Posts Tagged ‘Nobel’
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 13, 2008
அமெரிக்கர் பால் க்ரூக்மனுக்கு பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு
 |
|
பால் க்ரூக்மன் |
பொருளாதாரத் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு அமெரிக்கரான பால் க்ரூக்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தகம் மற்றும் உலகமயமாக்கலின் விளைவுகள் குறித்த அவரது ஆய்வுகளுக்காக இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக ராயல் சுவீடிஷ் அறிவியல் அகாடமி அறிவித்துள்ளது.
பிரின்ஸ்ட்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதிவருபவருமான பால் க்ரூக்மன் அதிபர் புஷ் அவர்களின் நிர்வாகத்தை நீண்ட காலமாக கடுமையாக விமர்சித்துவந்தவர்.
அதிபர் புஷ்ஷின் கொள்கைகள்தான் தற்போது நிலவிவரும் நிதி நெருக்கடிகளுக்கு காரணம் என்று க்ரூக்மன் வாதிட்டுவந்துள்ளார்.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெரும்பாலும் அமெரிக்கர்களாலேயே வெல்லப்பட்டுள்ளது என்பது குறறிப்பிடத்தக்கது.
Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: Columnist, Economics, Krugman, Nobel, Prize | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 12, 2008
ஃபின்லாந்தின் முன்னாள் அதிபருக்கு அமைதிக்கான நொபெல் பரிசு
 |
|
மார்த்தி அஹ்திஸாரி |
சமாதானத்துக்கான இந்த வருட நோபல் பரிசு ஃபின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரான மார்த்தி அஹ்திஸாரி அவர்கள்க்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர் ஒரு சிறந்த மத்தியஸ்தர் என்றும், முப்பது வருடத்துக்கும் அதிகமான காலப்பகுதியில், உலகின் பல பாகங்களில் முரண்பாடுகளை தீர்க்க அவர் உதவியுள்ளார் என்று நோபல் பரிசுக்குழு கூறியுள்ளது.
மிகவும் சிக்கலான பிரச்சினைகளான கொசோவா பிரச்சினை மற்றும் இந்தோனேசியாவின் அச்சே மாகாண பிரச்சினை ஆகியவற்றை தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளில் நடுநாயகமாக அவர் திகழ்ந்துள்ளார் என்றும் அந்தக் குழு கூறியுள்ளது.
அனைத்து முரண்பாடுகளும் தீர்த்து வைக்கப்படக் கூடியவைதான் என்ற முடிவுக்கு தான் வந்துள்ளதாகக் கூறும் அஹ்திஸாரி அவர்கள், தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை தொடர்ந்து வைத்திருப்பது, சர்வதேச சமூகத்துக்கு ஒரு அபகீர்த்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: Aceh, EU, Euro, Europe, Finland, Kosovo, Namibia, Nobel, Northern Ireland, Peace, President, Prize, Russia, Serbia, USSR | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 10, 2008
பிரெஞ்சு எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
 |
|
நோபல் பரிசு பெற்றுள்ள லே க்ளிசோவ் |
இலக்கியத்துக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளரான ழான் மேரி குஸ்டாவ் லெ க்ளீசோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கவிதை புனையும் புது முயற்சிகளில் அவரது படைப்புகள் ஒரு புதிய தளத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பரிசை வழங்கும் ஸ்வீடிஷ் அகாடமி கூறியுள்ளது.
கிளிசோ அவர்கள் பல்லின ஆளுமை கொண்ட உலகம் சுற்றும் ஒரு நாடோடி என்று அந்த அகாடமியின் செயலர் அழுத்தமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
மத்திய அமெரிக்காவில் வாழும் பழங்குடிகளுடன் நேரங்களை செலவவிட்டுள்ள லெ கிளிசோ அவர்கள் அந்த அனுபவம் தனக்கு உலகளாவிய தனது பார்வைக்கான ஒரு முக்கியமான விடயம் என்று லெ கிளிசோ கூறியுள்ளார்.
ஆரம்ப காலங்களில் அவரது எழுத்துக்கள் பரீட்சார்த ரீதியில் இருந்தாலும் எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து அவரது எழுத்து பாணி மரபு ரீதியாகவே இருந்து வந்துள்ளது.
Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: Authors, France, Literature, Nobel, Writers | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2008
வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
 |
|
உயிரினங்களில் ஒளிரும் தன்மை குறித்த ஆராய்ச்சிக்கு வேதியல் நோபல் பரிசு |
வேதியியலுக்கான இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு, ஜி எப் பி எனப்படும் பசுமை ஒளிரும் புரதத்தை கண்டறிந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருள் ஜெல்லி மீன்களில் முதலில் கண்டறியப்பட்டது.
அமெரிக்கர்களான மார்டின் Chalfie roger Tsien ஆகியோருக்கும் ஜப்பானியரான Osamu Shimomura வும், உயிர் அறிவியலுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு கருவியை வெளிக்கொண்டுவந்துள்ளதாக நோபல் கமிட்டி கூறியுள்ளது.
இந்த கண்டுபிடிப்பை நுண்ணோக்கியின் கண்டுபிடிப்புடன் அது ஒப்பிட்டுள்ளது.
மூளை செல்களின் வளர்ச்சி மற்றும், புற்றுநோய் போன்ற வியாதிககளின் பரவல் போன்றவற்றை கண்டறிய இந்த பசுமை ஒளிர்தலின் புரதம் உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்படுகிறது.
Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: Awards, Chemistry, Jelly Fish, Nobel, Prizes, Science | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 15, 2008
மனித உரிமை செயற்பாட்டாளரை விடுவிக்க நோபல் பரிசு பெற்றவர்கள் கோரிக்கை.
 |
|
கம்பிகளுக்கு பின்னால் பினாயக் சென் |
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு சிறையில் ஒரு வருடமாக அடைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளரான டாக்டர் பினாயக் சென் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று நோபல் பரிசை பெற்றுள்ள இருபதுக்கும் மேலானவர்கள் இந்திய அரசிடம் ஒரு கூட்டு வேண்டுகோளை வைத்துள்ளனர்.
இந்தியாவின் பல பகுதிகளில் செயல்படும் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டு தொடர்பாக அவர் மீது வழக்கு நடந்து வருகிறது.
ஆனல், கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ளும் விதம் குறித்து அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஆயுததாரிகளை அவர் விமர்சித்தார் என்கிற காரணத்தினாலேயே அவர் மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் பினாயக் சென் அவர்களின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
Binoy Kampmark: The Case of Binayak Sen: “Indian Jailbirds By BINOY KAMPMARK”
Binayak Sen: A Prisoner of Paradox? | Anita Ratnam | Indiainteracts.com
BBC NEWS | South Asia | Dr Binayak Sen: Tribal doctor
Governing Human Rights Violation And Dr. Binayak Sen By Arpita Banerjee
Posted in Govt, India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: Arrest, Binayak, Doctor, expression, Extremism, Freedom, Help, Law, Liberation, medical, Misa, Nobel, Order, Peace, Police, POTA, Prizes, Sen, TADA, Terrorism, Thoughts, Vinayak | Leave a Comment »