Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 4th, 2007

London Diary – Counting the Crows by Cutting the Feathers to maintain Freedom

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

லண்டன் டைரி: ராஜவம்சம்போல காக்கா வம்சம்!

இரா. முருகன்

“”லண்டன் டவர் வளாகத்தில் நாங்க என்ன வளக்கறோம் தெரியுமா?” யோமன் காவல்காரர் கேட்கிறார். அங்கே தங்கியிருந்து தாடி வளர்க்கிறார் என்பது தவிர வேறே எதுவும் எனக்குப் புலப்படவில்லை. “”இதெல்லாம் நாங்க வளக்கறதுதான்” என்று பக்கத்தில் கைகாட்டுகிறார் அவர். அங்கே இரண்டு அண்டங்காக்கைகள்.

“”இங்கிலாந்து ராஜவம்சம் போல, இங்கே டவர்லே காக்கா வம்சம் ஐநூறு அறுநூறு வருஷமாத் தொடர்ந்து இருக்கு. இப்போ மொத்தம் எட்டுக் காக்கா. இதுங்க எல்லாம் எப்போ லண்டன் டவரை விட்டுப் பறந்து போகுதோ அன்னிக்கு இங்கிலாந்து சாம்ராஜ்யத்துக்கு அழிவு

காலம் ஆரம்பமாயிடும்னு நம்பிக்கை. இப்படித்தான் பாருங்க, ரெண்டாம் உலகப்போர் சமயத்துலே நாலுநாள் காக்கா உஷ். எல்லாம் காணாமப் போச்சு. சொன்னா நம்பமாட்டீங்க, அப்போ நிஜமாகவே இங்கிலாந்து யுத்தத்திலே தோத்துப் போகிற சூழ்நிலை. நல்லவேளை. சீக்கிரமே காக்காயெல்லாம் திரும்பிவர வெற்றி எங்களுக்குத்தான்” காவலர் அன்போடு காக்கைகளைச் சீட்டி அடித்துக் கூப்பிடுகிறார். டூரிஸ்ட்டுகள் எடுக்கும் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதில்லை என்று சங்கம் வைத்துத் தீர்மானித்த மாதிரி அவை விருட்டென்று பறந்து போகின்றன. “”ஐயய்யோ, டவரை விட்டு வெளியே பறந்துடப்போறது.” கூட வந்த அமெரிக்க அம்மா பதறுகிறார். இன்னும் அரைமணி நேரத்தில் இங்கிலாந்து சாம்ராஜ்யம் அழிந்தால் அவர் எப்படி ஏர்போட்டுக்குப் போய் அமெரிக்காவுக்கு விமானம் ஏறமுடியும் என்ற பயம் முகத்தில் தெரிகிறது. “”அதெப்படி வெளியே போகுமாம்? ரொம்பப் பறக்க முடியாதபடி இறக்கையை அப்பப்போ வெட்டிவிடறோமில்லே” காவல்காரர் பரம ரகசியமாகச் சொல்கிறார். காக்காப் பிடித்து கத்திரிக்கோலால் இறகு வெட்டிப் பராமரிக்கிற அவருடைய சேவைக்கு சல்யூட் அடிக்கிறேன்.

“”இதுபோல வேறென்ன நம்பிக்கையெல்லாம் இருக்கு?” காவலரைக் கேட்கிறேன்.

“”ஆன்போலின் மகாராணியைத்தான் கேட்டுச் சொல்லணும். வெட்டி விழுந்த அவங்க தலையைக் கையிலே தூக்கிக்கிட்டு நடுராத்திரிக்கு இங்கே ஆவியா நடந்து வர்றாங்க.”

சிங்கவாசலில் நிற்கிறோம். வாசல் மட்டும்தான். சிங்கக் கோபுரம் என்ன ஆச்சு? நான் விசாரிக்க வருவேன் என்று தெரியாமல் இருநூறு வருடங்களுக்கு முன்னாலேயே இடித்துவிட்டார்களாம். அந்தக் கோபுரத்தில் மிருகக் காட்சிசாலை இருந்ததாகத் தகவல். 1235-ம் வருஷத்தில் மூன்றாம் ஹென்றி மன்னனுக்குத் திருமணப் பரிசாக அப்போதைய ரோமானியப் பேரரசு மூன்று சிங்கங்களை அனுப்பி வைத்தது.(கல்யாணப் பரிசாகக் கொடுக்க அந்தக் காலத்தில் மில்க் குக்கர் இல்லை என்பதை நினைவில் வைக்கவேண்டும்). வந்த சிங்கத்தை வைத்து, சீட்டுக் கிழித்து, காசு வாங்கிப்போட்டு கண்காட்சி நடத்த ஆரம்பித்த பிரிட்டீஷ் அரச வம்சம் இதில் வரும் வருமானம் கணிசமாக இருந்ததாலோ என்னமோ, இன்னும் நிறைய மிருகங்களை இங்கே அடைத்துவைத்து 1835-ம் வருடம் வரை அதைத் தொடர்ந்திருக்கிறது.

பிரபல ஆங்கிலக் கவிஞர் வில்லியம் பிளேக் “புலி’ என்ற தலைப்பில் எழுதிய “கண் சிவந்து ஒளிரும் புலி’ பற்றிய பிரபலமான கவிதையை நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது உருப்போட வேண்டியிருந்தது. அதைப் பற்றி “”காட்டில் திரியும் புலியை நேருக்கு நேர் கண்ட கவிஞனின் பிரமிக்கத்தக்க உணர்ச்சி வெளிப்பாடு” என்று நாகராஜன் சார் சொல்லிக்கொடுத்தபடி பதினைந்து வரிக்கு மேற்படாமல் பரீட்சைப் பேப்பரில் மாய்ந்து மாய்ந்து எழுதி மார்க் வாங்கியதும் மறக்கவில்லை. இந்தக் கண்காட்சி சாலைக்கு வந்து போனதுக்கு அப்புறம்தான் வில்லியம் பிளேக் புலிக்கவிதை எழுதினாராம். காகிதப் புலியான இந்தக் கவிதைப் புலியை நாங்களும், எங்க வாத்தியாரும் மாத்திரமில்லை, எழுதிய கவிஞரும்கூட காட்டுக்கெல்லாம் போகாமல், பத்திரமாகக் கூண்டுக்கு அந்தப் பக்கம் இருந்து பார்த்தவர்தான் என்று கேட்கும்போது இனம்புரியாத நிம்மதி.

டவர் வளாகம் வாட்டர்லூ பார்க்ஸ் பகுதியில் “ஜுவல் ஹவுஸ்’ உள்ளே நுழைகிறேன். பிரிட்டீஷ் அரச வம்சம் காலாகாலமாகச் சேமித்து வைத்த நகைகள், விலையுயர்ந்த வைரங்கள் எல்லாம் காட்சிக்கு வைத்திருக்கும் இடம். இதில், அரச வம்சம் காசு கொடுத்து வாங்கியது சொற்பம். மற்றதெல்லாம் சூரியன் மறையாத அந்தக்கால பிரிட்டீஷ் சாம்ராஜ்ய அடிமை நாடுகளிலிருந்து கிட்டிய கட்டாய அன்பளிப்பு. இந்தியாவிலிருந்து வந்த கோஹினூர் வைரம் இங்கேதான் இருக்கிறது. எடுத்துக்கொண்டு போகும்போது மறக்காமல் தாங்க்ஸ் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். பிரிட்டீஷ் நாகரீகம் மரியாதைக்குப் பெயர்போனதாக்கும்.

நகை இல்லத்தில் நடக்கவேண்டியதே இல்லை. நகரும் கன்வேயர் பெல்ட்டில் ஏறி நின்றால் ஒரு பிரதட்சணம் செய்து பார்க்க வேண்டியதைப் பார்த்துவிட்டு வெளியே வந்துவிடலாம். நகைநட்டைப் பார்த்து மெய்மறந்து அங்கேயே நின்று எத்தனை சவரன் தேறும் என்று சந்தோஷமாக சர்ச்சை செய்யும் அம்மணிகளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் ஏற்படலாம்தான்.

பிரிட்டீஷ் அரசவம்ச நகைகளை 1303-ம் வருடம் முதல் இங்கே டவரில் தான் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் வைத்திருந்தபோது அத்தனையும் கொள்ளை போய்விட்டதாம். கிட்டத்தட்ட அதையெல்லாம் மீட்டு (சொச்சத்தை வேறே இடங்களில் அன்பளிப்பாக வாங்கி) இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்.

கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்தபடி நகைகளைக் கவனித்துப் பார்க்கிறேன். மணிமகுடம். வைரம் பதித்த அரச வாள். அரசச் சின்னமான செங்கோலில் பதித்த உலகிலேயே பெரிய வைரமான குல்லியன் என்று கண்ணைப் பறிக்கிறது. நகை இல்லச் சுவரில் பெரிய திரைகளில் கேவா கலர் படமாக, ஐம்பது வருடம் முன்னால் எலிசபெத் மகாராணியார் முடிசூடிய காட்சி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் முகத்தில் இனம் புரியாத சங்கடம். மகுடம், செங்கோல், காசுமாலை என்று கிலோக் கணக்கில் சுமந்துகொண்டு நடமாடும் நகைக்கடையாக வலம் வருகிற சங்கடம் அது என்று தோன்றுகிறது.

கன்வேயர் பெல்ட் கோஹினூர் வைரம் வைத்த பெட்டிப்பக்கம் வருகிறது. என் நாடித்துடிப்பு அதிகமாகிறது. மனதில் கட்டபொம்மன் சிவாஜி மீசை துடிக்க “”வரி, வட்டி, வைரம்…எதற்காகக் கவர்ந்து போனாய்?” என்று சிம்மக்குரலில் கர்ஜிக்கிறார். “”கொடுத்திடுங்க, ப்ளீஸ், அது எங்களோடது. கொடுத்தீங்கன்னா, ரசீது தருவேன். பத்திரமா எடுத்துப்போய் அப்துல் கலாம் சார்கிட்டே கொடுத்து தில்லி ராஷ்ட்ரபதி பவன்லே வச்சுடச் சொல்றேன். நீங்க எப்போ வேணும்னாலும் உங்க செலவிலே டில்லிக்கு விசிட் அடிச்சுப் பார்த்துட்டு வரலாம். கொடுத்திடுங்க.” வாய்க்குள் என் குரல் கரைய கன்வேயர் பெல்ட் அறைக்கு வெளியே என்னை நகர்த்துகிறது.

