ஐரோப்பாவில் இந்திய கார்ட்டூன் கண்காட்சி
மும்பை, செப். 6: இந்திய கார்ட்டூனிஸ்ட்டுகள் வரைந்த மிகச்சிறந்த கார்ட்டூன்கள் முதன்முறையாக ஐரோப்பாவில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
இந்தக் கண்காட்சிக்கு “இந்தியா-ஒரு பார்வை‘ என தலைப்பிடப்பட்டுள்ளது. இம்மாதம் 15 தேதி முதல் பிராங்க்பர்ட் நகரில் துவங்கும் இந்தக் கண்காட்சி ஒரு மாதம் நடைபெறும் என மும்பையில் உள்ள மாக்ஸ் முல்லர் பவன் தெரிவித்துள்ளது.
- ஆர்.கே. லஷ்மண்,
- மரியோ மிராண்டா,
- ரஜிந்தர் புரி,
- சுரேஷ் சாவந்த்,
- விஜய் என் சேத்,
- சங்கர்,
- ஒ.ஜே. விஜயன்,
- பிரபாகர் வைர்கர்
ஆகியோர் வரைந்த கார்ட்டூன்கள் இதில் இடம்பெறுகின்றன. பெரும்பாலும் கருப்பு வெள்ளை கார்ட்டூன்களும் சில வண்ணக்கார்ட்டூன்களும் இடம்பெறும் என அந்த நிறுவனம் தெரிவித்தது. பெங்களூர், சென்னை, கோவா, ஹைதராபாத், மும்பை, புணே, புது தில்லி ஆகிய நகரங்களில் இருந்து இவை அனுப்பப்படுகின்றன. பிராங்க்பர்ட் நகரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியுடன் சேர்த்து இந்தக் கார்ட்டூன் கண்காட்சியும் இடம்பெறுகிறது.