Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர் 20th, 2006

North East Separatist Splinter Groups – Nagaland Marxist-Leninists

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006

பெருகும் தீவிரவாத இயக்கங்கள்

சோம. நடராஜன்

இந்தியத் துணைக்கண்டம் சுதந்திரம் அடைந்த பின்னர், பல அண்டை நாடுகள் விடுதலை அடைந்தன. பாகிஸ்தான் நம்மை முந்திக் கொண்டு ஒருநாள் முன்னதாகவே சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டாடியது. திபெத், நேபாளம், பூடான், பர்மா, மலேயா, சிங்கப்பூர், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் என்ற கடிகாரச் சுற்றில் உள்ள எல்லாப் பிரதேசங்களும் இந்திய விடுதலையை ஒட்டியே சுதந்திரம் பெற்றன.

இவை அனைத்திலுமே குடியரசாட்சி நடைபெறுகிறதா என்பது கேள்விக்குரியதே! ஆனால் நம்மால் மட்டும் உலகின் மிகப்பெரிய குடியரசு என்ற பெயரைப் பெற்று விட முடிகிறது. இது எப்படிச் சாத்தியமாயிற்று? முதலில் வயது வந்தோர்க்கு வாக்குரிமை (ADULT FRANCHISE) என்ற அடிப்படையில் நம் ஜனநாயகம் கட்டமைக்கப்பட்டது. அந்த வாக்குரிமையின் மூலம் நடத்தப்படுகின்ற தேர்தல் முறையும், அதன்மூலம் அமைக்கப்படுகின்ற நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் உலகப் புகழ் பெற்றுத் திகழ்கின்றன.

நாம் மிகப்பெரிய குடியரசு நாடாக இருக்கின்றபோதும், நம் மக்கள் எல்லாரும் பூர்ண சுதந்திரத்துடன் வாழ்கின்றோம் என்கிற மனநிறைவுடன் இருக்கிறார்களா என்றால் உறுதியாகவும் முழுமையாகவும் அப்படிச் சொல்ல முடியவில்லை. தங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு தாங்கள் அடக்கி ஆளப்படுவதாக நம் நாட்டின் ஒரு சில பிராந்தியங்கள் அதிருப்தியுடன் உள்ளன. இவற்றுள் வடகிழக்குப் பகுதியில் உள்ள பிரதேசங்களில், இந்த அதிருப்திக் குரல்களும், அறிவிக்கப்படாத போர்களும் மலிந்து கிடக்கின்றன.

இதில் மிகப்பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ள பிரதேசம் நாகாலாந்து ஆகும். நாகாலாந்து என்று அறியப்படுகின்ற அந்நாளைய ட்வின் சவுத் (Twin South), பாகிஸ்தானைப் போலவே தன்னைத் தனி சுதந்திர நாடாக, அதே ஆகஸ்ட் 14, 1947ல் அறிவித்துக் கொண்டது என்பது பரவலாக அறியப்படாத செய்தி. இந்திய அரசுடன் தாங்கள் இணையவில்லை என்று கூறி, நாகா சமஷ்டி அரசு (NAGA FEDERAL GOVERNMENT) என்ற போட்டி அரசையும், நாகா சமஷ்டி ராணுவம் (NAGA FEDERAL ARMY) என்ற ராணுவத்தையும் அவர்கள் கட்டமைத்துக் கொண்டனர். இதற்குக் காரணகர்த்தாவாக இயங்கியவர் ஏ.இஸட். பீúஸô (A.Z. PHIZO) என்பவராவார். இவர் உருவாக்கிய நாகா தேசியக் கட்சி (NAGA NATIONAL CONGRESS) தான் நாகாலாந்தில் போட்டி அரசு அமைக்கக் காரணமாக இருந்த இயக்கம். ஆனால் இவரின் செயல்பாடுகள் இந்திய அரசால் முடக்கப்பட்டதால் நாகா தலைவர் பீúஸô கிழக்குப் பாகிஸ்தானிலும் (இன்றைய பங்களாதேஷ்) இங்கிலாந்திலும் அடைக்கலம் தேடிப் போய் இறுதியில் இங்கிலாந்தில் காலமானார்.

