரசு விழாக்களில் இது நிச்சயம் பின்பற்றப்படும் என்றார் கருணாநிதி.

முன்னதாக, சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன் வரவேற்றார். பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் பேசினர். எழுத்தாளர் பிரபஞ்சன் ஏற்புரை வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், திரளான புத்தக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

கண்காட்சியில் மொத்தம் 474 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்குகளை பேட்டரி கார் மூலம் முதல்வர் பார்வையிட்டார்.

Posted in 30th Book Fair, Agathiyar Book Depot, Authors, Azha Valliappa Prize, BAPASI, Best Publisher, Book Fair, Book Updates, Books, Booksellers, Chetput, Durai Murugan, Ethiraj College, Function Pictures, Gandhi Kannadasan, Hariharan, Ka Ganapathy Award, Kizhakku Pathippagam, M Karunanidhi, Madras, Manivaasagam Pathippagam, Nalli Kuppusamy, Official News, Pachaiappa College, Pachaiappaa College, Pachaiyappa College, Permanent Exhibition, Permanent Place, Photos, Prabanjan, Prema Prasuram, Prizes, Public Works Department, Publishers, PWD, Revathy, RM Ravi, S Gopalakrishnan, Sa Meyyappan Award, Saidapet, School Grounds, Shares, St. George Anglo Indian HSS, St. George Anglo-Indian Higher Secondary, Sun Network, Sun TV, Tamil, Thadandar Nagar, Thamizh, Virudhugal, Viruthu, Writers, XXX Book Exhibition | Leave a Comment »

Kushbu hit with class action – Brother Abdulla vs TM Varghi

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

பண மோசடி செய்ததாக புகார்: நடிகை குஷ்புவுக்கு முன் ஜாமீன்

சென்னை, ஜன. 10: நடிகை குஷ்புவுக்கு உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

குஷ்புவின் சகோதரர் அப்துல்லாவின் மாமனார் டி.எம். வர்கி அமெரிக்காவில் வசிக்கிறார். ரூ.7 லட்சம் பண மோசடி செய்ததாகக் குஷ்புவுக்கு எதிராக வர்கி கொடுத்த புகாரின் அடிப்படையில், அவரிடம் சென்னை போலீஸôர் விசாரணை நடத்தினர்.

இப்புகாரின்பேரில் தன்னை போலீஸôர் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் குஷ்பு மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆர். ரகுபதி, சில நிபந்தனைகளுடன் குஷ்புவுக்கு முன் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.

ரூ.10,000 ஜாமீன் வழங்க வேண்டும். அதே தொகைக்கு இரு நபர்கள் குஷ்புவுக்காக ஜாமீன் செலுத்த வேண்டும். தினமும் காலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் நீதிபதி.

மனுவில் குஷ்பு கூறியிருப்பதாவது:

பெங்களூரில் கே.ஆர். சாலையில் எனக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு உள்ளது. என் சகோதரர் அப்துல்லா கான், கன்னட மொழியில் ஜனனி என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். அதற்காக ரூ.7.80 லட்சம் ரூபாயை அமெரிக்காவில் இருந்து அவரது மாமனார் வர்கி அனுப்பினார். அத் தொகை என் மூலமாக என் சகோதரருக்கு அனுப்பப்பட்டது.

தற்போது என் சகோதரருக்கும் அவரது மாமனாருக்கும் உறவு சரியில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் ரூ.7.80 லட்சம் தர வேண்டும் என்றும் இல்லையெனில் பெங்களூரில் உள்ள என் வீட்டை தனது பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என்றும் வர்கி கூறுகிறார்.

அவருக்கும் அவரது மருமகனுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காக என்னைத் துன்புறுத்துகிறார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீஸôர் என்னிடம் விசாரணை நடத்துகின்றனர் என்று மனுவில் குஷ்பு கூறியிருந்தார்.

Posted in Abdulla, Abdullah, Assets, Kushboo, Kushbu, Lawsuit, Litigation, Money, Mun Jaameen, Mun Jaamin, Police, Tamil Actress, Tamil Cinema, TM Varghi, Transaction, Warghi, Warki | Leave a Comment »