Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஓகஸ்ட் 2nd, 2006

Venkat Saminathan reviews PK Sivakumar’s Atlanticukku Appaal

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2006

பி.கே.சிவகுமாரின் அட்லாண்டிக்குக்கு அப்பால்

வெங்கட் சாமிநாதன்

சில நல்ல விஷயங்களும் தமிழில் நடந்து விடுகின்றன. தமிழ்நாட்டுத் தமிழரால் அல்ல. தமிழ்ச் சூழல் அப்படியெல்லாம் ஒன்றும் அவர்களை உருப்பட விட்டுவிடாது. தமிழ்நாட்டுச் சூழýன் சங்கிýகளை அறுத்துக்கொண்டு வெளிநாட்டில் வாழும் தமிழர்களால். அல்லது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களால். மலேசியாவிýருந்தோ, கனடாவிýருந்தோ அல்லது அமெரிக்காவிýருந்தோ. இணையம் மூலம் தமிழ் கூறும் நல்லுலகை ஒரு குடைக்கீழ் ஒன்றுபடுத்தியிருப்பது சமீபத்தில் நடந்துள்ள நல்ல விஷயங்களில் ஒன்று. இணையம் என்ற ஒன்று இல்லையெனில், அதிலேயே தன் குரலைப் பதிவு செய்து வரும் பி.கே சிவகுமார் என்ன செய்திருப்பார்? அவர் குரலைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் மூலம் கேட்டிருக்க முடியுமா? இங்கிருக்கும் குழுக்கள் ஒன்றில் அவர் தன்னை இணைத்துக்கொண்டிருப்பாரா, எந்தக் குழுவும் அவரை ஏற்றிருக்குமா? சந்தேகம்தான். அநேகமாக அவர் தம் அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாகப் பந்தாடப்பட்டிருப்பார். தன் வீட்டு அலமாரிப் புத்தகங்களுடனேயே அவர் உலகம் வேýயிடப்பட்டிருக்கும்.

இணையத்தில் பதிவான அவரது கட்டுரைகள் அட்லாண்டிக்குக்கு அப்பால் என்று தொகுக்கப்பட்டுள்ளது. புத்தகமாக வந்த பிறகுதான் பி.கே. சிவகுமாருடன் எனக்குப் பரிச்சயமாகிறது. இணையத்தில் படித்ததில்லை. என்னுடைய சிரமங்களும் படிந்துவிட்ட பழக்கங்களும் எனக்கு. பழங்காலத்து மன அமைப்பு. இப்போது இத்தொகுப்பு பரிச்சயப்படுத்தும் சிவகுமார் என்னையும் அவரையும் பிரிக்கும் ஒரு தலைமுறைக்கும் மேலான இடைவெளியையும் மீறி ஒரு இதமான சிநேகபூர்வமான மனிதராக அருகில் உணர வைக்கிறது. தமிழ்ச் சூழல் அவரைக் கெடுத்து விடவில்லை. அமெரிக்கா அவரை, ஆளுமையை தமிழரல்லாது வேறெதாவதாகவும் ஆக்கிவிடவில்லை.

தொகுப்பில் உள்ள சிறிதும் பெரிதுமான 45 கட்டுரைகள், இலக்கியம், அரசியல், அமெரிக்க வாழ்க்கை, கவிதை, விவாதங்கள், தமக்குப் பிடித்த கவிஞர்கள் என்று பல விஷயங்கள் பற்றிப் பேசுகின்றன. இப்படி எது பற்றிப் பேசினாலும், சிவகுமாரை மிக அருகில் அடக்கம் என்ற பாவனையில்லா அடக்கத்தோடும் தோழமையோடும் சம்பாஷிக்கும் ஒருவராக உணரலாம்.

அவரது தாத்தா நீதிக் கட்சிக்காரர். திராவிட இயக்க அபிமானி. ஆனந்த போதினி பஞ்சாங்கம் வருடா வருடம் மறக்காமல் வாங்குபவர். அவரிடம் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை எழுதிய கம்பராமாயணம் முழுதும் அவர் வாசித்த குறிப்புகளுடன் இருந்தது. தந்தையார் தீவிர காங்கிரஸ்காரர். அமெரிக்காவிýருக்கும் பேரன் கேட்க, இரண்டே பாகங்கள்தான் அப்பாவால் அனுப்பப்படுகிறது. “எல்லாவற்றையும் அனுப்பிவிட்டால் தாத்தா ஞாபகத்தில் இங்கு என்ன இருக்கும்?” என்று சொல்கிறார் அப்பா. பேரன் அமெரிக்காவில் இருந்துகொண்டு சிவ வாக்கியர் பாடல்களிலும் கம்பனிலும் ஆழ்கிறார். சிவ வாக்கியரின் நாஸ்திகத்திற்கும் பகுத்தறிவுப் பகலவர்களின் நாஸ்திகத்திற்கும் இடையே உள்ள குணவேற்றுமை சிவகுமாருக்குத் தெரிகிறது. திராவிடக் கட்சிகளின் பொய்மைகளை அமெரிக்காவிýருக்கும் பேரன் உணரமுடிகிறது. தனித் தமிழின் போýத்தனமும், சங்கராச்சாரியாரின் கைது பற்றிக் கருணாநிதியின் சாமர்த்தியமான வார்த்தை ஜாலங்களின் சந்தர்ப்பவாத அரசியலும் தெரிகிறது. தமிழக இடதுசாரிகள் வெளிப்படுத்தும் அரசியýன் இரட்டை நாடகங்கள், ஜெயலýதாவை எதிர்க்கும் தேர்தல் பிரசாரத்தில் வீரப்பனின் கருணாநிதி ஆதரவுப் பேச்சைப் பயன்படுத்திய சன் டிவி, இப்படி இங்கு நடக்கும் எல்லா மாய்மாலங்களையும் மாய்மாலங்களாகவே அவரால் பார்க்க முடிகிறது.