என்றாலும், பீúஸôவின் மகன் அடினோ பீúஸôவின் தலைமையில், என்.என்.சி. இன்னும் இயங்கிக் கொண்டுதான் உள்ளது. இவர்கள் இன்னும் ஆகஸ்ட் 14ஆம் நாளைத்தான் விடுதலை நாளாகக் கொண்டாடிக் கொண்டுள்ளனர். இப்போதைய நாகாலாந்துடன், சீனா, மியான்மர் ஆகியவற்றின் சில பகுதிகள் உள்ளடங்கிய அகண்ட நாகாலாந்தைத் தனி நாடாக உருவாக்க வேண்டும் என்றே இவர்கள் இன்றும் கூறி வருகின்றனர்.

நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (NATIONAL SOCIALIST COUNCIL OF NAGALAND – NSCN) என்கிற அமைப்பு 1970களிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பும் அதே அகண்ட நாகாலாந்தை உருவாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டதுதான். இந்த அகண்ட நாகாலாந்தை அவர்கள் “நாகாலிம்’ என்று குறிப்பிடுகின்றனர். நாகாலிம் என்ற பெயரில் என்எஸ்சிஎன் இயக்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தேச வரைபடத்தில் அசாம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், பர்மாவின் ஒரு பகுதியும் சேர்த்து ஒரு “”பேரகண்ட நாகாலாந்தை” உருவாக்கிட முயற்சித்துள்ளனர்.

வழக்கம்போலவே எல்லாத் தீவிரவாத, போராளிக் குழுக்களிலும் முளைவிடும் பங்காளிக் காய்ச்சல், பதவிச்சண்டை என்.எஸ்.சி.என். இயக்கத்திலும் முகிழ்த்தது. இதன் விளைவாக என்எஸ்சிஎன் இரண்டு இயக்கங்களாகப் பிளவுபட்டது. இஸôக் ச்சிசிஸ்பூ, துயின் கெலாங் முய்வா தலைமையில் இந்த இயக்கம் என்.எஸ்.சி.என் (இசாக்-முய்வா) NSCN(I-M) என்ற பெயருடன் செயல்பட்டது. இன்னொரு பிளவு இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவர் எஸ்.எஸ். கப்லாங் என்பவர். அது என்எஸ்சிஎன் (கப்லாங்) NSCN(K) என்று குறிக்கப்பட்டது.

இதில் என்.எஸ்.சி.என். (ஐ.எம்) தன்னை வளர்த்துக் கொள்வதற்கு நாகாலாந்தை 11 பிரிவுகளாகப் பிரித்து தனித்தனி நிர்வாகிகளை நியமித்துள்ளது. ஒரு முழுமையான அரசாங்கக் கட்டமைப்புடன் இயங்குகிறது. ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டங்களைத் தாக்கல் செய்கிறது. ராணுவம், உள்துறை, நிதித்துறை, ஏன் வெளியுறவுத்துறை என்றுகூட ஒரு தனி நாட்டுக்குரிய நிர்வாகக் கட்டமைப்புடன் இயங்குகிறது. கவர்ன்மெண்ட் ஆப் தி பீப்பில்ஸ் ரிபப்ளிக் ஆப் நாகாலாந்த் – GPRN என்று பெயர் சூட்டி ஆட்சி நடத்துகிறது. வெளிநாடுகளுடன் உறவாடி நிதியாதாரங்களைப் பெருக்கிக் கொள்கிறது. GPRN என்ற அரசு முத்திரையுடன் அயல்நாடுகளுக்குச் சென்று வர தனி விசா, பாஸ்போர்ட் போன்றவற்றை வழங்குகிறது. வெளிநாடுகளிலிருந்து செயல்படும் இயக்கங்களுடனும் தீவிரவாத அமைப்புகளுடனும், அயல்நாட்டு ஊடகங்களுடனும் உறவாடித் தங்களுக்கு ஆதரவையும் நிதியையும் திரட்டிக் கொண்டிருக்கிறது என்.எஸ்.சி.என் (ஐ.எம்). அத்துடன் போதைப் பொருள் கடத்தல், வங்கிக் கொள்ளை, வர்த்தக மற்றும் தோட்ட அதிபர்களை மிரட்டி “வரி’ வசூலித்தல் என்று பலவகையான வழிமுறைகளைப் பின்பற்றி தங்கள் நிதியாதாரங்களைப் பெருக்கிக் கொள்கிறது.

இந்த இயக்கத்துக்கு அமெரிக்கா, சீனா, பர்மா ஆகிய நாடுகளின் தீவிரவாத இயக்கங்கள் உதவி வந்தன. ஆனால் 1980க்குப் பின் இந்த உதவிகள் தடைபட்டுப் போயின. ஆனால் இன்றுவரை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஆதரவு இதற்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது. நிதி ஆதாரங்களுடன் ஆயுதச் சேகரிப்பிலும் என்எஸ்சிஎன் (ஐ.எம்) தன்னுடைய அமைப்பைப் பலப்படுத்திக் கொண்டுள்ளது.

