குவைத் தேசிய தேர்தல்
![]() |
![]() |
தேர்தலில் வெற்றி பெற்ற இஸ்லாமியவாதிகள் |
வளைகுடா நாடான குவைத்தில் நடந்த தேசியத் தேர்தல்களில் இஸ்லாமியவாதக் கட்சிகள் வலுவான வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
இரண்டாவது முறையாக இந்த தடவையும் பெண்கள் தேர்தல்களில் போட்டியிட்டிருந்தனர், மொத்த வேட்பாளர்களில் பத்து சதவீதம் பேர் பெண்கள் என்றாலும் ஒரு பெண் கூட இம்முறையும் வெற்றி பெறவில்லை.
குவைத் தேர்தல்களில் மத கடும்போக்காளர்கள் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற்று வலுவான நிலைக்கு வந்துள்ளனர்.
குவைத்தைப் பொறுத்தவரை கட்சிச் சின்னத்தை முன்னிலைப் படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்யவது தடைசெய்யட்ட விஷயம் என்றாலும் எந்தெந்த வேட்பாளர்கள் எந்தெந்த கட்சியையும் கூட்டணியையும் சேர்ந்தவர் என்பதை வாக்களிக்கக்கூடிய மக்கள் அறிந்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலுக்கு பிறகு அமைகின்ற தேசிய ஆட்சி மன்றத்தில், 24 இடங்களுடன் மத பழமைவாதிகள் வலுவான நிலையில் இருப்பார்கள். மொத்தம் 50 இடங்களைக் கொண்டது குவைத் நாடாளுமன்றம்.
குவைத் தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கவும் போட்டியிடவும் 2005ஆம் ஆண்டில் அவர்களுக்கு உரிமை கொடுக்கப்பட்ட பின்னர் நடக்கின்ற இரண்டாவது தேர்தல் இது. போன தேர்தலிலும் இந்த தேர்தலிலுமாக 27 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும் என்றாலும் ஒருவர்கூட இதுவரை வெற்றிபெறவில்லை.