டவரிலிருந்து வெளியே வரும்போது இதமான சாயங்கால வெயில். நடுக்கோபுரப் பக்க மேடையில் ஒற்றைக் காக்கை “என்னைப் படம் எடு’ என்று சாவதானமாக உட்கார்ந்திருக்கிறது. பக்கத்துச் சுவரை ஒட்டிச் சிரிப்புச் சத்தம். ஆன்போலின் அரசி. பிரஞ்சுக் கொலைக்காரன். ஓரமாக சிகரெட் பற்றவைத்தபடி அரசன், மதகுரு அடுத்த தலைவெட்டுக் காட்சிக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். கொலைக்காரன் ஆன்போலின் இடுப்பை இறுக்கமாக அணைத்துக் காதில் ஏதோ சொல்ல அவள் சிரித்துவிட்டு உதட்டுச் சாயத்தைப் பூசிக்கொள்கிறாள். அரசியின் தலை அவள் கழுத்துக்கு மேல் பத்திரமாக இருக்கிறது.

Posted in Cutting Crows, England, Era Murugan, Era Murukan, Ira Murugan, Ira Murukan, Jewel House, Jewels, Kohinoor, Literary, London Diary, Museum, UK | Leave a Comment »

SRG Sambhandham & SRG Rajanna – December Carnatic Music Season Special by Dinamani Kadhir

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

இசை: வாக்கு சுத்தம்! வாசிப்பு சுத்தம்!

ரவிக்குமார்

செம்பனார் கோவில் எஸ்.ஆர்.ஜி. சம்பந்தம், எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணா

“”சென்னையில் சபாக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், எங்களைப் போன்ற நாகசுரம் வாசிக்கும் கலைஞர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகின்றது. சென்னையில் செயல்படும் நூற்றுக்கும் மேற்பட்ட சபாக்களில், நாகசுர இசைக்கு மட்டுமே முக்கியமளித்து, அதை வாசிக்கும் கலைஞர்களுக்கு தனிக் கச்சேரி செய்யும் அந்தஸ்த்தை அளித்து, அவர்களை மேடையேற்றி அழகு பார்க்கும் சபாக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மீதி சபாக்களில் எல்லாம் “மங்கள இசை’ என்று பெருமைப்படுத்தி நாகசுர இசைக் கலைஞர்களை கெüரவமாக ஒதுக்கிவிடும் நிலைதான் தற்போது அதிகம் நடந்துகொண்டிருக்கின்றது…”

– நாகசுரக் கலைஞர்களுக்கு தற்போது உள்ள நெருக்கடி குறித்து இப்படி நம்மிடம் வேதனைப்பட்டவர்கள் யார் தெரியுமா? இசை உலகில் “செம்பனார் கோவில் சகோதரர்கள்’ என்று புகழப்படும் மிகப் பெரிய இசைப் பாரம்பரியத்தில் வந்த எஸ்.ஆர்.ஜி. சம்பந்தமும், எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணாவும்.

ராஜரத்னா போன்ற உயரிய விருதுகளை வென்றிருக்கும் இந்தச் சகோதரர்களுக்கு சமீபத்தில், “வலையப்பட்டி காஷ்யப் நாதாலயா சபா’ “மதுரை சோமு நினைவு விருதை’ வழங்கி கெüரவித்தது. மூத்த நாகசுர இசைக் கலைஞர்களான அவர்களிடம், “செம்பனார் கோவில் பாணி’யின் முக்கியத்துவத்தைப் பற்றியும், இந்தத் துறையில் சாதிக்கத் துடிக்க நினைப்பவர்கள் செய்யவேண்டியது என்ன? தவிர்க்க வேண்டியது என்ன? என்பது பற்றியும் கேட்டோம்.

“”எங்களுக்குத் தெரிந்து பல்லவி வைத்தியநாதப் பிள்ளை, செம்பனார் கோவில் ராமசாமிப் பிள்ளை, எங்கள் தந்தை கோவிந்தசாமிப் பிள்ளை, அவர்களுக்கு அடுத்து நாங்கள் நான்காவது தலைமுறை. எங்களுக்கு அடுத்து எங்களின் பிள்ளைகள் வசந்தகுமார், மோகன்தாஸ் ஐந்தாவது தலைமுறையாக நாகசுரம் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரே பரம்பரை எங்களுடையதுதான்.

நாகசுரத்தில் ரத்திமேளமாக முதன்முதலாக வாசித்தது, எங்களின் தாத்தா ராமசாமிப் பிள்ளைதான். இந்த முறையில் வாசிக்கும் முறை, எங்கள் செம்பனார் கோவில் பாணியின் தனிச்சிறப்பு. கொலம்பியா நிறுவனம் வெளியிட்ட இசைத் தட்டில் எங்களின் தாத்தா ராமசாமிப் பிள்ளைதான் முதன்முதலாக நாகசுர இசையை பதிவு செய்தார். நாகசுரம் வாசித்தே முதன் முதலாக வருமான வரி கட்டியவர் அவர். இந்தப் பரம்பரையில் வந்த நாங்களும் ஜெர்மன் கலாசார தூதரகத்துக்காக “சம்பிரதாயா’ என்னும் பொது தலைப்பின் கீழ், திருக்கல்யாணம், திருவீதி புறப்பாடு உட்பட திருமணங்களின் போது எந்தெந்த சடங்கு நடக்கும்போது என்ன மாதிரியான இசையை வாசிக்க வேண்டும் என்பதை பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறோம். இசையில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் இன்றைக்கும் அது ஓர் ஆவணமாக இருக்கின்றது.

முன்பெல்லாம் கோவில் திருவிழாக்கள் நடக்கும் எல்லா நாட்களிலும் நாகசுரக் கச்சேரிகள் விடிய விடிய களை கட்டும். இப்போது அப்படியில்லை. திருமண வரவேற்புகளுக்கு நாகசுரக் கச்சேரிகளை வைத்த காலம் ஒன்று இருந்தது. இப்போது அந்த இடத்தை மெல்லிசைக் குழுக்கள் பிடித்துக்கொண்டன. டி.வி., சினிமா உலகம் நாகசுரத்திற்கு எந்த முக்கியத்துவமும் தருவதில்லை.

பெரும்பாலான திருமண வேலைகள் இன்றைக்கு “கான்ட்ராக்ட்’டர்கள் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. இதனால் நல்ல திறமையுள்ள கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பெருமளவில் பறிபோகின்றது. அரசு விழாக்களில் “மங்கள இசை’யை வைக்கவேண்டும் என்று அரசாணையே இருக்கிறது. நிறைய அரசு விழாக்களில் இந்த ஆணை கடைப்பிடிக்கப்படுவதே இல்லை. இந்த நிலை மாறவேண்டும்.

நேரம் தவறாமை, தனிமனித ஒழுக்கம் இந்தத் துறையில் பிரகாசிக்க விரும்புபவர்களுக்கு அவசியம் இருக்கவேண்டிய ஒன்று. பம்பாய் சபாவில் ஒருமுறை கச்சேரி செய்துவிட்டு, அங்கிருந்து புணேயில் ஒரு கச்சேரி செய்துவிட்டு குறிப்பிட்ட ஒரு ரயிலைப் பிடித்தால்தான், மாயவரத்தில் ஏற்கனவே ஒத்துக்கொண்ட ஒரு கல்யாணக் கச்சேரிக்கு குறித்த நேரத்தில் வந்து சேரமுடியும் என்ற நிலை. அந்தநேரத்தில் மத்திய அமைச்சரவையில் இருந்த ஒரு முக்கியப் பிரமுகருக்கு வரவேற்பு அளிக்க வாசிக்கவேண்டும் என்று எங்களை அழைத்தனர். நாங்கள் முடியவே முடியாது என்று கூறி, குறிப்பிட்ட அந்த ரயிலைப் பிடித்து வெகு சாதாரண ஒரு கல்யாணக் கச்சேரிக்கு வாசித்தோம். இந்தத் தொழிலில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டும். நாங்கள் அப்படித்தான் காப்பாற்றினோம். இந்த வாக்குச் சுத்தம்தான் எங்களை பல சமஸ்தானங்களிலும், அரண்மனைகளிலும் வாசிக்கவைத்தது. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும் வாசித்தது மறக்கமுடியாத அனுபவம். பம்பாய் சபா ஒன்றில் ஓர் உருப்படியை வாசித்து முடித்தவுடன், எட்டு வயதுச் சிறுமி ஒருவள் எங்களிடம் “இப்போது நீங்கள் வாசித்த சாகித்யம் என்ன?’ என்று கேட்டு, எங்களை வியக்கவைத்தாள். இந்த விஷய ஞானத்தைத்தான் இளம் தலைமுறையினர் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

கடந்த ஐந்தாண்டுகளாக, தமிழ்நாடு இசைக் கல்லூரியில் நாகசுரம் பயிற்சியில் சிறந்த மாணவராக தேர்ந்து எடுக்கப்படுபவருக்கு எங்களின் தந்தை “கோவிந்தசாமிப் பிள்ளை நினைவு விருதாக’ தங்கப் பதக்கம் வழங்கி கெüரவிக்கிறோம்.” என்கின்றனர் மூத்த நாகசுரக் கலைஞர்களான சம்பந்தமும், ராஜண்ணாவும், அவர்கள் வாசிக்கும் வாத்தியம் போன்றே கம்பீரமாக!

Posted in Tamil | 1 Comment »

Prof. S Swaminathan – Yaanaikkal cure in Ayurvedha

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: யானைக்கால் உபாதை நீங்க…

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

வயது 73. 1993-ல் இருந்து யானைக்கால் நோய் உள்ளது. அடிக்கடி ஜுரம் வருகிறது. இரண்டு கால்களிலும் சிறுகச் சிறுக வீக்கம் அதிகமாகிறது. இந்த உபாதைக்கான காரணத்தையும், இதைப் போக்குவதற்கான மருந்துகளையும் கூறவும்.

ஏ. முகம்மது ஹயாத், விருத்தாசலம்.

இரு வேறுபட்ட கருத்துகளை- யானைக்கால் நோய் வருவதற்கான காரணங்களையும் சிகிச்சை முறைகளையும் ஆயுர்வேதமும் நவீன வைத்திய சிகிச்சையாளர்களும் தெரிவிக்கின்றனர். யானைக்கால் பற்றிய விவரத்தை கீழ்காணும் வகையில் ஆயுர்வேதம் கூறுகிறது.

