Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Margazi’

Interview with Neyveli Santhana Gopalan: Ravi Subramanian

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 29, 2009

”கொஞ்சமாவது அகம்னு வச்சுக்கலைன்னா கலைகள் பரிமளிக்காது”

நேர்கானல்: ரவிசுப்ரமணியன்

தஞ்சை மாவட்டம் குடவாசலுக்கு அருகில் உள்ள பருத்தியூர் கிராமத்தில் பிறந்த சந்தான கோபாலனுக்கு பள்ளிக் காலங்களில் தாயின் ஊரான திருச்சியோடும் பரிச்சயம் உண்டு. தகப்பனாரின் மிதிவண்டியில், பின் இருக்கையில் அமர்ந்தவாறு அவரோடு நீண்ட தூரம் பயணம் செய்யும்போது அவரது ஆறேழு வயதிலேயே இன்னதெனப் புரியாமல் பாடத் தொடங்கியவர்.

பாண்டிச்சேரி – ஸ்ரீரங்கம் ரங்கனாதனிடம் துவங்கிய ரம்பகால சிட்ஷை பின்னாளில் மதுரை சேஷகோபாலனிடம் வந்து நிறைவு கொண்டது. இடையில் பல மேதைகளின் சங்கீத சாரங்களை அறிந்துகொண்டிருந்தாலும் இவ்விருவரே பிரதான ஆசிரியர்கள்.

பாடகர்களில் – பாடல்களைப் பற்றியும், அதில் அமைந்த மொழியின் ருசி பற்றியும், ராகங்கள் பற்றியும் சாகித்திய கர்த்தாக்கள் பற்றியும் விளக்கிச் சொல்லி சாதாரணனுக்கும் புரியவைக்கும் வெகுசில ஆளுமைகளில் நெய்வேலி சந்தானகோபாலனும் ஒருவர்.

எல்லா சங்கீதக்காரர்களைப் போலவே கடவுளை அடையும் மார்க்கமே சங்இஇஇகீதம் என்று அவர் சொன்னாலும், அவரது பாடாந்தர முறைகளிலும் ராகப் பிரயோகங்களிலும், வித்தையில் லயித்து அமிழ்ந்து, கண் கிறங்கி, தன்னை இழக்கும் தருணங்களிலும் அவர் அவரை அறியாது வேறு ஏதோ ஒன்றைத் தேடி அலைகிறார் என்று சில வேளை நான் உணர்ந்திருக்கிறேன்.

அதுவே இந்த நேர்காணலுக்கான தூண்டுகோலாகவும் அமைந்தது. இனி சந்தானகோபாலனுடன்…

ரவிசுப்ரமணியன்: ஒரு தமிழ்க் கவிஞனா முதல்ல இந்தக் கேள்வியைக் கேக்கணும்னு நினைக்குறேன். சங்கீத மும்மூர்த்திகளை இசைக் கடலாத்தான் நானும் பாக்குறேன். அவங்களை வணங்குறேன். அவங்களோட இசைப் பங்களிப்பை எந்த விதத்திலயும் குறைச்சு மதிப்பிடலை. அதே சமயம் ‘தமிழிசை மூவர்’ முக்கியப்படுத்தப் படாததற்கும் தமிழிசை கவனம் கொள்ளப்படாததற்கும் என்ன காரணம்?

நெய்வேலி சந்தானகோபாலன்: தியாகராஜ சுவாமிகள்லாம் பொறக் கறதுக்கு முன்னால தமிழ்நாட்ல தமிழிசைதான் இருந்திருக்கு. அதைத்தானே நம்ம முன்னோர்லாம் பாடிண்டு இருந்துருக்கா? சரபோஜி வந்தப்புறம்தானே தெலுங்கு இவ்ளோ பிரபல்யம் ஆயிருக்கு. அந்த மொழியோட இனிமையையும் சேத்துண்டு அவர் அற்புதமா காம்போஸிஷன் பண்ணார். தீட்சிதர் அதோட வீணையையும் சேத்துண்டு லட்சணமான இசை வடிவத்தைக் கொடுத்தார். அப்படி அவாள்லாம் பண்ணினாங்கறதுனால தமிழை விட்டுட்டோம்னு அர்த்தம் இல்லயே! பண்கள் பேஸ்லதான் எல்லாம் நடந்திருக்கு. அவா சில ரூட் காட்டியிருக்கா. இவா அதுல நன்னா டிராவல் பண்ணி, புதுப்புது எல்லைகளை தொட்டிருக்கா. அதனால தமிழிசை மூத்ததுங்கறதுல யாருக்கும் அபிப்ராய பேதமில்லயே!

ரவிசுப்ரமணியன் : நான் அதைக் கேக்கல. தமிழிசை முக்கியப்படுத்தப் படாததுக்கு என்ன காரணம்ன்னு கேக்குறேன்.

நெய்வேலி சந்தானகோபாலன்: இங்க பாருங்கோ. மாட்டு வண்டி இருந்த காலத்துல சைக்கிள் வர்றது; சைக்கிள் இருந்த காலத்துல மோட்டார் வண்டி வர்றது; மோட்டார் வண்டி வந்த பின்னாடி விமானம் வர்றது; வாகனங்கள் வேற வேற, சௌ கரியங்கள் வேற வேற; ஆனாலும், பிரயாணமும் அடையவேண்டிய ஊரும் ஒண்ணுதானே?

ரவிசுப்ரமணியன்: மாட்டுவண்டி தாரத்துலேந்துதான் எல்லாம் வந்துருக்குன்னு நீங்க சொல்றது கூட இல்லையே; அதான பிரச்சினை.

