காற்றில் பறக்கும் கல்வி உரிமை – Sarva Siksha Abhiyan
வே. வசந்தி தேவி
ஆடிக்காற்றில் பறக்கிறது ஓர் அடிப்படை உரிமை; அனைத்துக் குழந்தைகளுக்குமான கல்வி உரிமை. சமூக முன்னேற்றத்தில் இந்தியா மிகவும் பின்தங்கி, உலக நாடுகளில் 127வது இடத்தில் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம், கல்வியில் அதன் பாதாளத் தாழ்வு. யுனெஸ்கோவின் உலகக் கண்காணிப்பு அறிக்கையின் (எப்ர்க்ஷஹப் ஙர்ய்ண்ற்ர்ழ்ண்ய்ஞ் தங்ல்ர்ழ்ற்) கணிப்பில் “அனைவருக்கும் கல்வி’ என்ற இலக்கை 2015-லும் எட்டத் தவறப் போகும் 40 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
சுதந்திரத்திற்குப் பின் 40 ஆண்டுகளாக இத் துயரம் தொடர்ந்த நிலையில் 1993ம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு கல்வி உரிமை ஓர் அடிப்படை உரிமை என்று அறிவித்தது.
இத் தீர்ப்பும், அதனைத் தொடர்ந்த மக்கள் இயக்கங்களும் அளித்த வலிமை மிக்க அழுத்தம் காரணமாக 2002ல் மத்திய அரசு 86வது அரசியல் சாசனத் திருத்தம் கொண்டு வந்து, புதிய பிரிவு 21-ஆவினை உருவாக்கி, கல்வி அடிப்படை உரிமை என்று ஏற்றுக் கொண்டது.
அரசியல் சாசனத் திருத்தம் உறுதிப்படுத்தியிருக்கும் அடிப்படைக் கல்வி உரிமை நடைமுறைப்படுத்தப்படுவதற்குத் தேவையான சட்டம் இயற்றப்பட வேண்டும். நான்காண்டுகள் கடந்துவிட்ட போதும் இன்னும் சட்டம் இயற்றப்படவில்லை. 2004-ல் பதவியேற்ற ஐக்கிய முற்போக்கு அரசு இதற்குத் தேவையான சட்டம் குறித்து விவாதித்துப் பரிந்துரைகளை அளிக்க மத்திய அமைச்சர் கபில் சிபலின் தலைமையில் ஒரு இஅஆஉ (இங்ய்ற்ழ்ஹப் அக்ஸ்ண்ள்ர்ழ்ஹ் ஆர்ஹழ்க் ர்ச் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்) குழுவினை அமைத்தது. பல மாத விவாதங்களுக்குப் பின் அக் குழு ஒரு கல்வி உரிமை மசோதா (ஈழ்ஹச்ற் தண்ஞ்ட்ற் ற்ர் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய் ஆண்ப்ப்) வரைவை அரசுக்கு அளித்தது.
கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றப் போவதில்லை என்ற முடிவெடுத்து, அந்தப் பொறுப்பை மாநில அரசுகளுக்கு மாற்றிவிட்டுள்ளது. அதற்கான மாதிரி மசோதா (ஙர்க்ங்ப் தண்ஞ்ட்ற் ற்ர் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய் ஆண்ப்ப்) ஒன்றினை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது. மாதிரி மசோதாவைப் போன்றே மாநில சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென்று பணிக்கப்பட்டுள்ளது.
மாதிரி மசோதாவினின்று பிறழாமல், சட்டமியற்றி செயல்படுத்தும் மாநிலங்களுக்கு, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் (நஹழ்ஸ்ஹ நண்ந்ள்ட்ஹ அக்ஷட்ண்ஹ்ஹய்) மத்திய அரசு 75% நிதி நல்கும் என்றும், அவ்வாறு இயற்றத் தவறினால், 50% நிதியாகக் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இத்தகைய போக்கினை எதிர்த்து, நாடு முழுதும் கண்டனக் குரல் எழுந்துள்ளது.
மாதிரி மசோதாவை எதிர்ப்பதற்கான காரணங்கள் வருமாறு:
1. மத்திய அரசு தனது புனிதப் பொறுப்பையும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் உதாசீனம் செய்து, உதறித் தள்ளுகிறது.