உமாமகேஸ்வரியின் கவிதை அவரை ஈர்த்துள்ளது. தன் ரசனையை அவர் மிக விரிவாகவே எழுதியிருக்கிறார். படிமமும் உருவகமும் அனுபவத்திýருந்து பிறப்பது எங்கு, யோசித்து அடுக்கி ஒட்டவைத்திருப்பது எங்கு எனச் சிவகுமாருக்குத் தெரிகிறது. தமிழ்நாட்டுக் குழுச் சார்புகள், அரசியல் சார்புகள் அவரது வாசிப்பைப் பாதிக்கவில்லை. அவரது ரசனை அவரதே. இது பெரிய விஷயம்.

ஜெயகாந்தனிடம் சிவகுமார் கொண்டுள்ள உணர்வை பக்தி என்று தான் சொல்ல வேண்டும். அரவிந்தன் எழுதிய விமர்சனம் சிவகுமாரை நிறைய கோபப்படுத்தியிருக்கிறது. அரவிந்தன் ஜெயகாந்தனைத் தேர்ந்தெடுத்ததும், எழுதியதும், தன்னிச்சையாக அல்லவே, தூண்டப்பட்டதல்லவா, என்ற சந்தேகம் சிவகுமாருக்கு. ஜெயகாந்தனிடமும் இரைச்சலும் உண்டு, நிசப்தங்களும் உண்டு என்பதும், பல கால கட்டங்களில், பல முறை ஜெயகாந்தன் அசாத்திய துணிவையும், தன் கருத்துச் சுதந்திரத்தையும் உரத்த குரýல் வெளிக்காட்டியிருக்கிறார், என்பதும் உண்மை. அதே சமயம் கருத்துகளையே அனுபவங்களாகவும், பாத்திரங்களாகவும், அவர் எழுத்தில் காண்பதும் உண்மை. சிவகுமாருக்கு, ஜெயகாந்தன் ஒரு நிர்மல, நிர்குண பிரும்மம். மிகுந்த சிநேக பாவத்தோடு நம் அருகே குரல் எழுப்பாது உரையாடிக்கொண்டிருக்கும் சிவகுமார், மூக்கு சிவந்து உதடு துடிப்பது, ஜெயகாந்தன், நேசகுமார் இருவர் பற்றித்தான்.

நேசகுமார் விஷயத்தில், நேசகுமாரின் கிண்டலுக்கும் கோபத்துக்கும் தூண்டுதலாக இருந்த காரணிகளைச் சிவகுமார் மறந்து விடுகிறார். அந்தக் காரணிகளில் சில நேற்று முளைத்தவை எனவும் உண்டு. நூற்றாண்டுகள் பல நீளும் வரலாறும் உண்டு. “உண்மை 7ஆம் நூற்றாண்டு இறைவாக்கிலேயே சொல்லப்பட்டு விட்டது. அதன் பிறகு முற்றுப் புள்ளிதான்” என்று ஒரு குரல், மொராக்கோவிýருந்து ஃபிýப்பைன்ஸின் தெற்குப் பகுதி வரை கேட்கப்பட்டால், என்ன செய்வது? இதை ஒப்புக்கொள்ளாதவர் எல்லாம் காஃபிர், அதற்கு அடுத்த நடவடிக்கை ஜிஹாத் தான் என்றால் என்ன செய்வது? இந்த காஃபிர்களை ஒழித்துக் கட்டினால், ஜன்னத்தில் மதுக்குடத்துடன் தேவகன்னிகைகள் சூழ்ந்துவிடுவார்கள் என்று நம்பினால் என்ன செய்வது? ஸøன்னிகளுக்கு ஷியாக்களும் காஃபிர், அஹ்மதியாக்களும் காஃபிர், முஜாஹித்துகளும் காஃபிர், என்றால் என்ன செய்வது? இவர்கள் எல்லோருக்கும் ஸøஃபிகள் காஃபிர் என்றால் என்ன செய்வது? அப்படி இருக்க செக்யூலரிசம் போதிக்கப்படும் ஒரு ஹிந்துவாகத் தற்செயலாகப் பிறந்துவிட்டவன் என்ன செய்வான்? ஒரு முஸ்லீம் நண்பரைக் கண்டால், ‘ஸôகேப்’, ‘”ஜனாபேவாý, ஸலாம் ஆலே கும்” என்று வாழ்த்த நான் தயார்தான். விடிகாலையில்; ஒரு நாள் எம்.எஸ் சுப்புலட்சுமியின் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டால், மறு நாள் காலை அபீதா பர்வீனின் ஸøஃபி பாட்டுகள் கேட்க நான் தயார். கேட்கிறேன். விரும்பி, ரசித்துக் கேட்கிறேன். ஆனால் “அது பத்தாது, உன் பெயரை அப்துல் ஸமத் என்று மாற்றிக் கொள். கல்மா சொல்லு “லா இல்லாஹ் இல்ýல்லாஹ், முகம்மது ரஸ÷ல் அல்லாஹ்”, சுன்னத் பண்ணிக்கோ” என்று மிரட்டினால் என்ன செய்வது? பாரதி “அல்லா அல்லா” என்று அரற்றினான். பாடினான். அதெல்லாம் சரி, ஆனால், “எங்கள் குழந்தைகள் பள்ளியில் வந்தே மாதரம் பாடாது. அது எங்கள் மதத்திற்கு விரோதம்” என்று சொல்லும் மதத் தலைவரை, அரசியல் தலைவரை என்னென்பது? செக்யூலரிஸம் ஒரு புறம் அடைக்கப்பட்ட பாதையாகாதே (ஸ்ரீன்ப்þக்ங்þள்ஹஸ்ரீ).