நெய்வேலி சந்தானகோபாலன்: சங்கீத மும்மூர்த்திகள்னு ஒரு ஸ்தானம் குடுத்தாளே, அதுல மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளைக்கும் வீணை தனம்மா ளுக்கும்கூட ஒரு முக்கியப் பங்கு உண்டு. அவாளை எல்லாரும் ஒப்புக் கொண்டாச்சு.

ரவிசுப்ரமணியன்: அய்யோ! எனக்கு அதுல ஒரு சந்தேகமும் இல்ல சந்தானம் சார். நான் கேக்குறது, ‘பண் வழி’ போனது ஏன்?

நெய்வேலி சந்தானகோபாலன்: ஏன் போயிடுத்துன்னா இருபத்தியோரு பண்கள்லயே எல்லாத்தையும் சொல்லவேண்டியிருந்தது. தில்லானா மாதிரி புதுப்புது விஷயம் அதுல இல்ல. அப்புறம் விருத்தமா பாட வேண்டியிருக்கு. விஸ்தாரம்னு அதுல என்ன பண்ணுவேள்? விதவிதமான தாளத்துக்கு எங்க போறது? தமிழ் சங்கீதத்துல அப்படி ஒரு டெவலப்மெண்ட் வரல. அதுக்குப் பின்னாடி வந்தவா, அதை பேஸா வச்சுண்டு தெலுங்குல வித்தை பண்ணிட்டா; ராஜாங்கமும் அதை அங்கீகரிச்சுடுத்து. ஜனங்களோட மனோபாவமும் இசைக்குத்தான் முக்கியத்துவம்ங்கற மாதிரி இருந்திருக்கும் போலருக்கு. அப்போ அவா விட்டுட்டா. எல்லாமே சேர்ந்து பண் வழி கொஞ்சம் பின்னுக்கு போயிடுத்து. அப்புறம் இன்னோரு கோணத்தில சொல்றேன்… அதெல்லாம் எங்கயும் போய்டல; வேறொரு பேர்ல வளர்ச்சியடைஞ்சு இங்கதான உலவிண்டிருக்கு!

ரவிசுப்ரமணியன்: நீங்க அப்படித்தான் நினைக்குறீங்க, இல்லயா?

நெய்வேலி சந்தானகோபாலன்: என்ன கேக்கறேள் நீங்க? அதான சொல்றேன். இப்ப நான் தேவாரத்தை அப்படியே எடுத்துப் பாடலேன் னாக்கூட, மோகனம்னா அதை முதல்ல பாடின மாணிக்கவாசகர் தானே எனக்கு ஞாபகம் வர்றார்? அதோட பெருமையை முதல்ல உணர்த்இதுனது அவர்தான? அவா கொடுத்த விஷயஇத்தோட தொடர்ச்சியாத்தான் நான் பாடிண்டிருக்கேன்ற எண்ணம் என் மனசுல இருக்கு. திருவாசகத்துல ‘தாயினும் சாலப் பரிந்து’ இப்ப பாடறப்பகூட பக்தியும் அன்பும் சாத்வீகமும் திரண்டு வர்றது. இதை அவர் கொடுத்ததா நினைச்சுண்டுதான், நான் பாடிண்டு இருக்கேன். அதுக்கு அப்புறம்தான் எனக்கு ‘நன்னு பாலிம்பா…’ ரெண்டுமே எனக்கு ஒரே உணர்வைத்தான் தர்றது. இப்போ நான் என் எள்ளுத் தாத்தா, கொள்ளுத் தாத்தாவ மனசுல வச்சுக்க முடியாது. ஆனா, அப்பாவை மனசுல வச்சுப்பேன் இல்லையா. அப்பா தானே எனக்கு நிதர்சனம்? அந்த நிதர்இஇசனத்து வழியா அவாளோட எஸன்ஸ் எனக்குக் கிடைச்சுடுத்தே! வழிமுறைகள் மாறி யிஇருக்கலாம், மூலத்தை மறந்திடல. மறக்கவும் முடியாது.

ரவிசுப்ரமணியன்: கேள்வியோட திசையை இப்போ கொஞ்சம் திருப்பிக்கலாம். சேஷகோபாலன் சிஷ்யனுக்கு மஹாராஜபுரம் சந்தானத்திடம் எப்படி நெருங்குன தொடர்பு கிடைச்சுது?

நெய்வேலி சந்தானகோபாலன்: மெட்ராஸ்ல பி.எஸ்ஸி. படிக்கும் போது, சைக்கிள் எடுத்துண்டு வெஸ்ட் மாம்பலத்லேந்து தி.நகர் போனேன். அங்க சிவஞானம் தெரு வழியா போறச்சே ‘மஹாராஜபுரம் சந்தானம்’னு போர்ட் போட்டிருந்தது. அவர் எங்க வீட்டுக்கு ஏற்கெனவே வந்திருக்கார். எங்க ஆத்துல பண்ற வத்தக் குழம்பும் உருளைக்கிழங்கு கறியும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். கடலூர்லேந்து கார் வச்சுண்டு நெய்வேலிக்கு வந்து ராத்திரி 9 மணிக்கு எங்க ஆத்துக் கதவைத் தட்டுவார். அந்த வத்தக் குழம்பை பண்ணச் சொல்லி சாப்ட்டு போவார். அவ்ளோ பழக்கம், அவ்ளோ அன்பு. சின்ன வயசுல அவர் முன்னால நான் பாடிக் காட்டியிருக்கேன். அதெல்லாம் ஞாபகம் வந்தது. ‘அடடே! அவர் வீடு இங்க இருக்கா’ன்னு உள்ள நுழைஞ்சுட்டேன். குசலம் விசாரிச்சு முடிஞ்ச பிற்பாடு பாடச் சொன்னார். பாடி முடிச்சதுமே, ‘இன்னிலேந்து எண்ணி எட்டாவது நாள் கிருஷ்ண கான சபால நீ என்னோட பாடறே. ‘வோக்கல் சப்போர்ட்’னுட்டார். என்ன சொல்வேள் நீங்க? ஒரு வருஷம் அவரோட இருந்தேன்.