2. 86வது அரசியல் சாசனத் திருத்தம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. ஆகவே அதனை நடைமுறைப்படுத்தும் சட்டம் நாடாளுமன்றத்தாலேயே நிறைவேற்றப்பட வேண்டும். அரசியல் சாசனத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது அன்றைய மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, அதனைத் தொடர்ந்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். வாக்குறுதி மீறப்படுகிறது.
3. ஓர் அடிப்படை உரிமையை நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் உறுதி செய்யும் சட்டமிது என்கின்ற பார்வை மத்திய அரசிடம் உள்ளதாகத் தெரியவில்லை.
4. ஒவ்வொரு குடிமக்களுக்கும் உரிய அடிப்படை உரிமை மாநிலங்களின் வேறுபட்ட பொறுப்புணர்வையும், நிதி நிலைமையையும் நம்பி மாற இயலாது. இது விபரீத விளைவுகளையும், முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும்.
5. மாதிரி மசோதாவில் ஓர் அடிப்படை உரிமைக்கான அடிப்படை உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. அடிப்படை உரிமை மறுக்கப்படும்போது அதனை வேண்டி, நீதிமன்றத்தினை அணுகி, வழக்குத் தொடுக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும். ஆனால், நீதிமன்றங்களை அணுகும் உரிமை இச் சட்ட வரைவில் சேர்க்கப்படவில்லை.
6. தரமான கல்வி அளிக்கும் பள்ளியில் உறுதி செய்யப்பட வேண்டிய வசதிகள் கொண்ட பட்டியல் கபில் சிபல் கமிட்டி அறிக்கையில், ‘சர்ழ்ம்ள் ஹய்க் நற்ஹய்க்ஹழ்க்ள்’ என்ற தலைப்பில் இணைக்கப்பட்டிருந்தது. இப் பட்டியல் மாதிரி மசோதாவில் நீக்கப்பட்டிருக்கிறது.
7. மத்திய அரசின் பொறுப்பினை உதறும் இத்தகைய போக்கிற்குக் காரணமாகச் சொல்லப்படுவது இதனை நிறைவேற்றுவதற்கான நிதி மத்திய அரசிடம் இல்லையென்பதாகும். மத்திய அரசினால் இயலாத ஒன்றை, நிதிப் பற்றாக்குறையில் தவிக்கும் மாநிலங்கள் எவ்வாறு நிறைவேற்ற முடியும்?
8. மாநிலங்கள் சட்டம் – ஒழுங்கிற்கு அடுத்தபடியாக இவ்வுரிமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்று உபதேசிக்கும் மத்திய அரசு, தனது நிதி ஒதுக்கீட்டில், பாதுகாப்பிற்கு அடுத்த முன்னுரிமையைக் கல்விக்கு அளிக்க வேண்டுமென்று நாம் ஏன் கேட்கக் கூடாது?
9. தேசிய குறைந்தபட்சப் பொதுச் செயல் திட்டம் (சஹற்ண்ர்ய்ஹப் இர்ம்ம்ர்ய் ஙண்ய்ண்ம்ன்ம் டழ்ர்ஞ்ழ்ஹம்ம்ங்), கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை தேசிய வருமானத்தில் 6 சதவிகிதமாக உயர்த்துவதாக ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த 3.9 சதவிகிதம் உயர்த்தப்படாதது மட்டுமன்றி, 2004 – 2005-ம் ஆண்டின் ஒதுக்கீடு 3.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
10. மேலே குறிப்பிட்ட இஅஆஉ குழு, கல்வி அடிப்படை உரிமையாக்கப்படுவதற்குக் கூடுதலாகத் தேவைப்படும் நிதியின் அளவு குறித்து மூன்று வகை கணிப்புகளைச் செய்துள்ளது. இதில் மிக அதிகமான கணக்கை ஏற்றுக் கொண்டாலும், தேசிய வருமானத்தில் 6 சதவிகிதத்துக்குக் குறைவாகவே இருக்கும் என்று காண்பிக்கப்பட்டுள்ளது.