ஆனால் சிவகுமார் கோபம் கொள்ளும் இந்த இடங்களில் எல்லாம், வகுப்பு வாத்தியாரிடம் “அவன் மட்டும் என்னைச் சீண்டலாமா சார்?” என்று மூக்கு விடைக்க புகார் செய்யும் இரண்டாம் வகுப்புப் பையனாகத்தான் தோன்றுகிறார். மறுபடியும் ஒரு ஆனால்: “தமிழில் விமர்சனத் துறை வளரவே இல்லை என்று சொல்லலாம்” என்று ஒரு கட்டுரையை ஆரம்பிக்கிறார் சிவகுமார். அப்படி ஒரு பார்வை மிக உயர்ந்த தளத்தில் இருந்து பார்த்தல் சாத்தியமே. அந்த உயர்ந்த தளம் நமக்கு எல்லாம் ஒரு லட்சியமாக இருக்கவேண்டும் என்றும் நாம் விரும்புவேன். ஆனால், அந்த சிகரத்தின் உச்சியிýருந்து பார்த்தால், கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி.ரகுநாதன் போன்றவர்கள் எல்லாம் தூரதிருஷ்டிக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும், ஊறும் எறும்புகளாகவாவது தென்படுவார்களோ?

அப்படியிருக்க, சிவகுமார் சொல்வது போல “அவர்கள் விமர்சனத்தைக் கலையாக வளர்க்க முயன்றவர்களாகத்” தோன்றுவார்களோ? ரகுநாதன் கட்சி சேவகம் செய்து கெட்டவர் என்றால், கைலாசபதி கலை, இலக்கிய உணர்வு கிஞ்சித்தும் இல்லாத, தானும் புரிந்துகொள்ளாத கொள்கை வாய்ப்பாடுகள் மட்டுமே படித்த பணக்கார வீட்டில் பிறந்த வெற்றுப் பண்டிதர். சிவத்தம்பியோ, கைலாசபதி இருந்த வரை அவர் அடி ஒற்றி ஒத்து ஊதிய, இப்போது அதை நியாயப்படுத்தும் பண்டிதர். கலை, இலக்கியத்துக்கும் இவர்களுக்கும் என்ன உறவு? கம்யூனிஸ்டுகளின் இரட்டை நிலை பற்றியும், திராவிட இயக்கங்களின் அடுக்குத் தொடர் வார்த்தை ஜாலங்கள் பற்றியும் நியூஜெர்ஸியிýருந்து உணரக்கூடிய சிவகுமாருக்கு இவர்களின் போýத்தனம் உணரமுடியவில்லையா?

இம்மாதிரிதான் வல்ýக்கண்ணனின் ‘உற்சாகப்படுத்தும்’ விமரிசனம் பற்றியும். சர்வ ஜீவ தயை பாவிப்பவர் வல்ýக்கண்ணன். ஆண்டவன் படைப்பில், ஈ, கொசு, கரப்பான், பல்ý, கள்ளி, கத்தாழை எல்லாமே ஜீவன்கள்தான்; அவை ரக்ஷிக்கப்படவேண்டும் என்று நினைப்பவர் அவர். அவரது பாராட்டுக் கார்டு இல்லாமலேயே அவை உயிர் வாழும் தான். ஆனால் வைக்கோலுக்கும் சேமியாவுக்கும் வித்தியாசம் தெரியாத ரட்சகரை என்ன என்று சொல்வது? என் நண்பர் சொன்னார்: “என் கவிதைத் தொகுப்பை வல்ýக்கண்ணனுக்கும் கொடுக்கலை, தி.க.சி.க்கும் கொடுக்கலை. எதுக்குங்க? ரெண்டு கார்டு உடனே வந்துடும் பாராட்டி”. சிவகுமார், ஆனந்த போதினி பஞ்சாங்கம் பற்றிக் குறிப்பிட்டார். ஆனந்த போதினி, பாம்புப் படம் போட்ட பஞ்சாங்கங்கள் எல்லாம் ஸ்ரீர்ம்ல்ப்ண்ம்ங்ய்ற்ஹழ்ஹ் ஸ்ரீர்ல்ண்ங்ள் அனுப்புவதில்லை. இல்லையெனில் அவற்றிற்கும் வல்ýக்கண்ணன் தன் உற்காகப்படுத்தும் கார்டுகளை வருடா வருடம் அனுப்பியிருப்பார்.