இப்போது தவிர்க்க முடியாத தீவிரவாத இயக்கமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ள என்.எஸ்.சி.என். (ஐ.எம்) பிரிவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முயன்று கொண்டுதான் இருக்கிறது. 1997 முதல் பேச்சுவார்த்தை, போர் நிறுத்த உடன்பாடு என்று இன்றுவரை சமாதான முயற்சி தொடர்கிறது.

2006 ஜூலையில் தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் மூன்று நாள்கள் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்திய அரசின் சார்பில் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ், இணை அமைச்சர்கள் எஸ். ரகுபதி, பிரிதிவிராஜ் சௌஹான் ஆகியோர் கலந்து கொண்டனர். என்எஸ்சிஎன் (ஐ.எம்) சார்பில் அதன் பொதுச் செயலர் முய்வா பங்கேற்றார். இரு பிரிவுகளுக்கும் இடையில் சண்டை நிறுத்தம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

இது பெயரளவுக்கான சண்டை நிறுத்தம்தான் என்பதை இரு தரப்புமே அறியும்.

இதற்கிடையில் அசாமின் “உல்பா’ பிரச்சினை இப்போது அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாகாலாந்து பாணியில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை உல்பா தீவிரவாத அமைப்புடன் மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருகிறது.

மாவோயிஸ்ட் உள்ளிட்ட நக்சல்பாரி இயக்கங்களும் பேச்சுவார்த்தைக்கு உரியனவாக உள்ளன. இவையன்றி இன்னும் பல உள்நாட்டுத் தீவிரவாத இயக்கங்கள் உள்ளன.

  • அசாமில் உல்பாவுடன் சேர்த்து 16 இருக்கின்றன.
  • மணிப்பூரில் 13;
  • திரிபுராவில் 3;
  • மேகாலயாவில் 3;
  • அருணாசலப் பிரதேசத்தில் 1;
  • நாகாலாந்தில் மொத்தம் 3;
  • மிசோரமில் 1;
  • பஞ்சாபில் 12 மற்றும்
  • நாடு முழுதும் உள்ள பிற மாநிலங்களில் 11 என்று தீவிரவாத இயக்கங்களின் பட்டியல் பெருகுகிறது. எதிர்காலத்தில் இவை அனைத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண இந்தியா தயாராக இருக்க வேண்டும்.

Posted in Assam, Fight, Fighters, Freedom, Groups, Independence, India, Leninist, Maoist, Marxist, Nagaland, North East, NSCN, PHIZO, Revolutionary, Splinter, Tamil, Terrorism | Leave a Comment »

Kerala’s Unreasonable Demands – Mullai Periyar Dam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006

தடம் மாறும் வாதம்

“வெள்ளெரிக்காய் காய்ச்சது தோட்டத்துல, மூணு வெள்ளிக்கு விக்கச்சொன்னான் வெள்ளத்தொரை’ -என்று ஒரு நாட்டுப்பாடல். அதாவது, என் தோட்டத்தில் நான் விளைவித்த பொருளுக்கு வெள்ளைக்காரன் விலை நிர்ணயம் செய்கிறான் என்பதைக் கிண்டல் செய்யும் பாடல்.

இப்போது பெரியார் அணை விவகாரத்தில் இதே விஷயம் கொஞ்சம் தலைகீழாக மாறியுள்ளது. தமிழக நலனுக்காக வெள்ளைக்காரன் கட்டி வைத்த அணையில், 999 ஆண்டுகளுக்கு நமக்கு உரிமையுள்ள இடத்தில், தண்ணீரை எவ்வளவு உயரத்துக்கு நிறுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது கேரள அரசு.

பாதுகாப்பு என்ற அளவில் கேரள மாநில அரசின் வாதங்கள் நியாயமானவைதான். அதனால்தான் தமிழக அரசு பிரச்சினையைப் புரிந்து உடனடியாகச் செயல்பட்டது. நீர் தேக்கும் உயரத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்தது. நிபுணர்கள் குழுவும், நீதிமன்றமும் விதித்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து, அணையை பலப்படுத்திய பின்னரும், 142 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கி வைக்க நீதிமன்ற அனுமதி கிடைத்த பின்னரும் கேரள அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருவது வேதனைக்குரியது.

