Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Catholic Schools remain Closed due to Attack by BJP

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006

பாஜகவினரின் தாக்குதலைக் கண்டித்து லக்னெüவில் கத்தோலிக்க பள்ளிகள் மூடல்

லக்னெü, செப். 12: உத்தரப்பிரதேச மாநிலம், லக்னெüவில் உள்ள கத்தோலிக்க பள்ளி ஒன்றிற்குள் பாஜகவினர் நுழைந்து தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து லக்னெüவில் உள்ள கத்தோலிக்க பள்ளிகள் அனைத்தும் திங்கள்கிழமை மூடப்பட்டிருந்தன.

லக்னெüவில் உள்ள லோரெட்டோ கான்வென்ட் பள்ளியில் கடந்த 6-ம் தேதி சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த நோபோ குமார் மண்டல் என்ற கிறிஸ்தவர் கலந்துகொண்டார். பிரார்த்தனையின்போது அவர், யேசு கிறிஸ்து தனது உடலில் கலந்திருப்பதாக கூறினார். மேலும், அப்போது உடலை வளைத்து முனகியபடி இருந்துள்ளார்.

இதனைக் கண்ட மாணவர்கள் பயந்துபோயினர். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், லோரெட்டோ கான்வென்ட் பள்ளிக்குள் பாரதீய ஜனதா கட்சியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனர். கிளர்ச்சியுடன் வந்த அவர்கள், பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர். பின்னர், “ரகசியக் கூட்டத்தின்போது யாரும் கலந்துகொள்ளக் கூடாது’ என்று மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸôர் 3 பேரை கைதுசெய்துள்ளனர்.

இச் சம்பவத்தைக் கண்டித்து கத்தோலிக்க பள்ளிகள் அனைத்தையும் மூட முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து உத்தரபிரதேச கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் செயலர் அருட்தந்தை பால் ரோட்டிரிக்குஸ் கூறியது:

அமைதியான முறையில் நாங்கள் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்புகிறோம். இதனால், லக்னெüவில் உள்ள அனைத்து கத்தோலிக்க பள்ளிகளும் திங்கள்கிழமை மூடப்பட்டிருக்கும்.

நாங்கள் அமைதியையே விரும்புகிறோம். மற்றவர்களும், எங்களை அமைதியாக வாழ விட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைதுசெய்ய வேண்டும். சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பிற்காக தேவையான நடவடிக்கைகளை நிர்வாகம் எடுக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.

லோரெட்டோ கான்வென்ட் பள்ளி மாணவி அனாம் ஜைதி கூறுகையில், “நோபோ குமார் மண்டல் என்ற நபரிடம் உண்மையாகவே சிறப்பு சக்தி இருக்கிறது. நான் கடந்த சில ஆண்டுகளாகவே முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தேன். அந்த நபர், சிலுவைக்குப் பின்னாலிருந்து எனது முதுகைத் தொட்டவுடனேயே எனது வலி மறைந்துவிட்டது.

எந்த கடவுள் பிடிக்குமோ, அதன் மீது கவனம் செலுத்தும்படியே அவர் கேட்டுக்கொண்டார்’ என்றார்.

பின்னூட்டமொன்றை இடுக