சிவகுமார் தன் அமெரிக்க வாழ்க்கைக் காட்சிகளும் சில தந்துள்ளார். தான் எப்படி கால்பந்து கோச் ஆனார், தன் அலுவலகக் காண்டீன் செஃப், ஜமாய்க்காவில் வந்தவர் எல்லோருடனும் காட்டும் அக்கறையும் அன்னியோன்னியமும், தன் குழந்தையின் பிடிவாதத்தில் அவர் புரிந்துகொண்டது எல்லாவற்றையும் படிக்கும் போது, தமிழ்ச் சமூகத்தையும் அரசியலையும் இலக்கியத்தையும் பற்றிப் பேசும் அதே சிவகுமார் என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லாம் சொன்னபிறகு, நான் முதýல் சொன்னேனே, ஒரு உண்மையும், சிநேக பாவமும் கொண்ட நண்பருடன் உரையாடுவது போன்ற மன நிறைவு, சிவகுமாரின் புத்தகத்தில் கிடைக்கிறது என்று. அதில் மாற்றமில்லை. இடையிடையே நாம் சொல்ல மாட்டோமா, “இல்லீங்க நீங்க தெரியாம பேசறீங்க. வெளியூரிலேர்ந்துகிட்டு உள்ளூர் நிலவரம் தெரியாம இருக்கீங்க” என்று? அப்படித்தான் அவர் எழுத்து சில இடங்களில் இருக்கிறது.

தன்னைத் தலைக்குப் பின்னால் ஒரு சுழலும் ஒளிவட்டம் கொண்டவரான ஒரு நினைப்பு, சிவகுமாருக்கு இல்லை. தன்னையே கேý செய்துகொள்ளும் இயல்பினர். தயக்கமில்லாமல், திட்டமிடாமல், பலாபலன் கருதாது மனத்தில் நினைப்பதைச் சொல்ýவிடுகிறார். இந்தக் குணம் எதுவும் அவரைத் தமிழ்ப் புண்ணிய பூமியில் வாழும் தமிழ் எழுத்தாளராக அடையாளம் காட்ட மறுக்கிறது.

நான் நினைத்துப் பார்க்கிறேன். இணையம் என்று ஒன்று இல்லாவிட்டால், சிவகுமாரை நம் ஊடகங்கள் அறிய விட்டிருக்குமா?

þþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþ

அட்லாண்டிக்குக்கு அப்பால்: (பி.கே.சிவகுமார்) கட்டுரைத் தொகுப்பு: எனி இண்டியன் பதிப்பகம், 102, 57, ட.ங.எ. காம்ப்ளெக்ஸ், தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னைþ17 விலை ரூ 120.

Posted in Atlanticukku Appaal, Book, Books, Literature, PK Sivakumar, review, Tamil, Venkat Saminathan | Leave a Comment »

72 Hours and 33 Movies

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2006

72 மணி நேரத்தில் தொடர்ந்து 33 திரைப்படங்கள் பார்த்து இந்திய மாணவி சாதனை

கோலாலம்பூர், ஆக. 2: தொடர்ந்து 72 மணிநேரம் உறக்கமின்றி 33 திரைப்படங்களைப் பார்த்து மலேசியாவில் வாழும் இந்திய மாணவி திங்கள்கிழமை புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ஸ்ரீ ஹேமாவதி என்ற 22 வயது கல்லூரி மாணவிதான் இந்த “அரிய’ சாதனையை நிகழ்த்தியவர்.

“மூவி மராத்தான்’ என்ற, தொடர் திரைப்படம் காணும் போட்டி மலேசியாவில் நடந்தது. இப்போட்டியில் பல்வேறு மொழிகளில் 33 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. எல்லாத் திரைப்படங்களையும் சளைக்காமல் தொடர்ந்து பார்க்கும் நபருக்கு பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் போட்டியின் இறுதியில் 8 ரசிகர்கள் திரையிடப்பட்ட 33 திரைப்படங்களையும் பொறுமையாகப் பார்த்துத் தேர்வானார்கள்.

