US Aids to Security Council Members
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006
பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறும் நாடுகளுக்கு அமெரிக்கா அதீத உதவி
![]() |
![]() |
ஐ.நா பாதுகாப்புச் சபை |
ஐ. நா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள வளரும் நாடுகள் இடையே நடத்தப்பட்ட ஆய்வில், தங்களுடைய பதவி காலத்தின் போது இந்த நாடுகள் குறிப்பிடத்தக்க பொருளாதார ஆதாயங்களை பெறுகின்றன என கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து இவை ஆதாயங்களை பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு காரணம், இந்த நாடுகளின் வாக்களிப்பு விடயத்தில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த விரும்புவதே என்று இந்த ஆராய்ச்சியினை நடத்திய ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் இரண்டு பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஐ. நா பாதுகாப்பு சபையில் இரண்டாண்டு காலத்திற்கு பதவியில் இருக்கும் போது, வளரும் நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து பெறும் உதவி கிட்டத்தட்ட அறுபது சதவிகிதம் அதிகரிக்கின்றது, அதே போன்று ஐ.நா வளர்ச்சி நிதி எட்டு சதம் அதிகரிக்கின்றது.
குறிப்பாக சர்ச்சைக் காலங்களின் போது இந்த நிதி உதவி மிகவும் அதிகரிக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வானது, நிதியுதவிகளுக்கும், வாக்களிக்கும் முறைகளுக்கும் தொடர்பு இருக்கின்றது என்று கூறப்படுவதற்கு வலு சேர்க்கின்றது.
மறுமொழியொன்றை இடுங்கள்