Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Vaidic and Avaidic – Re: [agathiyar] A Doubt?

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 23, 2006

From Agathiyar:

>ஆக,நம்ம பாலு அவர்கள் சொல்கிறபடி சட(=அசித்)வஸ்துக்களில் இருந்து எண்ணங்கள் தோன்ற
முடியாது.ஏன் எனில் அதற்கு உயிர் இல்லை.ஆயின் சித்=(சித்தம் உடைய)வஸ்துக்களில்
இருந்து(பிராணி,மனிதன்)என்ணங்கள் தோன்ற முடியும்.இதில் வைதீக மதம் எங்கிருந்து வந்தது?.இது
விஞ்ஞான பூர்வ முடிவு.எனின்,இவை வடமொழிச் சொற்களாக
> இருக்கின்றன. அவ்வளவே.
> யோகியார்

வைதீக மதம் என்று அவர் குறிப்பிட்டிருப்பது நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதைமட்டுமல்ல. இந்து சமயம் என்று நாம் இன்று கூறிக்கொண்டிருக்கும் சமயம் பல கூறுகள், உட்சமயங்களால் ஆகியது என்பதைத்தான் நீங்கள் அறிந்திருப்பீர்களே.
பொதுவாகக் கூறின் இண்டிக் சமயங்கள் சில குழுமங்களாகப் பிரியும். சில உதாரணங்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். எளிமையாக.

1. வைதிகம்
2.அவைதிகம்
3.ஈஸ்வரவாதம்
4.நிரீஸ்வரவாதம்
5.பிரம்மவாதம்
6.மாயாவாதம்
7.ஏகான்மவாதம்
8.அத்வைதம்
9.த்வைதம்

இருக்கின்ற/இருந்த மதங்கள் இவற்றின் கூட்டாக விளங்கியிருக்கின்றன. வைதிக சமயங்கள் வேதத்தைப் பிரமாணமாகக் கொண்டவை. (அவற்றைப் பார்க்கவோ, படிக்கவோ, கேட்கவோகூடாது என்ற நிலையிலும் அவையே பிரமாணம் என்பது நியதி என்பது ஒருபக்கம் இருக்கட்டும்)

வேதத்தை ஒப்புக்கொள்ளாதவை அவைதிக சமயங்கள்.
ஈஸ்வரவாதம் என்பது இறைவனைக் கொண்டிருப்பவை.
நிரீஸ்வரவாதம் என்பவை இறைவனைப் பற்றிய தத்துவம் இல்லாதவை.
இவற்றின் அடிப்படையில் பார்த்தால் வேதத்தை ஏற்றுக்கொண்டு இறைவனை வழிபடுபவர்கள் இன்றைய இந்துக்கள் – வைதிக ஈஸ்வரவாதிகள்.
அவ்வகையில் அத்வைத ஸ்மார்த்ததில் உள்ள

ஷண்மதங்கள்,
த்வைத வைஷ்ணவர்,

விசிஷ்டாத்வைத வைஷ்ணவர்,

சிவாத்வைதிகள்,
மெய்கண்டவாதி சைவர்,

சைவத்தின் அகச்சமயங்கள்

முதலியவை எல்லாம் வைதிக சமயங்களாக விளங்குகின்றன.

பௌத்தர்கள் அவைதிக நிரீஸ்வர மாயாவாதிகள். புத்தருடைய கோட்பாட்டில் ஈஸ்வரவாதம் இல்லை. சமணர்கள் அவைதிக ஈஸ்வரவாதிகள்.

அன்புடன்
ஜெயபாரதி

2 பதில்கள் -க்கு “Vaidic and Avaidic – Re: [agathiyar] A Doubt?”

 1. நிர்மல் said

  நிரீஸ்வரவாதம் பற்றி மேலும் படிக்கனும். ஏதாவது லிங்க் இருந்தா சொல்லுங்க

 2. bsubra said

  1a. anIsvara and nirIsvara
  Posted by: “jaybee555”
  Date: Fri Sep 1, 2006 4:35 pm (PDT)

  அன்பர்களே,

  சமீபத்தில் பானுகுமார் தொடங்கிய இழையில் ‘நிரீஸ்வரவாதி’
  என்ற சொல்லைப்பயன்படுத்தியிருந்தேன்.
  விநாயகருடைய நாமாவளியில் ‘அநீஸ்வராய நம:’ என்ற
  நாமமந்திரம் வருகிறது.
  ஈஸ்வரன் என்பவன் தலைவன், மேலாண்மையுடையவன் என்று
  சில அர்த்தங்களையுடையது.
  ‘நிரீஸ்வரவாதி’கள் இறைப் பொருள் சித்தாந்தம் இல்லாதவர்கள்.