எனவே, அவர்கள் பார்த்த திரைப்படங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், கேள்விகளுக்கு சரியான பதிலளித்து ஹேமாவதி முதல் பரிசை தட்டிச் சென்றார். இவருக்குப் பரிசுத் தொகையாக ரூ.1.2 லட்சம் வழங்கப்பட்டது.

போட்டியின் விதிகள் கடுமையாக இருந்தன. போட்டியாளர்கள் 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து கண்களை மூடிக்கொண்டிருக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் உடற்பயிற்சி கூட செய்யாமல், தொடர்ந்து திரைப்படங்களை ரசித்தனர்.

Posted in Cinema, Dinamani, Guiness, Malaysia, Movies, Tamil, Useless, Vetti | 1 Comment »

Sirpi Balasubramaniam – Raja Sir Muthiah Chettiyar Virudhu

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2006

கவிஞர் சிற்பிக்கு முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு

சென்னை, ஆக. 2 : கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு 2006-ம் ஆண்டுக்கான ராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்தநாள் நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது.

ரூ. ஒரு லட்சம் ரொக்கமும், பாராட்டு சான்றிதழும் இதில் அடங்கும்.

சென்னை ராணி சீதை மன்றத்தில் திங்கள்கிழமை (ஆக. 5) நடைபெறும் ராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் விழாவில் நிதி அமைச்சர் க. அன்பழகன் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு நினைவுப் பரிசை வழங்குகிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவர் தெ. ஞானசுந்தரம் ராஜா சர் முத்தையா செட்டியார் நினைவு சொற்பொழிவு ஆற்றுகிறார்.

மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை தலைவர் எம்.ஏஎம்.ஆர். முத்தையா, அறக்கட்டளை செயலாளர் ஆறு. ராமசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.

ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் இப் பரிசு வழங்கப்படுகிறது.

2 முறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர்: கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆத்துப் பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்தவர் சிற்பி பாலசுப்பிரமணியம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவரான இவர் பல்வேறு கல்லூரிகளில் தமிழ்த்துறை விரிவுரையாளராகவும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

சிறந்த மொழிபெயர்ப்புக்காக 2001-ம் ஆண்டிலும், சிறந்த படைப்பிலக்கியத்துக்காக 2003-ம் ஆண்டிலும் பெற்ற சாகித்ய அகாதமி விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர் இவர்.

Posted in Balasubramaniam, Dinamani, Ilakkiyam, Literature, Muthiah Chettiyar, Sahithya, Sahithya Academy, sahitya_academy, Sirpi, Tamil | 2 Comments »

Hatred wildfires

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2006

வன்மம் என்னும் அணையா நெருப்பு

பாவண்ணன்

பீறிட்டுப் பாயும் மனித ரத்தத்தை அல்லது சொட்டுச்சொட்டாக ஒழுகுகிற ரத்தத்தைப் பார்க்கும் முதல் கணத்தில் பொதுவாக நம் மனம் எப்படி உணர்கிறது? உடனடியாக ஒருவித அதிர்ச்சி நம்மைத் தாக்கித் துணுக்குறச் செய்கிறது. மறுகணம் என்ன செய்வது என்று புரியாமல் உறைந்து விடுகிறோம். அச்சத்திலும் குழப்பத்திலும் நம் உடல் நடுங்கத் தொடங்குகிறது. நம் எண்ணங்கள் தடுமாறுகின்றன. ரத்த அழுத்தம் அதிகமாகி மயக்கமடைந்து விடுகிறவர்களும் உண்டு. நாம் காணும் ரத்தம் நம் உடலிலிருந்தே பீறிடுவதைப்போல பீதியும் தளர்வும் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. வெட்டுப்பட்டவனின் நிலையில் நம்மைப் பொருத்தி, அக் கொடுமை நமக்கு நேரவில்லை என்று சிறிது நேரம் அமைதியடையவும் செய்கிறது நம் மனம். இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, இத்தகு காட்சிகளில் ஒரு சிலர் மனம் திருப்தியிலும் நிம்மதியிலும் திளைக்கலாம். நெடுங்காலமாகத் தமக்குள் பற்றியெரிந்தபடியிருந்த வன்மம் தணிந்ததில் அமைதியுறலாம். அதுவரையில் அழுத்திக் கொண்டிருந்த பாரம் விலகிச் சரிந்த விடுதலையுணர்விலும் மிதக்கலாம்.

அன்பும் கருணையும் சமநோக்குப் பார்வையும் நிறைந்திருக்க வேண்டிய மனத்தில் வன்மம் எப்படி வந்து சேர்கிறது என்பது யோசிக்க வேண்டிய விஷயம். தனக்கு முன்னால் ஏராளமான பாதைகள் தென்பட்டாலும் வன்மத்தின் பாதையை ஒரு மனிதன் ஏன் தேர்ந்தெடுக்கிறான்? இரக்க உணர்வுகளே அற்ற இரும்பு நெஞ்சத்தோடு வாழ்வது எப்படிப் பழகி விடுகிறது? வன்மத்தின் பாதையில் நிம்மதியையும் நிறைவையும் ஒருவனால் எப்படி உணர முடிகிறது?

நட்பாலும் நல்லுறவாலும் நிம்மதி நிறைந்த ஒன்றாக வாழ்க்கையை மாற்றிக்கொண்டு வாழும் சக்தி நமக்கு இருக்குமேயானால், வன்மம் நிறைந்த பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டிய அவசியமே தோன்றியிருக்காது. நட்பு, நல்லுறவு, அன்பு, நெருக்கம் எதன் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத அளவுக்கு வெளியுலக நடவடிக்கைகளைப் பிழையான கோணங்களில் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்ட காரணத்தால்தான் நிம்மதியையும் வன்மத்தையும் ஏதோ ஒரு கணத்தில் இணைத்துப் பார்க்க நாம் முயற்சி செய்கிறோம். நம் வாழ்வில் அன்பில்லாமல் இருப்பதாலும் நம் நடவடிக்கைகளில் சிறிதுகூட கனிவில்லாமல் இருப்பதாலும் அன்புக்கும் கனிவுக்கும் இனி இந்த உலகில் இடமே இருக்க முடியாது என்ற பிழையான எண்ணத்துக்குக் கட்டுப்பட்டு விடுகிறோம். வேறு வழியில்லாத நிலையில்தான் வன்மத்தின் பாதையில் அடியெடுத்து வைப்பதாக ஒரு நொண்டிச் சமாதானத்தை நமக்கு நாமே கற்பித்துக் கொள்கிறோம்.

தான் நேசித்த காதலனின் கழுத்தை அறுத்துத் தட்டில் வைத்து தனக்குப் பிறந்தநாள் பரிசாகத் தர வேண்டுமென தன்னை நேசித்த ஆடவனிடம் கேட்ட இளம்பெண்ணொருத்தியின் வன்மக்கதையைப் புராணத்தில் படித்திருக்கிறோம். தன்னை நேசிக்க மறுத்து விட்டாள் அல்லது புறக்கணித்து விட்டாள் என்பதற்காக அமிலம் ஊற்றி அலங்கோலப்படுத்துகிற இளைஞர்கள் பற்றியும் கழுத்தை நெரித்துக் கொன்று வீசி விட்டுப் போகிற இளைஞர்கள் பற்றியும் ஏராளமான செய்திகள் இன்று வரையிலும் அவ்வப்போது வந்தபடியே உள்ளன. கொல்வது என்பதை ஒரு தீர்வாகக் கண்டுணர்ந்ததும் கொல்லப்பட்ட உடலிலிருந்து சொட்டும் ரத்தமும் சதைத் துண்டுகளும் களிப்போடு பார்க்கத்தக்க காட்சிகளாக அவர்களுக்குத் தோற்றமளிக்கத் தொடங்குகின்றன.

காதலுக்காகக் கொலை. குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காகக் கொலை. நேர்மையாளர்களாகக் காட்டிக் கொள்வதற்காகக் கொலை. அந்தஸ்தையும் கௌரவத்தையும் அடைவதற்காகக் கொலை. சாதிக்காகக் கொலை. மதத்துக்காகக் கொலை. இனத்துக்காகக் கொலை! கொலையுணர்வு மெல்ல மெல்லத் திட்டமிட்டு செழுமைப்படுத்திக் கொள்ளப்படும் ஒரு கலையாக சமூகத்தில் உருமாறி விடுகிறது. ஒரு பெருங்கூட்டத்தைத் திட்டமிட்டுக் கொல்வதை ஒரு கலைநிகழ்ச்சியைப்போல நடத்தி முடிக்கிறார்கள் கொலையாளிகள். உடல்கள் சிதறுண்டு போய் விழுவதும் ரத்தம் பீறிட்டுப் பாய்ந்து குட்டையாகத் தேங்குவதும் உறுப்புகள் சிதைவுறுவதும் நிகழ்ச்சியின் இறுதிக் காட்சிகளாகி விடுகின்றன. தம் அடையாளத்தை மறைத்துக் கொண்டு அவற்றையெல்லாம் காணும் கொலையாளிகளின் கண்கள் ஏதோ சாகசத்தை நிகழ்த்திவிட்ட மிதப்பில் பூரிக்கக்கூடும். அவர்கள் நெஞ்சில் எரியும் வன்மம் அந்த ரகசியக் கொண்டாட்டத்தில் பல மடங்காகிப் பெருகக் கூடும்.

வரலாற்றில் வன்மத்தின் இருப்புக்கு மிக நீண்ட தொடர்ச்சி இருக்கிறது. அரக்கு மாளிகையில் பாண்டவர்களைத் தந்திரமாகத் தங்க வைத்து உருக்குலைந்து போகுமாறு எரிக்க நினைத்த துரியோதனன் மனத்தில் நிறைந்த வன்மம் வழிவழியாக அதிகாரத்தைக் கைப்பற்ற விழையும் ஒவ்வொருவர் மனத்திலும் ஊறிக் கொண்டே வந்திருக்கிறது. பூட்டப்பட்ட குடிசைகளில் ஆண்கள், பெண்கள் பேதமின்றி உழைப்பாளர்களை அடைத்து நெருப்பு வைத்து எரித்த கீழ்வெண்மணிச் சம்பவத்திலிருந்து தில்லிக் கடைத்தெருக்களிலும் மும்பை ரயில் நிலையங்களிலும் மறைத்து வைத்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவித்த சம்பவங்கள் வரை ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம். அதிகாரமும் வன்மமும் ஒரே வாளின் அடுத்தடுத்த பக்கங்கள்.

