இலங்கையின் வடக்கில் தொடரும் வன்முறை
![]() |
![]() |
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலையிலும் சனிக்கிழமை இரவிலுமாக மூன்று சிவிலியன்கள் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மூவரினதும் சடலங்கள் யாழ் மாவட்ட நீதவான் ஆர்.ரீ.விக்னராஜாவின் உத்தரவுக்கமைய மருத்துவ பரிசோதனை மற்றும் மரண விசாரணைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் பொலிசாரினால் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. யாழ் பொலிசார் இந்த மரணங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் கடந்த இரு தினங்களில் இலங்கையின் வடபகுதி போர்முனைகளில் இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில் 23 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆறு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.