பி.கே. சிவகுமார் þ ஓர் அறிமுகம்
சென்னையில் பிறந்த சிவகுமாரின் சொந்த ஊர், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர். பெற்றோர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். இலக்கியப் பாரம்பரியமுடைய குடும்பம். பெரிய பாட்டனார், டாக்டர் மு. வரதராசனாரின் தமிழ் வகுப்புத் தோழர். தமிழ் வித்வான். கவிதையை நயம்படப் பாடும் திறத்திற்காக “கவிநயம்” என்ற பட்டம் பெற்றவர். தந்தை பி.ச. குப்புசாமி அறுபதுகளிலும் எழுபதுகளிலும் “சந்திரமெüý” என்ற பெயரில் தமிழில் தொடர்ந்து எழுதியவர். விட்டல் ராவ் தொகுத்த இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகளில் தந்தையாரின் கங்கவரம் சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறது.
உயர்நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டியில் ஆரம்பித்த சிவகுமாரின் ஆர்வம் எழுத்தின் பக்கமும் திரும்பியது. கோவை பூ.சா.கா. கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பெüதீகமும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை கணினி பயன்பாட்டியலும் (இர்ம்ல்ன்ற்ங்ழ் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்ள்) முடித்தார். வெளியூர்க் கல்லூரி வாசம், வாழ்க்கை குறித்த அவரின் அணுகுமுறையை விசாலமாக்கியது என்று நினைவுகூர்கிறார்.
ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக கணினி மென்பொருள் வடிவமைப்புத் துறையில் (நர்ச்ற்ஜ்ஹழ்ங் ஈங்ஸ்ங்ப்ர்ல்ம்ங்ய்ற்) பணிபுரிகிறார். அதில் ஏறக் குறையப் பத்தாண்டுகளாக அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் கணினி மென்பொருள் துறையில் ஆலோசகராகப் (ஸ்ரீர்ய்ள்ன்ப்ற்ஹய்ற்) பணியாற்றி வருகிறார். தமிழ்ப் புத்தகங்களை இணையத்தில் விற்கும் முகமாகத் தொடங்கப்பட்ட எனிஇந்தியன்.காம் (அய்ஹ்ஐய்க்ண்ஹய்.ஸ்ரீர்ம்) தளத்தின் பின்னாலும், நியூ ஜெர்ஸி மாநிலத்து இந்திய/தமிழார்வ நிகழ்வுகளின் பின்னாலும் இவர் பங்களிப்புகள் உண்டு.
37 வயதாகும் சிவகுமாருக்கு மனைவியும், மகனும் மகளும் உண்டு. பத்தாண்டுகளாகக் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்தாலும், மேலைச் சிந்தனையின் தாக்கத்திற்கு ஆட்படாமல் தன்னுடைய சிந்தனை இந்தியத் தத்துவப் போக்குகளின் அடிப்படையில் இருப்பதை ஒரு சாதனையாகக் கருதுகிறார். எழுத்தில் தன்னுடைய திறமையைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாதவர், மிகவும் குறைவாக எழுதுகிறவர் என்று நண்பர்கள் இவரைப் பற்றி ஆதங்கப்பட்டாலும், எழுதுவதைவிட வாசிப்பதை அதிகம் விரும்புவதாகச் சொல்கிறார். இலக்கியம், தத்துவம், நாட்டாரியல், விளையாட்டு, அரசியல், மார்க்ஸியம், காந்தியம், ஆன்மீகம், சமூகக் கடமை என்று சிவகுமாரின் ஆர்வமும் ஈடுபாடும் பன்முகமானவை.
ஜே. கிருஷ்ணமூர்த்தி உரைகளின் மொழிபெயர்ப்பு, கவிதை, கட்டுரை என்று பரந்த தளத்தில் இயங்கி வருகிற சிவகுமார், அவ்வப்போது சிறுகதைகளும் எழுதி வருகிறார். திண்ணை இணைய இதழ், மரத்தடி இணையக் குழுமம் ஆகியவற்றில் இடைவெளிவிட்டு எழுதி வருபவர். இவரின் கட்டுரைத் தொகுதி “அட்லாண்டிக்குக்கு அப்பால்” ஜெயகாந்தன் அணிந்துரையுடனும் ஜெயமோகன் முன்னுரையுடனும் வெளியாகியுள்ளது.
தன் கருத்துகளை உறுதியாக முன்வைக்கத் தயங்காத தன்மை, தன் ரசனையை எப்போதும் செழுமைப்படுத்திக்கொள்ளத் தயாராக இருக்கும் திறந்த மனம், கோஷங்களையும் வெற்று வாதங்களையும் தாண்டிய தெளிவு, பழம் இலக்கியங்கள், புத்திலக்கியங்கள் ஆகியவற்றின் மீதான ரசனைச் சமநிலை, பாசாங்கு அற்ற தெளிவான நடை ஆகியன சிவகுமார் எழுத்தின் சிறப்பம்சங்களாகச் சுட்டப்படுகின்றன. கோபால் ராஜாராம், ஜெயகாந்தன், ஜெயமோகன், இந்திரா பார்த்தசாரதி, வெங்கட் சாமிநாதன் உள்ளிட்ட பலரின் பாராட்டைப் பெற்ற சிவகுமார், தமிழ்.சிஃபி.காம் வாசர்களுக்காகக் ‘கண்டுணர்ந்த காந்தி‘ என்ற கருவில் பத்தி ஒன்று தொடங்கியுள்ளார். அவரை வாசகர்கள் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.