Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Kizhakkey Pogum Rayil style ‘Ladies only’ worship in Yercaut

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

ஏற்காட்டில் இன்று பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை

சேலம், ஜன. 19: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை வெள்ளிக்கிழமை நடக்கிறது.

வழக்கமாக இக்கிராமத்தில் நிர்வாண பூஜை நடக்குமென பரபரப்பாக தகவல்கள் வெளியாகும். இதற்கு மாறாக இந்த ஆண்டு பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை என குறிப்பிடப்படுகிறது.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 67 மலைக் கிராமங்கள் உள்ளன. ஏற்காட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது வெள்ளக்கடை கிராமம்.

அங்கு பொங்கல் பண்டிகைக்குப் பிறகு காளியம்மன்- மாரியம்மன் பூஜை நடைபெறும். அப்போது ஆண்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி விடுவர். பெண்கள் மட்டுமே இந்த பூஜையை நடத்துவர்.

இவ்விழாவின்போது நடன நிகழ்ச்சி நடக்கும். இதைப் பார்க்கவோ, பங்கேற்கவோ கிராமத்து ஆண்களுக்கு அனுமதி கிடையாது.

மேலும் ஊருக்குள் யாரும் நுழையாத வகையில் காவல் போடப்படும். இப்பூஜையில் பெண்கள் நிர்வாணமாகப் நடனமாடுவார்கள் என்று கூறப்படுவதுண்டு.

இவ்வழக்கம் கூடாது என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்துவது வழக்கமானது.

ஆனால் “இக்கிராமத்தில் நிர்வாண பூஜை நடக்கிறது என்பது பொய்யான தகவல். காலம்காலமாக அம்மன் பூஜை மட்டுமே நடைபெறும். இத்தகைய பூஜையால் கிராம மக்கள் நலமுடன் வாழ்கின்றனர். பூஜையில் ஆண்கள் பங்கேற்கக் கூடாது என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக இப்படித்தான் நடக்கிறது. இத்தகைய பூஜையால் எங்கள் கிராமத்துக்கு கெட்ட பெயர்’ என மக்கள் கூறுகின்றனர். மகளிர் போலீஸôர் மட்டும் அக்கிராமத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

பின்னூட்டமொன்றை இடுக