1850-களில் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நிலவிய பஞ்சத்தையும் வறட்சியையும் பார்த்தபின்னர் அப்பகுதியில் உள்ள 80000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன நீர் அளிக்கத்தான் பெரியாறு அணை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்த அணை கட்டுவதில் தடைகள் வந்தபோது இதை ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குயிக் தன் சொத்துகளை விற்று கட்டினார். அவர் மீது தமிழர்கள் கொண்ட மரியாதை அளப்பரியது. அப்பகுதியில் பென்னி குயிக் பெயர் கொண்டவர்கள் இன்றும் உள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ள மறுக்கும் கேரள அரசு, இப்போது புதிய வாதத்தை வைத்துள்ளது: “திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் 1947-லேயே காலாவதியாகிவிட்டது.’ இந்த வாதம் இந்திய ஒருமைப்பாட்டையே கொஞ்சம் அசைத்துப் பார்க்கின்ற வாதம். இதே வாதத்தை காவிரிப் பிரச்சினையில் கர்நாடகமும் கையில் எடுத்துக்கொள்ளலாம். ஒரு வீட்டை இன்னொருவர் வாங்கும்போது அதன் மீதான வங்கிக் கடனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லமுடியாது என்கிற சாதாரண நடைமுறையை, மிகச்சாதாரண மக்கள்கூட அறிந்திருக்கும்போது கேரள அரசுக்குத் தெரியாதா? அல்லது வழக்கை மேலும் சிக்கலாக்கவும் தாமதப்படுத்தவும் இந்த வாதத்தை முன்வைக்கிறார்களா?

கேரள மாநிலத்தில் எந்த நாளிலும் தண்ணீர் பிரச்சினை இருந்ததில்லை. அணை பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கேரள அரசின் அச்சம் தேவையற்றது. மேலும் தற்போதும்கூட மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசன நீர் இல்லாமல் விவசாயம் பாழ்பட்டு இருப்பதை எந்த நிபுணர் குழுவும் ஆய்வு நடத்தாமலேயே சொல்லிவிட முடியும்.

அணையில் நீரைத் தேக்கி வைக்கும் உயரத்தை உயர்த்தினால் மட்டுமே ராமநாதபுரத்தின் கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் கிடைக்கும். நீரை உயர்த்தப் போதுமான அளவு அணை பலப்படுத்தப்பட்டுவிட்டது. இனியும் கேரள அரசு மறுக்குமானால் தன் வீட்டையும் சொத்துகளையும் விற்று அணை கட்டிய பொறியாளர் பென்னி குயிக்-கின் தியாகம் அர்த்தமற்றதாகிவிடும்.

Posted in Agriculture, Cauvery, Dam, Farming, Inter-state, Irrigation, Kerala, Madurai, Mullai Periyar, Ramanathapuram, Tamil, Thiruvithangoor, Water | 1 Comment »

Fan Clubs will facilitate Free Food on all Religion’s Festivals – Thrisha

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006

ரசிகர் மன்றங்கள் மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைத்துப் பண்டிகை தினத்திலும் அன்னதானம்: த்ரிஷா

சென்னை, செப்.21: என்னுடைய ரசிகர்கள் மன்றங்கள் மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைத்துப் பண்டிகை தினங்களிலும் அன்னதானம், ரத்த தானம், நற்பணிகள் செய்யப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, த்ரிஷா நடித்த “ஸ்டாலின்‘ என்ற தெலுங்கு படம் இந்தியா முழுவதும் புதன்கிழமை வெளியானது.

இந்த படத்துக்காக துவரை இல்லாத அளவு அதிக பிரிண்ட்டுகள் தயாரிக்கப்பட்டு படம் திரையிடப்பட்டுள்ளது.

சென்னையில் சத்யம், மாயாஜால், கேசினோ உள்ளிட்ட சில திரையரங்குகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இதையொட்டி த்ரிஷா ரசிகர் மன்றத்தினர் கேசினோ திரையரங்கில் கொடிகள், தோரணங்கள், விளம்பரப் பதாகைகள் போன்றவற்றை வைத்திருந்தனர்.

அதோடு அடையாறு புற்றுநோய்க் கழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சிறார்களுக்கு அன்னதானம் வழங்கினர். த்ரிஷா நடித்த எந்த மொழிப் படம் வந்தாலும் அன்னதானம், ரத்ததானம் வழங்கும் காரியங்கள் தொடரும் என்று ரசிகர் மன்றத்தினர் கூறினர்.

தமிழகம் முழுவதும் ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.

