Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Auto Rikshaw’ Category

Auto Rikshaw fare increase in Chennai – Madras Auto riders to pay more

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

ஆட்டோவில் எழும்பூரில் இருந்து சென்னையில் பிற இடங்களுக்கு செல்ல கட்டணம் எவ்வளவு?

குடியரசு தினமான வெள்ளிக்கிழமை முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதையொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலைய வாயிலில் இருந்து பயணிகள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல அரசு நிர்ணயித்துள்ள கட்டண விவரப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து நகரின் பிறபகுதிகளுக்குச் செல்லும் தூரம் (அடைப்புக் குறிக்குள்) மற்றும் கட்டண விவரம்:

1. சென்ட்ரல் (2 கி.மீ) -ரூ.14.

2. பாரிமுனை (4 கி.மீ.) -ரூ.26.

3. சேப்பாக்கம் (4 கி.மீ) -ரூ.26.

4.திருவல்லிக்கேணி (4 கி.மீ) -ரூ.26.

5. ராயப்பேட்டை (4.2 கி.மீ.) -ரூ.27.20.

6.மந்தைவெளி (7.2 கி.மீ) -ரூ.45.20.

7.நந்தனம் (8 கி.மீ) -ரூ.50.

8.சைதாப்பேட்டை (9 கி.மீ) -ரூ.56.

9.அடையாறு (13 கி.மீ) -ரூ.60.

10. பெசன்ட் நகர் தேவாலயம் (16 கி.மீ) -ரூ.98.

11.திருவான்மியூர் (17 கி.மீ) -ரூ.104.

12.விமான நிலையம் (17 கி.மீ) -ரூ.104.

13.நுங்கம்பாக்கம் (4.5 கி.மீ) -ரூ.29.

14.தி.நகர் (8 கி.மீ) -ரூ.50.

15.வள்ளுவர் கோட்டம் (5 கி.மீ) -ரூ.50.

16.வடபழனி (12 கி.மீ) -ரூ.74.

17.அசோக் நகர் (10 கி.மீ) -ரூ.62.

18.கே.கே.நகர் (12 கி.மீ) -ரூ.74.

19.புரசைவாக்கம் (3 கி.மீ) -ரூ.20.

20.கீழ்ப்பாக்கம் (5 கி.மீ) -ரூ.32.

21.அயனாவரம் -(5 கி.மீ) -ரூ.32.

22. செனாய் நகர் (6 கி.மீ) -ரூ.38.

23. அண்ணாநகர் ஆர்ச் (7 கி.மீ) -ரூ.44.

24. அண்ணாநகர் கிழக்கு (8 கி.மீ) -ரூ.50.

25.கோயம்பேடு (10 கி.மீ) -ரூ.62.

26. முகப்பேர் கிழக்கு (12.5 கி.மீ) -ரூ.77.

27. முகப்பேர் மேற்கு (13.5 கி.மீ) -ரூ.83.

சாதாரண மீட்டரில் இருந்து எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்த ரூ.3,500 செலவாகும்: ஆட்டோ டிரைவர்கள்

சென்னை, ஜன. 25: ஆட்டோக்களில் சாதாரண மீட்டரில் இருந்து எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்த ரூ.3,500 செலவாகும் என ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் ஜன.26 முதல் ஆட்டோக்களில் மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டண முறை அமலாகிறது. இதற்காக சாதாரண மீட்டர் பொருத்திய ஆட்டோக்களில் 6 மாத காலத்துக்குள் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தும்படி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

“”சென்னை நகரில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இதில் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு தயாரித்து வெளியே வந்த ஆட்டோக்களில் மட்டுமே எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட ஆட்டோக்களில் சாதாரண மீட்டரே பொருத்தப்பட்டுள்ளது. சாதாரண மீட்டரை, எலெக்ட்ரானிக் மீட்டாராக மாற்ற சுமார் ரூ.3,500 வரை செலவாகும்” என்றார் ஆட்டோ டிரைவர் சடகோபன்.

சாதாரண மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்களின் எண்ணிக்கை 16,948 ஆகும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஷேர் ஆட்டோக்களுடன் பிரச்சினை: சென்னையில் உள்ள திருவான்மியூர், முகப்பேர், அண்ணா நகர், மீனம்பாக்கம் பகுதிகளில் உள்ள ஷேர் ஆட்டோக்களால் தங்களுக்கு வருவாய் பாதிக்கப்படும் என்று ஆட்டோ டிரைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இத்துடன், வேன் மற்றும் உரிமம் இல்லாமல் இயங்கும் ஆட்டோக்களினால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

“”ஷேர் ஆட்டோ இயங்கும் பகுதிகளுக்குச் செல்லும்போது அங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக அரசு தான் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இத்துடன், ஆட்டோ தொழிலை நம்பி லட்சக் கணக்கானோர் உள்ளனர். அவர்களின் நலனுக்கான ஆட்டோ நல வாரியம் அமைக்க வேண்டும்” என்றார் உமாபதி என்ற ஆட்டோ டிரைவர்.