“துடையிடுக்கில் அதிக வலியை உண்டு பண்ணிக்கொண்டு காய்ச்சலுடன் தோன்றும் வீக்கம், மெதுவாக கால் பாதத்தை நோக்கிச் செல்லும். அது “ச்லீபதம்’ (யானைக்கால்) எனப்படுகிறது.’

வீக்கம் கறுத்தும், வறண்டும், வெடிப்புள்ளதாகவும், திடீர் திடீரென்று வலியும், கடும் காய்ச்சலும் காணப்பட்டால் அது வாத தோஷத்தால் ஏற்பட்ட யானைக்கால் நோயாகும். இதைக் குணப்படுத்த விளக்கெண்ணெய்யில் தயாரிக்கப்படும் நொங்கனாதி தைலத்தைக் குடிக்கச் செய்து, வியர்வையை வரவழைக்கும் சிகிச்சை முறைகளைச் செய்து, கணுக்கால் பகுதியிலிருந்து 4 அங்குலம் மேல் பகுதியில் காணப்படும் ரத்தக் குழாயைக் கீறி கெட்டுள்ள ரத்தத்தை வெளிப்படுத்த வேண்டும். உடல் பலம் தேறியதும், விளக்கெண்ணெய்யை பசுமூத்திரத்தில் கலந்து ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இந்த ஒரு மாதம், பாலில் சுக்கு போட்டு கொதிக்க விட்டு, அதை முக்கிய உணவாகக் கொள்ளவேண்டும்.

வீக்கம் பசுமையாகவும், மிருதுவாகவும், காய்ச்சலும் காணப்பட்டால் அது பித்த தோஷத்தால் ஏற்பட்டது என அறியலாம். இதில் கணுக்கால் கீழேயுள்ள ரத்தக் குழாயைக் கீறி ரத்தத்தை வெளிப்படுத்த வேண்டும். பித்தத்தின் சீற்றத்தை அடக்கும் மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.

வீக்கம் பளபளப்புடன் வெண்ணிறமாகவும், கனமாகவும், கடினமாகவும், புற்று போல் கிளம்பி, முட்கள் போன்ற முனைகள் அடர்ந்ததாகவும், மிகப் பெரியதாகவும் இருந்தால் அது கப தோஷத்தினால் ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கால் பெருவிரல் ரத்தக்குழாயைக் கீறி ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். வரணாதி கஷாயம் தேனுடன் தொடர்ந்து பருகலாம். பார்லியை வேகவைத்து முக்கிய உணவாகக் கொள்ளவேண்டும். கடுகெண்ணெய்யை சமையலில் தாளிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். கல்யாண க்ஷôரம் எனும் பொடி மருந்தை சிட்டி அளவு எடுத்து பசு மூத்திரத்துடன் சாப்பிட உகந்தது.

Culex Fatigans எனும் வகையைச் சார்ந்த கொசுக்கள் Wuchereria Bancrofti எனும் கிருமிகளை, கடிக்கும்போது தோல் பகுதியில் விட்டுச் செல்கின்றன. இரத்தத்தில் நுழையும் அவை, நிண நீரைக் கொண்டு செல்லும் குழாயின் உட்பகுதிகளில் நுழைந்து, நிணநீர் கிரந்திகளை அடைந்து 6-18 மாதங்களுக்குள் புழுக்களை உற்பத்தி செய்கின்றன. நிணநீர் ஓட்டத்திற்கு ஏற்படும் தடை காரணமாக நிணநீர்கிரந்தி வீக்கம், தொட்டால் வலி, துடையிடுக்கில் வலியுடன் வீக்கம் போன்ற உபாதைகளை ஏற்படுத்துகின்றன. திடீரென்று காய்ச்சல் விட்டுவிடும். மறுபடியும் சில நாட்களில் தலை தூக்கும். நிணநீர்க் குழாய்களின் தொடர் அடைப்பை ஏற்படுத்தும் புழுக்கள் இறந்து போனாலும், அடைப்பு தொடர்வதால் குழாய்களின் சிதைவால் Cellulitis, Fibrosis போன்ற உபாதைகள் காணும், யானைக்காலையும் ஏற்படுத்துகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு யானைக்கால் நோயை ஏற்படுத்தும் Micro Filaria ரத்தத்தில் இருந்து சுமார் 1 வருடத்திற்குப் பிறகு நோயின் சீற்றத்தைக் காண்பிக்கத் தொடங்கும். இவை அனைத்தும் நவீன ஆராய்ச்சியாளர்களின் கூற்று.

இந்நோய் நீங்க மஞ்சிஷ்டாதி (ப்ருகத் கஷாயம்) 15 மிலி, 60 மிலி சூடான தண்ணீருடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். சுதர்ஸனம் சூர்ணம் 5 கிராம் காலை, இரவு உணவிற்கு 1 மணிநேரம் முன்பாகச் சாப்பிடவும். ஊமத்தை, ஆமணக்கு, கருநொச்சி, சாறடை, முருங்கை இவற்றின் இலைகளையும் கடுகையும் சேர்த்து அரைத்து (இம் மருந்திற்கு தத்தூராதி லேபம் என்று பெயர்) யானைக்கால் மீது பூச, நாட்பட்ட கடுமையான யானைக்கால் நோயைப் போக்கும் என்று சார்ங்கதர ஸம்ஹிதையில் காணப்படுகிறது.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை -602 103

(பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771

Posted in Alternate Medicine, Ancient, Ayurvedha, Cellulitis, Culex Fatigans, Doctor, Fibrosis, Homeopathy, Micro Filaria, Research, Sangam, Swaminathan, Tamil, Technique, Wuchereria Bancrofti, Yaanaikkal | Leave a Comment »

The Fisheries Minister, KPP Sami in Ennore & DMK MLA AVS Babu in Ayanavaram abuse their power

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபரை ஆதரவாளர்களுடன் விடுவித்த திமுக எம்எல்ஏ

சென்னை, ஜன. 5: சென்னை அயனாவரத்தில் உள்ள காவல் நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்த திமுக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவும், அவரது ஆதரவாளர்களும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபரை விடுவித்து சென்றனர்.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி அளவில் நடந்துள்ளது. இது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடக்கும் இரண்டாவது சம்பவமாகும்.

இதுபற்றிய விவரம்:

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிகேசவன். இவருக்கு வாசுதேவன், உதயகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆதிகேசவனுக்குச் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டைப் பிரித்து தருவது தொடர்பாக சகோதரர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆதிகேசவன், அம்பத்தூருக்கு சென்று வசித்து வருகிறார்.

இந்நிலையில் வாசுதேவன், அந்த வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றார். இதனால், உதயகுமாருக்கு கோபம் ஏற்பட்டது.

2006 டிசம்பர் 21-ல் வாசுதேவன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இந்த வழக்கில், புளியந்தோப்பைச் சேர்ந்த தீனா (எ) தினகரன் கைது செய்யப்பட்டார். அவர் தனது வாக்குமூலத்தில் ராஜா என்பவர் தான், வாசுதேவனை அடிக்கும்படி கூறியதாகக் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து ஜன.2-ல் ராஜாவிடம் விசாரணை நடத்துவதற்காக, அயனாவரம் போலீஸôர் அழைத்து சென்றனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி அளவில் சுமார் 100 ஆதரவாளர்களுடன் சென்ற புரசைவாக்கம் எம்எல்ஏ வி.எஸ்.பாபு, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த ராஜாவை விடுவித்துச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இச்சம்பவத்தை போலீஸôர் மறுத்துள்ளனர். காவல் நிலையம் வந்த எம்எல்ஏ வி.எஸ்.பாபு, சட்ட நடைமுறைகளுக்கு உள்பட்டே ராஜாவை அழைத்து சென்றார் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2-வது சம்பவம்: எண்ணூர் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை, திமுக அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரர்கள் விடுவித்துச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in AVS Babu, Ayanavaram, Cabinet, DMK, Ennore, FIR, Fisheries Minister, KPP Sami, Law, Ministry, MLA, Order, Rowdyism, Tamil Nadu, TN | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Aadathodai (or) Aadu Thinna Paalai

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

மூலிகை மூலை: விஷம் முறிக்கும் ஆடு தின்னாப்பாளை!

விஜயராஜன்


வெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடியினமாகும். முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களை உடையது. கால்நடைகள் மேய்ச்சக் காலில் ஒரு கடி கடித்து அசக்காமல் விடாது. ஆனால் இந்த இலையை மட்டும் நுகர்ந்து பார்த்துவிட்டு கடிக்காமல் விட்டு விடும். சிலர் ஆடாதொடை மூலிகையை ஆடு தின்னாப் பாளை என்று நினைப்பார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இதன் இலைகள் காம்புடன் கூடிய சாம்பல் கலந்த நிறத்துடன் மடிப்புச் சுருளுடன் இருக்கும். ஓரங்களில் கறுப்பு கலந்த பச்சையாக இருக்கும். இது கசப்பும், துவர்ப்பும் ஒருங்கே கொண்ட கிருமி நாசினித் தன்மையுடையது. இதனால் இதன் மலர்களும் இதே நிறத்தை ஒத்து இருக்கும். தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கரிசல் நிலத்தில் வளர்கின்றது. வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும், பேறு கால வலியை அதிகரிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

வேறு பெயர்கள்: ஆடு தீண்டாப் பாளை, கத்திருயம், புழுக்கொல்லி, பங்கம், பங்கம் பாளை, வாத்துப் பூ.

ஆங்கிலப் பெயர்: Aristolochia bracteata, Retz, Aristolochiaceae.

மருத்துவக் குணங்கள்:

ஆடு தின்னாப் பாளையின் இலையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகை வெந்நீரில் கலந்து குடிக்க, பாம்பு விஷம், சில்லறை விஷம், மலக் கிருமிகள், கருங் குட்டம், யானைத் தோல் சொறி குணமாகும்.

ஆடு தின்னாப் பாளையின் வேரை அரைத்து 2 வேளை 5 கிராம் வெந்நீரில் சாப்பிட வைத்து கடும் பத்தியத்தில் இருக்கச் செய்ய 3 நாளில் எல்லா விதமான பாம்பு விஷமும் முறிந்து விடும். (புதுப் பானையில் உப்பில்லாத பச்சரிசிப் பொங்கல் சாப்பிடச் செய்து ஒரு நாள் முழுவதும் விஷம் தீண்டியவரை தூங்கவிடக் கூடாது.)