இதுதொடர்பாக த்ரிஷாவைத் தொடர்புகொண்ட போது அவர், மகேஷ்பாபுவுடன் நடிக்கும் “சைனி குடு‘ என்ற தெலுங்குப் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்தார். ரசிகர் மன்ற செயல்பாடுகள் குறித்து கேட்ட போது த்ரிஷா கூறியது:

ரசிகர் மன்றங்கள் மூலம் நற்பணிகள் செய்வது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. “கட்-அவுட்’ வைப்பது, பாலபிஷேகம் செய்வது போன்றவற்றை நான் அனுமதிப்பதில்லை.

ஆதரவற்றவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யும்போது கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது.

இனி வரும் நாள்களில் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் அனைத்து பண்டிகை தினங்களிலும், முக்கிய தினங்களிலும் ரசிகர் மன்றங்கள் மூலம் அன்னதானம், ரத்த தானம், நற்பணிகள் போன்றவற்றை செய்யவுள்ளோம் என்றார் த்ரிஷா.

Posted in Abhishekam, Actress, Annadanam, Birthday, Cut-out, Fan Clubs, Free Food, Kollywood, Secular, Tamil, Tamil Cinema, Telugu Movies, Tollywood, Trisha | Leave a Comment »

Chikungunya – Tamil Nadu Toll

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006

சிக்குன் குனியா காய்ச்சல்: இறந்தவர்களின் பட்டியலை வெளியிட்டார் ஜெ.

சென்னை, செப். 21: தமிழகத்தில் சிக்குன் குனியா காய்ச்சலுக்கு இதுவரை 232 பேர் இறந்துள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதற்கு ஆதாரமாக இறந்தவர்களின் முகவரி பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து புதன்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் சிக்குன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 155 பேருக்கு மேல் இறந்துள்ளனர் என நான் கூறினேன்.

இதற்குப் பதிலளித்த மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, இறந்ததாகக் கூறப்படும் 155 பேர்களின் பெயர்களையும், முகவரிகளையும் வெளியிடத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.

அரசு தகவல் பெற எவ்வளவோ துறைகள், சாதனங்கள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து பெறுவதை விட்டுவிட்டு என்னிடம் தகவல் கேட்கிறார் அமைச்சர்.

பத்திரிகைகளைத் தினமும் படித்துவிடுவேன் எனக் கூறி வரும் முதல்வர் கருணாநிதி, சிக்குன் குனியா குறித்து பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் படிக்கிறாரா இல்லையா?

முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் தமிழகத்தில் சிக்குன் குனியா இல்லை என்றும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனவும் சட்டப்பேரவையில் பதிவு செய்து விட்டார்கள்.

அதை நிலைநாட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்களே தவிர, காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் இல்லை; நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கவில்லை.

மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கேட்டபடி, சிக்குன் குனியா காய்ச்சலால் இறந்தவர்களின் பட்டியலைத் தொகுத்துள்ளேன் என்றார்.

பட்டியல் விவரம்: தமிழகம் முழுவதும் சிக்குன் குனியாவால் இறந்தவர்கள் என்று ஜெயலலிதா வெளியிட்ட பட்டியல் விவரம்:

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி, பழைய வத்தலகுண்டு, சின்னாளப்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 24 பேர் சிக்குன் குனியா காய்ச்சலால் இறந்துள்ளனர்.

தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 29 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22 பேரும் இறந்துள்ளனர்.

சேலம் மாநகர்ப் பகுதியில் 21 பேரும், எடப்பாடி தொகுதியில் 4 பேரும் இறந்துள்ளனர்.

மேட்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 10 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 14 பேரும் இறந்துள்ளனர்.

கடலூர், தஞ்சாவூர், சிவகங்கை, நாகை மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.

ராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களில் தலா 4 பேரும், புதுக்கோட்டையில் 2 பேரும் பலியாகி உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 10 பேரும், ராமநாதபுரத்தில் 20 பேரும், வேலூரில் 9 பேரும் இறந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 11 பேரும், கோவை மாவட்டத்தில் 19 பேரும் இறந்துள்ளனர்.

