ரஷ்யா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய உடன்பாடு
![]() |
![]() |
ஐ. ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜாவியர் சொலோனா மற்றும் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் |
ரஷ்யாவும், ஐரோப்பிய ஒன்றியமும் தமக்கு இடையேயான ஒரு புதிய உடன்பாட்டை அதிகாரபூர்வமாக ஏற்படுத்தியுள்ளன. நீண்ட காலமாக தாமதமான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
சைபீரிய நகரமான காண்டி மான்சியிஸ்கில் ரஷ்ய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடையே நடைபெற்ற ஒரு உச்சி மாநாட்டிலேயே முட்டுக்கட்டை நீங்கி இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து அறிவிக்கப்பட்டது.
விளாடிமிர் புடினை அடுத்து ரஷ்யாவின் அதிபராக பொறுபேற்ற டிமிட்ரி மெட்வடேவ் பங்கு பெறும் முதல் உச்சி மாநாடு இதுவே.
போலந்து மற்றும் லித்துவேனியா நாட்டுடன் ரஷ்யாவுக்கு எழுந்த சர்ச்சைகளின் காரணமாக புதிய பேச்சுவார்த்தைகள் தடைபட்டிருந்தன.
ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் பழைய பிரச்சினைகள் பின்புலத்தில் இருந்து கொண்டுதான் உள்ளன என்று மாஸ்கோவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.