ஆடு தின்னாப் பாளையின் வேர் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வலி நீங்கி சுகப் பிரசவம் ஆகும்.

இதன் விதைச் சூரணம் 5 கிராம் எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து கொடுக்க நன்கு பேதியாகி வயிற்று வலி, சூதகத் தடை, மலக் கிருமிகள் நீங்கும்.

ஆடு தின்னாப் பாளையின் வேரை பாம்பு விஷம் தீண்டியவரை மெல்லச் சொல்லி கடிபட்டவரின் வாய் ருசியை வைத்து எந்த வகையான பாம்பு தீண்டியது என்பதை எளிதாய் கண்டுபிடித்து விடலாம்.

இனிப்பு -நல்ல பாம்பு, இளைப்பு -கொம்பேறி மூக்கன் பாம்பு, தலை நடுக்கம் -கட்டு விரியன் பாம்பு, உணர்வு இல்லாமை -இருதலை மணியன் பாம்பு, மூக்கு எரிச்சல் -செய்யான் பாம்பு, கண் பஞ்சமடைவது -மூஞ்செறி பாம்பு, காது அடைப்பு -மூஞ்சுறி பாம்பு, புளிப்பு -வழலைப் பாம்பு, புளித்த பிறகு காரம் -கட்டு விரியன் பாம்பு அல்லது பெருவிரியன் பாம்பு, முள்ளுக் கீரை சுவை -சீத மண்டலம் பாம்பு, நாக்கு கடுகடுப்பு -சுருட்டைப் பாம்பு, நெஞ்சடைத்தல் -கண் நஞ்சான் பாம்பு, கண்பார்வை மங்கல் -கண் நஞ்சான் பாம்பு, பல்லில் சூடேறினால் -செய்யான் பாம்பு.

ஆடு தின்னாப் பாளை இலையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டியளவு 2 வேளை சாப்பிட்டு வர தோல் வியாதிகள், குட்டம், மலக்குடல் சம்பந்தமான வியாதிகள், சிறுநீரகத் தொற்றுகள் குணமாகும்.

ஆடு தின்னாப் பாளை, பறங்கிப் பட்டை, வெள்ளை மிளகு, பெரியா நங்கை, கீழாநெல்லி வகைக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவாக தொடர்ந்து 2 வேளை சாப்பிட்டு வர கருங்குட்டம், வெண்குட்டம், சிறுநீர் வழியில் புண், தோல் வியாதிகள், சர்க்கரை வியாதி குணமாகும்.

ஆடு தின்னாப் பாளையிலைச் சாறு, துளசிச்சாறு சம அளவாக 100 மில்லியளவு எடுத்து சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் குடிக்க சில வகையான விஷங்கள் முறியும்.

ஆடு தின்னாப் பாளை இலையைப் பொடியாக்கி, புகையிலையில் வைத்து சுருட்டு சுற்றிப் புகை பிடித்தால் சுவாச காசம் குணமாகும்.

ஆடு தின்னாப் பாளை இலை 100 கிராமும், மிளகு 10 கிராமும் எடுத்து அரைத்து மாத்திரைகளாகப் பட்டாணியளவு உருட்டிக் காய வைத்து 2 வேளை ஒரு மாத்திரை வீதம் உண்டு வர மேக வாயு நீங்கும்.

ஆடு தின்னாப் பாளைச் சாறு 200 மில்லியளவு, நல்லெண்ணெய் 400 மில்லி சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் 2 முறை தலை முழுகி வர மண்டைக்குத்து, தலைவலி நீங்கும்.

ஆடு தின்னாப் பாளைச் சமூலம், வசம்பு சம அளவாக எடுத்து இடித்து கட்டியின் மேல் வில்லையாக வைத்து அதன் அளவிற்கு பானையோட்டை வட்டமாக நறுக்கி அதன்மேல் வைத்து இப்படியாக 3 நாள் கட்ட அரையாப்புக் கட்டி கரையும்.

ஆடு தின்னாப் பாளைவேர், கவிழ்தும்பை வேர், வெள்ளருகு வேர், மருக்காரைவேர் சமஅளவாக எடுத்து அரைத்து உடம்பில் பூசி முறுக்கித் துவட்ட, கருவழலை, தண்ணீர் பாம்பு முதலிய சில்லறை விஷங்கள் முறியும்.

Posted in Aadathodai, Aadu Thinna Paalai, Allopathy, Aristolochia bracteata, Aristolochiaceae, Cures, Herbs, Homeopathy, Medicine, Mooligai Corner, Nature, Naturotherapy, Retz, unaani | 5 Comments »

Thamizhvaanan Q&A in Kalkandu : Dravidam, Anna, Periyar, China War

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

தமிழ் பத்திரிகையுலகில் கேள்வி பதில் பகுதியில் வெற்றிக் கொடி நாட்டியவர் தமிழ்வாணன். பழைய கல்கண்டு இதழ்களை புரட்டியபோது காணக் கிடைத்த அவரது ருசிகரமான கேள்வி பதில்கள் சில:

சீன யுத்த நிதிக்காக பெரியார் இன்னும் காலணா கூடத் தரவில்லையே?

உங்களுக்கு இது ஆச்சரியம்! யுத்த நிதியிலிருந்து தனக்கு எதுவும் கேட்காமலிருக்கிறாரே என்று எனக்கு ஆச்சரியம்!

அழகிப் போட்டி நடத்துகிறார்களே?

நடத்த வேண்டியது தான்; ஆனால், அதில் எனக்கு ஒரு சந்தேகம்… முன்பு அழகாக இருந்தார்கள் என்று தேர்ந்தெடுத்து வருகிறார்களா அல்லது நாளைக்கு அழகாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து வருகிறார்களா என்பது தான் எனக்குப் புரியவில்லை.

?

நான் தராசில் நிற்க மாட்டேன். சீன யுத்த நிதிக்கு, எனது நிறையைப் பார்த்து, நீங்களே இதற்குரிய தங்கத்தைக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி விட்டாரே நேரு!

நேருவுக்கு இப்போது தங்கம் கிடைக்கிறது; நேரம் தான் கிடைக்க மாட்டேன் என்கிறது. அதனால்தான் நேரு அப்படிச் சொல்லி விட்டார்! தங்கள் எடைக்கு எடை புளி கிடைத்தால் கூட அதற்காக நாள் கணக்கில் தராசில் நிற்கத் தயாராக இருக்கும் தலைவர்கள் இன்று நம் தங்க தமிழ்நாட்டில் இருக்கிறார்களே!

தமிழரசுக் கழகம் (ம.பொ.சி., கட்சி) எப்படி இருந்து வருகிறது?

ஒரு தேவாரப் பாட சாலையைப் போல் நடந்து வருகிறது. ஓதுவார் ஒருவர் தான் தேவாரப் பாடசாலையில் இருப்பார். சில சீடர்கள் இருப்பார்கள். வெளியே ஒரு போர்டு தொங்கிக் கொண்டிருக்கும். இது தான் தேவாரப் பாடசாலை.

வெற்றிலை போடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

வாய் சிவப்பாகும்; பல்லில் காவி ஏறும். உப்புமாவும், கேசரியும் சாப்பிடுவதற்கு ஒன்று போல் இருக்கும்.

ஒரு நண்பருக்குக் கடிதம் எழுதும் போது முகவரிப் பகுதியில் திராவிட நாடு என்று எழுதலாமா?

திராவிட நாடு என்று என்ன… சுவர்க்கம் என்று கூட எழுதலாம். போய் சேருமா என்பது தான் சந்தேகம்! திராவிட நாடு என்று முகவரி இடப்பட்ட கடிதங்கள் ஆயிரக்கணக்கில், “டெட் லெட்டர்’ ஆபீசில் கிடக்கின்றன என்று கேள்வி!

தமிழ் தேசியக் கட்சியிலிருந்து சம்பத்தை விலக்கி வைப்பதாக கண்ணதாசன் சொன்னாரே, அது என்ன ஆயிற்று?

என்ன சொன்னீர்கள்? சம்பத்தைத் தள்ளி வைப்பதாக கண்ணதாசன் சொன்னாரோ? ஊம், உங்களைச் சொல்ல என்ன இருக்கிறது. காலம் அப்படிக் கெட்டு கிடக்கிறது! சோப்பு தான் தண்ணீரில் கரைந்து காலியாகுமே தவிர, தண்ணீரைக் குடித்துத் தொட்டியை காலியாக்கிவிடாது சோப்பு.

“எங்கள் அண்ணாவிடம் போய் காமராஜர் கற்றுக் கொண்டு வரட்டும்…’ என்கிறாரே என்.வி.நடராசன்?

எதை? பொடி போடுவதையா?

சிவாஜி கணேசன் அமெரிக்கா போயிருந்த போது கென்னடி ஏன் கணேசனைக் கூப்பிட்டு பேச வில்லை?

கணேசன் ஒரு பிஸிமேன் என்பது கென்னடிக்குக் கூட தெரியும் போல் இருக்கிறது.

பெரியார் எப்படி இருக்கிறார்?

நாம் வைத்து வளர்ந்தவர்களெல்லாம் நம்மை விட்டுப் போய் கொண்டிருக்கிறார்களே என்று மிகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். நாம் வளர்த்ததில் நம் தாடி ஒன்றே இன்னும் நம்மையே நம்பி, நம்மை விட்டுப் போகாமல் நம்மோடு ஒட்டிக் கொண்டு இருக்கிறது என்று தன் தாடியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்!

நடிகர் ஆனந்தன், “நானும் மனிதன் தான்’ என்ற பெயரில் சொந்த படம் எடுக்கப் போகிறாராமே?

எடுக்கட்டும். இதிலாவது நானும் நடிகன் தான் என்பதை அவர் எடுத்துக் காட்டட்டும்.

பெரியாருக்கு மந்திரி பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா?

ஏற்றுக் கொள்ள மாட்டார். மந்திரி வேலையில் மாதாமாதம் தான் பணம் கிடைக்கும். சமுதாய சீர்திருத்தப் பணியில் ஊருக்கு ஊர், டூருக்கு டூர் பணம் கிடைக்குமே!

Posted in Ananthan, Andumani, Anna, Answers, China War, Dinamalar, Dravidam, EVR, Indo-China, Kamaraj, kamarajar, Ma Po Si, Nehru, Pa Ke Pa, Periyar, Q&A, Questions, Sivaji, Sivaji Ganesan, Thamizhvaanan | Leave a Comment »

No more Entrance Exams – Will it benefit Rural Students?

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

“”தேர்வு இல்லை; ஆனால் நுழைவு உறுதியா?”

அ.கி. வேங்கடசுப்ரமணியன்

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை அண்மையில் தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதாவை தாக்கல் செய்யும்போது, உயர் கல்வித்துறை அமைச்சர் “”கிராமப்புறத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கும், நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே ஒரு சம ஆடுதளம் (கங்ஸ்ங்ப் டப்ஹஹ்ண்ய்ஞ் ஊண்ங்ப்க்) உருவாக்குவதற்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்வது அவசியமாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதை எளிதாக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டதாலேயே இது நிறைவேறி விடுமா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.

மேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களிடையே கிராமப்புற நகர்ப்புற வேறுபாட்டைத் தவிர அரசு சார்ந்த பள்ளிகள், அரசு சாராத பள்ளிகள் என்ற வகையில் பெருத்த வேறுபாடு உள்ளது.

அரசு, நகராட்சி, ஆதிதிராவிட நலத்துறை, கள்ளர் சீரமைப்புத் துறை, சமூக நலத்துறை, வனத்துறை போன்ற அரசு சார்ந்த பொதுத்துறை பள்ளிகள் உள்ளன. இதைத் தவிர அரசு உதவி பெறும் மற்றும் பெறாத தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் போன்றவையும் உள்ளன.

கிராமப்புறத்தில் அரசு சார்ந்த பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதியவர்கள் சுமார் 1.5 லட்சம்.

தனியார் பள்ளியில் 1.01 லட்சம்.

நகர்ப்புறத்தில் அரசுப் பள்ளியில் தேர்வு எழுதியவர்கள் 0.82 லட்சம்.

தனியார் பள்ளியில் 1.76 லட்சம்.
கிராமம், நகரம் இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஏறத்தாழ 45 சதவீத மாணவர்கள் அரசு சார்ந்த பொதுப் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதியுள்ளனர்.

பள்ளியிறுதி வகுப்பில் தேறியவர்களின் சதவீதம், கிராமப்புற, நகர்ப்புறப் பள்ளிகளுக்கு இடையில் சிறிதும், அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத பள்ளிகளுக்கு இடையில் பெரிதும் வேறுபடுகிறது.

2006ஆம் ஆண்டு இவ்வகையில் தேர்ச்சி சதவீதம் 2006ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி தேர்வில் வெற்றி பெற்றவர் சதவீதம்

கிராமப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 61. 14 சதவீதமும்,

தனியார் பள்ளிகள் 83.71 சதவீதமும்,

நகர்ப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 62.70 சதவீதமும்,

தனியார் பள்ளிகள் 85.76 சதவீதமும் பெற்றுள்ளன.
கிராமமோ, நகரமோ இரண்டிலுமே பொதுத் துறை பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளைவிட பெரிதும் குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பொதுத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏழை எளிய குடும்பங்களில் இருந்து வருபவர்கள்தான். வசதி உள்ள குடும்பத்தில் தாயோ, தந்தையோ அல்லது இருவருமோ படித்திருப்பார்கள். குழந்தைகளின் படிப்பிற்கும் வீட்டுப் பாடத்திற்கும் உதவி செய்வார்கள்.

ஆனால் பொதுத்துறை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களே பெற்றோராக இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் தேவைப்படுகிறது. இந்தப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளும் குறைவு. அதைப் பற்றி சமூகத்தின் ஆர்வமும் அக்கறையும் குறைவு.

பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கு தேர்ச்சி மட்டும் போதாது. வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டில் பயன் பெறுபவர்களும் அவர்களுக்கு என வரையறுக்கப்பட்ட மதிப்பெண்கள் பெற வேண்டும். இந்த மதிப்பெண்கள் பெறுபவர்கள் பெரும்பாலும் நகர்ப்புறப் பள்ளிகளில் படித்துத் தேறியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

2006ஆம் ஆண்டில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 200க்கு 194 மதிப்பெண்கள் பெற்ற 6300 மாணவர்களில், 5600க்கும் மேற்பட்டவர்கள் நகர்ப்புறங்களில் இருந்து வந்தவர்கள்தான். இவர்களில் எத்தனை பேர் நகர்ப்புற அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

மொத்தம் பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் சுமார் 3.84 லட்சம் பேரில் முதல் 10 சதவீதம் அதாவது முதல் 38400 இடங்களில் எத்தனை கிராமப்புற / நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளனர் என்பது தெரியவில்லை.

நுழைவுத் தேர்வை ரத்து செய்தாலும் இடங்களை ஒதுக்கினாலும், கிராமப்புற அரசுப் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 93 ஆயிரம் மாணவர்கள், நகர்ப்புறத்தில் உள்ள அரசு சாரா பள்ளிகளில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 1.52 லட்சம் மாணவர்களுடன் தர வரிசையில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நுழைய முடியும். இதற்கு என்ன செய்ய முடியும்?

முதலில் கிராமம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகள், நூலகங்களில் தேவையான புத்தகங்கள், ஆய்வுக் கூடத்துக்கு அவசியமான கருவிகள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாநகராட்சியும் தான், வசூலிக்கும் கல்வி வரியை முழுவதுமாக கல்விக்காகச் செலவிட்டால், நிச்சயமாகச் சிறந்த தனியார் பள்ளிக்கு இணையாக பொதுத்துறை பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க முடியும்.

கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அரசே தனிக் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

மேலே கூறியவற்றைத் தவிர, வேறு ஒரு முக்கியப் பிரச்சினையும் உள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வு எழுதுபவர்கள் பெரும்பாலும் 17 வயது நிரம்பியவர்கள். தமிழ்நாட்டில் இவர்களது எண்ணிக்கை 2006-ஆம் ஆண்டு சுமார் 11.91 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு மாநில பாடத்திட்ட மேல்நிலைத் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 5.22 லட்சம்தான்.

மைய பாடத்திட்டத்தை (சி.பி.எஸ்.இ.) எழுதியவர்கள் சுமார் 4500 பேர். எனவே 17 வயது நிரம்பியவர்களில் பாதிப்பேருக்கு மேல் பள்ளியிறுதித் தேர்வை எழுதவில்லை. இவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள்தான்.

கிராமப்புற மக்கள்தொகை நகர்ப்புற மக்கள்தொகையைவிட சுமார் ஒன்றரை மடங்கு அதிகம் இருந்தாலும், கிராமப்புறங்களில் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தைவிட குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பள்ளிப் படிப்பை இறுதி வரை தொடராமல் இடையிலே விடுபடுதல்.

எனவே கிராமப்புறங்களில் தொடக்கக் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும். கிராமப்புறத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், இளைஞர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் இவை அனைத்தும் ஊராட்சியுடன் இணைந்து இந்தப் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் கிராமப்புறத்திலிருந்து மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையில் கிராமப்புற மக்கள் இருக்கும் விகிதத்திற்கு இணையாக இருக்க வேண்டும். அதேபோல் அரசுப் பள்ளியில் இருந்து தேர்வு பெறும் மாணவர்களின் சதவீதத்துக்கும், தரவரிசையும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர வேண்டும்.

இவை இரண்டையும் செய்யாவிட்டால் நுழைவுத் தேர்வு ரத்து ஆனாலும், இட ஒதுக்கீடு இருந்தாலும், கிராமப்புற ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, மருத்துவம் மற்றும் தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் “”நுழைவுத் தேர்வு இல்லை. ஆனாலும் நுழைய முடியவில்லை” என்ற நிலையே தொடரும்.

தொலைநோக்குக் கல்வி

கி. இராசா

மக்களுக்குக் கல்வி வழங்குவதில் பல முறைகள் உள்ளன. நேரடியாக வகுப்பறையில் வழங்கப்படும் கல்விமுறை; அஞ்சல் வழியாக வழங்கப்படும் கல்விமுறை. அடிப்படைக் கல்வியை ஓரிரு ஆண்டுகள் தந்து உயர்கல்வி தரும் திறந்தநிலைக் கல்விமுறை.

இக் கல்விமுறைகள் அனைத்தும் “உயர்கல்வியைப் பரவலாக்குவது’ என்ற நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டவை. ஆனால் உயர்கல்வியைப் பெறுவதற்கு முன்பாகவே அதற்கு முந்தைய அடிப்படை மற்றும் உயர்நிலைக் கல்வி பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அடிப்படைக் கல்வி யாருக்கு வழங்கப்படுகிறதோ அந்தப் பயனாளிகளுக்கு அது சரியாகச் சென்று சேர்கிறதா? என்றும், அதனால் அவர்கள் பயன் பெறுகிறார்களா? என்றும் அக்கறையோடு மீள்பார்வை செய்வதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

இத்தகு மீள்பார்வை முறைகளோ, சுயமதிப்பீட்டு முறைகளோ இல்லையென்றால் “முழு எழுத்தறிவு இயக்கம்’ என்பது “வயலில் நிறுத்திய வைக்கோல் பொம்மை’ போலத்தான் பயன்தரும்!

ஒரு சமுதாயத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் கல்வி வழங்கப்படுகிறது. ஆண் பெறுகின்ற கல்வி, அவனுக்கும் அவனையொத்த பிறருக்கும் பயன்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இப் பயன்பாடு அவன் வாழும் தலைமுறையால் உணரப்படுகிறது.

பெண் பெறுகிற கல்வியோ, வாழும் தலைமுறைக்கு மட்டுமல்லாது, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. வரலாற்றில் இதற்குப் பல சான்றுகள் உள்ளன. பெண்களுக்கு வழங்கப்படும் கல்வி இத்தகு தொலைநோக்குப் பயன்பாடு உடையது என்பதால்தான் இதனைத் “தொலைநோக்குக் கல்வி’ என்கிறோம்.

ஒரு சமுதாயம் வளமான சமுதாயமாகத் திகழ வேண்டுமென்றால் அங்கு பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் பெண்களுக்குக் கல்வி வழங்குவதில் அரசுகள் அக்கறை காட்டுவதில்லை என்பதுவே இப்போதுள்ள குற்றச்சாட்டு.

அனைத்துலக மாணவர்களின் கல்வியறிவு பற்றிய மதிப்பீட்டறிக்கையில் தாய்மார்கள் கல்வியறிவு பெற வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கல்லூரிப் படிப்பை முடித்த தாய்மார்களின் பிள்ளைகள், பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட தாய்மார்களின் பிள்ளைகளைவிட அறிவைப் பெறுவதில், பெற்ற அறிவைப் பயன்படுத்துவதிலும் பல நிலைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அதேசமயத்தில் சமுதாயத்திலும் பணியிடத்திலும் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மைக்கு முக்கியக் காரணம் விகிதாசாரக் குறைவாகும்.