Posted in Anbumani, Chicken Kunya, Chikun Gunya, Chikungunya, dead, Disease, Healthcare, KKSSR Ramachandran, Minister, Ministry, Tamil, Tamil Nadu, TN, Toll | Leave a Comment »

Thenkoodu – Tamiloviam Contest : September – Konjam Lift Kidaikkumaa

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006

தேன்கூடு (தமிழ் வலைப்பதிவுகள் இணையம்) + தமிழோவியம் (தமிழ் இணைய வார இதழ்)

இணைந்து நடத்தும்

“வலைப்பதிவர்களுக்கான” மாதாந்திரப் போட்டி
(விபரங்கள்)

 

செப்டம்பர் 2006

தலைப்பு : கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? bye-bye adolescence–>

செப்டம்பர் மாதப் போட்டிக்கு எழுதப்பட்டிருக்கும் ஆக்கங்கள்
வாக்களிக்க இங்கு சுட்டுங்கள்…–>

20/09/06 77 கேட்டா வரம்பெற்றோம் திருநங்கை ஆவதற்கு. மா. கலை அரசன்
20/09/06 76 எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? யோசிப்பவர்
20/09/06 75 “அய்யா!, கொஞ்சம் கருணைகாட்டுங்கய்யா!!”, (தேன் கூடு போட்டிச் சிறுகதை) kalaimarthandam
20/09/06 74 மனசில் லிப்ட் கிடைக்குமா சேவியர்
20/09/06 73 அல்லக்கை – தேன்கூடு போட்டி சிறுகதை இன்பா
19/09/06 72 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா- தேன்கூடு போட்டி anamika
19/09/06 71 மெளனம் கலைந்தே ஓட.. வசந்த்
19/09/06 70 அவசரமாய் போய்கொண்டிருந்தேன்… தொட்டராயசுவாமி
18/09/06 69 தீயினால் சுட்ட புண்!!! வெட்டிப்பயல்
18/09/06 68 தூக்கல் வாழ்க்கை நடராஜன் ஸ்ரீனிவாசன்
18/09/06 67 எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? – 3 யோசிப்பவர்
18/09/06 66 தூக்குங்கள் தூக்குங்கள் Ilackia
17/09/06 65 மொழிபெயர்ப்பு நடராஜன் ஸ்ரீனிவாசன்
17/09/06 64 மீட் த பெஸ்ட் ஃப்ரெண்ட் – தமிழில் சரவ்.
17/09/06 63 லிப்ட் கிடைக்குமா மீனாட்சிக்கு? barath
16/09/06 62 ஒரு தலைப்புச் செய்தி நடராஜன் ஸ்ரீனிவாசன்
16/09/06 61 லிஃப்ட் கொடுத்தவர்கள் அஹமது சுபைர்
16/09/06 60 தேன்கூடு போட்டிக்கு வலைஞன்
16/09/06 59 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? வலைஞன்
15/09/06 58 போட்டி: பதிவுக்கு மேய்க்கி bsubra786
15/09/06 57 பாகிஸ்தானியுடன் ஒரு லிஃப்ட் – என் அனுபவம்! உமா கதிர்
15/09/06 56 எங்க வீட்டு ராமாயணம் சிதம்பரகுமாரி
15/09/06 55 அவள் நிர்மல்
15/09/06 54 கடவுள் கேட்ட லிஃப்ட் சேவியர்
15/09/06 53 அவன் கண்விடல் குந்தவை வந்தியத்தேவன்
15/09/06 52 லிப்டாக இருக்கிறேனே..! வசந்த்
14/09/06 51 சர்தார்ஜி ஜோக் ஒன்று…. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? ramkumarn
14/09/06 50 நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? முரட்டுக்காளை
13/09/06 49 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? மாதங்கி
13/09/06 48 கண்டிப்பாடா செல்லம்… ramkumarn
13/09/06 47 காடனேரி விளக்கு (சிறுகதை) MSV Muthu
13/09/06 46 எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? – 2 யோசிப்பவர்
13/09/06 45 லிப்ட் கிடைக்குமா? (தேன்கூடு போட்டி) madhumitha
13/09/06 44 கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா pavanitha
12/09/06 43 லிப்ட் ப்ளீஸ்!!! வெட்டிப்பயல்
12/09/06 42 சோம்பேறி பையன் (தேன்கூடு போட்டி) ! கோவி.கண்ணன்
12/09/06 41 ஆனா ஆவன்னா… / தேன்கூடு போட்டிக்காக ஜி.கௌதம்
11/09/06 40 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா – 5 ராசுக்குட்டி
11/09/06 39 லாந்தர் விளக்கு. வசந்த்
11/09/06 38 konjam lift kidaikkuma?? Rajalukshmi
10/09/06 37 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? Udhayakumar
10/09/06 36 சபலம் saran
09/09/06 35 முன்னாவும் ,சில்பாவும். umakarthick
09/09/06 34 அண்ணே..லிப்ட் அண்ணே..! வசந்த்
08/09/06 33 விரல் பிடிப்பாயா..? வசந்த்
08/09/06 32 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா – 4 ராசுக்குட்டி
08/09/06 31 முனி அடி (தேன்கூடு போட்டி) செந்தில் குமார்
08/09/06 30 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா – 3 ராசுக்குட்டி!
07/09/06 29 லிப்ட்டு ஸ்கிரிப்டு ஆக்ட்டு kappiguy
07/09/06 28 மம்மி..மம்மி.. வசந்த்
07/09/06 27 எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? – 1 யோசிப்பவர்
07/09/06 26 சில்லென்று ஒரு காதல் நெல்லை சிவா
07/09/06 25 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா – 2 ராசுக்குட்டி!
06/09/06 24 நிலா நிலா ஓடி வா! luckylook
06/09/06 23 இதுவேறுலகம் நடராஜன் ஸ்ரீனிவாசன்
06/09/06 22 சாந்தியக்கா பாலபாரதி
06/09/06 21 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? இளா
05/09/06 20 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா – 1 ராசுக்குட்டி
05/09/06 19 அன்புத் தோழி, திவ்யா..! வசந்த்
05/09/06 18 கொஞ்சம் உடன் அழைத்துச் செல்வீர்களா..? வசந்த்
05/09/06 17 லிஃப்ட் மகேந்திரன்.பெ
05/09/06 16 சின்னதாக ஒரு லிப்ட் யதா
05/09/06 15 இன்னா சார்? வசந்த்
05/09/06 14 லிஃப்ட் குடுக்கலியோ லிஃப்ட் சனியன்
05/09/06 13 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? வசந்த்
04/09/06 12 ‘கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?’ Krishnaraj.S
04/09/06 11 லூர்து – சிறுகதை – போட்டிக்காக அபுல் கலாம் ஆசாத்
04/09/06 10 லிஃப்டாவது கிடைக்குமே! / தேன்கூடு போட்டி ஜி.கௌதம்
04/09/06 9 கொஞ்சம் தூக்கி விடலாம்! யதா
04/09/06 8 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? demigod
03/09/06 7 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா சேவியர்
03/09/06 6 ஐந்து வெண்பாக்கள் – போட்டிக்காக அபுல் கலாம் ஆசாத்
03/09/06 5 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? புதிர் பினாத்தல் சுரேஷ்
02/09/06 4 தவிப்பு நெல்லை சிவா
01/09/06 3 போட்டிக்காக – வெண்பா அபுல் கலாம் ஆசாத்
01/09/06 2 லிப்ட் சிறில் அலெக்ஸ்
01/09/06 1 சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? – தேன்கூடு போட்டி சிமுலேஷன்
 

Posted in blog, Contest, Entries, Lift, September, Tamil, Tamiloviam, Thamizh Pathivugal, Thenkoodu | Leave a Comment »

State of Indian Sports Teams – Hockey

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006

கனவாய் பழங்கதையாய்…

நமது நாட்டில் கிரிக்கெட் போன்ற குறிப்பிட்ட சில விளையாட்டுகளுக்கு அளிக்கப்படுகின்ற முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்குக் கிடைப்பதில்லை. எனவே இயல்பாகவே மற்ற விளையாட்டுகளில் மக்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. மொத்தத்தில் விளையாட்டுத் துறைக்கு நாம் கொடுத்து வரும் முக்கியத்துவம் போதாது என்பதை பல சர்வதேசப் போட்டிகளின் முடிவுகளே காட்டி வருகின்றன. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் குட்டி நாடுகள் கூட, தங்கப் பதக்கங்களைப் பெறும்போது, நமது மானத்தைக் காப்பாற்ற ஏதாவது ஒரு பதக்கமாவது கிடைக்காதா என்று சாதாரண இந்தியக் குடிமகன் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து ஏங்கும் நிலையைப் பார்த்திருக்கிறோம். ஆம், நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்த நாடு விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க, கௌரவமான வெற்றியைப் பெற முடியவில்லை.

நமது தேசிய விளையாட்டான ஹாக்கியில் ஒரு காலத்தில் உலக அளவில் கொடி கட்டிப் பறந்தோம். தயான்சந்த் போன்ற இந்திய வீரர்கள் தங்களின் அபாரத் திறமைகளால் வெற்றிகளை ஈட்டி இந்தியாவின் பெருமையை சர்வதேச அளவில் உயர்த்தினார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழ்! 1980-ம் ஆண்டில் மாஸ்கோ போட்டிக்குப் பிறகு, ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் கடந்த 25 ஆண்டுகளாக நம்மால் தங்கப் பதக்கத்தைப் பெற முடியவில்லை.