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் டிரைவர்கள் மீது புகார் தெரிவிக்க ஏற்பாடு

சென்னை, ஜன. 25: ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் டிரைவர்கள் மீது புகார் தெரிவிக்க “கட்டுப்பாட்டு அறை’ அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ஆட்டோக்களில் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதில் 2 கிலோ மீட்டருக்கு ரூ.14 என்றும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.6 கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

5 நிமிஷத்துக்கு காத்திருக்கும் கட்டணமாக 40 பைசாவும், இரவு நேர கட்டணமாக கூடுதலாக 25 சதவீதம் அதிகம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் 16,498 ஆட்டோக்களில் சாதாரண மீட்டரும், 32,595 ஆட்டோக்களில் எலக்ட்ரானிக் மீட்டரும் உள்ளன. சாதாரண மீட்டர் உள்ள ஆட்டோக்களில் 6 மாதத்துக்குள் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மாற்றியமைக்கப்பட்ட ஆட்டோ கட்டணம் தொடர்பான விவரங்கள் குறித்து பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட 34 முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் எந்த இடத்தில் இருந்து எங்கு செல்வதற்கு எவ்வளவு கிலோ மீட்டர் என்ற விவரமும், அதற்கு வசூலிக்கப்படும் கட்டணத் தொகை குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இந்த கட்டுப்பாட்டு அறை இயங்கும். ஜன.26-ம் தேதி முதல் இந்த கட்டுப்பாட்டு அறைகள் எந்நேரமும் இயங்கும்.

10 கட்டுப்பாட்டு அறைகள்: அனைத்துப் பகுதியிலும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் விபரம்:

1. கிழக்கு -26670993.

2.மேற்கு- 24898240.

3.மத்திய சென்னை -26445959.

4.வடக்கு -26732525.

5.வட மேற்கு -26215959.

6.தெற்கு -24450404.

7.தென் மேற்கு -24867733.

8.மீனம்பாக்கம் -22325555.

9.போக்குவரத்து துறை இணை ஆணையர் அலுவலகம் -26445511, 26444445.

10.சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை -103, 9841808123.

புகார் கொடுத்தவுடன் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Auto, Auto Rikshaa, Auto Rikshaw, Chennai, fare, Madras, Share Auto, Transport, Transportation | Leave a Comment »

Bhogi, Chain Snatcher Thieves, Auto Rikshaw ripoffs – Police Commissioner Lathikha Charan

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2007

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் டிரைவர்கள் மீது நடவடிக்கை: லத்திகா சரண் சென்னை, ஜன. 12: பொதுமக்களிடம் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேலாக கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.

“போகி’ பண்டிகையின்போது டயர், ரப்பர் உள்ளிட்ட பழைய பொருள்களை தீயிட்டு எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், திருட்டு போன பொருள்களை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது போலீஸ் கமிஷனர் லத்திகா சரண், நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னையில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், ராயபுரத்தில் உள்ள சாந்தி காலனியைச் சேர்ந்த சீனிவாசன் (எ) பர்மா சீனு (38) மற்றும் பாபு (21) உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

60 பவுன் பறிமுதல்: இவர்களிடம் இருந்து 60 பவுன் தங்க நகைகள், 9 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.2,700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.6.89 லட்சமாகும்.

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம்: ஆட்டோக்களில் கூடுதல் கட்டண முறை வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக போக்குவரத்து போலீஸின் “103′ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

டயர் எரித்தால் நடவடிக்கை: போகி பண்டிகையின் போது டயர், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் உள்ளிட்ட பழைய பொருள்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. எனவே, பழைய பொருள்கள் எரிப்பவர்கள் மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸôர் ரோந்து வாகனங்களில் வந்து கண்காணிப்பர்.

காணும் பொங்கலை முன்னிட்டு போலீஸôர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், குடிசைப் பகுதிகளில் வாழும் சிறுவர்களிடையே விளையாட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

விமான நிலைய பாதுகாப்பு: விமான நிலையத்தில் தீவிரவாதச் செயல்களை தடுப்பதில் போலீஸôர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். வாகனங்கள் சோதனைக்கு பின்னரே விமான நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாகனங்களின் எண்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்றார் லத்திகா சரண்.

Posted in Auto, Auto Drivers, Auto Rikshaw, Bhogi, Chennai, Lathiga Saran, Lathika Charan, Latika Charan, Madras, Police Commissioner, ripoffs, Tyres | Leave a Comment »