  ‘அநீஸ்வரன்’ என்றால் ‘தனக்கும் மேலே ஒரு தலைவன் இல்லாதவன்’
  என்று பொருள்.
  விநாயகருக்குரிய கணேச பஞ்ச ரத்தினத்தில் ஆதிசங்கரர்
  பாடியுள்ளது –

  முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
  கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
  அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
  நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்

  முதாகராத்த மோதகம் – மகிழ்ச்சியுடன் கரத்தில் மோதகத்தைக்
  கொண்டுள்ளவர்

  ஸதாவிமுக்திஸாதகம் – தம்மை வழுத்துபவர்களுக்கு எப்போதும்
  முக்தியைக் கொடுப்பவர்

  கலாதராவதம்ஸகம் – கலா என்பது சந்திரனின் கலை – பிறைச்சந்திரன்.
  பிறையணிந்தவர் சிவனென்பது மட்டுமே மக்கள் சாதாரணமாக
  அறிந்திருப்பது.
  ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, பாலா திரிபுரசுந்தரி, ஆத்யகாளி
  எனப்படும் மகாகாளி தசமுகி ஆகிய அம்பிகை வடிவங்களும்
  பிறையணிந்திருப்பார்கள்.
  மகாகணபதி, வல்லபகணபதி, உச்சிஷ்டகணபதி என்னும் வடிவங்களுக்கும்
  முக்கண்களும் பிறைச்சந்திரனும் உண்டு.

  விநாயகர் அகவல் :
  சீதக்களபச்சுஎந்தாமரைப்பூம்
  பாதச்சிலம்பு பல்லிசை பாட
  பொன்னரைஞாணும் பூந்துகிலாடையும்
  வண்ணமருங்கில் வளர்ந்தழகெறிப்ப
  பேழைவயிறும் பெரும்பாரக்கோடும்
  வேழமுகத்தில் விளங்கு சிந்தூரமும்
  அஞ்சுகரமும் அங்குசபாசமும்
  நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும்
  நான்றவாயும் நாலிருபுயமும்
  மூன்று கண்ணும் மும்மதச்சுவடும்
  இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
  திரண்ட முப்பரிநூல் திகழொளி மார்பும்
  சொற்பதம் கடந்த துரியமெய்ஞான
  அற்புதம் திகழும் கற்பகக் களிறே!

  முருகனுடைய திருவுருக்களில் மகாசுப்பிரமணியர் என்னும் வடிவம் உண்டு.
  மீனாட்சியம்மன் கோயிலின் சில கோபுரங்களில் இந்த வடிவின்
  சிலைகளைக் காணலாம். இவ்வடிவிலும் ஒவ்வொரு முகமும் முக்கண்கள்
  பெற்று, பிறைகள் அணிந்தவாறு காட்சியளிக்கும்.

  இந்த வரியின் பொருள் – சந்திர கலையைத் தலைல் தரித்திருப்பவர்.

  விலஸிலோகரக்ஷகம் – தம்முடைய பக்தியில் திளைத்து மகிழ்ச்சியாக
  இருக்கும் பக்தர்களைக் காப்பவர்

  அநாயகைகநாயகம் – அநாயக ஏகநாயகம் – தங்களைப் பாதுகாக்கக்கூடிய
  தலைவனில்லாதவர்களுக்குத் தாமே ஒரே தலைவராக விளங்குபவர்

  விநாசிதே பதைத்யகம் – இபதைத்ய என்னும் சொல் கஜாசுரனைக்
  குறிக்கும். இபம் – யானை.
  காசியப முனிவருக்கு திதி என்னும் மனைவி உண்டு. அவர்களுக்குப்
  பிறந்தவர்கள் அசுரர்கள். திதியின் புத்திரர்கள் என்பதால் தைத்யர்
  என்று பெயர்.
  கஜாசுரனைக் கொன்றவர்.