ஜெர்மனியில் சமீபத்தில் நடந்து முடிந்த ஹாக்கிப் போட்டிகளில், இந்தியா பங்கேற்ற 7 ஆட்டங்களில் 5-ல் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இந்தியாவால் வெற்றி பெற முடிந்துள்ளது. இதனால் 12 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா 11-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. போட்டியின் “கடைசி நிமிடங்களில் இந்திய வீரர்களின் திறமையற்ற ஆட்டமே இந்தியாவின் படுதோல்விக்குக் காரணம்’ என்று குறை கூறியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன், “தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் வெற்றி என்பதே கனவாகி விடும்’ என எச்சரித்துள்ளார். “ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் அடைந்த தோல்விகளை மறந்து விட்டு, தோஹாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் கவனம் செலுத்துவோம்’ என்று இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் செயலாளர் கூறியுள்ளார். இதுபோன்ற வெற்று சமாதானங்கள் நமது எதிர்கால வெற்றிக்கு உதவுமா என்பது ஐயமே.

சமீபகாலமாக விளையாட்டில் புகுந்து வரும் அரசியல் நமது விளையாட்டின் நோக்கத்தையே சிதறடித்து விடுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதன் மூலம்தான் நல்ல வீரர்களுக்குத் தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். காலத்துக்கேற்ற வகையில் தகுதியும் திறமையும் பெறுவதற்கு இந்தியப் பயிற்சியாளர்கள் மட்டும் போதுமா, வெளிநாட்டுக் “கோச்’சுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாமா என்பது குறித்து விளையாட்டுத் துறை நிபுணர்கள் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். விளையாட்டுத் துறையில் வெற்றி என்பது ஒரு நாள் முயற்சியில் கைகூடி வந்து விடுவதில்லை. இப்போதே இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்து, தகுதி படைத்தவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கும்போதுதான் தரமான இந்திய அணியை உருவாக்க முடியும். வெற்றிகளுக்குக் குறுக்கு வழிகள் இல்லை. தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களைத் தீட்டி அதைத் தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலமே வெற்றியைப் பெற முடியும். இல்லாவிட்டால் ஹாக்கி விளையாட்டில் தயான்சந்த் காலத்து வெற்றிகள் கனவாய் பழங்கதையாய் மட்டுமே இருக்கும்.

Posted in Bhaskaran, Coach, Cricket, Dinamani, Editorial, Germany, Gill, Hockey, India, Olympics, Sports, Tamil, World Cup | Leave a Comment »

Manasu Palige Mauna Raagam – Sneha’s Telugu Flick gets Stay Order by Naag Ravi

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006

சினேகா நடித்த தெலுங்கு படத்துக்குத் தடை

சென்னை, செப்.20: நடிகை சினேகா நடித்த தெலுங்கு படத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நாக் ரவி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன் இத்தடையை விதித்தார்.

மனுவில் நாக் ரவி கூறியிருப்பதாவது:

எனக்கும் நடிகை சினேகாவுக்கும் சில காலம் தொடர்பு இருந்தது. பின்னர் அவர் என்னைப் பற்றி தவறாக பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்ததால், அவரிடம் இருந்து நான் விலகிவிட்டேன்.

இந்நிலையில் “மனசு பலிகே மௌன ராகம்’ என்ற பெயரில் தயாராகும் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக சினேகா நடிக்கிறார். இப்படம் தமிழிலும் வெளியாகவுள்ளது. எனது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே இந்தப் படத்தின் கதையாக அமைந்துள்ளது. இப்படம் வெளியானால் எனக்கு மன உளைச்சல் ஏற்படும். எனவே இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் ரவி கூறியுள்ளார்.

நீதிபதி ராஜேஸ்வரன் இவ்வழக்கை விசாரித்தார். மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் சங்கர் ஆஜரானார். 3 வாரத்துக்கு இப்படத்தை வெளியிட நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார். 3 வாரத்தில் பதில் அளிக்க இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Posted in Actress, Andhra, Andhra Pradesh, AP, Cinema, Court Order, Manasu Palige Mauna Raagam, Naag Ravi, SNEHA, Story, Tamil, Telugu, Telugu (తెలుగు), Telugu Movies, Tollywood | Leave a Comment »