மறைந்த பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி
சென்னை, ஆக. 30: மறைந்த நான்கு பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கினார்.
பத்திரிகையாளர்களின் துணைவியர் நிதியுதவியை பெற்றுக் கொண்டனர்.
சா.விஸ்வநாதன் (ஆனந்த விகடன், தினமணி கதிர், சாவி) – இவரது மனைவி ஜானகி விஸ்வநாதன் ரூ. 50,000 உதவித் தொகையாக பெற்றுக் கொண்டார்.
தி. தேசிங்கு (வண்ணத்திரை வார இதழ், சென்னை) – இவரது மனைவி தே. ஆர்த்தி ரூ. 2 லட்சம் உதவித் தொகையைப் பெற்றுக் கொண்டார்.
எம்.இன்பராஜ் – (மாலைமுரசு, மதுரை) – இவரது மனைவி வேல்தங்கத்திடம் உதவித் தொகையாக ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.
எம்.சுப்புக்குட்டி (தினகரன்) – இவரது மனைவி சு.சுப்புலட்சுமியிடம் ரூ.50,000 உதவித் தொகை வழங்கப்பட்டது