1991க்கும் 2001க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்தில் பெண்களுக்குக் கல்வி தருவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கையின் காரணமாக 15 சதவீதம் மட்டுமே உயர்த்த முடிந்தது. நாடு முழுவதும் இன்னும் 19 கோடி பெண்கள் கல்வியறிவு பெறாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மைநிலை. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 51 சதவீதமாக இருந்த இந்த நிலை 2001ல் 64 சதவீதமாக அதாவது 13 சதவீதம் – கூடுதல் பெற்றுள்ளது. இது தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, உயர்கல்வி ஆகிய நான்கு கட்டக் கல்விகளைப் பெறுகின்ற மொத்தப் பெண்களின் விகிதாசாரமாகும்.

பெண்கள் அதிக அளவில் கல்வியறிவு பெற முடியாமல் போவதற்குச் சொல்லப்படும் முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்கள் வயதுக்கு வந்து விடுவதாகும். இந்த இயற்கை நிகழ்வு அவர்களுக்குப் பாதகமாக அமைந்து விடுகிறது. முதல் ஐந்து வகுப்புகளில் தொடக்கக்கல்வி பெறும் சிறுமியர்களில் 38 – 67 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். கிராமப்புறங்களில் இது 10, 11 வயதுகளிலேயே நிகழ்ந்து விடுகிறது. இதையும் மீறி 8ஆம் வகுப்புவரை பயிலும் சிறுமியர்களில் கிட்டத்தட்ட 58 சதவீதம் பேர் திருமணம் மற்றும் இதர காரணங்களுக்காக பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே முடித்து விடுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இவ்வாறு சிறுவயதில் பெண்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாமல் போவதற்கு அவர்களின் பெற்றோரே முக்கியக் காரணமாகின்றனர். கல்வியறிவு பெறாத பெற்றோர்கள் அந்த நேரத்திற்கு அவசரப்பட்டு முடிவு எடுக்கிறார்களே ஒழிய, தங்கள் மகளைப் பற்றிய நெடுநோக்குப் பார்வை அவர்களுக்கு இல்லை. இதனால் பெண்ணைச் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கின்ற அவலமும் நிகழ்ந்து விடுகிறது. கல்வி அறிவைப் பெறாத நிலையில் சிறுமியரின் வாழ்வு சீர்கேடாகிறது.

ஒரு நாடு, இன்றைய காலகட்டத்தில் அதிகமாகப் பேசப்படும் அல்லது வளர்ச்சிக்கான அடையாளமாகக் கருதப்படும் அறிவுச்சந்தையில் சவால்களைச் சந்திக்க வேண்டுமென்றால் பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி பெற வேண்டும் என்பதை அறிவு வளர்ச்சியையும், பொருளாதார முன்னேற்றத்தையும் இணைத்துப் பார்க்கும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கு உயர்கல்வியில் “பெண்களுக்கு உகந்த படிப்பு இது; ஆண்களுக்கு உகந்த படிப்பு இது’ என்று பிரித்துப் பார்க்கும் “பால் மையக் கல்வி’ போக்கையும் கைவிட வேண்டும் என்று அவர்கள் உறுதிபடச் சொல்கின்றனர்.

இதற்கெல்லாம் இன்றியமையாததாக “பால்வேறுபாடு கூடாது’ என்ற முழக்கம் கல்வி நிலையில் முதன்மைப்பட வேண்டும். அப்போதுதான் சமுதாயம் உண்மையான முழுக் கல்வியைப் பெற முடியும்.

இன்றைய நிலையில் கல்வி என்பது வகுப்பறையோடு நின்று விடுவதில்லை. கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகும் அது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் இன்றைய கல்வியாளர்களால் வாழ்நாள் கல்வி என்று அழைக்கப்படுகிறது.

வாழ்நாள் கல்வியால் அறிவுப்புரட்சியையும் அதன்வழி, பொருளாதார நிலைபேற்றையும் ஒரு நாடு அடைய முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்கான சில செயல்முறைத் திட்டங்களை மேலும் காலம் தாழ்த்தாது இப்போதிருந்தே வகுக்க வேண்டும்.

இதன் முதற்கட்டமாக, வளமான எதிர்காலத்திற்கு ஒரு நாட்டை இட்டுச் செல்வதற்கான ஆற்றல் வாய்ந்த பெண் கல்வியில் தொடக்க நிலையிலிருந்தே குறைபாடுகள் களையப்பட வேண்டும். தொடக்கக் கல்வியில் சிறுமியர்கள் கல்வி “இடைவீழ்ச்சி’ அடைவதற்கான காரணங்கள் என்னவென்று கண்டறிதல் வேண்டும். கண்டறிந்த உண்மைகளின் மீதான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இதற்கான முனைப்பு இயக்கம் ஒன்றை அந்தந்தப் பகுதிப் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்க வேண்டும்.

இது அரசு இயக்கமாக இல்லாமல் மக்களின் விருப்ப இயக்கமாகவும் இருக்க வேண்டும். இரண்டாவது கட்டமாக, கல்வி வழங்குவதில் பால்வேறுபாட்டைக் களைய வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக தாய்மார்களுக்குக் கல்வி வழங்குவதற்கென கல்வியாளர்களைக் கொண்டு ஒரு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தொடக்கநிலையில் சிறுமியர்கள் பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிடும் அவலம் தொலையும்.

இவ்வாறு தொலைநோக்குப் பார்வையோடு படிப்படியாகப் பெண்கல்வித்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இன்னும் 15 ஆண்டுகளில் – அதாவது 2020ல் இந்தியா பொருளாதாரத்தில் நிலைபெற்ற நாடாகவும், அறிவுச்சந்தையில் வளம்பெற்ற நாடாகவும் உருவாகும் சூழல் வெகுதொலைவில் இல்லை.

(கட்டுரையாளர்: பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியர்).

Posted in Action Plan, Admissions, Advices, Age, Ak Venaktasubramanian, AK Venkatasubramanian, Bachelors, Children, City, Degree, Dinamani, Divide, Education, Engineering, Entrance Exam, Female, Girl, High School, Higher Studies, Human Resources, JEE, Ki Rasa, Kids, Kindergarten, Knowledge, Masters, medical, Money, Op-Ed, Opinion, Primary, professional, Rich vs Poor, Rural, Secondary, Strategy, Student, Students, Study, Suggestions, Tamil Nadu, Teacher, Technology, TN, TNPCEE, Urban, Village, Women | Leave a Comment »

AIDS & Diabetes – Gross custodial violence by the police and corruption by jail officials in prisons for women

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

எய்ட்ஸ், நீரிழிவு- கூடுதல் தண்டனை?

சிறைக்கூடங்களில் பெண் கைதிகளின் நிலைமை, அவர்களுக்கு அளிக்கப்படும் உணவுகள் யாவும் அதிகாரிகள் சொல்லிக்கொள்வதைப் போல இல்லை என்கிறது மனித உரிமை ஆர்வலர் சுதா ராமலிங்கம் அளித்துள்ள அறிக்கை.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.பி.ஷா, கே.சந்துரு ஆகியோரது உத்தரவின்பேரில், தமிழகச் சிறைகளில் ஆய்வு செய்தபின் இந்த அறிக்கையை அவர் தாக்கல் செய்துள்ளார்.

சிறைக் கைதிகளைப் பார்க்கவும், உறவினர்கள் அவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கவும் கையூட்டுத் தொகை அளிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண ஏழைக் கைதிகள் படும் மனஉளைச்சலுடன் இத்தகைய ஊழலும் சேர்ந்து அவர்களது குடும்பத்தாரை மேலும் கவலையில் ஆழ்த்தும் சூழலை அந்த அறிக்கை மூலம் உணர முடிகிறது.

கைதி வசதிகள் படைத்தவராகவோ அல்லது செல்வாக்கு பெற்றவராகவோ இருந்தால் அவரால் எதையும்- விரும்புகிற உணவு, அறை வசதிகள், செல்போன், மருத்துவம், மருந்துகள், மது வகைகள்- பெற முடியும் என்பதை சிறைக்கூடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

ஒருவர் சிறைக்குள் இருக்கும்போதும் வெளியுலகில் அவருக்கு ஆதரவு, செல்வாக்கு இருக்கும் என்றால்தான் சிறைக்குள் அவர் மனிதனாக மதிக்கப்படுகிறார் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இத்தகைய முறைகேடுகளைவிட மனவருத்தம் தருகிற இரு விஷயங்கள் சிறைக்கூடங்களில் கவனிக்கப்படாமல் உள்ளன.

அவை: எய்ட்ஸ், நீரிழிவு நோய்.

சிறைக்கூடங்களில் கைதிகளிடம் எய்ட்ஸ் பாதிப்பு இருக்கிறது என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆய்வுகள் சொல்கின்றன. சிறையில் ஓரினச் சேர்க்கை பரவலாக இருப்பதால் அங்கு எய்ட்ஸ் வேகமாகப் பரவுகிறது என்பதைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தெளிவாகச் சொல்லியும்கூட, சிறைக்கூடங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

எய்ட்ஸ் நோய் உள்ள கைதிகளைத் தனியாகப் பிரிக்க வேண்டிய அவசியம் சிறைக்கூடத்திற்கு இருக்கிறது. அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது.

இன்றைய நாளில், நீரிழிவு நோய் என்பது சமூகத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு இருக்கிறது. இதில் கைதிகள் மட்டும் விதிவிலக்கு அல்லர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது.

நீரிழிவு நோயாளிக்கு முதன்மையான மருந்து உணவுக் கட்டுப்பாடுதான். ஆனால், சிறைக்கூடங்களில் நீரிழிவு நோயாளிக்கென தனி உணவுகள் கிடையாது. இதனால் பல நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகிறார்கள். சில நேரங்களில் இறந்தும்போகிறார்கள்.

சிறைக்கூட பிரச்சினைகளைவிட மோசமானது எய்ட்ஸ் மற்றும் நீரிழிவு நோய். தற்போது சிறையில் உள்ளவர்களில் எத்தனை பேர் எய்ட்ஸ் நோயாளிகள், எத்தனை பேர் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் என்பதை சிறைக்கூடங்கள் வெளிப்படையாக பரிசோதனைகள் நடத்தி அறிவிப்பதன் மூலம்தான் இக்குறைகளைப் போக்க முடியுமே தவிர, இதை மூடி மறைப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது.