ரவிசுப்ரமணியன்: அப்போ அதுக்குப் பிறகுதான் சேஷகோபாலன்ட்ட படிச்சீங்களா?

நெய்வேலி சந்தானகோபாலன்: அவர்ட்ட படிக்கறதா முன்னாடியே தீர்மானம் ஆயிடுத்து. ‘ப்ளஸ் டூ முடிச்சுட்டு காலேஜ் படிக்கறதுக்கு மதுரை வந்துடு. அங்க கத்துக்கலாம்னு’ சொன்னார். வீட்ல இருக்கறவா மெட்ராஸ் போன்னு சொல்லிட்டா. எங்க அண்ணாவும் அப்போ மெட்ராஸ்ல லயோலா காலேஜ்ல வேலைல இருந்தார். அதுனால மெட்ராஸ் வந்துட்டேன். வைஷ்ணவா காலேஜ்ல பி.எஸ்ஸி. படிச்சுண்டு இருந்தேன். ஒரு நாள் கச்சேரில சேஷகோபாலன் சார் பார்த்தார். ‘என்ன கத்துக்க வரேன்னே! என்ன ஆச்சு? மெட்ராஸ்ல இருந்துண்டு இருக்க?’ன்னு கேட்டார். அவ் ளோதான். காந்தம் ஒட்டிண்டுத்து. அப்புறம் மதுரைக்கே போய், அவா த்துல இருந்து, குருகுலம் மாதிரி மூணு வருஷம் கத்துண்டேன்.

ரவிசுப்ரமணியன்: கத்துகிட்டிங்க; பாடினீங்க; புகழ் அடைஞ்சிங்க. அதுக்குப் பிறகு இசைத் துறைக்கு நெய்வேலி சந்தான கோபாலன் செய்த இசைப் பங்களிப்பு என்ன?

நெய்வேலி சந்தானகோபாலன்: அதான் தினமும் டிவில பாடி விளக்கம் சொல்லிண்டு இருக்கேனே… அதே ஒரு பங்களிப்புதான்.

ரவிசுப்ரமணியன்: நான் அதைக் கேக்கல.

நெய்வேலி சந்தானகோபாலன்: புரியறது. புதுசா ஏதாவது செய்யணு ம்னு ஐடியாஸ் இருந்துண்டு இருக்கும். செய்ய மாட்டேன். நான் ஆடுபவன் இல்ல. ஆட்டுவிக்கப்பட விரும்பறவன்னு வச்சுக்கோங்களேன். நல்ல மிருதங்கம், நல்ல வயலின், பரிபூரண ரசிகர்கள்; அவாளோட உட்கார்ந்து என்ன வருதோ அதைக் கொட்டித் தீர்த்து ஆனந்தம் அடையறதைவிட, என்ன பங்களிப்பு வேண்டியிருக்கு சொல்லுங்கோ! பங்களிப்புங்கிறது பெரிய விஷயம் சார். அதுக்கு வேற என்னென்னவோ வேண்டியிருக்கு. ஐடியாஸ் வரும்னு சொன்னேன் பாருங்கோ; சொன்னா நம்பறேளோ இல்லயோ, திடீர்னு ஒரு நாள் உட்கார்ந்துண்டு 108 பாட்டு எழுதினேன். அதுல சிலது இப்போகூட நன்னா நினைவுல இருக்கு. ஏன், என் குருநாதரே அதுல சிலதை எடுத்துப் பாடவும் பாடியிருக்கார். இதை பங்களிப்புன்னு சொல்லச் சொல்றேளா? அப்புறம் ஒரு சமயம், ஒரு சுரத்துக்கும் இன்னொரு சுரத்துக்கும் இடைல இருக்குற தூரத்துல டிராவல் பண்ணிண்டே இருந்தது மனம். அது ஒரு நேரம். பிறகு, திடீர்னு விட்டுப் போயிடுத்து.

எனக்கு சில கடமை இருக்குன்னு நினைக்கறேன். ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வர இசையை எப்படி நான் ஆன்மிக அனுபவமா கேட்டேனோ, தனம்மாள் வீணையை எப்படி கேட்டேனோ அதை உங்களோட ஷேர் பண்ணிக்கறேன். நான் அடைஞ்ச அனுபவத்தை நீங்க அடையணும்னு அவசியம் இல்ல. உங்களுக்கு அது வேற ஒண்ணா இருக்கும். சங்கர ஐயரைப் பத்தி சொல்லிண்டே இருக்க ணும் போல இருக்கு.

பங்களிப்பு அப்படிங்கறதை கண்டுபிடிக்கறதுன்ற அர்த்தத்துல நீங்க சொன்னேள்னா கண்டுபிடிப்புல எனக்கு ஆசையில்ல. நான் கண்டுகொண்டதை உங்களுக்குச் சொல்றதுக்குதான் நான் ஆசைஇப்படறேன். ஒரு பிரச்சாரகரா சங்கீஇதத்தைப் பத்திச் சொல்லிண்டே இருக்கறதுதான் என்னோட பொறுப்புன்னு நான் நினைக்கறேன். நீங்க சொல்றீங்களே, ஊடகம், ஊடகம்னுட்டு. அதுல எல்லாஇஇத்துலயும் இதைத்தான் நான் சொல்றேன். நம்ம ராகங்களைப்பத்தி; நம்ம சாஇகித்திய கர்த்தாக்களைப் பத்தி; ஏன் இன்இஸ்ட்ரூமெண்ட்ஸப் பத்திக்கூட எல்லாத்தையும் சொல்லிண்டுதான் இருக்கேன். இந்த அடிப்படையோட நீங்க ஒருத்தர்ட்ட சேர்த்துட்டேள்னா, நல்ல இசையை அனுபவிக்குறதுக்கு ஒரு அடித்தளம் அமைச்சுக் கொடுக்கலாம்.

