Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

EU largest Hindu Temple

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

ஐரோப்பாவின் மிகப் பெரிய இந்துக் கோயிலின் குடமுழுக்கு விழா

வெங்கடேசப் பெருமாள் ஆலயம்
வெங்கடேசப் பெருமாள் ஆலயம்

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய இந்துக் கோவிலாக கருதப்படுகின்ற வெங்கடேசப் பெருமாள் கோவிலின் குடமுழுக்கு விழா இன்று ஐக்கிய இராஜ்ஜியத்தில உள்ள டிவிடேல் நகரில் நடைபெற்றது.

மேற்கு மிட்லாண்ட்ஸில் இருக்கும் ஐரோப்பாவின் மிகப்பெரிய இந்து கோயிலான இக்கோயிலுக்கு இன்று ஆயிரக்கணக்கான இந்துக்கள் வருகை தந்தனர்.

தென்னிந்தியாவின் திருப்பதி திருமலை கோயிலின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் ஐக்கிய ராஜ்ஜியத்தில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட மிகச் சில இந்து கோயில்களில் ஒன்றாகும். இது இந்திய கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் பிரித்தானியாவில் இந்துக்களுக்காக சமீபகாலமாக உருவாகி வரும் அடையாளங்களில் ஒன்று என்று இந்து கோயில்கள் கூட்டமைப்பின் தலைவரான பிமல் கிருஷ்ண தாஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

சுமார் 55 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலினை நிர்மாணிப்பதற்கான செலவில் ஒரு பங்கு பிரித்தானிய அரசாங்கத்தின் மில்லேனியம் கமிஷன் கொடுத்தது என்றாலும், பெரும்பாலான செலவினை இந்து சமூக மக்களே ஏற்று கொண்டனர்.

பின்னூட்டமொன்றை இடுக