சிறைக்குச் சென்ற ஒருவர் விடுதலையாகும்போது திருந்தி வருவார் என்ற நம்பிக்கையைவிட நோய்களுடன் வருவார் என்ற பீதி அவர்களது உறவினர்களிடத்தில் எத்தகைய பாதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் ஏற்படுத்தும் என்று சிந்தித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Posted in Advocate Commissioner, AIDS, AP Shah, Chennai, Chief Justice, Correctional facility, Corruption, Courts, diabetes, Disease, Doctor, Editorial, Female Correction Centres, Gay, GLBT, Healthcare, Jail, Judge, Justices, K Chandra, Lady Prisoners, Law, Lesbian, Madras High Court, Medicine, Order, Police, Prison, Registrar General, Sex, Sudha Ramalingam, Tamil Nadu, TN, Violence, Women Cells | Leave a Comment »

Noida Child Molesters: Details & Mohinder’s Confession

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

சிறுமிகளை கற்பழித்து கொன்றது எப்படி? காமவெறியன் பரபரப்பு வாக்குமூலம்

புதுடெல்லி, ஜன. 1-

28 வருடங்களுக்கு முன் தமிழிலில் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள் சினிமாவில் கதாநாயகன் கமலஹாசன் இளம் பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து அவர்களை கற்பழித்து கொலை செய்வதுடன் தனது பங்களா விலேயே புதைத்துவிடுவார்.

இது போன்ற நிஜ சம்பவம் டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் நடந்துள்ளது. இங்கு வசிக்கும் தொழில்அதிபர் மொகிந்தர்சிங். இவரது வீட்டு வேலைக்காரன் சுரேந்திரா.

இவர்கள் இருவரும் நொய்டா நிதாரி பகுதியில் உள்ள பங்களாவில் ஏராளமான சிறுமிகளை கற்பழித்து கொன்று புதைத் துள்ளான். அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள்.

இவர்களது காமவெறிக்கு 38 சிறுவர்-சிறுமிகள்வரை பலியாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த சில வருடங்களாகவே அந்தப்பகுதியில் சிறுவர்- சிறுமிகள் அடிக்கடி மாயமானார்கள்.

தற்போது சுரேந்திரா கைதான தகவல் கிடைத்ததும் சிறுவர்-சிறுமிகளை பறி கொடுத்த பெற்றோர் ஒவ்வொரு வராக வந்து புகார் செய்த வண்ணம் உள்ளனர். இதுவரை 38 சிறுவர்-சிறுமிகளை காணவில்லை என்று புகார் வந்துள்ளது.

கடைசியாக பாயல் என்ற 20 வயது இளம்பெண் சுரேந்திராவின் காமப்பசிக்கு பலியானார். அவளது செல் போன் சுரேந்திராவிடம் இருந்தது. செல்போனை போலீசார் தேடியபோது சுரேந்திரா சிக்கினான்.

இதையடுத்து மொகிந்தர் சிங்கின் பங்களாவைச் சுற்றிலும் கொன்று புதைக்கப் பட்டுள்ள சிறுவர்-சிறுமிகளின் பிணங்களை போலீசார் புல்டோசர் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து வருகிறார் கள். தோண்டத்தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

தொய்டா பகுதி முழுவதும் ஒரே பீதியும் பரபரப்பாகவும் காணப்படுகிறது. பிணங்கள் தோண்டப்படும் மர்ம மாளிகை முன் ஏராளமான பெற்றோர் பரிதவித்தபடி கூடினர். கடுமையான கூட்டம் கூடியதால் போலீசார் அவர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்தினார்கள். பலத்த பாதுகாப்புக்கு இடையே பிணம் தோண்டி எடுக்கப் படுகிறது.

கடத்திவரப்படும் சிறுமி களை முதலில் தொழில்அதிபர் மொகிந்தர்சிங் கற்பழிப்பார். அதன்பிறகு வேலைக்காரன் சுரேந்திரா அனுபவித்து கொன்று புதைத்துவிடுவான். இந்த தொடர் கொலையில் மொகிந்தர்சிங்கும் கைது செய்யப்பட்டு உள்ளார். இருவரிடமும் போலீசார் காவலில் வைத்து விசாரித்து வருகிறார் கள்.

சிறுமிகளை கற்பழித்து கொன்றது பற்றி சுரேந்திரா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து இருக்கிறான். அதில் கூறியிருப்பதாவது:-

நான் தொழில்அதிபர் மொகிந்தர்சிங் வீட்டில் பல வருடங்களாக வேலை பார்த்து வருகிறேன். மொகிந்தர்சிங் மனைவியைப்பிரிந்து வாழ்ந்து வந்தார். தனிமையில் இருந்த அவர் அழகிகளை அழைத்து வந்து அனுபவிப்பார். அவருக்கு சிறுமிகள் என்றால் பிடிக்கும்.

அவரது எண்ணத்தை புரிந்து கொன்ட நான் முதன்முதலாக ஜோதி என்ற 10 வயது சிறுமியை ஏமாற்றி வீட்டுக்குள் அழைத்து வந்தேன். அவரது தந்தை ஜாபுலால். சலவைத்தொழிலாளியான இவரது மகள் வீடு வீடாக சென்று துணிகளை சேகரித்து அதை சலவை செய்து கொடுப்பாள்.

எங்கள் பகுதி வழியாக சிறுமி துடுக்காக நடந்து செல்வாள் ஒருநான் அவளை வீட்டுக்குள் துணிகளை எடுத்துச்செல்ல வருமாறு அழைத்துச்சென்றேன். வீட்டுக்குள் நுழைந்ததும் அவளை ஒரு அறையில் தள்ளினேன். எஜமான் மொகிந்தர்சிங் முதலில் சிறுமியை கற்பழித்தார். அவர் அனுபவித்து சென்ற பின் நானும் சிறுமியை பலாத்காரம் செய்தேன். அவளை வெளியில் விட்டால் விபரீதமாகிவிடும் என்பதால் அவள் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றேன். பிணத்தை வீட்டுகால்வாயில் குழிதோண்டி புதைத்து விட்டேன்.

இதுதான் நான் செய்த முதல் கொலை அதன்பிறகு நிறைய சிறுமிகள் மட்டுமல்லாது சிறுவர்களையும் அழைத்து வந்து `செக்ஸ்’ இன்பம் அனுபவித்து கொன்றோம். எத்தனை பேர் என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை.

முதலாளி மொகிந்தர்சிங் அடிக்கடி விபசார அழகிகளை வீட்டுக்கு அழைத்துவந்து உல்லாசமாக இருப்பார். பாயல் என்ற இளம்பெண் அடிக்கடி வந்து மொகிந்தர்சிங்குடன் உல்லாசமாக இருப்பாள்.

அவளுக்கு நாங்கள் சிறுமிகளிடம் `செக்ஸ்’ இன்பம் அனுபவித்து கொலை செய்த விவரம் தெரிந்து விட்டது. அவள் மொகிந்தர்சிங்கை `பிளாக் மெயில்’ செய்து பணம் பறிக்க திட்டமிட்டாள். இதனால் அவளது கதையை முடித்துவிடு என்று எனக்கு உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே 7-ந்தேதி வழக்கம் போல் வீட்டுக்கு வந்த பாயலை கொன்று பிணத்தை புதைத்துவிட்டேன்.

ஆனால் அவளது செல்போன் எங்கள் வீட்டில் இருந்ததால் அதை வைத்து போலீசார் கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு சுரேந்தரா கூறினார்.

காணாமல் போன சிறுமிகளின் போட்டோக்களை போலீசார் அவனிடம் காட்டியபோது அவர்களை கற்பழித்து கொன்று விட்டதாக கூறி அடையாளம் காட்டினான்.

சுரேந்திராவின் காமவெறிக்கு பலியான சிறுமி ஜோதியின் தந்தை சலவைத்தொழிலாளி ஜாபுலால் கூறுகையில், “நான் எனது மகளை காணவில்லை என்று 18 முறை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எனது புகாரை கவனிக்கவேயில்லை. அப்போது இதன் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் படுகொலைகள் நீடித்து இருக்காது” என்றார்.

கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் மொகிந்தர் சிங் ஹரித்வார், பாகப்பட், டேராடூன், நொய்டா ஆகிய இடங்களில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவருக்கு மாதவருமானம் மட்டும் ரூ. 23 லட்சம் முதல் 30 லட்சம் வரை கிடைக்கும். மொகிந்தர்சிங்கின் மனைவி தவிந்தர்கவுர். இவர் கணவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் 2 வருடங்களுக்கும் முன்பே பிரிந்து சென்று விட்டார். அவர் மொகிந்தரின் தம்பி இக்பாலுடன் வசித்து வருகிறார்.

இது போல் மொகிந்தர்சிங்குடன் அவரது சகோதரர்களுக்கு சொத்து பிரச்சினை இருந்தது இதனால் சகோதரர்களும் மொகிந்தரை விலக்கி வைத்தனர்.

அவரது தம்பி இக்பால் சிங் கூறுகையில் “மொகிந்தர்சிங் எப்போதும் பிரச்சினை செய்து கொண்டே இருப்பான். கடந்த 6 வருடமாக அவனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை அவன் என்ன செய்து வந்தான் என்று தெரியாது” என்றார்.

மொகிந்தரின் பள்ளி தோழர்கள் கூறுகையில் “அவன் மோசமானவன்” என்றனர். மேலும் சிலர் கூறுகையில் “அவன் ஜாலியானவன். ஆனால் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சியாக இருக்கிறது” என்றனர்.

மொகிந்தரின் மைத்துனர் இக்பால்சிங், பஞ்சாப் காங்கிரசில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அவரிடம் கேட்டபோது, “தனது தங்கையுடன் சரியாக வாழாததால் 2 வருடங்களுக்கு முன் பிரிந்து சென்று விட்டதாக” தெரிவித்தார்.

Posted in Child Molestation, Confession, crimes, Delhi, Molest, Moninder Singh Pandher, Noida, Police, Rape, UP, Uttar Pradesh | 1 Comment »

Pokkiri Movie Release may be delayed for Pongal – Vijay movies will not be screened

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

விஜய் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை: திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு

சென்னை, டிச.25: “ஆதி‘ திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வரையில் நடிகர் விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரின் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இச்சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழக அரசு அறிவித்துள்ள திரையரங்குகளுக்கான புதிய நுழைவுக் கட்டணத்தை முழு மனதோடு ஏற்றுக்கொள்வது.

திரைப்படங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு அரசு அனுமதித்துள்ள நுழைவுக் கட்டணத்திற்கு உள்பட்டு நுழைவுக் கட்டணத்தை அவ்வப்போது மாற்றி அமைத்துக்கொள்ள அரசை கோருவது.

விஜய் நடித்த “ஆதி’ படத்தால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு கிடைக்கவில்லை. எனவே எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், நடிகர் விஜய்க்கும் தொழில்முறையில் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என முடிவு.

இனி வரும் காலங்களில் விநியோகஸ்தர்களுக்கு எம்.ஜி. மற்றும் எஃப்.எச். கொடுப்பதில்லை. மேலும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு 60 சதவிகிதமும், சிறு பட்ஜெட் படங்களுக்கு 50 முதல் 55 சதவிகிதம் வரையிலும் சதவிகித அடிப்படையில் படங்களைத் திரையிடுவது என்றும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

Posted in Aathi, Films, Nenjirukkum Varai, Pokkiri, SA Chandrasekaran, SA Chandrasekhar, Tamil Movie, Tamil Theatres, Theater Owners, Theatre Owners Association, Vijai | Leave a Comment »

Dhanush claims Simbu is his friend – Jeeva’s new film Pori launch

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

சிம்பு என் மச்சான்  தனுஷ் 

சிம்புவுக்கும், எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருவரும் மாமா, மச்சான் என்றுதான் பேசிக் கொள்வோம் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

சிம்புவும், தனுஷûம் பள்ளிக் கூட தோழர்கள். ஆனால் நடிக்க வந்த பிறகு இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. தனுஷை கிண்டலடித்து தனது படங்களில் சிம்பு வசனம் வைக்கும் அளவுக்கு நிலைமை போனது.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் சிம்பு எதிரே வர, மறுபக்கம் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் (இவரும் சிம்புவின் தோஸ்து தான், ஒருகாலத்தில்!) வர ஹலோ சொல்லிக் கொள்வார்கள் என எல்லோரும் எதிர்பார்க்க கண்டு கொள்ளாமல் விருட்டென்று ஐஸுடன் பறந்து விட்டார் தனுஷ்.

இப்படி அனலும், உலையுமாக இருவரும் இருந்து வரும் நிலையில் திடீரென சிம்புவை தூக்கி வைத்துப் பேசியுள்ளார் தனுஷ். ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள பொறி படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ்,

இங்கே மேடையில் உள்ள அனைவருமே இளைஞர்கள். சந்தோஷமாக இருக்கிறது. என் நண்பன் சிம்புவும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவர் இந்த மேடையில் இல்லாதது குறையாக உள்ளது.

எங்களைப் பற்றி வெளியில்தான் வேறு மாதிரியாக பேசுகிறார்கள். எங்களுக்குள் மோதல் என்ற இமேஜ் இருக்கிறது. ஆனால் உண்மையில், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். மாமன், மச்சான் என்றுதான் பேசிக் கொள்வோம் (மாமா யாரு, மச்சான் யாரு??). சத்தியமா நம்புங்க, சிம்பு என் நண்பன்தான்.

இதை நான் தனியாக சொன்னால் நன்றாக இருக்காது. நான் சின்னப் பையன் மாதிரி இருப்பது தான் என் பலமும் பலவீனமும்.

திருடா திருடி மூலம் என்னைத் தூக்கி விட்டவர் சுப்ரமணியம் சிவா. மன்மத ராசாவை மறக்க முடியுமா? அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பொறியும் சிறப்பாக அமையும். இப்படத்தில் தீப்பொறி உள்ளது. நிச்சயம் ஜீவா சாதிப்பார். படமும் வெற்றி பெறும் என்றார் தனுஷ்.

நண்பன் ‘துயரத்தில்’ இருக்கும்போது கை கொடுப்பவன், ஆறுதல் சொல்பவன்தான் உண்மையான நண்பன் என்பார்கள். ‘லிட்டில்’ சிம்பு இப்போது ‘கஷ்டத்தில்’ இருப்பதை உணர்ந்து அவருக்கு ஆறுதல் கூறுவது போல பேசியுள்ளார் தனுஷ்.

இதுவல்லோ நட்பு!

Posted in Aishwarya Rajnikanth, Aiswarya Rajiniganth, Asiwarya Rajinikanth, Audio, CD Release, Dhanush, Jeeva, Little Superstar, Manmadhan, Manmatha Raasa, Pori, Sathyam Cinemas, Sify.com, Silambarasan, Simbu, Simbu vs Dhanush, Subramania Siva, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Thatstamil.com, Thiruda Thirudi, Thiruvilayadal Aarambham, Tiruvilayadal Arambham, Vallavan | 1 Comment »

Karunanidhi ridicules Jayalalitha and Vaiko – Hurricane & Empty Gas

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

‘புயலும்’ காற்றும் கருணாநிதி கிண்டல்
ஜனவரி 04, 2007

சென்னை: ‘புயலையே’ பொடாவில் பிடித்து வேலூர் சிறையில் அடைக்கும்போது ‘காற்றை’ கைது செய்ய முடியாதா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக முரசொலியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணாநிதி அளித்துள்ள பதில்:

கேள்வி: காற்றைக் கைது செய்யக் கழுதைகளால் முடியுமா என்று எதிர்க்கட்சிப் பேச்சாளர் ஒருவர் பேசியுள்ளாரே.?

கருணாநிதி: ஏன் முடியாது? பொடா சட்டத்தில் புயலையே கைது செய்து வேலூர் சிறையில் போட்டிருந்தார்களே.

கேள்வி: திரையரங்கக் கட்டணக் குறைப்பு குறித்து சில பத்திரிக்கைகள் சென்னையில் அதிகப்படியான வசதிகள் கொண்ட இரண்டே திரையங்குகளுக்கு மாத்திரம், உயர் வகுப்புக்கு மட்டும் கட்டணம் உயர்த்தியிருப்பதை பெரிதுபடுத்தி, அரசு சினிமாக்காரர்களுக்கு பணிந்தது என்றும், அரசு பல்டி என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்களே?

கருணாநிதி: இந்த அரசு ஏழை, எளிய சாதாரண சாமான்ய மக்களின் நலன் கருதி, திரையரங்கு கட்டணங்களைக் குறைத்து ஆணை பிறப்பித்ததிலிருந்து அணுவளவும் மாறவில்லை. அந்த ஆணை அப்படியே செயல்படுத்தப்படுகிறது.

அரசு குறியிட்டு வகுத்துள்ள 15 அல்லது 10 வசதிகள் கொண்ட திரையரங்குகள் இரண்டே இரண்டு மட்டும் சற்று கூடுதலாக அதாவது அடிப்படைக் கட்டணம் ரூ. 10 என்றும், அதிகபட்சக் கட்டணம் ரூ. 85 லிருந்து 120 ரூபாய் என்றும் கட்டணம் வசூலித்துக் கொள்ள சிறப்பு வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

குறைந்த கட்டணப் பயனை இரண்டாயிரம் திரையரங்குகளுக்கு செல்வோர் அனுபவிப்பதற்கு அரசின் 2வது அறிவிப்பால் எந்தத் தடையும் இல்லை. இதை விஷயமறிந்தோர் உணர்ந்தே இருக்கின்றனர்.

அவசரப்படுவோர், ஆத்திரத்தில் அம்மிக் குழவியால் குத்திக் கொண்டு அவதிப்பட்டால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? சொறி சிரங்கு பிடித்தவன், அரிப்பு தாங்காமல் உடம்பை பிராண்டிக் கொள்வான். அப்போது சுகமாக இருக்கும். சிறிது நேரம் கழித்து ரத்தம் கசியும், எரிச்சல் எடுக்கும். அப்போது பாவம், அவன் துடிப்பான். என்ன செய்வது, சிரங்கு பிடித்தவர் நிலையில் சிலர் இருக்கிறார்கள்.

பல்டி என்றும் பணிந்தது என்றும் தலையைப் பிய்த்துக் கொண்டு தலைப்பு போடுகிறார்கள். உண்மை தெரிந்தும் ஊமையாகி விடுகிறார்கள். அவர்களுக்காக அனுதாப்படுவோம்.

கேள்வி: முல்லைப் பெரியாறு அணையின் கைப்பிடிச் சுவரில் சேதம் ஏற்படுத்திய செய்தியை அறிந்ததும், உடனடியாக பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியிருந்த போதிலும் நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளாரே?

கருணாநிதி: தமிழக முதல்வர் உடனடியாக பிரதமருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்றும், பேச்சுவார்த்தை முறையாக இல்லாததால் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக அறிவித்திருக்கிறார் என்றும், அதுதான் பாராட்டுக்குரியது என்றுமா ஜெயலலிதா அறிக்கை விடுவார்?

எதிர்க்கட்சித் தலைவர் குறை சொல்லித்தானே ஆக வேண்டும். வேறு எதுவுமே அவரால் சொல்ல முடியாத நிலையில் இதையாவது சொல்லிக் கொண்டிருக்கட்டுமே என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கே:- ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கில் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறதே, அந்த வழக்கு எந்த ஆண்டிற்கான வருமானம் குறித்தது என்பதை கூற முடியுமா?

ப:- 1993-94 ஆம் ஆண் டுக்கான, அதாவது 13 ஆண்டு களுக்கு முந்தைய ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறியதாக வருமான வரி துறை கிரிமினல் நடவடிக்கையை 1996ம் ஆண்டு, பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. `

அதன் பின்னர் 1991-92 மற்றும் 1993ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே ஒருமுறை உச்ச நீதிமன்றம் வரை சென்று 3 மாதங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்றும், அன்றாடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதே வழக்கில்தான் தற்போது அதே உச்ச நீதிமன்றம் சென்னை நீதி மன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கிற்கு தடை விதித்துள்ளது.

Posted in ADMK, Disproportionate assets, DMK, Entrance Tickets, Fares, Jail, Jayalalitha, JJ, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, MDMK, Movie Theater, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Mullai Periyar, Murasoli, POTA, Prison, Property, Q&A, Sasikala, TADA, Ticket pricing, Vai Gopalasami, Vai Kopalsamy, VaiGo, VaiKo | Leave a Comment »