இதைப் பண்ணிண்டு இருக்கறச்சே எனக்கு வரும்படி கூடப் போயிடும். அதை நான் பாக்கல. மூத்தவா குடுத்துட்டுப் போயிருக்கற சம்பத்துங்கள நீங்க சொன்னாத்தானே தெரியும்! இந்த பாத்திரம் ரொம்ப முக்கியமானதுன்னு நான் நினைக்கறேன். தமிழ்ல தெளிவா பேச, பாடத் தெரிஞ்ச சாகித்தியங்களுக்கு அர்த்தம் பிரிச்சு சொல்லக்கூடிய, அது மாதிரி பல விஷயங்கள் தெரிஞ்ச ஒரு ளுக்கான தேவை இப்போ இருக்கு. என்னமோ ஒரு கதா காலட்சேபம் பண்ற மாதிரி எனக்கு இதெல்லாம் உள்ளுக்குள்ள இன்டகிரேட்யிருக்குன்னுதான் நான் நினைக்கறேன். அப்புறம் இதுக்கு விஷயங்களை சேகரிப்பதற்கு எவ்ளோ உழைக்க வேண்டியிருக்கு தெரியுமா? பாடறதைவிட உழைக்கணும். பங்களிப்பு பங்களிப்புன்னா இது பங்களிப்பு இல்லயா சார்?

ரவிசுப்ரமணியன்: இன்னிக்கி சபாக்கள் அதிகமாயிருக்கு. ஒரு மாசத்துல ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகள் நடக்குது. ஊடகங்கள் அதிகமாயிருக்கு. இந்தத் தளங்கள் விரிவடைஞ்சதை எப்படிப் பாக்குறீங்க?

நெய்வேலி சந்தானகோபாலன்: ரொம்ப நல்ல விஷயமா பாக்கறேன். இசையும் ரொம்ப நன்னா வளர்ந்துருக்கு. எல்லாருக்கும் ஈஸியா போய் சேர்றது. ரேடியோல கேக்கலாம்; இணையத்துல கேக்கலாம்; டி.வில கேக்கலாம்; நேரா போய் கச்சேரிலயும் கேக்கலாம். ஏன் உங்க செல் போன்லயே கேட்டுக்கலாம். இப்ப மார்கழியில பாத்தேள்னா எங்கெங்கு கேட்கிணும் இசையடான்னு இல்ல?

ரவிசுப்ரமணியன்: அது சரி. ஆனால், ஆழமும் நுட்பமும் போய்டாதா?

நெய்வேலி சந்தானகோபாலன்: அது எப்படி சார் போவும்? அது அங்க தான இருக்கு. மூச்சடக்கத் தெரிஞ்சவா தரையைத் தொட்டுண்டு வரலாம். கரையில உக்காந்து குளிக்கறவா இருக்கா; முங்கி முங்கி நீந்தறவா இருக்கா. ஜலம் வத்தாம ஓடிண்டு இருக்கே? இன்னும் பிரவாகமா ஓடறதே? அந்த அழகுல அதெல்லாம் அங்கேதான் இருக்கு.

ரவிசுப்ரமணியன்: அப்போ கேக்கறவங்க எண்ணிக்கை பெருகுவது மட்டுமே அந்தக் கலையின் வளர்ச்சி ஆயிடுமா?

நெய்வேலி சந்தானகோபாலன்: ஆகும். எண்ணிக்கை பெருகுனாதான் நீங்க தேர்ந்தவாளை தேர்ந்தெடுக்க முடியும். தேர்ந்தவாளெல்லாம் சேர்த்து ஒரு யூனிட்டா பண்ணிட்டேள்னா அப்புறம் அதுல ஒரு செலக்ஷன் வச்சுணுடலாம். இப்டி ரீ௬பைண்ட் ஆயிண்டே இருக்கும்போது நீங்க சொல்றேளே ஆழம், நுட்பம்னு… அதெல்லாம் தானா வந்துடும். கேட்க வைக்கணும். நிறைய பேரை கேட்க வைக்கறதுதான் இப்ப சேலஞ்சா இருக்கு. இப்ப நீங்க சொல்றேளே ஊடகங்கள் பெருகிடுத்து, சபாக்கள் அதிகமாயிடுத்துன்னு. எல்லாம் பெருகிடுத்துத்தான். ரசிகாளைத்தான் இப்ப எங்க கண்டு தேடறது தெரியல.

ரவிசுப்ரமணியன்: எது எப்படி இருந்தாலும் எல்லா பாடகர்களும் வாத்தியக்காரர்களும் மார்கழில ரொம்ப பிஸியாத்தானே இருக்காங்க?

நெய்வேலி சந்தானகோபாலன்: நேச்சுரலி. அப்புறம் எஸ்டாபிலிஷ் ஆயிட்டா கச்சேரி கூடிண்டுதான் இருக்கும். நிறையபேர் கூப்பிடுவா.

ரவிசுப்ரமணியன்: கூப்பிடறஇவங்இகள்ட்டல்லாம் ஒப்புக்கொள்இவீங்களா?

நெய்வேலி சந்தானகோபாலன்: நிச்சயமா. அது ஒரு வகை புரொ௬பஷனல் ஸ்டேட்சர் ஆச்சே!

ரவிசுப்ரமணியன்: கச்சேரியோட எண்ணிக்கை தொடர்ந்து கூடறது ஒரு பாடகனோட கிரியேட்டிவிட்டிக்கு, அதுக்கான அமைதிக்கு, சிந்தனைக்கு இடையூறா இருக்காதா?

நெய்வேலி சந்தானகோபாலன்: நிச்சயமா இருக்காது. கிரியேட்டிவி ட்டிங்கறது ஷணத்துல ஏற்படறது. கல்பிதம் வேற, கற்பனை வேற. கற்பனை எப்ப வேணா சுரக்கும். அந்தக் கற்பனை தோன்றச்சே அவனே அவனைக் கண்டு ஆச்சர்யப்படறான். அதுதான் அவனை புதுசா வச்சுருக்கு. இல்லாட்டி எத்தனை தடவை அவன் பாடினதையே பாடிண்டு இருப்பான்? ஒரு ஆர்ட்டிஸ்ட் எந்த அளவுக்கு அமைதிங்கற அமிர்தத்தைக் குடிச்சுட்டுப் போறானோ, அந்த அளவுக்கு அவனோட கிரியேட்டி விட்டி இருக்கும்ங்கறது என்னோட அபிப்ராயம். அதுக்கு ஒரு செம்மை யான மனம் வேண்டியிருக்கு. சொல்றாளே, ‘மனம் அது செம்மை யானால்’னுட்டு…

ரவிசுப்ரமணியன்: ராகம் பாடறதை ரெண்டு முறையா சொல்றாங்களே… அது என்ன முறை?

நெய்வேலி சந்தானகோபாலன்: அது என்னென்னா ஒண்ணு சாஸ்தர த்துல சொல்லப்பட்டது மாதிரி, இலக்கணப்படி பாடிண்டு போறது. அதுல ரஞ்சகத்துவம் கொஞ்சம் குறைச்சல்தான். இன்னொண்ணு அப்படியே அள்ளிப் பருகிடலாம். அதுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. இலக்கணத்தை தெரிஞ்சுண்டு ஒழுக்கமா பாடினவா அதை மீறி பாடறது ஒரு அழகு. இலக்கணம் அதுக் குள்ளயே இருக்கும். படைப்பூக்கமும் அதுக்குள்ளயே இருக்கும். அதுதான் சூட்சுமம்.

ரவிசுப்ரமணியன்: இப்ப சங்கீதத்துல பிஸினஸ் இண்டெலி ஜென்ஸி, கிரியேட்டிவ் இண்டெலி ஜென்ஸின்னு ரெண்டு செயல்படுவதை நீங்க ஒப்புக் கொள்றீங்களா?

நெய்வேலி சந்தானகோபாலன்: ஆமா. நன்னா இருக்கு. ரெண்டும் வேணும்னு நினைக்கறேன் நான்.

ரவிசுப்ரமணியன்: இந்த கிரியேட்டிவ் இண்டெலிஜென்ஸை எப்படி அடுத்த தலைமுறைக்குக் குடுக்கப் போறீங்க?

நெய்வேலி சந்தானகோபாலன்: அப்டில்லாம் கைமாத்தி விட முடி யும்னு எனக்குத் தோணல. ‘I want to carry it for the next generation”னு சொல்றது சாத்தியமில்ல. எனக்கு ஆறு குரு இருந்திருக்கா. எல்லா டிரெடி ஷனையும் காப்பாத்தி வரவா கைல குடுக்கணும்னா எனக்கு ஜென்மம் பத்தாது. நான் என்னோட சிஷ்யா ளுக்கு அறிமுகம் பண்றேன், இப்படி எல்லாம் இருந்திருக்குன்னு. நான் பாடறதையும் அவா கேக்கறா. அவா இடத்தை அவா தீர்மானிக்க வேண்டியதுதான். அடிப்படைய வேணா சொல்லித் தரலாமே தவிர, ஒவ்வொருத்தர் பாணியா சொல்லித் தர ஆரம்பிச்சா அவ்ளோதான்.

ரவிசுப்ரமணியன்: பிற கலைகளோட இணைஞ்சு – அதாவது ஓவியம், சிற்பம், நாடகம் போன்ற துறைகளுடன் – ஏதாவது பண்ணியிருக் கீங்களா?

நெய்வேலி சந்தானகோபாலன்: நான் சொன்னா ஆச்சரியப்படுவேள். நீங்க சொன்ன எது எதோடும் நான் சேரல. ஆனா, கோல்௬ப் விளையாட்டோட சேர்ந்து ஒண்ணு பண்ணியிருக்கேன். ஒரு தடவ என்னோட நண்பர் என்னை கோல்௬ப் கோர்ட்டுக்கு அழைச்சுண்டு போனார். ரொம்ப நெருக்கமான நண்பர் அவர் எனக்கு. அவர் அந்தப் பந்தைத் தட்டி ஓடறச்சே, அந்த பந்து ஓடற மாதிரில்லாம் ராகம் பாடினேன். அவரையும் என்னையும் தவிர, அதை வேற யாரும் கேக்கலைங்கறது வேற விஷயம். அவர் பந்தை அடிச்சுண்டு இருந்தார். நான் பந்து போற திசையைப் பாத்து பாடிண்டு இருந்தேன். அது ஒண்ணுதான் நம்ம பரிசோதனை. மத்த கலைகளை நான் மதிக்கறேன். அதுலயும் மனசைப் பறிகொடுக்கறேன். அது எல்லாத்தையும்விட எனக்கு உயர்வானது சங்கீதம் இல்லையா? எனக்கு யாரோட துணையும் இல்லாம அனுபவிக்கற கலை சங்கீதம்தானே? ரொம்ப பொஸஸிவா பர்சனலா இருக்கு அது.

ரவிசுப்ரமணியன்: இப்படி லயிச்சுப்பாடறதை சில பேர் பாரா ட்டும்போது ஒரு பரவசம், குதூகலம் இதெல்லாம் வரும் இல்லையா? நெய்வேலி சந்தானகோபாலன்: வருமே! நான் மனுஷன்தானே ஸ்வாமி. ரவிசுப்ரமணியன்: அதுலயே லயிச்சுடுவீங்களோ?

நெய்வேலி சந்தானகோபாலன்: மாட்டேன். புரியறது; நீங்க எங்க வர்றேள்னு புரியறது. என்னோட நண்பர் விஜய்சிவா சொல்வார்; ஒரு கச்சேரிய நன்னா பாடி முடிச்சவுடனேயே என்னமோ ‘நம்மதான் சங்கீதத்தைக் கண்டுபிடிச்சுட்டோம், நம்ம பாடற மாதிரி யாரும் பாட முடியாது’ அப்டீன்னு ஒரு ஈகோ வந்துடறது. அதை எங்க கொண்டுபோய்த் தொலைக்கறதுன்னு தெரியலம்பார். இந்த மாதிரியும் நடக்கும். நீங்க மூணு மணிநேரம் நன்னா பாடுங்கோ. மங்களம் பாடறப்ப அபஸ்வரம் வந்தா போச்சு. அதைத்தான் எல்லாம் அப்புறம் சொல்லிண்டு இருப்பா. அதனால ஈகோ இருக்கும். இல்லேன்னு சொல்லிட முடியாது. அது கலைஞனுக்கு வேணுமே! அதை மட்டுமே வச்சு கொண்டாடிண்டும் இருக்க முடியாது. அப்புறம் தூக்கிப் போட்டுடுவா.

ரவிசுப்ரமணியன்: பொதுவா நீங்க பாடும்போது வீணைக்கு அதிக முக்கியத்துவம் தர்றதுக்கு காரணம் என்ன?

நெய்வேலி சந்தானகோபாலன்: எங்க அப்பா, சங்கரய்யர், சேஷகோபாலன் சார் எல்லாருக்குமே வீணை பிடிக்கும். கிட்டத்தட்ட ஏழெட்டு வாத்தியங்கள் வாசிக்கக்கூடிய எங்க வாத்தியாரே ‘வீணை மாதிரி வேற வாத்தியம் இல்லடா’ன்னு சொல்இஇலியிருக்கார். அவர் போடாத ப்ருஹா இல்ல; அவர் பாடாத சங்கதியில்ல. ‘அப்இபுறம் என்னத்துக்கு வீணையை கட்டிஇண்டு உட்கார்ந்திருக்கார்’ அப்படின்னு என்இகிட்ட சிலபேர் கேப்பா. அதுல ஒரு விஷயம் இருக்கு. பெரிய வாள்லாம் சொல்இறாளேன்னு நாம் நம்பறது ஒண்ணு. நாமளே உணர்ற துன்னு ஒண்ணு; ‘மாசில் வீணை’ ன்னு ஆரம்பிக்கறார் அப்பர். கோளறு பதிகத்துல ‘மிக நல்ல வீணை தடவி’னு வர்றது. ‘வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்’ன்றார் பாரதியார். எதுக்கு இவாள்லாம் வீணையை மாஞ்சு மாஞ்சு சொல்லிண்டு இருக்கா? வீணைங்கறது நம்ம நரம்பு. அதுவும் இல்லாம இந்த சரீரமே அதான். அதுல வர்ற குழைவுகள், கமகங்கள், இனிமை இதுக்கெல்லாம் ஈடில்லை. வீணை இசையின் மூலமாப் போனா சுலபமா மோட்சத்தை அடையலாம்னு யாக்ஞவல்கியர் சொல்லியிருக்கார். அதுல சுலபம்ங்கிற வார்த்தைதான் வீணையோட மகத்துவத்தைச் சொல்றது.

ராஜரத்தினம் பிள்ளை, தனம்மா ளோட வீணை இசையிலருந்து சில நுணுக்கங்களை கத்துப்பாராம். தனம்மாள் கேப்பாளாம், ‘என்னப்பா தம்பி! நீ நாதஸ்வரம் வாசிச்சா வானத்து நட்சத்திரம் எல்லாம் கீழ இறங்கி வர்ற மாறி இருக்கு. நீ போய் இந்த கிழவிட்ட கத்துக்க வந் தேங்கறியே?’ அப்படின்னு. அதுக்கு ராஜரத்தினம் பிள்ளை, ‘அப்ப எனக்கு ஞானமே வேணாம்னு தீர்மானம் பண்ணிட்டீங்களா?’ன்னு பதில் சொன்னாராம். இதை அவரே ஒரு நேர்காணல்ல சொல்லியிருக்கார். இதைவிட என்ன வேணும் சொல் லுங்கோ?

ரவிசுப்ரமணியன்: ஒரு இசைக்கலைஞன் மேடையில் பாடுவது தனக்கா, தலையாட்டுகிற ரசிகனுக்கா?

நெய்வேலி சந்தானகோபாலன்: ஹா! பிரமாதமா கேக்கறேள். எல்லாருக்கும்தான். நம்மளையும் ரொப்பிக்கறோம். மத்தவாளுக்கும் விநியோகிக்கறோம். ஆனா, கேக்க வர்றவா நல்லா அமைஞ்சுட்டா, அந்தக் கச்சேரியோட லெவலே வேற. சிக்கல் பாஸ்கரன்னு ஒரு பெரிய வித்வான் இருக்கார். அவர் சொல்வார், ‘அந்தக் காலத்துல திருமழிசைநல்லூர்ல எல்லாரும் அனுஷ்டானங்களை முடிச்சுட்டு கமண்டலம், பஞ்ச பாத்தி ரத்தோட உக்காந்து அப்படியே கச்சேரி கேப்பாளாம். இவா வாசிப்பாளாம். நூறு பரமேஸ்வரன் வந்து கேட்ட மாதிரி அவ்ளோ சந்தோஷமா இருக்கும்’னு. அந்த முகத்துல தெரியற பிரதிபலிப்பு தேஜஸ் இருக்கோ, இல்லியோ அதுவே பாடறவாள வேற எங்கயோ கொண்டு வச்சுடும். இங்கயும் வர்றா. நெத்தில விபூதியிட்டுண்டுதான் வந்து உக்காந்திருக்கா. முகத்துல ஒரு களையையும் காணோம்.

கோயமுத்தூர் பக்கத்துல ஒரு ஊருக்குப் போயிருந்தேன். எல்லாரும் கௌண்டர்கள். ஒயிட் அண்ட் ஒயிட் போட்டிருந்தா எல்லாரும். சங்கீதத்துக்கும் அவாளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கறதா எனக்குத் தெரியல. ஆனா என்ன நடந்துச்சு தெரியுமா? நான் அங்கே பண்ண கச்சேரியை வேற எங்கேயும் பண்ணல. விஷயம் என்இனன்னா, ‘இவர் ஏதோ நமக்கு சொல்லப்போறார். அந்த விஷயம் புரியலன்னாக்கூட கேக்கணும்’ அப்படின்னு அவா ஒழுக்கமா உட்கார்ந்திருந்தது, அவா என் மேல வச்சிருந்த அன்பு, மரியாதை இதெல்லாம் சேர்ந்து அங்க புது விதமா ரசிகத்துவம் உருவாகியிடுத்து.

நல்ல ரசிகர்கள் கிடைக்கறதுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டியிருக்கு. கச்சேரியில சில பேர் முதல் வரிசைல உட்கார்ந்து தாளம் போட்டுண்டு இருப்பா. பாத்தவுடனே தெரிஞ்சுடும். அது வேதாளம்னு. அந்தப் பக்கமே திரும்ப முடியாது. சில பேர், வி.ஐ.பி. டிக்கெட் வாங்கிண்டு வந்திருப்பா. பக்கத்து சீட்டுக்காரி புடவைலயும் நகைலயும்தான் கண்ணு போயிண்டு இருக்கும். சிலபேர் ரிவ்யூ எழுத வந்திருப்பா. கணக்கு வாத்தியார், பஞ்சகச்சம் கட்டிண்டு, கருப்பு கோட் போட்டுண்டு முட்டைக் கண்ணாடி போட்டுண்டு கையில பிரம்போட உட்கார்ந்திருக்கற மாதிரியே இருக்கும். ‘என்ன புதுசா பாடிடப் போற நீ?’ அப்பிடிங்கற முக பாவனையோட உட்கார்ந்திருப்பா. இன்னும் சில பேர் இருக்கா. அவா கால் மேல் கால் போட்டுண்டு சிரத்தையா எதாவது படிச்சுண்டு உக்காந்திருப்பா. இப்போ தெரியுதா, பல பேர் ஏன் கண்ணை மூடி பாடிண்டு இருக்காள்னு. வேடிக்கைக்குச் சொல்லலேன்னா; இதான் எதார்த்தம். நீங்க ரொம்ப சென்ஸிபிளா கேக்கறேள். உண்மையில், உங்க சில கேள்விகளுக்கான பதில்களை எனக்குள்ளயே தேடிண்டு இருக்கேன். பொதுவா, இண்டர்வியூ செய்யறவா என்னெல்லாம் கேக்கறா தெரியுமா? போறும் போறும்னு ஆயிடறது. பத்து ராகத்துக்கு மேல கச்சேரில பாடியிருப்பேன். ரசிகப்பிரியால ‘ஏன் நீங்க ஒரு மணிநேரம் பாடல’ன்னு ஒரு கேள்வி. கச்சேரில வந்துட்டு பாதில போயிருப்பான். தமிழ் பாட்டு பாடும்போது இருந்திருக்க மாட்டான். ‘ஏன் நீங்க தமிழ்லயே பாடறதில்ல?’ன்னு ஒரு கேள்வி. ‘தியாகராஜரை தமிழ்ப்படுத்திப் பாடக்கூடாதா?’ன்னு ஒரு கேள்வி. உண்மையா அனுபவிச்சு கேட்டவா பதில் பேச முடியாம பின்னாடி நின்னுண்டு இருப்பா. இவாளுக்கும் பதில் சொல்லியாவணும். பல சமயம் இவாளுக்கு பதில் சொல்றதுக்காக நாம பொறக்கலேன்னு தோணிப் போயிடும். ஒரு ராக லாபனையை உண்மையா அனுபவிச்சான்னா அவன் ஒரு ஸ்டேட்லஸ் ஸ்டேட்டுக்கு (Stateless State) தான் போவான். அவன்கிட்டேந்து கேள்வி வராது. அமைதியாயிடுவான். இவா கச்சேரி போயிண்டிருக்கச்சயே கேள்வி ரெடி பண்ணிட்டு இருப்பா.

ரவிசுப்ரமணியன்: உங்க காலத்துல உங்களைவிட மேலா னவங்கள்லாம் இருக்காங்க. ஆனா, அவங்க நம்ம அளவுக்கு பிரபலம் அடையலையேன்னு நீங்க என்னிக்இகாவது நினைச்சிருக்கீங்களா?

