தென்லெபனானில் 40 ஆண்டுகளுக்கு பிறகு லெபனானின் அரச இராணுவம் பிரவேசம்
![]() |
![]() |
லிட்டானி நதியைக் கடக்கும் லெபனான் இராணுவம் |
லெபானானில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக அரச இராணுவம் தெற்கு லெபனானுக்குள் பிரவேசித்துள்ளது.
லிட்டானி நதி மீதுள்ள தற்காலிக பாலங்கள் மூலமாக இராணுவ வண்டிகளும், துருப்புக்களை சுமந்த வாகனங்களும் சென்ற போது கூடி நின்ற பொது மக்கள் அரிசி தூவியும், மலர்களைத் தூவியும் லெபானான் கொடிகளை அசைத்தும் வரவேற்பு தெரிவித்தார்கள்.
ஹெஸ்பொல்லாவின் கோட்டையாக விளங்கிய இந்தப் பகுதிகளுக்குள் அரச படைகள் நுழைந்த காட்சியை டயரிலிருந்து எமது பிபிசியின் முகவர் விபரித்திருக்கிறார்.
ஹெஸ்பொல்லாக்களை செயலிழக்கச் செய்ய இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் ஐ நா பிரகடனத்திற்கு அமைய,லெபனான் இராணுவம் தென் லெபனானிற்குள் பிரவேசித்துள்ளது.
லெபனானில்-ஒரு நாட்டிற்குள் இன்னொரு நாடு இயங்க இனிமேலும் இடம் இருக்காது என்று, லெபனான் அரசு கூறுகிறது. ஆனாலும் பெய்ரூட்டிலிருந்து எமது பிபிசியின் முகவர் கருத்து வெளியிடும் போது மோதலைத் தவிர்க்க ஹெஸ்பொல்லக்களுக்கும் லெபனான் அரசுக்கும் இடையே ஒரு உடன்பாடு இருப்பது புலனாகிறது என்றும் ஹெஸ்பொல்லாக்கள் தமது ஆயுதங்களை மறைத்து வைப்பது என்றும் லெபனான் அரசு தமது இராணுவத்தின் மூலம் அதிகாரத்தை நிலை நாட்டுவது என்று உடன்பட்டிருப்பது தெரிவதாகவும் எமது முகவர் தெரிவிக்கின்றார்.