11. தேவை என்று கருதினால், மத்திய அரசு பல வகைகளில் புதிய / கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கொண்டுதானிருக்கிறது. இன்று ஆசிய விளையாட்டிற்காகவும் (அள்ண்ஹய் எஹம்ங்ள்), கூடுதல் ராணுவத் தளவாடங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து வாங்குவதற்காகவும் ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரும் கம்பெனிகளிலிருந்தும், பணக்காரர்களிடமிருந்தும் வங்கிகளுக்கு வாராக் கடன் ரூபாய் ஒரு லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
12. பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட வரைவு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கல்வி அடிப்படை உரிமையை முதன்முதலாக நிறைவேற்றும் பிரம்மாண்டத் திட்டம் குறித்த பேச்சே இல்லை. அப்படியென்றால், படாதபாடுபட்டுப் பெற்ற இந்த அடிப்படை உரிமையைக் கிடப்பில் போடுவதுதான் மத்திய அரசின் உத்தேசமோ என்ற சந்தேகம் எழுகிறது.
13. மாதிரி மசோதா அனைத்துக் குழந்தைகளுக்கும் சம தரமுடைய கல்வி (ங்வ்ன்ண்ற்ஹக்ஷப்ங் வ்ன்ஹப்ண்ற்ஹ்) அளிக்க வேண்டுமென்று கூறுகிறது. ஆனால், “சம தரமுடைய கல்வி’ என்பதற்கு மிகவும் சாமர்த்தியமாக இலக்கணம் வகுத்திருக்கிறது. “சமம்’, “தரம்’ என்ற இரண்டு முக்கியச் சொற்களின் பொருளை விளக்காமல், “சம தரம்’ என்றால் அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் சேர்வதும், 14 வயது வரை பள்ளியில் தங்கியிருப்பதும் மட்டுமே என்று விளக்கியிருக்கிறது.
14. கபில் சிபல் தலைமைக் கமிட்டி, வசதி படைத்த குழந்தைகள் படிக்கும், கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளும் தங்கள் மொத்த மாணாக்கரில் 25 சதவிகிதம் ஏழைக் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று பரிந்துரைத்திருந்தது. சட்டக் கமிஷனின் ( கஹஜ் இர்ம்ம்ண்ள்ள்ண்ர்ய்) 165 வது அறிக்கை 50 சதவிகிதம் வசதியற்ற குழந்தைகளை இப் பள்ளிகள் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், இவை மாதிரி மசோதாவில் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கின்றன.
15. மாதிரி மசோதா உருவாக்கப்பட்டிருக்கும் முறையே சர்ச்சைக்கும், சவாலுக்கும் உரியது. கபில் சிபல் கமிட்டி ஒரு இஅஆஉ கமிட்டியாக நிறுவப்பட்டது. இஅஆஉ நாட்டின் கூட்டாட்சியை வலியுறுத்தும் ஓர் அமைப்பு; அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளாக அவற்றின் கல்வி அமைச்சர்களைக் கொண்டது. அந்த அமைப்பு பரிந்துரைத்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், மத்திய அரசு குறைந்தபட்சமாகச் செய்திருக்க வேண்டியது, மறு பரிசீலனை செய்யுமாறு மீண்டும் அதனை இஅஆஉ-க்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அதனை உதறித் தள்ளிவிட்டு, மாதிரி மசோதாவை உருவாக்கும் அதிகாரம் யார், யாருக்கு அளித்த அதிகாரம்? இது கூட்டாட்சி அமைப்பிற்கே விடப்பட்ட சவால்.
இன்று செய்ய வேண்டியது என்ன?
அனைத்து மாநில அரசுகளும் மாதிரி மசோதாவை ஏற்க இயலாது என்று ஆணித்தரமாக மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
கல்வியை அடிப்படை உரிமையாக்குவதற்கு மேலே குறிப்பிட்டுள்ளவற்றை உள்ளடக்கிய சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று வற்புறுத்த வேண்டும்.
இஅஆஉ எடுத்த முடிவை மத்திய அரசு தன்னிச்சையாக மாற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் கூட்டாட்சித் தத்துவத்தைக் கேவலப்படுத்துவதாகும் என்பதில் மாநிலங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
அனைத்துக் குழந்தைகளும் சம தரமுடைய கல்வி பெறும் அருகாமைப் பள்ளிகள் கொண்ட பொதுக் கல்வி முறையை நோக்கி நாடு திரும்ப வேண்டும்.