வன்மத்தில் குறைந்த அளவுள்ள வன்மம், அதிக அளவிலான வன்மம் என எந்த வேறுபாடுமில்லை. எரியும் கொள்ளிகள் எல்லாத் தருணங்களிலும் மோசமான விளைவுகளையே உருவாக்கும். கதறக்கதற மனைவியின் தலையை அடித்து உடைத்து ரத்தம் சிந்த வைக்கிற கணவனின் வன்மத்துக்குப் பின்னால் இயங்கும் உணர்வும் ஒரு குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்களை ஒரே கணத்தில் தேங்காய்ச்சில்லுகளைப்போல சிதற அடிக்கிற கூட்டத்தினரின் வன்மத்துக்குப் பின்னால் இயங்கும் உணர்வும் ஏறத்தாழ ஒரே தன்மையுடையதுதான்.

தன் தரப்பை நிறுவிக்காட்டும் அகங்காரம். தன் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கிற வெறி. தன் அதிகாரத்துக்கு எதிரான சவால்களை அடக்கவும் அவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் கிள்ளியெறிந்து தன் அதிகார வலிமையைப் புலப்படுத்தவும் மேற்கொள்ளும் யுத்தம்! யுத்தமும் ரத்தமும் பழகப்பழக வன்மம் மேன்மேலும் பலிகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் அடங்காப்பசியினால் மானுடமே சிதைந்து கிடக்கிறது.

இதுபோன்ற நாசகாரச் சக்தியான வன்மத்தை முற்றிலுமாக அகற்றுவது முக்கியமான ஒரு விஷயமல்லவா? இதன் விளைவுகளை கண்ணால் பார்த்தும்கூட அழிப்பதற்கு மாறாக வன்மத்தை எதற்கு வளர்த்துக் கொண்டே போகிறோம்? உண்மையில் பிரச்சினை என்னவென்றால் எல்லாருமே வன்மத்தை உள்ளூர விரும்புவதுதான். பாதுகாக்கப்பட்ட ஆயுதம்போல மனத்தின் அடியில் அதைப் புதைத்து வைப்பது மிகவும் அவசியம் என்கிற எண்ணம் நம் அனைவரிடமும் இருக்கிறது. தேவைப்பட்டபோது வெளிப்படுத்தத் தயங்காதவன் என்கிற அச்ச உணர்வு தன்னைப்பற்றிய ஒரு படிமமாக அடுத்தவர்களிடையே உருவாவது நல்லது என்னும் எண்ணமும் இருக்கிறது. ஆனால் முடிவாக எல்லாரும் சொல்லும் வார்த்தைகள் என்ன தெரியுமா? “”மற்றவர்கள் நிறுத்தட்டும், நானும் நிறுத்திவிடுவேன்” என்பதுதான். யார் இந்த மர்றவர்கள்? யார் இந்த நான்? எல்லாம் நாமே அல்லவா?

நம்மையறியாமல் நமக்குள் வெறுப்பின் விதை விழுந்து வளர்ந்து காடாக மண்டிக் கிடக்கிறது. அந்தக் காடு பற்றியெரியும்போதெல்லாம் வெப்பம் உச்சத்தை அடைகிறது. வன்மம் அணையாத நெருப்பாக கொழுந்துவிட்டு தகதகவென எரிந்து நாசம் விளைவிக்கிறது.

வன்மத்துக்கு எதிர்ச்சொல் நேசம் என்று பள்ளித் தேர்வில் மட்டுமே எழுதத் தெரிந்த நமக்கு யாரையும் நேசிப்பதில் துளியும் விருப்பமில்லை என்பது மிகப்பெரிய சோகம். நேசிக்கத் தெரிந்தவனுக்கு மட்டுமே வாட்டமும் வலியும் புரியும். நேசமறியா நெஞ்சங்களுக்கு எல்லாமே கண்டு களிக்கத்தக்க படத் தொகுப்புகளாகிவிடும்.

Posted in Dinamani, Hate Speech, Paavannan, Tamil | 1 Comment »

Tamil Nadu Profits by selling Electricity to Other States

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2006

வெளிமாநிலத்துக்கு மின்சாரம் விற்பதால் மின்வாரியத்துக்கு ரூ.150 கோடி லாபம்

கே.எம். சந்திரசேகரன்

சென்னை, ஆக.2: தமிழகத்தில் உபரியாக இருக்கும் மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்கலாம் என்ற கொள்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.150 கோடி லாபம் கிடைக்கும்.

மின் வாரியத்தின் மின் உற்பத்தி நிலையங்கள், தனியார் உற்பத்தி நிலையங்கள் என சேர்ந்து இரவு நேரத்தில் தேவைக்கும் அதிகமாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதிகமான உற்பத்தி இருக்கும் நேரங்களில் தென்னக மின் தொகுப்பில் இருந்து எடுத்து பயன்படுத்தினால் அதற்கான விலை மிகவும் குறைவு. அந்த வகையில் ஆந்திர மாநிலம் இரவு நேரத்தில் கணிசமான மின்சாரத்தை, மின் தொகுப்பில் இருந்து பெற்று விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இதற்கு ஒரு யூனிட்டுக்கு ஆந்திரம் 60 பைசா என்ற அளவில் தான் கட்டணம் செலுத்துகிறது. எனவே, இத் திட்டத்துக்கு ஆந்திர அரசு செலவிடும் தொகை குறைகிறது.

உபரியாக உள்ள மின்சாரத்தை தமிழகமே, தேவையுள்ள வேறு மாநிலங்களுக்கு விற்றால், அது தமிழகத்தின் பயன்பாட்டுக் கணக்கில் சேர்ந்துவிடும்.

அந்த வகையில் இரவு நேரத்தில் 300 மெகாவாட் அளவுக்கு தமிழகத்திடம் இருந்து பஞ்சாப் மாநிலம் மின்சாரம் வாங்குகிறது. இதற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.3.15 கட்டணம் தருகிறது. இதன்மூலம் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ரூ.206.9 கோடி வருமானம் கிடைக்கும்.

இதை விற்காமல் போனால் ஆந்திர மாநிலம் இந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டு, ரூ.50 கோடி தான் தரும்.

எனவே, வெளி மாநிலங்களுக்கு மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் விற்கலாம் என்ற முடிவால் ஆண்டுக்கு ரூ.150 கோடி லாபம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொள்கை முடிவு: வெளி மாநிலத்துக்கு மின்சாரத்தை விற்க வேண்டுமானால் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்க விழாவில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இப்போது மின்சாரத்தை விற்கும் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வசதியாக, அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் இத் தகவல் இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகஸ்ட் 2005-ல் வழங்கிய ஆணைப்படி, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அயலார்களுக்கு, சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு விற்கலாம் என கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இரவு நேரத்தில் தமிழகத்தில் சில மின் நிலையங்களில் உற்பத்தியை குறைவாக வைத்திருக்க வேண்டிய அவசியம் எழாது.

Posted in Chief Minister, Dinamani, DMK, Electricity, India, Profits, Tamil, TamilNadu | 1 Comment »

Arvind Khejriwal – Magasasay Award Winner

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2006

மகசேசே விருதுக்கு அர்விந்த் கெஜ்ரிவால் தேர்வு

கோலாலம்பூர், ஆக. 2: 2006-ம் ஆண்டுக்கான மகசேசே விருதுக்கு சமூக சேவகர் அர்விந்த் கெஜ்ரிவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தில்லியை மையமாகக் கொண்ட “பரிவர்த்தன்‘ மக்கள் அமைப்பின் தலைவர் இவர். இந்தியாவில் தகவல் பெறும் உரிமைகள் குறித்து அடிமட்ட மக்களையும் சென்றடையச் செய்தது, ஊழலுக்கு எதிராக போராடுவதற்காக ஏழை மக்களை ஊக்குவித்தது போன்ற செயல்களுக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

மறைந்த பிலிப்பின்ஸ் அதிபர் பெயரிலான இவ்விருது, மணிலாவில் ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும். கெஜ்ரிவாலைத் தவிர, வெளிநாடுகளைச் சேர்ந்த 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Posted in Dinamani, India, Magasasay, Parivarthan, Phillippines, Tamil | 1 Comment »

Banned Organizations in India

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2006

இந்தியாவில் 32 அமைப்புகளுக்கு தொடர்ந்து தடை: அமைச்சர்

புதுதில்லி, ஆக. 2: சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்படி அல்-காய்தா, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது, ஹிஸ்புல்-முஜாகிதீன் உள்ளிட்ட 32 அமைப்புகளுக்கு தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

இதுகுறித்து மக்களவையில் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:

இந்தியாவில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஹவாலா உள்ளிட்ட பல வழிகளில் நிதி உதவிகள் வருகின்றன.

  • பாபர் கல்சா இன்டர்நேஷனல்,
  • காலிஸ்தான் கமாண்டோ படை,
  • காலிஸ்தான் ஜிந்தாபாத் படை,
  • ஹர்கத்-உல்-முஜாகிதீன்,
  • உல்பா,
  • போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி,
  • தமிழ் ஈழ விடுதலைப்புலிகள்,
  • சிமி,
  • சிபிஐ-எம்எல்,
  • ஜமாத்-உல்-முஜாகிதீன் போன்றவைகளும் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் என்றார் அவர்.

Posted in al-Qaeda, Ban, CPI-ML, Dinamani, India, LTTE, SIMI, Tamil, Terrorism, ULFA | Leave a Comment »