நெய்வேலி சந்தானகோபாலன்: நான் எதோ சாதிச்சுட்டேன், உச்சியில உக்காண்ருக்கேன் அப்டில்லாம் நான் என்னைக்குமே நினைக்குறது இல்ல. கடவுள் ஏதோ எனக்கு ஒரு சின்ன வாய்ப்பைக் கொடுத்திருக்கார். அவ்வளவுதான். என்னைவிட எவ்ளவோ நன்னா பாடறவாளெல்லாம் இருக்கா. பரம ஞானஸ்தன்ல்லாம் அமைதியா இருக்கான். ஒதுங்கியிருக்கான். குடத்துல இட்ட விளக்கா இருக்கான். ஏதோ இதுக்கு மத்தியில எனக்கு இந்த ஸ்தானத்தைக் கொடுத்திருக்கார் பகவான். அதை நான் காப்பாத்திக்கணும். அதுக்கு பொறுப்பா நடந்துக்கணும். இதெல்லாம் இருக்கும்போதே நீங்க சொல்றேளே, ஈகோ அதுவும் சில சமயத்துல எட்டிப் பாக்கத்தான் செய்யும்.

‘கொஞ்சமாவது நீ அகம்னு வச்சுக்கலைன்னா கலைகள் பரிமளிக்காது’ அப்டின்னு ஒரு சொற்றொடர் இருக்கு. கிஞ்சித்தாவது அகம் இருக்கணும். அது இருக்கறவரைக்கும் இந்த ஈகோவும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். கோபாலகிருஷ்ண பாரதி எவ்வளோ பெரிய கவி? அவர் தன்னோட பாட்டையெல்லாம் எடுத்துண்டு போய், மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைட்ட உட்காண்ட்ருக்க வேண்டியிருக்கு. அவரும் தாமதம் பண்ணிண்டே இருக்கார். அதை என்ன சொல்றது? பாத்தார் கோபால கிருஷ்ண பாரதி. அவர் வீட்டுத் திண்ணைலயே உட்கார்ந்து பாடித் தீர்த்தார். அவருக்கு மனம் உருகிப் போயிடுத்து. இவ்ளோ பெரிய வித்வானா? நம்ம மனசை உருக்கற சக்தி இவர் பாட்டுக்கு இருக்கறச்சே இவர் மகானாத்தான் இருக்கணும்னு நினைச்சு முன்னுரை எழுதிக் கொடுக்கறார். எனவே, இதெல்லாம் இருக்கத் தான் இருக்கும்.

ரவிசுப்ரமணியன்: இசைல சந்தான கோபாலனுக்குன்னு எதைச் செய்யணும்னு ஆசை இருக்கு?

நெய்வேலி சந்தானகோபாலன்: எனக்கு ஒரு ஏக்கமே இருக்கு. சங்கரய்யர் மாதிரி பழம் தின்னு கொட்டை போட்ட மகான்கள் கூடவே இருக்கணும். காது குளிர மூத்தவா கொடுத்துட்டுப் போனதை கேட்டுண்டே இருக்கணும். அதைவிட என்ன பாக்கியம் சொல்லுங்கோ. நீங்க சொன்னேளே ஈகோ. காலங்காத்தால ராஜரத்தினத்தோட தோடியை நீங்க கேட்டேள்னாக்கா, ‘நீ என்னடா தோடி பாடறே?’ன்னு அது உங்களைக் கேக்கும். அப்போ இதெல்லாம் ஒரு வகைல ஈகோவ குறைச்சுக்கறதுதான்.

ரவிசுப்ரமணியன்: சங்கீதத்தை எல்லாருக்கும் கொடுக்கறதுக்கு என்ன பண்றது?

நெய்வேலி சந்தானகோபாலன்: பயமுறுத்தக் கூடாது முதல்ல. எல்லாத்தையும் சுலபமாக்கிடணும். குருகுல வாசத்துக்கெல்லாம் இப்ப சாத்தியம் இல்ல. இணையத்துல எல்லாம் கொட்டிக் கிடக்கு. நல்ல ஆர்வம் உள்ளவா அதுலேர்ந்தே கத்துக்கலாம். பாடறவாள்லாம் மதுரை மணி அய்யர் மாதிரி பாடணும்னா ஒண்ணும் பண்ண முடியாது. கத்துக் கலாம் முதல்ல. வர்லன்னா ரசிக்கவாவது நமக்குத் தெரியுமே! அந்த ஞானமாவது மிஞ்சுமே? குருட்ட வர்றவாள்லாம் நன்னா பாடறான்னு சொல்ல முடியாது. ஒரு பையன்ட்ட சொன்னேன், ‘கொஞ்சம் பயிற்சி பண்ணிட்டு வாப்பா. நீ இன்னும் பழுக்க வேண்டியிருக்கு’ன்னு. ‘எப்படிப் பழுக்கணும் சார்?’ ன்னு கேக்கறான். என்ன பண்றது?

ரவிசுப்ரமணியன்: ஒரு நல்ல கலையின் நோக்கம் என்ன?

நெய்வேலி சந்தானகோபாலன்: முதல்ல அவனை திருப்திப்படுத்த ணும். அஇவஇனோட துர்குணங்களை உதறி எடுத்துட்டு, அவனை லயிக்க வைக்கணும். மனுஷன் மஇனசை மேன்மைபடுத்தறதுதானே, உயஇர்இஇஇவுஇஇ படுத்தறதுதானே ஒரு கலையோட நோக்கமா இருக்கும். என்ன சொஇல்இறேள்?

ரவிசுப்ரமணியன், வணப்பட இயக்குநர்; கவிஞர்; பத்திரிகையாளர். சென்னையில் வசித்து வருகிறார்.

Posted in Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | 6 Comments »