‘The Chennai Silks’: Rs 40 lakh sari from Tamil Nadu flaunts Ravi Varma & seeks entry for Guiness record
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007
முந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்
சென்னை சில்க்ஸ் அறிமுகம்
ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை
தங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது
சென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை
தமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.
தங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.
விலை ரூ.40 லட்சம்
51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.
விலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.
சுகாசினி அறிமுகப்படுத்தினார்
உலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.
அப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.
இந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.
சேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்
- சென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,
- ஆறுமுகம்
- நந்தகோபால்,
- சிவலிங்கம்,
- சந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,
- கவிஞர் வைரமுத்து,
- நடிகை ஷோபனா,
- நடிகர் ஜீவா,
- பின்னணி பாடகி பி.சுசீலா,
- கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,
- டாக்டர் கமலா செல்வராஜ், மத்திய
- பட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,
- ஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்
வடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்
இளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.
பெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக
அதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய
மைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது
மறுமொழியொன்றை இடுங்கள்