Thamizh Viduthalai Koottani’s Anandha Sankari gets UNESCO Award
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2006
ஆனந்த சங்கரிக்கு ஐ நா மன்ற விருது
தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி அவர்களுக்கு, அஹிம்சை மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தியதற்கான ஐ.நா மன்றத்தின் யுனெஸ்கோ-மதன் ஜீத் சிங் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
![]() |
![]() |
தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் ஆனந்த சங்கரி |
ஒரு லட்சம் அமெரிக்க டோலர் மதிப்புள்ள இந்த விருது ஒரு இலங்கை தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறை.
இந்த விருது வழங்கல் குறித்து யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ஜனநாயகம் மற்றும் மோதல் தீர்வுக்காக கடுமையாக பாடுபட்டவர் ஆனந்தசங்கரி என்றும் அவர் தமிழர்களின் லட்சியம் குறித்த விழிப்புணர்வை பேச்சுவார்த்தை மூலம் அதிகரிக்க பங்களிப்பை செய்தவர் என்றும் அதே சமயத்தில், இலங்கையில் வன்முறையற்ற தீர்வுகளுக்காகப் பாடுபடவும் , பயங்கரவாதத்தை எதிர்க்கவும் முயன்றார் என்றும் கூறியுள்ளது.
யுனெஸ்கோவின் இந்த விருது ஆனந்தசங்கரிக்கு சர்வதேச சகிப்புத்தன்மை தினமான நவம்பர் 16ல் வழங்கப்படுமென்று அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.
இந்த விருது தொடர்பாக ஆனந்த சங்கரி அவர்கள் வழங்கிய செவ்வியில் நேயர்கள் தமிழோசையில் கேட்கலாம்.
Veerasingham Anandasangaree » Blog Archive » ஆனந்தசங்கரிக்கு ஐ நா மன்ற விருது! said
[…] bsubra.wordpress.com/2006/09/14/thamizh-viduthalai-koottanis-anandha-sankari-gets-unesco-award/ « Sangaree wins UNESCO award சகிப்புத்தன்மையையும், அகிம்சையையும் உயர்த்தியமைக்கான கௌரவம்! » […]
rani said
He is a worst person than a bad singala man,
His activities killed and killing the tamil nation.