  நதாசுபாசுநாசகம் – தம்மை வணங்குபவர்களின் பாவங்களை எப்போதும்
  நாசம் செய்பவர்

  நமாமிதம் விநாயகம் – அப்படிப்பட்ட விநாயகரை வணங்குகிறேன்.
  நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்

  அப்படியே இரண்டாம் பாடலையும் பார்ப்போம் –

  இரண்டாவது பாடல்:

  நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
  நமத்ஸ¤ராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
  ஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
  மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

  நதேதராதிபீகரம் – தம்மை வணங்காதவருக்கு அடிக்கடி பயத்தைக்
  கொடுத்துத் தடுத்தாட்கொள்பவர்.
  விநாயகரின் பல மூர்த்தங்களில் விக்னஹரன் என்று விக்னகரன்
  என்றும் இரண்டு உண்டு.
  அவரை வணங்காது தொடங்கப்படும் காரியங்களில் விக்னங்கள்
  ஏற்படுத்துபவர் விக்னகரன்.
  ஆகவே எந்தக் காரியத்தைத் தொடங்கும்போதும் விக்னம்
  ஏற்படாமல் இருப்பதற்காக வழிபடப்படுபவர்.
  இன்னொருவராகிய விக்னஹரர், இடையூறுகளை நீக்குபவர்.
  இவர்கள் இருவரையும் சேர்த்து ‘இரட்டைப் பிள்ளையார்’ என்று
  சொல்வார்கள்.
  மதுரை மீனாட்சியம்மன் சன்னிதியில்கருவறைக்குப் பக்கத்தில்
  இவர்கள் இருவரின் திருவுருவங்கள் இருக்கின்றன.

  நவோதிதார்க்கபாஸ்வரம் – நவ உதாதித அர்க்கபாஸ்வரம் – உதய கால
  சூரியனைப்போல் விளங்குபவர்

  நமத்ஸ¤ராரி நிர்ஜரம் – ஸ¤ரர் என்போர் தேவர்கள்; அவர்களின்
  விரோதிகள் அசுரர்கள்; ஸ¤ராரி என்பது அசுரர்களைக் குறிக்கும்.
  தம்மை வணங்கும் தேவர்களின் விரோதிகளான அசுரர்களை
  அழிப்பவர்.

  நதாதிகாபதுத்தரம் – ஆபதுத்தரம் என்றால் ஆபத்திலிருந்து காப்பாற்றுதல்.
  தம்மை வணங்குபர்களை ஆபத்துக்களைலிருந்து காப்பாற்றுவர்.

  ஸ¤ரேச்வரம் – தேவர்களின் தலைவர்

  நிதீச்வரம் – நவநிதிகளுக்கும் அதிபதி; புதையல்களுக்கு அதிதேவதை.

  கஜேச்வரம் – யானைகளுக்கு அதிபதி

  கணேச்வரம் – கணங்களுக்கெல்லாம் நாதராக இருப்பவர்

  மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம் – மஹா ஈஸ்வரனாக
  விளங்குபவரும் பரத்தும் பரமாக இருப்பவரும் ஆகியவர்.

  அப்படிப்பட்ட கணபதியை வணங்குகிறேன்.

  இந்த இரு பாடல்களிலும் வரும் சில சொற்களைக் கவனிக்கவேண்டும்.

  அநாயகைகநாயகம் – அநாயக ஏகநாயகம் – தங்களைப் பாதுகாக்கக்கூடிய
  தலைவனில்லாதவர்களுக்குத் தாமே ஒரே தலைவராக விளங்குபவர்

  இந்த இடத்தில் இருவகையாகப் பொருள் கொள்ளலாம்.

  மேலேயுள்ள பொருள் ஒன்று.

  அநாயக – தனக்கென்று தனக்கும் மேலாக ஒரு தலைவனில்லாதவன்
  ஏகநாயகம் – அனைத்துக்கும் ஒரே தலைவனாக இருப்பவன்.

  இரண்டாவது பாடலில் வரும் –

  ஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
  மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

  தேவர்களுக்கும், அனைத்து செல்வங்களுக்கும், யானைகளுக்கும்,
  கணங்களுக்கும் தலைவனாக இருப்பது மட்டுமல்லாமல் எல்லாவற்றுக்கும்
  எல்லாருக்கும் பெருந்தலைவனாக இருப்பதையும் குறிக்கிறது.

  அதுதான் அந்த ‘அநீஸ்வராய நம:’ என்பதன் சுருக்கமான
  பொருள்.

  அன்புடன்

  ஜெயபாரதி

  ====================

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: