Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Memoirs’

Subam – Sivam: MS Subbulakshmi: Kalki Rajendran: 70 to 7: Part II

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 15, 2009

சுபம்-சிவம் – கல்கி ராஜேந்திரன்: 70 முதல் 7 வரை II


கணேச சாஸ்திாிகள், புது வருஷ பஞ்சாங்கத்துடன் என்னை யும் விஜயாவையும் காண்பதற்கு வந்தார். விஜயா அடிக்கடி பஞ்சாங்கம் பார்த்து பல்வேறு சுபதினங்களை நினைவில் வைத்துக் கொள்வாள். நானோ வெகு அபூர்வமாகத்தான் பஞ்சாங்கம் பார்ப் பேன். ஆனால், “தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்புக்கு கோயில்களில் பஞ்சாங்கம் படிக்க வேண்டாம்” என்று தி.மு.க. அரசின் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டதால், “பஞ்சாங்கத்தைப் படித்தே தீருவது” என்று கையில் வாங்கியதும் பிாித்தேன். பிாித்த பக்கத்தில் எனக்குப் புாியாத லிபியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது!

“இது என்ன, கிரந்த எழுத்தா?” என்று கணேச சாஸ்திாிகளைக் கேட்டேன். “ஆமாம்” என்றார். “கொஞ் சம் படிங்களேன், கேட் போம்” என்றேன். அவர் சில வாிகள் படித்து நிறுத்தி னார்.

“அம்மாவுக்கு கிரந்த எழுத்து நன்றாகப் படிக்கவும் எழுதவும் தாிெயும்” என்றாள் விஜயா.

“நிஜமாகவா?” என்று நான் ஆச்சர் யத்துடன் அவளைப் பார்த்தேன். ‘எம்.எஸ். அம்மா பற்றி தாிெந்து கொள்ள வேண்டி யது இன்னும் எவ்வளவோ இருக்கிறது போலிருக்கே’ என்று தோன்றியது “எப் போது கற்றுக் கொண்டாள்?”

“எப்போது, யாாிடம் என்பதெல்லாம் தாிெயாது. சிறுமியாக மதுரை யில் இருந்த போதே எழுதப் படிக்க பழகி இருக்கிறாள்.”

கணேச சாஸ்திாிகளுக்கு சன்மானம் செய்து அனுப்பி விட்டு, விஜயாவிடம் பேச் சைத் தொடர்ந்தேன். “பள்ளிக்கூடம் போயிருக் காளா, அம்மா? எதுவரை படித்தாள்?”

“ஆறாவது வகுப்பு வரை. அப்போது ஒரு சமயம் வகுப் பாசிாியர் பலமாக அவள் தலையில் குட்டி விட்டார்! வலியை விட அதிக மாக அம்மாவுக்கு பயம் உண்டாகி விட்டது. அதன் விளைவாகக் கக்குவான் இருமல் (தீடணிணிணீடிணஞ் ஞிணிதஞ்ட) வந்து விட்டது! குணமாக ரொம்ப நாளாயிற்று. அன்று முதல் பாட்டி (சண்முகவடிவு) ‘பள்ளிக் கூடம் போக வேண்டாம்; வீட்டோடு இருந்து பாட்டுக் கற்றுக் கொண்டால் போதும் என்று சொல்லிவிட்டாள்.”

“பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி தலையில் குட்டிய அந்த வகுப்பாசிாியரைக் கை கூப்பித் தொழ வேண்டும்” என்றேன். “நம் தேசத்துக்கு எவ்வளவு பாிெய தொண்டாற்றியிருக்கிறார்! பள்ளிக்கூடம், கல்லூாி என்று தொடர்ந்திருந்தால் அம்மாவின் வாழ்க்கை எப்படி திசை மாறிப் போயிருக்குமோ, யார் கண்டது?”

விஜயா என்னுடன் சேர்ந்து சிாித்தாள். “அபூர்வமாக அம்மா, பழைய நினைவு களில் ஆழ்ந்து பேசுவாள். மதுரையில் சிறுமி சுப்புலக்ஷ்மியுடன் விளை யாட அடிக்கடி ஒரு சிறுவன் வருவான். யார் தாிெயுமா?…”

“ரொம்ப ஆவலைத் தூண் டாதே, சீக்கிரம் சொல்லு!”

“மணி! பின்னாளில் மதுரை மணி அய்யர் என்று பிரசித்தி பெற்றவர்தான்!”

“அட! என்ன விளை யாடுவார்கள்?”

“சங்கீதம் தொடர்பான விளையாட்டுகள்தான். யார் அதிக நேரம் கார்வை நிற்க முடியும் என்பதில் படு போட்டி!”

“ஜெயித்தது யார்?”

“அதை அம்மா சொல்லவில்லை; நானும் கேட்கவில்லை.”

“அப்புறம்? வேறென்ன விளை யாட்டு?”

“போட்டிக்குள் ஒரு போட்டி! தம்புரா மீட்டியபடியே பாடி கார்வை யில் நிற்பார்கள்; தம்புரா மீட்டு வதை நிறுத்தி விடு வார்கள்; சற்று நேரம் சென்று மறுபடி தம்புரா மீட்டி சுருதி சேர்ந்திருக்கிறதா என்று பார்ப்பார்கள்!”

“அம்மாவுக்கு படிக்கவில்லையே, பட்டம் பெறவில்லையே என்ற வருத்தம் இருந்ததுண்டா?”

“அப்படி எண்ணிப்பார்த்து வருந்து வதற்குக் கூட அவளுக்கு நேரமிருந்த தில்லை. சங்கீத உலகில் அவள் வளர்ச்சி வேகம் அப்படி இருந்தது. மேலும், படிக்க வில்லை என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படாமலிருக்க அப்பாவும் ரொம்ப முயற்சி எடுத்துக் கொண்டார்.”

“அம்மா, குட் ஷெப்பர்ட் கான் வென்டுக்கு தினசாி போய் ஆங்கிலம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டது எனக்கு நினைவிருக்கிறது” என்றேன்.

“ஆங்கிலம் தாிெந்த ஒருவர் டியூஷன் எடுத்தால் போதாது; ஆங்கிலத்தையே தாய் மொழியாகக் கொண்ட ஒருவர் டியூஷன் எடுக்க வேண்டும் என்பதால் அப்பா செய்த ஏற்பாடு அது. அங்கே மதர் ஜோன், மதர் பேஷன் (கச்ண்ண்டிணிண), மதர் ஆன் என்று பல கன்னிகா ஸ்திாீகள் இருந்தார்கள். பிாிட் டனிலிருந்து வந்தவர்கள். எல்லோருக்கும் ‘எம்.எஸ். ஆங்கிலம் கற்க வருகிறார்’ என்பதில் ஒரே சந்தோஷம். ஆனால், மதர் சுசீலியாவுக்குத்தான் அம்மாவுக்குக் கற்றுத் தரும் வாய்ப்பு கிடைத்தது.”

“கன்னடமும் தெலுங்கும் அம்மாவுக் குத் தாிெந்திருக்குமே?”

“அர்த்தம் புாியும்; பேசவும் முடியும். ஆனால் எழுதிப் படிக்கப் பழகவில்லை. சமஸ்கிருதம் படிக் கவும் எழுதவும் கற்றுத் தர அப்பா ஒரு பண்டிதரை ஏற்பாடு செய்தார். நானும் ராதாவும் கூட அம்மா வுடன் சேர்ந்து உள்ளாவூர் ராமமூர்த்தி சாஸ்திாிகளிடம் படித்தோம்.”

“ஹிந்தி மீரா படப்பிடிப்பின்போது ஹிந்தி வகுப்பு எடுக்க வீழிநாதன் வரு வாாில்லையா? பின்னால் கல்கியில் உதவி ஆசிாியராகவே சேர்ந்து, பல ஹிந்தி நாவல் களை மொழி பெயர்த்தாரே ரா.வீழி நாதன்.”

“ஆமாம்; டயலாக் பேசினால் போதாது; அந்த பாஷையையே தாிெந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் முழுமையான ஈடுபாடு ஏற்படும் என்பது அப்பாவின் கருத்து. அதே போல்தான் சங்கீத விஷயத்திலும். தீக்ஷிதர் கிருதியைப் பாடினால் போதாது; காளிதாசனையும் ரசிக்க வேண்டும்!”

“அம்மாவுடைய விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டுவிட்டு, ‘பல வருஷங்கள் வேத அத்யயனம் பண்ணினவர்கள் கூட இப்படி ஸ்பஷ்டமாக உச்சாிக்க முடியாது’ என்று அக்னிஹோத்ராம் ராமானுஜ தாத்தாச் சாாியார் சொன்னதில் ஆச்சர்யமில்லை” என்றேன்.

“அவர் சுலபமா சர்ட்டிஃபிகேட் கொடுத்துட்டார்; அதன் பின்னால் இருந்த உழைப்பு பற்றி அவருக்குத் தாிெய வாய்ப்பில்லையே” என்றாள் விஜயா. “ாிகார்ட் ாிலீஸ் ஆவதற்கு முன் அவாிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பதில் அப்பா உறுதியாக இருந்தார்.”

“அம்மா அதற்கு முன்பே வேங்கடேச சுப்ரபாதம் ாிகார்ட் கொடுத்து விட்டாள்; அதுதான் ஆரம்பம். அப்புறம்தான் விஷ்ணு சகஸ்ரநாமம், காமாட்சி சுப்ரபாதம், காசி ராமேஸ்வரம் சுப்ரபாதம், மதுரை மீனாட்சி சுப்ரபாதம் எல்லாம் தொடர்ந்தன. கச்சாிேகள் செய்து கொண்டிருந்த அம்மாவின் வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனை. எப்படி ஆரம்பித்தது இந்தப் போக்கு?”

“ஒரு சமயம் திருப்பதியில் சுப்ரபாத தாிசனத்துக்குப் போயிருந்தோம். அப்போது தான் வேங்கடேச சுப்ரபாதத்தை அம்மாவின் குரலில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்பாவுக்கு ஏற்பட்டது. ஆனால், தேவஸ்தானத்தில் அவர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்ட வில்லை. சில காலம் சென்று அப்பா மகா பாிெயவாளை சந்தித்த சமயம் தன் எண்ணத்தை வெளியிட்டார். பாிெயவா அருட்கரம் காட்டி, “ராயல்டியை தேவஸ் தானத்துக்கே தந்துவிடு; அவா வேத பாடசாலை நடத்தறா; அதற்குப் பயன் படுத்திக்கட்டும்” என்றார். பாிெயவா சம்மதம் கொடுத்துவிட்டதாகத் தாிெந்த உடனே திருப்பதி தேவஸ்தானத்திலும் பூரண ஒத்துழைப்பு கிடைச்சுது. கோயிலில் சுப்ரபாதம் சொல்கிற தலைமை பட்ட ரையும் இன்னும் இருவரையும் சென் னைக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சுப்ரபாதம் சொல்லக் கேட்டு அம்மா கிரகித்துக்கொண்டாள்.”

காஞ்சி முனிவாின் அருளாசியுடன் எம்.எஸ். அவர்களின் குரலில் பதிவான வேங்கடேச சுப்ரபாதம், இன்று இமயம் முதல் குமாி வரை ஒலிக்கிறது. விற்பனை யில் எல்லா சாதனைகளையும் முறியடித்து திருப்பதி தேவஸ்தானத்துக்கு ராயல்டியை இன்றும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக் கிறது.

Posted in Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »